Friday, June 5, 2020
முகப்பு வாழ்க்கை காதல் – பாலியல் அஸ்ராம் பாபு கைது ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை வதைக்கிறதாம் !

அஸ்ராம் பாபு கைது ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை வதைக்கிறதாம் !

-

ட இந்திய இந்துக்களின் ஆன்மீக குரு அஸ்ராம் பாபுவை கடந்த சனிக்கிழமையன்று இரவு 12 மணிக்கு காவல்துறையினர் ஒருவழியாக கைது செய்துள்ளனர். ஜோத்பூர் குருகுலத்தில் பயின்ற 16 வயது நிரம்பிய உத்திர பிரதேச மாணவியை  ஆகஸ்டு 15 அன்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புதுதில்லி கமலா மார்க்கெட் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜோத்பூர் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் நேரில் வந்து ஆஜராகுமாறு அஸ்ராம் பாபு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். ஆனால் தனக்கு நரம்புக்கோளாறு இருப்பதாகவும், அது சரியானவுடன் நேரில் வருவதாகவும் போலீசாரிடம் கதை விட்ட அஸ்ராம் பாபு எப்படியாவது தப்பிக்கலாமென்று பார்த்தார்.

அஸ்ராம் பாபு
பெண்ணை காரக்டர் அசாசினேஷன் செய்வது ஆணாதிக்க பொறுக்கிகளின் கைவைந்த கலை

இதற்கிடையில் உமாபாரதி போன்ற பாஜக தலைவர்கள் பலரும் அஸ்ராம் பாபுவுக்காக ஆதரவுக்கரம் நீட்டினர். தெருவோர கிரிமினல்கள் ரேப் செய்தால் அறம் பொங்கும் இந்துஞான மரபின் அரசியல் வாரிசுகள் அதே குற்றத்தை ஆன்மீக குரு செய்தால் மட்டும் அந்த குருக்களைக் காப்பாற்றுவதற்கு கொதித்தெழுகிறார்கள். அஸ்ராம் பாபுவின் மகனான நாராயண் சாய் அப்பெண்ணுக்கு நிலையான மனநிலை கிடையாது என்கிற ரீதியில் பேச ஆரம்பித்தார். குற்றமிழைக்கப்பட்ட பெண்ணை காரக்டர் அசாசினேஷன் செய்வது ஆணாதிக்க பொறுக்கிகளின் கைவைந்த கலை என்பதற்கு இது ஒரு சான்று. வேறு வழியில்லாத நிலையில் அஸ்ராம் பாபுவை கைது செய்யக் கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கினார் அப்பெண்ணின் தந்தை.

போலீசார் கடந்த வெள்ளியன்று இரவுக்குள் வந்து விசாரணையில் கலந்து கொள்ளுமாறு உத்திரவிட்டனர். இந்தூரிலுள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சாமியார் வியாழன்று இரவு விமான நிலையத்துக்கு வருவது போல காட்டிக் கொண்டு, ஆனால் வேண்டுமென்றே தாமதமாக வந்து விமானத்தை தவற விட்டார். அவர் நேரில் ஆஜராகாமல் தவிர்க்க நினைத்த அந்த சூழலில் விமான நிலையத்தில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மீது அஸ்ராம் பாபுவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது.

உடனடியாக ராஜஸ்தான் மாநில போலீசார் மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு விரைந்து சென்று சனிக்கிழமை நள்ளிரவில் சாமியாரை கைது செய்தனர். அதன் பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார். சாமியாரை கைது செய்ய விடாமல் தடுக்க ஆசிரமத்திற்குள்ளே ஆயிரக்கணக்கான சீடர்கள் கூடியிருந்ததுடன், தடுப்பரண்களும் அமைக்கப்பட்டிருந்தன. வெளியில் இருந்தும் சில நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து கூடி பாலியல் வன்முறைக்கு ஆதரவான சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கினர்.

அஸ்ராம் பாபு, மகன்
அஸ்ராம் பாபுவும், மகன் நாராயண் சாயும்.

