Thursday, September 28, 2023
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் - ஆதரவு தாரீர் !

மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

இராமனுக்கு கோயில் கட்டுவதுதான் தேசத்தின் தலையாய பிரச்சினை என்று கூறி பாபர் மசூதியை இடித்து, நாடு முழுவதும் இந்து மதவெறியைத் தூண்டி,   1998-இல் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது பாரதிய ஜனதா கட்சி. இன்றோ, அயோத்தி தொகுதியில் கூட பாஜக வால் வெற்றி பெற முடியவில்லை.

வரவிருக்கும் தேர்தலில் இராமனைக் காட்டி ஓட்டு வாங்க முடியாது என்பதால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சிங்காரித்து தேசிய நாயகனாக சித்தரிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. 2009-ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவைப் போல, 2002-ல் குஜராத் முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிதான் மோடி.  இந்த உண்மையை மறைத்து,  குஜராத்தில் பாலும் தேனும்  ஆறாக ஓடுவது போலவும், மோடியைப் பிரதமராகி விட்டால், மறுநாள் இந்தியா வல்லரசாகி விடும் என்றும் ஒரு மாயை திட்டமிட்டே  உருவாக்கப்படுகிறது.

modi-rajapakse

மன்மோகன் அரசின் தனியார்மயக் கொள்ளைகள், ஊழல்கள், விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அதிருப்தியுற்றிருக்கும் மக்கள் பலர் இந்தப்  பொய்ப் பிரச்சாரத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஆதாரபூர்வமான விவரங்களுடன்  மோடியின் முகமூடியை அகற்றி உண்மை முகத்தை மக்களுக்குக் காட்டுவதுதான் இந்தப் பொதுக்கூட்டத்தின் நோக்கம்.

 • தமிழகத்தையும் மற்ற மாநிலங்களையும் காட்டிலும் குஜராத் முன்னேறிய மாநிலம் என்பது உண்மையா?
 • திறமையான நிர்வாகம், ஊழலில்லாத ஆட்சி, தடையற்ற மின்சாரம் – என்று குஜராத்தைப் பற்றிக் கூறப்படுபவையெல்லாம் உண்மையா?
 • அங்கே முஸ்லிம்களே மோடியை ஆதரிக்கிறார்கள் என்று கூறப்படுவது உண்மையா? குஜராத்தில் தலித் மக்களின் நிலை என்ன?
 • 2002 முஸ்லிம் மக்கள் படுகொலையும் அடுக்கடுக்கான போலி மோதல் கொலைகளும் மோடிக்குத் தெரியாமல் நடந்தவையா? மோடியால் திரை மறைவிலிருந்து இயக்கப்பட்டவையா?
 • பாரதிய ஜனதா தனி ஈழத்துக்கு ஆதரவானதா? ராஜபக்சேவைத் தண்டிக்க குரல் கொடுக்குமா? கச்சத்தீவை மீட்டுத்தருமா? தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டிவிடுமா?
 • மோடியின் பொருளாதாரக் கொள்கை, மன்மோகனின் கொள்கையிலிருந்து வேறுபட்டதா?
 • மோடி என்ற பலூனை ஊதிப் பெரிதாக்குபவர்கள் யார்? டாடா, அம்பானி, மித்தல், அதானி, பிர்லா போன்ற தரகு முதலாளிகள் மோடியைப் பிரதமராக்க வேண்டும் என்று துடிப்பது ஏன்?

விடை காண்போம், வாருங்கள்!

00

இந்து மதவெறி பாசிஸ்டு

இந்தியாவின் இராஜபக்சே

மோடியின் முகமூடியைக் கிழித்தெறிவோம்!

பொது அரங்கக் கூட்டம்

 

நேரம் :
18.10.2013, வெள்ளி 26.10.2013 சனி மாலை 6 மணி

இடம் :
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்,
கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில்,

புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபம்
(ஹோட்டல் தாசபிரகாஷ் எதிரில்)

சென்னை.

