முகப்புகட்சிகள்அ.தி.மு.கமூவர் தூக்கு ரத்து – பார்ப்பன தினமலருக்கு மட்டுமா பிடிக்கவில்லை ?

மூவர் தூக்கு ரத்து – பார்ப்பன தினமலருக்கு மட்டுமா பிடிக்கவில்லை ?

-

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு.

முருகன், சாந்தன், பேரறிவாளன்
முருகன், சாந்தன், பேரறிவாளன்

சில வாரங்களுக்கு முன்னர்தான் இதே போன்றதொரு வழக்கில், கருணை மனு மீதான தாமதத்தை ஏற்று வீரப்பன் வழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட மீசைமாதையன், பிலவேந்திரன், சைமன், உள்பட 15 பேர்களின் தூக்கு ஆயுளாக குறைக்கப்பட்டது. அப்போதே மூவர் தூக்கிற்கும் இதே மாதிரியான தீர்ப்பு வருமென்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அந்த வழக்கிலும் மத்திய அரசு “தூக்கை ரத்து செய்யக்கூடாது, அதற்கு கருணை மனு முடிவு தாமதத்தை ஒரு காரணமாக ஏற்க முடியாது” என்றே வாதிட்டிருந்தது.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவர் சார்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 11 ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு 2011-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலால் நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் “கருணை மனுவை பரிசீலித்து முடிவு எடுப்பதில் தாமதம் செய்யப்பட்டதால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்” என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டுமென்று கருப்பையா மூப்பனார் அபிமானி ஒருவர் தொடுத்த வழக்கையடுத்து 2012-ம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவை எதிர்த்து கடுமையாக வாதிட்ட மத்திய அரசு தரப்பு, “ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற குற்றவாளிகளை விடுவிப்பது முறையல்ல” என்றும், “முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதற்கு இவர்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை” என்றும், “இவர்கள் சிறையில் எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றும், “ஆட்சி மாற்றம், குடியரசுத் தலைவர் மாற்றம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டது, இதற்காக தண்டனையை குறைக்கக் கூடாது” என்றும் வாதிட்டது.

இந்த வாதத்தை நிராகரித்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “கால தாமதம் ஏற்பட்டதற்கு அரசு காரணம் இல்லை என்பது நிரூபிக்கப்படவில்லை” என்றும், “நீண்ட காலம் சிறையில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரூபிக்கத் தேவையில்லை” என்றும் கூறியிருக்கின்றனர். மத்திய அரசு இந்த வழக்கில் எப்படியாவது கொலையாளிகளை தூக்கிலிட வேண்டும் என்ற முனைப்புடனே வாதங்களை வைத்தது. நீதியரசர் சதாசிவத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிதான் அப்சல் குரு மீதான கருணை மனுவை ரத்து செய்து, அவரது குடும்பத்தினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அவசர கதியில் தூக்கிட்டு கொன்றதற்கு காரணமாக இருந்தார்.

காங்கிரசு கும்பலைப் பொறுத்தவரை அப்சல் குரு எனும் அப்பாவியை தூக்கிலிட்டு முழு காஷ்மீர் மக்களது எதிர்ப்பையும் துச்சமென புறந்தள்ளியதைப் பார்த்தால் மூவர் தூக்கு குறித்தும் அவர்களது கொலைகார மனநிலையை புரிந்து கொள்ள முடியும். இத்தனைக்கும் காஷ்மீரை விட தமிழகத்தின் பாராளுமன்றத் தொகுதிகள் அதிகம், அதனால் காங்கிரசு அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம். அப்படிப் பார்த்தால் தமிழகத்தை விட ஒட்டு மொத்த இந்தியாவின் தொகுதிகள் அதிகம் என்பதே பதில்.

அப்சல்குரு
இந்து-இந்திய தேசிய வெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட முகமது அப்சல் குரு

அதாவது காஷ்மீரின் நியாயம் குறித்து தமிழகத்திற்கு தெரியாதது போல, தமிழகம் குரல் கொடுக்காதது போல தமிழகத்தின் மூவர் தூக்கு குறித்த நியாயம் ஏனைய இந்திய மக்களுக்கு தெரியாது. இது பொதுவில் தேசிய இனங்களுக்கிடையே உள்ள வேறுபாடு என்பதால் உருவான நிலை அல்ல. இந்தியா முழுவதும் ஆளும் வர்க்கம் உருவாக்கியிருக்கும் பார்ப்பனியம் சார்ந்த ‘தேசபக்தி’ மதிப்பீடுகளிலிருந்து மக்களிடையே இந்த பாராமுகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஈழ ஆதரவு என்பதை புலிகள் – பயங்கரவாத ஆதரவு என்றும், காஷ்மீர் மக்கள் ஆதரவை பாகிஸ்தான் சதி என்றும், வடகிழக்கு மக்களின் நியாயமான போராட்டத்தை சீன சதி என்றும்தான் ஊடகங்களும், கார்ப்பரேட் தேசிய கட்சிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும் மக்களிடையே ஓதி வந்தனர்.

ஆகவே ஒரு தேசிய இனத்தின் துக்கப்படுதலால் வரும் நட்டத்தை விட இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசபக்த பூச்சாண்டி பொதுக்கருத்தின் இலாபம் அதிகம் என்பதே அவர்களது கணக்கு. இதில் காங்கிரசு, பா.ஜ.க என்ற வேறுபாடு இல்லை. அப்சல் குருவை அவசரமாக தூக்கிலிட்டது எதனால்? பா.ஜ.கவை விட நாங்கள்தான் தீவிர தேசபக்தர்கள் என்று ‘இந்துக்களிடையே’ காட்டி ஆதரவை காங்கிரஸ் அள்ள விரும்பியதே காரணம்.

ஒருவேளை மூவர் தூக்கு குறித்த வழக்கு பாஜக ஆட்சிக் காலத்தில் நடந்திருந்தாலும் இன்று மத்திய அரசு வழக்கறிஞர்கள் எப்படி வாதாடினார்களோ அப்படித்தான் பா.ஜ.க வழக்கறிஞர்களும் வாதாடியிருப்பார்கள். மேலும் ஆட்சியில் இல்லை என்றாலும் சு.சாமி, சோ இன்னபிற பா.ஜ.க நபர்கள் மூவர் தூக்கை உடன் நிறைவேற்ற வேண்டுமென்றே பேசி வந்தனர்.

