Thursday, July 18, 2024
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பிப் - 16 :தில்லைக் கோவில் மீட்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாடு

பிப் – 16 :தில்லைக் கோவில் மீட்பு – தீண்டாமை ஒழிப்பு மாநாடு

-

சிதம்பரம் மாநாடு

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

 • சிதம்பரம் நடராசர் கோவிலில் நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து, தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம்!
 • தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவ போராடுவோம்!
 • மக்கள் சொத்தான தில்லைக்கோவிலை மீட்க சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற நிர்பந்திப்போம்!

மாநாடு-பேரணி-பொதுக்கூட்டம்-கலைநிகழ்ச்சி

நாள் : 16-2-14 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல்
இடம் : சிதம்பரம்.

மது முப்பாட்டன் நந்தனாரை இழிவுபடுத்தி வேள்வித் தீ முட்டி கொன்றொழித்த பார்ப்பனர்கள் தீண்டாமைச் சுவரையும் எழுப்பி அவரது ஆளுயர சிலையையும் அகற்றி தனது பார்ப்பன சனாதன ஆதிக்கத்தை இன்று வரை நிலைநாட்டி வருகின்றனர்.

“தில்லை நடராஜர் கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்களே தொடர வேண்டும்” என்று உச்சிக்குடுமி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. “சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச்சோறு உண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி” என்பது நந்தனார் காலத்தில் மட்டுமல்ல. 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.

“1951-ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தீட்சிதர்கள் மடாதிபதி போன்றவர்கள் என்று சொல்லியுள்ளதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் அந்த தீர்ப்பு சரியா? தவறா? என்று ஆராய விரும்பவில்லை” என்பது தான் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அடிப்படை. சிதம்பரம் கோயில் மடம் அல்ல. தீட்சிதர்கள் கோவிலில் மணியாட்டும் அர்ச்சகர்கள் மட்டுமே. ஆனால் தீட்சிதர்கள் சார்பில் பா.ஜ.க. சு.சாமி வாதிட பார்ப்பன ஜெயா அரசு ஆதரவு அளிக்க, பார்ப்பன நீதிபதிகள் அக மகிழ்வுடன் வழங்கிய அயோக்கியத்தனமான தீர்ப்பு இது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றும் புனிதமானதும், இறுதியானதும் அல்ல. உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும் பெரும்பான்மை தீர்ப்புகள் ஊழல் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் நலன் சார்ந்த, தொழிலாளர்கள், விவசாயிகள், கல்வி உரிமைகள், இயற்கை வளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக தனியார்மயக் கொள்கையை ஆதரித்து பல தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். பாதிக்கப்படும் மக்கள் எதிர்த்துப் போராடாமல் எப்படி இவற்றை ஏற்க முடியும்?

பக்தர்கள் நடராசனை பார்க்க தீட்சிதர்கள் கேட்கும் காசை கொடுக்க முடியாத போது, தீட்சிதர்கள், “சுப்ரீம் கோர்ட் சொல்லிடுச்சு, வெளியே போ” என மக்களை அவமானப் படுத்துகிறார்கள். காசுக்காக மட்டுமல்ல நந்தனார் தொடங்கி வள்ளலார், வாரியார் வரை தனது பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு தயங்கியதில்லை. இத்தகைய கொடுமைகளையும் தமிழ் மொழியை இழிவுபடுத்துவதும், சாதி தீண்டாமையை கடைபிடிப்பதும், ஒழிக்கப்பட வேண்டுமென்றால் நடராசர் கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இத்தகைய நீதியை நிலைநிறுத்த மக்கள் மன்றத்தில் இறங்கி நாம் போராட வேண்டும்.

