Wednesday, June 3, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கோவில் கடைகள் - மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை

கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை

-

மிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவில்களுக்கும் சில நாட்களுக்கு முன் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இனி ஆலயங்களுக்கு சொந்தமான கடைகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது. மேலும் இந்து சமய வளர்ச்சிக்கு சம்பந்தப்படாத கொள்கையுடையவர்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சிகளையும் கோவில் வளாகங்களில் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், பக்தர்களுக்கு உதவும் வகையில் அமைந்த நிகழ்ச்சிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்மேலும் இந்துக் கோவில்களுக்கு சொந்தமான இடத்திலேயே அவர்களை விமர்சித்து பேசுவது அவர்களது மத நம்பிக்கைக்கு எதிரானது என்றும், அப்படி பேச விரும்புவோர் பிற அரசு நிலங்களிலோ அல்லது தனியார் இடங்களிலோ கூடிப் பேசலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருவாரூர் மாவட்டத்தின் கொரடச்சேரிக்கு அருகில் கண்கொடுத்த வனிதம் என்ற கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்றில் தி.க. தலைவர் வீரமணி தலைமையில் திராவிட விவசாயிகள் மற்றும் பகுத்தறிவு குடும்பங்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் நாத்திக கருத்துகள் பேசப்பட்டதாகவும், இதனால் மனம் புண்பட்டுவிட்ட உள்ளூர் மக்களின் சார்பாக முதல்வருக்கு இந்துமத வெறியர்கள் ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் என்ற பெயரில் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதனை ஏற்று ஜெயலலிதா இந்த உத்திரவை பிறப்பித்துள்ளார். மேலும் இந்த திருமண மண்டபங்களில் நடக்கும் விழாக்களில் மது, மாமிசம் போன்றவற்றை பரிமாறக் கூடாது என்றும் உத்திரவிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஏறத்தாழ 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் வரக்கூடிய கோவில்களின் எண்ணிக்கை மட்டும் 234. பெரும்பாலும் இக்கோவில்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் திருமண மண்டபங்கள் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ளன. இவற்றில் வருமானம் கோடிகளைத் தாண்டும் பெருங்கோவில்கள் பல உள்ளன. கோவிலுக்கு சொந்தமான பல வணிக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டுக்கான இடங்கள் நீண்ட கால குத்தகைக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை நகரின் மையப்பகுதிகளில் உள்ள மயிலாப்பூர் பார்த்தசாரதி மற்றும் கபாலீசுவரர் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை நாகேஸ்வர ராவ்-க்கு சொந்தமான அமிர்தாஞ்சன் கம்பெனி, மயிலாப்பூர் கிளப், பாரதிய வித்யா பவன் மற்றும் பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் பள்ளி போன்ற பார்ப்பன முதலைகள் பலரும் பல பத்தாண்டுகளாக வாடகை சல்லிப்பைசா தராமல் அனுபவித்து வருகிறார்கள். இந்நிலங்களின் இன்றைய சந்தை மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களாகும். சிதம்பரம் தீட்சிதர்களோ தில்லை நடராசனின் விளைநிலங்களை சிவன் சொத்து குல நாசம் என்றெல்லாம் பார்க்காமல் பல ஏக்கர்களை பிளாட்டுகளாக தங்கள் பெயருக்கு மாற்றி விற்பனை செய்துள்ளனர்.

ஜெயேந்திரன்

இப்போதும் கோவில் நிலங்களை இந்துசமய அறநிலையத்துறை ஆய்வு செய்த போது முறையான வாடகைகள் அரசுக்கு வந்து சேரவில்லை என்பது தெரிய வந்ததுடன், கோவில் சொத்துக்களை பார்ப்பன மற்றும் ‘உயர்’சாதி தர்மகர்த்தாக்கள் திருடி விற்றதும் தெரிய வந்துள்ளது. திருடியவர்கள் அனைவருமே ஆத்திகர்கள்தான். தற்போது இந்தக் கொள்ளையில் பிற ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் திடீர் பணக்கார ரவுடிகளும் இணைந்துள்ளனர்.

சொத்துக்களை கைப்பற்றுவதற்காக திருவாடுதுறை ஆதினத்தில் பெரிய ஆதீனம் மீது சின்ன ஆதீனம் நடத்திய கொலை முயற்சி, காஞ்சி சங்கராச்சாரிகளின் பாலியல் முறைகேடுகள், கொலைகள், ஊழல்கள் போன்றன சந்தி சிரித்து நாறுகின்றன. மதுரை ஆதீனமும் நித்தியானந்தாவும் இதில் லேட்டஸ்டு வரவுகள். தங்களது வருமானம் போய்விடும் என்று தெரிந்தவுடன் சிதம்பரம் கோவிலில் உண்டியல் வைப்பதை எதிர்த்து தீட்சித பக்தர்கள் தீவிரமாக போராடியதை தொலைக்காட்சிகளில் தெளிவாக பார்க்க முடிந்தது. அதே தீட்சிதர்கள் பக்தன் தட்டில் போடும் காசுக்கேற்ப தீபாராதனையையும், திருநீற்றையும் சுருக்கியதைப் பார்த்து எந்த பக்தனின் மனமும் சுருங்கவில்லையே. அது ஏன்?

