privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்மோடியும் நானும் கொல்வதில் கூட்டாளிகள் - வன்சாரா !

மோடியும் நானும் கொல்வதில் கூட்டாளிகள் – வன்சாரா !

-

குஜராத்தில் மோடியின் அரசியல் தலைமையும், உயர் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய ‘மோதல்’ கொலைகளுக்கு போலீஸ் அதிகாரிகள் மட்டும் பழி வாங்கப்படுகிறார்கள் என்றும் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் இத்தகைய வழக்குகளில் சிறையில் வாடும் போது முதலமைச்சர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமான உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா போன்றவர்கள் சுதந்திரமாக உலாவுகிறார்கள் என்றும் குஜராத்தின் முன்னாள் டிஜிபி டி ஜி வன்சாரா குற்றம் சாட்டியுள்ளார். குஜராத் தலைநகர் காந்திநகரில் செயல்படும் குஜராத் அரசு உண்மையில் அகமதாபாத்தின் சபர்மதி மத்திய சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குத்தலாக பரிந்துரைத்துள்ளார்.

டி ஜி வன்சாரா
டி ஜி வன்சாரா

வன்சாரா 2002 முதல் 2006 வரையிலான கால கட்டத்தில் முதலில் அகமதாபாத் நகரின் துணை ஆணையராகவும், பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு படையின் துணை தலைமை ஆய்வாளராகவும் பணி புரிந்தவர். போலி மோதல் (என்கவுண்டர்) வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக அகமதாபாத்திலும், மும்பையிலும் சிறை வைக்கப்பட்டுள்ள வன்சாரா, தான் தெய்வமாக போற்றிய நரேந்திர மோடி தன்னையும், சக போலீஸ் அதிகாரிகளையும் காப்பாற்றாமல் கை விட்டு விட்டது குறித்து மனம் கசந்து எழுதியிருக்கிறார். தனது நம்பிக்கையை இழந்து விட்ட குஜராத் அரசுக்கு இனிமேலும் சேவை செய்ய விரும்பவில்லை என்று தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாகவும், ஓய்வூதிய சலுகைகளையும் தியாகம் செய்வதாகவும் கூறியிருக்கிறார். போலி மோதல் வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் ஏற்கனவே அவர் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடியும், அமித் ஷாவும் தற்போது குஜராத்திலும் மும்பையிலும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை பாதுகாக்க முயற்சி செய்யாததோடு, தாம் வழக்கில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ளவும், அரசியல் ஆதாயம் தேடவும், போலீஸ் அதிகாரிகளை பலி கொடுக்கத் தயாராகி விட்டதாக வன்சாரா புலம்பியிருக்கிறார்.

சோராபுதீன் போலி மோதல் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்ட போது நாட்டிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கும் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை வைத்து சிபிஐ கீழமை மன்றம், உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் வரை போய் பிணை வாங்கிய மோடியின் குஜராத் அரசு, போலீஸ் அதிகாரிகள் எம் என் தினேஷ், நரேந்திர அமீன் போன்றவர்கள் தமது சொந்த முயற்சியில் பிணை வாங்கிய போது, அதை எதிர்த்து முறையீடு செய்து அதை ரத்து செய்திருக்கிறது. தம்மை பாதுகாத்துக் கொள்ள, போலி மோதல் வழக்கு விசாரணையை மும்பை சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்ற அனுமதித்து போலீஸ் அதிகாரிகளை கைவிட்டதோடு சிக்கலில் தள்ளியுள்ளது. போலி மோதல் வழக்குகளை இணைத்து விசாரிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட வழி செய்து, வன்சாரா மீதான வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக மாற்றியிருக்கிறது, அதாவது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், தூக்குத் தண்டனை வழங்கக் கூடிய வழக்காக மாறியிருக்கிறது.

வன்சாரா காவலில்
மோடி போலீஸ் அதிகாரிகளை பலி கொடுக்கத் தயாராகி விட்டதாக வன்சாரா புலம்பியிருக்கிறார்.

