Monday, August 15, 2022
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் : கானல்நீர் தாகம் தீர்க்காது !

வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் : கானல்நீர் தாகம் தீர்க்காது !

-

தமிழ் தேசிய கூட்டமைப்புலங்கையின் வடக்கு மாகாண சபைத் தேர்தல்களில் முடிவுகள் வந்தவுடன் அதில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு  பின்வரும் செய்தியுடைய அறிக்கை ஒன்றை வெளியிட்டது:

‘‘மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு மிகவும் தெளிவானதாக உள்ளது. ஐக்கிய, பிளவுபடாத நாட்டிற்குள் பாதுகாப்பாகவும் சுயமரியாதையோடும், கௌரவமாகவும் போதிய சுயாட்சி பெற்று வாழ்ந்து தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, அபிலாசைகளை அடைய விரும்புகிறார்கள். இந்த இலக்கை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்போடு செயல்படும்  அதே வேளையில், அரசாங்கமும் தனது பங்களிப்பை முழுமையாகச் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தேர்தலின் பெறுபேறுகள் – அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கின்றது.”

தேர்தலுக்கு முன்னும் பின்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இதே கருத்தை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்து விட்டார்கள். ‘தமிழீழத் தனியரசு  என்ற எங்களது நிலைப்பாடு மாறுதல் அடைந்துள்ளது. ஈழப் போரால் ஈழத்தைத் தர முடியபில்லை. எனவே, ஜனநாயக முறைப்படி அரசாங்கம் எதனைச் சட்டப்படியாக ஏற்றுக்கொள்கிறதோ, அதை முன்வைத்துத்தான்  மாநில சுயாட்சிக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் இனி போராட்டத்தை நடத்துவோம். இதில் பிரிவுக்கு இடமில்லை. ஒரே இலங்கையினுள் எங்களை நாங்களே ஆளும்விதமாக சம உரிமை என்னும் தீர்வைக் கொண்டுவரத்தான் முனைப்புக்காட்டி வருகிறோம்” என்று சொல்லி விட்டார்கள்.

இதையே முள்ளிவாய்க்காலுக்கு முன்பு இவர்கள் சொல்லியிருந்தால், அமிர்தலிங்கம் போன்ற தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களைப் போல இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப் பட்டிருப்பார்கள். இன்றோ, ஆற்றாமையில் கிடந்து புரளும் புலம் பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்கள் சிலர் ஈனக்குரலில் தமது எதிர்ப்பை இணையத் தளங்களில் புலம்புகிறார்கள். ‘தமிழக அரசியல்வாதிகள் தமது சுயநலனுக்காக ஈழ இனப் பிரச்சினையைப் பயன்படுத்துகிறார்கள்’ என்றும், ‘இனி ஈழப் பிரச்சினையில் தமிழகத் தமிழினவாதிகள் தலையிட வேண்டாம்; அது இலங்கை அரசுடனான இராணுவ வெளியேற்றம், ஈழத் தமிழருக்கான சம உரிமைப் போராட்டத்துக்கு ஊறு விளைவிக்கிறது’ என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சொல்லியும் கூட, தமிழகத் தமிழினவாதிகள் விளக்கெண்ணையில் வெண்டைக்காய் வறுப்பதற்கு எத்தனிக்கிறாரர்கள். 1962 – இல் பிரிவினை எதிர்ப்புச் சட்டம் வருவதாக மிரட்டியதும் திராவிடத்தைக் கைவிட்டு மாநிலச் சுயாட்சியைக் கையிலெடுத்தன, கழகங்கள். அந்நிலைக்குப் போய் விட்டது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