மக்கள் ஓரளவு கல்வியறிவும், விபரமும் பெற்றுள்ள இந்தக் காலத்திலேயே இவ்வளவு தூரம் ஆண்டவன் சொத்தை ஆட்டையைப் போடும் பார்ப்பனீய ‘உயர்’சாதி இந்துக்கள் 100 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள். இப்படி தமிழக கோவில்களை அறங்காவலர்கள் என்ற பெயரில் இவர்கள் சுருட்டிய ஊழல்கள் வந்து நாறவே இதனை கட்டுப்படுத்த முயன்ற ஜஸ்டிஸ் கட்சியின் பனகல் அரசரது ஆட்சியில் 1924-ல் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்டது. இந்துக் கோவில்களை பராமரிப்பது மற்றும் அதன் வருமானம், கணக்கு வழக்குகளை முறையாக நிர்வகிப்பது போன்றவை அதன் பணிகளாகும்.

பெரியார்

இந்து அறநிலையத்துறையின் கீழ் வந்த பிறகு ஆலயங்களை பராமரிப்பது முறையாக நடைபெற்றது. இறைவனின் பெயரால் முறைகேடான தரிசனங்கள் மற்றும் அர்ச்சனைகளுக்காக பார்ப்பனர்களால் அதுவரை வசூலிக்கப்பட்ட தொகை குறைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. ஏழை பக்தனும் பெரிய ஆலயங்களுக்குள் செல்வதும், சமமான முறையில் இறைவனிடம் வழிபடுவதும் சாத்தியமானது.

இன்றோ இந்து அறநிலையத் துறை ஆர்.எஸ்.எஸ்-ன் வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஆலயத்தின் வளாகத்தின் கடைகளுக்கு வரும் ஒவ்வொருவனும் தனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதை நிரூபித்தால் தான் உள்ளே வரலாம் எனில் அது சர்வாதிகார நடைமுறை அல்லவா?  கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடத்தும் பொது நிகழ்ச்சியையும் தடை செய்வது அடிப்படை ஜனநாயக உரிமைக்கும், மதச்சார்பற்ற அரசு என்பதற்கும் எதிரானதல்லவா?  கோவில் சொத்து கொள்ளையை அம்பலப்படுத்த முன்வருபவனை நாத்திகன் என்று முத்திரை குத்தி விட்டாலே கொள்ளையடிப்பது எளிதாகி விடும் இல்லையா?

கோவில் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் பக்தனின் பக்தியை விட நேர்மையாக நடந்து கொள்ளும் நாத்திகன் பேசும் இறை மறுப்பு கொள்கை யோக்கியமானதில்லையா? என்பதை நேர்மையான பக்தர்கள் தான் பரிசீலிக்க வேண்டும். பழனி முருகனின் நவபாஷண பின்புறத்தை ஒட்டச் சுரண்டியதும் அர்ச்சகர்களாக இருந்த பார்ப்பன பக்தர்கள் தானே.  அரசு கண்காணிப்பில் இருக்கையிலே திருடும் இவர்கள் இந்து முன்னணி கோருவது போல ஒரு சுயேச்சையான இந்து நிர்வாகத்தின் கீழ் வரும்பட்சத்தில் எப்படியெல்லாம் திருடுவார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் நீசபாஷை எனச் சொல்லியே தேவாரம் கண்டெடுத்த தில்லை நடராசனின் திருச்சிற்றம்பலத்தில் தேவாரத்தை பாட விடாமல் தடுத்த பார்ப்பனக் கும்பலை விரட்டி தேவாரம் பாட வழிவகுத்தவர்கள் நாத்திகர்கள்தான். அதே கோவிலின் உட்பிரகாரங்களில இரவு நேரங்களில் சீட்டாட்டம், சாராயம், பெண்கள் என அரங்கேற்றியவர்கள் சிவனுக்கு அர்ச்சனை செய்த தீட்சித பக்தர்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

காஞ்சி சங்கராச்சாரி முதல் தேவநாதன் வரை அனைவருமே கருவறையை பள்ளியறையாக, பார் ஆக மாற்ற எள்ளளவும் பயப்படாதவர்கள். இதைவிட கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடக்கும் மாமிச விருந்து எந்த வகையில் மோசமானது. கண்ணப்ப நாயனார் தந்த பன்றி மாமிசத்தை புசித்தவர்தானே சிவபெருமான் என்பதையும் பக்தர்கள் சிறிது யோசிக்க வேண்டும்.

முந்தைய ஜெயா ஆட்சியில் கிடா வெட்டு தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டு, கடுமையான எதிர்ப்புகள் வரவே அச்சட்டம் திரும்ப பெறப்பட்டது. இப்போது அதையே மெதுவாகவும், நாசூக்காகவும் மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார் ஜெயா. சாதி எதிர்ப்பாளர்களின், பகுத்தறிவாளர்களின், முற்போக்காளர்களின், பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் கூட்டம் கூடும் உரிமையை இந்த உத்திரவு பறிக்கிறது. தங்களுக்கு பிடிக்காதவர்களை அதிகாரிகளும், இந்துமத வெறியர்களும் இணைந்து நாத்திக முத்திரை குத்துவதும் இந்த உத்திரவு மூலம் எளிதானதாக மாறுகிறது. அந்த வகையில் கோவிலில் நடக்கும் கொள்ளைகளைப் பற்றி முன்னர் அஞ்சலட்டை மூலமாக பெட்டிஷன் போட்ட சங்கர் ராமன் போன்றவர்களை இனிமேல் சங்கராச்சாரி ஆள் வைத்து கொன்றெல்லாம் சிறைக்கு போக வேண்டிய அவசியமில்லை. சங்கர ராமனை நாத்திகன் என நிரூபித்தாலே சங்கராச்சாரிக்கு போதுமானது.