இதனால் வன்சாரா முதலான போலிஸ் கிரிமினல்கள் யோக்கியவான்கள் என்பதல்ல. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். ஆனால் இந்த கிரிமினல்களை தலைமை தாங்கிய மோடி இன்று கைவிட்டுவிட்டார் என்பதே வன்சாரா வகையறாக்களின் குற்றச்சாட்டு. பிரதமர் கனவில் இருக்கும் மோடிக்கு இத்தகைய போலிஸ் அதிகாரிகளெல்லாம் கிள்ளுக்கீரைகள் என்பது இந்த கிள்ளுக் கீரைகளுக்கு தெரியவில்லை.

இது எல்லாம் சேர்ந்து வன்சாராவின் உதாரான தைரியத்தையும் அதிகாரத்துவ கட்டுப்பாட்டையும் உடைத்து போட்டிருக்கிறது. குஜராத் அரசுக்கு அனுப்பியிருக்கும் தனது 10 பக்க ராஜினாமா கடிதத்தில் குஜராத்தில் நடத்தப்பட்ட போலீஸ் படுகொலைகளின் பின்னணியையும் வரலாற்றையும் விளக்குகிறார்.

2002-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை அவிழ்த்து விடப்பட்டது. இந்தச் சூழலில் “பாகிஸ்தானுடன் நீண்ட எல்லையைக் கொண்டிருப்பதால், குஜராத் காஷ்மீரைப் போல மாறிவிடாமல் தடுக்க, பயங்கரவாதத்துக்கு எதிராக ‘சகிப்பின்மை அற்ற கொள்கை’ அரசின் உச்ச மட்டங்களில் (அதாவது முதலமைச்சர் நரேந்திர மோடி) வகுக்கப்பட்டது” என்றும், அந்த கொள்கையின்படிதான் மோதல் கொலைகள் குற்றப் பிரிவு போலீசாராலும், பயங்கரவாத தடுப்பு போலீசாராலும் நடத்தப்பட்டன என்றும் வன்சாரா “திருத்தமாக, அழுத்தமாக” பதிவு செய்திருக்கிறார்.

மாநில உள்துறை அமைச்சகத்தின் உயர் மட்டங்களிலிருந்து தினமும் அவரை தொடர்பு கொண்டு விசாரித்துக் கொண்டிருப்பார்கள் என்றும், இப்போது அவர் சிறையில் அடைபட்டிருக்கும் நேரத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும், குஜராத் போலீசின் கடமை உணர்வும், ‘தேச பக்தி’யும் மோடி போன்றவர்களின் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் புலம்பியிருக்கிறார். நரேந்திர மோடியின் நம்பிக்கைகுகந்த நபராக இருந்து, மாநில நிர்வாகத்தை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமித் ஷா போலீஸ் அதிகாரிகளை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அப்படி என்ன செயல்களுக்காக வன்சாராவும் பிற போலீஸ் அதிகாரிகளும் மோடி அரசால் பயன்படுத்தப்பட்டனர் என்று பார்க்கலாம்.

இஷ்ரத் ஜஹான் குடும்பம்
போலி மோதலில் கொல்லப்பட்ட மும்பை மாணவி இஷ்ரத் ஜஹானின் குடும்பம்.

குஜராத்தில் இனப்படுகொலை நடந்த அடுத்த ஆண்டு, 2003 மார்ச் மாதம் மோடி அரசில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டிய மர்மமான முறையில் நடுவீதியில் காருக்குள்ளே இறந்து கிடந்தார். இவ்வழக்கு தொடர்பாக பொடா அடக்குமுறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 முசுலீம்களையும் குஜராத் உயர்நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்து விட்டது.

ஹரேன் பாண்டியாவை கொன்றது யார் என்ற ‘மர்மம்’ நீடிப்பது ஒரு புறமிருக்க, மோடி கும்பலுக்கு நெருக்கமானவனும், ராஜஸ்தான் கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவனுமாகிய சையத் சோராபுதீன் குஜராத் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டான். சோராபுதீனின் மனைவி கவுசர் பீ விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார். சோராபுதீன் கொல்லப்பட்ட போது உடனிருந்ததாக சொல்லப்படும் துளசிராம் பிரஜாபதி என்பவன் 2006-ம் ஆண்டு போலீசாருடனான மோதலில் கொல்லப்பட்டான்.

