privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : புதைந்துள்ள உண்மைகள் !

தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : புதைந்துள்ள உண்மைகள் !

-

ந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா உருவாகப் போகிறது என்று நாடு முழுவதும் பரபரப்பை மூட்டி விட்டிருக்கிறது மத்தியில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு.

தெலுங்கானா, சீமாந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக, யூனியன் பிரதேசமாக ஐதராபாத் நீடிக்கும். 10 ஆண்டுகளில் சீமாந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்கப்பட்ட பிறகு ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துடன் சேர்க்கப்பட்டு விடும். இத்தகைய புதிய தலைநகரை உருவாக்குவதற்கு ரூ 4 முதல் 5 லட்சம் கோடி தேவைப்படும் என்று தெலுகு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு சொல்லியிருக்கிறார்.

தெலுங்கானா அறிவிக்கப்பட்டால் பதவி விலகப் போவதாக வீரம் பேசிய முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியும், அமைச்சர்களும் தங்கள் நாற்காலிகளை இறுகப் பிடித்துக் கொண்டு பதவியில் தொடர முடிவு செய்திருக்கிறார்கள். தெலுங்கானா அரசியல்வாதிகள் மத்தியில் யார் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் ஆவது என்ற குடுமிப்பிடி சண்டை ஆரம்பித்திருக்கிறது. மாநிலம் பிரிக்கப்பட்டதும் அந்தந்தப் பகுதிகளின் இப்போதைய சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்டு புதிய சட்ட மன்றங்கள் அமைக்கப்படும். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்து அதன் ஆதரவுடன் முதலமைச்சர் ஆகி விடுவார் என்று ஆருடங்கள் சொல்லப்படுகின்றன.

தெலுங்கானா உருவாக்கத்தை எதிர்த்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் முழு அடைப்பு, வேலை நிறுத்தம், மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள் வலுத்திருக்கின்றன. ஆந்திராவை பிரிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விட மாட்டோம் என்று ஆந்திர அரசியல்வாதிகள் சூளுரைத்திருக்கின்றனர்.

மேற்கு வங்காளத்திலிருந்து கோர்க்காலாந்து, அசாமிலிருந்து போடோலாந்து, மகாராஷ்டிராவிலிருந்து விதர்பா, உத்தர பிரதேசத்திலிருந்து  மூன்று மாநிலங்கள் என்று கோரிக்கைகள் இடதும் வலதுமாக பறக்கத் தொடங்கியுள்ளன. கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா டார்ஜிலிங்கில் காலவரையற்ற முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து பிரித்து யூனியன் பிரதேசம் ஆக்க வேண்டும் என்று ஷோபா டே டுவீட்டியது மராட்டிய அரசியல்வாதிகளுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வன்னியர் நாடு, தேவர் நாடு, நாடார் நாடு என்று தனிமாநிலங்கள் ஏற்படுத்தி தமது குடும்பத்தினரை முதலமைச்சராக்க கனவு காணும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும் கைகளை தேய்த்து விட்டுக் கொண்டு தெலுங்கானா அறிவிப்பை வரவேற்றிருக்கின்றனர்.

ந்தச் சூழலில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையைப் பற்றியும் அதை ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் போராட்டங்கள் குறித்தும் 2010, ஜனவரி புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறோம். ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான அதிகார பகிர்வுக்கான போட்டியில் விளையும் இத்தகைய நிர்வாகபிரிவினைகள் மக்கள் வாழ்க்கை பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மக்கள் போராட்டங்கள் புறக்கணிக்கப்படவும், ஒடுக்கப்படவும்தான் உதவும் என்பதை கட்டுரை விளக்குகிறது. தெலுங்கானா கோரிக்கை என்பது ஜனநாயகத்திற்கான கோரிக்கை அல்ல என்பதை இக்கட்டுரை நிறுவுகிறது. அதே நேரம் தெலுங்கானாவை எதிர்க்கும் ஏனைய ஆந்திர முதலாளிகள், நிலப்பிரபுக்களையும் ஆதரிக்க முடியாது என்பதையும் இக்கட்டுரை பேசுகிறது.

___________________________________________________

தெலுங்கானா : புதைந்துள்ள உண்மைகள்

தெலுங்கானாந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த்தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது, ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், அதைத் தொடர்ந்து, ஒருமித்த கருத்து உருவாகும்வரை உடனடியாகத் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கப் போவதில்லை என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அடித்த பல்டி, அதை எதிர்த்து தெலுங்கானாவில் மீண்டும் போராட்டம் – என ஆந்திர மாநிலம் தொடர் போராட்டங்களால் நிலைகுலைந்து போயுள்ளது.

கடலோர மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா ஒப்பீட்டளவில் பெரியது. வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப் நகர், ரங்கா ரெட்டி, கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் தெலுங்கானா என்றழைக்கப்படுகிறது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால், தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது. கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரும் தெலுங்கானா பேரெழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின்னர் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு, தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.