தில்லைக் கோவிலில் உண்டியல் வைத்த பிறகு அதன் வருமானம் மூன்று ஆண்டுகளில் 1.5 கோடி ரூபாய். கிலோ கணக்கிலான தங்கம், வெள்ளி தனி கணக்கு ! ஆனால் முன்பு தீட்சிதர்கள் ஆண்டுக்கு வெறும் 199 ரூபாய் இருப்பு என பொய் கணக்கு காண்பித்தார்கள். வருமானத்தில் உள்ள மோசடி மட்டுமல்ல? கோவில் சொத்தையே மோசடியாக விற்று பணம் பார்த்த தீட்சிதர்களிடம், 40 ஏக்கரில் அமைந்த தில்லை கோவில் சாவியையும், ஆருத்ரா தரிசனம் ஆனி திருமஞ்சனம் என்று பக்தி பெருக்குடன் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களின் உரிமையையும், எத்தகைய படுபாதக செயலையும் செய்யத் தயங்காத சதிகாரர்கள் கையில் கோவிலை கொடுத்துள்ள இழி செயலை அனுமதிக்க முடியாது.

வரலாற்றில் சமயக்குரவர்கள் நால்வருக்குப் பிறகு தில்லை நடராசர் கோவில் சிற்றம்பல மேடையில் 2008-ல் சூத்திரர் என்று இழிவுப்படுததப்படும் சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் தேவாரம் பாடி தமிழ் உரிமையை நிலை நாட்டினோம். தில்லை கோவில் நிர்வாக அதிகாரி நியமனத்திற்கு தடை பெற்று, தீட்சிதர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் பல ஆண்டுகளாக உறங்க வைத்த வழக்கை, மனித உரிமை பாதுகாப்பு மையம் மூலம் விசாரணைக்கு கொண்டு வந்து மக்கள் ஆதரவுடன் புரட்சிகர அமைப்புகளின் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்று 2009-ல் அரசு கட்டுப்பாட்டில் வந்ததுடன் முதல் முறையாக உண்டியல் வைக்கப்பட்டது.

மறுபுறம் தீட்சிதர்கள் தனது வரம்பற்ற கொள்ளைக்கு தடையாக அறநிலையத்துறை இருப்பதால் உச்சநீதிமன்றம் சென்றனர். அன்றைய எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்தனர். அதன் கைமாறாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞரை வைத்து “தில்லைக் கோவில் மக்கள் சொத்து, தீட்சிதர் தனி சொத்து அல்ல” என வாதிடாமல் ஜெயா அரசு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்தது. மேலும் தீட்சித பார்ப்பனர்களுக்கு ஆதரவாக ஆரம்பம் முதலே பா.ஜ.க. சு.சாமி, இந்து முன்னணி இராம.கோபாலன், இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத், வி.எச்.பி.அசோக் சிங்கால், வேதாந்தம், பிராமணர் சங்கத்தலைவர் நாராயணன், சங்கராச்சாரி ஆகியோர் களத்தில் நேரடியாக அறிக்கை விடுவதும், கூட்டம் நடத்துவதும், பேட்டி கொடுப்பதும் கோவிலுக்கு சென்று ஆதரவு தெரிவிப்பதும் அன்றாட நிகழ்வுகளாக நடந்தேறியது.

இந்த பார்ப்பன சதித்திட்டங்களை சு.சாமி, ஜெயா கூட்டுச்சதி என உச்சநீதிமன்றத்தில் வழக்கு இறுதி விசாரணை ஆரம்பிக்கும் போதே தமிழக அரசைக் கண்டித்து ம.க.இ.க உள்ளிட்ட எமது அமைப்புகள் தமிழகம் முழவதும் பல வடிவங்களில் போராட்டங்களை நடத்தின, தோழர்கள் சிறை சென்றனர். உச்சநீதிமன்ற வழக்கில் மூத்த வழக்கறிஞர் வைத்து வாதிட வேண்டும் எனக்கோரி சிவனடியார் ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி உயிர் துறப்பேன் என மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களுடன் தீட்சிதர்கள்,  ஜெயா அரசின் சதி திட்டத்தை கேள்விக் குள்ளாக்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

