அன்பார்ந்த மாணவர்களே,
‘‘மாணவர்களா இவர்கள் ? ரவுடிகள் ,பொறுக்கிகள்’’ என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றனர் ஓட்டுக் கட்சிகள், மாணவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பத்திரிக்கை -தொலைக்காட்சி ஊடகங்களும் அலறுகின்றன. அரசோ, கல்லூரிகளில் போலீசை நிறுத்தி மாணவர்களை பீதியூட்டுகிறது. கல்லூரியை கலவரப் பகுதியாகக் காட்டுகிறது.
கல்லூரி மாணவர்களிடையே எப்போதாவது நடைபெறும் மோதல்களை வைத்துத்தான் மாணவர்களை ரவுடிகள், பொறுக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இம்மோதல்களை போலீசும் – செய்தி ஊடகங்களும் ஊதிப் பெருக்கி வருகின்றன.
கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் இந்த மோதல்களால், சில மாணவர்கள் பாதிக்கப்படுவதையும், இதைத் தொடர்ந்து சில மாணவர்கள் சிறையிலடைக்கப்பட்டு கல்லூரி வாழ்வை இழப்பதையும் நாம் மறுக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் மாணவர் ஒற்றுமையை சீர்குலைப்பவையே. இவைகள் சமூக அநீதிகளுக்கு எதிராக வீரம் செரிந்த பல போராட்டங்களை நடத்திய கடந்த கால மாணவர் வரலாற்றை கறைபடுத்துகின்ற செயல்கள். ஏழைக் குடும்பங்களில் பிறந்து பள்ளிப் படிப்பை முடிக்கவே கடன்பட்டு பல கனவுகளுடன் கல்லூரிக்குள் காலெடுத்து வைத்த நாம், 3 வருட டிகிரி முடிக்கும் முன்பே ’ ரவுடிகள், பொறுக்கிகள்’ என்று அவதூறு பட்டங்களை சுமப்பது கேவலமில்லையா? நண்பர்களாகப் பழக வேண்டிய நாம் ரூட்டுகள் – கல்லூரிகள் எனறு எதிரிகளைப் போல் அடித்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்? எனவே இதை உடனே கைவிடுவோம். நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்போம்.
சூழ்நிலைதான் ஒரு மனிதனின் நடவடிக்கையை தீர்மானிக்கிறது என்பது உண்மையென்றால், சீரழிந்த இந்த சமூகச் சூழலில் ஒரு சிறந்த சமூகப் பற்றுள்ள மாணவன் எப்படி உருவாக முடியும் ? அரசுக் கல்லூரிகளின் சூழ் நிலையும் இப்படித்தான் உள்ளது. ஏழை மாணவர்கள் என்பதற்காகவே, அரசுக் கல்லூரிகளில் குடி நீரும் இல்லை, கழிவறை வசதியும் இல்லை, கேண்டீனும் இல்லை, போதிய ஆசிரியர்களும் இல்லை, ஆசிரியர் திறனை வளர்க்க அரசு முயலுவதும் இல்லை. மாணவர்களுடைய தனித் திறனை வெளிப்படுத்த விளையாட்டோ, கலாச்சார விழாவோ ,கவிதை, கட்டுரைப் போட்டிகளோ அறவே இல்லை. இந்த ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட மாணவர் சங்கத்திற்கும், அதற்கான தேர்தலுக்கும் தடை. மாணவனுக்கு இருந்த ஓரே ஒரு மகிழ்ச்சி பஸ் டே, அதற்கும் நீதிமன்றத் தடை. இந்த ஆரோக்கியமற்ற சூழ் நிலைக்கு மாணவர்களை தள்ளி விட்ட இந்த அரசுக்கு அவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று கூறுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?
