Saturday, June 15, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசிதம்பரம் நடராசர் கோயிலை மீண்டும் கைப்பற்ற தீட்சிதர்கள் முயற்சி !

சிதம்பரம் நடராசர் கோயிலை மீண்டும் கைப்பற்ற தீட்சிதர்கள் முயற்சி !

-

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702/5 ஜங்சன் ரோடு,விருத்தாசலம்,கடலூர் மாவட்டம்.
94432 60164, hrpctn@gmail.com

103,ஆர்மேனியன் தெரு,பாரிமுனை,சென்னை. 9489235314.
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்

சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு எதிராக, தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து பிப்ரவரி 2009-ல் உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து உண்டியலே இல்லாத அந்தக் கோயிலில் முதன் முறையாக இந்து அறநிலையத்துறை உண்டியலை வைத்தது. கோயிலை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சிதம்பரம் கோயில்
சிதம்பரம் நடராசர் கோயில்

இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்திலேயே தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டில் தீட்சிதர்களுடன் சுப்பிரமணிய சாமியும் ஒரு மனுதாரராக இணைந்து கொண்டார். இவர்களது மேல்முறையீட்டையும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்து தீர்ப்பளித்தது.  அதன் பின்னர் தீட்சிதர்களும் சுப்பிரமணிய சாமியும் இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கு 25.11.2013 அன்று விசாரணை தொடங்கியது. இன்றும் வாதம் தொடர இருக்கிறது.

தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடுவதற்கான போராட்டத்தை முன்நின்று நடத்திய நாங்கள், சிவனடியார் ஆறுமுகசாமியை மனுதாரராக கொண்டு 2008 இலேயே இந்த வழக்கில் உயர்நீதி மன்றத்தில் இணைந்து கொண்டோம். பல ஆண்டுகளாக மீளா உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருந்த இந்த வழக்கைத் தட்டியெழுப்பி விசாரணைக்கு கொண்டு வந்து, வெற்றியும் ஈட்டினோம். இதன் தொடர்ச்சியாக தீட்சிதர்களின் மேல் முறையீட்டுக்கு எதிராகத் தற்போது உச்ச நீதிமன்றத்திலும் நாங்கள் தலையிட்டிருக்கிறோம்.

கோயிலை இந்து அறநிலையத்துறையிடமிருந்து பிடுங்கி மீண்டும் தங்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்பது தீட்சிதர்களின் கோரிக்கை. கோயில் தங்கள் வகையறாவின் தனிச்சொத்து என்பது அவர்களது வாதம். ஆனால் கோயிலின் மீது அவர்களுடைய உரிமையை நிருபிப்பதற்கான ஒரு சிறிய சான்று கூட அவர்களிடம் கிடையாது என்ற வரலாற்று உண்மையை 1890-ல் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் முத்துசாமி அய்யர்,செப்பேர்டு ஆகியோர் தீர்ப்பாக கூறியுள்ளனர்.

தில்லைக்கோயில் மக்களுடைய பணத்தில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. எனவே கோயிலும் அதன் நகைகள் மற்றும் நிலங்களும் பொதுச்சொத்துகள். தீட்சிதர்கள் எனப்படுபவர்கள் அக்கோயிலின் அர்ச்சகர்கள் மட்டுமே என்பது எங்களது வாதம். இந்து அறநிலையத்துறையின் வாதமும் அதுதான்.

இந்த வழக்கில் தலையிட்டுள்ள சுப்பிரமணிய சாமி மூன்று வாதங்களை முன்வைத்திருக்கிறார்.

கோயிலை மீண்டும் தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம் பாடுவது, இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துவதாகும் என்பதால், தமிழ் பாடுவதை தடை செய்யவேண்டும்.

தமிழ்நாடு அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவு எண் 45 இன் படி இந்துக் கோயில்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகளை நியமிப்பது, இந்துக்களின் மத உரிமையில் தலையிடுவதாகும் என்பதால் அந்தப் பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அதை ரத்து செய்ய வேண்டும்

சுப்பிரமணிய சாமி, தீட்சிதர்களுடன் இணைந்து முன்வைக்கும் இந்தக் கோரிக்கைகள் சங்க பரிவாரத்தின் கோரிக்கைகள் ஆகும். இந்து அறநிலையத் துறையைக் கலைத்து விட்டு எல்லாக் கோயில்களையும் பரம்பரை அறங்காவலர்களின் தனிச் சொத்தாக்க வேண்டும் என்ற அவர்களுடைய கோரிக்கைதான் இவ்வழக்கில் எழுப்பப் படுகிறது.

