Monday, September 26, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !

ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !

-

தார்த்த நிலைகள் கன்னத்தில் அறைந்த போதும் தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் உண்மைகளைக் காண மறுத்துக் குளிர்க் காய்ச்சல் வந்தவர்களைப் போல பிதற்றுகிறார்கள். குட்டி முதலாளியத் தன்னகங்காரம் (Ego) உண்மைகளைக் காண முடியாமல் அவர்களைத் தடுக்கிறது. மேலும், இவர்கள் அடிப்படையில் யதார்த்த உண்மைகளை எதிர்கொள்ள முடியாத கோழைகள் அல்லது ஏமாற்றுக்காரர்கள்.

வெலிவேரியா தண்ணீர் தனியார்மய எதிர்ப்பு போராட்டம்
இலங்கையின் மேற்கு மாகாணப் பகுதியில் அமைந்துள்ள வெலிவேரியாவில், தனியார் நிறுவனமொன்று நிலத்தடி நீரை மாசுபடுத்துவதை கண்டித்து நடந்த போராட்டத்தின் மீது சிங்கள ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமுற்றனர்.

இவ்வாறு நாம் சொல்வதற்கு ஒரு சான்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நந்திக்கடலோரம் சிங்கள இராணுவத்திடம் பிடிபட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டு விட்டார் என்ற பட்டவர்த்தனமான உண்மையை இன்னமும் ஏற்க மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள்.

இந்த உண்மையை ஒப்புக்கொண்டால், பிரபாகரனைச்  சுற்றித் தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் இவ்வளவு காலமும் பரப்பியுள்ள பல பொய்மைகளும் அம்பலப்பட்டுப் போகும் என்று அஞ்சுகிறார்கள். இந்த உண்மையிலிருந்து எழும் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டியிருக்கும், ஈழத்தின் இன்றைய நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்குரிய துணிவற்ற கோழைகளான அவர்கள், இந்த உண்மையை உரக்கச் சொல்லும் எம் மீது பாய்ந்து குதறுகிறார்கள்.

‘‘தலைவர் பிரபாகரனையோ புலிகளையோ உயிரோடு பிடிக்கவே முடியாது. அவர்கள் சயனைடுக் குப்பிகளைக் கழுத்தில் சுமந்து திரிகிறார்கள். ஒருநாளும் எதற்காகவும் யாரிடமும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள். அரசியல்,  இராணுவத் துறைகளில் நிகரற்ற திறமை மிக்கவர்கள்” என்று தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் முப்பது ஆண்டுகளாகக் கட்டமைத்து வந்த இந்தப் பிம்பங்கள் எல்லாம் இப்போது நொறுங்கி விட்டன.

பிரபாகரனைப் பற்றி எவ்வளவோ கதைத்துத் திரிந்தவர்கள், அதெப்படி ஒரு படித்தாக ஒரு சொல் கூடப் பேசாமல் இருக்கிறார்கள்! அவர்களில் யாருக்கும் இது உறுத்தாமலா போய் விட்டது! ஈழத்தின் வரலாற்றில் பிரபாகரன் என்ற பெயரைத் திடீரென்று தீண்டத்தகாததாக்கி விட்டார்களே! இதைவிடப் பெரிய துரோகம் வேறுண்டா!

எல்லாவற்றுக்கும் மேலாக, திடீரென்று அவர்களின் இருப்பே கேள்விக்குள்ளாகி, தாங்களே தன்னாளுமையுடன் பேசுவதற்கு ஒரு ”பொருள்”  இல்லாமல் போய்விட்டது.  அவர்களின் பிழைப்புவாத அரசியலுக்குப் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடமிருந்து ”பொருள்” கிடைப்பதும் அரிதாகி வருகிறது. அதனால்தான் எல்லா தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் சீமானைப் போல, வைகோவைப் போல பொருளற்ற வெற்று உணர்ச்சிக் கூச்சல் போடுகிறார்கள்.

தமிழர்கள் உண்மைகளின் உணர்வாளர்களாக அல்லாமல், உணர்ச்சிக் கும்பலாக  இருக்க வேண்டும் என்றுதானே சினிமாக்காரர்களும் ”டாஸ்மாக்” வியாபாரிகளும் செயல்படுகிறார்கள். ஈழ இனச் சிக்கலில்  தமிழர்களை வெறும் உணர்ச்சிக் கும்பலாக வைக்கவே தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் எத்தனிக்கிறார்கள். அவ்வாறான முயற்சிகளில் ஒரு பகுதிதான் ஈழ இனச் சிக்கலில் எமது நிலைப்பாடுகள் மீதான ஆத்திரமும் அவதூறுகளும். இதற்கு முக்கியமான, அவசியமான காரணம் அவர்களின் பிழைப்புவாத அரசியலுக்கு நாம் தடையாக இருப்பதுதான்.

இவ்வாறு ம.க.இ.க.-வினர் மீது அவதூறு செய்வதற்கு அவர்கள் ஓர் எளிமையான வழியை, முதன்மையான  வழியை, முட்டாள்தனமான வழியைத் தெரிவுசெய்து கொண்டிருக்கிறார்கள். அது, ம.க.இ.க.-வினர் இவ்வளவு காலமும் மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடி வரும் பார்ப்பன பாசிச  சக்திகளான சோ.சாமி, சு.சாமி மற்றும் இந்து ராம், சோனியா-மன்மோகன் கும்பல், போலி கம்யூனிசக் கட்சிகள் ஆகியவரோடு ம.க.இ.க.-வினரது நிலைப்பாடுகளை இணை வைத்து, அடையாளப்படுத்துவதுதான்!

இவ்வாறு செய்வது அடிப்படையிலேயே பித்தலாட்டம், அவதூறு என்று  பலமுறை தெளிவாக நாம் விளக்கிப் பேசியிருக்கிறோம், எழுதியிருக்கிறோம். தமிழ் நாட்டிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழினவாதக் குழுக்களும் புலி ஆதரவுக் குழுக்களும் தனித்தனியாகவும் கூட்டுச் சேர்ந்தும் செய்ததை விடப் பன்மடங்கு அதிகமான மக்களிடம் ஈழ இனச் சிக்கலில் ம.க.இ.க.-வினரது ஈழ ஆதரவு மற்றும் நிலைப்பாடுகளை கொண்டு சென்றிருக்கிறோம். இருந்தாலும் அவர்கள் தமது அவதூறுகளைத் தொடர்கிறார்கள்.

பேராதனை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து கண்டியிலுள்ள பேராதனை பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்; இனம் கடந்த ஒற்றுமையின் அடையாளம்.

அடிப்படை வேறுபாடுகளைக் காண மறுக்கும் அறிவுக் குருடர்கள்

ஈழ இனச் சிக்கலில், ம.க.இ.க.-வின் நிலைப்பாடுகளும் பார்ப்பன  பாசிஸ்டுகள் மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளும் அடிப்படையிலேயே மாறுபாடானவை, எதிரெதிரானவை, கறுப்பும் வெள்ளையும் போன்று தெளிவானவை. அறிவுக் குருடர்களுக்குத்தான் அவற்றுக்கிடையிலான  கீழ்வரும் வேறுபாடுகள் தெரியாது:

1)  இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்டுகளும் ஏற்பதில்லை. மொழிச் சிறுபான்மையினர் என்றே கருதுகின்றனர்.

ஆனால்,

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதே எப்போதும் ம.க.இ.க.-வின் நிலைப்பாடு.

2) ஈழத் தமிழர்களின், ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒருபோதும் ஏற்று அங்கீகரித்ததே கிடையாது.

ஆனால்,

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமையை எப்போதும் ம.க.இ.க. ஏற்பதுடன் தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டு அதை ஈழத் தமிழ்த் தேசிய இனம் அடைவதற்கு ஆதரவாகப் போராடி வந்திருக்கிறது.

3) தமிழீழத் தனியரசு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது; ஒன்றுபட்டுள்ள இலங்கை பிளவுபடாதவாறு, அதன் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் மாநில சுயாட்சி அல்லது அதிகாரப் பகிர்வு மூலம் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதுதான் பார்ப்பன பாசிஸ்டுகள், போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு.

ஆனால்,

ஈழத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமை என்பதே தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியது என்பதுதான் எப்போதும் ம.க.இ.க.-வின் நிலை. தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையை மறுப்பது, ஈழத் தமிழ்தேசிய இனத்தின்  தன்னுரிமையையே மறுப்பதாகும். ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின்  தன்னுரிமையை ஒரு போதும் மறுக்காத போதும், எதிர்க்காத போதும், அதற்காகப் எப்போதும் போராடி வரும் ம.க.இ.க.வைத் தமிழீழத் தனியரசுக்கு எதிரியாகச் சித்தரிப்பது அவதூறுதான்! திட்டமிட்ட சதிதான்! ஈழத் தமிழ்த் தேசிய இனம் எப்போது, எப்படி, என்ன அரசியல் நிலைமைகளில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுகிறது என்பதைப் பொருத்துத்    தனியரசு அமைத்துக் கொள்வதா,  இல்லையா என ஈழத் தமிழ்த் தேசிய இனமே தீர்மானிக்கும். (நாம் ஏன் இவ்வாறு கருதுகிறோம், அது ஏன் சரி என்பதைப் பிறகு பார்ப்போம்)

4) ஈழச் சிக்கலுக்கு இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தம் சரியானதொரு தீர்வு. இந்திய ”அமைதிப் படை” படையெடுப்பு  உட்பட இந்திய அரசின் எல்லாத் தலையீடுகளும்  புலிகள் மீதான தடையும் சரியானது, அவசியமானது, இராஜபக்சேவை ஒரு போர்க்குற்றவாளி என்ற முறையிலான சர்வதேச விசாரணை – தண்டனையெல்லாம் கூடாது என்பது தான் பார்ப்பன  பாசிஸ்டுகள்,  போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. புலிகள், தமிழகத் தமிழினவாதிகள் கூட இந்திய அரசு மற்றும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் எல்லாம் ஈழத் தமிழருக்கு நட்புச் சக்திகள்; ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளில் எல்லோரும் இல்லையானாலும் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., வாஜ்பாய் போன்ற சில தலைவர்கள் ஈழத் தமிழர்கட்கு நட்புச் சக்திகள் என்றே நம்பினர்; இன்னமும் நம்புகின்றனர். இந்திய அரசும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளும் ஈழத்துக்கு எதிரி சக்திகள் என்று வைத்துப் போராட வேண்டும் என்று அமைதிப்படை ஆக்கிரமிப்புக் காலத்தில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வரை புலிகளும் தமிழகத் தமிழினவாதிகளும் முன்வைக்கவேயில்லை. அமைதிப் படை ஆக்கிரமிப்புக் காலத்திலும் இவர்களின் இந்திய எதிர்ப்புக்குக் காரணம், புலிகளுக்கு எதிராக இந்தியா போர் தொடுத்ததுதானே தவிர, இவர்களாக இந்திய எதிர்ப்பு நிலை எடுக்கவில்லை. இதனைப் புலிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள். மற்றபடி, இந்திய அரசு மற்றும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளைத் ”தாஜா” செய்து, ஈழத்தின் நட்புச் சக்திகளாக அவற்றை மாற்ற வேண்டும் என்றுதான் முள்ளிவாய்க்கால் முடியும் வரை அவர்கள் முயன்றார்கள். இப்படிச் செய்ததைத்தான் பிரபாகரனின் அரசியல் திறமை என்று இங்குள்ள தமிழினவாதிகள் போற்றிப் புகழ்ந்தனர்.

ஆனால்,

1983 கறுப்பு ஜூலை நாட்களில் இருந்து இலங்கை, ஈழச் சிக்கலில் இந்திய அரசின் தலையீடுகள், இந்தியா ஈழப் போராளிகளுக்கு போர்ப் பயிற்சியும் ஆயுதங்களும் நிதியும் வழங்கியது கூட உள்நோக்கங்கொண்டு, தெற்காசிய வல்லாதிக்கத் தன்னலன்கள் கருதி இந்தியா செய்தவைதாம்; இந்திய அரசு ஈழத் தமிழினத்தை வெளிப்படையாகவும் அரசியல் ரீதியிலும் அங்கீகரித்து ஆதரிப்பதற்கு மாறாக, சதித்தனமாக, தனது உளவுப்படையான ”ரா’’-வை ஏவி விட்டுப் போராளிக் குழுக்களிடையே  ஊடுருவி, அவர்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டு, இரத்தம் குடித்ததையும் ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட  இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தத்தையும் முற்றிலும் தவறானவை என்று ம.க.இ.க. எதிர்த்தது. அமைதிப் படை என்ற பெயரில் இந்திய இராணுவத்தின் படையெடுப்புக்குப் பிறகு, அதை எதிர்த்து விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்துக்கு எதிராகப் போரிட்டதும், அதற்காக பிரேமதாசா அரசுடன் புலிகள் கூட்டுச் சேர்ந்ததும் சரியானவை என்பதே ம.க.இ.க.வின் நிலைப்பாடு. இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தத்துக்கு முன்பிருந்து முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழினப் படுகொலைகளை முன்னின்று நடத்தியது உட்பட இந்திய அரசு மற்றும் அதன் ஆளும் வர்க்க கட்சிகளின் சதித்தனமான வல்லாதிக்கத் தலையீடுகளை ம.க.இ.க மட்டுமே முரணற்ற முறையில் எதிர்த்துப் போராடி வந்திருக்கிறது. அதன் பிறகும் இராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியென அறிவித்துத் தண்டிக்க வேண்டுமெனவும் இதைத் தடுப்பதில் இந்திய அரசின் தில்லுமுல்லுகளையும் அம்பலப்படுத்திப் போராடி வந்திருக்கிறது.

ஆனால், முள்ளிவாய்க்காலில் புலித் தலைமையையும் பல்லாயிரம் ஈழத் தமிழரையும் பலி கொடுத்த பிறகு, இந்திய அரசின் ஈழ எதிர்ப்பு சதிகளையும்  தில்லுமுல்லுகளையும் உண்மைகளையும் தாமே கண்டுபிடித்ததைப் போலவும் தாம் எப்போதும் இந்திய எதிர்ப்பு நிலையிலிருந்ததைப் போலவும் திடீரென்று புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் இப்போது குதியாட்டம் போடுகிறார்கள். இந்திய அரசை எதிர்த்துப் போராடாத தவறை யாரோ செய்து விட்டதைப் போலவும் நாடகமாடுகிறார்கள். இப்போதும் காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் மட்டும்தாம் ஈழத்தின் எதிரிச் சக்திகள் என்றும் ஜெயலலிதாவும் அவரை ஆதரிப்பதன் மூலம் மோடியும் ஈழத்தின் நட்புச் சக்திகள் போலவும் பிழைப்புவாத அரசியல் நடத்துகிறார்கள்.

5) இராஜீவ் காந்தியும் சிங்கள பாசிச எதிரிகளும் ஈழத் தமிழ்த் துரோகிகளும் கொல்லப்பட்டபோது அவை புலிகளின் பயங்கரவாதச் செயல் என்று பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெறித்தனமாகச் சாடினர். இராஜீவ் காந்தி கொலையைத் தமிழினவாதிகள் கூடக் கண்டித்தனர். தாங்கள் செய்த பல கொலைகளைப் புலிகளால் கூட நியாயப்படுத்த முடியவில்லை. இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு வந்த நாட்களில் ஜெயா அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பாசிச வேட்டையை ஏவி விட்டது, புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதையெல்லாம் நியாயப்படுத்தினர்.

ஆனால்,

இராஜீவ் காந்தியும் சிங்கள பாசிச எதிரிகளும் ஈழத் தமிழ்த் துரோகிகளும் கொல்லப்பட்டபோது அவற்றை எதிர்த்தோ, கண்டித்தோ ம.க.இ.க. எழுதியதோ பேசியதோ இல்லை. கள்ள மௌனம் சாதித்ததும் இல்லை; இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஏன் சரியானவை, அவசியமானவை என்றுதானே எழுதியது, பேசியது. இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு வந்த நாட்களில் ஜெயா அரசு  ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பாசிச வேட்டையைக்  கட்டவிழ்த்து விட்டபோது, இங்குள்ள தமிழினவாதிகள் கூண்டுக்குள் ஒளிந்து கொண்டு மௌனம் காத்தனர்.  ம.க.இ.க.வோ, புலிகள் தடை உட்பட அவற்றை எதிர்த்துப் போராடியது. அதற்காக ”தடா”, அரசு விரோதச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல தோழர்கள் சிறைப்பட்டனர்.

இவ்வாறு அடிப்படையான பல பிரச்சனைகளில் ம.க.இ.க. யாரை எதிர்த்துப் போராடி வருகிறதோ, அந்தப் பார்ப்பன பாசிஸ்டுகளோடும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளோடும் ம.க.இ.க.வை அடையாளப்படுத்தியும் இணை வைத்தும் புலி ஆதரவளர்களும் தமிழினவாதிகளும் அவதூறு செய்கிறார்கள். என்ன ஓர் அரசியல் நேர்மை! அறிவு நாணயம்!

‘‘ஈழத் தமிழர் இனச் சிக்கலில் ம.க.இ.க.-வின் நிலைப்பாடு  கம்யூனிஸ்டுகளுக்கே உரிய வறட்டுத்தனம் நிறைந்தவை என்று கூறிப் போலி கம்யூனிஸ்டுகளுடன் இணை வைத்தும் தமிழினவாதிகள் அவதூறு பரப்புகிறார்கள். ஆனால், போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளும் ம.க.இ.க.-வின் நிலைப்பாடுகளும் அடிப்படையிலேயே மாறுபாடானவை. ருசியாவில் ஸ்டாலினுக்குப் பிறகு குருச்சேவ் திருத்தல்வாதம் நிலைநாட்டப்பட்டதும் சி.பி.ஐ.யும், நக்சல்பாரிப் பேரெழுச்சிக்குப் பிறகு சி.பி.எம். கட்சியும் ”இனி உலகின் எல்லா நாடுகளிலும் தேசிய இனப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விட்டன. தேசிய இனங்கள் தன்னுரிமை கேட்பதே தவறானது, அவ்வாறான கோரிக்கையை ஆதரிக்க முடியாது”  என்று அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டன. ஆனால், ”தேசிய இனச் சிக்கலில் போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகள் தவறானவை, திருத்தல்வாதமானவை” என்று ம.க.இ.க.- வினர் உட்பட புரட்சிகரப் பொதுடைமையாளர்கள் அவற்றை எதிர்த்து வருகின்றனர். அதைப் போலவே, சீனாவும் கியூபாவும் இராஜபக்சே அரசை ஆதரிப்பதைக் காட்டி அவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதாக இட்டுக் கட்டியும் அவதூறு செய்கிறார்கள் தமிழினவாதிகள். தேசிய இனச் சிக்கலில் மார்க்சிய – லெனினிய ஆசான்களின் போதனைகள் இப்போதும் பொருத்தமானவை என்று கருதும் புரட்சிகரப் பொதுடைமையாளர்கள் வட கிழக்கு இந்தியாவிலும் காசுமீரத்திலும் நடக்கும் தன்னுரிமைப் போராட்டங்களை ஆரம்பம் முதலே ஆதரித்து வருகின்றனர். இப்போது கம்யூனிஸ்டு அல்லாத நாடுகள் செய்யும் தவறுகளுக்கு நாம் பொறுப்பாக முடியாது என்று தெரிந்தும் தமிழினவாதிகள், தமது அவதூறுகளைத் தொடருகின்றனர்.

அதே சமயம், தமிழினவாதிகள்தாம் இந்தியாவின் தேசிய இனச் சிக்கலில் போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளுக்கு இணையான நிலைப்பாடுகளை எடுக்கின்றனர். வட கிழக்கு இந்தியாவிலும் காசுமீரத்திலும் தன்னுரிமை கோரும் போராட்டங்களை ஆதரிக்காதது மட்டுமல்ல, அவை அவசியமற்றவை என்று கூட பல சமயங்களில் எதிர்க்கவும் செய்கின்றனர். சி.பி.ஐ. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு ஈழ விடுலைக்கு எதிரானது என்று தமிழினவாதிகளுக்குத் தெரியும்; இருந்தாலும், ஜெயலலிதாவின் அடிவருடியான தா.பாண்டியன் அவரது அருளைப் பெறுவதற்காகவே ஈழ ஆதரவு நாடகமாடுவதும் இவர்களுக்குத் தெரியும்; ஆனாலும் ஈழ ஆதரவு மேடைகளை அலங்கரிக்கும் விருந்தினராக தா.பாண்டியனை முன்நிறுத்த இவர்கள் தவறுவதில்லை. இதுதான் தமிழினவாதிகளின் அரசியல் நியாயம்!