இவை மோடி அரசு ‘முஸ்லீம் பயங்கரவாதிகளை சகித்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுத்து, குஜராத்தை அமைதி தவழும் மாநிலமாக பராமரிப்பதற்கு’ நடத்திய கொலைகளுக்கு உதாரணங்கள். ஹரேன் பாண்டியா, குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையில், அப்படுகொலையில் மோடிக்கு உள்ள பங்கு குறித்து சாட்சியம் அளித்தது அவரது கொலைக்கான அரசியல் பின்னணி. ஹரேன் பாண்டியாவையும், அவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மோடியின் கையாள் சோராபுதீனையும், சோராபுதீன் கொலைக்கு சாட்சியாக இருந்த கவுசர் பீ மற்றும் துளசிராம் பிரஜாபதி இவர்களையும் கொலை செய்ததுதான் நரேந்திர மோடி அரசின் ஏவலில் நடத்தப்பட்ட வன்சாரா போன்ற போலீஸ் அதிகாரிகளின் ‘தேசபக்த’ பணியாக இருந்திருக்கிறது. குஜராத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த மோடி எடுத்த இந்த கொள்கை முடிவை செயல்படுத்தியது மட்டுமே தங்கள் பொறுப்பு என்றுதான் இப்போது வன்சாரா கூறுகிறார்.

இது போலவே குஜராத் இனப்படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கின் முக்கிய சாட்சியான நதீம் அகமது சையது மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மத்திய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் ஜூன் 15, 2004 அன்று அகமதாபாத் புறநகர்ப் பகுதியில் இறந்து கிடந்தனர். “இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ  தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்தபொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர். அப்பொழுது நடந்த மோதலில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக” குஜராத் மாநில அரசு அறிவித்தது.

செப். 2009-ல் இவ்வழக்கை விசாரித்த அகமதாபாத் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம், “இதுவொரு போலிமோதல் கொலை; அந்நால்வரும் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு முதல் நாளே மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்று தீர்ப்பளித்தது. அது ஒரு போலி மோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் உறுதி செய்தது.

வன்சாரா சோராபுதீன் போலி மோதல் வழக்கு தொடர்பாக 2007-ம் ஆண்டு குஜராத் சிஐடியால் கைது செய்யப்பட்டார். 2012 வரை சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2012-ல் துளசிராம் பிரஜாபதி போலி மோதல் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டார். அதைத் தொடர்ந்து சாதிக் ஜமால் போலி மோதல் வழக்கு, இஷ்ரத் ஜகான் போலி மோதல் வழக்கு இவற்றிலும் தொடர்புடையதாக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

“சோராபுதீன், துளசிராம், சாதிக் ஜமால், மற்றும் இஷ்ரத் ஜகான் போலி மோதல் வழக்குகளில் இது தொடர்பான கொள்கையை உருவாக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும். அந்த மோதல் சம்பவங்களின் போது அரசியல் தலைமை தொடர்ந்து அதன் ஊக்குவிப்பு, வழி காட்டல், கண்காணிப்பை மிக நெருக்கமாக வழங்கி வந்தது.” என்று முழக்கமிடும் வன்சாரா,

வன்சாரா, மோடி
மரண வியாபாரி மோடியும், விற்பனை பிரதிநிதி வன்சாராவும்.

