Monday, August 15, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் மோடியை விரட்டியடிப்போம் ! - திருச்சியில் ம.க.இ.க பொதுக்கூட்டம்

மோடியை விரட்டியடிப்போம் ! – திருச்சியில் ம.க.இ.க பொதுக்கூட்டம்

-

காவி பயங்கரவாதி, கொலைகார மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே !
கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி நரேந்திர மோடியை விரட்டியடிப்போம் !

பிரச்சார இயக்க பொதுக்கூட்டம்
_____________________________________

சிறப்புரை : தோழர். மருதையன்,
மாநில பொதுச்செயலர்,
ம.க.இ.க, தமிழ்நாடு.

செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
புத்தூர் நால்ரோடு, உறையூர்,  திருச்சி.

_____________________________________

பிரச்சார இயக்கம் போஸ்டர்-1

_____________________________________

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
மாபெரும் பிரதமர் கனவுகளை சுமந்தபடி வரும் 26-ம் தேதி திருச்சிக்கு வருகிறார் நரேந்திர மோடி. அடுத்த பிரதமருக்கான தகுதியில் மோடியே முதலிடத்தில் இருப்பதாக காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. மன்மோகன் சிங் – சோனியா தலைமையிலான காங்கிரஸ் கும்பல் வரலாறு காணாத ஊழலில் சிக்கித் தவிப்பதோடு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையின்மை என கடும் பொருளாதார சிக்கலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் பெருகி வரும் அதிருப்தியை மடைமாற்றி, மோடியை முன்னிறுத்துகின்றன ஆளும் வர்க்கங்கள்.

நரேந்திர மோடி மிகச்சிறந்த நிர்வாகி, குஜராத்தை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றவர், தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றவர்; உறுதியான முடிவுகள் எடுத்து துணிச்சலாக நடைமுறைப்படுத்தி வெற்றிகளைக் குவிக்கும் திறமைசாலி; ஊழலை ஒழித்த உத்தமர்; மொத்தத்தில் ‘வளர்ச்சியின் நாயகன்’ (விகாஸ் புருஷ்) என்று பொய்களை மாலையாக சூட்டி, புகழ்ந்து தள்ளுகின்றனர்.

இதயம் உள்ள மனிதர்கள் அனைவரின் இரத்தத்தை உறைய வைக்கும் கொடூர பச்சைப் படுகொலைகளை 2002-ம் ஆண்டு திட்டமிட்டு நடத்தி 3000-க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களை படுகொலை செய்தவர். அதற்கு சாட்சியாக இருந்த ஹரேன் பாண்டியா என்ற தனது சக அமைச்சரையே படுகொலை செய்தவர். இந்த மோடி தனி நபர் அல்ல. சாதி மத வெறியைத் தூண்டி உழைக்கும் மக்களை மோத விட்டு, பார்ப்பன-இந்து மதவெறி பாசிசத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தலைவன். இந்துத்துவத்தை குஜராத்தில் சோதித்து ருசிகண்ட காட்டுப் பூனை. ஆகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களை திட்டமிட்டு புறக்கணித்து, டாடா, அம்பானி, அதானி, எஸ்.ஆர், ஃபோர்டு, மாருதி என கார்ப்பரேட் முதலைகளுக்கு குஜராத் வளங்களை தாரை வார்த்தது தான் மோடி உருவாக்கிய வளர்ச்சி. அதனால் மேட்டுக்குடி வர்க்கமும், கார்ப்பரேட் முதலாளிகளும் மோடியை உச்சி முகர்ந்து கொண்டாடுகின்றனர். தேசபக்தியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் மோடி இங்கே மாருதி சுசுகி தொழிலாளர்கள் தம் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, ஜப்பானுக்கு நேரில் சென்று எல்லா வசதிகளையும் செய்து தருவதாக வாக்களித்தார். 4.5 கோடி சில்லறை வணிகர்களை அழிக்க வரும் வால்மார்ட் பற்றி இன்று வரை மோடி வாயைத் திறக்கவில்லை. தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு தன் முகமூடிகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து வாங்கி பயன்படுத்திய இந்த யோக்ய சிகாமணி தான், சீன ஊடுருவலை தன்னால் மட்டுமே தடுக்க முடியும் என சவடால் அடிக்கிறார்.