இராஜபக்சேவையும், ஈழத் துரோகிகளையும் மாகாண சபைத் தேர்தல்களில் ஈழ மக்கள் தோற்கடித்து விட்டதைச் சொல்லித் தமிழகத் தமிழினவாதிகள் அனைவரும் வரவேற்கிறார்கள். இங்கிருந்து தொடங்குவோம், இந்த வெற்றியைத் தமிழீழத் தாகம் தீர்க்கப் பயன்படுத்துவோம் என்று நம்பச் சொல்லுகிறார்கள். கானல் நீரைக் குடித்து தாகம் தீர்க்கவோ, பொய் நெல்லைக் குத்திப் பொங்கவோ முடியாது. ஏற்கெனவே, சர்வதேச சமூகத்துக்கும் ஐ.நா. சபைக்கும் இந்திய அரசுக்கும் அழுத்தம் கொடுப்பது என்ற தந்திரத்தின் கீழ் தமிழீழத் தீர்வைத் தமிழினவாதிகள் தள்ளி விட்டார்கள். இவ்வாறு சொல்வதன் மூலம் தமிழீழ விடுதலைக்கான ஈழத் தமிழர் தன்னுரிமைக்கு நாம் எதிரானவர்கள் என்று தமிழகத் தமிழினவாதிகளும், புலி ஆதரவாளர்களும் நம் மீது வழக்கம் போல அவதூறுகளை அள்ளி வீசக்கூடும். ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமரச சரணடைவுக்கும் புலிகளின் பாசிச இராணுவவாதத்துக்கும் மாறாக, தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழான புதிய ஜனநாயகப் புரட்சியின் அங்கமாக தமிழீழ விடுதலைக்கான ஈழத் தமிழர் தன்னுரிமை ஆயுதப் போராட்டம் அமைய வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.

-தலையங்கம்
___________________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
___________________________________________

 1. // ‘தமிழக அரசியல்வாதிகள் தமது சுயநலனுக்காக ஈழ இனப் பிரச்சினையைப் பயன்படுத்துகிறார்கள்’ என்றும், ‘இனி ஈழப் பிரச்சினையில் தமிழகத் தமிழினவாதிகள் தலையிட வேண்டாம்; அது இலங்கை அரசுடனான இராணுவ வெளியேற்றம், ஈழத் தமிழருக்கான சம உரிமைப் போராட்டத்துக்கு ஊறு விளைவிக்கிறது’ என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சொல்லியும் கூட, தமிழகத் தமிழினவாதிகள் விளக்கெண்ணையில் வெண்டைக்காய் வறுப்பதற்கு எத்தனிக்கிறாரர்கள் //

  மகஇக வை யாருமே ஏற்றுக் கொள்ளாத போதும் நாங்கள்தான் புரட்சிக்கு பாட்டாளிகளை தயார் செய்கிறோம் என வெறும் கையில் முழம் போடுவது போலவே தமிழக தமிழ்த்தேசிய வாதிகளும் நினைத்துக் கொண்டிருக்கலாம் , விக்னேஸ்வரன் போன்ற சிங்கள கூட்டாளிகள் சொல்லிற்கு செகப்பு தரும் மதிப்பு செகப்பின் முகமூடியை கிழிக்கிறது .

  • திரு.மணி அவர்களே, நீங்கள் ம.க.இ.க.-வை ஏற்றுக் கொள்ளாவிட்டால் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொருளாகாது. நிற்க.

   தமிழகத் தமிழினவாதிகளைப் பார்த்து த.தே.கூ. சொல்வது போல, ம.க.இ.க-வைப் பார்த்து உழைக்கும் மக்கள் யாரும் “எங்கள் விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்…அது எங்கள் உரிமைப் போராட்டங்களுக்கு ஊறு விளைவிக்கிறது” என்று ஒரு போதும் சொன்னதில்லை…

   • Hello kadri,

    You are playing the game words!!!

    லெனின் said,

    தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்தாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்க மற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

    Try to apply the above our beloved leader Lenin theory in your way!!! Try Try Try!!
    Now tell me the solution for EElam issue!!!!

 2. தமிழர் தேசியக் கூட்டமைப்பு வாகளித மக்களுக்கு துரோகம் செய்கிறது.

