Sunday, May 26, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதில்லைக் கோயிலை மீட்கக் கோரி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

தில்லைக் கோயிலை மீட்கக் கோரி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

-

1. திருச்சி

 • தில்லைக் கோயிலை தீட்சிதனுக்குப் பட்டா போட்டுவிட்டது உச்சுக்குடுமி மன்றம்!
 • தில்லைக் கோயில் மக்கள் சொத்தா, மணி ஆட்ட வந்த தீட்சிதன் சொத்தா?
 • மானமுள்ள தமிழ் மக்களே கொதித்தெழுங்கள்!

என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக 09.01.2014 காலை 10மணிக்கு திருச்சி இரயில்வே ஜங்சன் காதிகிராப்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுச்சொத்தான தில்லை நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் தங்கள் சொத்தாக கொள்ளை இட்டு அனுபவித்து வந்ததை எதிர்த்தும் தமிழில் தேவாரம் பாடும் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்தும் ஆறுமுகசாமி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் இணைந்து 10 ஆண்டுகளாக போராடி கோயிலை அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம். ஆனால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற பார்ப்பன தீட்சிதர்களுக்கு ஆதரவாக அரசே துணை நின்று அரசு கட்டுப்பாட்டில் இருந்த கோயிலை தீட்சிதர்கள் கையில் ஒப்படைக்க காரணமாக இருந்துள்ளது.

 • மூத்த வழக்குரைஞர்கள் யாரையும் நியமிக்காமல் அரசு தரப்பை தோற்கடிக்க அரசே துணை போன செயலை கடுமையாக கண்டித்து பேசப்பட்டது.
 • மீண்டும் அக்கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் தமிழில் தேவாரம் ஒழிக்க ஏதுவாக தமிழக சட்ட மன்றத்தில் சட்டம் இயற்றி கோயிலை அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி பேசப்பட்டது.
 • தீண்டாமையை கடைபிடிக்கும் வகையில் நந்தன் நுழைந்த தெற்க்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமை சுவரை அகற்றிட வேண்டும். கோயிலுக்குள் இருந்த தீட்சிதர்கள் அகற்றிய நந்தனார் சிலை நிறுவப் படவேண்டும் என்றும் வலியுறுத்தி பேசப்பட்டது.
 • மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஓயமாட்டோம் என்று எழுச்சிகரமான முழக்கங்களும் போடப்பட்டது.
 • ம.க.இ.க.வின் மையக்கலைகுழுவினரின் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது.

தலைமை :
தோழர்.சரவணன்,ம.க.இ.க

மாவட்ட செயலர் திருச்சி.

உரை :
தோழர்.நிர்மலா,பெ.வி.மு
தலைவர், திருச்சி

தோழர்.சேக்,பு.மா.இ.மு
திருச்சி

சிறப்புரை :
தோழர் காவிரிநாடான், தலைவர்
மனித உரிமைபாதுகாப்பு மையம், திருச்சி

நன்றியுரை :
தோழர்.சுந்தரராசு,பொதுச்செயலாளர்,
பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்,
தமிழ்நாடு.

புரட்சிகரப் பாடல்கள் :
மையக்கலைக்குழு ம.க.இ.க
தமிழ்நாடு.

செய்தி
ம.க.இ.க.திருச்சி பகுதி

2. மதுரை

தில்லைக் கோவில் மக்கள் சொத்து
திருட்டு தீட்சித பார்ப்பானை விரட்டு

என்ற தலைப்பில் மதுரை நேதாஜி சிலை முன்பு மாலை5.30 மணியளவில் விண்ணதிரும் முழக்கங்களுடன் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

ஆர்ப்பாட்டத்திற்கு ம.க.இ.க. மதுரை அமைப்பாளர் தோழர்.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

உச்சிக் குடுமி மன்றத்தின் மனுநீதி தீர்ப்பை அம்பலப்படுத்தியும், மொட்டை சோ, சூனா சாமி, ஜெயா மாமியின் பார்ப்பனத் திமிரை அம்பலப்படுத்தியும், இதற்கு எதிராக போராடவேண்டிய அவசியம் பற்றியும் விளக்கி தோழர். குருசாமி, வி.வி.மு. உசிலை, தோழர் மோகன், வி.வி.மு, கம்பம், தோழர்.லயனல் அந்தோணிராஜ், ம.உ.பா.மை, மதுரை ஆகியோர் உரையாற்றினார்.