ஈழ இனச் சிக்கலுக்குத் தமிழீழத் தனியரசுதான் எல்லா நிலைகளிலும் எப்போதும் ஒரே தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ளாத நிலையில், தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமைக் கோரிக்கையையும், அதற்கான போராட்டத்தையும் முன்னெடுக்கின்றனர், ம.க.இ.க.-வினர். அதை அங்கீகரித்து, ம.க.இ.க.-வினரை ஈழத்தின் நட்பு சக்தியாகக் கருதாது, ஈழத்தின் எதிரி சக்தியாகக் கருதி, ம.க.இ.க.-வினர் மீது தமிழினவாதிகள் எப்போதும் பாய்கின்றனர். ஆனால், தமிழீழத் தனியரசை மட்டுமல்ல, ஈழத் தமிழரை ஒரு தேசிய இனமாகவே ஏற்காத இந்திய தேசியக் கட்சிகளின்  தனித்தனி தலைவர்களையும் உள்ளூர் பிரபலங்களையும் ஈழத்தின் நட்புச் சக்தியாகக் கருதி, அவர்களிடம் ஆதரவு தேடுகின்றனர்

எரிபொருள் விலை உயர்வை கண்டித்த மீனவர்கள் போராட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து வடமேற்கு மாகாணத்திலுள்ள சிலா என்ற கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜபக்ஷே அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்; எட்டு பேர் படுகாயமுற்றனர்.

தமிழினவாதிகளின் பார்வையில் ஈழ இனச் சிக்கலுக்கு தமிழீழத் தனியரசு என்பது ஒரே தீர்வு என்பது மட்டுமல்ல; தமிழகத் தமிழினவாதிகளுக்கு ஈழ இனச் சிக்கல் ஒன்று மட்டுமே விவாதத்துக்கும் வினையாற்றுவதற்குமான ஒரே பிரச்சினை. இந்த நாட்டைச் செயற்களமாகக் கொண்டுள்ள ம.க.இ.க.வினர் தம்முன் உள்ள எல்லாப் பிரச்சினைகளில் ஈழ இனச் சிக்கலுக்கு அதற்குரிய முன்னுரிமை தருகின்றனர். இந்த உண்மையை அறிந்திருந்தும், ம.க.இ.க.வினர் ஈழத் தமிழருக்கு எதிரானவர்கள், அவர்களுக்கு ஈழத் தமிழர்  மீது அக்கறையில்லை, அதனால்தான் தமிழீழத் தனியரசு கோரிக்கைக்காக ம.க.இ.க.வினர் போராட மறுக்கிறார்கள் என்று அவதூறு செய்கிறார்கள்.

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம்; அதற்குப் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமையை எப்போதும் ம.க.இ.க. ஏற்பதுடன், தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டு அதை ஈழத் தமிழ்த் தேசிய இனம் அடைவதற்காகப் போராடி வந்திருக்கிறது.

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமை என்பதே தமிழீழத்  தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியது என்பதுதான் எப்போதும் ம.க.இ.க.-வின் நிலை. தமிழீழத் தனியரசு அமைத்துக்கொள்ளும் உரிமையை மறுப்பது, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின்  தன்னுரிமையையே மறுப்பதாகும். ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின்  தன்னுரிமையை ஒருபோதும் மறுக்காத, எதிர்க்காத போதும், அதற்காகப் எப்போதும் போராடி வரும் ம.க.இ.க.வைத் தமிழீழத் தனியரசுக்கு எதிரியாகச் சித்தரிப்பது அவதூறுதான்! திட்டமிட்ட சதிதான்!

குழப்பம் எதிலே? ம.க.இ.க.-வினரின் நிலைப்பாடுகளிலா, தமிழினவாதிகளின் பார்வையிலா? 

‘‘தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கை 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே முன்வைக்கப்பட்டு, அதைத்தாம் ஏற்பதாக 1977 தேர்தல்களிலேயே ஈழத் தமிழர்கள் ஒருமனதாக ஒப்புதல் கொடுத்து விட்டார்கள், பிறகு ஏன் ‘தமிழீழத் தனியரசு  அமைத்துக் கொள்வதா,  இல்லையா என ஈழத் தமிழ்த் தேசிய இனம் தீர்மானிக்கட்டும்’ என்று ம.க.இ.க. சொல்ல வேண்டும்? ஆகவே, ம.க.இ.க. தமிழீழத் தனியரசுக்கு எதிரானது” என்று தமிழினவாதிகள் பாய்கிறார்கள். மேலும், சிங்கள மக்கள் அனைவரும் ஈழத் தமிழர்க்கெதிரான சிங்களப் பேரின வெறியும், பௌத்த மதவெறியும் கொண்டுள்ளபோது, குறிப்பாக முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குப் பிறகு தமிழீழத் தனியரசு தானே சரியானது, அவசியமானது என்று  தமிழினவாதிகள் வாதிடுகின்றனர்.

ஈழ இனச் சிக்கலுக்குத் தமிழீழத் தனியரசுதான் எல்லா நிலைகளிலும் எப்போதும் ஒரே தீர்வு என்று கூறுவதைத்தான் ம.க.இ.க.-வினர் ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர, தமிழீழத் தனியரசுக்கு எதிரானவர்கள் என்பது உண்மையில்லை. இது நாம் இப்போது எடுக்கும் முடிவல்ல. முன்பே எழுதியிருப்பதுதான். ”அப்படியானால், தமிழீழத் தனியரசுக்காக ஏன் போராடவில்லை, இனிமேலாவது அதற்காகப் போராடுவீர்களா” என்று கேட்டு ம.க.இ.க.-வை மடக்குவதாக எண்ணிக் கொண்டு தமிழினவாதிகள் வாதாடக் கூடும்.

தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கைக்காக இரண்டு காரணங்களுக்காக ம.க.இ.க.-வினர் போராடவில்லை. தமிழினவாதிகளின் பார்வையில் தமிழீழத் தனியரசு என்பதுதான் ஈழ இனச் சிக்கலுக்கு ஒரே கோரிக்கை, ஒரே தீர்வு; அதனால்தான் அதை மட்டுமே முன் வைக்க வேண்டும் என்கிறார்கள். அது குட்டி முதலாளிய வர்க்கத்தின் பகுத்தறிவுக்குப் புறம்பான, குறுந்தேசிய இனவாதப் பார்வையிலானது.

ம.க.இ.க. வினரின் பார்வையில் – இதுதான் அறிவியல்பூர்வமானது, பாட்டாளி வர்க்கப் பார்வையிலானது – தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமைக் கோரிக்கையையும், அதற்கான போராட்டத்தையும் நாம் முன்னெடுக்கிறோம். போலி கம்யூனிஸ்டு கட்சிகள் சொல்லுவதைப் போன்று, செய்வதைப் போன்று (இந்திய தேசியவாதிகளோடு சேர்ந்து கொண்டு, பிரிவினை கோரி காசுமீரத்திலும் வடகிழக்கிலும் நடக்கும் போராட்டங்களை எதிர்க்கிறோமா? போலி கம்யூனிஸ்டு கட்சிகளைப் போன்று எப்போதாவது இந்திய தேசிய ஐக்கியம் – ஒருமைப்பாடு, பிரிவினைவாத எதிர்ப்புக் கூச்சல் போடுகிறோமா?) பிரிந்து போகும் உரிமையை ஒதுக்கிவிட்டு, மறுத்துவிட்டு வெறுமனே தன்னுரிமைக்காக ம.க.இ.க.வினர் நிற்கவில்லை. ஆகவேதான் தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கையைத் தனியே முன்வைத்துப் போராட வேண்டியதன் அவசியம் இல்லை.

தமிழீழத் தனியரசு கோரிக்கையை மட்டுமே முன்வைத்து, அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார்கள், தமிழினவாதிகள். பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் அவ்வாறு செய்ய முடியாது, செய்யக் கூடாது, செய்யவுமில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான்  அந்நாட்டை ஆளும் பாசிச அரசு. அதற்கு எதிராக ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனித்தனிப் பொதுவுடைமைக் கட்சி வைத்து, தனித்தனித் திட்டமும் இலக்கும் வைத்துப் புரட்சி செய்வது; அவ்வாறான தனித்தனி புரட்சிகளில் தேசிய இனங்கள் வெற்றிபெற்று, தனித்தனியே சோசலிசத்தைக் கட்டியமைத்த பின்னரோ, அதற்கு முன்னரோ  ஐக்கியப்படுவது என்று பேசுவது மார்க்சிய – லெனினியப் பார்வையே கிடையாது.

அந்நாட்டை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக ஒரே புரட்சிகரப் பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுவது; அக்கட்சி, எல்லா தேசிய இனங்களுக்கும் சமவுரிமையை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை உறுதிப்படுத்துவது; அக்கட்சி ஒடுக்கும் (சிங்களத்) தேசிய இனத்தவரிடையே ஈழத் தமிழர்  தன்னுரிமையையும், ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் தேசிய இனத்தவரிடையே ஐக்கியத்தையும் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் அந்நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்திப் புதிய ஜனநாயகப் புரட்சியை முடிப்பதுதான் அக்கட்சியின் இலக்காகவும் திட்டமாகவும் இருக்கும் என்பதுதான் மார்க்சிய – லெனினியப் பார்வை.

இந்த மார்க்சிய-லெனினியப் பார்வையை மறுப்பதற்காகத் தமிழினவாதிகள் பலவாறு புளுகித் திரிகிறார்கள். ”சிங்களப் பெருந்தேசிய இனத்து மக்களுக்கும்  அவர்களை ஆளும் பாசிச அரசுக்கும் வேறுபாடே கிடையாது; பகை முரண்பாடும் கிடையாது; பெருந்தேசிய இனத்து மக்கள் அனைவரும் ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு எதிரானவர்கள்; இலங்கையின் இரு தேசிய இனப் பாட்டாளி மக்களும் ஐக்கியப்பட மாட்டார்கள்; இலங்கையில் ஈழத் தமிழ் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் அமைப்புகள் எதுவும் சிங்களவர் மத்தியில் கிடையாது” ஆகிய தமிழினவாதிகளின் கருத்துக்களைப்  பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் ஏற்கவில்லை. ஏனென்றால், தமிழினவாதிகள் கூறிவரும் மேற்கண்ட கருத்துகளில் உண்மையில்லை.

இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில், நோக்கில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டு நின்றிருக்கிறார்கள். 1983-இல் இருந்து தொடர்ந்து நடந்து வந்த ஈழப்போர் காரணமாக இலங்கையில் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் முற்றியபோது   சிங்கள, தமிழ் மக்கள் அமைதியை வேண்டி நின்றபோது அதையே முன்வைத்து அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டார், சந்திரிகா  குமாரதுங்கே. அவரைத் தேர்ந்தெடுத்து அமைதி, போர்நிறுத்தம், பேச்சு வார்த்தையை ஆதரித்ததில் சிங்களரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள். சிங்கள இன வெறியர்களினால் அம்முயற்சி சிதறடிக்கப்பட்டது வேறு விடயம். 2004 சுனாமியின் பேரழிவுகளை எதிர்கொள்வதில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல்  பொறுப்பாளர் நடேசனின் மனைவியாகிய சிங்களப் பெண்ணைப் போன்று தமிழ்த் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் சிங்களவர்களும், சிங்களவர் மற்றும் ஈழத் தமிழர்களைக் கொண்ட குழுக்களும் அங்குண்டு. தமிழ்த் தேசிய இன மக்களின் மனித உரிமைக்காகவும் இலங்கைப் பாசிச அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடிக் கொல்லப்பட்டவர்களும் பத்திரிக்கையாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் சிங்களவரிடையே உண்டு. ஈழ விடுதலைப் போராட்டங்கள் நடந்த அதே காலகட்டத்தில், இலங்கைப் பாசிச அரசால் ஈழத் தமிழர்கள் மட்டும் கொன்று குவிக்கப்படவில்லை. பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வெள்ளை வேன் வேட்டை இன்னமும் தொடர்கிறது. 75,000 சிங்கள இளைஞர்கள் இந்தக் காலத்தில் காணாமல் போயிருக்கிறார்கள் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பு இலங்கைப் பாசிச அரசுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஆகவே, அரசியல் காரணங்களுக்காக சிங்களவரும் ஈழத் தமிழரும் ஐக்கியப்படுவது சாத்தியமே இல்லாதது அல்ல.

 தமிழினவாதிகளின் உருட்டல் மிரட்டல், பொய்மைகள் பலிக்காது

விடுதலைப் புலிகளே தமிழீழத் தனியரசு என்ற தீர்வை பல்வேறு சமயங்களில் மாற்றிக் கொண்டும் கைவிட்டும் உள்ளனர். தன்னலத்துக்காகத் தன்னுரிமைக் கோரிக்கையையே கைவிட்டதும் உண்டு. வெவ்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்து தமிழீழத் தனியரசு கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்ததும் உண்டு.

இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தப்படி வடக்கு, கிழக்கு இணைந்த நிர்வாகசபை அமைக்கும் ஏற்பாட்டை ஏற்றுக்கொண்ட போதும், இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்காக பிரேமதாசா அரசுடன் கூட்டுச் சேர்ந்த போதும், ரணில், சந்திரிகா அரசுகளுடன் சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் நடத்திய போதும் தன்னுரிமைக் கோரிக்கைக்குப் புலிகள் வெவ்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்து தமிழீழத் தனியரசு கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவில்லையா? புலிகளின் இத்தகைய முன்னெடுப்புகளைத் தயக்கமின்றித் தமிழினவாதிகள் ஆதரித்தனர்.

ஆனால், ஈழத் தமிழர் நலனில் தமக்கு மட்டுமே அக்கறை இருப்பதைப் போன்று காட்டிக் கொள்ளும் தமிழினவாதிகள், ஈழ இனச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லவும் போராடவும்  தமக்கே ஏகபோக உரிமை கோரிக் குதிக்கிறார்கள். ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் போராடுவதாக கூறிக் கொண்டு தமிழினவாதிகள் ஏதாவது ஒரு முழக்கத்தை, திட்டத்தை முன்வைத்துப் பல பெயர்ப் பலகை அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து அடையாளப் போராட்டங்கள் நடத்துகிறார்கள், அதை ஆதரிக்கும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்; இல்லையென்றால் ஈழத் தமிழர்க்கு  எதிரானவர்கள் என்றும் அவதூறு செய்கிறார்கள்.

ஈழத் தமிழர் இனச் சிக்கலுக்கு உடனடியான. விரைவான, நிச்சயமான தீர்வு என்ற பெயரில் அடுக்கடுக்கான பல பொய்மைகளை நம்பவைக்க தமிழினவாதிகள்  எத்தனிக்கிறார்கள். இன முரண்பாடு முதன்மையாகி  விட்ட நிலையில் தமிழ் – சிங்களப் பாட்டாளிகளை ஒன்றுபடுத்திப் புரட்சி செய்வது சாத்தியமேயில்லை; இன உணர்வுமிக்க தமிழர்களைத் திரட்டித் தேசிய விடுதலையை விரைவில் சாதிக்க முடியும்; இராணுவ ரீதியிலும் அரசியல்ரீதியிலும் நிகரற்ற பிரபாகரன் தலைமையில் ஈழ விடுதலை விரைவில் வெற்றிகரமாக முடிக்கப்படும் என்றவாறு எவ்வளவோ சொன்னார்கள். முள்ளிவாய்க்கால் கொலைக் களத்தில் எல்லாம் நொறுங்கிப் போயின.

தவறுகளில் இருந்து நேர்மையான முறையில் படிப்பினைகளைப் பெறுவதற்குப் பதிலாக, பன்னாட்டுச் சதியால்தான் இந்த நிலை என்று மழுப்பிச் சமாளிக்கிறார்கள். முள்ளிவாய்க்காலுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே தீட்டப்பட்டதாகக் கூறப்படும் பன்னாட்டுச் சதியை எதிர்கொள்ள முடியாமல் போனதும் முல்லைத் தீவின் குறுகிய நிலப் பரப்பில் மூன்று லட்சம் ஈழத் தமிழரைக் குவித்துப் பல்லாயிரம் பேரைப் பலி கொடுத்ததும்தான் இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நிகரற்ற  தலைமையா?

பலம் வாய்ந்த சிங்கள பாசிச இராணுவத்தையும் பகைமையான பன்னாட்டு சக்திகளையும் எதிர்கொண்டிருந்த ஈழ விடுதலைப் போரில் பிரபாகரன் தலைமை இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பாரிய தவறிழைத்து விட்டது. இராணுவ ரீதியில்  நீண்டகால மக்கள் யுத்தம் என்ற போர்த்தந்திரத் திட்டத்தை மேற்கொள்ளத் தவறியது. நீண்டகால மக்கள் யுத்தம் என்ற பாதையில் சாத்தியமான மக்கள் ஆதரவு முழுமையாகத் திரட்டப்பட வேண்டும். என்ன இலட்சியமோ அதற்குதான் மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டுமே தவிர, யார் தலைவரோ அவர் மீதான வழிபாட்டுக்கு ஆள் திரட்டக் கூடாது.

சிங்கள பாசிச அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்திகொண்டு நட்புச் சக்திகளை வென்றெடுத்திருக்க வேண்டும். ஒருவேளை உடனடியாக அது சாத்தியமில்லாமல் போனாலும், மக்கள் யுத்தம் நீடிக்கும் நீண்டகாலப் போக்கில் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் முற்றிவரும் சூழலில் அது சாத்தியமே. இலங்கையில் அவ்வாறான நிலைமைகள் கடந்த 30 ஆண்டுகளில் பல முறை வந்துள்ளன. ஆனால், விடுதலைப் புலிகளும் அதன் தலைமையும் ஈழத் தமிழரின் ஆதரவையே குறுந்தேசிய இனவாத அடிப்படையில் கட்டமைத்துக் கொண்டிருந்தனர். சிங்கள பாசிச இராணுவத்துடன் கடும் போரில் ஈடுபட்டிருந்தபோது கூட மறுபுறம் ஈழத் தமிழரிடையே கூட சகோதரப் போரை நடத்திய விடுதலைப் புலிகளும் அதன் தலைமையும் நட்புச் சக்திகளை  வென்றெடுப்பதில் எங்ஙனம் அக்கறை கொண்டிருக்க முடியும்?

பிரபாகரனின், புலிகளின் வீரதீர சாகசங்களைச் சொல்லியே சினிமா நாயகத்தன வழிபாட்டை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள், தமிழினவாதிகள். ஈழத் தமிழர் தன்னுரிமை பெறுவதற்கான அவசியமான, சரியான அரசியல் உத்திகளை முன்வைத்துப் போராடுகின்றன, ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும்.

ம.க.இ.க. தமிழீழத்துக்கு எதிரானது என்ற அவதூறு, ம.க.இ.க.-வின் பல்வேறு போரட்டங்களைப் பல ஆண்டுகளாக நேரில் காணும் தமிழக மக்களிடையே எடுபடாமல் போகவே, ஈழத் தமிழர் இனச் சிக்கலில், ம.க.இ.க.-வின் நிலைப்பாடு தமிழீழத் தனியரசுக்கு எதிரானது, சந்தர்ப்பவாதமானது, குழப்பமானது என்று ம.க.இ.க. மீது பலவாறாக அவதூறையும் அவநம்பிக்கையையும் தமிழினவாதிகள் பரப்புகிறார்கள்.

கொழும்புவில் நடந்த பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
இராஜபக்ஷே அரசின் ஊழல்கள், மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் லசந்தா விக்கிரமதுங்கே, ராஜபக்ஷே கும்பலால் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்தும், பத்திரிக்கை சுதந்திரத்தை வலியுறுத்தியும் இலங்கை பத்திரிகையாளர்கள் கொழும்பு நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம் (உள்படம்) லசந்தா விக்கிரமதுங்கே.

ஆனால், ஈழத் தமிழர் இனச் சிக்கலில், ம.க.இ.க.-வின்  நிலைப்பாட்டில் குழப்பமோ, சந்தர்ப்பவாதமோ கிடையாது. மிகமிகத் தெளிவாகவே உள்ளது. அது தமிழினவாதிகளின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டிருக்கிறது, அவ்வளவுதான்! தமிழினவாதிகளின் நிலைப்பாடுகளை ம.க.இ.க.-வினர் ஏற்கும் வரையும்  தமிழினவாதிகளின் தவறுகளையும் துரோகத்தையும் பிழைப்புவாதத்தையும் ம.க.இ.க.-வினர் எதிர்த்து அம்பலப்படுத்தும் வரை அவர்கள் இப்படித்தான் செய்வார்கள். உண்மையில் இப்படிச் செய்வது மற்றவர்களை உருட்டி மிரட்டி (பிளாக்மெயில் செய்து) தமது நிலைப்பாடுகளை ஏற்கச் செய்யும் ரௌடித்தனம்.

ஈழத் தமிழர் முன்புள்ள தெரிவுகள்

எப்போது, எப்படி, என்ன அரசியல் நிலைமைகளில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஈழத் தமிழ்த் தேசிய இனம் அடைகிறது என்பதைப் பொருத்து  தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்வதா, இல்லையா என ஈழத் தமிழ் தேசிய இனம் தீர்மானிக்கும். நாம் ஏன் இவ்வாறு கருதுகிறோம், அது ஏன் சரி என்பதைப் பலமுறை சொல்லியாகி விட்டது; மீண்டும் இங்கே ஒருமுறை  சொல்கிறோம்.

தமிழினவாதிகள் தங்கள் இலட்சியமாகச் சொல்லிக்கொள்ளும் ”தமிழீழத் தனியரசு” மீது அவர்களுக்கு உண்மையில் நம்பிக்கையோ, அக்கறையோ துளியும் கிடையாது. அதனால்தான் அதை அடையும் பாதையைப் பற்றியும், அதை அடைந்தாலும் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றியும் பேச மறுக்கிறார்கள்.