 3. முருகன் -.1) ஸ்டாலின் அவர்களால் எழுதப்பட்ட நூலான “மார்க்சியத்தின் அடிப்படை அம்சங்கள்” என்ற நூலில் “தேசிய இனப் பிரச்சினை” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நிலைபாடுகளை ஒவ்வொருவரும் ஏற்கிறீர்களா இல்லையா என்பதை மார்க்சிய ரீதியாக தெளிவுப்படுத்த வேண்டும்.
  2) இன முரண்பாடு இலங்கையில் பகைமுரண்பாடாக இருந்தது, தற்போதும் தொடர்கிறது என்கிறீர்களா? மறுக்கிறீர்களா?
  3) தனி நாடு கோரிக்கையை மார்க்சிய லெனினிய வாதிகள் எப்போது ஏற்கலாம் எப்போது ஏற்கக் கூடாது என்பதற்கு வரையறைகள் உண்டா இல்லையா? அந்த வரையறையை என்னவென்று மார்க்சிய ஆசான்கள் துணைகொண்டு விளக்கமுடியுமா?
  4) காஷ்மீர் பிரிவினைக்கு போராடிக்கொண்டிருக்கிற இயக்கங்களை வைத்து அது தனிநாடு என்பதோ இல்லை என்பதோ தீர்மானிப்பீர்களா? இல்லை சமூக ஆய்விலிருந்து முடிவுசெய்து தீர்மானிப்பீர்களா?
  5) காஷ்மீர் மக்களுக்காக, வடகிழக்கு மாநில மக்களுக்காக என்று பல்வேறு போராட்டங்களை இதர இந்திய பகுதியில் உள்ள மக்கள் அல்லது இயக்கங்கள் போராடுகிறது என்பதை வைத்து காஷ்மீரி மக்களுக்கு தனி நாடு குறித்து தீர்மானித்தார்களா ம.க.இ.க.?
  6) தேசிய இனம் என்பது மத அடிப்படையை கொண்டதாக ஏற்கமுடியுமா?
  7) புலிகளின் கடந்த காலங்களை கருணாநிதிப் போல் பேசிவிட்டு அவர்களின் பிற்கால மாற்றங்களை ஏற்க மறுப்பது நேர்மையற்ற சந்தர்ப்பவாதமா? நேர்மையான சந்தர்ப்பவாதமா?
  8) புலிகள் பாசிச இயக்கமாகவே பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஒரு தேசிய இன விடுதலைக்கு போராடும் பாசிச தன்மை கொண்ட அமைப்புகளை நிபந்தனைக்கு உட்பட்டு ஆதரிப்பீர்களா இல்லை மறுப்பீர்களா?
  (எடுத்துக்காட்டாக உமர் முக்தார், வீரபாண்டிய கட்டபொம்மன், ஜான்சிராணி, வாஞ்சிநாதன், தற்போதைய காலத்தில் அமெரிக்க எதிர்ப்பினை வெளிப்படுத்திய சதாம் உசேன், வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ஆப்கான் தலிபான்கள், ஈரான், சிரியா போன்றவை) (அமெரிக்கா நிதி உதவி கொடுத்து வழிநடத்திக் கொண்டிருக்கக் கூடிய, அரபு நாடுகளில் ஜனநாயகத்தின் பேரால் போராடிக் கொண்டிருக்கும் எடுபிடி அமைப்புகளின் கலகங்களை அரபு வசந்தம், மக்கள் புரட்சி, அது போல் இந்தியாவில் எழுப்ப வேண்டும் என்று கூறுவது தனிக்கதை – அது வேறொரு நேரத்தில் விவாதிக்கலாம்)
  9) தேசிய இனப் பிரச்சினையில் ம.க.இ.க. எடுத்த நிலைபாடு
  சமரன் பக்கம் 218
  1. “தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல” (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)
  2. ஒரு தேசத்துக்கொ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியம் ‘நேரடி’ ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையாக எடுத்துக்கொள்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 11)
  3. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா இல்லையா என்ற விவகாரத்தில் நாம் நடுநிலை வகிக்கிறோம். (16-31 ஜனவரி 1990, பு.ஜ. பக்கம் 10)
  தற்போது நான் படித்த இதழில் ஆகஸ்டு 2013 இதழில் பக்கம் 20
  1. பாசிசத்தின் ஆகமோசமான அரசியல் புகலிடம்தான் தேசியம் (என்று பொது நிலைபாடு எடுத்தது)

  இந்தக் கேள்விகளின் பதிலிலிருந்து விவாதத்தினை தொடரலாம். அரசியல் ஆரோக்கியமற்றதாக இருப்பதைவிட அரசியல் விவாதம் ஆரோக்கியமானதாக இருக்கவே விரும்புகிறேன்.

  (குறிப்பு : மேற்கண்ட விவாதத்தினை நேரடியாக டைப் செய்ததால் எழுத்துப் பிழையோ, இல்லை சில வார்த்தைக் கோர்வைகள் கூட தவறாக இருக்கலாம். சுட்டிக்காட்டினால் நான் அறிந்துக்கொள்கிறேன். ஆனால் அதிலேயே உழன்றுவிட்டு மையமான அரசியல் பிரச்சினைகளை கைவிட்டுவிடாதீர்கள். இதில் அரசியல் விவாத்தினை மையமாக வையுங்கள். நேரடியான பதிலை குறிப்பிட்டு பிறகு விளக்க அளிப்பீர்கள் என்றே கருதுகிறேன். அதுவே என்னைப் போன்ற எளியவர்கள் புரிந்துகொள்ள வழி)

  தொடரும்…..