மொட்டை சோ, சுனா சாமி, ஜெயா மாமி ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு புரட்சிகர அமைப்புகள் சார்பில் செருப்படி பூசை செய்யப்பட்டு பின்னர் அப்படங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை

3. புதுச்சேரி

தில்லை கோயிலை தீட்சதனுக்கு பட்டா போட்டுவிட்டது உச்சிக்குடுமி மன்றம்.
தில்லைக் கோயில் மக்கள் சொத்தா, மணிஆட்ட வந்த  தீச்சிதன் சொத்தா?
மானமுள்ள தமிழ் மக்களே  கொதித்தெழுங்கள்!

என்ற முழக்கத்தின் கீழ் 09-01-14 அன்று புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் நகரத்தில் தென்கோபுர வீதியில் மாலை 5:30 மணியளவில் கண்டன ஆர்பாட்டம்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் பரவலாக துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.

இவண்  :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- புதுச்சேரி.

4. சிவகங்கை

 • “சாதி வென்றது! நீதி தோற்றது!”
 • “தில்லைக் கோயில் தீட்சிதன் சொத்தாம்-உச்சுக்குடுமி நீதிமன்றம் தீர்ப்பு!”
 • “தீட்சிதர்-பாஜக-சோ-சு.சாமி-ஜெயா கும்பல் கூட்டுச்சதி!”

என்ற தலைப்பில் தமிழக அரசை தனிச்சட்டம் இயற்றி கோயிலைக் கையகப்படுத்த வற்புறுத்தி தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக சிவகங்கை அரண்மனை வாசலில் 09/01/2014 அன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு தோழர் ஆனந்த் தலைமை வகித்தார். தோழர் மணிமேகலை, தோழர் குருசாமி மயில்வாகனன் ஆகியோர் உரையாற்றியதற்குப் பிறகு, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் பு.ஜ.தொ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராசன் சிறப்புரையாற்றினார். உச்ச நீதிமன்றம் எப்படி ஒரு உச்சுக்குடுமி மன்றமாகச் செயல்படுகிறது என்பதையும் தீட்சிதர்கள், ஜெயலலிதாவின் கூட்டுச்சதியையும் அவர் தனது பேச்சில் தோலுரித்தார்.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க!
மக்கள் கலை இலக்கியக் கழகம் வாழ்க!
ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

தில்லை நடராசர் கோயிலை
தீட்சிதர்களிடமே திருப்பிக்கொடுத்த
உச்சிக் குடுமி மன்றத்தின்
தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

அவமானம்  இது  அவமானம்!
தமிழுக்கு அவமானம்!
தமிழர்களுக்கு அவமானம்!
தமிழகத்திற்கே அவமானம்!
தமிழன் கட்டிய தில்லைக் கோயில்
தீட்சித பார்ப்பனக் கும்பலிடம்
பறி போனது அவமானம்!

சட்டமியற்று! சட்டமியற்று!
தமிழக அரசே! சட்டமியற்று!
கோவிலைக் கையகப் படுத்த
சட்டசபையில் சட்டமியற்று!

வென்றது இங்கே சாதியடா!
தோற்றது இங்கே நீதியடா!
விடமாட்டோம்! விடமாட்டோம்!
சாதியை வெல்ல விடமாட்டோம்!
வெல்ல வைப்போம்! வெல்ல வைப்போம்!
நீதியை இங்கே வெல்ல வைப்போம்!

கொள்ளைக்காரக் கூட்டத்தின்
கூடாரமாகுது தில்லைக் கோயில்
தில்லைக் கோயில் கோயிலல்ல!
அது தீட்சிதனின் போலீஸ் ஸ்டேசன்!

