Thursday, June 20, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஐ.என்.எஸ் விக்கிரமாதித்யா - அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள்

ஐ.என்.எஸ் விக்கிரமாதித்யா – அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள்

-

ந்திய கடற்படையில் விக்கிரமாதித்யா என்ற விமானம் தாங்கி போர்க் கப்பல் கடந்த 16-ம் தேதி முறைப்படி இணைக்கப்பட்டது. பழைய ரஷ்ய போர்க் கப்பலான இது சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு (Remodel) வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இருக்க்கும் ஐ.என்.எஸ் விராட் என்ற விமானம் தாங்கி கப்பலுடன் இதுவும் இணைந்து இந்தியப் பெருங்கடலில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை கொண்ட ஒரே நாடாக இந்தியா இருக்கும்.

ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா
ரூ 15,000 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா

1987 டிசம்பரில் இயங்கத் துவங்கிய ‘கீவ்’ வகையை சேர்ந்த இந்த கப்பல் ஆரம்பத்தில் பக்கு என்ற பெயரில் இயங்கியது.  பின்னர் 1991-ல் பனிப்போர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அட்மிரல் செர்ஜேய் கோர்ஷ்கோவ் பெயர் சூட்டப்பட்டது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த கப்பலை இயக்குவதற்கு கட்டுப்படியாகவில்லை என்று ராணுவத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டது. ரஷ்யாவால் தீனி போட்டு மாளாது என்று திரும்பப் பெறப்பட்ட இந்த கப்பலை வாங்குவது என்று இந்தியா முடிவு செய்தது. இதற்கான பேச்சுவார்த்தை 1998-ல் ஆரம்பபிக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 2004 ஜனவரியில் $947 மில்லியன் டாலர் செலவில், ஒரு ஆண்டிற்குள் புதுப்பித்து தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் 2009-ல் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு கட்டணம் $2.3 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டது. விலை உயர்த்தப்பட்டது மற்றும் கால தாமதத்திற்கு முக்கிய காரணம் கேபிள் வேலைகள் அதிகமானதுதான் என்று கூறப்பட்டது.

மூன்று கால்பந்து மைதானம் அளவிற்கு பரந்து விரிந்ததாகவும், 44,400 டன் எடை, 284 மீட்டர் நீளம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போர்க் கப்பல் இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய போர்க் கப்பலாகும். 56 கிமீ வேகத்தில் பயணம் செய்யக் கூடிய இதில் 8 கொதிகலன்களும், 4 விசைமுடுக்கிகளும் உள்ளன. இதில் 34 விமானங்களை நிறுத்தலாம். 24 மிக்-29 ரக விமானங்களையும், 10 கமோவ்-31, கமோவ்-28 ஹெலிகாப்டர்களையும் தாங்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தயாரிப்பாக ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி கப்பல்,  கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது. 500 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு என்று  திட்டமிட்டு, தற்போது ஆயுதங்களும், விமானங்களும் இல்லாமலே 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ 13,000 கோடி) செலவு ஆகும், அவை இணைக்கப்பட்டால் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ 31,000 கோடி) வரை ஆகலாம் என செலவு உயர்ந்திருக்கிறது.

இந்திய பாதுகாப்பு ஒதுக்கீடு
பழைய பண்ணையார் இங்கிலாந்தை விஞ்சவிருக்கிறது இந்திய பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு.

2013-ல் 44 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ 2.7 லட்சம் கோடி) இருக்கும் இந்திய பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு 2020-ல் 66.3 பில்லியன் டாலராக (ரூ 4.1 லட்சம் கோடி) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னாள் உலக மேலாதிக்க வல்லரசான இங்கிலாந்தின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை விட அதிகமாகும். இங்கிலாந்தின் பட்ஜெட் 2020-ல் 59.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் அதிக குழந்தைகள் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலகவங்கி அறிக்கை தெரிவிக்கிறது. உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது, குறியீட்டு எண் 22.9-ல் இருந்து 23.7 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் வணிக நலன்கள் கடலைச் சார்ந்து இருப்பதாகவும், இந்தியாவின் கடல்சார் நலன்களை பாதுகாப்பது தேசிய பாதுகாப்புக் கொள்கையின் மையமான கூறு என்று இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணி தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பாதுகாப்பது, தேசபக்தி, சீன அபாயம் என்ற பல பெயர்களில் செய்யப்படும் இந்த ஆயுதக் குவிப்புகள் இந்திய ஆளும் வர்க்கத்தின் வல்லரசு கனவுக்காகத்தானே தவிர இந்திய மக்களின் பாதுகாப்புக்காக அல்ல என்பதற்கு தினம் தினம் தமிழக மீனவர்கள் மீது சிங்கள் இராணுவம் தொடுக்கும் தாக்குதலும், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் இந்திய கடற்படையும் தான் சான்று.

