மறத்தமிழன் சீமான் – மணற்தமிழன் வைகுண்டராஜன் – தரகுத்தமிழன் நடராசன்

68
658

“வீழ்ந்துவிடாத வீரம்; மண்டியிடாத மானம்” என்று எதுகை மோனையுடன் பஞ்ச் டயலாக் பேசி முஷ்டியை முறுக்குகிறார் சீமான். கருணாநிதிக்கு எதிராக காது ஜவ்வு கிழிய கத்தும் சீமான், ஜெயலலிதா பெயரைச் சொன்னதும், மிஸ்ஸுக்குப் பயப்படும் பள்ளிக்கூட சிறுவன் மாதிரி பம்முகிறார். ஜெயலலிதா மட்டுமல்ல… இந்தப் பட்டியலில் பலர் உண்டு. சமீபத்திய உதாரணம், தன் திருமணத்தின்போது மனைவி சகிதமாக சசிகலாவின் கணவர் நடராஜன் காலில் விழுந்தார் சீமான். ஒரு ஊழல் பேர்வழியின் காலில், ‘மண்டியிடாத மானம்’ வீழ்ந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றது கண்கொள்ளாக் காட்சிதான். இவர்தான் மூச்சுக்கு முந்நூறு தரம் தன்னை பெரியாரின் பேரன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்.

நடராஜன் என்ற நபர் தமிழ்நாட்டில் என்னவாக இருக்கிறார்? ஏதாவது அரசியல் கட்சி வைத்திருக்கிறாரா? தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறாரா? அமைச்சராக, எம்.எல்.ஏ.வாக, வார்டு கவுன்சிலராக இருக்கிறாரா? ஏதாவது தொழில் செய்கிறாரா? தொழிலதிபரா? எதுவும் இல்லை. பி.ஆர்.ஓ. வேலைப் பார்த்து வெளியே வந்தவர், அதே பி.ஆர்.ஓ. வேலையை அரசியலில் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த ‘தமிழ்நாட்டு நீரா ராடியா’ குவித்து வைத்திருக்கும் ஊழல் சொத்துகளுக்கு எந்தக் கணக்கு வழக்கும் இல்லை.

நடராஜன் காலில் விழும் சீமான்
மன்னார்குடி மாபியா தமிழன் நடராஜன் காலில் விழும் செந்தமிழன் சீமான்

நடராஜனின் குடும்பத்தார் தமிழ் மண்ணை எப்படி மொட்டையடித்தனர் என்ற உண்மை, பழ.நெடுமாறனையும் உலகத் தமிழ்ச் சான்றோர்களையும், 2006 க்குப் பிறகு பிறந்த சின்னப் பசங்களையும் தவிர, இனமான உணர்ச்சியற்ற உள்ளூர்த் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். மறத்தமிழன் சீமானுக்கு இது தெரிந்திருக்கும் என்று நாம் எண்ணியிருந்தோம். அவர் இனமான உணர்ச்சியுள்ளவர் என்ற காரணத்தினால், “அரசியல் தரகனேயாயினும் அவன் தமிழனன்றோ” என்று கூச்சப்படாமல் காலில் விழுந்து விட்டார் சீமான்.

தன் திருமணத்தை முடித்துக்கொண்டு நேராக இடிந்தகரைக்குச் சென்ற சீமான், அங்கு ஆரத்தி வரவேற்பு, கறிச்சோறு விருந்து சாப்பிட்டு விட்டு அடுத்து சென்றது, சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த வைகுண்டராஜன் மகனின் திருமணத்திற்கு.  அங்கு வைகுண்டராஜன் காலில் விழுந்து சீமான் ஆசிர்வாதம் வாங்கினாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நட-ராஜன் காலில் விழுந்தவருக்கு, வைகுந்த-ராஜன் காலில் விழுவதில் ஒன்றும் மனத் தடை இருந்திருக்கப் போவது இல்லை. நடராஜனாவது பகட்டாக உலா வருகிறார். வைகுண்டராஜன் எப்போதும் தமிழர் அடையாளமான வேட்டிதான் அணிகிறார். அவர் காலில் செருப்புக் கூட போடாத எளிமையான மனிதர்… ஆகவே இந்தத் தென்னாட்டுக் காந்தியின் காலில் விழுந்து வணங்கியிருந்தாலும் அது ஆச்சர்யமான செய்தி அல்ல.

“வயதில் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை எப்படி குறை கூற முடியும்? அது தமிழர் பண்பாடன்றோ” என்று சில தமிழ்த் தேசியவாதிகள் சொல்லக்கூடும். வயது அதிகம் என்பதாலேயே ஒருவரது தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம் என்றால், தமிழ்த் தேசியவாதிகள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டியது கருணாநிதியைதான். கிட்டத்தட்ட 90 வயதாகப் போகிறது. திராவிட இயக்கத்தின் மிச்ச சொச்சமாக சில நன்மைகளையும் அவர் கடந்த காலங்களில் செய்திருக்கிறார். எனினும் அவரை ஏற்றுக் கொள்ள முடியாமல் இவர்களைத் தடுப்பது எது? ஈழப்போரில் அவரது துரோகங்கள்தானே? எனில், வைகுண்டராஜன் செய்வது என்ன தியாகமா? ராஜபக்சே, துப்பாக்கிக் குண்டுகளால் ஈழத் தமிழர்களின் உயிரைப் பறித்தான். இப்போது வைகுண்டராஜன், கதிரியக்கம் என்னும் கொடும் நச்சு விஷத்தால் தமிழர்களின் கருவை அழிக்கிறான். இரண்டுக்கும் என்ன வேறுபாடு கண்டார் சீமான்?

வைகுண்டராஜன் மகன் திருமண வரவேற்பு
மணற்தமிழன் வைகுண்டராஜன் மகன் திருமணத்தில் மறத்தமிழன் சீமான்

உண்மையில் இன்று தென் தமிழக கடற்கரையோரத்தை வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ‘கற்பழி’க்கிறது. கடலோர மணல் வளத்தை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தோண்டி எடுத்து, அபாயகரமான கதிரியக்க மணல் கடல் நீரில் கலந்து, நீலக்கடல் சிவப்பு நிறமாக மாறிக்கிடக்கிறது. பல கிராமங்களில் மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு பிடி மண்ணும் தனக்கே சொந்தம் என்று சர்வாதிகாரம் செய்கிறது வி.வி. மினரல்ஸ் நிறுவனம். இதற்காக மக்களை மிரட்டி நிலங்களை வளைக்கின்றனர். அரசு நிலங்களை மிகக் குறைந்த தொகைக்குக் குத்தகைக்கு பெறுகின்றனர். கடந்த 14 ஆண்டுகளில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தோண்டி எடுத்திருக்கும் கனிம வளங்களின் உத்தேச மதிப்பு, சுமார் 96,120 கோடி ரூபாய். ஆனால் அரசுக்குக் கொடுப்பதோ 100 ஏக்கருக்கு 16 ரூபாய்.

