Friday, September 25, 2020
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் தமிழருவி மணியன் : காந்தியத்தின் கடைசி ரவுண்டு காவிதான் !

தமிழருவி மணியன் : காந்தியத்தின் கடைசி ரவுண்டு காவிதான் !

-

நாவைச் சுழட்டும் காவிப்பூனை!

ன்னதான் தனி ‘ரூட்டு’ போட்டு நடை நடந்து காண்பித்தாலும், காந்தியத்தின் கடைசி ரவுண்டு காவிதான் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தமிழருவி மணியன்.  ”தமிழக முதல்வர் வைகோ, இந்தியப் பிரதமர் மோடி” என்ற தனது காந்தி கணக்கின் மூலம் பிழைப்புவாத புலவர் மரபின் ‘ஆழ்வார்’ வேலையில் தன்னை அடித்துக்கொள்ள ஆளில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

ஆசிட் அடிப்பது,
மனைவியையே தந்தூரி அடுப்பில் வறுத்தெடுப்பது
என்ற காங்கிரசின் அகிம்சைக் கலாச்சாரத்தில்,
‘தமிழருவி’ கல்லா கட்ட தகுந்த வாய்ப்பற்று போனதால்,

ச்..சீ..சீ… இந்தக் காங்கிரசே மோசம்,
உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை என்று
கவுச்சி வெறுத்த பூனையாய் பேசிப் பிழைத்து,

கருணாநிதியின் கண் ஜாடைக்கும் சொறிந்து
கழக ஆட்சியிலும் சில பழங்களைத் தின்று பசியாறி,

ஆள்பவர்களை நேருக்கு நேர் எதிர்க்க திராணியற்று
அரசியல் ஒழுக்கம், ஊழல் எதிர்ப்பு, மது ஒழிப்பு என
வயித்துக்கு பங்கமில்லாமல் வாய்ஜாலம் காட்டி,
மொன்னையான அறிக்கைகள் வாயிலாக ஆளும் வர்க்க
தொண்ணை நக்கி உயிர்வாழ்ந்து,

திடீரென!

“ஆகா ஈழத்தமிழனுக்கு ஒரே எதிரி கருணாநிதிதான்” என்று எகிறிக் குதித்து
போயசின் ஈழத்தாய்க்கு எலி பிடித்ததன் மூலம்,
ஜெயா டி.வி.யில், பார்ப்பன ஊடகங்களில்
கஞ்சி குடித்து வயிறு வளர்த்து சமர்த்தான அக்கிரகாரத்து பூனை
இப்போது இன்னும் ஒரு படி தாவி
காவிப் பயங்கரவாதிகளின்
காலை நக்கவும் தயாராகிவிட்டது.

அடிக்கடி இவர் உதாரணம் காட்டும் கர்ம வீரருக்கே
டெல்லியில் தீ வைத்த ஆர்.எஸ்.எஸ். ‘அகிம்சாவாதிகளின்’ பின்னே போய்
ஊழலற்ற நல்லாட்சி வழங்கப் போகிறாராம் இந்தக் காந்தியக் கல்நெஞ்சன்.

”மோடிதான் நாயகன், மோடிதான் வில்லன், மோடிக்கு போட்டி மோடிதான்”
என்று துக்ளக் சோவை மிஞ்சுமளவுக்கு
தமிழக பார்ப்பனிய ஊடகங்கள் கண்டு கொள்ளுமளவுக்கு
”வருங்கால பிரதமரே வாழ்க! என்று கொடுத்ததுக்கு மேல கூவுது தமிழருவி!

மூடி மறைக்க முடியாத அளவுக்கு
மோடியின் குற்றச்செயல்களும், குஜராத் படுகொலைகளும் நாறிக்கிடப்பதால்
கண்ணை மூடிக்கொண்டு தான் மோடியை ஆதரிக்கவில்லையென்று!
முன் ஜாமின் வேறு!

குஜராத் – அதானி குழுமத்துடனான வரவு செலவில்  படு பயங்கர நிலப்பேர ஊழலும்,
மோடியின் ஆட்சியில்  எஸ்ஸார்,  எல்.அண்ட். டி, போர்டு இந்தியா,  ரிலையன்சு உள்ளிட்ட
பல கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலக் கொள்ளையில் நடந்துள்ள கொழுத்த ஊழலையும்
இந்தியத் தணிக்கைத் துறை அம்பலப்படுத்தியும்,
இயற்கை எரிவாயு, எண்ணெய் வயல்களின் பங்குகளை விற்பதில்
ஜியோ குளோபல் என்ற லெட்டர் பேட் நிறுவனத்தின் வழி நடந்த பிரமாண்ட ஊழல் அம்பலமாகியும்,
கண்ணைத் திறந்து கொண்டு ஆதரிக்கும் தமிழருவிக்கு
இது நிர்வாகத் திறமையாகவும், ஊழலற்றதாகவும் காந்தியத் தோலுக்கு உரைக்கிறது போலும்!