ஜெயா - தீட்சிதர்கள்
2009-ம் ஆண்டு ஜெயலலிதாவைச் சந்தித்த சிதம்பரம் தீட்சிதர்கள்.

தமிழ்நாடு அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவு எண் 45 அகற்றப்படுமானால், சிதம்பரம் கோயில் மட்டுமின்றி, எல்லாக் கோயில்களிலும் நிர்வாக அதிகாரிகள் அகற்றப்பட்டு கோயில்கள் அனைத்தும் மீண்டும் கொள்ளைக் கூடாரங்களாக மாற்றப்பட்டு விடும்.

ஏற்கெனவே தமிழக அரசு இந்த திசையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் நாத்திகர்களின் உரிமையை ரத்து செய்வது, அறநிலையத்துறையின் பணி நியமனத்தில் நாத்திகர்களை அகற்றுவது, கோயில் பிரசாதங்கள் தயாரிக்கும் பணிகளுக்கு “பார்ப்பனர் மட்டும்” என்று விளம்பரம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப் படுகின்றன.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு திமுக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு மதுரை கோயில் சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான பார்ப்பனரல்லாத அர்ச்சக மாணவர்கள் ஆலயத் தீண்டாமையின் காரணமாக வெளியில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். 2006-ம் ஆண்டு முதல் அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உறங்குகிறது. தமிழக அரசு அந்த வழக்கை முடித்து அர்ச்சக மாணவர்களை நியமிக்க வழி காணாமல், வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் 2009-ல் போடப்பட்ட தீட்சிதர்களின் மேல் முறையீடு உடனே விசாரணைக்கு வந்திருக்கிறது.

தமிழ்நாடு என்பது திராவிடர்களும் நாத்திகர்களும் ஆளும் காடு என்பதைப் போலவும், இங்க பக்தர்களும் பார்ப்பன சமூகத்தினரும் சொல்லொணாக் கொடுங்கோன்மைக்கு ஆளாக்கப்பட்டு வருவதைப் போலவும் ஒரு சித்திரத்தை தனது வாதங்களின் மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணிய சாமி. தீட்சிதர்களின் தரப்பில் பல மூத்த வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

நாங்கள் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக இணைந்து கொண்டிருப்பதால், மூத்த வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தியிருப்பதுடன், எமது வழக்குரைஞர்களை டெல்லிக்கு அனுப்பி வழக்கு தொடர்பான பணிகளை கவனித்து வருகிறோம்.

இந்த வழக்கின் முதல் எதிர் மனுதாரரான தமிழக அரசோ வழக்கை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறது. 2009-ல் திமுக ஆட்சியில், உயர்நீதிமன்ற உத்தரவின் படி  சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டபோது, போயஸ் தோட்டத்துக்கே சென்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சந்தித்தவர்கள் தீட்சிதர்கள். தற்போது இந்த வழக்கில் தமிழக அரசு காட்டி வரும் அலட்சியம் உள்நோக்கம் கொண்டது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
திராவிட இயக்க கொள்கைகளில் பற்று கொண்டவர்களும், கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாகக் கூடாது என்ற அக்கறை கொண்டவர்களும், ஆலயத்தீண்டாமையை எதிர்ப்பவர்களும், தமிழ் வழிபாட்டை ஆதரிப்பவர்களும் தமிழக அரசின் இந்தப் போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் சுயமரியாதைப் பாரம்பரியத்தையும், தமிழ் உணர்வையும் எதிர்த்து பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகனும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்களும் வெற்றி பெறுவதை நாம் அனுமதிக்க கூடாது.

