Wednesday, May 12, 2021
முகப்பு வாழ்க்கை குழந்தைகள் மருத்துவமனைகளை அம்பலப்படுத்துகிறார் ஒரு மருத்துவர் !

மருத்துவமனைகளை அம்பலப்படுத்துகிறார் ஒரு மருத்துவர் !

-

ருத்துவர்களுக்கும் பரிசோதனை நிலையங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கும் இடையேயான சட்டவிரோதமான உறவுகள் குறித்து பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சிகிச்சையின் தரத்தின் அடிப்படையில் இல்லாமல் கையாளும் நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மருத்துவர்களை மதிப்பிடுவது இத்தகைய சட்ட விரோத சிகிச்சை நடைமுறைகளை ஊக்குவித்து இந்த உறவுக்கு வலு சேர்க்கிறது. கேரளாவில் எனது சொந்த அனுபவமும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் ஆரம்பத்தில் அமெரிக்காவிலும், பின்னர் பல ஆண்டுகள் கேரளாவிலும் மொத்தம் 40 ஆண்டுகளாக குழந்தை மருத்துவராக செயல்பட்டு வருகிறேன்.

கொச்சிக்கு அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தேன். அந்தப் பகுதியில் வசிக்கும் ஒப்பீட்டளவில் ஏழை வாடிக்கையாளர்களின் புற நோயாளி மற்றும் உள் நோயாளி தேவைகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் அங்கு இருந்தன. கவனமான மருந்தக சோதனைகள், வரம்புக்குட்பட்ட ஆய்வக சோதனைகள், குறைந்த பட்ச மருந்துகள், நியாயமான கட்டணத்தில் உள்நோயாளிகளை அனுமதிப்பது என்று நான் சேவை வழங்கி வந்தேன்.

இந்த நிலையில் மருத்துவமனையின் நிதிநிலையை ஆய்வு செய்ய எம்பிஏ படித்த ஒரு மேலாண்மை நிபுணர் வந்தார். நோயாளிகளின் எண்ணிக்கை, ஆய்வக பணிகள், எக்ஸ்-ரேக்கள், மருந்துகள், உள் நோயாளிகள் எண்ணிக்கை குறித்த தரவுகளை தனது கணினியில் திரட்டினார். மற்ற மருத்துவமனைகளில் இதே எண்ணிக்கையிலான நோயாளிகளை ஒப்பிடும் போது, நான் ஆய்வகம், எக்ஸ்ரே, மருந்தகம், மருத்துவமனை படுக்கை போன்றவற்றை குறைந்த அளவே பயன்படுத்துவதாக அவர் முடிவு செய்தார்.

அதாவது, எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவை கிடைத்து வந்தது; அதனால், என்னுடைய வணிக மாதிரி தவறானது; எல்லாவற்றையும் கணினி விரிதாள் தெளிவாகக் காட்டியது. மருத்துவமனையின் இயக்குனருடன் நான் இதைக் குறித்து பேசி முடிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மருத்துவத் துறையின் தார்மீக பொறுப்பு பற்றிய வாதங்கள், கூடுதல் வருமானத்திற்கான வாதங்களின் முன்பு தோற்றுப் போயின. அதற்குப் பிறகு நான் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்கு அதிக காலம் பிடிக்கவில்லை.

எனது அடுத்த அனுபவம் அதே நகரத்தில் உள்ள இன்னும் பெரிய, இன்னும் புகழ்பெற்ற மருத்துவமனையில் நிகழ்ந்தது. நிர்வாகிகளுக்கு தெரிந்து அவர்களது சம்மதத்துடனோ அவர்களால் கண்டு கொள்ளாமலோ அங்கு நடப்பவற்றைப் பார்த்து நான் கடும் அதிர்ச்சியடைந்தேன். அற்பமான குழந்தை நோய்கள் கூட பல சோதனைகள், தேவையில்லாத சிகிச்சைகள், காரணமில்லாமல் மருத்துவமனை சேர்ப்புகள் தேவைப்படும் தீவிர பிரச்சனைகளாக வகைப்படுத்தப்பட்டன.

மெலிதான வைரஸ் காய்ச்சலும் சிறிது மூட்டு வலியும் வந்த குழந்தைகளுக்கு எந்த விதமான நெறிமுறைகளும் இல்லாமல், சோதனை மூலம் உறுதி செய்து கொள்ளாமல் கடுமையான எலும்புக் காய்ச்சல் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. சாதாரணமான வைரஸ் காய்ச்சலும் இருமலும் வந்த குழந்தைகளுக்கு எந்த விதமான ஆதாரங்களும் இன்றி காச நோய் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. பல மாதங்களுக்கு, பல ஆண்டுகளுக்குக் கூட தேவையற்ற, தீங்கு விளைக்கக் கூடிய எக்ஸ்-ரேக்களுக்கு அந்த குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். அவ்வப்போது இருமல் வரும் பல குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதாக முடிவு செய்யப்பட்டு தேவையில்லாத மருந்துகள் கொடுக்கப்பட்டன.

