Saturday, August 20, 2022
முகப்பு செய்தி ஒரு வரிச் செய்திகள் – 24/02/2014

ஒரு வரிச் செய்திகள் – 24/02/2014

-

செய்தி: ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய முதல்வர் ஜெ. முடிவெடுத்தது வரவேற்கத்தக்கது, என பா.ஜ. மாநிலத் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

நீதி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை தூக்கிலிடு என்று டெல்லியில்  ஊளையிடும் பாஜக கூட்டணியில், வைகோவே மானம் கெட்டு இருக்கிறார் எனும் தைரியத்தில்தான் பொன் ராதா கிருஷ்ணன் போன்ற பொறம்போக்குகளெல்லாம் இப்படி பச்சை போய் சொல்கின்றன.
________

news-21செய்தி: இந்தியாவில் ராணுவ ஆட்சி, சாத்தியமற்றது என்றும் அப்படி ஒரு வாய்ப்பு ஏற்படாது என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார், மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் அந்தோணி.

நீதி: ஜனநாயக ஆட்சியே பாசிசத்தை அருளுவதால் ராணுவம் போதும், இராணுவ ஆட்சி தேவையில்லை என்கிறார் அந்தோணி.
_______

செய்தி: தெலுங்கானா மசோதா நிறைவேறியதால்,டி.ஆர்.ஆஸ்., கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்க அதன் தலைவர் சந்திரசேகர்ராவ் விரும்பி, டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்தார்.

நீதி: டி.ஆர்.எஸ்ஸோ இல்லை காங்கிரசு பெருச்சாளிகளின் ஆட்சிதான் தெலுங்கானாவின் சாதனை என்றால் தெலுங்கானா போராட்டத்தின் தேவை என்ன?
_______

செய்தி: “பஞ்சாபில் பா.ஜ. – சிரோன்மணி அகாலி தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்து – சீக்கிய மக்களின் ஒற்றுமைக்கு இது மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது” என பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி  பேசினார்.

நீதி: குஜராத் மாதிரி பாஜக ஆட்சி மட்டும் நடந்தால் கலவரத்துக்கு உத்திரவாதம், ஒற்றுமைக்கு வேட்டு என்கிறார் மோடி.
_______

செய்தி: “அனைத்து சமுதாய மக்களுக்கும், நல்ல காலம் பிறக்கும் நல்ல சேதி, ஒரு வாரத்தில் வரும்” என நாடாளும் மக்கள் கட்சி நிறுவனர் கார்த்திக் தேனியில் கூறினார்.

நீதி: “விக்கைத் துறப்பேன் – கட்சியைக் கலைப்பேன்”, இதுதானா அந்த நல்ல சேதி?
________

செய்தி: மருத்துவப் பரிசோதனைக்காகவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கவும் மனைவி பிரேமலதாவுடன் சிங்கப்பூர் சென்றார் விஜயகாந்த்.

நீதி: பாடல் காட்சிகளுக்கு ஃபாரின் போவது புரட்சிக் கலைஞரின் திரைக் கலை என்றால் பேரம் படிவதற்க்கு சிங்கப்பூர் போவது கேப்டனின் தரகுக் கலை!
________

செய்தி:  முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில இன்று 66 கிலோ எடையுள்ள கேக் வெட்டி கொண்டாடுகின்றனர்.

நீதி: கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ரவுடிகள் யாரேனும் 66 கொலை செய்யாமல் இருந்தால் சரி!
________

செய்தி: “எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என தெரியாமல், திணறிக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு மத்தியில், சீட்டையும், நோட்டையும் எதிர்பார்க்காமல் தமிழர்களின் நலன் காக்க அ.தி.மு.க., பாடுபடும் என்ற நம்பிக்கையில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு கொடுத்துள்ளது,” என சேலத்தில் நடந்த மாநாட்டில் வேல்முருகன் பேசினார்.

நீதி: ‘வீ’ர’ வன்னியர்களை ‘அய்யர்’ கட்சிக்கு தானம் கொடுக்க பாமக தாமதிக்கும் போது ‘அம்மா’ கட்சிக்கு அடியாள் வேலை செய்ய சட்டென்று முடிவெடுத்து விட்டாராம் பண்ருட்டி வேல்முருகன். சந்தர்ப்பவாதம் கலந்த அடிமைத்தனத்தில் அய்யா வழியேது, அண்ணன் வழியேது?
________

செய்தி: லோக்சபா தேர்தலுக்கான, தமிழக காங்., வேட்பாளர்களை தேர்வு செய்யும், ஐவர் குழு கூட்டம், டில்லியில், இன்று இரவு கூடுகிறது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர், ஞானதேசிகன், வேட்பாளர்கள்
பட்டியலுடன் பங்கேற்கிறார்.