இப்படிக்கு
உண்மையுடன்

(சி.ராஜு)
நாள் 28-11-13

 1. நல்ல கட்டுரை. திருத்தல யாத்திரைகள் அவ்வப்போது மேற்கொள்ளும் வழக்கம் கொண்டவன். மடங்களால் நிர்வகிக்கப் படும் கோவில்கள் (உதாரணம்: திருப்புள்ளிருக்குவேளூர் என்ற வைத்தீஸ்வரன் கோவில்), சமஸ்தானகளால் நிர்வகிகப்படும் கோவில்கள் (உதாரணம்: திருப்பூவணம்) போன்றவற்றை விட அறநிலையத்துறை கோவில்கள் நல்ல நிலையில் உள்ளன என்பது என் அபிப்ராயம். வருமானம் குறைந்த கிராமப்புர கோவில்களை கூட நன்றாக வைத்துள்ளனர்.

  ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுத்துகிறது. கோவில்களுக்கு சொந்தமான ஐந்து லட்சம் ஏக்கர் நிலம், மற்ற சொத்துக்களை ஒழுங்காக வாடகை வசூலிக்க நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. அரசு தொடர்புடைய மற்ற விஷயங்களைப் போலவே இதிலும் ஊழல். இந்த சொத்துக்களை மீட்டு கோவில்களை புனரமைப்பது போன்ற மத ரீதியான விஷயங்களுக்கும், பள்ளிகள், நூலகங்கள் என பொது விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

  எனினும் அரசு கையில் கோவில்கள் இருப்பதே மேல் என தோன்றுகிறது.

 2. ஒரு சந்தேகம். தில்லை திருச்சிற்றம்பல மேடையில் தமிழ் தடை செய்யப்பட்ட காலத்தில் அடியார் ஒருவர் சம்ஸ்கிருத ஸ்லோகமோ, தெலுங்கு கீர்த்தனைகளோ பாட அனுமதி இருந்ததுண்டா?

  • வெங்கடேசன்,
   கருவறைக்குள் சம்ஸ்கிருதம் மட்டும்தான் அனுமதி. திருசிற்றம்பல மேடையில் பக்தர்கள் நின்று கொண்டு வழிபடலாம். தமிழில் பாடி வணங்க அனுமதி இல்லை. தீட்சிதர்கள் மட்டும் திருச்சிற்றம்பல மேடையில் நின்று கொண்டு பெரும்பாலும் சம்ஸ்கிருத கீர்த்தனைகளையும் இறுதியல் கொசுறாக ஓரிரு தமிழ் வரிகளையும் பாடுவார்கள். தெலுங்கு குறித்து நீங்கள் ஆந்திராக் கோவில்களில்தான் கேட்க வேண்டும்.

  • வினவு,
   விளக்கத்துக்கு நன்றி. ஆனால், எனக்கு இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. நான் இதுவரை தில்லை கோவிலை தரிசித்ததில்லை என்பது காரணமாக இருக்கலாம். கருவறைக்குள் யார் செல்லலாம், அங்கே எந்த மொழியில் பூஜை நடக்கும் என்பது வேறு பிரச்சனை. திருச்சிற்றம்பல மேடையில் நின்று வழிபட அடியார்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினீர்கள். இந்த அடியார்கள் தமிழில் பாட மட்டும் தான் தடையா, அல்லது எந்த மொழியிலும் பாட தடையா?

   கருவறைக்குள் அடியார்கள் அனுமதியில்லை என்பது கிட்டத்தட்ட எல்லாக் கோவில்களிலும் உள்ள நடைமுறை. நான் தரிசித்துள்ள பல கோவில்களிலும் அடியார்கள் நின்று வழிபட அனுமதி உள்ள எந்த இடமாயினும், அங்கு நின்று எம்மொழியிலும் பாடவும் அனுமதி உண்டு. குறிப்பாக, கருவறைக்கு சற்று வெளியே (அடியார்கள் அனுமதிக்கப்படும் இடம் வரை). பல கோவில்களில் இந்த இடத்தில இருந்து தேவாரம், நாலாயிரம் நான் பாடியிருக்கிறேன். யாரும் அனுமதி மறுத்ததில்லை. கர்நாடக சங்கீதத்தில் விருப்பமுள்ள என் நண்பர் ஒருவர் பல முறை தெலுங்கு மொழி கீர்த்தனைகள் பாடி இருக்கிறார். இதற்கும் அனுமதி இருந்தது. (தெலுங்கு பற்றி என் முந்தைய கேள்வியில் குறிப்பிட்டதன் காரணம் இதுவே).

