privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇன்று சென்னை வரும் கொலைகார மோடியை எதிர்த்து மாணவர் போராட்டம் !

இன்று சென்னை வரும் கொலைகார மோடியை எதிர்த்து மாணவர் போராட்டம் !

-

இந்தியாவின் ராஜபக்சே !
இந்து மதவெறி பாசிஸ்ட் கொலைகார  மோடியே
தமிழகத்தில் நுழையாதே!

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட மோடி கார்ப்பரேட்  நிறுவனங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட பலூன். கல்வி , மருத்துவம் வேலை வாய்ப்பு என அனைத்திலும் மிகவும் பின் தங்கியுள்ள குஜராத்தை முன்னோடி மாநிலமாகக் காட்டும் பொய்ப் பிரச்சாரத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்புக்கள் களமிறங்கியிருப்பது அனைவரும் அறிந்ததே.

இன்று மோடி தமிழகத்துக்கு வருவதற்கு எதிராக ம.க.இ.க, புமாஇமு, புஜதொமு, பெவிமு சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அது காவல் துறையால் ரத்து செய்யப்பட்டது. அக்கூட்டம் 26-ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மோடி சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள நூற்றாண்டு மண்டபத்திற்கு வரவுள்ளதால் போலீசு பல்கலைக் கழகத்தின் வாசலில் உட்கார்ந்து கொண்டு  அடையாள அட்டை இல்லாத மாணவர்களை மிரட்டுவதும் விரட்டுவதுமாக உள்ளது. மேலும் உழைக்கும் மக்களை வெடிகுண்டு வைத்துக் கொல்லும் இந்தக் கொலைகாரனுக்கு மாணவர்களால் பாதிப்பு என்பது போல மாணவர்களின் பையை சோதனையிடுவது, சாப்பாட்டில் குண்டு இருக்கிறதா எனத் தேடி வருகிறது காவல் துறை.

பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பன பாசிசத்துக்கு அனுமதி இல்லை என்பதை பறை சாற்றும் விதமாகவும் மாணவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் இந்த அயோக்கியத்தனத்துக்கு எதிராகவும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னை சென்ட்ரலில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்களிப்போடு இன்று (18.10.2013) காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பார்ப்பன பாசிஸ்டுக்கு எதிரான முழக்கங்களுடன் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் கொலைகார நரேந்திர மோடியே வெளியேறு என்று மாணவர்கள் விண்ணதிர முழங்கினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த புமாஇமுவின் மாநில அமைப்பாளர் தோழர்.த.கணேசன், மாணவர்களை குற்றவாளியாக்கி கொலைகாரனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையை கண்டித்துப்பேசினார். அரசு நிறுவனத்தில் மத வெறியனுக்கு இடம் கொடுத்த அயோக்கியத்தனத்தையும் அம்பலப்படுத்திப் பேசினார். “எப்படி ராஜபக்சேவுக்கு எதிரான மாணவர் எழுச்சி உருவானதோ அதைப்போல மோடிக்கெதிரான தீயை, மாணவர் எழுச்சியை பற்ற வைப்போம்” என்று கூறிமுடித்தார்.

“பெரியார் பிறந்த மண்ணிலே இந்து மதவெறியை, இந்திய ராஜபக்சேவை அனுமதிக்க முடியுமா” என்று தோழர் கணேசன் எழுப்பிய வினாவுக்கு பதில் அளிக்கும் விதமாக, “மோடியை அனுமதிக்க முடியாது” என்று உரத்து முழங்கினார்கள் மாணவர்கள்.

அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள் ஆனால், கொலைகார மோடி எந்த வேசம் போட்டாலும் கிழித்து தொங்க விடுவதற்கு இதோ மாணவர்கள் தயாராகிவிட்டார்கள். தமிழகத்தில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தினாலும் அத்தனை இடத்திலும் பதிலடி கொடுப்பார்கள் மாணவர்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு

 1. மோடி, மூடி மூடி செஞ்ச பாவங்கள்…
  இப்டீல்லாம் நிர்வாணமா ஊர் ஊரா வலம் வருதூ. தூ…!

  • அப்படியே இந்த கைது (பன்னா, போலீஸ், etc) செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் தீவிரவாதிகளைப்பற்றியும் பற்றி சொன்னால் சுவையாக இருக்கும்.

