முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் - வீரமணியின் கபட நாடகம் !

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – வீரமணியின் கபட நாடகம் !

-

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க தி.க செய்தது என்ன?

ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டம் –கல்வி வியாபாரி வீரமணியின் கபட நாடகம்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்டு 1-ம் தேதியன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதில் திமுக தொண்டர்களும் கலந்து கொள்வார்களென கருணாநிதி அறிவித்திருக்கிறார். திராவிடர் கழகத்துக்கு இந்த கோரிக்கையின் மீது தோன்றியிருக்கும் திடீர் அக்கறை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மதுரை
மதுரையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசும் அர்ச்சகர் மாணவர் (கோப்புப் படம்).

1970-ல் பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது அன்றைய திமுக அரசு. அதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பார்ப்பனர்கள், ஆகம விதிப்படி தாங்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்றும், பிற சாதியினர் சாமியைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும் என்றும் வாதிட்டனர்.

“அர்ச்சகர்கள் தங்கள் வேலைக்கு வாரிசுரிமை கோர முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறிய போதிலும், “மத சம்பிரதாயப்படி தகுதியான நபர்களை மட்டுமே அரசாங்கம் அர்ச்சகராக நியமிக்க முடியும்” என்றும் கூறியது. சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை இத்தீர்ப்பு எடுத்துக் காட்டியது. இந்நிலையை மாற்றும்பொருட்டு அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு திமுக முயற்சிக்கவில்லை. மாறாக, “அர்ச்சகர் பணி வாரிசுரிமையல்ல” என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பின்னரும், 1972-க்குப் பின் இன்று வரை திமுக, அதிமுக அரசுகளால் நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்களில் பெரும்பான்மையினர் வாரிசுரிமை மற்றும் சிபாரிசின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து வீரமணி போராடியதில்லை. விமரிசித்ததும் இல்லை.

பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியை 1993-ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டமாக ம.க.இ.க நடத்தியது. தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து ம.க.இ.க நடத்திய இப்போராட்டத்தில் பெரியார், அம்பேத்கர் படங்களுடன் எமது தோழர்கள் கருவறைக்குள் புகுந்து அரங்கநாதன் சிலையைத் தீண்டினர். தோர்களைத் தாக்கி மண்டையை உடைத்தது பார்ப்பனக் கும்பல். கோயிலுக்கு தீட்டுக் கழிப்பு சடங்கும் நடத்தியது. அன்று தமிழகமே ஆதரித்த இந்தப்போராட்டத்தைக் கண்டித்தவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் ராம.கோபாலன், இன்னொருவர், “வன்முறைப் போராட்டம்” என்று இதனைக் கண்டித்த வீரமணி.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கப் போவதாக 1992-லேயே அறிவித்தார் ஜெயலலிதா. சமூக நீதிகாத்த வீராங்கனையென்று அவருக்குப் பட்டமளித்த வீரமணி, 1996 வரை அதனை அமல்படுத்துமாறு போராடவில்லை. 2001 -ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கிடா வெட்டுத் தடை சட்டம் கொண்டு வந்து, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கிடாவெட்டி சாமி கும்பிடுவதையே கிரிமினல் குற்றமாக்கினார். ம.க.இ.க அதனை எதிர்த்து கிடா வெட்டும் போராட்டம் நடத்தியது. திராவிடர் கழகமோ சட்டத்தை ஆதரித்து காவடி எடுத்தது.

பத்திரிகை பேட்டி
பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, சிவனடியார் ஆறுமுகச் சாமி மற்றும் அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன். (கோப்புப் படம்)

2006 -ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அவசர சட்டம் கொண்டுவந்தார். உடனே கருணாநிதிக்கு தஞ்சையில் பாராட்டு விழா நடத்தினார் வீரமணி. பார்ப்பனரல்லாத அர்ச்சகர் கருவறையில் பூசை செய்வது போலவும், பார்ப்பனர்கள் வெளியே நின்று சாமி கும்பிடுவது போலவும் சிலை செய்து கருணாநிதிக்கு பரிசளித்தார். கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்திய சாதனைக்காக வீரமணியைப் பாராட்டி சென்னையில் ஒரு ஆடம்பர விருந்து வைத்தார்கள் அவரது தொண்டர்கள். விருந்து செரிப்பதற்குள் அந்த சட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்று விட்டார்கள் பார்ப்பன அர்ச்சகர்கள்.

இதன் விளைவாக 2007-08 இல் அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி முடித்த 206 மாணவர்கள் தெருவில் நின்று கொண்டிருந்தார்கள். கட்சித்தலைவர்கள் மனது வைத்தால் நடந்து விடும் என்று நம்பிய அந்த அப்பாவி மாணவர்கள் எல்லா தலைவர்களையும் பார்ப்பதற்கு நடையாய் நடந்து கால் தேய்ந்தார்கள். தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் முதல் கருப்புச் சட்டை ஆதீனம் வரை அனைவரையும் பலமுறை பார்த்தார்கள். “வழக்கு இருப்பதால் எதுவும் செய்யமுடியாது” என்பதுதான் மாணவர்களுக்கு கிடைத்த பதில்.

இம்மாணவர்களை, தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று சந்தித்து, அவர்களை சங்கமாகத் திரட்டினார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த எமது வழக்குரைஞர்கள். உச்ச நீதிமன்ற வழக்கில் மாணவர்களையும் ஒரு தரப்பாக சேர்த்தார்கள். மாணவர்களை வைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நாளேடுகள், வார இதழ்கள், ஆங்கிலப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் மக்கள் மன்றத்தில் இப்பிரச்சினையை பிரபலப் படுத்தினார்கள். படித்து முடித்து தீட்சையும் பெற்று விட்ட இம்மாணவர்களுக்கு சான்றிதழைக் கூட திமுக அரசு வழங்கவில்லை. அதனைப் போராடிப் பெற்றுத் தந்தார்கள். தமிழகம் முழுவதும் பல நகரங்களில் அர்ச்சக மாணவர் சங்கமும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் இணைந்து உண்ணாநிலைப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருக்கும் மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகர்களை எதிர்த்தும், வழக்கை விரைந்து நடத்த முயற்சிக்காத தமிழக அரசைக் கண்டித்தும் மதுரை மீனாட்சி கோயிலை முற்றுகையிடும் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.

வழக்கறிஞர் ராஜு
உண்ணாவிரதத்தில் உரையாற்றும் தோழர் ராஜு (கோப்புப் படம்).

செப், 2010 பெரியார் பிறந்தநாளன்று, திருவண்ணாமலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள் அர்ச்சக மாணவர்கள். அந்தப் புகைப்படம் ஊடகங்களில் பிரபலமாகவே, ஆத்திரம் கொண்ட இந்து முன்னணிக் காலிகளால் தாக்கப்பட்டார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன். “திருவண்ணாமலைக் கோயிலில் பிரசாத லட்டு பிடிப்பதற்குக் கூட பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்” என்று திமுக ஆட்சியில் அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்தது. உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவுடன் அதனை அரசு திரும்பப் பெற்றது.

2009 முதல் இன்றுவரை உச்ச நீதிமன்ற வழக்குக்காக சுமார் 15 முறையாவது டெல்லிக்கு அலைந்திருக்கிறார்கள் எமது வழக்குரைஞர்கள். பார்ப்பன அர்ச்சகர்கள் மூத்த வழக்குரைஞர் பராசரனை அமர்த்தியிருப்பதால், அதனை எதிர்கொள்ளும் பொருட்டு நமது தரப்புக்கு காலின் கன்சால்வேஸ், அந்தி அர்ஜுனா போன்ற மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தியிருக்கிறார்கள். வழக்கு தொடர்பாக இதுவரை ஆகியிருக்கும் செலவை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மட்டுமின்றி ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு போன்ற எமது அமைப்புகள் திரட்டித் தந்திருக்கிறார்கள்.

தற்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், பார்ப்பன அர்ச்சகர்களுடன் பேசி சுமுகத் தீர்வுக்கு வரவிருப்பதாகக் கூறி, நீதிமன்றத்தில் 6 மாத அவகாசம் பெற்றது தமிழக அரசு. “இது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்கும் முயற்சி; ஆகம விதிப்படி அமையாத சிறு கோயில்களில் சூத்திர அர்ச்சகர்களுக்கு வேலை போட்டுக் கொடுத்து வாயை அடைத்துவிட்டு, பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்வதற்கான சூழ்ச்சி” என்று அம்பலப்படுத்தி ஜனவரி 2013-ல் சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தப்பட்டது. இதற்குப் பிறகுதான், “ஆறுமாதம் தவணை வாங்கி அரசு செய்தது என்ன” என்று அறிக்கை விட்டார் கருணாநிதி.

அர்ச்சகர் மாணவர்
உண்ணாவிரதத்தில் உரையாற்றும் அர்ச்சகர் மாணவர்.

இவையெல்லாம் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர்கள் எமது தோழர்கள்தான் என்பதற்கான ஆதாரங்கள். ஆனால் ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டத்தையொட்டி தி.க போட்டிருக்கும் வெளியீட்டில் இவை பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடப்படவில்லை. உண்மையைச் சொன்னால் இந்த வழக்கில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாது. ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டம் என்பதே ஒரு நாடகம் என்பதனால்தான் இதில் கலந்து கொள்ள முடியாதென்று ம.உ.பா.மைய வழக்குரைஞர்களும் அர்ச்சக மாணவர் சங்கத் தலைவரும் தி.க வினரின் அழைப்பை பல ஊர்களில் நிராகரித்து விட்டார்கள்.

