Saturday, August 20, 2022
முகப்பு கட்சிகள் பா.ஜ.க மோடியே தமிழகத்தில் நுழையாதே ! சென்னை- தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !!

மோடியே தமிழகத்தில் நுழையாதே ! சென்னை- தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !!

-

க்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி,  பெண்கள் விடுதலை முன்னணி  ஆகிய அமைப்புகளின் சென்னை மாவட்டக் கிளைகள் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி.
_____________________________________

ட்சக்கணக்கில் ஈழத் தமிழர்களை கொன்றொழித்து விட்டு ஈழத்தில் வளர்ச்சிப்பாதை என்று ராஜபட்சே கூறுவது போல ஈராயிரம் முசுலீம் மக்களை கொன்றொழித்து விட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக குஜராத் இருப்பது போன்ற மாயையை மோடியும் பிஜேபியும் ஏற்படுத்தி வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பிலும் சுகாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில்தான் குஜராத் இருக்கிறது.

உண்மையில் 69% ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படுவதில் இந்தியாவில் முதல் மாநிலமாகவும், சுகாதாரத்துக்காக பட்ஜெட்டில் வெறும் 0.77 % ஒதுக்குவதிலும், 69.7% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதிலும், 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்ப்பதிலும்தான் குஜராத் முன்னிலை வகிக்கிறது.

முதலாளிகளின் நலனுக்காகவே முன்னிறுத்தப்படும் இந்த மோசடியை அம்பலப்படுத்தும் வகையிலும் இந்தியாவின் ராஜபக்சேவான மோடியே தமிழகத்தில் நுழையாதே என்பதை வலியுறுத்தியும் எமது அமைப்புக்களின் சார்பில் 26.09.2013 அன்று  காலை 11 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். நெடுஞ்செழியன் தலைமையேற்க உள்ளார். அதில் மாணவர்கள், பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

வ.கார்த்திகேயன்,
சென்னைக்கிளை இணைச்செயலர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
9445112675

_________________________________________________

மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கண்ட புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் நாளை ஆர்ப்பாட்டம் செய்கின்றன. ஆர்ப்பாட்டச் செய்திகளை வரும் நாட்களில் வெளியிடுகிறோம்.

 1. இஸ்லாமியக் கட்சிகளை நம்பாமல், ம.க.இ.க மாதிரியான இயக்கங்களின் பின்னால் அணிவகுத்து நிற்பதன் மூலமே பா.ஜ.க உள்ளிட்ட மதத்துவேஷ, இந்துத்வ வெறியர்களையும் அதற்குத் துணை போகும் ம.தி.மு.க மாதிரியான இழிவான பச்சோந்திகளையும் வலுவாக எதிர்க்க முடியும். இஸ்லாமியக் கட்சிகளோ, இயக்கங்களோ “மோடி”யை எதிர்த்து போராடினால் அதை ஒரு கலவரமாக பா.ஜ.க & கோ லாவகமாக திருப்பிவிட்டு ஆதாயம் அடையக்கூடும்.

