Thursday, January 16, 2025
முகப்புஉலகம்ஐரோப்பாஏழைகளின் இந்தியாவில் விற்பனையாகும் ஆடம்பர கார்கள் !

ஏழைகளின் இந்தியாவில் விற்பனையாகும் ஆடம்பர கார்கள் !

-

பிரிட்டனின் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தனது ”ரெய்த் (Wraith)” என்ற புதிய மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 624 குதிரைத் திறனுள்ள இயந்திரத்தை கொண்டுள்ள இந்த கார் (சரக்கு ஏற்றி செல்லப் பயன்படும் ஒரு டாடா ஏஸ் வண்டியின் குதிரைத் திறனை விட சுமார் 10 மடங்கு அதிகம்) 4.6 வினாடிகளுக்குள் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டி விடுமாம். நான்கு பேர் உட்காரக் கூடிய இந்த காரின் விலை ரூ 4.6 கோடி (இந்த விலையில் சுமார் 150 டாடா ஏஸ் வண்டிகளை வாங்கலாம்).

ரோல்ஸ்ராய்ஸ்
ரோல்ஸ்ராய்ஸ் ஆசியாவின் வளரும் சந்தைகளுக்கான பொது மேலாளர் ஹெர்ஃப்ரீட் ஹசனோர்லும், ரோல்ஸ்ராய்ஸ் கார்ஸ், புது தில்லியின் இயக்குனர் யாதுர் கபூரும் ரோல்ஸ்ராய்ஸ் ரெய்த் காருடன் (படம் நன்றி : தி இந்து)

2005-ம் ஆண்டில் இந்தியாவில் நேரடி விற்பனையை துவங்கிய ரோல்ஸ் ராய்ஸ், 2005 முதல் டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தனது டீலர்களை கொண்டு கோஸ்ட் (ரூ 3.6 கோடி முதல்), பாந்தம் (ரூ 6.1 கோடி முதல்) என்ற இரு மாடல் கார்களை இந்திய சந்தையில் விற்று வருகிறது. 2005 முதல் மொத்தம் 250 கார்களை மட்டுமே இந்தியாவில் விற்றுள்ள இந்நிறுவனம் விற்பனை எண்ணிக்கையை வருடத்திற்கு 130 முதல் 150 வரை விற்பதை இலக்காக நிர்ணயித்திருக்கிறது. இதற்கு உதவுவதற்காக சண்டிகர், அகமதாபாத் நகரங்களில் மேலும் இரு விற்பனை மையங்களை நிறுவப்போவதாக அறிவித்துள்ளது. 150 ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மொத்த மதிப்பான சுமார் ரூ 750 கோடி முழுவதும் நாட்டின் இறக்குமதி கணக்கில் சேரும். அதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ந்தால் அந்த சுமையோ நாட்டு மக்கள் மீது ஏறும்.

ரோல்ஸ் ராய்ஸ் மட்டுமின்றி அதி ஆடம்பர கார்களான பகட்டி (Bugatti), பெண்ட்லே (Bentley), மசரடி (Maserati), பென்ஸ் (Benz), ஆஸ்டன் மார்டின் (Aston Martin), ஆடி (Audi), லம்போர்கினி (Lamborghini), பெராரி (Ferrari), போன்ற கார்களும் இந்தியாவில் இறக்குதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. ஒரு வருடத்திற்கு 20,000-லிருந்து 22,000 வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ஆடம்பர கார்கள் இறக்குமதியாகின்றன.

2013 முதல் ஆறு மாதங்களில் 5,551கார்களையும், ஜூலை மாதத்தில் மட்டும் 705 கார்களை இந்திய சந்தையில் விற்றுள்ள  ஆடியின் ஆண்டு விற்பனை மதிப்பு சென்ற ஆண்டை விட 19% அதிகரித்து ரூ 10,500 கோடியை எட்டியிருக்கிறது.