எனவே இந்த வகையில் பரிசீலித்துப் பார்க்கும் போதுதான் இந்திய அரசும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட நீதிமன்றங்களின் செயல்பாடும் இருக்கும் என்பது புரிய வரும். தில்லை வழக்கில் இதே உச்சநீதிமன்றம் பார்ப்பன தீட்சிதர்களின் பொய்யான கருத்துக்கள், வாதங்களை ஆதரித்து தீர்ப்பு கொடுத்ததும் கூட இந்த அடிப்படையில்தான். அதனால்தான் மூவர் தூக்கு குறித்த தீர்ப்பிலும் அரசியல் நியாயம் ஒழிக்கப்பட்டு டெக்னிக்கல் காரணங்களே முதன்மையாக வைக்கப்படுகிறது.

மேலும், “இனிமேல் தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனு மீதான முடிவுகளை எடுக்க காலக்கெடு விதிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இத்தகைய அரசியல் கைதிகளின் கருணை மனுக்களை உடனடியாக நிராகரித்து தூக்கு மேடையில் ஏற்றும் கொலைக்குடியரசின் செயல்பாடுகள் விரைவடைவதற்கு இது ஒரு தூண்டுதலாக அமையும். இன்று தூக்கு மேடையில் இருந்து தமிழக மூவர் காப்பாற்றப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் எந்த வழக்காக இருந்தாலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கோரும் கருணை மனு, உடனுக்குடன் முடிவு செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும். அதில் மன்னிப்பு யாருக்கு, தூக்கு யாருக்கு என்பது இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன்களை வைத்து முடிவு செய்யப்படும்.

வேறு வகையில் சொன்னால் இதுகாறும் கருணை மனு தாமதம் என்ற வகையில் தூக்கிலிருந்து தப்பித்தவர்கள் இனி தப்பிக்க முடியாது. தமிழின ஆர்வலர்கள் போற்றும் தலைமை நீதிபதி சதாசிவம் அளித்திருக்கும் தீர்ப்பு இப்படித்தான் வேறு வகையில் நீதியைக் கொல்வதற்கும் காரணமாக இருக்கப் போகிறது. இருப்பினும் இந்த தீர்ப்பைக் கூட இந்திய ஆளும் வர்க்க அறிஞர் பெருமக்கள் சினத்துடன்தான் பார்ப்பார்கள்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் கொலை என்பது இந்திய அமைதிப்படையின் குற்றங்கள், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக தலையிட்ட இந்திரா முதல் ராஜிவ் வரையிலான இந்திய அரசின் குற்றங்கள் என்பதிலிருந்து விசாரிக்கப்படுவதுதான் சரியாக இருக்கும்.

இந்த தீர்ப்பு குறித்து தேசிய-ஆங்கில ஊடகங்களில் பேசும் இந்திய அல்லது இந்துத்துவ நலன்களுக்கான அறிவாளிகள், தூக்குதண்டனைக்கு ஆதரவாக ஆளும் வர்க்கத்தின் பாசிசத்தை வெறியுடன் கக்குவார்கள். குறிப்பாக அர்னாப்  கோஸ்வாமி எனும் அம்பி இன்றிரவு எத்தனை டெசிபலில் கத்துவார் என்பதை யாரும் அளவிடவே முடியாது.

தமிழ்நாட்டில் கூட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்ற காங்கிரஸ் பெருச்சாளிகளும், சோ போன்ற பா.ஜ.க பெருச்சாளிக்களும் அப்படித்தான் பேசுவார்கள். அதற்கு அச்சாரமாக பார்ப்பன தினமலர் “ஒரு தேச பிரதமரை கொலை செய்த கொடூர குற்றவாளிகளுக்கு இந்திய சட்டப்படி பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தூக்கு வழங்கப்பட்டதை மறு பரிசீலனை செய்யக்கூடாது என்றும், விடுவித்தால் நாட்டில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும் , இது இந்திய நீதி மன்றங்கள் மீதான நம்பிக்கையை குலைத்து விடும் என்றும் தேச பற்றாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சாமானிய மக்கள் ஒரு கொடூரத்தினால் பாதிக்கப்பட்டால் அவனுக்கும், அவனை சார்ந்த குடும்பத்தினருக்கும் எப்படி நீதி கிடைக்கும் என்ற கேள்வி எழத்துவங்கியுள்ளது.” என்று நஞ்சை கக்கியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சித்திரவதை மூலம் வாங்கப்பட்ட பொய்யான வாக்குமூலங்கள் தவிர வேறு ஆதாரங்கள் இல்லை என்பதை மறைத்து விட்டு,  ‘தேச பற்றாளர்கள்’ என்ற முகமூடியின் பின்னிருந்து தனது கருத்தை வெளியிட்டுள்ளது, தினமலர். மேலும் ராஜீவ் கொலை என்பது இந்திய அமைதிப்படையின் குற்றங்கள், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக தலையிட்ட இந்திரா முதல் ராஜிவ் வரையிலான இந்திய அரசின் குற்றங்கள் என்பதிலிருந்து விசாரிக்கப்படுவதுதான் சரியாக இருக்கும். அப்படி விசாரிக்கப்பட்டால் இந்திய அரசு, இராணுவம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றவாளிகள் என்பதை சுலபமாக நிரூபிக்க முடியும். அதை மறைக்கத்தான் இவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவோடு இறந்தவர்களை வைத்து கருணை பேசுகிறார்கள். இந்த கருணையின் பின்னே இருப்பது பச்சையான ஒடுக்குமுறையே அன்றி வேறல்ல.

சாமானியருக்கு நீதி கிடைக்குமா என்று நீலிக்  கண்ணீர் வடிக்கும் இதே தினமலர் சங்கரராமன் என்ற சாமானியரை திட்டமிட்டு கொலை செய்த ஜெயேந்திரன் என்ற கொலையாளி, சாட்சியங்களை பிறழ் சாட்சியங்களாக மாற்றி புதுச்சேரி நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டதை கொண்டாடி தனது பார்ப்பன பாசத்தை காட்டியது.

அற்புதம் அம்மாள்
பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் பல ஆண்டுகளாக சொல்லி வரும் “ராஜீவ் கொலைக்கும் பேரறிவாளனுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறான் என் மகன்” என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்?