தலைமை :
தோழர் முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு

சிறப்புரை :
தோழர் மருதையன், பொதுச்செயலர், ம.க.இ.க

புரட்சிகர கலைநிகழ்ச்சி
ம.க.இ.க வின் மையக்கலைக்குழு

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

00

ரேந்திர மோடி 18.10.2013 அன்று சென்னை வருகிறார்.  அருண் ஷோரி எழுதிய ஒரு நூலை வெளியிடவிருக்கிறார். நிகழ்ச்சியில் சோ, அருண் ஷோரி ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதே நாளில் நமது பொதுக் கூட்டமும் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் மோடி எதிர்ப்பை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் பற்றி கூற வேண்டியிருக்கிறது.

நரேந்திர மோடியை தங்களது பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கட்சி அறிவிப்பதற்கு வெகு காலம் முன்னரே தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டது.

“குஜராத் படுகொலைக்கு மோடியைக் குற்றம் சுமத்த முடியாது” என்று முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கை, திருட்டுத்தனமாகவும் சட்ட விரோதமாகவும் சோ மற்றும் குருமூர்த்தியின் பார்வைக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட விசயம் அம்பலமான போது, குஜராத் கொலை வழக்குகளை முறியடிப்பதில் தமிழ்நாட்டு குல்லுக பட்டர்கள் ஆற்றிய பாத்திரம் அம்பலமானது.

பிறகு, மோடி பிரதமராவதற்கு அதிமுக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று துக்ளக் ஆண்டு விழாவில் சோ ஜெயலலிதாவுக்கு பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்தார். துக்ளக் மற்றும் குமுதம் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவரும் மோடி புராணம் அனைவருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு மரபையும், பெரியாரையும் வீழ்த்துவதற்கு தமிழ் அவதாரம் எடுக்க வேண்டியது அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு, தினமணி வைத்தியநாதன் ஆற்றி வரும் “தமிழ்த் தொண்டு”, அர்ஜுன் சம்பத் போன்ற பேரறிஞர்கள் தினமணியில் பெற்று வரும் முக்கியத்துவம் ஆகியவை தனி.

ஆர் எஸ் எஸ் இன் பத்திரிகையான ஆர்கனைசரின் ஆசிரியர் தருண் விஜய் எம்.பி, தமிழின் பெருமை குறித்து திடீரென்று மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதும், தமிழை இந்தியாவின் இரண்டாவது ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்று கூறுவதும் மேற்படி  “தமிழ் ஆர்.எஸ்.எஸ் புராஜெக்ட்” சார்ந்த விடயங்களே.

அதே நேரத்தில், தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கும் சுப்பிரமணியசாமியும் மோடியை பிரதமராக்குவதில் முன் நிற்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல, ராஜபக்சேவின் நண்பரும், புலிகளின் எதிரியுமான சுப்பிரமணிய சாமியும், தீவிர புலி ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன், தமிழருவி மணியன் போன்றோரும் ஒரே மேடையில் நின்று மோடிக்கு ஜே போடும் காட்சியையும் தமிழகம் காணக்கூடும்.

அதிகம் விவரிக்கத் தேவையில்லை. இந்துத்துவ அரசியல் பேசி தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத பாரதிய ஜனதாவையும் மோடியையும், கேடு கெட்ட பிழைப்புவாதிகளும் துரோகிகளும் தம் முதுகில் சுமந்து வருகிறார்கள்.

அரசியல் சமூக அறிவோ ஈடுபாடோ இல்லாமல், சுய முன்னேற்றம், நுகர்வு மோகம் என்ற இரட்டை மயக்கங்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ள இளைய தலைமுறையோ அப்துல் கலாம் என்ற கோமாளிக்கு பதிலாக மோடி என்ற கொடூரனை மீட்பனாக கருதி மயங்கியிருக்கிறது.

இந்த அபாயகரமான சூழ்நிலையைப் புரிந்து கொண்டிருப்பதன் காரணமாகத்தான், மோடியின் முகமூடியைக் கிழிக்கும் பொதுக்கூட்டத்தை சென்னையிலும் நடத்துகிறோம்.

