Tuesday, June 25, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்சுரா, சோம லித்வேனிய மது மத்ய சுவாகா...

சுரா, சோம லித்வேனிய மது மத்ய சுவாகா…

-

“இந்துமதம் ‘தொன்மையானது’, அதை யாராலும் அழிக்கமுடியாது, காலத்திற்கேற்றவாறு தன்னை புதுப்பித்துக்கொள்ளும் திறன் உள்ளது” என்று அடிக்கடி அசரீரீ முழங்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளுக்கு ஒரு உற்சாகமூட்டும் புது செய்தி வந்திருக்கிறது.

லித்துவேனிய தேன் மது”ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட சூப்பர் தேன் மது லிதுவேனியாவிலிருந்து இந்தியாவுக்கு மீண்டும் வருகிறது” (தினகரன் செய்தி. 3.12.2013) என்பதுதான் அது. பால்டிக் நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருக்கும் இந்தியன் பால்டிக் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் ஜனவரியில் டெல்லி உணவுக் கண்காட்சியில் இதன் அறிமுகம் செய்யவிருக்கிறதாம். உலகத்துக்கே ஊத்திக் கொடுத்த இந்து மதத்தின், தேன் மது மீதான  பேட்டண்ட் உரிமையை லிதுவேனிய மது தர்ம கம்பெனி ஸ்டாக்லிஸ்கஸ், பிரிட்டிஷ் ராணி எலிசபெத்திடம் இருந்து 1969 -ல் பெற்றுக் கொண்டதாம். பாரம்பரி இந்து மரபு மதுவில் சிறிதளவு ஆல்கஹால் கலந்து அந்த சாதனையை  நிகழ்த்தியிருக்கிறது.

தேசிய மது மீதான காப்புரிமையை அன்னிய நிறுவனம் பறித்துக்கொண்ட தேசிய அவமானத்தை தீர்க்க மோடி பிரிட்டிஷூக்கு எதிராக ‘பொங்குவதற்கு’ ஆர்.எஸ்.எஸ். அம்பிகள் ஒரு போதை யாத்திரை நடத்தினாலும் நடத்தலாம். இல்லை இந்து மதத்தின் சகிப்புத்தன்மை காரணமாக ரிக் வேத பார்மூலாவுடன் குறைந்த பட்சம் ஆல்கஹால் கலக்கும் லிதுவேனியக் கம்பெனியை இந்து தர்மத்தோடு கலந்து குஜராத்தில் ஒளிரக் கூப்பிட்டாலும் கூப்பிடலாம். ரிக்வேதத்தின் இந்தத் தேன் மதுவுக்கு ஒரிஜினல் பிராண்ட் மாடலாக இருந்த ரிஷிகள் அபாஸ்ய ஆங்கிரசன், கவி பார்கவன், வசு பாரத்வாஜன் இந்த காலத்தில் இல்லா விட்டால் என்ன, இருக்கவே இருக்கிறார் ரீல் மாடல் மோடி!

பார்ப்பனர்கள் பாலையும், முட்டையையும் சைவத்தில் சேர்த்து வெகு நாளாயிற்று, அசுவமேதயாகம், ஆட்டுக்குட்டி யாகம், பசு வேள்வியெல்லாம் நகரத்து பாஸ்ட் புட்களில் பாரம்பர்யப்படி நடக்கிறது. பாரம்பர்ய ரிக் வேத தேன் மது மட்டும் கசக்கவா போகிறது. நீ அடிச்சாதான் தண்ணி! அவா ஊத்துனா ஜலம்! வேதங்கள் மட்டுமல்ல, சாணக்கியனின் ”அர்த்த சாஸ்த்திரமும்” சாராயத்தை ஓட விட்டு ‘ரெவின்யு’ பார்க்கலாம் என்பதை அரசனுக்கு ஓதுகிறது. அவாளின், வேதங்களின் சாஸ்த்திரங்களின் பாஸ் மார்க்குக்கு முன் டாஸ்மாக் எம்மாத்திரம்? தண்ணியை போட்டு விட்டு ஒரு குடும்பத்தை அடிப்பவனை ரவுடிகள் என்கிறோம், சோமத்தை ஊத்திக் கொண்டு குலத்தையே (அசுர குலத்தை) அழித்தவர்கள் ரிஷிகள். ‘காம சோமான்னு’ வேலை பார்க்கத் தெரிந்த பெரியவாளுக்கு முன்னே சூத்திர அப்பு, கதிரவன் எம்மாத்திரம்?