ஒரு வேளை மதவெறி போதையில் தமிழருவி தள்ளாடுகிறது போலும்!
சொல்லப்போனால் மதுவெறி தலைக்கேறியவன் வாயிலிருந்து கூட உண்மைகள் வெளிவந்து விடும்,
மதவெறி தலைக்கேறியவன் வாயிலிருந்து பொய்கள் மட்டுமே புழுத்துக் கொட்டும்.
சந்தேகப்படுபவர்களுக்கு தமிழருவியின் வாயே தகுந்த சாட்சி!

கார்ப்பரேட் பன்னாட்டு முதலாளிகள் நாட்டையும், மனித ஆற்றலையும் கொள்ளையடித்து,
இயற்கை வளங்களையும் சீரழிப்பதை கால் நடையாகக் கூட கண்டிக்காத,
குறி வைத்து இயக்கம் ஏதும் எடுக்காத இந்த காந்தீய குறி சொல்லி
திராவிட இயக்கம் எனும் பிம்பத்தை அழிக்க
மோடி எனும் பார்ப்பன பிம்பத்தை பயன்படுத்தி
மக்களை வாழவைக்கப் போகிறாராம்!

இதுவும் அவருக்கு ஒரு நம்பிக்கையாம்!
இந்து மதத்தின் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது தான் இதன் உள்ளருத்தம் போலும்!
அதாவது கருணாநிதி, ஜெயாவின் கன்னக் கோலை மோடியின் சூலத்தால் துடைக்கப்போகிறாராம்.
இந்த சந்தடி சாக்கில் மோடியே ஒரு கார்ப்பரேட் கன்னக்கோல் எனும்
முழுப்பூசணிக்காயை பார்ப்பன பிராசாதத்தில் மறைப்பதுதான் தமிழருவியின் தகிடுதத்தம்.

பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளை ஏற்கனவே பிழைப்புவாத அரசியல் வழி
தமிழகத்தில் காலுன்ற வைத்த திராவிடக் குருவிகளுக்கு
இந்த அருவி என்ன மாற்றை முன்மொழிந்து விட்டார்!

கருணாநிதி செய்தால் காரியவாதம்.
வைகோ செய்தால் மாற்று அரசியல்!
இந்தத் தரகு வேலைக்கு தமிழருவிக்கு பார்ப்பன கவரேஜ்!
வீடணர்கள் இல்லாமல் ராமஜெயம் இல்லை
காலந்தோறும் தமிழருவிகள் இல்லாமல் மோடி உலா இல்லை.
கருணாநிதி புடுங்கினால் புல்!
தான் புடுங்கினால் தர்ப்பை என்பதுதான்
தமிழருவியின் மாற்று சிந்தனை யோக்கியதை!

அம்பலப்பட்டுப் போன அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட
சமூக விமர்சகர்களாகவும்,
சொற்பொழிவாளர்களாகவும்,
மாற்றுக் கருத்தாளர்களாகவும்
மாய்மாலம் செய்யும் ஊடகப்பிறவிகள்
ஒருவித அரசியல் ஒட்டுண்ணிகள் என்பது மட்டுமல்ல,
அறியப்பட்ட அரசியல் பிழைப்புவாதிகளை விட
இவர்கள் தான் அதிக ஆபத்தானவர்கள் என்பதற்கு
தமிழருவியின் தரகு வேலைகள் நிரூபணங்கள்.

ஆயிரக்கணக்கான இசுலாமிய மக்களை படுகொலை செய்து
கருவிலிருக்கும் சிசுவை சூலத்தால் குத்தி நரவேட்டையாடியக்
காவிக் கும்பலின் ‘காவிய நாயகன் நரேந்திர மோடியை’
நாட்டைக் காட்டிக் கொடுக்கும்,
இயற்கை வளங்களை சூறையாடும்
கார்ப்பரேட் நிறுவனங்களின்  மூலதன தவத்திற்கு அடியாள் ராமன் வேலை செய்யும்
மோடி எனும் தேச விரோதியை,
தேசத்தின் கதாநாயகனாக சித்தரிக்கும் தமிழருவியின் கரசேவை
பார்ப்பன – பாசிசத்துக்கெதிராக போராடி உயிர்நீத்த
சமூகப் போராளிகளின் சார்பாக கண்டிக்கத்தக்கது.

ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் போக்கில்
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும்
மறுகாலனிய கொள்கையின் மூலம்
ஊழலும், முறைகேடும், தேசவளங்கள் சூறையாடும் அரசியல் போக்காக
அமலாகிக்கொண்டிருக்கும் முழு உண்மையை
நக்சல்பாரி அரசியல் அமைப்புகள் மட்டும் தான்
மக்களிடம் போராடிச் சொல்கின்றன.

