2011-ம் ஆண்டு டிசம்பரில் லோக்பால் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறினாலும் மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. அங்கே காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது ஒரு காரணம். தற்போது டில்லி சட்டமன்ற தேர்தலில் ஊழல் எதிர்ப்பை முக்கியமாக முன் வைத்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருப்பது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. 2ஜி, நிலக்கரி, வெஸ்ட்லேண்ட், காமன்வெல்த், ஆதார் என்று அன்றாடம் அணிவகுக்கும் ஊழல் செய்திகள் நாட்டு மக்களிடம் வெறுப்பையும் தோற்றுவித்திருந்தன.
அதன் பொருட்டே அண்ணா ஹசாரே முதலான காந்தியக் கோமாளிகளின் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் வரவேற்பு இருந்தது. இதனால் லோக்பாலை எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காங்கிரஸ் மற்றும் பாஜக இருவருக்குமே இருந்தது. அதனாலேயே அவர்களது முரண்பாடு இந்த விசயத்தில் அழிய வேண்டும் என்ற சூழல் உருவானது. இருப்பினும் இந்த உண்மையை அவர்கள் மசோதாவில் திருத்தங்கள் செய்து நிறைவேற்றிக் கொள்வதாக சமாதானப்படுத்திக் கொண்டார்கள். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.
எனினும் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா உண்மையில் இத்தகைய பெருச்சாளிகளின் ஊழல் அமைப்பு முறையை மாற்றி விடாது என்று அவர்களுக்குத் தெரியும். மசோதாவின் ஷரத்துக்களை கொஞ்சம் ஆய்வு செய்து பார்த்தாலே இந்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம்.
லோக்பால் அமைப்பில் உள்ள எட்டு உறுப்பினர்களை யார் தெரிவு செய்வார்கள்? தெரிவு செய்யும் தேர்வுக் கமிட்டியில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதி, குடியரசுத் தலைவர் நியமிக்கும் 4 சட்ட உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதன்படி மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி நியமிக்கும் நால்வர் என காங்கிரசுக்கு ஐந்து இடங்களும், பாஜகவிற்கு ஓரிடமும், நீதிபதிக்கு ஓரிடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆக ஏழில் ஐந்து காங்கிரசு பெருச்சாளிகள் அல்லது அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் பாஜகவிற்கு ஐவர் என்றான பிறகு லோக்பால் அமைப்பு யாருக்காக செயல்படும்?
ஆக ஆளும் கட்சியால் தெரிவு செய்யப்படும் லோக்பால் அமைப்பிற்கு இருக்கும் அதிகாரங்கள் அனைத்தும் ஏற்கனவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அதிகார அமைப்புகளோடு பத்தோடு ஒன்றாக கூடுமே அன்றி இதில் மக்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைப்பது அபத்தம்.
ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழல் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் 12 பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முன்னாள் மராட்டிய முதல்வர் அசோக் சவாணும் ஒருவர். ஆனால் தன்னை விசாரிப்பதற்கு ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு போட்டு வெற்றி பெற்றார் சவாண். அதன்படி சிபிஐ ஆளுநரிடம் அனுமதி கேட்ட போது மறுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆதர்ஷ் வழக்கில் சவணை சேர்த்து விசாரிக்க சிபிஐக்கு உரிமை இல்லை. இவ்வளவிற்கும் வழக்கின் போது சவாண் முன்னாள் முதல்வர்தான். இதன்படி பார்த்தால் நாளைக்கு ஒரு வழக்கில் ஒருவரை விசாரிப்பதற்கு முகாந்திரம் இல்லை என்று லோக்பால் சொல்லும்பட்சத்தில் இதே அமைச்சர் பெருச்சாளிகள் தப்பிக்க மாட்டார்களா? ஏனெனில் ஆளுநர் மட்டுமல்ல, லோக்பால் அமைப்பில் இருப்போரும் ஆளும் கட்சியின் ஜால்ராக்கள் எனும் போது என்ன வேறுபாடு?
லோக்பால் அமைப்பில் 50% நீதித்துறையை சேர்ந்தவர்களும், மீதிப்பேர் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்களும் இருப்பார்கள் என்று இதற்கு ஒரு சமூக நீதி அலங்காரத்தையும் அளித்திருக்கிறார்கள். உண்மையில் ஆளும் கட்சியில் இத்தகைய சமூகப் பிரிவுகளோடு பொறுப்பில் இருக்கும் நபர்களே இங்கும் இடம் பெறப் போகிறார்கள். லோக்பால் அமைப்பில் இருக்கும் பெண்களுக்குரிய இடத்தை காங்கிரசே தீர்மானிக்கும் என்றால் அதில் ஜெயந்தி நடராஜனைப் போன்ற சீமாட்டிகளன்றி வேறு யார் இடம் பெறுவர்?