“நீ அடிச்சா தெரு போதை, அவா அடிச்சா தெய்வீக போதை, கஞ்சா இழுப்பதில் கூடவா நால் வர்ண வாடை!” இப்படியெல்லாம் பேசுவது வேதத்தையும், இந்து தர்மத்தையும் இழிவுபடுத்துவது என்று யாராவது உருகினால், ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களையும் படிக்காதவர்கள் என்று அர்த்தம். அதாவது மதுவை ஏற்காதவர்கள் வேதத்தையே ஏற்காதவர்கள், மறுப்பவர்கள் என்ற ‘பழி’ வந்து சேரும். தேன் மதுவை விடவும் காட்டமான சுரா, சோம பானங்களை தயாரித்து அந்த காலத்திலேயே ‘இந்து மதத்துக்கு’ ஒரு கிளர்ச்சியூட்டியவர்கள் வேதாதி ரிஷிகள்.

ரிக்வேதம் மண்டலம் 1 -ல் 7-ம் சூக்தத்தில் ”சோமத்தை பருகி இந்திரனுடைய வயிறு கடல்போல் பரவுகிறது” என்கிறது. 9 – வது பிரிவு சூக்தம் 2 -ல் ”ஊக்கமளிப்பதும், உற்சாகமளிப்பதுமான இந்த சோமத்தை இந்திரனுக்கு அளியுங்கள்” என்று சியர்ஸ் போடுகிறது. மண்டலம் 8 சூக்தம் 9 -ல் ”சோமனே, நீ பல பாண்டங்களில் வைக்கப்பட்டிருக்கிறாய், பகல் வேள்வியில் பாலோடும், மாலை வேள்வியில் தயிரோடும் கலக்கப்படுகிறாய், நீ தீரனுக்கு மிக்க மதமளிக்கும் பானமாயிருக்கிறாய்” என்று மிக்சிங் மேட்டரோடு வழிகிறது. மண்டலம் 9 -ல், பிரிவு 67 – சூக்தம் 3 -ல் சோமரசம் பசுமை நிற செடியிலிட்டு, கற்களால் பிழியப்பட்டு, ஆட்டுத் தோலில் வடிகட்டப்பட்டு, பாலோடு பாய்வதை ஃபுல் போதையில் வருணிக்கிறது. ரிக்வேதம் முழுக்கவே, பல மண்டலங்களில் சாராயம் காய்ச்சுவதை ஒரு தொழிலாகவே செய்யும் அவாள் பாஷையில் புனித வேள்வி செய்முறையும், செடிகளை நசுக்கி சாறெடுக்கும் கற்களின் ஓசை மந்திர ஒலியாய் காதை அடைக்கிறது.

ரிக் வேத ரிஷிகள் தொடங்கி, ‘ஏத்திவிடப்பா, தூக்கிவிடப்பா’ என்று தனி கிளாசில் தனக்கேற்றமாதிரி ஆண்டவனைத் தேடும் ஐயப்ப சாமிகள் வரை இந்து மதத்தில் போதையும் ஒரு பூஜைதான் என்பதோடு, பார்ப்பன இந்து மதமே ஒரு போதைதான் என்பதும் ‘நிதானமாக’ சிந்தித்தால் யாராலும் மறுக்க முடியாது. குடி குடியை கெடுக்கும் என்று போர்டை போட்டுக் கொண்டு டாஸ்மாக்கும் சீரியலும் ஒடிக்கொண்டிருக்கும் போது வேதங்களுக்கும் அப்படியொரு போர்டை போட்டு விட்டால் போதுமா? இதையெல்லாம் கேட்கும் போது கோபம் வரத்தான் செய்யும், வரட்டும் சொல்பவர்கள் மீது அல்ல, குடிகாரர்களின் மதமாக இந்துமதத்தை சுதி ஏற்றும் வேதங்களின் மீது!