திருச்சியில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. யு டியூபில் மட்டுமே 25,000 பேருக்கு மேற்பட்டோர் தோழர் மருதையனின் உரையைக் கேட்டிருக்கின்றனர். பொதுக்கூட்ட உரைகளும் கலை நிகழ்ச்சியும் ஒளிக் குறுந்தகடாகவும் வெளியிடப்படுகின்றன. இருந்த போதிலும், மோடிக்கு ஊடகங்கள் மூலம் அளிக்கப்படும் விளம்பரத்தை ஒப்பிடும்போது இது மிக மிக குறைவே.

முதலாவதாக,

நமது பிரச்சாரத்தை விரிவாகக் கொண்டு செல்ல இயலாமைக்கு மிக முக்கியக் காரணம் நிதிப் பற்றாக்குறை. திருச்சி பொதுக்கூட்ட செலவின் கடனே அடைபடாமல் இருக்கும் போது, தற்போது சென்னையிலும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

மீண்டும் மீண்டும் சாதாரண மக்கள் மத்தியில்தான் நிதி திரட்டுகிறோம். பொதுக் கூட்டத்திற்கான செலவு இலட்சங்களில் ஆகும் போது, இரண்டு ரூபாய் – ஐந்து ரூபாய் என உண்டியலேந்தி நிதி திரட்டுவது அதிக நேரம் பிடிப்பதாக இருக்கிறது. நிதி திரட்டும் பணியே பெரும்பகுதி நேரத்தை விழுங்கி விடுகிறது. பிரச்சாரம் என்ற வகையில் உண்டியல் ஏந்தி மக்களிடம் நிதி வசூல் செய்வதை தொடர்ந்து செய்கிறோம்.

எனினும் குறுகிய காலத்தில் ஒரு பொதுக்கூட்டத்திற்கான செலவை வசூல் செய்ய வேண்டிய இந்த கடினமான நிலைமையைப் புரிந்து கொண்டு நன்கொடை அளிக்குமாறு உங்களிடம் கோருகிறோம். நீங்கள் அளிப்பது மட்டுமின்றி உங்கள் நண்பர்களிடமும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிதி பெற்றுத் தருமாறு கோருகிறோம்.

இரண்டாவதாக,

சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் தவறாமல் பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள். நண்பர்களை அழைத்து வாருங்கள். மதவெறியை எதிர்க்கும் மக்கள் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள் என்று நிறுவுவது, எதிரியை முறியடிப்பதற்கு மிகவும் அவசியமானது. காங்கிரசு எதிர்ப்பு என்ற போர்வையில் மோடிக்கு காவடி எடுக்கும் பிழைப்புவாதிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் எச்சரிப்பதற்கும் அது அவசியமானது.

மூன்றாவதாக,

இந்து மதவெறிப் பாசிசம் என்ற இந்த அபாயத்தை புரிந்து கொள்ளாமல்,

 1. மோடியின் என்னென்ன பொய்ப் பிரச்சாரங்களுக்கெல்லாம் மக்கள் பலியாகியிருக்கிறார்கள்.
 2. எத்தகைய கருத்துகள் அவர்களிடம் நிலவுகின்றன.
 3. மோடியை நியாயப்படுத்துபவர்கள் என்ன கருத்துகளை முன்வைக்கிறார்கள்

என்பது பற்றி எங்களுக்கு மின் அஞ்சல் (vinavu@gmail.com) அனுப்புங்கள். பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் தோழர்களுக்கு அவற்றைத் தெரிவிக்கிறோம்.

கூட்டத்தின் வெற்றிக்கு உங்களுடைய ஆலோசனைகள் எதுவாயினும் தெரியப்படுத்துங்கள்.

நன்கொடை அளிப்போர் பணம் அனுப்ப வேண்டிய விவரங்கள்

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
Postal Pincode : 613007
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE : 044- 23718706.
செல்பேசி : அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876
__________________________________

வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.