ஒன்று, சிங்களப் பேரினத்துக்கு எதிராக ஆயதப் போராட்டத்தின் மூலம் பாசிச சிங்கள இராணுவத்தையும் அரசையும் வீழ்த்தி, தமிழீழத் தனியரசைப் பிரகடனம் செய்ய வேண்டும். பிரகடனம் செய்தால் மட்டும் போதாது; சர்வதேச சமூகம் இல்லையானாலும், பிற ஒரு சில நாடுகளாவது அதை அங்கீகரிக்க வேண்டும். இதற்காகத்தான் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முப்பது ஆண்டுகளாக நடந்தது. அதன் முடிவும் அனுபவமும் என்னவென்று அனைவரும் அறிவோம். மீண்டும் ஒரு படை கட்டி தமிழீழத் தனியரசுக்கான போர் கனவிலும் நடைபெறாது என்று சொல்லத் தேவையில்லை. (புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் புளுகித் திரிவது போல,  தப்பித்துத் தலைமறைவாக உள்ள பிரபாகரனும் பிற புலிகளும் ஒருவேளை திரும்பி வந்து மீண்டும்  ஈழ விடுதலைப் போர் தொடுக்கலாமோ என்னவோ).

இரண்டு, புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் திராவிடக் கட்சிகளும் முயற்சிக்கும் வகையில் இவர்கள் நடத்தும் போராட்டங்கள், விண்ணப்பங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து இந்திய அரசோ அல்லது இவர்களில் ஒரு பிரிவினர் நம்புவது போன்று மோடி பிரதமராகியோ இந்திய ஆட்சியாளர்களிடம் ஈழ ஆதரவு நிலை உருவாகி அல்லது அமெரிக்கத் தலைமையிலுள்ள சர்வதேச சமூகம் ஈழத் தமிழர்களின் துயரம் கண்டு நெக்குருகி பொதுவாக்கெடுப்புக்கான, அதாவது ஈழத் தமிழருக்குத் தன்னுரிமைக்கான வாய்ப்புக் கிட்டலாம்; அதாவது,  இவர்கள் நடத்தும் வேட்டையில் கொம்புடன் கூடிய முயலைப்  பிடிக்கலாம் என்கிறார்கள்.

மூன்று, சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறி பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்து இலங்கையில் ஒரு ஜனநாயக அரசு அமைந்து, அது ஈழத் தமிழர்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஏற்க வேண்டும். இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளும் வர்க்க முரண்பாடுகளும் மிகவேகமாக முற்றி வரும் சூழலில் புலிப் பூச்சாண்டியைக் காட்டியே சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறியில் சிங்கள மக்களை நீண்ட காலத்துக்கு பாசிச இராஜபக்சே கும்பல் தனது அதிகார ஆதிக்கத்தில் இருத்தி வைத்திருக்க முடியாது என்பதையே அங்குள்ள நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் வீரர்களையும் துருப்பிடித்த ஆயுதங்களையும் கொண்டிருந்த சிங்கள இராணுவம் இன்று நான்கு இலட்சம்  வீரர்களையும் அதிநவீன ஆயுதங்களையும்  கொண்ட முப்படைகளையும் பெற்று, உலகின் பெரிய இராணுவங்களில் ஒன்றாகி விட்டது. சிங்கள இராணுவம் மட்டுமல்ல, இலங்கை அரசின் எல்லா உறுப்புகளிலும் பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பலின் ஆதிக்கம் நிறைந்து விட்டது. அதற்கு எதிராகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அம்மக்கள் எவ்வளவு பெரிய மக்கள் சக்தியைத் திரட்டினாலும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்கள் ஆதரவின்றி பாசிச இராஜபக்சே கும்பலின் அதிகார ஆதிக்கத்தை வீழ்த்த முடியாது. அதே போல, சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவின்றி ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் என்னதான் போராடினாலும்  தமது உரிமைகளைப் பெறவும் முடியாது. இது யாருடைய விருப்பங்களுக்கும்  அப்பாற்பட்ட புறநிலை எதார்த்தம். நாம் கூறுவது ஆளும் வர்க்கங்கள் சொல்லுவதைப் போல சுரண்டலுக்கான, அம்மக்களை ஒடுக்கி வைப்பதற்கான சமனற்ற கட்டாய ”ஒற்றுமையல்ல’’. சம உரிமை அடிப்படையிலான, ஜனநாயக முறையிலான ஒற்றுமை. பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பல் ஆதிக்கத்தைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் பங்குபற்றியதற்கு ஈடாகவும் முன்நிபந் தனையாகவும் ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் தமது உரிமைகளாகக் கோர முடியும். இதைத்தான் ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கையின் அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகள் (அவை சிறியவையானாலும்) தமது பாதையாகத் தெரிந்தெடுத்துக் கொண்டு, இயக்கங்களைக் கட்டமைத்து வருகிறார்கள். இவ்வாறான பாதையைத்தான்  ம.க.இ.க.-வினர் ஆதரிக்கின்றனர்.

ஆனால், இதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றவை, சிங்களவருக்குச் சாதகமானவை, தமிழீழத் தனியரசை நிராகரிப்பதற்குச் சொல்லப்படும் சாக்குப்போக்குகள் என்று தமிழினவாதிகள் வாதிடுகின்றனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தனைக்கும் பிறகு, சிங்கள அரசு ஈழத் தமிழர்களின்  உரிமைகளைச் சிறிதும் ஏற்க மறுக்கும் நிலையில், எஞ்சிய பல்லாயிரம் ஈழத் தமிழர்களும் முள்வேலி முகாமுக்குள், இராணுவக் கொடுங்கோன்மையின் கீழ் வதைபடும் நிலையில் தமிழீழத் தனியரசுக்கும் குறைவான எதையும் பேசுவது துரோகம் என்று குதிக்கிறார்கள்.

தமிழினவாதிகள் மேலே தொகுத்துச் சொல்லும் இதே நிலைமைகளின் காரணமாகத்தான், பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தாமல் ஈழச் சிக்கலில் ஒரு அடி கூட முன்வைக்க முடியாது; அதைத் தூக்கி எறிந்து, சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க.- வினர்  ஏற்கின்றனர்.

ஆனால், இந்த நிலைமைகளில் தமிழீழத் தனியரசை அடைவதற்கானதென்று தமிழினவாதிகள் தெரிவு செய்துகொண்டுள்ள தீர்வும் பாதையும் அரசியல் ரீதியில் பாமரத்தனமானது, விடலைத்தனமானது. ஈழத் தமிழருக்கு இழைக்கப்படும் அநீதி, அவர்கள் மீதான இன ஒடுக்குமுறையின் கடுமை, அவர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகள், துன்ப துயரங்கள், இன்றைய அவலநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஈழத் தமிழினச் சிக்கலுக்கான தீர்வையும் அதை அடைவதற்கான பாதையையும் தெரிவு செய்து  இயக்கத்தைக் கட்டமைத்து விட முடியாது. அப்படிச் செய்ய முயலுவது வெறும் கவர்ச்சிகரமான வாய்ச் சவடாலாகவே இருக்கும்.

போரில் வெற்றி பெற்ற எந்தவொரு அரசும் தோற்றுப் போனவர்களுக்கு (என்னதான் நியாயமானது என்றாலும்) சம உரிமைகளும் சலுகைகளும் வழங்கியதாக வரலாறே கிடையாது. போரில் தோற்றுப் போனவர்கள்தாம் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கு ஈடாக உரிமைகளையும் சலுகைகளையும் தங்களையும் கொடுத்தாக வேண்டும். இவை நீதி, நியாயத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை. வென்றவருடைய பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதுதான் இன்றைய ஏகாதிபத்திய உலக நியதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது. உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவர்களைப் போல சண்டப் பிரசண்டமாகச் சவடாலடிக்கும் தமிழினவாதிகள் பின்வரும் இந்தச் சாதாரண உண்மையைக் கூட பார்க்கவும் ஏற்கவும் மறுக்கிறார்கள்.

இலங்கை பாசிச இராஜபக்சே அரசுக்கும் – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து முடிந்த போரில் வென்றுள்ளது, பாசிச இராஜபக்சே தரப்பு. தோற்றது, ஈழத் தமிழர் தரப்பில் நின்று போரிட்ட புலிகள். வென்ற பாசிச இராஜபக்சே தரப்பு, தோற்ற ஈழத் தமிழர் தரப்புக்கு சம உரிமைகளுக்கும் அதிகாரப் பகிர்வுகளுக்கும் ஒப்புக்கொள்ளும் என்று ஈழத் தமிழர்கள் எதற்காக, எப்படி எதிர்பார்க்கலாம்? சரணடைந்த புலிகளைப் படுகொலை செய்து குவித்த பாசிச இராஜபக்சே என்ன நீதிமானா? அவன் ஈழப் போர் வெற்றியின் ஆதாயங்களை அறுவடை செய்து கொள்ளவே செய்வான். பாசிச இராஜபக்சே கும்பலின் அரசு அதிகாரத்தை வீழ்த்தாமல் ஈழத் தமிழருக்கு சம உரிமை, அதிகாரப் பகிர்வு, தமிழீழத் தனியரசு எதையும் அடையவே முடியாது. இந்திய அரசு உட்பட அமெரிக்கத் தலைமையிலான சர்வதேச சமூகத்துக்குத் தமது போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து இவற்றை அடைய முடியும் என்று நம்பச் சொல்லுகிறார்கள் புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும். ஆனால், பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்து இலங்கையில் ஒரு ஜனநாயக அரசு அமைந்து, அதன் மூலம்தான் ஈழத் தமிழர்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை நிலைநாட்ட முடியும்; ஈழத் தமிழருக்கு சம உரிமை, அதிகாரப் பகிர்வு மட்டுமல்ல, அந்த நிலையிலும் அவசியமானால் தமிழீழத் தனியரசு அமைத்துக்கொள்ளும் பலத்தையும் அவர்கள் பெற முடியும்.

ஆகவே, புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் ஈழத் தமிழர் விடுதலைக்கு அடையவே முடியாத வழியை மீண்டும் முன்வைக்கிறார்கள் . ஆனால், ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் மீண்டும் ஒரு முறை இவர்களிடம் ஏமாற மாட்டர்கள்.

-ஆர்.கே.
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
_________________________________

 1. இதில் உள்ள கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் மூன்று விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

  1. இவர் கூறுவது போல இலங்கையின் அனைத்துப் பாட்டாளி மக்களும் சேர்ந்து தங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று ஒத்துக் கொண்டாலும், அவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று இங்கே உட்கார்ந்து கொண்டு மக இக வும் சொல்லக் கூடாது.

  2. தனது கொள்கைகளோடு ஒத்துப் போகாதவர்களை – ராஜீவ்,அமிர்தலிங்கம்,இதர தமிழ்த் தலைவர்கள் -கொல்வது சரியென்று இவர்கள் சொன்னால், யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கொல்லலாம்.

  2. மிகவும் painstakingly எழுதப்பட்ட கட்டுரை.வாழ்த்துக்கள்

 2. பிரபாகரனின் மாவீரர் தின உரையில் தமிழர்களுக்கு ஒரு நாடு இல்லாதது தான் அவல நிலை தொடர்வதாக சொன்ன பின் இந்தியா தான் இலங்கையில் வைத்த தீ தன்னை நோக்கி வருகிறது என்று தீர்மானம் எடுத்த்து புலிகள் அழிவுக்கு துணை போனது புலிகளின் தோல்வி யின் பெரும் பங்கு பிராந்திய வல்லரசுகள் அவற்றின் கூட்டாளிகள் எடுத்த முடிவின் படியே நடந்தன முன்பு ஆயுத வன்முறைகளை வைத்து இலங்கை மீது ஆதிக்கம் செலுத்திய இந்தியா இப்போது கடவுளின் தந்திரம் போல் பக்தர்களுக்கு சோதனையை கொடுப்பது பின் தன்னிடம் வந்த பின் காப்பாற்றுவது என்பது போல் வெளி சக்திகள் மூலம் இலங்கை அரசை நேருக்கு வது பின் தன்னை நோக்கி வந்த பின் காப்பது என்றும் தமிழர்களுக்கு இலங்கை கொடுக்கும் நெருக்கடிகளை கண்டும் காணாது விட்டூ தமிழர்களை தன்பக்கம் இழுப்பது என்று ஒரு ராஜதந்திரத்த்த்தை பயன் படுத்த்து கிறது

 3. ஈழம் ஒரு எழவு விழுந்த வீடு போலத்தான்… சுமார் இரண்டு லட்சம் பேருக்காக தனி நாடு கேட்பது சுத்த முட்டாள்த்தனம்… ஈழ பிரச்சனை இது மாதிரி கட்டுரை எழுதவும், வைகோ மாதிரி கால்நடையா திரியவும் தான் பயன்படும்… இங்கே இருக்கும் மூடர் கூடம் சும்மா இருந்தாலே இலங்கையில் இருக்கும் தமிழர்கள் நிம்மதியாக இருப்பார்கள்…

  • இழவு விழாத வீடு எது? இத்தாலியா?
   எவள் தாளி அறுந்தாலும்,கவலைப் படாமல்,
   கருமாதி வீட்டில் வயிறு புடைக்க சாப்பிட முடிவது
   இந்தியர்களால்தான்:
   மூடர் கூடம் எது? தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு
   டெல்லியில் பாராளுமன்றம் அருகே எருமைகளை மேய்க்கும்
   சிங்கா?
   வினை விதைத்தவன் வினை. ..பல மடங்கு மகசூல் பெறுவான்

  • எழவு விழ யார் காரணம்?
   உமது தேசிய ஓப்பாரிதானே?
   எந்த தன்மானம் உள்ளவனும் உமது கருத்தை ஏற்க மாட்டான்!
   இந்தியாவை கட்டி அழ உனக்கு உரிமை:
   பிரிந்து சந்தோசமாக வாழ எங்களுக்கு பூரண உரிமை….
   எந்த தனிமனிதனும் பல தலைமுறைகள் “அடிமையாக” வாழ தலைப்படமாட்டான்..அப்படி வாழ்பவனும் மனிதன் அல்ல- அற்பப் புழு!

 4. ஒத்துப் போகாதவர்களை யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்?
  உங்கள் கூற்று: கருனா,டக்லஸ் மாமா,கதிர்காமர் இவர்களையெல்லாம் சகித்துக்கொண்டு,இவர்கள் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்தாலும்,மழையில் நனைந்த எருமை போல இருக்கனும்….
  தாலுக்கா அலுவலகம் முன்பு 21 நிமிடம் போராட்டம்,ரயிலை 6 வினாடி நிறுத்துவது,மெரினா கடற்கரையில் ( 2 பொண்டாட்டியுடன்) 31 நிமிடம் 27 வினாடிகள் உண்ணாவிரதம், ஸ்டாம்பு ஒட்டாமல் டெல்லி எருமைகளுக்கு கடுதாசி எழுதுவது…போதும்..போதும்…
  எனக்கு மனசு வலிக்கிறது: பிரபா இருந்தபோது,வாயையும் சூ….யும் மூடிக் கொண்டு இருந்த
  அரசியல் பேமானிகளை நான் நன்றாகவே அறிவேன்:
  ஒன்று மட்டும் நிச்சயம்: எந்த அரசியல் போராட்டத்துக்கும் நாள்,கால அவகாசம் பொருந்தாது…
  ஏனென்றால் அது கேப்டன் விசயகாந்தின் திரைப்படம் அல்ல:
  எனது காலம் முடியுமுன் என்ன நடக்கும்? எனது காலத்திற்கு பின்பு என்ன நடக்கும்: இருக்கும் வரை போராடுவேன்:

 5. //தமிழகத் தமிழினவாதிகளுக்கு ஈழ இனச் சிக்கல் ஒன்று மட்டுமே விவாதத்துக்கும் வினையாற்றுவதற்குமான ஒரே பிரச்சினை. இந்த நாட்டைச் செயற்களமாகக் கொண்டுள்ள ம.க.இ.க.வினர் தம்முன் உள்ள எல்லாப் பிரச்சினைகளில் ஈழ இனச் சிக்கலுக்கு அதற்குரிய முன்னுரிமை தருகின்றனர்.\\

  இந்த வரிகள் ஈழக் கனவில் எப்போதும் மிதக்க நினைப்பவர்களின் மயக்கத்தை கொஞ்சம் தெளிக்கட்டும். தமிழினவாதிகள் தங்கள் தமிழீழக் கனவு நிறைவேறும் பொருட்டாவது, தமிழ் மக்கள் மற்றும் இந்திய மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இங்கு வாழும் மக்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது ஒரு நீடித்த ஈழ ஆதரவை தமிழகத் தமிழர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? இவர்களுடைய மிதமிஞ்சிய ஈழ ஈடுபாட்டிற்கு தமிழகம் கொடுக்க வேண்டிய விலை மிகப் பெரிதாக இருக்கிறது. பிரபாகரனை மறந்து விட்டு ‘நமோ நமோ’ என்றொரு கூட்டம் கிளம்பி விட்டது.

 6. இலங்கையில் இலங்கைத் தமிழர்களின் மக்கள் தொகை 12 வீதத்திற்கும் குறைந்ததே.அதில் எத்தனை பேர் தமிழீழத்தை ஆதரிப்பார்களோ தெரியவில்லை.இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது .
  இராஜீவ் காந்தியும்
  சிங்கள பாசிச எதிரிகளும்
  ஈழத் தமிழ்த் துரோகிகளும் ?????
  கொல்லப்பட்டபோது அவற்றை எதிர்த்தோ கண்டித்தோ ம.க.இ.க. எழுதியதோ பேசியதோ இல்லை. கள்ள மௌனம் சாதித்ததும் இல்லை; இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஏன் சரியானவை அவசியமானவை என்றுதானே எழுதியது.
  ம.க.இ.க.வின் இந்தப் போக்கு மிக அபாயகரமானது.

 7. //பிரபாகரனின் மாவீரர் தின உரையில் தமிழர்களுக்கு ஒரு நாடு இல்லாதது தான் அவல நிலை தொடர்வதாக சொன்ன பின் இந்தியா தான் இலங்கையில் வைத்த தீ தன்னை நோக்கி வருகிறது என்று தீர்மானம் எடுத்த்து புலிகள் அழிவுக்கு துணை போனது புலிகளின் தோல்வி யின் பெரும் பங்கு பிராந்திய வல்லரசுகள் அவற்றின் கூட்டாளிகள் எடுத்த முடிவின் படியே நடந்தன முன்பு ஆயுத வன்முறைகளை வைத்து இலங்கை மீது ஆதிக்கம் செலுத்திய இந்தியா இப்போது கடவுளின் தந்திரம் போல் பக்தர்களுக்கு சோதனையை கொடுப்பது பின் தன்னிடம் வந்த பின் காப்பாற்றுவது என்பது போல் வெளி சக்திகள் மூலம் இலங்கை அரசை நேருக்கு வது பின் தன்னை நோக்கி வந்த பின் காப்பது என்றும் தமிழர்களுக்கு இலங்கை கொடுக்கும் நெருக்கடிகளை கண்டும் காணாது விட்டூ தமிழர்களை தன்பக்கம் இழுப்பது என்று ஒரு ராஜதந்திரத்த்த்தை பயன் படுத்த்து கிறது// Sethanda Sekar

 8. எதிர் வினையாற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரை..வின்வு குழுமத்தின் பக்கம் உள்ள வாதங்களை எடுத்து வைத்துள்ளது…கருத்தக்களை சொல்ல வேண்டிய விதத்த்தில், கோர்வையாக எழுதப்பட்டுள்ளது…சொல்லப்படும் தீர்வுகள் எந்த அளவுக்கு, இலங்கையில், ஈழத்தில் உள்ள மக்களின் வாழ்வு முறைகளோடு பொருந்தி செல்கிறது என்பதே கேள்வி..இதை ஒட்டிய முயற்சிகள் எதுவும் அந்த பகுதி மக்களிடம் எடுக்க படுகின்றனவா?

 9. தவறு சேகர்! இந்தியாவும் பழைய ஆண்டை பிரிட்டனும், பிரபாகரனை உருவாக்கும்போதே அவரை வைத்து உள்னாட்டிலும், இலங்கையிலும் சில அரசியல் நிகழ்வுகளை நிகழ்த்தவே! காலங்கடந்துதான் பிரபாகரன் உணர்ந்து கொண்டார்!

  இந்திராவிடம் கட்சதீவை விலைக்கு வாங்கிய திருமதி.பண்டாரனாயகே தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களை தேச உடமையாக்கினார்! அவரை அடக்கவும், தமிழ்னாட்டில் பெருகிவரும் திராவிட உணர்வை ஒழித்துகட்டவுமே பிரபாகரனை உருவாக்கி பின்னர் அழித்தது! ஒரு துரோகியை பிடித்து அவருக்கு கருணா என்று பெயர் சூட்டி துரொகமிழைக்கவைத்து வஞசக நகைப்பு நகைத்தது, ஒரு பார்பன அம்மாவின் சாயலில் இல்லை?

 10. பா.ஜ.க சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் “காங்கிரசு முடிந்துபோனது…ஈழம் மலரப்போகிறதுன்னு”பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டு லைக்ஸ் வாங்குது இந்த கும்பல்ஸ் ..

