privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்தருமபுரி சாமனூரில் காலை வெட்டிய வேளாளக் கவுண்டர் சாதி வெறி !

தருமபுரி சாமனூரில் காலை வெட்டிய வேளாளக் கவுண்டர் சாதி வெறி !

-

ருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுக்கா, மாறண்டஅள்ளி அருகில் சாமனூர் கிராமத்தில் நுழைந்தால் ஒரு பசுஞ்சோலையில் இருப்பது போல உணர்வீர்கள். எங்கும் மரங்கள், செழிப்பான விவசாயம் என்று இந்த கிராமம் வளமாகவே இருக்கிறது. ஊரில் வெள்ளாள கவுண்டர்கள் 400 குடும்பம், தலித் குடும்பத்தினர் 60-70 குடும்பத்தினர், வளையல் கார நாயுடு என்று அழைக்கப்பதும் சாதியினர் 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பிரிவு நாயுடுக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வருவார்கள். கவுண்டர்களைத் தவிர மற்ற சாதியினருக்கு நிலம் இல்லை. கவுண்டர்கள் நிலத்தில் கூலி வேலை செய்வது, ஆடு வளர்ப்பது மற்றும் உதிரித் தொழில்கள் செய்கின்றனர்.

நாயுடு சமூகத்தைச் சேர்ந்த 43 வயதான தங்கராஜன் என்பவர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் ஒன்றிய அமைப்பாளராக பணி புரிந்து வருகிறார். அவர் பட்டாணி வியாபாரம் செய்து வருகிறார்.

தங்கராஜ்
தாக்கப்பட்ட தங்கராஜ் (10 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய போட்டோ)

ஆகஸ்ட் 15 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் தலித் குடும்பங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை (30 வீடுகளை) பழுது பார்க்க்காதது குறித்து தங்கராஜ் கேள்வி எழுப்பியிருக்கிறார். அது தொடர்பாக பல முறை விண்ணப்பம் கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று ஊர்த் தலைவரையும், கவுன்சிலர் ராஜா என்பவரையும் கண்டித்திருக்கிறார். பஞ்சாயத்தில் சிறுபான்மையாக உள்ள சாதியைச் சேர்ந்தவர் கேள்வி கேடபதா என்று ராஜா கும்பல் கோபமடைந்திருக்கிறது.

ஏற்கனவே தங்கராஜ் மீது இருந்த வன்மத்தை தீர்த்துக் கொள்வதற்கு இந்த முகாந்திரத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். கவுண்டர் சாதியைச் சேர்ந்த கவுன்சிலர் ராஜா, ஊர்த் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்ட சுமார் 10-15 பேர் அன்று (ஆகஸ்ட் 15) மதியம் 2 மணிக்கு தங்கராஜை அடித்து உதைத்திருக்கிறார்கள். இரண்டு முழங்கால் முட்டிகளில் அடித்து இடது கால் எலும்பு நொறுங்கியிருக்கிறது, கை எலும்பு உடைந்திருக்கிறது. மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியிருக்கிறது.

தாக்குதலை நடத்தியவர்கள் தங்கராஜின் வீட்டுக்கு முன்பு கொண்டு வந்து மரத்தில் கட்டிப் போட்டு, யாரும் அவிழ்த்து விடக் கூடாது என்று மிரட்டி விட்டு போயிருக்கிறார்கள். சுமார் 1 மணி நேரம் வரை மழையில் நனைந்து கொண்டே உயிருக்கு போராடியிருக்கிறார் தங்கராஜ்.

இதைத் தொடர்ந்து சுமார் 3.30 மணி அளவில் தாக்குதல் நடத்திய கவுன்சிலர் ராஜாவின் மனைவி தங்கராஜ் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து கலாட்டா செய்ததாகவும் கை பிடித்து இழுத்ததாகவும் போலீசில் பொய் புகார் கொடுத்திருக்கிறார்.

