Monday, September 26, 2022
முகப்பு கலை கதை ராமன் இரட்டைக் கொலை வழக்கு - நாடகம்

ராமன் இரட்டைக் கொலை வழக்கு – நாடகம்

-

ஓரங்க நாடகம் : ராமன் இரட்டைக் கொலை வழக்கு

ராமன்

ராமாயணத்தின் கதாநாயகனான இராமனின் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த ஓரங்க நாடகம் எழுதப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் வரலாற்றையே ஒரு கிரிமினல் வழக்கு விசாரணையாக, விரிவாகவும் ஆழமாகவும், புராணப் புளுகுகளையும் தோலுரிக்கும் விதத்தில் எழுதினார் மலேசியப் பெரியார்.

ஆனால், இந்த் ஓரங்க நாடகம் மக்கள் மத்தியில் வீதிகளில் நடத்துவதற்காகச் சுருக்கமாக எழுதப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்க்கு முன்னதாக அன்றைய காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எழுதப்பட்ட நூலை இன்றைய கிரிமினல் சட்டப் பார்வையில் விமர்சிப்பது எப்படி சரியாகும் என ‘ஆத்திக அன்பர்கள்’ பொருமலாம். அப்படிப்பட்ட பழைய குப்பையையே இன்றைய சமுதாயத்தின் ஒழுக்கத்துக்கு வழிகாட்டி என்றும், அதன் நாயகர்களை புனிதர்கள் என்றும், அந்த ராமனே “தேசிய நாயகன்” என்றும் பார்ப்பன, ‘மேல்’சாதிக் கூட்டம் சித்தரிக்கும் போது அந்த ராமனை ” தேசிய வில்லன்” என்று நாங்கள் நிரூபிப்பதில் என்ன தவறு? அதுவும் கற்பனையாக அல்ல; பார்ப்பனர்களால் போற்றிப் புகழப்படும் வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில் !

____________________________

பாத்திரங்கள் : – நீதிபதி, பெஞ்ச் கிளார்க், அரசு தரப்பு வழக்குரைஞர், ராமனின் வழக்குரைஞர், டவாலி, ராமன், வசிட்டன், நாச்சி முத்து (சலவைத் தொழிலாளி), மின்னல் கொடி (சீதையின் சேடிப் பெண்)

(நீதிபதி தனது இருக்கையில் வந்து அமர்கிறார். பெஞ்சு கிளார்க் வழக்கு விவரங்களைப் படிக்கிறார்)

டவாலி : கோதண்டராமன் என்கிற ராஜாராமன் என்கிற சீதாராமன் என்கிற அயோத்தி ராமன் என்கிற ராமன்…. ராமன்….ராமன்!

(ராமன் உள்ளே நுழைந்து கூண்டில் ஏறி நிற்கிறான்)

பெஞ்சு கிளார்க் : உன் பேர் என்னப்பா?

ராமன் : என் திருப்பெயர் ராமன்.

பெ.கி : அப்ப பாக்கி பேரெல்லாம்?

ராமன் : எல்லாம் நானே

பெ.கி : என்னய்யா ஆரம்பத்திலேயே குழப்பமா இருக்குது. உனக்கு மொத்தம் எவ்வளவு பேரு?

ராமன் : ஆயிரம் நாமங்கள்.

பெ.கி :  (தலையிலடித்துக் கொள்கிறார்) சரி, ராமன்கிறது யாரு… நீதானே?

ராமன் : ஆம்

பெ.கி : சரி ஆள விடு.

அரசு வக்கீல் : யுவர் ஆனர், குற்றம் சாட்டப்பட்ட ராமன் வில் அம்பு போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் கோர்ட்டில் வந்து நிற்கிறார். ஏற்கனவே இவர் மீது இரட்டைக் கொலை வழக்கு இருக்கிறது. இவரை ஆயுதங்களுடன் கோர்ட்டுக்குள் அனுமதிப்பது சட்டத்திற்குப் புறம்பானது.

ராமனின் வக்கீல் : அப்ஜெக் ஷன் யுவர் ஆனர். இது என் கட்சிக்காரரின் உரிமையை பறிப்பதாகும். மேலும் இது எங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது.

அ.வ : கனம் நீதிபதி அவர்களே , இந்த ஆள் ஏற்கனவே இந்த ஆயுதங்களைக் கொண்டு இரண்டு கொலை செஞ்சிட்டான். ஊரெல்லாம் அலம்பல் பண்ணிக்கிட்டு திரியுறான். கோர்ட் இதை அனுமதித்தால் நமக்கே ஆபத்து.

நீதிபதி : அப்ஜெக்சன் ஓவர்ரூல்ட்

(டவாலியிடம் கண்ணைக் காட்டுகிறார்- டவாலி அம்பு வில்லை பிடுங்கப் போகிறார்- ராமன் திமிறுகிறான், நீதிபதி மீது அம்பெய்ய முயலுகிறான். டவாலி பாய்ந்து சென்று வில்லைப் பிடுங்கி அம்பையும் உருவுகிறார். வில்லை இழந்த ராமன் கூண்டில் துவண்டு சாய்கிறான்)

ரா.வ : யுவர் ஆனர் அந்த வில்லை மட்டுமாவது என் கட்சிக்காரருக்குக் கொடுக்க வேண்டுகிறேன். இல்லையென்றால் அவரால் நிற்கக்கூட முடியாது.

(வில்லை மட்டும் கொடுக்க நீதிபதி உத்தரவிடுகிறார். வில் கிடைத்தவுடனே ராமன் மீண்டும் ‘கம்பீரமாக’ நிமிர்ந்து நிற்கிறான்.

அ.வ : உன் பெயர் என்ன?

ராமன் : ராமன்

அ.வ : அப்பா பேரு?

ரா : தசரத சக்கரவர்த்தி

அ.வ : அம்மா பேரு?

ரா : கோசலை

அ.வ : அப்படீன்னா நீங்கதான் தசரதனுக்கும் கோசலைக்கும் பிறந்த ராமன்கிறவரா?

ரா : அப்படி சொல்ல முடியாது, என் தாயார் கோசலை…

அ.வ : என்னய்யா ஆரம்பத்திலேயே குழப்புற?

ரா : அதாவது… எனது தந்தை தசரத சக்கரவர்த்திக்கு 60,000 மனைவிமார்கள்; இருந்தும் அவருக்கு நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லை; ஆகையால் புத்திர காமோஷ்டி யாகம் என்று ஒரு யாகத்தை நடத்தினார். யாகம் முடிந்தவுடன் என்னுடைய தாயின் அந்தப்புரத்திற்கு ஒரு குதிரையை…

(வசிஷ்டர் “அபிஷ்டு… அபிஷ்டு…” என தலையில் அடித்துக் கொள்கிறார்.)

ரா.வ : அப்ஜெக் ஷன் யுவர் ஆனர்

(வெறி வந்ததைப் போல கத்துகிறார்)

சம்மந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு எனது கட்சிக்காரரை அரசு வக்கீல் குழப்புகிறார். இது எங்கள் மத உணர்வை புண்படுத்துகிறது.

நீதிபதி  : ஆர்டர்…ஆர்டர்.. அடுதத கேள்விக்குப் போங்க

அ.வ : சரி நேரா விசயத்துக்கு வரேன். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் ஏதாவது மனஸ்தாபம், சண்டைகள் உண்டா?

ரா : (வில்லன் சிரிப்பு சிரிக்கிறார்) என்ன ஒரு கேள்வி கேட்டு விட்டீர்கள். எங்கள் திருமணம் காதல் திருமணமய்யா. உங்கள் கம்பனைக் கேட்டுப் பாருங்களேன்.  “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்”.

அ.வ : அதெல்லாம் தெரியும்யா..சம்பவத்தன்று என்ன நடந்தது அதச்சொல்லு.

ரா : சம்பவ தினத்தன்று அதிகாலையில்…நான் அம்சதூளிகா மஞ்சத்திலே சயனித்திருந்த போது…

அ.வ : யோவ்….. விஷயத்துக்கு வாய்யா!

ரா : நான் அரசவையில் அமர்ந்திருந்து நடன மங்கையரின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப்புரத்தில் திடீரென்று ஒரு சத்தம். நான் ஓடினேன் அந்தப்புரத்திற்கு அங்கே…… அங்கே… அங்கே..