இத்தனை பிரமாண்டமான சூறையாடலை நிகழ்த்தியிருக்கும் வைகுண்டராஜன், தென் தமிழக கடலோர மக்களை மீனவர், நாடார் என்று கூறுபோட்டு வைத்துள்ளார். ஒவ்வொரு சாதிச் சங்கத்திலும் தனக்கு ஆதரவாக ஒரு பிரிவை உருவாக்கி இருக்கிறார். கிறிஸ்தவ, இந்து மத சங்கங்களிலும் இவருக்கு ஆதரவு லாபி செய்யும் ஆட்கள் இருக்கின்றனர். இப்போது ‘தாது மணல் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் எங்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது’ என்று மனு கொடுப்பது இவர்கள்தான். இருப்பினும் கூட, முதன்முறையாக, வைகுண்டராஜனுக்கு எதிராக தென் தமிழக கடற்கரையோரத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் வி.வி. மினரல்ஸுக்கு எதிராக மனு கொடுக்கத் துவங்கியுள்ளனர். வைகுண்டராஜனுக்கு எதிராகப் பேசிவிட்டு தொடர்ந்து உயிருடன் இருக்க முடியும் என்பதையே அவர்களாலேயே நம்ப முடியவில்லை. இத்தனை நாட்களாய் அச்சத்தில் உறைந்திருந்த அவர்கள், மெள்ள, மெள்ள ஒருவரைப் பார்த்து ஒருவர் துணிச்சல் பெற்று வெளியே வருகின்றனர். சிதறிக் கிடக்கும் மக்களின் இந்த கோபத்தை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, வைகுண்டராஜன் என்ற சமூக விரோதியை ஒழித்துக் கட்டும் பணியை விரைவுபடுத்துவதுதான் சமூக அக்கறைக் கொண்ட இயக்கங்களின்; கட்சிகளின் பணியாக இருக்க முடியும். இதைத்தான் மகஇகவும் அதன் தோழமை அமைப்புகளும் செய்கின்றன. ஆனால் சீமானோ, வைகுண்டராஜனுடன் குலாவுகிறார்.

சீமான் மட்டுமல்ல… அனைத்துத் தமிழ்த் தேசியவாதிகளும் ‘தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன. ‘தமிழனைச் சுரண்டும் உரிமை தமிழனுக்கே வேண்டும்’ என்பதுதான் இதன் உட்பொருள். அந்த வகையில் தமிழக இயற்கை வளங்களை சுரண்டும் உரிமையைப் பெற்றுள்ள வைகுண்டராஜன் ஒரு பச்சைத் தமிழன் என்பதால் அவரை மன்னித்துவிடலாமா? தாதுமணல் கொள்ளை நடைபெறும் அதே கடலோரத்தில் அமைந்துள்ள இடிந்தகரையில்தான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடைபெறுகிறது. அங்கு சென்று, ‘என் உறவுகளே… என் சொந்தங்களே… தமிழ்ச் சாதியே’ என்று நரம்பு புடைக்க கூவும் சீமான், அந்த தமிழ்ச் சாதிதான் வி.வி.மினரல்ஸில் கூலிக்கு மண் சுமக்கிறது என்பதையும், கதிரியக்க மண்ணால் அந்த தமிழ்ச்சாதிதான் பாதிக்கப்படுகிறது என்பதையும் மறக்கச் சொல்கிறார்.

மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் மக்கள்
மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் மக்கள்

அதுமட்டுமல்ல… இடிந்தகரைப் போராட்டத்தை சிதைக்கும் நோக்குடன் அப்பகுதியில் சாதி மோதலை உருவாக்கி வருகிறது வி.வி.மினரல்ஸ் நிறுவனம். கடற்கரையோர கிராமங்களில் தாதுமணல் கொள்ளையை எதிர்ப்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர். இவற்றைப் பற்றியெல்லாம் சீமான் வாய் திறப்பது இல்லை. எரிமலையில் நின்று டூயட் பாடி, போராட்டக்களத்தில் தேனிலவு கொண்டாடிய பின்னர் அடுத்துப் போகவிருக்கும் இடம் வைகுந்தம் என்று, இடிந்தகரை போராட்டக் குழுவினரிடம் சீமான் சொல்லி விட்டுப் போனாரா என்று தெரியவில்லை. முதல் நாள் இடிந்த கரையில் கறிசோறு, மறுநாள் அப்போராட்டத்தை சீர்குலைக்கும் கனிமக் கொள்ளையன் வீட்டில் கறிசோறா என்று இடிந்தகரை போராட்டக் குழுவினர் சீமானை கேட்டார்களா என்றும் தெரியவில்லை.

சீமான் வைகுண்டராஜன் மகன் திருமண வரவேற்புக்குச் சென்று வந்த நேரத்தில்தான், அவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்கள் தென் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தன. ‘இந்த நேரத்தில் இவர் வீட்டு விசேஷத்துக்குப் போறது அசிங்கமாச்சே… நாலு பேர் விமர்சிப்பார்களே’ என்று கூட சீமான் எண்ணவில்லை. அசிங்கத்துக்கு அசராத இந்த அச்சமின்மையில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? அசிங்கம் பார்த்தால் ஆதாயம் இல்லை என்பதுதான்.

வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளையைக் கண்டித்து எந்த ஓட்டுக் கட்சியும் வாய் திறக்கவில்லை. வாய் திறந்தாலும் களத்தில் இறங்கவில்லை. இதில் விதிவிலக்காக விஜயகாந்த் மட்டும் வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளையைக் கண்டித்தார். காரணம் அவர் கனிம மணல் கொள்ளையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர். தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் பலரும் அ.தி.மு.க வுக்குத் தாவினார்களே, அவர்கள் ஒவ்வொருவருக்கும் கோடி, கோடியாக பண விநியோகம் செய்தது வைகுண்டராஜன்தானாம். காப்டனுக்கு அந்தக் கடுப்பு! மற்றபடி அவர் கதிரியக்கத்தைக் கண்டாரா? தாது மணலைக் கண்டாரா?

ஆனால் தென்மாவட்டங்களில் விஜயகாந்துக்கு எதிர்ப்பு “பலமாக” இருந்தது.

சீமான்-நடராஜன்-நெடுமாறன்
மறத்தமிழனுக்கு ஆசீர்வாதம் செய்யும் மன்னார்குடி மாபியா தமிழன் நடராஜன்தான், பின்னாடி நிற்கும் மாவீரன் நெடுமாறன் உருவாக்கியிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தின் புரவலர்.

பல்வேறு சாதி சங்கங்களின் பெயர்களுடன் ‘ஏ விஜயகாந்தே… மன்னிப்புக் கேள்’ என்று நெல்லையில் போஸ்டர்கள் முளைத்தன. பிள்ளைமார் சங்கம் முதல் கோனார் சங்கம், தேவர் சங்கம், தேவேந்திரர் சங்கம், நாடார் சங்கம் என எந்த சாதியும் மிச்சமில்லை. அனைத்து சாதி சங்கங்களின் பெயர்களிலும் வைகுண்டத்தின் ஆட்களே போஸ்டர் அடித்திருப்பார்கள் போல! அனைத்து போஸ்டர்களும் ஒரே மாதிரி டிஸைன், அனைத்திலும் ஒரே வாசகம். கீழே சங்கத்தின் பெயர் மட்டும் மாறியிருந்தது.

