Tuesday, September 27, 2022
முகப்பு புதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2013

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

 •  “குஜராத் முசுலீம் படுகொலை குற்றவாளி! டாடா – அம்பானிகளின் எடுபிடி! இந்து மதவெறி பாசிஸ்டு! இந்தியாவின் ராஜபக்சே மோடியின் முகமூடியைக் கிழிப்போம்!” – பிரச்சாரம், போராட்டங்கள்
 • வடக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள் : கானல் நீர் தாகம் தீர்க்காது!
 • காங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி?
 • கச்சத்தீவு: காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்
 • துல்சியான் ஆலை : முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம்!
 • நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே!
 • “கொலைக்கடவுளின் லீலைகள்!”
 • குஜராத்: மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகள்  போராட்டம்!
 • உ.பி. இந்து மதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல்!
 • கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறி மரபு!
 • “உயர்நீதிமன்றத்தில் தமிழ்! வழக்குரைஞர்களின் போராட்டம் வெல்லட்டும்!” – புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்!
 • உணவுப் பாதுகாப்புச் சட்டம் : காங்கிரசின் நயவஞ்சகமும் கார்ப்பரேட் கும்பலின் வயிற்றெரிச்சலும்
 • சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம்!
 • அசாராம் பாபு: கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள்!
 • எதிர்கொள்வோம்!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்.

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

 1. இதழுக்கு நன்றி,எல்லா பதிவுகளையும் ஒருபக்கச்சார்பின்றி எழுதுகிறீர்கள், மென்மேலும் வளர்க

 2. முதாலிளித்துவ சமூகஅமைப்பை கட்டிகாத்து வருபவர்கள் மோடியும் ராஜயபக்சாவும் என்று சொன்னால் அது நியாயமானதே!
  அதே நேரத்தில் விடுதலை எடுத்துத் தருகிறோம் ஆயுதம் தூக்கி விட்டோம் எம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என பேரிகை முழங்கியவர்களே தமது இனத்திற்கு கூடுதலாக துன்பம் விளைவித்தவர்களாக இருக்கிறார்கள்.

  நான் ஈழத்தில் பிறந்தவன் ஈழத்து தமிழன்யரசில் என்பது பல மாயஜாலவர்ணம் கொண்டது. பிரித்தானியர் ஆட்சி காலத்தில் வலுகட்டாயமாக கொண்டு வரப்பட்ட தமிழனைக் கூட தமிழனாக ஏற்றுக் கொண்டது கிடையாது தமிழ் அரசியல்.

  அவர்களின் பாஷையில் “தோட்டக்காட்டன்” அல்லது பட்டிக்காட்டான். தமிழனே யார் என்று தெரியாத அரசியல் தான் இலங்கை வடபகுதி ”
  அப்புக்காத்து” அரசியல். இந்த விதத்தில் ஒப்பிடும் போது
  சிங்களமக்களே ராஜயபக்சா அரசோ தமிழ்மக்களுக்கு பெரிய அளவில் கொடுமை புரிந்தது கிடையாது
  புரிந்தது எல்லாம் நிலப்பிரபுத்துவ சிந்தனைக்கும் முதாலித்துவ சிந்தனைக்கும் இடையில் ஊசல்லாடிக் கொண்டிருக்கிற தமிழ்-குறிப்பாக வடபகுதி மத்தியதர வர்க்கமே காலம் காலமாக கொடுமை புரிந்தவர்கள். பல இனக்கலவரத்திற்கும் இவர்களின் பங்கு அரைவாசிக்கு உட்பட்டது.

  வரும் காலத்தில் மோடியும் ராஜயபக்சாவும் தோற்கடிக்கடிக்கப் பட வேண்டியவர்கள் தான் ஆனால் அது இனயுணர்வுடனோ மத உணர்வுடனோ முடியாத காரியம்.

  சாத்தியமானது வர்க்கயுணர்வு வர்க்ககட்சி ஒன்றினால் மட்டுமே!
  சீமான் போன்ற வாய்சவாடல்களை விட்டொழியுங்கள்.

  விடுதலைக்கு புறப்பட்டு ஆயுதம் ஏந்திய ஆயுதாரிகளேயே இன்று ஏகாதிபத்தியத்தியம் தனது அபிலாஷைகளை தீர்த்துக் கொண்டிருக்கிறது. உதாரணம் லிபியா சிரியா.

  இன்னும் வரவிருக்கிறது என்னென்னவோ?. இந்த விதத்தில் புலிகளும் நக்ஸலட்களும் ஒருயினவே!. நக்ஸலைட்டுகளை பற்றி பெரிய செய்திகள் வராவிட்டாலும் மூன்றுலட்சம் மக்களை ஆயுதமுனையில் தடுத்துநிறுத்தி வைத்து கொடுமைகள் புரிந்த புலிகளின் இடத்திற்கே அவர்களையும் இட்டுச் செல்லும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க