கைது செய்த போலீசார் அவரை மருத்துவர்களிடம் அனுப்பி பரிசோதனை செய்ததில் அவருக்கு நரம்பு கோளாறு எதுவும் இல்லை என்றும், உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிய வந்தது. இதனால் நரம்புக்கோளாறுக்காக ஆயுர்வேத சிகிச்சை எடுப்பதால் ஆஜராக முடியாது என முன்னர் அஸ்ராம் பாபு கூறியது வடிகட்டிய பொய் எனத் தெளிவாகியது. மேலும் அவருக்கு ஞாயிற்றுக் கிழமை ஆண்மை பரிசோதனையும் செய்யப்பட்டது. 72 வயது நிரம்பிய சாமியார் அந்த தேர்விலும் பாஸாகவே அவரை ஜோத்பூர் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரை எப்படி குற்றம் நிகழ்ந்தது என நடித்து காண்பிக்க கேட்டுக் கொள்ளவே அதனையும் செய்து காண்பித்திருக்கிறார் அவர்.

அஸ்ராம் பாபு பற்றி எல்லாம் வெட்டவெளிச்சமாகவே, சங் பரிவாரங்களின் சுருதி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் துவங்கியது. சட்டம் தன் கடமையை செய்யும், அதற்கு முன் அனைவரும் சமம் என சுஷ்மா சுவராஜும், ரவிசங்கர் பிரசாத்தும் கூறத் துவங்கினர். மோடியோ பெண்களை தாயாக மதிக்க வேண்டும், காட்டுமிராண்டிகள் தான் அப்படி மதிக்க மாட்டார்கள் என்றும், சாமியார்கள் கண்ணியத்துடன் நடக்க வேண்டும் கூற ஆரம்பித்து விட்டார்.

இந்தூர் - டெல்லி விமானம்
இந்தூர் – டெல்லி விமானத்தில் அஸ்ராம் பாபு

அத்துடன் அஸ்ராம் பாபு சூரத் நகரில் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்திற்கு 1996 முதல் 2010 வரை கட்ட வேண்டிய வாடகைத் தொகையை அபராதங்களுடன் வசூலிக்க உத்திரவிட்டுள்ளார். அந்த தொகை மட்டும் ரூ.18 கோடி. இப்படி மோடி ஓரளவு பல்டியடித்தாலும் முன்னர் அவரது ஆசிரமத்தில் நடந்த சிறுவர்கள் மரணம் குறித்து அமைக்கப்பட்ட திரிவேதி விசாரணை கமிசன் அறிக்கை வந்த பிறகும் அதனை வெளியிடாமல் தவிர்க்கிறார். மேலும் 2002 குஜராத் கலவரங்களின் போது இதே அஸ்ராம் பாபு கொலைகார மோடிக்கு ஆதரவாக கருத்து சொன்னவர். அதற்கு ஆதாயமாக சில பல சொத்துக்களை பெற்றார். மோடிக்கும் இவருக்கும் உள்ள நட்பு ஊரறிந்த ஒன்று.

வி.எச்,பி-ன் அசோக் சிங்கால் மட்டும்தான் இன்னமும் சாமியாருக்கெதிராக சதி நடந்து விட்டதாக வக்காலத்து வாங்குகிறார். ஆனால் குற்றவாளிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளன. ஒரு நாள் போலீசு காவலிலேயே அனைத்து ஆதாரங்களும் கிடைத்து விட்டன. இனி சிங்காலும் சுருதியை குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் கொலைகார ஜயேந்திரனையே இன்னும் கும்பிட்டு வருபவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் எனும் போது அஸ்ராம் பாபுவின் ரேப்பெல்லாம் எம்மாத்திரம்?

திங்களன்று நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்ட பிறகு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் ஆன்மீக குரு அஸ்ராம் பாபு. அவர் மீதான வழக்கு சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்று சிறைக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

அஸ்ராம் ஜோத்பூர்
ஜோத்பூரில் அஸ்ராம்

தற்போது சிறையில் இருக்கும் அஸ்ராம் பாபு கங்கை நீரை மாத்திரம் தான் குடிப்பேன் எனக் கூறி விட்டார். தனது கைதுக்கு பத்திரிகைகள் தான் காரணம் என்றும், பத்திரிகை செய்திகளால்தான் அவசரகதியில் போலீசு விசாரணை நடைபெற்று, தான் கைது செய்யப்பட்டதாகவும் அஸ்ராம் பாபு குற்றம்சாட்டினார். ஆரம்பத்தில் சோனியா, ராகுல் காந்தி இருவரும் சேர்ந்து சதி செய்தாக பாஜக குரலில் பேசியது இந்த கிழட்டு நரி. இன்னும் பாகிஸ்தான் சதி என்று பேசாததுதான் பாக்கி.

