Friday, August 12, 2022
முகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் காஞ்சி, சிருங்கேரி, பூரி சப்பாத்தி - ம.க.இ.க பாடல்

காஞ்சி, சிருங்கேரி, பூரி சப்பாத்தி – ம.க.இ.க பாடல்

-

க்கள் கலை இலக்கியக் கழகம் 1993-ம் ஆண்டு வெளியிட்ட “அசுர கானம்” பாடல் ஒலிப்பேழையில் இடம் பெற்ற “சின்னவாளு, பெரியவாளு” பாடல்.

புராண இதிகாசங்கள் படியும் மனுதர்ம சாத்திரங்கள் படியும் ஆட்சி நடக்கிறதா என்று கவனிப்பதற்கு என்றே கையில் தடிக்கம்போடு ஒருவர் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவர் பெயர் ஜகத்குரு. சாதாரண குரு அல்ல ஜெகத்த்து குரு.

“உன்னால ஜகத்துக்கு என்னடா பிரயோஜனம்”னு கேட்டா “லோக சேமத்துக்கு தவம் பண்ணுறேன்” என்கிறான். “அட மண்டல் கமிஷனுக்கு என்ன சொல்றேன்”னு கேட்டா,  “இது பகவானுக்கே அடுக்காது” என்கிறான்.

“அட அயோத்தியில் உங்க ஆளு மசூதியை இடிச்சுட்டானே இது அடுக்குமா” என்று கேட்டா “நன்னா இடிக்கட்டும்” என்கிறான். “மசூதி என்ன மசூதி அயோத்தி பூராவுமே எங்க ஸ்ரீராமனுக்கு சொந்தம்” என்கிரான்.

“சாமி நீரே சர்வ மானியம், இந்துவுக்கெல்லாம் நீ என்னாடா நாட்டாமை?”

பல்லவி

சின்னவாளு பெரியவாளு நடுவாளு கொடுவாளு
எத்தன வாளானாலும் அத்தனையும் அவாளு
காஞ்சி, சிருங்கேரி, பூரி சப்பாத்தி
எங்கடா எங்க ஆளு – அட
எங்கடா எங்க ஆளு – அட

எல்லாம் இந்துங்கறது ரீலு – போடா
எல்லாமே …. பூ…ணூலு
எல்லாமே …. பூ…ணூலு

சரணம்

புத்தரிருந்தார்… சித்தருமிருந்தார்
பட்டினத்தார் கீர தண்டாட்டம் மெலிஞ்சார்..
அவலு பொரிதாங் ஆகாரமிங்குற…..நீ
அவலு பொரிதாங் ஆகாரமிங்குற..
ஆளப்பாரு பொலி காள… அவன்
ஆளப்பாரு பொலி காள
நீ வந்திடடா விடி கால..- ஏருக்கு
கொறையுது ஒரு காள (சின்னவாளு)

சந்து சந்தா சாராயம் விக்கிறாங்..
சனங்க தாலிய சொல்லி அறுக்குறாங்..
சகத்துக்குருங்கிற……இதுக்கும் இளிக்குற
மகத்துச் சாவுக்கு மழுப்புற ,மொழுவுற… நீ
மகத்துச் சாவுக்கு மழுப்புற மொழுவுற
அதுக்கொரு அருள் வாக்கு..
நீ அம்முக்கு ஆ…….த…..ர….வூ
அப்படி என்னதாண்டா ஒறவு..? (சின்னவாளு)

கோடி கோடி சொத்து பல கோடி
காமகோடிய வந்ததே…. தேடி…
நாடும் மக்களும் ஆனதே போண்டி
மடத்துக்கு பலமாடி..ஆண்டி
மடத்துக்கு பலமாடி
நீ திருவோடு எடுக்காட்டி….உன்ன
பொரட்டிடுவோம்… பொரட்டி (சின்னவாளு)