மோடியின் ஊதுகுழலான தினமலர் போலவும், அதை விட தீவிரமாகவும் ஈழப் போராட்டத்தின் மீதும், ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்கள் மீதும் வன்மத்தை உமிழ்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்துதான் தமிழகத்தின் நலன்களை பாதுகாக்கப் போவதாக மோசடி செய்கின்றனர் வைகோ, தமிழருவி மணியன் போன்றவர்கள்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஞானதேசிகன் “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி கூற முடியாது. ஆனால் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் குற்றவாளிகள் தான். குண்டுவெடிப்பில் தலைவர் ராஜிவ்காந்தி உள்பட பொதுமக்கள் பலர் இறந்து போனார்கள். அவர்களுக்காக யாரும் கண்ணீர் வடிக்கவில்லை. ஆனால் இவர்களுக்கு மட்டும் ஏன்? தீர்ப்பு பற்றி முழுவிவரம் தெரிந்த பிறகு பேசுறேன்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே கூட்டணியில் மட்டுமல்ல தமிழக மக்களின் கருத்திலும் காலாவதியாகி வரும் காங்கிரஸ் கட்சி இதற்கு மேல் கருத்து சொன்னால் அதற்கு கருமாதிதான் என்பது ஞானதேசிகனுக்கு தெரியாதது அல்ல.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தாலும், பல ஆண்டுகளாக சொல்லி வரும் “ராஜீவ் கொலைக்கும் பேரறிவாளனுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறான் என் மகன்” என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்? ராஜீவ் கொலை வழக்கில் கொடுங்கோல் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறப்பு புலனாய்வு பிரிவினரின் சித்திரவதை மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டிருந்தனர். அந்த வாக்குமூலங்கள் சித்திரவதை மூலம் பெற்றப்பட்டவை என்பதையும், தவறாக பதிவு செய்யப்பட்டு மோசடியாக உருவாக்கப்பட்டவை என்பதையும் புலனாய்வு துறையின் அதிகாரி தியாகராஜன் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மோசடியான சட்டத்தின் கீழ்தான் 1998-ம் ஆண்டு தடா நீதிமன்றத்தால் இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு 1999-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை மத்திய, மாநில அரசுகள் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருக்கின்றன.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில்  “ஆயுள் தண்டனையை எவ்வளவு காலம் என்று தீர்மானித்து இவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 432, 433-ன் படி முடிவு எடுக்கலாம்” என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படி முடிவு எடுத்து விடுதலை செய்வதை அரசுகள் செய்யாது. மக்கள் போராட்டம்தான் அதை நிர்ப்பந்திக்கும் என்பது ராஜீவ் கொலை வழக்கின் வரலாற்றிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

மத்தியில் ஆளும் வர்க்க கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே மக்கள் உரிமைகளை ஒடுக்கும் தடா, பொடா போன்ற சட்டங்களை உருவாக்கி, அரசியல் நடவடிக்கைகளை தடை செய்வதிலும், ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக போராடுபவர்களை அந்த சட்டங்களின் கீழ் தூக்கு மேடைக்கு அனுப்புவதில் ஒத்த கருத்துடன் இருப்பவர்கள். இதில் இவர்களது தமிழக ஏஜெண்டாக பாசிச ஜெயா இருந்து பல ஈழ ஆதரவு ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளை சிறையில் போட்டு அடைத்தார்.

மாநில அரசைப் பொறுத்த வரை 2000-ம் ஆண்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களில் நளினியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மனுக்களை நிராகரித்தும் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு. இப்போது மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கூச்சமில்லாமல் பேசுகிறார் கருணாநிதி.

மூவர் தூக்குக்கு எதிரான மனு 2011-ம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆகஸ்டு 30-ம் தேதியன்று தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்த ஜெயலலிதாவின் அரசு, “கருணையை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் எதுவும் தோன்றி விடவில்லை” என்றும் “தமிழ் மக்களின் உணர்வு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை” என்றும் அலட்சியமாக மனு தாக்கல் செய்தது.

2010-ம் ஆண்டு நளினி 20 ஆண்டு சிறையில் கழித்து விட்ட தன்னை விடுதலை செய்யக் கோரி அனுப்பிய மனுவை தி.மு.க தலைமையிலான மாநில அரசு நிராகரித்தது. தன் வயதான தந்தையை பார்ப்பதற்கு ஒரு மாதம் பரோல் கேட்கும் நளினியின் மனுவைக் கூட, ‘சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்’ என்றும், ‘அரசியல்வாதிகள் அவரை சந்தித்து தமது ஆதாயத்துக்காக  பயன்படுத்திக் கொள்வார்கள்’ என்றும் கூறி, மேலும் சில சட்டவாத நடைமுறைகளையின் அடிப்படையில் கடந்த வாரம் (பிப்ரவரி 11, 2014) எதிர்த்திருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான அரசு.

இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அநியாயமாக தண்டிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதற்கு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் தாமாக முன்வரப் போவதில்லை. ராஜீவ் கொலை வழக்கு நடத்தப்பட்ட மோசடியான நடைமுறையையும், ராஜீவ் கொலையின் அரசியல்  நியாயத்தையும் அம்பலப்படுத்தி போராடுவதன் மூலமே இவர்களை விடுவிக்க முடியும்.

எனவே தூக்கு மேடையிலிருந்து மூவர் காப்பாற்றப்பட்டிருந்தாலும், அவர்களோடு நளினையையும் தூக்கு மேடைக்கு அனுப்பிய காரணங்கள் இங்கே நியாயமென்றும் நீதியென்றும் இன்னமும் ஆட்சி செய்கின்றன. அவற்றை வெட்டி வீழ்த்தாத வரை நமது போராட்டத்திற்கும் முடிவு இல்லை.

மேலும் படிக்க

 1. சற்று பெருமூச்சு….
  தினமலம் எப்போது தூக்கில் தொங்கும்?

 2. நேர்மையான் கட்டுரை.

  காந்தியை கொன்ற அம்பிளும், ஈழம் “தின்ற” கைதடிகளும் இங்கு வந்து தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததற்கு எதிராக குத்தாட்டம் போடுவார்கள் பாருங்கள்!

  • உச்சிக்குடுமி தீர்ப்புக்கு எதிராக நீங்க ஏண்ணா ஆட்டம் போடலே..?!

  • அம்பி இங்கு காந்தியை கொன்ற அம்பிகள் எனக் கூறியது காந்தியை கொன்ற கோட்சே-யீன் RSS தோழர்களை[உம்: சோ ,சு.சாமி ] தான் ! உங்களை அல்ல !

   அம்பி இங்கு ஈழம் “தின்ற” கைதடிகள் எனக் கூறியது ஈழம் கொன்ற காங்கிரஸ் அ—சிங்கங்களை[உம் :சோனி,ராகு,கேது, EVKS] தான் !உங்களை அல்ல !