இதற்கிடையில் அஸ்ராம் பாபுவுக்கு வழங்கப்படும் அளவுக்கதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உச்சநீதி மன்றம் விமரிசித்துள்ளது. ஒரு குற்றவாளிக்கு எதற்கு விஐபி பாதுகாப்பு என நீதிபதி சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார். திங்களன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய வல்லுறவுக்குள்ளான இளம்பெண் “அஸ்ராம் தண்டிக்கப்படுவதற்காக நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஆன்மீக குருவை குழந்தைகளுடன் பழக அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்றால் இந்து மத ஆசிரமங்கள் மற்றும் இந்து மதவெறி அமைப்புகளை தடை செய்தால்தான் சாத்தியம். ஏனெனில் தெருவோர கிரிமினல்கள் செய்யும் பாலியல் வன்முறைக்கு அதிகார பலத்தின் ஆதரவும், அரசியல் கட்சிகளின் அருளும் கிடைக்காது. ஆனால் சாமியார்களுக்கு அது அளவில்லாமல் கிடைக்கிறது. எனவே நமது பெண்களையும், குழந்தைகளையும் ஏன் இளைஞர்களையும் இந்த இந்து சாமியார்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் தடைதான் ஒரே வழி!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. ஐயகோ!
  ஒரு சிறுமிக்கு “சொர்க்கம்” காட்டநினைத்த சாமியாருக்கு இந்தநிலையா?
  கொதிக்கிறது மனது!
  சஙகர மடமே…!நித்யானந்தாவே….
  ஒன்று கூடுவோம்….யாகம் செயிவோம்…யாகத்தின் முன்பு சொர்னமால்யாவை, குத்துநடனம் ஆடவைப்போம்!

 2. வினவு செய்திகளில் எப்பொழுதும் இந்துக்களை தாக்கி தான் எழுத படும் என்பதற்கு இது மற்றுமொரு
  உதாரணம், இதே வினவு செய்தியாளர்கள் ஒரு வேற்று மதத்தினரை பற்றி தவறாக எழுதியது உண்டா ? அதற்காக நான் இந்து சாமிகள் அனைவரும் நல்லவர்கள் என்று சொல்ல வில்லை ,.
  எப்பொழுதும் செய்திகளில் ஒரு நடுநிலை தன்மை வேண்டும் அது விநவிதம் தற்பொழுது இல்லை என்றே நான் சொல்லுவேன்.

  • பெருமை கொள்ளும் இந்து அனானி பொத்தாம் பொதுவாக இந்து சாமிகள் என்று சொல்லாதே.. அசாராம் பா….பு பற்றி முதலில் உன் கருத்தைச் சொல்….

   • அஸ்ராம் பாபு தவறு செய்தவர் எனில் அவர் தண்டனை அனுபவிக்க தான் வேண்டும் இதில் எனக்கு மாட்று கருத்து இல்லை .

    • ஒழுங்கா வினவைப் படித்துவிட்டு பதில் எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கிற பிற மதத்தினர் செய்துள்ள காமவெறியாட்டங்கள் பற்றி ஏற்கனவே எழுதி உள்ளதை தேடிப் படியுங்கள்.

     • ஆமா பெரிய வெங்காயத்த உரிச்சிட்டானுக…யோவ் அஸ்ராம் பாபு ஒரு பொருக்கிப்பய அது உண்மைதான் ஆனா….அதை வைத்து இந்து மதத்தைத்தாழ்த்திப்பேச வேண்டும் என்பதே வினவு மட்டும் அல்லக்கைகளின் நோக்கம்…

      இந்து மக்கள் இப்பல்லாம் சாமியார்களை நம்புவதில்லை…இப்போ நித்யானனதாவின் நிலமை என்ன பார்த்தீரா??

      • நீங்கள் சாமியார்களை நம்புகிறீர்களா? இல்லையா என்பது இங்கு பிரச்சனையில்லை. ஆனால் அந்த சாமியார்களுக்காக வக்காலத்து வாங்கும் காவி கட்சி, ஏன் இப்படி வால் பிடிக்க வேண்டும்.
       சுஸ்மா ஸ்வராஜீம், புதிதாக தோள் கொடுக்க வந்திருக்கும் அயோக்கிய சுப்ரமணியனும் (நான் ஹரியை சொல்லவில்லை) டெல்லி மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனுக்கு அதிக பட்ச தண்டனை தர சொல்லி கதறுவதைப் பாருங்கள். அதையே அஸ்ரம் பாபுவிற்காக இவர்கள் கேட்பார்களா?
       “The sentence must commensurate with the gravity of the offence irrespective of the age of the offender” – Shushma Swaraj