காந்தியவாதியான பொட்டி சிறீராமுலு, தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாநிலம் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாக, அன்று சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரப் பிரதேசம், மொழிவழி மாநிலமாக 1953-ல் பிரிக்கப்பட்டது. அப்போது கர்நூல்தான் அதன் தலைநகர். பின்னர், மொழிவாரி மாநிலம் என்ற அடிப்படையில் தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட தெலுங்கானாவையும் உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசமாக 1956-ல் ஒருங்கிணைக்கப்பட்டது. தெலுங்கானா பிராந்தியத்தைக் கொண்ட நிஜாம் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த ஐதராபாத், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரானது. ஒட்டுமொத்த ஆந்திராவின் மக்கள்தொகையில் நான்கு சதவீதம் மட்டுமே உள்ள ரெட்டிகளும், சவுத்திரிகளும் தெலுங்கானா பகுதியில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டனர். நிலப்பிரபுக்களான இவர்களின் ஆதிக்கம், அரசாங்கப் பதவிகளில் இவர்கள் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டதன் காரணமாக, தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் ஆந்திராவுடன் இணைய மறுத்து, தனி மாநிலமாக்கக் கோரினர்.

அதன் பின்னர், 1961 தேர்தலுக்குப் பிறகு உருவாகும் அம்மாநில சட்டசபை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆந்திரப் பிரதேசத்தில் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும், தெலுங்கானா பிராந்தியத்தை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைப்பது; இல்லையேல், தனிமாநிலமாக நீடிக்க அனுமதிப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. அப்பரிந்துரையையும் இதர எழுதப்படாத ஒப்பந்தங்களையும் மைய அரசு கைகழுவியது. இதனால் தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாக வெளிப்பட்டு வந்தது.

ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள்-முதலாளிகளின் ஆதிக்கம், கல்வி – வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளில் தெலுங்கானா நடுத்தர வர்க்கத்துக்கு உரிய பங்கு கிடைக்காமை ஆகியவற்றினால் ஏற்பட்ட குமுறல்களின் காரணமாக 1969-ல், தெலுங்கானா பகுதியில் மாணவர்கள்-இளைஞர்கள் தனித் தெலுங்கானா மாநிலம் கோரிப் போராட்டங்களை நடத்தினர். ஏறத்தாழ 360 பேர் அப்போராட்டத்தில் உயிரிழந்தனர். கடும் அடக்குமுறைக்குப் பிறகு, அந்தப் போராட்டம் படிப்படியாக நீர்த்துப் போனது.

தனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து கல் குவாரி, நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், வீட்டுமனைத் தொழில், தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறை, சினிமாத் துறை, காடுகள் முதலானவற்றில் தெலுங்கானாவுக்கு வெளியேயுள்ள பிற மாவட்டங்களின் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கமும் சூறையாடலும் தெலுங்கானா பிராந்தியத்தில் தீவிரமடைந்தன. ஆடம்பர, உல்லாச, களிவெறியாட்டங்களில் இக்கும்பல் கொட்டமடித்தது. இப்புதுப் பணக்கார கும்பலின் வாரிசுகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளைப் பெருமளவில் கைப்பற்றிக் கொண்டனர். தெலுங்கானா நடுத்தர வர்க்கம் அவர்களோடு போட்டியிட இயலாமல் குமுறியது.

அதன் எதிரொலியாக, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற புதியகட்சி 2001-ல் உருவாகியது. தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் மையமான கோரிக்கை.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து, காங்கிரசில் நிலவும் கோஷ்டிச் சண்டையைச் சாதகமாக்கிக் கொண்டு, தோல்வியடைந்து கிட்டத்தட்ட முடமாகிவிட்ட தமது கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், தனித் தெலுங்கானா கோரி கடந்த நவம்பர் இறுதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், சந்திரசேகரராவ். அதை ஆதரித்து மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். மாணவர்கள் மீதான போலீசின் கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் – என அம்மாநிலமெங்கும் போராட்டத்தை ஆதரித்து நடுத்தர வர்க்கத்தினர் அணிதிரண்டனர். தனித்தெலுங்கானா மாநிலம் கோரி சிலர் தற்கொலை செய்து கொண்டதும், உணர்ச்சிமிகு போராட்டமாக அது மாறத் தொடங்கியது.

இதற்கு மேலும் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கையைத் தட்டிக் கழித்தால், தெலுங்கானா பிராந்தியத்தில் காங்கிரசு செல்லாக்காசாகிவிடும் என்பதாலும், இதேபோல நாட்டின் இதர பகுதிகளிலும் தனி மாநிலம் கோரி போராட்டங்கள் பெருகத் தொடங்கிவிடும் என்ற அச்சத்தாலும், போராட்டத்தைச் சாந்தப்படுத்தி நீர்த்துப் போக வைக்கும் உத்தியுடனும் காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கையளவில் ஏற்பதாக அறிவித்தனர். தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ், உண்ணாவிரதத்தைக் கைவிட்டதோடு, போராட்டங்களை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து, 2014-க்குள் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கித் தருமாறு மைய அரசிடம் கோரினார்.