இந்த சாதிச் சங்கங்கள் இதற்கு முன்பு வேறு எதற்காகவும் இத்தனை ஒற்றுமையாக எதிர்ப்பைக் காட்டியிருப்பார்களா தெரியவில்லை.

நத்தம் காலனி தாக்குதலுக்குப் பின்னர் செந்தமிழன் சீமான் ஒரு தத்துவம் சொன்னார். தமிழகத்தை தமிழன் ஆளும் நிலை இல்லாமல், வேற்று மொழிக்காரன் ஆளுகின்ற காரணத்தினால்தான், தமிழர்களுக்குள் சாதிச்சண்டை தூண்டப்படுகிறது என்றும் தமிழ்ச்சாதிக்காரன் ஆண்டால் இன ஒற்றுமை நிலைநாட்டப்படும் என்றும் சொன்னார். அந்த தத்துவத்தின் பொருள் இப்போதுதான் புரிகிறது.

எப்படியோ, சாதியால் பிரிந்து கிடக்கும் தமிழர்களை பச்சைத்தமிழர் வைகுந்தராசன் ஒன்று படுத்தி விட்டார். இனி சீமானை வைத்து ஒரு கூட்டம் போட்டு, குழாய் கட்டி தமிழர்களுக்கு இனவுணர்வு ஊட்டி விடலாம். அதெப்படி முடியும் என்கிறீர்களா?

ஏன் முடியாது? மன்னார்குடி மாபியாவின் காசில் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையையே (தஞ்சையில் பழ நெடுமாறன் குழுவினரால் திறக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தின் நிகழ்வு) உருவாக்க முடியும் என்றால், மணல் மாபியாவின் பணத்தில் மறத்தமிழன் சீமானால் குறைந்த பட்சம் இனவுணர்வைக் கூட ஊட்ட முடியாதா என்ன?

சந்தா

68 மறுமொழிகள்

 1. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் 13-10-2013 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமை வகித்தார். கூட்டத்தில் இளைஞர் பாசறையின் மாநில பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும், தீர்மானங்களும் பின் வருமாறு :

  நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை 13-10-2013 அன்று நடத்திய மாநில கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ௨:

  2. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை ஆகியவைகளை நாம் தமிழர் இளைஞர் பாசறை உறுதியாக எதிர்த்துப் போராடவும், தொடர் போராட்டங்களை நடத்தவும் உறுதியேற்கிறது. தாதுமணல் கொள்ளையினை தடைசெய்த தமிழக அரசின் நடவடிக்கையினை நாம் தமிழர் இளைஞர் பாசறை வரவேற்கிறது. அதே சமயத்தில் இந்நடவடிக்கை மிகவும் தாமதமான ஒன்று என்று கருதுவதோடு மட்டுமில்லாமல் மேற்படி தடையினை நிரந்தரமாக்கி மண்ணின் வளம் மக்களுக்கானது என்ற அடிப்படையில் தற்சார்பு பொருளாதார கொள்கையினை பின்பற்றவும் மத்திய, மாநில அரசுகளை நாம் தமிழர் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

  • பாக்கியராசன், நாம் தமிழர் இளைஞர் பாசறையின் முடிவை மீறி நடந்து கொண்டதால் சீமானை கட்சியிலிருந்து நீக்கிவிட்டீர்களா, இது தெரியாதே எங்களுக்கு ? அடுத்து இதில் வைகுண்டராஜன் என்ற மாஃபியாவின் பெயரை காணவே இல்லையே? கொள்ளை கொள்ளை ன்னு வார்த்தைகள் இருக்கிறதே அன்றி கொள்ளையன் பெயர் இல்லையே?

  • ////தாதுமணல் கொள்ளையினை தடைசெய்த தமிழக அரசின் நடவடிக்கையினை நாம் தமிழர் இளைஞர் பாசறை வரவேற்கிறது.////

   எப்படி அ.தி.மு.க வரவேற்பதைப்போலவா ?

  • ///அதே சமயத்தில் இந்நடவடிக்கை மிகவும் தாமதமான ஒன்று என்று கருதுவதோடு மட்டுமில்லாமல் மேற்படி///

   அடேங்கப்பா ரொம்ப லேட்டோ…

  • தாதுமணல் கொள்ளையினை தடைசெய்த தமிழக அரசின் நடவடிக்கையினை நாம் தமிழர் இளைஞர் பாசறை வரவேற்கிறது.//// தம்பி வைகுந்தராஜன் ஜெயா டீ.வி ல பங்குதாரர் பா……

 2. நேற்று குடவாசலில் மீதேன் திட்டத்திற்கு எதிராக இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் தலைமையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் அண்ணன் சீமான் ஆற்றிய உரை..

  # ஒரு திருமணத்திற்கு சென்றதை வைத்து ஆயிரம் கதை கட்டிவிட்டு தாது மணல் கொள்ளையை பற்றி சீமான் பேச மறுக்கிறார் என்று கிளப்பி விட்ட எங்கள் வளர்ச்சியில் அக்கறையுள்ள அன்பர்கள் அவர் மணல் கொள்ளை பற்றி என்ன பேசுகிறார் என்று கேட்டு தெளிவு பெறவும்..

  • தாதுக் கொள்ளையன் வைகுண்டராஜன் வீட்டு திருமணத்திற்கு சென்றது எதற்காக? தாது மணற் கொள்ளையன் வைகுண்டராஜனை கண்டித்து தூத்துக்குடியில் ஒரு கூட்டம் போட்டு பேசுவதற்கு வீரமோ, மானமோ, ரோசமோ, தில்லோ உண்டா? எதற்கு நாடகமாடுகிறீர்கள்?

   • ஐயா வினவு,

    நீங்கள் மறத்தமிழன் சீமானுக்கு இன்னும் அதிக அழுத்தம் அதிகமாக கொடுக்க வேண்டும்!!

    மறத்தமிழன் சீமான் ,வைகுண்டராஜன் வீட்டு திருமணத்திற்கு சென்றாலும் ,ஏன் ராஜா பட்ச குடும்ப திருமணத்திற்கு சென்று வந்தாலும் பாக்கியராசன் ஆதரிப்பார்!!

    மறத்தமிழன் சீமான் நாறி போவதை தமிழ் மக்கள் பார்க்க வேண்டாமா ?

    • அய்யகோ.. நடராசன் வைகுண்டராசன் என்று எங்கள் திராவிட ராசாக்களை குறை சொல்கிறீர்களே..இது ஒரு பார்ப்னீய சதியே…. பார்ப்பனீயம் இதனால் பிழைக்க காரணமாகவிட்டீரே வினவு.. இந்த அநியாயத்தை கேட்க இங்க யாரும் இல்லையா….