– துரை.சண்முகம்

மேலும் படிக்க

 1. இதைவிட அதிகமாக பைபிள்ளில் சரக்கை பற்றியும், பெண்களை பற்றியும் உள்ளது…. பெண்கள் முன்னேற்றத்தை பற்றி வாய்கிழிய பேசும் வினவும், பு.ஜ.கா வும், இசுலாம் மதத்தில் ஒருத்தன் நூறு பெண்டாட்டி கட்டுவதையும் எதிர்த்தால் நல்லா இருக்கும்… பாமரத்தனமாகவும், வெற்று வயிர்றெரிச்சலில் எழுதுவதை சண்முகம் நிறுத்த வேண்டும்… இது போன்ற சில்லரைத்தனமான கிறுக்கல்கள் தலித் சமூகத்தை வேண்டுமாணால் திருப்திபடுத்தும்….

  • can you quote some?

   //இதைவிட அதிகமாக பைபிள்ளில் சரக்கை பற்றியும், பெண்களை பற்றியும் உள்ளது//

   I will quote even more.

   Bible is written by illiterate men just to suit their sociopolitical needs. Can you accept the same about vedas? You cheat people by saying that vedic chant vibration has healing energy blah blah blah… That is the problem with you guys.

  • //இது போன்ற சில்லரைத்தனமான கிறுக்கல்கள் தலித் சமூகத்தை வேண்டுமாணால் திருப்திபடுத்தும்….//

   How?

  • //பெண்கள் முன்னேற்றத்தை பற்றி வாய்கிழிய பேசும் வினவும், பு.ஜ.கா வும், இசுலாம் மதத்தில் ஒருத்தன் நூறு பெண்டாட்டி கட்டுவதையும் எதிர்த்தால் நல்லா இருக்கும்//
   hello Indian,

   You do not know how to make search in vinavu?
   In the text box you pls type இசுலாம் and press search button.
   Now u can get several links related to Muslim and their issues AND their fundamentalism !

   For example pls go through the following links:

   [1]https://www.vinavu.com/2013/02/05/fatwa-on-kashmir-girl-band/
   [2]https://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/
   [3]https://www.vinavu.com/2011/05/02/osama-obama/
   [4]https://www.vinavu.com/2011/08/12/acid/
   [5]https://www.vinavu.com/2011/10/08/unarvu-reply/

   Go through all this likes and much more in vinavu and tell your comment!

   Ok Ok How can you say that….”இது போன்ற சில்லரைத்தனமான கிறுக்கல்கள் தலித் சமூகத்தை வேண்டுமாணால் திருப்திபடுத்தும்….”

   CAN YOU PLS EXPLAIN ?

 2. வேதத்துல இல்லாதது ஒன்னும் இல்லன்னு சொல்றது சரிதான் போல! பாருங்க சார், சாராயம் காச்சறது எப்படின்னு கூட சொல்லி இருக்காங்க! எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. வேத விற்பன்னர் சண்முகம் ஐயா தமிழ்ல இந்த வேத கால சாராயம் எப்படி செய்யறதுன்னு சமையல் குறிப்பு மாதிரி எழுதினாருன்ன உபயோகமா இருக்கும். வீட்டுலையே காச்சிடலாம் பாருங்க. டாஸ்மாக் போற வேலை மிச்சம்.

 3. கலக்க வேண்டாம்..
  .அப்படியே சாப்பிடலாம்..
  .தொண்டை எரிகிறதா?
  …கங்கா ஜலம்!

  சாப்பிடும்போது, பாரதமாதாவுக்கு ஜே
  பரந்தாமனுக்கு ஜே…

 4. வேத காலத்தில் அதற்க்கு பிந்திய காலகட்டத்திலும் ஆரியர்கள் சோமபானம் ,சுராபானமும் என்கிற மது வகைகளை யாகங்களில் பயன்படுத்தியதியது . யாவரும் அறிந்த ஒன்று சுராபானத்தை குடித்து மகிழ்பவர்களை சுரர்கள் என்றும் அதை குடிக்கதவர்களை அசுரர்கள் என்றும் அழைப்பார்கள்

 5. சுரர்- சுராபானம் அருந்துபவர் எனவே நல்லவர். அசுரர்- சுராபானம் அருந்தாதவர் எனவே கெட்டவர்.வேதத்தில் எல்லாமே இருக்குங்க.