சங்கராச்சாரி, தேவநாதன்
கருவறை பள்ளியறையாக – சங்கராச்சாரி, தேவநாதன்

இந்து அறநிலையத் துறையானது மறுமணத்தை கோவில்களில் நடத்த அனுமதிப்பதில்லை. கோவில்களில் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வழிபடுவதற்கு ஏகப்பட்ட சிறப்பு முன் அனுமதியைப் பெற வேண்டியிருக்கிறது. கலைச் சிற்பங்களை ஆராய வரும் ஆய்வு மாணவர்களோ அல்லது கலை ரசிகர்களோ இனி தங்களை இந்துக்கள் என நிரூபித்தாக வேண்டி வரும். பல இந்துக் கோவில்கள் பௌத்த, சமண வழிபாட்டுத்தலங்களை கைப்பற்றி மாற்றப்பட்டதுதான் என்பது போன்ற ஆய்வுகளை இந்துமத வெறியர்கள் போலவே பாசிச ஜெயா அரசும் விரும்பவில்லை. இனி அந்த ஆய்வுகளுக்கெல்லாம் இடமில்லை.

ஏற்கெனவே இந்துசமய அறநிலையத் துறையில் வேலைக்கு ஆள் எடுக்கும் போது அவர்கள் நாத்திகர்களாக இருக்க கூடாது என்றும், பிற மதங்களை சேர்ந்தவர்களாக இருக்க கூடாது என்றும் விதி இருக்கிறது. ஆனால் தற்போது ஆலயங்களுக்கு சொந்தமான வேறு இடங்களில் இருக்கும் கடையை வாடகைக்கு எடுப்பவரின் பக்தியின்மை எப்படி அங்கு சரக்கு வாங்க வரும் பக்தனின் மன உணர்வை புண்படுத்தும் என்பதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் விளக்கவில்லை. வாங்கும் சரக்கு தரமாகவும், விலை மலிவாகவும் இருக்கிறதா என்றுதான் யாரும் பார்க்க முடியுமே தவிர, கடைக்காரன் நாத்திகனா, கிறிஸ்தவனா என்றெல்லாம் பார்த்து யாரும் சரக்கு வாங்குவதில்லை.

அதே போல கிறிஸ்தவ, முசுலீம் வியாபாரிகள் யாரும் தாங்கள் இந்து மதத்தை சாராதவர்கள் என்பதற்காக கோவிலுக்கு தர வேண்டிய வாடகை பாக்கியை தருவதற்கு மறுப்பதில்லை. அதே போல கோவில் நிலங்களில் பயிர்செய்யும் விவசாயி கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அது எந்த வகையில் பக்தனின் மன உணர்வை பாதிக்கும் எனத் தெரியவில்லை. அப்படி விளைந்து வருவதை பக்தர்கள் யாரும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறிக்கொண்டு இருக்க முடியாது.

ஆறுமுகச் சாமி
தில்லையில் தமிழில் பாட போராட்டம் – ஆறுமுகச் சாமி

எனவே கோவில் சொத்துக்களை ஏப்பம் விட்ட பார்ப்பன வியாபாரிகளை, நில அபகரிப்பு முதலைகளை காப்பாற்றவும், இனி தங்களில் ஒருவரே இதனை ஏப்பம் விடவும் பார்ப்பன பாசிச ஜெயாவும், இந்துமத வெறியர்களும் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது மட்டும் தெளிவாக தெரிகிறது. கோவில் கொள்ளைக்கு மட்டுமின்றி பாஜக அடுத்த தேர்தலின் மூலம் நாட்டை கொள்ளை போடவும், தனது பாசிச கூட்டாளி மோடியை முன்னிறுத்தவும், தான் பேரம் பேசவும் ஜெயாவுக்கு இந்தக் கூட்டணி உதவும்

இந்து மத வளர்ச்சிக்கு உதவுவது என்ற அரசின் நோக்கம் மதச்சார்பற்ற அரசு என்ற அதன் சொல்லிக் கொள்ளும் வடிவத்துக்கு எதிரானது. இப் பிரச்சினை பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள கி.வீரமணி, சார்வாகம் போன்றவற்றை பின்பற்றிய பழைய நாத்திகர்கள் ராமனுக்கு மந்திரியாக இருந்தார்கள் என்றும், நாத்திகம் என்பது இந்து மதம் ஏற்றுக் கொண்ட ஒன்றே என்றும் கூறியுள்ளார். அதாவது இந்து மதத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவரும், இல்லாதவரும் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், சுயமரியாதை திருமணச் சட்டமே இந்து சமய திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தம்தான் என்பதையும் கூறி,  ஆகவே கோவில் திருமண மண்டபங்களில் தங்களையும், சுயமரியாதை திருமணங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வீரமணி சொல்வது போல நாத்திகமும் இந்து மதத்தின் அங்கம் எனக் கூறி உரிமை கோருவது மதம் மற்றும் அரசை தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கைக்கு எதிராக இருக்கிறது. அல்லது நாத்திகம் பேசுபவர்களெல்லாம் இந்துக்கள் என்று அவர்களது அணியில் சேருவதற்கு வழி செய்கிறது. கடவுள் மறுப்பு என்பது உலகெங்கும் உள்ள ஒரு ஜனநாயகக் உரிமை. அதை வைத்து எந்த ஒரு சிவில் உரிமையையும் மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.