ஐ.என்.எஸ். விக்ராந்த்
பல பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் கொச்சியில் கட்டப்பட்டு வரும் ஐ.என்.எஸ். விக்ராந்த்

மக்கள் மீதான் தாக்குதலை தடுக்கத் தவறும் இந்திய இராணுவம், இந்திய ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்க நலன்களுக்காக,  மறுகட்டுமானப் பணிகள் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானிலும், கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சோமாலியாவிலும், அமைதிப்படை என்ற பெயரில் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவுக்கு விசுவாச சேவை செய்துவருகிறது.

இது மட்டுமல்லாமல் இந்த இராணுவ தளவாடங்கள், போராடும் மக்கள் மீதும் உபயோகப்படுத்தப்படும் என்பதற்கும் சான்று உள்ளது. கூடங்குளம் போராட்டத்திற்கு கடல் வழியாக மக்கள் திரண்ட போது அவர்களை மிரட்டுவதற்கு இந்திய கடற்படை கடல் வழியாக முற்றுகை இட்டதும், விமானப் படையினர் மிகத் தாழ்வாக பறந்து சகாயம் என்ற மீனவரை கொன்றொழித்ததும் இதற்கு  தக்க உதாரணங்களாகும்.

அமெரிக்கா தன்னுடைய கவனத்தை ஆசியா மற்றும் தெற்காசிய பகுதியில் திருப்பி சீனாவை சுற்றி வளைக்கும் தன்னுடைய திட்டத்தின் அடியாளாக இந்தியாவை பயன்படுத்த திட்டமிட்டிருப்பது குறித்தும், அமெரிக்காவின் பதிலியாக இந்தியாவை சீனாவுடன் மோத வைக்கும் திட்டம் குறித்தும், அது இந்தியாவுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஏற்கனவே வினவில் செய்தி வெளியாயிருந்தது.  அதனுடன் இதை பொருத்தி பார்ப்பது அவசியம்.

மேலும் இந்த விமானந்தாங்கி கப்பல்கள் இராணுவ தளம் இல்லாத பகுதிகளில் தாக்குவதற்கென்றே அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுவும் இன்று அமெரிக்கா ஒற்றைத் துருவ வல்லரசாக மாறிய பிறகு அதற்கென்றே உலகின் எல்லா பகுதிகளிலும் இராணுவ தளங்கள் இருப்பதால் அதன் பயன் பெரிய அளவில் இல்லை. மேலும் முதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்டநேரம் பறக்கும் விமானங்கள் இல்லாத போது இத்தகைய விமானந் தாங்கிக் கப்பல்களுக்கு ஒரு தேவை இருந்தது. தற்போது அமெரிக்காவின் பி.52 விமானங்கள் ஒரு முறை போட்ட எரிபொருளோடு பல்லாயிரம் கிலோமீட்டர் நிற்காமல் பறக்கக் கூடியது.

எது எப்படியோ இந்தியா போன்ற நாட்டிற்கு அப்படி ஒரு கப்பல் வைத்துக் கொள்வதற்கு எந்த அவசியமும் இல்லை. இத்தகைய கப்பல் இல்லாமலே கூட பாகிஸ்தான் இந்தியா முழுவதையும் தாக்கும் வல்லமை கொண்டிருக்கிறது. மேலும் வல்லரசு நாடுகளில் இருக்கும் விமானந் தாங்கிக் கப்பல்களின் எடையும், போர்த்திறனும், வேகமும் நமது கப்பல்களை விட சில மடங்கு அதிகம். காயலான் கடைக்கு போக வேண்டிய திறமை படைத்த இத்தகைய விமானந் தாங்கிக் கப்பல்களால் இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று வெட்டி பந்தாவாக பேசிக் கொள்ளலாம். ஆனாலும் அதற்கென்றே சில பல ஆயிரம் கோடிகளை செலவிடுகிறார்கள்.

அறுக்கமாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள் என்று ஒரு சொலவடை உண்டு.  ஆளும் வர்க்கத்தின் கையில் இருக்கும் இந்த ஆயுதங்கள் மக்களுக்காக அறுக்காது, மக்களைத் தான் அறுக்கும்.

மேலும் படிக்க

 1. நாலு காசு பாக்கலாம்னா விடமாட்டீங்களே?
  ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்….