அ.வ : அங்கே என்னய்யா

ரா: அங்கே பூமி பிளந்திருந்தது. எனது சீதா தேவி பூமித்தாயின் கருப்பைக்கே சென்று கொண்டிருந்தாள்.

அ.வ : அப்போ அந்தபுரத்தில் வேறு யார் இருந்தாங்க?

ரா : யாருமே இல்லை

அ.வ : அப்படின்னா… சம்பவத்தை கண்ணால் பார்த்த வேற சாட்சிகளே இல்லையா?

ரா : ஆம்

அ.வ : சத்தம் கேட்டு அந்தப்புரத்துக்கு போனீங்க உங்கள் மனைவி பூமிக்குள் தான் போனாங்கன்னு எப்படி நிச்சயமா சொல்றீங்க?

ரா : நான் தான் அவள் பூமிக்குள் போய்க் கொண்டிருப்பதை என் கண்ணால் பார்த்தேனே..

அ.வ : என்ன சார்…. லவ் பண்ணி கல்யாணம் பண்ணினதா சொன்னீங்க. நீங்க காப்பாத்த முயற்சிக்கலையா?

ரா : அவள் விதி முடிந்து விட்டது. நாம் என்ன செய்ய முடியும்?

அ.வ : சரி நீங்க போகலாம். நான் கூப்பிடும் போது வரணும்.

ரா: எமது அஸ்திரங்களை கொடுத்தீர்களானால்….

டவாலி : என்னாது…. அஸ்திரமா? போய்யா அதெல்லாம் கேஸ் முடிஞ்ச பின்னாலதான்.

2

டவாலி : மின்னல் கொடி…மின்னல் கொடி…. மின்னல் கொடி

(மின்னல்கொடி கூண்டில் ஏறி நிற்கிறாள்)

அ.வ : உன் பேரென்னம்மா?

மி.கொ : மின்னல்கொடிங்கய்யா

அ.வ : சீதையை உனக்கு எத்தனை நாளா பழக்கம்?

மி.கொ : ரொம்ப சின்ன புள்ளயிலிருந்தே பழக்கங்கய்யா

அ.வ : அப்படின்னா நீ அயோத்திக்கு எப்படிம்மா வந்தே?

மி.கொ : இந்த ஆளுக்கு கட்டி கொடுத்தப்ப, சீரு செனத்தியோட என்னையும் சேத்து அனுப்பிட்டாங்கையா.

அ.வ : அப்படின்னா நீ சீதைக்கு ரொம்ப நெருக்கம்னு சொல்லு.

மி.கொ : ஆமாங்கய்யா, எந்த விசயத்தையும் அம்மா எங்கிட்ட மறைச்சதே இல்ல.

அ.வ : சம்பவ தினத்தன்னைக்கு என்ன நடந்துச்சு?

மி.கொ : அது ஏங்க, இந்த ஆளு அந்த அம்மாவ என்னைக்கி ராவணங்கிட்டயிருந்து கூட்டிட்டு வந்தானோ அன்னையிலிருந்து ஒரே ராவடி தாங்கய்யா.

அ.வ : என்ன தகராறு?

மி.கொ : வேறென்ன? சந்தேகந்தான். ஆசையோட வாழ வந்த பொண்ண வீட்டுல வச்சி பாக்கலய்யா இவன், நெருப்புல இறக்கி பாத்தான்யா.

அ.வ : நெருப்புலயா…. என்னாச்சி?

மி.கொ : என்னா ஆச்சி….வெந்து போச்சி.

அ.வ : நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். நீ சொல்லும்மா.

மி.கொ : அன்னையிலிருந்து அந்தம்மாவக் கண்டாலே இவனுக்கு ஆவல, தென…ம் சண்டை.

அ.வ : சம்பவ தினத்தன்னைக்கு என்ன நடந்துச்சி? அதச் சொல்லு.

மி.கொ : அட… வழக்கமான வம்புதாங்க. அன்னக்கு மத்தியானம் இந்த ஆளு சோறு திங்க வந்தாரு. எவனோ வழி மேல போறவன் அம்மாவ பத்தி தப்பு தண்டாவா ஏதோ பேசிட்டு போனானாம். இந்த ஆளுக்கு ரோசம் பொத்துகிட்டு வந்துடுச்சாம். ஒரே சண்டை.

அ.வ : என்ன சண்டை?

மி.கொ : இந்த ஆளு பேசினதெல்லாம் நாலு சனம் இருக்கிற சபையில் சொல்ல முடியுங்களா?

அ.வ : சரி அந்த அம்மா என்ன சொல்லிச்சு? அதையாவது சொல்லு

மி.கொ : நான் அங்க நிக்கலீங்க. ஆனா கேட்டிச்சி நாக்கு புடுங்கிக்கிற மாதிரி கேட்டிச்சு.

அ.வ : அப்புறம்

மி.கொ : அவ்வளவு தாங்க. அப்பத்தான் அந்தம்மாவை கடைசியா நான் பாத்தது.

அ.வ : ஏதாவது வெடிச்சத்தம் மாதிரி கேட்டிச்சா?

மி.கொ : வெடிச்சத்தமும் கேக்கலை. இடிச்சத்தமும் கேக்கல. இந்தாளு அந்தம்மாவைப் போட்டு அடிச்ச சத்தம்தான் கேட்டிச்சு.

அ.வ : சரி நீ போம்மா. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.

3

டவாலி : நாச்சிமுத்து…நாச்சிமுத்து..நாச்சிமுத்து

(நாச்சிமுத்து கூண்டில் ஏறி நிற்கிறார்)

அ.வ : உம் பேரென்னப்பா?

நா.மு : நாச்சிமுத்து

அ.வ : உங்கப்பா பேரு?

நா.மு : வீரையன்

அ.வ : சொந்த ஊரு?

நா.மு : நம்ம பரம்பரையா அயோத்திதாங்க.

அ.வ : தொழில்?

நா.மு: சலவை தொழிலாளிங்க. பரம்பரையா அரண்மனை சேவகம் செய்யுறமுங்க.

அ.வ : சரி கேக்குற கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லணும்.

நா.மு: சரிங்கய்யா

அ.வ : ஆத்தங்கரையில் வச்சி ராணியம்மாவைப் பத்தி நீ ஏதோ தாறுமாறா பேசுனியாமே?

நா.மு : அய்யய்யே… அப்படியெல்லாம் எதுவும் பேசலீங்க.

அ.வ : அப்படின்னா…. வேற என்ன பேசின?

நா.மு: நான் சொன்னது இதுதாங்க. நீ போயி சண்ட கிண்ட போட்டு அந்தம்மாவ கூட்டியாந்த. கூட்டியாந்தவன் ஒழுங்கு மரியாதையா வச்சி வாழ வேண்டியதுதானே.. அத வுட்டுட்டு நெருப்புல எறக்குனா அது என்னா நியாயம் -அப்படி சந்தேகப்பட்டவன் அவன்கிட்டயே வுட்டுட்டு வந்திருக்க வேண்டியதுதானே. இதத்தான்யா நான் சொன்னேன். கதையையே மாத்திட்டானுங்கய்யா

அ.வ : நீ பேசும் போது அங்க யாராவது இருந்தாங்களா?

நா.மு: சாமி சத்தியமா என் பொண்டாட்டியத் தவிர வேற யாரும் கெடயாதுங்க. அரண்மனை விசயத்தை நாலு பேர வச்சிகிட்டுப் பேசமுடியுங்களா?

4

டவாலி: வசிட்டர்…. வசிட்டர்….வசிட்டர்

(வசிட்டர் கூண்டுக்கு வந்து நிற்கிறார். டவாலி வசிட்டரைத் தொடுவது போல் அருகில் போக வசிட்டர் தொடாதே…தொடாதே என்று தள்ளுகிறார்)

அ.வ : உங்க பேரு என்ன பெரியவரே?

வசிஷ்: வசிஷ்டர்

அ.வ: ஊரு

வசி: யாதும் ஊரே…யாவரும் கேளீர்

அ.வ : கிழிஞ்சுது போ. சரி உங்க அப்பாரு பேரு?

வசி: ஈரேழு பதினாலு லோகங்களையும் எட்டு திசைகளையும், சூரிய சந்திரர்களையும் எவன் படைத்தானோ அவனே என் அப்பன்.

அ.வ : யோவ், இது கோர்ட்டா என்ன? கேக்குறதுக்கு ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லனும். சரி.. உன் தொழில் என்ன?