கருவறைக்குள் சூத்திரன் வந்தால் தீட்டு என்று கூறும் பார்ப்பனீய இந்துமதம் ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று வேலையில்லாமல் இருக்கும் 206 சூத்திர மாணவர்களை சாதித் தீண்டாமையின் பெயரால் கோவிலுக்கு வெளியே நிறுத்தியிருக்கிறது. மரபு என்ற பெயரில் உச்சநீதி மன்றம் வரை அதை நியாயப்படுத்துகிறது. பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு போராடிய காரணத்தால் இனி அந்த அர்ச்சக மாணவர்களும் நாத்திகர்களாகத்தான் அறிவிக்கப்படுவார்களோ?

ஏதாவது கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு இனி இந்து போலிசார்தான் வரவேண்டும் என்று விதியை மாற்ற முடியுமா? இல்லை அம்மாவட்டத்திற்கு ஒரு எஸ் பி முசுலீமாக இருந்துவிட்டால் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா? கடவுளுக்கு வெட்டியாக செய்யப்படும் அபிஷேகத்திற்கு வரும் பாலை கறந்தவர்களில் நாத்திகர்கள் யார், ஆத்திகர்கள் யார் என்று பிரித்தறிய முடியுமா? கோவில் கட்டிடங்களை பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கும் இந்த அளவு கோல் பொருந்துமா?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் உரிமை துவங்கி பெண்களின் சம உரிமை வரை நாத்திகர்கள் பலர் போராடியிருக்கிறார்கள். பெரியாரது இயக்கம், கம்யூனிச இயக்கமின்றி இன்றைய தமிழகத்தில் பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு எந்த உரிமையும் கிடைத்திருக்காது. அந்த வகையிலும் பெரும்பான்மை ‘இந்து’க்களுக்காக போராடி உரிமை வாங்கிக் கொடுத்தவர்கள் நாத்திகர்கள்தான்.

எனவே அறநிலையத்துறை அறிவித்திருக்கும் இந்த இந்துமதவெறி உத்திரவை ரத்து செய்வதற்கு நாம் போராட வேண்டும்.

– வசந்தன்.

மேலும் படிக்க

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. அதெல்லாம் சரிதான் சாரே… கம்யூனிச கட்சி வளாகத்தில் நின்று கொண்டு முதலாளித்துவம் நிலபிரபுத்வம் சரிதான் என்று பேசுவதும் ஆன்மிக நிகழ்ச்சி நடத்தவும் தோழர்கள் விடுவார்களா.. அனுமதி கிடையாது தானே… அது மாதிரி கொஞ்சம் பரிசீலனை பண்ணுங்கோ…. உங்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்த அமெண்ட் பண்ணுங்களேன்….

  • The comparision is wrong here. We are not talking about privately owned temples and their properties. We are talking about temples that are maintainded by government using our tax money. Don’t come fighting that these temples are giving money to government. Even now guruvayur temple refuses to give account of gold to government. So, in theory, ask governemtn to privatize temples. Then you can have Reliance Tirupathi, Tata Kasi etc. Enjoy! No fear of atheists there.

 2. என்ன வினவு கண்ணாடி மாளிகையில் இருந்து கல்லு எறியிறது போல இருக்கு.
  வினவு கட்சி ஆபீஸ் இல் முதலாளித்துவ ஆதரவு கூட்டம் நடத்தனும் எடம் தருவீங்களா ???

  அல்லாது ஓங்க பாட்டாளி கட்சிகள் ஆளும் நாட்டில் முதலாளித்துவம் பேச விடுவீங்களா ?

  மாவோ விட்டிருப்பாரா ??? போட்டு தள்ளியிருக்க மாட்டாரா

 3. //தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவில்களுக்கும் சில நாட்களுக்கு முன் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இனி ஆலயங்களுக்கு சொந்தமான கடைகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது. மேலும் இந்து சமய வளர்ச்சிக்கு சம்பந்தப்படாத கொள்கையுடையவர்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சிகளையும் கோவில் வளாகங்களில் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், பக்தர்களுக்கு உதவும் வகையில் அமைந்த நிகழ்ச்சிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.//

  உருப்படியான் ஆணை…100% வரவேற்க்கிறேன்…

 4. ஏன்னா…ஜெயேந்திரன் படம் போட்டேள்….
  நன்னாருக்கு…..
  _______படமும் போட்டிருக்கலாமே…
  அம்பிகளுக்கு கோபம் வருமே!

 5. நல்ல கட்டுரை. மையக் கருத்தை ஏற்கிறேன், சில வேறுபாடுகளோடு (கீழே).