   உங்கள் கோபத்தை பார்த்தால் பார்பனர்கள் அனைவருமே இந்து மதத் தீவிரவாதீக்கள் என்று தானே பொருள் படுகின்றது !உண்மையில் பார்பன தாத்தா ராம்ஜத்-தீன் நீதி மன்ற உரை தானே நீதிபதிகளை புதிய நீதி எழுத வைத்தது!

   அப்பி ,தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதன் அவ்ர்களின் பிறந்த நாள் வாழ்த்துகள் !

  • நான் இந்த பின்னுட்டம் 2 ஐ எழுதும் போது வினவில் பின்னுட்டம் இடும் அம்பியை மனத்தில் வைத்து எழுதவில்லை.

   காந்தியை கொன்ற அம்பிகள்–>காந்தியை கொன்ற கோட்சே-யீன் RSS தோழர்களை

   ஈழம் “தின்ற” கைதடிகள்–>ஈழம் கொன்ற காங்கிரஸ் அ—சிங்கங்களை

   ஆனால் அம்பி ,தனக்கு சம்மந்தம் இல்லாத பின்னுட்டம் 2 மீது ஏன் குத்தாட்டம் போடுகிறார் ?

   • நீங்க பீர் குடிச்சிட்டு வாங்க அண்ணாத்தே.. அப்பறம் பாருங்க குத்தாட்டம் எப்படி இருக்குன்னு..

    • பொதுவாக சிறப்பான ,மகிழும் தருணங்ககளில் தானே பீர் குடிப்பார்கள் அம்பி ?

     அப்போது ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டம் எல்லாம் இயல்பு தானே!

  • சு.சாமி குழியில் புதைக்கும் நாள்….
   தமிழர்களின் சந்தோசத் திறவுகோல்

 3. எனக்கு கிடைத்த தகவல் படி மத்திய அரசு சோனியா காந்தின் வேண்டுகோள் காரணமாக மூவரும் விடுதலை செய்யலாம்….

 4. //மூவர் தூக்கு ரத்து – பார்ப்பன தினமலருக்கு மட்டுமா பிடிக்கவில்லை //

  பார்ப்பன ராம்ஜெத்மலானிக்கு தூக்கு ரத்து பிடித்து இருக்கிறது அல்லவா

  • ஆம் பாரதி கூட பாப்பான் தான்,ஜெயேந்திரரும் பாப்பான் தான்,ஆனால் இப்போ அமேரிகாவுல உள்ள எல்லா புதிய தலைமுறையும் பர்கர் சாப்புடுராலோனோ!!

 5. அவாளுக்கு non – ஸ்டாப் பேதி. தினமலர் – பார்ப்பனியத்தை தாங்கி பிடிக்கும் ‘பொய்மையின் உரைகல்’ என்பது அதன் செய்தி தலைப்பிலும் செய்தி என்ற பெயரில் பார்ப்பனிய திணிப்பிலும் காணலாம்.

  மூவர் தூக்கு ரத்தானதை ராம் ஜெத்மலானிக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடும் வைகோ… பல ஆயிரம் அப்பாவி உயிர்களை கொன்று குவித்த ரத்தக் காட்டேரி மோடிக்கும் BJP க்கும் காவெடி எடுப்பது ஏனோ.

  • When Rajapakshe was given Red carpet welcome at Sushma”s constituency Ranchi,Vaiko demonstrated there with his volunteers.Now he suffers from selective amnesia and a new Chanakya viz Thamizharuvi Maniyan actively canvassing with other parties to have alliance with BJP stating that BJP will protect the interests of Tamils.

 6. உங்களைப் பொருத்தவரை உச்சநீதிமன்றம் உச்சிக்குடுமிமன்றமாச்சே?

  (‘சாமி’ விவேக் styleல படிக்கவும்): அடுத்தவா டவுசரை கழட்டினேன்னு பெருமையா சொல்லுவேளே. இப்போ உங்க டவுசர் கிழுஞ்சு தொங்கறதே. இதுக்கென்ன சொல்றேள்? 😉

 7. // ராஜீவ் கொலைக்கும் பேரறிவாளனுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறான் என் மகன்” என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்? //

  அது சரி. குற்றவாளியின் தாயார் தன் மகன் ஒரு தவறும் செய்யவில்லைனு சொல்லுவாராம். அதை நம்பி விடுதலை பண்ணனுமாம். ஆனா உ.நீ. பல வருடங்கள் விசாரித்து தண்டனை குடுத்தா அதுக்கு என்ன பதில்னு கேள்வி கேட்பீர்கள். நல்ல நியாயம்பா உங்களோடது.

  • உங்க விசாரனையோட லட்சனம் தான் அம்பலப்பட்டு போனதே.

   //“சிவராசனுக்கு பாட்டரிகள் வாங்கித் தந்தேன். ஆனால் அந்த பாட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சோன்னார் என்று எனக்குத் தெரியாது” என பேரறிவாளன் தனது வாக்குமூலத்தில் கூறியதாகவும், அதை அப்படியே பதிவு செய்தால், வழக்கிற்குப் பாதகமாகப் போவிடும் என்பதால், “எதற்காக வாங்கி வரச் சோன்னார் என்று தெரியாது” என்ற பகுதியை நீக்கி விட்டு, பாட்டரி வாங்கித் தந்தேன்” என்பதை மட்டும் பதிவு செய்ததாகவும் அவர் கூறுகிறார். தனது இந்த “அறங்கொன்ற” செயல், பேரறிவாளனின் உயிரைப் பறிக்கப் போகிறது என்பதால், மனச்சான்றின் உறுத்தலால் தற்போது உண்மையை வெளியிடுவதாகவும் சொல்லியிருக்கிறார் தியாகராசன்.//

   https://www.vinavu.com/2014/01/16/police-lies-rajiv-gandhi-assasination-case/

   இப்படிதான் கப்பித்தனமா கேள்வி கேட்க கூடாது.

 8. //மூவர் தூக்கு ரத்து – பார்ப்பன தினமலருக்கு மட்டுமா பிடிக்கவில்லை//

  இந்த தலைப்புக்கான பதில் உங்கள் கட்டுரையை விட பின்னூட்டங்களில் தெளிவாக உள்ளது. Thanks to அம்பி, ராமன், காப்பி..