தீட்சிதனுக்கு வருமானம்!
பக்தனுக்குப் பட்டை நாமம்!
தீட்சிதனுக்கு கோயில் சொத்து!
பக்தனுக்கு வாயப்பொத்து!

நந்தனை எரித்துக் கொன்றவன்
வள்ளலாரை எரித்துக் கொன்றவன்
தீண்டாமைச் சுவர் கட்டியவன்
நடராசன் கொலுசைத் திருடியவன்
தேவாரம் பாடத் தடுத்தவன்
கோவிலைக் கொள்ளை அடித்தவன்
சிதம்பரம் பார்ப்பன தீட்சிதனோடு
சாதிவெறியன் சூனாச்சாமியும்
உச்சிக்குடுமி நீதிபதிகளும்
கூட்டுச்சதி! கூட்டுச்சதி!
பாதுகாக்குது அம்மா மாமி!

அனுமதியோம்! அனுமதியோம்!
பெரியாரும்- அம்பேத்கரும்
மார்க்சிய- லெனினிய புரட்சியாளரும்
எதிர்த்துப் போராடி ஒழித்துக் கட்டிய
பார்ப்பனிய  நச்சுப்பாம்பை
தமிழ்நாட்டில் தலையெடுக்க
அனுமதியோம்! அனுமதியோம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
கோவில் சொத்தை கொள்ளையடித்த
தீட்சித பார்ப்பனக் கூட்டத்தின்
அராஜகத்தை, வெறியாட்டத்தை
சூனா சாமியின் சாதித்திமிரை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

இடிப்போம்! இடிப்போம்!
தீண்டாமைச்  சுவரை இடிப்போம்!
சிலைவைப்போம்!  சிலைவைப்போம்!
தில்லை நடராசன் கோயிலுக்குள்
நந்தனாரின் சிலை வைப்போம்!

தமிழக அரசே! தமிழக அரசே!
சட்டமியற்று! சட்டமியற்று!
கோவிலைக் கைப்பற்றச் சட்டமியற்று!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சிவகங்கை

5. ஒசூர்

சிதம்பரம் நடராசர் கோயிலை தீட்சதர்க்கு சொந்தமாக்கி பட்டா போட்டுக் கொடுத்திருக்கின்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்தும், “தில்லைக் கோயில் மக்கள் சொத்தா? இல்லை மணியாட்ட வந்த தீட்சிதன் சொத்தா? தமிழக மக்களே கொதித்தெழுங்கள்!” என்ற தலைப்பின் கீழ் 09.01.2014 இன்று மாலை 5.30 மணியளவில் ஓசூர் ராம்நகர் அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் தனியொரு சட்டம் இயற்றி மேல்முறையீட்டிற்கு செல்ல வலியுறுத்தியும் மீண்டும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் கோயில் நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமைத் தாங்கினார். மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கமாஸ் வெக்ட்ரா கிளைச்சங்க செயலர் தோழர் முரளி நன்றியுரையாற்றினார். திரளான தொழிலாளர்கள், பொதுமக்கள் இதில் கலந்துக்கொண்டு விண்ணதிர முழக்கமிட்டனர்.

“மணியாட்டும் தீட்சிதர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள மக்களின் பொதுச் சொத்தான தில்லைக் கோயிலை சொந்தமாக்கி கொள்வதற்கு துணைநின்ற பார்ப்பன சக்திகள், தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலைசெய்து வரும் ஆலையை சொந்தமாக்கிக் கொள்ள துணை நிற்பார்களா?” என்று கேள்வி எழுப்பி பேசப்பட்டது நல்ல வரவேற்பைப் பெற்று மக்களை சிந்திக்க தூண்டும் வண்ணம் இருந்தது. “மன்னரால் கட்டப்பட்ட கோயில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி நடைபெறும் இக்காலகட்டத்தில் அரசாங்கம் எடுத்துக் கொள்வதுதான் சரியானது. இதனை விடக்கூடாது” என்று ஆர்ப்பாட்டத்தை கவனித்தவர்கள் கருத்து தெரிவித்துச் சென்றனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர்