 1. அன்புள்ள தோழர்களை,

  நம் நாட்டில் மோடிக்கும் ஒரு வாய்ப்பினை கொடுத்து பார்போமே,பத்து வருட ஆட்சியில் மன்மோகன்சிங் என்ன செய்தார்,5 வருட ஆட்சியில் மோடி இந்தியாவை வல்லரசு நாடகும்

  • hello Ravin ,
   My nation is not a porampoku land for all the animals like MODI, Manmokan,etc…

   In my nation India 99% people are working and doing their best for my country.

   Now modi is selling Gujarat to TATA and Reliance…

   If he is become a PM then he will sell entire nation.

   R U OK FOR THIS RAVIN?

  • Even Modi knows that he himself is a fool.

   More over he clearly knows that he will not be a next PM

   But some educated Allakis Nollakis dreams about MODI will become a PM.

  • மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்! கிரிக்கெட் விளையாட்டாக இருந்தால்!ஆனால் இது 130 கோடி மக்களின் வாழ்க்கை பிரச்சனை ,இதில் பரிசோதனை செய்து பார்ப்பது தற்கொலைக்கு சம்மானது.

   • hello Guru,

    I strongly appose u r idea..

    If we allow MODI to Indian cricket, then He will eliminate few players based on their Religious identity!!

    Am i right ?

    The only suitable place for Modi and his gang is Thekar jail for their killing of 3000 Indians in Gujarat during 2002 genocide .

 2. ஆக…….தமிழ்நாட்டிலும் கருப்பையை வாடகைக்கு விட ஒரு வாய்ப்பு வேண்டும், ரவியின் ஆசையை அவ்ர்கள் வீட்டிலிருந்து கேட்டு ஆரம்பிப்பாரா…..?

 3. தவறாகி போகும் ராவின்,

  பொய் உரைகளையும், பொய் செய்திகளையும், பொய்யன புள்ளி விபரஙக்ளையும் வைத்து கொண்டு கொள்ளை அடிக்க காத்து இருக்கும் முதலாளித்துவா மக்களின் பிரதிநிதியாக வருபவன் தான் இந்த மோடி, மேலும் ஏழைமக்களின் நாயகன் என்று நினைத்து இருந்தால் குஜராத் சென்று பாருஙகள் புரியும், சீனாவின் பேருந்து நிலையத்தினை அகாமதாபாத் நிலையம் என்று நாக்கூசாமல் பொய் கூறும் இவர்களா நாளை நாம்மை காக்கும் நாயகன் என்று அழைக்க முடியும் அல்லது அகமாதாபாத்தினை அறியாதவர்களா நாம், குஜாராதிகளுக்கு வேணுமானால் நாட்டின் பிர பகுதிகளை பற்றி அரியாதவர்களாக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டினை சேர்ந்த நாம் சுற்றுலா, மற்றும் வணிக ரீதியில் பல இடங்களுக்கு போகும் நமக்கு தெரியாதது இல்லை, , பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கூட்டதின் ஒரு பகுதியினை அந்த மாநிலத்தில் உள்ள மோடி கூட்டம் திருச்சியில் நடந்த கூட்டதின் ஒரு பகுதி என்று பச்சையான பொய்யினை பரப்பினர், அதுவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, அது மட்டும் அல்ல நாட்டில் BJB ஆட்சி நடந்த வேளையில் சவபெட்டி ஊழலில் நடந்த உண்மை நிலவரம் மறைக்க , நாட்டின் இறையாண்மையான பாரளுமன்றத்தினை இஸ்ரேலிய அமைப்புடன் சேர்ந்து தாக்கியவர்கள் இவர்கள். அதுவும் நாட்டின் இறையாண்மை கருதி மறைக்கபட்டு போலியான ஆசாமிகளை இதில் இணைத்து கேஸ் முடிக்கபட்டது.
  இது போன்று நிறைய கூறலாம், தமிழ் நாட்டில் பொறுப்பு வகிக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியாத விஷயாம நம் தமிழ் நாட்டு மீனவ சமூகம் படும் பாடு சிங்கள ராணுவத்திடம், எதோ மோடி வந்து சென்றவுடன், கையை உயர்த்தி பேசினார் மீனவர்கள் உரிமை வளர் தாமரை மாநாடு என்று இவ்வளவு நாள் தூங்கி கொண்டு இருந்தாய அல்லது பேச சொல்லி கொடுக்க ஆள் இல்லையா , எல்லாம் அரசியல் வியாதிகளின் கூடரத்தில் வளரப்படுவர்கள் தான், ஆனால் இவர்கள் கொஞ்சம் கொடுரமான கொலைகார சுய விளம்பர கூடரத்தில் வளர்க்கபடுபவர்கள். இவர்களின் குறி தற்போது ஏழைமக்களும் அறியாத ஏழை இளைஞர்களை பிற மதம் சார்ந்த சாதி மக்களியிடையே பிரிவினை தூண்டி விட்டு வளர்ப்பவர்கள் தான் இந்த அயோக்கிய கூட்டம்.