ஆனால்,தெலுங்கானா மாநிலம் உருவானால், அது இன்றைய ஆந்திரப் பிரதேசத்துக்கு இழப்பாக இருக்கும், தலைநகரான ஐதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விடும் என்றெல்லாம் வாதங்களை வைத்து, தெலுங்கானா கோரிக்கையை ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ள பெருமுதலாளிகளும், புதுப் பணக்கார நில மாஃபியா-சுரங்க மாஃபியாக்களும் எதிர்க்கின்றனர். தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள்தான். ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள பெருநகரங்களில் சினிமாத் துறை, வீட்டுமனைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை முதலானவற்றில் கோடிகோடியாய் முதலீடு செய்து சூறையாடுவதும் இந்தக் கும்பல்கள்தான். இவர்கள்தான் இப்போது தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியிலிருந்து இயக்குகிறார்கள்.

அரசியல் சட்டப்படி, புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, அரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, கருத்தறிவதற்காக அம்மாநிலச் சட்டமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும். சட்டமன்றத்தின் கருத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் காங்கிரசு ஆட்சியாளர்களோ, இத்தீர்மானம் ஆந்திர சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமித்த கருத்தின்படி முடிவு செய்யப்படும் என்று கூறுகின்றனர். காங்கிரசின் நிதியாதாரமாக உள்ள புதுப் பணக்கார மாஃபியா கும்பலைச் சாந்தப்படுத்தவும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று காரணம் காட்டி,மீண்டும் இழுத்தடிக்கவுமே காங்கிரசு கயவாளிகள் முயற்சிக்கின்றனர். இதனாலேயே, தனித் தெலுங்கானாவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, தீர்மானம் நிறைவேறாத வகையில் ஆந்திர சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் இசைவு தெரிவித்துள்ளதன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது. வன்னியர் நாடு என்ற கோரிக்கையுடன் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று முன்பு கோரி வந்த பா.ம.க.வின் ராமதாசு, இப்போது மீண்டும் சென்னையைத் தலைநகராகக் கொண்ட வட தமிழ்நாடு என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்ட தென் தமிழ்நாடு என்றும் பிரிக்க விரும்புவதாக சாதிய அடிப்படையில் அறிவித்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் கடந்த 50 ஆண்டுகளில் 12 புதிய மாநிலங்கள் உருவாகியுள்ளதைக் காட்டி, உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கக் கோருகிறார், மாயாவதி. உ.பி.-பீகாரிலிருந்து போஜ்பூர், அசாமிலிருந்து போடோலாந்து, உ.பி.-ம.பி.யிலிருந்து பண்டேல்கண்ட், மகாராஷ்டிராவிலிருந்து மரத்வாடா மற்றும் விதர்பா, ஒரிசாவிலிருந்து மகா கவுசல், பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ்தானிலிருந்து முரு பிரதேஷ், உ.பி.யிலிருந்து பூர்வாஞ்சல், குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா – எனத் தேசிய இன அடிப்படையில் அல்லாமல், ஒரே இனம் – ஒரே மொழி பேசும் மாநிலத்திலேயே, பிராந்திய அடிப்படையில்-சாதிய அடிப்படையில், மொழிச் சிறுபான்மையினர் அடிப்படையில் தனி மாநிலக் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கட்டுமானத்தில், நிர்வாகத்தைத் துறை வாரியாகப் பிரிப்பதும், அது போல மாநிலங்களையும், மாவட்டங்களைப் பிரிப்பதும் நடக்கக்கூடியதுதான். அவ்வாறு மாவட்டங்களைப் பிரிக்கக் கோரி மக்கள் போராடுவதை ஜனநாயகக் கோரிக்கையாகக் கருத முடியாது. பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூரைச் சேர்க்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டமும், செங்கல்பட்டில் இருந்து மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்ற வேண்டும், மாற்றக் கூடாது என்று அந்தந்த பகுதிவாழ் மக்கள் நடத்திய போராட்டமும், அரசுத் திட்டங்கள்-சலுகைகளைப் பெறுவதற்கான பொருளாதாரப் போராட்டம்தானே தவிர, அது முற்போக்கான – ஜனநாயகக் கோரிக்கையுடன் நடத்தப்படும் போராட்டமல்ல.

இப்படித்தான் தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தையும் பார்க்க முடியும். பிராந்திய உணர்விலிருந்து எழும் பொருளாதாரவாதக் கோரிக்கைதான் இது. ராயலசீமா மற்றும் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம்-சூறையாடலைக் கண்டு குமுறி, அவர்கள் இடத்தை தாங்கள் பிடிக்க வேண்டும் என்ற ஏக்கத்திலிருந்துதான் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் நடக்கிறது. தெலுங்கானா பிராந்தியத்தில் வீட்டுமனை, கல்குவாரிகள், கனிமச் சுரங்கங்கள், காட்டுவளம் முதலானவற்றைச் சூறையாடி ஆதிக்கம் செலுத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தெலுங்கானா பிராந்திய மக்கள் இதுவரை எந்தவொரு போராட்டத்தையும் கட்டியமைக்கவில்லை. மாறாக, தாங்கள் வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக, பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே நடுத்தர வர்க்கம் குமுறுகிறது. உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகள் முதலானவற்றில் தாங்களும் அமர வேண்டும் என்ற வேட்கையே தனி மாநிலக் கோரிக்கையாக எழுந்துள்ளது.