   • சிதம்பரம் கோவில் மற்ற கோவில்களை போல அல்ல! ஆதியில், இது உருவமிலா சக்தியின் பரந்த தண்மையை விளக்கும் ‘சித்சபை’ யாகவே இருந்தது! மனிதனை போன்ற உருவமற்ற, வழிபாட்டு முறையில், சாக்த முனிவர்களின் இருப்பிடமாக இருந்தது! பின்னர், மன்னர்களும்,மந்திரிகளும் மாறும்போது, கொஞசம் கொஞசமாக அருவுருவமான் லிங்க வழிபாட்டுக்கு மாறி , கோவில் என்றாலே அது சிதம்பரம் எனும் தில்லைதான் என்றானது! இயற்கை சக்தி வழிபாடு நீங்கி, ஆணதிக்கத்தை வலியுறுத்திய, நடராஜர் வழிபாடு அலகாபத்திலிருந்து வந்த தீட்சிதர்களைக்கொண்டு ஆரம்பிக்கபட்டது! அம்மன் வழிபாடு இல்லாதநிலைமாறி பின்னர் அம்மன் கோவில் தனியாக கட்டபெற்றும், அங்கு யாரும் போவதில்லை! லிங்க வழிபாடு இன்னமும் மூலனாதர் என்னும் தனி சன்னதியில் உள்ளது! இடையில், திருசித்திரகூடம் என்ற பெருமாள் கோவிலாகவும் சிலகாலம் இருந்தது! சைவமன்னன் ஆட்சியை பிடித்தபோது அது இடிக்கப்பட்டு கிள்ளை கடலில் கரைக்கப்பட்டது! பின்னர் விஜயநகர மன்னர்களின் ஆட்சியில், மத சமரசம் ஏற்பட்டு கொவிந்தராஜனுக்கு தனி கொவில், வ்ளாகத்துக்கு உள்ளேயெ, கட்டப்பட்டது! வெங்கடெசன் இன்னும் திருசித்திரகூடம் வந்து தரிசிக்காதது ஏன்? பொதுவாக மன்னர்கள் கோவில்களில் பாதாள அறைகள் ஏற்படுத்தி ,போர்க்காலங்களில் பொக்கிஷங்களை வைக்கவும், சுரங்கபாதைகள் அமைத்து தப்பிக்கவும் பயன்படுத்தினர்! மன்னனையும், அதிகார வர்க்கத்தையும் மகிழ்விக்க, அர்ச்சகர்கர்கள் ஆடல்,பாடல் இத்தியாதியாதிகளை ஏற்படுத்தி பொருள்செர்த்தனர்!அவர்கள் அபடி இப்படி உழைத்து சம்பாதித்த தங்கம் உள்ளிருக்கையில், கோவிலை யார் விட்டுத்தருவார்கள்?

   • அஜாதசத்ரு,
    தில்லை கோவில் பற்றிய விவரங்களுக்கு நன்றி. அப்படியே தில்லை கோவிலில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள தீட்டு பற்றி எனக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தையும் தீர்த்து வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் வசதிக்காகவும், வினவு வசதிக்காகவும் மீண்டும் கேள்விகளை எழுதி வைக்கிறேன். ஆம்/இல்லை என்ற ரீதியில் நேரடி பதில் கிடைத்தால் நலம்.

    — தில்லை திருச்சிற்றம்பல மேடையில் அடியார்கள் தமிழில் பாட மட்டும் தான் தடையா? அல்லது எம்மொழியிலும் பாட தடையா? உதாரணமாக, சம்ஸ்கிருத சுலோகங்கள், தியாகையர் போன்றோர் எழுதிய தெலுங்கு மொழியில் அமைந்த கர்நாடக சங்கீத கீர்த்தனைகள் ஆகியவற்றிற்கு அனுமதி உண்டா?

    — தில்லை திருச்சிற்றம்பல மேடையில் தீட்சிதர் அல்லாத, வெளியாளான பார்ப்பனர் ஒருவர் வேதம் ஓத அனுமதி உண்டா?