   • நன்றி ஷன் ரியாஜ் . உங்கள் பதிலின் மூலம்

    1) பார்பனர்கள் எல்லாம் ஆதிக்க வெறி மனப்பான்மை உள்ளவர்கள்
    2) இசுலாமியர்கள் எல்லாம் நாத்தம் பிடித்த தீவிரவாதிகள்
    3) யூதர்கள் எல்லாம் உழைப்பில்லாமல் ,பிறர் உழைப்பை உருஞ்சுபவர்கள்
    4) …

    போன்ற பொதுவாக பரப்பப்படும் வெறுப்பு கருத்துகளை ஏற்பவர் என்று தெளிவு படுத்திவிட்டீர்கள்

 9. கட்டுரையின் பல்வேறு பரிமாணங்கள் எனக்கு உடன்பாடு உண்டென்றாலும் வழக்கமான ஒரு குறைபாடு சுட்ட வேண்டியுள்ளது . அதாவது நீதிமன்றம் பற்றிய உங்கள் பார்வை . என்னைப் பொருத்தவரை, தில்லை வழக்கில் நீதிபதிகளின் மனச்சாய்வு தீட்சிதர்களின் பால் இருந்துள்ளது அதனை கண்டிக்கின்ற நாம் , பிரேமானந்தா மற்றும் தில்லை கோவில் வழக்குகளில் நீதிபதி பானுமதியை பாராட்டுகின்ற நாம் இந்த வழக்கின் நீதியரசர்களையும் பாராட்ட வேண்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன் சீராய்வு மனுவின் வாயிலாக ‘காலதாமதம்’ என்கிற ‘தவறு மற்றும் அதன் வாயிலாக குற்றவாளிகள் அனுபவிக்க நேர்ந்த மன உளைச்சல்’ காரணமாகவே தண்டனை குறைப்பு கோரப்பட்டது . அந்த எல்லையில் நின்றே கோரிக்கை விடுக்க இந்த சட்டம் அனுமதிக்கிறது .அவ்வாறு இருக்கும் போது அந்த எல்லையை விட்டு சற்றே வெளியே வந்து “ஆயுள் தண்டனையை எவ்வளவு காலம் என்று தீர்மானித்து இவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 432, 433-ன் படி முடிவு எடுக்கலாம்” என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படையாக தமிழக அரசின் பொறுப்பாக இதனை தாமே முன்வந்து அறிவித்ததில் நீதிபதி சதாசிவம் மற்றும் இரு நீதிபதிகள் முற்போக்கான ஒரு முடிவை முன்னெடுத்துள்ளனர் .ஒருவகையில் இது இழைக்கப் பட்ட அநீதியை அவர்கள் உணர்ந்து ‘குற்றவாளிகளை’சாகும்வரை உள்ளிருக்க வேண்டியிருக்கும் என்ற அனர்த்தமான அனுமானங்களுக்கு ஒரு முடிவு கட்டியுள்ளனர் என்பதை மனமார பாராட்ட வேண்டும் . ஆனால் அதை விடுத்து “வேறு வகையில் சொன்னால் இதுகாறும் கருணை மனு தாமதம் என்ற வகையில் தூக்கிலிருந்து தப்பித்தவர்கள் இனி தப்பிக்க முடியாது. தமிழின ஆர்வலர்கள் போற்றும் தலைமை நீதிபதி சதாசிவம் அளித்திருக்கும் தீர்ப்பு இப்படித்தான் வேறு வகையில் நீதியைக் கொல்வதற்கும் காரணமாக இருக்கப் போகிறது” என்று விரித்து பொருள் பேசுவது குதர்க்கம் என்றே கருதப்படும்.

 10. / அரசியல் கைதிகளின் கருணை மனுக்களை உடனடியாக நிராகரித்து தூக்கு மேடையில் ஏற்றும் கொலைக்குடியரசின் செயல்பாடுகள் விரைவடைவதற்கு இது ஒரு தூண்டுதலாக அமையும். /

  /நீதியரசர் சதாசிவத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிதான் அப்சல் குரு மீதான கருணை மனுவை ரத்து செய்து, அவரது குடும்பத்தினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அவசர கதியில் தூக்கிட்டு கொன்றதற்கு காரணமாக இருந்தார்/

  இதன் மூலம் தெரிவது தூக்கிட்டு கொல்ல வேண்டும் என்றால் குற்றம் சுமத்தப்பட்ட்வன் முஸ்லிமாக்
  இருக்கவேண்டும்

  • [1]காஷ்மீரத்து “அப்துல்லா” ராஜாக்கள் ,ஈழம் தின்ற காங்கிரஸ் சிங்கங்களுடன் கை கோர்க்கும் அவலத்தில்,முஸ்லீம் மக்கள் காங்கிரஸ்க்கு ஒட்டுபோடும் அவலத்தில், அப்சல் குருக்களுக்கு தூக்கும் ,காஷ்மீர் மக்கள் மீதான இந்து பாசீச இனப் படுகொலையும் தொடரும்.

   [2] முஸ்லீம் மக்கள், தம் தோழன் யார் ? எதிரி யார் என முடிவு செய்ய வேண்டிய தருணம் இது

 11. பாவம் போராடியது யாரோ… பெயர் பெறுவது அரசியல் கட்சிகள்…
  விடுதலைக்கு காரணம்

  நான்தான் என்றார் ஒருவர் நேற்று
  பணத்தின் மீது மட்டுமே இவருக்கு பற்று

  தன்னால் மட்டுமே என்றார் இன்று
  கூழை கும்பிடு போடுபவரை திருந்த போவது என்று ?

  உண்மையில் உழைத்தவர்கள் பெயர்
  தமிழா அதை அறிந்து வாழ்வில் நீ உயர்..

  விடுதலை ஆயினும் இனிவரும் காலம்
  இவர்களுக்கு இனி நாடே ஒரு நரகம்..
  புறக்கணிக்கும் மக்களிடம் (சமூகத்திடம்) போராடியே வாழ்க்கை நகரும்.

  இனி பொதுவாழ்க்கையில் எதிர்நோக்கும் அதிர்ச்சிகளுக்கு
  சிறையே மேல் என்றும் எண்ணவைக்கும்.
  இவர்களின் விடுதலை கட்சிகளை பணம் பண்ணவைக்கும்.

  இவர் தம் ஆதரவை தேடும் அரசியல் கட்சிகள்
  இனி நிறையவே இருக்கு அரசியல் நாடக காட்சிகள்.