நாடு முழுவதும் அண்மை ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக நடத்திய ஊழல்களில் காங்கிரசின் நிலக்கரி, அலைக்கற்றை ஊழல்கள் முதல் பாஜக-வின் கர்நாடக ரெட்டி சகோதரர்களின் இரும்புத் தாது கொள்ளை வரை அனைத்துமே தனியார்மயத்தின் பெயரால் முதலாளிகள் கொள்ளையடித்த ஊழல்கள் தான். இந்த தனியார்மய கொள்கையில் காங்கிரசுக்கும பாஜக-வுக்கும் வேறுபாடு இல்லை என்பதோடு அரசு சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க தனியாக ஒரு துறையையே ஏற்படுத்தியது வாஜ்பாயின் பாஜக அரசுதான். சுமார் 42 லட்சம் ஏக்கர் அரசு நிலம் பல்வேறு காரணங்களுக்காக டாடா, அம்பானி, எஸ்.ஆர், மிட்டல், அதானி, அமெரிக்க மெக்டோனால் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. பருத்தி, உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகிய குஜராத்தின் முக்கிய விவசாய உற்பத்தி கார்ப்பரேட் முதலாளிகள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 152 கிராமங்களைப் பிடுங்கி பல்லாயிரம் ஏக்கர் வளமான விலை நிளங்களைப் பறித்து (64 ஆயிரம் கோடியில் தொடங்கப்படும் தனியார் அணு மின்நிலையத்திற்கு) தாரை வார்க்கப்பட்டுள்ளன.

ஊழல் கறை படியாத உத்தமரான மோடி, ரிலையன்ஸ் குழுமத்திற்கு எரிவாயு திட்டத்தில் காட்டியுள்ள சலுகைகள் அலைக்கற்றை ஊழலை விட முகப்பெரிய ஊழலாகும். சிங்கூரிலிருந்து விரட்டப்பட்ட டாடா நானோ தொழிற்சாலைக்கு ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் என்ற குத்தகையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வழங்கியதோடு மட்டுமல்லாமல் மானியமாக மட்டும் 35 ஆயிரம் கோடி வழங்கினார். குஜராத் அரசிடமிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அபகரித்த முதலாளிகள் பலர் தொழில் தொடங்காமல் வீட்டு மனைகளாக்கி விற்று கொள்ளைடித்துள்ளனர். 56 மீனவ கிராமங்களை அப்புறப்படுத்தி 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பறித்து முந்திரா என்ற தனியார் முதலாளிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பேருக்கு வாழ்வளித்த வெங்காய சாகுபடி நிலத்தைப் பறித்து நிர்மா சிமெண்ட் கம்பெனிக்கு கொடுத்ததும் மோடி தான். ஆனால் வேலை கிடைத்ததோ வெறும் 416 பேருக்கு மட்டும் தான். குஜராத்தின் 52 ஆண்டு கால வரலாற்றில், மோடி ஆட்சியில் தான் அரசு சொத்துக்கள் அதிகம் சூறையாடப்பட்டது என்பதோடு மிகப்பெரிய ஊழல் ஆட்சியும் இது தான் என்பதை பல்வேறு ஆய்வுகளும் தணிக்கை அறிக்கைகளும் அம்பலப்படுத்தியுள்ளன. 2011-ம் ஆண்டு மட்டும் 17 ஊழல்களை தலைமை தணிக்கைத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். வாழ்வாதார அழிப்பு, கார்ப்பரேட் சூறையாடல், ஊழல் இவற்றை தான் மாபெரும் வளர்ச்சி, நாட்டிற்கே முன்மாதிரி என்று கூசாமல் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

