Tuesday, September 28, 2021
முகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் கோவை குரங்கு ஒன்றின் கடத்தல் நாடகம் !

கோவை குரங்கு ஒன்றின் கடத்தல் நாடகம் !

-

கோவை பகுதியில் ரியல் எஸ்டேட் தரகோடு கட்டப் பஞ்சாயத்தும் செய்பவர்கள் சிலர் பல்வேறு இந்துமதவெறி இயக்கங்களை வைத்திருக்கின்றனர். சங்க பரிவாரங்களின் வானரங்களோடும் அவைகளுக்கு போட்டியாகவும் பல்வேறு வானரங்கள் அங்கே செயல்படுகின்றன. அதில் ஒன்று அகில பாரத அனுமன் சேனா. கோவை குனியமுத்தூர் பகுதியில் இந்த குரங்கு சேனாவின் மாநில அவைத் தலைவர் சக்திவேல் வசிக்கிறார். கடந்த மாதம் 29-ம் தேதி இவர் நடத்திய சுய கடத்தல் நாடகம் அங்கிருக்கும் நாய், குரங்குகளைக் கூட சந்தி சிரிக்க வைத்து விட்டது.

குரங்கு வேலை

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் சேனாவின் கொடியேற்றும் விழாவுக்கு செல்ல 29-ம் தேதி கிளம்பிய சக்திவேலுடன் பாதுகாப்புக்கு வந்த கோவை போலீசார், மாநகர எல்லையில் நின்று விட்டனர். இனிமேல் நாங்கள் வர மாட்டோம் என்றும், திரும்பும் வழியில் நகர எல்லைக்கு வந்தவுடன் தகவல் தெரிவித்தால் வந்து மீண்டும் பாதுகாப்பளிக்கிறோம் என்று கூறியுள்ளனர். குரங்குகளுக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்! கொடியேற்றுவதற்கோ, குடிப்பதற்கோ இவர்கள் வெளியில் வந்தால் போலிசும் பாதுகாப்பிற்காக வருகிறது!

எனினும் கோத்தகிரி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி புஷ்பா கலவரமாகி போலீசில் புகார் தரவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் 31-ம் தேதி வீடு திரும்பிய சக்திவேல் தன்னை போலீசு உடையில் இருந்த சிலர் துடியலூர் அருகே வரும்போது மயக்க மருந்து கொடுத்து கடத்தியதாகவும், திருவனந்தபுரம் கொண்டு போய் அங்கே கடலில் தூக்கி எறிய அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தான் அவர்களை ஏமாற்றி தப்பிவிட்டதாகவும் போலீசிடம் கூறியிருக்கிறார். ஏற்கெனவே இந்துமதவெறி அமைப்புகளின் தலைவர்கள் சிலர் சொந்த காரணங்களுக்காக கூலிப்படையால் கொல்லப்படுவதற்கு கண், காது, மூக்கு வைத்து கதைகள் உருவாக்கப்படுவதால் எரிச்சலில் இருக்கும் போலீசார் வேறுவழியின்றி இதுபற்றி மேலும் தீவிரமாக விசாரிக்க துவங்கினர்.

சக்திவேலுடன் கோத்தகிரி சென்ற அவரது நண்பர் ராமராஜை விசாரிக்கும்போது போலீசாரிடம் உண்மையை சொல்லி விட்டார். அதாவது நகர எல்லையைத் தாண்டிய பிறகு பாதுகாப்புக்கு வர மாட்டோம் எனக் கறாராக சொல்லி விட்ட போலீசாருக்கு தக்க பாடம் புகட்ட விரும்பிய சக்திவேல் அதற்காக ஒரு கடத்தல் நாடகம் ஆடினாராம். 29-ம் தேதி மாலையில் கோத்தகிரியில் கொடியேற்றிய அவர் நண்பர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரி சென்றாராம். விவேகானந்தர் மண்டபம், பகவதி அம்மன் கோவில், சூரிய உதயம், அஸ்தமனமெல்லாம் பார்த்திருக்கிறார். இதற்கிடையில் மனைவி கணவனை காணவில்லை எனப் புகார் தந்து விடவே அதற்கு தோதாக கடத்தல், திருவனந்தபுரம், கடல் என கதையை அள்ளி விட்டிருக்கிறார்.

இந்நாடகம் போடுவது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் கடந்த மாதம் 24ம் தேதி அவர் நடத்தும் பேக்கரி மீது பெட்ரோல் குண்டை அவரே போட்டு விட்டு போலீசில் இசுலாமிய தீவிரவாதிகள் குண்டு போட்டு விட்டதாக புகார் தரவே முகமது அலி, ஜாபர் சாதிக், அஷ்ரப் ஆகிய அப்பாவி முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இந்து முன்னணி, பிஜேபி உள்ளிட்ட இந்துமதவெறி அமைப்புகள் தங்களது தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதாக சொல்லி போராட்டம் எல்லாம் நடத்திப் பார்த்தார்கள், பந்த் எல்லாம் நடத்திப் பார்த்தார்கள். அவர்கள் செல்வாக்காக உள்ள பகுதிகளில் கூட ஓரளவுதான் மக்கள் ஆதரவு கிடைத்தது.

