Wednesday, October 21, 2020
முகப்பு கலை கவிதை அம்மா ! - கவிதை

அம்மா ! – கவிதை

-

அம்மா

அம்மாஅம்மா!

உனக்கென்னை
பிடிக்காமல் போகலாம்.

பரவாயில்லை.

உன் கனவுகள்
நொறுங்கியிருக்கலாம்.

வருந்துகிறேன்.

என்றாலும்
எனக்காகவும் நீ
கொஞ்சம் பெருமைப்படலாம்.

காவல் நிலையமே
போகாத பரம்பரை
என்பதில்
அப்படியென்ன கர்வமுனக்கு!

அவர்களும் நம் போலத்தான்
ஏறக்குறைய அடிமைகள்.

வில்லாளிகளை விட்டு
அம்புக்கு பயந்தென்ன
ஆகப் போகிறது?

போராடுதல் இயல்பு.

உரிமைக்காக
போராளியாய் நிற்பதில்
இழப்புகளொன்றும்
செய்வதில்லை.

எனக்கு முன்னால்
வீரஞ்செறிந்த வரலாறு
இருக்கிறது.

பின்னும் எழும்.

நான் தனியானவனில்லை
அம்மா!

அறிவும் சொற்களும்
இணைந்தால் கூட

விடுதலையை
விளக்குவது எளிதல்ல.

ஆம்!
உணர்தலே விடுதலை.

உன்
கண்ணீரைக் கயிறாக்கி
என்னைக் கட்டி விடாதே!

இவை
உனக்கும் எனக்கும்
நமக்குமானவை

அம்மா!

நீ கூண்டில்
குஞ்சு பொரித்தாய்!

நான் களத்தில்…

நம் சந்ததிகளுக்கேனும்
வாய்க்கட்டும் வானம்!

– தீபன்
________________________________________________
புதிய கலாச்சாரம் ஆகஸ்டு 1999

________________________________________________

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. வயதை வளர்த்துவிட்ட காலம்..
  வாழ்கையை வளர்த்துவிடவில்லை.

  கடின உழைப்பே வெற்றி என்ற வார்த்தை
  யாவரையும் உறிஞ்சி சக்கையாக்கி விடுகிறது.

 2. ஆம் , உணர்ச்சியில்லாமல் வெறும் சொற்களும் அறிவும் என்ன செய்து விடும்

 3. வினவு’க்கு நன்றி !
  நான் பலரும் “கவனிக்கப்” படவேண்டிய ஆசாமியாக
  தோன்ற,போட்டுக்கொண்ட முகமூடிதான் நாயுடு பட்டம்..
  எதிர்பார்த்ததைவிட,என்மீது அதிகமாக “அக்கிரகாரம்” விழுந்து
  பிராண்டியதையும்,
  எனக்கு உற்துனையாக,வினவு தளம் எனது பின்னூட்டங்களை
  நீக்காமல் வெளியிட்டதையும் நன்றியுடன் அறிவிக்கிறேன்…
  இனிமேல் எனது பெயரில் மட்டுமே இருக்கும்,எனது பதில்கள்….

  • அன்பர் சீதாபதி அவர்களே,
   உஙகள் கருத்தை மட்டும் பார்த்தவர்கள் வினவின் வாசகர்கள்.எனவே தொடர்ந்து பங்காற்றி வினவின் வாதத்தை முன்னெடுத்து செல்லுங்கள்.அன்புடன்

   • நமது முன்னோர்கள் “முடிவு” கட்டவேண்டிய ஒரு கொடுமையான
    பூணூல் கூட்டம்,இன்னமும் அதன் திரிகளை எரியும் நிலையிலேயே
    வைத்துள்ளது.
    ..அதை அனைக்கவேண்டியது நமது கடமை…
    பெரியார் 8 அடி பாய்ந்தார்…
    வீரமணி 16 அடி பாய்ந்திருக்கவேண்டும்..அவர் 4 கால் பாய்ச்சலில்
    பெரியார் திடலில் “வியாபாரம்” செய்வதிலேயே குறியாக உள்ளார்..
    நாம் பாய்வோம்,நமது காலத்திலேயே நவகிரக கொள்ளைக்கூட்டத்துக்கு
    முற்றுபுள்ளி வைப்போம்.
    .வைக்காதுபோனால்,நமது சந்ததிகள் வாழ 1 சதுர அடிகூட இருக்காது..
    இதை நான் வேடிக்கைக்காக சொல்லவில்லை….

 4. அம்மாவுக்கு ஒருநல்ல பதில்.
  அவர்களின் கண்ணீரும் பாசமும் பலரை அடிமைகளாக்கி வைதிருக்கிறது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க