இந்த ‘மாற்று’ அரசியலை தேசத்தின் அமைதிக்கு, ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றும்,
அகிம்சை வழியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் பாதையே வழி என்றும்,
திராவிடக் கட்சிகள் மட்டும் தான் தீங்கு என்றும்
மடைமாற்றும் ஆளும்வர்க்க கைக்கூலிகளின்
ஒரு அவதாரம் தான்! ‘தமிழருவி’

பிரிட்டிஷ் அடக்குமுறைச் சட்டங்கள், திட்டங்களுக்கு
எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுந்து போராடிய போதெல்லாம்,
பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் பாராளுமன்றத்தில் குண்டு வீசி
காலனியாதிக்கத்திடம் கணக்கு தீர்த்த போதெல்லாம்,
காந்தி மடைமாற்றி உண்ணாவிரதம் என்று
நூல் நூற்று நூல் விட்ட மாதிரி

மறுகாலனியாக்கத்திற்கு எதிராக குமுறும் மக்களின் மனநிலையை
மறுபடியும் ஆளும் வர்க்கம் தேர்தல் கோப்பையில் வடித்துக் கொள்ள விழைகிறது.
இதில் இசுலாமிய ரத்தத்தாலும் தலித்துகள் ரத்தத்தாலும்
விவசாயிகள், தொழிலாளிகள் ரத்தத்தாலும்
நிரம்பிய  மோடி எனும் கொலைகார கோப்பையை
தமிழர்களின் கையில் திணிக்க வேலை பார்க்கிறார் தமிழருவி.

கழுத்தில் ஒரு கருப்பு பேண்ட் பிட்டை போட்டுக் கொண்டு
பேச்சில் தமிழன் என்று ஒரு பிட்டை போட்டுக் கொண்டு
அன்று அத்வானி, வாஜ்பாய் பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு
காவடி தூக்கிய வைக்கோ தான் தமிழருவி கண்டுபிடித்த தகுந்த முதல்வர்.

நான் பொதுவானவன்  அரசியல் சார்பற்றவன்  நல்லதையே நாடுபவன்
என்று பேசிக்கொண்டே
குறிப்பாக பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு
அல்லக்கை வேலை பார்க்கும் தமிழருவி போன்றவர்கள் தான்
அறியப்பட்ட பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க தமிழருவி மட்டுமல்ல
தமிழாறு, தமிழ்வாய்க்கால், தமிழ்க்குட்டை…
என காவிப்புழுதிகள் நிறையவே கிளம்பும்!
தெருவை சுத்தமாக்க நமக்கும் வேலை இருக்கிறது நிறைய!.

– துரை. சண்முகம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. கவிதை நடையில் காவிய பயங்கரவாதத்தையும்,தமிழருவியின் அயோக்கியத்தனத்தையும்,மோடியின் முகத்திரையையும் கிழித்த தோழருக்கு மிக்க நன்றி

  • கருணாவும்தான் மோடி எதிர்ப்பைப் பற்றி சனநாயகத்தில் இதெல்லாம் சகஜமப்பான்னு மழுப்பல் பேட்டி கொடுத்து கூட்டணிக்கு ஒரு கதவை தொறக்கறார்.. எல்லாரும் பண்ணததான் மணியன் செய்கிறார்.. என்னவோ மணியன ஒரு குத்தவாளி போல சித்தரிச்சிட்டு.. அட போங்கப்பா….

 2. மோடி பற்றி அல்லது தமிழ் அருவி மணீயன் பற்றி எது வேண்டுமானலும் எழுதுங்கள் ஆனால் வைகோ வை விட தமிழக உரிமைகாக அதிகம் போராடியவர் யார் என்றூ கூர முடியுமா? திரு – துரை. சண்முகம் அவர்கலளே?. வைகோ முதல்வர் ஆக எல்லா தகுதியும் இருக்கிரது.

  • thampi kumaru vaiko katchi karanga saathi veriyala veripudichu mana noyaliya valurom vaikova avanka katchi karanga kitta sc makkala sinkala rajapakcheva vida konjam kammiyaththam nama pakkanumnu oru statement vida soallu

   • அண்ணா,நான் இதுவரை வைகோ. தாழ்தபட்டவர்கள் பாதிக்கும் அளவு நடந்து கொன்டதாக கேள்வி படவில்லை. தமிழக தலைவர் யாருகு தகுதி இருக்கிறது என்றூ கூறூகிறீற்கள்?

    • annan jeyalalitha than piya thinkravaluku than katchi poruppa vittu koaduthuttu arasiyala vittu othukividuvannu soanna panneer selvathukku munnadi jeyalalitha piya rusighu thingura athletic veeran unka vaikoa va thaan erupparu

     • உங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் எனக்கு ஏர்புடையது அல்ல. இந்த வலைதளம் எல்லோறூம் படிக்கும் தலம் என்றூ நினைதேன். இப்போது நகரியில் நடப்பதை மறந்து 2011 ல் நடந்ததை எழுதியதில் இருந்து இதன் நோக்கம் புரிகிறது. இனி நான் இந்த வலை தலம் வர மாட்டேன். உஙகளூக்கு மறூப்பு எழுத மாட்டேன் மன்னிக்கவும்.