இருள் கவ்விக் கிடக்கும் குஜராத்

எங்கள் மாநிலத்தில் விவசாயிகள் காரில் செல்லும் அளவிற்கு வசதியாக வாழ்கிறார்கள் என்று மிகப்பெரிய பொய்யை அவிழ்த்து விட்டார் மோடி. ஆனால், 2003 முதல் 2012 முடிய 641 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையை பதிவு செய்ய வேண்டாம் என மோடி அரசு உத்தரவிட்டிருப்பதாக போலீசு அதிகாரியே அம்பலப்படுத்துகிறார். சுமார் 85 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி நாசமான போது சல்லிக்காசு கூட நிவாரணம் வழங்காமல் விவசாயிகளின் முதுகெலும்பை ஒடித்தவர் தான் மோடி. மின் உற்பத்தியில் உபரி எனப் பீற்றிக் கொள்ளும் மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு 10 மணி நேரம் கூட மின்சாரம் வழங்கப்படுவதில்லை.

• மாநில மொத்த உற்பத்தி (SGDP) அளவில் குஜராத் 8-வது இடத்தில் இருக்கிறது.
• வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோர் எண்ணிக்கையில் 18-வது இடத்தில் (அதாவது வறுமை ஒழிப்பில்) உள்ளது குஜராத். பின்தங்கிய ஒடிசா, குஜராத்தை விட பல படி மேலே உள்ளது.
• பெண் சிசுக்கொலை இன்னும் தொடர்கிறது. ஆண்-பெண் விகிதம் 1000-க்கு 918 என்ற அளவில் 18-வது இடத்தில் உள்ளது.
• 44% பேர் மட்டுமே காங்கிரீட் கூரையில் வாழ்கின்றனர். பிறர் மோசமான நிலையில் வாழ்கின்றனர்.
• கல்வியில் மிகப் பின்தங்கிய நிலையில் 15-வது இடத்தில் உள்ளது குஜராத்.
• தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்குவதில் 7-வது இடத்தில் உள்ளது. அதாவது 100 நாட்களுக்கு பதில் 34 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
• குழந்தை மரணத்தைத் தடுப்பதில் 18-வது இடத்திலும், மகப்பேறு கால மரணத்தைத் தடுப்பதில் 5-வது இடத்திலும் இருக்கிறது குஜராத்.
• 50% குழந்தைகள் சத்தான உணவு இன்றியும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 65% பேர் சத்துணவு இன்றியும் வாழ்கின்றனர்.
• பெண்களில் பாதி பேர் ரத்த சோகை கொண்டவர்கள். இது பற்றி கேட்டபோது, குஜராத் பெண்கள் அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறை காட்டி உணவைக் குறைத்து சாப்பிடுவதால் தான் பிரச்சினை என்று மோசடி வாதத்தை முன்வைத்தார் மோடி.
• மோடியின் ஆட்சிக் காலத்தில் வேலை வாய்ப்பு உருவாக்குவது முற்றிலும் நின்று போய் விட்டது.
• தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 4-ல் 3 பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே இதற்கு சான்று.
• சிறுபான்மையினர் குறிப்பாக இசுலாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகின்றனர். வாழ்க்கை நிலையில் பீகார் முசுலீமை விட கீழ் நிலையிலேயே உள்ளனர்.
• கிராமங்களில் 16% பேருக்கு தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தியாவின் 3-வது மிகப்பெரிய கடனாளி மாநிலமும் குஜராத்-தான்.
• சுற்றுச்சூழல் மாசு அதிகம் உள்ள 88 இந்திய நகரங்களில் 8 குஜராத்தில் உள்ளன.