பெரியாரின் மறைவுக்குப் பின், கடந்த 40 ஆண்டுகளில் இந்தக் கோரிக்கைக்காக வீரமணி உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதை தி.க வின் வெளியீட்டைப் படித்தாலே புரிந்து கொள்ள முடியும். கல்வி வியாபாரம் செய்து கல்லா கட்டுவதும், பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மேலும் பெருக்குவதும்தான் வீரமணி நடத்திவரும் தொழில் சாம்ராச்சியத்தின் இலட்சியம். பெரியாரின் சொத்துககு மட்டுமின்றி, அவரது எழுத்துக்கும் வாரிசுரிமை கோரியவரல்லவா வீரமணி! அர்ச்சக மாணவர்களுக்காக மற்றவர்கள் போராடினாலும், பெரியார் எழுப்பிய கோரிக்கை என்பதால், வாரிசுரிமை என்ற அடிப்படையில் அதற்குரிய பெருமை தனக்கே சேரவேண்டும் என்றுகூட அவர் எண்ணக்கூடும்!

இதுவரை இக்கோரிக்கையில் அக்கறை செலுத்தாத வீரமணி தற்போது திடீரென்று களத்தில் குதித்திருப்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. “ஆலயத் தீண்டாமையை மத உரிமையாக அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா அல்லது அதனைக் குற்றம் என்று கூறப்போகிறதா” என்பதுதான் இவ்வழக்கின் மையமான கேள்வி. இதனைப் புறந்தள்ளிவிட்டு, மயிலை, திருவரங்கம், மதுரை போன்ற பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்ள அனுமதித்து விட்டு, ஏதேனுமொரு மாரியாத்தா கோயிலில் மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முயற்சிக்கிறது ஜெ அரசு. இந்த திட்டத்தை சுமுகமாக நிறைவேற்றித் தருவதுதான் வீரமணிக்கு வந்திருக்கும் திடீர் அக்கறையின் நோக்கமா?

அல்லது தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிவெறியை ராமதாசு தூண்டி வருகின்ற சூழலில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஆதிக்கவெறியை எதிர்த்துப் போராடாமல் திசைதிருப்புவதற்காக இந்த பார்ப்பன எதிர்ப்பா? “அரசியல் சட்டத்தை திருத்தினால்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும்” என்று கருணாநிதியும், “திருத்தாமலேயே ஆக முடியும் “என்று வீரமணியும் முரண்பட்டுப் பேசிக்கொண்டே ஒன்றுபட்டு நிற்பதாகவும் கூறிக் கொள்கிறார்களே, அடிப்படையான இந்த வேறுபாட்டுக்கு என்ன விடை? இந்தப் போராட்டமென்பது தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவும், இக்கோரிக்கைக்காக உண்மையாகவே உழைத்தவர்களை இருட்டடிப்பு செய்வதற்காகவும் வீரமணி நடத்தும் நாடகம் என்பதில் ஐயமில்லை. இப்போது இதனை நடத்துவதற்கான நோக்கம் என்ன என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி.

பெரியாரின் தொண்டர்களே, சாதி மறுப்பாளர்களே, தமிழ் மக்களே, போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!

31.7.2013
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

கேப்டன் டிவி விவாதம்

மக்கள் டிவி விவாதம்

மதுரை உண்ணாவிரதப் போராட்டம் – 1

மதுரை உண்ணாவிரதப் போராட்டம் – 2

 1. 1972-க்குப் பின் இன்று வரை திமுக, அதிமுக அரசுகளால் நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்களில் பெரும்பான்மையினர் வாரிசுரிமை மற்றும் சிபாரிசின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து வீரமணி போராடியதில்லை. விமரிசித்ததும் இல்லை.

  பெரியாரின் தொண்டர்களே, சாதி மறுப்பாளர்களே, தமிழ் மக்களே, போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!

 2. அடுத்தவன் உழைப்பை பிடுங்கி தின்னுவது இந்த அரசியல்வாதிகளின் தனி திறமை ஆயிற்றே !!!! இந்த கொள்ளை கும்பலை மக்களுக்கு காட்டுவதே நம் முதன்மை பணியாக இருக்க வேண்டும்,இப்போதைக்கு ..மேலும் இந்த கும்பல் ஒரு புல்லை(மரியாதையான வார்த்தை என்பதால் ) கூட புடுங்க வில்லை என்பதை இன்னும் நன்றாக வெளிச்சம் போட்டு கண்பிக்க வேண்டும்

 3. Maariamman is with the head of Renuka devi (Parasuraman mother) and body of her maid.
  where ever the temples where full maariamaman idol is worshipped in those place have only non bramin priest. Maariamman full idol is worshipped only in south India. In north India only the head of themaariamman is worshipped with the bramin priest. more over maariamman temples are located outside the ratha veethi. for maariamman temples only non bramins only will come forward to work. Sorry for commenting in english because i do not know typing and i do not have tamil key board.

  • பரத்வாஜன்:-புறத்தே வாசம் செய்தவன். பிறந்தவுடன் காக்கை கூட்டில் விட்டு விட்டார்களாம். அதனால் கருப்பாக இருப்பாராம். நீங்கள் என்ன கோத்திரம் சுவாமி?

   • மணமகனும்-மணப்பெண்ணும் ஒரே கோத்திரத்தவர்களாக இருக்கக் கூடாது, திருமணத்திற்குப் பின் மனைவி கணவனின் கோத்திரத்திற்குள் வந்துவிடுவாள் என்ற வழக்கத்தின்படி, திருமணம் ஒரே கோத்திரத்துக்குள் நடக்காமல் இரண்டு வெவ்வேறு கோத்திரத்தைச் சார்ந்தவர்களுக்கே நடக்கும் என்பதால், எல்லா கோத்திரத்திலும் கருமை, பழுப்பு, சிவப்பு, வெள்ளை என்று மல்டிகலர் பார்ப்பனர்கள் உண்டு.. மேலும் வர்ணம் என்பது பிறப்பு அடிப்படையில் என்று இறுகுவதற்கு முன்பு ஒரே குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் பல வர்ணங்களைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர்.. இதனால் ஒரே வர்ணத்தைச் சார்ந்தவர்கள் வெவ்வேறு நிறமுள்ள குடும்பங்களிலிருந்து வந்தவர்களாகவும் இருப்பதுண்டு.. எனவே கலரை மட்டுமே நம்பி வர்ண, கோத்திர கணிப்பில் இறங்குவது உசிதமல்ல..

    • திரு.k.k அவர்கள் கேட்டது கருப்பாக இருக்கும் பலசாதி அர்ச்சகர்கள் எப்படி அய்யர் ஆக முடியும் என்று. பார்பனரிலும் கருப்பு நிறத்தவர் உண்டு. கருப்பு நிறம் பார்பனரால் மிகவும் விரும்பப்பட்டது என்பதால் நான் உதாரணமாக கிண்டலாக சொன்னேன். வேறு ஒன்றும் இல்லை. நன்றி.

   • I am not belong to so called forward caste Iyers. Caste nothing to do with individual growth those who born in scheduled caste seriously have problem in education life style, self discipline etc. I was not given any privilege because I belongs to xyz but I could able to make my life from Zero , So stop blaming others for your mistake. Move your ass and start working.

    • Ok Sir.
     Please explain your above statement: “How come this blackies can be iyers”.
     We do not want to interpret your statement in a wrong way.
     So we request you to explain it to lesser mortals like us and enlighten.

    • Thanks for the advice.But it does not come from you whole heartedly.Every one knows that he has to work hard to come up in life.But here the debate is about denial of opprtunity to others by a section of people on the basis of their birth.

 4. மதச்சார்பற்ற அரசுக்கு கோவிலே என்ன _______ வேலை?

  அரசு கோவில்களில் இருந்து வெளியேறிவிடட்டும். இந்துக்கள் கோவில்களை பார்த்துக்கொள்வார்கள்.

  இப்படி பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் தனியார் கோவில்களில் பணிபுரிவதையும் வீடுகளுக்கு போய் யாகங்கள் செய்வது பற்றியும் வெளிநாடுகளுக்கு கும்பாபிஷேகம் செய்ய போவது பற்றியும் இன்றைக்கு வந்திருக்கும் செய்தி

  Chennai: The right to perform pooja in government temples mi­ght have been refused to tra­ined archakars belonging to the lower castes, but se­veral private temples ha­ve opened the doors to th­em.

  Almost 150 out of the 200 odd students who have taken the archarkar training course conducted by st­ate government are now pl­aced in private temples ac­ross Tamil Nadu and there are cases of these trained archakars being called to countries like Australia to perform homam and kumbabhishekam.

  There are archakars who serve in temples full-time, and a few are part-time priests, taking up jobs like mec­hanics, or running com­puter centres in their ne­ighbourhoods – some ha­ve even joined college for studies.

  A case in the Sup­reme Court by the Ma­du­rai­ based Adhi Saiva Si­va­chariyargal welfare union against the appointment of these trained archarkars in 2006 has affected their placement in government temples. The court had issued a stay order on their appointment.

  Nevertheless, trained ar­chakars, belonging to various castes perform poojas in good spirit and are preferred in many private temples. Take the case of 29-year-old D. Shan­mugam who has been serving at the 50-year-old Murugan te­mple in Thu­raiyur, Tir­uchy, for the last four ye­ars. “Priesthood gives me satisfaction. Devotees are ha­ppy as I perform pooja in Sanskrit and Tamil, ba­sed on their request,” he said.

  He earns Rs 7,000 a month in the temple and is called for Ganapathy homam, marriages and naming ceremonies in his neighbourhood.

  A month ago, a Chennai couple whose native place is Thuraiyur, invited Shanmugam to the city for naming their child and to perform rituals.