  இவனுங்க லூசா இல்ல லூசு மாதிரி நடிக்குறானுங்களா????????

  • vico is not loosu or not acting like loosu.

   But he has his own clear intention for this political survival!

   He will have alliance with BJP-Modi.

   Now he start singing songs about Modi wave Modi wave.

   Now he is going to be a Modi tail[val]!

   Vico has seen ayiya,amma in past and now he will see MODI for alliance

  • இப்படி நம்பி,நம்பி மோசம் போவதில் தமிழனுக்கு நிகர் தமிழனே

 11. நான் ஒரு ஈழத்தமிழன் என்ற முறையில் இந்தக் கட்டுரையைப் பற்றி எனது கருத்தை, சில வார்த்தைகளில் சொல்வதானால் இது இலங்கையின் ‘உண்மையான நிலவரம் தெரியாத வெறும் உளறல்’ என்று தான் கூற வேண்டும். சிங்களவர்களை, அவர்களின் வரலாற்றை, இலங்கையின் வரலாற்றில் தமிழ்-சிங்கள உறவை, 2000 ஆண்டு பகையின் பரிமாணத்தை, சிங்களவர்களின் paranoia வை, சிங்களபெளத்த பிக்குகள் எந்தளவுக்கு சிங்களவர்களை கட்டுப்படுத்தும் வல்லமையுள்ளவர்கள் என்பதை, சிங்கள பெளத்தத்தின் அடிப்படையே தமிழின எதிர்ப்பு, என்பதை, சிங்கள பெளத்தம் வடக்கிலிருந்து தமிழர்களை வெளியேற்ற 2000 ஆண்டுகளாக சளைக்காமல் முயன்று வருகிறது என்ற வரலாற்று உண்மையை மறந்து விட்டு , விரல் விட்டுக் எண்ணக் கூடிய முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் என்று பீற்றிக் கொள்ளும் சில சிங்களவர்கள் இலங்கைக்கு வெளியே நடைபெற்ற கருத்தரங்குகளில் பேசிய பேச்சுக்களின் அடிப்படையில் ம.க.இ.க. ( முழுப்பெயர் என்ன) தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் ஈழத்தமிழர்கள் பொறுப்பல்ல.

  சிங்கள இனவாதத்தின் ஆழத்தை உணராமல் மார்க்சிய, லெனினிய கண்ணாடியைப் போட்டுககொண்டு ஈழத்தமிழர் பிரச்சனைக்கு விளக்கம் கொடுக்க நினைத்தால் எந்தக் கட்டுரையும் இப்படித்தான் எழுதியவரின் அறியாமையை காட்டிக் கொடுத்து விடும். பிரபாகரனும் ஈழத்தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டமும் இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர் ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல, தமிழெதிரிதிரிகளுக்கும் சோறு போட்டிருக்கிறது. இன்றும் பலருக்கு சோறு போடுகிறது மட்டுமல்ல முகவரி இல்லாதவர்களுக்கு எல்லாம் பேரும் புகழும் பெற்றுக் கொடுக்கிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே.

  இலங்கையின் சிங்கள பாட்டாளி வர்க்கம், அவர்களின் பிரதிநிதிகள், இலங்கையிலுள்ள சிங்கள முற்போக்கு வாதிகள், கம்யூனிஸ்டு, மாக்சிய, லெனினிய வாதிகள் எல்லாம் எப்படியானவர்கள், என்பதையோ, அவர்கள் போட்டிருக்கும் முற்போக்கு முகமூடிக்குப் பின்னால் தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதை மறுக்கும், தமிழர்களுக்கு சமவுரிமை கொடுத்தால் அவர்கள் நாட்டைப் பிரித்து விடுவார்கள் அதானால் நாங்கள் வடக்கு கிழக்கை எப்படியாவது சிங்கள மயப்படுத்த வேண்டுமென்று நினைக்கும் துட்டகைமுனு மறைந்திருக்கிறான் என்ற உண்மை இந்தக் கட்டுரையை எழுதியவருக்கும் தெரியாது, அவர் சந்தித்த சிங்கள முற்போக்குவாதிகளும் தமது உண்மையான(துட்டகைமுனு) முகத்தை அவருக்குக் காட்டவில்லை என்பது தெளிவாகிறது.

  இலங்கையின் சிங்கள புத்திஜீவிகளும், முற்போக்கு, மாக்சிய, லெனினியவாதிகள் எல்லோருமே தமிழர்களுக்கு உரிமை என்று வரும் போது சிங்கள பெளத்த பாசிஸ்டுக்களாக மாறி விடுவார்கள். உதாரணமாக: கொல்வின் ஆர் டி சில்வா, தயான் ஜெயதிலக, சேகுவேராவின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த ரோகண விஜேவீரா, மற்றும் அவரது ஜனதா விமுக்தி பெரமுனவின் தோழர்கள், இன்று ராஜபக்ச அரசில் அமைச்சராக இருக்கும் வாசுதேவ நாணயக்காரா போன்றவர்கள் கூட சிங்கள “முற்போக்கு, மாக்சிய, லெனினிய சோசலிஸ்டுக்கள்” தான். இப்படியான சிங்கள முற்போக்குவாதிகளின் வரலாறு தெரியாத ஒருவர் தான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை. 🙂

 12. இந்தக் கட்டுரையிலுள்ள ஓட்டைகள் சிலவற்றைப் பார்ப்போம். 🙂

  //…..அதன் மூலம் அந்நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்திப் புதிய ஜனநாயகப் புரட்சியை முடிப்பதுதான் அக்கட்சியின் இலக்காகவும் திட்டமாகவும் இருக்கும் என்பதுதான் மார்க்சிய – லெனினியப் பார்வை.//

  சிங்கள பெளத்த நலன்களுக்கெதிராக சிங்கள பாட்டாளி வர்க்கம் ஒருபோதும் தமிழர்களுடன் சேர்ந்து போராடாது. இந்தக் கட்டுரையாசிரியர் சிங்கள பாட்டாளி வர்க்கத்துக்கும், தமிழர்களை வெறுக்கும் சிங்கள பிக்குகளுக்கும் உள்ள நல்லுறவையும், எந்தளவுக்கு சிங்கள பாட்டாளி வர்க்கத்தை புத்த பிக்குகளால் கட்டுப்படுத்த முடியுமென்பதையும் அறிய மாட்டார் அல்லது அதைக் கணக்கில் எடுக்க மறந்து விட்டார் போல் தெரிகிறது. புத்த பிக்குகள் இருக்கும் வரை இந்த மார்க்சிய – லெனினியப் பார்வை இலங்கையில் எடுபடாது என்பது தான் உண்மை.

  ///இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில், நோக்கில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டு நின்றிருக்கிறார்கள்.///

  சிங்களவர்கள் இந்தியப்படையை ஆரம்பத்திலேயே வெறுத்தனர். அனால் அவர்களை ஆரம்பத்தில் வரவேற்று, சொந்தம் கொண்டாடிய ஈழத்தமிழர்கள், இந்தியப்படைகள் (IPKF) புலிகளுடன் போராடத் தொடங்கி, ஈழத்தமிழ்ப்பெண்களை கற்பழித்து, அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்யத் தொடங்கிய பின்னர் தான் வெறுக்கத் தொடங்கினர். அந்த பொதுவான வெறுப்பின் அடிப்படையில் தான் சிங்களவரும், தமிழரும் ஒன்றுபட்டனரே தவிர, தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்து சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றுபடவில்லை. அந்த தருணத்தில் இந்தியப்படைகள் சிங்களவருக்கும் தமிழருக்கும் பொது எதிரி, அவ்வளவு தான்.

  / //1983-இல்….சந்திரிகா குமாரதுங்கே. அவரைத் தேர்ந்தெடுத்து அமைதி, போர்நிறுத்தம், பேச்சு வார்த்தையை ஆதரித்ததில் சிங்களரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள்.///

  ஈழத் தமிழர்கள் தான் சந்திரிகா தமது பிரச்சனையைத் தீர்ப்பார் என்று நம்பினார்களே தவிர, சிங்களவர்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்த காரணம் அவர் புலிகளைத் தோற்கடிப்பேன் என்றதாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால ஊழல் ஆட்சியில் சிங்களவர்கள் களைபப்டைந்திருந்தாலும் தான். ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம், அவர்களின் சுயநிர்ணய உரிமையை நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லியிருந்தால் ஒரு சிங்களவர் கூட சந்திரிகாவுக்கு வாக்களித்திருக்க மாட்டார். அது தான் உண்மை.

  ///சுனாமியின் பேரழிவுகளை எதிர்கொள்வதில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள்.///

  பச்சைப்பொய். இந்தக் கட்டுரையாசிரியருக்கு ஒன்றும் தெரியாது போலிருக்கிறது. சுனாமியின் பேரழிவால் பெரியளவில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களும் முஸ்லீம்களும் தான். ஆனால் இலங்கை அரசின் உதவிகளை மட்டுமல்ல, உலகநாடுகள் அளித்த உதவிகளைக் கூட ஈழத் தமிழர்களுடேன் சிங்களவர்கள் சரியாகப் பகிர்ந்து கொள்ள மறுத்து விட்டார்கள். இந்த பாரபட்சத்தைக் கண்ட கனடாப் பிரதமர் போல் மார்ட்டின் நேரடியாக இலங்கை சென்று கனடாவின் உதவிகள் தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் பகிரங்கமாக கேட்டுக் கொண்டார். அதை விட உலகநாடுகள் அளித்த சுனாமி நிதியை தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள Post-Tsunami Operational Mechanism (PTOM) என்றார் ஒப்பந்தத்தை செய்து விட்டு, அந்த ஒப்பந்தத்தையும் முறித்துக் கொண்டனர் சிங்களவர்கள். அதில் முன்னணியில் நின்றவர்களும் சிங்கள் மார்க்சிய லெனினிய வாதிகள் தான்.

  “The two sides did restart dialogue, and in July 2005 even signed an agreement to set up a joint administrative mechanism called the Post-Tsunami Operational Mechanism (PTOM). But this attempt fell victim to the opposition mounted by the newly mobilised Sinhala nationalists, led particularly by the Janatha Vimukthi Peramuna (JVP), which opposed any resumption of political engagement with the LTTE. The JVP, a powerful member of the UPFA coalition with 39 members in Parliament, filed a petition before the Supreme Court that the PTOM agreement violated Sri Lanka’s Constitution. The Supreme Court upheld some of the JVP objections, thereby effectively nullifying the new institutional mechanism formulated for the government and the LTTE to work together, at the very least on humanitarian issues. In contrast, across the ocean to the east, the Indonesian government and the rebels in Aceh were able to successfully use the humanitarian space opened up by the 2004 tsunami to work towards a peace agreement – one that still holds today.”

  ///முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் மனைவியாகிய சிங்களப் பெண்ணைப் போன்று தமிழ்த் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் சிங்களவர்களும், சிங்களவர் மற்றும் ஈழத் தமிழர்களைக் கொண்ட குழுக்களும் அங்குண்டு.///

  நடேசனின் மனைவி ஒரு விதிவிலக்கு. ஈழ விடுதலைப் போர் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் தம்பதிகள். நடேசன் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்த பின்னர் அவர் நடேசனை மணக்கவில்லை. அப்படியெல்லாம் குறிப்பிடும் படி எந்தக் குழுவும் இலங்கையில் கிடையாது. தென்னாபிரிக்காவில் மட்டுமல்ல அமெரிக்காவில் கூட கறுப்பர்களின் உரிமைகளுக்காக எத்தனையோ வெள்ளையர்கள் போராடியிருக்கிறார்கள், சிறைக்கு சென்றிருக்கிறார்கள், தமது உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள். அப்படி ஒரு சிங்களவர் கூட தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்துக்கு முழு மனதுடன் உண்மையாக ஆதரவளித்ததில்லை. உண்மையில் அந்த விடயத்தில் ஆபிரிக்க, அமெரிக்க கறுப்பர்களை விட ஈழத்தமிழர்கள் அதிர்ஸ்டமற்றவர்க்ள் ஏனென்றால் பேராசை பிடித்த, விட்டுக் கொடுக்காத, இனவாதம் நிறைந்த பெரும்பான்மையினத்திடம் எங்களின் உரிமைகளை கேட்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.

  /// தமிழ்த் தேசிய இன மக்களின் மனித உரிமைக்காகவும் இலங்கைப் பாசிச அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடிக் கொல்லப்பட்டவர்களும் பத்திரிக்கையாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் சிங்களவரிடையே உண்டு.///

  தயவு செய்து ஒரு சிங்களவரின் பெயரையாவது குறிப்பிடவும். லசந்த விக்கிரமசிங்க தமிழ்தேசிய இனமக்களின் மனித உரிமைக்கு குரல் கொடுத்ததுமில்லை, அதற்காக கொல்லப்படவுமில்லை.

  ///ஈழ விடுதலைப் போராட்டங்கள் நடந்த அதே காலகட்டத்தில், இலங்கைப் பாசிச அரசால் ஈழத் தமிழர்கள் மட்டும் கொன்று குவிக்கப்படவில்லை. பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.///

  சிங்கள இளைஞர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியதால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் ஆயுதம் தூக்கியதன் காரணமே இந்தியப் படையை இலங்கைக்குள் அனுமதித்து தமிழர்களுக்கு இலங்கை அரசு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகிறது. என்ற காரணத்தால் தானே தவிர தமிழர்களுக்கு ஆதரவாக அல்ல.

  ///அவர்களுக்கு எதிரான வெள்ளை வேன் வேட்டை இன்னமும் தொடர்கிறது.///
  வெள்ளை வேனால் பாதிக்கப்பட்டவர்கள்/பாதிக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் தானே தவிர சிங்களவர்கள் அல்ல.

  ///ஆகவே, அரசியல் காரணங்களுக்காக சாத்தியமே இல்லாதது அல்ல.///

  அரசியல் காரணங்களுக்கு சிங்களவரும் ஈழத் தமிழரும் ஐக்கியப்படலாம் ஆனால் ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதோ அல்லது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையோ அல்லது வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பூமி என்பதோ அல்லது வடக்கு கிழக்கில் நடைபெறும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என்பதோ, தமிழர்களுக்கு சமவுரிமை கொடுப்போம் என்பதையோ அங்கு பேசாது விட்டால், நிச்சயமாக சிங்களவர்களும் தமிழர்களும் ஐக்கியமாவது சாத்தியம்.

  ///அம்மக்கள் எவ்வளவு பெரிய மக்கள் சக்தியைத் திரட்டினாலும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்கள் ஆதரவின்றி பாசிச இராஜபக்சே கும்பலின் அதிகார ஆதிக்கத்தை வீழ்த்த முடியாது.///

  ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்களின் ஆதரவில்லாமல் இலங்கையில்சிங்கள பெளத்தர்களின் ஆதரவுடன் மட்டும் ஆட்சி அமைக்க முடியும் அதைத்தான் மகிந்த ராஜபக்ச செய்து காட்டியிருக்கிறார். அதனால் சிங்கள பெளத்தர்கள் தனியாக ஆட்சியை மாற்றவும் முடியும் தமிழர், முஸ்லீம்களின் ஆதரவு சிங்களவர்களுக்கு தேவையில்லை.

  ///அதே போல, சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவின்றி ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் என்னதான் போராடினாலும் தமது உரிமைகளைப் பெறவும் முடியாது. இது யாருடைய விருப்பங்களுக்கும் அப்பாற்பட்ட புறநிலை எதார்த்தம்///

  சிங்கள உழைக்கும் மக்கள் பெரும்பான்மையினர் சிங்கள் பெளத்தர்கள். அவர்களை பெளத்த பிக்குகளால் கட்டுப்படுத்த முடியும். அதனால் அவர்கள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை கனவிலும் ஆதரிக்கப் போவதில்லை. வடக்கு கிழக்கில் சிங்களவர்களைக் குடியேற்றி, தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணில் சிறுபான்மையினராக்கும் திட்டத்துக்குத் தான் சிங்கள உழைக்கும் வர்க்கமும், புத்த பிக்குகளும் முழு ஆதரவளிப்பார்கள், அளிக்கிறார்கள்.

  ///இதைத்தான் ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கையின் அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகள் (அவை சிறியவையானாலும்) தமது பாதையாகத் தெரிந்தெடுத்துக் கொண்டு, இயக்கங்களைக் கட்டமைத்து வருகிறார்கள். இவ்வாறான பாதையைத்தான் ம.க.இ.க.-வினர் ஆதரிக்கின்றனர்.///
  மன்னிக்கவும் ம.க.இ.க.-வினர் கலர் கலராக கனவு காண்கின்றனர். 🙂

  ///சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க.- வினர் ஏற்கின்றனர்.///

  நல்ல பகிடி, இலங்கையைப் பற்றியோ அல்லது சிங்களவர்களைப் பற்றியோ தெரியாதவர்களின் கருத்தை மறப்போம், மன்னிப்போம். 🙂

  • செம பதிலடி. சிங்களவர்கள் ஈழத்தை அங்கீகரிக்கவே மாட்டார்கள் என்பது தான் நமக்கு வரலாறு சொல்லி கொடுத்திருக்கிறது. ஜனதா விமுக்தி பெருமன என்ற போலி கம்யூனிச அமைப்பு தமிழர்களை துரத்தி துரத்தி அடித்தனர் என்பது வரலாறு. சிங்கள கம்யூனிஸ்ட்கள் பெரிதும் கொண்டாடும் ரோகன விஜேவீர ஒரு களைந்தெடுத்த தமிழர் விரோதி என்பதும் வரலாறு. நீங்கள் சொல்வது போல் அங்கு புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிங்கள பாட்டாளி மக்கள் ஒரு போதும் தமிழர்களோடு இணைந்து எள்ளளவும் போராட மாட்டார்கள்.

   எங்கேயோ ஒன்று இரண்டு சிங்களவர்கள் கேமராவுக்கு போஸ் கொடுத்து போராடுவதை பார்த்து, ஏதோ பெரும்பான்மையான சிங்கள பாட்டாளி இனமே ராஜபக்சேவுக்கு எதிராக, தமிழர்களுக்கு ஆதராவாக போராட முன் வருவார்கள் என்று நாம் நம்பினால், நம்மை போன்ற அடி முட்டாள் இனம் உலகில் வேறெங்கும் இருக்க மாட்டார்கள்.

   சிங்கள-ஈழ போராட்ட பின்னணியை பற்றி கடுகளவு கூட புரிதல் இல்லாமல் எழுத பட்டது தான் இந்த கட்டுரை. தங்களின் சமுதாய பார்வையை வேறொரு சமுதாயத்தினுள் நுழைத்து தீர்வு காண நினைப்பது அடி முட்டாள் தனம். அதை தான் இந்த கட்டுரை செய்ய நினைக்கிறது. A classic case of stupid extrapolation!

  • தங்கள் கருத்தினை வழிமொழிகின்ரென். ம க இ க முதலில் தமிழ் இலக்கிய வரலாறு. தமிழக வரலறும் பன்பாடும். இலங்கை தமிழ் வரலாறும் பன்பாடும். படிக்கட்டும் வர்க்க போராட்டம் இன பிரச்சினை வேறு

 13. //////ம.க.இ.க. வினரின் பார்வையில் – இதுதான் அறிவியல்பூர்வமானது, பாட்டாளி வர்க்கப் பார்வையிலானது – ///////

  வறட்டு கொள்கை மட்டுமே முக்கியம், எப்படி எனில்……..

  //////தமிழீழத் தனியரசு கோரிக்கையை மட்டுமே முன்வைத்து, அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார்கள், தமிழினவாதிகள். பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் அவ்வாறு செய்ய முடியாது, செய்யக் கூடாது, செய்யவுமில்லை.//////

  ஏன்ன முடியாது……. ஏன்னா வறட்டு கொள்கை……… மேலும்

  ///////மார்க்சிய – லெனினியப் பார்வையே கிடையாது.///// எங்களுக்கு ,எப்படி மதவாதி தன் மத கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கிரானோ athu போல் எங்களுக்கு மார்கிசம் என்பது மதக்கோட்பாடு , அதை தாண்டி வரமாட்டோம்…….. தாண்டி வந்துட்டா தீட்டு……

  ////ஒடுக்கும் (சிங்களத்) தேசிய இனத்தவரிடையே ஈழத் தமிழர் தன்னுரிமையையும், ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் தேசிய இனத்தவரிடையே ஐக்கியத்தையும் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் அந்நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்திப் புதிய ஜனநாயகப் புரட்சியை முடிப்பதுதான் அக்கட்சியின் இலக்காகவும் திட்டமாகவும் இருக்கும் என்பதுதான் மார்க்சிய – லெனினியப் பார்வை.////////

  இதே சொன்னா என்ன பைத்தியக்காரன் றாங்க , காத சுத்தி மூக்க தொடுறதுன்னு சொல்லுவாங்கல்ல athu இதுதான்…….. மேற்கண்ட வாசகம் தான் எங்கள் கொள்கை முடிவு……. அதாவது சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து போராடி ஈழ விடுதலை பெற வேண்டும்.. கொலை, கொள்ளை, கற்பழிப்பு , இன அழிப்ப்பு எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும்……… தமிழன் சிங்களவனுடன் சேர்ந்து போராடி தமிழன் சுதந்திரம் பெற வேண்டும். ……………

 14. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக உருத்திரகுமார் என்பவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.அவர்களுக்கு பிரதமர், வடமாகாண முதல்வர் என்று நிறைய இருக்கிறார்கள்.அவர்கள் கனவு உலகத்தில் வாழவே விரும்புபவர்கள்.
  ம.க.இ.க. இந்திய மக்களின் பிரச்சினைகளை கவனிப்பதே தேவையானது.