“யார் போலீசை பாதுகாக்கிறார்களோ அவர்கள் போலீசால் பாதுகாக்கப்படுகிறார்கள். இத்தகைய வழக்குகளில் பரஸ்பர பாதுகாப்பும், ஒருவருக்கொருவர் உதவி செய்வதும்  போலீசுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே உள்ள எழுதப்படாத சட்டம். அரசாங்கமும், போலீஸ் அதிகாரிகளும் ஒரே படகில் போகிறார்கள், சேர்ந்து மிதக்க வேண்டும் அல்லது சேர்ந்து மூழ்க வேண்டும். ஒரு தரப்பு இன்னொரு தரப்பை ஏமாற்றி, தான் மட்டும் மிதந்து மறு தரப்பை மூழ்கடிக்க முடியாது, அரசாங்கத்தினாலும் முடியாது, போலீஸ் அதிகாரிகளாலும் முடியாது.” என்று மோடிக்கு மிரட்டலும் விடுத்திருக்கிறார்.

குஜராத்தில் டாடா கார் தொழிற்சாலை அமைக்கவோ, அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்யவோ நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட மோடி பாணி வளர்ச்சிப் பணிகளுக்காகவோ, மக்கள் மத்தியில் எழக் கூடிய எதிர்ப்புகளை முடக்கி வைப்பதற்கு “இத்தகைய ‘பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்’ முக்கியமானவை. “நானும் எனது சக அதிகாரிகளும் செய்த தியாகம் மட்டும் இல்லை என்றால், தேசிய அளவில் மோடி தூக்கிப் பிடிக்கும் “குஜராத் வளர்ச்சி மாதிரி” சாத்தியமாகியிருக்காது.” என்கிறார் வன்சாரா. “மோடி இந்தியாவிற்கு தனது கடனை தீர்ப்பதாக சொல்லியிருக்கிறார். முதலில் தனக்காக உழைத்த போலீஸ் அதிகாரிகளுடனான தனது கடனை தீர்க்க வேண்டும்” என கழுத்தில் துண்டை போட்டு முறுக்கியிருக்கிறார்.

மரண வியாபாரி மோடியின் தலைமை விற்பனை பிரதிநிதி இப்போது வாய் திறந்திருக்கிறார். எதிர்க்கட்சிகளின் சதி, பத்திரிகைகளின் நாடகம், தன்னார்வலர்களின் சூழ்ச்சி என்று தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் மோடி, ஹரேன் பாண்டியாவை பேச விடாமல் செய்தது போல, குஜராத் இனப்படுகொலையில் மோடி மற்றும் அவரது அரசின் பங்கு குறித்து அம்பலப்படுத்தும் போலீசு அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா போன்றவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அடக்க முனைவது போல, வன்சாரா போன்ற கையாட்களை மௌனிப்பதற்கு என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

– அப்துல்

மேலும் படிக்க

  1. இனியாவது காக்கி கிரிமினல்கள் திருந்தினால் சரி ,இதை போன்ற கொலைகார அரசியல் ரவுடிகளின் கட்ட்ளைக்க்கு அடி பனியாமல் நேர்மையாக பணியாற்ற முன்வர வேண்டும் ,சஞ்சய் பட்,ஸ்ரீ குமார் ,போல

  2. இது போன்ற கயவர்கள் தங்களுடைய பதவி காலங்களில் பதவி உயர்வுக்கவும், பணம் புகழ் இதற்க்ககவும் கருணையற்று நடந்து கொள்ளுவது பின்பு, இது போன்று பதவி பறிப்பு மற்றும் தண்டனை அடையும் போது திருடனுக்கு தேள் கொட்டுவது போல் முழிக்கவேண்டியது, கேவலமான இந்த பிழைப்புக்கு பதவி ஏற்க்கும் போது கொடுக்கு சத்திய பிரகாணாடத்திற்க்கு மதிப்பு இல்லாமல் போய் விட்ட்டது. இவ்வளவு அயோக்கியத்தனைத்தினையும் செய்து விட்டு எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிக்கொண்டு இருக்கும் அயோக்கியன் நாரயண தமோத்ர மோடி போன்றோர்,தனது சுய லாபத்திற்க்கா இன்று இந்துத்துவா ? மதமுழக்கம் விட்டு தன் இனத்தினையே பதவிக்காக பழி கொடுப்பான் என்பதில் எள்ளவவும் மாற்றம் இல்லை. இவனது மரணம் நிச்சயம் பதவிக்காக மதத்தினை பயன்படுத்துவோர்க்கு படமாகா அமையும் என்பதில் எள்ளவும் மாற்றாமில்லை ராஜா நரசிம்மா விவேக்

  3. உலகம் வேதம் ஓதும் சாத்தான் களின் ஆட்சியில் என்பதை இவை காட்டுகின்றன.