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதி வி.எம்.வேலுமணி நேற்று புதன்கிழமை 18.12.13 அன்று ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றாராம். காரணம் கடந்த பத்தாண்டுகளில் அவர் அரசு வழக்குரைஞராக பணியாற்றியிருக்கிறார். ஜெயா ஆட்சிக்காலத்தில் அரசு வழக்குரைஞராவதற்கு என்ன தகுதி வேண்டும் என்பதை விளக்க வேண்டியதில்லை.
மாநிலத்திலேயே இதுதான் கதி என்றால் மத்தியில் ஆளும் கட்சியினால் லோக்பாலில் நியமிக்கப்படும் முன்னாள் நீதிபதிகளின் நேர்மையும், நடுநிலைமையும் எப்படி இருக்கும்?
ஆக லோக்பால் அமைப்பில், தெரிவு செய்யப்படும் ஜனநாயகம் துளியும் இல்லை. நிலவுகின்ற அதிகார அமைப்புகளின், நபர்களின் ஆசியுடனும், ஆதரவுடனும் நியமிக்கப்படும் இந்த உறுப்பினர்கள் எந்த ஊழலை என்னவென்று விசாரிப்பார்கள்?
பிரதமரையே விசாரிக்கும் அதிகாரம் படைத்தது லோக்பால் எனும் உண்மைக்கு பின்னே பிரதமர்தான் இந்த லோக்பாலை கட்டுப்படுத்துகிறார் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். எனினும் இந்த பூச்சாண்டி அம்சத்தைக் கூட ஜெயாவின் அதிமுகவும், முலாயமின் சமாஜ்வாதியும் ஏற்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஒரு பெயரளவு விசாரணைக்குக் கூட முதல்வர்களும், பிரதமர்களும் உட்பட்டவர்கள் இல்லையாம். சொத்துக் குவிப்பு வழக்கின் ஆவி அந்த அளவுக்கு ஜெயாவை தொல்லைப்படுத்துகிறது. ஒரு வேளை லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் வந்துவிட்டால் ஜெயாவைப் போன்றோரின் ஊழல் வழக்குகள் 20, 30 ஆண்டுகளுக்கு பதில் இரண்டு, மூன்று மாதங்களில் முடிந்து விடுமா என்ன? லோக்பால் விசாரணைக்கு காலவரம்பு உண்டு என்று கூறினாலும் அந்த வரம்பை தள்ளிப் போடும் உரிமையும் அதற்கு உண்டு.
லோக்பால் சட்டம் அமலாக்கப்பட்ட ஓராண்டிற்குள் மாநில அரசுகள் லோக் ஆயுக்தா அமைக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பட்டிருந்தாலும் அப்படி கொண்டு வரவில்லை என்றால் என்ன நடவடிக்கை என்பதற்கு பதில் இல்லை. இதுதான் ஜெயாவிற்கு பிடித்த உள்குத்தாக இருக்குமோ தெரியவில்லை.
சிபிஐ உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளையும் கண்காணிக்கவும், உத்திரவிடவும் லோக்பாலுக்கு உரிமை உள்ளதாம். இதனால் சிபிஐ உள்ளிட்ட போலிஸ் அமைப்புகளுக்கு இருக்கும் எஜமானர்களோடு வேறு புதிய எஜமானர்களும் சேர்ந்து கொள்ளுகிறார்கள். ஆனால் எஜமானனின் எண்ணிக்கை கூடினாலும் ஒரே ஆள்தான் மாறு வேடத்தில் மாறி மாறி வருகிறார் என்றாலும் ஆளுக்கு ஒரு பதில், கடிதம் என்ற வகையில் சிபிஐயில் உள்ளவர்கள் தலையில் அடித்துக் கொள்வார்கள். இதனால் ஊழல் வழக்குகளில் சிபிஐயின் குற்றப்பத்திரிகையை ஆளும் கட்சியின் அமைச்சர்களும், அதிகாரிகளும், முதலாளிகளும் சேர்ந்து தயாரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுதான் சிபிஐயின் இயக்குநரை பரிந்துரைக்குமாம். தற்போதும் இதுதானே அய்யா மறைமுகமாக நடந்து வருகிறது? அதற்கு ஒரு சட்ட வடிவம் கொடுத்து விட்டதாலேயே சிபிஐ எனும் ஆளும் கட்சியின் வேட்டை நாய் இனி நடுநிலைமை சைவ நாயாகி விடுமா என்ன?