   • அய்யா வினவு!!! எதுக்கு வைகுண்டராஜன் அவர்களை மட்டுமே குறிவைத்து கொள்ளையர் என்று கூறுகிறீர்கள்???? உங்களுக்கும் அவருக்கும் அப்படி எனதான் பகை…….. ஒரு இணையதளத்தை வைத்துக்கொண்டு இவ்வாறு வாய்க்கு வருவதையெல்லாம் எழுதுவது வன்மையாக கண்டிக்கதக்கது…….. கொள்ளை அடித்த ஆதரங்களே இல்லாத போது ஒரு தனிப்பட்ட நபரை விமர்சிப்பது நியாயமல்ல ………. குறை குடம் கூத்தாடும் என்பது போல….நீங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு கூப்பாடு போடுவதால் எந்த பயனும் இல்லை……..

  • சரி, பாக்யராசன்

   மன்னார் குடி மாஃபியாத் தமிழன் காலில் மறத்தமிழன் விழுவது குறித்து கட்சித் தீர்மானம் என்ன சொல்கிறது?

  • @பாக்கியராசன்: நீங்கள் கொடுத்துள்ள இணைப்பை முழுமையாகக் கேட்டேன். மாவோயிஸ்டுகள் பகுதியில் தாதுவளம் கொள்ளை அடிப்பதை பற்றி ஆரம்பித்து… சற்று நேரத்தில் வழக்கம் போல கருணாநிதியை திட்டத் துவங்குகிறார். மற்றபடி, ஓர் இடத்தில் கூட வைகுண்டராஜன், வி.வி.மினரல்ஸ் என்ற நிறுவனங்களின் பெயர்களை அவர் உச்சரிக்கவில்லை என்பதுடன், தென் தமிழக தாது மணல் கொள்ளையை பற்றி ஒரு வரிக் கூட பேசவில்லை. எதற்காக இந்த வீடியோவை ஓர் ஆதாரம் போல இங்கு பகிர்ந்துள்ளீர்கள்?

  • சீமானின் போலி உணர்ச்சி கேட்க சகிக்கவில்லை.. இந்த உரையில் பொத்தாம் பொதுவாக தண்டகாரண்யா பசுமைவேட்டை பற்றியும், பொதுவான தாதுக் கொள்ளையைப் பற்றி மட்டும்தான் பேசிகிறார். அம்பலப்பட்டுவிட்ட பின்னர் அதை மறைக்கப் படாத பாடு படுகிறார்கள் சீமானின் தம்பியினர்.. என்ன செய்வது பிழைப்புவாதிகள் ஒருநாள் மக்க்ளிடம் அம்பலப்பட்டுத்தானே ஆகவேண்டும்..

  • //ஒரு திருமணத்திற்கு சென்றதை வைத்து ஆயிரம் கதை கட்டிவிட்டு தாது மணல் கொள்ளையை பற்றி சீமான் பேச மறுக்கிறார் என்று கிளப்பி விட்ட எங்கள் வளர்ச்சியில் அக்கறையுள்ள அன்பர்கள் அவர் மணல் கொள்ளை பற்றி என்ன பேசுகிறார் என்று கேட்டு தெளிவு பெறவும்..//

   எனவே மிக விரைவில் உங்கள் தலைவர் சீமான் அவர்கள்,
   ராஜா பட்ச குடும்ப திருமணத்திற்கு சென்று வந்த பிறகு கூட
   நீங்கள்……

   “ஒரு[ராஜா பட்ச குடும்ப திருமணத்திற்கு] திருமணத்திற்கு சென்றதை வைத்து ஆயிரம் கதை கட்டிவிட்டு
   தமிழ் ஈழம் பற்றி சீமான் பேச மறுக்கிறார் என்று கிளப்பி விட்ட
   எங்கள் வளர்ச்சியில் அக்கறையுள்ள அன்பர்கள் அவர் தமிழ் ஈழம்பற்றி என்ன பேசுகிறார் என்று கேட்டு தெளிவு பெறவும்”

   என்று கூறுவீர்களா?
   ஏன் இந்த துரோக நாடகம்?

  • கை தட்ட தெரிந்த தமிழன் இருக்கும் வரை சீமான் போன்றோரும் சிறப்பாக இருந்து கொண்டுதான் இருப்பார்கள். உண்மையான தலைவன் தோன்றும் வரை நம் கைகள் கட்டப்படட்டும்.பாபுபகத்.

 3. சீமனையும், அவரையொத்த தமிழ் தேசியவாதிகளையும் செருப்பால் ’பளார்’ ’பளார்’ என அறைவது போல் உள்ளது கட்டுரை.

  // இவர்தான் மூச்சுக்கு முந்நூறு தரம் தன்னை பெரியாரின் பேரன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்.//
  முன்னால் அப்படிச் சொல்லிக் கொண்டு திரிந்தார். ஆனால் இப்போது சீமான் ‘தூய தமிழ் தேசியவாதி’(?)யாக மாறிவிட்டதால், வேற்று இனத்தவரான(?)பெரியார் தமிழினத் துரோகியாகவும், தமிழ்தேசியவாதிகளுக்கு எதிரியாகவும் மாறிவிட்டார்.

  தமிழினத்தின் சுய மரியாதைக்குப் போராடியவர் வேற்று இனத்தவர் என்றால், தூய(?) தமிழனாக இருந்து கொண்டு, இந்தத் தமிழ் தேசியவாதிகள் தமிழினத்துக்கு என்ன செய்து கிழித்தார்கள்? அவர்கள் செய்வதெல்லாம் தமிழர்களின் உரிமையையும், சுயமரியாதையையும் கார்ப்பொரேட் பொறுக்கிகளிடமும்(வைகுண்ட ராஜன்), சாதி வெறியர்களிடமும்(தேவர்சாதி வெறியன் நடராசன்) அடகுவைக்கும் வேலையைத்தான்.

  ஆனால் இவ்வளவுக்குப் பிறகும், ஈழம் என்று வந்தால் பெரியாரின் பெயரை வைத்துள்ள இயக்கங்கள் (முக்கியமாக பெரியார் தி.க)இந்தச் சந்தர்ப்பவாதப் பொறுக்கிகளுடன் கூட்டுச் சேரத் தயங்குவதில்லை.

  சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசாத(பேசினால் மட்டும் போதாது; அதற்காக மக்களைத் திரட்டி சமரசமற்றுப் போராட வேண்டும்), எந்தத் தமிழ் தேசிய இயக்கமும் சந்தர்ப்பவாதிகளின் கூடாரமாகத்தான் திகழும் என்பதற்கு சீமான் ஒரு அருமையான உதாரணம்.

  இவ்வளவுக்குப் பிறகும் சீமானின் உணர்ச்சி பொங்கும் பேச்சைக் கேட்டு அவர்பின் செல்லும் இளைஞர்களை என்னெவென்று சொல்வது?

 4. இந்தப் புண்ணாக்குகள் தான் ஈழத்தமிழர்களுக்காக கவலைப்படுகிறார்களா, ஊழல் பணத்தில் நினைவுச்சின்னம் அமைக்க இவர்களுக்கு வெட்கமாக இல்லையா.