இந்தக் குழந்தைகளுக்கு கடுமையான நோய் எதுவும் இல்லை என்றும் அவர்கள் மருத்துவமனைக்கு இனிமேல் வர வேண்டிய தேவை இல்லை என்றும் பெற்றோர்களை ஏற்றுக் கொள்ள வைப்பதே பெரும்பாடாக இருந்தது.

உண்மையிலேயே கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்களை முறை கேடாக கையாண்டது ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தேவையற்ற சிகிச்சைகள் வழங்குவதை விட மோசமான ஒன்று. குழந்தைகளுக்கான மிதமான மற்றும் தீவிரமான ஆஸ்துமாவிற்கு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிகிச்சை ஸ்டீராய்டுகளை மூக்கு வழியாக சுவாசிப்பதுதான். ஆனால், அத்தகைய பல குழந்தைகள், “கடுமையான ஆஸ்துமா” தாக்குதல்களுக்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை அறிந்து நான் வியப்படைந்தேன். நான் ஸ்டீராய்ட் சுவாசிப்பை பரிந்துரைத்த பிறகு பெரும்பாலான குழந்தைகளின் நிலைமை மேம்பட்டு ஆஸ்துமா தாக்குதல்கள் குறைந்தன. அதன் விளைவாக வெளி நோயாளிகளாக வருபவர்கள் குறைந்து, உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்தது.

இத்தோடு இந்த மருத்துவமனையிலும் எனது நாள் குறிக்கப்பட்டு விட்டது.

குறைவான சோதனைகள், மருந்துகள் என்று குழந்தைகள் முன்பை விட ஆரோக்கியமாக வாழ்ந்தாலும், மருத்துவமனைக்கு வருமானம் குறைந்ததால் நிர்வாகம் அதிருப்தி அடைந்தது. கூடுதல் வருமானத்திற்கான தேவை, எனது தார்மீக பொறுப்பு பற்றிய அக்கறையை மீண்டும் ஒரு முறை முறியடித்தது. நான், இந்த மருத்துவமனையை விட்டு வெளியேறவும் அதிக காலம் பிடிக்கவில்லை.

மருத்துவர்களின் திறமையை, அவர்கள் வழங்கும் சேவையின் தரத்தை வைத்து இல்லாமல் அவர்கள் பார்க்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடுவது அவர்களது தார்மீக கடமையை அச்சுறுத்துலுக்கு உள்ளாக்குகிறது. எந்த வழியிலாவது லாபத்தை அதிகரிப்பது என்ற அணுகுமுறையின் இன்னொரு வெளிப்பாடு இது. பெருநிறுவன மருத்துவமனைகளில் மட்டுமின்றி, தர்மம்தான் தமது முக்கிய நோக்கம் என்று அறிவித்து செயல்படும் அறக்கட்டளை மருத்துவமனைகள் என்று சொல்லப்படுபவற்றிலும் இதே நிலைமைதான்.

– மருத்துவர் அலெக்ஸ் மாத்யூஸ், அமெரிக்க குழந்தை மருத்துவ வாரியத்தின் பட்டயப் படிப்பு படித்தவர்.

நன்றி : தி இந்து, ஓபன் பேஜ்

 1. எனக்கு ஆசான் வாயில் வழி வந்திபோது போன மருத்துவமனையில் எனக்கு பைல்ஸ்
  ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறிவித்டார்கள் . பிறகு வேறு மருத்துவமைக்கு சென்ற போது அங்கிருந்த மருத்துவர் நிறைய தண்ணி குடிங்க சரியா போய்விடும் என்றார் . டாக்டர் நான் ஆபரேசன் செய்ய அடமிதட ஆகலாம் என்று வந்துள்ளேன் என்ற போது சிறித்துவிட்டார் .

