Saturday, June 15, 2024
முகப்புஉலகம்ஆசியாவங்கதேசம் : இசுலாமிய மதவெறியர் அப்துல் காதர் மொல்லா தூக்கிலடப்பட்டார் !

வங்கதேசம் : இசுலாமிய மதவெறியர் அப்துல் காதர் மொல்லா தூக்கிலடப்பட்டார் !

-

தவெறியும், மனிதர்கள் மீதான வெறுப்பும் சிந்தனையில் ஊறிய கிரிமினல்கள் எந்த எல்லைக்கும் போகத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் மீர்பூரின் கசாப்புக் கடைக்காரன் எனப்படும் அப்துல் காதர் மொல்லா. இந்து மத வெறிக் கும்பல்கள் குஜராத்தில் 2002-ம் ஆண்டு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை கொலை செய்தன, கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்களை குழியில் தள்ளி பெட்ரோல் ஊற்றி தீக்கிரையாக்கின, ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை அங்க அங்கமாக வெட்டிக் கொன்றன. இந்த மத வெறிக் கும்பல்களுக்கு சிறிதும் சளைக்காத ஒரு கும்பல் அதற்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக்கண்டத்தின் மறு முனையில் வங்க தேசத்தில் தனது வெறியாட்டத்தை நடத்தியது.

அப்துல் காதர் மொல்லா
அப்துல் காதர் மொல்லா

பாகிஸ்தானின் மாநிலமாக இருந்த அன்றைய கிழக்கு பாகிஸ்தானில், 1970-இல் நடந்த தேர்தலில் வங்கதேசத்துக்குக் கூடுதல் தன்னாட்சி உரிமை வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் மிக அதிக இடங்களைக் கைப்பற்றியது. இப்பெரும்பான்மையைக் கொண்டு முஜிபுர் ரஹ்மான் ஒட்டுமொத்த (கிழக்கு, மேற்கு) பாகிஸ்தானுக்கும் பிரதமராகும் நிலை ஏற்பட்டது. இதை மேற்கு பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துப் பரவின. பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் வங்கதேச மக்கள் மீதும் அவாமி லீக் கட்சியினர் மீதும் மிகக்கொடிய இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

மதவெறிக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்கள் ஒரு முஸ்லீம் தேசத்தை பிளப்பது இஸ்லாமுக்கு எதிரானது என்று பாகிஸ்தானிலிருந்து பிரிந்து போகும் வங்க தேச மக்களின்  போராட்டத்தை எதிர்த்தனர். தமது மாணவர்-இளைஞர் அமைப்புகளைக் கொண்டு ரசாக்கர்கள் எனப்படும் இரகசிய குண்டர்படைகளையும், அல்-பதார் எனும் கொலைக் குழுக்களைக் கட்டியமைத்து முன்னணியாளர்களையும் அறிவுத் துறையினரையும் கோரமாகக் கொன்றொழித்தனர். 1 கோடிக்கும் அதிகமான அகதிகள் இந்தியாவுக்குள் வந்தனர். 30 லட்சம் வங்க தேச மக்கள் கொல்லப்பட்டனர்.

வங்கதேசத்தின் ஃபரீத்பூரில் உள்ள அமீராபாத் கிராமத்தில் 1948-ம் ஆண்டு பிறந்த அப்துல் காதர் முல்லா, 1966-ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் கல்லூரி கிளைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டாக்கா பல்கலைக் கழகத்தில் மேல்நிலை பட்டப் படிப்பு படிக்கும் போதும் கல்லூரிக் கிளையின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். 1971 போராட்டத்தின் போது டாக்காவின் மீர்பூர் பகுதியில் படுகொலைகளை மொல்லா தலைமை வகித்து நடத்தினார். வங்க தேசத்துக்கு ஆதரவான ஒரு கவிஞரை தலையை வெட்டிக் கொன்றது, 11 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆக்கியது, 344 பேரை சுட்டுக் கொன்றது என்று இவரது கொலைச் செயல்களின் பட்டியல் நீள்கின்றன. இவை அனைத்தும், இஸ்லாமிய ஆட்சியை பாதுகாப்போம் என்ற அறைகூவலின் கீழ் நடத்தப்பட்டன.