  • ஒரு விளக்கம்:நான் பின்னுட்டம் இட்ட பொழுது திரு.முத்தெழிழனின் பின்னுட்டம் பதிவாகவில்லை எனவே கூறியது கூறலுக்கு நான் பொறுப்பல்ல.நன்றி.

  • சுர-அசுர வேறுபாடு, பீர் ரசிகர்கள்-பிராந்தி ரசிகர்கள் என்ற வகையிலான குடிமகன்களின் ரசிகர் மன்ற வேறுபாடுதானே தவிர ஆரிய-திராவிட இனவாத வேறுபாடல்ல என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது..

 6. இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது போல ரிக் வேதத்தில் இல்லை. இதில் சொல்லி உள்ள மண்டலம், சூக்தம் எல்லாம் பொய்.

  எது அந்தப் பகுதி என்று கட்டுரையாளார் கூறுகிறாரோ அந்த சமஸ்கிருதப் பகுதியையும் அதன் பொருளையும் மேற்கோளாகப் பிரசுரிக்க வேண்Dஉம். முடியாவிட்டால் ஒரு மன்னிப்பை வெளியிட்டு கட்டுரையை நீக்க வேண்டும்.

  • ///இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது போல ரிக் வேதத்தில் இல்லை. இதில் சொல்லி உள்ள மண்டலம், சூக்தம் எல்லாம் பொய்..///

   தம்பி…வினவு தளம் வரும்போது கொஞ்சம் அடிப்படை அறிவு அதாவது வரலாறு, சமூகம், புராணம், மதநூல்கள் பற்றிய அறிவு சிறிதளவோட வாங்க. நூலகம் சென்று நிறைய படிக்கவும்…

  • Hi A.K …,
   For “Asvamatha yakam” I gave evidence from vedha’s.

   But did u accept them? No

   Now u are asking evidence for drinking habit in vedha’s!!

   Go through history books of schools!! You can get the evidence for soma, sura panams!!!

 7. இந்த சோம பானம் “சோமா” என்ற செடியின் சாற்றில் இருந்து பெறப்பட்டது. இந்த செடியை பற்றியும், இந்த பானத்தை அருந்துவதால் ஏற்படும் அனுபவங்கள் பற்றியும் வேதங்களில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவரணைகளின் அடிப்படையில் இந்த செடியை இனம் காணும் முயற்சியும் நடந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. இந்த ஆராய்சிகள் பற்றி அறிந்து கொள்ள விக்கிபீடியா பக்கம் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்பது என் எண்ணம். வேதங்களை புனிதமாக கருதுபவர்கள், அவற்றை எதிப்பவர்கள் என இருவருக்கும் இந்த ஆராய்ச்சி பயன் தரக்கூடும். இங்கே ஒரு ஆதங்கமும் எழுகிறது. வேதத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு என உணர்ச்சி பூர்வமாக நிலைப்பாடுகள் எடுக்கும் நமது ஊர் ஆட்களை விட, சமநிலைப் பட்ட அறிவியல் நோக்கோடு மேலை நாட்டவரே இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக எனக்கு தோன்றுகிறது. வழக்கம் போல எதிர் அணிகளில் இருக்கும் நமது ஊர் ஆட்கள் வாய்ச்சொல் வீரர்களாகவே தென்படுகிறார்கள்.

