privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஏழைகளின் இந்தியாவில் விற்பனையாகும் ஆடம்பர கார்கள் !

ஏழைகளின் இந்தியாவில் விற்பனையாகும் ஆடம்பர கார்கள் !

-

பிரிட்டனின் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தனது ”ரெய்த் (Wraith)” என்ற புதிய மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 624 குதிரைத் திறனுள்ள இயந்திரத்தை கொண்டுள்ள இந்த கார் (சரக்கு ஏற்றி செல்லப் பயன்படும் ஒரு டாடா ஏஸ் வண்டியின் குதிரைத் திறனை விட சுமார் 10 மடங்கு அதிகம்) 4.6 வினாடிகளுக்குள் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டி விடுமாம். நான்கு பேர் உட்காரக் கூடிய இந்த காரின் விலை ரூ 4.6 கோடி (இந்த விலையில் சுமார் 150 டாடா ஏஸ் வண்டிகளை வாங்கலாம்).

ரோல்ஸ்ராய்ஸ்
ரோல்ஸ்ராய்ஸ் ஆசியாவின் வளரும் சந்தைகளுக்கான பொது மேலாளர் ஹெர்ஃப்ரீட் ஹசனோர்லும், ரோல்ஸ்ராய்ஸ் கார்ஸ், புது தில்லியின் இயக்குனர் யாதுர் கபூரும் ரோல்ஸ்ராய்ஸ் ரெய்த் காருடன் (படம் நன்றி : தி இந்து)

2005-ம் ஆண்டில் இந்தியாவில் நேரடி விற்பனையை துவங்கிய ரோல்ஸ் ராய்ஸ், 2005 முதல் டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தனது டீலர்களை கொண்டு கோஸ்ட் (ரூ 3.6 கோடி முதல்), பாந்தம் (ரூ 6.1 கோடி முதல்) என்ற இரு மாடல் கார்களை இந்திய சந்தையில் விற்று வருகிறது. 2005 முதல் மொத்தம் 250 கார்களை மட்டுமே இந்தியாவில் விற்றுள்ள இந்நிறுவனம் விற்பனை எண்ணிக்கையை வருடத்திற்கு 130 முதல் 150 வரை விற்பதை இலக்காக நிர்ணயித்திருக்கிறது. இதற்கு உதவுவதற்காக சண்டிகர், அகமதாபாத் நகரங்களில் மேலும் இரு விற்பனை மையங்களை நிறுவப்போவதாக அறிவித்துள்ளது. 150 ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மொத்த மதிப்பான சுமார் ரூ 750 கோடி முழுவதும் நாட்டின் இறக்குமதி கணக்கில் சேரும். அதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ந்தால் அந்த சுமையோ நாட்டு மக்கள் மீது ஏறும்.

ரோல்ஸ் ராய்ஸ் மட்டுமின்றி அதி ஆடம்பர கார்களான பகட்டி (Bugatti), பெண்ட்லே (Bentley), மசரடி (Maserati), பென்ஸ் (Benz), ஆஸ்டன் மார்டின் (Aston Martin), ஆடி (Audi), லம்போர்கினி (Lamborghini), பெராரி (Ferrari), போன்ற கார்களும் இந்தியாவில் இறக்குதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. ஒரு வருடத்திற்கு 20,000-லிருந்து 22,000 வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ஆடம்பர கார்கள் இறக்குமதியாகின்றன.

2013 முதல் ஆறு மாதங்களில் 5,551கார்களையும், ஜூலை மாதத்தில் மட்டும் 705 கார்களை இந்திய சந்தையில் விற்றுள்ள  ஆடியின் ஆண்டு விற்பனை மதிப்பு சென்ற ஆண்டை விட 19% அதிகரித்து ரூ 10,500 கோடியை எட்டியிருக்கிறது.

ரூ 70 லட்சத்திலிருந்து ரூ 5 கோடி வரை விலையிலான கார்களை விற்பனை செய்யும் பென்ஸ் 2013 முதல் ஆறு மாதங்களில் மட்டும் 4,575 கார்களை விற்றுள்ளது. இது  சென்ற ஆண்டை விட 22% அதிகமாகும். ஒரு காரின் விலை சராசரியாக ரூ 2.5 கோடி வைத்துக் கொண்டாலும், பென்ஸ் நிறுவனத்தின் இறக்குமதி கணக்கு சுமார் ரூ 10,000 கோடி.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பயன்படுத்தப்படும், ரூ 1.3 கோடியிலிருந்து ரூ 20 கோடி விலையுள்ள ஆஸ்டின் மார்டின் கார்கள் ஆண்டிற்கு 4,000 இந்திய சந்தையில் விற்கின்றன. இவற்றின் மதிப்பு ரூ 10,000 கோடி வரை இருக்கும். பார்முலா 1 பந்தயங்கள் மூலம் பிரபலமான ஃபெராரி கார்களின் விலை ரூ. 2.2 கோடியிலிருந்து துவங்குகிறது. மசரட்டி கார்களின் விலை ரூ 1.2 கோடியிலிருந்து ரூ 2 கோடி வரை.

1947-க்கு முன் மக்களை சுரண்டியும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அடிமை விசுவாசம் காட்டியும் கொழுத்த மகாராஜாக்கள் பல டஜன் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் வரிசையை தமது லாயங்களில் நிறுத்திக் கொள்வதன் தமது செல்வப் பெருமையை பறை சாற்றிக் கொண்டனர். இன்றைய கால கட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தரகு வேலை செய்வதன் மூலம் உருவாகியுள்ள இந்தியாவின் டாலர் பில்லியனர்களும், கோடீஸ்வரர்களும் நவீன மகாராஜாக்களாக ஆடம்பர கார்களை இறக்குமதி செய்து குவிக்கின்றனர்.

அப்படி வேகமான, சொகுசான கார்கள் முதலான ஆடம்பர பொருட்களை வாங்கினால்தான் முதலாளிகள் ஊக்கத்துடன் ‘தொழில்’ செய்து மக்களுக்கு ‘வேலை’ வாய்ப்புகளை ஏற்படுத்துவார்களாம். அதனால்தான், இந்திய-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பிய கார்களை 10% இறக்குமதி வரியில் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது.

ஒரு ஆண்டுக்கு இறக்குமதியாகும் 20,000 ஆடம்பர சொகுசு கார்களின் மொத்த மதிப்பு ரூ 50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்த நிலையில் இது இன்னும் அதிகரிக்கும்.

கோடிகளில் திளைக்கும் மேட்டுக்குடியினர் தமது ஆடம்பர வாழ்க்கையை விளம்பரப்படுத்திக் கொள்ள, ஊதாரித்தனங்களில் திளைக்க அதிஆடம்பர கார்கள்,  சாமானிய மக்களுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல் விலை உயர்வு, அம்மா இட்லி கடை.

மேலும் படிக்க