ரூ 70 லட்சத்திலிருந்து ரூ 5 கோடி வரை விலையிலான கார்களை விற்பனை செய்யும் பென்ஸ் 2013 முதல் ஆறு மாதங்களில் மட்டும் 4,575 கார்களை விற்றுள்ளது. இது  சென்ற ஆண்டை விட 22% அதிகமாகும். ஒரு காரின் விலை சராசரியாக ரூ 2.5 கோடி வைத்துக் கொண்டாலும், பென்ஸ் நிறுவனத்தின் இறக்குமதி கணக்கு சுமார் ரூ 10,000 கோடி.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பயன்படுத்தப்படும், ரூ 1.3 கோடியிலிருந்து ரூ 20 கோடி விலையுள்ள ஆஸ்டின் மார்டின் கார்கள் ஆண்டிற்கு 4,000 இந்திய சந்தையில் விற்கின்றன. இவற்றின் மதிப்பு ரூ 10,000 கோடி வரை இருக்கும். பார்முலா 1 பந்தயங்கள் மூலம் பிரபலமான ஃபெராரி கார்களின் விலை ரூ. 2.2 கோடியிலிருந்து துவங்குகிறது. மசரட்டி கார்களின் விலை ரூ 1.2 கோடியிலிருந்து ரூ 2 கோடி வரை.

1947-க்கு முன் மக்களை சுரண்டியும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அடிமை விசுவாசம் காட்டியும் கொழுத்த மகாராஜாக்கள் பல டஜன் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் வரிசையை தமது லாயங்களில் நிறுத்திக் கொள்வதன் தமது செல்வப் பெருமையை பறை சாற்றிக் கொண்டனர். இன்றைய கால கட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தரகு வேலை செய்வதன் மூலம் உருவாகியுள்ள இந்தியாவின் டாலர் பில்லியனர்களும், கோடீஸ்வரர்களும் நவீன மகாராஜாக்களாக ஆடம்பர கார்களை இறக்குமதி செய்து குவிக்கின்றனர்.

அப்படி வேகமான, சொகுசான கார்கள் முதலான ஆடம்பர பொருட்களை வாங்கினால்தான் முதலாளிகள் ஊக்கத்துடன் ‘தொழில்’ செய்து மக்களுக்கு ‘வேலை’ வாய்ப்புகளை ஏற்படுத்துவார்களாம். அதனால்தான், இந்திய-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பிய கார்களை 10% இறக்குமதி வரியில் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது.

ஒரு ஆண்டுக்கு இறக்குமதியாகும் 20,000 ஆடம்பர சொகுசு கார்களின் மொத்த மதிப்பு ரூ 50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்த நிலையில் இது இன்னும் அதிகரிக்கும்.

கோடிகளில் திளைக்கும் மேட்டுக்குடியினர் தமது ஆடம்பர வாழ்க்கையை விளம்பரப்படுத்திக் கொள்ள, ஊதாரித்தனங்களில் திளைக்க அதிஆடம்பர கார்கள்,  சாமானிய மக்களுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல் விலை உயர்வு, அம்மா இட்லி கடை.

மேலும் படிக்க

  1. எல்லாம் பல்லிருந்தா பக்கோடா சாப்பிடிகிற பயலுக தான்….பல்லில்ல பாவம் கதையெழுதுறான்….

    • பையா, rape பண்றவனுக்கு கூட இதே கமெண்ட் தான் போடுவியா?

      உன்னை மாதிரி ஆள்களோட தேச பக்தி இப்படி தான் பல்லிளிக்கும்.

      • யோவ் ரேப்பண்றவனும் காசு கொடுத்து கார் வாங்குறவனும் ஒன்னா….

        யேன் உன் பார்வை ஆடம்பர சொகுசு கார்களின் மீது செல்கிறது…உனக்கும் உன் குடும்பத்திற்க்கும் ஒரு பைக்கும் 500 சதுர அடியில் ஒரு வீடும் போதுமே…அதில் தான்நீர் வாழ்கிறீரோ??

  2. கோடிகளில் திளைக்கும் மேட்டுக்குடியினர் தமது ஆடம்பர வாழ்க்கையை விளம்பரப்படுத்திக் கொள்ள, ஊதாரித்தனங்களில் திளைக்க அதிஆடம்பர கார்கள், சாமானிய மக்களுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல் விலை உயர்வு, அம்மா இட்லி கடை….மறுக்கமுடியாத உண்மை.

    இத்துடன் தாலிக்கு 1/2 பவுன் தங்கம் கூட வாங்க முடியாத நிலை…தங்கம் வாங்கதீர்கள் என்று நிதியமைச்சர் அறிவுரை வேறு…45 கோடி மக்கள் ஒரு நேர உணவிற்காக எங்கும் அவலம் ஒரு புறம்; உணவு தானியம் வினாகினாலும் அவர்களுக்கு அளிக்கமாட்டோம் எனும் அரசு; கோடிகளில் திளைக்கும் மேட்டுக்குடியினர்; நிச்சயமாக இந்தியா ஒளிர்கிறது ஆனால் யாருக்கு?