போதாக்குறைக்கு சினிமா கூத்தாடிகளும் சீரழிந்த ஊடகங்களும் மஞ்சள் பத்திரிக்கைகளும் ’நோட்டு – புத்தகங்கள் வாங்கவே திண்டாடும் அரசுக் கல்லூரி மாணவர்களிடம் சூர்யா-வைப் போல் சிக்ஸ் பேக் காட்டவும், அதற்கேற்ற புதிய, புதிய ஜீன்ஸ், டி –சர்ட், ஷூ போட்டுக் கொண்டு, அந்த நாயகனைப் போன்று பல மாணவிகளை ‘வளைத்துப் போட’ பந்தா பண்ணும் ஆசையை வளர்க்கின்றன. ’தான் ஆசைப்பட்ட மாணவியிடம்’ பிறர் பேசுவது பொறுக்காமல் அடித்துக் கொள்வதும், மங்காத்தா அஜித், வானம் சிம்பு போன்று குறுக்குவழியில் பணம் சம்பாதித்து ஜாலியாக வாழ பணம் பறிப்பதையும் (கட்டிங் போடுவது), பல பெண்களோடு சுற்றித் திரியும் ’டேட்டிங் ‘எனும் பொறுக்கிப் பண்பாட்டையும் பரப்பி வருகின்றன. நண்பனுக்கு துரோகம் செய்து அவன் காதலியை தன்வசப்படுத்திக் கொள்வது, அடுத்தவன் மனைவியை எப்படியாவது அடைய முயற்சிப்பது என்ற நச்சுப் பண்பாட்டை – இதை நியாயப்படுத்தும் ஒரு ’ கொலைவெறிப் பண்பாட்டை ’ – உருவாக்கி விட்டிருக்கும் தனுசை மானசீக ஹீரோவாக ஏற்றுக் கொண்டு வலம் வர கற்றுத் தருகின்றன.

மேலும், புதுப் புது செல்போன்களையும் பைக்குகளையும் காட்டி ஏங்க வைத்து நுகர்வு வெறியை ஊட்டி வருகின்றன. அதோடு, நடிகர் நடிகைகளின் ஆபாச வக்கிரக் கூத்துக்களையும் இலவச இணைப்பாக கொடுத்து மயக்குகின்றன. போதாக்குறைக்கு அரசும் டாஸ்மாக், கிரிக்கெட் என மலிவான விலையில் தரமான போதையை மாணவர்களுக்குக் கொடுத்து சீரழிவுப் பண்பாட்டிற்கு நிரந்தர அடிமைகளாக்கி வருகிறது, போராடும் குணத்தையும் மழுங்கச் செய்கிறது.
ஓட்டுப் பொறுக்கிகளும் தங்களுக்கான அடியாட்களை உருவாக்குவதற்காக சாராயம், பிரியாணி, தலைக்கு இவ்வளவு ரூபாய் என்று போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை விலை பேசுகிறார்கள். இந்த சீரழிவுகளில் சிக்கும் மாணவர்கள்தான், “யாருடைய கல்லூரி பெரியது”, “யாருடைய ரூட் பெரியது”, மாப் காட்டுவது, வெயிட் காட்டுவது, கெத்துக் காட்டுவது என்று தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த மாநிலக் கல்லூரி மாணவர்களின் மோதல் இதற்கு ஒரு உதாரணம்
மாணவர்களோ செயல் துடிப்புள்ளவர்கள், பயமறியாதவர்கள், அநியாயத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் என்பது உலக வரலாறு. நம் நாட்டிலும் அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி வென்றது; ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதை கண்டித்து தமிழக அரசை முடக்கியது; தலைமைச் செயலகத்திற்காக ராணிமேரிக் கல்லூரி இடிக்கப்படவிருந்ததை தடுத்து நிறுத்தியது; இன்று மெட்ரோ ரயிலுக்காக பறிக்கப்படவிருந்த பச்சையப்பன் கல்லூரி இடத்தை மீட்டது போன்ற வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள். இத்தகையப் போர்க்குணத்தை இந்த அரசும், போலீசும், அரசியல்வாதிகளும், சினிமா-பத்திரிக்கை–தொலைக்காட்சி ஊடகங்களும் வளர விடுமா ? விடாது.

நம்முடைய போர்க்குணத்தை மழுங்கடிக்கும் ஓட்டுப் பொறுக்கிகளையும் வகுப்புகளுக்குள் புகுந்து சுற்றி வளைத்து தாக்கும் போலீசையும், நச்சுப் பண்பாட்டைப் பரப்பி சீரழிக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளையும், ஊடகங்களையும் நம்மை நெருங்க விடாமல் அடித்து விரட்டுவோம்.
இதற்கு
- மாணவர்களாகிய நாம் ஒரே வர்க்கமாக அணிதிரள்வோம்.
- ரூட் என்று, கல்லூரி என்று, ஏரியா என்று மோதிக் கொள்வதை நிறுத்துவோம்.