 5. தமிழகத்தில் எந்த கட்சியிலும் தாது மணல் கொள்ளைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படாத பொழுது நாம் தமிழர் கட்சி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.. அதுவும் அவர் திருமணத்திற்கு சென்று வந்த பிறகு தான் தீர்மானம் நிறைவேற்ற பட்டு அது பத்திரிகைகளுக்கு அனுப்பட்டு நாம் தமிழர் இணையதளத்திலும் பிரசூரிக்கப்பட்டிருக்கிறது.. உங்கள் கட்டுரை தாது மணல் கொள்ளை பற்றி அதற்கு பிறகு சீமான் பேசவே இல்லை என்று சொல்கிறது.. அது பொய் என்பதற்காகவே அதை பதிந்தேன்.. நேர்மையுள்ளவர்கள் கட்டுரையை மாற்றவேண்டும்.. வைகுண்டராசன் பெயரை சொல்லவில்லை என்பதெல்லாம் சுத்த பேத்தலான வாதம்.. தாது மணல் கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு என்றால் அது வைகுண்டராசனையும் தான் சாரும்..மகஇகவிற்கு வைகுண்டராசன் மட்டும் தான் டார்கெட் என்றால் அதில் வேறு ஏதோ சூட்சமம் இருப்பதாகவே புரிந்து கொள்ள முடியும்..

  ஒருவரை திருமண நிகழ்விற்கு அழைப்பதற்கும் ஒருவரின் திருமண நிகழ்விற்கு செல்வதற்கும் கட்சியின் கொள்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. தொடர்ந்து நாம் தமிழர் கட்சி எல்லாவிதமான சுரண்டலுக்கும் எதிராக செயல்படும்..

  • ஒருவரை திருமண நிகழ்விற்கு அழைப்பதற்கும் ஒருவரின் திருமண நிகழ்விற்கு செல்வதற்கும் கட்சியின் கொள்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை//

   – உங்களுக்கு கொள்கையே இல்லை என்பதுதான் உண்மை. ‘கல்யாணம்தானே… யாரை வேண்டுமானாலும் கூப்பிடலாம்’ என்றால் துக்ளக் சோவை கூப்பிட்டிருக்கலாம். தந்தி டி.வி.யில் சீமானின் சக நிகழ்ச்சித் தொகுப்பாளர் நித்தியானந்தாவை அழைத்திருக்கலாம். எதற்கு அழைக்கவில்லை?

   பொதுவாழ்வில் முற்போக்கு; தனிவாழ்வில் பிற்போக்கு என்பதுதான் நாம் தமிழரின் கொள்கையா?

  • மணற்கொள்ளையன் என்றாலே அது வைகுண்டராஜன் தான் அப்புறம் என்ன மற்றவர்கள் என்கிற பேச்சு சீமானுக்கு அண்ணாச்ச்சியிடம் ஆதாயம் இருப்பதால் தான் தமிழ்நாடே மணலுக்கு பதிலாக உச்சரிக்கும் வைகுண்டராஜனின் பெயர் வாய்க்குள் நுழைய மாட்டேன் என்கிறது. அண்ணனுடைய ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு தம்பி, அந்த அர்த்தம் தெரியாம தான் நீங்க பேசிக்கிட்ருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

  • தீர்மானம்னா என்ன பெரிய வெடிகுண்டா ? நாங்க கூடத்தான் நாலு பசங்க இருக்கோம் நாங்களும் கூட ஒபாமாவை கண்டிச்சு தீர்மாணம் போடுவோம், வைகுண்டராஜனை எதிர்த்தும் தீர்மானம் போடுவோம். அதனால என்னல இப்ப. ஆனால் நாம் தமிழர் குட்டிச்சுவத்துல உட்காந்திருக்க எங்க அளவுக்கு கூட இல்லையேல்ல நாங்களாவது பேரைக்குறிப்பிட்டு போடுவோம், உங்களுக்கு அந்த தைரியம் கூட இல்லையே. இப்ப போட்டத்தீர்மாணத்தையும் அண்ணாச்சிக்கிட்ட கேட்டுட்டுத்தானே போட்ருப்பீங்க. தீர்மானமாம் தீர்மானம் ஏமாத்துபேர்வழிகள்.

  • நீங்க உண்மையிலேயே மணற்கொள்ளையை எதிர்க்குறீங்கன்னா நாம் தமிழர் தம்பிகளை எல்லாம் தி.வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இறக்கிவிட்டு ம.க.இ.க தோழர்களைப் போல துணிவுடன் மணற்கொள்ளையர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வையுங்கள் பார்ப்போம். உங்களுடைய வீழ்ந்துவிடாதா வீரத்தை நாங்களும் கொஞ்சம் பார்க்கிறோம்.

  • கூடங்குளம் போராட்டத்திற்கு உலைவைக்கும் வைகுண்டராசன் கல்யாணத்திற்கு என்ன மயித்துக்கு போகனும்கிறேன் ? உங்க மாணங்கெட்ட அண்ணணால எப்படி ஒரு கொள்ளைக்காரனுக்கு பக்கத்தில் நின்னுகிட்டு பல்ளிளிக்க முடிகிறது. முதல் நாள் கூடங்குளம், இரண்டாம் நாள் வைகுண்டராசனா. என்ன மானங்கெட்ட பொழப்புடா இது? இது தான் நாம் தமிழர் கொள்கையா ?

  • thampi nenga rajapakchevakuda alaippikala manankettavarkale koalkai veru thani manitha valvu veru chee neangal thaan viduthalaipulikalin muthal yethirikal..elap pirachiniel vegundeluntha tamilagaththi inthiya ulavuththurai raa vukku aatharavaka unarvukalai malunkadithu seyaladra veenarkalakki than yethikala ottu porikki arasialukka vakku vankiyai thamilarkalai ninaitha keeltharamana pilaippuvathikal naam thamilar katchi…

  • //ஒருவரை திருமண நிகழ்விற்கு அழைப்பதற்கும் ஒருவரின் திருமண நிகழ்விற்கு செல்வதற்கும் கட்சியின் கொள்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை.//

   அப்ப நாளைக்கு “ராஜபக்சே” வீட்டுத்திருமணத்துலயும் கலந்துப்பீங்க

  • //அதுவும் அவர் திருமணத்திற்கு சென்று வந்த பிறகு தான் தீர்மானம் நிறைவேற்ற பட்டு அது பத்திரிகைகளுக்கு அனுப்பட்டு நாம் தமிழர் இணையதளத்திலும் பிரசூரிக்கப்பட்டிருக்கிறது.//

   எனவே மிக விரைவில் உங்கள் தலைவர் சீமான் அவர்கள்,
   ராஜா பட்ச குடும்ப திருமணத்திற்கு சென்று வந்து,
   அவனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி
   அது பத்திரிகைகளுக்கு அனுப்பி நாம் தமிழர் இணையதளத்திலும்
   பிரசூரிக்கப்பட உள்ளது !!