  Arguing that trained archakars are in no way inferior, V. Ranganathan, coordinator of the Trained Archakar Sangam, said, “We perform poojas wholeheartedly. We are very specific about the agamas and follow them faithfully. We wear the professional att­ire of the priest and so­me of us even have tufts.”

  His cla­ssmate Thiy­agarajan is in Australia for the last two months, performing kumbabhishekam and other ri­tuals in temples there. “Ca­ste has no meaning in the sanctum sanctorum. Any individual who is spiritual can perform poojas,” he said.

  http://www.deccanchronicle.com/130729/news-current-affairs/article/trained-archakars-get-placed-private-temples

  இந்த திராவிட புர்ச்சியாளர்கள் புரச்சி பேசியே சொத்தை திருடியது போதும். இந்து கோவில்களை இந்துக்களிடம் விட்டுவிடுங்கள். யார் பூசை செய்யலாம் வேண்டாம் என்பதை இந்துக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

  அப்புறம் இந்த எல்லாச்சாதியினரும் அர்ச்சகர்கள் என வந்துவிட்டால் இந்து மதத்தை திட்ட வேறு ஏதும் இருக்காதே? அப்புறம் எப்படி ஆ ஊன்னா பார்ப்பான் என திட்டுவது?

  • அரசாங்கத்தின் கீழிருக்கும் கோயில்களிலேயே பார்ப்பன ஆதிக்கம் தாங்க முடியவில்லை, இந்த இலட்சணத்தில் கோயிலை இந்துக்களிடம் விட்டு விட்டால், உயர்ந்த சாதி தமிழர்களில் சிலருக்கு ஆலவட்டம் பிடித்துக் கொண்டே கோயில்கள் அனைத்தையும் தமதாக்கிக் கொள்வார்கள் பார்ப்பனர்கள். முதலில், பார்ப்பானோ பறையனோ, அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் வேலை செய்யும் போது பூணூல் அணியக் கூடாதென்ற சட்டம் கொண்டு வந்தால், எந்த சாதி அர்ச்ச்சகர் பூசை செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. தமிழ்நாட்டுக் கோயில்கள் தமிழாக்கப்பட வேண்டும். அதற்கு முதல் படி, பார்ப்பனர்கள் மட்டும் பூசை செய்யும் கோயில்களில் சாதி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் அர்ச்சகர்களாக்கப் பட வேண்டும்.

   • // பார்ப்பனர்கள் மட்டும் பூசை செய்யும் கோயில்களில் சாதி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் அர்ச்சகர்களாக்கப் பட வேண்டும். //

    அதன் பின் கருவறைக்குள் சாதி வேறுபாடு வந்தால் என்ன செய்வது..?! நிரந்தரமாக கோவில்களுக்குள் டெண்ட் போட்டு கொண்டு சாதி மறுப்பு போராட்டம் நடத்தலாமா..?!

    • சபாஷ்! சரியான போட்டி!
     அர்ச்சகராவது புண்ணாக்காவது. வட மாநில கோயில்களில் உள்ளது போல் மக்களே கருவறைக்குள் சென்று மூலவரை தொட்டு பூசை செய்யும் உரிமையை கேட்போம்.
     ஆகமம் நேற்று வந்தது. புரட்டு வேலை. அர்ச்சா மூர்த்தி தொட்டு வணங்கும் உரிமை அதற்கும் முந்தியது. திருமூலரின் திருமந்திரம் ஒரு பொருள்படும் செய்யுளே. அதை வெள்ளாள வித்தகர்கள் முறுக்கி திரித்து ஆலய வழிபாட்டுக்கான ஆகமமாக புரட்டு பேசுகிறார்கள். மென்னியை பிடித்தால் கைவல்ய நவநீதத்தை தூக்கிகொண்டு ஓடி வருவார்கள். கதைக்கு உதவாது நண்பர்களே.
     புரட்டு பொருள் சொன்னவனே இன்று முழி பிதுங்கி நிற்கிறான்-கருவறை நுழைய முடியாமல்-திருவாசகம் ஓத முடியாமல். என்னே வேடிக்கை?

     • இந்து மதத்தை காப்பாற்றும் உங்களுடைய யோசனைக்கு நன்றி. இதற்குரிய சன்மானத்தை பார்ப்பன கும்பலிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

      • என்ன சொல்ல வரிங்க?
       அப்படின்னா பல சாதி அர்ச்சகர்களை விட்டு இந்து மதத்தை அழிக்க தான் நீங்கள் நீதிமன்றம் போகிறீர்களா?
       பேஷ், பேஷ்! திராவிடர் கழகத்துகாரர்கள் தேவலாம். அறிவு காது வழி வடியுது. துடைச்சுக்குங்க.

       • ஆமா பின்ன இந்து மதத்தை காப்பாற்றுவதா புரட்சியாளர்களின் வேலை, அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே. இந்த விசயத்தை பற்றி அந்த அளவுக்கு உங்களுக்கு அறிதல் புரிதல் எல்லாம் இல்லாமல் இருக்கலாம் அதுக்காக இந்து மதத்தை காப்பாற்றத்தான் புரட்சிகர தோழர்கள் இலட்சக்கணக்கில் செலவு பன்றாங்கன்னு நினைக்கிற அளவுக்கா உங்களுக்கு அறிவு இல்லை. நம்ப முடியல.

        • Thank you for your suicide note.
         Can you attach your above statement in the affidavit filed in the Supreme court? Can you tell the same thing to the Non Brahmin caste archakas for whom you are fighting the case? Can you tell this to the public by printing and issuing pamphlets to the effect?
         I don not know your political affiliations. I think Vinavu will escape by disowning you.
         Hats of to Dravidian Intelligence!!!

 5. இப்போது நீங்கள் சொல்கிறீர்களே அந்தச்சட்டம் வந்ததே திமுகவினால்தான் அதற்கு அடிகோலியது திராவிடர்கழக கபடதாரி வீரமணிதான் அந்த அடிப்படையிலேயே 206பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது…இது தொடர்பில் பல கட்டுரைகளும் தலையங்கங்களும் விடுதலையில் வந்துளளன…தொண்டர்களும் இந்துமதம் பற்றிய கருத்துரையாடல்களில் இந்த 206 பேர் அர்ச்சகர் ஆகமுடியாமல் வழக்குப்போட்டுள்ளது பார்ப்பனர்கள்தான் என்பதைச் சொல்லி வாதாடிககொண்டுவருகிறார்கள்.. பிரச்சனை வழக்குமன்றத்தில் இருக்கும போது வீதிமன்றத்தில் நீங்கள் கருத்துரைப்பரப்பலாம் என்றால் ஏன் திராவிடர்கழகம் மக்கள்மன்றத்தில் போராட்டங்கள் நடத்துவதால் என்ன குறைந்து விடப்போகிறது …. இன்னும் வலுதானே சேர்க்கும் போராட்ட அழைப்புக்கு இணங்க வில்லையாம் போராட்டத்தில் கலந்து கொண்டு

 6. உங்கள் வீரதீர பராக்கிரமங்களை வைக்கலாமே ? வைக்கலாம் ஆனால் கபட வேடதாரி என்று திட்ட முடியாதே, அதுதான்…. வழக்குமன்றம் போனது அதற்காகப்பாடுபட்டது எல்லாம் வரவேற்கப்பட வேண்டியதே ஆனால் கல்விவியாபாரி இதெல்லாம் எதிலிருந்து வருகிறதென்றால் …இந்தப்பிரச்சனையை கையில் திராவிடர் கழகம் எடுத்தவுடன் அதன் எதிரிகளிடம் இது என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படத்தும் என்பது அனைவரும் அறிந்ததே….அதுதான் அதுதான் உங்கள் குதறல்களுக்குக் காரணம் அதனால்தான் பெரியார்சிலைக்கு மாலை போட்டவுடன் இந்து முன்னணிக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது….ஆகவே ரொம்பத்தான் குதிக்காதீர்கள்

  • கோடி கோடியாய் பெரியாரின் பணத்தை முடிந்து வைத்துக்கொண்டு பகுத்தறிவு பிரச்சாரம் செய்யாமல் கல்வி வியாபாரமும், வட்டிக்கடையும், பெரியாரின் கொள்கைக்கே எதிராக அல்லேலூயா ஜெபக்கூட்டங்கள் நடத்தவும் பெரியார் திடலை வாடகைக்கு விட்டு கல்லா கட்டி வரும், தன்னைத்தானே பெருமையுடன் தமிழர் தலைவர் என்று அழைத்துக் கொள்ளும் வீரமணி இந்தப் வழக்கிற்காக இதுவரை ஒரு பைசா கூட செலவு செய்ததில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் இவ்வழக்கிற்காக உச்சநீதிமன்றம் சென்ற செலவு மட்டும் கோடி ரூபாயை எட்டும் என்றும் நினைக்கிறேன். ஏதாவது செஞ்சிருந்தா தமிழக மக்களிடம் சொல்லுங்கள். பெரியார் வாழ்க !

  • அட நீங்க வேற, தி.க. எப்பவோ ‘திருடர் கழகமாகவும்’, ‘திருடர் முன்னேற்றக் கழகமாகவும்’ மாறிடுச்சு. இவர்கள் எதற்காக போராடுவார்கள் தங்கள் திருட்டு தொழிலை தக்கவைத்து கொள்ளதான்!

 7. இந்த திராவிட புர்ச்சியாளர்கள் புரச்சி பேசியே சொத்தை திருடியது போதும்.///வழக்கம் போல பாப்பானே திருடட்டும்

 8. இவர்கள் யாரை நோக்கி போராடுகிறார்கள்? நாலு முழக்கம் போட்டு, சோடா குடித்து விட்டு போய் விட்டால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது? இந்த பிரச்சனையில் முக்கியமான விஷயம் உச்ச நீதிமன்ற வழக்கு. நீதிமன்றத்தில் அல்லவா போராட வேண்டும்?