இந்தியாவின் இராணுவத் தலையீட்டைத் தொடர்ந்து வங்க தேசம் பாகிஸ்தானிலிருந்து விடுதலை செய்யப்பட்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது.

அடுத்தடுத்து வந்த ராணுவ, இஸ்லாமிய மத வெறி ஆட்சியாளர்களின் கீழ் தனது குற்றங்களுக்கு வழக்கை சந்திக்காமலும், தண்டனையிலிருந்து தப்பித்தும் 40 ஆண்டுகளாக ஜமாத் கட்சியின் தலைவராக உலா வந்தார் மொல்லா.

அப்துல் காதர் மொல்லா
நீதிமன்றத்தில் அப்துல் காதர் மொல்லா

2008 தேர்தலில் 1971 போர்க்குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளை தண்டிப்பதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்த அவாமி லீக் கட்சி 2010-ம் ஆண்டு  பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நீதிமன்றத்தை ஏற்படுத்தியது. மொல்லாவின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு 2013 பிப்ரவரி மாதம் அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனையை தவிர்த்ததே தன்னுடைய சாதனை போல வெற்றிச் சின்னத்தை விரல்களில் காட்டிக் கொண்டு நீதிமன்றத்திலிருந்து வெளி வந்தார் முல்லா. அதைத் தொடர்ந்து  போர்க் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும், பயங்கரவாத மதவெறிக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேல் முறையீட்டில் வங்க தேச உச்சநீதி மன்றம், முல்லாவின் போர்க் குற்றங்களை உறுதி செய்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை தூக்குத் தண்டனையாக உயர்த்தி தீர்ப்பளித்தது.

முல்லா நேற்று 12-ம் தேதி இரவு 10 மணி அளவில் தூக்கிலிடப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் அவரது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

டாக்காவில் நூற்றுக் கணக்கான மக்கள் கூடி மீர்பூரின் கசாப்புக் கடைக்காரன் மொல்லாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை வரவேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜமாத்-இ-இஸ்லாமி மொல்லா கொல்லப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வங்கதேசத்தின் பெரும்பான்மை இஸ்லாமிய மக்களின் இடைவிடாத போராட்டங்கள் இஸ்லாமின் பெயரால் அப்பாவி மக்களை கொன்று குவித்த கொலையாளிக்கு தண்டனை வழங்கியிருக்கின்றன. அது போன்று இலங்கையின் இனப் படுகொலையாளிகள் ராஜபக்சே கும்பலும், குஜராத்தில் முஸ்லீம் மக்களை படுகொலை செய்த நரேந்திர மோடி கும்பலும் மொல்லா சந்தித்த முடிவுக்கு கொண்டு போகப்படுவதை உழைக்கும் மக்களின் போராட்டங்களே சாதிக்க முடியும்.

மேலும் படிக்க

  • இந்திய தமிழன், UAE தமிழன், Saudi தமிழன், Gulf தமிழன், Malaysia தமிழன், etc

   //30 லட்சம் வங்க தேச மக்கள் கொல்லப்பட்டனர்//

   இந்தியாவில் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது தான். You should have come across such massacres in Lebanon, Sudan (Darfur genocide), Iran-Iraq, Turkey (Armenian genocide), currently Syria and Nigeria, etc.

 1. //இந்து மத வெறிக் கும்பல்கள் குஜராத்தில் 2002-ம் ஆண்டு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை கொலை செய்தன, கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்களை குழியில் தள்ளி பெட்ரோல் ஊற்றி தீக்கிரையாக்கின, ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை அங்க அங்கமாக வெட்டிக் கொன்றன. இந்த மத வெறிக் கும்பல்களுக்கு சிறிதும் சளைக்காத//

  இது தேவையற்ற இடைச்செருகல். Considering the fact that //30 லட்சம் வங்க தேச மக்கள் கொல்லப்பட்டனர்.// the comparision is very ugly.