எதிர்பார்த்ததுபோலவே தீட்சிதர்களின் மனம் குளிர 6114 அன்று டெல்லி உச்சி குடுமி மன்றம் தீட்சிதர்களே கோவிலை நிர்வாகம் செய்யலாம் என மக்கள் நலன்களுக்கு விரோதமாக தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பு பற்றி தீட்சிதர்கள், “நடராசன் எங்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசு” என பார்ப்பனக் கொழுப்புடன் திருவாய் மலர்ந்துள்ளனர்.

“தில்லைக் கோவில் மட்டுமல்ல! தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். இந்து மதவாதிகளிடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும்” என சு.சாமி உள்ளிட்ட மதவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். கோவிலில் தமிழ் மொழித் தீண்டாமையை, சாதித் தீண்டாமையை, கருவறைத் தீண்டாமையை பாதுகாக்கும் இத்தகைய பார்ப்பன மதவாதிகள், எல்லோரும் இந்துக்கள், அனைவரும் சமம் என பித்தலாட்டம் செய்வதுடன் பார்ப்பன தீட்சிதர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

உலகிற்கே உழைத்து சோறு போடும் பொருட்களை உற்பத்தி செய்யும், இருப்பிடத்தை கட்டிக் கொடுக்கும் பெரும்பான்மை மக்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தி தீண்டாமைக் கொடுமை நடத்திய பார்ப்பனக் கும்பல் இன்று பயங்கரவாதிகளாக உருவெடுத்து குண்டு வைப்பது, கொடூர முறையில் கொலை புரிவது, வம்சத்தையே கூண்டோடு கருவருப்பது என்று பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த பார்ப்பன கும்பல் நீதித்துறை, அரசு அதிகார துறை, கல்வித்துறை உள்ளிட்டு அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி கொண்டு வரலாற்று புரட்டுகளையும் அறிவியலுக்கு புறம்பான புராண இதிகாச கட்டுக்கதைகளையும் பரப்பி மக்களை அறியாமை இருட்டில் அழுத்தி வைத்துள்ளது.

உச்சிக்குடுமி மன்றத்தின் பார்ப்பன நீதிமான்களின் துணையுடன் இந்து அறநிலையத்துறையை வெளியேற்றி தனது கொள்ளைக் கூடாரமாக மாற்றிக் கொண்டு, உண்டு கொழுக்கவும், தினவெடுத்து திரியவும் வெறியுடன் கிளம்பியுள்ளது தீட்சிதர் பார்ப்பன கும்பல். பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட சங்க பரிவாரம் முதல் உள்ளூர் ஏமாந்த சோனகிரி ஆலயப்பாதுகாப்பு குழு வரை இதற்கு உறுதுணையாக நின்று கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு நடராசர் கோவில் சொத்துக்களை சூறையாடுகின்றனர். இது தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிதான் தில்லைக் கோவில்.

தமிழ் மொழியின் தமிழ் இனத்தின் தமிழர்களின் மீது இனப்பகைமை கொண்டுள்ள பார்ப்பன தீட்சித கும்பல் தற்போது கிடைத்துள்ள தற்காலிக வெற்றிக்களிப்பில் அறிவிழந்து மூடர்கூடமாக மாறி குதியாட்டம் போடுகின்றனர். இந்த அழுகுணி ஆட்டத்தை, சுயமரியாதை உள்ள, தன்மானம் மிக்க, பகுத்தறிவு கொண்ட தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

உழைப்பாளிகள் உதிரம் கொடுத்து உயிரை துறந்து கட்டிய சிதம்பரம் நடராசர் கோவில் தொன்மையான வரலாற்று சின்னம். 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிச்சாவரம் ஜமீனிடம் இருந்து கோவில் சாவியை வாங்கி மணி ஆட்டி வந்த தீட்சிதர்கள், இன்று கேட்டுக் கேள்வி இன்றி ஆண்டு அனுபவிக்கலாம் என்றால், அதை நீதிமன்றமும் ஆமாம் என தீர்ப்பு சொல்லும் என்றால், இது தமிழர்களுக்கு விடப்பட்ட சவால் இல்லையா?