      • nanbar mannikkavum sila visayangal manathil sakikka mudiyatha aaratha thunba vaduvai undakiyathaal yerppatta arivillatha aaththiram…yen pathivai vinavuvil erunthu neeakka aalosanai kurunkal..please madrathai yeppadi veandumanalum peasikkoalvoam please…yen aaththiraththin pin pulaththai neangal purinthu koalvear please

      • annan please yen soantha pathipin thuyarththil erunthu arivillatha kial tharamamaka yeluthivittean mannikavum intha pathivai neakka alosanai soallavum madrathai peasikkolvom please yen thuyarin pin pulam pinner near arivear

       • நடந்தவை மறைந்து இனி வரும் காலைங்களில் ஆரோக்கிய விவாததில் பங்கு கொள்ளூமாறூ கேட்டு கொள்கிறேன்.

  • “வைகோ முதல்வர் ஆக எல்லா தகுதியும் இருக்கிரது”

   ஆமாம் மக்கள் செல்வாக்கை தவிர!!!
   விடுதலைப் புலிகள் செய்த அனைத்து கொலைகளுக்கும் இவருக்கும் பங்கு உண்டுதான்!!!!!!

   • yele sc makkal intha naatin purva kudikal inntha naattai uru maatri pasumai aakki ulaipai seluthiya paattali varga munnotikal vaiko[mdmk]katchi nayakka maru avangakala yeppvum soaldra varthai yenna theriuma mealpadi parti avangala piya poala ninachu valuranga ethu un vaikovukku theriyathunnu ninaikkuriya sathiya thedamaiya un vaiko arasiyala etukka soallu avar kiramaththilaye avarukku yevvala yethirpu varuthinnu paaru

   • ஐயா வைகோ ஐநா சபை தலைவராகக்கூடஆகட்டும் எங்களுக்கு வருத்தம் இல்லை.ஆனால் நாயக்கர் ஜாதி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பார்க்கும் மனப்பாண்மைக்கு தன் கருத்தை வைகோ கூற வேண்டும்

 3. இப்படியே எதையாவது எழுதி கருணா மற்றும் ஜெயா கும்பலின் கீழ் தமிழனை நாசமாய் போக செய்யும் உங்கள் தொண்டு வாழ்க.

  பல நாட்கள் போராடும் உங்களின் சாதனை என்ன. அதே தெருமுனையில் போராட்டம், அதை செய்து வினவு சாதித்தது என்ன. உங்களுக்கு உள்ள கொள்கையை விட தமிழருவிக்கு கொள்கை பிடிப்பு அதிகம்.

  • ////தெருமுனையில் போராட்டம் செய்து வினவு சாதித்தது என்ன/////

   வினவுவின் வேலை மக்களை கொம்பு சீவிவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான். ஆனால் மக்கள் நல்லவர்கள். அதனால் தான் வினவு போன்ற “இஸ்லாமிய” பயங்கரவாத வலையில் விழவில்லை. நல்லவர்கள் நாட்டை ஆளவேண்டும் என்று தமிழுருவி மணியன் போன்றவர்களின் ஆசை.
   இதுவரை சோனியா எதோ நல்லது செய்துவிட்டதுபோல் வினவு நினைக்கிறது போலும். சுதந்திர இந்தியாவில் சோனியா ஆட்சி போல் மிக மோசமான ஆட்சி நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அமெரிக்க டாலருக்கும் பெட்ரோ டாலருக்கும் ஆசைப் படுபவர்களுக்கு இது தெரியாது!!!!!!

   • லூசு நாட்றாயா,

    //
    இதுவரை சோனியா எதோ நல்லது செய்துவிட்டதுபோல் வினவு நினைக்கிறது போலும்.அமெரிக்க டாலருக்கும் பெட்ரோ டாலருக்கும் ஆசைப் படுபவர்களுக்கு இது தெரியாது!//

    இதற்க்கு ஒரே ஒரு ஆதாரத்தை கொடு பார்ப்போம்.

 4. //‘தமிழருவி’ கல்லா கட்ட தகுந்த வாய்ப்பற்று போனதால்,//

  இது சொல்கிறது உங்களின் அறிவின், புரிதலின் லட்சணத்தை. மற்றவனி விமர்சிக்கும் முன் அவனை பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்.