வசி : ராஜகுரு

அ.வ : எந்த ராஜாவுக்கு குரு?

வசி: சூரிய வம்சத்தின் ஏழேழு பரம்பரைக்கும் நான தான் குரு!

அ.வ : ஏழு பரம்பரைக்கும் நீதான் குருவா…சரி உன் வயதென்ன?

வசி: கடலின் ஆழமென்ன?

(ராமன் தரப்பு வக்கீல் ஹா…. ஹா.. என சிரிக்கிறார்.)

நீதிபதி: (முறைத்துப் பார்த்துவிட்டு) யோவ் பெரியவரே.. கேக்குற கேள்விக்கு நேரடியா பதில் சொல்லு.

அ.வ : ராமனை உமக்கு தெரியுமா?

வசி: தெரியுமாவா? இதோ இந்தத் தோளில் தூக்கி வளர்த்தவனய்யா நான்.

அ.வ : சம்பூகனை தெரியுமா?

வசி: கேள்விப்பட்டிருக்கிறேன்.

அ.வ : உங்களுக்கு சம்பூகனுக்கும் ஏதாச்சும் முன் விரோதம் உண்டா?

வசி : முன்விரோதமாவது பின்விரோதமாவது, அவன் ஒரு தேச விரோதி.

அ.வ : தேச விரோதியா? என்னய்யா பண்ணினான்?

வசி: அவன் ஒரு சூத்திரன். பிராமணர்களுக்கு போட்டியாக தவம் செய்ய முயற்சி செய்த சூத்திரன்.

அ.வ : அது உங்களுக்கு எப்படி தெரியும்?

வசி: அயோத்தி நகர் பிராமணர்கள் என்னிடம் முறையிட்டார்கள். அதை விசாரித்து உரிய தண்டனை கொடுக்கும்படி நான்தான் ராமனுக்கு உத்தரவிட்டேன்.

அ.வ : அப்போ நீங்கதான் கொலை செய்யத் தூண்டினீங்க அப்படித்தானே?

வசி : கொலையா? தருமத்தின்படி எதை செய்ய வேண்டுமோ அதை நான் செய்தேன். சூத்திரன் என்பவன் அடிமை வேலை செய்யப் பிறந்தவன். பிராமணனுக்கும், சத்திரியனுக்கும், வைசியனுக்கும் தொண்டு செய்வதுதான் அவன் குலத்தின் கடமை. அதை அவன் மீறினான்

அ.வ : என்னய்யா செஞ்சான்? அதச் சொல்லு

வசி: பிராமணர்களுக்கு போட்டியாக தவம் செய்தான். இது சட்ட விரோதம். சூத்திரன் வேதத்தை காதால் கேட்டாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று நம் சனாதன தர்மம் சொல்கிறது. ஏன்?..சூத்திரன் சுடுகாட்டுக்குச் சமம் என்று ஆதிசங்கரரே சொல்லியிருக்கிறாரே

அ.வ : நீதான் கொலை செய்யத் தூண்டினதா மறுபடியும் ஒத்துக்கிற.

வசி : இது கொலையென்றால் இதுபோல ஆயிரக்கணக்கில் நாங்கள் செய்திருக்கிறோம். இதையெல்லாம் நீங்கள் விசாரித்து தீர்ப்பு சொல்லிவிட முடியுமா?

– ஏகலைவன் கேஸை விசாரித்தீர்களா?

– நந்தனார் கதையென்ன – எங்களுக்கு தெரியாததா?

– அவ்வளவு தூரம் ஏன்? உங்கள் வெண்மணியில் நீங்கள் செய்தது என்ன?

மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பாதீர்கள். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் ராமன் செய்தான்.

அ.வ : அப்போ… ராமன் தான் இந்த கொலையை செஞ்சானு சொல்றீங்க

வசி : கொலை…கொலை…கொலை. இந்த கெட்டவார்த்தையைக் கேட்டு என் காதுகள புண்ணாகி விட்டன. சனாதன தர்மப்படி என்ன செய்ய வேண்டுமோ ஹிந்து தர்மப்படி என்ன் செய்ய வேண்டுமோ அதைத்தான் அவன் செய்தான்

அ.வ : நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்

– சரி நீங்க போகலாம்.

5

டவாலி : ராமன்…ராமன்….ராமன்

(ராமன் கூண்டில் வந்து நிற்கிறான்)

அ.வ : கனம் நீதிபதி அவர்களே! இந்த ரெட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சீதாராமன், கோதண்டராமன், ராஜாராமன், அயோத்திராமன் என்ற பல்வேறு பெயர்களில் உலவி வருகின்ற ராமன் என்கிற இந்த நபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ததின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவன் தன் மனைவி சீதையை ஏமாற்றி தீ வைத்து கொளுத்தியிருக்கிறான். அவள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறாள். அதன்பின் அவளைக் கொலை செய்து புதைத்து இருக்கிறான். தடயங்களை அழிக்க முயற்சியெடுத்து இருக்கிறான். சாட்சிகளை மிரட்டியிருக்கிறான்.

ஒரு பாவமும் அறியாத சம்பூகன் என்ற தொழிலாளியை எவ்வித நியாயமான முகாந்திரமில்லாமல் திடீரென்று தாக்கி கொலை செய்திருக்கிறான். இந்தக் கொலைக்கு ‘ராஜகுரு’ என்று சொல்லப்படுகிற வசிஷ்டர் உடந்தையாகவும் தூண்டி விடுபவராகவும் இருந்துள்ளார்.

ஏற்கனவே, இந்தியாவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு புனைப்பெயர்களில் தசாவதாரம் என்கிற பெயரில் போர்ஜரி, ஆள்மாறாட்டம், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, சதி, கற்பழிப்பு போன்ற கொடிய கிரிமினல் குற்றங்களுக்காக இவன் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக விசாரணை நடத்தப்படாமல் உள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டும் இத்தகைய கிரிமினல் பேர்வழி இனிமேலும் வெளியில் நடமாடுவது சமுதாயத்திற்கே ஆபத்து என்கிற உண்மையை கணக்கில் கொண்டும், இவனுக்கு உரிய தண்டனை அளிக்கக் கோருகிறேன்.

குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் இந்த நீதிமன்றத்தின் கருணைக்கும், இரக்கத்திற்கும் எள்ளளவும் தகுதியில்லாதவன் என்பதால் இவனுக்கு மிக அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நீதிபதி: என்னப்பா… இது சம்பந்தமா நீ ஏதாவது சொல்ல விரும்புறியா?

ரா: ஹா….ஹா…..ஹா…(சிரிக்கிறான்)

அ.வ : யோவ் என்னய்யா சிரிக்கிற. அய்யா கேட்கிறாரு ஒழுங்கா பதில் சொல்லு

ரா: யதா யதாஹி தர்மஸ்ய

நீதிபதி : என்னப்பா நான் இவவளவு சீரியசா கேட்டுக்கிட்டிருக்கேன். நீ என்னமோ உளர்றே, புரியுற மாதிரி சொல்லுய்யா

ரா: புரிந்தது…புரியாதது…தெரிந்தது..தெரியாதது எல்லாம எமக்குத்தான் . ராம் ராஜ்யத்தில் ராமன் மீதே விசாரணையா?

என் வீர பராக்கிரமங்களைப் பற்றி வால்மீகியிடம் கேட்டுப்பார்!

என் ஒழுக்கத்தைப்பற்றி கம்பனிடம் கேட்டுப்பார்!

என் காதல் லீலைகளைப்பற்றி துளசிதாசனிடம் கேட்டுப்பார்!

அ.வ : யோவ் நீ என்னய்யா சொல்ற… அத சொல்லு

ரா: மானிடப் பதரே! சூத்திர நாயே….! அற்பனே! யாரைப் பார்த்து நீ என்கிறாய்.

எங்கே என் கோதண்டம்…வாலியின் உயிர் பறித்த என் அஸ்திரங்கள் எங்கே? ராவணனின் சிரம் சாய்த்த எனது அம்புகள எங்கே…எங்கே…

நீதிபதி: ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டு

(ராமன் இழுத்து செல்லப்படுகிறான்)

6

தொலைக்காட்சி அறிவிப்பு

ஒரு முக்கிய அறிவிப்பு :-

இரட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமன் என்கிற வாலிபர், நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் காவலிலிருந்து தப்பி விட்டார்.