பகுத்தறிவுள்ள, சுயமரியாதையுள்ள பக்தர்களே!

 • பார்ப்பன கெடுங்கோன்மைக்கு எதிராக ஆன்மிக அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவோம்.
 • கடவுளை வழிபட பார்ப்பானின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்து போக வேண்டிய அவசியமில்லை.
 • பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக போராட தில்லைக்கு அணிதிரள்வீர்!

இவண்

விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
கடலுர்ர்-விழுப்புரம்-புதுச்சேரி

ஒருங்கிணைப்பு
மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு.
தொடர்பு 99650 97801, 97917 76709, 9597789801

 1. உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றும் புனிதமானதும், இறுதியானதும் அல்ல. உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும் பெரும்பான்மை தீர்ப்புகள் ஊழல் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.

 2. தமிழ் மொழியின் தமிழ் இனத்தின் தமிழர்களின் மீது இனப்பகைமை கொண்டுள்ள பார்ப்பன தீட்சித கும்பல் தற்போது கிடைத்துள்ள தற்காலிக வெற்றிக்களிப்பில் அறிவிழந்து மூடர்கூடமாக மாறி குதியாட்டம் போடுகின்றனர். இந்த அழுகுணி ஆட்டத்தை, சுயமரியாதை உள்ள, தன்மானம் மிக்க, பகுத்தறிவு கொண்ட தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

  கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.

  • தீட்சதர்கள் கூட சுயமரியாதை உள்ள, தன்மானம் மிக்க தமிழர்கள் தான். அதை மறந்த்து பேசாதிர்கள்

   • சுயமரியாதை உள்ள “தமிழன்” ஏன் தமிழில் தேவாரம் பாடுவதை தடுத்து தமிழை நீச பாஷை என கூறி வன்முறையில் ஈடுபடுகின்றான்…? சம்பந்தமில்லாமல் பேசாதீங்க….

    • நீங்கள் சொல்லுவது போல் தீட்சதர்கள் ஒரு தடவை கூட தமிழ் “நீச பாஷை” என்று சொன்னது கிடையாது. ஆனால் நீங்கள் தான் ஒவ்வொரு தடவையும் சொல்கிறிகள். அப்பொழுதும், இப்பொழுதும் எப்பொழுதும் சரி திருமுறைகள் பாட தீட்சதர்கள் தடை சொன்னதே கிடையாது.

   • தீட்சிதர்களே, நாங்கள் கைலாசத்தில் இருந்து வந்தவர்கள்,தமிழர்கள் இல்லை என்று சுப்புர்ரீம்

    கோர்ட்டிலேயே சொல்லிவிட்டார்கள்,பின்னர் நீங்கள் ஏன் வக்காலத்து வாங்கவேண்டும்??????

    • தீட்சதர்கள் கைலாசத்தில் இருந்து வந்தவர்கள் என்பது 100% உண்மை தான். ஆனாலும் அவர்களுக்கு தமிழும், சமஸ்கிரதமும் இரு கண்கள் போல.

   • தீட்சதர்கள் கூட சுயமரியாதை உள்ள, தன்மானம் மிக்க தமிழர்கள் தான். அதை மறந்த்து பேசாதிர்கள்//

    தீட்சதர்கள் தமிழர்கள் என்று சொல்வதே போய் இதுல சுயமரியாதை உள்ள,தன்மானம் மிக்க தமிழர்கள் என்று சேத்து சொல்றிங்கலே? விட்ட தீட்சதர்கள் தாய் மொழி தமிழ்,புர்விகம் தமிழ்நாடு தான் என்று கூட சொல்லுவிங்க போல?