  • உண்மையை எழுதத் துணிவற்றவன் இதுபோன்ற தீவிரவாதிகளைப்பற்றி எழுதும்பொழுது, அத் தீவிரவாதிகளால் தனக்கும் ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில், போகிற போக்கில் அமைதியாக இருக்கும் நல்லவன் ஒருவனைப்பற்றியும் தான்தோன்றித் தனமாக எழுதி வைப்பது ஆபத்துக்காலத்தில் தனக்கு உதவிகரமாக இருக்கும் என்ற நப்பாசை காரணமாக இந்தியாவில் நடக்காத சம்பவத்தைக்கூட நடந்ததாகக் கூறுவது வழக்கம்.

  • இது மட்டுமா?

   //குஜராத்தில் 2002-ம் ஆண்டு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை கொலை செய்தன,//

   இன்னும் பொய்யா சொல்வீங்க போல….

   http://en.wikipedia.org/wiki/Teesta_Setalvad#Allegations_of_witness_tampering

   The report which was brought to the notice of the bench consisting of Justices Arijit Pasayat, P Sathasivam and Aftab Alam, noted that the much publicised case of a pregnant Muslim woman Kausar Bano being gangraped by a mob and foetus being removed with sharp weapons, was also fabricated, and false.[52][54]

 2. Vinavu,

  Consider also the following:

  //பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் வங்கதேச மக்கள் மீதும் அவாமி லீக் கட்சியினர் மீதும் மிகக்கொடிய இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டனர்//

  //மாணவர்-இளைஞர் அமைப்புகளைக் கொண்டு ரசாக்கர்கள் எனப்படும் இரகசிய குண்டர்படைகளையும், அல்-பதார் எனும் கொலைக் குழுக்களைக் கட்டியமைத்து//

  //முன்னணியாளர்களையும் அறிவுத் துறையினரையும் கோரமாகக் கொன்றொழித்தனர்.//

  //1 கோடிக்கும் அதிகமான அகதிகள் இந்தியாவுக்குள் வந்தனர்//

  //30 லட்சம் வங்க தேச மக்கள் கொல்லப்பட்டனர்.//

  Does this compare with Gujarat?

  If this how you lead the ‘working people’, i am sorry, you fail at the very start.

  • univerbuddy,

   ஏதாச்சும் புரியும்படி தமிழ்ல எழுதுனா என்ன பாஸ் ?..

   முடிவா என்ன தான் சொல்ல வர்றீங்க பாஸ் ?..

   • சமரன்,

    //தமிழ்ல எழுதுனா என்ன பாஸ் ?//
    நேரமின்மையும் சூழ்நிலை ஒத்து வராமையும் காரணம்.

    // என்ன தான் சொல்ல வர்றீங்க பாஸ் ?//
    குஜராத்தையும் (around 2,000 deaths) வங்கத்தையும் (around 30,00,000 deaths) ஒரே தட்டில் வைப்பது சரியல்ல என்கிறேன்.

    • சிலர் வீம்பிற்கு …… -வார்கள். ஆங்கிலத்தில் எழுதுவதற்கு சொல்லும் காரணங்களும் அப்படித்தான்.

     மென்மேலும் வளர்க உங்கள் அறிவுத்திறன். மனித உயிரை, சாமிக்கு நேர்ச்சை செய்து மழிக்கும் மயிரை தட்டில் வைத்து எடை போடுவதோடு ஒப்பிடும் உங்கள் வியாக்கியானம் மென்மேலும் சிறக்க!! (2 கிலோ பெரிதா? மூன்று கிலோ பெரிதா? என்பது போல் இருக்கிறது.)

     • தமிழ்,

      2 கிலோ பெரிதா? 3000 கிலோ பெரிதா? என்று ஏன் உங்களால் எழுத முடியவில்லை?

      //மனித உயிரை, *** மழிக்கும் மயிரை தட்டில் வைத்து எடை போடுவதோடு ஒப்பிடும் உங்கள் வியாக்கியானம்//

      ஏன் இப்படி வீம்புக்கு ***விட்டுப் போயிருக்கிறீர்கள்?

      By the by, between Gujarat and Bangladesh, the difference is not only the numbers. In Bangladesh, both killed and killers were Muhamadans. I had also made a small comment on this aspect.But Vinavu has chosen not to publish it.