அடையாளங்கள்

வயது : தெரியவில்லை. ஆனால் இளமையான தோற்றம்

நிறம் : பச்சை

போலீசாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வரும் இந்த நபர் கையில் வில், அம்பு போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் நடமாடிக் கொண்டிருக்கிறார். தற்போது தலைமறைவாக இருக்கும் இந்த நபர் தனக்கு ஆதரவாக தனது கூட்டாளிகளைத் தூண்டி விட்டு நாட்டில் கலவரத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் கடைசியாக வந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்த நபரை எங்கேனும் காண நேர்ந்தால் உடனே நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :- செயலர்,மக்கள் கலை இலக்கிய கழகம், தமிழ்நாடு.

– மருதையன்
______________________________________________
புதிய கலாச்சாரம் – டிசம்பர் 1992
______________________________________________

 1. எல்லாம் சரிதானுங்க. ஆனா, நம்ம நீதிபதிமாருங்க எப்போ ராமனுக்கு எதிரா பேசுனாங்க அல்லது பேசுவாங்களா?

 2. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சி…..செம்மையான கட்டுரை……

 3. காம கேடியே விடுதலை ஆயிருச்சு………….ராமன் மேலத்தான் ஒரு தூசு படத்தான் இந்து வெறி வானரகங்கள் விட்டுவைக்குமா……………….. ஒரு மாதம்(மார்கழி யோக்கியர்கள் நிறைந்த நாட்டிலே.????

 4. அண்ணாவின் ‘நீதி தேவன் மயக்கம்’ நினைவுக்கு வருகிறது! சிந்தனையை தூண்டும் நகைச்சுவை! தொடரட்டும் உமது பணி!

 5. சிரிக்கவா?சிந்திக்கவா?வெட்கப்படவா?சினம் கொள்ளவா?…எதை நோக்கி இப் பிரயாணம்?அவ் இலக்கை எப்பொழுது தொட?…ஏதோ ஒர் அறிவால் மனிதன் ஏமாற்றப் படுகிறானென்றால்,அதை வீழ்த்த வேண்டிய அறிவின் வேகம்… எப்போது அதை வீழ்த்த?

 6. If u have courage post an article against the customs and rituals of abrahmic religions.do u have impartial view ? Y cant u post about the status of minority hindus in pak .

  • KSS: Be bold in what u stand for!

   say straight away what u want to say….
   I think, u expect ur POONOOL GANG to ride on tamil community still?
   NEVER!

 7. ராமனோட சங்கதிதான் தெரிந்த விசயமாச்சே…பொண்டாட்டி ராவணன் கிட்ட மாட்டின உடனே
  காப்பாத்த போகாம,குரங்கு,கோட்டான்,அணில் வகையறாவோட சேர்ந்து “பாலம்” கட்டின புத்திசாலி!
  (புஸ்பக விமானம் சர்வீசுக்கு போய்விட்டது)

 8. First of all, all old indian literary works are full of fantasy and unreal things. Do you have guts to write about funny things in Silapadikaram or Manimegalai or objectionable apsects in Quran or other religious texts? Instead of writing these non sense things, why can’ you adopt some poor children and educate them if you are really worried about the society. If you are an atheist, you should criticize all religions or no religions. Why can’t you write about the atrocities against Hindus in Bangladesh and Pakistan. As a responsible blogger, you need work on developing friendship among all communities and remove hatreds. Please feel free to delete this if it violates against your policy and sorry, fellow brother and sisters, for hurting your sentiments while expressing my view.

 9. 1.ஸ்ரீ ராமரின் புகழ் என்றும் இருக்கும்

  2.ஸ்ரீ ராமருக்கு அடியவர்கள் என்றும் இருப்பார்கள்

  3.ஸ்ரீ ராமர் என்ற பேரொளியை மறைக்க முடியாது

  வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
  பெருந் துயர் இடும்பையில் பிறந்து
  கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
  அவர் தரும் கலவியே கருதி
  ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
  உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
  நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
  – நாராயணா என்னும் நாமம்

  பெரிய திருமந்திரத்தின் மகிமை- திருமங்கை ஆழ்வார்

  சிவ வாக்கியர்
  “அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
  சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
  சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
  சிந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே”

  இந்த பாடலில் ராம நாமத்தின் பெருமையைச் சொல்லுகின்றார் சிவவாக்கியர்.

  அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய
  தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார்.

  தினமும் பாராயணம் செய்ய ஸ்ரீ ராமர் மந்திரங்கள்

  ஞாயிறு -ஸ்ரீ ராம் ஜெய ராம் ரகு ராம்

  திங்கள் -ஸ்ரீ ராம் ஜெய ராம் சிவ ராம்

  செவ்வாய் -ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்

  புதன் -ஹரி ராம ஹரி ராம ராம ராம ஹரி ஹரி

  வியாழன் -ஜெய ராம சிவ ராம குரு ராம ஜெயா ராம்

  வெள்ளி -சீதா ராமா ஹனுமந்தா ரமா சீதா ஹனுமந்தா

  சனி – ஸ்ரீ ராம் ஜெய ராம் சுந்தர ராம்

  சிறப்பு மந்திரம் – ஸ்ரீ ராம் ஜெய ராம் கோதண்ட ராம்

  திவ்யமான இம் மந்திரங்களை தினமும் பாராயணம் செய்பவருக்கு ஸ்ரீ ராமரின் அருள் பரிபூரணமாக
  கிட்டும்

  • திரு.ராமசாமி அவர்களே, சிவவாக்கியர் “சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டைநாத பட்டரே” என்று ஒரு பாட்டு எழுதி இருக்காரே படிச்சு இருக்கீர்களா?

 10. அப்பா ராமசாமி,உனக்கு திருமங்கை ஆழ்வார் மாதிரி ஒரு பையன் இருந்தால்…
  1000 தீவட்டிகளோடு கொள்ளையடித்து, 1000 பேருக்கு அண்ணதானம்…
  ஆகா,தமிழன் கொர்ர்ர்..அதனால் ராமர் மட்டும் அல்ல…அல்லக்கைகளும்
  தொடர்ந்து தமிழனை கொள்ளையடிக்கும்.
  1000 பெரியார் மட்டுமல்ல,1 லட்சம் பெரியார் வந்தாலும் தமிழனைத் திருத்த முடியாது:
  பூணூல்களே இது உங்கள் ராஜ்ஜியம்…முடிந்தவரை சுருட்டுங்கள்…மிச்சம் மிதி இருந்தால், உஙகளது அடுத்த தலைமுறை சுருட்டும்

 11. ஒரு மனைவிக்கு நல்ல கணவராக இருக்க முடியாதவர் எப்படி நல்ல கடவுளாக இருக்க முடியும் ? மனைவியை காப்பாற்ற சக்தி இல்லாதவர் எப்படி கடவுளாக இருக்க முடியும் ? வாலியை நேர்மை இல்லாமல் மறைந்து நின்று கொன்றவர் எப்படி உயரிய பண்புகளுடைய கடவுளாக இருக்க முடியும் ? தன் மனைவிக்காக சுயநலத்துடன் போர் நடத்தி பல லட்சக்கணக்கான மனிதர்களை கொன்றவர் எப்படி கடவுளாக இருக்க முடியும் ?
  ராமர் செய்த ஒரே சாதனை ஏகப்பத்தினி விரதம் தான். அந்த காலத்தில் அது உயரிய பண்பாக இருக்கலாம். இன்று அது போல லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். மற்றபடி அந்த கேரக்டர்க்கு சிறப்பான பண்புகள் ஏதுமில்லையே… ? நல்ல காவியமாக ரசிக்க கூட முடியவில்லையே. அவ்வளவு விரசங்கள் உடையது ஒரிஜினல் வால்மீகி ராமாயணம். கம்பர் தன ரீமேக்கில் எடிட் செய்திருப்பதால் ஒரிஜினலில் இல்லாமல் ஆகிவிடாது ?.
  பத்து தலை ராவணன், குரங்கு மனிதர்கள், ஆறுமாதம் தூங்கும் கும்பகர்ணன், தசரதனின் 60000 மனைவிகள், அசுவமேதயாகம், அணில் கோடு இது போன்ற அபத்தங்கள் ராமாயணம் முழுவதும் நிறைந்திருக்கிறது. இதெல்லாம் சாத்தியமா ? இவைகள் எல்லாம் ராமாயணம் வரலாறு இல்லை என்பதை உணர்த்தவில்லையா ? கற்பனை காவியம் என்பது புரியவில்லையா?