6. சென்னை சென்ட்ரல்

தில்லைக் கோயில் தீட்சிதன் சொத்தாம், உச்சுக் குடுமி மன்றத்தின் தீர்ப்பு

என்ற தலைப்பில் 9.1.2014 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

7. கடலூர்

தில்லைக் கோயிலை தீட்சிதனுக்கு பட்டா போட்டு விட்டது உச்சுக்குடுமி மன்றம்
தில்லைக் கோயில் மக்கள் சொத்தா, மணி ஆட்ட வந்த தீட்சிதன் சொத்தா?
மானமுள்ள தமிழ் மக்களே கொதித்தெழுங்கள்

என்ற  தலைப்பில் 09-01-2014 அன்று கடலூர் பெரியார் சிலை அருகில் காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் கருணாமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே காவல் துறையினர் தோழர்களை சுற்றி வளைத்துக் கொண்டனர். தோழர் குழந்தைவேலு  உரை நிகழ்த்தினார். இறுதியில் அனைத்துத் தோழர்களும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்

8. தர்மபுரி

 • “தில்லைக் கோயில் தீட்சிதன் சொத்தாம்-உச்சுக்குடுமி நீதிமன்றம் தீர்ப்பு!”
 • “தீட்சிதர்-பாஜக-சோ-சு.சாமி-ஜெயா கும்பல் கூட்டுச்சதி!”

என்ற தலைப்பில் தமிழக அரசை தனிச்சட்டம் இயற்றி கோயிலைக் கையகப்படுத்த வேண்டும் என்பதை விளக்கி தருமபுரி தந்தி அலுவலகம் அருகில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தோழர் சிவா, வட்டச் செயலாளர் தலைமை  தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் வழக்கறிஞர் ஜானகிராமன் கண்டன உரையாற்றினார். புமாஇமு தோழர் ராஜா உரையாற்றினார்.

இறுதியாக தோழர் கோபிநாத் கண்டன உரையாற்றினார்.

இந்தக் கூட்டம் பார்ப்பனியத்திற்கு பாஜக என்றால் தமிழனுக்கு நக்சல்பாரிகள் என்பதை உணர்த்துவதாக இருந்தது.

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி

9. கோத்தகிரி

நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக கோத்தகிரி மார்க்கெட் திடலில் 9.1.2014 காலை 10 மணிக்கு தில்லை கோயில் மக்கள் சொத்தா, மணியாட்டும் தீட்சிதன் சொத்தா என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீ.அ.தொ.ச தலைவர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் விஜயன் முன்னிலை வகித்தார். பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திரு பரத் உரையாற்றினார். நீ.அ.தொ.ச செயலர் தோழர் பாலன் சிறப்புரையாற்றினார்.

செய்தி :
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம்,
கோத்தகிரி

10. கோவை

கோவையில் இன்று மாலை 7 மணியளவில், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கோவை நீதிமன்றத்தின் முன்பு,  சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சதி குறித்து அம்பலப்படுத்தி அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்களை பா.ஜ.க. வழக்கறிஞர்கள் வம்புக்கிழுத்து கைகளாலும், கட்டைகளாலும் தாக்கினார்கள். இது தொடர்பாக காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

11. வேதாரண்யம்

9.1.2014 அன்று விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் வேதாரண்யம் மேல வீதியில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.வி.மு வட்ட பொறுப்பாளர் தோழர் தனியரசு தலைமை தாங்கினார். வி.வி.மு தோழர் கிருஷ்ணமூர்த்தி, பு.மா.இ.மு தோழர் பெரியார்தாசன் கண்டன உரையாற்றினார்கள். வி.வி.மு தோழர் செல்வி நன்றியுரையாற்றினார்.

செய்தி:
விவசாயிகள் விடுதலை முன்னணி,
வேதாரண்யம்

12. கரூர்

ரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் பாக்கியராஜ் தலைமையில் 09.01.2014 அன்று காலை 10 மணி முதல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் இராமசாமி சிறப்புரையாற்றினார். இறுதியில் தோழர் கபில் நன்றியுரை கூறினார்.