  http://en.wikipedia.org/wiki/Botanical_identity_of_Soma-Haoma

 8. ஏதேது விட்டால், யானையை அவிழ்த்து விட்டு தலையை மிதி, மனு நீதி தேர்ச்சக்கரத்தில் கழுத்தை நெறி என்று அந்த கால நினைப்பில் ஆசைப்படாதீர்கள் அஜ்ஜன் குமார் அவர்களே! உங்கள் பொய்க்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டாம் மனதை தைரியமாக்கிக் கொள்ளுங்கள்! அலைகள் வெளியீட்டகம் வெளியீட்டுள்ள நான்கு வேதங்களின் தமிழாக்க தொகுப்பில் ரிக் வேதத்தின் எல்லா ‘சரக்குகளும்’ கட்டுரையில் சொல்லப்பட்டவாறு சரியாகத்தான் இருக்கின்றன. மேலதிக சோம பான ரசங்களுக்கு அதே தொகுப்பின் 9-வது மண்டலத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். என்னசெய்வது ”கள்ளுண்ணாமை” என்று ஒரு அதிகாரத்தையே வைக்குமளவுக்கு சமூகத்திற்கு நீதி சொன்னவர் திருவள்ளுவர். இதைப் போல பல நல்ல அம்சங்களால்தான் அதற்கு உலகப்பொது நூல் என்ற தகுதியும் உண்டு. நீங்கள் என்னதான் உலகத்திலேயே வேதங்கள்தான் உயர்ந்தது என்று கூவினாலும் அது டாஸ்மாக் கடை வாசலின் முழக்கமாகத்தான் இருக்கிறது என்பது அதன் இயல்பு. வட்டார வழக்கில் அதன் பெயரே ‘நான் மறைதான்’ அதனால்தான் தன்னியல்பாகவே நீங்களும் மறைக்கப் பார்க்கிறீர்கள்.

  கொசுறு…
  நான் சொன்னால் தான் தப்பு! ‘வேதவிற்பன்னர் திருவல்லிக்கேணி அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்’ ரிக் வேதத்தின் சோமபான ரசம் சொட்டும் விவரங்களை தனது ”இந்துமதம் எங்கே போகிறது பாகம் – 2” (சடங்குகளின் கதை) என்ற நூலில் எழுதியிருப்பதோடு லெளகீக மொழியில் அது ஒரு ”தேவ டிக்காசன்” என்று நாமகரணம் சூட்டி சோம யாகத்தை சொட்டு சொட்டாய் விவரிப்பதை படித்துப் பாருங்கள்!

  துரை. சண்முகம்

  • Rig Veda was written in the cold himalayas and all the soma bana is for the Kshatriyas,the kings.

   I want to know if Mr.Durai Shanmugham would accept that even a banned illegal substance like Marijuana or Ganja as we call in India has medicinal properties?

   Does anyone here has done experiments with marijuana to declare it a toxic influence on the body?

   Is Vinavu still trying to fool people by calling any kind of intoxication with alcohol and liver damage?

   The great saint Thiruvalluvar sitting in Madras cannot write something for the betterment of a person in the cold mountains?

   and all mountainous people enjoy home brewed beer,it is normal.

 9. //தமிழ்ல இந்த வேத கால சாராயம் எப்படி செய்யறதுன்னு சமையல் குறிப்பு மாதிரி எழுதினாருன்ன உபயோகமா இருக்கும். வீட்டுலையே காச்சிடலாம் பாருங்க// சமீப காலமாக டிஸ்கவரி சேனலில் சோம பானம், இப்போதும் காஷ்மீர், ஆப்கானிஸ்டான், பாகிஸ்தான் எல்லை மாகானங்களில் செய்யப்படுவதை ஒளிபரப்பினார்கள்! சோமா எனும் ஒருவகை தாவரம் பயன்படுத்தி தயாரிக்கிறார்கள்! வட இந்தியாவில் பிரபலமான பாங், கஞ்சா மற்றும் அபின் போல இதுவும் ஒரு போதை வஸ்து! சுரா பானம் வேறானது! அனெகமாக திராட்சை ரசமாக இருக்கலாம்! கிரேக்கர்கள், இரானியர்களிடமிருந்து சுராபானம் செய்யும் கலை வந்திருக்கலாம்!

 10. வினவு புண்ணியத்தில் இந்த சோமா செடி பற்றியும் சோம பானம் பற்றியும் இணையத்தில் நுனிப்புல் மேயும் வாய்ப்பு கிடைத்தது.