      • முஸ்லிம் முஸ்லீமைக் கொன்றாலும், முஸ்லிம்கள் மற்றவர்களைக் கொன்றாலும், மற்றவர்கள் முஸ்லிமைக் கொன்றாலும்,ஆதிக்கவெறியினர் தலித்தைக் கொன்றாலும், ஏன் ஜெயேந்திரன் சங்கரராமனைக் கொன்றாலும் – எங்களுக்கு அது உயிராகத் தான் தெரிகிறது. உங்களுக்கோ முஸ்லிம்கள் உயிரும், ஜெயேந்திரன் கொன்றதால் சங்கரராமனின் உயிரும் ——- கத் தெரிகிறது.
       இப்போது சொல்லுங்கள் : “ஏன் இப்படி வீம்புக்கு ***விட்டுப் போயிருக்கிறீர்கள்? “

 3. தன் தாய் நாட்டை பிளவு படுத்தக்கூடாது என்று ஒருவர் போராடினால் அவர் மத வெறியர் என்று வினவின் அகராதியில் அர்த்தம் போல் தெரிகிறது. முல்லா மக்களை கொன்றார் என்பதற்க்கான ஒரு சிறு ஆதரத்தையும் பங்களாதேச அரசால் கொடுக்க முடியவில்லை.மானம் கெட்ட அவாமி லீக்கை வெகு விரைவில் பங்களாதேச மக்கள் விரட்டி அடிப்பார்கள்.

 4. /////////குஜராத்தில் முஸ்லீம் மக்களை படுகொலை செய்த நரேந்திர மோடி கும்பலும் மொல்லா சந்தித்த முடிவுக்கு கொண்டு போகப்படுவதை உழைக்கும் மக்களின் போராட்டங்களே சாதிக்க முடியும்.//////// ஒரே காமெடிதான் போங்க. எங்கடா மோதிய காணோமேன்னு பார்த்தேன் …….. புத்தி கவட்டிகுள்ள, ன்னு ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

 5. உண்மையான முஸ்லிம்கள் தவறு செய்வதற்கு துணை போக மாட்டார்கள். இஸ்லாமின் பெயரால் அப்பாவி மக்களை கொலை செய்து மக்களை முட்டாளாக்க பார்கிறார்கள். இஸ்லாத்தில் இதற்கு கடுமையான தண்டனை உண்டு. மொல்லாஹ் அவனாக வேண்டுமானால் தான் இஸ்லாமியன் என்று கூறி கொள்ளலாலம். இஸ்லாமிய கோட்பாடுகளின் படி அவன் இஸ்லாமியன் அல்ல.

  உங்களது கடைசி பத்தியில் சீக்கிய மக்களை கொன்று குவிதவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள். அவர்களும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் .

 6. பெண் குழந்தை பெற்றாள் என்று 52 தாய்மார்களைக் கொலை செய்த பாகிஸ்தான் வழித்தோன்றல்கள் வேறு எப்படி இருப்பார்கள்?
  பெண்கள் படிக்க வேண்டும் என்று சொன்னதற்க்காக சுட்டுக் கொலை செய்ய முயன்ற பாகிஸ்தான் வழித்தோன்றல்கள் எப்படி இருப்பார்கள்?
  சுடிதார் போட்டதற்காக ஆப்கனில் சுட்டுக் கொன்ற வழித்தோன்றல்கள் எப்படி இருப்பார்கள்?
  இப்படி எல்லாம் இந்தியாவில் நடந்தால் அதுவும் தமிழில் பதிவு எழுத நான்கைந்து பேர் இருக்கமாட்டார்கள்.

  • ஒரு கோடி பெண் குழந்தைகளை வயிற்றிலோ அல்லது பிறந்தவுடன் கொன்ற பாவத்தை செய்தவர்கள் இந்தியர்களே .இன்னும் அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .இந்த விஷயத்தில் இந்தியர்களை விட கேவலமானவர்கள் யாரும் இல்லை என்பது என் கருத்து .