    • மேதாவிகள் அப்படிதான் பேசுவாங்க.. புரியிறதும் புரியாததும் நம்ம சாமர்த்தியத்தை பொருத்தது..

  3. பக்கோடா சாப்புட்றது எல்லாம் இருக்கட்டும் பையா….

    //ஒரு ஆண்டுக்கு இறக்குமதியாகும் 20,000 ஆடம்பர சொகுசு கார்களின் மொத்த மதிப்பு ரூ 50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்த நிலையில் இது இன்னும் அதிகரிக்கும்.//

    //150 ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மொத்த மதிப்பான சுமார் ரூ 750 கோடி முழுவதும் நாட்டின் இறக்குமதி கணக்கில் சேரும். அதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ந்தால் அந்த சுமையோ நாட்டு மக்கள் மீது ஏறும்.\\

    இதுக்கு என்ன சொல்றீங்க….. ஒருவேளை ஆடம்பர கார்களை இற‌க்குமதி செய்வதின் மூலம் இறக்குமதி மதிப்பு அதிகமாகி அதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் பட்சத்தில் சொகுசுப்பேர்வழிகளின் வக்கிர ஆசைக்காக மக்கள் அந்த பாதிப்பை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?
    இல்லை…. சொகுசுக்கார்களின் ஒளி வெள்ளத்தில் ஒளிரும் இந்தியாவுக்காக மக்கள் இச்சிறிய பாதிப்பை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்பீர்களா?

    • mr.harikumar

      இறக்குமதிக்கான வரியை செலுத்திவிடுவதால் அது இறக்குமதி மதிப்பிலிருந்து கழிந்துவிடுமா என்ன…? அப்படி பார்த்தால் இந்த நாட்டில் இறக்குமதியாகும் அத்தனை பொருளும் இறக்குமதி வரிக்கு அப்புறம்தான் நாட்டின் உள்ளே நுழைகிறது. அப்படியெனில் நாட்டின் இறக்குமதி மதிப்பு ஜீரோ வாகத்தான் இருந்திருக்க வேண்டும். வரியை செலுத்தி விடுவதால் பிரச்சினை இல்லை என்று மைனர் குஞ்சை போல் பேசாதீர்கள். பிறகு உங்களுக்கும் மைனர் குஞ்சுக்கு அளித்த‌ அதே தண்டனையைத்தான் அளிக்க வேண்டியிருக்கும்.

      //schemes of the congress are equally responsஇப்லெ//

      இதில் இருந்து இத்தகைய இறக்குமதி பொருளும் ஒரு வகையான காரணம் என்று நீங்களே ஒத்துகொள்கிறீர்கள். அத்தியாவசிய தேவைக்கான ஒரு பொருளை இறக்குமதி செய்வதின் மூலமாக ஏற்படும் பாதிப்பை தேவை கருதி ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இத்தகைய வக்கிரங்களுக்காக ஏற்றுக்கொள்ள முடியுமா…?

  4. //எல்லாம் பல்லிருந்தா பக்கோடா சாப்பிடிகிற பயலுக தான்….பல்லில்ல பாவம் கதையெழுதுறான்….//

    ஆமாமப்பா எல்லோருக்கும் பல்லு இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறோம் அப்போ எல்லாருக்கும் பக்கோடா வேணும் தானே? இல்லன்னா எல்லாருக்கும் கேப்பக்கூழுதானே சரி…..அதுதான் அதைத்தான் இங்கே பேசுகிறார்கள் அடுத்தவனைசுரண்டாமல் நீ பக்கோடா சாப்பிடு என்னைச் சுரண்டி பக்கோடா சாப்பிடாத,னனு சொல்றாய்ங்க