 2. 34 ஆண்டுகள் மேற்கு வங்காளத்திலும் ,அதே போல கேரளாவிலும் கம்யூனிஸ்டுகளிடம் ஆட்சியைக் கொடுத்தார்கள்.மக்களுக்கு அதனால் பலன் 0.கம்யூனிஸ்டுகளையும்,அம்மா சோனியாவையும் ஆதரித்துக் கொண்டிருப்பது சர்வதேசிய என்.ஜி.ஒக்கள் என்பதால்,மாற்றீ ஒருமுறை மோடிக்கு ஒட்டுப்போட மக்கள் நினைக்கிறார்கள்.மகாத்மாவின் கட்சியாய் இருக்கும் வரை அயொக்கியர்களாய் செயல்[பட்டு காங்கிரஸை வெறி கொண்டு அற்பர்களாய் எதித்தீர்கள்.சோனியாவின் காங்கிரஸை மறைமுகமாக இப்போது ஆதரிக்கிறீர்கள்.-மோடி எதிர்ப்பு என்ற போர்வையில்.நடக்கட்டும் நாடகம்.3ஆம் உலக முட்டாள் மக்கள் தானே.

 3. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

  முன்பு முஸ்லீம் அமைப்புச் சேர்ந்த பெண் ஒருவர் பேச இருந்த பொழுது மத ரீதியான அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அனுமதி மறுத்தவர்கள், இப்பொழுது அப்பட்டமான மத அமைப்பை சார்ந்த கொலைகார மோடிக்கு மட்டும் எப்படி அனுமதி தந்தார்கள்? இது தான் மதசார்பற்ற நம் அரசின் லட்சணம்.

  ஜெ.வை எதிர்த்தால், கருணாநிதிக்கு ஆதரவு. கருணாநிதியை எதிர்த்தால் ஜெ.விற்கு ஆதரவு என புரிந்துகொள்பவர்களை என்னவென்று சொல்வது? மருதையன் தோழர் சொன்னது போல, மன்மோகன் சிங் செயின் அறுக்கும் திருடனென்றால், செயினோடு கழுத்தையும் அறுப்பான் மோடி.

  • யப்பா அது முஸ்லிம் அமைப்புகள் (தீவிரவாதிகள் ) எதிர்த்து நடத்திய ஆர்பாட்டதினால் வந்த விளைவு…….. நீங்க எடம் மாறி வந்துட்டி ங்க…….. புனைவு என்ன எழுதினாலும்……. அது சரி… ஏன் முஸ்லிம் அமைப்பு பற்றி ஒருவரும் வாய் திறக்கவில்லை. சந்தப்பவாதமா,……….. போலி அரசியல் வாதிகளுக்கும் உங்களுக்கும் இந்த விஷயதில் வித்தியாசம் இல்லை, அதாவது தாஜா செய்தல் ……… முஸ்லிமை.

 4. குஜராத் சின்னா பின்னமாகி விட்டது…நரமாமிசம் தின்று வளர்ந்த மோடி போல்
  ஏன் இந்த பில்ட் அப். சிங்களத்து தமிழர் படு கொலைக்கு துணை போய்..இன்றும் நாகை
  மீனவரை காக்க முன் வராத..காங்கிரசுக்கு ஜால்ரா ..ஏனோ..?
  உலகில் கின்னஸ் புத்தகத்து வரும் அளவுக்கு ஊழல் செய்த காங்கிரசுக்கு..மீண்டும்..
  கொடி பிடிக்க சொல்கிறீர்களா…ஏற்கனவே பிஜெபி ஆண்ட நாடு தான்..
  மூன்று முறை குஜராத்தில் ஆள்பவர் தான்..அனுபவம் உள்ளவர் தான்…
  அவருக்கே இந்த முறை ஆதரவு…
  தங்கள் விருப்பத்திற்கு தாங்கள் போடுங்கள்..அது அவரவர் விருப்பம்

  • மன்மோகன் சிங் செயின் அறுக்கும் திருடனென்றால், செயினோடு கழுத்தையும் அறுப்பான் மோடி.

   So

   திருடன் மன்மோகன் (நிலக்கரி ஊழல் etc )சிறையில் போடு!!!!!!!!
   குஜராத் 3000 இந்திய மக்கள் கொலைகாரன் மோடிக்கு மரண தண்டனை கொடு !!!!!