ஆனால் மாவோயிஸ்டுகளோ, அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் நாம் ஆதரிக்க வேண்டும், அது முற்போக்கான போராட்டம் என்று கருதுகின்றனர். போராட்டத்தின் கோரிக்கையைப் பற்றிப் பரிசீலிக்காமல், அப்போராட்டத்தைப் போர்க்குணமிக்கதாக மாற்றுவதன் மூலம், அதை புரட்சிகரப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். ஏற்கெனவே, காலிஸ்தான் போராட்டத்தை இந்த நோக்கத்தில்தான் ஆதரித்தனர். பின்னர், ’80-களில் தனித் தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுப்பது என்ற பெயரில் தெலுங்கானா பகுதியில் சில சாகசவாத நடவடிக்கைகளிலும் இறங்கினர். இப்போது நடந்த தனித் தெலுங்கானா போராட்டத்தையும் இந்த அடிப்படையிலேயே ஆதரித்து பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கின்றனர்.

ஓட்டுக்காக, சந்தர்ப்பவாதமாக பல கட்சிகள் தனிமாநிலக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கைக்கான போராட்டத்தை இந்துவெறி பா.ஜ.க.வும் ஆதரிக்கிறது. அது, ஒரே மொழி பேசும் ஒரு தேசிய இனத்தைக் கொண்ட மாநிலத்தை, நிர்வாக வசதிக்காகப் பிரிப்பதில் தவறில்லை என்று வாதிடுகிறது. இதன்மூலம் நிர்வாகம் எளிமையானதாகவும் சிறப்பாகவும் அமையும் என்கிறது. ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் வேறானது. ஒரே மொழி பேசும் ஒரே இனத்தைச் சேர்ந்த மாநிலம் என்றால், அங்கு தமிழ்நாடு போல தேசிய இனப் போராட்டங்கள் எழும்; தேசிய ஒருமைப்பாடு கந்தலாகிப் போகும்; ஒரே இனத்தை பல மாநிலங்களாகக் கூறு போட்டால், அத்தகைய போராட்டங்கள் எழுவது நீர்த்துப்போகும். எனவே, தேசிய இன-மொழி அடையாளங்களுக்கு அப்பால், இந்துத்துவ அடிப்படையில் “தேசிய’ ஒருமைப்பாட்டை நிறுவவே அது விழைகிறது. காங்கிரசும் இதே நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

மேலும், பெரிய மாநிலம் என்றால் பிராந்திய கட்சிகள் செல்வாக்கு செலுத்தி மைய அரசை ஆட்டிப் படைக்கின்றன. எனவே, மாநில அளவில் செல்வாக்கு பெற்றுள்ள பிராந்திய கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் கூடுதல் பங்கு கேட்டு நிர்ப்பந்திப்பதைத் தடுக்க, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்பதே ராகுல் காந்தியின் பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டம். இதனால்தான் வெள்ளோட்டமாக இப்போது தெலுங்கானாவைப் பிரிப்பதாக அறிவித்து, விளைவுகளைப் பரிசீலித்து, அடுத்த கட்டமாக பிற மாநிலங்களையும் பிரிக்க மைய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்போல, மொழி-இன அடிப்படையில் அல்லாமல், நிர்வாக அடிப்படையிலான பிரிவினை கொண்டதாக, பெரிய மாநிலங்களை மாற்றியமைக்கும் நோக்கத்துடன்தான், தற்போது மாநில மறுசீரமைப்புக் கமிசன் உருவாக்கப்படுகிறது.

மறுபுறம், ஒரே தேசிய இனத்தைக் கொண்ட பெரிய மாநிலம் என்றால், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மறுகாலனியாக்கச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களைப் போடுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. பிராந்திய நலன்களை முன்வைத்து, அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் இத்தகைய ஒப்பந்தங்களை எதிர்த்து நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிக்கின்றன. சிறிய மாநிலங்கள் என்றால், பின்தங்கிய மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை வாயடைக்கச் செய்து, இத்தகைய மறுகாலனியச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களை அதிக சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடிகிறது. இதற்கு, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஜார்கண்டும், சட்டிஸ்கரும் சான்றுகளாக உள்ளன. ஏகாதிபத்தியவாதிகள் இந்த நோக்கத்தோடுதான் நிர்வாக வசதிக்காக சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதை ஆதரிக்கின்றனர். ஏகாதிபத்தியவாதிகளின் விருப்பத்தையே தேசியக் கட்சிகளும்எதிரொலிக்கின்றன. இந்த உண்மைகளைக் காண மறுத்து, தனி மாநிலக் கோரிக்கையை குருட்டுத்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அடிப்படையிலேயே தவறானதாகும்.