 12. ராமன் காட்டுக்குப் போறேன்னுதானே கிளம்பினான். அயோத்திக்கு எந்தப் பக்கம் காடு இருக்கு? வடக்கு பக்கம்தானே.. இமய மலையே அயோத்திக்கு வடக்குல தானே இருக்கு. அப்புறம் எதுக்குடா ராமன் காட்டுக் போறேன்னு தெற்கு பக்கம் வந்தான்? திருட்டுப் பய.. அதுலதான் நமக்கு எதிரான அரசியல் இருக்கு”
  – திருவாரூர் தங்கராசு

 13. இராமனின் மனைவி சீதையின்மீது பிரியப்பட்டான் ராவணன்(திராவிடன்)’-இப்படி அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டதினால் அவனுக்குத் தக்க பாடம் கற்பித்து, அவனைக் கொன்று தனது ஒழுக்கத்தை உலகுக்கு அறிவித்த பார்ப்பனியம், இந்திரனை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது. இந்த இந்திரனின் ‘ஃபுல் டைம் ஒர்க்’ அடுத்தவர்கள் மனைவிகளோடு உறவு கொள்வதே. அந்த உறவுக்காக எதையும் செய்பவனே இந்திரன். குறிப்பாக கடும்தவம் புரிகிற ரிஷி பத்தினிகளோடு உறவு கொள்வதில் கைதேர்ந்தவன் இந்திரன்.சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இந்திரன். அந்தக் காலத்து ஜெயேந்திரன்-விஜயேந்திரன்.இந்த இந்திரனைத்தான் தேவர்களின் தலைவன் என்று கொண்டாடுகிறது பார்ப்பனியம்.இந்திரனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ராவணனை(திராவிடன்) ஒழுக்கமானவன் என்று கூடச் சொல்லிவிடலாம். சீதை மீது மோகம் சொண்ட ராவணன்(திராவிடன்) அவள் மீது தன் நிழல்கூடப் படாமல் பார்த்துக் கொண்டான். ராவணனின் முறையற்ற காதலுக்கு மரணதண்டனை வழங்கியது பார்ப்பனியம்.இந்திரனின் முறையற்ற காமத்தை அங்கீகரிக்கிறது, பார்ப்பனியம். இவைகளிலிருந்து பார்ப்பனியம் சொல்லுகிற நீதி, பார்ப்பனனல்லாத ஒருவன் பார்ப்பானின் மனைவியை மனதால் நினைத்தாலும் அவனுக்கு மரண தண்டனை ஆனால் ஒரு பார்ப்பான் அடுத்தவர்கள் மனைவிகளோடு உறவு வைத்துக் கொண்டாலும், அது தண்டனைக்குரிய குற்றமல்ல.” இதுதான் பார்ப்பனிய தர்மம்

 14. பஞ்சமா பாதகங்களில் ஒன்றாகிய மாதாவை புணர்ந்த பார்பானுக்கு, அவன் இறக்கும் தறுவாயில், தன் வைப்பாட்டிக்கு பிறந்த பிள்ளையை,நாராயணா என்று அழைத்ததால் சுவர்க்கம்நிச்சயமாகி, புஷ்பக விமானம் அழைத்துச் செல்ல வந்ததாம்! ஆகவே கபர்தார்!

 15. ஆமாம் அய்யா! ஆண்டவனைநம்பலாம், அதற்காக இவர்கள், எல்லா மத வாதிகளையும் செர்த்துதான், அளப்புகளையெல்லாம் நம்பச்சொன்னால் எப்படி? பக்தனாக வேடமிட்டுநடிக்க தெரியாதவனை நாத்திகன் என முத்திரை குத்தி,நீ யார் கேட்பதற்கு என்கிறார்கள்! என்னநியாயமோ?

 16. மனைவி கடத்தப்பட்டவுடன் நேரடியாக போரில் ஈடுபடாமல் அணில் முதல் டைனசோர் வரை கொண்டு போராடிய மாவீரன்

 17. இராமன் செய்த தவறுகள்:
  * அறுபதாயிரம் மனைவியரை கொண்ட தந்தையின் ஈன குணத்தை கண்டிக்காதது.
  * எந்த கெடுதலையும் செய்யாத சம்புகனை சாதி வெறி கொண்டு கொன்றது.
  * விசுவாமித்தரன் காட்டை ஆக்கிரமித்து குடில்களை கட்டுக்கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காட்டுவாசிகளை அசுரர்கள், அரக்கர்கள் என்ற பெயரில் கொன்று குவித்தது.
  * மறைந்திதிருந்து வாலியை கொன்றது.
  * இவர் மட்டும் மனைவியுடன் இருக்க, இலக்குமணனை மனைவியை விட்டு பிரிந்து வனவாசம் வர ஒப்புக்கொண்டது.
  * மாமிசம் உண்ணாமல் முனிவர் போல வாழ்வதாக கைகேயியிடம் வாக்கு கொடுத்து விட்டு காட்டுக்குள் வந்த முதல் நாளிலேயே மான் வேட்டை ஆடியது. (காட்டுக்குள் மான் வேட்டை ஆடுவது பசிக்காக தானே!
  * தனது மனைவியை தூக்கிக்கொண்டு போன இராவணனை வெல்வதற்கு சுக்ரீவணனின் உதவி தேவை என்ற நிலையில் வாலியை கொன்று அவன் மனைவியை சுக்ரீவனனிடம் ஒப்படைத்தது.
  * மனைவியை தீக்குளிக்க வைத்தது.
  * தான் ஆற்றை கடக்க குகனின் உதவி தேவை என்ற பொது அவனை ஆலிங்கனம் செய்து கொண்டு, பின்னர் அயோத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும்போது குகனை மறந்தது.
  * எதிரியிடம் இருந்து துரோகம் செய்து வந்த விபீடணனை உடன் பிறவா சகோதரனாக பாவித்து பின்னர் அவனுக்கு இலஞ்சமாக இலங்கை அரசாலும் உரிமையை கொடுத்தது. (இராஜபக்சேவுக்கு கருணா போன்ற துரோகிகளுக்கு இலஞ்சம் கொடுத்தால் எதிரியை எளிதில் வெல்லலாம் என்ற யோசனையை இந்த இராமனிடம் தான் பெற்றிருப்பானோ!)
  * தீக்குளித்து வெளியே மீண்டு வந்த சீதையை மீண்டும் சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்பியது.
  * அயோத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்போது மனுவின் நான்கு வர்ண (சாதியை) நீதியை நிலைநிறுத்தப்போவதாக பிரகடனம் செய்தது.
  * அசுவமேத யாகம் என்ற பெயரில் மற்ற நாடுகளின் மேல் அந்த நாடுகளின் விருப்பத்தை மீறி மேலாண்மை செலுத்தியது. (தற்போதய அமெரிக்காவை போல).
  * நான்கு வர்ண நியதியை என்னவோ நாட்டுக்கு மிகத்தேவையான ஒன்றாக பாவித்து அரசாண்டது.
  * எல்லாவற்றிற்கும் மேலாக தன் பெயரால் நடத்தப்படும் அநீதிகளை (பாபர் மசூதியை இடித்தது, சேது சமுத்திர திட்டத்தை இராமன் பெயரால் முட்டுக்கட்டை போடுவதை) பார்த்துக்கொண்டு அமைதியாய் இருப்பது.
  மொத்தத்தில் இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது இராமன் அவதாரப்புருஷன் அல்ல, சாதாரண மனிதனை விட தாழ்ந்தவன் தான் என புரிகிறது.

 18. I always appreciate and admire your satire comedy articles on our Hindu gods and their stories. But as a born hindu I could not enjoy it completely when you just pick/choose hindu gods for satire. The obvious question arise is why you don’t make fun on Mohammed (Nabigal Nayagam) whose followers are equally exercising atrocities such as wearing Burka, wearing pants like a bafoon, Suprising woman, ISIS, wahabism etc. happening around the world. Their stupid fight against modernism,

  I could see many hindu (by birth) have commented and supported you satire (including me). But why not take a dig on all beliefs why only Hinduism and why only Ram? Why not Abraham?