 5. //கார்ப்பரேட் பன்னாட்டு முதலாளிகள் நாட்டையும், மனித ஆற்றலையும் கொள்ளையடித்து,
  இயற்கை வளங்களையும் சீரழிப்பதை கால் நடையாகக் கூட கண்டிக்காத,
  குறி வைத்து இயக்கம் ஏதும் எடுக்காத இந்த காந்தீய குறி சொல்லி
  திராவிட இயக்கம் எனும் பிம்பத்தை அழிக்க
  மோடி எனும் பார்ப்பன பிம்பத்தை பயன்படுத்தி
  மக்களை வாழவைக்கப் போகிறாராம்!//
  வரிக்கு வரி உண்மைக்கு புறம்பான தகவல்களை தருவது, கண்ணை மூடிக்கொண்டு வாய்க்கு வந்ததை எழுதுவதை இந்த கட்டுரையாளர் நிறுத்த வேண்டும். நீ செய்யவில்லை என்று சொல்லும் அனைத்தையும், உங்கள் அனைவரையும் விட மணியன் கண்டித்திருக்கிறார். வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உள்ளார்.

 6. //மோடி ஒரு கொலைகாரன் என்பதை உங்கள் எல்லாரையும் விட மணியன் அறிவார்.

  காந்தியை கொன்ற RSS இயக்கத்திற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்பதை உங்களை எல்லாம் விட மணியன் நன்கு அறிவார்.

  பின் எதற்காக இந்த ஒரு நிலைப்பாடு என்பதை யோசித்து பாருங்கள். உங்களுக்கு அறிவு என்று ஒன்று இருக்குமானால் அது தானாக புரியும், இல்லை என்றால் ஒரு சில நாட்கள் பொறுங்கள். விரிவான பதிலுடன் சந்திப்போம்.

  பின்குறிப்பு : என்னை பொறுத்த வரையில், மோடி என்பவன் கொலைகாரன் மட்டுமல்ல , ஒரு கையாலாகதவன், அவனோடு ஒன்றி உறவாடும் சு சுவாமி என்பவன் என்னுடைய ஒரே எதிரி, ராஜீவை கொன்றவன் மற்றும் தமிழ் இனத்தின் துரோகி. இவைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இருந்தும் எனக்கு மணியனின் செயல் வியப்பை தரவில்லை, கோபத்தை தரவில்லை. ஏன் யோசியுங்கள் விரிவான பதிலுடன் பிறகு சந்திப்போம்.
  //

  இது தான் எனது facebook பக்கத்தில் பல நாட்களுக்கு முன்பு நான் இட்ட பதிவு.

  • //// என்னை பொறுத்த வரையில், மோடி என்பவன் கொலைகாரன் மட்டுமல்ல , ஒரு கையாலாகதவன், அவனோடு ஒன்றி உறவாடும் சு சுவாமி என்பவன் என்னுடைய ஒரே எதிரி, ராஜீவை கொன்றவன் மற்றும் தமிழ் இனத்தின் துரோகி. இவைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இருந்தும் எனக்கு மணியனின் செயல் வியப்பை தரவில்லை, கோபத்தை தரவில்லை. ஏன் யோசியுங்கள்//////
   என்னத்தை யோசிக்க … உள்ளிருக்கும் மத வெறியை மறைத்துக்கொண்டு காங்கிரசை ஒழிக்க இந்த நிலைப்பாடு என்று சொல்வீர்கள் அப்படித்தானே ????? //////மதவெறி தலைக்கேறியவன் வாயிலிருந்து பொய்கள் மட்டுமே புழுத்துக் கொட்டும்.
   சந்தேகப்படுபவர்களுக்கு தமிழருவியின் வாயே தகுந்த சாட்சி!//// உங்க வாய் 2 வது சாட்சி .

 7. தேர்தல் நெருங்க நெருங்க தமிழருவி மட்டுமல்ல
  தமிழாறு, தமிழ்வாய்க்கால், தமிழ்க்குட்டை…
  என காவிப்புழுதிகள் நிறையவே கிளம்பும்!
  தெருவை சுத்தமாக்க நமக்கும் வேலை இருக்கிறது நிறைய!.—-ஆமாமாம் நிறைய………..

 8. அடுத்தவர்களை குறை கூறியே பெயர் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறீர்கள்…………. தன்னுடைய கொள்கையின் மேன்மை பெருமை பற்றி எழுதாமல், அடுத்தவர்கள் எல்லோரையும் மட்டம் தட்டி இறுதியில் நீங்கள் மட்டுமே கொள்கைபிடிப்பு வாதிகள் என்று நிறுவ இதுமாதிரி காட்டுரை எழுத விழைகிறீர்கள்………….. அடுத்தவன் எக்கேடு கேட்டல் உங்களுக்கு என்ன…….? உங்கள் பொருள் வியாபாரம் ஆகா வேண்டுமானால் ,உங்கள் பொருளின் சிறப்பு பற்றி கூறுங்கள். இதை விடுத்து………… அடுத்தவர்களின் பொருள் சரியில்லை என்று கூறி உங்கள் பொருளை விற்க முயலாதீர்கள்…….. உங்களுக்கு உள்ள பிரச்சினையே இதுதான்…. மத தீவிரவாதிகளுக்கு உள்ள மன நிலையம் உங்கள் மன நிலையம் ஒன்றுதான்………… என்ன அவர்கள் மத வெறி பிடித்து திரிகிறார்கள்……… நீங்கள் மார்க்சிச வெறி பிடித்து திரிகீறீர்கள்……