எனவே தற்போது தனி தெலுங்கானா கோரி நடக்கும் போராட்டம், பொருளாதாரவாதக் கோரிக்கைதானே தவிர, அது தேசிய இன உரிமைக்கான போராட்டமே அல்ல. அரசுக்கு எதிரான போராட்டம், மக்களின் நீண்டகால விருப்பம் என்பதை வைத்து அதை முற்போக்கான-ஜனநாயகக் கோரிக்கையுடன் நடக்கும் போராட்டமாகவும் கருத முடியாது. அதேசமயம், தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி சூறையாடிவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள், தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து, ஒரே ஐக்கியப்பட்ட ஆந்திரா என்ற கோரிக்கையுடன் நடத்தும் எதிர்ப்போராட்டமும் நியாயமானதல்ல. அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டாபோட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.

_________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

_________________________________

  1. சரி முடிவா என்னதான் சொல்ல வரிங்க ,,,,,,,,,,,,,,,,, பிரிக்கலாமா …? கூடாதா?… உங்கள் மாவோயிச சித்தாந்திகள் கூட ஆதரிக்கத்தானே செய்கிறார்கள்.

    • அதை பிரித்தாலும் பிரிக்காவிட்டாலும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, வழக்கம் போல ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

      பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்கள் ஒன்றாக இணைந்து சுரண்டல் அமைப்பையும் அதை பாதுகாக்கும் அரசையும் எதித்து முறியடிப்பதில் தான் இருக்க வேண்டும்.

  2. அதுக்குள்ள சந்திரபாபு நாய்டு 5 லச்சம் கோடி ஆகும் என்கிறார் : புதிய தலைநகர் கட்டுவதுக்கும் மட்டும். this is only fixed cost spread over years, while recurring costs are ‘extra’ : http://www.thehindu.com/news/national/andhra-pradesh/rs-5-lakh-cr-needed-for-new-capital-naidu/article4975144.ece?homepage=true

    ரொம்ப முக்கிய பாருங்க இந்த செலவு. அரசு மருத்துவமனைகளில் மருந்து, உபகரணங்கள் வாங்க அரசிடம் போதிய நிதி இல்லை. ஆனால் இப்படி வெட்டி செலவு செய்ய மட்டும்…

    அரசின் வெட்டி செலவுகளை அதிகப்படுத்தி, ஊழலை இன்னும் அதிகப்படுத்தி, இறுதியில் விலைவாசி உயர்வு என்னும் மறைமுக வரி விதிப்புக்கே வழி வகுக்குக்கும். Food inflation is very high in India due to high fiscal deficits. this is NOT the time to increase wasteful govt expenditures. Creation of a new state may cost 30,000 crore in the long run. with no new revenue, it is a criminal waste. and it will inflate the prices more. only beneficiaries will be more govt staff and officers and perks.

    புதிய தலைமை செயலகம் மற்றும் இதர அமைச்சரவை கட்டிடங்கள், அதிகாரிகள், கார்களுக்கான செலவுகள் மிக அதிகம் ஆகும். அத்தனை அமைச்சகங்களுக்கும் புதிய அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு கீழ் சில ஆயிரம் புதிய அதிகாரிகள் மற்றும் அலுவர்கள், இத்தியாதிகள் தேவை. புதிய உயர் நீதி மன்றம், ஆணைக்குழுக்கள், தெலுங்கு வளர்ச்சி துறைகள், தேனி வளர்ச்சி துறைகள், கால்நடை பராமரப்பு துறைகள், ஸ்டேசனிர் நிர்வாக கமிட்டி, etc, etc ,etc.. இதுகெல்லாம் செலவு செய்ய பணம் எங்கிருந்து வரப்போகுது ? மேலும் பண வீக்கம், வரிகள். லஞ்சங்கள்..

    நண்பர் செல்வனுடன் விவாதம் செய்ததில் எழுதியது : ‘செல்வன் : நீங்க கோவை பகுதியில் வளர்ந்தவர். நானும் அங்கு பல காலம் வாழ்ந்திருக்கிறேன். 80கள் வரை திருப்பூர் ஒரு தாலுக்கா தலைமையகம் கூட இல்லை. பல்லடம் தாலுகாவில் தான் திருப்பூர் இருந்தது. கடந்த 40 ஆண்டுகளில் திருப்பூர் ‘வளர’ தனியார்களின் முயற்சி தான் ஒரே காரணம். (அரசு எந்திரம் வரிகள் மற்றும் இதர கெடுபிடிகள் மூலம் முடிந்தவரை இதை தடுக்க பாத்தது !!:) ) ; திருப்பூர் இன்று தனி மாவட்டம். மாவட்டம் ஆகும் முன்பே, தாலுக்கா ஆகும் முன்பே வளந்தாச்சி. ஆனால் தஞ்ச்சாவூர் பல நூறு ஆண்டுகளாக முக்கியமான அரசு தலைமை நகர். திருப்பூர் அளவு பத்து சதம் கூட இன்றும் வளரவில்லை. When will you people understand that creating more and more govt bureaucracy and staff does not mean ‘development’ ; reduction of poverty levels, rise in standard of living of the poorest of poor are the only parameters for ‘growth’ ; to enable that govt can spend its precious money in a very careful and responsible manner, instead of wasting on admin costs. and do you have any idea about level of debts of all state govts and municipalities here ?’