 2. I don’t support war. But can you explain this?

  // இத்தகைய கப்பல் இல்லாமலே கூட பாகிஸ்தான் இந்தியா முழுவதையும் தாக்கும் வல்லமை கொண்டிருக்கிறது.//

  if strong enough, why can’t Pakistan try attacking India? Oh, ok. They don’t want all their citizens to be made chili pork by Indian forces. 😀

    • அப்படியே பூணூல்களிடமிருந்து தமிழர்களைப் பாதுகாக்க
     ஏதாவது ஆயுதம் உள்ளதா?

     • Will you bring “பூணூல்” in every topic? Seriously trying to understand how you were affected by “பூணூல்”.In this generation, only the “பூணூல்”s are getting impacted in the name of “”சமூகநீதி”.If you eliminate all the பூணூல்s, will you be happy? What you have is pure hatred. What about Thamizh பூணூல்s? What about the contributions made by பூணூல்s to Thamizh? In fact thamizh thatha is a பூணூல். Vandhuttaru தமிழர்களைப் பாதுகாக்க.

  • ஸ்ட்ராங் எனாஃ ஆக இருந்தால் அட்டாக் செய்யவேண்டுமா என்ன? இன்றைய அமெரிக்க ஒற்றை மேலாதிக்கத்தில் இருவரும் அமெரிக்காவுக்கு கட்டுபட்டவர்கள் தான். ஆண்டை விருப்பபட்டால் மட்டும் தான் தங்களுக்குள் சண்டையிட முடியும்.
   இரு நாடுகளும் அனுஆயுதம் வைத்திருக்கும்போது இரு நாட்டு மக்களும் தான் சில்லி போர்க் ஆவார்கள்.
   ஒரு பேச்சுக்கு ஒரு நாடு இன்னொரு நாட்டை வெல்வதாக வைத்தாலும் என்ன நடந்துவிடப் போகிறது. தன் நாட்டின் ஆளும் வர்க்கத்திற்கு பதிலாக வேறொரு நாட்டின் ஆளும் வர்க்கம் சுரண்டபோகிறது.யார் சுரண்டினால் என்ன?
   மேலும் எந்த போரும் நடத்தாமலேயே இந்தியாவின் இயற்கை மற்றும் மனித வளங்கள் கொள்ளைபோகிறதே அப்படி ஒரு வாய்ப்பு இருக்கும் போது எதற்கு ஆயுதம் இவர்களுக்கு?

   ஒரு வேளை வெட்கம், மானம், ரோசம் உள்ள நாடாக இருந்திருந்தால் காட் ஒப்பந்தம், இந்திய குடியரசு தலைவர்ரையும், பாதுகாப்பு அமைச்சரையும் டவுசர் அவுத்து பார்த்தது போன்ற சந்தர்ப்பங்களில் , தன் தூதரகத்தை வேவு பார்த்தது போன்ற சந்தர்ப்பங்களில் கூட பய்ன்படுத்தபடுத்தி இருக்கலாம்.

   பாகிஸ்தான் காரனோ இல்லை சீனாகாரனோ வந்து அடிமைபடுத்தினால் எப்படி இருக்கும் என்று கேட்டால் நிச்சயமாக பன்னாட்டு கம்பெனிகளிள் கொத்தடிமைகளாக வ் வேலை வாங்குவதைவிடவா இல்லை வட இந்திய தொழிலாளியின் தற்போதைய நிலையை விடவா கொடுமையாக இருந்துவிடப் போகிறது.

   கைகளில் ஆயுதம் தரித்து பாரத மாதா கம்பு சுத்தி பில்டப் செய்துகொண்டிருக்கும் போதே பாரதா மாதாவின் சேலையைஅ உருவிக்கொண்டு ஓடுகிறானே அமெரிக்ககாரன், அம்மணமான பாரதமாதாவுக்கு துணிகொடுக்காமல் நல்லா சுத்து, இன்னும் இன்னும் சுத்து என்று விசிலடிக்கிறீர்களே ஏன்?