- “நமக்கு எதிரிகள் மாணவர்கள் இல்லை. இந்த அரசும் – ஓட்டுப் பொறுக்கிகளும்-ஊடகங்களும் தான்” என்பதைப் பிரகடனப்படுத்துவோம்.
- இவர்களுக்கு எதிராக ஒரு போராட்டக் களத்தை அமைப்போம்.
- இதில் பெற்றோர்- ஆசிரியர்களை இணைப்போம்.
- மாணவர்களாகிய நம்மீது திணித்துவரும் ரவுடிகள் பொறுக்கிகள் என்ற அசிங்கத்தை அப்புறப்படுத்துவோம்.
- நம்முடைய பெற்றோர்களின் வாழ்வையும், நமது கல்வி கற்கும் உரிமையையும் பறித்துவரும் ’ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும்’ மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்.
அனைத்துக் கல்லூரி மாணவர்களே!
- கல்லூரி என்றும் ரூட் என்றும் நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்!
- மாணவர் ஒற்றுமையை கட்டியமைப்போம்!
- போலீசு – ஊடகங்கங்கள்- ஓட்டுப் பொறுக்கிகள்தான் எதிரிகள், மாணவர்கள் இல்லை என்பதை உணர்வோம்!
- மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும், கல்வியை வணிகமயமாக்கும் , நச்சுப் பண்பாட்டைப் பரப்பும் மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!
இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை
//..மாணவர்களாகிய நாம் ஒரே வர்க்கமாக அணிதிரள்வோம்.
ரூட் என்று, கல்லூரி என்று, ஏரியா என்று மோதிக் கொள்வதை நிறுத்துவோம்.
“நமக்கு எதிரிகள் மாணவர்கள் இல்லை. இந்த அரசும் – ஓட்டுப் பொறுக்கிகளும்-ஊடகங்களும் தான்” என்பதைப் பிரகடனப்படுத்துவோம்.
இவர்களுக்கு எதிராக ஒரு போராட்டக் களத்தை அமைப்போம்.
இதில் பெற்றோர்- ஆசிரியர்களை இணைப்போம்.
மாணவர்களாகிய நம்மீது திணித்துவரும் ரவுடிகள் பொறுக்கிகள் என்ற அசிங்கத்தை அப்புறப்படுத்துவோம்.
நம்முடைய பெற்றோர்களின் வாழ்வையும், நமது கல்வி கற்கும் உரிமையையும் பறித்துவரும் ’ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும்’ மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்…//
இன்னம் சாதி மத பிரிவினைகளை விட்டுவிட்டீர்களே?
மாணவர்களாகிய நாம் ஒரே வர்க்கமாக அணிதிரள்வோம்.
ரூட் என்று, கல்லூரி என்று, ஏரியா என்று மோதிக் கொள்வதை நிறுத்துவோம்.
“நமக்கு எதிரிகள் மாணவர்கள் இல்லை. இந்த அரசும் – ஓட்டுப் பொறுக்கிகளும்-ஊடகங்களும் தான்” என்பதைப் பிரகடனப்படுத்துவோம்.
இவர்களுக்கு எதிராக ஒரு போராட்டக் களத்தை அமைப்போம்.
இதில் பெற்றோர்- ஆசிரியர்களை இணைப்போம்.
மாணவர்களாகிய நம்மீது திணித்துவரும் ரவுடிகள் பொறுக்கிகள் என்ற அசிங்கத்தை அப்புறப்படுத்துவோம்.
நம்முடைய பெற்றோர்களின் வாழ்வையும், நமது கல்வி கற்கும் உரிமையையும் பறித்துவரும் ’ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும்’ மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்.
அனைத்துக் கல்லூரி மாணவர்களே!
கல்லூரி என்றும் ரூட் என்றும் நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்!
மாணவர் ஒற்றுமையை கட்டியமைப்போம்!
போலீசு – ஊடகங்கங்கள்- ஓட்டுப் பொறுக்கிகள்தான் எதிரிகள், மாணவர்கள் இல்லை என்பதை உணர்வோம்!
மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும், கல்வியை வணிகமயமாக்கும் , நச்சுப் பண்பாட்டைப் பரப்பும் மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!
வேதனையளிக்கிறது.