லோக்பாலால் மத்தியில் ஆளும் கட்சிக்கு வேறு ஒரு ஆதாயம் இருக்கிறது. மத்தியில் மாநிலக் கட்சிகளின் தயவில்தான் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என்ற காலத்தில் அத்தகைய மாநிலக் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கும், பணிய வைப்பதற்குமான பேரங்களை நடத்த லோக்பால் பயன்படும். ஒரு வகையில் மாநில அரசுகளின் உரிமையில் இது தலையிடும் அதிகாரம் என்றும் சொல்லலாம். இதனால் மத்தியில் ஆளும் தேசியக் கட்சியோடு நட்பில் இல்லாத மாநில கட்சிகள் மற்றும் அரசுகளுக்கு லோக்பால் என்பது பூச்சாண்டி காட்டவும் பயன்படும்.
மிக மிக முக்கியமாக லோக்பால் அமைப்பு கார்ப்பரேட் ஊழல் குறித்தும், பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளை விசாரித்து தண்டிப்பதற்கும் எந்த உரிமையையும் பெற்றிருக்கவில்லை. ஊழல் என்றால் கலெக்டர் ஆபிஸ் பியூன் என்று பொது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் கருத்தோடு தற்போது அரசியல்வாதிகள், கொஞ்சம் அதிகாரிகள் சேர்ந்திருக்கிறார்களே அன்றி முதலாளிகள் யாரும் இந்த பட்டியலில் இல்லை. ஊடகங்களும், அறிஞர்களும், ஊழல் எதிர்ப்பு என்ஜிஓக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல் முறைகளை திட்டமிட்டு மறைக்கின்றனர்.
தற்போது நாடு கண்ட ஊழல்கள் அனைத்திலும் மிக முக்கியமான பங்கு கார்ப்பரேட் நிறுவனங்களுடையதுதான் என்றான பிறகு லோக்பால் அமைப்பு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் மட்டும் விசாரிக்கும் என்றால் இது யாரை ஏமாற்ற?
உண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் லோக்பால் விசாரிக்கும் என்று யாராவது பேசினாலே பங்குச் சந்தையை விழ வைத்து பேசியவரது நாக்கை ப.சிதம்பரத்தை வைத்தே அறுத்து விடுவார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் சக்தி அத்தகையது.
இலட்சம் கோடிகளில் செய்தியாக வரும் ஊழல் வழக்குகள் குறித்து நாட்டு மக்கள் அரசியல், அதிகார அமைப்புகளின் மீது கடும் வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதால் அதை தணிப்பதற்கு மட்டுமே லோக்பால் பயன்படும்.
மேலும் ஊழலும், நாட்டு மக்களின் பொதுச் சொத்த்துக்களும், இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்படுவது சட்டப்படியே நடக்கலாம் என்று மாறிவரும் காலத்தில் லோக்பால் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன?
நிலைமை இப்படி இருக்க லோக்பாலை கொண்டு வந்து வரலாற்றில் இடப் பிடித்து விட்டதாக ராலேகான் சித்தியில் 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே தன்னுடைய ‘போராட்டத்தை’ முடித்திருக்கிறார். ஊடகங்களும், நடுத்தர வர்க்கமும் இனி வரும் நாட்களின் அண்ணாவின் சாதனை என்று அழுது தீர்க்கும். அப்போது நட்சத்திர விடுதிகளின் காக்டெயில் பார்ட்டிகளில் முதலாளிகள் நமட்டுச் சிரிப்புடன் அதை கேலி செய்வார்கள். ஊழல் பணமோ பாதுகாப்பாக சுவிசிலும், அட்லாண்டிக் கடலில் உள்ள் ஆளில்லா தீவுகளின் வரியற்ற சொர்க்கத்திலும் பாதுகாப்பாக இருக்கும்.
நம்மைப் பொறுத்தவரை லோக்பால் எனும் ஜோக்பால் மசோதாவை அண்ணா ஹசாரே எனும் ஜோக்கர் கொண்டு வந்தார் என்பதை மறுக்க வேண்டியதில்லையே?
வினவு,
தேர்வுக்கு கமிட்டி பற்றி பத்திரிகைகள் சற்று வேறுபட்டு சொல்கின்றன. அல்லது நான் தவறாக கொண்டிருக்கலாம். சரி பார்க்கவும்.