  • முப்ப்டை யோடு ஒரு அரசு காவல் துறை நீதி மன்றம் என்று சகல அரசுத்துறையுடன் இருந்த அரசை மறந்து கனவு உலகம் என்கிறீர்கள் கனவு கண்டது மட்டும் அல்ல உம்மை அதை சாதித்தததையும் யாராலும் மறுக்க முடியாது ஒரு பெரிய நாட்டை வைத்த்து இருப்பவர்களுக்கே மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாது இருக்கும் போது ஒரு சீறிய நாடு எல்லோரும் சேர்ந்து தாக்கினால் எப்ப்டி நிலைத்த்து நிக்கும்

   • நன்றி ப்ரேமா:
    வல்லரசு இந்தியாவே பிச்சைப் பாத்திரத்துடன்
    உலக வங்கி கடை திறந்தவுடன், முதல் ஆளாய்
    நிற்கும்போது…எல்லா நிலைகளும் ஆதிக்கம்
    இருந்த தமிழ் ஈழம்,புறம்போக்கு நாடுகளின் கண்ணை உறுத்தியது
    உண்மைதான்…ஒரு புறம் இலங்கைக்கு துப்பாக்கியும்,எலிகாப்டரும்,அதிவிரைவு
    படகுகளும் (ஓசியில்) வழங்கிவிட்டு,புலிகளுக்கு அமைதி உப தேசம் செய்த பிரிட்டன்
    மகாராணிகள்…..

 15. @ Viyasan,

  //புத்த பிக்குகள் இருக்கும் வரை இந்த மார்க்சிய – லெனினியப் பார்வை இலங்கையில் எடுபடாது என்பது தான் உண்மை //

  முதலில் கட்டுரை தமிழர்களை சிங்கள பிக்குகளோடு இணைந்து போராடக் கோரவில்லை. சரியாகச் சொல்லப் போனால், தமிழ்பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும் என்று ஈழத் தமிழர்களுக்கான வழிகாட்டுதலை கட்டுரை முன்வைக்கவில்லை. பொதுவில் எது சரியான மா.லெ கண்ணோட்டம் என்பதையும், குறிப்பாக ஈழத்தமிழர்களின் எந்தவிதமான போக்கைக் கைக்கொள்வதை இந்திய பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியும் என்கிற பார்வையிலேயே கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்னவென்பது உலகெங்கும் இது வரையில் சோதித்தரியப்பட்ட வழிமுறை எதுவோ, அதையே ஒரு விரிவாக்க நலன் கொண்ட பக்கத்து நாட்டின் பாட்டாளி வர்க்கம் என்கிற வரம்புக்குள் நின்று நாங்கள் ஆதரிக்க முடியும்.

  இந்திய அமைதிப்படைகெதிராக… //பொதுவான வெறுப்பின் அடிப்படையில் தான் சிங்களவரும், தமிழரும் ஒன்றுபட்டனரே தவிர, தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்து சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றுபடவில்லை. அந்த தருணத்தில் இந்தியப்படைகள் சிங்களவருக்கும் தமிழருக்கும் பொது எதிரி, அவ்வளவு தான்.//

  உங்களது இதே அளவு கோளைத் தான் முந்தைய மறுப்பில் நீங்களே மறுத்திருந்தீர்கள். வெளியிலிருந்து வந்த பொது எதிரிக்கு எதிராக சிங்கள தமிழ் இனத்தைச் சேர்ந்த ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரே ஒன்றுபடும் போது, சிங்கள பாட்டாளி வர்க்கத்துக்கும் தமிழ் பாட்டாளி வர்க்கத்துக்குமான பொது எதிரிக்கு எதிராக ஒன்றுபடுவதில் சிக்கல் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை.

  //பச்சைப்பொய். இந்தக் கட்டுரையாசிரியருக்கு ஒன்றும் தெரியாது போலிருக்கிறது. சுனாமியின் பேரழிவால் பெரியளவில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களும் முஸ்லீம்களும் தான்…….etc About Tsunami releif //

  கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது உண்மை…! நீங்கள் சொல்வது அரை உண்மை. தமிழர் பகுதிகளுக்கு நிவாரணப் பணிகள் சென்றடைவதை சிங்கள அரசு தாமதப்படுத்தியது என்பது உண்மை தான். ஆனால், சுனாமியால் தமிழர் பகுதிகள் பாதிக்கப்பட்டவுடன் அரசு இயந்திரம் அந்தப் பகுதிகளை அடையும் முன் சுனாமியால் பாதிக்கப்படாத பகுதிகளில் இருந்த சாமானிய சிங்கள மக்கள் உதவிக்கு ஓடோடி வந்தனர். சொல்லப்போனால், அந்தக் காலப்பகுதியில் நானே கூட ஒரு புலி ரசிகன் தான். இப்படி சிங்களர்கள் தமிழர்களுக்கு உதவி செய்த சம்பவங்கள் சிலவற்றை பத்திரிகைகளிலும் (இணையத்திலும்) வாசித்து ஆச்சர்யப்பட்டது இன்றும் நினைவிருக்கிறது.

  உதாரணத்திற்கு ஒரு சுட்டி.. (தேடினால், நிறைய கிடைக்கும். எனினும், நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் மட்டுமே இருப்பதால், நேரத்தை விரையம் செய்ய எனக்கு விருப்பமில்லை )

  https://www.wsws.org/en/articles/2005/01/ampa-j08.html?view=print

  ///முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் மனைவியாகிய சிங்களப் பெண்ணைப் போன்று தமிழ்த் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் சிங்களவர்களும், சிங்களவர் மற்றும் ஈழத் தமிழர்களைக் கொண்ட குழுக்களும் அங்குண்டு.///

  தமிழர்களின் உரிமைகளை ஆதரிக்கக் கூடிய சிங்கள குழுக்கள் பற்றி நீங்கள் சொல்வது – //அப்படியெல்லாம் குறிப்பிடும் படி எந்தக் குழுவும் இலங்கையில் கிடையாது. //

  இது ஒரு பச்சைப் பொய்… (பார்க்க – http://www.wsws.org/en/articles/2013/07/01/sril-j01.html). விதிவிலக்காக புலிகளையே ஆதரித்த வெகுசில சிங்களர்கள் கூட உண்டு. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திய / வலியுறுத்தும் சிறுபான்மை சிங்கள அரசியல் குழுக்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்தப் பிரிவினரை வளர்த்தெடுக்கவோ, இவர்களோடு நேசபாவம் காட்டவோ, இவர்களைக் கொண்டு பிற சிங்கள மக்களிடம் தமிழர்களின் துன்பதுயரங்களைப் பிரச்சாரம் செய்யவோ, தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையின் நியாயத்தை எடுத்துக் கூறவோ புலிகள் எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக, பெரும்பான்மை சிங்களர்களிடமிருந்து தமிழர்களை அந்நியப்படுத்தும் வேலையைத் தான் செய்தனர். பல சந்தர்பங்களில் அப்பாவி சிங்களர்களைக் கொன்று குவித்து எந்தக் காலத்திலும் சிங்களப் பெரும்பான்மை தமிழர்களோடு நெருக்கம் காட்டிவிடாதவாறு தடுத்துக் கொண்டனர். இதன்மூலம் தமிழ் சமூகத்திற்கு வெளியே பெரும்பூதம் போல் சிங்கள மக்கள் ஒட்டுமொத்தமாக நிற்பதாக கட்டமைத்து தங்கள் சாகசவாத / இராணுவவாத அரசியல் போக்கிற்கு நியாயம் தேடிக் கொண்டனர்.

  /////சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க.- வினர் ஏற்கின்றனர்.///

  நல்ல பகிடி, இலங்கையைப் பற்றியோ அல்லது சிங்களவர்களைப் பற்றியோ தெரியாதவர்களின் கருத்தை மறப்போம், மன்னிப்போம். 🙂 ///

  தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ம.க.இ.க அமைப்பினரால் ‘ஐந்தாம் கட்ட ஈழப் போரை’ துவங்க முடியாது என்பதால் நீங்கள் மன்னித்துத் தான் ஆக வேண்டும். அவ்வாறு ஒரு போரை இங்கிருந்து அங்கே துவங்க உத்தேசித்துள்ள சீமான், நெடுமா போன்றோரே உங்களுக்கு உவப்பானவர்களாக இருப்பார்கள். என்ன இருந்தாலும், 50,000 ஆண்டு வீர வரலாறு கொண்டவர்களில்லையா நாம்? இன்னும் ஒரு மூன்று நான்கு லட்சம் மக்களையாவது கொல்லக் கொடுத்தால் தானே அடங்கும்?

  ஆமாம், நீங்கள் எங்கே ரொரோண்டாவா, அவுஸ்திரேலியாவா?

 16. //முதலில் கட்டுரை தமிழர்களை சிங்கள பிக்குகளோடு இணைந்து போராடக் கோரவில்லை. சரியாகச் சொல்லப் போனால், தமிழ்பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும் என்று ஈழத் தமிழர்களுக்கான வழிகாட்டுதலை கட்டுரை முன்வைக்கவில்லை. ///

  திரு.மன்னாரு,

  என்னுடைய பதிலின் சாரம் கட்டுரையாசிரியரின் மார்க்சிய-லெனினிய கண்ணோட்டம் இலங்கைப் பிரச்சனைக்கு சரிவராது என்பது தான். இலங்கையின் உண்மையான நிலவரத்தை அதாவது அறுதிப்பெரும்பான்மையினராகிய சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் மீது எந்தளவுக்கு சிங்கள பெளத்த பிக்குகள் ஆளுமையைக் கொண்டுள்ளார்கள் என்பதையும், சிங்கள பாட்டாளி வர்க்கம் ஒன்றும் மார்க்சிய லெனினிய வாதிகள் அல்ல, துட்ட கைமுனுவின் வாரிசுகள் எனப் பெருமைப்படும் சிங்கள பெளத்தர்கள் என்பதைக் கட்டுரையாசிரியர் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி விட்டார் என்பதையும் சுட்டிக் காட்டுவது தான்.

  இலங்கை அரசியலிலும், சிங்களப் பெரும்பான்மையினரிடமும் பெளத்த பீடங்களும், பெளத்த பிக்குகளினதும் ஆதிக்கத்தைப் பற்றி ஒரு வரி கூடக் கூறாமல், இலங்கையின் இனப்பிரச்சனையைப் பற்றி யாராவது கருத்து தெரிவித்தால், அதை விட முட்டாள் தனம் வேறொன்றும் இருக்கவே முடியாது, இலங்கையில் இன்று வரை தமிழர்களின் போராட்டத்துக்கு எந்த வகையான தீர்வும் கிடைக்காததற்குக் காரணம், விடுதலைப்புலிகளோ அல்லது சிங்கள அரசியல்வாதிகளோ அல்ல அதற்கு முதல் காரணம் சிங்கள பெளத்த பிக்குகள் தான். அவர்களின் சம்மதம் இல்லாமல் இலங்கையில் எந்த சிங்கள அரசியல்தலைவரும் தனது அரசியல்வாழ்வைப் பணயம் வைத்து ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த முனையவே மாட்டார் அந்த உண்மையைச் சுட்டிக் காட்டினால் “சிங்கள் பிக்குகளோடு இணைந்து போராடக் கோரவில்லை” என்கிறார் தோழர் மன்னாரு. கட்டுரையாசிரியர் புத்த பிக்குகளைப் பற்றி எதுவுமே கூறவில்லை, ஏனென்றால் அவருக்கு இலங்கையிலுள்ள உண்மையான நிலவரமோ, சிங்களவர்களைப் பற்றியோ எதுவும் தெரியாது என்பது தான் உண்மை.

  ///பொதுவில் எது சரியான மா.லெ கண்ணோட்டம் என்பதையும், குறிப்பாக ஈழத்தமிழர்களின் எந்தவிதமான போக்கைக் கைக்கொள்வதை இந்திய பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியும் என்கிற பார்வையிலேயே கட்டுரை எழுதப்பட்டுள்ளது.///

  மார்க்சிய-லெனினிய வாதிகள் அல்லது கம்யூனிஸ்டு கட்சிகள் இந்தியாவில் ஆட்சியில் இருந்தால், அல்லது இந்தியாவின் பெரும்பான்மை பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தால், “ஈழத்தமிழர்கள் எந்தவிதமான போக்கைக் கைக்கொள்வதை இந்திய பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியும்” என்று அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு அறிவுரை கூறலாம். ஆனால் அவர்களே ஒரு சீட்டுக்கும், இரண்டு சீட்டுக்கும் இந்தியாவில் கூட்டணி தேடி அலைந்து திரிந்து கொண்டு, இந்திய பாட்டாளி வர்க்கம் முழுவதையும் தாம் பிரதிநிதித்துவப் படுத்துவதாக நினைத்துக் கொள்கிறார்களா என்பதை தோழர் மன்னாரு விளக்குவார் என்று நம்புகிறேன். 🙂

  ///ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்னவென்பது உலகெங்கும் இது வரையில் சோதித்தரியப்பட்ட வழிமுறை எதுவோ, அதையே ஒரு விரிவாக்க நலன் கொண்ட பக்கத்து நாட்டின் பாட்டாளி வர்க்கம் என்கிற வரம்புக்குள் நின்று நாங்கள் ஆதரிக்க முடியும்.///

  அதாவது ஒரு நாட்டின் உண்மை நிலவரத்தை அறியாமல் ஒரே Formula வை எல்லா நாட்டிலுள்ள பிரச்சனைக்கும் தீர்வாகக் கூறுவது, வேறு வகையில் சொல்வதானால், எல்லா நோய்க்கும் ஒரே மருந்தைக் கொடுத்துப் பார்ப்பது, நோயாளி செத்துப்போவதை அல்லது நோய் இன்னும் தீவிரமடைவதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். அப்படித்தானே? 🙂

  //சிங்கள பாட்டாளி வர்க்கத்துக்கும் தமிழ் பாட்டாளி வர்க்கத்துக்குமான பொது எதிரிக்கு எதிராக ஒன்றுபடுவதில் சிக்கல் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை.//

  நான் என்ன சொன்னேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. அதாவது தமிழர்கள் தேசிய இனம் என்பதையோ அல்லது வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதையோ அல்லது தமிழர்களுக்கு பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையோ சிங்கள பாட்டாளி வர்க்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவற்றை தமிழர்கள் சிங்கள பாட்டாளி வர்க்கத்திடம் வலியுறுத்தினால் அவர்களுக்கு தமிழர்கள் தான் பொது எதிரியாவார்கள்.

  /// (பார்க்க – http://www.wsws.org/en/articles/2013/07/01/sril-j01.html). ///

  இதுவரை இலங்கையில் அரசாங்கத்துகெதிராக சிங்களவர்கள் மேற்கொண்ட எந்தக் கலவரமோ, அல்லது ஆயுதமேந்திய போராட்டமோ, அல்லது அந்தப் போராட்டங்களை நடத்திய சிங்கள இளைஞர்களோ தமிழர்களைத் தேசிய இனமாகவோ அல்லது அவர்களின் சுயநிர்ணய உரிமையையோ ஆதரிக்கவில்லை. அல்லது அவர்கள் எவரும் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை, சுயநிர்ணய உரிமையை ஆதரித்து ஒரு போஸ்டர் கூட ஒட்டியதில்லை. மாக்சிய லெனினிய வாதியாகிய ரோகண விஜேவீராவின் கடைசி போராட்டம் கூட Indo-Lanka Accord இன் கீழ் தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதை எதிர்த்து தான் நடைபெற்றது.

  “Rajapakse’s list of threats included the “re-emergence” of the LTTE via groups such as the Transitional Government of Tamil Eelam and the British Tamil Forum abroad. He alleged that these groups were pushing for “international investigations into war crimes and claims of genocide” and “for the resumption of conflict through reorganising local pro-LTTE elements.”

  “The defence minister’s reference to a renewed “terrorist” threat is aimed at whipping up anti-Tamil communalism to divide the emerging struggles of the working class. Communal politics has been the stock-in-trade of Colombo governments ever since the country’s formal independence in 1948. Repeated anti-Tamil pogroms and entrenched official discrimination led to the eruption of the conflict”

  “….The central thrust of the defence secretary’s lecture was to foment communal divisions while preparing the security forces to suppress any anti-government opposition.”

  நீங்கள் மேலே குறிப்பிட்ட லிங்க் இல் கூட, இனிமேல் சிங்கள பாட்டாளி வர்க்கம் தமிழர்களுடன் சேர்ந்து போராடும் என்று கோத்தபாய ராஜபக்ச கூறவில்லை. தமிழர்களால் நாட்டுக்கு ஆபத்து, தமிழ்ப் பயங்கரவாதம் உயிர்த்தெழுகிறது என்ற பீதியைக் கிழப்பினால் சிங்கள பாட்டாளி வர்க்கத்தை அரசங்கத்துக்கெதிராக கிளர்ந்தெழாமல் ஒருங்கிணைக்கலாம் என்பது தான் கோத்தபாயாவின் கருத்து, இதிலிருந்து என்ன தெரிகிறது.தமிழர்களால் நாட்டுக்கு ஆபத்து, அல்லது தமிழர்கள் உரிமை கேட்கிறார்கள் அவர்களை அடக்க வேண்டும் என்றால் சிங்கள பாட்டாளி வர்க்கம் தமது பிரச்சனைகளை மறந்து அரசாங்கத்தின் பின்னால் அணிதிரளும் என்பது தான். அதாவது தமிழர்களுக்கெதிரான சிங்கள இனவாதம் அவர்கள் ஒன்று படச் செய்யும் வல்லமையுள்ளது. இந்த லட்சணத்தில் சிலர் தமிழர்களை சிங்கள் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடட்டுமாம்.

 17. ///ஆனால், சுனாமியால் தமிழர் பகுதிகள் பாதிக்கப்பட்டவுடன் அரசு இயந்திரம் அந்தப் பகுதிகளை அடையும் முன் சுனாமியால் பாதிக்கப்படாத பகுதிகளில் இருந்த சாமானிய சிங்கள மக்கள் உதவிக்கு ஓடோடி வந்தனர். ///

  பக்கத்து வீடு எரிந்ததை பார்த்து அடுத்த வீட்டுக்காரன் உதவி செய்ததைப் பார்த்து விட்டு, அந்த நாட்டிலேயே இனப்பிரச்சனை இல்லை, என்று ஒருவன் முடிவெடுத்தால் அது எவ்வளவு முட்டாள் தனமானதோ அது போல் தான் ஒரு சில சிறிய நல்லெண்ணமுள்ள சிங்களவர்களின் செயல்களின் அடிப்படையில் இலங்கையில் சிங்கள-தமிழர் பிரச்சனையைப் பார்ப்பதுமாகும். சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து நடைபெற்ற ஒவ்வொரு இனக்கலவரத்திலும் கூட சில சிங்களவர்கள் தமிழர்களைக் காப்பாற்றித் தானிருக்கிறார்கள் அதைக் காரணம் காட்டி இலங்கையின் சிங்களவர்களிடம் இனவாதம் இல்லை என்று கூற முடியுமா?

  ஒரு சில தனிப்பட்ட சிங்களவர்களிடம் எங்களுக்குள்ள நட்பை அல்லது அவர்களிடம் எங்களுக்கேற்பட்ட நல்ல அனுபவத்தை முழுச்சிங்கள இனத்தின் institutionalized இனவாதத்தை எடைபோடும் அளவுகோலாகக் கொள்வது மிகவும் தவறு. உண்மையில் சிங்களவர்கள் இனவாதமற்றவர்கள் என்றால் சுதந்திரத்தின் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், யார் தமிழர்களுக்கு உரிமைகளை மறுக்கிறார்களோ, எந்தக் கட்சி அல்லது எந்த அரசியல்வாதி தமிழரகளுக்கெதிராக கூடுதலாக நஞ்சைக் கக்கிறாரோ அவரை, அந்தக் கட்சியைத் தான் சிங்களவர்கள் ஆட்சியை அமைக்கத் தெரிவு செய்தது, ஏன்?

  சிங்களவர்களின் இந்த தமிழ் வெறுப்பு இனவாதத்தை முழுமையாகப் புரிந்து கொண்ட அரசியல்வாதிகள் இரண்டு பேர். ஒன்று ஜே. ஆர்.ஜெயவர்த்தனா மற்றவர் மகிந்த ராஜபக்ச. அதனால் தான்:

  President Jayawardene was quoted in the Daily Telegraph of 11 July 1983 as saying: “I am not worried about the opinion of the Tamil people.. now we cannot think of them, not about their lives or their opinion … Really if I starve the Tamils out, the Sinhala people will be happy”.