  வழக்கில் வெற்றி பெற வினவுக்கு வாழ்த்துக்கள்.

  • சரியாக சொன்னீர்கள் வெங்கட். உச்சநீதிமன்றத்தின் பக்கம் எட்டிக்கூட பார்க்காத இந்த வீரமணி இப்போ நாங்களும் தான் போராடினோம்னு உரிமை கோர வந்துவிட்டார். இது நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களும் தனித்து நின்று நடத்திய போராட்டம்.இந்த புரட்சிகர அமைப்புகளைத் தவிர இப்பிரச்சினையில் தமிழகத்திலிருந்து வேறு யாரும் தலையிடவில்லை, போராடவோ போராடும் மாணவர்களுக்கு துணை நிற்கவோ இல்லை. இப்படி கூறுவதில் பெருமை ஒன்றும் இல்லை மாறாக போராட்டத்தில் பங்கேற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் தான் இதற்காக வெட்கப்பட வேண்டும்.

   தமிழகத்தில் முற்போக்கு பார்ப்பன எதிர்ப்பு பேசுபவர்கள் எல்லாம் ஏன் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, போராட்டங்களுக்கு உதவி செய்யவில்லை அல்லது என்ன செய்திருக்கிறோம் என்கிற கேள்வியை அவர்களே அவர்களிடம் கேட்டுக்கொள்ளட்டும், அதே போல பார்ப்பன எதிர்ப்பை கொள்கையாகக் கொண்ட வீரமனியின் தி.க என்ன செய்தது என்பதையும் வீரமணியிடம் கேட்கட்டும்.

  • அது என்ன வழக்கு திரு. வெங்கடேசன்? எல்லா சாதியினரும் பூசாரி ஆகனும் அப்படித்தான?
   இல்ல எல்லா சாதியினரும் பார்ப்பான் ஆகணுமுன்னா?[குண்டக்க மண்டக்க கேள்விக்கு மன்னிக்கனும்]
   மனிதன் மலம் அள்ளுவதை தடை செய்யவேண்டும் என்று கூட ஒருத்தர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். பாராளுமன்றம் இன்னும் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறது.
   உச்சநீதிமன்றத்தில் கொள்கை பூர்வமாக நம்பிக்கை வைத்து போராடும் வினவுக்கு வாழ்த்துக்கள்.
   கிடக்குறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை.

   • // கிடக்குறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை. //

    வழி மொழிகிறேன்..

   • நக்சல்பாரிகளை உச்சிக்குடுமி மன்றத்தின் மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு கெட்டவர்களாக நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். பரவாயில்லை இன்னும் நிறைய படிங்க புரிஞ்சிக்கலாம்.

    எல்லோரும் பாப்பானா ஆக முடியாது அப்படி ஆனால் பார்ப்பான் இருக்க மாட்டான் இந்து மதமும் இருக்காது. எனவே இது அனைவரையும் பார்ப்பானாக்கும் வழக்கல்ல, இந்து மதத்தை அசைத்துப்பார்க்கும் வழக்கு, அனைவரும் இந்து என்பதை அம்பலமாக்கும் வழக்கு.

    • உங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை என்று நான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் நம்புங்க.

     • ஆனால் நான் கவனித்தவரை உங்கள் மீசையில் மண் ஒட்டிக்கொண்டல்ல அப்பிக்கொண்டிருக்கிறது.

      • அவர் மீசையில் ஒரு லோடு மண்ணு ஒட்டுனாலும் ‘விட்ரா விட்ரா சுனா பானா’ னு போய்ட்டே இருப்பாரு. பரலோகம் பூலோகம்னு கமென்ட் போட்டு மாட்டிகிட்டாலும் அண்ணே எதுக்குமே கவலைப்படமாட்டாரு. 😀

    • இந்து என்ற சொல் ஒரு கற்பனை கட்டுதளை. அதை நிறைய இந்துகள் ஏற்கவில்லை. எல்லோரையும் இந்துக்கள் என்று உச்சா மன்றத்தில் தீர்ப்பு வாங்கி பெருந்திரளான மக்களை முத்திரை குத்தி கதவடைத்து காயடிக்க நீங்கள் எந்த பார்பன மடத்துடன்/RSS/BJP யுடன் கூட்டு சதியில் ஈடுபட்டு உள்ளீர்கள்? எனக்கு தெரிந்து இந்த மாதிரி அவாளே யோசிச்சதில்லையே?
     சாதிகளாய் பிரிந்து வாழ்வதே இவர்களுக்கு பாதுகாப்பு. சமயமாய் சேர்ந்து நிற்பார்கள் என்ற உங்கள் ஆசை பலிக்காது. தேர்தல் வரும் நேரம் பார்த்து இப்படி காமடி பண்ணாதீங்க.
     வாழ்க அண்ணா சமயம்!!!

     • இந்து மத்திற்குள் எல்லா சாதியும் ஒன்னா சமத்துவமா இருக்கனும்கிறதுக்காக பார்ப்பன கும்பலுக்கு ஐடியா கொடுப்பது நீங்கள், இந்து மத்த்தை ஒழிக்க வேண்டும் என்றால் இல்லை இல்லை இந்து மதத்தை காப்பாற்ற வேண்டும் என்று சாமியை தொட்டுக்கும்பிட உரிமை இருந்தால் போது என்று அந்த உரிமை வேண்டும் என்று கேட்பவர் நீங்கள். இப்படி சில பல ஐடியாக்களை கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல ஜால்ராவாக இருந்து வரும் நீங்கள், பார்ப்பன கும்பலை எதிர்த்து வரும் தோழர்களைப் பார்த்து உங்களை அழைக்க வேண்டிய பெயரில் அழைப்பது நியாயமா பரலோகபாண்டி.

      • “தோழர்கள் இந்து மதத்தை ஒழிக்கபோகிரார்கள்”. சரிதானே. பின்னால் பல்டி அடிகப்படாது.
       சரி எந்த தோழர்கள்? வினவு தோழர்களா இல்லை திராவிடர் கழக தோழர்களா? தெளிவா சொல்லீருங்க.
       முடிவு பண்ணியாச்சா?
       எங்க மூணு தடவ திரும்பி சொல்லுங்க:

       இந்து மதத்தை அழிப்போம்
       இந்து மதத்தை அழிப்போம்
       இந்து மதத்தை அழிப்போம்

       புரட்சி ஓங்குக.
       உலக பாட்டாளி வர்க்கமே ஒன்று திரள்வோம்.

       அப்படியே போய் தெருவுல நின்னு சொல்லுங்க.

       ஒரே வருசத்துல உங்க கட்சி ஆட்சிய பிடிசுரும். இந்து மதம் செத்துரும்.

       • ஆம் இந்து மதத்தை ஒழிப்போம். இதை ரோட்டிலும் முழங்குவோம் எங்கள் வீட்டிலும் முழங்குவோம்.

        எங்க இப்ப நீங்க உங்க முழக்கத்தை சொல்லுங்க பார்ப்போம்.

        இந்து மதத்தை காப்பாற்றுவேன்
        இந்து மதத்தை காப்பாற்றுவேன்
        இந்து மதத்தை காப்பாற்றுவேன்

        நடுத்தர வர்க்கமே வாழ்க

        நடுத்தர வர்க்க ஆடுகளே ஒன்று திரள்க

        இதைப் போய் நடுத்தர வர்க்கம் மட்டுமே வாழும் உங்க தெரு முக்குல நின்னு மூனு தடவை சொல்லுங்க. உடனே அனைத்தும் உங்கள் முன் திரண்டு நின்று உங்களுடைய உத்தரவுக்காக காத்திருக்கும். பிறகு அடுத்த தேர்தலுக்கு எவன் அதிகமா காசு குடுக்கிறானோ அவன்கிட்ட வெட்கப்படாமா கைய நல்லா நீட்டி காசை வாங்கிக்கிட்டு ஓட்டைப் போட்ருங்க.

        அப்புறம் தி.க கம்பெனிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இல்லை என்கிற உலகில் யாருக்குமே தெரியாத இரகசியத்தை உங்களுக்கு மட்டும் நான் இப்போது சொல்கிறேன். இந்த இரகசியத்தை அறிந்து கொண்ட பிறகு அவர்கள் இந்து மதத்தை ஒழிப்பார்களா அழிப்பார்களா என்பதை எல்லாம் உங்களுடைய ஆட்டு மூளையை வைத்து சிந்தித்து முடிவு செய்துகொள்ளுங்கள்.

        • D.K. is not having the proper intellectual setup to carry on the legacy of Periyar. They themselves have admitted to it.
         Only M.L. parties like you can carry on Periyars’ legacy. Because you are the only cult left now to destroy Hinduism.
         In politics we need comedians to spruce up the drab discourses conducted by the squibs. We cannot depend on Dravidian parties because they have become serious of late. Only you people fit the slot. Thank you for your services.

    • //எல்லோரும் பாப்பானா ஆக முடியாது அப்படி ஆனால் பார்ப்பான் இருக்க மாட்டான் இந்து மதமும் இருக்காது.//
     I recommend you for Nobel prize in Social anthropology? for your above statement.
     Actually I would have recommended for Medicine but alas brain transplantation is yet to be proved successful.