  If you do so I don’t think any so called atheist (born muslim) guys come forward to comment. If you have guts do this or else you have no right to criticize people beliefs or call yourself an atheist or communist.

 19. ஒன்றூமே கற்காமல் வாழும் ஜென்மங்களே! இதோ பதில்

  கேள்வி:அறுபதாயிரம் மனைவியரை கொண்ட தந்தையின் ஈன குணத்தை கண்டிக்காதது.

  பதில்:அறுபதாயிரம் விதவைகள்! அவர்கள் போர் விரர்களீன் மனைவியர்!
  அவர்களூகு ஜிவனாம்சம் தருவதால் அவன் அவர்களின் புருசன்! நிஜகனவன் அல்ல

  (தொடரும்)

  • ஐயா அறிவாளி ,

   60,000 விதவைகள் உள்ள நாடு தசரதனுடையத்து என்றால் அவன் எத்துனை போர்களை செய்து இருக்கவேண்டும் ? அயோதியை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இத்தகைய போர்களும் ,60,000 படை வீரர்கள் இழப்பும் சத்திய,சாத்தியமே இல்லையே ! உயிர் இழக்கும் படை வீரர்களின் மனைவிகளை மறுமணம் செய்வது என்பது ஹிந்துக்களின் மரபும் அன்று இல்லையே ? புது புது வியாக்கானம் கொடுப்பதற்கு முன் நாம் எழுதுவது தர்க்க படி சரியா என்று நீர் ஆய்வு செய்ய வேண்டாமா அறிவாளி ?

  • நண்பர் ரங்கராஜன் அவர்களே,

   வாழ்நாளின் ஒவ்வொரு மணித்துளியிலும் ஏதோ ஒன்றை நாம் கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம்.
   ஒன்றுமே கற்காமல் வாழும் ஜென்மங்கள் என்று இகழுகிறீர்களே, தாங்கள் எல்லாம் கற்றவர், அனைத்தும் அறிந்தவர் என்று கூற விழைகிறீர்களா?

   நானாக இருந்தாலும் சரி, நீங்களாக இருந்தாலும் சரி, உலகத்தில் நாம் கற்றது வெறும் கை மண் அளவே. கல்லாதது உலகளவு உள்ளது.

   தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவியர் இல்லை என்கிறீர்கள். சரி, தங்களது இராமாயணப்படி தசரதன் ஏகப்பத்தினி விரதனாக இருந்தாரா?

   ஒரு கேள்விக்கு பதில் அளித்து வாய்தா வாங்காதீர்கள் வக்கீல் அவர்களே, நான் மேலே கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.

   இராமாயணம் என்பது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கொண்டு எழுதப்பட்ட இலக்கியம் என்று நேரு கூறியிருக்கிறார். நமது நாட்டில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் இதிகாசங்கள், புராணங்கள் இவற்றில் நிஜமும் கற்பனையும் கலந்து படைக்கப்பட்டுள்ளன.

 20. ஐயா போலி தமிழ் தாகம்!

  அவர் பெயரே தசரதன் அதாவது அவரது ரதம் (தேர்) பத்து திக்கும் செல்லும் இங்லுடிங் ஆகாயம், பாதாளம், மேலும் அவர் ஒன்றூம் அவர்களை மறூமணம் செயவில்லை! மத வெறூபினல் பொயி சொல்ல வேன்டாம்.பல போர் செயிததால் விதவைகள் உன்டானார்கள். ஜிவனாம்சம் அதாவது விதவைகள் ஓயிஊதியம் வழஙினார். அது தப்பா?..
  உயிர் இழக்கும் படை வீரர்களின் மனைவிகளை மறுமணம் செய்வது என்பது ஹிந்துக்களின் மரபும் அன்று இல்லையே ? என்றூ உமகு யார் சொன்னது?..

  கேள்வி எந்த கெடுதலையும் செய்யாத சம்புகனை சாதி வெறி கொண்டு கொன்றது

  பதில்: சம்புகன் கடமை தவரியதால் சட்டபடிநடவடிகை எடுக்க பட்டது ( கடவுளே மனிதனாக வந்த்தாலும் சுழ்னிலை கைதி தான் யென்பதும், அக்கால விதி முறைகளை கடைபிடிக்கவென்டும் என்பதெ நடைமுறை சாத்தியம்)

  ஒன்றை புரிந்து கொள்ளூங்கள் கடவுள் பேதம் பார்ப்பது இல்லை.
  அப்படி பேதம் பார்க்கும் கடவுளை இந்துகள் வனங்கவும் இல்லை.
  (தொடரும்)

  • ஐயா அறிவாளி அட்வகேட் ரங்கராஜன்,

   நீர் எழுதும் ரங்கராஜன் ராமயனத்தில் வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் 60,000 மனைவிகள் விடயத்தை திரித்து கொள்ளுமையா! ஆனால் கம்ப ராசாவும்,வால்மீகியும் எழுதிய இராமாயனத்தில் இருப்பதை தான் தசரத ராசாவுக்கு 60,000 மனைவிகள் இருப்பதாக கணக்கு இருக்கு ! வேண்டுமானால் இரண்டு ராமயனத்தையும் படியுமையா! கேட்ட கேள்விக்கு பதில் இல்லை! 60,000 விதவைகள் உள்ள நாடு தசரதனுடையத்து என்றால் அவன் எத்துனை போர்களை செய்து இருக்கவேண்டும் ? அயோதியை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இத்தகைய போர்களும் ,60,000 படை வீரர்கள் இழப்பும் சாத்தியமே இல்லையே !
   //ஜிவனாம்சம் அதாவது விதவைகள் ஓயிஊதியம் வழஙினார். அது தப்பா?.//.

   உயிர் இழக்கும் படை வீரர்களின் மனைவிகளை மறுமணம் செய்வது என்பது ஹிந்துக்களிடன் மரபு இருப்பதற்கு உம்மால் உதாரணம் காட்ட முடியுமா? அப்படி இல்லாத மரபுக்கு எல்லாம் எம்மால் உதாரணம் காட்ட முடியாத்தையா! எதிரியின் மனைவியை அபகரிக்கும் மரபிற்கு வேண்டுமானால் வாலி ,சுக்ரிபனின் மனைவியை லவட்டிய கதை மூலமும் இராவணன் ,ராமனின் மனைவியை லவட்டிய கதை மூலமும் உதாரணம் கொடுக்க முடியும் !//என்றூ உமகு யார் சொன்னது?//

   அந்த காலத்தில் மட்டுமா ?இன்றும் அதே நிலைதானே சாதிவெறியர்களிடன் உள்ளது. காதல் திருமணம் செய்பவரை கூட சாதிய கலப்பு காரணமாக கவுரவ கொலைகள் செய்வது என்பது கன்னியாகுமரி முதல் அயோத்தி வரை தெடருவது உமக்கு தெரியாதா ? தலித் மக்கள் ,பழங்குடி மக்கள் சாதிவெறியர்களால் இன்றும் கொள்ளபடுவது அட்வகேட் அறிவாளிக்கு தெரியாதா ? //சம்புகன் கடமை தவரியதால் சட்டபடிநடவடிகை எடுக்க பட்டது ( கடவுளே மனிதனாக வந்த்தாலும் சுழ்னிலை கைதி தான் யென்பதும், அக்கால விதி முறைகளை கடைபிடிக்கவென்டும் என்பதெ நடைமுறை சாத்தியம்)//

  • //கடவுள் பேதம் பார்ப்பது இல்லை.
   அப்படி பேதம் பார்க்கும் கடவுளை இந்துகள் வனங்கவும் இல்லை.//

   ஐயா அட்வகேட் அவர்களே,

   அடுத்தவன் மனைவியின் மேல் ஆசைப்பட்ட இராவணன் கொல்லப்படுவான்.

   அதே வேலையை செய்த இந்திரன் தேவேந்திரனாக போற்றப்படுவான்.

   இது பேதம் இல்லையா?

  • So you accept that Samboogan,as a Suthra should have done his “duty”ie serving the upper caste people.Instead of that “duty”he has undertaken penance which was not permitted by Ramraj.By his attainment of a state of doing penance,why he was not accepted as one belonging to upper caste?This episode itself is the proof that the caste was decided by one”s birth.How do you regard Rama as God when he has behaved as a prisoner of circumstances?You are contradicting yourself.You say that Rama acted as a human being and killed Samboogan.You are also calling him as God and you define God as one who will not differentiate between persons.Give your straight answers and do not call me names instead.