  இந்த செடி பற்றியும், அதிலிருந்து கிடைக்கும் பானத்தை அருந்துவதால் கிடைக்கும் அனுபவங்கள் பற்றியும் வேதத்தில் சொல்லப் பட்ட விவரணைகள் அடிப்படையில் கல்விப்புல ரீதியாக ஆராய்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. தாவரவியலில் மேம்போக்கான ஆர்வம் உள்ளவன் என்ற அடிப்படையில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

  ஒரு புறம் வாசன் என்பார் (ஜி கே வாசன் அல்ல, Gordon Wasson) இது Amanita என்ற காளான் வகை “செடி” என்கிறார். இவர் ஒரு amateur mycologist. வேதத்தில் சோமா என்பது இலைகள், கிளைகள், மலர்கள், பழங்கள் அற்ற ஒரு தாவரம் என கூறப்பட்டுள்ளதை வைத்து இது ஒரு non-vascular செடி என்ற கருத்துக்கு வருகிறார், மேலும், இந்த Amanita மனதை பிறழச் செய்யும் (hallucination) தன்மை கொண்டது என்பது, வேத பாடல் ஆசிரியர்களின் அனுபவங்களோடு ஒத்துப் போகிறது என்றும் கருதுகிறார். இந்த கருத்தை எளிமை படுத்துவதானால், சோமா என்பதை கஞ்சா, ஹெராயின், கோகைன் போன்ற நவீன் போதை வஸ்துக்களோடும், LSD போன்றவற்றோடும் ஒப்பிடலாம். இந்த Amanita தற்போதும், சில பழங்குடியினரால் மத ரீதியாக பயன்படுத்தப் படுகிறது.

  மறுபுறம், ஆண்ட்ரூ மெக்டொனால்ட் என்ற டெக்சாஸ் பல்கலை தாவரவியல் அறிஞர் சோமா என்பது ஒரு வகை தாமரை என்கிறார். மேலே, சொன்ன “இலைகள், கிளைகள் அற்ற ..” என்ற வேத வரிகள் தவறான மொழிபெயர்ப்பு என்பது இவரது எண்ணம்.

  இரண்டுக்கும் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக பிரபலமான கருத்தாக இருப்பது ஒன்று ஆச்சரியம் தந்தது. இதன் படி, சோமா Ephedra என்ற தாவரம் என்கிறார்கள். தாவரவியல் ரீதியாக பல தனித்தன்மைகள் கொண்ட நீடேல்ஸ் (Gnetales) வகை தாவரம் இது. இந்த அடிப்படையில் தாவரவியல் நூல்களில் இது குறிப்பிடப் படுவதை காண முடியும். மேலும், இதிலிருந்து கிடைக்கும் ephedrine சர்ச்சைக்குரிய மருத்துவ பயன்பாடுகளும் கொண்டது. இப்படியான தாவரவியல் நோக்கில் அன்றி இந்த ephedra பற்றி நான் வேறெங்கும் படித்ததில்லை. அதிகம் பேசப்படாத, சற்று அரிதான வகை தாவரம். மேலே சொன்ன “இலைகள், கிளைகள் அற்ற ..” என்ற வரிகள் இதற்கும் சுமாராக பொருந்தும். ஆரியர்கள் மத்திய கிழக்கு பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்ற அடிப்படையில், இந்த சோமாவையும் ஜோராஸ்திரிய ஹோமாவையும் ஒன்றெனக் கொண்டு இரண்டு மத நூல்களையும் ஒப்புமைப் படுத்தி இந்த கருத்தை முன்வைக்கிறார்கள். ஜோராஸ்திரிய மத பாதிரிகள் நூறாண்டுக் முன்புவரை கூட இந்த ephedra செடியை மத சடங்குகளில் பயன்படுத்தி வந்ததையும் ஆதாரமாக சொல்கிறார்கள். இந்த ephedra ஒரு ஊக்க மருந்து (stimulant). விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி மாட்டிக்கொள்ளும் ஊக்க மருந்துகளோடு ஒப்பிடலாம். அல்லது காபி, டீ போன்றவற்றோடும்.

  இதைத்தவிரவும் பல செடிகள் சோமாவாக அடையாளம் காணப் படுகின்றன. கஞ்சா, ஒபியம் தரும் பாப்பி முதலிய இவற்றுள் அடங்கும்.

