Thursday, June 20, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்நல்லாசிரியர்களை கண்டதில்லை - சுதாகர்

நல்லாசிரியர்களை கண்டதில்லை – சுதாகர்

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – 2

ன்னால் இதுவரை இந்த தலைப்பின் கீழ் ஒரு ஆசிரியரைக் கூட இனம் காண முடியவில்லை. நானும் முயற்சி செய்யாமலில்லை ஆனால் என் முயற்சிகளும் பயனளிக்கவில்லை. என் அம்மாவும் ஒரு ஆசிரியர் எனும் பட்சத்திலும் என்னால் இந்த தலைப்பிற்கு கீழ் அவர்களை எழுத என் மனம் முன் வரவில்லை. காரணம் ஒரு வறுமையான குடும்பத்தில் இருந்து தன் குடும்பத்தின் துன்பங்களுக்கு விடை காண வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும்,குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்,தனக்கு வரும் கணவனுக்கு ஒரு வேலைக்கு போகும் வரனாக அமைய வேண்டும் எனும் பெரும்பான்மையோரின் நோக்கங்களைக் கொண்டே அவரும் இயங்கினார் என்பதே காரணம்.

மாணவர்கள்
ஆசிரியர்கள் எல்லோரும் மாணவர்களைக் காட்டிலும் அறிவில் பின் தங்கியவர்களாக, இன்னும் பல படிகள் மேலேற வேண்டியவர்களாக, நடைமுறை அறியாதவர்களாக‌ எனக்கு தோன்றுகிறார்கள்

என்னைப் பொருத்த வரை என் வாழ்நாளில் இதுவரை நான் பார்த்த ஆசிரியர்கள் எல்லோரும் மாணவர்களைக் காட்டிலும் அறிவில் பின் தங்கியவர்களாக, இன்னும் பல படிகள் மேலேற வேண்டியவர்களாக, நடைமுறை அறியாதவர்களாக‌ எனக்கு தோன்றுகிறார்கள். காரணம் அவர்கள்தான் மாணவர்களை விட அதிகமாக பாடபுத்தகங்களோடு, பாட புத்தகங்களை மட்டுமே நம்பி பொழுதைக் கழிக்கிறார்கள். ஒரு சாதாரண விளக்கங்களுக்கு கூட தவறியும் நடைமுறை எடுத்துக் காட்டுகளை எடுத்துக் கொள்வதில்லை. இவர்கள் தவறியும் கற்பித்தலை விட்டு இறங்காதவர்களாக‌, கற்றல் எனும் திறனை வளர்த்துக் கொள்ள தேவை இல்லாதவர்களாக தங்களை உருவகபடுத்திக் கொள்வதில் தவறுவதும் இல்லை.

நான் எல்லா ஆசிரியர்களையும் பொதுமைப்படுத்தவில்லை. நான் இதுவரை அப்படிப்பட்ட யாரையும் சந்திக்கவில்லை.ஆசிரியர்கள் முதலில் படிக்க வேண்டும்.மாற்று சிந்தனைகளுக்கான எந்த ஒரு புத்தகத்தையும் தீண்டுவதே இல்லை. உதாரணமாக அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று கூட அவர்கள் மாணவர்களுக்கு சொல்லித்தருவதில்லை.அதை திட்டமிட்டு செய்வது ஒரு புறம் இருந்தாலும், அதை அறியாதவர்களாகவே நிறைய ஆசிரியர்கள் காலத்தை ஓட்டுகிறார்கள். கலிலியோ அவர்தான் தொலை நோக்கியை கண்டுபிடித்தார் அதைத் தவிர இவர்கள் அவரைப் பற்றி வேறெதுவும் வாய் கூட திறப்பதில்லை. அதன் பின் ஒளிந்திருக்கும் மதத்தின் பித்தலாட்டங்கள் பற்றியோ,அவருக்கு இழைத்த அநீதியைப் பற்றியோ வாய் திறப்பதில்லை. ஏனென்றால் இவர்களே இன்னும் சகுனம் பார்த்துதான் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.