    decentralisation means devolving the powers of state govts to district admin and finally to panchayaths. but here it is not done. we can create more taluks and panchayaths. that IS decentralisation. not creating new centralised govts !! and always cost / benefit analysis is the basis for all decisions by a good manager. long term, medium term and short term costs. here they outweigh perceived benefits

    • கருத்து ரொம்ப நல்லா அழகா இருக்கு.அதிகாரத்தை பஞ்சாயத்து தலைவர் குடும்பத்து கிட்ட நிரந்தரமா கொடுத்துட்டு,அப்புறம் என்ன ஜனநாயகம் இங்கு வாழும் ? நீங்க சொல்வது எல்லாம் மனிதர்களுக்கு பொருந்தும்.VOTE போடற PAID MACHINES சமூகத்துக்கு இதெல்லாம் புரியுமா? CITY விட்டு வெளியிலே வந்து மிக கீழ் நிலை அரசியலை கொஞ்சம் யோசித்து அலோசனை சொல்லுங்க.குறைந்த அளவாக ஐம்பது விழுகாடு தமிழர்கள் பொறுப்பான மனிதனாக வாழ அறிந்து உணர்ந்து முயற்சித்தால் மட்டுமே ,அரசியல் மாற்றம் ஏற்பட வைப்பு உண்டு.

    • தனியார்மயம் வளர்ந்தாலும் பிரச்சினைதான் சார் ……….. திருப்பூர் சாயப்பட்டறை முதல் அம்பானியின் கோதாவரி இயற்கைவாயு திருட்டுவரை எல்லாம் சுயநலம்தான்………… வளர்ச்சி என்றபெயரில் தமிழக உழைக்கும் மக்களின் உழைப்பை “சுமங்கலி ” திட்டம் என்று ஏதாவது பெயர் வைத்து சுரண்டுவதும்,நிலத்தடிநீரை விஷமாக்கியதும் தனியார்மயம் வளர்ந்ததால்தான் ………. நம் பொதுசொத்தான இயற்க்கை எரிவாயுவை திருடுவதொடல்லாமல் அரசின் துணையோடு அநியாய விலை நிர்ணயித்து கொள்ளைலாபம் சம்ம்பாதிப்பதும் இதே தனியார்மயமாக்கலினால்தான்…….

  3. உ.பி யும் பீகாரும் பிரிக்கப்பட்ட பிறகும் மக்கள் பிழைப்பு தேடி அங்கும் இங்கும் ஓடிக் கொணடுதானே இருக்கிறார்கள் – பதவிகளைப் பிடித்துக் கொண்ட அரசியல் பிழைப்புவாதிகள் மற்றும் அதிகாரிகளைத் தவிர! ஆந்திரா மட்டும் வதிவிலக்கா என்ன?

  4. கட்டுரை சரியான விவரணைகளுடன் வந்திருக்கிறது.ஆனால் அந்த தர்க்கங்களின் அடிப்படையில் மாநிலங்களை பிரிப்பதை எதிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கே நீங்கள் வந்திருக்க வேண்டும்.ஐக்கிய ஆந்திரா என்ற பெயரில் தெலுங்கானாவுக்கு வெளியேயுள்ள பிற மாவட்டங்களின் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் கோரிக்கை என்ற அளவில் மட்டும் இதை பார்க்காமல் தேசிய இன ஒற்றுமையை சீர்குலைக்கும் என்ற அடிப்படையில் தனி தெலுங்கானா கோரிக்கை எதிர்க்கப்பட வேண்டும்.

    மைய மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால்,நிலவுகின்ற அமைப்பின் தோல்வியினால் மக்களின் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது.இந்த சூழலை கேடாக பயன்படுத்திக் கொண்டு சிறுவீத கும்பல் நமக்கென தனியாக ஒரு வேட்டைக்காடு கிடைக்கும் என்ற நோக்கில் துன்பம் போக்கும் அருமருந்தாக மாநில பிரிவினையை காட்டி மக்களை உணர்ச்சிபூர்வமாக தூண்டி விட்டு போராட வைக்கின்றனர்.தெலுங்கானா தனி மாநிலம் ஆக உருவெடுப்பதில் சாதாரண மக்களுக்கு எந்த பயனும் இல்லை.அதே மைய அரசு அதே பொருளாதார கொள்கைகள்,பெயர் மட்டும் மாறிய மாநில அரசு நீடிக்கும்போது மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை.இன்னொரு முதல் அமைச்சர்,அமைச்சர் பட்டாளம்,அரசு செயலர்கள்,மாநில அளவில் தலைமை பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள்,அரசு வேலை வாய்ப்பு என சிறு கும்பலே பயனடையும்.