  4. அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா (வினவு கலும் காங்கிரசும் செய்யாததயா இவங்க செய்துடாங்க)

  5. தனது யாத்திரைகலில் நூற்று கனக்கில் முஸ்லிம்களை கொன்ற அத்வானி முன்னாள் நாயகன். 2000 முஸ்லிம்களை கொன்ற மோடி இன்னாள் நாயகன். பிணஙகள் தான் அளவு கோள். ஆட்சி எல்லாம் சீன் தான்.

  6. இந்த ராஜினாமா கடிதம் வந்த நேரமும் வன்சாராவால் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வார்த்தைகளையும் கவனித்தாலே, மோடிக்கும், காங்கிரசுக்கும் நடக்கும் சதுரங்க ஆட்டத்தில் இவர்கள் வெட்டுபடும் சிப்பாய்கள் என்பது புரியும்………….. சிப்பாய் வெட்டுபடுவதிலிருந்து தன்னை காத்துக்கொள்ள இந்த ராஜினாமா கடிதத்தை கடைசி ஆயுதமாக காங்கிரசால் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது………… 1. சிறை இருக்கும் மாநிலம் காங்கிரசால் ஆளப்படும் மாநில காவல்துறை கட்டுப்பாட்டில் உளளது……..2.//////.“நானும் எனது சக அதிகாரிகளும் செய்த தியாகம் மட்டும் இல்லை என்றால், தேசிய அளவில் மோடி தூக்கிப் பிடிக்கும் “குஜராத் வளர்ச்சி மாதிரி” சாத்தியமாகியிருக்காது.” என்கிறார் வன்சாரா. “மோடி இந்தியாவிற்கு தனது கடனை தீர்ப்பதாக சொல்லியிருக்கிறார்…………/////////// மேற்கண்ட வார்த்தைகள் காங்கிரசால் எழுதி கொடுக்கப்பட்டது போல் உள்ளதை சற்று கூர்ந்து கவனித்தாலே புரியும்……….. ஏனெனில் குஜராத்தின் பொருளாதரா வளர்ச்சியை முன்னிறுத்தியே, மோடி பிரதமர் வேட்பாளருக்கு முன்னிருத்தப்ப்டுகிறார்………. இதனை எதிர்கொள்ள காங்கிரசுக்கு கிடைத்திருக்கும் சரியான ஆயுதம் வன்சாரா மற்றும் அவரால் தற்போது கொடுக்கப்பட்டிரும் வாக்குமூலம்………. 3.இதற்கும் மேலாக சி.பி.ஐ.என்ற காங்கிரஸ் அரசின் கட்டுப்பாட்டில் வரும் விசாரணை அமைப்பால் விசாரணை நடத்தப்படுகிறது……… இது போதாதா…. வாக்குமூலத்தை மோடிக்கு எதிராக பெற…….. இந்த என்கவுண்டர் வழக்க்குகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் எதிர்காலம் இனி மோடிக்கு எதிராக அவர்கள் கொடுக்கும் வாக்கு மூலத்தை பொறுத்தே அமையும்…………… இது வினவுக்கு ஒன்றும் புரியாத விஷயமல்ல , ஆனால் எதிரியை குனிய வைத்து குத்த ஒரு ஆப்பு கிடைத்துவிட்டது, பயன்படுத்தாமல் விடுமா என்ன………….?

    • வடிவேலு சொல்வது மாதிரி “என்ன ரூம் போட்டு யோசிப்பீங்களாயா?
      இவ்வளவு நாளா மோடியின் வாய்ஜாலங்களை எல்லாம் வேத வாக்காக எண்ணி ஜால்ரா போட்டது இப்படி சந்தி சிரிக்கிறதே என்பதற்காக இப்படி எல்லாமா யோசிப்பீர்கள்.
      பத்திரிக்கை விபச்சாரி கோமாளி சோ, பத்திரிக்கை விபச்சார கும்பலின் தலைமைத்துவ “குமுதத்தில்” மோடியின் காலை எப்படியெல்லாம் நக்கி சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாரோ அதற்கு சற்றும் குறைவில்லை உமது வக்காலத்தும்.