எதுக்குடா துறவிக்கு அரசியலுங்குற..
இடிச்சுட்டான் மசூதிய இதுக்கென்ன சொல்லு
நடந்தது போகட்டும் எதுக்கத கெளரனும்
திமிருல பதில் சொல்லுற… – நீ
திமிருல பதில் சொல்லுற… – உன்ன
இறுக்குறேன் செருப்புலடா…- அட
அதையும் மறந்திடடா….. (சின்னவாளு)

தகிடுதத்தம் டாடாவும் வாறான்
அரையிருட்டுல அம்பானி வாறான்
நாட்டையே வித்த ராவுஜி வாறான்
நடக்க முடியாம
நடக்க முடியாம சர்மாவும் வாறான்
என்னடா அங்க வேல… -அட
என்னடா அங்க வேல..
சம்போ… சங்கர மகா தே….வா- உன்

கும்பலே சதிதாண்டா
கும்பலே சதிதாண்டா

 1. I request Vinavu not to take names of Shringeri unnecessarily in this.

  Orrula irukkura somberi ellam onnu serndhu enna kummiya vena adinga,thevai illama vaarthaya vida vendam.

  • ஆமாமா, சிருங்கேரி மடத்துல இருக்குற லோக குரு போஸ்டிங்க்கு பள்ளர், பறையர், அருந்ததியர்னு அல்லாரும் போட்டியிடலாம். சங்கர் சாரியாவும் வரலாம். அதுனாலதான் அரிப்பு குமார் துள்ளுறாரு!
   பாட்ட நல்லாக் கேளுயா வெண்ணை……..!

   • Vetrivel: Please start a மடம் for your own people. Who stopped you? There are so many non-brahmin mutts in India and within Tamil Nadu. You can very well be a part of them…Who stopped you? Why do you want to be the leader of some mutt when your contribution towards establishing and maintaining it is zero..? Jealous of seeing people trusting your enemies..?

 2. சங்கரராமனும் சங்கர மடமும்… ஒரு ப்ளாஷ்பேக்!

  சங்கரராமன்….

  ஒரு செய்தியாளனாக என்னால்(எஸ் ஷங்கர்) மறக்க முடியாத நபர், நண்பர். காஞ்சிபுரத்தில் நானிருந்த நாட்களில் தினசரி காலையும் மாலையும் என்னை தவறாமல் சந்திக்க வந்துவிடுவார். அவருடன் ஒரு மெல்லிய துண்டு போர்த்திக் கொண்டு அவரது மகன் கொழுக் மொழுக்கென்று வந்து நிற்பான். சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற நண்பர்தான் சங்கரராமனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

  ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் முறைகேடுகள் பற்றி துல்லியமாக புள்ளிவிவரம் தருவார் சங்கரராமன். எந்தக் கோயிலில் என்ன விசேஷம், அதன் வரலாறு, இப்போதுள்ள நிலைமை என எனக்குத் தேவையான விவரங்களை தினமும் தருவது அவர் வழக்கம். முடிந்தவரை தமிழகத்தின் அனைத்து கோயில்கள் பற்றியும் எனக்குப் புத்தகங்கள் தந்திருக்கிறார்… ஒரு நாள் விட்டு ஒருநாள் நான் எழுதிய கோயில் கட்டுரைகளை இப்போது தொகுத்தாலும் தனிப் புத்தகம் தேறும். அதற்கான பெருமை சங்கரராமனுக்குத்தான்!
  ஒரு முறை
  வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 400 ஏக்கர் நிலமிருந்தும் ஒரு மூட்டை நெல்லுக்கு வழியில்லை
  என்ற தகவலை ஆதாரங்களோடு தந்தார்.
  ‘குத்தகைதாரர்கள் தெய்வத்தையே ஏமாற்றும் கொடுமையை யாரும் எழுதமாட்டறாளே’

  என குமுறினார். அதை படங்களோடு முதல் பக்க செய்தியாக்கினோம். சில தினங்களில் வரதராஜருக்கு வரவேண்டியவற்றில் ஓரளவுக்காவது வர ஆரம்பித்ததை மகிழ்ச்சியோடு சொல்லி, அந்தக் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான ‘படி இட்லி’ – புதினா சட்னியை கொடுத்துவிட்டுப் போனார்!