 3. Indian weapons are not only about Pakistan,Pakistan doesn’t have a navy.

  INS vikramaditya is an aircraft carrier and it is not built to torment anyone in koodankulam(thoda ithu vera),

 4. கப்பலை சும்மா எடுத்துவரவில்லை இந்திய ராணுவம்…தேங்காய் உடைத்து பூஜை செய்திருக்கிறார்கள் ருஷ்யாவில்…இரண்டு மாதத்தில் வந்துசேரும்.

  http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/COIMBATORE/2013/11/17/ArticleHtmls/17112013109003.shtml?Mode=1

  • அட கிறுக்குப்பயல்களா.விமானங்களையே தாங்கி 56 கி.மீ.வேகத்தில் கடலை கிழித்து செல்லும் கப்பல் நாலு தேங்காய உடைச்சாத்தான் பாதுகாப்பா பயணிக்குமாமா.14000 கோடி கப்பலை 40 ரூபா தேங்கா காப்பாத்துமாம்.இவனுங்க லூஸ்தனம் சகிக்க முடியல.அப்டி தேங்காய் எலுமிச்சை, படிகாரம்,மிளகாய் கருப்புகயிறு இதெல்லாம் ஆபத்துக்களை தடுக்கும்னா இந்த கப்பலே தேவையில்லையே.நாட்டை சுத்தி எல்லையிலும் கடற்கரையிலும் இந்த ஐட்டம்களை கட்டி தொங்க விட்டுறலாமே.சீனாவோ பாக்கிஸ்தானோ எவனும் உள்ள வரமுடியாதில்ல.

   • // விமானங்களையே தாங்கி 56 கி.மீ.வேகத்தில் கடலை கிழித்து செல்லும் கப்பல் நாலு தேங்காய உடைச்சாத்தான் பாதுகாப்பா பயணிக்குமாமா.14000 கோடி கப்பலை 40 ரூபா தேங்கா காப்பாத்துமாம்.இவனுங்க லூஸ்தனம் சகிக்க முடியல.//

    மேலை நாடுகளில் சாம்பேய்ன் மது பாட்டிலை கப்பலின் முகப்பில் உடைத்து, ஜபத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட புனித நீரை கப்பல் மீது தெளித்து கடலுக்குள் அனுப்புவார்கள்.. முசுலீம் நாடுகளில் எதை குர்பானி கொடுப்பார்கள் என்று தெரியாது.. நம்மவா, செலவில்லாமல் 4 தேங்காயை உடைப்பது கூட மாக்கான் நாயுடுக்கு பொறுக்கவில்லை..

    // அப்டி தேங்காய் எலுமிச்சை, படிகாரம்,மிளகாய் கருப்புகயிறு இதெல்லாம் ஆபத்துக்களை தடுக்கும்னா இந்த கப்பலே தேவையில்லையே.நாட்டை சுத்தி எல்லையிலும் கடற்கரையிலும் இந்த ஐட்டம்களை கட்டி தொங்க விட்டுறலாமே. //

    இந்திய எல்லையின் நீளம் எத்தனை ஆயிரம் கிலோமீட்டர்கள்..?! கட்டுப்படியாகுமா, எரிமலை..?! அதுக்கு பதிலா இன்னும் 10 கப்பல் வாங்கினால் எத்தனை கோடி கமிசன் அமுக்கலாம்..!

    • // மாக்கான் நாயுடுக்கு //

     மாக்கான், நாயுடு போன்றவர்களுக்கு என்று திருத்தி வாசிக்கவும்..

     • அம்பி..கமிசன்/தரகு இதெல்லாம் பூணூல்களின்
      அன்றாட வாழ்வு:
      சந்தேகம் இருந்தால்,துக்லக் மாமா/சு.சாமி
      சந்திரா சாமி.யிடம் விளக்கம் பெறலாம்

    • அம்பி இந்த மாதிரி அடுத்தவனை காட்டி தன்னுடைய தவறை நியாயப்படுத்துவது மிகவும் கீழ்த்தரமான உத்தி.விட்டொழியுங்கள். மேலை கிறுக்கும் மத்திய கிழக்கு கிறுக்கும் தேங்காய் கிறுக்கை ரத்து செய்து விடுமா.அதில் செலவு எவ்வளவு என்பது கேள்வியில்லை.அந்த பூஜையை செய்தது யார்.அதற்காக பூசாரி யாரும் இங்கேர்ந்து பிளேன்ல பறந்து போனாங்களா அங்கே தங்குன செலவு,பூஜைசெய்ததற்கு தட்சிணை எவ்வளவு போன்ற விவரங்கள் எல்லாம் தெரியல.அண்ணன் சூரியன் சொன்னது போல விஞ்ஞான பார்வையை வளர்க்க வேண்டிய அரசு இப்படி மூட நம்பிக்கையை வளர்க்கலாமா.அதற்கு பதில் சொல்லுங்கள் அல்லது தேங்காய் உடைப்பது விஞ்ஞான ரீதியில் சரியானது என்று வாதங்கள் வைத்து நிறுவுங்கள்.