இந்தக் கல்வி முறை மாணவர்களை ஒரு புறம் சுரண்டுகிறது என்றால் அதை கற்றுத் தருகிறோம் என்று ஆசிரியர்களும் மாணவர்களின் அறிவை சுரண்டுகிறார்கள். அதுவும் இன்றைய நிலையில் ஆசிரியர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், தன் திறமையை நிறுவனத்திற்கு நிரூபித்து அதன் வழியாக அவர்களின் வருமானத்தையோ,அல்லது பதிவியையோ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. இதனால் மாணவர்களின் தேவையும், அவர்களின் நடைமுறை சிக்கல்களும் புரிந்து கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது. இந்த முதலாளித்துவ நிறுவனங்கள் இலாபத்தை மட்டுமே எதிர் நோக்கி தங்கள் தொழிலை நடத்துகின்றன.அந்த இலாபத்தின் பங்குதாரர்களாக இங்கு ஆசிரியர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதனை தட்டிக் கேட்க வேண்டிய‌ நடுத்தர ஏழை மக்களிடம் நுகர்வு கலாச்சாரம் நஞ்சாக கலந்து கிடக்கிறது.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைமுறை வாழ்க்கையில் புதுவிதமான, மிகவும் உபயோகமான கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. அதில் வரும் பெரும்பாலான கண்டுபிடிப்பாளர்கள் மெத்தப் படிக்காதவர்கள், கல்வியை தொடர முடியாதவர்கள், ஏழ்மையானவர்கள்தான். பிச்சையெடுத்து டெல்லிக்குசென்று சனாதிபதி விருது வாங்கியவர்களும் அதில் உண்டு. இப்படி தேவையானவற்றை புறந்தள்ளி விட்டு மாணவர்களை இந்த நடைமுறையிலிருந்து விலக்கி,அவர்களின் கண்களைக் கட்டி நகர்த்திக் கொண்டு போகும் முதலாளித்துவ கல்வி நிறுவனங்களும் அதன் அடியாட்களாய் ஆசிரியர்களும் மாறிவருவது மிகவும் வேதனைக்குரியது. அரசு ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்வதும், இதர வருமானத்திற்கான பகுதி நேர வேலை தேடவும், சொந்த காரியங்களை கவனிக்கவும், குடும்ப பிரச்சனைகளை தீர்க்கவுமே பொழுது கழிகிறது. இதில் நான் பார்த்த ஆசிரியர்கள் ஆம்வே போன்ற பொருட்களை விற்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

குறிப்பாக ஆசிரியர்கள் தங்கள் அறிவுத் தேடலை துரிதப்படுத்த வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பவர்களாக இருப்பதைக் காட்டிலும் வழி நடத்துபவர்களாக இருக்க வேண்டும். இந்த தலைப்பின் கீழ் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாவதே ஒவ்வொறு ஆசிரியரின் வெற்றி. ஆனால் அதற்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இது அவர்களை மட்டுமே தனிமைப்படுத்தும் நோக்கம் அல்ல அவர்களின் இன்றைய நிலைக்கு காரணமான முதலாளித்துவ கல்விமுறையை ஒழிக்கவும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

– சுதாகர்.

 1. சுதாகர்,நீங்கள் வெளிப்படையாக கூறியதில் தவறில்லை:
  நான் கிட்டத்தட்ட 12 கிலோமீட்டர் காலையிலும்/மாலையிலும்

  நடந்து வந்து எனது எஸ்.எஸ்.ல்.சி யை தாண்டவேண்டிய நிலையில்
  ஏன் 8 மணிக்கு பள்ளிக்கு வரவில்லை என்று செவிளில் அடிக்கடி
  அறை வாங்குவேன்…நான் அடி வாங்குவது, பல மாணவர்களுக்கு(குறிப்பாக பூணூல்களுக்கு)
  சந்தோசம்:ஆசிரியருக்கு பள்ளியில் இருந்து 2 நிமிட நடை:
  காது சற்று வீணாகப் போனது அவரால்தான்…
  12 கிலோமீட்டர் நடக்க எவ்வளவு நேரமாகும் என்று உணராத ஆசிரியர் அவர்:

  • இப்படியெல்லாம் நடந்தும் நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க நைனா.. உங்களை செதுக்கிய நல்லாசிரியர்களைப் பற்றியும் எழுதலாமே..