    • உணிமை தான் தீட்சதர்கள் தாய் மொழி தமிழ் தான். பூர்விகம் தமிழ்நாடு தான்.

 3. உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றும் புனிதமானதும், இறுதியானதும் அல்ல, பார்ப்பனிய கை கூலிகளின் தீர்ப்பை மக்களின் உச்சகட்ட போராட்டத்தின் மூலம் கிழித்தெரிய முடியும் விரைவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கிழித்து த்ருட்டு தீட்சதர்கள் முஞ்சில் எரியப்படும்.

 4. @இன்போ

  ///தீர்சதர்கள் கைலாசத்தில் இருந்து வந்தவர்கள் என்பது 100% உண்மைதான்///

  ///உணிமை தான் தீட்சதர்கள் தாய் மொழி தமிழ்தான்.பூர்விகம் தமிழ்நாடு தான்///

  இந்த இரண்டு உணிமையில் எது உணிமையான உணிமை?

  • @ தேவார நாயனார்

   தீட்சதர்கள் கைலாசத்தில் இருந்து வந்தவுடன் தமிழ்நாட்டிற்க்கு தான் வந்தார்கள். ஆகையால் தமிழ்நாடு தான் அவர்களின் பூர்விகம்.

   இந்த வரலாறு கூட உங்களுக்கு தெரியாம, இப்படி உணிமை பற்றி பேசிட்டிங்களே……!

   • ///தீட்சதர்கள் கைலாசத்தில் இருந்து வந்தவுடன் தமிழ்நாட்டிற்க்கு தான் வந்தார்கள்.ஆகையால் தமிழ்நாடு தான் அவர்களின் பூர்விகம்///

    ஆயிரம் அமெரிக்கர்கள் நேரா தமிழ்நாட்டுக்கு வந்துட்டா அவங்களுக்கு தமிழ்நாடு பூர்விகம் ஆயிடுமா?

    ///இந்த வரலாறு கூட உங்களுக்கு தெரியாம,இப்படி உணிமை பற்றி பேசிட்டிங்களே…..!///

    வரலாறுக்கும் புராணத்துக்கும் வித்தியாசம் தெரியாம நீங்க உணிமைய பற்றி பேசிட்டிங்களே…..!

    • @ தேவார நாயனார்

     ஆயிரம் அமெரிக்கர்கள் நேரா தமிழ்நாட்டுக்கு வந்து இங்கேயே settle ஆயிட்டாங்கனா, அவங்களுக்கு தமிழ்நாடு பூர்விகம் ஆகும்.

     இந்த சட்டங்கள் கூட உங்களுக்கு தெரியாதா?

     • ஏங்க குடியுரிமைக்கும் பூர்வீகத்துக்கும் ஒரே அர்த்தம் தானா? ஏங்க இப்படி?

 5. @info

  தீட்சதர்கள் கைலாசத்தில் இருந்து வந்தவுடன் தமிழ்நாட்டிற்க்கு தான் வந்தார்கள். ஆகையால் தமிழ்நாடு தான் அவர்களின் பூர்விகம். ///

  தீட்சதர்கள் கைலாசத்தில் இருந்து எந்த வழியாக வந்தர்கள்,எதில் வந்தார்கள் கைலாசம் எந்த நாட்டின் பக்கத்தில் உள்ளது கைலாசத்தை google mapல் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை .

  • கைலாசம் என்பது நாடும் கிடையாது google mapல் பார்க்கூடிய அளவு சிறியதும் அல்ல. அது galaxy எல்லாம் galaxy ஆகும்.