  • //3) தனி நாடு கோரிக்கையை மார்க்சிய லெனினிய வாதிகள் எப்போது ஏற்கலாம் எப்போது ஏற்கக் கூடாது என்பதற்கு வரையறைகள் உண்டா இல்லையா? அந்த வரையறையை என்னவென்று மார்க்சிய ஆசான்கள் துணைகொண்டு விளக்கமுடியுமா?//

   Hello Saran sir,
   லெனின் said,

   தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்தாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்க மற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

   Now we should apply our leader லெனின் theory to Srilanka
   **********************************************************

   [1] Now We all know that in sri lanka there is no good environment for integrating two races singala[DOMINATING RACE] and Tamil[MINORITY RACE] in their capitalist society !!!

   [2] So it is the time to divide the sri lankan nation based on UN resolution and form a Tamil EElam Nation for Tamil people and Srilankan nation for Singla people [two capitalist nations in srilankan island ]
   No need to fight together(tamil and Singal working class) for class based struggle AS U SAID!!

   [3] In future if both countries fight for class struggle independently to attain socialism then they can integrate their nations according to their interest

   WE CAN ONLY UNDERSTAND OUR LEADER லெனின் IN THIS WAY.

 4. //தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்க// ஆக ஒன்றுபட்ட இலங்கைக்குள் பேரினவாத கொள்கை கொண்ட சிங்களவனுடன் ஒன்று கூடி போராட்டம் நடத்த விரும்புகிறீர்கள்………… தன் தாய் ,தந்தை, மகளைகொன்ற கொலைகாரர்களுடன் கூடி போராட்டம் நடத்தவேண்டும்என்று விரும்புகிறீர்கள்………… சிங்கள ராணுவமும் அதன் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வானில் இருந்து குதித்தவர்கள் அல்லர்………………….. எப்படி நீங்களும் , மதவாதிகளும் இணைந்து போராட்டம் நடத்தமுடியாதோ அதுபோல்தான் இதுவும் சாத்தியமில்லாத ஒன்று . நீங்கள் கூறுவது போல் //கானல் நீரைக் குடித்து தாகம் தீர்க்கவோ, பொய் நெல்லைக் குத்திப் பொங்கவோ முடியாது.//……………….. முதலில் ஈழத்தைப்பற்றி ஒரு தெளிவான கொள்கை முடிவை எடுங்கள் , பிறகு அடுத்தவர்களுக்கு ஆலோசனை கூறலாம்.

  • vkalathu seithi அவர்களே…நீங்கள் சொன்ன வார்த்தைகளிலேயே உங்களுக்கான பதிலும் உள்ளது…ம.க.இ.க.-வும் மதவாதிகளும் இணைந்து போராட முடியாது. அது போல ஈழமக்களும்-சிங்கள இராணுவமும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இணைந்து போராட முடியாது.

   “தன் தாய் தந்தை மகளைக் கொன்ற கொலைகாரர்கள்” சாதரண சிங்கள உழைக்கும் மக்களல்ல…நீங்கள் குறிப்பிடும் இராணுவமும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்தான் (இவர்களும் உழைக்கும் மக்களும் ஒன்றென நீங்கள் கருதினால் அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை). எப்படி RSS தன் சுய நலத்திற்காக உழைக்கும் மக்களிடையே பாசிச நஞ்சைக் கலக்கிறதோ அதே போலத்தான் சிங்கள ஆளும் வர்க்கமும் உழைக்கும் மக்களிடையே பாசிச நஞ்சைத் தூவியிருக்கிறது. அதை அகற்றி அவர்களைப் பாட்டாளிகளாக ஒன்றிணைக்க வேண்டியது புரட்சிகர அமைப்புகளின் கடமையாகும். நான் படித்த வகையில் அதைத்தான் ம.க.இ.க பலப்பல காலமாகச் சொல்லி வருகிறது. இந்த வகையில் ம.க.இ.க-வின் நிலைப்பாடு மிகத்தெளிவானதாக உள்ளது என்றே எண்ணுகிறேன். மீண்டும் ஒருமுறை ஈழம் தொடர்பான கட்டுரைகளை ஊன்றிப் படித்துவிட்டு பின்னூட்டமிடுவது ஆரோக்கியமான விவாதத்திற்கு உதவுமென்றே நினைக்கிறேன்…

   • Hello Kadri,

    [1]Before come to support the PJ solution for EElam issue, u first apply our Marx-Lenin Theory.

    [2]லெனின் said,தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்தாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்க மற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

    So the intimidate requirement is ….