      • கருத்துக்கு பதில் கூறாமல் தரம் தாழ்ந்த வார்த்தைகளை உபயோகபடுத்தினால் நீங்கள் கூறும் வாதம் சரியாகிவிடாது………..
        இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கும் அதிகாரிகளில் அதிகம் ips அந்தஸ்து உள்ளவர்கள்……… வேறு எந்த வழக்கிலும் இதுபோல் நடந்ததில்லை… இவர்கள் அனைவரும் மோடியின் கீழ் பணிபுரிந்தவர்கள்……….. மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளித்தால் அவர்களுக்கு “பரிசு ” கூட காத்திருக்கலாம்…………. யார் கண்டது…… ? விசாரணை அமைப்புகள் , அரசு எந்திரம் , அதிகாரம் எல்லாம் காங்கிரசின் கையில் இருக்கும்போது எதுவும் இந்தநாட்டில் நடக்கும்………

        • உங்கள் வாதத்தைப் பார்த்தால், 2002-ல் குஜராத்தில் கலவரமே நடக்கவில்லை, முஸ்லிம் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகவில்லை, பெஸ்ட் பேக்கரி எரிக்கப்படவேயில்லை என்றெல்லாம் சொல்வீர்கள் போலத் தெரிகிறது. வாழ்க உங்கள் மோடியிஸம்.

          • I don’t support attacking women and children for any cause unless they are combatants, but Muslims started it by burning the train bogie,congress corporators have been arrested and sentence din this case.

            If you blame someone blame the muslims,the same thing they are trying to do now in Muzzafarnagar.

    • If the bullet hit the real terrorist then it’s not a matter but i hit innocent.

      If you feel that killing the innocent people is right then you also will be considered under the terrorist group.

    • துப்பாக்கி எந்தப் பக்கம் திருப்பினாலும் திரும்பும். யார் சுட்டாலும் சுடும். எதற்காகத் திருப்புகிறோம்? ஏன் சுடுகிறோம்? என்பது முக்கியம்

  7. Ishrat jahaan was not innocent and CBI did not prove she was innocent.
    But she is portraied as a good person by media by highlighting only fake encounter.
    Every state govt has done this fake encounter.

    In Tamilnadu , Police killed a rapist in coimbatore and killed a bihari bank thieves in chennai.

    So why Congress CBI ,selectively acts on Gujarat cases only?

    • //Ishrat jahaan was not innocent and CBI did not prove she was innocent.//

      _____ ! இஸ்ரத் ஜகான் குறித்த உண்மையை முதலில் படி.
      ——————————————————–
      இஸ்ரத் ஜகான் மும்பையின் மும்ப்ரா பகுதியை சேர்ந்த பி.எஸ்.ஸி இரண்டாம் ஆண்டு படித்த கல்லூரி மாணவி. தந்தையை இழந்த இஸ்ரத், மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து சிறிது பணம் ஈட்டி வந்தார். மே மாதம் கல்லூரிக்கு கோடை விடுமுறை காலம். சற்று கூடுதலாக பணம் சம்பாதிக்க எண்ணம் கொண்டார். உறவினர் ஒருவரின் மூலம் விற்பனையாளர் பெண் வேலைக்காக கனவுகளோடு தொழில் வாய்ப்புகள் மிகுந்த குஜராத்திற்கு வந்தார்.