   • நன்றி அம்பி!
    அனேகமாக(கல்லூரியைத் தவிர) அனைத்து ஆசிரியர்களுமே,
    எனக்கு சிறந்த கல்வியை வழங்கினார்கள்….நான் தான் அதை விட்டுவிட்டு
    அருகில் உள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களை மேயத் தொடங்கினேன்!

 2. சுதாகரின் ஆதங்கம் நியாயமானது. சமீபத்தில் பேராசிரியர்களைப் பற்றி எப்படி இருக்கிறார்கள் என ஒரு பேராசிரியர் சொன்னது அதிர்ச்சியாய் இருந்தது.

  சிலர் தினசரி செய்தித்தாள் கூடப்படிப்பதில்லை. படிப்பதற்கான வெள்ளைக் கண்ணாடி தொலைந்து ஆறுமாதம் ஆகியும் ஒரு பேராசிரியர் அதை வாங்கவே இல்லை. இதிலிருந்து நாம் அறியும் செய்தி ஆறு மாதம் காலம் அவர் எதையும் படிப்பதில்லை என்பது தான்! வட்டிக்கு விடுவது என இன்னபிற வேலைகளை செவ்வனே செய்கிறார்கள்.

  ஒருமுறை நீயா நானாவில் சமீபத்தில் படித்த புத்தகம் என ஆசிரியர்கள் பக்கம் கோபிநாத் திரும்பி கேட்ட பொழுது, நிலைமை படுமோசமாக இருந்தது. ஆசிரிகள் என்பவர்கள் படிப்பதை நிறுத்தியவர்கள் என சொல்லலாம். இவர்களிடமிருந்து லட்சகணக்கான மாணவர்கள் வெளியேறுவதை பார்க்கும் பொழுது ஆயாசமாக இருக்கிறது.

  நான் படித்த பல நாவல்களில் ஊரில் பொதுவுடைமையை அறிமுகப்படுத்தியவர்கள் ஆசிரியராகத்தான் இருந்திருக்கிறார்கள். என் மகளின் ஆசிரியர்களுக்கு அவ்வப்பொழுது நல்ல கட்டுரைகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.

  சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் தான் நல்ல ஆசிரியர்களும் உருவாவார்கள்.

  நேற்று ஒரு இந்த தலைப்பு குறித்து, தோழியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, சொர்ணவல்லி மிஸ் பற்றி நிறைய நேரம் உற்சாகமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு மிஸ் நமக்கு கிடைக்கவில்லையே என ஏக்கமாக தான் இருந்தது. இரண்டொரு நாளில் தோழி உங்களுடன் பகிர்ந்து கொள்வார்.

 3. I am not interested to accept all the statements from Mr.Sudhakar.

  Because when I was studied 8th Standard (1990-1991), my science teacher brings goat heart from one of the students father shop and explain all the details about heart. (Please remember after removal heart from goat, it will work some 15-30 mts.)

  How is functioning, and the parts of heart.

  Like that in each and every school atleast you can find some nearly five teacher.

  But unfortunately those teacher names it may not comes out.

  Moreover very good people they may not advertised and for the life time also very limited.

  Thanks
  Udayan

  • உண்மை தான் உதயன்! என் ஆசிரியர், அய்யங்காராய் இருந்தும், கடைனிலை ஊழியரிடம் ஆட்டு ஈரலை கொண்டுவரசெய்து, அதன் செயல்பாட்டை விளக்கினார்!எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் அனைவரும் தெய்வமாக போற்ற தகுந்தவர்கள்!