    [So it is the time to divide the sri lankan nation based on UN resolution and form a Tamil EElam Nation for Tamil people and Srilankan nation for Singla people [two capitalist nations in srilankan island ] No need to fight together(tamil and Singal working class) for class based struggle AS U SAID and pj said!!]

    After getting a separate nation for both races Tamil and Singala…..

    [ In future if both countries fight for class struggle independently to attain socialism then they can integrate their nations according to their interest]

    WE CAN ONLY UNDERSTAND OUR LEADER லெனின் IN THIS WAY.

 5. காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று தமிழ்தேசிய கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இதில் வினவின் நிலைப்பாடை விளக்கிக்கூறுவது இங்கே வரும் ஜனநாயக சக்திகளுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். விரைவில் உங்களுடைய பதிலை எதிர்பார்க்கிறேன்.

 6. There are 2 solutions 1) right solutions 2) Possible solutions.
  Eelam is the right solution but to be frank,there is no possibility of that in near future.
  A possible solution is India should try to enforce 13th amendment and try to implement it and wait for sometime. However, India will do it only if there is pressure from Tamil parties in tamil nadu. Otherwise , even that is also not possible and status quo will continue.
  We have no other way to go other than this.

 7. புலிகளைத் தாண்டி மக்களை நேசித்து பழக்கமில்லாத புலி பினாமிகளான வைகோ,நெடுமாறன் சீமான் மற்றும் தமிழ் இனவாதிகள் தங்களுக்கு அரசியல் லாபம் வழங்காத இந்த ‘வெற்றி’யினால் மகிழ ஏதுமில்லை. ஒரு பெரும் அழிவிற்குப்பின் இந்த போலி “சனநாயகம்” அந்த மக்களுக்கு ஒரு வரம்பிற்குட்பட்ட ஆறுதலை வழங்குகிறது என்ற யதார்த்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இங்கே சற்று விரிவாக அலசப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் கேடயம்,மனஓசை பத்திரிக்கைகளுடனான விவாத காலம் முதலாக இப்போது வரை ம க இ க ஈழம் பற்றிய ஒரு தெளிவான வரையறுப்பை என்னில் ஏற்படுத்தவில்லை அல்லது தவறிவிட்டது என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியுள்ளது.

 8. Hello Vinavu,
  There is no way Tamilans to live along with sin-gala people.

  “தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்க” — U r telling the direction for all the problem except Eelam Tamil issue. Why?

  I hope u r having some hidden agenda for EElam issue!!

  There is no srilankan singala communist party support TAmil Eelam!!!

  can u tell me at least on singalan who support Tamil Eelam?

  Not only class struggle also struggle for independent country may fail some time. But They-Tamil People will win and form a separate nation for them

 9. மக்களின் தியாகத்தின் (விடுதலைப்புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல) வாயிலாக நிர்மானிக்கப்பட்ட சர்வதேச பொறிமுறைமையை,,இணக்க அரசியல் என்ற ஒரு வார்த்தையால்,தாரை வார்க்காப்போகின்றது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு.1948 தொடக்கம் இன்றுவரை தமிழ் தலைவர்கள் செய்யாத இணக்க அரசியல் எது?சில மெத்த படித்த மேதாவிகள் சொல்கின்றார்கள் ,இவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்போமாம் என்று.2009ம் ஆண்டில் இருந்து 2013ம் ஆண்டுவரை ,பல மனித உரிமை,தமிழ் அமைப்புகளின் தீவிர உழைப்பின் வெளிப்பாடே இலங்கைக்கு எதிரான இன்றைய சர்வதேசத்தின் நிலைப்பாடு.இவர்களின் ஈன அரசியல் இலங்கையை காப்பாற்றுவது உறுதி.இணக்க அரசியலில் மகிந்த
  மாகாண சபைக்கு காணி ,காவல்துறை அதிகாரம் கொடுக்காவிடின் ,மாகாண சபையில் எவ்வித அரசியல் அதிகாரமும் இல்லை என்று சர்வதேசத்தின் முன் கூறி தமது மாகாண சபை பதவிகளை இவர்கள் துறப்பார்களாயின் ,தமிழன் தலைநிமிர்வான்.பொருத்திருந்து பார்ப்போம் என்ன செய்கின்றார்கள் என்று.