நான் 1975ல் க்ண்ட தமிழகம் வேறு. இப்போது காணும் தமிழகம் வேறு.
தமிழகத்திலிருந்து திரைப்படங்களும் மதுக்கடைகளும் அகற்றப்படவேண்டும். அதற்காக போராட அணி சேர்ப்பது மிகவும் கடினம்.
சாதியால் வேறுபட்ட தமிழ் சமூகத்தை வளர்த்து விட்டது, செய்தவர் யாராயினும் மிகப்பெரிய கொடுமை.
எல்லாரும் ஒன்றுசேர்ந்தால்தான் இது சாத்தியம். எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தனது பிழைப்பு என்னவாகும் என்று சிலர் கருதுவதுதான் முக்கிய காரணம். காத்திருப்போம்.
கோபாலன்
கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் இந்த மோதல்களால், சில மாணவர்கள் பாதிக்கப்படுவதையும், இதைத் தொடர்ந்து சில மாணவர்கள் சிறையிலடைக்கப்பட்டு கல்லூரி வாழ்வை இழப்பதையும் நாம் மறுக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் மாணவர் ஒற்றுமையை சீர்குலைப்பவையே. இவைகள் சமூக அநீதிகளுக்கு எதிராக வீரம் செரிந்த பல போராட்டங்களை நடத்திய கடந்த கால மாணவர் வரலாற்றை கறைபடுத்துகின்ற செயல்கள். ஏழைக் குடும்பங்களில் பிறந்து பள்ளிப் படிப்பை முடிக்கவே கடன்பட்டு பல கனவுகளுடன் கல்லூரிக்குள் காலெடுத்து வைத்த நாம், 3 வருட டிகிரி முடிக்கும் முன்பே ’ ரவுடிகள், பொறுக்கிகள்’ என்று அவதூறு பட்டங்களை சுமப்பது கேவலமில்லையா? நண்பர்களாகப் பழக வேண்டிய நாம் ரூட்டுகள் – கல்லூரிகள் எனறு எதிரிகளைப் போல் அடித்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்? எனவே இதை உடனே கைவிடுவோம். நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்போம். அ
மாணவப்பருவம் என்பது பல வகைகளில் சிறப்பு வாய்ந்தது. மாணவர்கள் தம்மிடையே சாதி மற்றும் மத வேற்றுமை பாராட்டுவது கிடையாது. வன்முறைகளில் ஈடுபடும் பெரும்பாலான மாணவர்கள் அரசு பள்ளிகளிகளிலிருந்து வருபவர்கள். இவர்களிடம் கற்கும் பண்பாட்டை அங்குள்ள ஆசிரியர்கள் ஏற்படுத்த தவறியிருப்பதே இவர்கள் பாதை மாறி போவதன் காரணம். கல்லூரி ஆசிரியர்கள் இந்த மாணவர் கூட்டம் பயின்று முடிக்கும் காலத்தை எண்ணி எண்ணி ஓட்டுவார்கள். வாய்ப்பு கிடைக்கும் போது தொந்தரவு இல்லாத கல்லூரிகளுக்கு தாவுவார்கள். எனினும் அது தீர்வில்லை.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளின் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபாட்டிருந்த போது அருகாமையில் அமர்ந்து விடைத்தாளை திருத்திய ஒரு ஆசிரியர் சொன்னார். ‘நான்காம் வகுப்பு பயிலும் எனது மகன் இதனை விட சிறப்பாக எழுதுவான்’ என்று ஆதங்கத்துடனும், சோர்வுடனும் சொன்னார். எனக்கு கிடைத்த ஒரு விடைத்தாள் கட்டின் முதல் விடைத்தாளின் உள்ளே அந்த மாணவன் பயின்ற கல்லூரியின் முதல்வர் ஒரு விண்ணப்பத்தை கல்வி விதிகளுக்கு உட்பட்டு இணைத்திருந்தார். அதில் குறிப்பிட்ட அந்த மாணவன் dyslexia குறைபாடுடையவன் என்றும் அதனால் சற்றே தாராள மனதுடன் திருத்துமாறு கோரியிருந்தார். உண்மையில் அந்த மாணவன் எனது இரக்க உணர்ச்சி தேவைபடாமலே சுமாரான மதிப்பெண்களை பெற்றான். அதன் பிறகு எனக்கு எந்த கட்டில் இருந்த விடைத்தாள்கள் அனைத்தும் dyslexia பாதிப்புக்குள்ளானது போல இருந்தது தான் சோகம்.