  • ///அவர்கள் மத வெறி பிடித்து திரிகிறார்கள்……… நீங்கள் மார்க்சிச வெறி பிடித்து திரிகீறீர்கள்///

   அதுமட்டுமல்ல வினவு மார்சீயம் வெறி மட்டுமல்ல இஸ்லாமிய மதவெறியும் பிடித்து திரிகிறது. பிழைக்கத் தெரிந்தவர்கள். பத்துபேரை குளோசப்பில் படம் பிடித்துபோட்டு மாபெரும் போராட்டம் என்றும் போராட்டும் மாபெரும் வெற்றி என்றும் போட்டு தம்மட்டமடித்துக்கொள்கிறது!!
   திருச்சியில் மோடிக்கு கூடிய கூட்டத்தைப் பார்க்கவில்லை போலும். அதனால்தான் வயிற்றெரிந்து புலம்புகிறார்கள். பத்து ருபாய் பணம் கட்டி மோடியைப் பார்த்தவர்கள் எங்கே? பத்துப்பேரை குளோசப்பில் படம்பிடித்து போட்டவர்கள் எங்கே?

  • Can u replay the matter which is written by vinavu here?

   If u think தமிழருவி மணியன் is good then answer the question raised by vinavu!

   • செந்தில் அவர்களே, இந்த கட்டுரையாளர் யார் அவர் தொழில் என்ன, அவர் நேர்மைஎன்ன என்று ஒன்றும் தெரியாது. ஆனால் மணியனை பற்றி ஒன்றும் தெரியாமல், தெரிந்தது போல் நடித்து கொண்டு ஒரு பதிவை கொடுத்துள்ளார். ஆக தாங்கள் உண்மை தெரியவேண்டும் எனில் நிரம்ப அறியவேண்டும். ஒருவரியில் சொல்ல வேண்டும் எனில், இவை எல்லாம் பொய்கள், வெற்று பொலம்பல்.

 9. குப்பைகளை என்ன செய்வோம் ? அதுபோன்றே………..இவரின் கருத்துகளையும் கத்தல்களையும் தூக்கிபோடுவோம் எத்தனை..எததனை தமிழருவிகள் சொம்புத்தூக்கினாலும், பித்தளைக்கும் -ஈயத்துக்கும் வித்தியாசம் தெரியாதா தமிழர்களுக்கு ?

 10. தமிழருவி மணியன்
  மதுக்கு எதிராக பேசுகிறார்.

  ஆனால், அரசியல் என்று
  வருகிற போது மட்டும்…

  ஒரு வரம்பு மீறிய
  குடிகாரனின் தடுமாற்றமான
  நிலைப்பாட்டைப் போலவே
  தத்துவ விளக்கம் என்று
  நினைத்துக் கொண்டு..
  தாறுமாறாக உளருகிறார்.

  என் குடிகார நண்பர்கள் யாருமே
  இவ்வளவு மோசமாக அரசியலை
  தவறாக புரிந்து கொண்டதில்லை..!

  தி.மு.க வை வீழ்த்த..
  அ.தி.மு.க. வை ஆதரித்தேன்

  காங்கிரஸை வீழ்த்த..
  பா.ஜ.க.வை ஆதரிக்கிறேன்

  – தமிழருவி மணியன்

  இந்த இழவை தானே
  பொதுமக்களாகிய
  நாங்கள் –
  காலம் காலமாக
  செய்து வருகிறோம்.

  இதுக்கு நீங்கள்
  எதற்கு அறிவாளியே?

  குடிகாரர்கள் மட்டும் தான்
  வரைமுறை இல்லாமல்
  உளருவார்கள் என்கிற..

  என் மூட நம்பிக்கையை
  உடைத்த..
  தமிழருவி மணியனுக்கு
  நெஞ்சார்ந்த நன்றி..!

 11. இதே இந்த தமிழருவி மணியனுக்கு 50000/- பணமும் கூட அவரது இரண்டு புத்தகங்களுக்கு மத்திய அரசின் விருதும் கூடவே பத்து புத்தகங்களுக்கு மானியமும் கொடுத்தால் காங்கிரஸ் அரசு போன்று வருமா என்று அப்போது கேட்பாரா இவர் ? அப்போது மட்டும் காங்கிரஸ் என்பது மத்திய அரசினை நடத்தும் கட்சி என்று தெரிய வருமா அவர்க்கு ? வாசகர்கள் கூற வேண்டும் அரசவை கவியாக மாற துடிக்கும் இந்த புலவருக்கு ?

 12. இத் துணை அகங்காரம்,வல்லாண்மை கூடாது !

  ” 53 ஆண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி, தங்கள் சாதனையைச் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாதது வேதனையாக இருக்கிறது என்று கண்ணீ ர் வடிக்கும் த‌மிழருவி மணியன் அவர்கள் நீண்டகாலம் காங்கிரசில் இருந்துவிட்டு வெளியேறியவர்.

  காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு துரும்பளவு கூட அசையாதவர் காங்கிரஸ் பேரால் வளமும் வளர்ச்சியையும் அடைந்து முகவரியை தேடிக்கொண்டவர். இன்று காங்கிரஸ் கட்சி குறித்து வேதனைப் படுவதில் விரசம் வழிகிறது.

  அரசியல் கணக்கில் அவர் ஆரிய சாணக்கிய அவதாரமாக இருந்து விட்டுப் போகட்டும்.

  ஆனால் ” மோடி என்ற பிம்பத்தை தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை அழிக்க பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறேன்,” என்று கூறியுள்ள தமிழருவி மணியனால் தி.மு.க., அ.தி.மு.க.வை அழிக்க முடியுமா ? திமுக கலைஞர் ஆட்சியில் உயர் பதவியில் ஐந்தாண்டு பதவிச் சுகம் அனுபவித்ததை மறந்துவிட்ட செய் நன்றி கொன்ற‌ தற்கு தமிழ் சமுதாயம் கை கொட்டிச் சிரிக்குமே தாங்க முடியுமா தமிழருவி மணியனால் ?

  மோடி என்ற பிம்பத்தை பயன்படுத்தி தி.மு.க., அ.தி.மு.க.வை அழிப்பது ஒரு புறம் இருக்கட்டும் முதலில் தி.மு.க., அ.தி.மு.கவின் சுவரோட்டிகளையாவது தமிழகத்தில் மோடி என்ற பிம்பத்தை பயன்படுத்தி கிழிக்க தமிழருவி மணியன் அவர்களால் முடிகிறதா என்று பார்க்கட்டும் .

  தமிழ் நெறி பேசி,காந்தியம் பேசி தமிழரறிஞராக தன்னை அடையாளப் ப‌டுத்திக் கொண்ட தமிழருவி மணியன் அவர்களுக்கு இத்துணை அகங்காரம்,வல்லாண்மை கூடாது !

  • //திமுக கலைஞர் ஆட்சியில் உயர் பதவியில் ஐந்தாண்டு பதவிச் சுகம் அனுபவித்ததை மறந்துவிட்ட செய் நன்றி கொன்ற‌ தற்கு தமிழ் சமுதாயம் கை கொட்டிச் சிரிக்குமே தாங்க முடியுமா தமிழருவி மணியனால் ?// அது என்ன உயர் பதவி?

 13. அரசியலை நம்பி பிழைப்பு நடத்தும் ஏராளமான “அருவிகள்” உள்ளன..
  அப்பா குமரி அனந்தன் சோனியாவிடம் கைக்கூலி…
  மகள் காவிகளின் டீ.வி பேச்சாளர்…
  பேரன்(?) அனேகமாக ஜன்னல் வைத்து ஜாக்கேட் போடும் கட்சியில்
  “மூழ்கிவிடுவான்”

  • ரங்கராசன் குமாரமங்கலம் காங்கிரசு கயவாளிகளின் கூடாரம் கலகலத்து விட்டது என 98 ல் காவி கட்சிக்கு தாவியபோது இந்த குமரி அனந்தன் இப்படி சொன்னார்.

   பீடியை கடைசி வரை சுண்டி இழுப்பது போல் காங்கிரசை வைத்து அப்பன் பாட்டன் மகன் என்று பரம்பரையாக பதவி சுகம் அனுபவித்தவர்கள் இப்போது ஓடுகிறார்கள் என்றார்.இப்போது அண்ணன் தம்பி என குடும்பத்தோடு காங்கிரசை வைத்து வயிறு வளர்த்தவர்கள் வாரிசு காவி கும்பலுக்கு சொம்பு தூக்குவதற்கு என்ன சொல்கிறார் என்று யாராவது கேட்டு சொல்லுங்களேன்.

 14. தமிழருவி மணியன் குற்றால அருவியில் மசாஜ் செய்து செய்து பிழைப்பு நடத்தலாம் கவுரவமாக இருக்கும்,ஆனால் மோடியை …ஆதரித்து பிழைப்பு நடத்த வேண்டுமா ? ” அருவி என்று பெயர் இருக்கும் போதே நினைத்தேன்,மேலே இருந்து கீழே விழுவார் என்று …ஆனால் இப்படி சாக்கடையில் கலப்பார் என்று எதிர்பார்க்கவில்லை (குற்றால அருவியில் மசாஜ் செய்பவர்கள் மன்னிக்கவும்)இதெல்லாம் ஒரு பொழைப்பு…..த்தூ ……தேரி

 15. வெட்டிப் பேச்சு மாதிரி, இந்தக் கட்டுரை. தமிழருவி தன்னலம் சார்ந்தவர் இல்லை. புழுதி வாரிக் கொட்டாதீர். பொய் பேயாட்டம் ஆடும் காலம் இது.