    • வெங்கடேசன், ஏற்கனவே அளிக்கப்பட்ட பதிலில் உங்கள் கேள்விகளுக்கான விடை இருந்தும் நீங்கள் ‘குறிப்பிட்ட’ வார்த்தைகளில் விடையை எதிர்பார்க்கிறீர்கள் போலும். திருச்சிற்றம்பல மேடையில் தீட்சிதர் தவிர்த்த பக்தர்கள் அனைவருக்கும் ( அதில் தீட்சிதப் பார்ப்பனர்கள் தவிர்த்த ஏனைய பார்ப்பனர்கள் உள்ளிட்டு) வாய் திறந்து பாடுவதற்கு உரிமை இல்லை. இதனால் மனதுக்குள் பாட உரிமை இருக்கிறதா இல்லையா என்று ஒரு கேள்வி நீங்கள் கேட்டாலும் கேட்கலாம். பாடவே உரிமை இல்லை என்பதால் அதை ஆங்கிலத்திலோ, லத்தீனீலோ, அரபிலோ கூட பாடக்கூட உரிமை இல்லை என்று புரிந்து கொள்ளலாம். புரியாமல் போவதற்கு இது ராக்கெட் சயின்ஸ் இல்லை.

     இந்த விளக்கத்திலிருந்து நீங்கள் வந்தடையும் முடிவு என்ன? திருச்சிற்றம்பல மேடையில் சம்ஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளுக்கு தடை இருப்பது போலவே தமிழுக்கும் தடை உண்டு. சூத்திரர்கள், பஞ்சமர்கள் போலவே பார்ப்பனர்கள் பாடுவதற்கும் தடை இருக்கிறது. எனவே இது வெறும் மரபு, சடங்கு சார்ந்ததே அன்றி மொழி,சாதி துவேசம் இல்லை என்றும் சொல்லலாம்.

     நீதிமன்றத்தில் நீதிபதியும், வழக்கறிஞரும் மட்டுமே ஆங்கிலத்தில் பேசுவதற்கு உரிமை உண்டு. மற்றவர்களுக்கு இல்லை. வினவு போன்ற முட்டாள்கள் நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்று போராடினால் சில அறிவாளிகள் அதற்கு என்ன சொல்வார்கள்? நீதிமன்றத்தில் நீதிபதி, வழக்கறிஞர் தவிர வேறு யாருமே ஆங்கில்த்தில் பேசுவதற்கு உரிமை இல்லை. எனவே அங்கே உரியவர்களைத் தவிர மற்றவர்கள் பேசும் ஆங்கிலத்திற்கே தடை இருக்கும் போது தமிழுக்கும் தடை இருப்பதை தாய் மொழி மீதானா அடக்குமுறையாக புரிந்து கொள்ளத் தேவை இல்லை என்று அந்த அறிவாளிகள் விளக்கக்கூடும். அந்த அறிவாளிகள் கூட்டத்தில் வெங்கடேசன் இல்லை என்று இப்போதும் நம்புகிறோம்.

       • I dont trust the rule of atheists or pseudo christians/muslims.

        Christians/Muslims/Atheists have no right to administer a hindu temple or talk about it,they are minorities and should only worry about their churches/mosques and be happy that they get enough freedom to live as they want in India.

        If you think the Supreme court favours Theists in this case,it is true that it does and it should.

        People like Karunanidhi and his followers have no right to dictate terms,someone who sells his daughters to party chiefs to maintain survival.

        Chidambaram temple ll belong to the dikshitars,The king gave the administration to them and thus it belongs to them.

        As i repeat build your own temples,get all those rich actors/businessmen etc etc,ask them to stop wasting money on alcohol & girls and make temples and trusts,let us who trusts any of you diamonds.

         • I am speaking the truth and my experience amongst people is far and wide.

          If the government is truly secular let them get out of Hindu temples,they have no right to collect the money and steal it under government schemes.

          I repeat again,all those people who are proud atheists/agnosts let them not interfere in this,tradition ll prevail,highway robberers and isai vellalars can stick to their professions.

     • வினவு,
      விளக்கத்துக்கு நன்றி. நீங்கள் சொன்ன விவரங்கள் வேறோர் இடத்தில் இருந்து சமீபத்தில் அறிந்தேன். விவரங்கள் உண்மைதானா என சரி பார்க்கவே துல்லியமான பதில் கேட்டு அடம் பிடிக்க வேண்டி வந்தது.