இதுதான் மோடி நிர்வாகத்தின் யோக்யதை. ‘மோடி நடத்துவது ஆட்சி அல்ல, மளிகைக் கடை; இங்கு லாபம் மட்டுமே வளர்ச்சியின் அளவுகோல்’ என்றார் ஒருவர். இது தான் உண்மை நிலை. ஆர்.எஸ்.எஸ் கும்பல் 2002-ல் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு மூலகர்த்தா மோடி தான் என சஞ்சீவ் பட் போன்ற போலீசு அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். படுகொலை உத்திரவுகளை நிறைவேற்றிய போலீசு அதிகாரி வன்சாரா நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருக்க வேண்டியவர் அல்ல, சபர்மதி சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர் என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரும் மோடியை உத்தமர் என்றும், அவர் தான் நாட்டை காக்கக் கூடிய வல்லமை பெற்றவர் என்றும் ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் ஒரே குரலில் பேசக் காரணம் குஜராத் மக்களை ஒடுக்கியது போல, இந்திய மக்களை அனைவரையும் ஒடுக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான தடைகளை நீக்குவார் என்பதே. மோடியும், ஆர்.எஸ்.எஸ்-ம் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட இந்துக்கள், தொழிலாளிகள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரானவர்கள் தான். குஜராத்தில் முதலாளிகளின் லாபம் உயரும் அதே வேகத்தில் தொழிலாளிகளின் ஊதியம் வீழ்ச்சி அடைகிறது என்பதே உண்மையான நிலவரம்.

தமிழகத்தில் மோடியின் முகமூடியை அணிந்து வளர்ச்சி, வல்லரசு வாய்ச் சவடாலுடன் செல்வாக்கு பெற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலை வீழ்த்த வேண்டியது இன்றை அவசர கடமையாகும். திராவிட இயக்கத்தை விமர்சிப்பது என்னும் பெயரில் தந்தை பெரியார் உருவாக்கிய மதச்சார்பற்ற பண்பாட்டை சீர்குலைக்கவும், கம்யூனிச எதிர்ப்பை நயவஞ்சகமாய் முன்னெடுக்க இனவாதிகளும், முதலாளிகளும் பாஜக பின்னால் அணிவகுக்கும் அபாயகரமான சூழலில் உழைக்கும் மக்களாகிய நாம் ஓரணியில் திரள்வோம். பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மதவெறி பாசிச கும்பலை வீழ்த்துவதன் மூலம் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்க அணி திரள்வோம். வாரீர்.

_________________________________________________________________________

பிரச்சார இயக்கம் போஸ்டர்-2

___________________________________________________________________________

பிரச்சார இயக்கம் போஸ்டர்-3___________________________________________________________________________

 

 1. இதயம் உள்ள மனிதர்கள் அனைவரின் இரத்தத்தை உறைய வைக்கும் கொடூர பச்சைப் படுகொலைகளை செய்தவன்தான் அடுத்த இந்திய பிரதமர். என்னசெய்வது, பூவோடு நாறும் காய்நது கருகி சாவதை தடுக்கக்கூடிய வசதந்தின் இடிமுழக்கம் பலமாக இல்லையே.

   • அப்போன்ன தீவிரவாதின்னு நீங்க சொல்ற முஸ்லீம்ல கொல்லணும் அப்பாவி முஸ்லீம்ம படுகொலை பண்ணிட்டு பேசுறீங்களே

 2. //தமிழகத்தில் மோடியின் முகமூடியை அணிந்து வளர்ச்சி, வல்லரசு வாய்ச் சவடாலுடன் செல்வாக்கு பெற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலை வீழ்த்த வேண்டியது இன்றை அவசர கடமையாகும்.//

  நாடே மோடியை தூக்கி வைத்துக் கொண்டாடுவதைப் போல, முறுக்கேற்றப்படும் பிரச்சாரத்தையும் – கஞ்சா போதை தலைக்கேறியதைப் போல மிதக்கும் இப்பாசிச கும்பலையும் களத்தில் மோதி வீழ்த்துவதற்கு அறைகூவும்… அரசியல் நெஞ்சுரம் நிறைந்த பிரச்சாரம் இயக்கம் இது!