     • இந்த கப்பலுக்கு செவ்வாய் தோசம் இருப்பதால், ரூபாய் 10,000 ஆயிரத்துடன்
      வைத்தீச்வரன் கோவிலுக்கு வரவும்

     • // அம்பி இந்த மாதிரி அடுத்தவனை காட்டி தன்னுடைய தவறை நியாயப்படுத்துவது மிகவும் கீழ்த்தரமான உத்தி.விட்டொழியுங்கள். மேலை கிறுக்கும் மத்திய கிழக்கு கிறுக்கும் தேங்காய் கிறுக்கை ரத்து செய்து விடுமா. //

      இதையெல்லாம் செய்தால் எதிரி நாட்டு டார்பிடோக்களும், ஏவுகணைகளும் ஒரு போர்க் கப்பலை துளைக்க முடியாது என்று நம்பும் கிறுக்குகளாக மற்றவர்களை நீங்கள் நினைப்பது மட்டும் மேதாவித்தனமா..?!

      // அதில் செலவு எவ்வளவு என்பது கேள்வியில்லை.அந்த பூஜையை செய்தது யார்.அதற்காக பூசாரி யாரும் இங்கேர்ந்து பிளேன்ல பறந்து போனாங்களா அங்கே தங்குன செலவு,பூஜைசெய்ததற்கு தட்சிணை எவ்வளவு போன்ற விவரங்கள் எல்லாம் தெரியல. //

      சிதறு தேங்காய் உடைக்க பூசையோ, பூசாரியோ தேவையில்லை..

      // அண்ணன் சூரியன் சொன்னது போல விஞ்ஞான பார்வையை வளர்க்க வேண்டிய அரசு இப்படி மூட நம்பிக்கையை வளர்க்கலாமா. //

      எந்த அரசைச் சொல்கிறீர்கள்..?!

      // தேங்காய் உடைப்பது விஞ்ஞான ரீதியில் சரியானது என்று வாதங்கள் வைத்து நிறுவுங்கள். //
      தேங்காயை உடைத்தால் உடையும், நசுங்காது.. இது மட்டும் தான் அதில் உள்ள விஞ்ஞானம்.. மற்றவை எல்லாம் ஒரு தொன்று தொட்ட, நம்பிக்கை சார்ந்த, வழக்கம், அவ்வளவே.. இந்த ‘மூட நம்பிக்கையால்’ உங்களுக்கு என்ன பிரச்சினை..?!

      • தேங்காய் உடைப்பது எங்கள் தொன்று தொட்ட, நம்பிக்கை என்கிறார்.அம்பி.இந்த ‘மூட நம்பிக்கையால்’ உங்களுக்கு என்ன பிரச்சினை..?! என்று வேறு கேட்கிறார்.அதாவது அப்டிதான் செய்வோம்.நீங்க யாரும் கேட்க கூடாதுன்னு உத்தரவு போடுறார்.RSS ம் ஹரிகுமார் போன்றவர்களும் தெனாவட்டாக பேசுவதை நகைச்சுவையா பேசி ஏய்க்கிறார்.

       அய்யா தொன்னம் தொட்ட நம்பிக்கையாளரே,
       தொன்று தொட்ட, நம்பிக்கை என்று மொட்டையாக சொல்லாமல் தொன்று தொட்ட, பார்ப்பனிய இந்து மத நம்பிக்கை என்று சொல்வது சரியா இருக்கும்.இந்த நாடு இந்துக்களுக்கு மட்டும் சொந்தமல்ல.முஸ்லிம்கள் கிருத்துவர்கள் சிங்குகள் பார்சி புத்த சமண மதங்கள் என ஏராளமான சமய நம்பிக்கைகள் உள்ளன.இத்தனை மதத்தவர்கள் மற்றும் எங்களை போன்ற மத, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து வாங்கும் கப்பலுக்கு உங்கள் பார்ப்பனிய மத சடங்கை செய்வது சரியில்லையே.இது உங்களுக்கு ஒரு பிரச்னையாகவே தெரியவில்லை என்றால் உங்கள் மூளையில் பார்ப்பனியம் அந்த அளவுக்கு கெட்டி தட்டிப் போய் கெடக்குன்னு அர்த்தம்.

       வேணும்னா ஒன்னு பண்ணுங்க.முடிந்தால் இந்தியாவை இந்து மத குடியரசாகவோ,பேஷ்வா மன்னராட்சி நாடு என்றோ -listen முடிந்தால்-அறிவித்து விட்டு பூஜை போட்டுக்கங்க.ஆனா ஆரியம் அதை செய்யாது.மத சார்பற்ற நாடுன்னு சொல்லிக்கிட்டே இப்ப இந்து மதசார்பு நாடாக இருக்குறதுதான் அவாளுக்கு சவுகரியம்.இந்து மத குடியரசா அறிவிச்சா நிறவெறி தென்னாப்பிரிக்கா ஒதுக்கி வைக்கப்பட்டது போல சாதி தீண்டாமை கொடுமைக்காக ‘racial discrimination என்று உலக அரங்கில் இந்தியா தனிமை பட வேண்டியிருக்கும்.