தகவல் :
புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
கரூர்

13. நாமக்கல்

நாமக்கல்லில் புதிய ஜனநாயகத் தொழிலாள் முன்னணியின் தோழர் மோகன் தலைமையில் 09.01.2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் சத்யா சிறப்புரையாற்றினார். கரூர் புரட்சிகர மாணவர் இளைஞர் அணியின் செயலர் தோழர் பாக்கியராஜ் கண்டன உரையாற்றினார்.

தகவல் :
புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
கரூர்

14. தஞ்சை

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை

15. விழுப்புரம்

தில்லைக் கோயில் மக்கள் சொத்தா? இல்லை மணியாட்ட வந்த தீட்சிதன் சொத்தா? தமிழக மக்களே கொதித்தெழுங்கள்!” என்ற தலைப்பின் கீழ்…

 • உச்சநீதி மன்றம், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்த சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சித பார்ப்பனர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கிய தீர்ப்பைக் கண்டித்தும்…
 • உடனடியாக தமிழக அரசு தலையிட்டு தனிச்சட்டம் இயற்றி மற்ற கோயில்களை போல நடராஜர் கோயிலையும் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்…
 • நடராஜர் கோயிலில் இருந்து தீட்சித பார்ப்பனர்களால் அகற்றப்பட்ட நமது முப்பாட்டன் நந்தனார் சிலை மீண்டும் அரசால் நிறுவப்பட வேண்டும்…
 • நந்தன் நுழைந்ததால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தெற்கு வாயிலை அடைத்து நிற்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிய வேண்டும்…

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் விழுப்புரம் ரயில் நிலைய வாயிலில் 09.01.14- வியாழன் மாலை ஐந்து மணிக்கு முதல் ஏழு மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வி.வி.மு திருவெண்ணெய் நல்லூர் வட்டார செயலாளர் தோழர் அரிகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.

வி.வி.மு திருவெண்ணெய் நல்லூர் வட்டார செயற்குழு உறுப்பினர் தோழர் ஏழுமலை அவர்கள் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி பு.மா.இ.மு விழுப்புரம் செயலாளர் தோழர் செல்வக்குமார் சிறப்புரையாற்றினார்.

வி.வி.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் தலைமையில் உச்சநீதிமன்றத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள், தீட்சித பார்ப்பன கும்பலின் கிரிமினல்செயல்கள், ஜெயாவின் பார்ப்பன சூழ்ச்சி நடவடிக்கைகள், தமிழக ஓட்டு கட்சித்தலைவர்களின் தமிழர் விரோத போக்குகள், தமிழின பிழைப்பு வாதிகளின் கையாலாகத்தனம், ஆகியவற்றை உள்ளடக்கி செறிவான முறையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அமைப்பு ஆதரவாளர்கள், பொதுமக்கள், பெரியார் தொண்டர்கள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் கடைசி வரை நின்று கூட்டத்தை ஆதரித்தனர்.

இவண்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விழுப்புரம். தொடர்புக்கு; 96555 87276, 99650 97801

16. பட்டுக்கோட்டை

09.01.2014 அன்று காலை 10 மணி அளவில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில், “தில்லை கோயிலை பட்டா போட்டு விட்டது உச்சிக் குடுமி மன்றம்“, “தில்லைக் கோயில் மக்கள் சொத்தா? மணியாட்ட வந்த தீட்சிதன் சொத்தா?“, மானமுள்ள தமிழ் மக்களே கொதித்தெழுங்கள்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டக்குழு உறுப்பினர் தோழர் முத்து தலைமையில் நடைபெற்றது.

வி.வி.மு வட்டார செயலாளர் தோழர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.

தகவல் :விவசாயிகள் விடுதலை முன்னணி,
பட்டுக்கோட்டை

16. கோவில்பட்டி

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

 1. அனுமதியோம்! அனுமதியோம்!
  பெரியாரும்- அம்பேத்கரும்
  மார்க்சிய- லெனினிய புரட்சியாளரும்
  எதிர்த்துப் போராடி ஒழித்துக் கட்டிய
  பார்ப்பனிய நச்சுப்பாம்பை
  தமிழ்நாட்டில் தலையெடுக்க
  அனுமதியோம்! அனுமதியோம்!