  வாழ்த்துக்கள் கூறி, வழியனுப்பிவைக்க சுற்றுலாப்பயணம் அல்ல இது! காவியிருள் கிழிக்க கரம் கோர்த்து களம் காணும் தருணமிது!

  ஜனநாயக உணர்வும், முற்போக்கு சிந்தனையும் மறுமொழியோடு முடங்கிக்கிடப்பதா? இப்போராட்டக் களத்தில் பங்கேற்க நான் முன்பதிவு செய்கிறேன். நீங்கள்?

 3. யோவ் போங்கையா சும்மா காமிடி பண்ணிக்கிட்டு….

  சும்மா எங்கையாவது ஓரமா ஒரு 10 பேரு நின்னு கருப்புக்கொடி காட்டிவிட்டுபோவீர்களா(அதுவும் மோடி வாராத வழியில்)…அதவிட்டுப்புட்டு மோடிய விரட்டிஅடிப்பீங்களாமே….

  • நாங்க கருப்பு கொடியோட நிக்குறப்ப, நீங்க காவி துண்ட தலையுல போத்துகிட்டு ஓரம தான காணும் நிப்பீர்

   • தோழா…னாங்க மோடியை வரவேற்ப்போம் என்கின்றோம்…மோடிஜீயை வரவேற்ப்போம்…னிங்கள் மோடியை விரட்டியடிப்போம் ! என்கின்றீர்களே….உங்களால் அவரை திருச்சிக்குள் நுழையவிடாமல் விரட்டிஅடிக்க முடியுமா???

    அதான் வினவப்பாத்த சிர்ப்புச்சிர்ப்பா வர்து..து 🙂

    • பையா…..ங்க்க திறந்து வீட்ல நாய் நுழைஞ்சா கூடவரவேற்க்கும் நீங்கோ.நாயயே வரவேற்கும் நீங்கோ அத்த விட கேவலமான மோடிய வரவேறுங்கோ

 4. மோடி Flight இல் போகும் பொது கருப்பு கோடி காட்டுவார்கள்..தமிழ் நாட்டிற்க்குள் விட மாட்டார்கள்..இவர்கள் வீட்டுக்குளே தூங்கிக்கொண்டு இருப்பார்கள்..போங்கடா _______ !!!

 5. நரேந்திர மோடி உத்தமர் என்று ஒரு சாராரும், அவர் சாத்தான் என்று ஒரு சாராரும் கூறுகின்றனர். இரண்டு கோட்பாடுகளுக்கும் ஆதரவாக இணையத்தில் பல உதிரிக் கட்டுரைகள் கிடைக்கின்றன. வினவு எழுதிய கட்டுரைகளும் உண்டு. இது தொடர்பாக நூல்கள் உள்ளனவா என ஆங்கிலத்துக்காக flipkart தளத்திலும், தமிழுக்காக நூலுலகம், கிழக்கு, உடுமலை ஆகிய தளங்களிலும் தேடினேன். “Gujarat”, “Modi”, “குஜராத்”, “மோடி” ஆகிய சொற்களை தேடலுக்கு பயன்படுத்தினேன்.

  ஆங்கிலத்தில் குஜராத் படுகொலைகள் பற்றி இரண்டு புத்தகங்கள் கிடைத்தன. நரேந்திர மோடியை துதி பாடி சில நூல்களும் உண்டு. தமிழை பொறுத்தவரை மோடியின் ஆட்சியை போற்றி ஒரு நூலும், நரேந்திர மோடி பற்றி ஒரு சிறு நூலும், “காவிப்படை” என்ற தலைப்பில் ஒரு சிறு நூலும் உள்ளன. இந்த முக்கிய விஷயம் பற்றி வேறேதேனும் நூல்கள் தமிழில் வெளி வந்துள்ளனவா?

  வினவு இது பற்றி ஒரு நூல் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் (ஏற்கனவே இருக்கிறதா?).