  கல்வி, வேலை வாய்ப்பு , சமுக பாதுகாப்பு, தொழில் வளர்ச்சியில் சமுக பொறுப்பு, சுகாதாரம், இவற்றில் நாட்டில் 13ல் இருக்கும் ஒரு மாநிலத்தினை 1இடம் என்று இவர்கள் வாய் கூசாமல் பொய் கூறி வந்தார்களோ அன்றே இவர்களின் மோடியின் மோச கூட்டத்தின் முகத்திரை கிழிக்கபட்டு உள்ளது.

  பிறகுதான் படித்த இளைஞர்கள் கூட எதோ உண்மை என்று நம்பியவர்கள் கூட தன்னுடன் பணி புரியும் , புரிந்தவர்களின் துணையுடன் இப்போது பிற பகுதி மக்களுக்கு இவர்களின் நயவஞக செய்திகள் வெளிப்பட வருகின்றது. வந்து கொண்டும் இருக்கின்றது.

  ஒரு சின்ன தகவல், தற்போது தங்களிடம் தனி நபர் நீங்கள் உங்களிடம் இருக்கும் விவசாய நிலத்தினை ஒருவர் தொழிற்ச்சாலை அமைக்க் நிலம் கேட்கிரார் நீங்கள் கொடுப்பிர்கள் எந்த மதிப்பில் 1 என இருக்கும் நிலத்தின் மதிப்பை 5 என இருந்தால் கொடுப்பிர்கள், மேலும் அடுத்த விவசாய நிலத்துகாரர் அப்படி தொழிற்ச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இதனால் தங்களுயடைய விவசாய நிலம் பாதிக்க பட்டால் வழக்கு தொடுத்து தடுக்க முடியும், ஆனால் குஜராத்தில் நன்றாக விளைந்து வந்த நிலத்தினை தண்ணீர் வழங்கமல் செய்து அந்த நிலத்தினை மலட்டக்கி அந்த தரிசு நிலத்தினை 1 மதிப்பில் இருப்பதை 1 பைசாவாக கொடுத்து 3000 கோடி புராஜக்ட்டுக்கு 9000/- கோடி மானியம் அளித்து நாட்டிலேயே அடிமுட்டாள் முதல்வர் என்று பெயர் எடுத்தவந்தான் இந்த மோடி , இப்படி பட்டவனைத்தான் அந்த முதலாளிகள் விரும்புவார்கக்ள்
  வீட்டிற்க்கு வேலை யில்லாமல் சென்றவர்கள் 2000/ என்றால் வேலை பெற்றவர்கள் 20 பேர் என்ற அடிப்படையில் தான் வேலை வாய்ப்பு உள்ளது

