Friday, August 19, 2022
முகப்பு செய்தி போலீஸ் அனுமதி மறுப்பால் மோடி எதிர்ப்பு சென்னை பொதுக்கூட்டம் தள்ளி வைப்பு

போலீஸ் அனுமதி மறுப்பால் மோடி எதிர்ப்பு சென்னை பொதுக்கூட்டம் தள்ளி வைப்பு

-

18.10.2013  அன்று சென்னையில் நடத்தவிருந்த மோடி எதிர்ப்பு பொதுக்கூட்டத்துக்கு ஏற்கெனவே அனுமதி அளித்து விட்டு, தற்போது திடீரென்று அனுமதி மறுத்திருக்கிறது சென்னை போலீசு.

மோடியின் பாதுகாப்புக்காக போலீசு படையை அனுப்ப வேண்டியிருப்பதை காரணம் காட்டியும், 18-ம் தேதி கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று அச்சம் தெரிவித்தும் அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து போலீசு அதிகாரிகளுடன் போராடிப் பார்த்தும் பயனில்லை. ஆயுத பூஜைக்காக உயர்நீதி மன்றத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், நீதிமன்றம் அடுத்த வாரம் தான் இயங்கத் தொடங்கும். எனவே நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பும் இல்லை. முதலில் அனுமதி கொடுத்து விட்டு, தற்போது திடீரென்று ரத்து செய்திருப்பதன் மூலம், எமக்கு இரட்டை விளம்பரச் செலவு, இரட்டை உழைப்பு.

“நாங்கள் கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தோன்றக்கூடும் என்றால், அப்படி பிரச்சினையை தோற்றுவிப்பவர்களைத்தான் தடுக்க வேண்டுமேயன்றி, எங்கள் கருத்துரிமையை தடுக்க முடியாது” என்று எதிர்த்தோம். “எமது பொதுக்கூட்டம் நடக்கும் இடம் நகரத்தின் வேறொரு மூலை. மோடியின் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கும் இதற்கும் தொடர்பே இல்லை” என்று வாதிட்டோம். “எங்கள் பாதுகாப்பை நாங்களே பார்த்துக் கொள்கிறோம், உங்கள் போலீசை ஒதுக்கத் தேவையில்லை” என்றும் சொல்லிப் பார்த்தோம். பயனில்லை.

மோடி பாதுகாப்பு
பாதுகாப்பு வளையத்தில் மோடி.

18 அன்று மோடி வருகைக்காக 12,000 போலீசார் பாதுகாப்பு என்று கூறுகிறது இன்றைய தினமணி செய்தி. அவர் போகும் வழி நெடுக 6,000 பேர் காவலாம். அப்புறம் அரங்கத்தை சுற்றி 6,000 பேராம். வாகன சோதனை, விடுதி சோதனை, மண்டப சோதனை சென்னை மக்கள் அனைவரையும் டவுசரைக் கழட்டி சோதனை போட்டு, ரோட்டில் நடக்க விடாமல் தடுத்து, வண்டி வாகனங்களைத் திருப்பி விட்டு .. ..

இவ்வளவும் எதற்கு? விரைவில் கம்பி எண்ண வேண்டிய ஒரு கிரிமினல் குஜராத்திலிருந்து இங்கு வந்து நமக்கு கருத்து சொல்லப் போகிறாராம். அவருடைய கருத்துரிமைக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக, நம்முடைய கருத்துரிமைக்குத் தடை.

இது ஒரு விதமான போலி மோதல். மக்களுடைய உயிர் வாழும் உரிமையையே பறிக்கின்ற உத்தமர் மோடிஜி ஊருக்குள் வரும்போது, குறைந்த பட்சம் நம்முடைய கருத்துரிமையைக் கூடப் பறிக்கவில்லையென்றால், அது அவருக்கு மரியாதை இல்லையே!

இந்த இடையூறு நாம் எதிர்பார்க்காதது அல்ல. இதற்கு முன் எதிர்கொள்ளாததும் அல்ல. கூட்டத்தை நடத்தியே தீருவோம்.

18.10.2013க்கு பதிலாக

26.10.2013 சனிக்கிழமை என்று பொதுக் கூட்டத் தேதியை மாற்றி வைத்திருக்கிறோம்.

முன்னிலும் அதிகமானோர் திரண்டு வாருங்கள்!

இந்து மதவெறி பாசிஸ்டு

இந்தியாவின் இராஜபக்சே

மோடியின் முகமூடியைக் கிழித்தெறிவோம்!

பொது அரங்கக் கூட்டம்

நேரம் :
26.10.2013,
சனி மாலை 6 மணி

இடம் :
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்,
கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில்
,

புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம்

(ஓட்டல் தாச பிரகாஷ், பூந்தமல்லி சாலை, புரசைவாக்கம் எதிரில், சங்கம் தியேட்டர் அருகில்)
சென்னை.