       “It’s ridiculous to think you can reform a person who has committed a heinous crime, who has raped and murdered a young woman in such a brutal fashion.” – Subramaian Swamy

       அங்கே பலாத்காரத்திற்கு உள்ளானவர் ஒரு பருவமடைந்த பெண். பாதிப்பை ஏற்படுத்தியவன் சட்டப்படி சிறுவன். இங்கே பலாத்காரம் செய்தவன் 70 வயது முதிர்ந்த அயோக்கிய சிகாமணி, பாதிப்புக்குள்ளானவர் ஒரு சிறுமி. உங்கள் அயோக்கியத்தனம் இதிலேயே விளங்கவில்லையா??

       • ஆம் இந்த சாமியார்களுக்கு வால் பிடிப்பது தவறு தான்….ஆனால் தமிழ்னாட்டைப் பொருத்தவரை,நித்திக்கு நிகழ்ந்தது தான் சாமியார்களின் அட்டகாசத்தைக் குறைத்தது…
        நித்தியை ஓட ஓட விரட்டியது தமிழகத்தில் இந்து இயக்கங்கள் தான்….போலீ சாமியார்கள் பெருகிப்போனதான் தான் உண்மையான துறவிகளும், சாமியார்களும் இருக்கும் இடம் தெரியாமல் எங்கோ ஓர் இடத்தில் உள்ளனர்….
        மற்றபடி சாய்பாபாவோ, பங்காருவோ, சத்குருவோ, யாரும் இறைவனுக்கான தூதுவன் இல்லை…என்பது என் கருத்து….

        ஆனால் இன்னு சுப்பிரமணியசாமியெல்லாம் ஒரு ஆளா தமிழ்..

        • ‘பையன்’ வடிகட்டிய ஒரு பொய்யன் என்பதற்கு இது ஒரு சான்று..
         நித்தியை எவனும் தமிழகத்தில் இருந்து ஓட ஓட விரட்ட வில்லை..
         RSS மற்றும் இந்து இயக்கங்கள் தயவில் நடத்தப்படும் ஒரு டிவி ‘LOTUS TV’
         இதில் எப்போதுமே நித்தியின் பிரசார மழைதான்.. அதை இன்று காலையில் கூட ஒளிபரப்பினான்கள்.. அதையும் சில மந்தைகள் தலையை ஆட்டி கேட்டு கொண்டு இருந்தன..
         இந்து இயக்கங்கள் ஓட ஓட விரட்டியதாம்… நித்தி கிட்ட இருந்து நீங்க எந்த விசயத்தில் மாறுபடுறீங்க சார்… வெட்கம் துளியும் இன்றி கருத்து பேசுறீங்க…

         • யோவ் சரியான காமிடி பீஸய்யா நீர்…

          இந்து மக்கள் கட்சி நித்திக்கெதிறாக தொடர்ச்சியாக போராட்டங்கள் செய்யவில்லையா??

          இந்து மக்கள் கட்சி மற்றும் பல இந்து இயக்கங்கள்நித்தியின் மதுரை ஆதீணத்தினை ஆக்கிரமிக்கும் முயற்ச்சியை வேறருக்கவில்லையா??

          • பதில் சொல்லாம ஓடுவதால் உமக்கு ஓடு எனும் பெயர் மிகப்பொருந்துகிறது…

    • எப்படிப்பட்ட தண்டனை சாமி?…கூடவே “சின்ன வயசுப்” பொண்ணுங்களை
     சிறையில் வைக்கவேண்டுமோ?

    • அப்ப உமக்கு இன்னமும் அந்தச் சிறுமி பொய் சொல்றாள்னு மறை முகமாக சொல்ற மாதிரி இருக்கு,,…

  • ஐயா சந்து பொந்து ஹிந்து. சாமியார்கள் அத்தனை பேரும் ஏன் சிறாரிடம் தவறாக நடப்பவராகவே உள்ளனர்? இந்து சாமியார்களை எடுத்துக் கொள்ளுங்கள். நித்தி, சயந்திரன், பரட்ட தலையன் சாயி, சக்கி, பிரேமானந்தா எல்லோரும் ஏன் காமாந்தகர்களாகவே இருக்கிறார்கள்? ஹிந்து என்பதில் என்ன பெருமை தயிரு வேண்டியுள்ளது?