 12. இந்தத் உச்சநீதிமன்ற தீர்ப்பு, மரணதண்டனைக்கு எதிரான தீர்ப்பானது அல்ல.அதுபோல் இராஜிவ் கொலைவழக்கில் சம்பந்தப் பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பும் அல்ல.இந்திய அரசு என்பது ஒரு இயந்திரம்.அந்த எந்திரம் சரியாக இயங்காத காரணத்தினால் ஒரு குற்றத்திற்காக இரண்டு தண்டனைகளை அனுபவிக்கவேண்டியுள்ளது.அதைத் தடுப்பதற்கானதே இந்தத் தீர்ப்பு.அரசு இயங்காததற்க்குக் குற்றவாளிகள் காரணம் அல்ல.அரசு இயந்திரத்தை நிரந்தமாக இயக்குவது டில்லியில் உள்ள அதிகாரவர்க்கம்தான்.இந்தமாதிரி கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவரோ அல்லது மானில ஆளுனர்களோ நேரடியாகக் கையாளுவது இல்லை.மத்திய அரசைப் பொருத்தவரை அதனுடைய உள்த் துறை செயலர்தான் ஆராய்ந்து முடுவெடுத்து,குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார்.மாநில அரசைப் பொருத்தவரை அந்தந்த மாநில அரசின் அமைச்சரவை முடிவெடுத்து,ஆளுனருக்கு அனுப்பும்.ஆனால் இம்மூவரின் கருணை மனுவும்,மாநில அரசால் நிராகரிக்கப் பட்ட பின்,அதை மத்திய உள்துறையில் உள்ள அதிகாரவர்க்கம் கிடப்பில் போட்டுவிட்டது.அதன் விளைவுதான் இது.மற்றப் படி மரணதண்டனைக்கு எதிரானதாகவோ,இல்லை தமிழனுக்கு விடிவு கிடைத்ததாகவோ கொண்டாடாடவேண்டிய அவசியம் இல்லை.அப்படித் தலையில் வைத்துக் கூத்தாடினால் யாரவது ஒருவர் தேர்தலில் வெற்றி பெறவும், ஒருவர் தோல்வியடயவும் உதவுமேயன்றி,வேறெதுவும் நடக்கப் போவதில்லை.கருணை மனுவின் மீது முடிவெடுக்க, மாநில ஆளுநருக்கும்,குடியரசுத் தலைவருக்கும் சமமான அதிகாரம் உண்டு.குடியரசுத் தலைவர் இந்த விஷயத்தில், மாநில ஆளுநரின்(மாநில அமைச்சரவை) அதிகாரத்தில் குடியரசுத் தலைவர்(மத்திய உள்துறை அமைச்சகம்) தலையிட முடியாது.

  இப்பொழுதே அரசியலை ஆரம்பித்துவிட்டார்கள்.இன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பையொட்டி,தமிழகச் சட்டசபையில் விதி 101 ந் கீழ் முதலமைச்சர்,”சாந்தன்,பேரறிவாளன்,முருகன்,நளினி இவர்களுடன் இன்னும் இரண்டு கொலையாளிகளான ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார் என்பவரையும், இன்னும் மூன்று நாட்களில் மத்திய அரசு விடுதலை செய்யவில்லையென்றால், தமிழக அரசே விடுதலை செய்யும்” என்று அறிவித்துள்ளார். அதற்ககுள் புதிய தலை முறை,ஜெயா,தந்தி போன்ற தொலைக் காட்சிகள்,இவர்கள் எல்லோருக்கும் விடுதலை என்று செய்தி போட்டுவிட்டது. விடுதலை செய்ய மனமிருந்தால் இவரே அமைச்சரவையின் தீர்மானத்தை வைத்து இவர்களை விடுதலை செய்து விடலாமே.ஏன் மத்திய அரசை இவர் இழுக்கவேண்டும்? ஒன்று இவருக்கு மனமில்லாமல் இருக்கலாம்.இல்லை மத்திய அரசின் மீது பழி போட்டுவிட்டு,தான் தேர்தல் ஆதாயத்தைத் தேடிக் கொள்வதற்காகவும் இருக்கலாம்.இன்றயக் கருத்துக் கணிப்பின்படி, காங்கிரஸும்,தி.மு.க.வும் கூட்டணி சேர்ந்தால், அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப் படும் நிலையில் உள்ளது.அதனால் இந்த முடிவின் மூலமாக தி.மு.க.வும் காங்கிரஸும் கூட்டணி சேரவிடாமல் தடுக்கவும்,வைக்கோ போன்றவர்களை மட்டம் தட்டவும் பயன்படுத்தலாம் என்று எண்ணியிருக்கலாம்.இன்னும் இரண்டு கைதிகளை இவர்களுடன் சேர்ப்பது மூலமாக,சட்டச் சிக்கல் வரலாம் என்ற எதிர்பார்ப்பும்,அதன் விளைவாக இவர்களின் விடுதலையும் தாமதப் படுத்திவிட்டு,”நான் என்ன செய்வேன்,வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்று இந்தத் தமிழ் உணர்வாளர்களுக்குச் சமாதானம் கூறலாம்.இதற்கு முன்பு,தமிழ் உணர்வாளர்களைச் சமாதானப் படுத்த,இவர்களை விடுவிக்க சட்டமன்றத் தீர்மானம் போட்டார்.உடனே தமிழ்க் கூட்டம் தமிழ் அன்னை என்று கூத்தாடியது.மாநில ஆளுனருக்கே, மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின் பேரில் தூகுத் தண்டனையை ரத்து செய்ய முடியும் நிலையில்,இவர் சட்ட மன்றத் தீர்மானம் போட்டது,ஒரு இளுத்தடிப்பு வேலை என்று, இவர்கள் உணரவில்லை. சட்ட மன்றத் தீர்மானத்துக்கு மத்திய அமைச்சகம்தான் முடிவெடுக்க முடியும் என்பது இந்த தமிழ் உணர்வாளர்களூகுத் தெறியாது போலும்.ஆனால் ஜெயலலிதாவிற்குத் தெறியும்.போகாத ஊருக்குத் தமிழ் உணர்வாளர்களுக்கு வழி காட்டிவிட்டார்.இதை நான் குறிப்பிடுவது யாரையும் புண்படுத்தவோ,இல்லை யாருக்கும் ஆதரவு நிலை எடுக்கவோ அல்ல.இதற்க்கு முன்பு இந்தத் தமிழ் உணர்வாளர்கள் கருணாநிதிக்குக் காவடி தூக்கிக் கொண்டிருந்தனர்.இப்பொழுது ஜெயலலிதாவை நம்பிக் கொண்டிருக்கின்றனர்.மக்களும் எல்லாவற்றையுமே அரசியலாக்கி கள்ளுண்ட குரங்காக மயக்கத்தில் உள்ளனர்.பழ. நெடுமாறனுக்கும்,சீமானுக்குமே வெளிச்சம்.