  முக்கிய சந்நிதிக்குள் இந்துக்கள் மட்டுமே நுழையலாம் என்று சில கோவில்களில் விதி வைத்திருக்கிறார்கள். இதுவும் சரியல்ல. முதலில், யார் ‘இந்து’ என்பதை வரையறுப்பது கடினம். “குன்றம் போல் மணிமாட நீடு திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே” என்றும், “லிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும், வலிந்து வாது செய்வீர்களும், நுந்தம் தெய்வமும் ஆகி நின்றான்” என்றும், “கெருட வாகனன் நிற்க, சேட்டை தன் மடியகத்து செல்வம் பார்த்திருக்கின்றீரே” (சேட்டை : ஜேஷ்டா, மூதேவி) என்றும் வைணவ கோவிலில் ஒதுபவரை ஈசன் கோவிலில் நுழைய தடை விதிக்க முடியும்! “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” என்று பாடுபவரை எந்தக் கோவிலிலும் நுழைய கூடாது என்று சொல்ல முடியும்! என் புரிதலின் படி காலப்போக்கில் எல்லாவற்றையும் உள்ளிழித்துக் கொண்டு கலவையாக இன்று நிற்கும் இந்து மதத்தில் பேதம் பிரிப்பது கடினம். கல்யாண சாப்பாடு போல தான். சாம்பார் சாதம் பிடித்தால் அதை உண்ணுங்கள். இல்லையேல், என்னைப் போல அகில உலகத்தின் அதி சிறந்த உணவான புளியோதரையை ஒரு வெட்டு வெட்டுங்கள். எதுவும் பிடிக்காதவர்கள் உண்ணாமல் இருக்கலாம். இதெல்லாம் ஒரு சாப்பாடா என சொல்லவும் முடியும். இவர்களுக்கும் கூட கல்யாணப் பந்தியில் இடம் உண்டு!

  அந்த வகையில் கோவிலில் நுழைவது, கடை, மண்டபங்களை வாடகைக்கு எடுப்பது போன்றவற்றில் எல்லாருக்கும் உரிமை இருக்க வேண்டும். ஆனால், கோவிலின் தற்கால நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மது, மாமிசம் பற்றி கட்டுரை பேசியது. கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பன் மாமிச உணவு படைத்தான் என்றால், அவன் தன்னிரு கண்ணையும் நொண்டி இறைவனுக்கு சமர்பித்தான் என்பதையும் சொல்ல வேண்டும்! பல இந்து “சிறு தெய்வ” கோவில்களில் மது, மாமிசத்தை இறைவனுக்கு படைத்தது உண்ணும் வழக்கம் உள்ளது மற்ற கோவில்களில் இல்லை. எனவே இந்த விஷயத்தை இந்து மதம் என மொத்தமாக பார்க்க முடியாது. குறிப்பிட்ட கோவில் நடைமுறைகள் என்ற வகையில் தான் பார்க்க வேண்டும். இந்த நடைமுறைகளும் காலம் தோறும் மாறுபவையே. எனவே, தற்கால நடைமுறைகளுக்கு மதிப்பு கொடுப்பதே சரி. ஒரு கோவிலில் அசைவ படையல் மரபு கிடையாது என்றால் அங்கே அப்படித்தான் செய்வேன் என அடம் பிடிக்க கூடாது. அதுபோலவே , மது-மாமிச நடைமுறையற்ற கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் விழாக்களில் கோவில் நிர்வாகம் இவற்றுக்கு தடை விதித்தால் அதை மதித்து நடப்பதே சரி.

  சங்கர் ஆச்சாரி, தேவநாதன் போன்றோர் கோவிலுக்குள் குற்றம் செய்தார்கள் என்றால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களை காரணம் காட்டி கோவில் நடைமுறைகளை மாற்ற முடியாது. மாற்றங்கள் இயல்பாக நடைபெற வேண்டும்.

  // நாத்திகம் என்பது இந்து மதம் ஏற்றுக் கொண்ட ஒன்றே என்றும் கூறியுள்ளார்

  வீரமணி என்ன சேம் சைடு கோல் போடுகிறார்! ஆனால், இந்த கருத்தை நான் ஏற்கிறேன். ‘இந்து’ மதம் என்பது தெளிவான வரைமுறை அற்றது அந்த வகையில், நாத்திகத்தையும் இதனுள் சேர்த்து விட முடியும்! அந்த விதத்தில் நாத்திக கூட்டங்களை கோவிலுக்கு வெளியே உள்ள மண்டபங்களில் அனுமதிக்கலாம் என்பது என் எண்ணம். ஆனால், கோவிலுக்குள் அனுமதிப்பது சரியாக இருக்காது. அது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக அமையும்.

  // இந்து அறநிலையத்துறையின் கீழ் வந்த பிறகு ஆலயங்களை பராமரிப்பது முறையாக நடைபெற்றது. //

  அப்படியா? இப்போதெல்லாம் அரசு கோவில்களின் அறங்காவலர்களாக பல ஜாதியினரும் உள்ளனர். கோவில் நிலங்களும், பிற சொத்துக்களும் திரும்ப கிடைத்துவிட்டனவா? அரசு கோவில்களின் மொத்த சொத்து ஐந்து லட்சம் ஏக்கர் இவற்றில் இருந்து, ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறது? அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய ஸ்பெக்ட்ரம், கிரானைட், கனிமங்கள், மணல் ஆகியவற்றை அரசு ஒழுங்காக நிர்வகிக்கிறதா?

  // இப்போதும் கோவில் நிலங்களை இந்துசமய அறநிலையத்துறை ஆய்வு செய்த போது முறையான வாடகைகள் அரசுக்கு வந்து சேரவில்லை என்பது தெரிய வந்ததுடன், கோவில் சொத்துக்களை பார்ப்பன மற்றும் ‘உயர்’சாதி தர்மகர்த்தாக்கள் திருடி விற்றதும் தெரிய வந்துள்ளது. திருடியவர்கள் அனைவருமே ஆத்திகர்கள்தான். தற்போது இந்தக் கொள்ளையில் பிற ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் திடீர் பணக்கார ரவுடிகளும் இணைந்துள்ளனர். //

  இதற்கு சுட்டி தர வேண்டுகிறேன்.