  ஒன்று சொல்ல விரும்புகிரேன் தோழர்களுக்கு,

  வளர்ச்சி என்பது தூங்கி எழுந்தவுடன் விட்டு வாசலில் பணம் கொட்டி கிடைப்பது அல்ல , சமுகம் சார்ந்த மதிப்பில் அது உயரவேண்டும் அதனால் தான் உலகில் மக்கள் திரும்பி பார்க்கும் மதிக்கும் நாடாக இந்தியா இருக்க காரணம், இன்று நீங்கள் பார்க்கும் அசுர வளர்ச்சி நாடு சிங்கப்பூர், மலேசியா, சீனா, வளைகுடா நாடுகள் இவைபோன்றவை தன் நாடு வளர குடிமக்களை சுரண்டி மனித உழைப்பினை சுரண்டி ஏகாபதிதியதிற்க்ககு ரத்த கறை படிந்த அடிமை சாசன எழுதிய வரலாறு உண்டு, ஏகாபத்திற்க்கும் எதிர்த்து சாமானிய மக்களுமான நீங்களும் நானும் இன்று அனுபவிக்கும் இந்த இணைய தள வசதி எங்கே நீங்கள் கூறும்நாட்டில் வசிக்கும் சாதாரண குடி மகனிடம் கேட்டு பாருஙகள் அவன் கூறுவான் அவனுக்கு இருக்கும் கட்டுபாடுகளை, இன்று நீஙகள் கற்று போய் அவர்களுக்கு நீஙகள் கொடுக்கும் இணைய உழைப்பு, உங்களுக்கு வசதியான வாழ்க்கை, இதை பெற்று தர போரடும் வர்க்கம் நிறைந்த சமூகம் தான் இது அதுக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து போராடும் மக்களை ஏளனம் செய்யவேண்டாம்,

  கல்வி மறுக்கபட்டு, வர்க்க வெறி யில் துவண்டு தீண்டாமை தீயில் கருகிய பூக்களுக்கு மத்தியில் பெறப்பட்ட சுதந்திர நிலையினை மீண்டும் காலனி ஆக்கும் வெறியில் இருக்கும் இந்த சூத்திரனின் பின்னால் இருக்கும் அந்த காவி நிற பார்பன ஆதிக்க கூட்டத்திற்க்கு நாம் கொடுக்க போகும் கரி பூச்சுதான் இவனின் தோல்வி.

  நன்றி

 4. 25,000 viewrsin You Tube is not a bad number at all: Its a good start;Its really good authenticated speech by Maruthaiyan. We will surely contribute for your work, keep going

 5. 3000 கோடி புராஜக்ட்டுக்கு 9000/- கோடி மானியம் அளித்து நாட்டிலேயே அடிமுட்டாள் முதல்வர் என்று பெயர் எடுத்தவந்தான் இந்த மோடி Boss link please have to share in facebook

 6. @Raja Narasima Vivek–> i appreciate dear.. Naan pallila padikura podhu kaalai vanaka kuttathil oru uruthi moli kuruvadhundu..” Naam anaivarum Indiayar, Indiar Anaivarum Nam udan priandhor” enaku adhu naabaham varudhu.. nam naatuku varum naatuku varum peraabathil irundhu naam thaan nam thalai muraiyai kaapaatha vendum.. ovoru indianin kadamai…

 7. விடியோ வடிவில் உதய குமாரின் உரையை பதிவிடுங்கள் . ஆடியோ வடிவில் உரை இல்லாமல் வீடியோ வடிவில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். உதய குமாரின் உரை எப்போதும் ஆடியோ வடிவில் தான் உள்ளது.

  • யார் அந்த உதயகுமார் ??? மருதையனின் உரை என்று கேட்டு இருக்கவேண்டும்.ஒலி மற்றும் ஒளி

   வடிவில் இருந்தால் நன்று.

 8. வினவுக்கு இந்திய கம்பெனிகள பிடிக்காதோ!! அப்ப சைனா,அமரிக்கா கம்பெனின்னா சரி,சரின்னு விட்டுடலாம்போல, மோடிமேல காண்டு ஓகே!! ரிலையன்ஸ், டாடா எல்லாம் இல்லன்னா சைனாக்கிட்டதான் எல்லாத்தையும் வாங்கனும்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க