  அதே போல் ராஜபக்ச வன்னியில் தமிழர்களைப் பதைக்கப் பதைக்க கொன்றார் என்பதில் சிங்களவர்களுக்கு எந்த வித சந்தேகமுமில்லை, ஆனால் சிங்களவர்கள் சாதி, மத வேறுபாடின்றி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து கடைசிவரை காப்பாற்ற முனைவார்கள். ஏனென்றால் அவர்களின் சார்பில் மகிந்த ராஜபக்ச தமிழர்களைக் கொன்றிருக்கிறார். அதாவது அப்பாவித் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை மறுப்பது தான் தாய்நாட்டுப்பற்றின் அடையாளம் என்பது சிங்களவர்களின் கருத்து. இப்படியான சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் தமிழர்கள் எப்படி இணைந்து தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராட முடியும் என்பது இந்தக் கட்டுரையாசிரியருக்கும், தோழர் மன்னாருவுக்கும் தான் வெளிச்சம். 🙂

  ////உதாரணத்திற்கு ஒரு சுட்டி.. (தேடினால், நிறைய கிடைக்கும்.////

  உங்களுக்காக நானும் சுட்டிகளைத் தேடி இணைத்திருக்கிறேன். ஒரு சுட்டி எவ்வாறு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச வெளிநாட்டு சுனாமி நிதியை தனது வங்கிக்கணக்குக்கு மாற்றினார் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறது, சுனாமி நிதி மட்டுமல்ல, போருக்குப் பின்னால் இந்திய உதவிகள் கூட முழுமையாக தமிழர்களைச் சென்றடைவதில்லை. இன்னொரு சுட்டியில் செஞ்சிலுவைச் சங்கத்தால் தமிழர்களுக்கு என ஒதுக்கப்பட்ட டிராக்டர்களை சிங்களவர்களுக்கு திருப்பி விடுவதை பார்த்து, செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரியாகிய ஒரு வெளிநாட்டுப் பெண் செய்வதறியாது அழுவதைக் காணலாம். இது தான் சிங்களவர்களின் வழக்கம் இப்படியான தில்லு முல்லுகள் தான் சுனாமி நிதியுதவிக்கும் நடைபெற்றது, இதெல்லாம் அறியாமல் தமிழ்நாட்டு மாக்சிய, லெனினிய வாதிகள் சிங்களவர்களுடன் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுங்கள் என்கிறார்கள், அதற்கு ஒரு சில சிங்களவர்கள் சுனாமி நேரத்தில் உதவி செய்தார்கள், அதை நானும் வாசித்தேன் என அண்ணன் மன்னாருவும் வக்காலத்து வாங்குவதைப் பார்த்து எனக்கு எங்கே போய் முட்டிக் கொள்வதேன்று தெரியவில்லை.

  1. Ethnicity, Aid, and Peace in Fragile States: A Sri Lankan Case Study http://www.sangam.org/articles/view2/1217.pdf.PDF

  2. The Tsunami funds scandal popularly known as the Helping Hambantota case
  http://www.lankastandard.com/vault/helping-hambantota-investigation/

  3. World Bank aid diverted to Sinhala colonisation in Mullaiththeevu
  http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34377

  4. Indian aid to war-affected Tamils diverted to Sinhala colonisers
  http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34735

  5. Govt. authorities interfere with distribution of two wheel tractors to war affected farmers by the Red Cross – The photo shows the Red cross Officer crying as their plans to help Tamils interfered with on racial grounds.
  http://www.lankanewspapers.com/news/2010/10/61465_space.html

  ///புலிகளையே ஆதரித்த வெகுசில சிங்களர்கள் கூட உண்டு.///

  அவர்கள் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு ஆதரித்தார்கள். தமிழர்களிடம் பணம் உண்டு, இப்படித்தான் அவர்களிடமிருந்து பணத்தைக் கறக்க முடியும் என்று சிங்களவர்களுக்குத் தெரியும். வன்னிப்போரின் முடிவில் சிங்கள இரானுவத்தினர் கூட முள்வேலி முகாம்களிலிருந்த பலரை பணம் வாங்கிக் கொண்டு வெளியே விட்டார்கள். அதனால் அந்த சிங்கள ராணுவத்தினர் கூட உங்களின் அகராதியில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் தமிழர்களின் போராட்டத்தையும் ஆதரிப்பவர்கள் அப்படித்தானே? 🙂

  //அவ்வாறு ஒரு போரை இங்கிருந்து அங்கே துவங்க உத்தேசித்துள்ள சீமான், நெடுமா போன்றோரே உங்களுக்கு உவப்பானவர்களாக இருப்பார்கள்.//

  உண்மையில் இவர்கள் ஈழம் அமைத்து தருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்களோ என்னவோ, எனக்குத் தெரியாது அப்படி எந்த நம்பிக்கையும் எனக்குக் கிடையாது. அதேவேளையில் எங்களை ஆதரிப்பவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று எங்களுக்குத் தெரிந்தாலும் கூட, அவர்களின் ஆதரவை எதற்காக புறக்கணிக்க வேண்டும். சகோதர உணர்வு அவர்களை இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை அறிய அவர்களைத் தூண்டுகிறது. அதனால் அவர்கள் எங்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ராஜபக்சவை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டிய தேவையுள்ளவர்கள் மட்டும் தான், சீமான், நெடுமாறன் போன்ற தமிழீழ ஆதரவாளர்களை தூற்றுவார்கள் என்பது என்னுடைய கருத்து.

  என்னைப் பொறுத்தவரையில் தமிழீழத்தை விட, இப்பொழுது வடக்கு –கிழக்கில் நடைபெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நிறுத்தப் படவேண்டும். அதற்கு சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் கூட்டுச் சேர முடியாது. ராஜபக்ச அரசு வடக்கு கிழக்கில் சிங்களவர்களைக் குடியேற்றுகிறது என்று சிங்கள பாட்டாளி வர்க்கம் கேள்விப்பட்டால், இப்பொழுது மகிந்தா ராஜபக்சவைக் கடவுளாகக் கும்பிடாத சிங்களவர்கள் கூட அவரைக் கடவுளாகக் கும்பிடத் தொடங்கி விடுவார்கள்.

  //இன்னும் ஒரு மூன்று நான்கு லட்சம் மக்களையாவது கொல்லக் கொடுத்தால் தானே அடங்கும்?//

  நீங்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் பல தமிழ் Surrender Agents களின் வேலை என்னவென்றால் , சிங்களவர்கள் மூன்று நான்கு லட்சம் எங்களின் மக்களைக் கொன்றதை மறந்து விட வேண்டும், அவர்கள் கொன்றதை நினைவூட்டி, நீதி கேட்டால், அவர்கள் மிஞ்சி இருக்கிறவர்களைல்லாம் கொன்று விடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டி, அவர்களைப் போர்க்குறச் சாட்டுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். ஆனால் சிங்கள இராணுவ ஆட்சியின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு பேராகக் தமிழர்கள் கொல்லப்படுவதை, அபலைப்பெண்கள் கற்பழிக்கப்படுவதை, அல்லது தமிழர்களின் வீடுகளிலும் நிலங்களிலும் சிங்களவர்களைக் குடியேற்றப்படுவதை பற்றி எல்லாம் அவர்கள் பேசமாட்டார்கள், ஏனென்றால் அதுவல்ல Surrender Agents களின் வேலை. 🙂

  //ஆமாம், நீங்கள் எங்கே ரொரோண்டாவா, அவுஸ்திரேலியாவா?//

  ரொரோண்டாவோ, அவுஸ்திரேலியாவோ அல்லது ஆபிரிக்காவாகவோ இருந்தால் தான் என்னங்கோ? வெளிநாடுகளில் வாழ்கிறவர்கள் எல்லாம் ஈழத்தமிழர்கள் இல்லாமல் போய் விடுவார்களா? அவர்கள் எல்லாம் கருத்துக் கூற முடியாதா?

 18. இனம் என்பது, வர்க்கத்திற்கு அப்பாற்பட்டது போல பிதற்றும் உங்களது வரலாற்று அறிவு வெறும் பெருமை பீத்தகலயம் என்பது தெரியவருகிறது. தமிழினம் மட்டுமல்ல எந்த ஒரு இனத்தையும் அதன் சமூக வரலாற்று மெய்மையிலும், சமூக பொருளாதார, அரசியல் வர்க்க கண்ணோட்டத்திலும் அதன் வரலாறு, பண்பாட்டு அம்சங்களை ஆராய்வதே ம.க.இ.க.வின் கண்ணோட்டம். அந்த வகையில் எந்த ஒரு தேசிய இனத்தின் முற்போக்கு அம்சத்தையும், பிற்போக்கு அம்சத்தையும் கவனத்தில் கொண்டே ம.க.இ.க. விமர்சித்து வருகிறது.

  உங்களைப்போல உலகத் தமிழினத்திலேயே யாழ்ப்பாண வெள்ளாள கொழுப்புதான் ஒட்டுமொத்த தமிழர்களின் ஒப்பற்ற கொழுப்பு என்பதை உழைக்கும் தமிழர்கள் ஏற்பதுமில்லை. அன்று உருவ வழிபாட்டை மறுத்து ஜோதி வழிபாட்டை நிறுவிய வள்ளலார் மீது அருட்பாவா X மருட்பாவா என்று சைவ வெறியோடு பாய்ந்த யாழ்பாணத்து ஆறுமுக நாவலர் முதல் புலிகளின் ஆயுத வழிபாட்டை மறுத்து வர்க்க அரசியலை பேசும் சக்திகள் மீது யாழ்ப்பாண வெள்ளாள குறுந்தேசிய வெறியோடு பாயும் இன்றைய உலகமய ‘சைவர்கள்’ வரை பிற்போக்கு தேசியத்தையே தமிழர்களின் வரலாறாக கதைப்பதை ம.க.இ.க. மட்டுமல்ல, நவீன கால சமூக ஆய்வாளர்கள் வரை அம்பலப்படுத்தியே வந்துள்ளனர். புத்தபிக்குகளின் கட்டுப்பாட்டில் சிங்கள பெளத்த இனவெறிக்கு சீரழிந்துள்ள சிங்கள பாட்டாளிவர்க்கத்தை இனி திருத்தவே முடியாது என்ற உங்கள் தீர்மானம் ஒரு பக்கம் இருக்கட்டும், புலி பிக்குகளின் கட்டுப்பாட்டில் இருந்த உங்கள் தமிழ் ‘பாட்டாளிகள்’, மலையகத் தமிழருக்காகவாவது ‘தமிழ் ஒற்றுமை’யுடன் போராடிய வரலாறு உண்டா? சிங்கள ஆளும் வர்க்க முரண்களில் யாழ்ப்பாண வெள்ளாளத் தமிழன் எப்போதும் சிங்கள முதலாளி வர்க்கத்தோடு சேர்ந்துகொண்டு, மலையகத் தமிழர்களை கை கழுவி விட்டதுதான்… புலிபிக்குகள் வரை கைகொண்ட வரலாறு.

  சிங்கள இனவெறி அரசை வீழ்த்துவதற்கு அதன் அரசியல் முரண்களை கையாண்டு ஏதோ வர்க்கப்போராட்டம் நடத்தி சலித்துப்போனவர்கள் மாதிரி பம்மாத்து எதற்கு? உங்களுடைய யாழ் வெள்ளாள குறுந்தேசிய அரசியலே ஏகாதிபத்திய அமெரிக்கா, மற்றும் இந்திய மேலாதிக்க அரசின் ஆளும் வர்க்கங்களையெல்லாம் நட்பு சக்திகளாக தயை கூர்ந்தும், முறுக்கியும் சுதந்திர தமிழகத்தின் எதிரிகளிடம் நம்பிக்கை வைத்து சீரழிந்த வரலாறுதானே! ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கு எதிரான ஏகாதிபத்திய, ஆளும் வர்க்கங்களிடம் தந்ரோபாவம் செய்து ஏதோ சைவப்புலிகள் சாதித்து விட்டதைப்போலவும், சிங்கள பாட்டாளிவர்க்கம் மட்டும்தான் தீராப்பகை சக்தி போலவும் வரையறுப்பது அரசியல் பாமரத்தனமின்றி வேறென்ன?

  மேலும் கட்டுரை எந்த தீர்வையும் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கவுமில்லை, பசப்பவுமில்லை, உலக அரசியல் கண்ணோட்டத்தின் எதார்த்த நிலைமைகளில் எது ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கு சாத்தியமான வழி என்பதை பொதுவில் மட்டுமே வைக்கிறது. மாறாக யாழ்ப்பாண வெள்ளாள கொழுப்புதான், எங்கள் மன்னராட்சி மயக்கத்திற்கு தமிழகத் தமிழன் வேலைசெய்ய வேண்டும் என்று ஜனநாயகமற்ற முறையில் சவடால்களை திணிக்கிறது. வடக்கிலும், கிழக்கிலும் உள்ள பாட்டாளித் தமிழன் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு யாழ்ப்பாண வெள்ளாளனுக்கு விவாதமற்று வேலைசெய்ய வேண்டும், யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடி விசாவை நீட்டிக்கொண்டு வெளிநாடு போய் செட்டிலாகி ”பரதம் ஆடி தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும்!” என்ற பிற்போக்கு குறுந்தேசியம் தனது இயலாமைக்கு வருந்த வேண்டாம், மீள் பரிசீலனையாவது கூடாதா? அதை வலியுறுத்தினால் கம்யூனிசத்தின் வர்க்கக் கண்ணோட்டத்தின் மீது அப்படியென்ன காய்ச்சல்? தமிழினம் என்பதற்காக மட்டுமல்ல, எந்தவொரு அடக்கப்படும் தேசிய இனத்தின் உரிமையையும் அரசியல் பார்வையுடன் ஆதரிப்பவர்கள் ம.க.இ.க. யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக் குடி அரசியல் போல தனக்கு வந்தால் ரத்தம், காஷ்மீருக்கு வந்தால் தக்காளி சட்னி என்று இந்திய மேலாதிக்க வெறிக்கு புலிஆட்டம் போடும் ஜால்ட்ராக்கள் ம.க.இ.க அல்ல!

  துரை. சண்முகம்.

 19. இனம் என்பது, வர்க்கத்திற்கு அப்பாற்பட்டது போல பிதற்றும் உங்களது வரலாற்று அறிவு வெறும் பெருமை பீத்தகலயம் என்பது தெரியவருகிறது. தமிழினம் மட்டுமல்ல எந்த ஒரு இனத்தையும் அதன் சமூக வரலாற்று மெய்மையிலும், சமூக பொருளாதார, அரசியல் வர்க்க கண்ணோட்டத்திலும் அதன் வரலாறு, பண்பாட்டு அம்சங்களை ஆராய்வதே ம.க.இ.க.வின் கண்ணோட்டம். அந்த வகையில் எந்த ஒரு தேசிய இனத்தின் முற்போக்கு அம்சத்தையும், பிற்போக்கு அம்சத்தையும் கவனத்தில் கொண்டே ம.க.இ.க. விமர்சித்து வருகிறது. உங்களைப்போல உலகத் தமிழினத்திலேயே யாழ்ப்பாண வெள்ளாள கொழுப்புதான் ஒட்டுமொத்த தமிழர்களின் ஒப்பற்ற கொழுப்பு என்பதை உழைக்கும் தமிழர்கள் ஏற்பதுமில்லை. அன்று உருவ வழிபாட்டை மறுத்து ஜோதி வழிபாட்டை நிறுவிய வள்ளலார் மீது அருட்பாவா X மருட்பாவா என்று சைவ வெறியோடு பாய்ந்த யாழ்பாணத்து ஆறுமுக நாவலர் முதல் புலிகளின் ஆயுத வழிபாட்டை மறுத்து வர்க்க அரசியலை பேசும் சக்திகள் மீது யாழ்ப்பாண வெள்ளாள குறுந்தேசிய வெறியோடு பாயும் இன்றைய உலகமய ‘சைவர்கள்’ வரை பிற்போக்கு தேசியத்தையே தமிழர்களின் வரலாறாக கதைப்பதை ம.க.இ.க. மட்டுமல்ல, நவீன கால சமூக ஆய்வாளர்கள் வரை அம்பலப்படுத்தியே வந்துள்ளனர். புத்தபிக்குகளின் கட்டுப்பாட்டில் சிங்கள பெளத்த இனவெறிக்கு சீரழிந்துள்ள சிங்கள பாட்டாளிவர்க்கத்தை இனி திருத்தவே முடியாது என்ற உங்கள் தீர்மானம் ஒரு பக்கம் இருக்கட்டும், புலி பிக்குகளின் கட்டுப்பாட்டில் இருந்த உங்கள் தமிழ் ‘பாட்டாளிகள்’, மலையகத் தமிழருக்காகவாவது ‘தமிழ் ஒற்றுமை’யுடன் போராடிய வரலாறு உண்டா? சிங்கள ஆளும் வர்க்க முரண்களில் யாழ்ப்பாண வெள்ளாளத் தமிழன் எப்போதும் சிங்கள முதலாளி வர்க்கத்தோடு சேர்ந்துகொண்டு, மலையகத் தமிழர்களை கை கழுவி விட்டதுதான்… புலிபிக்குகள் வரை கைகொண்ட வரலாறு.

  சிங்கள இனவெறி அரசை வீழ்த்துவதற்கு அதன் அரசியல் முரண்களை கையாண்டு ஏதோ வர்க்கப்போராட்டம் நடத்தி சலித்துப்போனவர்கள் மாதிரி பம்மாத்து எதற்கு? உங்களுடைய யாழ் வெள்ளாள குறுந்தேசிய அரசியலே ஏகாதிபத்திய அமெரிக்கா, மற்றும் இந்திய மேலாதிக்க அரசின் ஆளும் வர்க்கங்களையெல்லாம் நட்பு சக்திகளாக தயை கூர்ந்தும், முறுக்கியும் சுதந்திர தமிழகத்தின் எதிரிகளிடம் நம்பிக்கை வைத்து சீரழிந்த வரலாறுதானே! ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கு எதிரான ஏகாதிபத்திய, ஆளும் வர்க்கங்களிடம் தந்ரோபாவம் செய்து ஏதோ சைவப்புலிகள் சாதித்து விட்டதைப்போலவும், சிங்கள பாட்டாளிவர்க்கம் மட்டும்தான் தீராப்பகை சக்தி போலவும் வரையறுப்பது அரசியல் பாமரத்தனமின்றி வேறென்ன?

  மேலும் கட்டுரை எந்த தீர்வையும் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கவுமில்லை, பசப்பவுமில்லை, உலக அரசியல் கண்ணோட்டத்தின் எதார்த்த நிலைமைகளில் எது ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கு சாத்தியமான வழி என்பதை பொதுவில் மட்டுமே வைக்கிறது. மாறாக யாழ்ப்பாண வெள்ளாள கொழுப்புதான், எங்கள் மன்னராட்சி மயக்கத்திற்கு தமிழகத் தமிழன் வேலைசெய்ய வேண்டும் என்று ஜனநாயகமற்ற முறையில் சவடால்களை திணிக்கிறது. வடக்கிலும், கிழக்கிலும் உள்ள பாட்டாளித் தமிழன் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு யாழ்ப்பாண வெள்ளாளனுக்கு விவாதமற்று வேலைசெய்ய வேண்டும், யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடி விசாவை நீட்டிக்கொண்டு வெளிநாடு போய் செட்டிலாகி ”பரதம் ஆடி தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும்!” என்ற பிற்போக்கு குறுந்தேசியம் தனது இயலாமைக்கு வருந்த வேண்டாம், மீள் பரிசீலனையாவது கூடாதா? அதை வலியுறுத்தினால் கம்யூனிசத்தின் வர்க்கக் கண்ணோட்டத்தின் மீது அப்படியென்ன காய்ச்சல்? தமிழினம் என்பதற்காக மட்டுமல்ல, எந்தவொரு அடக்கப்படும் தேசிய இனத்தின் உரிமையையும் அரசியல் பார்வையுடன் ஆதரிப்பவர்கள் ம.க.இ.க. யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக் குடி அரசியல் போல தனக்கு வந்தால் ரத்தம், காஷ்மீருக்கு வந்தால் தக்காளி சட்னி என்று இந்திய மேலாதிக்க வெறிக்கு புலிஆட்டம் போடும் ஜால்ட்ராக்கள் ம.க.இ.க அல்ல!

  துரை. சண்முகம்.

 20. சிங்கள இந்திய ஆளும் வர்க்கங்களின் குரலாகவே ஓங்கி ஒலிக்கிறது வினவின் கட்டுரை தொடரட்டும் உங்கள் பணி!

 21. //தயவு செய்து ஒரு சிங்களவரின் பெயரையாவது குறிப்பிடவும். லசந்த விக்கிரமசிங்க தமிழ்தேசிய இனமக்களின் மனித உரிமைக்கு குரல் கொடுத்ததுமில்லை, அதற்காக கொல்லப்படவுமில்லை. //

  இரயாகரன் ஒரு சிங்கள இடதுசாரியின் பேரை சொல்லி இருப்பார். அவர் வடபகுதிக்கு வந்து தமிழ் மக்களோடு இணைந்து பணியாற்ற விழைந்தபோது அதனை தடுத்தது பிளாட். சரி !!! யாருமே வரவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் பார்வையில் சண்முகதாசன் ஒரு தமிழர், கம்பியூனிஸ்ட் அல்ல… சிங்கள ஜனநாயக சக்திகளுக்கு புலிகளோ அல்லது மற்ற இயக்கங்களோ எப்போது நேசக்கரம் நீட்டினார்கள் ?. – புத்த மதவெறி தூண்டி விடப்பட்ட போதும். ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை என்பது எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டும்.