   • அய்யங்கார் ஒரு வகையில் சிறந்தவர்கள்,,,
    “சைவம்” போல் பாகுபாடு(துவேசம்) காட்டுவதில்லை:
    காரணம் என்னவாக இருக்கும்?
    அவர்களில் ஒரு பிரிவினர் கள்ளர்(திருமங்கை மன்னன்/12 ஆழ்வார்களில் ஒருவர்)
    வழித்தோன்றல்கள்

 4. நம் சொந்த அனுபவங்கள் பிறருக்கு விருப்பமானதாக இருக்க அவசியம் இல்லை. பிறரின் விருப்பத்திற்கினங்க நம் சொந்த அனுபவங்களை திருத்தி எழுதிக்கொண்டால் அதைவிட அசிங்கம் ஏதும் இல்லை.நீங்களும் உங்கள் ஆசிரியருடனான அனுபவங்களை எந்த சமரசமும் இல்லாமல் எழுதுங்கள்.இந்த தலைப்பும் அதைதான் விரும்புகிறது.என் தந்தைதான் என் சிறந்த ஆசிரியர் ஆனால் இந்த தலைப்பு அதற்கானதில்லை.இங்கு ஆசிரியராய் நாம் பார்க்கும் ஒரு கூட்டம் என்ன கிழிக்கிறது அப்படி அவர்களை எதும் கிழிக்காத,நீர்த்து போனதாய் மாற்றும் இன்றைய உலகமயமாக்கலும்,முதலாளித்துவமும் எப்படிச் சுரண்டுகிறார்கள் எனபதைப்பற்றிதான்.நீங்கள் சொல்லும் ஆசிரியர் பள்ளிக்கு ஒருவர் அல்லது சில பள்ளிகளுக்கு ஒருவர் என சுருங்கி கிடப்பதன் காரணம் என்ன? இதுதான் இந்த தலைப்பின் அலசல்.அப்படி யாரும் இல்லை என்றால் அது ஏன் என்று நமக்குள் கேள்வி எழுப்புவதும், இருப்பவர்களை நம் சொந்த அனுபவங்களில் தேடிப்பார்ப்பதும் இதன் நோக்கம். ஆசிரியர் நல்லவர்,அடிக்கமாட்டார்,அமைதியானவர்,கோபப்படமாட்டார்,நேரத்திற்கு வருவார், கத்தி பேசமாட்டார்,காந்தியவாதி,கடவுள் பக்தியுள்ளவர் இதெல்லாம் புழுத்துபோன அடையாளங்கள் என்பது என்னுடைய கருத்து. ஆசிரியர் ஒரு விவசாயி அவர் விதைக்கவேண்டும் அவர் சிந்தனைக்கான ஏர் பிடிக்கவேண்டும்,தன்னை மாணவர்களுக்காக வருத்திக்கொள்ள வேண்டும்,வியர்வை சிந்தவேண்டும்,பூச்சிமருந்திடாத அவர்களுக்குள் இயற்கை விவசாயம் செய்யவேண்டும்,அவர்களுக்குள்ளான களைகளை பிடுங்க வேண்டும் மாணவர்களிடத்திலே வளர்வதையும் களையவேண்டும்.மாணவர்களின் போராடும் உணர்வையும் அரசியல் உணர்வையும் கொச்சைபடுத்தும் எந்த ஆசிரியரும் நேர்மையாளர்கள் இல்லை என்பதே உண்மை.

 5. அம்பி உங்கள் கருத்துக்கு நன்றி.உதயனுக்கான பதில் பதிவில் உங்களுக்கான பதிலும் அடங்கியிருக்கிறது என்று நம்புகிறேன். தொடர்வோம்.