// லோக்பால் அமைப்பில் உள்ள எட்டு உறுப்பினர்களை யார் தெரிவு செய்வார்கள்? தெரிவு செய்யும் தேர்வுக் கமிட்டியில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதி, குடியரசுத் தலைவர் நியமிக்கும் 4 சட்ட உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். //
// Selection of Lokpal: The selection committee will have Prime Minister, Lok Sabha Speaker, leader of the opposition in Lok Sabha and the Chief Justice of India. A fifth member of the selection committee for selection of Lokpal under the category of “eminent jurist” may be nominated by the President on the basis of recommendation of the first four members of the selection committee.
http://articles.timesofindia.indiatimes.com/2013-12-18/india/45335839_1_lokpal-bill-the-lokpal-lokayuktas
தவறாக புகார் அளிப்போருக்கு தண்டனை! “frivolous” என்பதை எப்படி வரையறுப்பார்கள்? இப்படி இருந்தால் யார் தைரியமாக புகார் கொடுப்பார்கள்?
// Penalty: False and frivolous complaints – imprisonment up to one year and a fine of up to Rs.1 lakh. Public servants – imprisonment up to seven years. Criminal misconduct and habitually abetting corruption – jail term up to 10 years. //
மத ரீதியான நிறுவனங்களுக்கு விலக்கு. என்னய்யா இது?
// Religious bodies and trust: The new bill includes societies and trusts that collect public money, receive funding from foreign sources, and have an income level above a certain threshold, it excludes bodies creating endowments for or performing religious or charitable functions. //
நீதிபதிகள் மேல் புகார் முடியுமா எனத் தெரியவில்லை. நீதிபதி தினகரன் மீதான புகார்கள் என்ன ஆயின?
சினிமாவுக்கு ஒரு பவர்ஸ்டார் மாதிரி அரசியலுக்கு ஒரு பவர்ஸ்டார்பா………இவரு………
இந்த லோக்பால் சட்டம் தேவைதான? குடியாட்சித் தத்துவத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவரிடம்தான் அதிகாரம் இருக்கவேன்டும்.அதை விடுத்து அவர்களுக்கு உதவி செய்ய யுபிஎஸ்சி மூலமாக குறுக்குவழியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அதிகார வர்க்கத்துக்கு ஆளுமை உறிமை கொடுப்பது சரியானதா?எல்லா அரசு அங்கங்களும் பாராளுமன்றத்துக்குக் கட்டுப் பட்டதாகதான் இருக்கவேண்டும்.ஏற்கனவே தேர்தல் ஆணையம் , நீதி மன்றங்கள்,தணிக்கைத் துறை ஆகியவை இந்த குறுக்குவழி அதிகாரவர்க்கத்திடம் தாரைவார்த்துக் கொடுக்கப் பட்டுள்ளது.இவைகளை நாடாளுமன்றம் கட்டுப் படுத்த முடியாது.இவைகள் இந்திய மக்களை நேரடியாகவே இப்பொழுது ஆண்டு கொண்டிருக்கின்றன.பாராளு மன்றத்தைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றன.இந்த லோக்பால் சட்டத்தின் மூலம் கவுகாத்தி நீதிமன்றத்தால் அரசியல் சட்டத்துக்குப் புறம்பான அமைப்பு என்று தீர்ப்பளிக்கப் பட்ட சிபிஐக்கு தன்னாட்சி உறிமம் கொடுக்கப் பட்டுள்ளது.மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்றால் மக்களுக்கு பதில் சொல்லவேண்டும்.ஆனால் இந்த வெள்ளைத் தோல் கூட்டம் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.ஆகவே இந்த அதிகாரம் குரங்கு கைக் கொள்ளிக் கட்டையாக மாறுவது திண்ணம்.