 10. //‘இனி ஈழப் பிரச்சினையில் தமிழகத் தமிழினவாதிகள் தலையிட வேண்டாம்; அது இலங்கை அரசுடனான இராணுவ வெளியேற்றம், ஈழத் தமிழருக்கான சம உரிமைப் போராட்டத்துக்கு ஊறு விளைவிக்கிறது’ என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சொல்லியும் கூட, தமிழகத் தமிழினவாதிகள் விளக்கெண்ணையில் வெண்டைக்காய் வறுப்பதற்கு எத்தனிக்கிறாரர்கள். //………….. த.தே.கூ. கூறுவதுபோல
  சமஉரிமை மற்றும் ராணுவ வெளியேற்றம் என்பது சிங்களவன் போடும் பிச்சையல்ல………… தமிழினவாதிகளாலும் ,அதன்காரணமாக தமிழக மக்களாலும் நடத்தப்படும் போராட்டங்களினால் இந்திய அரசை அழுத்தம் கொடுப்பதானால் வந்த விளைவாகும்………. ஓட்டு பொறுக்கிகளின் கூற்று சமீபத்தில் நடந்த மாணவர்களின் போராட்டத்தை கொசைபடுதுவது போல் உளளது………… விளக்கெண்ணெய் …………. வெண்டைக்காய் என்று தமிழினவாதிகளை கூறுவதன்மூலம் வினவு தன்னைத்தானே கேவலப்படுத்திகொள்வதோடு அல்லாமல் தன் கருதும் த.தே.கூ. கருத்தும் ஒன்றே என்று மறைமுகமாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளது.

 11. //தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமரச சரணடைவுக்கும் புலிகளின் பாசிச இராணுவவாதத்துக்கும் மாறாக, தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழான புதிய ஜனநாயகப் புரட்சியின் அங்கமாக தமிழீழ விடுதலைக்கான ஈழத் தமிழர் தன்னுரிமை ஆயுதப் போராட்டம் அமைய வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.//
  ஈழத்தை பற்றி இதுதான் உங்களின் ம.க.இ.க. கொள்கை முடிவு என்றே எடுத்துக்கொள்வோம்……….. 1. தமிழ் –சிங்கள பாட்டாளி வர்க்க புதிய ஜனநாயக கூட்டணி என்று கூறுகிறீர்களே அது எப்படிப்பட்ட கூட்டணி……………. அதாவது தமிழனும் , சிங்களவனும் ஒன்று கூடி தமிழனின் விடுதலைக்கு போராட வேண்டும்……….. இது முரண்நகையாக இல்லையா……….? அதாவது rss உடன் கஷ்மீரிகள் இணைந்து கஷ்மீர் விடுதலைக்கு பாடுபட வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பாகும்…………

  • அய்யா vkalathur seithi அவர்களே…RSS-காரர்கள் உங்களுக்கு ‘உழைக்கும் மக்களாக’த் தெரிவது முரண் நகையா…அல்லது “தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்கத் தலைமை” என்று தமிழ்-சிங்கள உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக ஒன்றிணைக்கக் கூறும் ம.க.இ.க-வின் கொள்கை முரண் நகையா? RSS-காரர்களைத் தவிர இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்கள் யாரும் உங்கள் கண்களுக்கு ‘உழைக்கும் மக்களாக’த் தெரியவில்லை என்பதே மாபெரும் முரண் நகை…

 12. //தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமரச சரணடைவுக்கும் புலிகளின் பாசிச இராணுவவாதத்துக்கும் மாறாக, தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழான புதிய ஜனநாயகப் புரட்சியின் அங்கமாக தமிழீழ விடுதலைக்கான ஈழத் தமிழர் தன்னுரிமை ஆயுதப் போராட்டம் அமைய வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.// 2. இதைத்தான அய்யா புலிகள் செய்தார்கள்……. என்ன புதிய ஜனநாயக புரட்சி என்று கூடாமல் புலிகள் என்று ஒன்றுகூடினார்கள்…………. இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது………… மார்சிச கொள்கை என்று அடைமொழி வைத்துக்கொண்டு என்ன செய்தாலும் அது புரட்சி…………. மற்றவை எல்லாம் பாசிசம்…………. என்னே ஒரு தெளிவான கொள்கைமுடிவு……………..