  நம்முடைய பணி சமமாக இருக்கட்டும்,நம்முடைய இதயங்கள் ஒன்று போல் இருக்கட்டும்,நம்முடைய மனங்கள் ஒன்றினையும்படி ஒரேநிலையில் இருக்கட்டும்…
  பார்ப்பனிய நச்சுப்பாம்பை

  தமிழ்நாட்டில் இல்லை இல்லை இந்தியாவிலிருந்து வேரருப்போம்…

 2. ‘பாபாசாகிப் அம்பேத்கர்’ என்ற பெயர் பெரும்பாண்மை மக்களுக்கு ஓர் அணுகுண்டாக இருந்தது, அந்த மனிதர் ஒரு மனிதாபிமானி,அனைத்து மக்களுக்கும் பொதுவானநீதியாளர்,

  அவரை , அவர் உயிருடன் இருத்க்கும்போது யார் யார் எல்லாம் ஒழிக்க,மறைக்க முயற்ச்சித்தார்களோ அவர்களே இன்று பாராட்ட முன் வருகிறார்கள்,நல்ல மனதோடு திருந்தி வரவில்லை , பின் ஏன் வருகிறார்கள்? பாராட்டுவதுபோல் பாபாசாகிப் அம்பேத்கர்ன் கொள்கையை மழுங்கடிக்க செய்கிறார்கள்,

  அவர்தம் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதே அவருக்குட்நாம் ஆற்ற வேண்டிய வரலாற்று கடமையாகும்..

 3. நீங்கள் ஐம்பது நூறு பேர் அங்கங்கே கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினால் நிலைமை மாறிவிடுமா? நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக கிடைத்து விடுமா? அவர்களுக்கு இந்தியாவின் உயரதிகார மட்டங்களில் மட்டுமல்லாது உலக அளவிலான அதிகார மட்டங்களிலும் ஆதரவு இருக்கிறது. ஏனெனில் அங்கெல்லாம் அவர்கள் அதிகாரக்கண்ணிகளில் ஏதாவது பதவி/பொறுப்பில் (அல்லது பதவிகளில்/பொறுப்புகளில்) உட்கார்ந்து இருக்கிறார்கள். மேலும் அவர்கள் தரகு வேலை பார்ப்பதிலும் கெட்டிக்காரர்கள். உங்களால் அவர்களின் ஒரு …..க்கூட பிடுங்க முடியாது. எத்தனை லட்சம் பேர் நின்று ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கத்தினாலும் எடுபடாது. வேறு எந்த வழியையாவது யோசிக்க வேண்டும். சுய வெறுப்பினால் தான் இதை எழுதுகிறேன்.

 4. கடவுளின் வீட்டில் ஒரு மறுமலர்ச்சி

  வினவு அவர்களே,
  தமிழாக்கம் செய்து வெளியிடவும்.

 5. http://mathimaran.wordpress.com/

  ம.க.இ.க தோழர்கள் தாக்கப்பட்ட விவகாரம்:

  கோவை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு நன்றி!
  Posted on ஜனவரி13, 2014 by வே.மதிமாறன்
  social-justice-fist

  கோவையில் 09-0-2014 அன்று மாலை 7 மணியளவில், தீட்சிதர்களுக்கு ஆதரவான சில வழக்கறிஞர்கள், சிதம்பரம் தீட்சிதர்களை அம்பலப்படுத்தி பேசிய மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்களை, வழக்கறிஞர்களுக்கு எதிரானவர்களாக திட்டமிட்டு திசை திருப்பி தாக்கியதும் பிறகு பொய் வழக்கில் கைது செய்ய வைத்ததும் அறிந்ததே.

  அது தொடர்பாக தீட்சிதர்களின் ஆதரவாளர்களான பா.ஜ.க வழக்கறிஞர்களின் பொய்யை அம்பலப்படுத்தி, இன்று (13-01-2014) காலை நமது வழக்கறிஞர்கள், (முற்போக்காளர்கள்) வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரிடமும் செயலாளரிடமும் முறையிட்டிருக்கிறார்கள்.