  • அம்பியும், பாண்டியனும் பூடகமாக பேசுகிறார்கள். சரியாக புரியவில்லை. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டால் ஜாதி ஒழிந்து விடுமா என்பதே கேள்வி என நினைக்கிறேன். இதனால் மட்டும் ஒழியாது என்றே நினைக்கிறேன். ஜாதி ஒழிப்பில் இது ஒரு அங்கம் அவ்வளவே. மேலும், அம்பி சொல்வது போல அனைவரும் அர்ச்சகர் ஆன பின்பு கருவறைக்குள் ஜாதி முளைக்கலாம். நாலு ஜாதி அர்ச்சகர் இருக்கும் கோயிலில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளலாம். பக்தர்கள், எங்க ஜாதி அர்ச்சகரை கூப்பிடுங்க. அவரு கையாலதான் திருநீறு, சடாரி வாங்குவோம்னு சொல்லலாம். இப்படி எல்லாம் ஆகாது என்று நம்புகிறேன். பல ஜாதிக்காரர்கள் வேலை செய்யும் அரசு அலுவலகங்கள் இயல்பாக நடக்கின்றன. இதே போன்று கோயிலும் மாறும். பார்ப்போம்.

   இந்து மதத்தில் இருந்து ஜாதியை பிரிக்க வேண்டும் என்பதே என் அவா. ஜாதிதான் அதன் மூலதனம், ஜாதி ஒழிந்தால் இந்து மதம் திவால் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. கோவிலுக்குள் குறைத்துக் கொண்டிருக்கும் சொறி நாய் இது. வெளியே துரத்த வேண்டும். “வெளியே போய் குறைக்குமே, என்ன செய்வாய்” என்றால், அது வேறு பிரச்சனை. வேறொரு தீர்வு காண வேண்டும்.

   இந்து மத்தில் இருந்து ஜாதியை பிரிக்க அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பதை ஒரு முக்கிய அங்கமாக காண்கிறேன். திருமால் ஆலயத்தில், திருமாலடியார் என்ற ஒற்றை அடையாளமும், ஈசன் ஆலயத்தில் சிவனடியார் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமே இருக்க வேண்டும். அடுத்து, வேத, பிரபந்த கோஷ்டிகள் அனைத்து ஜாதியினருக்கும் பொதுவாய் இருக்க வேண்டும். ஒரு முறை காஞ்சி வரதராஜ பெருமாள் பிரபந்த கோஷ்டியில், பனிரெண்டு திருமண் சாற்றிக் கொண்டு வந்த முதியவரை, பூணூல் இல்லை என்ற காரணத்தால் துரத்தி விட்டார்கள். அது மனதில் பதிந்து விட்டது. “நுமர்களை பழிப்பராகில், நொடிப்பதோர் அளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும், அரங்கமா நகருளானே” என்ற தொண்டரடிப்பொடியாழ்வார் வாக்கு படி, இந்த பூணூல் போட்ட புலையர்களை கோவிலை விட்டு விரட்ட வேண்டும். திருமால் அடியார் என்ற ஒற்றை நிலையில், ஜாதி வேறுபாடற்ற கோஷ்டியில், அதே வரதராஜ பெருமாள் முன்பு, “இமையோர் தலைவா, மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே ” என உரக்க ஓத வேண்டும். இதே என் கனவு.

   இந்த கனவு நினைவேற ஒரு முக்கிய அங்கமாக “அனைவரும் அர்ச்சர்கர்” சட்டத்தை காண்கிறேன். இது அமலாக்கப்பட ஒரு முக்கிய முட்டுக்கட்டை உச்சநீதிமன்ற வழக்கு. இந்த விஷயத்தில், அது உச்சிக்குடுமி மன்றமா, உச்சா போகும் மன்றமா என எனக்கு கவலை இல்லை. வழக்கில் வெற்றி பெற வேண்டும். அவ்வளவுதான்.

   (தோழர்களே அடிக்க வந்துடாதீங்க. “புலையர்” என்பதை, “கஸ்மாலம்”, “பேமானி” என்பது போல, “இழிந்தவன்” என்பதை குறிக்கும் ஒரு குறியீட்டு சொல்லாகவே காண்கிறேன்).

   • பூடகமாக தெரிந்தால் மன்னிக்கவும் நண்பரே.
    ஆண்டவனுக்கும் அவனை நம்புவனுக்கும் நடுவில் புரோக்கர்/புரோகிதர் என்ன அவசியம்?
    பக்தனே அர்ச்சா மூர்த்தியை தொட்டு வணங்கும் உரிமை இன்றும் வட மாநில கோயில்களில் உண்டு. காசி விஸ்வநாதர் கோயிலிலும் உண்டு. இதன் பின்னணி என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
    புரோக்கர் பதவியின் அவசியத்தை மறுக்காதவர்களை சந்தேக கண் கொண்டு பாருங்கள். அவர்கள் பின்னர் மேய்ப்பர் பதவிக்கு அடி போடுபவர்கள்.அர்ச்சகர்களின் அவசியத்தை நிலைநாட்டுவதே இவர்கள் வேலை. இதிலே இட ஒதுக்கீடு கேட்டு புல்லரிக்க வைப்பார்கள். நீங்கள் மெய்சிலிர்த்து போவீர்கள்.
    மக்கள் அர்ச்சகதன்மையை கேள்வி கேட்டு விடாமல் பார்த்துக்கொள்வதில் ஓட்டு பொறுக்கும்/பொறுக்காத கட்சி கழகங்கள் அனைத்தும் ஒரு மனதோடு செயல்படும்.எல்லாம் கழுதை விட்டைகளே-முன் விட்டை என்ன பின் விட்டை என்ன!
    இது ஒன்றும் பிரம்ம சூத்திரம் இல்லை. நீங்கள் வழக்கம் போல் கோயிலுக்கு போய் வாருங்கள். ஆண்டவனை அர்த்த மண்டபத்தில் இருந்து தொழுங்கள். அர்ச்சகர் தட்டிலோ உண்டியலிலோ ஒரு பைசா கூட போடாதீர்கள். ஊரெல்லாம் சேர்ந்து இப்படி செய்து பாருங்கள்.பின்னர் மூலவரை முறை வைத்து வீட்டுக்கு கூட கொண்டு போக உங்களுக்கு அனுமதி கொடுப்பார்கள். காசு சாமி காசு. காசு கொடுத்து அடிக்காமல்-‘கொடுக்காமல்’ அடியுங்கள். விக்கிரக ஆராதனையை விடப்போகிறோம் என்று சொல்லுங்கள். வர்மம் பார்த்து அடியுங்கள்.ஒரு சூத்திரத்தை இன்னொரு சூத்திரத்தால் முறிப்பது ஒரு பெரிய விசயமே இல்லை. இதற்க்கு போய் புரட்சி புண்ணாக்கு என்று பெரிய பெரிய வார்த்தைகளை போடுவது வீண்.

    • நாம் இந்து மதத்தின் சாதி தீண்டாமையை அம்பலப்படுத்தி அதை ஒழிக்க வழி சொன்னால் பரலோகப்பாண்டியன் அதைக் காப்பாற்ற வழி சொல்கிறார். அய்யா பட்டுக்கோட்டைக்கு எங்களுக்கு வழி தெரியும் நீங்கள் கொட்டைப்பாக்குக்கு மட்டும் விலையை சொல்லுங்கள்.

     • சாதி தீண்டாமையை சாதிகள் பார்த்துக்கொள்ளும். அவர்களே பேசி/வெட்டி தீர்த்து கொள்ளட்டும். உங்களை பஞ்சாயத்து பண்ண யார் கூப்பிட்டார்கள்? இந்து பொந்து என்று இத்துப்போன ஆணியை தூக்கிக்கொண்டு சிலுவைக்கு மரம் தேடி டில்லி போக நீங்கள் விருப்பப்பட்டால் அது உங்கள் சுயநல அரசியல். அவ்வளவு எளிதாக மந்தைக்கு ஆடுகள் கிடைக்காது நண்பரே.

      • சிவலோகபாண்டியனை இங்கு பஞ்சாயத்து பண்ண யாராவது கூப்பிட்டீர்களா?

       • சந்தானம், பஞ்சாயத்து பன்ன கூப்பிட்டால் தான் போக வேண்டுமா என்ன ? மேய்ப்பனுக்கு ஒரு பிரச்சினை என்றால் மந்தையில் உள்ள விசுவாச ஆடுகள் முட்டித்தள்ளுவது இயல்பு தானே. எனினும் பரலோகபாண்டி என்கிற இந்த ஆடு மற்ற ஆடுகளைப் போல மந்தையில் உள்ள ஒரு சாதாரண ஆடு அல்ல இது புனித ஆடு. ஆனால் மற்ற ஆடுகளை விட மேய்ப்பனுக்கு மிகவும் விசுவாசமாக நடந்துகொள்ளும் ஆடு. அதாவது வெட்டுபவனை அதிகமாக நம்புவது மந்தையில் இல்லாத இந்த ஆடுதான்.

    • எத்தனை ஆண்டுகளாக ஆலயங்களில் காசு வருதுனு சொல்லுங்க பார்போம் காசு வருதுனு ஒரே காரனத்தாலே கடவுளை விளைப்பொருளாக ஆக்கரிங்க

   • வெங்கடேசன்,

    இப்போது டெசோ கூட்டத்தாருக்கு அவசரமாக மாற்று ‘தமிழினப் பகைவர்கள்’ தேவைப்படுகிறார்கள்.. அர்ச்சகப் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரை அப்படி ‘தமிழினப் பகைவர்களாக’ காட்டினாலும் டவுசர் கழட்டப்படும்.. இது எல்லாத் தமிழர்களுக்கும் தெரியும்.. எனவே நீங்களும், வினவும் இந்த திராவிடக் கூத்தைப் பார்த்து ஆதங்கப்படுவதை விடுத்து வழக்கை நம்பி காத்திருங்கள்..