 21. நண்பர்களே,
  வால்மீகி இராமாயணத்தின் படி தசர‌தனுக்கு 350 மனைவிகள்தான். கம்ப இராமாயணம் உள்ளிட்ட பிற்கால இராமயணங்களில் மட்டுமே 60,000 என்ற விடயம் வருகிறது.

  Valmiki Ramayana, Ayodhya Kanda, Chapter 34, Verse 13:
  Dasaratha said to Sumantra,

  “Oh, Sumantra! being all my wives, who are here. Surrounded by all of them, I want to see the virtuous Rama.”

  (‘who are here’ means available at the capital city then)

  Kambha Ramayanam:

  (i) Ayodhya Kandam, V – Thailamattupatalam, Verse 74:

  அயோத்யா காண்டம், 5- தைலமாட்டுப் படலம், பாடல் 74:

  “மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப
  கோது இல் குணத்துக் கோசலையும் இளைய மாதும் குழைந்து ஏங்க
  சோதிமணித்தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொலவந்த
  வேத முனிவன் விதி சொன்ன வினையை நோக்கி விம்முவான்”

  மத நிறுவனர்கள்,அவதார புருடர்கள், இறைத் தூதர்கள் என்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். தசர‌த,இராமனும் அதற்கு விதி விலக்கு அல்ல. இதெல்லாம் ஒரு விடயமா???
  நன்றி!!

 22. ஐயா தமிழ் விக்கல்! ( எப்பூடி என் நக்கல் )

  தசரதன் 60,000/- (அறுபதினாயிரம் மட்டும்)மனைவியருடன் வாழ்ந்தார் என்பது பொய் என ஆதாரதுடன் சிலநாட்களில் நிரூபிக்கிறேன். அவகசம் தரவும்.

  கேள்வி: காட்டுவாசிகளை அசுரர்கள், அரக்கர்கள் என்ற பெயரில் கொன்று குவித்தது.

  பதில்: வனவாசிகளை கொல்லுபவன் ஏன் குகனை சகோதரனாக ஏற்றூகொள்ளவெண்டும்.
  வனவாசிகள் வேறு அசுரன் வேறு மக்களை குழப்பவேண்டாம்
  வனவாசிகள் சாதாரணமக்கள்! ஆனால் ராட்ஷசர்கள் 60 அடி உயரம் உடயவர்கள்.
  அசுரர்கள்களிலும் ப்ராமணர்கள் உண்டு..
  குறிப்பு:நால் வருண பேதம் பிறப்பால் வருவதில்லை!
  குணத்தால் வருவதே ஆகும்.
  ஆனால் பரம்பரை நலனுகாக சுயநல சக்திகள் அதை வாரிசு உரிமை ஆக
  மாற்றிவிட்டார்கள்.. (சமீப கால உதாரணம்: கருணானிதி)
  (தொடரும் )

  • ரங்கராஜன் அவர்களே,

   //வனவாசிகளை கொல்லுபவன் ஏன் குகனை சகோதரனாக ஏற்றூகொள்ளவெண்டும்.//

   குகன் என்பவன் சாதாரண தோணி ஓட்டுபவன் அல்ல. அவன் நிஷத நாட்டு மன்னன்.

   குகனின் தேவை இருக்கும்போது (ஆற்றை கடக்க) அவரை ஆலிங்கனம் செய்ய தெரிந்த இராமனுக்கு, அவனது பட்டாபிஷேகத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை.

   //ராட்ஷசர்கள் 60 அடி உயரம் உடயவர்கள்.//
   உண்மையை சொல்லுங்கள். இதை தாங்கள் நம்புகிறீர்களா?

   //அசுரர்கள்களிலும் ப்ராமணர்கள் உண்டு..
   குறிப்பு:நால் வருண பேதம் பிறப்பால் வருவதில்லை!//
   இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வருண பேதம் பிறப்பால் தான் வருகிறது.

   3-14-29, Sanskrit Verse
   Aranya Kanda – Book of Forest
   Chapter 14
   Manur manushyaan janayat
   Kashyapasya mahaatmanaha
   Braahman`aan, Kshatriyaan, Vaishyaan,
   S`uudraam ca manujarshabha.

   CONTEXT
   Rama during his 14 years exile in forest, met the Eagle (name: Jat`aayu) on the banks of river Godavari. The bird consumed 30 verses 3-14-5 to 3-14-34 to narrate its name and lineage. It was a sort of genesis for the human race, birds and the whole creation.

   The funniest part was: the bird does not forget to inform Rama about the ubiquitous four caste system as something remaining from the creation of humans.

   ENGLISH GIST
   Oh the best among humans! Manu (wife of Kashyapa) gave birth to humans from the great soul Kashyapa — the priests, the warriors, merchants and the servants.

   3-14-30, Sanskrit Verse
   Chapter 14
   Mukhatoo Braahman`aa jaataa
   urasaH Kshatriyaaha tathaa
   uurubhyaam jagnnire vaishyaaha
   padaabhyaam s`uudraa iti shrutiha.

   ENGLISH GIST
   Thus heard: Priests are born from the hairlocks. Warriors are born out of the chest. Merchants are born from the thighs. Servants are born from the feet.

   மேற்கூறிய சுலோகங்கள் ஜடாயு பறவை கூறியதாக இராமாயணத்தில் வருகிறது.
   நால்வர்ண பிரிவினைக்கும் ஒரு பறவைக்கும் என்ன சம்மந்தம் உள்ளது?

 23. ஐயா அறிவாளி அட்வகேட் ரங்கராஜன்,

  உமது நக்கல் என் மீதான நக்கல் அல்ல ! அது எம் மொழி மீதான கிண்டல் ! ஆனால் நீரும் அதே தமிழ் மொழியை பேசியும் எழுதியும் கொண்டு உள்ள நிலையில், அது தாயின் மீது ஒருவன் சிறுபருவத்தில் தெரியாமல் அள்ளி தெளிக்கும் முத்திரம் போன்றது ,கழியும் மலம் போன்றது. அது சரி நீர் இன்னும் வளரவில்லையா ? இன்னும் சிறு குழந்தையாகவா இருக்கிறீர் ?

  //ஐயா தமிழ் விக்கல்! ( எப்பூடி என் நக்கல் )//

 24. ஐயா அறிவாளி அட்வகேட் ரங்கராஜன்,

  நீர் வாய்தா வாங்குவதில் சிறப்பானவர் என்று தெரிகின்றது. ஒருவேளை மேலும் பயிற்சி தேவைபட்டால் போயஸ் கர்ர்டனில் உள்ள சொத்து குவிப்பு வழக்கு 3 ஆண்டு ஜெயில் குற்றவாளி ஜெயாவிடம் சென்று வாய்தா வாங்குவதற்கு பயிற்சி எடுத்துக்கொள்ளலாமே !//தசரதன் 60,000/- (அறுபதினாயிரம் மட்டும்)மனைவியருடன் வாழ்ந்தார் என்பது பொய் என ஆதாரதுடன் சிலநாட்களில் நிரூபிக்கிறேன். அவகசம் தரவும்.//

 25. ஐயா அறிவிலி அட்வகேட் ரங்கராஜன்,

  @@@தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது
  (ரொமேஷ் சந்திர தத்தர் சி.அய்.ஈ., அய்.சி. எஸ்.எழுதிய புராதன இந்தியா- 52 ஆவது பக்கம்)

  @@@திராவிடர்கள் தங்கள் மீது படையெடுதது வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.
  (டாக்டர் ரொமேஷ் சந்திர மஜூம்தார் எம்.ஏ. வின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆவது பக்கம்).

  @@@இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.
  (பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய, திராவிடரும் ஆரியரும் 24 ஆவது பக்கம்).

  @@2தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
  (சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் – இராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 ஆவது பக்கம்).

  @@@ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணமாகும்.
  (டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தில் 69 ஆவது பக்கம்).

  @@@இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகம் அடைந்தவர்களாய் இருந்தார்கள்.
  (பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய இந்திய சரித்திரம், முதல் பாகம் என்னும் புத்தகத்தின் 10 ஆவது பக்கம்).

  @@@திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்..
  (ஜோஷி சந்தர் டம் எழுதிய இந்தியா அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).