  பெங்களூர் மஹாவீர் ஜைன் மருத்துவமணியில் மூச்சு , ஸைநஸ்விட சிரமம் இருப்பதால் சென்ற போது ஸைநஸ் இருப்பதாகவும் ஆபரேசன் செய்ய சொல்வார்கள் ஆனால் ஐந்து சதா வீட மக்களே பயன் அடைவததாகவும் நல்ல மூச்சு பயிற்சி செய்தாள் போதுமானது என்றும் கூறி விட்டார் . அம்மாவின் வற்புறுத்ுதலால் மிக பிரபலமான மருத்துவமனைக்கு சென்றேன் . அங்கே நான்கு மருத்துவர்கள் எனை சோதித்து “இவருக்கு இருக்கு , இவருக்கு இருக்கு , சந்தகப்பட்டது சரிதான் ” என்று அவர்களுக்குள்ளாக பேசி திகில் ஏற்படுத்தினார்கள் . பின்னர் அமேற்காவில் படித்த பெரிய டாக்டர் வந்து எனக்கு ஸைநஸ் ஆபரேசன் செய்ய வேண்டும் 25000 ரூபாய் ஆகும் . லேசர் மூலமாக செய்ய வேண்டும் என்றும் கூறினார் . ஆபரேசன் செய்தாள் எனக்கு பூரண குனமாயிடுமா டாக்டர் என்ற கேள்விக்கு “அலர்ஜிக்கு மருந்து கிடையாது . சரியாகும் என்று கூற முடியாது ” என்ற உண்மையை கூறினார் .

 2. திருநெல்வேலி யில் அன்னை வேளாங்கண்ணி என்று ஒரு hospital . இங்கு தாய்மார்களுக்கு நார்மல் டெலிவரி செய்யப்படும் என்று ஒரு விளம்பரம் வேறு.

  இதனை நம்ம்பி ஏமாறும் ஏமாளிகளை ஆபரேஷன் மூலம் டெலிவரி செய்துவிட்டு அவர்கள் தலையில் ஒரு லட்ச ரூபாய் (மற்ற hospital களில் 30000 ரூபாய் தான்) பில்லை கட்டுவார்கள். நீங்கள் அங்கு உள்ள மருத்துவரை பார்த்து பேசியதும் அந்த பெண் மருத்துவர் கருணையுடன் (யேசுவிடம் இருந்து வந்திருக்குமோ!!) ஒரு 1000 ரூபாய் குறைப்பார்.

  இதற்கு நடுவில் உங்கள் குழந்தைக்கு சுவாச பிரச்னை என்று அருகில் உள்ள Galaxy மருத்துவமனைக்கு அம்புலன்சில் அனுப்பி உங்கள் வயிற்றில் புளியை கரைதிருப்பார். அவர்களிடம் ஒரு பத்தாயிரம் அழுதிருப்பீர்கள்.

  அங்குள்ள நர்சுகள் கடைசியில் உங்களிடம் சொல்வார்கள் “உங்களை பார்த்த பாவமா இருக்கு” னு…

  என்னவோ போங்க…

   • That wont solve the problem,

    Government is as bad at giving service,Govt employees are poorly paid and there is no accountability.

    If you want humane capitalism,you need to create a trust in the name of a person/religion/ideology and prove to people that you can provide good service,charging more from tha rich and less from the poor.

    You cannot simply institutionalize this.

 3. நான் ஒரு மருந்தாளுனர் பட்டம் பெற்றவன். மருந்துக் கடையும் வைத்துள்ளேன். மருத்துவம் படித்தவர்கள் பெரும்பாலும் படித்த திமிர் பிடித்தவர்களாகவும் பண ஆசை பிடித்தவர்களாகவும் இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். மேலும் அவர்கள் நுணுக்கமான விஷயைங்களை கையாள்வதால் தாங்கள் வைத்தது சட்டமாகிறது. அவர்கள் தாங்கள் எந்த விதத்திலும் நோயாளிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற மனப் போக்கும் ஆணவமும் இருப்பது மிகவும் ஒரு தவறான மனப்போக்கு. அவர்களுக்கு உயிர் மேல் அதிகாரம் இருப்பதாகவும் தாங்கள் எதையும் சரியாக செய்யக் கூடியவர்கள் என்ற எண்ணமுடையவர்களாகவும் உள்ளனர். மேலும் மக்களும் அவர்களை கடவுள் என்றும் தெய்வம் என்றும் கொண்டாடும் ஒரு கீழான மனப் போக்கும் உள்ளது வேதனை அளிக்க கூடிய விஷயம். மருத்துவர்களுக்கும் தாங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஒரு மனநிலை கொண்டவர்களாகவும் உள்ளனர், மக்களுக்கு உயிர் மேல் உள்ள தேவையற்ற பயம் ஒழிய வேண்டும், அப்போதுதான் மருத்துவர்கள் மக்களை தவறாக உபயோகப் படுத்தும் நிலை மாறும். மருத்துவர்களும் தாங்களும் மற்றவர்களை போன்ற சாதரண மனிதர்கள்தான் என்ற எண்ணத்துடன் தொழிலுக்கு வர வேண்டும்.கொஞ்சமாவது கருணை உள்ளம் கொண்டிருக்க வேண்டும்.