  வேத வித்வான் தாத்தாச்சாரியார் சோம பானத்தை இன்று நாம் மது/சாராயம் என்று அழைப்பதோடு ஒப்பிடுவதாக தெரிகிறது. இதன் அடிப்படையிலும், தனது சொந்த படிப்பு அடிப்படையிலும் சண்முகம் ஐயா இந்த கருத்தை நீட்டித்து வள்ளுவரின் “கள்ளுண்ணாமை” கோட்பாட்டுக்கு நேரேதில் நிலையில், இந்த வேத பாடல்களை “கள்ளுண்ணுமை” கோட்பாட்டை பேசுவதாக சொல்கிறார். இவ்விருவரும் மேலே சொன்ன கல்விப்புல ரீதியிலான முற்பட்ட ஆராய்சிகளை (prior work) கணக்கில் எடுத்துக் கொண்டார்களா என எனக்குத் தெரியவில்லை. பொதுவாக அறிவியல் ஆய்வுகளில் இதற்கு முன் செய்யப்பட்ட ஆராய்சிகள், அவற்றின் முடிவகளின் பின்புலத்தில் தமது ஆராய்சிகளை நிலை செய்வதே மரபு.

  இந்த சோம பானத்தால் கிடைக்கும் அதீத அனுபவங்கள் பற்றி ஆஹா ஓஹோ என வேத பாடல்கள் பேசுவதை வைத்து பார்க்கும் போது இது amanita போன்ற ஹல்லுசினோஜென் ஆக இருக்க வாய்ப்பு அதிகம் என்பது என் எண்ணம். இந்து மத பற்றுதல் நிலையில் இருந்து பார்த்தால் இந்த அனுபவங்களை அவர்களது யோக ரீதியான மன எழுச்சியாக கொண்டும், விவரணைகளை உருவகங்களாக (metaphor) கொண்டு தாமரை என்றும் சொல்லலாம். மாறாக, சாதாரண ephedra என்று சொல்வது ஆச்சரியம் தருகிறது. இந்த சாதாரண செடிக்கு எதற்கு இவ்வளவு பில்டப் என்று தோன்றுகிறது. ஆனால், சாதாரண தர்ப்பை புல்லுக்கு பில்டப் கிடைத்தது போல இருக்கலாம்.

  “எல்லாம் சரி. முடிவா என்ன சொல்ற” என்றால், ஒன்றும் பெரிதாக இல்லை. இந்த சோம பானத்தை பற்றி பல ஆராய்சிகள் நடந்துள்ளன. கல்விப்புல ஆய்வாளர்கள் இன்னும் ஒரு தீர்மானமான பொதுக் கருத்துக்கு வந்து விட்டதாக தெரியவில்லை. எனவே, இவற்றை பற்றி அறிந்து கொண்டு, அவரரவருக்கு எது சரி என தோன்றுகிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்! என்னளவில், அறிவு ரீதியாக அன்றி, ஆன்மீக உணர்வு ரீதியாக தாமரை பிடித்திருக்கிறது!

  இவ்வளவு நேரம் இதை படித்தவர்களுக்கு பரிசாக மேலே சொன்ன தாவரங்களின் படங்கள் கீழே. பார்த்து இன்புறுங்கள்:

  Amanita:
  http://en.wikipedia.org/wiki/File:Amanita_muscaria_UK.JPG

  Ephedra:
  http://media.tumblr.com/tumblr_md4h4pHn9F1qi77y6.jpg

  தாமரை:
  http://en.wikipedia.org/wiki/File:Sacred_lotus_Nelumbo_nucifera.jpg

 11. // ஆரியர்கள் மத்திய கிழக்கு பகுதியில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்ற அடிப்படையில், இந்த சோமாவையும் ஜோராஸ்திரிய ஹோமாவையும் ஒன்றெனக் கொண்டு இரண்டு மத நூல்களையும் ஒப்புமைப் படுத்தி இந்த கருத்தை முன்வைக்கிறார்கள். //

  சுரா பானம் தானியங்களிலிருந்து பெறப்படும் போதை பானம் என்பதிலிருந்து ஆரியர்கள் விவசாயம் தெரியாத, ஆடு மாடு மேய்த்துக் கொண்டுவந்த கைபர் கணவாய் பார்ட்டிகள் என்ற வாதம் அடிபட்டுவிட்டது..