  • ஜெ அரசியல் நாடகம் நடத்த ஆரம்பிக்கிறார் என்பது உண்மை.நளினி தண்டனை குறைப்பின் போது இவர் சாமியாடியதை நினைவு படுத்தினால் நாம் கருணவுக்கு வால் பிடிப்பதாக கொச்சை படுத்துவோரே அதிகம்.பந்தை மத்திய காங்கிரஸ் அரசின் பக்கம் தள்ளிவிட்டதில் ஜெ வின் நோக்கம் விடுதலை அல்ல அரசியல் என்பது அனைவருக்கும் புரியும். தமிழார்வலர் என்போர் அறிவிலிகள் அல்ல.ஆனால் அது புரிந்தும் புரியாதது போல நடிக்கும்,எப்படியோ காரியம் நடக்க வேண்டும் என்ற கையறு நிலையில் ஜெ வின் ஒவ்வோர் அசைவையும் உச்சி முகரும் அடிமைக் கூட்டமாக உள்ளனர்.நெடுமா முதலான பழம் பெருச்சாளி முதல் சைமன் வரை அனைவர் நோக்கமும் ஜெவை மிஞ்சி சவுண்ட் விடாமல் ஏதோ தாமும் ஒரு அரசியல்வாதியாக சிறை செல்லாமலே காலத்தை ஓட்டுவதே.

 13. பீர் குடிக்கும் நேரம் வந்து விட்டது ! தம்பி பேராறிவாலன் சிறை மீளும் நாட்களுக்காகத் தான் காத்து இருக்கிறேன்

  Did Vinavu publish this feedback!?

  • ஹைக்கு கவிதையாக படியுங்கள் முழுப் பொருளும் புரியும் !

   பீர் குடிக்கும் நேரம் வந்து விட்டது

   தம்பி பேராறிவாலான் சிறை மீளும் நாளுக்காகத்

   தான் காத்து இருக்கிறேன் !

   அன்புடன் ,
   கி.செந்தில்குமரன்

  • ஒரு கல்லூரி ஆசிரியர், பெரியாருக்கு அடுத்த மார்க்சிய பேரறிஞர் இப்படி பீர் குடித்து கொண்டாடுவதைவிட, 23 ஆண்டுகள் சிறையில் வாழ்வையும், இளமையையும் தொலைத்த அறிவுக்கு ஒரு நல்ல, நிம்மதியான வாழ்க்கையையும், வேலையையும் அமைத்துக் கொடுப்பதைப் பற்றி சிந்திக்கலாமே அண்ணாத்தே..

   • அம்பியின் அழகீய கவிதை சார்ந்த ஆழ மனம் ,

    அவரின் வெளி மனம் கூறும் அரசியலை உதறி விட்டு

    “அறிவு” மீது அன்பு செலுத்தும் உயர் தருணம் இது !

    “ராகு-வின்” எதிர் வினை பார்தீர்களாலா அம்பி ?!

    • // “ராகு-வின்” எதிர் வினை பார்தீர்களாலா அம்பி ?! //

     500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கும் போது கிடைக்காத நீதி, ராகுல்ஜியின் தந்தை கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் சிறையிலேயே செத்து மடிந்தபிறகு கட்டாயம் கிடைக்கும்.. ஈவிரக்கமின்றி அழித்தொழிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் இந்தியர்களோ, இத்தாலியர்களோ அல்ல என்பதால் அவர்களை கணக்கில் சேர்க்கக் கூடாது..

   • எம் “அறிவு” தம்பியீன் சிறை மீட்பு நாள் அன்று

    நீங்கள் கூறும் பட்டங்களை [ஒரு கல்லூரி ஆசிரியர், பெரியாருக்கு அடுத்த மார்க்சிய பேரறிஞர்]

    எல்லாம் மறந்து அச் சிறப்பான ,மகிழும் தருணங்களை கொண்டாடத்தான் போகிறேன். மேலும்

    தம்பி அறிவு MCA வரை சிறையில் இருந்தே படித்து உள்ளார் .

    அவருக்கு கணினி பயிற்சி மையம் அமைத்து தரலாமா என நினைகின்றேன் .

    அல்லது அரசியலில் ஈடுபடுவாரா எனத் தெரியவில்லை.

 14. இந்த தருனத்தில் தோழர் செங்கொடியை நாம் நினைவு கூற வேண்டும். அவருடைய லட்சியம் நிறைவேறியது.

  செங்கொடிக்கு வீரவணக்கம்!

 15. எதிர்பார்த்தது போல் காங்கிரசு ஓநாய்கள்
  ஊளையிடத் துவங்கிவிட்டன…
  கல்லால் அடித்து கொல்வதுதான் நல்லது
  1,50,000 தமிழர்களைக் கொன்ற ஓநாய்களுக்கு என்ன தண்டனை?

  • “மதசார்பற்ற” காங்கிரசை ஆதரிக்கும் முசுலீம்கள் பற்றி உங்கள் கருத்து?

 16. தின மலம் மீண்டும் மலம் கக்கி உள்ளது.கக்குதல் என்றது அது வாயால் கக்குவதால்.

  விடுதலைக்கு இடைக் கால தடை என்றவுடன் உச்சிகுடிமியை அவிழ்த்து விட்டு பொண்டு பொடுசுகளோடு குத்தாட்டத்தை தொடங்கிவிட்டது[பீர் குடித்து விட்டுதான்]

  ராகுலின் கண்ணீருக்கு யார் பதில் சொல்வது என முதலை கண்ணீர் வடிக்கிறது.

  அமைதிபடையின் அட்டூழியங்களுக்கு செத்து போன ஒங்கப்பன் ராமசுப்பையனா பதில் சொல்வான்?