  அக்கிரமம்… கட்டாய அர்ச்சனை டிக்கெட் விற்பனை…

  அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அப்புறமென்ன.. முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது.அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அப்புறமென்ன.. முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது.

  சங்கர மடத்தில் எதிர்மறையாக என்ன நடந்தாலும், அது செய்தியாக வெளிவரக் கூடாது என்பது எழுதப்படாத உத்தரவு. எனவே புதிதாக வந்த என்னிடம்தான் அவர் சங்கர மடத்து சமாச்சாரங்களை அதிகமாகப் பகிர்ந்து கொள்வார்.
  அந்த மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும். இளம் ஆண் பிணங்கள். அதனை எந்த செய்தித் தாளிலும் செய்தியாகப் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், மின்சாரம் தாக்கி பலி என்பதோடு நின்றுவிடும். பெரும்பாலும் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது வெளி மாநில இளம் பக்தர்கள் இப்படி ஷாக்கடித்து இறந்திருப்பார்கள்.

  பயங்கர ஷாக்கான சமாச்சாரம்!

  அதி நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட சங்கர மடத்தில் ஏன் அடிக்கடி ஷாக் அடிக்கிறது என்பது குறித்து சங்கரராமன் சொன்ன பின்னணி பயங்கர ஷாக்கான சமாச்சாரம்!

  ஜெயேந்திரரைப் பார்க்க வரும் வெளி மாநில, வெளிநாட்டுப் பக்தர்கள், தரும் ரொக்க – தங்க காணிக்கைகள் குறித்து அவர் அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். சங்கரராமனுக்கு ஜெயேந்திரர் வைத்திருந்த பெயர் துஷ்டன்! நேருக்கு நேர் பார்த்தால் பக்கத்திலிருப்பவர்களிடம் ‘இந்த துஷ்டப் பய எதுக்கு வந்திருக்கான் கேளு.. அவனை முதல்ல போகச் சொல்லு’, என்பாராம். இதுவும் சங்கரராமன் சொன்னதுதான்.

  எழுத்தாளர் அனுராதா ரமணன்
  ஜெயேந்திரர் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை, தொன்னூறுகளிலேயே பலரிடமும் சொன்னவர் சங்கர்ராமன்.

  பல முறை தன்னை யாரோ துரத்தியதாகவும், தாக்க முயன்றதாகவும் சங்கரராமன் சொல்வார். ஆனால் அதை பெரிதாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் தன்னை சங்கர மடத்து ஆட்கள் அடித்துவிட்டார்கள் என்று கூறி, முழங்காலில் ரத்த காயத்துடன் வந்தார்.

  அதன் பிறகு அவரைப் பார்த்தாலே மற்ற நிருபர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர். ‘இதுக்கு வேற வேலயே இல்ல. கண்டுக்காதீங்க… இதுமேலயும் தப்பு இருக்கு,’ என்றனர்.

  ஒரு கட்டத்தில் சங்கரராமன் தரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை என்னால் செய்தியாக வெளியிட முடியவில்லை. காரணம், அலுவலகத்தில் பலரும் சங்கர மடத்தின் அறிவிக்கப்படாத பிஆரோக்களாக செயல்பட்டதுதான்.

  இதனால் நானே கூட சில சந்தர்ப்பங்களில் சங்கரராமனைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். ஆனால் அந்த மனிதர் புரிந்து பக்குவமாகத்தான் நடந்து கொண்டார்.

  டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்…

  ஒருநாள் சங்கரராமன் வந்தார். ‘சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா… குடிச்சிட்டு பூஜை பண்றான்… வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது… இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,’ என்று வந்து நின்றார்.

  “ஸாரி சங்கரராமன்… ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது,” என்றேன். ‘என்னண்ணா சொல்றேள்…’ என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன்.

