Monday, January 24, 2022
முகப்பு செய்தி பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !

பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !

-

நித்தியானந்தாவின் பக்தர்களில் பலர் 2010-ல் ‘அந்த’ சிடி லீக் ஆன பிறகு எஸ்கேப் ஆகி விட்டார்கள். அந்த வரிசையில் சாரு நிவேதிதாவில் ஆரம்பித்து, கர்நாடகா ஊழல் தலைவர் எடியூரப்பா என்ற வரிசையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இருந்தார் என்ற தகவல் பலருக்கு ஆச்சரியம் அளிக்காதுதான்.

மோடி-நித்தியானந்தா

நித்தியானந்தா 2009-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி வடோதரா நகரின் நவ்லக்கி மைதானத்தில் நடத்திய சத்சங்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். நித்தியானந்தா ஆதி சங்கரரின் பாரம்பரியத்தையும் அத்வைத கோட்பாடுகளையும் தவறாமல் பின்பற்றுபவர் என்று மோடி அவரை பாராட்டினார்.

கூடவே, மாநிலத்தின் கன்யா கேளவாணி திட்டத்துக்கு நித்தியானந்தாவிடமிருந்து நன்கொடையும் வாங்கிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஜீவன் முக்தி என்ற புத்தகத்தை மோடி வெளியிட்டார்.

modi-nithyananda-3

மோடி கலந்து கொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாடுகளில் வெளிநாட்டு தூதுவர்கள், கார்ப்பரேட் முதலாளிகள் மோடியை புடை சூழ்ந்து வாழ்த்துவது போல அப்போதைய சர்தார் சரோவர் நர்மதா நிகம் சேர்மன் என் வி பட்டேல், மாநில சட்டமன்ற செயலர் யோகேஷ் பட்டேல் மற்றும் வடோதரா நாடாளுமன்ற உறுப்பினரும் மேயருமான பாலகிருஷ்ண சுக்லா ஆகியோரும் மோடியும் நித்தியானந்தாவும் சந்தித்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் ஆஜராகியிருந்தனர்.

modi-nithyananda-2

ஆறு கோடி குஜராத் மக்களின் கௌரவத்தின் பிரதிநிதியாக தன்னை பறை சாற்றிக் கொள்ளும் மோடி நித்தியானந்தாவின் முன்பு தலைகுனிந்து வணங்கி தன்னைப் போன்ற கொலைகார தலைவரை முதலமைச்சராக வைத்திருக்கும் மாநில மக்களின் கௌரவம் நித்தியானந்தா போன்ற பொறுக்கி சாமியார் முன்பு தலை வணங்கும் என்பதையும் மோடி உணர்த்தியிருக்கிறார்.

ரத்தன் டாடா 2007-ல் நானோ திட்டத்தை குஜராத்துக்கு கொண்டு வந்ததன் மூலம் கார்ப்பரேட் உலகத்தின் ஆதரவை குவித்தது போல 2009-ல் நித்தியானந்தாவை வடோதராவுக்கு கொண்டு வந்து இந்துத்துவ உலகில் தனது ஆதரவையும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார் மோடி.

மேலும் படிக்க

 1. வினவு அவர்களுக்கு, உங்களின் சமூகத்திற்கான எழுத்துப் போர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்பதிவைப் படித்தவுடன் எனது கருத்தைப் பதிவிட எண்ணினேன்.

  கார்ப்பொரேட் முதலைகளும், அரசியல் முதலைகளும் அரசு என்று என்றைக்கு அமைந்ததோ அன்றிலிருந்து மக்களிடம் சுரண்டிக் கொண்டும், மக்களை ஏமாற்றிக் கொண்டும்தான் இருக்கின்றன.

  நித்தியானந்தா ஆன்மீகவாதி அல்ல. ஆன்மீகத்தின் பெயரில் கார்ப்பொரேட் நிறுவனம் நடத்தும் (ஆ)சாமியார்.

  இருப்பினும் மோடி நித்தியானந்தாவைச் சந்தித்தது என்பது பெரிய பிரச்சினை இல்லை என்பது என் கருத்து.