      மோடியின் குஜராத்தில் கால் வைத்த இஸ்ரத்திற்கு தன் மீது ‘பயங்கரவாத நிழல்’ கவிந்திருந்தது தெரியாது. ஜோடிக்கப்பட்ட ‘உளவுத்துறை தகவலின்’ அடிப்படையில் இஸ்ரத் ஜகானும், ஜாவெத் அகமது என்ற கேரள மாநிலத்தை சேர்ந்தவரும் கடத்தப்பட்டு ஒரு பண்ணை வீட்டில் வைக்கப்பட்டனர். பயங்கரவாதிகள் என்ற குற்றஞ்சாட்டி இரண்டு பாகிஸ்தான் குடிமகன்களை வேறொரு பண்ணை வீட்டில் வைத்தனர். பிறகு நால்வரையும் அகமதாபாத்தில் ஒரு டாடா இண்டிகா காரில் அமர வைத்து, துப்பாக்கி ரவைகளால் அவர்கள் உடலை துளைத்து, நடுரோட்டில் கிடத்தி காட்சிப் பொருளாக்கினர்.

      இந்த போலி என்கவுண்டரை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு ஆகியவை இது போலி என்கவுண்டர் என்பதை ஊர்ஜிதம் செய்தது. இஸ்ரத் கொலை செய்யப்பட்ட அன்று மட்டும் 37 முறை குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தோடு போலீஸ் உயரதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர். வன்சாரா, பாண்டே உட்பட ஏழு உயரதிகாரிகள் இந்த போலி என்கவுண்டரில் சம்பத்தப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு IB யை சேர்ந்த ரவீந்திர குமார் என்பவரும் சம்பந்தப்பட்டுள்ளார்.

      குஜராத் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்போடு CBI இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கோடு நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. ஆனால், இந்த கொலைகள் யாருக்காக செய்யப்பட்டன என்பதை தான் வன்சாராவின் லெட்டர் பாம்ப் தெரிவித்துள்ளது. வன்சாரா லெட்டர் பாம்ப் மேலே இருக்கும் லிங்கில் உள்ளது. அதனையும் படித்துவிட்டு ராமனும், அரிகுமாரும் உரையாடுவது நல்லது.

  8. Sukdev,

    There has been multiple TV debates,long detailed investigation and your jola gang could not prove ishrat’s innocence,David Headley publicly mentioned about Ishrat,Lashkar e Toiba publicky mentioned her martyrdom in their website before removing it.

    Vanzaara clearly says encounetr policy was adopted to prevent terrorism and he never says ishrat is innocent.

    I have read the letter already and from how i see things,If Amit Shah gets a release then all these guys will be out of Jail too.

    Mr.Rajender Kumar never bowed down to pressure and he is ready to back his statement over any kind of pressure.

    Your Rana Ayyub and Vrinda Grover have proved nothing so far,they still come and lie blatantly on TV.

    So,this so innocent Ishrat Jahan travels with 3 random strangers in a car,stays in a hotel with them.

    Which lower middle class muslim girl does that in India?

    I know Sukdev,you dont have any common sense,but the most people in India do have it.

    why should Rajender Kumar give intelligence about these apparently innocent people.

    Let me tell you this,if you can prove her innocence,you job will be done.

    Since you cant do that,you come up with silly things like pressuring Vanzara to write a letter.

    • ஆர்.எஸ்.எஸ் டூப்ளிகேட்ஸ் ராமன் அண்ட் ஹரிகுமார்,

      முதலில், இஸ்ரத் பயங்கரவாதியா இல்லையா என்று வழக்கு தொடுக்கப்பட்டு அதனை சிபிஐ விசாரிக்கவில்லை. எனவே சிபிஐ, இஸ்ரத் innocent என்று சொல்லவில்லை; எனவே அவர் பயங்கரவாதி என்று மூடத்தனமான முடிவுக்கு வராதீர்கள்.

      இரண்டாவது, இஸ்ரத்தின் பெயரை டேவிட் கோல்மேன் ஹெட்லீ NIA –இன் விசாரணையில் தெரிவித்ததாகவும், இது இஸ்ரத் ஜகான் பயங்கரவாதி என்று நிரூபிக்க போதுமானது என்று குறிப்பிடுகிறீர்கள். அயோக்கியர்களே! டேவிட் கோல்மேன் ஹெட்லீயின் இந்த ஜோடிக்கப்பட்ட வாக்குமூலம் சண்டே கார்டியனில் முதலிலும், பிறகு ஹெட்லைன்ஸ் டுடேவிலும் வந்தது.

