Monday, August 15, 2022
முகப்பு அரசியல் ஊடகம் மகஇக தீவிரவாதிகளை கைது செய் - பாஜக காமடி வீடியோ

மகஇக தீவிரவாதிகளை கைது செய் – பாஜக காமடி வீடியோ

-

நீங்கள் காண்பது 23 செப்டம்பர், திங்கள் காலை அரங்கேறிய காமெடி மறியல் காட்சி. ஞாயிறன்று நடைபெற்ற ம.க.இ.க வின் பொதுக்கூட்டத்திற்குத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் பா.ஜ.க வினருக்கு ஒரு புறம் கிலியைக் கிளப்பியது. இன்னொரு புறம், தமிழக பா.ஜ.க வின் பல்வேறு கோஷ்டிகளும் தத்தம் வெயிட்டை காட்டுவதற்கு இது ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது.

நேற்று முன்தினம் ராத்திரியோடு ராத்திரியாக ரூம் போட்டு யோசித்து, மோடியின் மூஞ்சிக்கு அதிக சேதம் ஏற்படாத வண்ணம் அவர்களே டிஜிட்டல் பானர்களை கிழித்திருக்கின்றனர். பிறகு திங்கள் காலை சுமார் 20 பேர் அடங்கிய ஒரு கோஷ்டி, வீடியோ காமெரா, ஸ்டில் காமெரா, பத்திரிகையாளர்கள் போன்ற முழு செட்டப்புடன் “ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு” வந்து இறங்கினர்.

பாஜக டிராமா
மற்ற கோஷ்டியினர், அடுத்த சில நிமிட இடைவெளியில் வரிசையாக 2,3 கார்களில் வந்து இறங்கினர்.

“ஆக் ஷன்” என்று சிக்னல் வந்தவுடனே முந்திக்கொண்டு ஒருவர் ரோட்டில் படுத்து காமெராவின் கவனத்தை ஈர்த்தார். அப்புறம் சாப்பாட்டு பந்தியில் உட்கார்வது போல வரிசையாக எல்லோரும் சாலைக்கு குறுக்கே சிறிது நேரம் உட்கார்ந்தனர். அப்புறம் போலீசு வந்தது. “பானர் கிழிக்கிறதெல்லாம் சின்ன விசயம். இதப்போய் ஏன் பெரிசு படுத்துறீங்க? என்று கொட்டாவி விட்டபடியே சொன்னார் போலீசு அதிகாரி.

அப்டீன்னா “ம.க.இ.க வினரை கைது செய்யவேண்டும்” என்று கோரினார்கள். “சரி, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எழுந்திருங்கள்” என்று போலீசு சொன்ன மறுகணமே மறியலைக் கைவிட்டு சாலை ஓரமாக நின்று கொண்டனர்.

போட்டி கோஷ்டியினர் முந்திக் கொண்டதை அறியாத மற்ற கோஷ்டியினர், அடுத்த சில நிமிட இடைவெளியில் வரிசையாக 2,3 கார்களில் வந்து இறங்கினர். எழவு வீட்டுக்கு வந்து இறங்கி எப்படி துக்கம் கேட்பது என்று தெரியாமல் விழிப்பவனைப் போல கொஞ்ச நேரம் நடு ரோட்டில் நின்று கொண்டு விழித்தனர். ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியுடன் பேசிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக சுமார் 50 பேர் அளவுக்கு கூட்டம் சேர்ந்து விடவே, கைது செய்து ஏற்றுவதற்கான வேனை போலீசு கொண்டு வந்து நிறுத்தியது. உடனே தலைவர்கள் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி செல்போனை எடுத்து காதில் வைத்த படியே காரை கிளப்பச் சொன்னார்கள். எல்லா கார்களும் உடனே கிளம்பின. தலைவர்கள் “எஸ்” ஆவதற்குள் தொண்டர்களும் “எஸ்” ஆகிவிட்டனர். பக்கத்தில் நரேந்திர மோடி கூட்டத்துக்கு பதிவு செய்வதற்காக போடப்பட்டிருந்த பந்தலில் அவர்கள் ஒதுங்கி விட்டனர்.

20 பேர் பங்கேற்ற இந்த பிரம்மாண்டமான போராட்டம் திங்களன்று மாலைப் பத்திரிகைகளில் முதல் பக்க செய்தி. மறுநாள் காலைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் முக்கிய செய்தி.

பல்லாயிரம் பேர் திரண்ட ம.க.இ.க வின் மோடி எதிர்ப்பு பொதுக் கூட்டம் பற்றியோ ஒரு வரி செய்தி கூட எந்தப் பத்திரிகையிலும் கிடையாது. வரலாற்றில் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமா என்ன?

 1. semma comedy …
  4 பேர் தான் நிக்குறானுங்க
  திருச்சியே ஸ்தம்பிக்கும் ன்னு சொல்றானுங்க

 2. [[[ஆக் ஷன்” என்று சிக்னல் வந்தவுடனே முந்திக்கொண்டு ஒருவர் ரோட்டில் படுத்து காமெராவின் கவனத்தை ஈர்த்தார். அப்புறம் சாப்பாட்டு பந்தியில் உட்கார்வது போல வரிசையாக எல்லோரும் சாலைக்கு குறுக்கே சிறிது நேரம் உட்கார்ந்தனர்.

  அப்புறம் போலீசு வந்தது.