    கட்டுரையே தெளிவாக குறிப்பிடுகிறது,

    \\பா.ஜ.க.வின் நோக்கம் வேறானது. ஒரே மொழி பேசும் ஒரே இனத்தைச் சேர்ந்த மாநிலம் என்றால், அங்கு தமிழ்நாடு போல தேசிய இனப் போராட்டங்கள் எழும்; தேசிய ஒருமைப்பாடு கந்தலாகிப் போகும்; ஒரே இனத்தை பல மாநிலங்களாகக் கூறு போட்டால், அத்தகைய போராட்டங்கள் எழுவது நீர்த்துப்போகும். எனவே, தேசிய இன-மொழி அடையாளங்களுக்கு அப்பால், இந்துத்துவ அடிப்படையில் “தேசிய’ ஒருமைப்பாட்டை நிறுவவே அது விழைகிறது. காங்கிரசும் இதே நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.//

    ஆகவே மாநில பிரிவினைகள் எதிர்க்கப்பட வேண்டும்.அதே சமயம் மாவட்டப் பிரிவினைகள் ஆதரிக்கப்பட வேண்டும்.நூறு கிலோ மீட்டர்களுக்கும் அப்பால் மாவட்ட தலைநகரை வைத்து மக்களை அலைக்கழிக்காமல் அருகிலேயே அவற்றை வைப்பது பயனளிக்கும்தானே.

  5. இவ்வாறு பிரிப்பது தனி மனிதர்களுக்கு பதவி கிடைக்கும். அடித்தட்டு மக்களுக்கு ஒன்றும் கிடைக்காது.

  6. //போலி சுதந்திரத்துக்குப் பின்னர் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு, தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.///

    நிஜாம் அரசு மன்னராட்சி வேண்டும் பாகிஸ்தானுடன் இணைவதாக தீர்மானித்தது. அப்ப பேசாம பாகிஸ்தானுக்கு தாரைவார்ககலாமே வினவு….

  7. உன் கருத்தை யாரு கேட்டா??? சும்மா வாயவெச்சுக்கிட்டு சும்மா இருயா…. வந்திட்டாரு பருப்பாட்டம் கருத்து சொல்ல…

  8. மானிலஙலை பிரித்தால் என்ன தப்பு?
    பழைய தஞ்ஜாவூர் மாவட்டம் இப்போது எத்தனை மாவட்டம்?

  9. னமக்கு 4 அல்லது 5 புள்ளைஙக இருந்தால், அம்புட்டு பேருக்கும் முதல் அமைச்சர் பதவி கொடுக்க வசதியாக இருக்கும்!
    தமிழ்னாட்டையும் பிரிஙக

  10. எப்படி பிரித்தாலும் ரெட்டியும், நாயிடுவும் தான் ஆளப்போகிறார்கள். இதற்கு ஏன் இவ்வளவு அலப்பறை?

    • எனக்கு வாய்ப்பு கிடையாது….தமிழ்னாட்டில
      பிறந்து, தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தும் குடும்பம்…இருந்தபோதிலும்,இந்த மண்ணுக்கு நான் ஒருபோதும் துரோகம் நினைக்கமாட்டேன்…சொல்லப்போனால் தமிழ் ஈழம் கனவுகளில் இன்னமும்நம்பிகை கொண்டு அதற்காக நான் இறக்கும் வரை என்னால் முடிந்தமட்டும் போராடுவேன்:தமிழர்கள் தூக்கம் கலைய வாய்ப்பு கிடையாது!

    • உண்மைதான்:நாய் ரொட்டியை தூக்கிகோண்டு ஓடும் புத்தி,
      சேர,ஷோழ,பான்டிய வம்சஙளுக்கே உரியது!

  11. எல்லாம் தெரிஞ்ச மாதிரி கருத்து சொல்லறத எப்படா நிறுத்துவீங்க ?

    • வாயை பொத்திகோண்டு இருந்தால்,மஞசல் துண்டும்,பச்சை புடைவயும்
      கேபரா டான்ச் ஆடுவதை நீங்கள் பார்க்கலமே?

  12. உங்கள் கருத்து தவறு திரு.படையாச்சி அவர்களே.
    தெலுங்கான போராட்டம் என்பது சுதந்திரம் வாங்கிய காலத்திலேயே நம் தீவீர கம்முனிஸ்டுகள் [தீ.க.] முன்னெடுத்த போராட்டம். காங்கிரஸ் கட்சி ராணுவத்தை அனுப்பி போராட்டத்தை நசுக்கியது. போராட்டத்தில் பலர் பிரிந்து ஓட்டு கட்சிகளாக போய் விட்டனர். உயிரை கொடுத்து போராடிய தேச பக்தர்களை தீவீரவாதிகள் என்று முத்திரை குத்தி நேரு மாமா அழித்தார். படேல் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தார். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதுதான். நிசாமுக்கு எதிராக ஆரம்பித்து பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஏகபோக ஆட்சி உரிமையை கேள்வி கேட்டு விட்டதால் கொன்று விட்டார்கள். ஒரு மிகபெரும் புரட்சி அழிக்கப்பட்டது. உங்களுக்கோ எனக்கோ தீ.க. கொள்கையில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் வரலாறு மறுக்கப்பட கூடாது.
    நிற்க.
    இன்றைய தெலுங்கான பிரிவினை ஒரு காமடி நாடகம்.