  5. இந்த வகை கார்களுக்கு கிட்டத்தட்ட 100% வரி இருக்கும். அந்த வகையில் வாங்கப்படும் ஒவ்வொரு காருக்கும் சுமார் 2 கோடி ரூபாய் அரசுக்கு கிடைக்கும். அந்த வகையில், இது நல்ல விஷயம் தான். எனக்கு இங்கே அடிப்படை பிரச்சனையாக தோன்றுவது வசதி, வாய்ப்புகளில் உள்ள அதீத ஏற்றத்தாழ்வே. ஒருவனிடம் நாலு கோடிக்கு கார் வாங்குமளவுக்கு ஏகப்பட்ட பணமும், மற்ற ஒருவனிடம் அம்மா உணவகம் போக வேண்டிய ஏழ்மையும் உள்ளது. இந்த கொடிய நிலை மாற வேண்டும் என்பது சரியான கருத்து. மற்றபடி, அதீத பணம் படைத்த ஒருவன் அதை எப்படி செலவு செய்கிறான் என்பது எனக்கு முக்கியமாகப் படவில்லை. ஒருவனிடம் அதீத பணம் உள்ளது என்பதே அடிப்படை அறமற்ற நிலை. ஃபுல் ஸ்டாப்.

    • வெங்கடேசன்,

      இந்திய-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்த அதிஆடம்பர, வெளிநாடுகளில் முழுமையாக உருவாக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான இறக்குமதி வரி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வகை நிறுவனங்கள் இந்தியாவில் குறைந்த பட்ச பொருத்தும் தொழிலகங்களை (Assembly shops) கூட வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

      இது முற்றிலும் இந்தியாவில் உருவக்கப்படும் கார்களின் விற்பனையையும், தொழில்துறையையும் கடுமையாக பாதிக்கும் என இந்திய ஆட்டொமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமும் (SIAM) கூட எச்சரித்துள்ளது.

      இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் கார் தயாரிப்பு நிறுவனங்களும், தங்கள் செல்வ செழிப்பை வக்கிரமாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஊதாரிகளும் பயனடைகிறார்களே அன்றி, அதனால் மக்களுக்கு ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனமில்லை.

      மேட்டுக்குடி கனவான்கள் இந்த கார்களை ஓட்டி மக்களை ‘சொர்கத்துக்கு’ அனுப்பும் பலன் தான் ஏழைகளுக்கு கிடைக்கிறது.

      மேலும் படிக்க :
      http://www.thehindu.com/opinion/op-ed/a-carload-of-troubles/article4599095.ece

      http://www.thehindu.com/business/Industry/siam-warns-against-duty-cut-on-car-imports-from-eu/article4595339.ece

      • அக்காகி,
        இது பற்றி எனக்கு இன்னும் முழுமையாகப் புரியவில்லை. புரிந்தவரை விவரங்கள் கீழே. சொகுசு கார்களுக்கு பலவித வரிகள் விதிக்கப் படுகின்றன. அவற்றில் ஒன்று கஸ்டம்ஸ் டியூட்டி. இது 75% என இருந்தது. இந்த வருட பட்ஜட்டில் இது 100% என உயர்த்தப்பட்டது. தற்போது, கஸ்டம்ஸ் உட்பட எல்லா வரிகளையும் சேர்த்தால் 174%. அதாவது கார் கம்பனி ஒரு கோடி ரூபாய் விலை வைத்தால், அரசு வரி 1.74 கோடி ரூபாய். வாங்குபவர் 2.74 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இதில் ஒரு கோடி கார் கம்பனிக்கும், 1.74 கோடி அரசுக்கும் போகும்.

        இந்திய-ஐரோப்பிய ஒப்பந்தம் ஏற்கப்பட்டால், 2017 ஆம் ஆண்டு முதல், கஸ்டம்ஸ் வரி பெருமளவு குறையும். அப்போது மொத்த வரிகளின் அளவு 80% என்றாகிவிடும். அதாவது இப்போது 174% என இருப்பது 80% ஆகிவிடும். இன்னும் குறையவும் வாய்ப்புண்டு. ஒரு கோடி ரூபாய் கார், இப்போது வரியோடு சேர்த்து 2.74 கோடி என்பது 1.8 கோடி ஆகிவிடும். அரசுக்கு வரி மூலம் கிடைத்த 1.74 கோடி என்பது 80 லட்சம் என சுருங்கிவிடும். வருவாய் சுருங்கினாலும், 80% கிடைக்கும். எனவே, //மக்களுக்கு ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனமில்லை// என்பது சரி அல்ல.

        என்னிடம் காரும் இல்லை, ஓட்டவும் தெரியாது என்ற வகையில், இந்த சொகுசு கார் சனியன்களிடம் அதிக வரி விதித்தால் எனக்கு வருத்தம் ஏதுமில்லை. வசதிகளில் இவ்வளவு வேறுபாடு இருப்பதும் அநீதி என்பதையும் ஏற்கிறேன்.