  // பெரியாரது இயக்கம், கம்யூனிச இயக்கமின்றி இன்றைய தமிழகத்தில் பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு எந்த உரிமையும் கிடைத்திருக்காது. //

  அப்படியா? தலித்துகளின் கோவில் நுழைவு போராட்டத்தை விட்டு விடுங்கள். பார்ப்பனரலாத, தலித்தல்லாத மற்ற இந்துக்களுக்கு பெரியார், கம்யூனிச இயக்கம் பெற்று தந்த உரிமைகள் என்ன? இது பற்றிய கட்டுரை எதற்காவது சுட்டி தர வேண்டுகிறேன்.

 6. We Indians would love to go back to the stone age !
  Caste,Religion,temple and gods, will take the center stage !!

  what is right , what is wrong , and what is futuristic , no one to gauge !
  Everything is knee jerk and implemented with rage !!

  We are going back to the stone age for some peoples political mileage.
  Plenty of Tasmac , Plenty of temples, plenty of anti people rules ,cheers to new age !

  Forward shift gear has been dismantled which gives a clear message !
  Thinking backwards will lead us to ice age !!

  United we die in the dark age .

  Regards
  GV

 7. why vinavu always targeting hindu temples and hindu religion. why there s no such thing like HR&C board by govt for churches and mosques , will the properties of other religion ll allow athesit meetings in their grounds or lend properties for persons not belonging to their religion.?? can govt enter inside their administration? just somebody s tolerating evry body take t for granted they ll tolerate anything against them.

 8. அடுத்த சட்டம் , கோவில்கள் இருக்கும் ஊர்களில் நாத்திகர்கள் வாழ தடை. !

 9. பாப்பான்ட்ட இருந்து கோயிலையும் கோயில் சொத்துக்களையும் புடுங்கிட்டு அவன வந்த வழியாவே கைபர் போலந்த் கனவாய் வழியாவே வெரட்டிட்டா போதும் இந்தியாவுல பாதிப் பிரச்சினை தீர்ந்திடும்

  • அய்யா காட்டுத்தரி – எல்லா கோயில் சொத்துக்களும் பார்ப்ப்னர்களில்ம் இல்லை- கோயில்களுக்கு சென்று பார் ? யார் யார் அனுபவிக்கிரார்கள் என்று ? கைபர் போலந்த் (போலன்) கனவாய் வழியாய் பார்ப்பனர்கள் வந்தார்கள் என்றால் நீ என்ன வாய் வழியாய் வந்தாய் ? ஆசன்வாய் வழியாகவா?

   • பாப்பானத்தவிர பாக்கி அத்தன சாதிக்காரப் பயலுவலும் ஆசனவாய் வழியாக வந்ததாகத்தான் பாப்பான் சொல்றான்.நீங்க எந்த சாதிங்கரத தெரிந்துகொள்ள விரும்பாததால நீங்க எந்த வாய் வழியா வந்தீங்கன்றதும் இங்க யாருக்கும் தேவையில்லாத விசயம்.கைபர் போலந்த் கனவாய் வழியா பொழைக்க வந்த ஒரு கூட்டம் இந்த மண்ணிலயே பொறந்து வளந்து வாழ்ந்துட்டு இருக்குற என்னைப் போன்றவர்களை அடிமை என்று சொல்வதை சுயமரியாதையும் தன்மானமும் உள்ள என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.உங்களால் முடிந்தால் அது நீங்கள் சுயமாய் பரிசீலிக்க வேண்டிய விசயம்.தவிரவும் எந்த கோவிலில் சொத்துக்கள் உழைக்கும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கறது என்பதை சொன்னால் நேரில் சென்று பார்த்து விட்டு என் தவறுகளை திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.அப்புறம் ஒரு முக்கியமான செய்தி. உங்கள் தாயும் என் தாயும் சொல்லிக்கொடுத்து நாம் பேசி எழுதி வாசித்துக்கொண்டிருக்கிற தமிழ் மொழியை நமது தாய் மொழியை , பாப்பான் நீச பாசைங்கறான். அதாவது வேசி மொழியாம்.வேற ஏதோ ஒரு வாய் ல பொறந்தவரே யோசிங்க நீ பேசுவது எழுதுவது இப்போது வாசிப்பது உன் தாய் மொழியா? இல்லை வேசி மொழியா?

    • இப்படி கதை சொல்லி தான், தமிழனை கேனையன் ஆக்கிவிட்டிர். கட்டுதரி ! ஆதாரம் இருந்தால் (ஆசனம்) சொல்லும் ! ராமசாமிநாயுடு ! உல்டா புத்தகம் வேனாம் !

     • ராமசாமிநாயுடு_தந்தை பெரியார்? அவருடைய அறிவுரைகள் உல்டா புத்தகமா? இருக்கட்டும்!எனில் ரிக்,யஜூர்,சாம அதர்வன புத்தகங்கள்? அதுதான் உண்மையென நீவிர் நம்பிக்கொண்டிருப்பீரேயானால் ஒரு முறை அரசு நூலகத்திற்கு சென்று எடுத்து படித்துப் பார்க்கவும்.பெரியாரை விட அதிகமாக கோபப்படுவீர்கள்.தவிரவும் பெரியார் யாரையும் கேனையன் ஆக்கவில்லை.உங்களையும் என்னையும் இத்தனை கேள்விகள் கேட்கும் அளவுக்கு சிந்திக்க வைத்திருக்கிறார்,பகுத்தறிவு எனும் ஆறாம் அறிவுகொண்டு. சிந்து கங்கை சமவெளியில் புதையுண்டு கிடக்கும் கரப்பா மொகஞ்சதோரா நாகரீகத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று இந்திய தொல்லியல் துரையும் சொல்கிறது,உலகமே ஒப்புக்கொள்கிறது,கல் தோன்றி மன் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த்க்குடி தமிழ்க் குடி என்று.உலகத்திற்கே நாகரீகத்தை அறிவியலைக் கற்றுக்கொடுத்தது தமிழும் தமிழர்களும் என்று உலகமே ஒப்புக்கொண்ட பிறகும் கூட இங்குள்ள இது போன்ற சிலர் ஒப்புக்கொள்ள மறுப்பதை பெரும்பான்மை உழைக்கும் தமிழர்கள் லட்சியப்படித்துவதில்லை…

      • English translations of all vedic books are misleading.