 16. இது மாதிரியான,நாகரிகம் இல்லாத, வசவு மொழிக் கட்டுரை பதிவாக வினவு இடம் தரலாமா? கருத்துச் சுதந்திரம் என்பது இதுதானா?

 17. Those who are not liked by VINAVU are unfit to live. You waste pages and time but cant plug even poonai mudi . The way in which you attack Vaiko shows you are not neutral more over just blind opposition to all . I am telling Bharathiyar was not given due respect just because people like you cant digest . Maha Kavi appuram yenya porakkalley ? Konjam uyirodirundha pattukkottai innum per petrippaar.

 18. தமிழருவி மணியன் போன்ற தமிழ் மொழி வியாபாரிகளுக்கு பதில் சொல்லி, நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்..

 19. காந்தியை கொன்ற கூட்டத்துடன் கூட்டணி அமைக்க சொல்கிறார் மணியன். இவரல்லவோ சிறந்த காந்தியவாதி!!!!!!

 20. தமிழருவி மணியன்….
  பெயருக்குப் பொருத்தமாய்
  தலைகீழாய் விழுகின்றார்….

  காந்தியின் பெயரால்
  இயக்கம் கண்டவர்
  கோட்சேக்களுக்கு காவடி எடுப்பது
  கண்கொள்ளாக் காட்சி….
  பெருகி வந்த அருவி
  கருகி காவியுடன் கலந்து
  கக்கூஸ் ஆகி விட்டது…….

  இந்திய இனப்படுகொலை
  இயக்கிய மோடி….
  இலங்கையில் படுகொலை
  நிகழ்த்திய ராஜபக்சே …..
  இருவருக்கும் கூஜா தூக்கும்
  அறுவறுப்பின் பாஜாகவை
  தாங்கி நிறுத்த துக்கடா மணியன்..
  தமிழக மண்ணில் மற்றோர் சனியன்….

  இந்த மத ஒழிப்பு
  மண்ணாங் கட்டியிடம்
  கற்றுக்கொள்ள வேண்டியது
  “குடிக்காமல் உளறுவது எப்படி?”……

  மடை திறந்த அருவிக்கு
  மண்டையும் திறந்து விட்டது…..
  காவிகளுடன் சேர்த்து
  உன்னையும் அழைக்கிறது
  கீழ்ப்பாக்கம்…சென்னை பத்து…

 21. ஈழப் பிரச்சினையில் காங்கிரசுக் கட்சியின் எதிர்ப்பைக் கண்டு சினமடைந்து அக்கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான தமிழருவி மணியன். தேர்தல் பிரச்சாரத்தில் எல்லாக் கட்சிகளும் ஈழத்தை மறந்தும் மறுத்தும் கூட்டணி அரசியிலை சில தொகுதிகளைப் பெறவேண்டுமென்பதற்காக பரப்புரை செய்துவருகின்றன. இதை அம்பலப்படுத்தி ஜூனியர் விகடன் ஏப்ரல் 5 இதழில் தமிழருவி மணியன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இது அவரது ஒப்புதலோடும், ஜூனியர் விகடனுக்கு நன்றி தெரிவித்தும் இங்கு வெளியிடப்படுகிறது.

  இந்த கட்டுரை 2009 ல் வினாவில் வந்தது ….

  தமிழருவி மணியன் அப்போது நல்லவர் ……

  மோடியை ஆதரித்ததால் இப்போது கேட்டவர்……

  வினவு கட்டுரை என்கிற பெயரில் ஏன் சாகடிக்கிரீர்கள் …..

  இந்த பிழைப்பிற்கு ………………………………..

  • //தமிழருவி மணியன் அப்போது நல்லவர் ……

   மோடியை ஆதரித்ததால் இப்போது கேட்டவர்……//
   மோடியை ஆதரிப்பதால் கெட்டவர் அல்ல மோடி என்ட்ர கொலைகாரனை, இனபடுகொலையை செய்தவனை ஆதரிப்பதால் எதிர்க்கிரோம்
   இலங்கையில் தமிலனை கொன்ரால் மட்டும் இனபடுகொலையை குஜரதில் முச்லிம்கலை கொன்ட்ரால் அது…

   மனி சிந்தியுங்கல் (மனசாட்ச்சி இருந்தால்)

 22. இப்படி எல்லாம் கேட்க கூடாது. அவர்களுக்கு அப்பொழுதே தெரியும் மணியன் யார் என்று, அதைதான் முதல் பாராவில் இவர் சொல்லியுள்ளார்.

  //ஆசிட் அடிப்பது,
  மனைவியையே தந்தூரி அடுப்பில் வறுத்தெடுப்பது
  என்ற காங்கிரசின் அகிம்சைக் கலாச்சாரத்தில்,
  ‘தமிழருவி’ கல்லா கட்ட தகுந்த வாய்ப்பற்று போனதால்,//

  வினவு வாசகர்களுக்கு அப்பொழுது புரியாது என்பதால் சொல்லவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க