    • அடப்பாவிகளா.. நிஜாம் மன்னர் ஜதராபாத்தை சமஸ்தானத்தை இந்தியாவிடம் ஓப்படைக்காமல் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்தார். மன்னர் மானியம் அவர்களுக்கு பத்தவில்லை. இதை போன்று 7 சமஸ்தானங்களை வலுக்கட்டயாமாக மன்னர்களிடம் இருந்து ஓருங்கினைத்தவர் பட்டேல்….

      இவர் இல்லையென்றால் இந்தியா 600 சமஸ்தானங்களாகப் பிரிக்கப்பட்டு எல்லா ஆண்டப் பரம்பரை பயல்கள் கட்ஆவுட் வைத்து இருப்பார்கள்….

  13. இவ்வளவு நியாயமா, நேர்மையா, சார்பில்லாத கட்டுரையை
    வினவில் படித்து விட்டோம் என்ற நிம்மதி…வாசகர்களுக்கு!

    நன்றி…தொடர வாழ்த்துக்கள்!

  14. The fundamental thing Vinavu missed here is why BJP supports Telengana,

    The Nizam was a brutal ruler who subjugated his hindu peasants using the razakars.

    The Congress landlords were brutalizing the populations and they were mostly Velama/Reddy.

    They are Telengana Reddy’s and they are also in Hyderabad along with other Coastal Andhra Chaudaries & RayalSeema Reddies.

    Telengana people do not have English education in anyway and only urdu and telugu.

    This made sure that the coastal andhra people were taking away all the government jobs and business opprutunities.

    After the Nizam,come sthe local feudal lords which is why the maoists were strong in that area and they were able to drive out the local Reddies to Hyderabad city.

    Hyderabad city has the elites now,The Razakar Muslims of Telengana/The Kamma elites of Coast Andhra and the Reddies of Telengana & Rayalaseema.

    They have made peace but the people of Telengana are still poor and suffering,worst thing is the very muslims who subjugated them are now asked no questions at all and talk like big studs in Hyderabad.

    BJP represents these guys as they dont make peace with the Owaisis of Hyderabad or the Jagam Mohan frauds of Rayalseema.

    So,worst affected will be Owaisi and the Moaists.

  15. ப.ஜா.க. அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக இருப்பதாக நீங்கள் சொல்வது சரியா?

        • யார் சொன்னது?
          எல்லோரும் பூணூல் போடலாம் என்று?
          பூணூல் போடாத ஆசாமிகள் பலரும் பூணூலுக்கு பல்லக்கு தூக்கும்

          கருமத்தை எப்படி சகிப்பது?

          • Dear Seethapathy Naidu:
            The problem is not the sacred thread. Once upon a time you Naidus were also wearing it Sir. Even now Viswakarmas,Rajus and many other castes wear it.
            Your caste people usurped the reservation benefits of Kattunaicker tribe. Now they are languishing as manual scavengers in the towns and cities of south Tamilnadu. The usurpers are now declared original and the real tribes are now denied caste certificates by the state. They want the caste certificate badly. For that they have to go to High court. They just want their children to get benefit out of the reservation and other benefits bestowed by the government on scheduled tribes. They want their children to escape from the demeaning manual scavenging jobs they are doing. They are now like bonded laborers unable to escape the clutches of the Upper caste dominated Dravidian polity. Like wise the Reddys have stolen the identity of Konda Reddy- a scheduled tribe for themselves. I know of one person who has done such a thing for his sons and daughters. He is a famous Dravidian politician and ardent follower of Erode Ramasamy Naicker. He justified it by saying “we need politically aware and sensitized people to occupy higher posts in the State apparatus to ward of Brahmin domination. Kaatunaickers and Konda Reddy are meek people and they will be easily sidelined and pushed out from the State”.
            O.k. we accept your justification of ‘political identity theft” theory. What have you done to bring this people out of their misery?
            These political stunt masters now want to enter the sanctum sanctorum while their brethren are condemned to enter municipal manholes.

            • இப்போதுதான் பிழைப்பு முடிந்து வீடு திரும்பிஉள்ளேன்:
              விரிவாக எழுதுகிறேன்

  16. Well,the fact is upper caste telengana feudals are with congress,MIM is for Muslims,Communists/Maoists are there but they dont want to go against MIM,that leaves only BJP.

    • ஏறத்தாழ 52% பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சென்சஸ் சொல்லுகிறது. ப.ஜ.க. இவர்கள் பிரநிதியாக செயல்படும் என்று சொல்கிறீர்களா? ப.ஜ.க. வில் ரெட்டி கம்மா தலைவர்கள் தானே அதிகாரத்தை கையில் வைத்துள்ளார்கள்?

    • ரெண்டா பிரிச்சா ரொம்பநல்லது- பையனையும் முதல் அமைச்சர் ஆக்கிப் பார்க்கலாம்

Leave a Reply to பரலோகபாண்டியன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க