      முதலில், பொய்யை பார்ப்போம் :”ஹெட்லி தனது வாக்குமூலத்தில், தன்னிடம், லஷ்கர் இ தொய்பா தலைவன் சகி உர் ரஹ்மான் லக்வி , முசமில் என்றொரு லஷ்கர் கமாண்டரை 2005–ல் அறிமுகப்படுத்தியதாகவும், முசமிலை பற்றி லக்வி குறிப்பிடும் போது, முசமில் பெரிய கமாண்டர் என்றும், பல லஷ்கர் ஆபரேஷன்களை தோல்வியடைய செய்தவர் — அதில் ஓன்று இஸ்ரத் ஜகான் என்று வஞ்சப் புகழ்ச்சியோடு குறிப்பிட்டதாக சண்டே கார்டியன் தெரிவித்தது.”

      போற்றுதலுக்குரிய மனித உரிமைப் போராளிகள் மேற்கண்ட பொய்யை முறியடித்தார்கள். சண்டே கார்டியன் தெரிவித்துள்ளபடி முசமிலுக்கும் டேவிட் ஹெட்லீக்கும் இடையே பழக்கம் 2005–ல் முகிழ்க்கவில்லை; 2002-ல் அவர்களுக்கிடையில் தொடர்பும், பழக்கமும் ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், 2002–லிருந்து 2004 காலகட்டம் வரை மட்டும் தான், டேவிட் ஹெட்லியின் Boss-ஆக (handler) முசமில் இருந்து வந்துள்ளான். 2004-க்குப் பிறகு டேவிட் ஹெட்லியின் handler ஆக சாஜித் மஜித் என்பவன் இருந்துள்ளான். எனவே 2005–ல் லக்விக்கும் டேவிட் ஹெட்லிக்கும் ஒரு சம்பாஷணை ஏற்பட்டு அதில் முசமிலை பற்றியும், இஸ்ரத் ஜகான் பற்றியும் டேவிட் ஹெட்லி தெரிவித்தாக ‘சண்டே கார்டியன்’ குறிப்பிட்டது வடிகட்டிய பொய். இந்த உண்மையை தெரிவித்ததனை அடுத்து ‘ஹெட்லைன்ஸ் டுடே’ தனது பொய் பரப்புதலை நிறுத்திக் கொண்டது.

      NIA (தேசிய புலனாய்வு முகமை) வின் அறிக்கையில் காணப்படும் டேவிட் ஹெட்லியின் வாக்குமூலத்தில் ‘சண்டே கார்டியனின்’ பொய் இடம்பெறவில்லை. அப்படி இடம் பெறாத ஒன்றை நீக்கிவிட்டதாகவும் அதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கோரியது பாஜக. இப்படி ஏற்கனவே அடித்து விரட்டப்பட்ட அவதூறை வைத்து இங்கு வியாபாரம் செய்கிறார்கள் இந்துத்துவப் போலிகள்.

      ஹரிகுமாரா, உனது பொய்யுரைப்புகளுக்கு நீ தேர்ந்தெடுத்த ஊடகம் தவறானது. உயிரை கொடுத்து உண்மையை நிலைநாட்ட வினவும் அதன் வாசகர்களும் இருக்கும் வரை உனது பருப்பு வேகாது.

      • what silly excuses are you giving here?

        who is going to validate things like who was the handler at that point of time and so what if a different person is the handler,headley is not a headless chicken who doesn’t get to meet other LET operatives.

        And why was his statement removed from the NIA?

        Sunday Guardian and Headlines Today are irrelevant here,the main source if the NIA document.

        Rajender Kumar is going to retire,we ll see if Vrinda grover ll file a case against him.

        and off topic but regarding Vanzara’s letter,CBI director Sinha already mentioned it is a clear political letter and nothing more.

        I agree that Encounter Cops need protection but Vanzara seemed to have succumbed under pressure.

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க