    • Ambi,TESO is not against Tamils.TESO has nothing to do with this problem.You are showing your true colour by linking TESO with this problem.The enemies of Tamils need not be searched.We know who they are and our struggle will continue.

    • அம்பி,
     உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். 2G வழக்கில் பெரிய வக்கீல்களை ஏற்பாடு செய்ய முடிந்த கலைஞரால், இந்த வழக்கிற்கு சிறந்த வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்ய முடியாதா? அல்லது, தேர்தலுக்கு பெரிய அளவில் நிதி வசூல் செய்ய முடியும் போது, இந்த வழக்கிற்கு வசூல் செய்ய முடியாதா? மத்திய அரசு அங்கீகாரம் பறிபோகும் அளவிற்கு, கந்தர்வ கோலத்தில், “பல்கலைக்கழகம்” நடத்தும் வீரமணியால் இந்த வழக்கிற்கு ஆகும் செலவை கிள்ளிக் கொடுக்க முடியாதா? இந்த வழக்கு செலவில் வக்கீல் கட்டணம் பெரும் பகுதி என நினைக்கிறேன். இவர்கள், பெரியார் வழி வந்தவர்கள் என பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் வெற்றி பெறத்தக்க திறமையும், வழக்கை இலவசமாக நடத்தும் மனமும் கொண்ட ஒரு வக்கீல் கூடவா திமுக-திக இயக்கங்களில் இல்லை?

     இவர்களை மட்டும் குறை சொன்னால் போதாது. எல்லாரும் இந்துக்கள் என முழங்கும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்றவை இந்த விஷயத்தில் எதிர் அணியில் அல்லவா இருக்கிறார்கள்.

     • சொந்த செலவில் சூனியம் வைக்க கருணாநிதிக்கு யோசனை சொல்கிறீர்கள். கேட்பாரா?
      கீரிக்கும் பாம்புக்கும் சண்டைவிடுகிறேன் என்று கடந்த இருநூறு வருடங்களாக டபாய்த்து கொண்டே ஏமாந்தவனிடம் ரெண்டு ரூபாய்க்கு தாயத்து விற்கும் மோடி மஸ்தான் வேலைகாரனைவிட இந்த திராவிட அரசியல்வாதிகள் திறமையானவர்கள். பிரச்சினை தீர்ந்துபோனால் பின்னர் எதை வைத்து அரசியல் செய்வது?
      சாதியை கண்டுபிடித்தவன் தமிழன். அதற்கு காப்புரிமையும் தமிழனிடமே. அதை அறிவியல் பூர்வமான விஷயம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் தமிழர்கள். அந்த நம்பிக்கையை திராவிடமோ, RSS/BJP/ இன்னபிற அமைப்புகளோ கேள்வி கேட்பது இல்லை. கேட்டால் முதலுக்கு மோசம் வரும்.
      தயவு செய்து ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்து என்று சொல்லப்படுவது ஒரு கட்டுக்கதை. உங்கள் அடையாளம் சாதியே. சமய வரலாற்றை உற்று நோக்குங்கள். பார்பானுக்கு தாய்மொழி சமஸ்கிருதம் அல்ல.[ஒரு குழுவை தவிர]. பார்பானுக்கும் குலதெய்வம் என்ற பெயரில் சிறு தெய்வ வழிபாடு உண்டு. இயற்கை வழிபாடும் முன்னோர் வழிபாடுமே நம் வேர்கள். பெருந்தெய்வ வழிபாடு நம் ரத்தத்தில் ஒட்டவில்லை. எனவேதான் பல கடவுள் வழிபாடு நம்மிடையே இன்றும் கலாச்சாரமாக உள்ளது.
      சாதிய அடையாளம் தவறில்லை.அது பிறப்பினால் வருவது.சாதீயம்-பற்றும் வெறியுமே தவறு. சாதீயத்தை மறுப்பது என்பது புத்தியால் ஆய்ந்து விடுவது. வெறும் கருத்து கவர்சிக்காக சொல்லி திரிவதில்லை. அவ்வாறு வெற்றுக்கூச்சல் போட்டு அரசியல் வெளியில் திரிந்தவன் எல்லாம் இன்று சாதி கட்சி பாவாடைக்குள் போய் ஒளிந்து கொண்டார்கள். இங்கே வரலாற்றின் ஒரு கால கட்டத்தில் எல்லா சாதியினருமே அதிகாரத்தில் இருந்தவர்களே;அடிமையாயும் இருந்தவர்களே. உங்கள் சாதியை பற்றி நீங்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ள தேவையில்லை.ஒடுக்கப்படுதல் என்பது உளவியல் போர்.வாழ்வியல் ஆதாரங்களை பிடுங்குவதனால் மட்டும் ஒரு மனிதனை/குழுவை ஒடுக்கிவிட முடியாது. அடிமைகள் திரண்டு அரசமைத்த வரலாறு இங்கே அநேகம் உண்டு. நாங்கள் அடிமைகளாய் இருந்து பின்னர் ஆட்சி அமைத்தவர்கள் என்று தங்களின் கல்வெட்டிலேயே கவுரவமாக பதிந்தவர்கள் உண்டு.

      • //உங்கள் சாதியை பற்றி நீங்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ள தேவையில்லை// சரி பரலோக பாண்டியன், நீங்கள் பெருமை கொள்ளும் உங்கள் சாதி எது? அதன் பெருமைகள் என்ன?

       • தன் சாதி வரலாறை சுயவிமர்சனத்துடன் பார்பவனுக்கு தாழ்வு மனப்பான்மை மட்டுமல்ல உயர்வு மனப்பான்மையும் வராது. கேள்வியின் கேவலம் கூட உங்களுக்கு புரியவில்லை.
        ஒட்டு மொத்த மனஅழுத்தத்துக்கு ஆளான ஒரு சமூக குழுவில் கற்பித்தல் என்பது பொதுவான முறையில் இருந்து மாறுபடும். சற்று அறிவியல் சாராமலும் இருக்கும். சிறுவர்களிடம் நீ கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டது என்று சொல்லும். உடுக்கடிப்பது என்று கூட சொல்லலாம். பின்னர் பெரியவர்கள் ஆனதும் அவர்களே மாற்று கருத்துகளை கற்றுக்கொள்வார்கள்.மன அழுத்தத்தில் இருப்பவனை புறக்காரணிகளை காட்டி பூச்சாண்டி காட்டுவது ஆடு களவானி அரசியலுக்கு வேண்டுமானால் பயன்படும். தனிமனிதனை மீட்டெடுக்க பயன்படாது.ஒடுக்கப்பட்டவனின் விடுதலை ஒவ்வொரு மனிதனும் அடையும் தனி விடுதலையின் தொகுப்பே. அது கல்வியின் பால் சாத்தியமாகும். இன்றைய கல்வி முறை அதற்கு சாதகமாக இல்லை. மாற்று கல்வி முறை கொண்டு வர வேண்டும். தனி மனித விடுதலையை இரண்டாம் பட்சமாக்கி ஒட்டுமொத்த இனத்தின் விடுதலையே பிரதானம் என்று கூறுவது கோடாரிக்காம்புகளின் கூற்று.

        • இத்தனை நாளாக முரளி ஒந்தி… என்பவர் அவருக்கும் புரியாமல், மற்றவருக்கும் புரியாமல் பேசுவார், ஆனாலும் சாதி உணர்வில் மட்டும் சரியாக நிற்பார். அதே மாதிரியே பேசுரீங்க!

         (ஒருவேள அவரோட செகன்ட் பார்ட்டாக இருக்குமோ! )

         • இரண்டு அர்த்தம் உள்ள சொற்றொடரில் முதல் அர்த்தமே தெரியாதவர் சிலர் உண்டு. புரியவேண்டியவர்களுக்கு புரியும் நண்பரே. உங்கள் மற்றொரு பின்னூட்டத்தில் நாட்ராயன் என்ற பெயரின் பல அர்த்தங்களை தெரியாமல் இழிவாக பேசி இருக்கிறீர்கள் நண்பரே. அதை கவனிக்கவும்.

        • எல்லோரும் திருந்தினா ஊரு திருந்திடும், நாடும் திருந்திடும். சூப்பர், அப்துல்கலாமும் இதைத்தான் சொல்லுது. இதைச் சொல்ல இவ்வளவு பெரிய வெண்ணெய்வெட்டி விளக்கமா பரலோகம். ஆக மொத்தத்தில் நீங்கள் பேசுவதெல்லாம் மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதை மட்டும் அனைவரும் புரிந்துகொள்வர். குட்டி முதலாளித்துவ வாழ்க்கையிலிருந்து வெளியே வாருங்கள்.

         • நீங்கள் மந்தையில் ஒரு ஆடு என்று தவறாக நினைத்துவிட்டேன். நீங்கள் உண்மையில் ஆடேதான்.