  ஆனால் அவருடனான நட்பில் மாற்றமில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போனாலே போதும், எங்கிருந்தாலும் ஓடி வருவார்… ஒவ்வொரு பிரகாரம், சந்நிதிகளுக்கும் அழைத்துப் போய் கோயிலின் பெருமை சொல்வார். தவறாமல் படி இட்லி பிரசாதம் பெற்றுத் தருவார். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், கற்சங்கிலிகள் குறித்து அவர் தரும் விளக்கம் சிறப்பாக இருக்கும்.

  கடைசியாக
  2001-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் என்னைப்(எஸ் ஷங்கர்) பார்க்க படி இட்லியோடு வந்திருந்தார் சங்கரராமன்.

  பத்திரிகைகள் கைகொடுக்காத நிலையில், ஒரு நாள் தன்னுடைய சொந்த பெயரிலே ‘எச்சரிக்கை’ என்ற தலைப்பில் ஜெயந்திரர், விஜயேந்திரர், ரகு மற்றும் மேலும் சிலர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதை திருத்திக்கொள்ளும்படி கேட்டு ஜெயந்திரருக்கு அனுப்பி வைத்தார்.

  அடுத்த நான்காவது நாள், சங்கரராமன் ஒரு நாற்காலியோடு மல்லாக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துப் பதைத்தேன்!

  இதையெல்லாம் விலாவாரியாக சொல்லக் காரணம், சங்கரராமன் என்ற மனிதர் ஜெயேந்திரருக்கு எந்த அளவுக்கு பெரும் தலைவலியாகத் திகழ்ந்தார் என்பதைச் சொல்லத்தான்!

  -எஸ் ஷங்கர்

  ரெfஎரென்செ லிங்:

  க்ட்ட்ப்://டமில்.ஒனெஇன்டிஅ.இன்/னெந்ச்/டமில்னடு/அ-பெர்சொனல்-எxபெரிஎன்செ-நித்-சன்கர்ரமந்188377.க்ட்ம்ல்

   • ஏண்டா வெங்காயம் பிறழ் சாட்சியம் சொல்லவச்சது, சங்கர ராமன் குடுபத்தை மிரட்டுனது, ஜட்ஜுக்கு காசு கொடுத்தது இதற்கு மேல என்ன வேணும். இத சங்கராச்சாரி தவிர எந்த கேடியும் பன்னிறுக்க முடியாது. ஆரசு பலம் , அதிகார பலம் , பண பலம் இருகிறது என்ற திமிறுல தான நீங்க ரொம்ப ஆடுரீங்க!!

    சங்கராச்சாரி சொல்றான் தர்மம் வென்றது என்று, இந்த கேசுல நீங்க தொங்கி பிடிச்சுகிட்டு இருக்குற மனுநீதி சொல்ற தர்மம் கூட ஜெயிக்கலடா. இந்து தர்மம் , வேத சாஸ்திரம்னு மூச்சுக்கு முன்னுறு தடவ பேசுவீங்கலெ அத நிலைநாட்ட கேள்வி கேட்ட சங்கர ராமன் என்ற ஒரு இந்து பிராமணனதான் கோவில்ல கொலை செய்பட்டார். இந்த பதிக்கப்பட்ட குடுபத்திற்கு ஆதரவா ஏன் இதுவரைக்கும் எந்த ஹிந்து அமைப்பும்(RSS, இந்து முன்னனி உட்பட) முன் வந்து போராடல?. இதுல இருந்து தெரியுது உங்க யோக்கியத என்னனு. ஏண்டா கே(மோ)டி ங்குர நாய்கு பிச்ச(ஓட்டு) கேட்கும்போது மட்டும் வெக்கமே இல்லாம இந்துனு சொல்றீங்கலே டா?

    கால நக்கி பொலப்பு நடத்துர கூட்டம்தானடா நீங்க. உங்களுக்கெல்லாம் சாட்சி பதில் சொல்லாது டா புரட்சி தான் பதில் சொல்லும். இப்ப தான் புரியுது ஏன் பாட்டாளி வர்க சர்வாதிகாரம் கண்டிப்பா தேவைன்னு.