  “பானர் கிழிக்கிறதெல்லாம் சின்ன விசயம். இதப்போய் ஏன் பெரிசு படுத்துறீங்க? என்று கொட்டாவி விட்டபடியே சொன்னார் போலீசு அதிகாரி.]]

  துன்பம் வந்தால் சிரிங்க! இதை படித்து விட்டு பாஜக விசிவாசியே சிரிப்பான்.

 3. பல்லாயிரம் பேர் திரண்ட ம.க.இ.க வின் மோடி எதிர்ப்பு பொதுக் கூட்டம் பற்றியோ ஒரு வரி செய்தி கூட………………………

  ————————————————————–

  என்ன ஒரு தொன்னுதொம்பதாயிரம் பேர் வந்துருப்பாங்களா ?

  • ஒரு 20 பேர் சேர்ந்து மறியல் பண்ணதுக்கு டீவி,பத்திரிக்கைனு எழுதுராங்களே. ஆனா ஆயிரம் பேர் கூடிய ம.க.இ.க வின் கூட்டத்தை பற்றி ஒரு வரிச் செய்தி கூட இல்லயே ஏன்?. அத்ற்கு பதில் கூறுங்கள்.

    • ஏம்பா இதுவரைக்கும் நீங்க ஒரு நாளைக்காவது கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் சொல்லிருகீங்களா? (மனசாட்சி: இப்ப மட்டும் கேட்டா என்ன சொல்லவா போராங்க)

     எதுக்குடா இந்த மானம் கெட்ட பொளப்பு?

     ஆனா உங்க கட்சியிள நல்லா டிரைனிங் குடுத்திருக்காங்க பா, எவ்வளவு அடுச்சாளும் கோபப்பட்டுகூட (ரோஷப்பட்டுகூட) கேள்விக்குமட்டும் நேரடியா பதில் சொல்லிராதனு!!!

 4. நேற்று முன்தினம் ராத்திரியோடு ராத்திரியாக ரூம் போட்டு யோசித்து, மோடியின் மூஞ்சிக்கு அதிக சேதம் ஏற்படாத வண்ணம் அவர்களே டிஜிட்டல் பானர்களை கிழித்திருக்கின்றனர்.

  ———————————————————————

  அப்படியே ஒரு போட்டோ எடுத்து இருக்கலாம்ல ……

  பாத்துகிட்டேவா நின்னீங்க

  போங்க நீங்க

  • ஆமா இதுக்கு முன்னாடி குடுத்த ஆதாரத்துக்கு எல்லாம்(sampleகு – தன்னுடைய கட்சி அலுவலகத்தில் குண்டு வைத்தது, பாகிஸ்தான் கொடியை ஏத்தியது) அப்படிய பதில் சொல்லி கிளிச்சிட்டீங்க. இப்ப மட்டும் போட்டோ எடுத்து போட்டா என்ன திருந்தவா போரீங்க, இல்ல நம்ம மானம் போச்சேனு உயிர விட போரீங்களா?

  • அப்ப RSS (BJP) டவுசர்களுக்கு மானம் ரோஷம் இல்லைனு ஒத்துக்கிறீங்க்க.

 5. \\பல்லாயிரம் பேர் திரண்ட ம.க.இ.க வின் மோடி எதிர்ப்பு பொதுக் கூட்டம் பற்றியோ ஒரு வரி செய்தி கூட எந்தப் பத்திரிகையிலும் கிடையாது. வரலாற்றில் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமா என்ன?\\

  முற்றிலும் உண்மை தோழரே!!!! வேண்டும் என்றே ம.க.இ.க வின் பொதுக் கூட்டம் பற்றி , ஒரு வரி செய்தி கூட எந்தப் பத்திரிகையிலும் கிடையாது… ஒருவேளை இயக்கத்தின் வளர்ச்சியை பார்த்து அரசாங்கம் பயப்படுகிறதோ???? ஆயுதத்தை எடுத்தவர்கள் இப்போது, மக்களை திரட்டுகிறாரகள் என்றதும் கிலி பிடித்து போய் உள்ளது டௌஸர் கூட்டங்கள்….இதுவே உங்களின் மாபெரும் வெற்றியாக நான் எண்ணுகிறேன்…

  ஆனால் இந்த கூட்டம் எவ்வகையான எண்ண ஓட்டத்தை மக்களிடம் ஏற்படுத்தியது என்பது மிக முக்கியம்..இது வெறும் தனி மனித எதிர்ப்பு போராட்டமாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட கூடாது.. ஒரு மத வெறியனின், ஒரு நர வேட்டையாடும் ஒரு கூட்டத்தின் மீதான எதிர்ப்பாக இருக்க வேண்டும்.. அவ்வகையான ஒரு கருத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும்.

 6. Ennappa Nadakkuthu Inga?
  Ivanga Thesiya Katchiyaappaa?.Oru Latcham Peru Maanaattukku Onlinela Book pannirukkaanga! Athula Obama,Monika Levensky Vera Book pannirukkiratha Solraanga.100la Oru pangaavathu Intha Maaberum Mariyalla Kalanthirukkalaamlappa! Ennappa ippadi Sothappittu Maanattha Vaangureengalappa! Tamilnadu BJP! Baner Kilikkirathellam Ungalukku Kandippa Advertisement Kodukkaathuppa! Villain Maathiri nalla Room pottu Yosingappa!Yenna Ithu Gujarat Illa:Tamilnadu

 7. முடிச்ச அவிக்கி, கொள்ளக்காரன்.கொலைகாரன் இவர்கள்தானப்பா? பேப்பர்,தொலைகாட்சிகளின் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க