தலைமை :
தோழர் முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு

சிறப்புரை :
தோழர் மருதையன், பொதுச்செயலர், ம.க.இ.க

புரட்சிகர கலைநிகழ்ச்சி
ம.க.இ.க வின் மையக்கலைக்குழு

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

நன்கொடை அளிப்போர் பணம் அனுப்ப வேண்டிய விவரங்கள்

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
Postal Pincode : 613007
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE : 044- 23718706.
செல்பேசி : அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876
__________________________________

வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.

 1. எதிர் பார்த்த கயமைத் தனம்தான்… இந்து மதவெறிப் பாசிச்டுக்கு அம்மாவின் போலீசு நாய் போலச் சேவகம் புரிந்தாலும், தமிழக மண்ணில் பார்ப்பனியக் கூட்டு வெல்லாமல் முறியடிக்கும் நமது போராட்டத்தைத் தொடரும் புரச்சிகர அமைப்புகளின் விடாப்பிடியான பணிகளுக்கு வாழ்த்துக்கள்.

 2. உங்களுடைய இரட்டை உழைப்பு வீண் போகாது தோழர்களே,நிச்சயமாக மதசார்பின்மையையும் மனிதநேயத்தையும் விரும்பும் தமிழக மக்கள் பெருந்திரளாக திரண்டு வந்து தங்கள் வகுப்புவாத எதிர்ப்பை பதிவு செய்வார்கள்.

  • நன்றி : திரு திப்பு மற்றும்
   http://www.google.co.in/inputtools/cloud/try/

   [1]இந்த முறை நான் எழுத போகும் பின்னுடம் சற்று வித்தியாசமாக இருக்கும் !
   என் மனம் :
   தமிழில் வேகமாக சிந்தித்து….
   சிரமத்துடன் மெதுவாக அச்சு கோர்ப்பது என்பது
   தாய் படும் பிரசவ வலி போல சுகமானது !!!!

   [2]என் கவி
   மாணவன் ஆசிரியன் உறவு எ ன்பது
   தாய் சேய் தொப்புல் கொடி உறவு போன்றது !
   குறிப்பு :
   It is not a emotional poem but scientific poem
   I mean bidirectional transfer of blood through palcenta between child and mom
   I mean bidirectional transfer of Knowledge between student and Teacher

   [3]அன்பு நண்பா திப்பு ,

   உங்களால் தமிழில் அச்சு தட்ட மற்றும் மென்மையா பேச கற்றேன் !!!

   என் அருமை தமிழ் கூறும் நண்பா !
   தமிழில் தவறு இன்றி தட்டுவது என்பது
   சிரமம் அல்லவா !

   எனவே “உன்னை போன்று அனைவரும் ” நக்கல் கிண்டல் இன்றி
   குறைந்த சொற்களில் மிகக் பொருள் உடன் அச்சு செய்யும் படி தமிழ் பேசும் உலகை
   நட்புடன் கேட்டுக்கோள்கின்றேன்.

   அன்புடன் ,
   கி.செந்தில் குமரன்

 3. திருச்சி கூட்டத்தின் விளைவுதான் இது.தம் கோவணம் உருவப்படுவதை யார்தான் விரும்புவார்கள்? அதிலும் இந்த பாஸிஸ்டுகள் எப்படி பொறுப்பார்கள்? இன்னும் என்னென்ன தடங்கல்களோ? எனினும் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு.

 4. ஏங்க அதே மாதிரி புத்தூரில் பிடிபட்ட தீவிரவாதிகலுக்கு எதிரவும் போரடலம்ல அந்த விசயத்துல மட்டும் வினவு வேடிக்கை பார்க்குதே என்ன பயமா

 5. மோழுவதற்கும்,பேளுவதற்கும் தமிழகத்தை தேர்தெடுத்துட்டாரு அந்தாளு, ஓன்னுக்கு நெறுக்கிசிருன்னா, பிளைட்டல வந்து தமிழகத்துல வந்து ஒன்னுக்கு அடிச்சிட்டு போயிவாரு,அந்தாளு, அந்தாளு பெிளைட்டுல வந்துட்டு போற செலவ,பெரும் ஈனப்பிறவிகள் அள்ளிவீசும்,நாம ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கே. மாநாட்டு செலவு பிடிக்குது. இத சாக்க வச்சே அந்தாளு, இங்க அடிக்கடி வரப்போறாரு அந்தாளு,அதனால.நாமலும்,வாயக்கட்டி சிக்கனமாக இருந்து,அந்தாளுக்கு எதிர்ப்ப காட்டி ஒன்னாகூடுவோமங்க……….

 6. இந்தியா ஓர் சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்கிறது நமது அரசியல் அமைப்புச் சட்டம் பிறகு எப்படி அவர் வருவதை எதிர்த்து போராட்டம் நடத்தலாம். அவரை வரக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது, இப்போது மட்டும் எங்கே போனது உங்கள் நேர்மை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க