  • // ஆசிரியர் நல்லவர்,அடிக்கமாட்டார்,அமைதியானவர்,கோபப்படமாட்டார்,நேரத்திற்கு வருவார், கத்தி பேசமாட்டார்,காந்தியவாதி,கடவுள் பக்தியுள்ளவர் இதெல்லாம் புழுத்துபோன அடையாளங்கள் என்பது என்னுடைய கருத்து. //

   சுதாகர்,

   பள்ளிப் பருவத்தில் உங்களுக்கு இந்தக் கருத்து இருந்ததா..?! அந்த வயதில், மேற்கூறியவைகள் நேர்மறையான உளவியல் தாக்கத்தை சின்னஞ்சிறு மாணவர்களிடம் ஏற்படுத்தும் ஆற்றலுள்ளவை.. பள்ளிக்குச் செல்வதில் உள்ள அச்சத்தை, அலுப்பை, வெறுப்பை போக்கும் காரணிகளாகவும் பல சமயங்களில் விளங்குவதுண்டு என்பது என் கருத்து..

 6. 1: Present generation growth is developed by only movies, So its impossible to get very
  good teacher: (Do you agree this statement)
  2: Present generation they are using plenty of education kids (DVD,CD,MP3, all the lesson
  are power point presentation, Plenty of information in Internet).
  3: How many of teacher are effectively try to use all the Education kids?
  4: How many of the Govt. Institute have all the facility?
  5: Can you give some of your teacher name, Atleast those who are explain the subject very
  well?

  But still we have very good teachers there are using chalk and blackboard they are try to explain the subject very well.

  ஆசிரியர் ஒரு விவசாயி அவர் விதைக்கவேண்டும் அவர் சிந்தனைக்கான ஏர் பிடிக்கவேண்டும்,தன்னை மாணவர்களுக்காக வருத்திக்கொள்ள வேண்டும்,வியர்வை சிந்தவேண்டும்,பூச்சிமருந்திடாத அவர்களுக்குள் இயற்கை விவசாயம் செய்யவேண்டும்,அவர்களுக்குள்ளான களைகளை பிடுங்க வேண்டும் மாணவர்களிடத்திலே வளர்வதையும் களையவேண்டும்.

  I don’t think so, we will get this type of teacher……
  Because present situation is different…….

  You remember that those attitude if you want to develop the teacher, they must be mingle with people, They must be see the problem, Infact for present situation they must be try to aware of all the education kids also….Present generation they are very fear to see the problem itself….

  சுதாகர் told நல்லாசிரியர்களை கண்டதில்லை, I want to convey my message, we have very limited…

  Thanks
  Udayan

 7. அம்பி,இந்த கட்டுரையை பள்ளி பருவத்தில் உள்ள மாணவர்கள் எழுதுகிறார்களா, இல்லை அதை கடந்து வந்த கிடைத்த அனுபவங்களின் ஊடே அந்த பள்ளி பருவத்தை பார்க்கும் நீங்களும் நானும் எழுதுகிறோமா. இதுதான் உங்கள் கேள்விக்கு பதில்(கேள்வி). அதுவும் நான் சொன்ன அந்த அடையாளங்கள் ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்துமே தவிர மாணவர்களுக்கான உபையோகமான எதையும் செய்யாது என்பதுதான் என் கருத்து.ஆசிரியர் ஆட்டு இதயத்தை எடுத்து வந்தார்,நுரையீரல் எடுத்துவந்தார் இதெல்லாம் சரி, ஆனால் அவர் என்ன விதமான தாக்கத்தை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறார் என்று பார்த்தால் அது இந்த முறைகேடான கல்வி முறை எனும் குருகிய வட்டத்திற்குள்ளாகவே இருக்கிறது. இதே தலைப்பில் நான் படித்த சொர்ணவள்ளி மிஸ்ஸை போல் ஒவ்வொறு மாணவர்களின் பின்புலத்தையும் எத்தனை ஆசிரியர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.அவர்கள் எந்த சூல்நிலைகளிலிருந்து பள்ளிக்கு வருகிறார்கள் என்பது பற்றி தெரிந்துவைத்திருக்கிறார்கள் இதை ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன் என்றால் இந்த குறைபாடால்தான் மாணவன் ஆசிரியரை கொலை செய்யும்வரை செல்ல தூண்டுகிறது.ஒரு மாணவன் கொலை செய்கிறான் மற்ற மாணவர்களெல்லாம் கொலைவெறியோடு திரிகிறார்கள்.தனி ஒரு மாணவனை பற்றி அறியாமல் ஒட்டுமொத்தமாக எல்லோரையும் ஒரே நிலையிலிருந்துகொண்டு வெறும் மதிப்பெண்களைக்கொண்டு அறிவாளி என்றும் முட்டாள்கள் என்றும் தரம்பிரிப்பது நியாயமற்றது.அதைதான் பெரும்பாளான ஆசிரியர்கள் செய்கிறார்கள். இங்கு நம்மை செதுக்கிய ஆசிரியர்களை பதிவதன் உண்மையான நோக்கம் என்ன. ஆசிரியர்கள் உண்மையாகவே மாணவர்களை செதுக்குகிறார்களா?செதுக்குவது என்றால் என்ன கைகளை மட்டும் செதுக்கிவிட்டு,தலை, மார்பு, வயிறு என்று பிற உறுப்புகளை புறந்தள்ளினால் அது ஒரு சிற்பம் ஆகுமா,இல்லை அறைகுறை கல்லாகுமா? நல்வழிப்படுத்துகிறார்களா?எந்த மாதிரியான எண்ணங்களுடன் மாணவர்களை வளர்த்தெடுக்கிறார்கள்?கண்ணை கட்டிவிடும் முதலாளித்துவ உலகமயமாக்களில் ஆசிரியர்களின் பணி கண்களை திறக்கின்றனவா? இல்லை கண்களை மூடியே அதை திறவாமல் இருக்க முழு முயற்சியுடன் இன்றைய ஆசிரியர்களை இயக்குகிறார்களா?அடிமைத்தனத்தை போதிக்கவே ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்களா? இதையெல்லாம் இந்த தலைப்பின் கீழ் ஆராய்வதே நோக்கம் அதுதான் என் நோக்கமும்.