ஏற்கனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த வெள்ளைத் தோல் கூட்டத்தினருக்கு மறைமுகமாக ஆளுமை கொடுத்துள்ளது.ஏனெனில் இந்தியா சுதந்திரம் அடையும் பொழுது வெள்ளைத் தோல் பார்ப்பனர்கள்தான் அதிகாரவர்க்கத்தில் 95%திற்குமேல் இருந்தனர்.1919 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தால் எந்த அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்வது என்பது பற்றி லக்னொ சம்மிட் ஏற்பட்டது. அதன்படி 18 தேசிய இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிறிக்கப் பட்டு, பூரண மாநில சுயாட்சியுடன் கூடிய கூட்டமைப்பு அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்ளப் பட்டது.அப்படியொரு நிலை ஏற்பட்டால் எல்லா மாநிலங்களிலும் அந்தத இனத்தவர் கையில் அதிகாரம் போய்விடும்,இந்த வெள்ளைத் தொலி பார்ப்பனர்கள் அந்த அந்த இனத்தவருடன் ஒத்துப்போகவேண்டி வரும்.இவர்களால் தாங்களின் ஆரிய என்ற தனித்துவத்தை காப்பாற்றிக் கொள்ள முடியாது.அது போல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழியினரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாது.ஆகவே லக்னொ சம்மிட்டை துலுக்கருக்கு எழுதிக் கொடுத்த அடிமை சாசனம் என்று பார்ப்பனிய அதிகார வர்க்கமும், பார்ப்பனீய செய்தி ஊடகங்களும்,மத சாயம் பூசி வெற்றியும் கண்டது.விளைவு நாட்டுப் பிறிவினை.இரத்த ஆறு ஓடியது.இதில் கொடுமை என்னவென்றால், பலியானது சாதரண மக்கள்.இந்த வெள்ளை தொலிக் கூட்டத்தினருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.இவர்கள் பாதுகாப்பாக பாகிஸ்தானிலிருநு வெளீயேரினர்.மணிசங்கர அய்யர் குடும்பம் ஒரு எடுதுக் காட்டு.தூண்டி விட்டது பார்ப்பனர்,பலியானது மற்றவர்கள்.கடைசியாக இந்தியா நடுவில் அதிகாரம் குவிக்கப் பட்ட நாடாக அரசியலமைப்புச் சட்டம் இயற்றப் பட்டது.இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி சுயாட்சி பெற்ற யுபிஎஸ்சி அமைக்கப் பட்டு இந்த அதிகார வர்க்கத்தினர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.நேரு இந்திரா காந்தி பார்ப்பனர்களாக இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் ஒத்துளைப்புடன் இருந்து படிப்படியாக பாராளுமன்றத்தின் அதிகாரத்தை தேர்தல் கமிசன்,தணிக்கைத்துறை,நீதிமன்றம் என்ற அதிகார வர்க்கத்திடம் ஒப்படைத்தார்கள்.இப்பொழுது பிராமணர் அல்லாதார் பிரதமர்களாக வர ஆரம்பித்து விட்டதால்,அன்னா ஹசாரே என்ற பார்ப்பனரின் மூலமாக இந்த வெள்ளைத் தொலிகள் சிபிஐ யையும் தன்வசப் படுத்திக் கொண்டனர்.இந்தியாவில் தமிழ் நாடு கேரளம் தவிற எல்லா மாநிலங்களிலும் இன்னும் பிராமணர்கதான் அதிகார வர்க்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை மக்கள் அறியமாட்டார்கள்.இந்திய அதிகாரவர்க்கத்தில் பிராமண அதிகாரவர்க்கச் சாதிதான் பெரிய லாபியாக உள்ளது.இந்த லாபிதான் சுப்பிரமணிய சாமிகளுக்கும்,சோ.ராமசாமிகளுக்கும்,ஜெயாவுக்கும் உதவிக் கொண்டிருக்கின்றனர்.இந்த நீதிபதிதான் என் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ஜெயா இந்தத் தைரியத்தால்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில சட்டமன்றத்தில் இயற்றப் பட்ட தீர்மானம் பாராளு மன்றத்தில் விவாதிக்கப் படாது.அதற்க்கு முடிவெடுப்பது அந்தந்த இலாக்காக்களின் வெள்லைத் தொலி அதிகாரவர்க்கம்தான்.அது மந்திரி சபைக் கூட்டத்தில் கூட விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படாது.2007 இல் தமிழக சட்ட மன்றத்தில் “மாநில உயர் நீதி மன்றத்தில் அந்தந்த வட்டார மொழிகளில் வழக்காட சட்டம் இயற்றவேண்டும்” என்ற தீர்மானம் நிரைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டது.ஆனால் அது பாராளுமன்ற அலுவல் குளுவுக்கு அனுப்பப் படவே இல்லை.சட்ட அமைச்சகமே கையில் வைத்துக் கொண்டது.அதற்கு எந்த முடிவும் எடுக்கப் படவில்லை.ஏனென்றால் அதன் தலையெழுத்தைத் தீர்மானிப்பது அந்தத் துறையின் தலைவர்தான். அது பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டால்,நிச்சயமாக எல்ல மாநில உறுப்பினர்களும் ஆதரவு தெறிவித்து விடுவார்கள்.ஆனால் இது நடக்கக் கூடாது என்பதில் இந்த வெள்ளைத் தொலிக்காரர்கள் கவனமாக இருக்கின்றனர்.ஆங்கிலத்தில் இருந்தால்தான் மக்களை முட்டாளாக வைத்து தங்களின் அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம்.இந்த நிலையில் இப்படிப் பட்ட லோக்பால் போன்ற Extra Constitutional அமைப்புகள் தேவைதான