 7. ////குஜராத்தில் முஸ்லீம் மக்களை படுகொலை செய்த நரேந்திர மோடி(idharkuthane aasaipattai vinavu-balakumara ) கும்பலும் மொல்லா சந்தித்த முடிவுக்கு கொண்டு போகப்படுவதை(உழைக்கும் மக்களின் ? Dont link this with communism) போராட்டங்களே சாதிக்க முடியும்/////

 8. குஜராத்தில் 2002-ம் ஆண்டு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை கொலை செய்தன, (DO YOU HAVE PROOF ??????????)Don’t just write from your own imagination…

  • சினிமா படங்களை பார்க்க செலவிடும் நேரத்தில் இந்த முழு படத்தை பார்க்கவும் http://www.youtube.com/watch?v=Y2G6KDmBS3Y

   நீங்கள் கேட்டதற்கான ஆதாரம் இதோ http://www.youtube.com/watch?v=mfnTl_Fwvbo

   FOR ENGLISH TRANSCRIPT : http://archive.tehelka.com/story_main35.asp?filename=Ne031107After_killing.asp

   // Arrey hamari FIR me likha gaya hai… ek woh pregnant thi, usko to humne chir diya thha b*******d sala… Unko dikhaya ki kya hota hai… ki hum log ko tumne maara to hum tumko kya pratikaar de sakte hain… hum khichdi kadhi wale nahin hai//

  • ராஜ்,
   கீழே உள்ள தளத்தில் நரோடா பாட்டியா வழக்கு நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கிறது (தீர்ப்பு pdf நேரடி சுட்டி கொடுத்தால் மொசில்லா ஏதோ பிரச்சனை செய்கிறது!).

   http://www.cjponline.org/

   பக்கம் 238. Points of determination சொல்லப்படுகின்றன. Point 10 படியுங்கள். தொடர்ந்து படித்தால் இந்த அனைத்து விஷயங்களுக்கும் தீர்ப்பு சொல்லப்படுகிறது. அதில் இந்த Point 10 இல் Accused 18 பாபு பஜ்ரங்கி guilty என தீர்ப்பு.

  • கண்ணிருந்தும் குருடன் என்பது இந்த ஆள் பொருத்தமானவர் .மோடியின் சீடர்கள் எல்லோரும் இப்படித்தான் .திருத்த முடியாத ஜந்துக்கள் .

 9. @ வினவு : இஸ்லாமிய மத வெறியர் என்று தாங்கள் போட்டமைக்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாமா ??? பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷ் பிரிவினையை எதிர்த்த, அதற்காக மக்களை கொன்ற (ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை இன்னுமே,ஆனால் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறார்) ஒருவரை ஏன் தாங்கள் இஸ்லாமிய மத வெறியர் என்று குறிப்பிட வேண்டும் ????

 10. உண்மையான முஸ்லிம்கள் தவறு செய்வதற்கு துணை போக மாட்டார்கள்.

 11. சங்கராமன் கொலை வழக்கில் கைதான கொலைகாரனை ஒருமையில் ‘ஜெயேந்திரன்’, ‘விஜயேந்திரன்’ என்று நீங்கள் அழைத்த போது போற்றினோம். ஆனால் இங்கு, ஒரு மதவெறி படுகொலைகாரனை மரியாதையுடன் “இசுலாமிய மதவெறியர் அப்துல் காதர் மொல்லா தூக்கிலடப்பட்டார்!” என்று ஏன் எழுதியுள்ளீர்கள்? த்லைப்பை தயவு செய்து ஒருமையில் மாற்றுங்கள்.

  • ஜெயேந்திரனையும், விஜயேந்திரனையும் எல்லா இடங்களிலும் அவர் என்றே எழுதியுள்ளோம், அவன், இவன் என்று எங்கேயும் எழுதவில்லை. சான்றாக அவர் கொலை செய்தார் என்று வந்திருக்குமே அன்றி அவன் கொலை செய்தான் என்று எழுதப்படவில்லை.

   • ஜெயேந்திர’ர்’ என்று அனைத்து ஊடகங்களும் எழுதும் போது வினவு மட்டுமே துணிவாய் ஜெயேந்திர’ன்’ என்று எழுதியது. அதை குறிப்பிட்டேன். இட்லரை அவர்/இவர் என்றா எழுதுவோம். அது போலத்தான் இந்த படுகொலை பயங்கரவாதியும் என்பது என் கருத்து.

    எனினும் உங்கள் விளக்கத்திற்கு நன்றி. அனைவருக்கும் திசம்பர் 26 மாவோ நாள் புரட்சிகர வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க