 4. எனது பையனுக்கு வயிற்று வலி என்று ஒரு சர்ஜனிடம் காட்டியபொழுது உடன் அப்பென்டிக்ஸ் ஆபரேசன் பண்ண வேண்டும் என்றார் .நான் ஸ்கேன் எடுத்து பார்த்துக்கலாம் என்று சொன்ன பிறகு ஸ்கேன் எடுக்க சொன்னார். ஸ்கேனில் அப்பெண்டிக்ஸ் இல்லை என்று ரிப்போர்ட் வந்தது .ஆனால் டாக்டரோ ஸ்கேனில் தெரியாமலிருக்கவும் வாய்ப்பு இருக்கிரது.அதனால் ஆபரேசன் பண்ணியாக வேண்டும் என்று கூறினார். நான் இன்னொரு நாள் வருகிறேன் என்று பையனுடன் தப்பித்து வந்தேன் .வைகுண்டராமன் என்ற டாக்டரிடம் காண்பித்தேன் .அவரும் ஸ்கேன் எடுக்கக் சொன்னார் ஸ்கேன் எடுத்து காண்பித்த பிறகு ஒன்றுமில்லை என்று கூறி ஒரு வாரத்திற்கு மெடிசின் கொடுத்தார் .10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன .இறையருளால் அதன் பிறகு எந்த வலியும் இல்லை .
  கிட்னி ஸ்டோனுக்கு ஒரு யுரோலாஜிஸ்டிடம் காண்பித்தேன். கே யு.பி எக்ஸ்ரே,ஸ்கேன் ,யூரின் கல்ச்சர் டெஸ்ட்கள் எடுக்க சொன்னார் .ஆனால் யூரின் கல்ச்சர் ரிப்போர்ட் வருவதற்கு 2 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் டாக்டர் அந்த ரிபோட்டை பற்றி கேட்கவில்லை .2 தடவைகள் lithotripsy பண்ணினேன் .அதன் பிறகு ஸ்டோன் பார்ம் ஆகியது .அந்த டாக்டர் வெளிநாட்டு சென்றுவிட்டார். ஆவுடையப்பன் என்பவரிடம் பழைய சம்மரி எல்லாம் காண்பித்தேன் .நொந்து போனார் .திருநெல்வேலியில் நான்தான் யுரோலாஜியில் பெரிய டாக்டர் என்னிடம் வராமல் வேறொருவரிடம் காண்பித்து உள்ளீர்கள .எனக்கு கேராள விலிருந்து வருகிறார்கள் .நீங்கள் உள்ளூரில் இருந்து வரவில்லை என்று 15 நிமிடங்கள் லெக்சர் பண்ணிவிட்டு 5 நிமிடம் சோதித்து அடுத்த lithotripsy பண்ண சொன்னார் .இவருடைய இந்த நடவடிக்கை பிடிக்காமல் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையில் காண்பித்தேன் .முதலில்ஸ்கேன் உட்பட அனைத்து டெஸ்ட்டுகளுக்கும் காசு வாங்கி விட்டு பிறகு லிதொற்ற்ப்சி பண்ணிய பிறகு ஸ்கான் தேவை இல்லை என்பதால் ரீபே பண்ணினார்கள் .மற்ற மருத்துமனைகளைவிட மிகவும் நியாயமாக செயல்படுகிறார்கள் .உறவினர் ஒருவர் தீடிரென்று கோமா ஸ்டேஜுக்கு ஆளாகிவிட்டார் .நெல்லை ஷிபாவில் ஐசி யூனிட்டில் வைத்து ஆக்சிஜன் 20 நாட்களாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை ட்ரீட்மென்ட் எடுத்த அழகேசன் என்பவர் 50%குணமாக வாய்ப்புள்ளதாக கூறிவந்தார்.உறவுடாக்டரை அழைத்து வந்து அவரை காண்பித்தோம் .உடன் ஜி..ஹெச் கொண்டு போக சொன்னார் .அங்கும் ஐசியில் செத்தாலும் ஒரு மணிநேரத்தில் உயிர் பிரிந்து விட்டதாக் கூறினார்கள் .ஆனால் ஷிபாவில் 20 நாட்கள் செலவு 2.5 லட்ச ரூபாய் .

 5. After Ranbaxy thief brothers (google Ranbaxy paid $500mn fine in USA) tookover Malar hospital charges has increased exponentially.

  Another hospital to avoid, Lifeline in OMR, they will do operation even for visiting courier delivery boy.

 6. A hospital to avoid in Chennai- Arokkiya hospital, Nesappakkam. They deliberately give medicines to aggravate your illness and try to keep you for more days in the hospital. Will the so called Medical councils will take action?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க