 13. வெளிப்படையாக சொல்வதற்கு என்ன வெட்கம்……………. உங்கள் கொள்கைதான் ஈழத்தை பொறுத்தவரை என்ன……? உங்களுக்கு ஈழ மக்களின் தன்னுரிமை போராட்டமோ , இன அழிப்போ பற்றி கவலையில்லை…………. எந்த ஒரு போராட்டமும் கம்யுனிசம் என்ற அடைமொழியை கொண்டிருக்கவேண்டும் , அவ்வளவே…………….. அவ்வாறு கொண்டிருந்தால் அது புதிய ஜனநாயக மக்கள் போராட்டம்………. மார்சிசம் எல்லா இடத்துக்கும் ஒரே மாதிரி பொருந்திபோவதில்லை, எந்த ஒரு கொள்கையும் இடத்திற்கு தகுந்தாற்போல் சற்று நெளிவுசுழிவோடு அதன் அடி நாதம் மாறாமல் இருந்தால்தான் அது நிலைத்து நிற்கும், இது இயற்கையின் நியதி…………….. அதனால்தான் வறட்டு சித்தாந்தம் கொண்ட சோவியத் அழிந்துபோனது……….. நெளிவு சுழிவோடு நடந்துகொண்டதால்தான் சீனா இன்று கோலோச்சி நிற்கிறது…….. வறட்டு கொள்கை கொண்டிருக்கும்இந்த ஒரு இடத்தில தீவிர மதவாதிகளின் மனநிலையும், உங்கள் மனநிலையும் ஒரே நேர்கோட்டில் வந்துநிற்கின்றன.

 14. ஐயா இந்த கட்டுரை வரைந்தவரின் பெயர் தெரியவில்லை ,அவருக்கு ஈழப்பிரச்சினை பற்றிய புரிதல் எந்தளவு இருக்கிறது என்பதை அவரது எழுத்து பிரதிபலிக்கிறது,சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் சார்ந்து எப்படி ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பது என்பதை சற்று விளக்கி கூறினால் ஈழத்தமிழர்களுக்கு மிக உதவியாக இருக்கும், மேலும் இப்படி எத்தனை விடுதலை போராட்டங்களுக்கு நீங்கள் அறிவுரை வழங்கி இருக்கிறீர்கள்

 15. Hello Vinavu,

  How can u think so brilliantly for the solution of EElam!!!!

  I mean //தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்க// !!!!

  What is this non sense!!!

  No single singala man and woman will support Tamil EElam!!!!

  The total Singala Comunity is now polluted!!!

  There is no Communist party at srilanka support Tamil EElam…!

  If u r thinking about class struggle by பி.இரயாகரன் pls forget it…

  HE is a only living in France and never do class struggle!!!

 16. //தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்க// !!!!

  Hello Vinavu,

  you “are a Utopian Communist ”
  ————————–

 17. Hello dubakur vinavu friends,

  //அண்டை நாட்டு கம்யூனிஸ்டுகளை இவ்வாறு விமரிசிப்பது சர்வதேசியத்தின் அரசியல் வழிமுறைகளையும்,கடந்த 30 வருடமாக தாங்கள் நடத்தி வரும் போராட்டத்தையும் நிராகரிப்பதாகும் என்றும் தோழர் இரயா குறிப்பிடுகிறார். இலங்கைப் புரட்சிக்கு வழிகாட்டும் பொறுப்பில் எங்களை நாங்களே நியமித்துக் கொள்ளும் தலைக்கனம் எமக்கு இல்லை.//

  U only write this long back….!!!!

  But now u give wrong guidance for eelam struggle by saying ” தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்க…

  Why?

  Did u forget that what u said long back?

 18. hello vinavu,

  //தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்க// !!!!

  First u send ur sister mother and wife to srilanka and tell them to live with singala people.

  If they will like peacefully ,, we will think about தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்க……

 19. இந்த ஆதரவு என்பது பிரிந்து சென்று தனியான அரசை அமைத்துக் கொள்கின்ற சுயநிர்ணய உரிமையைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை மேலும் லெனின் விளக்குகிறார், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள ஆதிக்கம் செய்யும் தேசிய இனம், அரசு ரீதியாக பிரிந்து செல்ல விரும்புகின்ற தேசிய இனத்தின் மீது செலுத்தப்படுகிற பலப்பிரோகத்தை நிபந்தனயைற்ற வகையில் எதிர்க்க வேண்டும். பிரிந்து செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற, பிரிச்சினைக்கு உரிய பிரதேசத்தின் மக்கள் எல்லோரும் நேரடியாக, சமமான மதிப்பைக் கொண்ட வாக்குகளின் மூலம் ரகசிய வாக்கெடுப்பு முறையில் தங்களது கருத்தை பதிவதை அடிப்படையாகக் கொண்டு தீர்க்க வேண்டும். தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு அனுமதிக்கின்ற, தேசிய இனங்களின் சுயநிரிணய உரிமையை மறுப்பதை ஆதரிக்கின்ற, மிதவாத முதலாளித்துவக் கண்ணோட்டத்தில் உள்ள கட்சிகளை உறுதியாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று லெனின் கூறுகிறார். (தேசிய இனப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள் பக்கம் 87-88-89)