      ————————————————————————–

      பிரச்சனையின் விவரங்கள் தெரிந்த பின்னும் சிவனடியார் ஆறுமுகசாமியை முன்னிறுத்தி நீங்கள் எழுப்பும் கோரிக்கையும், போராட்டமும் எனக்கு ஏற்புடையதாகவே உள்ளது. தில்லை கோவில் மட்டுமல்ல, மற்றெல்லா புராதன கோவில்களும் அறநிலையத்துறை வசம் இருக்க வேண்டும். இங்கெல்லாம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடிய வேண்டும். ஓதுவார்கள் திருச்சிற்றம்பல மேடைக்கு கீழிருந்து பாட வேண்டும் என்ற கொடுமையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த மேடையில் எந்த ஜாதி அடியார்களும் தமிழ் பாட உரிமை இருக்க வேண்டும். அது போலவே, சம்ஸ்கிருத சுலோகங்கள், தெலுங்கு கீர்த்தனைகள், வேதம் என மரபாக கோவில்களில் பாட அனுமதியுள்ள எதுவும் இந்த மேடையில் பாட உரிமை இருக்க வேண்டும். இந்தக் கருத்துக்களை ஏற்கிறேன். உங்கள் போராட்டமும், வழக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

      ————————————————————

      ஆனால், பிரச்சனை பற்றிய விவரங்கள் தெரிந்த நிலையில் இரண்டு விதங்களில் எனக்கு எதிர்க்கருத்து உள்ளது.

      இந்த பிரச்சனை பற்றி பல கட்டுரைகள் எழுதி உள்ளீர்கள். எதிலாவது இங்கே சொன்ன விவரங்களை பதிவு செய்துள்ளீர்களா என தெரியவில்லை. எந்த ஒரு பிரச்சனையிலும் உண்மைகள் (facts) என்பவை தனியாக வரையறுக்கப்படவேண்டும். அவற்றை எவ்வாறு புரிந்து கொள்கிறோம் (interpretation), என்ன நிலைப்பாடு எடுக்கிறோம் என்பதெல்லாம் தனியாக இருக்க வேண்டும். நீங்கள் பிரச்சனை தொடர்பான உண்மைகளை தெளிவாக பதிவு செய்யாதது எனக்கு நேர்மையற்ற செயலாகத் தெரிகிறது. உங்களிடமிருந்து இதை நான் எதிர்பாக்கவில்லை. உண்மைகளை தெளிவாக வரையறுத்து விட்டு, இதை மொழித் தீண்டாமை என விளக்கி இருக்கலாம்; தமிழ் பாடும் உரிமை பற்றி பேசி இருக்கலாம் என்பது என் எண்ணம். ஏற்கனவே, நீங்கள் இந்த உண்மைகளை எங்காவாது பதிவு செய்து, நான் கவனிக்காமால் போயிருக்க வாய்ப்புண்டு. இவ்வாறெனில், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

      தமிழ் பாட உரிமை என்ற கோரிக்கையை ஆதரிக்கும் அதே வேளையில், இந்த பிரச்னையை “தமிழ் தீண்டாமை” என நீங்கள் செய்யும் interpretation எனக்கு ஏற்புடையாதாக இல்லை. கொசுறாகவாவது தீட்சிதர்கள் தமிழ் பாடுகிறார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அங்கே வாய் திறந்து பாடக் கூடாது. பார்ப்பனருக்கும் தடை. வேதம் ஓதுவதாயினும் தடை. எனில் இந்த பிரச்சனையை மொழித் தீண்டாமையாகவோ, ஜாதி தீண்டாமையாகவோ என்னால் குறுக்க முடியவில்லை. மரபு, சடங்கு சார்ந்த விஷயம் என்றும் கூற முடியவில்லை. கோவில் தங்கள் சொத்து என சண்டித்தனம் செய்யும் தீட்சிதர்கள், கோவிலின் முக்கிய இடமாகிய திருச்சிற்றம்பல மேடையில் பூஜை செய்யும் உரிமையை எள்ளளவும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. பிரச்சனையின் முக்கியப் புள்ளி தீண்டாமையல்ல. இது ரௌடித்தனம். ரொட்டித் துண்டு கிடைத்த நாய், மற்ற நாய்களை அண்ட விடாது. குறைத்துத் துரத்தும். இதுவே என் interpretation.