   • @info
    கைலாசம் என்பது நாடும் கிடையாது google mapல் பார்க்கூடிய அளவு சிறியதும் அல்ல. அது galaxy எல்லாம் galaxy ஆகும்.///

    நீங்கள் சொல்வதை பர்த்தால் கைலாசம் என்பது இந்த பூமியவிட பெரியது என்று நினைக்கிறேன் அப்பரம் ஏன் த்மிழ்நாடு போன்ற சின்ன மாநிலத்தில் உள்ள மக்கள் சொத்தை திருடுவதர்க்கு தீட்சதர்கள் வெறிகொண்டு அலைகிறன்கள் கைலாசத்திர்க்கு வழி சொல்லி அணுப்பிவையுங்கள் தீட்சதர்களை.

  • கைலாசத்தில் மனிதர்கள் வசிப்பாதாகவோ அல்லது கைலாசம் என்றொரு நாடிருப்பதாகவோ கேள்விப்பட்டதில்லையே. இன்னும் இந்தக் கட்டுக் கதைகளை சிலர் நம்புவது மட்டுமன்றி, அந்த அடிப்படையில் விலைமதிப்பற்ற தமிழர்க்ளின் கோயிலை தனிப்பட்ட ஒரு குழுவினரிடம் கையளித்து விட்டு நிற்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் இளிச்ச வாய்த்தனத்தை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

   • vyasan,

    how is that u blame the theosophical society for dividing the people of srilanka but you wish for the same thing to happen in Tamizhnadu?

    caretaking of a temple is not the same thing as the control of a temple,by making saiva siddhandham and advaita vedhandham fight,neither them or the common public benefit from that.

    • harikumar,

     நான் ஒன்றும் தமிழ்நாட்டு மக்களைப் பிரிக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே பிரிந்து தானிருக்கிறார்கள். நான் ஒற்றுமைப்படுத்த முயல்கிறேன். தமிழர்களுக்கு தமிழர்களின் கோயிலாகிய தில்லைச் சிதம்பரத்தில் உரிமையில்லை. ஒரு தனிப்பட்ட குழுவினராகிய பார்ப்பனர்களாகிய தீட்சிதர்களுக்குத் தான் உரிமையுண்டென்பது எப்படி தமிழர்களையும், தீட்சிதர்களையும் ஒற்றுமைப்படுத்த முடியும். எந்த தமிழனும், தீட்சிதர்களின் பூசை செய்யும் உரிமையைப் பறிக்குமாறு கேட்கவில்லை. ஆனால் பூசை செய்வதற்குப் பதிலாக அவர்கள் நீதிமன்றம் சென்று கோயிலைத் தமது உரிமையாக்கிக் கொண்டார்கள். அதை தன்மானமுள்ள எந்த தமிழனும் பொறுக்க மாட்டான்.. இந்துக்களுக்கு அதிலும் குறிப்பாக சைவத் தமிழர்களுக்கு அதிலும் குறிப்பாக, ஈழத்தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான, ஆயிரம் வருடங்களுக்கு மேலாக தமிழர்களின் வரலாற்றை, வரலாற்று அடையாளங்களைக் கொண்ட சிதம்பரம் கோயில் முறையாக, அரசாங்கத்தின் பாதுகாப்பில், பாரமரிக்கப்பட வேண்டுமே தவிர, ஒரு சிலரின் பொறுப்பில் விடப்படக் கூடாது என்பது தான் என்னைப் போன்ற உலகத்தமிழர்களின் கருத்தாகும்.
     எந்த ஆகம விதியின் கீழ் பூசை நடைபெற்றாலும் பரவாயில்லை, கோயிலில் பரமாரிப்பும் பொறுப்பும், தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட அரசின் கைகளில் இருக்க வேண்டும். வரலாற்றை, கோயில்களை, அங்குள்ள்ள கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த வல்லுனர்கள் குழு கோயிலைப் பராமரிக்க வேண்டும், கண்காணிக்க வேண்டுமே தவிர, படிப்பறிவற்ற தீட்சிதர்கள் அல்ல.