   • ___________எடிட்

    இதுக்கெல்லாம் மூன்னோடி கிரித்துவ பாதிரியார்களும், முசுலீம் மதகுருமார்களும் தான் போய் கூகுளிலும் யூ டியீபிலும் தேடிப்பார்…..உண்மை தெரியும்….பொட்டத்தனமா நீ போட்ட இந்த கருத்தை எல்லாம் வினவு தடை செய்யாது…னாங்க எதாவது பதிலிட்டால் அதை மட்டும்நீக்கி விடும்….இதுக்கு ஒரு கொள்கை வேற….

    //கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்//

    • நான் ஹிந்து என்பதில் பெருமை கொள்பவன் தான், ஆனால் தங்களை போல் ஒரு மதத்தையோ , ஒரு பிரிவையோ இகழ்ந்து பேசுபவன் அல்ல. முதலில் ஹிந்துசும் படித்து விட்டு வந்து ஹிந்துகளை பற்றி பேசுங்கள்.

 3. இந்து என்பதில் பெருமை கொள்ளும் அனானியே வினவில் மதபயங்கரவாதம் அல்லது மதப்பயங்கரவாதம் என்று தேடிப் பார். இஸ்லாமிய மதவெறிகள் மீதான கட்டுரைகள் கொட்டும்.

  • அதை ஏன் இஸ்லாமிய மதப்பயங்கரவாதம் என வினவு குறிப்பிட மறுக்கின்றது….

  • இதே வினவில் தான் பார்ப்பன இந்து மதவெறி பாசிசம் என்று தனி தொகுப்பே வைத்து ஹிந்துகளை
   பற்றி தவறாக எழுதுகிறார்கள் .

   • மன்னிக்கணும் சாமி…
    ஜயேந்திரன் 1 ஆம்நம்பர்…..
    னித்தி ”
    ஆசுரம் பாபு ”
    இப்போ வேர்க்காது என்று நினைக்கிறேன்…வேர்த்தால்,னித்தியின் சீடியை
    போட்டுப் பார்க்கவும்…

 4. எத்தனை சாமியாருங்க குட்டு வெளிப்பட்டும் இவனுங்க திருந்த மாட்டானுங்க. அவனுங்க பின்னாடி போயிக்கிட்டுதான் இருக்கானுங்க. கேமாராவை வைத்து படமே எடுத்துக்காட்டிட்டானுங்க. ஆனால் நித்தியின் மவுசு மட்டும் குறையவில்லை. அதிகரித்திருக்கிறது. பணத்தை அள்ளி கொட்டுறானுங்க பெண்பிள்ளைகளையும் கூடவே அனுப்பிவைக்கிரானுங்க சேவை செய்ய. நெய்யும் பாலும்,வெண்ணையும் தின்னு தெனவு எடுத்த சாமியார் கடைசியில விஸ்வரூபத்தை காட்டிவிடுவார். இது வெளியில் தெரியாத வரைக்கும் நல்ல சாமியார். தெரிந்தவுடன் கெட்ட சாமியார் மீடியாக்களுக்கு மட்டும். மக்களுக்கு கிடையாது

 5. சாமியார்கள் பலவிதம்! ஓளிவு மறைவு இன்றி, இறைவன் இருக்கிறான் என்று உண்மையாகவே நம்பி, அந்த நம்பிக்கையினாலேயே எளிமையாகவும்,நேர்மையாகவும், இறைவனின் எல்லா படைப்புகள் மீதும் சமமாக அன்பு பாராட்டுபவர்கள், வல்லலாரை போல!

  உள்ளத்தில் நேர்மையும், இறைவன் இல்லையென்றாலும் மனிதாபிமானம், சமனோக்கு முதலிய நற்குணஙகளுடன் வாழ்பவர்கள், பெரியாரைபோல! (அத்வைதி?)

  பகட்டும்,படொடபமும் புடைசூழ, பணக்கார பக்த கோடிகளை கவர்ந்து, எல்லா சுகங்களையும் துய்த்துகொண்டு சாமியார் போல வேடமிட்டு திரியும் நடி கர்கள், மடாதிபதிகள், சங்கரச்சாரியார் போல! தங்கள் இனநலம் பேணவே, இவர்கள் வேடம் புனைகிரார்களேயன்றி, மக்கள் சேவைக்கு அல்ல!

  மக்கள் விழிப்படைவது எப்போது?

 6. பூணூல் அணிந்த பிராமணன் கடல் கடந்து பொகக்கூடாது….
  தமிழ்னாட்டிலேயே “உஞிவிருத்தி” செய்து பொழப்பைநடத்தலாமே?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க