 2. தமிழகத்தில், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் மிக அபாயகரமான வகையில் இந்துத்வா வைரஸ் பரவி வருகிறது. கொங்கு வேளாளர்கள் கணிசமாக இருக்கும் சிறு ஊர்களில் கூட இந்த நிலை தான். அரைகுறையாக படித்த இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர் இதன் பிடியில் தான். வர இருக்கும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பல ஆண்டு காலம் நடக்கும் கருணாநிதி போன்ற திராவிட வகையாறாக்களின் மெகா ஊழல் மற்றும் குடும்பத்தினரின் அராஜக அரசியல் காரணமாக திராவிட இயக்கம் இப்போது புழுத்து நாறிக்கொண்டு உள்ளது. இதனால் மனம் குமைந்து கிடக்கும் தமிழக நடுத்தர வர்க்கத்தினரிடம் ‘குஜராத் மாநிலத்தின் அபரிதமான வளர்ச்சி’ என்னும் கவர்ச்சி நன்றாக வேலை செய்கிறது. போதாக்குறைக்கு இஸ்லாமியரிடையே கணிசமானவர்கள் பின்பற்றும் உலகளாவிய அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தமிழகத்தில் இந்துத்துவ வெறியை பரப்புகிறது. வெறுப்பை வளர்க்கிறது. தமிழகம் மெல்ல மெல்ல இந்த்துவ வெறியின் பிடிக்குள் போய்க்கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறைய இளைஞர்கள் தமிழகத்தின் கடந்த கால சமூக வரலாற்றை அறியாமல் உள்ளார்கள். தமிழகத்தில் பார்ப்பனீயம் எந்த அளவுக்கு வலுவாக இருந்தது. அதற்கு எதிராக எப்படியெல்லாம் போராட்டங்கள் நடத்தப்பட்டன என்பன போன்ற விவரங்கள் பலனடைந்த இடைநிலை சாதிகளின் இன்றைய தலைமுறையினருக்கு தெரியவில்லை. அதனால் சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் பெரும் அனர்த்தம் காத்திருக்கிறது. இங்கு வளர்ந்து வரும் (பொது இடங்களில் பெண்கள் காக்கை உடை அணிந்து வருவதன் பின்னணியில் உள்ள வெறி உள்ளிட்ட) இஸ்லாமிய மத வெறியையும் குழு மனப்பாண்மையையும் கட்டுப்படுத்தவேண்டும்.

 3. இந்து மத வெறியை வீதியில் வைத்து தோலூரித்தால்,மற்ற மதவெறிகள் ஓடிப்போகும் .

  • அப்படி எங்க ஓடிப் போச்சு… கேரளாவில கம்யூனிச கட்சி தமிழ்நாட்ல திராவிடக் கட்சி போதாதுக்கு பெரியார்.. என்ன ஆச்சு.. கேரளாவிலயும் RSS அதிகம் தமிழ்நாட்லயும் ஜெ அதிகம். போதுமா..

 4. ம் ‘குஜராத் மாநிலத்தின் அபரிதமான வளர்ச்சி’ என்னும் கவர்ச்சி நன்றாக வேலை செய்கிறது. தமிழகம் மெல்ல மெல்ல இந்த்துவ வெறியின் பிடிக்குள் போய்க்கொண்டிருக்கிறது.

  Nobody supporting modi because he has promised to kill more minority people. He gets support because he is pro-business and development

  So if BJP delivers riots , people will reject BJP forever. This is their last chance

  • \\So if BJP delivers riots , people will reject BJP forever. This is their last chance//

   ஏம்பா இங்க என்ன குணசித்திர வேடத்துல நடிக்கிறதுக்கு ஆளெடுக்குராங்களா.இப்டி நடிக்கிரீங்கோ.அதுக்காக பூனை சைவமாகிருச்சு என்றெல்லாம் காமடி பண்ணாதீங்கோ.

   கலவரம் நடத்துரதையே தொழிலாக கொண்ட கட்சிதான் BJP.பிரிவினை கலவரம் தொடங்கி போலி வீடியோவை வைத்து நடத்திய முசாபர்பூர் கலவரம் வரைக்கும் அவனுங்க அட்டூழியம் எல்லாருக்கும் தெரியும்.ஆனாலும் if BJP delivers riots , people will reject BJP forever என்று கதை விடுறீங்க.ஏம்பா உங்களுக்கு எல்லாம் வெட்கமே கிடையாதா.