    மக்களே இப்பவாது புரிஞ்சுக்கோங்க இதுதான் இந்தியாவோட ஜனநாயகம்னு.இது வரைக்கும் எந்த அதிகார வர்கத்துக்கு இந்திய ஜனநாயகம் தண்டனை குடுத்ததா சரித்திரம் இல்லை, ஆனா உழைக்கும் மக்கள் தண்டனை குடுத்ததா வரலாறு இருக்கிறது.

   • Dear harikumar,

    Here is the trusted Proof

    http://tamil.oneindia.in/news/tamilnadu/a-personal-experience-with-sankarraman-188377.html#

    Oneindiatamil is trusted legal news portal in online viewed by many people daily.

    The article is published by S.SANKAR(Shankar is Spl Correspondent in
    our Oneindia Tamil) . If the published content is incorrect, you can

    claim complaints or any legal actions against the author and Oneindia.

    AUTHOR PROFILE:

    http://tamil.oneindia.in/sitemap/authors/shankar.html

    https://plus.google.com/113406318869319724898/posts

    Contact him whether the displayed content is real or virtual…..

 3. Where is the proof? Anything can be said about Vinavu and about Tech Tamilan also.It wont become true unless someone proves it in court of law. From the time he was arrested, the TN governments prosecutor has apologised so many times for not being able to show any proof against Jayendrar or sundaresa iyer (who is know for his honesty and integrity in RBI). All the courts have laughed at TN governments case. (they looked like vandu murugan before the judge)

  After 9 years of torturing Jeyendrar, the anti-brahmin establishment has failed to prove anything. They know there is no proof. Still, the drama was done only to torture him for as long as they can till courts release him.

  Just remember, Brahmins dont generally get involved in such things.

  • wont become true unless someone proves it in court of law……

   A normal educated people can understand law, politics,court judgements in TN,india…

   *audio is released ,conversation between swami and the Judge …

   Being a Brahim you are supporting him.

   Great Sages Sri Ramakrishna Paramhansa[Who is BRAHMIN] born in our native land who sacrife his life for
   spirituality….Ramakrishna believed and taught that…

   1) All living beings are divine.
   2) Human beings are equal and there is oneness of existence…

   These fake swamis culprits to be punished sooN…………Let Us waiT and see

  • the anti-brahmin establishment ………JATHI VERI PIDITHA MIRUGAME Listen

   Sri Ramakrishna Paramhansa[Who is BRAHMIN] Great Sage of India

   taught that…

   1) All living beings are divine.
   2) Human beings are equal and there is oneness of existence…

   Just remember, Brahmins dont generally get involved in such things.

   JATHI VERI PIDITHA MIRUGAME…………..

   *** Poosari Devanathan xxxxxxx inside temple with xxxx is a BRAHMIN.

   MORE TO KNow about BRAHMIN DISCIPLINES, RULES

   just log on to

   http://thathachariyar.blogspot.in/

   http://thathachariyar.blogspot.in/2010/10/4-x.html

   ஆசிரியர்:
   “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்” ,
   “வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”,
   “மஹோ பாத்யாய”,
   “மகா மஹோ பாத்யாய”
   Dr. அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
   —————————————————————————————–

   நரகத்திற்குப் போகிறவன் பார்ப்பானே!

   http://idhuthanunmai.blogspot.in/

   அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்

   http://thathachariyar.blogspot.in/2010/10/3.html#more

 4. //Oneindiatamil is trusted legal news portal in online viewed by many people daily.//
  I don’t think it is a trusted news portal…app adi Pathan,vinavu Koodak trusted thaan…just because it exists it is not trustworthy…
  Dinakaranukku Koodak website irukku..appo athuvum trustworthy-as? Chinnapulla thaan mana peas renga? Dinamalar path I enna ninaikareega?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க