        ஆனால், சில விஷயங்கள். அதீத பணம் உள்ளவன் செய்யும் கார் வாங்குதல் போன்ற சில செயல்களை மட்டும் குறிப்பிட்டு எதிர்ப்பது அர்த்தமுள்ளதாக தெரியவில்லை. இது போன்ற சொகுசு கார்களால், அரசுக்கு வரி வருமானம் வருகிறது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். பணம் அதிகம் உள்ளவன் ஒரு கோடிக்கு நிலம் வாங்கினால், 8% பத்திரப் பதிவு கட்டணம் மட்டுமே கட்டுகிறான். கார் வாங்குபவனை மட்டும் ஏன் காய்ச்சி எடுக்க வேண்டும்? மற்றொரு கருத்தும் படித்தேன்: “வரி இவ்வளவு அதிகம் இருப்பதால், விற்பனை குறைவு. எனவே, நாம் நாட்டிலேயே தொழிற்சாலை அமைப்பது லாபகரம் இல்லை. வரியை குறைத்தால், விற்பனை பெருகும். இங்கேயே தொழிற்சாலை அமைத்து தயாரிப்பார்கள்”. (அப்படி அமைத்தால், தொழிலாளர்களை சுரண்டுவார்கள் என்பது வேறு விஷயம்).

        http://timesofindia.indiatimes.com/business/india-business/Luxury-car-prices-set-to-drop-dramatically/articleshow/19643493.cms

        http://www.livemint.com/Industry/LEkajvOhWNvWxZZULF5gSK/Budget-2013-SUVs-luxury-cars-to-get-more-expensive.html

        • இதில் இன்னொரு அம்சத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் வெங்கடேசன்.அரிதான அந்நிய செலாவணியை இப்படி ஆடம்பர வாகனங்கள் வாங்கி வீணடிக்கிறார்கள்.நாட்டையே அடகு வைக்கும் அந்நிய முதலீட்டால் கிடைக்கும் அந்நிய செலாவணியை, குளிர் மற்றும் வெப்பம் மிகுந்த மேல் மற்றும் வளைகுடா நாடுகளில் இந்திய மக்கள் அரும்பாடு பட்டு அனுப்பும் அந்நிய செலாவணியை,சாயப்பட்டறையாலும் தோல் பதனிடும் தொழிலாலும் நாட்டையே பாலைவனமாக்கி கிடைக்கும் அந்நிய செலாவணியை வீணடிக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. தாராளமயத்தால் கொழுத்துப் போய் கிடந்தாலும் இறக்குமதிக்கு ஈடாக ஏற்றுமதியை பெருக்க வக்கற்ற இந்த முதலாளி கும்பலுக்கு இப்படி ஆடம்பரம் செய்ய உரிமை இல்லை.ஏன் இந்த எழவு மகன்கள் சில லட்சம் ரூபாய் வாகனத்தில் போனால் வானம் இடிந்து விழுந்து விடுமா என்ன.

          மேலும் வரி வருமானம் வருகிறது என்பதும் பித்தலாட்டம்.இந்த செல்வத்தை ஒரு தொழிலிலோ அல்லது வேறு வகையிலோ முதலீடு செய்தாலும் இதே வரி வருவாயை ஈட்டித்தந்து விடும்.வெளிநாட்டு ஆடம்பர மகிழுந்து மீது விதிக்கப்படும் சுங்க வரி ஒரே ஒரு முறைதான் வருவாயை தரும்.வேறு முதலீடுகளோ பல ஆண்டுகள் தொடர்ந்து பலன் தரும்.பின்னதுதான் உண்மையான பொருளாதார முன்னேற்றம்.வளர்ச்சி.முந்தையது பசித்தவனுக்கு பஞ்சு மிட்டாய் கிடைக்கிறதே என்று சொல்வதை போன்றது.

          • திப்பு,

            பல்லிருக்கிறவன் பக்கோடாவும், இல்லாதவன் தனது கட்டை விரலையும் தின்பது என்ற சூழலில்,
            பல்லிருக்கிறவன் தின்பது சாதா பக்கோடாவா, முந்திரி பக்கோடாவா, உள்நாடா, வெளிநாடா என ஆராய்வது அர்த்தமுள்ளதாக தெரியவில்லை.