தங்கராஜின் மனைவி சகுந்தலாவும், மகனும் மாறனஅள்ளி போலீஸ் ஸ்டேசனுக்குப் டூ வீலரில் போக முயற்சிக்கும் போது அவர்களை மறித்து செல்போனை பிடுங்கியிருக்கிறார்கள். அவர்கள் தப்பித்துப் போய் மாலை 6 மணி வாக்கில் புகார் தெரிவித்த பிறகு 6.30 மணிக்கு போலீஸ் வந்துதான் மரத்தில் கட்டிப் போட்டிருந்தவரை மீட்டு 108 சேவை வண்டியில்  பாலக்கோடு மருத்துவமனைக்கு அழைத்து போயிருக்கிறார்கள்.

அங்கிருந்து “கை, கால் எல்லாம் உடைந்திருக்கிறது, இங்கு பார்க்க முடியாது” என்று கூறி தருமபுரிக்கு அனுப்பியிருக்கிறார்கள். தருமபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்த நாள் காலையில் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கும் சிகிச்சை தருவது சாத்தியமில்லை என்று சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். பொது மருத்துவமனையில் இடது முழங்காலுக்கு கீழ் அகற்ற நேர்ந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக இருந்ததால், இடுப்புக்கு கீழ் கால் முழுவதையும் நீக்கி விட்டிருக்கிறார்க்ள.

கவுன்சிலர் ராஜா (முதல் குற்றவாளி), பரந்தாமன், முருகன், மணிவண்ணன் (ஊர்த்தலைவர்), குட்டிப்பையன், நந்தன், நவீன் குமார், அன்பழகன் ஆகியோர் மீது  இந்திய குற்றவியல் பிரிவுகள் 147, 148, 394B (ஆபாசமாக திட்டுதல்), 323 (தாக்குதல்), 324, 326, 342, 506-2 (கொலை மிரட்டல் ) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

தங்கராஜை அடித்தவர்கள் தத்தமது வீடுகளிலிருந்து வெளியேறி தலைமறைவாகி உள்ளனர்.  வழக்கை பொருட்படுத்தாமல் விட்டு விட்டால் ரூ 10 லட்சம் வரை தருவதாகவும் புகாரை வாபஸ் வாங்கும் படியும் என்று பேரம் பேசியிருக்கிறார்கள். அதை தங்கராஜ் குடும்பத்தினர் உறுதியாக மறுத்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து பேர் சொல்லாமல், பொது தொலைபேசி எண் மூலம் இந்த தாக்குதல் தொடர்பாக போலீசுக்கு புகார் கொடுத்து ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் தங்கராஜின் மச்சானுக்கு இரவு 12 மணி, 1 மணிக்கு தொலைபேசி தங்கராஜூக்கு நடந்த கதிதான் உனக்கும் என்று மிரட்டியிருக்கிறார்கள். வசதியுடன் வாழும் வெள்ளாளக் கவுண்டர்களின் ஆதிக்க சாதிவெறி தலித்துக்கள் மீது மட்டுமல்ல ஏனைய ஒடுக்கப்பட்ட சாதிகளின் மீதும் பாயும் என்பதற்கு இந்த கொடூரமான ஒடுக்குமுறை ஒரு சான்று.

திருமாவளவனின் பொன்விழாக் கொண்டாட்டங்களில் மூழ்கியிருப்பதால் விடுதலைச் சிறுத்தைகள் யாரும் இந்த ஊருக்குச் சென்று பார்க்க நேரமில்லை போலும்.

தலைமறைவான குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட எஸ்பி அஸ்ரா கர்க் சிறப்புப் படை அமைத்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய 3 பேரை கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறார்கள்.

தகவல் :
புஜ செய்தியாளர்,
தருமபுரி.

  1. எத்தனை பெரியார்; அம்பேத்கர் வந்தாலும் இதற்கு தீர்வு இல்லை; மிகவும் வேதனையான நிகழ்வுகள்.

  2. சா “தீ” கலில்லயடிப் பாப்பா, பாப்பா னைத்தவிர
    தலித் பேரைச் சொல்லுவதும் பாவம் —
    புதுக் கவிதை

  3. சட்டத்தை தலித் சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்
    நிங்கள் கூறீயதுப்போல் அங்கு நடக்கவில்லா நான் அதேபகுதியை சார்தவன் ஊன்மை மட்டும் ஏழதுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க