மாணவர்களின் பிரச்சினைக்கான வேர் பள்ளிகளில் தான் இருக்கிறது. அரசு பள்ளிகளில் கற்கும் ஆற்றலை மாணவர்களிடம் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம். குறைந்தபட்சம் பிழையில்லாமல் எழுத தெரிந்தாலே போதுமானது. இதனை ஏற்படுத்தினாலே கல்லூரிகள் மாணவர்கள் தமது வீடுகளுக்கு செல்ல விரும்பாத வேடந்தாங்கலாக மாறும்.
.
சுற்றி வளைத்து தாக்கும் போலீசையும், நச்சுப் பண்பாட்டைப் பரப்பி சீரழிக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளையும், ஊடகங்களையும் நம்மை நெருங்க விடாமல் அடித்து விரட்டுவோம்.
மாணவர்களின் பிரச்சினைக்கான வேர் பள்ளிகளில் தான் இருக்கிறது. அரசு பள்ளிகளில் கற்கும் ஆற்றலை மாணவர்களிடம் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம். குறைந்தபட்சம் பிழையில்லாமல் எழுத தெரிந்தாலே போதுமானது. இதனை ஏற்படுத்தினாலே கல்லூரிகள் மாணவர்கள் தமது வீடுகளுக்கு செல்ல விரும்பாத வேடந்தாங்கலாக மாறும்.
அரசு /உதவி பெரும் ஆசிரியர்கள் கடமைக்கு பாடம் நடத்தாமல் தம கடமையை மனசாட்சிக்கு பயந்து செய்தாலே மாணவர்களை மாற்றலாம் /காப்பாற்றலாம்
.
உண்மையான கருத்து நண்பரே… வாஙுகும் சம்பளத்துக்குநியாயமாய் சொல்லிக் கொடுத்தாலே இந்த சமுதாயம் முன்னேற் வாய்ப்பு வரும்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறது வினவு. ரூட் இக்காக அடித்து கொள்ளாமல் , சித்தாதாந்தங்களை தெரிந்து கொண்டிருப்பார்கள் என்கின்ற வரையில் ஓகே தான்.
நான் கல்லோரி பருவத்தில் எப்படி இருந்தேன் , நண்பர்கள் எப்படி இருந்தார்கள் என்று சிந்தித்தால் காலம் காலமாக மாணவர்கள் சமுதயாததை ஒட்டி இருக்காத்படி , சமுதாயத்தை புரிந்து கொள்ளாத்படி திட்டமிட்டு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறேன் .
ஆண்டைகள் மாணவர்களை ஸ்போர்ட்ஸ்,ஸெக்ஸ்,மூவீ என்கின்ற ஆய்தாங்கள் மூலம் கட்டுக்குள் வைக்கின்றன. இவை மூன்றும் வேலை செய்யவில்லி என்றால் மதம் என்னும் ஆயுதத்தை உபயோகிக்கின்றன. இவை தாண்டி வருபவர்களுக்கு கார்ப்பரேடுஉகளுக்கு உழைப்பது , பணி உயர்வு போன்றவற்றை தாண்டி சிந்திப்பது இல்லை
இந்த ஆண்டைகள் உருவாக்கியுள்ள் வலிமையான கட்டமைப்பு தகர்ப்பது எளிதல்ல
வெளிநாடு சென்ற பின்னர்தான் எனக்கு சமுதாயம் பற்றிய புரிதல் கிடைத்தது. என்னளவில் எனக்கு ஏன் இந்தியாவில் இந்த அறிவு கிடக்கவில்லை என்று சிந்தித்தததில் அது சம்பந்தமான புத்தகங்கள் கண்ணில் படவில்லை. நூலகங்களில் லேனா தமிழ்வாணன் புத்தகங்கள் , சாண்டில்யன் புத்தகங்கள் தான் மிகுதியாக உள்ளன எனக்கு கிடைத்தன.