  @@@ஆரியர்களால் வெல்லப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் – தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.
  (சி.எஸ். சீனிவாசாச்சாரி, எம்.ஏ., எம்.எஸ்., ராமசாமி அய்யங்கர், எம்.ஏ., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, இந்திய சரித்திரம் – முதல் பாகம் என்னும் புத்தகத்தில் இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்).

  //வனவாசிகள் வேறு அசுரன் வேறு மக்களை குழப்பவேண்டாம்
  வனவாசிகள் சாதாரணமக்கள்! ஆனால் ராட்ஷசர்கள் 60 அடி உயரம் உடயவர்கள்.
  அசுரர்கள்களிலும் ப்ராமணர்கள் உண்டு..//

 26. ஐயா தமிழ் ஏப்பம் ( சுலபமாக என்னை தமிழ் விரொதிஆக சித்தரித்து உண்மையை ஏப்பம் விட்டதற்காக இந்த சிறப்பு பட்டம்)

  நான் தமிழை நான் ஆக கருதுபவன் (நான்= உயிர்)

  //குகன் என்பவன் சாதாரண தோணி ஓட்டுபவன் அல்ல. அவன் நிஷத நாட்டு மன்னன். //

  அப்படி என்ட்றால் வனவாசிகளும் மன்னராக இருந்துள்ளார்கள் அல்லவா

  கற்றது கையளவு (னிங்க உள்ளங்கையில் பிட்டு எழுதி காப்பி அடிச்சு பாஸ் செயிதீர்களா)

  //உண்மையை சொல்லுங்கள். இதை தாங்கள் நம்புகிறீர்களா?//

  கிறேன்..

  ஆரிய படையெடுப்பு என்ற சித்தாந்ததிற்கு ஏற்ற இடம் குப்பை தொட்டி- டாக்டர் அம்பெத்கர்

  Mஉக்கடோ Bராக்மன்`ஆ ஜாடா
  உரசH Kச்கட்ரியாக டட்கா
  ஊருப்க்யாம் ஜக்ன்னிரெ வைஷ்யாக
  படாப்க்யாம் ச்`ஊட்ரா இடி ஷ்ருடிக.

  சமூகதிற்கு

  ப்ராமணன் முகம் போன்ட்றவன் கல்வியாளன் 3%

  ஷத்ரியன் தோள் போன்ட்றவன் அதிகார நோக்கம் உள்ளவன் 7%
  வைசியன் வயிரு (தொடை?) போன்ட்றவன் லாபநோக்கம் உள்ளவன் 10%
  ஷுத்ரன் கால் போன்ட்றவன் ஷுத்ரம்=பார்முலா=சராசரி மனிதன் சராசரிவாழ்க்கை வாழ்பவன் ஆதர்ச மனிதன் 80%

  இந்த பேதங்கள் பிறப்பினால் வருவது அல்ல குணத்தால் வருவதே ஆகும். அன்பு சகோதரர்களே

  (தொடரும்)

  • ஐயா ரங்கா ,உமக்கு உள்ள சிக்கல் புரிகிறது எமக்கு ! ஆம் முதலில் தமிழ் எழுத்துக்களை கணினியில் தட்ட கற்று அதன் பின் விவாதத்துக்கு வாருமையா. இல்லை என்றால் எம்முடன் வாதம் செய்யும் கணபொழுதில் தமிழ் மொழியையும் சிதைத்துவிடுவிர்கள். கீழ் உள்ள மென்பொருளை பயன்படுத்தலாமே.

   http://www.google.com/inputtools/try/

 27. //தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவியர் இல்லை என்கிறீர்கள். சரி, தங்களது இராமாயணப்படி தசரதன் ஏகப்பத்தினி விரதனாக இருந்தாரா?

  ஒரு கேள்விக்கு பதில் அளித்து வாய்தா வாங்காதீர்கள் வக்கீல் அவர்களே, நான் மேலே கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தால் நன்றாக இருக்கும்.

  இராமாயணம் என்பது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கொண்டு எழுதப்பட்ட இலக்கியம் என்று நேரு கூறியிருக்கிறார். நமது நாட்டில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் இதிகாசங்கள், புராணங்கள் இவற்றில் நிஜமும் கற்பனையும் கலந்து படைக்கப்பட்டுள்ளன.//

  இடைகால பதில்: ராமன் அவதார புருஷனா?
  அல்லது
  சராசரி மனிஷனா?
  என்பதே கேள்வி
  அதைவிடுத்து தசரதன் மனைவியபற்றி விவதிப்பது விவாத தர்மம் ஆகாது, எனினும் உங்கள் அறியாமை போகுவது என் கடமை, எனவே சொல்கிறேன், தசரதன் நான்கு மனைவியர் உடயவன், 60,000/- அல்ல, ஆதாரம் வரும் வெள்ளளி அன்று தருகிறென்
  ஒரு மனைவியுடன் வாழ்வதின் சிறப்பை மனித பிள்ளை தகப்பனுக்கு எடுத்து சொல்லுவது மரபு இல்லை என்பதால் ராமன் அமைதி காத்தான். மற்ற கேள்விகளுகு
  பதில்கள் (தொடரும்) ராமாயனம் உன்மை சம்பவம் ஆதாரம் விரைவில்…

 28. //விசுவாமித்தரன் காட்டை ஆக்கிரமித்து குடில்களை கட்டுக்கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காட்டுவாசிகளை அசுரர்கள், அரக்கர்கள் என்ற பெயரில் கொன்று குவித்தது.//

  பதில்: வனவாசிகளையும் அரகர்களையும் குழப்பிகொள்ள வேண்டாம்..

  //மறைந்திதிருந்து வாலியை கொன்றது.//

  யுத்த தர்மம் ( கண்னில் படுபவர் பலத்தில் பாதி பெற்றுக்கொள்பவன் வாலி!! அவன் பெற்ற வரம் அப்படி) (தொடரும்)

 29. //இவர் மட்டும் மனைவியுடன் இருக்க, இலக்குமணனை மனைவியை விட்டு பிரிந்து வனவாசம் வர ஒப்புக்கொண்டது.//

  அது லட்சுமணனின் சகோதர பாசம்! உமக்கு என்னங்காணும்!

  //மாமிசம் உண்ணாமல் முனிவர் போல வாழ்வதாக கைகேயியிடம் வாக்கு கொடுத்து விட்டு காட்டுக்குள் வந்த முதல் நாளிலேயே மான் வேட்டை ஆடியது. (காட்டுக்குள் மான் வேட்டை ஆடுவது பசிக்காக தானே!//

  அது வேட்டை அல்ல! வளர்ப்பு பிராணியாக வளர்க்க சீதாதேவி கேட்டுகொன்டதால்..
  (தொடரும்)

  • When Ravanan came in the guise of a Brahmin,Sita wanted to host him and tells him to wait for sometime for Rama to return with the hunted animal.She says that she will provide delicious food with the meat of that hunted animal.This has been written by Valmiki.Rangarajan is over confident and thinks that he can fool Vinavu readers.

   • சொரியன் சர்,
    ராவணன் ஸன்யாசி வேடத்தில் வந்த போது சிதாதேவி அவனுக்கு பழமும் கிழங்குகளும் அளித்து உபசரித்தார்.
    ஆதாரம்: ராஜாஜி ராமாயனம் பக்கம் 302, வானதி பதிப்பகம், விலை75.00/- முப்பத்து மூன்றாம் பதிப்பு,

    தொடரும்

  • An exploiter cannot be called God.Raman exploited the brotherly affection of Lakshmanan.It seems there is a book written about the hardships of Urmila,wife of Lakshmanan in Hindi.I read about it in Bhavan”s Journal.After Sita was abducted by Ravanan,Raman laments to Lakshmanan.During that lament,Raman unashamedly describes the beauty of each body part of Sita and how he enjoyed the married bliss with Sita to Lakshmanan,who was living away from his wife.

 30. //அடுத்தவன் மனைவியின் மேல் ஆசைப்பட்ட இராவணன் கொல்லப்படுவான்.

  அதே வேலையை செய்த இந்திரன் தேவேந்திரனாக போற்றப்படுவான்.

  இது பேதம் இல்லையா?//

  இந்திரன் என்பது பதவி. தவறு செயிதால் பதவி பறிக்கப்படும்
  மனிதன்நல்லவனாக வாழ்ந்தால் இந்திரன் ஆவான்..
  (தொடரும்) அன்பே கடவுள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க