மக்கள் ஆதரவு கிடைக்காத காரணத்தால் வழக்கம் போல இப்போது போலித் தாக்குதல்கள், கடத்தல்களை நடத்த துவங்கி விட்டனர். சம்சௌதா விரைவு வண்டியில் நடந்த குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு, தென்காசி குண்டு தயாரிப்பின் போது நடந்த விபத்து என இந்துமத வெறி பாசிஸ்டுகள் பலமுறை தாங்கள் வைத்த குண்டுக்கு இசுலாமியர்களை பொறுப்பேற்க வைக்கும் விதமாக கதையை திசை திருப்பியுள்ளனர் என்பதை வாசகர்கள் அறிந்திருக்க கூடும். அதன் ஒரு சோறு பதம் தான் அனுமன் சேனாவின் சக்திவேல் நடத்திய இரண்டு நாடகங்களும்.

இது வரை நாடு முழுதும் நடைபெற்றுள்ள பெரும்பான்மை மதக் கலவரங்களில் இந்துமத வெறியர்கள் ஏதாவது ஒரு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் கலவரத்தை துவங்குவார்கள். தேசப் பிரிவினைக்கு முன்னரே கூட இதனை பரிவாரங்கள் நடத்தியிருக்கிறார்கள். திடீரென அயோத்தியில் ராமர் சிலை தோன்றியது முதல் லவ் ஜிகாத் நடக்கிறது என்ற தமிழகத்தில் அவர்களது புரளி வரை இக்கணக்கில் ஏராளம் இருக்கின்றது.

மேலும் படிக்க

 1. நான் வன்மையாக கண்டிக்கிறேன். “வாயில்லாத குரங்கை இப்படி அதனுடன் ஒப்பிட்டு, குரங்கை கேவலப்படுத்தி விட்டீர்கள்.”

 2. தைரியம் இருந்தா மேடை போட்டு பேசனும்…. சும்மா பேடித்தனமா மூடின கதவுக்கு பின்னாடி இணைய பதிப்பு வெளியிடக்கூடாது…..

  • அவர் என்ன போய்யா சொன்னார் ?? உண்மையை ஆதரத்தொட எல்லா பத்திரிகைளும் வந்து சந்தி சிரிச்ச செய்தி தானே ….காலகாலமா நடக்றத தானே சொன்னார் …பாதிக்கப்பட்ட சிருபா ன்மையிரே சும்மா இருக்கும் பொது உங்களுக்கு என் சார் கோபம் வருது !!!

   • அவர் போட்டோக்களைத்தான் பத்திரிக்கையில் பார்த்தோமே. கீழே விழுவது போல் நிற்பவரை வக்கீல் கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டிருப்பதை. (இரண்டு நாளாக அடித்ததில் மப்பு தெளியாமல் இருந்தவரை நேரடியாக் புகார் கொடுக்க அழைத்து வந்துவிட்டார்கள் போல் இருக்கிறது). அவர் கொடுத்த புகாரைக் கேட்டால் சின்னக் குழந்தை கூட பின்பக்கமாக சிரிக்கும். இதுக்கு வக்காலத்திற்கு கூட இரண்டு ஆள். (என்ன நீங்கள் இரண்டு பேரும் அவருடன் ஒன்றாக இருந்து சுதேசி தீர்த்தம் சாப்பிட்டீர்களா?)

  • இந்தியன்…… நீங்க ம.க.இ.க. நடத்துகின்ற பொதுகூட்டத்துக்கு வந்ததில்லையோ…..

   வினவில் தான் மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு கூட்டத்தைபற்றி அறிவிப்பு வந்தபடி உள்ளதே. அடுத்ததடவை தவறாமல் வாருங்கள். உங்கள் குரங்குகளின் வால்கள் வெட்டப்படுவதை காணலாம்.

  • https://www.vinavu.com/contact/

   அடேய் தறுதல! நீ பேடி கிடையாதுன்னா இந்த அட்ரஸுக்கு வந்து பேசுடா பார்ப்போம். உனக்கு அட்ரஸ் இருந்தாக்குடு. அங்க வந்து பேசுவோம். பொதுக்கூட்ட மேடையில கூட இதப்பத்திப் பேசுவோம். மறுத்துப்பேச அங்க வர முடியுமா உன்னால?

 3. பாவம் அந்த குரங்கு உங்களுக்கு என்னதுரோகம் செய்தது ? ஈனபிறவியுடன் ஓப்பிட்டு அதன் இனத்தையே கேவலப்ப்டுத்துவிட்டீர்களே…?

 4. தைரியம் இருந்தாத்தான அப்புறம் வினவால எப்படிப்பேச முடியும்…

 5. சரி நம்ம விசயத்துக்கு வருவோம்….

  நீங்க என்ன… அப்படி ஒரு போலியான கடத்தல் சம்பவமே நடக்கவில்லை என்கிறீர்களா?

  அல்லது அயோத்தியில் ராமன் சிலை சுயம்புவாகத்தான் தோன்றியது என்கிறீர்களா?

  கட்டுரையின் மைய்யப் பொருளான அதை மறுத்து பேசினால் விவாதிக்கலாம்….

  ஆனால் அதைவிட்டு “முடிஞ்சா ஏன் முன்னாடி வந்து சொல்லி பார்ரா….” ந்னு வீரப்பன தேவாரம் மிரட்டுனா மாதிரி சொல்றீங்களே…

  உங்க அரைடவுசர்களின் யோக்கியதையை உங்களை விட யாராலும் அம்பலம்படுத்த இவ்வளவு சரியாக அம்பலப்படுத்த முடியாது போங்க. அநியாயமா இப்படி சேம் சைடு கோல் போட்டுடீங்களே இந்தியன்.

 6. An unrelated question.

  I use Google transliteration tool for typing in Tamil. However, for the past few days the tool is not working for me. The drop down menu for choosing languages shows an empty list! I tried using Yahoo tool, but it is not as good. Is there some other alternative? Is there some software available that I can install on my system so that I do not need to rely on online tools?

  Thanks.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க