  ஏனென்றால் டிவி சானல் நடத்திய மிகப் பெரிய ஜன நாயக அத்துமீறல் தான் நித்தியானந்தா வீடியோ பிரச்சினை. அது ஒன்றுமில்லாத ஒப்பேற்றப்பட்ட வீடியோ. நித்தியானந்தாவை அவர்கள் வஞ்சம் தீர்த்திருக்கிறார்கள். அது ஒன்றும் அவர்களுக்குப் புதிதல்ல. வளர்த்த கடா மார்பில் பாய்ந்து ஒரு கட்சியை வீழ்ச்சியடைய வைத்தவர்கள் அவர்கள். அந்த டிவி சானலும், மஞ்சள் பத்திரிக்கையும் செய்தி போட்டால் உண்மை என்று நம்புவதற்கு நிச்சயம் முடியாது. ஏனென்றால் உண்மை என்றுச் சொல்பவர்கள் பொய்யை விற்பவர்கள்.

  • //அது ஒன்றுமில்லாத ஒப்பேற்றப்பட்ட வீடியோ//
   நித்‌தியும் ,ரஞ்சியும் ஒத்துக்கிட்டா கூட அண்ணன் அனாதி ஒதுக்க மாட்டாரு போல !

 2. பெரியார் திடலில் இருந்து வரும்
  குறட்டை சப்தம் காதை பிளக்கிறது சாமி…
  இதெல்லாம் வீரமணி ச்வாமிகளுக்கு முக்கியமல்ல…
  வல்லம் கல்லூரியின் வரவு,செலவு…
  அட போங்கய்யா

 3. 2009 ல் நடந்த இந்தநிகழ்வுக்கு இப்போது என்ன ?
  வினவு-ம் சமயம் பார்த்து அரசியல் நடத்துகிறதோ ?

 4. அப்போ நடந்த உண்மையை இப்போ சொன்னா தப்பா? போபர்ஸ், 2ஜி, நிலக்கரி ஊழல் எல்லாம் நடந்த மறு செகண்ட் வெளிவந்ததோ? (இப்படி லேட்னு காரணம் சொல்லித்தானே மும்பை ரவுடி மோடியின் முன்னோடி பாம் தாக்கரேவை விடுவிச்சீங்க.நடத்துங்க,நடத்துங்க, )

 5. இந்த முறை நான் எழுத போகும் பின்னுடம் சற்று வித்தியாசமாக இருக்கும் !

  என் மனம் ….

  தமிழில் வேகமாக சிந்தித்து….
  சிரமத்துடன் மெதுவாக அச்சு கோர்ப்பது என்பது
  தாய் படும் பிரசவ வலி போல சுகமானது !!!

  நன்றி : திரு திப்பு மற்றும்
  http://www.google.co.in/inputtools/cloud/try/
  http://www.google.co.in/inputtools/cloud/try/

 6. A Leader will visit N number of organizations and meet N number of people.

  If you have any proof that Modi is working with Nithi to loot money ,that will save the country

  Other than that I know this will be useful article for people who reads headline and get influenced. For one second I thought I am reading dinamalar 🙂

 7. அந்தப்புரத்தின் நந்தக்குமார்கள்தான் இந்துமதத்தின் அவதாரப்புருஷர்கள்! அவா

  பஷையில் இவா, “vibrant mass puller”.இப்’பிட்டு’ப்பட நாயகர்களை

  வைத்துத்தான் ஆர்எஸ்எஸ் கூடாரம் கல்லாக்கட்டுகிறது. வெட்கக்கேடு!

 8. மோடி மற்றும் அவரின் அடிப்பொடிகள் நித்யாநந்தா,அசாராம் பாபு போன்ற காம கழிசடைகளின் சீடர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை !கஞ்ஜா சாமியார்களின் கதகதப்பில் வாழ்ந்துவரும் கட்சியே பி.ஜெ.பி. சொர்ணமால்யா புகழ் சங்கரசாரியின் காலை கழுவிகுடிப்பதில் ஆர்.வி ,ஷேசன் உள்ளிட்ட பார்ப்பன கும்பல் அரசுபதவியையே அசிங்கபடுத்தியது ! எல்லா பொறுக்கி அரசியல்வாதிகள் போல நீரா ராடியாவுடன் ஊடல்.காம சாமியார்களுடன் உறவு ,போலி மோதல் கொலைகள் ,என பல்வேறு கிரிமினல் பின்னணி கொண்ட நபர்தான் மோடி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க