privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 17/09/2013

ஒரு வரிச் செய்திகள் – 17/09/2013

-

செய்தி: நடிகர் சிவாஜி கணேசன் 1960-ல் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வழங்கிய வெள்ளையம்மாள் என்ற பெயருடைய யானை தனது 63வது வயதில் எலும்புத் தேய்மான நோயால் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தது. ஏற்கெனவே பெரிய கோவிலுக்கு ஜெயல்லிதாவால் வழங்கப்பட்ட குந்தவை என்ற யானை 2003-ல் மரணமடைந்தது.

நீதி: வெள்ளையம்மாள் மறைவு பிரச்சினையில்லை. ஆனால் கோவில் யானைகளை லாரியில் சித்ரவதையுடன் கொண்டு சென்று முதுமலையில் கஜமுக யாகம் நடத்துவதற்கான காரணம் குந்தவையின் மரணம்தானோ?

______

செய்தி: தெய்வ பக்தியும் தேச பக்தியும் கொண்டவரும், நாட்டு மக்களை மதிப்பவருமான ரஜினி காந்த் பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவளிக்க வேண்டும். – தமிழக பாஜக தலைவர் பொன் இராதா கிருஷ்ணன்.

நீதி: மோடி பீடி எதை ஆதரிக்க வேண்டுமென்றாலும் ‘அம்மா’ அனுமதி வேண்டும் என்பது ரஜினிக்கும் தெரியும். தெரியவில்லை என்றால் விஜய் விளக்குவார்.

______

செய்தி: கடந்த சனிக்கிழமை சென்னை புளியந்தோப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 19 கிலோ வெள்ளியிலான பிள்ளையார் சிலை கடலில் 20 கி.மீ தூரத்தில் மூழ்கடிப்பு.

நீதி: சேட்டுக்கு துட்டு கொழுப்பு. கரைக்கிறவனுக்கு மதக் கொழுப்பு. பக்தனுக்கு முட்டாளின் கொழுப்பு!

______

செய்தி: குடும்பத்தில் யாரையாவது அதன் காப்பாளர் திட்டினால் கருத்து வேறுபாடு இருப்பதாக அர்த்தமில்லை. எனவே கோபப்பட அத்வானிக்கு உரிமை உண்டு – பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்

நீதி: அத்வானி என்னதான் கோபப்பட்டாலும் நாங்கள் பெருசை மதிப்பதே இல்லை என்பதை கூட்டுக் குடும்பத்தின் சென்டிமெண்டாக சொல்கிறார் ராஜ்நாத் சிங்.

______

செய்தி: நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட சென்னை மீனம்பாக்கத்தின் உள்நாட்டு முனையம் கடந்த இரு மாதங்களில் 6 வது முறையாக இடிந்து விழுந்தது.

நீதி: மாதத்திற்கு மூன்று முறை தவணை வைத்து விழும் கூரைக்கு தெரியும் இது தனியார் மயத்தின் கேடு என்று!

______

செய்தி: சென்னை மாநகராட்சி நீர்வழிப் பாதையில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க 4.20 லட்சம் கொசு வலைகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

நீதி: விலைவாசி உயர்வு, கட்டண உயர்வு முதலான கொசுக்களின் கடியிலிருந்து காப்பாற்றும் கொசுவலை எங்கே கிடைக்கும்?

______

செய்தி: நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்றாலும் திமுக வெற்றி பெரும். கூட்டணியை தலைவர் பார்த்துக் கொள்வார். தேர்தல் வேலையை நீங்கள் பாருங்கள் – ஸ்டாலின்

நீதி: வெற்றி பெற்று அமைச்சராகி 2ஜி போன்ற ஊழல்களில் சம்பாதிப்பதை கலைஞர் டிவி முதலாளிகள் பார்த்துக் கொள்வார்களா?

______

செய்தி: எகிப்திலிருந்து வெங்காயம் மும்பையில் இறக்குமதியாகிறது.

நீதி: இது பாய்நாட்டு வெங்காயம் என்பதால் ஆர்.எஸ்.எஸ் சாம்பார், ஆம்லேட்டுகளில் இனி வெங்காயம் லேது!

______

செய்தி: சிறையில் இல்லாமல் வீட்டில் இருப்பதுதான் எனக்கு இப்போதுள்ள ஒரே ஆறுதல் – பிசிசிஐ ஆல் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்ரீசாந்த்

நீதி: குருவாயூரப்பன் அருளால் ஸ்பாட் ஃபிக்சிங்கில் கிடைத்த பணம் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை என்பது கூடுதல் ஆறுதல்.