நூலகத்தில் தரம் வாய்ந்த புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள்உக்கு அககவாவது இருப்பது அவசியம். கடந்த முறை இந்திய சென்ற போது இரண்டு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுத்தேன். இதை மாதா மாதம் நண்பர்களோடு சேர்ந்து செய்வதை பற்றி சிந்தித்து வருகிறன்
உலகில் பல்வேறு நாடுகளில் பல்கலை கழக மாணவர்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தி ஆட்சி மாற்றத்தை கோருவதை தொலைக்காட்சியில் பார்க்கும் போது ஏன் நம்நாட்டில் இது சாத்தியமில்லாமல் போனது என்று தோன்றும் . மாணவர்கள் சக்தி எதையும் சாதிக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பது ஹைதராபாத் ஊஸ்மானியா பல்கலை கழக மாணவர்கள் போராட்டங்களை பார்க்கும்போது தெரிந்தது.
நான் மாணவர்களைப் பற்றி பேசும் பொழுதெல்லாம் அடிக்கடியும் குறிப்பிடுவதுண்டு. அதாவது, யாரும் மாணவர்களை நம்பி மோசம் போகக்கூடாது என்று கூறுவேன். ஏனெனில், மாணவர்கள் சுலபத்தில் நெருப்புப் பிடிக்கும் பண்டங்களுக்குச் சமமானவர்-கள். பஞ்சு, மண்ணெண்ணெய், பெட்ரோல் இவைகளை எரியும்படி செய்த-வற்கு அதிக உஷ்ணம் தேவையில்லை. சூரியனின் ஒளிக்கதிர் பட்டாலே எரியக்கூடிய தன்மையும் உண்டு. அப்படிப்பட்ட மெல்லிய உள்ளமும், தெளிவான மனத்தையும் கொண்ட-வர்கள் மாணவர்கள். கெட்டியான வஸ்துகள் சுலபத்தில் தீப்பற்றுவதில்லை; தீப்பற்றிவிட்டால் சுலபத்தில் அணைவதில்லை; நெடுநேரம் நின்று எரியும் சக்தி உள்ளவை. சீக்கிரத்தில் தீப்பிடிக்கும் வஸ்துகளோ கெட்டியான வஸ்துகளைப்போல் அதிகநேரம் எரிவதில்லை. சிறிது நேரத்திலேயே அணைந்து போகும். அப்படிப்பட்ட தன்மைக்குச் சமமாக மாணவர்களைக் கூறலாம். எதையும் உடனே நம்பும் சுபாவம் மாணவர்களுடையது. மாணவர்களின் உள்ளம் கெட்டியானது அல்ல; இலேசானதாக இருக்கும்; அதுவும் தூய்மையானதாக இருக்கும்; பட்டதும் பிடிக்கக்கூடிய தன்மை உள்ளது. அந்த மனம் கெட்டிப்படும் வரை அடுத்தடுத்து வருகிறவைகளைக் கவ்விக்கொண்டு, முன்னே பற்றியதைக் கக்கிவிடும்; சரியான பக்குவம் இல்லாததால் ஒரு நிலையில் நிலைத்து நிற்கும் தன்மை கிடையாது. இன்றைக்கு நான் சொல்வதைக் கேட்டு அப்படியே நம்பிவிடும். சரி நம்பி விட்டார்களே என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது நாளைக்கு யாராவது ஒன்றைக் கூறினால் நான் சொன்னதை விட்டுவிட்டு, மற்றவர் கூறுவதை ஏற்றுக்கொள்வார்கள். மனது பக்குவம் அடைய வேண்டும். இதனால் நான் மாணவர்களுக்கு அறிவில்லை, அல்லது மாணவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்பதாகக் கூறுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். பிஞ்சு அறிவு கொண்டவர்கள்! அந்த அறிவு முற்றும் வரை அவர்களுக்கு எதிலும் உறுதியான எண்ணம் பிறக்காது.
அறிவு முற்றும் வரையில் எதையும் கற்பதிலேயே மாணவர்கள் மனத்தைச் செலுத்த வேண்டும். மாணவ வாழ்க்கையில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது எதையும் கற்பதிலேயே மனத்தைச் செலுத்திக் கற்றுத் தெரிந்துகொள்வதிலேயே இருக்கவேண்டும். படித்துப் பரீட்சையில் தேர்ச்சி பெறுவதிலேயே முழு முயற்சியும் காட்டவேண்டும்.
————————–சிதம்பரம் அண்ணாமலை நகரில், 9.2.1956இல்
சொற்பொழிவு – விடுதலை 9.3.1956
இதனை கூறியவர் பெரியாரா ?