Tuesday, December 3, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சிற்றம்பல மேடையில் உயிர் துறப்பேன் - சிவனடியார் ஆறுமுகசாமி போராட்டம் !

சிற்றம்பல மேடையில் உயிர் துறப்பேன் – சிவனடியார் ஆறுமுகசாமி போராட்டம் !

-

தில்லை ஆறுமுகசாமி போராட்டம்

தமிழக அரசே,

தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்தாக்க முயலும்
சுப்பிரமணிய சாமியின் சதிக்கு துணைபோகாதே!

நாளை நடக்கும் உச்ச நீதிமன்ற வழக்கில்
திறமையான வழக்குரைஞர்களை நியமித்து
தில்லைக் கோயில் மக்கள் சொத்துதான் என்று நிறுவு!

சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் உரிமையை நிலை நாட்டு!

“கோரிக்கை நிறைவேற
சிற்றம்பல மேடையில்
தேவாரம் பாடியபடியே உயிர்துறப்பேன்”

– ஆறுமுகசாமி
சிவனடியார், குமுடிமுலை, சிதம்பரம்
2.12.2013, திங்கட்கிழமை.

ஆறுமுகசாமி
2008-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டுவதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை கோயிலில் அழைத்துச் செல்லப்படுகிறார்.

வேண்டுகோள்

அன்பார்ந்த தமிழ் மக்களே,

கடும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அதனைப் பொருட்படுத்தாமல் தள்ளாத வயதில் சிற்றம்பல மேடையில் அமர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார் சிவனடியார் ஆறுமுக சாமி. துணை நிற்கிறார்கள் எமது வழக்குரைஞர்கள்.

தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறுவதற்காக நாங்கள் நடத்திய போராட்டத்தையும், அதன் பின்னர் கோயிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு நடத்திய நீதிமன்றப் போராட்டத்தையும் நீங்கள் அறிவீர்கள்.

தில்லைக் கோயிலை மீண்டும் தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்க விரும்புகிறது ஜெயலலிதா அரசு. தமிழ் மக்களின் பொதுச் சொத்தை பார்ப்பனர்களின் உடைமையாக்கும் இந்த முடிவு சதித்தனமான முறையில் தமிழக அரசால் அமல்படுத்தப்படுகிறது.

அறநிலையத்துறைக்கு எதிராக தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள மேல் முறையீட்டு வழக்கில் தமிழக அரசின் சார்பில் வாதாட உச்ச நீதிமன்றத்தில் நாதியில்லை. வழக்கைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு வடநாட்டு இளம் வழக்குரைஞரை வேண்டுமென்றே தமிழக அரசு நியமித்திருக்கிறது. தீட்சிதர்களுக்கு ஆதரவான தீர்ப்பை உச்சநீதி மன்றத்தில் பெற்று வழக்கில் அறநிலையத்துறையை தோற்க வைத்து, கோயிலை மீண்டும் தீட்சிதப் பார்ப்பனர்களிடம் ஒப்படைப்பதே ஜெயலலிதா அரசின் நோக்கம்.

சுமார் 40 ஏக்கர் பரப்புள்ள கோயில், சுமார் 2,700 ஏக்கர் விளைநிலங்கள், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துக்கள், பல கோடி மதிப்புள்ள நகைகள் ஆகிய அனைத்தும் நம் கண் முன்னே தீட்சிதர்களின் தனிச்சொத்தாக மாற இருக்கின்றன.

தீட்சிதர்கள் இந்தக்கோயிலின் அர்ச்சகர்கள் மட்டுமே. வேறு எந்த உரிமையும் அவர்களுக்கு இல்லை என்று நிரூபிக்கின்ற கல்வெட்டு ஆதாரம் உள்ளிட்ட பல ஆதாரங்களை இதற்கு முந்தைய அறநிலையத்துறை அதிகாரிகள் திரட்டியிருக்கிறார்கள்.  அவற்றையெல்லாம் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தன் விளைவாகத்தான், கோயிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

தற்போது இந்த உச்சநீதிமன்ற வழக்கில் நாங்களும் ஒரு மனுதாரராகத் தலையிட்டிருக்கிறோம். எனினும், வழக்கிற்கான ஆதாரங்கள், ஆவணங்கள் அனைத்தும் அறநிலையத் துறையின் கையில்தான் இருக்கின்றன. அந்த  அதிகாரிகளோ மிக முக்கியமான இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பக்கம் எட்டிக்கூடப் பார்க்காமல், ஆதாரங்களைப் பதுக்கி தீட்சிதர்களுக்குத் துணை நிற்கிறார்கள்.

கோயிலை தீட்சிதர் வசம் ஒப்படைக்க கூடாது என்று குரல் கொடுங்கள்!

தீட்சிதர்களின் கைக்கூலிகளாக செயல்படும் அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளின் முகத்தில் காறி உமிழுங்கள்!

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

குறிப்பு: தற்போது சிவனடியார் ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையில் ஏறி பாடிக் கொண்டிருக்கிறார். ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

  1. எதிர்த்தால் பதவி உயர்வு இல்லை என்னும் போது எந்த கொம்பன் இந்த விசயத்தில் தலையிடுவான் அது மட்டும் அல்லாது திட்சிதர்கள் என்று கூறப்படும் அந்த திருட்டு கும்பலால் முன்பு அடிக்கப்பட்ட கோடிக்கனக்கான சொத்துக்களை மீட் க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆவல், எம் தமிழத்தினை மது போதைக்கும் அது தொடர்ந்து மாது போதைக்கும் அடிமை படுத்தி இன்று கொள்ளை கும்பளுக்கு வழிவகுத்து தன்னை நிரந்தரமாக பதவியில் நீடிக்க முயலும் இந்த திரவிட இயக்க பெயரில் உள் புகுந்து நாசம் செய்யும் இந்த பார்பன கொம்பேரி மூர்க்கனை ஓழிக்க வேண்டும்

  2. யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்வது போல, பார்பனர்கள் தங்களது அபரிதமான பேராசையால் மக்கள் மத்தியிலுள்ள கொஞசநஞ்ச நற்பெயரையும் கெடுத்துக் கொள்கிறார்கள்! தமிழைக்கண்டால் பார்ப்பனர்களுக்கு ஏன் அவ்வளவு வெறுப்பு? அய் ஏ எஸ் பதவியும் , அர்ச்சகர் பதவியும் ஏகபோகமாக தங்களுக்கே வேண்டும் என்பது வெளிப்படையான ஆதிக்க வெறிதானே!

  3. அற்புதம்! அபாரம்! திராவிட சிசு சமணகுல நாசகர் திருஞானசம்பந் தருக்கு பிறகு சிவனடியார் ஆறுமுகசாமிக்குதான் இப்படி ஒரு சிவிகையும் அடியார் கூட்டமும் அமைந்துள்ளது.ஒரு சிறு மனக்குறை வெற்று மார்புடன் உள்ள அடியார்கள் யாரும் திருநீறு அணியவில்லை என்பதே அது.மறுமுறை வரும் போது நீறு அணிய வேண்டுகிறேன்.நீறற்ற நெற்றி பாழ் என்பது சைவ மரபு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க