 6. வெங்கடேசன்,

  தமிழில் என்ன புத்தகம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் இந்த புத்தகத்தை படிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்கள்.

  Narendra Modi – The Man. The Times by Nilanjan Mukhopadhyay

  • செழியன் குமரன்,
   நன்றி. flipkart தளத்தில் நான் கண்டதாக குறிப்பிட்ட புத்தகங்களில் நீங்கள் சொன்ன புத்தகமும் ஒன்று. இது குஜராத் கலவரம், மோடி ஆட்சி ஆகியவற்றி பற்றி நேரடியாக பேசாமல், அவரது வாழ்க்கை வரலாற்றையும், குணாதிசியங்களையும், அவர் பிரபலமானதற்கான காரணங்களையும் விளக்கி சொல்லும் நூல் என அத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள சாராம்சத்தின் மூலம் அறிய முடிகிறது. இந்த நூலுக்கு வாசகர்கள் எழுதிய மதிப்பீடுகள் (reviews) இது மோடி எதிர்ப்பு நிலையில் இருந்து எழுதியாக கூறுகின்றன. மோடியின் பின்புலத்தை அறிய இந்த நூல் உதவும் என நினைக்கிறேன். மேலே சொன்ன இரண்டு விஷயங்கள் பற்றி நேரடியாக பேசும் நூல்கள் சிலவும் கிடைத்தன.

   Gujarat: Governance for Growth and Development by Bibek Debroy

   Gujarat : The Making of a Tragedy by Siddharth Varadarajan

   Gujarat Plurality Hindutava And Beyond by Achyut Yagnik, Suchitra Sheth

   இந்த நூல்களின் சாரம்சத்தை வைத்து பார்க்கும் போது உருப்படியான நூல்களாக தெரிகின்றன. ஆனால், நிச்சயமாக சொல்ல முடியாது. இவற்றை தவிர மேலும் சில நூல்கள் flipkart தளத்தில் உள்ளன. ஆனால், இவை அப்பட்டமான மோடி பிரசார நூல்களாக தெரிகின்றன.

   வேறொரு வலைப்பூவில் குஜராத் கலவரம் பற்றி மது கிஷ்வர் என்பவர் எழுதிய ‘மோடிநாமா” என்றொரு நூலை படித்து பார்க்குமாறு பரிந்துரைத்தார்கள். இந்நூல் மோடி குற்றமற்றவர் என நிறுவ முயல்கிறது. இந்நூலாசிரியர் பல சமூகவியல் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய ஒரு பேராசியர் என்ற வகையில் என்னை கவர்கிறார்.

   தமிழை பொறுத்தவரை மூன்று நூல்கள் தென்பட்டன. சரவணன் தங்கதுரை என்பவர் எழுதிய “மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி”; CNS என்பவர் எழுதிய “நரேந்திர மோடி”; தோழர் எஸ் ஏ பெருமாள் எழுதிய “காவிப்படை”. கடைசி இரண்டும் சிறு நூல்கள்.

   இணையத்தில் மோடி எதிர்ப்பு, ஆதரவு என்ற இரு நிலைகளிலும் பல உதிரி கட்டுரைகள் கிடைக்கின்றன. ஆனால், இவற்றின் மூலம் எனக்கு தெளிவு கிடைக்கவில்லை. எனவே புத்தகங்கள் படித்து பார்க்கலாம் என எண்ணியுள்ளேன். இருப்பதுற்குள் சிறிய புத்தகம் என்ற வகையில் (ஓசியில் இணையத்தில் கிடைக்கிறது என்ற வகையிலும்!) , “மோடிநாமா” வில் இருந்து தொடங்க திட்டம். பிறகு, flipkaart தளத்தில் கிடைத்த மூன்று நூல்களை படிக்கலாம் என எண்ணியுள்ளேன். அதற்கு முன்னால் நீங்கள் பரிந்துரைத்த முகோபாத்யாய் எழுதிய நூலையும் படிக்க முயல்கிறேன். ஒரு பொருள் பற்றி இதனை நூல்கள் படிக்க தெம்பிருக்குமா என தெரியவில்லை. பார்ப்போம்.