 8. உதயன் நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.உங்கள் அனுபவத்தில் நல்லாசிரியர்களை கண்டீர்களா? இல்லையா? ஏன் உங்கள் அனுபவத்தில் காண முடியவில்லை? அப்படி காரணங்கள் இருந்தால் அதை எப்படி களைவது? அப்படி களைய முடியாது என்றால் நாம் எந்த மாதிரியான சமூக அமைப்பில் இருக்கிறோம்? இந்த சமூக அமைப்பு சரியா? சரியாக்க என்ன முயற்சிகள் செய்வது? இப்படி கேள்வி மேல் கேள்வி உங்களை நீங்களே கேட்டுக்கொண்டால் அதன் விடை கடைசியாக முதலாளித்துவத்தை, தனியார்மயமாக்களை, உலகமயமாக்களை,தாராளமயமாக்களை,ஏகாதிபத்தியத்தை களைவதாக வந்து முடியும். இதை ஒவ்வொறுவரும் உணர்வதற்கே இந்த தலைப்பு.//நீங்கள் சொல்லும் ஆசிரியர் பள்ளிக்கு ஒருவர் அல்லது சில பள்ளிகளுக்கு ஒருவர் என சுருங்கி கிடப்பதன் காரணம் என்ன? இதுதான் இந்த தலைப்பின் அலசல்.// இதுதான் என் கேள்வி. இப்படிதான் இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு விவாதம் தேவை இல்லை. ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதற்கும் அதில் மாற்றம் ஏற்படுத்தவுமே விவாதிக்கிறோம்.

 9. Now I have only one question,

  Before Russia is splitting whatever the quality of teacher you told, whether they have or not….Than why they splitted into so many countries?

  If teacher they are explain the subject to student in attractive way means, for them job is over.

  அம்பி,இந்த கட்டுரையை பள்ளி பருவத்தில் உள்ள மாணவர்கள் எழுதுகிறார்களா, இல்லை அதை கடந்து வந்த கிடைத்த அனுபவங்களின் ஊடே அந்த பள்ளி பருவத்தை பார்க்கும் நீங்களும் நானும் எழுதுகிறோமா.

  Experience its different for each and every people.

  Thanks
  Udayan

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க