          நான் சொன்னது ஒடுக்கப்பட்டவனுக்கு கொடுக்கப்படும் கல்வி பற்றிய உளவியல் ரீதியான சிந்தனைகளை பற்றி நண்பரே. “Pedagogy of the Oppressed’ புத்தகம் படியுங்கள். மனிதன் கற்றுகொள்ளும் முறை பற்றிய உடலியங்கியல்/உளவியல் கோட்பாடுகள் கருத்துக்கள் பல இணையத்திலேயே கிடைக்கும். ஆப்பிரிக்க இனக்குழுக்களிடையே கல்வி போதித்த ஆசிரியர்களின் அனுபவம் இணையத்தில் கிடைக்கும். இன்னும் நிறைய கிடைக்கும். புத்தகமாக தேட வேண்டியதில்லை. இங்கே உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியில் உள்ள உளவியல் சிக்கல்களை பற்றி சொல்லிகொண்டிருந்தேன்
          “திருடனா பார்த்து திருந்த விட்டால்” என்று நான் எம்.ஜி.ஆர். மாதிரி பாடிக்கொண்டு திரிபவன் இல்லை.அப்படை ஒரு அதீத கற்பனை உங்கள் ஆட்டு மூளையில் உதித்ததுக்கு இயங்கியல் ரீதியாக கூட நான் காரணமில்லை.நீங்கள் கற்ற கல்வி உங்களை மலடாக்கி இருக்கலாம். முயற்சி செய்தால் அதையும் நீங்கள் மாற்றலாம்.
          நிற்க.
          மொட்ட மாடியில நின்னுகிட்டு கல்லு எறியறத விட்டுட்டு வேட்டிய கட்டிக்கிட்டு கீழ இறங்கி வாங்க. கோதாவுல இறங்குங்க. வரும் போது மறக்காம ஜட்டி போட்டுட்டு வாங்க. எல்லாம் வேட்டிய உருவுற பூர்ஷ்வா பயகளா திரியிறாங்க.
          வாங்கன்னே வாங்க.

   • Venkatesan It was a good comment quoting Thondaradipodi Alwar.In the same Varadarajaperumal temple,non-brahmins are not allowed to sit while receiving prasadam.But brahmins are allowed.In spite of HR&CE instructions to the temple administration not to discriminate devotees on the basis of caste,the unjust practice continues.

    • நடுத்தரவர்க்க நாகரிகம் பார்க்காமல் சத்தம் போட்டு கேக்கணும் சாமி. கேக்காமல் கிடைக்காது. பிடிக்கலையா? விஸ்வகர்மாக்கள் நிர்வகிக்கும் கோயில்கள் இருக்குது. அங்க போங்க.
     உங்க ஊரு சின்னதா இருந்து நீங்க கொஞ்சம் வசதியானவரா இருந்தா உங்களை தொட்டு பிரசாதம் கொடுப்பார்கள். கச்சி வரதர் கோயில் பெரு நகரத்து கோயில். அங்கே உங்களை அடையாளம் தெரியாது. காஞ்சியில் உள்ள எல்லா கோயிலும் ஒவ்வொரு சாதிக்கு சொந்தமானது. அங்கே அவர்களுக்கே முதல் மரியாதை கிடைக்கும். நாம் வருத்தப்பட தேவையில்லை.
     காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயில் மட்டுமே பிராமணர்களுக்கு சொந்தமானது. வரதர் கோயில் இல்லை. நீங்கள் உள்ளூர் வாசியானால் உங்கள் முகம் தெரியும். மரியாதையாக நடத்துவார்கள். சரி மரியாதை இல்லாத இடத்துக்கு போவானேன்? அதே காஞ்சியில் சமணர் கோயில் உள்ளது. அங்கே செல்லுங்கள். வேறு பல சைவ வைணவ கோயில்கள் உள்ளன. அங்கே அர்ச்சகர் உங்களை தொடுவதை தீட்டு என்று நினைப்பதில்லை. எல்லாம் வரும்படி தான் பிரச்சினை.
     ஒரு காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருமானம் கம்மி. அர்ச்சகர்கள் உங்கள் மேல் விழுந்து புடுங்குவார்கள். இன்று வரும்படி அதிகம்.[திராவிட கட்சிகளின் உபயம்]. உள்ளூர்காரனையே கண்டும் காணதது போல் இருப்பார்கள். ஒரு முறை முறைத்தால் அப்புறம் ஒழுங்காக சேவை செய்வார்கள். தமிழ் நாட்டில் நிறைய கோயில்களில் பக்தர்களை தீண்டினால் தீட்டு என்று பாகுபாடு பார்க்காத அர்ச்சகர்கள், கோயில்கள் நிறைய உண்டு.[எல்லாம் சில்லறை விசயமா என்றும் ஒட்டுமொத்தமாக ஒதுக்க முடியாது]. அது சரி பெரும்பாலும் நாம கோயிலுக்கு போறதே சில்லறை வேணும் என்று தானே? எனக்கு பொருளைகொடு உனக்கு நான் மயிரை கொடுக்கிறேன் என்று பேரம் பேசும் போது பூசாரி கட்ஸ் கேட்பது தவறா?

    • இந்தக் கோவில் நடைமுறைகளை ஓரளவிற்கு அறிவேன். நீங்கள் சொல்லும் விஷயத்தை நேரில் கண்டிருக்கிறேன். இது பற்றி வினவு கட்டுரை ஒன்றும் உண்டு.

     இந்த வேறுபாட்டில் இரண்டு இழைகள் உண்டு. முதலாவது பார்ப்பனர்-அல்லாதோர் என்பது. இரண்டாவது வேத-பிரபந்த கோஷ்டியில் இருப்போர், இல்லாதோர் என்பது. திருவிழா-பூஜை நடக்கும் சமயம் கோஷ்டியில் ஓதுவோர், கோஷ்டியில் சேராதோர் என இரண்டு குழுக்கள் இயல்பாக அமைந்துவிடும். விழா முடிந்து பிரசாதம் தரும்போது இரண்டு குழுக்களும் அப்படியே இருப்பதும் இயற்கையே. இதில் கோஷ்டியில் இருப்போர் அமர்ந்து கொண்டும், இல்லாதோர் நின்று கொண்டும் பிரசாதம் வாங்குகிறார்கள். சில விழாக்களில், கோஷ்டிக்கு சன்னதிக்கு உள்ளேயும், மற்றவருக்கு வெளியேயும் பிரசாதம் என்ற பாகுபாடும் உண்டு. கோஷ்டியில் இல்லாதோர் தாமாக அமர்ந்து விட்டால், எழுப்பி விடுவார்களா என்பது பற்றி எனக்கு தெளிவில்லை. முயன்று பார்க்கலாம். கோவிலுக்கு வந்துவிட்ட அனைவரும் திருமால் அடியார் என்ற வகையில் யாரையும் இழிவு படுத்தக்கூடாது. இயற்கையாய் அமையும் கோஷ்டி-அல்லாதோர் என்ற இரண்டு குழுவாக இருப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. இருவரையும் சன்னதிக்கு உள்ளே அமர்த்தி பிரசாதம் தரப்பட வேண்டும்.

     இந்த விஷயத்தில் எனக்கு பிரச்சனை யார் கோஷ்டியில் சேர முடியும் என்பதில் தான் உள்ளது. இப்போதுள்ள நடைமுறையில், கோஷ்டியில் சேர பார்ப்பனனாக இருக்க வேண்டும். மேலும், மரபு ரீதியில் உடை-தோற்றம் கொண்டிருக்க வேண்டும். பேன்ட், ஷர்ட், அரை டவுசர் அனுமதி இல்லை. வேட்டி, துண்டு, நெற்றியில் திருமண் என தோற்றம் தேவை. இரண்டும் இருந்தால், வேத-ப்ரபந்தம் ஓதத் தெரியாவிட்டாலும் கோஷ்டியில் சேர்ந்து விட முடியும். ஆனால், பார்ப்பனர் அல்லாதோர் உடை-தோற்றம் கொண்டு, வேதம்-ப்ரபந்தம் ஓதத் தெரிந்தாலும் கோஷ்டியில் சேர முடியாது. இது எனக்கு ஏற்புடையாதாய் இல்லை.

     மொத்தத்தில், இந்த விஷயத்தில், என் கருத்து இது. வேதம்-ப்ரபந்தம் ஓதத் தெரிந்து இருத்தல், அல்லது மற்றவர் ஓதுவதை கேட்பதில் ஈர்ப்பு. அடுத்து, மரபு ரீதியான தோற்றம். இரண்டும் உள்ள எவரும், ஜாதி-வேறுபாடின்றி, கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். விழாவில் கோஷ்டியில் இருப்போர், இல்லாதோர் என்ற பாகுபாடு இயற்கையாய் அமைகிறது. எனவே பிரசாதம் தரும்போது இது தொடர்வதில் தவறில்லை. இருப்பினும் , கோஷ்டியில் இல்லாதோரும் அமர்ந்து கொண்டு, சன்னதிக்கு உள்ளே பிரசாதம் பெற வேண்டும்.

     இங்கே எனக்கு ஒரு நெருடல் உண்டு. பிரபந்தத்தில் அதிகமாக ஓதப்படுவது ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை. அதிக உரைகள் கொண்ட பகுதியும் இதுவே. அதிகமாக உபன்யாசம் செய்யப்படுவதும் இதுவே. இப்படி ஆண்டாள் என்ற பெண் திருமால் அடியார் உயர்த்திப் பிடிக்கப்பட்டாலும், பெண்களை கோஷ்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என சொல்லும் அளவிற்கு எனக்கு இன்னும் முதிர்ச்சி வரவில்லை. பார்ப்போம்.

 9. புரட்சியின் சோல் டிரேடர் கன்சர்ன்களான உங்களை விட்டுவிட்டு போராட்டம் நடத்துவது தான் பிரச்சினையா? வீதிவீதியாய் இந்தப் பிரச்சினையைப் பேசியதும், பேசிக் கொண்டிருப்பதும், 2006 தேர்தல் ஆதரவுக்கு முதன்மையான பிரச்சினையாக அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பிரச்சினையை முன்வைத்து, தி.மு.க. அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் முடிவாக இதனையே வெற்றிகண்டதும் திராவிடர் கழகம் தான். சிதம்பரம் கோவில் பிரச்சினைக்குப் பின் பாராட்டு நடத்திய போது, தி.க. அழைத்த பின்னும் ம.உ.பா. மய்யத்தினர் வராமல் முறுக்கிக் கொண்டு போனதும் ஏன்? இதே போலத் தானா?