   மேலே குறிப்பிட்ட நூல்கள் பற்றி உங்களுக்கு வேறேதாவது விவரம் தெரியும் என்றால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

 7. The MODI hype has reached beyond limits.. I think he shud become PM once… Then only these people will realise without changing fundamentals of this country nothing will change…. No one is inderstanding that the MAJOR beneficaries in all scams of congress are NOT politicians but big MNCs… In case of favouring MNCs BJP and CONGRESS are not equals rather BJP is one step ahead… And we all know how investments flowing into GUJARAT… The logic of our people is great… If u sell spectrum for a lower price then it is CORRUPTION but if u sell govt LAND at throw away price its called DEVELOPMENT…

  • // The logic of our people is great… If u sell spectrum for a lower price then it is CORRUPTION but if u sell govt LAND at throw away price its called DEVELOPMENT… //

   Wow! you are equating spectrum scam and land incentive for business development?
   Explain me how ! I would like to see your analysis

   End of the day, Govt has to generate jobs for the people by encouraging business!
   Business pays taxes, export and bring wealth to country! That will strengthen the currency and that will increase the purchaing power of people

   Now Karunandhi gave land and tax free for hyndai.
   Now many car companies followed the path of hyndai and started their manufacturing units in chennai
   It created lot of jobs

   Modi gave incentive to Tata Nano, It put his state in spotlight and signalled the business community that Gujarat will support business and it has required infrastructure

 8. மோடி குற்றவாளி என்று நிரூபிக்க படவில்லை .

  அவர் குற்றவாளி என்று நீங்கள் நினைத்தால் அதை நிரூபிக்க முடியவில்லை .

  இப்போது குற்றவாளியை தண்டிக்க வழி செய்யாத சட்டத்துரையை, குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டிய புலனாய்வுத்துறையை பழுது பார்க்கப்பட வேண்டும் . அதுவே நாட்டின் நலனை எதிர்காலத்தில் உறுதி செய்யும்.

  அதில் பழுது நீக்கும் வழி முறைகளை கூறும் அரவிந்த் கேஜிரிவாளை நையாண்டி செய்கிறீர்கள்

  இப்போது மோடி என்ற தனி நபரை தாக்கி , உணர்ச்சி பூர்வமாக பேசி , காபி குடித்து கலைந்து போவீர்கள். இதனால் யாருக்கும் பயன் இல்லை.

 9. மோடி அவர்கள் இந்தியாவிற்க்கு கிடைத்த வரப்ரஸதம்.

  எந்த கோக மக்கா வேணா வந்து கொடி புடிக்கட்டும். மக்கள் தெளிவாக தான் உள்ளனர்.

  • எந்த கோக மக்கா வேணா….
   நாம் எப்போதும்போல்(ஊரான் காசில்) அகாரவடைசல்,தத்தியண்ணம்
   சாப்பிட்டு எவனுக்கு நாமம் சாத்துவது என்று யோசிப்போம்….

   • சேர,சோழ,பாண்டிய…மயிராண்டிகளை வசப்படுத்தி…

    கோள்ளை அடித்த பணத்தில் கோயில் கட்டி,குடுமிகளுக்கு
    வேலை வாய்ப்பு கொடுத்த சேர,சோழ,பாண்டிய
    பண்டாரங்கலை சுண்ணாம்பு காளவாயில் போட்டிருந்தால்
    தமிழன் வாழ்வு இழந்து இருக்கமாட்டான்

 10. வாராது வந்த மாமணியாய் தங்களின் கட்டுரை வந்திருக்கிறது…நான் கையறுநிலையில் அயர்ந்து போயிருந்த நேரத்தில் இக்கட்டுரை எனக்கு ஆறுதல் அளிக்கிறது..வாழ்த்துக்கள்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க