       • எரிமலை,

        கெடா வெட்ட வுடுவாங்களான்னு அம்பி கிட்ட கேட்டுச் சொல்லுங்க.

        • முற்காலத்தில் நமது முன்னோர்களின் ஆடு,மாடு,குதிரைகளை ஓசியில்
         களவாண்டு(மன்னர் மூலமாக) வயிறு புடைக்க தின்ற கூட்டத்திடம்,அனுமதி தருவார்களா

         என்று கேட்டால் சுத்த சைவம் என்று கூறிவிட்டு,முனியான்டி விலாசில் மூக்கு புடைக்க
         பூணூல்கள் தின்பதை நீங்கள் பார்த்ததில்லையா?

   • Mr Erimalai,Our ISRO chief has conducted special pooja for Mangalyaan before launching.He offered worship to Thiruppathi Balaji with a model of Mangalyan on Monday before launch on Tuesday.He also offered worship at Kalahasthi.When he was supposed to be with his team after the start of countdown,he was away at Thiruppathi and Kalahasthi.ISRO chief goes to Thiruppathi before every launch with the model satellite.He never believes in the skills of 500 and odd fellow scientists who toiled night and day to design Mangalyaan.We have a provision in our constitution to promote scientific temper among citizens.But our top scientist does not believe in that section also.With accurate forecast with the help of our satellites,the Govts of AP and Odisha could save lakhs of people by evacuating them before the onslaught of Phailin typhoon.These innocent people were saved by our scientific discoveries and not by Thiruppathi Balaji and Puri Jagannath.Similarly Badrinath and Kedarnath have not saved thousands of their own devotees.Uttarakhand Govt also did not take preventive steps in spite of forecasts.

    • There is an element called chance or luck,u may know how to cross the road but the lorry driver should not be drunk.

     Thats why he went to tirupati,r u saying in those those occasions when some satellites or missiles may have failed,there always is a scientific error?

     • Yah The failure of satellites or missiles sometimes happened only due to scientific error and not due to anger of Gods.If he believes in good luck he should have become a sage and not a scientist Your comparison of pedestrian and a drunk lorry driver is not suitable for scientific experiments.For successful launch only they spent crores of rupees on research.Actually,I would expect ISRO chief to address university students to tell them not to believe in “Sevvaay Thosham”at least after launching Mangalyaan.But alas the rationalists have to take classes for him

      • Sooriyan..Mangalyan has RAGHU/KETHU Dosam also:
       Let them come to THIRUNAGESEWARAM to wipe out it:
       Than Mangalaayan will fly smoothly if u pay KURUKKAL
       parikaara poosai FEES!

      • I think you might be very dissappointed that a lot of inventions in science are mere speculation and there is every chance of things going wrong because of no fault of yours.

       i suggest you to anyone doing research.

       Any external condition might affect your test or launch.

       my example is perfect suitable for scientific experiments too,i think common man like you are fed lofty ideals of science which is sadly not true.

       how is manglaayan connected to sevvai dosham?

       sevvai dosham is not sevvai harming you on purpose?

  • பூசை,வழிபாடு,பேஷ்…பேஷ்,ரொம்பநன்னாருக்கு…
   பூசை செய்ய அம்பி போயிருந்தாரா?
   ஒரு நாட்டுக்கு தேவை: நல்லரசு…வல்லரசு அல்ல

   • தேங்காய்,மாங்காய் இதெல்லாம் களவாடுவது அத்திம்பேர் வகையறாதான்
    எந்த பூணூலாவது உடைத்த தேங்காயை திருப்பி கொடுக்குமா?
    வி.வி.டி கம்பனிக்கு மொத்தமா மாமி மூலமா வித்துடறா?

 5. அய் என் எஸ் விக்ரந்த் ஓரங்கட்டபட்டபின், அந்த வெற்றிடத்தை? நிரப்பவும், அப்பொது பொருளாதார நெருக்கடியிலிருந்த சோவியத் யூனியனுக்கு உதவும் வகையில், இந்த பிரமாண்டமான கப்பல் வாங்க முடிவெடுக்கபட்டது! பின்னர் இதன் காலாவதியான ராணுவ உபகரணங்களை காரணம் காட்டி (உண்மையில் அமெரிக்கநிர்பந்தத்தினால்) இந்தியா பின்வாங்கியது!