 5. குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பொய்யாக, பித்தலாட்டமான, கேவலமான கேடுகெட்ட முறைகளில் எவ்வாறு ஊடகங்களால் சந்தை படுத்தப்படுகிறார் என்பதை கீழ்க்கண்ட “youtube” இணையதள தொடர்பில் தெரிந்து கொள்ளுங்கள். உண்மையாகவே அவர் சாதனை புரிந்திருக்கிறார? அல்லது பலகோடி செலவில் அவர் சாதனை படைத்தது போல ஊடகங்களால் அரசியல் வியாபாரம் செய்யப்படுகிறார? என்பதை இந்த இணையதள தொடர்பை நீங்கள் பொறுமையாக பார்த்து நீக்கலாய் சிந்தித்து உணர்ந்தால்தான் உங்களுக்கு புரியும்.
  https://www.vinavu.com/2013/09/23/trichy-meeting-com-maruthaiyan-speech-on-modi-audio/

  அனைத்து தகவல்களும் ஆதாரத்துடன் கல்வி கற்ற நாம் புரிந்து கொள்ளும் வகைளில் இந்த சகோதரர் நமக்கு எடுத்துரைக்கிறார். நாம் ஒருபோதும் லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, திருட்டு, தீவிரவாதம் இவைகளை அதறிப்போமா? ஏற்ற்றுக்கொள்வோமா? அதே போல என் அருமை இந்து சகோதரர்களே நீங்கள் மதவெறியையும், மதவெறியை தூண்டுபவர்களையும், மதவெறி பிடித்த அரசியல் வியாதிகளையும் கண்ணை முடிக்கொண்டு, அறிவு நாணயமே இல்லாமல் பொய்யாக சித்தரிக்கப்படுகின்ற நரேந்திரமோடி பின்னல் செல்கிறீர்களே? நீங்கள்
  சிந்தித்து உணர வேண்டாமா? என் அருமை இந்து சகோதரர்களே நீங்கள் உங்களிடைய இளைய சமுதாயத்தை நன்மையின் பக்கம் திருப்பிவிடுங்கள்.என் அருமை இந்து சகோதரர்களே நீங்கள் இப்போது நரேந்திரமோடிக்கு பின்னால் போகும் உங்கள் சகோதரர்களை தடுக்கவில்லை என்றால் அல்லது நரேந்திரமோடிக்கு பின்னால் செல்வதுதான் நல்லது, வெற்றி என்று நீங்கள் கருதினால் செயல்பட்டால், நன்றாக நினைவில் பதியவைதுகொளுங்கள்,
  எழுதிவைத்துக்கொள்ளுங்கள் உங்களுடைய ஒருபகுதி இளைய சமுதாயத்தை நீங்கள் இழக்கப்போவது உறுதி நிச்சயம். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கல்வியை கொண்டு உண்மையாக சிந்திபபிர்களாக!!.

  • எழுதிவைத்துக்கொள்ளுங்கள் உங்களுடைய ஒருபகுதி இளைய சமுதாயத்தை நீங்கள் இழக்கப்போவது உறுதி\\

   இதர்க்கு என்ன சொல்ல போகிரது வினவு. இளைய சமுதாயத்தை இழப் போம் என்ட்ரால் என்ன பொருள்.

 6. ஒருவர் எவ்வளவு மோசமான மனிதராக இருந்தாலும் சட்டப்படி தான் அவரை தண்டிக்க வேண்டுமே தவிர, அவரை ஒரு மாநிலத்துக் குள்ளேயே வரக்கூடாது என்று சொல்வது/தடுக்க முற்படுவது சுத்தமான ஃபாஸிசம். அது இந்திய அரசியல் சாசனத்துக்கும் எதிரானது.

 7. அந்த ஆள்தான் ஜெயிக்கப் போறதில்லைல…. எதுத்து நின்னு தோக்கடிங்க…. ஏன் இவ்ளோ பதற்றீஙக.

 8. மோடியின் மதப்பிரச்சாரம் தமிழகத்தில் வேலை செய்யக்கூடாது. தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும். மோடி ஒன்றும் இந்தியாவை தூக்கி நிறுத்த போவதில்லை. தமிழக மீனவர்கள் பிரச்சனையை இன்று மோடி திருச்சி பேசி இருக்கிறான். அதை பற்றி பேசுவதற்கு அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது. ராஜபக்சேவுக்கு விருந்து வைக்கிற கூட்டம் தான..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க