     வெளிநாடுகளில் வெறும் ஐம்பது வருடம் பழமையான கட்டிடங்கள், சின்னங்கள் கூட அரசுடைமையாக்கப் படும் போது, தமிழ்நாட்டில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோயில், ஒரு சில படிப்பறிவற்ற பார்ப்பனர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது, அதைப் பார்க்கும் போது தான் எங்களுக்கு நெஞ்சு பொறுக்குதில்லை.

  • கைலாசம் சீனாவில் இருக்கிறது !
   அதை ஏன் இன்னும் சீனாவிடமே விட்டு வைத்திருக்க வேண்டும்?
   இந்திய சுப்ரீம் கோர்ட்டில் – சிவபெருமான் சார்பாகவேனும் – வழக்கு போட்டு கைலாயத்தைச் சீனாவிடமிருந்து மீட்டெடுக்க வேண்டியதுதானே.
   அதே வேளையில் தீட்சிதர்கள் தங்களது பூர்வீக இடத்தைத் திரும்பிப் பெற சீன எல்லையையும் கடக்கப் போவதாகச் சீனாவையே நேரிடையாக எச்சரிக்கலாமே.
   உலக மகா மேதைகள் சோவும் சு.சாமியும் அதற்கும் கூட வழி சொல்வார்களே!
   சீன அரசாங்கம் அரண்டு போய் கைலாசத்தையும் அங்கு உறையும் சிவனையும் தீட்சிதர்களிடமே ஒப்படைத்து விடுமே !?!

   • கய்லாசம் தீபேத்தில் உள்ளது,சீனாவில் அல்ல.

    அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை?

    எழத்தில் போராட துணிவு இல்லாமல் தமிழ் நாட்டில் மூத்திர சந்துகளில் வீர உரை செய்யும் வேங்கைகள் தானே இங்கு அதிகம்.

    வெத்ரிக்கநி மாயயியில் tasmackil தவங்கிக்டாக்கும் கணவான்களுக்கு என்ன யொக்யித்ஹை உள்ளது?

   • சீனாகாரன் கிட்ட போனா சுளுக்கு எடுத்துறுவானே. ஏற்கெனவே எடுத்த சுளுக்கே இன்னும் சரியாப் போகலெ. இதுல மீண்டுமா?

 6. இன்பொ , ஆனா கூகுல் மேப்புல கீழ்பாக்கம் இருக்கு ,தேடி போய் செந்துக்கோ…..

  • ஆகிலன்

   அங்கே உங்களை மாதிரியான ஆட்களை தான் செத்துக்கோள் வாங்லாம்.

 7. “சோழர்க்கன்றி சூட்டோம் முடி” என்று சொல்லி தமிழ் மன்னராகப் போற்றப்படும் சோழர்க்கு மட்டுமே முடிசூட்டுவோம்.. மற்றவர்க்குச் செய்யோம் என்று மறுத்து சேர நாடு ஏகியவர்கள் தீக்ஷிதர்கள். அந்தத் “தமிழ் மன்னர்கள்” போஷித்து வளர்த்தவர்கள்தான் தீக்ஷிதர்கள். அந்தத் தமிழ் மன்னர்களுக்கு இல்லாத மானமும் வீரமும் ‘சிலருக்கு’ வந்துவிட்டதாம்!

  • வேலைக்காரர்கள் பண்ணையாருக்கு ஒரு காலத்தில் விசுவாசமாக நடந்தார்கள் என்பதற்காக, பண்ணையாரின் வாரிசுகளிடம் பண்ணை வீட்டைக் கொடுக்காமல், அந்த வேலைக்காரர்களின் வாரிசுகளுக்கா வீட்டைத் தாரை வார்ப்பார்கள். குறிப்பாக அந்த வேலைக்காரரின் வாரிசுகள், பண்ணையாரின் வாரிசுகளை கேவலமாக நடத்துவது மட்டுமன்றி, அவர்களின் பரம்பரை வீட்டிலேயே நாட்டாமை காட்டுகிறார்கள். அது தானையா தில்லையில் நடக்கிறது. அந்த நிலை தெரியாமல். இப்படி உளற உமக்கு வெட்கமாக இல்லையா. அல்லது நீரும் அவாளில் ஒருவரோ, என்னவோ யார் கண்டது. 🙂

