ஆட்குறைப்பு மற்றும் சம்பள வெட்டை எதிர்த்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் போராடும் துப்புரவுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரமாக தொடர்கிறது (நவம்பர் 13, 2013).தெற்கு பிரான்சில் உள்ள மார்சேல் நகரத்தில் கல்வித் துறை மாற்றங்களை எதிர்த்த தேசிய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள், உதவியாளர்கள், மற்றும் பெற்றோர் நடத்திய போராட்டம். (நவம்பர் 14, 2013)ஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப்படும் வீதம் 28% அதிகரித்திருப்பதாக பிரேசில்அறிவித்திருக்கிறது.பிரேசில், சாவ் பாலோ நகரில் நடந்த கய் ஃபாக்ஸ் ஆர்ப்பாட்டம். ஊழல் அரசுகளுக்கும், கார்ப்பொரேட்டுகளுக்கும் எதிரான பேரணிகள் உலகெங்கும் 450 நகரங்களில் நடந்தன (நவம்பர் 7, 2013).அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அணிவகுத்துச் செல்லும் அனானிமஸ் இயக்க போராட்டக்காரர்கள் (நவம்பர் 7, 2013).ரஷ்ய ஒருமைப்பாடு தினத்தில் சோவியத் தலைவர் ஸ்டாலின் படத்தை ஏந்திச் செல்லும் மக்கள் (நவம்பர் 4, 2013).பண்டிகை ஊர்வலத்தில் பங்கேற்ற காஷ்மீர் முஸ்லீம்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் கலைக்கும் போலீஸ் (நவம்பர் 14, 2013)ஈராக் தலைநகர் நஜாபில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு இறுதி அஞ்சலி. ஈராக் முழுவதும் முகர்ரம் ஊர்வலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 44 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.
1941 இராணுவ அணிவகுப்பின் 72-வது ஆண்டு விழா மாஸ்கோவில் நடைபெற்றது. 1917 புரட்சி தினமான அதே நாளில் மாஸ்கோவில் வெற்றி பேரணி நடத்தப் போவதாக கொக்கரித்த ஹிட்லரின் மாஸ்கோ மீதான தாக்குதலை முறியடித்தது செம்படை (நவம்பர் 7, 2013)
பற்றிப் படரட்டும் தொழிலாளர் போராட்டம்
அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கம்