 20. லெனின்:-
  “.. ஒவ்வொரு தேசிய இன இயக்கத்தின் போக்கும் தேசிய இன அரசுகளை நிறுவும் திசையிலானதாகும். அவ்வரசுகளின் கீழ் நவீன முதலாளித்துவத்தின் இந்தத் தேவைகள் மிகவும் நன்றாக பூர்த்தி செய்யப்படும். மிகவும் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் இந்த லட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. எனவே, மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் ஏன் நாகரிக உலகம் முழுமைக்குமே முதலாளித்துவ காலப் பகுதியில் தேசிய இன அரசு மாதிரிப் படிவமானது இயல்பானது.

 21. லெனின்:

  தேசங்கள் இருக்கும் வரை தேசிய இனங்கள் ஒன்றுகலத்தல் நிகழ்வு நிறைவடையும் வரை தேசிய இனங்களின் பிரச்சினைகளை உலகம் சந்தித்து வரவேண்டிவரும்.

 22. லெனின்:-
  “தேசிய இனக் கலாசாரம் என்ற கோஷத்தின் உட்பொருள், குறிப்பிட்ட நாடடிலும் உலகின் எல்லா நாடுகளிலும் எல்லா வர்க்கங்களுக்கும் இடையிலான புறநிலை எதார்த்த உறவுகளால் நிர்ணணிக்கப்படுகிறது. முதலாளி வர்க்கத்தின் தேசிய இனக் கலாசாரம் கண்கூடான உண்மை ஆகும்.

 23. லெனின்:-
  தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்தாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்க மற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

  Apply this to tamil EElam!!

 24. //கம்யூனிஸ்டுகளின் சுயநிர்ணய உரிமையை மட்டுமே அறிந்து கொண்டு, தேசம் பிரிந்து போவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளதாக தவறாக பலர் புரிந்து வைத்துள்ளனர். ஒடுக்கத்துக்கு ஆளான தேசம் பிரிந்து போவதற்கான உரிமைக்கு போராடும் கம்யூனிஸ்டுகள் தேசங்களின் ஒன்றுகலத்தலுக்காகவும் போராடுகின்றனர் இதனை லெனின் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஒடுக்கத்துக்கு ஆளான தேசங்களுக்காக்க போராடாதவர் மார்க்சியவாதி அல்ல, அதேநேரத்தில் மற்றொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சியவாதி ஒன்றுகலத்தலுக்கு ஆதரவாக இருப்பதை குறிப்பிட்டு நிந்திப்பவர் தேசியவாத அற்பரே அந்தப் போலி மார்க்சியவாதி என்கிறார் லெனின்.//

 25. லெனின்:-
  தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்தாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்க மற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

  Apply to Sri lanka!!
  —————————

  Now We all know that in sri lanka there is no good environment for integrating two races singala and tamil!!!

  So it is the time to divide the sri lankan nation.!!!

  No need to fight together(tamil and Singal working class) for class based struggle!!

  In future if both countries follow socialism then they can integrate according to their interest

  With regards,
  K.Senthil kumaran

 26. Our leader லெனின் said,

  தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்தாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்க மற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

  Now we should apply our leader லெனின் theory to Srilanka
  **********************************************************

  [1] Now We all know that in sri lanka there is no good environment for integrating two races singala[DOMINATING RACE] and Tamil[MINORITY RACE] in their capitalist society !!!

  [2] So it is the time to divide the sri lankan nation based on UN resolution and form a Tamil EElam Nation for Tamil people and Srilankan nation for Singla people [two capitalist nations in srilankan island ]
  No need to fight together(tamil and Singal working class) for class based struggle AS U SAID!!

  [3] In future if both countries fight for class struggle independently to attain socialism then they can integrate their nations according to their interest

  WE CAN ONLY UNDERSTAND OUR LEADER லெனின் IN THIS WAY.

  With regards,
  K.Senthil kumaran

 27. The following are the some of the inportant books from லெனின் that deels with National Race issues…….

  1]சோசலிஸப்புரடசிசியும் சுயநிர்ணய உரிமையும்
  2]தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்
  3]தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும்
  4]தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை
  5]இயங்கியல் பிரச்சனை பற்றி

  We can download all these books at fee of cost from http://www.padippakam.com/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க