  //சிங்கள இளைஞர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியதால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் ஆயுதம் தூக்கியதன் காரணமே இந்தியப் படையை இலங்கைக்குள் அனுமதித்து தமிழர்களுக்கு இலங்கை அரசு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகிறது. என்ற காரணத்தால் தானே தவிர தமிழர்களுக்கு ஆதரவாக அல்ல.//

  சிங்கள் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியது, இந்தியப் படைகளுக்கு எதிராக இல்லை !! மாறாக ஒரு புரட்சியின் மூலம் கம்பியூனிச அரசை அமைக்க வேண்டும் என்று விரும்பிதாலேயே – அது ஜேவிபியின் இனவாதமுடைய – மண்ணுக்கேற்ற மார்சியம் என்ற பெயரில் தமிழர் உழைப்பாளிகளை அரவணைக்காமல் இருந்ததால் வந்தது.

  //சிங்கள உழைக்கும் மக்கள் பெரும்பான்மையினர் சிங்கள் பெளத்தர்கள். அவர்களை பெளத்த பிக்குகளால் கட்டுப்படுத்த முடியும். அதனால் அவர்கள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை கனவிலும் ஆதரிக்கப் போவதில்லை. வடக்கு கிழக்கில் சிங்களவர்களைக் குடியேற்றி, தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணில் சிறுபான்மையினராக்கும் திட்டத்துக்குத் தான் சிங்கள உழைக்கும் வர்க்கமும், புத்த பிக்குகளும் முழு ஆதரவளிப்பார்கள், அளிக்கிறார்கள்.//

  பெளத்த பிக்குகள் சரி ! இதயமற்ற உலகின் இதயம் மதம் என்ற மார்க்சின் கூற்றுப்படி, சிங்கள அப்பாவி உழைக்கும் மக்களை மதத்தின் பெயரால் ஏமாற்றி, அவர்களது பிரச்சனைகளுக்கு தமிழ் போராட்டம்தான் காரணம் என்று காட்டி சிங்கள் அரசு ஏமாற்றி வந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு விடுதலை இயக்கம் இதனை கணக்கில் எடுத்துக் கொண்டு சிங்கள் மக்களை வென்றெடுக்க இல்லை என்றாலும், எதிர் திசையில் செல்லாமல் இருக்கவாவது முயற்சித்து இருக்க வேண்டும். ஆனால் புலிகள் அனுராதபுரம் படுகொலைகள் ஆரம்பித்து, சிங்கள மக்களை மொத்தமாக எதிர் திசைக்கு அரசை விடவும், புத்த பிக்குகளை விடவும் தள்ளினர்.

 22. // உண்மையில் இவர்கள் ஈழம் அமைத்து தருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்களோ என்னவோ, எனக்குத் தெரியாது அப்படி எந்த நம்பிக்கையும் எனக்குக் கிடையாது. அதேவேளையில் எங்களை ஆதரிப்பவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று எங்களுக்குத் தெரிந்தாலும் கூட, அவர்களின் ஆதரவை எதற்காக புறக்கணிக்க வேண்டும். சகோதர உணர்வு அவர்களை இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை அறிய அவர்களைத் தூண்டுகிறது. அதனால் அவர்கள் எங்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ராஜபக்சவை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டிய தேவையுள்ளவர்கள் மட்டும் தான், சீமான், நெடுமாறன் போன்ற தமிழீழ ஆதரவாளர்களை தூற்றுவார்கள் என்பது என்னுடைய கருத்து. //

  சகோத உணர்வால்தான் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று புலிகளை பாடையில் ஏற்றினார்கள். எங்கே சிங்கள உழைக்கும் மக்கள் தமிழர்களோடு அய்க்கியம் ஆகி விடப்போகிறார்கள் என்று சிங்கள அரசுக்கு உதவி செய்யும் விதமாக சிங்களப் பெண்களைக் கற்பழிப்போம் என்று அகநானூறு பேசிய புறநானூற்றுத் தமிழர்கள் !!!. இவர்களை பற்றி துடிக்கும் முள்ளிவாய்க்கால் – துரோகிகளின் கள்ள மவுனம் என்ற தலைப்பில் வினவின் கட்டுரை (வெளியிடாகக் கூட வந்தது) படிக்கவும்.

  // நீங்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் பல தமிழ் Surrender Agents களின் வேலை என்னவென்றால் , சிங்களவர்கள் மூன்று நான்கு லட்சம் எங்களின் மக்களைக் கொன்றதை மறந்து விட வேண்டும், அவர்கள் கொன்றதை நினைவூட்டி, நீதி கேட்டால், அவர்கள் மிஞ்சி இருக்கிறவர்களைல்லாம் கொன்று விடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டி, அவர்களைப் போர்க்குறச் சாட்டுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். ஆனால் சிங்கள இராணுவ ஆட்சியின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு பேராகக் தமிழர்கள் கொல்லப்படுவதை, அபலைப்பெண்கள் கற்பழிக்கப்படுவதை, அல்லது தமிழர்களின் வீடுகளிலும் நிலங்களிலும் சிங்களவர்களைக் குடியேற்றப்படுவதை பற்றி எல்லாம் அவர்கள் பேசமாட்டார்கள், ஏனென்றால் அதுவல்ல Surrender Agents களின் வேலை. 🙂 //

  2009 அல்லது 2008 இல் சரியாக நினைவில் இல்லை – ஈழத்திற்காக மாநாடு கூட்டியவர்கள் ம.க.இ.க. குடியரசு தினத்தில் மருதையன் ஈழ படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் மறியல் செய்து கைதானவர்கள். ராஜிவ் படுகொலை சரியான அரசியல் நடவடிக்கை என்று படுகொலை நடந்த அதே மாதத்தில் கட்டுரை வெளியிட்டு அடக்குமுறைகளைச் சந்தித்தனர் !! ஜெயலலிதா சட்டசபையிலேயே ம.க.இ.க என்ற ஒரு தீவிரவாத அமைப்பை அடக்கி விட்டதாக சபையிலேயே அறிவித்தார்.

 23. @ வியாசன்

  //, “ஈழத்தமிழர்கள் எந்தவிதமான போக்கைக் கைக்கொள்வதை இந்திய பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியும்” என்று அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு அறிவுரை கூறலாம்.//

  அது அவசியமில்லை. இவர்கள் ஏன் உங்கள் நாட்டு விவகாரத்தில் உங்களுக்கே அறிவுரை கூற வேண்டும்? ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இலங்கைத் தீவினிற்குள் வைத்துத் தீர்க்கப் பட வேண்டியது. இந்தியா தான் இவர்கள் வாழும் நாடு. இந்த நாடு தனது பக்கத்து நாடுகளில் தலையிட்டு அங்கிருக்கும் ஆதிக்க நலன் கொண்ட அரசுகளுக்கு உதவி செய்தைத் தடுக்கப் போராடுவது மட்டுமே இவர்களால் ஆகக் கூடிய காரியம். அது ஈழம் ஆனாலும் சரி, நேபாளம் ஆனாலும் சரி – எங்கள் நாட்டைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் கண்ணோட்டம் இப்படித் தான் இருக்க முடியும். ஏனெனில், நீங்கள் சொல்வது போல் இங்கே பாட்டாளி வர்க்கம் ஆளும் தரப்பில் இல்லை. பக்கத்து நாடுகளில் ஒடுக்கப்படும் சிறுபான்மை இன / மத / மொழி மற்றும் வர்க்கத்தினருக்கு இவர்கள் அணுசரனையாக இருக்க முடியுமே தவிர அந்த அணுசரனையான செயல்பாடுகளின் வரம்பு இப்போதைக்கு இந்த நாட்டின் எல்லை மாத்திரமே. ”பாரதிய ஜனதா வெல்லும் வரை போரை நீட்டித்துச் செல்லுங்கள்” என்பது போன்ற அயோக்கியத்தனமான உறுதிமொழிகளையும் அறிவுரைகளையும் இனவாதிகள் வேண்டுமானால் கூறலாம், இவர்களால் அவ்வாறு சொல்லமுடியாது. இந்தியாவில் மா.லெ இயக்கமே இன்னமும் உண்டியல் குலுக்கி மக்களிடம் பிரச்சாரம் செய்து அவர்களை அணிதிரட்டும் பணியில் தான் உள்ளது. புலிகளின் எதிர்பார்ப்புகளின் படி நினைத்த நேரத்தில் ஒரு போனைப் போட்டு பிரதமரிடமோ ஒபாமாவிடமோ பேசும் வல்லமை இன்னமும் இவர்களுக்கு வந்து விடவில்லை 🙂

  அவ்வாறு பேசி “அமெரிக்க கப்பலையோ போர் விமானத்தையோ வரவைத்துக் கொடுக்கும்” திறமை உள்ளவர்களின் “அறிவுரை” தான் உங்களுக்குத் தேவையெனில், நீங்கள் தவறான இடத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள் 😉

  //அதாவது ஒரு நாட்டின் உண்மை நிலவரத்தை அறியாமல் ஒரே Formula வை எல்லா நாட்டிலுள்ள பிரச்சனைக்கும் தீர்வாகக் கூறுவது, வேறு வகையில் சொல்வதானால், எல்லா நோய்க்கும் ஒரே மருந்தைக் கொடுத்துப் பார்ப்பது, நோயாளி செத்துப்போவதை அல்லது நோய் இன்னும் தீவிரமடைவதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். அப்படித்தானே //

  அவ்வாறு இது வரையில் எந்த மருத்தும் கொடுக்கப்படவில்லை என்பது தானே எதார்த்தம்? புலிகள் கொடுத்த மருந்தின் விலை தானே முள்ளிவாய்க்கால்? அதே மருந்தையா திரும்பவும் கொடுக்கப் போகிறீர்கள்?

  //தமிழர்களுக்கு பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையோ சிங்கள பாட்டாளி வர்க்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.//

  அவ்வாறான எந்த முயற்சியாவது புலிகள் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியடைந்துள்ளதா? ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் தவிர்க்கவியலாத பிரதிநிதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட புலிகள், சிங்கள ஆளும் வர்க்கத்தின் மேல் அதிருப்தியில் இருந்த சிங்கள உழைக்கும் மக்களிடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதா? சிங்கள உழைக்கும் மக்களுக்கும் தமிழ் உழைக்கும் மக்களுக்கும் சிங்கள எதேச்சாதிகார ஆளும் வர்க்கம் பொது எதிரி என்பதை புலிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்துள்ளார்களா? அவ்வாறு மேற்கொண்டிருந்தால் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்.

  //பக்கத்து வீடு எரிந்ததை பார்த்து அடுத்த வீட்டுக்காரன் உதவி செய்ததைப் பார்த்து விட்டு, அந்த நாட்டிலேயே இனப்பிரச்சனை இல்லை, என்று ஒருவன் முடிவெடுத்தால் அது எவ்வளவு முட்டாள் தனமானதோ அது போல் தான் ஒரு சில சிறிய நல்லெண்ணமுள்ள சிங்களவர்களின் செயல்களின் அடிப்படையில் இலங்கையில் சிங்கள-தமிழர் பிரச்சனையைப் பார்ப்பதுமாகும்.//

  ஆஹா… தமிழன் வீடு எரிந்தால் சாமானிய சிங்களவன் வந்து உதவி செய்வான் என்கிற அளவுக்கு நீங்கள் ஒப்புக் கொள்வது ஆச்சர்யமாக உள்ளது. வழமையான புலி வெர்ஷன் எனப்படுவதன் அடிப்படையில் பார்த்தால் சிங்களவர்களுக்கு நீண்ட நாக்கும், இரு புறமும் கோரைப் பற்களும், தலையில் இரண்டு கொம்புகளும் இருக்கும் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

  சிங்களத் தமிழ் இணக்கம் குறித்து நான் உங்களுக்கு விளங்க வைக்க முடியும் என்று தோன்றவில்லை. ஏனெனில், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்பது இந்த அண்ட சராசரங்களிலேயே தனித்துவமானது என்கிற எண்ணம் உங்களுக்கு உள்ள வரை, உங்கள் நாட்டு விவகாரத்தில் இந்தியனாகிய நான் தலையிட்டு உங்களுக்கு அறிவுரை கொடுக்கவியலாது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அவ்வாறு செய்கிற “ஐந்தாம் கட்ட ஈழப் போர் கோஷ்டிகளிடம்” நீங்கள் ஆறுதல் கொள்வதை என்னாம் புரிந்து கொள்ள முடிகிறது.

  அடுத்து சுனாமி குறித்து… நான் சொன்னதையே தான் நீங்களும் சொல்கிறீர்கள் – உங்களுக்குப் பிடித்தமான கோணத்திலிருந்து 🙂

  சிங்கள ஆளும் தரப்பு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நிவாரணங்கள் சென்று சேராமல் தடுத்தது, திருப்பி விட்டது நடந்தது. ஆனால், சாமானிய சிங்கள மக்கள் அந்தப் பேரிடர் காலத்தின் தமிழர்களுக்கு உதவ முன்வந்தனர். தமிழர்கள் என்றாலே சிங்களர்கள் கொலையாய்க் கொல்வார்கள் என்பதல்லவா புலிகளின் கூற்று? 25 ஆண்டுகால பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட பிறகும் கூட எதார்த்தம் அவ்வாறு இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர்த்தியிருந்தார்கள் என்பதையே நான் சொல்ல முயன்றேன்.

 24. அய்யா பொதுவுடமைவாதிகளே,

  நீங்கள் இனம், மொழி, மதம், பிரதேசம் ஆகிய எல்லாவற்றையும் கடந்த பாட்டாளி வர்க்க ஒற்றுமை பற்றி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்தும் உங்கள் ஆர்ப்பாட்டங்களிலும் கூட்டங்களிலும் ஏன் நூறு பேருக்கு மேல் தேறுவதில்லை.இந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு தான் புரட்சி செய்ய போகிறீர்களா?

  ஈழத்தில் இத்தனையும் நடந்த பின்னரும் அங்கிருக்கும் தமிழர்களில் பெருவாரியானவர்கள் தமிழர் கூட்டணிக்கு தான் வாக்களித்தனர். பிரபாகரன் நின்றிருந்தால் அவருக்கு இதை விட அதிக வாக்குகள் விழுந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் மலையகத்தமிழர்கள் கூட நிறைய பேர் அவருக்கு வாக்களித்திருப்பார்கள்.

  ” அவ்வாறான எந்த முயற்சியாவது புலிகள் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டு அது தோல்வியடைந்துள்ளதா? ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் தவிர்க்கவியலாத பிரதிநிதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட புலிகள், சிங்கள ஆளும் வர்க்கத்தின் மேல் அதிருப்தியில் இருந்த சிங்கள உழைக்கும் மக்களிடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதா? சிங்கள உழைக்கும் மக்களுக்கும் தமிழ் உழைக்கும் மக்களுக்கும் சிங்கள எதேச்சாதிகார ஆளும் வர்க்கம் பொது எதிரி என்பதை புலிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்துள்ளார்களா? அவ்வாறு மேற்கொண்டிருந்தால் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்.”

  எதற்காக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்? ஏன் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினருக்கு தமிழ் பேசும் பாட்டாளி வர்க்கத்தினரின் பிரச்சினையை சொல்ல தலைவர்கள் இல்லையா? இல்லை வடகிழக்கில் நடப்பதை பற்றி ஒன்றும் அறியாத அப்பாவிகளா அவர்கள்?

  “சிங்கள ஆளும் தரப்பு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நிவாரணங்கள் சென்று சேராமல் தடுத்தது, திருப்பி விட்டது நடந்தது. ஆனால், சாமானிய சிங்கள மக்கள் அந்தப் பேரிடர் காலத்தின் தமிழர்களுக்கு உதவ முன்வந்தனர். தமிழர்கள் என்றாலே சிங்களர்கள் கொலையாய்க் கொல்வார்கள் என்பதல்லவா புலிகளின் கூற்று? 25 ஆண்டுகால பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட பிறகும் கூட எதார்த்தம் அவ்வாறு இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர்த்தியிருந்தார்கள் என்பதையே நான் சொல்ல முயன்றேன்.”
  இது புரட்டு.

 25. “மாறாக ஒரு புரட்சியின் மூலம் கம்பியூனிச அரசை அமைக்க வேண்டும் என்று விரும்பிதாலேயே – அது ஜேவிபியின் இனவாதமுடைய – மண்ணுக்கேற்ற மார்சியம் என்ற பெயரில் தமிழர் உழைப்பாளிகளை அரவணைக்காமல் இருந்ததால் வந்தது.”
  இது இன்னொரு புரட்டு.

  இவர்களின் (புத்த – சிங்கள) மண்ணுக்கேற்ற மார்க்சியத்தில் தமிழ் பாட்டாளிகளுக்கு இடம் இல்லை. அப்புறம் இவர்களின் பிரச்சாரத்தை மீறி எப்படி சிங்கள பாட்டாளி வர்க்கத்தினரிடம் புலிகள் பிரச்சாரம் செய்ய முடியும்!

 26. அய்யா Salanan அவர்களே….ரஷ்யால புரட்சில ஈடுபட்டது வெறும் பத்து சதவீத மக்கள்தானாம்…..அளவுல இல்ல மேட்டரு …

 27. திரு. துரை. சண்முகம்,

  //அன்று உருவ வழிபாட்டை மறுத்து ஜோதி வழிபாட்டை நிறுவிய வள்ளலார் மீது அருட்பாவா X மருட்பாவா என்று சைவ வெறியோடு பாய்ந்த யாழ்பாணத்து ஆறுமுக நாவலர் முதல் புலிகளின் ஆயுத வழிபாட்டை மறுத்து வர்க்க அரசியலை பேசும் சக்திகள் மீது யாழ்ப்பாண வெள்ளாள குறுந்தேசிய வெறியோடு பாயும் இன்றைய உலகமய ‘சைவர்கள்’ வரை //

  உண்மையில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நாவலரின் “சைவவெறி”க்கு கிடைத்த ஆதரவு வள்ளலாருக்குக் கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல பெரியாரிசம் கூட அங்கு ஏனோ எடுபடவில்லை. யாழ்ப்பாணத்தில் தமிழும், தமிழ்க்கலாச்சாரமும் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் நாவலர் தான் என்று பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் இன்றும் போற்றுகிறார்கள். ஆனால் நாவலருக்குப் பின்னால் தோன்றிய எந்த கம்யூனிஸ்டுகளாலும், மாக்சிய லெனினியவாதிகளாலும் ஈழத்தமிழர்களின் முழு ஆதரவையும் பெறமுடியவில்லை, மாக்சியத்தையும், லெனினியத்தையும் ஈழத்தமிழர்கள் எப்பவோ புறக்கணித்து விட்டனர். இந்த லட்சணத்தில் இனம், வர்க்கம், முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுப்போக்கு வார்த்தை ஜாலங்கள் எல்லாம் ஈழத்தமிழர்களிடம் எப்பொழுதுமே எடுபடப் போவதில்லை. அதை நன்கு அறிந்ததால் தான் புலிகள் கூட கம்யூனிசம், சோசலிசம், மாக்சிசம், லெனினிசம் எதையும் பேசவில்லை. அப்படியிருக்க உங்களைப் போன்ற ஒரு சிலரின் இணையத்தள விமர்சனங்கள் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என உண்மையில் நம்புகிறீர்களா?

  //புலி பிக்குகளின் கட்டுப்பாட்டில் இருந்த உங்கள் தமிழ் ‘பாட்டாளிகள்’, மலையகத் தமிழருக்காகவாவது ‘தமிழ் ஒற்றுமை’யுடன் போராடிய வரலாறு உண்டா? //

  இதிலிருந்து என்ன தெரிகிறதேன்றால் பாட்டாளி வர்க்கம், உழைக்கும் மக்களின் உரிமைகள் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் உங்களுக்கு ஈழத்தமிழர்களின் வரலாறு மட்டுமல்ல, இந்திய வம்சாவளியினராகிய மலையகத்தமிழர்களின் வரலாறும் தெரியாது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம், குறிப்பாக புலிகளின் ஆயுதப் போராட்டம், மலையகத் தமிழர்களுக்கு தான் பெருமளவில் உதவியது என்பதை மனோ கணேசன் போன்ற மலையகத் தமிழர்களின் தலைவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அதைப்பற்றி இங்கு எழுதநேரமும் இல்லை. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் விடயத்தையும் அது திசை திருப்பி விடும்.

  NORTHEAST REBELLION HELPS UPCOUNTRY TAMILS

  Most of all, Thondaman was greatly helped by the fear the Sinhalese government had of the armed resistance in North-East. As the estates Tamils were isolated in the central highlands, the Sinhalese would have suppressed them without that armed resistance. With the LTTE hammering the SL armed forces in the North-East, the government did not want a revolt in the Highlands. Thondaman used his influence with his people to prevent the Upcountry Tamil youth from joining the armed rebellion. Such a revolt would have had far reaching consequences. Nevertheless, the estate youth settled in the North-East could not be prevented from throwing in their lot with their brothers and sisters of the North-East. Many fought and died, shoulder to shoulder with the brave youth of the North-East against the Sinhalese forces.