  சோம பானம் தேயிலை, ஜிங்-செங் போன்ற மூலிகை உற்சாக பானமாக இருக்கலாம்.. கஞ்சா, ஹெராயின் போல் அல்லாமல், நேர்மறையான உளவியல் அனுபவம் வழங்கும் ஒரு வகை ஹாலுசினோஜென் ஆகவும் இருக்கலாம்.. தாமரைக்கும் சோம பானத்துக்கும் உள்ள தொடர்பு மற்றும் பல சுவாரசியமான விசயங்களை “Soma : The divine hallucinogen – David L. Spess” என்ற புத்தகத்தை கூகிளில் பார்க்கலாம்..

  • அம்பி,
   ஹெரோயின் போன்றவை எதிர்மறை உணர்வு தரும் depressant வகையிலானவை என்றும், மாறாக வேத விவரணைகளின் அடிப்படையில் நோக்கினால் சோம பானம் நேர்மறை உற்சாகம் தருவது என்ற கருத்தை நானும் இது தொடர்பான ஒரு கட்டுரையில் கண்டேன். இருக்கலாம்.

   David Spess எழுதிய புத்தகம் கூகுளில் முழுதாக கிடைப்பதை நான் கவனிக்கவில்லை. தகவலுக்கு நன்றி.

 12. //சுரா பானம் தானியங்களிலிருந்து பெறப்படும் போதை பானம் என்பதிலிருந்து ஆரியர்கள் விவசாயம் தெரியாத, ஆடு மாடு மேய்த்துக் கொண்டுவந்த கைபர் கணவாய் பார்ட்டிகள் என்ற வாதம் அடிபட்டுவிட்டது….//

  சைக்கிள் போக இடமிருந்தாலே, அம்பி ஆட்டோ ஓட்டுவார் என்பது தெரிந்ததுதான்! விவசாயம் செய்யாமலேயெ காட்டில் தானியங்கள் கிடைத்தன; ஆனால், அரிதாகவே கிடைத்ததால் அதற்கு அப்பொது ஏகப்பட்ட மதிப்பு! சுரா பானத்திற்கும் அந்த மதிப்புதான்! அரிதாக கிடைக்கும் மதுவும் , மாமிசமும் தெய்வங்களுக்கு படைக்கப்பட்டன! விவசாயத்தில் கிடைத்த தானிய அளவு அதிகரித்தபின், சுரா பானத்தின் மகிமை குறைந்து, தானிய நுகர்வும் அதிக மாகி அசுரர்களும் குடித்து கும்மாளமிட்டிருக்கலாம்! சமண, புத்த கருத்துக்கள் மேல்தட்டு மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்! ஆனால், போருக்கும், கடின உடலுழைப்புக்கும் மதுவும், ஊன் உணவும் அனுமதிக்கப்பட்டது!சமணம் தழைத்த மேற்கு பகுதியில் பிராமண சாதியினர் மட்டும் சீர்திருத்தக்கருத்துக்களை, தங்கள் சாதி பெரு மை காக்கவே ஏற்றுக்கொண்டனர்! மற்ற பிரிவினருக்கு விதிவிலக்கு அளித்தனர்! புத்த்ம் தழைத்த கிழக்கு பகுதியில் மது, மாம்சம் காளி வழிபாட்டின் ஒரு அங்கமாக இன்னும் கடைபிடிக்கிரார்கள்! மீன் அனைவரும் விரும்பி உண்ணும் புனிதமான உணவாகிவிட்டது! புத்தர் சொன்னதற்காக யாரும் குடிப்பதை நிறுத்தவில்லை, மாறாக குடியும், காமமும் ஊக்குவிக்கப்பட்டன! விவசாயத்திற்கு அடிமைகளும், போருக்கு வீரர்களும் தேவை அல்லவா? என்னே நுண்ணறிவு! வாழ்க டாஸ்மார்க்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க