  • தில்லை பிரச்சினை, அர்ச்சகர் பிரச்சினையில் திகவின் புரட்சி படங்கள் இருந்தால் எடுத்து வுடுங்கண்ணே. இன்னிக்கு வினவா? நாமலான்னு பாத்துருவோம்.

   வெங்காயம், அம்மா பின்னாடி போன நீ என்ன பாராட்டு விழா நடத்துறது.

  • போராட்டத்தை பெரியார் திடலுக்குள்ளயும், கோபாலபுரத்துலயும் நடத்தக்கூடாது எதிரியின் கோட்டைக்குள், உச்சிக்குடுமி மன்றத்திற்குள் நடத்தனும். அதை செஞ்சிங்களா இல்லையா, இல்லைன்னா ஏன் இல்லைன்னு சொல்லுங்கள்.

   பெரியாரின் சொத்துக்களை இதுபோன்ற பார்ப்பன எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு செலவு செய்யாமல் வேறு எதுக்காக உங்க தலைவர் சேர்த்து வச்சிட்ருக்காரு ? இந்த வழக்கை நடத்துவதற்கு பல இலட்சம் ரூபாய்கள் செலவாகிறது என்று தோழர்கள் தமிழகத்தின் பேருந்துகளிலும், இரயில்களிலும் பிரச்சாரம் செய்து ஐயாயிரம், பத்தாயிரம் என்று சில இலட்சங்களை திரட்ட மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு நீங்கள் இந்தவகையில் உதவலாமே ? இதுவரை எவ்வளவு ரூபாய் செலவாகியிருக்கிறது என்று கணக்கு கேட்டால் அர்ச்சகர் சங்கத் தலைவர் ரங்கநாதன் உடனடியாக பார்த்து சொல்லிவிடுவார். இதுவரை செலவான தொகையில் சரி பாதியையும் இனிமேல் ஆகக்கூடிய செலவுகளையும் உங்க தலைவர் வீரமணி பகிர்ந்துகொள்ளத் தயாரா ?

   தில்லை நடராசன் கோவிலில் தமிழில் பாட கருணாநிதி உத்தரவு போடவில்லை ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் கருணாநிதியை அப்படி உத்தரவு போட வைத்தன. அதுவும் புரட்சிகர அமைப்புகள் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களின் விளைவாக ஈட்டிய வெற்றி தான். அப்படி இருக்கும் போது ம.உ.பா.மையத்திற்கு பாராட்டு விழா நடத்த நீ யாருங்கிறது தான் கேள்வி.

   ஒழிக்க வேண்டியது சங்கரமடத்தை மட்டுமல்ல பெரியாருக்கு எதிராகச் செல்லும் தி.க மடத்தையும் தான் ஒழிக்க வேண்டும்.

  • பிராமணணை நாம் எல்லாரும் ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும். இதில் பிளவு வேண்டாம் நண்பர்களே.

 10. சின்ன கோவில்களில் வேலை போட்டு கொடுத்தால் மறுத்து பெரிய கோவில்களில்தான் வேலை வேண்டும் என்று பல சாதி அர்ச்சகர் மாணவர்கள் உங்கள் கருத்தை கேட்டு போராடுவார்களா? இல்லை இப்போதுக்கு கிடைத்த வேலை போதும் பின்னர் பார்த்துகொள்ளலாம் என்ற திராவிட புரோக்கர்களின் வாதத்தை ஏற்று வேலைக்கு போவார்களா?
  பேரம் ஏற்கனவே முடிந்துவிட்டதே!!! இப்போது வந்து பதிவுபோடுகிரீர்களே? ரொம்ப லேட் தோழர்களே.

 11. நோக்கம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக பார்ப்பனர்கள் தாக்கியபோதும் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்த்தின் போது அமைதி காத்தனர் ம.க.இ.க வினர். ஆனால் ம.க.இ.க வினர் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டத்தை வன்முறை போராட்டம் என்றவர்தானே இந்த வீரமணி. திருச்சி பாலக்கரையில் ஒரு முறை அவர் பேசியதை நான் எனது காதால் கேட்டபோது இந்த ஆளுக்கு எதுக்கு பெரியாரும் கருப்புச் சட்டடையும் என அப்போதே எண்ணியவன் நான். இவரிடம் வேறேன்ன எதிர்பார்க்க முடியும்? இவருக்குப் பொருத்தமான உடை காவிதான்.

 12. சரி ஒத்து கொல்கிரோம் . ஆனால் மசூதிகலிலும் சர்ச்கலிலும் யாரை வேன்டுமானலும் பதரியார் மட்ரும் தலமை பொருப்புகலில் அர்சு அமர்தட்டும்.

  எல்லா மசூட்கி மட்ரும் சர்ச்கலையும் அரசு எர்கட்டும்

  entha alaiyathayum neengal kattiyathu illai, entha kalathilo yaralo kata pattathu,appothu entha kalathil kata pata rules thane seyal padavendum……………..

  matrum matha nambikai illatha neengal yen em mathathil matram seiya varukireerkal ….moodikondu utkarum…

 13. ————
  ஆட்டம் ஆடுவேன்
  சோக்கா பாட்டு பாடுவேன்
  நேக்கா தேட்டை போடுவேன்.

  என்று பாடிவரும் கள்ளபார்ட் காராமணியை பற்றி இன்னுமா நீங்கள் கவலை படுகிறீர்கள் தோழரே?

 14. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் போராட்டத்துடன் அனைத்து ஜாதியினரும் செருப்புத்தைக்க வேண்டும், அனைத்து ஜாதியினரும் சவரம் செய்ய வேண்டும், அனைத்து ஜாதியினரும் சலவை செய்ய வேண்டும் மற்றும் பல கோரிக்கைகளையும் ஒரே சேர வைத்து போராடினால் அனைத்து ஜாதியையும் ஒழித்து விடலாம்!!!!!!!! என்ன சரியா?

  அட போங்கையா நீங்களும் ஒங்க போராட்டமும்!!!

  மக்கள் வேலை இல்லாமலும் வறுமை கொட்டுக்குள்ளும் இருந்து படாத பாடுகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். இது போன்ற மக்களுக்கான போராட்டங்களை விட்டு விட்டு உப்பு சப்பில்லாத பிரச்சனைக்கு போராட்டமாம்!!

  லஞ்சத்திற்கு எதிராக யாரும் போராடவில்லை!!! கேட்டால் மக்கள்தான் அதனை செய்ய வேண்டும் என்கிறார்கள் இந்த கூட்டங்கள். முதலில் மக்கள் படும் துயரத்தில் பங்கு கொண்டு அதனை களைய வேண்டாமா?

  • நான்தா மணியாட்டுவேன்னு பார்ப்பான் அடம் புடிக்கிறான்.நான்தா செருப்பு தைப்பேன் நான்தா சவரம் செய்வேன்னு யாரும் புடிவாதம் பண்ணலையே.ஏன் நீங்களே கூட இந்த தொழிலை செய்து உங்கள் வார்த்தைகளுக்கு முன்னுதாரணமா ஆகலாமே.

   ஆகவே மகாஜனங்களே நாளை முதல் நம்ம நட்டுராயன் இந்த தொழில்களில் இறங்க கூடும்.அனைவரும் ஆதரவு தாரீர்.

   • அட நீங்க வேற அவருடைய கவலை என்னவென்றால் உப்புசப்பில்லாத போராட்டம் என்பதால் ஆகவே நாளைக்கு அண்ணன் நட்ராயன் அனைத்து சாதியினரும் மலம் அல்லவேண்டும் என்று, அதையும் அவரே முன்னின்று ஆரம்பித்து வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    • நாட்ரயான் என்ற பேர் பின்புலம் தெரியாமல் பேசிவிட்டீர்கள். தயவுசெய்து இனிமேல் இவ்வாறு பேசவேண்டாம். அவர் மனம் காயமடைந்திருக்கலாம். பழனி பக்கம் நண்பர்கள்/தோழர்கள் இருந்தால் தயவு செய்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.வினவு மேல உள்ள பின்னூட்டத்தை நீக்கி விடலாம்.

     • அதென்ன நட்டுக்கு பின்புலம்.அந்த புலத்தை கொஞ்சம் எடுத்து விடுங்களேன்.நாங்களும் தெரிஞ்சுக்குவோம்.இல்லாட்டி தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சுட்டு பக்கத்துலையே உக்காந்துக்கங்க. பின்னாடி வர்ற சந்ததிகள் படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க.

      இன்னொன்னு பரலு,அவர் எப்பேர்பட்ட லார்டு லபக் தாஸ் ஆக இருந்தாலும் வாய வச்சுகிட்டு சும்மா இருக்கணும்.பார்ப்பனர்களுக்கு சொம்பு தூக்குனா இப்படிதா வாங்கி கட்டனும்.

      • தூரப்பார்வை ரொம்ப முத்திபோச்சு. கிட்டத்துல இருக்கிறது ஒன்னும் தெரியல. கண்ணாடிய மாத்தின நல்லது.
       திரு. நாட்ராயன் அவர்களே நீங்கள் மார்க்சுக்கு செம்பு தூக்கினால் இந்த பேச்செல்லாம் வருமா?
       அவரு சொன்னது தப்புன்னு நினச்சா விளக்கம் சொல்லுங்க-உங்க தத்துவ பார்வையினாலே அவருக்கு தெளிவை உண்டாக்குங்க.
       ஒருவேளை காறித்துப்புவது தான் உரையாடலோ? புரியவில்லை நண்பரே.