  அமெரிக்க நீர்மூழ்கி கப்பல், டபோல் வாயு மின்னுற்பத்தி கருவிகள், இச்ரேலிய ராணுவ தளவாடங்கள், மிக முக்கியமாக அணுசக்தி பயன்பாட்டு ஒப்பந்தம் என பல குளிரூட்டும் செயல் பாட்டுக்கு பின், செஞ்சீன கடல்பகுதியில் அமெரிக்காவுக்கு துணை ராணுவ சேவை செய்யவும், ரசியாவுடனான உறவில் கூடங்குளம் அணு உலைகள் ஒப்பந்தம் தேவைப்பட்டதாலும் இந்த கப்பல் இறுதியாக வாங்கவேண்டியதாயிற்று!

  அய் என் எஸ் விக்ரந்த் கப்பலை, பாகிஸ்தான் போரின் போது காப்பாற்றுவதே, அப்போது பெரும் சவாலாயிருந்தது! அதன் பதிலியாக வந்திருக்கும் அய் என் எஸ் விக்ரமாதித்யாவும் அதைப்போன்றே ஒரு வெள்ளை யானையே! அதை மிகுந்த செலவு செய்து புதிப்பித்திருந்தாலும், அது மேக் அப் செய்யப்பட்ட முதிர் கன்னியே! ஆனால், ஒரே ஒரு பலன் உண்டு! இவாளவு பெரிய விமானந்தாங்கி கப்பலை இயக்க, நமது கடற்படைக்கு பயிற்சி கிடைக்கும்!

  • சட்னி அறைக்க வச்சிருந்த தேங்காய எடுக்க எதுக்கு வெக்கப்படணும், உடைச்சதுக்கப்பறம் பொறுக்கி சட்னி அறைக்கத்தான் வெக்கப்படணும்..

  • // அய் என் எஸ் விக்ரந்த் கப்பலை, பாகிஸ்தான் போரின் போது காப்பாற்றுவதே, அப்போது பெரும் சவாலாயிருந்தது! //

   புதிய வரலாறு படைக்கிறீர்களோ..?!

     • பங்களாதேஷ் சண்டைக்கு பிறகு, அப்பொது அட்மிரல் ஆக இருந்து ஓய்வு பெற்ற கடற்படை தளபதி கிருஷ்ணன் அவர்கள் கொடுத்த பத்திரிகை செய்தி! விக்ரந்த் போன்ற பெரிய கப்பலை அய்யெனெஸ் கோதாவரி என்று நினைவு, பெயர் மாற்றம் செய்து, ரேடியொ சிக்னல்கள் எல்லாம் உருவாக்கி, பாகிஸ்தானிய உளவுத்துறையை கடற்படை ஏமாற்றியது! எதிர் பார்த்தது போலவே, பாகிச்தானிய நீர்மூழ்கி கப்பல், விசாகபட்டின்னத்திற்கு அருகில் வர, இந்திய கடற்படை அதை மூழ்கடித்தது! அந்த மனேரத்தில் விக்ரந்த் சென்னைக்கு அருகில் இயக்கத்தைநிருத்தி, மறைத்து ஜோடனை செய்யபட்டு கரையோரமாக நிருத்தப்பட்டிருந்தது! இதன் அடையாள குறியீட்டு சிக்னல்கள் விசாகப்பட்டினத்தில் உபயொகிக்கபட்டதால் பாகிஸ்தான் ஏமாந்தது மட்டுமல்ல, தனது நீர்மூழ்கி ஒன்றையும் இழந்தது! ரீடர்ஸ் டைஜெஸ்டில் படித்த நினைவு!