   • சபர்மத்தி எக்ஸ்ப்ரச்ஸ் ரயிலில் கொல்லப்பட்ட ஹிந்துக்கள் பற்றி எழுத ஒரு ______ இல்லை…… முதலில் அவர்களுக்கு தண்டனை பெற்றுதந்துவிட்டு பிறகு பேசலாம் கலவரத்தில் இறந்த மக்களைப்பற்றி.

    • //சபர்மத்தி எக்ஸ்ப்ரச்ஸ் ரயிலில் கொல்லப்பட்ட ஹிந்துக்கள் பற்றி எழுத ஒரு ______ இல்லை…… முதலில் அவர்களுக்கு தண்டனை பெற்றுதந்துவிட்டு பிறகு பேசலாம் கலவரத்தில் இறந்த மக்களைப்பற்றி.// முதலில் லஷ்மண் பூரில் கொல்லப்பட்ட ‘இந்து’க்களைப் பற்றி பேசு. கொன்னது உன் சாதி உன் வர்ணம் என்பதால் பேசாமல் செல்கிறாயோ?

    • Already they[TRAIN FIRED PEOPLE] have been punished and now in jail..
     This this is the time for modi who killed 3000 Indians in Gujarat!!!

     If the people who fired in rain have been punished under Indian constitution why not the same constitution should PUNISH MODI FOR KILLING 3000 INDIANS IN GUJARAT!!!

  • என் தமிழ் இனமே !
   அங்கே இன கொலையாளி ராஜ் பட்சவுக்கும்
   இங்கே மத கொலையாளி மோடிக்கும்
   தண்டனை வலியுத்றுது !!

   என் தமிழ் இனமே !
   அங்கே அவனுக்கு மட்டும் துடப்பகட்டையும்
   இங்கே இவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
   எதற்காக!!!

   என் தமிழ் இனமே !
   நம் தமிழ் சமூகம்
   தமது ஆன்மாவை நாசம் செய்யாமல்
   நல்ல முடிவை எடு.

 5. குஜராத் மக்களை மோடி ஒன்றும் கொன்று குவிக்கவில்லை.ஈழத்தமிழர் படுகொலைக்கு
  கூட்டு நின்ற காங்கிரஸை விட..இன்று வரை நாகை மீனவரை காக்க துப்பற்ற காங்கிரஸை
  விட மோடி…உத்தமர்…
  பிஜெபி ஆண்ட நாடு தான்..ஊழலில் காங்கிரஸ் கின்னஸ் சாதனை படைத்தது போதும்.
  கொஞ்ச நாள் ஓய்வெடுக்கட்டும்..இந்த முறை ..ஆதரவு மோடி அவர்களுக்கு தான்..விரும்புபவர்கள்
  சோனியாவுக்கு போடட்டும்..மோதிலால்..இந்திரா…ராஜிவ்..ஸோனியா..ராகுல்.. அவர் குழந்தை..பிறகு அவர் பேரன் என வளர்க்க வாழ்துக்கள்..

  • Generally these people will not allow the middle class to succeed. The rich will take care of themselves and the poor will be exploited and pampered by the politicians and the media. Under Modi, middle class muslims also flourished and they are voting for him in Gujarat. It is a myth that muslims don’t vote for Modi.

   Finally, these media people will not allow any one outside the dynasty either in the centre or in the state to succeed because it will affect their business interests. Moreover Modi is a non brahmin which will make his task even harder.

 6. பெரியாரிய இயக்கங்கள் உறங்கிக்கொண்டு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் ,நியாயமாக அவர்கள் முன்னின்று செய்து இருக்க வேண்டிய வேலையை நீங்கள் செய்வது,இந்த மண்ணில் மதவாதிகளை சமரசம் இன்றி எதிர்க்க நாங்கள் இருகின்றோம் என்று போர்ப்பறை கொட்டுவது போல உள்ளது ,மகஇக மீது என் போன்றோர்கள் நம்பிக்கை வைக்கும் விதமாக இருக்கின்றது உங்களின் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் ,போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து போராளிகளுக்கும் செவ்வணக்கம்

  • அப்படியே முஸ்லிம் தீவிரவாதிகளை பற்றி ( பண்ணா, போலீஸ் .. பேர பாரு ) எழுத உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

 7. உலகளவில் தினம் தினம் முஸ்லீம் மக்களை கொன்று குவிப்பவன பத்தி ஒரு கட்டுரையும் காணோம்,ஆனா மோடின்னா வினவுக்கு கட்டுரைக்கு பஞசமே இல்ல! என்ன கொடும குமரா?….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க