   • பெரிய பண்ணையார் தில்லையில் கட்டியது பங்களாவா அல்லது கோயிலா..?!
    பெரிய பண்ணைகள் உங்களுக்கு மானியம் ஏதும் கொடுக்கவில்லையா..?!

    • பெரிய பண்ணையார் கட்டியது கோயிலாக இருந்தாலென்ன, பங்களாவாக இருந்தாலென்ன, வெறும் மாட்டுக் கொட்டிலாக இருந்தாலும் கூட, அவருடைய வேலைக்காரர்கள் அதில் உரிமை கொண்டாட முடியாது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும்.

   • இங்கே பிரச்சனை தமிழில் பாட மறுப்பு என்பதுதான்… மன்னர்கள் சம்ஸ்கிருதத்தில் பாடச் சொன்னார்கள்.. அந்த மன்னர்கள் தமிழர் இல்லை என்று சொல்லுங்கள்… பண்ணையாரின் வாரிசு யார் என்பதை முதலில் முடிவு செய்துகொண்டு வாருங்கள்…

 8. தமிழில் பாட மறுப்பது மட்டுமல்ல, தில்லைக் கோயில் யாருக்குச் சொந்தம், யார் அதைப் பராமரிக்க வேண்டுமென்பது தான் இங்குள்ள பிரச்சனை. தமிழ்நாட்டில் உள்ள கோயிலுக்கு, தம்மை வெளியிலிருந்து வந்தவர்களாக, அவர்களே ஒப்ப்புக் கொள்ளும் எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. தமிழர்களைத் தவிர, எந்த வந்தேறிகளும் தமிழரசர்களும், தமிழ்நாட்டை ஆண்டவர்களும், தமிழ்நாட்டில் கட்டிய கோயில்களுக்கு வாரிசுகளாக முடியாது.தமிழரல்லாத அரசர்கள் சிலர் திருப்பணி செய்திருந்தாலும், அவர்கள் தமிழ்நாட்டை, தமிழர்களைச் சுரண்டி, தமிழர்களை வருத்தி தான் கோயில்களை எல்லாம் கட்டினார்கள். மன்னர்கள் எவருமே சமஸ்கிருதத்தில் மட்டும் பாடுமாறு சொல்லவில்லை. தேவாரச் சுவடிகளைப் பாதுகாக்கும் விடயத்தில், தீட்சிதர்களின் “நம்பிக்கையை” (சுத்துமாத்தை) எதிர்த்து, அவற்றை மீட்ட ராஜ ராஜ சோழன், அதே தமிழ்த் தேவாரங்களைச் செப்பேடுகளில் பதித்து, அவற்றை கோயில்களில் எல்லாம் பாட வேண்டும் என்று ஆணையிட்ட(Royal decree) ராஜ ராஜ் சோழன் (அந்த ஆணையை ஈழத்தமிழர்கள் இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்), எதிர்காலத்தில் எங்கிருந்தோ வந்த தீட்சிதர்கள் தமிழை எதிர்பார்கள் , அதாவது தனது ஆணையை மிதிப்பார்கள் என்று தெரிந்திருந்தால், நிச்சயமாக அங்கு சமஸ்கிருதமும், இருந்திருக்காது, தமிழர்களுக்குச் சவால் விட தீட்சிதர்களும் இன்றிருந்திருக்க மாட்டார்கள். தமிழர்களின் பெருந்தன்மையும், மற்றவர்களை நம்பிக் கெடுவதும் தான் தமிழர்களின் சாபக்கேடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க