       I woulds trongly discourage anyone from reading half baked analysis of religion and ramasaamy and his adi podi groups.

      • அதனால் தான் ! காட்டுமிரான்டி மொழி ! என ஈவேரா சொன்னாரோ ? சஙக தமிழை தேடி தந்த ! தமிழ் தாத்தா ! யாரப்பா ! பாரதியார் – தமிழால் தேசிய கவி ஆனாரே !
       ராமானுஜம்—-ராம்ன் – பார்பனர்தானே !நோபல் பரிசு ! இவருக்கு பின் யாருக்கு கிடைத்தது ? நோபல் பரிசு தந்தவன் பார்பனன் இல்லை ! இவரெல்லாம் தமிழை காட்டுமிரான்டி மொழி, என சொல்ல்வில்லை .

    • அய்யா காட்டுத்தரி
     1.எந்த பாப்பான் தமிழை நீச பாசைங்கறான் – ஆதாராம் கொடுக்கவும் – பொங்கி எழுவோம்- யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல இனிதாவது எஙுகும் காணோம் என்று முழஙகியவன் யார் ?
     2.தமிழ / தமிழன் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது யார் என தெரியுமா? கண்ணகியின் கற்பை கேவலபடுத்தியது யார் என தெரியுமா ?
     3. இந்த மண்ணிலயே பொறந்து வளந்து வாழ்ந்துட்டு இருக்குறவரே – உஙகள் மண் எது ? அதன் எல்லை என்ன ?

 10. மிக்க நன்றி வசந்தன் அவர்களே. கட்டுரை மிக அருமை.நன்றாய் தெளிவாய் சிந்தித்து அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். சாதீயம் இருக்கும் வரை இப் பிரச்சினை தொடரும். மக்கள் அனைவரும் சாதீயம் பின் பற்றும் போது அது பதவியில் இருப்பவருக்கு சாதகமாகி விடுகிறது. மேலும் அவர்களும் மேல் தட்டு மக்களை பகைக்க பயப்படுகின்ற்னர். புரட்சிதலைவி சிங்கநிகர் தலைவி எல்லாம் வெறும் பாசாங்கு என்பதை மக்களும் புரிந்து கொள்ளட்டும்.

 11. சிவன்…

  மாட்டுக்கறிக்கே லாட்டரி அடிக்கிற தேசத்தில்,தனக்கு பிள்ளைக் கறி வேண்டும்- அதுவும் தலைகறி வேண்டும் என்று கேட்ட ஆசாமி ஆயிற்றே…

  சிவனடியார்கள்,,தலச்சங்க்காட்டாங்குடிக்கு சென்றால் ..சிவ”பக்தர்கள்,சிவன் மிச்சம் மீதி வைத்துவிட்டு சென்றிருந்தால். ஒரு வெட்டு வெட்டிவிட்டு வரலாம்

  • நாயுடுகாரு,
   அது தலைச்சங்காடு இல்ல. திருசெங்காட்டங்குடி. “செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டர்க்கடியேன்” என்பது சுந்தரர் தேவாரம்.

 12. Periyar once spoke inside a temple in Sirkali.Some people who came to attack Periyar with bricks,garlanded him after hearing him.This information has been given in an essay written by Kutthoosi Gurusamy in Kudiarasu.

 13. கொல்லன் பட்டரையில் யிக்கென்ன வெலை ? கடவுலைநம்பாதவன் வெரஙாவது கடை விரித்துக்கொலட்டுமெய்

  • சரி கொமாரு,இந்த அளவுகோலை அப்படியே உங்கள மாதிரி ஆட்களுக்கு பொருத்தி பாக்கலாமா.

   கடவுளை நம்புபவர்கள் நாத்திகர்களிடம் எந்த கொடுக்கல் வாங்கலும் வச்சுக்க கூடாது.
   கடவுளை நம்பாதவர்கள் ஆட்சிக்கு வந்தா அரசு வேலையில் இருக்கும் கடவுளை நம்புபவர்கள் வேலையை உட்டுரனும்.
   மேலதிகாரி நாத்திகர்ன்னா அவருக்கு கீழ நீங்க வேல செய்ய கூடாது.
   உங்கள மாதிரி ஆட்கள கடை வச்சு வியாபாரம் பண்ணுனா உங்க கடவுளை நம்பாத மற்ற மதத்தவர்கள் வந்தா பொருள் விக்க மாட்டோம்னு சொல்லணும்.
   வாத்தியார் நாத்திகர்ன்னா அவருகிட்ட படிக்க மாட்டோம்னு சொல்ல தயாரா இருக்கணும்.
   மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் சர்ச்சுக்கு சொந்தமான கடைகளில் வாடகைக்கு இருக்கும் இந்துக்கள் கடையை காலி பண்ணிறனும்.
   ஸ்ரீபெரும்புதூர் பஸ் ஸ்டாண்டு எதிரில் உள்ள மசூதிக்கு சொந்தமான கடைகளில் வாடகைக்கு இருக்கும் இந்துக்கள் கடையை காலி பண்ணிறனும்.