   எம் தமிழ் மீனவர்களை கடலில் துப்பாக்கியால் கொன்று குவித்தான் ராஜா பட்ச !!
   எம் தமிழ் மீனவர்களை கரையில் கதிர் இயக்கத்தால் கொன்று குவித்தான் வைகுண்டராஜன் !!

   நீயா எம் தம்பியின் தம்பி?
   எம் தம்பியின் சாம்பலில் முளைத்து
   இன்று தமிழனுக்கே துரோகி ஆனது ஏன் ?

  • //உங்கள் கட்டுரை தாது மணல் கொள்ளை பற்றி அதற்கு பிறகு சீமான் பேசவே இல்லை என்று சொல்கிறது.. அது பொய் என்பதற்காகவே அதை பதிந்தேன்.. நேர்மையுள்ளவர்கள் கட்டுரையை மாற்றவேண்டும்.. வைகுண்டராசன் பெயரை சொல்லவில்லை என்பதெல்லாம் சுத்த பேத்தலான வாதம்..//

   அவர்கள்[vinavu] ஏன் இந்த கட்டுரை மாற்ற வேண்டும்?

   நீ முதலில் உன் தலைவனை மாற்று !!!
   துரோகிக்கு ஏன் சாமரம் வீ சு கி ன் றா ய் ?

  • //ஒருவரை திருமண நிகழ்விற்கு அழைப்பதற்கும் ஒருவரின் திருமண நிகழ்விற்கு செல்வதற்கும் கட்சியின் கொள்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை..//

   மறத்தமிழன் சீமான் !!!,

   “ராஜா பட்சவை” உன் திருமண நிகழ்விற்கு அழைப்பதற்கும் “ராஜா பட்ச குடும்ப ” திருமண நிகழ்விற்கு நீ செல்வதற்கும் கட்சியின் கொள்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை!!!!!!

   அப்படி தானே ?

  • //ஒருவரை திருமண நிகழ்விற்கு அழைப்பதற்கும் ஒருவரின் திருமண நிகழ்விற்கு செல்வதற்கும் கட்சியின் கொள்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை..//

   இதற்கு மேலேயே திரு. K.Senthil Kumaran (October 26, 2013 at 2:06 am) நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படி கேள்வி கேட்டிருக்கிறாரே…அதற்கு என்ன பதில்??

   //…மிக விரைவில் உங்கள் தலைவர் சீமான் அவர்கள்,ராஜா பட்ச குடும்ப திருமணத்திற்கு சென்று வந்த பிறகு கூட நீங்கள்……

   “ஒரு[ராஜா பட்ச குடும்ப திருமணத்திற்கு] திருமணத்திற்கு சென்றதை வைத்து ஆயிரம் கதை கட்டிவிட்டு தமிழ் ஈழம் பற்றி சீமான் பேச மறுக்கிறார் என்று கிளப்பி விட்ட எங்கள் வளர்ச்சியில் அக்கறையுள்ள அன்பர்கள் அவர் தமிழ் ஈழம்பற்றி என்ன பேசுகிறார் என்று கேட்டு தெளிவு பெறவும்”

   என்று கூறுவீர்களா? ஏன் இந்த துரோக நாடகம்?…//

 6. அருமையான கட்டுரை. HRPC , யும் வினவும் தாது மணல் கொள்ளை குறித்து பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன.

 7. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை இந்த பகுதியில் எத்தனை நிறுவணம் தான் உள்ளது.. அது ஏன் ஒரு பெயர் மட்டும் வெளி வந்து கொண்டுயே இருக்கிறது. எத்தனையோ ஊழல் நடைபெற்று வருகிறது அதைப்பற்றி எல்லம் நமக்கு என்ன கவலை… கொடுத காசுகு வேலை பார்போம்…..

 8. வினவு தனி மனித துவேசங்கள் அதிகம் இல்லாமல் ஒரு கட்டுரையை தந்ததற்கு நன்றி. சீமானின் நடவடிகைகள் அவருக்கு வலு சேர்பதாக இல்லை.

 9. ///ஒருவரை திருமண நிகழ்விற்கு அழைப்பதற்கும் ஒருவரின் திருமண நிகழ்விற்கு செல்வதற்கும் கட்சியின் கொள்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. தொடர்ந்து நாம் தமிழர் கட்சி எல்லாவிதமான சுரண்டலுக்கும் எதிராக செயல்படும்..///

  ராஜபக்சே-சோனியா வீட்டு திருமணத்துக்குக் கூப்பிட்டால் செந்தமிழன் போவாரா? இல்லை
  தனது வீட்டு திருமணத்திற்க்கு அவர்களை அழைப்பாரா? மனதில் நினைத்தாலே காறி உமிழத்தக்க நடராஜன் – வைகுண்டராஜன் போன்ற மக்கள் விரோத கிரிமினல்களிடம் ஒரு கட்சித் தலைவர் வெளிப்படையான உறவு வைத்திருக்கிறார் என்றால் அவர் அடிப்படையிலேயே கீழ்த்தரமான-கொள்கை ஏதுமற்ற பிழைப்புவாதியாகத்தான் இருக்க முடியும்! அவரோடு உறவு வைத்துள்ள மற்ற அமைப்பினர் இதற்க்குப் பிறகாவது சீமான் – பழ.நெடுமாறனின் உறவை கடும் விமர்சனத்தோடு துண்டிக்க வேண்டும். இல்லையேல் சீமான் – பழ.நெடுமாறன்-இவர்களோடு இனியும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்போரை முகத்தில் காறித் துப்பி தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும்!

 10. வைகுண்ட ராஜனை மட்டும் டார்கெட் செய்வதற்கு அடுத்த தரப்பிடமிருந்து உதவி பெறுகிறீர்களா மகஇக ?

  • வைகுண்டராஜனை டார்கெட் செய்வதற்கு எதிர்தரப்பான மக்களின் ஆதரவு மகஇகவிற்கு உண்டு. மற்றபடி நாம் தமிழரும், சீமானும் வைகுண்டராஜன் தரப்பு என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி

   • // மற்றபடி நாம் தமிழரும், சீமானும் வைகுண்டராஜன் தரப்பு என்று ஒத்துக் கொண்டதற்கு // நீங்களே சொல்லி நீங்களே ஒப்புக் கொண்டதாக சொல்கிறீர்கள் , நன்றன்று . மணல் கொள்ளயனுடன் தமிழ்த்தேசியத்தை இணைத்து பேசுவதும் தவறு . வைகுண்ட ராஜன் மட்டுமல்ல அவரைப் போன்ற மற்ற தமிழர் வளத்தை சூறையாடும் யாருமே தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களே . நாம் இந்த வள கொள்ளை அயோக்கியர்கள் அனைவரையும் தமிழினத்திற்கு எதிராகவே பார்க்கிறோம் .

    • ஐயா [துரோக]மணி ,

     உங்கள் தமிழ் தேசிய தன்னுரிமை நாட்டில், வைகுண்ட ராஜன் [மணல் கொள்ளய]னின் நண்பன் மறத்தமிழன் சீமான் என்றால்…!