            அதிகமாக உள்ள பணத்தை முதலீடு செய்யலாமே என்கிறீர்கள். அப்படி முதலீடு செய்து வரும் பணத்தை ஒரு நாள் செலவு செய்து தானே ஆக வேண்டும். இல்லாவிட்டால், பணம் இருப்பதின் அர்த்தம் என்ன? இவ்வளவு விலை உயர்ந்த வெளிநாட்டு கார் தேவையா என்கிறீர்கள். சரி, மற்றவர்களுக்கு சாம்சங் டிவி தேவையா. கலைஞர் தந்த வண்ண தொலைக்காட்சி பெட்டி போதாதா? எல்லோரும் ஏதாவது வெளிநாட்டு சமாச்சாரம் வாங்குகிறோம். நாம் ஒட்டும் பைக்கின் பெட்ரோல் வெளிநாட்டு சமாச்சாரம். டிவி, பிரிட்ஜ் என பலவும் அப்படியே. இப்போதெல்லாம், தட்டு முட்டு சாமான், விளையாட்டு பொருள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகின்றன! பணக்காரன், அவன் சக்தி தகுந்தபடி, நாலு கோடி ரூபாய் வெளிநாட்டு கார் வாங்குகிறான். பல்லிருக்கிறவன் பக்கோடா தின்கிறான் என்பதின் நீட்சிதான் இது.

            இப்படி வெளிநாட்டு கார் வாங்கி அந்நிய செலாவணியை வீணடிக்கிறார்கள் என்பது சரிதான். அதனால் தான், 174 சதவீத வரி போடுகிறார்கள். இந்த வரி ஒரு முறை தானே அரசுக்கு கிடைக்கும் என்கிறீர்கள். முதலீடு செய்தால் வருடா வருடம் வரி கிடைக்குமே என்கிறீர்கள். ஆனால், இது லம்ப்சம் அமௌன்ட் இல்லையா? அது ஆதாயமாயிற்றே. ஒரு உதாரண கணக்கு போடுவோம். வெளிநாடு காருக்கான வரி 100% என வைத்துக்கொள்வோம். முதலீடு செய்தால் வரும் லாபம் வருடம் 10% என கொள்வோம். ஒருவன் இரண்டு கோடிக்கு கார் வாங்குகிறான் என வைத்துக் கொள்ளுங்கள். இதில் அரசுக்கு லம்ப்சம்மாக ஒரு கோடி வரி கிடைக்கிறது. இதை அரசே முதலீடு செய்தால், வருடம் 10 லட்சம் கிடைக்கும். மாறாக, அந்த இரண்டு கோடியை முதலீடு செய்தால், அவனுக்கு வருடம் 20 லட்சம் லாபம் வரும். அதில் 30% வருமான வரி என்றால், 6 லட்சம் வரி கட்டுவான். எதில் அரசுக்கு அதிக லாபம் கிடைக்கிறது?

            இந்த பணக்கார புடுங்கிகளிடம் அதிக வரி வசூலிப்பதில் எனக்கு எதிர்ப்பில்லை. ஆனால், பல்லிருக்கிறவன் பக்கோடா தின்கிறான், மத்தவன் சாகிறான் என்ற நிலை இருக்கும் சூழலில், அவன் தின்பது என்ன என ஆராய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. முடிந்த வரை அவன் செலவு செய்வதில் எல்லாம் வரி வசூல் செய்து விட வேண்டியது தான். இந்த வகையில் சொகுசு காருக்கு 80% வரி போதுமானதாகவே எனக்கு தோன்றுகிறது. அவ்வளவே. இதை விட அதிகமாக வரி வசூலித்த்தாலும் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்.

  6. 1 percent enjoying all the wealth of the nation
    99 percent struggles to make ends meet.

    I dont find fault with the rich , Through out the history they have been doing this.

    People should vote and elect the right people. When people blindly vote for a party without asking how are you going to solve the problem, these things will happen. And these 99% people vote for 1% people.

    And poor middle east labours will be paying 35% import duty for their Flat TV on par with rich people.

    • எல்லா பிரச்னைகளையும் எப்படி தீர்க்க போறேன்னு அறிவிச்சிருக்கிறானா மோடி என்ற கேடி.அல்லது நீர்தான் அவன் கிட்ட போய் கேட்டு தெளிவு பண்ணிக்கிட்டீரா.பொறவு எப்படி மோடியை விழுந்து விழுந்து ஆதரிக்கிரீறு.