    • //– தில்லை திருச்சிற்றம்பல மேடையில் அடியார்கள் தமிழில் பாட மட்டும் தான் தடையா? அல்லது எம்மொழியிலும் பாட தடையா? உதாரணமாக, சம்ஸ்கிருத சுலோகங்கள், தியாகையர் போன்றோர் எழுதிய தெலுங்கு மொழியில் அமைந்த கர்நாடக சங்கீத கீர்த்தனைகள் ஆகியவற்றிற்கு அனுமதி உண்டா?//

     எனக்கு தெரிந்தவரையில், சிற்றம்பலமேடைக்கு கீழே இருந்துகொண்டுதான் ஓதுவார்கள் பாடியிருக்கிரார்கள்! காலபூஜை அல்லாத சமயங்களில், மேல்சட்டையை கழட்டிவிட்டு சென்று தரிசிப்போம்! அங்கு தேவாரமோ, வேற்றுமோழி பாடல்களோ நித்தியப்படி பாடப்படுவதில்லை! பூஜா வேளைகளில் பூஜை செய்யும் அர்ச்சகர் தவிர மற்றவர்கள் சம்ஸ்கிருத ச்லோகம் பாடுவார்கள்!
     //– தில்லை திருச்சிற்றம்பல மேடையில் தீட்சிதர் அல்லாத, வெளியாளான பார்ப்பனர் ஒருவர் வேதம் ஓத அனுமதி உண்டா?// – வெளியாளான பார்ப்பனர் வந்து வேதம் ஓத அனுமதி என்ற பேச்சுக்கே இடமில்லை! பூஜாகாலத்தில் தில்லை தீட்சிதர்களைத்தவிர ஏனையோர் வெளியேற்றப்படுவர்! மற்றநேரங்களில் அர்ச்சனை செய்பவர்கலும், சிதம்பர ரகசியத்தை காண வருபவர்களும், அவரவர் மொழிகளில் வேண்டுதல் செலுத்துவது உண்டு! அப்படியிருக்க தமிழில் பாடியதை கண்டு கொள்ளாமலிருந்திருக்கலாம்!

     • அஜாதசத்ரு,
      நீங்கள் தந்த விவரங்களுக்கு நன்றி.

      புரிந்து விட்டது என நினைக்கிறேன். சமீபத்தில் திருவாரூர் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது போன்ற அமைப்பு என புரிதல். மூலவர் புற்றிடங்கொண்டார் தனி சன்னதி. வெளியே வீதிவிடங்கர் தனி சன்னதி. முன்னால் பெரிய மண்டபம் (மேடை).

      மூலவர் கருவறைக்கு சற்று வெளியே (அடியார்கள் அனுமதிக்கப்படும் இடம்) அமர்ந்து தேவாரம் ஓதினேன் (அதாவது, புத்தகம் பார்த்து படித்தேன்). வேறொருவர் புத்தகம் இல்லாமலே பண்ணோடு பாடினார். நண்பர் ஒருவர் தெலுங்கு கீர்த்தனை ஒன்று பாடினார். தடை ஏதும் இல்லை.

      வீதி விடங்கர் சன்னதியில் மரகத லிங்க மூர்த்திக்கு தினசரி பூஜை, அபிஷேகம். இதையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அர்ச்சகர் ஒருவர் அபிஷேகம் செய்தார். வேறொரு அர்ச்சகர் உதவிகள் செய்து கொண்டிருந்தார். அவர் பூஜை காலம் முழுதும் தேவாரம் பண்ணோடு ஓதினார். (அது சமயம் மேடையில் அமர்ந்து இருந்த அடியார்கள் கூட சேர்ந்து தேவாரம் பாட அனுமதி உண்டா என தெரியவில்லை).

      தில்லையில் நடப்பது தமிழ் தீண்டாமை அல்ல. அது தீட்சிதர்கள் செய்யும் ரௌடித்தனம்.

   • // வெங்கடெசன் இன்னும் திருசித்திரகூடம் வந்து தரிசிக்காதது ஏன்?

    தெய்வநாயகன் அருளிவிட்டான். அதைத்தாண்டி கோவிந்தராஜன் இன்னும் அருளவில்லை. பாதிரிப்புலியூர் அருளியவன், இன்னும் பெரும்பற்றப்புலியூர் அருளவில்லை. இடைப்பட்ட சோபுரமும், தினைநகரும் கூட அருளிவிட்டான். வாய்ப்பு அமையவில்லை. பார்ப்போம்.