     தூதேரி…..!உன் தமிழ் தேசம் எமக்கு வேண்டாமட்டா……..!
     உழைக்கும் மக்கள் நாங்கள்….., புதிய சோசலிச நாட்டை உருவாக்க முயல்வோம் !!!
     அந்த நாட்டில் உன் நண்பர்கள் வைகுண்ட ராஜன்-களுக்கு குழி தோண்டுவோம் !!!!

     அங்கே கனிமங்கள் கொள்ளைக்கு எதிராக மஒயிஇஸ்டுகல் போராடுவது போல
     இங்கே மணல் கொள்ளைக்கு எதிராக நாங்கள் போராடுகிரோம் !!!

     வெறுபுடன்,
     கி.செந்தில் குமாரன்

     Note : Dear vinavu pls publish this comment with out any correction

    • mani said: //வைகுண்ட ராஜன் மட்டுமல்ல அவரைப் போன்ற மற்ற தமிழர் வளத்தை சூறையாடும் யாருமே தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களே//

     என்றால் ….,

     மணல் கொள்ளயன் வைகுண்ட ராஜன் வீட்டு திருமணதிற்க்கு மறத்தமிழன் சீமான் ஏன் போகவேண்டும்?

     “ராஜா பட்சவை” உன் திருமண நிகழ்விற்கு அழைப்பதற்கும் “ராஜா பட்ச குடும்ப ” திருமண நிகழ்விற்கு நீ செல்வதற்கும் கட்சியின் கொள்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை!!!!!!

     நீயா எம் தம்பியின் தம்பி?
     எம் தம்பியின் சாம்பலில் முளைத்து
     இன்று தமிழனுக்கே துரோகி ஆனது ஏன் ?

   • மணி said ://வைகுண்ட ராஜனை மட்டும் டார்கெட் செய்வதற்கு அடுத்த தரப்பிடமிருந்து உதவி பெறுகிறீர்களா மகஇக ?//

    பிறப்பால் மட்டும் வைகுண்டராஜன் சாதி குழுவை சார்ந்த என் ஆதரவும் மகஇக-விற்கு உண்டு

 11. // அடுத்து இதில் வைகுண்டராஜன் என்ற மாஃபியாவின் பெயரை காணவே இல்லையே? கொள்ளை கொள்ளை ன்னு வார்த்தைகள் இருக்கிறதே அன்றி கொள்ளையன் பெயர் இல்லையே? //

  வினவின் இந்த கேள்வியில் இருந்துதான் எனக்கு ஐயமே வந்தது , வைகுண்ட ராஜன் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தாது மணல் கொள்ளையர்களையும் குறிப்பிடுகிறது நாம் தமிழர் கட்சி தீர்மானம் .

  மற்றபடி தாது மணல் கொள்ளைக்கு எதிரான மகஇக தோழர்களின் உழைப்பை , போராட்டத்தை சிறுமை படுத்தும் நோக்கம் எனக்கில்லை 🙂

  • மணி அவர்களே…//ஒட்டுமொத்த தாது மணல் கொள்ளையர்கள்// என்ன ஒரு கோடி பேரா இருக்கிறார்கள்? கொள்ளையடித்ததில் பெரும்பங்கு (கிட்டதட்ட 80 சதவீதத்திற்கும் மேல்) வைகுண்டராஜனுக்கும் அவரைச் சேர்ந்தோருக்கும்தான் போய் சேர்ந்திருக்கிறது…இன்னும் இருப்பது விரல்விட்டு எண்ணத்தக்க சிலர்…ம.க.இ.க். அவர்கள் பெயரை விட்டிருக்கிறதென்றால் நீங்கள் விடுபட்ட பெயரையெல்லாம் இணைத்து உங்கள் ‘வீர’ அறிக்கையில் வெளியிடலாமே!!?? உங்களை யார் தடுத்தது…?? நாளை அவர்களின் குடும்ப கல்யாணத்திற்கும் செல்லவேண்டியிருக்குமோ!!

 12. விழிப்புனர்ச்சி இல்லாமல் போராடகூடாது…
  குறிப்பாக நிதிக்காக வைகுண்டராசன் காலில் விழுவதைவிட,மும்பாய்
  சிவப்பு விளக்கு பகுதியில் நிதி கோரலாம்…தவறில்லை….
  நம்ம நடராசர் கடலூர் பாரத வங்கியில் 5000 ரூபாய் வாங்கிய கடனை இன்னமும்
  கட்டவில்லை…பாவம் சோத்துக்கே சிங்கி அடிக்கும் நடராசருக்கு புரட்சி தலைவியின்
  உடன் பிறவா சகோதரிரிரிரிரி சசி ஏதாவது மணி ஆர்டெர் செய்வது நடராசரின் உயிரைக்
  காப்பாற்றும்…..

  • அய்யா r.k.seethapathi!!! உனக்கு வைகுண்டராஜன் பற்றி என்ன தெரியும்??? எதோடு அவரை ஒப்பிடுகிறாய் ??? நீயெல்லாம் ஒரு மனிதனா??? ஆயிரம் இந்த பகுதில வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தவரை பற்றி பேச வெட்டி பயலே உனக்கு என அருகதை இருக்கிறது???? வார்த்தையை அளந்து பேசு………….

   • //வைகுண்டராஜன் பற்றி என்ன தெரியும்??? எதோடு அவரை ஒப்பிடுகிறாய் ??? //

    வைகுண்டராசன் காலில் விழுபவனை தானே….சிவப்பு விளக்கு பகுதியுடன் ஒப்பிட்டு செயது உள்ளார் !!!

    ஆனால் நீங்கள் ஒரு தொழிலாளி தானே!

    ஏன் கோபம் உங்களுக்கு ?

   • r.k.seethapathi அவர்களே, வைகுண்டராஜனை சிவப்பு விளக்கு பகுதியில் உள்ளவர்களோடு தொடர்பு படுத்திப் பேசி அப்பகுதியில் இருப்பவர்களை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்…அவர்களாவது தங்கள் சொந்த உடலைத்தான் விற்கிறார்கள்…ஆனால் வைகுண்டராஜன் போன்றவர்கள் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு தாயாய் விளங்கும் கடற்கரையை கதறக் கதற…….அந்தக் கடற்கரையை நினைக்க நினைக்க கண்ணீர் முட்டி கண்களை மறைக்கிறது…இவர் போன்றவர்கள் பெற்ற தாயைக் கூட………இதற்கு மேல் எதுவும் சொல்ல வாய் எழவில்லை…

    Shree சார்…உங்கள் முதலாளி வைகுண்டராஜனை, பிக்பாக்கெட் அடிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, ‘மாமா’ வேலை செய்வது போன்ற ‘தொழில்’களையும் சேர்த்து செய்யச்சொன்னால் இன்னும் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். த்த்தூ……இதெல்லாம் ஒரு பொழப்பு…

   • வைகுண்டராசஙளைவிட,அவனுக்கு பல்லக்கு தூக்கும்
    உஙகளைபோன்றோர்களால்தான் நாம் இந்த அவல நிலையில் உள்ளோம்…

    நான் வெட்டி பயலா?