    • ராமன்,
      “Right people” என நீங்கள் குறிப்பிடும் ஒரு சிலரின் பெயர்களை அறியத் தருவீர்களா?

  7. ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகையை விட இந்த்தியாவின் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ளது ஒரு முக்கிய காரணம். மக்கள் தொகையை குறி வைத்தே சந்தை படுத்தப் படுகிறது.கையகப் படுத்தவும் படுகிறது. மொத்த அய்ரோப்பாவில் சநதை படுத்த எடுக்கும் முயற்சியை விடவும் இந்தியாவில் எடுக்க வேண்டிய ரிஸ்க் மிகவும் குறைவு.மேலும் இஙுகு அரசியல்வாதிகள் வெகு எளிதாக விலை போவதும் மிகப் பெரிய குறை.மக்களுக்கும் மேலைநாட்டு மோகம் ஆடம்பர மோகம் போன்ற விஷயங்கள் இப்படிப் பட்ட சந்தைக்கு வழி வகுக்கின்ற்து. மக்கள் தொகையில் சிறு பிரிவினரை குறி வைத்தாலே போதும் சநதை எளிதில் வசப்பட்டு விடும்.

  8. 1. Where is the road to run these big cars? Average speed possible on metro roads is 30kmph why drive a car whose top speed is 200 kmph. Each car added needs three parking spaces. Do we have so much spaces?

    2. Govt should encourage public transport – bus rapid transportation system, metro, autos with right meter, cycle lane, taxis, walking on pedestrian path and for people who desperately need private transport can use call taxis which is shared by many. Moneylife.in brought out an article clearly explaining how call taxis is much cheaper than private taxi.

    3. Most of the people driving these luxurious cars are real estate developers, politicians (graduated from scorpio to fortuner), businessmen, film stars – all these are the usual suspects dealing in black money.

    4. Recent comedy – accused in 2G scam Anil Ambani called as witness in the scam investigation he is involved in. No Govt, CBI or Court dares to take action against them. Then why not these robber businessmen drive around in 5 crore rs cars.

  9. விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுகிறது எனும் வகையில் இக்கட்டுரையைப் புரிந்து கொள்கிறேன். மற்றபடி ஆவேசப்படத் தேவையில்லை. நாம் கோபப்படுவதாலேயே எதையும் உடனடியாக மாற்றிவிடப் போவதில்லை. மக்கள் இதனைப் புரிந்து தாமே இக்கட்டமைப்பிலிருந்து வெளியேற உதவினாலே போதுமானது. மக்கள் தமது நடைமுறையை மாற்றும் வகையில் சிந்திப்பதற்கு இக்கட்டுரை உதவும். அரசை, பெரும் நிறுவனங்களை நம்பியில்லாமல் தனித்து செயல்படும் வகையில் மக்கள் தங்களை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். ஒட்டுமொத்த மக்களும் அவ்வாறு மாறும்போது அனைத்தும் பிரச்சினைகளும் தீர்க்கப்படும். அதாவது தீயை அணைக்க வேண்டாம். எரிகிற கொள்ளிக்கட்டைக்கு மேலும் உள்ளீடு அளிக்காமல் இருந்தாலே போதும்.

    எப்படிச் செய்யலாம்? இந்த வகையில் விவாதம் அமைந்தால் அனைவருக்கும் நல்லது. அல்லது வெறுமனே இரு தரப்பும் முட்டிக்கொண்டு ஒரு முடிவும் எட்ட வழியில்லாது போகும்.

  10. பஙகு சந்தையில் முதலீடாகவும், அன்னிய கடனாகவும் வரும் அன்னிய செலாவணியை, அதிக விலையுள்ள கார்கள், தங்கம், டீவி போன்ற மேல்தட்டு மக்களின் சொகுசு சமாச்சாரஙகளுக்கு செலவிடுவது கடன் வாங்கி வாணவெடி, புஸ்வாணம் வெடிப்பது போல! பதிலுக்கு, ரூபாய் மதிப்பை குறைத்து, ஏற்றுமதிக்காக ஏழைகளை வதைத்து அன்னிய செலாவணி சம்பாதிக்க வேண்டும்! மேலும் லஞசப்பணமாகவும், கருப்பு பணமாகவும் புழங்கும் உள்னாட்டு செலாவணி ஏற்படுத்தும் பணவீக்கம், உழைப்பாளிகளை இன்னும் சுரண்டும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க