  The truth is that, despite all the strategies of Thondaman and the strength of the Upcountry Tamils, they would have been kept down by the Sinhalese, IF THE NORTH-EAST TAMILS HAD NOT POSED A SERIOUS ARMED THREAT.

  Plantation Tamils – The Oppressed People of Sri Lanka
  http://www.sangam.org/articles/view2/?uid=653

  //சிங்கள ஆளும் வர்க்க முரண்களில் யாழ்ப்பாண வெள்ளாளத் தமிழன் எப்போதும் சிங்கள முதலாளி வர்க்கத்தோடு சேர்ந்துகொண்டு, மலையகத் தமிழர்களை கை கழுவி விட்டதுதான்… புலிபிக்குகள் வரை கைகொண்ட வரலாறு.//

  தமிழ்நாட்டுத் தமிழர்களில் பலர் ஆத்தாமல் போனதும், யாழ்ப்பாண வெள்ளாளர்களைத் தூற்றுவதும், மலையகத் தமிழர்களின் குடியுரிமை விடயத்தில், 60 வருடங்களுக்கு முன்னால் ஒரு யாழ்ப்பாணத் தமிழ்த்தலைவர் கணபதி காங்கேயர் பொன்னம்பலம் சிங்களவருடன் சேர்ந்து வாக்களித்ததை நினைவூட்டி கொக்கரிப்பதையும் நான் பலமுறை அவதானித்திருக்கிறேன். ஆனால், அந்த ஒரு தவறுக்காக, ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அரசியல் வாழ்க்கையையே அத்தமிக்கச் செய்து, சைவத்தமிழர்களாகிய பெரும்பான்மை யாழ்ப்பாண வெள்ளாளர் ஒரு கிறித்தவராகிய எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தை, தமது தலைவனாக, ஏற்றுக் கொண்டு, அவரை ஈழத்தந்தையாக இன்றும் போற்றும் தமிழுணர்வை யாரும் பாராட்டுவதாக தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில், தமது சுயநலத்துக்காக, ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தி, பல ஈழத்தமிழரக்ளின் அழிவுக்கும் காரணமாக இருந்த தலைவர்கள் தான் இன்றும் உங்களின் தலைவர்களாக’ உள்ளனர் என்ற உண்மையை நீங்கள் மறந்து விடக் கூடாது.

  //சிங்கள இனவெறி அரசை வீழ்த்துவதற்கு அதன் அரசியல் முரண்களை கையாண்டு ஏதோ வர்க்கப்போராட்டம் நடத்தி சலித்துப்போனவர்கள் மாதிரி பம்மாத்து எதற்கு?//

  பம்மாத்து விடுவது நாங்கள் அல்ல நீங்கள் தான், தோற்றுப்போன கொள்கைகளை அதாவது மார்க்சும், லெனினும் பிறந்த நாட்டு மக்களே கைகழுவி விட்ட உழுத்துப்போன கொள்கைகளை, உங்கள் நாட்டிலேயே எடுபடாத கொள்கைகளை, எங்கள் நாட்டில் பரிசோதனை செய்து பார்ப்பதற்கு நாங்கள் இழிச்சவாயர்களும் அல்ல, உலக அறிவில்லாத, படிப்பறிவற்றகளுமல்ல.

  //உங்களுடைய யாழ் வெள்ளாள குறுந்தேசிய அரசியலே ஏகாதிபத்திய அமெரிக்கா, மற்றும் இந்திய மேலாதிக்க அரசின் ஆளும் வர்க்கங்களையெல்லாம் நட்பு சக்திகளாக தயை கூர்ந்தும், முறுக்கியும் சுதந்திர தமிழகத்தின் எதிரிகளிடம் நம்பிக்கை வைத்து சீரழிந்த வரலாறுதானே!//

  நாங்கள் தான் நம்பிக்கைவைத்துக் கெட்டு விட்டோம், எங்களுக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, தமிழ்நாட்டுப் பாட்டாளி வர்க்கங்களை எல்லாம் ஒன்று சேர்த்து, இந்திய பாட்டாளி வர்க்கங்களின் ஆதரவை எல்லாம் பெற்று, இந்திய மேலாதிக்க அரசை எதிர்த்து, தமிழ்நாட்டின் விடுதலையைப் பெற முயற்சிக்கலாமே?, தமிழரல்லாத மாநில மக்களின் பாட்டாளி வர்க்கங்கள் தமிழ்நாட்டுப் பிரிவினையை ஏற்றுக் கொண்டால், தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் இணைந்து தமிழ்நாட்டின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடினால், நீங்கள் கூறுகிற படி சிங்கள பாட்டாளி வர்க்கமும், மாக்சிய லெனினிய அடிப்படையில், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளும், என்பது எங்களுக்கு அப்பொழுது தெளிவாகப் புரிந்து விடும். இன்று முதல் தோழர் துரை சண்முகம் தனது கட்டுரைகளில் இந்திய பாட்டாளி வர்க்கங்களின் ஆதரவைப் பெற்று, தமிழ்நாட்டின் விடுதலையை அடைவதைப் பற்றி எழுதுவார் என்று நம்புகிறேன்.

  //ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கு எதிரான ஏகாதிபத்திய, ஆளும் வர்க்கங்களிடம் தந்ரோபாவம் செய்து ஏதோ சைவப்புலிகள் சாதித்து விட்டதைப்போலவும், சிங்கள பாட்டாளிவர்க்கம் மட்டும்தான் தீராப்பகை சக்தி போலவும் வரையறுப்பது அரசியல் பாமரத்தனமின்றி வேறென்ன?//

  சொந்த நாட்டிலேயே, அவர்களின் கொள்கைகளின் அடிப்படையில் தனித்து நின்றால் கட்டுக்காசைக் கூடக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள் எல்லாம், ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்களை எதிர்த்து அரசியல் செய்வது எப்படி என்பதைப்பற்றி பக்கத்து நாட்டுக்காரனுக்கு பாடம் எடுப்பதைப் போன்ற பாமரத்தனம் வேறெதுவும் இருக்க முடியாதையா.

  //மேலும் கட்டுரை எந்த தீர்வையும் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கவுமில்லை, பசப்பவுமில்லை, உலக அரசியல் கண்ணோட்டத்தின் எதார்த்த நிலைமைகளில் எது ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கு சாத்தியமான வழி என்பதை பொதுவில் மட்டுமே வைக்கிறது.///

  எந்த தீர்வையும் திணிக்கவில்லையாம் நல்ல கதை. ஈழத்தமிழர்கள் சுதந்திரமடைந்த நாளிலிருந்து இனக்கலவரங்களில் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினரால் கொல்லப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, எல்லாவற்றையும் இழந்து, உடுத்துவதற்கு மாற்று உடை இன்றி, கப்பலேறி வடக்கு-கிழக்கிற்கு போய்ச்சேர்ந்து, அதன் பின்னர் 30 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடி, பலனின்றி, ஆயுதம் ஏந்தி, அதே சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் வாரிசுகளால் கற்பழிக்கப்பட்டு, கொல்லப்பட்டு, வீடிழந்து நிலமிழந்த பின்னர், அதே சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து உங்களின் சுயநிர்ணய உரிமையைக் கேளுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று கூறும் உங்களைப் போன்றவர்களின் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுமளவுக்கு, ஈழத்தமிழர்கள் உங்களைப் போல் அறிவாளிகள் அல்ல, உங்களின் அறிவுத்திறனுக்கு முன்னால் நிற்பதற்கு கூட, நாங்கள், ஈழத்தமிழர்கள் அருகதையற்றவர்கள் ஐயா. 🙂

  ///யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடி விசாவை நீட்டிக்கொண்டு வெளிநாடு போய் செட்டிலாகி ”பரதம் ஆடி தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும்!” என்ற பிற்போக்கு குறுந்தேசியம் தனது இயலாமைக்கு வருந்த வேண்டாம், மீள் பரிசீலனையாவது கூடாதா? //

  புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு இல்லாமல், முப்பது வருடங்களுக்கு மேலாக ஈழத்தமிழர்கள் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்தி இருக்க முடியுமா என்றதை சிந்திக்கும் தன்மையுள்ள எவனும் புரிந்து கொள்வான். சும்மா மார்க்சிய லெனினிய வார்த்தை ஜாலம் போடுபவர்களால அதை எல்லாம் புரிந்து கொள்ள முடியாது தான். உதாரணமாக இஸ்ரேலிய யூதன் எவனுமே, Jewish Diaspora வைப் பார்த்து, நீ நியூயோர்க்கில் மகிழ்ச்சியாக இருக்கிறாய் ஆனால் நான் இங்கே பாலைவனத்தில் எல்லை காக்கப் போராடுகிறேன் என்று கூறுவதில்லை, ஏனென்றால் அவனுக்குத் தெரியும், இஸ்ரேலிய நாட்டின் பலமே உலகெங்கும் பரந்து வாழும், புலம்பெயர்ந்த யூதர்கள் தான் என்பது, ஒரு இஸ்ரேலிய யூதனைப் பார்த்து, ம.க.இ.கவினரில் நீ இங்கே உனது எல்லைகளைக் காக்கப் போராடுகிறாய், ஏனென்றால் நீ பாட்டாளி வர்க்கம், ஆனால் அமெரிக்க யூதர்கள் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயமாக அவனிடம் உதை வாங்குவார்கள்.

  //அதை வலியுறுத்தினால் கம்யூனிசத்தின் வர்க்கக் கண்ணோட்டத்தின் மீது அப்படியென்ன காய்ச்சல்? //

  ஏனென்றால் நாங்கள் ஈழத்தமிழினத்தை எவராவது, பாட்டாளி வர்க்கம், முதலாளி வர்க்கம், என்று வர்க்கம், வர்க்கமாக பிரிப்பதை விரும்பவில்லை. தமிழ்நாட்டைப் போலல்லாது, ஈழத்தில் சாதிப்பேயை பெருமளவில் அடக்கி விட்டோம் (ஆனால் இன்னும் சாகவில்லை) தமிழ்நாட்டைப் போல் ஈழத்தில் ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு மலம் தீற்றுவதில்லை. காதலித்த குற்றத்துக்காக, திருமணம் செய்து கொண்டவர்களைப் பிரித்துக் கொண்டு வந்து, ஒரு தமிழனை தனது பிறப்பை நொந்து கொண்டு தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளச் செய்வதில்லை. இந்த நிலைக்கு வருவதற்கே எங்களுக்கு 70 வருடங்களுக்கு மேல் எடுத்தது, இப்பொழுது நீங்கள் வந்து, உங்களின் நாட்டிலேயே எடுபடாத கம்யூனிச வர்க்கக் கண்ணோட்டத்தை எங்களிடம் வலியுறுத்துவது உண்மையில் எங்களுக்கு எரிச்சலையூட்டுகிறது

  //எந்தவொரு அடக்கப்படும் தேசிய இனத்தின் உரிமையையும் அரசியல் பார்வையுடன் ஆதரிப்பவர்கள் ம.க.இ.க. யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக் குடி அரசியல் போல தனக்கு வந்தால் ரத்தம், காஷ்மீருக்கு வந்தால் தக்காளி சட்னி என்று இந்திய மேலாதிக்க வெறிக்கு புலிஆட்டம் போடும் ஜால்ட்ராக்கள் ம.க.இ.க அல்ல!//

  நல்லது, தமிழ்நாடு பாட்டாளி வர்க்கத்தை மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள பாட்டாளி வர்க்கத்தினரை ஒன்றுபடுத்தி, காஸ்மீரின் விடுதலைக்காகப் போராடி வெற்றி பெற்றுக் காட்டுங்கள், அந்த வெற்றி, கம்யூனிச வர்க்க கண்ணோட்டத்தின் அடிப்படையில், சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து நாங்களும் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எங்களுக்கு நிரூபிக்கும். உங்களின் தலைமையில் காஸ்மீர். விடுதலை பெற்றால், நான் எனது தலையை மொட்டையடித்துக் கொண்டு துரைசண்முகதாசன் என்று பெயரையும் மாற்றிக் கொள்கிறேன், சம்மதம் தானே? 🙂

  • ஈழம் தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!
   கட்டுரைக்கான பின்னூட்டம்!

   வியாசன் அவர்களே,
   ஒன்று புலி தாசன் இல்லையேல் துரை சண்முக தாசனா? வேண்டாம் இந்த விபரீதம்! ஏதாவது ஒரு விவாதம் என்றால், மொட்டையடிப்பது, பெயரை மாற்றுவது… கட்டுக்கடங்காமல் போனால் கழுவிலேற்றுவது இந்த ‘அன்பே சிவத்தில்’ அடியேனுக்கு உடன்பாடில்லாததால்… நாம் விவாதத்தின் வழி ஒரு முடிவுக்கு வர முயற்ச்சிப்போம்.

   வள்ளலார், பெரியார் போன்றோரெல்லாம் உங்கள் ஊரில் குறிப்பாக யாழ்ப்பாண சைவர்களிடம் எடு
   படாமலும்! ஏற்கப்படாமலும் போனதில் எங்களுக்கு வியப்பில்லை, பெரியாரென்ன? நீங்கள் தான் பிரபாகரன் இருந்தவரைக்கும் ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு தீர்வில்லை என்று தமக்கு மாற்றாக தேர்தல் பாதையை சிந்தித்த தலைவர்களை தலையில் போட்டும், பிரபாகரன் போனவுடன் வடக்கு மாகாண தேர்தலுக்கு வடம் பிடித்தும் பிரபாகரனுக்கே டாடா காட்டியவர்களும், ஆயிற்றே! தமிழ்நாடு அளவுக்கு சாதி வெறியின் விளைவுகள் அங்கில்லை என்று நீங்கள் சொல்வது நல்ல விசயந்தான்! ஆனால் அது யாழ் வெள்ளாள சுய அறிவு போல எளிதாக கடந்து செல்வது தவறல்லவா? 1928 -இல் தமிழ் ஊழியர் சங்கம் பஞ்சமர் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக்கு எதிராக பாடசாலைகளில் சம ஆசனம், சம போசனம் போராட்டம் தொடங்கி, அரசு உத்திரவால் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும், ஆதிக்க சாதி மாணவர்களுக்கு இணையாக தரையில் உட்காராமல் ஆசனங்கள் வழங்கப்பட்டபோது யாழ் ஆதிக்கசாதி குழுவினர், இந்த நடைமுறை வந்த 15 பாடசாலைகளை எரித்து எதிர்ப்பு தெரிவித்ததுதான் உங்கள் யாழ்வெள்ளாள சாதிவெறி வரலாறு. 1931 -இல் டொனமூர் சட்டப்படி அனைவருக்கும் வாக்குரிமை வந்தபோதும், வெள்ளாளத் தலைவர்கள், குறிப்பாக எஸ்.நடேசன் தாழ்த்தப்பட்டவர்களுக்கான வாக்குரிமையை தடைசெய்ய வலியுறுத்தி குதியாய் குதித்தது ஊரறிந்த விசயம்தான். பஞ்சமர்களுக்கு எதிராக பெண்கள் தாவணி அணியத் தடை, ஆண்கள் மேலாடை அணியத்தடை, ஆதிக்க சாதி கோயிலில் நுழையத்தடை, பொதுக்குளம், தண்ணீர் தடை… என 24 வகைத் தடைகளையும், விரித்து ஆட்டம் போட்டதுதான் உங்கள் ஆறுமுக நாவலர் வகையறாக்கள். இதில் தமிழ்நாடு போல இங்கில்லை என்ற சைவப் பெருமிதம்
   எதற்கு? தீண்டாமையின் வடிவங்களிலும், நடைமுறையிலும் உங்கள் ஊருக்கேற்ற வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில் எந்தத் ‘தமிழ்தேசிய பெருமையும்’ எமக்குத் தெரியவில்லை, இதைத்தான் பிற்போக்கு தேசியத்தின் உள்ளடக்கமாக உணர்த்தினால் உங்களுக்கு வார்த்தை ஜாலமாகவும், வயிற்று ஜலமாகவும் படுகிறது!

   ‘அது போன மாசம்’ என்று வாதிடுவீர்களே ஆனால் புலிகள் அதிகாரத்துக்குட்பட்டு இருந்தபோது யாழ்பாணத்தில் மட்டும் 150 -க்கும் மேற்பட்ட கோயில்களில் தலித்துகள் நுழைய முடியாத நிலை இருக்குமளவுக்கு சைவப்புலிகள் விடுதலைப்புலிகளுக்கே சவால் விட்டுவார்களாயிற்றே! தவிர அகதி முகாம்களில் கூட சாதிப்பாகுபாட்டை, அந்தஸ்தை பேணுமளவுக்கு ஈழத்தமிழினம் உங்கள் கூற்றுப்படி ஓர்மடையாதபோது இங்கே சாதி அந்த அளவுக்கு இல்லை, வர்க்கம் அறவே வேலை செய்யாது என்பது சரியாகப்படவில்லையே!

   மேலும் இடதுசாரி கண்ணோட்டம் மற்றும் தீண்டாமை எதிர்ப்பு அமைப்புகளின் போராட்டத்தால் தன்னை தகவமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட உங்கள் யாழ் வெள்ளாள குறுந்தேசியம், யுத்தத்தின் நிலைமைகள், சிங்கள பேரினவாத அரசின் ஒடுக்குமுறைகள் காரணமாக ஒரு தற்காப்பு தமிழ்தேசியவாதமாக சைவக் கொடுக்கை மடக்கி வைத்திருப்பதுதான் வரலாறே ஒழிய! இயல்பிலேயே யாழ் வெள்ளாள தமிழ்தேசியம் சாதிவெறியற்றது என்பது போல சாதிய போராட்ட வரலாறை கண்டும் காணாமல் போவதன் மூலம் முற்போக்கும் இல்லை, பிற்போக்கும் இல்லை. தமிழ்தேசியம் ஈழத்தமிழரிடத்திலே ஒன்றுதான் என்று நீங்கள்தான் வாதிடுவதாகப் பார்க்கிறேன். மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிப்பின் போதெல்லாம் இலங்கை சிங்கள இனவெறி அரசோடு ஒத்துப்போன யாழ் தமிழ்தேசிய மேட்டுக்குடி விவகாரத்தையும், புலிமார்க் சியக்காய் தூள் போட்டு நீங்கள் விளக்குவது இருக்கட்டும், தேசிய சிறுபான்மை இனம் என்ற அவர்களது அரசியல் உரிமையை அங்கீகரிக்காமல் புலிகள் வரை அவர்களையும் ஒரே ஈழத்தமிழர்கள் என்று அடக்குவது என்ன நியாயம்? தத்தம் போராட்ட வடிவங்களால் மலையக மக்கள் வென்றெடுத்த தொழிற்சங்க உரிமைகள் இருக்கட்டும் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தொழிற்சங்கங்களையே தடை செய்த நீங்கள்தான் மலையக மக்களுக்கும் சேர்த்து ஈழம் வாங்கித்தரும் இனக்காவலர்களா? கடைந்தெடுத்த சாதிவெறி சுரண்டல் அயோக்கியர்களான
   தமிழக சைவ மடாதிபதிகள் முதல், புலிக்கச்சை அணிந்து கவர்ச்சிகாட்டும் மதுரை ஆதினங்கள் வரை யாழ்ப்பாண சைவக்கும்பல் வரை மார்க்சிய – லெனினியத்தை விரோதமாக பார்ப்பதில் என்ன ஒரு தமிழின ஓர்மை
   உங்கள் உணர்ச்சியில்! களத்துப் பிள்ளைகளிடம் ‘சோசலிசம்’ ‘ஏ.கே. 47’ கற்றறிந்த ‘பிள்ளைமாரிடம்’ தமிழியம், ‘அரோகரா’ அடடா! யாழ்ப்பாண மேட்டுக்குடியிடம் புலிகளே வாலைச் சுருட்டிய கதை இதுதானா?

   யுத்தப் பாதிப்பினாலும், அகதிகளாகவும் புலம் பெயர்ந்த தமிழர்களை நான் பொதுவாகப் பேசினால்தானே. நீங்கள் யூதனை விட்டு எங்களை உதைக்க வேண்டும்! நான் நேரிடையாகக் குற்றம் சாட்டியது யாழ் மேட்டுக்குடி வர்க்கத்தை! ஒ! உங்களுக்குத்தான் வர்க்கம் கிடையாதே! நந்திக்கடலோரம் சனம் கொல்லப்பட்டு பிண வீச்சம் கூட மாறாத நிலையில்… லண்டனில் தமிழக சினிமா கழிசடைகள் அடித்தக் கூத்தை கைதட்டி ரசித்து, விசிலடித்துக் கொண்டிருந்த அந்த ஈழத்தமிழ் கூட்டத்தை உங்கள் வசதிக்காக இனம் என்று மட்டும் சொன்னால் போதுமா? இல்லை இது வர்க்கக் கொழுப்பா?

   வாதத்தின் மையத்திற்கு வருகிறேன், வள்ளலார், பெரியார், வர்க்கப் போராட்டமெல்லாம் ஈழத்துக்கு வேலைக்கு ஆகாது! என்று நக்கலடிக்கும் நீங்கள் முன் வைக்கும் தீர்வுதான