privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரகடத்தில் உயர்கிறது புஜதொமுவின் செங்கொடி

ஒரகடத்தில் உயர்கிறது புஜதொமுவின் செங்கொடி

-

SEZ –பார்க்கில் உயர்கின்றது செங்கொடி!
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்!
தொழிற்சங்க உரிமைகளை நிலைநட்டுவோம்!!

என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஒரகடம் SEZ – பார்க்கில் செயல்படும் நோக்கியாவின் சப்ளையர் நிறுவனமான BYD ஆலையில் (சீனா நிறுவனம்) பு.ஜ.தொ.மு. வின் கிளையை அறிவிக்கும் விதமாக கொடியேற்றி, பெயர்பலகை திறப்பு விழா தொழிலாளி வர்க்க உணர்வுடன் நடைபெற்றது.

BYD  ஆலை கொத்தடிமைதனத்தின் கூடாரமாக செயல்படுகின்றது. தொழிலாளர்களுக்கு எவ்வித உரிமையுமின்றி நடத்தப்பட்டு வந்தனர். நோக்கியாவின் சப்ளையர் நிறுவனங்களான பாக்ஸ்கான், பெரலஸ், சான்மினா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை ஒப்பிடும்போது BYD ஆலையில் மிக குறைந்த ஊதியம்தான் தரப்படுகிறது. இந்நிலையில் பு.ஜ.தொ.மு -வை அறிந்த தொழிலாளர்கள் தாங்கள் அனுபவித்து வந்த கொடுமைகளுக்கு முடிவுகட்டும் நோக்கத்தோடு  அமைப்புடன் நெருக்கமானர்கள். 2013 ஜீனில் தொழிலாளர்களை நம்பிக்கையூட்டி பேசியதை தொடங்கி, செப்டம்பர் மாத இறுதியில் பொதுக்குழு கூட்டப்பட்டது. இன்னும் நம்பிக்கை ஏற்படாத தொழிலாளர்கள், ஊசலாட்டமாக இருந்தவர்கள் அனைவருமே பொதுக்குழுவிற்குப் பிறகு உற்சாகம் அடைந்து, பு.ஜ.தொ.மு வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்தை நேராக ஆலையின் உள்ளே நிறுத்துவது, அனைவரையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் தடுப்பது என்ற நிர்வாகத்தின் முயற்சிகளை தவிடு பொடியாக்கினர். மொத்தத்தில் தொழிலாளர்களின் செயல்பாடு நிர்வாகத்தின் முகத்தில் கரியை பூசியது. ஆலைக்கு வெகுதொலைவில் பேருந்தை விட்டு இறங்கி, நடந்து வந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர் தொழிலாளர்கள்.

இதற்கிடையில் ஒரகடம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் மற்றும் 50-க்கு மேற்பட்ட காவலர்களுடன் வந்து, தொழிலாளர்களை பீதியூட்டும் விதமாக வாகனங்களை நிறுத்தி அச்சம் மூட்டினார்கள். இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என உற்சாகப் படுத்தியதை தொடர்ந்து நிகழ்ச்சி துவங்கியது.

தொழிலாளர்கள் அனைவரும் செங்கொடியை பார்த்த வண்ணம் ஆலையின் முன்பு கூடினார்கள். முதல் ஷிப்ட் முடித்த தொழிலாளர்களும் வெளியே வந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்றிய BYD சங்கத்தின் கிளைச்செயலாளர் தோழர் கணேஷ்குமார், சங்கம் துவங்கியதின் நோக்கத்தையும், தொழிலாளர்கள் பட்ட கொடுமைகளையும் விவரித்து பேசினார்.

பிறகு கிளையின் அமைப்பு செயலாளர் தோழர் ரேகா அவர்கள் பெயர்பலகை திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து பு.ஜ.தொ.மு மாநில பொதுச்செயலாளர் தோழர் சுப.தங்கராசு அவர்கள் செங்கொடியேற்றியதும், தொழிலாளர்கள் கரவோசை மூலம் அளவில்லா மகழ்ச்சியை, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். கொடியேற்றியபின் வாழ்த்துரையை பின்வருமாறு பேசினார்.

“ஒரு மனிதன் தனது பிறந்த நாளையும், திருமண நாளையும் மறக்க முடியாது, அது மகிழ்ச்சிக்குரிய நாளாகும். அதைப்போல BYD தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளுக்கு வித்திட்ட நாள்தான், இந்த கொடியேற்றி பெயர்பலகை திறக்கும் விழா.

BYD ஒரு சீனா நிறுவனம், சீனாவின் தந்தையாக மா சே துங்கை ஏற்றுக்கொண்டள்ளனர். அவரின் கொள்கையைதான் எமது சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் எழுப்புள்ள கோரிக்கைகள் அனைத்தும் சட்ட பூர்வமானவை. இப்படிபட்ட சட்ட பூர்வமான உரிமைகளைதான் இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்கள் எதையும் மதிப்பில்லை. இன்றைக்கு முதலாளித்துவத்தின் தலைமைபீடமான அமெரிக்க உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் நெருக்கடியில் சிக்கி கொண்டிருக்கின்றன. முதலாளித்துவத்தை ஒழித்துவிட்டு, சோசலிசத்தை கட்டிமைக்க வேண்டிய தேவை தொழிலாளி வர்க்கத்தின் கடமையாக முன்நிற்கின்றது.

முதலாளித்துவம் லாபத்திற்கானது, தனிப்பட்ட நலனுக்கானது. சோசலிசமோ கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் நலனுக்கானது, உண்மையான மகிழ்ச்சியின் அடித்தளமாகும். இப்படிப்பட்ட கொள்கைதான் பு.ஜ.தொ.முவின் கொள்கை. இந்த கொள்கையை நிறைவேற்ற தொழிலாளி வர்க்கமாக அணிதிரள வேண்டும்’’ என அறை கூவினார்.

இதன்பிறகு கிளையின் செயற்குழு உறுப்பினர் தோழர். சுகுணா அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 500 –க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர். மொத்தத்தில் இந்நிகழ்ச்சியானது தொழிலாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியதாக இருந்தது. நிர்வாகத்தினுடைய சதிச் செயல்கள், போலீசு காட்டி மிரட்டியது அனைத்தையும் மீறி, தொழிலாளர்கள் தமது ஒற்றுமையின் மூலம் நிர்வாகத்தை பணிய வைத்தார்கள். இந்நிகழ்ச்சியானது SEZ பார்க்கில் செயல்படும் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வர்க்க ஒற்றுமையை கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தோழர். சிவா
காஞ்சிபுர மாவட்டச் செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தொடர்புக்கு – 88075 32859