 3. //எனினும் அரசு கையில் கோவில்கள் இருப்பதே மேல் என தோன்றுகிறது.//

  அப்படியே மசூதிகளும், சர்ச்களும் கூட அரசு கையில் கொடுத்தால் நன்றாக இருக்கும்…வினவும், வெங்கடேசனும் பரிந்துரைப்பார்களா?

  • எனக்கு மசூதி, சர்சுகள் மீது ஈர்ப்பு ஏதுமில்லை. எனவே, மசூதி, சர்சுகளை யார் நிர்வகிக்கிறார்கள் என்பது பற்றி அக்கறையும் இல்லை.

   • மசூதியை அர்சு கையில் கொடுத்தால் அரசுதான் செலவு செய்யவேண்டிய நிலை வரும்.

  • வெங்கடெசன் ஒப்புக்கொண்டால்,நான் வரவேற்பேன்! திருவாளர் அய்யர் வரவேற்பாரா?

 4. எல்லா மசூதிகளுக்கும், கிருத்துவ ஆலயஙளுக்கும் பொதுமக்கள் பிரதினிதிகள் அடங்கிய வழினடத்தும் சபை உள்ளது! அவர்களுக்கு போதகர்/அய்யரை மாற்றும் அதிகாரம் உள்ளது! பரம்பரை அர்ச்சகர் என்ற சாதீய முறையும் இல்லை! அவர்கள் சாமி பார்ப்பன சனாதனத்தை, காப்பாற்ற அவதாரம் எடுத்து சூத்திரர்களை இழிவுபடுத்தவில்லை! பணக்காரனுக்கு மட்டும் பரிவட்ட மரியாதை செலுத்தும் பழக்கமும் இல்லை! ஆனால் எல்லா மதங்களுக்கும் ஒன்று பொதுவானது, அதான் புத்திசாலி கிரிமினல்கள் அப்பாவி மக்களை ஏமாற்றுவது! ஆண்டவன் குறிப்பிட்ட ஊரில் மட்டும் அதிசயங்கள் நடத்துவதாக கதைகட்டி, முட்டள் பக்தனை ஏமாற்றுவது!

 5. White christians and europeans killed black/brown/tribal people in the name of inquisition and officially in the name of the catholic church.

  There are protestant christian churches who build their own churches and run their own system,is anyone stopping any hindu from doing so?

 6. எழுபதுகளில் தி மு க அரசால்நடைமுறை செய்யப்பட்ட தமிழ் அர்ச்சனை வசதி சிதம்பரம் கோவிலிலும் , இதே அர்ச்சக பார்பனர்களால் செய்யப்பட்டது! ஆனால் கேட்பாரில்லாததால் இப்பொது செய்வதில்லை!

  தற்பொது இதற்கும் தடை உத்தரவு வரலாம்!

  • Sooriyan: Surprising to see Harikumar’s comment indecent and abusive. And even more surprising, that you are asking the “Father of abuses and indecency” – Vinavu – to edit such responses. If abusing brahmins is completely acceptable for you, you should also accept such small criticism about your leader.

   Ask yourself, will any rich man trust you or your community with lots of gold and jewellery?

   • Small edit: I wanted to say, it is surprising that you find harikumar’s comment indecent and abusive….Hope vinavu publishes this correction at the same time…or edit the previous post.

  • Arikumaar and Ayyar! you both are disgustingly arrogant! No wonder, you are showing off your own culture! Since when, they owned chidambaram temple? Are they descedant of chola dynasty ? They are appointed as priests , many centuries later by Minister Seikkizhaar, only to perform pujaas! Then supreme court of Madras presidency refuted their claim as owners! Are you educated? Why are you behaving like a madman?

 7. Am i behaving like a madman,seriously?

  and u call me arrogant,when u want to give credit and rule to silly people without a backbone?

  Supreme court of Madras presidency is dead and buried,now we have the supreme court of India,let them decide what is which.

 8. //Supreme court of Madras presidency is dead…….// But truth will not die and buried! Now you people are trying to bury it! Are you not behaving like a madman,seriously?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க