    உன்னை மாதிரி ஆசாமிகளை தோல் உரிப்பதுதான் எனது முழு நேர வேலை!

    அதுசரி,”பல்லக்கு”தூக்க எவ்வளவு வாங்கினே?

 13. என்ன கொடுமை சார் இது? ஏன் இவர்கள் எல்லோரும் நல்லவர்கள் போல் நடிக்க வேண்டும்?தமிழன் பரந்த இதயம் கொண்டவன் என்பதை சீமான் அழகாக நிரூபிக்கிரார் கல்யாணக்கோலத்தில். பாபுபகத்.

 14. ஒரு மசலா இயக்குநராக, நடிகராக சினிமாவில் நீடிக்க, அண்ணன் சீமான் அனுபவித்த அசிங்கம்,அவமானம் தமிழ் உணர்வாளர்களைக் கண்ணீர் சொரியவைக்கும். நாளைய முதல்வராக கனவுக்கண்டுக்கொண்டிருந்த,நடிகர் விஜய்யிடம்,” இன்றைய முதல்வரே நீங்கள்தான்! அதையும் தெரிந்துக்கொள்ளாத பச்சைக்குழந்தைதான் நீங்கள்! உங்கள் பார்வைக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் தமிழகத்தைக் காத்தருளுங்கள்” என்று, திரைக்கதை எழுதி, எச்சில் ஒழுக காத்திருந்தவர்,அண்ணன்,சீமான். அதை, கிசுகிசுப்பாணியில் மேடையில் அறிவித்து தமிழர்களுக்கு, கிளுகிளுப்பு ஊட்டியவர்.

  வேடிக்கை என்னவென்றால், ‘1நாள் கூட, ஓடாத திரைக்கதை இது’ என்று விஜய், சுதாரித்து கொண்டதால் பாவம், தமிழினம் மாட்டிக்கொண்டது, சீமான் திரைக்கதையில்! சினிமா ஏமாற்றினால் என்ன? தாய், தமிழகம் கைவிடாது என்று அரசியல் களத்தில் ரவுண்டுக்கட்டுகிறார்… அவரது நேரம், பிரச்சினைகளின் விளிம்பில், ஆபாயகரமான முறையில் தமிழகம் தொங்கிக்கொண்டிருக்கிறது! பழம் நழுவி பாலில் விழந்து, அது நழுவி வாயில் விழந்தால்…..சும்மா இருக்கமுடியுமா?

  சினிமா முதலாளிகளிடம் கல்லா கட்ட முடியாமல் போனால் என்ன? அரசியல் முதலாளிகளிடம்-புரோக்கர்களிடம்-வைகுந்த ராஜன்,நடராஜன்- அரசியல் கதை எழுதி காட்டி, தமிழகமக்களுக்கு படம் காட்டுகிறார்,தமிழகத்துப் பிரபாகரன்!

 15. மறுமொழி கொடுப்பதில் வினவு கொள்கையை பார்த்தேன் அதில் தனி நபர் தாக்குதல் தவிர்க்க வேண்டும் என்று இருந்தது . இந்த கொள்கை எல்லோருக்கும் பொருந்தும் என்று எண்ணுகிறேன். வினவுக்கும் சேர்த்துதான்…….

 16. தமிழ்நாட்டு மக்கள் நம்ம வை.கோ விற்கு பிறகு ஒருநல்ல காமெடியன் பச்சைத்தமிழன் கிடைத்தை நினைத்து பெருமை பட்டுக்கொள்கிறார்கள்.
  ஏனெனில் இப்போதெல்லாம் வடிவேல்நடித்த படம் வராததால்.

 17. வினவு வாசகர்களே,

  தமிழ் நிலம் நம் தாய் என்றால்

  அந்த மண்ணை நாசம் செய்யும் வைகுண்டராசன்,

  அவன் நண்பன் சீமானுக்கு என்ன பெயர் ?

  நம் தாய்மண்ணை மானபங்கம் செய்யும் இவர்களை

  எந்த வார்த்தையால் திட்டினாலும் அதில்

  தனி நபர் தாக்குதல் எப்படி வரும் ?

  தமிழ் ஈழத்தையும் ,ஈழ மக்களையும் சிதைத்தவம் ராஜா பட்ச-கொலைகாரன் என்றால்

  இங்கு எம் நெய்தல் நிலத்தையும் ,எம் மீனவர் வாழ்க்கையையும் களவாடும்

  இவர்களுக்கு என்ன பெயர் வைக்க ?

  அன்புடன் ,
  கி.செந்தில் குமரன்

 18. What happened to my Comments that i uploaded yesterday (Oct 26, 2013 at night around 10.30pm)??:

  The Naxalbari Lobbyists are feeling the heat of the Mass support that
  Thamizh Nationalists have been garnering after the spontaneous
  uprising against “Indian” Sponsored genocide in Eezham. Looks like
  naxalbaris are forced to “Demonise” Seemaan and Naam thamizhar
  movements.

  These Naxalbari Leftists dont differ from the “Indian” Brahmanical
  Left / communists in the Propoganda of “unity of SInhala and eezham
  thamizh workers”, heinously glossing over the Genocidal sinhala
  project of De-tamilising Eezham.

  Demonising Seemaan wont help!

  Seemaan brought Yasin malik of JKLF to Tamilnadu – openly proclaiming
  the rights of kashmiris to Secede. He proved that tamil nationalists
  think Far ahread in federal solution to the “Hindian Hegemony”
  oppressors.

  Naxalbaris too want a “Unified” Hindia at all costs and they are no
  different than the Politbureau PappAns of CPI(M)..

  Any movement which does not explicitly question/agaitate against
  Hindian Brahmanical “nation” has not right to question Linguistic
  Nationalists.

  But i agree that Tamil nationalists have to deal with these Naxalbaris
  differently, in terms of Idealogical engagements, than how they deal
  with the Shallow Hindian nationalists.

 19. பணத்தை கண்டால் பிணமும் வாயை பிளக்கும் .சீமான் மட்டும் அதற்கு விதி விலக்கா .அவரும் மனிதன் தானே .ஆரம்ப காலங்களில் அரசியலுக்கு வரும் போது கருணாநிதி பேசாதா பேச்சா .அவரை மாதிரி தான் இவரும் தமிழர்களை பேசி பேசி கொல்ல போகிறான் .

 20. வைகுண்டராஜனுக்கு மணல் அல்ல சீமானா அனுமதி கொடுத்தார்?நடராஜன் காலில் பதவிக்காகவா சீமான் விழுந்தார்?______!அனுமதி கொடுத்த கருணா‌நி‌தி, ஜெயலலிதாவை விட்டுவிட்டு சீமானை குறிவைப்பதன் நோக்கம் எமக்கு நன்றாக புரிகிறது.கருணாநிதியும்,ஜெயலலிதாவும் தான் திராவிட மாபியாக்கள் இவர்களை ஒழித்தால் எல்லாம் தானே சரியாகும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க