______

செய்தி: அண்ணா பிறந்த நாளில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்தை காணோளி மூலம் கும்மிடிபூண்டியில் துவக்கி வைத்தார் ஜெயலலிதா.

நீதி: நூறு ரூபாய்க்கு குவார்ட்டர், பத்து ரூபாய்க்கு வாட்டர், தாலியறுப்பதில் அம்மாதான் வின்னர்!

_______

செய்தி: ஒன்பது மொழிகள் பேசும் திறமையுடைய ஜெயலலிதாவே நரேந்திர மோடியை விட பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் – தா.பாண்டியன்

நீதி: காலில் போட்டு மிதித்தாலும் புரட்சித் தலைவி வாழ்க என்று ஊளையிடுவதில் தாபாவுக்கு போட்டியில்லை போப்பா!

______

செய்தி: வெள்ளிக்கிழமை காஞ்சி சங்கர மடத்தில் நடந்த தென்னிந்திய புரோகிதர்கள் சங்க மாநாட்டில் புரோகிதர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும், நிலம், சமத்துவபுரத்தில் வீடு மற்றும் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீதி: சங்கர மடம், வரதராஜ கோவில், காமாட்சி கோவிலில் இட ஒதுக்கீடை எதிர்ப்பவன் சமத்துவபுரத்தில் சான்ஸ் கேட்பதுதான் சாணக்கிய நரித் தந்திரம்.  

______

செய்தி: கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையில் வழக்கம் போல இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் ஐஸ் ஹவுஸ் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த முயன்ற இந்து முன்னணி ராமகோபாலன் கைது

நீதி: அருந்ததியினருக்கு பெண் கேட்டு அய்யங்கார் தெருவில் ஊர்வலம் நடத்த இராம கோபாலன் தயாரா?

______

செய்தி: சென்னையில் உரிய அங்கீகாரம் பெறாமல் மூலிகை குடிநீர் தயாரித்து விற்று வந்த 14 நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நீதி: உரிய அங்கீகாரம் பெற்று கழிப்பறையையும் சுத்தம் செய்யும் சக்தி உள்ள கோகோ கோலாவை சீல் வைக்க துப்பிருக்கிறதா?

______

செய்தி: ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு போயஸ் கார்டனில் ஜெயாவுடன் மூத்த பத்திரிகையாளர் சோ சந்திப்பு

நீதி: 3-வது அணிக்கு வேட்டு வைக்கும் வண்ணம் காவிக் கூட்டணி மலருமோ என்று போலி கம்யூனிஸ்டுகள் அலறல்.

______

செய்தி: அமெரிக்காவின் 2014-ம் ஆண்டுக்கான அழகியாக நியூயார்க்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 24 வயதுப் பெண் நீனா தவ்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீதி: அமெரிக்காவை வீழ்த்திய அழகு பாரத மாதாவுக்கு ஜே! – என் ஆர் ஐ அம்பிகள் கொண்டாட்டம் !

______

செய்தி: நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 காங்கிரசாருக்கு கட்சி சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதற்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீதி: இதில் கிழிந்த வேட்டியை ஒட்டுப் போட்டு கட்டுவது எப்படி என்ற பாடம் உண்டா?

______

செய்தி: யாருடன் கூட்டணி என்பது எனக்கும், தொண்டர்களுக்குமிடையிலான ரகசியம். உரிய நேரம் வரும்போது அது யாருடன் என்பதை அறிவிப்போம் – சனிக்கிழமை நடந்த விருதுநகர் மதிமுக மாநில மாநாட்டில் வைகோ

நீதி: விருதுநகர் மாநாட்டில் அம்மா மீதும், மோடி மீதும் எந்த விமரிசனமும் இல்லை எனும் போது அதில் ஏது இரகசியம்?

______

செய்தி: நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி போதைப் பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து வி.என். சுதாகரன் விடுதலை

நீதி: அடுத்த வழக்கு எது எப்போது கைது என்ற திகிலில் சசிகலா உறவினர்கள் காத்திருக்கிறார்கள்.

______

செய்தி: ஆசாராம் பாபுவுக்கு நிலம் ஒதுக்கியதன் மூலம் தவறு செய்து விட்டேன் – காங்கிரசை சேர்ந்த முன்னாள் ம.பி முதல்வர் திக்விஜய சிங்

நீதி: சந்திரா சாமியை ஞான குருவாக நடத்திய கட்சியில் இருக்கும் திக்விஜய் சிங் இப்படியெல்லாம் கூறுவது கட்சிக் கட்டுப்பாட்டுக்கு விரோதமானது.

_______