   இதுக்கு நீங்க ஒ கே சொன்னா நாங்களும் கோயில் கடை மண்டபத்தை காலி பன்னிர்றோம்.

   • எல்லா மதத்தவரும் பிற மத நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை முரண்பாடில்லாமல் பயன்படுத்துவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்பது சரிதான்..

    ஆனால் இந்து கோவில்களையும்,இந்து மத ஆத்திகத்தையும் மறுத்து கண்டிக்கும் நாத்திகர்கள் கோவில் சொத்துகளை வாடகை கொடுத்து பயன்படுத்தி நாத்திகம் பேசி கோவில் வருமானத்துக்கும் பங்களிப்போம் என்று அடம் பிடித்தால், கோவில் உண்டியலில் நேரடியாக பணம் போடுவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு ஏதேனுமிருக்கிறதா..?! காசு கொடுத்துவிட்டு திட்டினோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதுதான் நாத்திகமா..?!

    • \\எல்லா மதத்தவரும் பிற மத நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை முரண்பாடில்லாமல் பயன்படுத்துவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்பது சரிதான்//

     ஒரு மதத்தின் கடவுளை நிராகரிக்கும் மற்ற மதத்தவர்கள் பிற மத நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை முரண்பாடில்லாமல் பயன்படுத்துவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்பது சரி என்றால் அனைத்து மத கடவுள்களையும் நிராகரிக்கும் நாத்திகர்களுக்கு மட்டும் தடை போடுவது எப்படி சரியாகும்.

     சர்ச் சொத்தில் இயேசுவை கடவுளின் மகன் அதுனால அவரும் கடவுள்என ஏற்காத இந்துக்களும் முஸ்லிம்களும் கடை வைக்கலாம் என்றால் இயேசுவை மட்டுமல்ல எதையும் கடவுள்என ஏற்காத நாத்திகர்களை மட்டும் தடுப்பது எப்படி சரியாகும்.

     கோயிலுக்கு வருமானம் வரணும்னு நாங்க அங்க கடை நடத்தல.பொழைக்கிரதுக்காக கடை வச்சிருக்கோம்.உங்க டுபாக்கூர் கடவுளை எத்துக்கலன்னு அதுல மண்ணள்ளி போடுறியே அய்யிரே . எல்லா மதங்களும் அன்பையே போதிக்குது உலக மக்கள் அனைவரையும் படைத்து காப்பது கடவுள் என்று சொல்லிக்கிட்டே எங்கள் உணவுக்கு தடை போடுவது அயோக்கியத்தனம்.

     இதைத்தான் அய்யா பெரியார் அழகாக சொன்னார்.

     கடவுளை கற்பித்தவன் முட்டாள்.

     கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்.

     கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி.

     பெரியார் வாக்கை மெய்யாக்குரீங்க அய்யிரே.

 14. // ஒரு மதத்தின் கடவுளை நிராகரிக்கும் மற்ற மதத்தவர்கள் பிற மத நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை முரண்பாடில்லாமல் பயன்படுத்துவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்பது சரி என்றால் அனைத்து மத கடவுள்களையும் நிராகரிக்கும் நாத்திகர்களுக்கு மட்டும் தடை போடுவது எப்படி சரியாகும். //

  பதிவில்,

  // சிவன் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்றில் தி.க. தலைவர் வீரமணி தலைமையில் திராவிட விவசாயிகள் மற்றும் பகுத்தறிவு குடும்பங்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் நாத்திக கருத்துகள் பேசப்பட்டதாகவும்,//

  மேற்படி நிகழ்ச்சியில் நாத்திக கருத்துகள் எந்த மதத்தைப் பற்றி எப்படி பேசப்பட்டிருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.. கோவிலுக்கு சொந்தமான கடையில் வாடகை கொடுக்கும் மாற்று மதத்தவர்கள் ஈடுபட்டிருப்பது வியாபாரம்.. இவர்கள் முடிந்தவரை தங்கள் மத நம்பிக்கைக்கோ, இந்து மத நம்பிக்கைக்கோ முரண்பாடில்லாமல் தொழில் செய்வது போலத்தானா மேற்படி நாத்திகர்களின் கொள்கையும், பிரச்சாரமும் நடக்கிறது..?! அதுவும் வாடகை கொடுத்து..?! பிற மதத்தவரின் தொழிலும், நாத்திகர்களின் கொள்கையும்,பிரச்சாரமும் ஒன்றுதானா..?!

  // இதைத்தான் அய்யா பெரியார் அழகாக சொன்னார்.

  கடவுளை கற்பித்தவன் முட்டாள்.

  கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்.

  கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி.

  பெரியார் வாக்கை மெய்யாக்குரீங்க அய்யிரே.//

  இதையெல்லாம் செய்யும் கோவில்களுக்கு வாடகைக் கப்பம் கட்டுவதும், இதையெல்லாம் செய்பவர்கள் பரிசுத்த ஆவியை பெரியார் திடலில் இறக்கியருள அவர்களிடம் வாடகை வாங்குவதும் உங்கள் அய்யாவுக்குத் தெரியுமா..?!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க