       • சரிதான்! அதுவும் பிரிவினையின்போது பகிர்ந்து அளிக்கபட்ட, மிகவும் பிரசித்தி பெற்றநீர்மூழ்கி! திருடனுக்கு தேள் கொட்டியதைபோல, இதை பாகிச்தான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை! பின்னர் கடலில் மிதந்த ஆவண்ங்களை கண்ட பிறகே, அதன் அழிப்பு உறுதி செய்யபட்டது! கராச்சி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நீர்மூழ்கி, மும்பை, கொச்சி, கொழும்பு துறமுக பாதைகளை கடந்து விசாகபட்டினம் அடைவதற்கு குறைந்த பட்சமாக இரண்டு மாததிற்கு மேல் ஆகலாம்! வழியில் மும்பையை தவிர்த்து, கிழக்கு கடற்பகுதியில் விசாகப்பட்டினத்திலிருந்ததாக கருதபட்ட அய் என் எஸ் விக்ரந்தை நோக்கி வந்ததுநமது அதிர்ஷ்டமே! நமது கடற்கரைகள் இன்னும் போதிய பாதுகாப்பின்றியே உள்ளது! இதற்கு தொடர்ந்து இந்தி பெசும் ஆதிக்க சக்திகளே கொள்கை முடிவுகளை எடுப்பதும், அவர்களுக்கு கடற்பகுதியின் பாதுகாப்பின்மை ஒரு பொருட்டாக தெரியாததுமே காரணம்! இல்லையென்றால் ஈராயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் அந்தமானை கேட்டு வாங்கியவர்கள், இருபது மைல் அருகில் உள்ள,நமக்கு கலாச்சார ரீதியில் இனைந்த இலஙகையை விடுவார்களா?

  • வெள்ளை யானை?
   அப்போ திருநெல்வேலி அல்வா கொடுத்த(யானைக்கு) வகையில்
   ரூபாய் 75 கோடி…

 6. ஒன்று நினைவுக்கு வருகிறது! தாயார் கஞசிக்கு வழியின்றி செத்தபிறகு, மகன் கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம் என்பார்கள்! நமது வல்லரசு முயற்சிகளும் அப்படித்தான்! அமெரிக்க, இங்கிலாந்து வல்லரசுகளுக்காக நாம் பிராக்சி யுத்தம் பெய்ருட்டிலும், ஆப்கனிலும் செய்துகொண்டிருப்பது போல, சீனாவுடனும் யுத்தம் செய்ய தூண்டப்படலாம்! அப்புறம், இலஙகை மக்கள் போலவே இந்திய அடிமைகளும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் கஷ்டப்படுவார்கள் அவ்வளவுதானே!

 7. R u a pervert or agent of western countries?u always write against india and indian culture playing silly divide and rule policy and making hatred between people.but u pretend as a supporter of citizen.but ur writings show that u indeed are influenced and tacit nexus with western forces.

   • பசுமாட்டு மூத்திரம் மொத்த விலையில் வாங்க,கைராசியான
    இடம்: சங்கர மடம்:(மடம் 27 ஆம் தேதி விடுமுறை….பாண்டிஷேரி போய்
    தண்டனை என்னன்னு பாக்கனுமோல்லியோ?

 8. நம்ம அப்துல் கலாம் பாய்… 1 வருடமா ராத் தூக்கம்,பகல் தூக்கம் இல்லாமல்
  புரண்டு,. புரண்டு படுத்து…இந்தியா வல்லராசாக/
  ஆக உலகின் எந்த மூலையில்
  ஓட்டை உடைசல் இருந்தாலும்,இந்தியாவை அனுகலாம்…கமிசன் கொடுப்பவர்களுக்கு
  உடனே ஒப்பந்தம் செய்து தரப்படும்…
  மற்றவை நேரில்…….

 9. இந்த INS Vikramaditya ல இந்தியாவிலைருந்து ஒரு முக்கியமான பங்களிப்பு இருக்கு. அதுல தோச, இட்லி சுடுர மெஷின் இந்தியாவில வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது(யம்மா என்ன ஒரு பங்களிப்பு!!!). இதவச்சு ஒரு மணி நேரத்துல 400 தோசையும், 1000 இட்லியும் பேஷா சுட்டுத்தல்லளாம் (நல்லவேல ரஷ்யாகாரனுக்கு தோச, இட்லி சுடதெரியாது இல்லாட்டினா அதையும் கப்பல்ல பொருத்தி பில்ல போட்டிருப்பான்).

  http://www.thehindu.com/news/national/karnataka/an-entirely-indian-touch-to-ins-vikramaditya/article3501663.ece

 10. அய் என் எஸ் விக்ரமாதித்யா வங்காள வளைகுடாவில் மட்டுமே, அதாவது நமது வான் பாதுகாப்பும், கடல்வழி பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே உலவ முடியும்! அமெரிக்கா, சீனா வியட்னாம் போன்ற நாடுகளின் ஏவுகனைத்தாகுதலிலிருந்தும்,நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவபடும் டார்பீடோ தப்பிக்க, நவீன மறித்து தாக்கும் கருவிகள் பொருத்தபடல் வேண்டும்! முக்கியமாக, மும்பையில் நீர்மூழ்கி கப்பலில் நடந்தது போன்ற் விபத்துக்கள் நடக்காதிருக்க வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்! பசு மூத்திரம் மட்டும் பத்தாது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க