 17. தினமலரைக் குற்ரம் சொல்லி பயன் இல்லை.ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்.தினமலர் ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கமே அன்றயத் தினத்தந்தியின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்குத்தான்.ஆரிய சீனிவாசக ராகவன் ஆதித்தனார் ஆமர்ந்திருந்த மேடையில்,”ஒரு பார்-அட்-லா படித்த ஆதித்தனார்,இப்படிப்பட்ட கீழ்நிலையான நாளிதழை ஆரம்பிக்கலாமா” என்று கேட்டார்.அதற்க்கு ஆதித்தனார்,”நான் உன் போன்ற மெத்தப் படித்தவர்களுக்கு எத்தனையோ நாளிதழ்கள் இருக்கின்றன.ஆனால் எழுத்துக் கூட்டி வாசிக்கும் சாமானியனுக்கு ஒன்றுமில்லை.அவனுக்கு உலகைக் காட்டவே ஆரம்பித்து இருக்கிறேன்”.அதன் விளைவு சூத்திரனுடைய(அவா பார்வையில்) பத்திரிக்கைக்கு போட்டியாக ஆரம்பிக்கப் பட்ட ஆரிய இதழ்தான் தினமலர்.சி.ப.ஆதித்தனாரின் தினத் தந்தி வேறு.இன்றய சிவந்தி ஆதித்தனின் தினத் தந்தி வேறு. எடுத்துக் காட்டாக எம்ஜியாரை புகழ்பாடாத காரணத்தினால்,எம்ஜியார்ரைக் கதாநாயகனாக வைத்து, அன்று, “சந்திரோதயம்” என்ற திரைப்படம் தயாரித்து,தினத் தந்தியை மட்டம்தட்டினார்கள்.ஆனால் அன்று இந்த எம்ஜியாரால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. என்று காலம் சென்ற இன்றயத் தினத் தந்தியின் அதிபராக இருந்த திரு.சிவந்தி ஆதித்தன்,மாலதி என்ற ஆரிய நங்கையை இரண்டாம்தாரமாகத் திருமணம் செய்தாரோ அன்றிலிருந்து தினமலருக்கு இணையான ஆரியப் பத்திரிக்கையாகவே மாறி விட்டது.மனைவி சொல்லே மந்திரம்.இப்படி தமிழர்கள் ஆரியர் வழிகாட்டுதலிலே வாழ்ந்து ஏமாந்துவிட்டு.புலம்புவதில் பயன் ஒன்றுமில்லை.

 18. மத்திய அரசு நீதிமன்றத்துக்குச் செல்ல ஏதுவாகத்தான், மத்திய உளவுதுறய் அமைச்சகத்திலுள்ள ஜெயாவின் லாபியில் உள்ள அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில்தான் ஜெயலலிதா காய் நகர்த்துகிறார்.நளியின் தண்டனைக் குறைப்பின் போது,அதை எதிர்த்து ருத்திர தாண்டவம் ஆடினார் ஜெயா.திருமதி.சோனியா காந்தியை அதற்கு,”பதி பக்தி” அற்றவர் என்று கூறிய இந்த செல்வி? அதற்குள் மனம் மாறிவிடுவாரா என்ன? மய்ய அரசை யார் நடத்துகிறார்கள் என்பதை மக்கள் அறியாதவரை, இப்படிப்பட்ட ஏமாற்றுத்தனம் நடந்து கொண்டேதான் இருக்கும். தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களின் பிரதிநிதிகள், மய்ய அரசின் அமைச்சகங்களின் அதிகாரைகளின் வழிகாட்டுதலில்தான் இயங்க முடியும்.இன்னும் மய்ய அரசின் அதிகாரவர்க்கம் ஆரியக் கூட்டத்தினர் அல்லது அவர்களால் வழிநடத்தப் படுபவர்கள் கய்யில்தான் உள்ளது.இவர்களின் வழி நடத்துதலின் பேரில்தான் ஈழத்துக்கு படை அனுப்பப் பட்டது.ஆனால் மக்கள் ராஜிவ் படை அனுப்பியதாகத்தான் நம்புகிறார்கள். இந்தியாவில், இந்த ஆரிய அதிகாரவர்க்கதினர் கொட்டமடிக்கத்தான்,குடியாட்சி என்ற பெயரில்,மத்தியில் எல்லா அதிகாரமும் குவிக்கப் பட்ட அரசியல் அமைப்பு உறுவாக்கப் பட்டது.மாநில சுயாட்சிக்கு 1919 இல் லக்னொ பேக்ட் ஒத்துக் கொண்டது.அதை நேரு தலைமையிலான 1936 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் பிராமண பெரும்பான்மை பலத்தை வைத்து, நேருவின் தந்தையான மோதிலால் நேரு மாற்றி, இப்பொழுது உள்ள அரசியல் அமைப்பைக் கொண்டுவர அடித்தளமிட்டார்.அப்பொழுதும் ஆரியரல்லாத கூட்டம் ஏமாற்றப் பட்டது.விளைவு ஜின்னாவின் எழுச்சி.கடைசியில் நாட்டுப் பிறிவினை.இடைவிடாத இந்திய பாகிஸ்தான் பகை.ஆரியக் கூட்டம் இந்து மதத்தை கேடயமாகப் பிடித்ததனால் இந்து முஸ்லிம் பகை இன்னும் தீர்ந்தபாடில்லை.ஜின்னா அவர்கள், லக்னொ பேக்ட் அடிப்படையிலான அரசியல் அமைப்புத்தான் கேட்டார்.ஆனால் மத உணர்வுகளை தூண்டிவிட்டு ஆரியக் கூட்டம் குளிர் காய்ந்து விட்டு,கருப்புச் சரித்திரத்தை இளைய தலை முறையினருக்குக் காட்டி விட்டது.இது அவர்களின் தவறு மட்டுமல்ல.அன்று மெத்தப் படித்த ஆரியல்லாதார்ரின் அலட்சியமும் ஒரு காரணம்.காந்தியடிகள் இதை அறிவார்.ஆனால் காங்கிரஸ் இயக்கத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆரியர்கள்.காந்தியடிகளால் காங்கிரஸில் ஒன்றும் செய்யமுடியாத காரணத்தினால் காங்கிரஸைக் கலைத்துவிடுங்கள் என்ற அளவுக்குச் சென்றார்.இந்திய விடுதலையன்று,மவுனித்தார்.அவர் ஒரு தடவை காங்கிரஸின் முடிவில் மாற்றம் ஏற்பட முயன்று உண்ணாவிரதம் வரை சென்றார் என்பதை வசதியாக மறந்துவிட்டோம்.ஆரியரல்லாதவர்கள் சரித்திரம் எழுதுவதில்லை.ஊடகங்கள் நடத்துவதில்லை.அப்படியே நடத்தினாலும் தினத் தந்தி போல் ஆகிவிடுகிறது.ஆரியர் அல்லாதவருக்கு தன்னம்பிக்கையும்,ஆரியருக்கு உள்ள துணிவும் கிடையாது.எப்பொழுதுமே எந்த நாட்டிலும்,படித்த நடுத்தர வர்க்கம்தான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.இன்று இந்தியாவின் படித்த நடுத்தர வர்க்கம் ஆரிய ஊடகங்களின் வழிகாட்டுதலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க