  இவர்களின் நியாயத்தைக் கேட்ட அவர்கள், “இந்த பிரச்சினை வழக்கறிஞர்களுக்கும் ம.க.இ.க தோழர்களுக்குமானது இல்லை என்பதை புரிந்து கொள்கிறோம். சிறையில் இருக்கும் அவர்கள் ஜாமினில் வெளி வருவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

  நியாயத்தைப் புரிந்து சரியான அணுகுமுறையை கையாண்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருக்கும் செயலாளருக்கும் நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

  முன்னதாக தோழர்கள் தாக்கப்பட்ட அன்று அதுகுறித்து எனக்கு உடனடியாக தகவல் தந்தது, தன்னுடைய வருத்தையும் பகிர்ந்து கொண்டார் வழக்கறிஞர் மா. பாலசந்தர்.

  ம.க.இ.க தோழர்களை அறிந்த, தோழர் பாலசந்தருடன் இரண்டு தோழர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். இவர்கள் அவர்களை தடுத்திருக்கிறார்கள்.ஆனால் தாக்குதலை தடுக்க முடியவில்லை. அவர்களுக்கு புரியவைக்கவும் அவகாசம் கிடைக்கவில்லை.

  அன்று இரவு மீண்டும் என்னிடம் பேசிய தோழர் பாலசந்தர், “ஏண்டா வழக்கறிஞரானேன் என்று வேதனையாக இருக்கிறது தோழர். கண்ணெதிரே தோழர்கள் தாக்கப்படுகிறார்கள். வயதான தோழரைகூட மனசாட்சி இல்லாமல் அடிக்கிறார்கள். நம்மால் ஒண்ணும் செய்ய முடியவில்லையே…’ என்று தன் குரல் உடைய வேதனையை பகிர்ந்து கொண்டார்.

  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் அபசகுனம் வெளியீட்டகத்தை சேர்ந்த எமது தோழர் மா. பாலசந்தருக்கும் நமது நன்றியை தெரிவிப்போம்.

  **

  கீழ் உள்ள இந்த செய்தி 09-0-2014 அன்று இரவு 8 மணியளவில் face book ல் எழுதியது.

  ம.க.இ.க தோழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்

  கோவையில் இன்று மாலை 7 மணியளவில், சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சதி குறித்து அம்பலப்படுத்திய பேசிய மகஇக தோழர்களை பா.ஜ.க., வழக்கறிஞர்கள் வம்புக்கிழுத்து, தாக்கியிருக்கிறார்கள்.

  அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோழர்களை, ஒட்டுமொத்த வழக்கறிஞர்களுக்கும் எதிரானவர்களாக திசைத் திருப்பி, மற்ற வழக்கறிஞர்களையும் துணைக்கு அழைத்து தாக்கியிருக்கிறார்கள்.

  பா.ஜ.க வினரின் திட்டமிட்ட இந்த சதியை எதிர்த்து முற்போக்காளர்கள், சமூக அக்கறையுள்ளர்வர்கள் அணி திரள வேண்டும்.

 6. உங்களின் போராட்டங்களைப் பார்த்து வியந்தே வந்திருக்கிறேன் இதுவரையில். ஆனாலும் இந்தப் போராட்டம் சரியானது என்று ஒத்துக் கொள்ள மனது மறுக்கிறது. ஆகம விதிகளையும் மனுதர்மத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பில் அதன் தத்துவத்திற்கு ஏற்ப தீர்ப்பு வந்திருப்பது நியாயம்தானே! . அதை சீர்திருத்தும் பணியில் ஆர்ய சமாஜ்கள் போல் எதற்கு நீங்கள் ஈடுபட வேண்டும். அதற்காக விலைமதிப்பில்லாத உழைப்பை ஏன் அதில் விரயமாக்க வேண்டும்? மற்ற மதங்களிலும் சீர்த்திருத்தம் செய்ய நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதையெல்லாம் எடுத்து போராடாதிருக்கும் காரணம் அவர்கள் முழுதும் தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்ள ஏதோ தடுக்கிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க