நீதி: தோற்பது நிசமென்றாலும் மேய்வதற்கு கதராடைக் காளைகள் அஞ்சுவதில்லை. ஆதலால் பட்டியலுடன் செல்லும் ஞானதேசிகன் கிழியப் போகும் வேட்டி சட்டைகளுக்காக தி.நகர் ஜவுளிக் கடைகளில் ஆர்டர் கொடுத்து விட்டாரா?
_______

செய்தி: “முதல்வர் ஜெயலலிதா இந்து இயக்க தலைவர்களையும், இந்து மதத் தலைவர்களையும் சந்திப்பதை பல ஆண்டாக தவிர்த்து வருகிறார். இந்து சமயத்தின் பல பிரச்னைகளை முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல முயன்றும் முடியவில்லை. அவர் சமீப காலமாக இந்து மக்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. என்ன காரணத்தால் அவர் அப்படி இருக்கிறார் என்றும் புரியவில்லை.” – விஸ்வ இந்து பரிஷத் ஆலோசகர் வேதாந்தம்.

நீதி: அவாள் வகையறாக்களுக்கு இருக்கும் ‘அம்மா’ மீதான மனக்குறை, கோபமாக மாறாமல் வருத்தமாக சொல்லும் இந்த கலைதான் “என்ன இருந்தாலும் நம்மவாவை விட்டுக் கொடுக்க முடியாது” என்பதோ?
_______

செய்தி:  “தமிழகத்தைப் பொறுத்த வரையில் என்ன சாபக்கேடோ தெரியவில்லை, சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாகிக் கொண்டிருக்கின்றனர்.” – சுப்ரமணியன் சாமி, மூத்த தலைவர், பா.ஜ.

நீதி: அரசியலைப் பொறுத்தவரை சு.சாமி எனும் நெம்பர் 1 ‘மாமா’க்கள் ஒரு ஆளாக சுற்றி பினாத்துவதை பொறுத்துக் கொள்ளும் தமிழகம், சினிமாக்காரர்களை ஏற்பது அதிசயமல்ல.
_______

செய்தி: “யமுனை நதியை சுத்தப் படுத்துவதற்காக 6,500 கோடி ரூபாய் செலவிட்டும் மோசமாக உள்ளது”, என பார்லிமென்ட் குழு கவலை தெரிவித்து உள்ளது.

நீதி: யமுனைக் கழிவுகளை அகற்றாவிட்டாலும், ஊழல் நதி பெருக்கெடுத்து ஓடுவதற்கு அந்த நிதி பயன்பட்டிருப்பதால் பாராளுமன்ற முதலைகள் விடுவது கண்ணீரா, பீரா?
_______

செய்தி: டில்லி மற்றும் நாட்டின் வட மாநிலங்கள் பலவற்றில் பிரபலமான சர்ச்சைக்குரிய சாமியார் நிர்மல் பாபா, 3.5 கோடி ரூபாய் சேவை வரி ஏய்ப்பு செய்துள்ளார்.

நீதி: முற்றும் துறப்பதாக அந்தக் கால பார்ப்பனியம் சொன்னது ரீலென்று நிரூபிக்கிறது, முடிந்த வரை சுருட்டு எனும் இந்தக் கால பார்ப்பனியம்.
_______

செய்தி: திருப்பூர் வெள்ளங்காடு பகுதியை சேர்ந்த நாட்டுராஜா (30) ஜெ. பிறந்தநாளுக்கென மின்கம்பத்தில் பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி பலியானார்.

நீதி: தொலைநோக்கோடு ‘அம்மா’ கொண்டு வந்த மின்வெட்டு சில நேரம் தளர்த்தப்படுவதால் வந்த வினை!
________

செய்தி: ”கடுமையான பொருளாதார மந்த நிலை, சிக்கலான சூழ்நிலைகள் இருந்த போதிலும், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்துள்ளோம்,” என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நீதி: வட்டிக் கடை புகழ் செட்டி நாட்டு சிதம்பரத்தின் அகராதிப்படி பொருளாதார மந்தம் மக்களுக்கும், பொருளாதார வளர்ச்சி முதலாளிகளுக்கும் என்பதறிக.
________

செய்தி: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி செய்துள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதி: ரன்பீர் சேனாவை பராமரிக்கும் கட்சியோடு பஸ்வான் சேருவதற்கும், தலித்தியத்தின் சந்தர்ப்பவாதத்திற்கும் இது முதல் முறையோ இல்லை கடைசி முறையோ அல்ல.
________

செய்தி: உலகின் மிக முக்கிய தேடப்படும் குற்றவாளியான போதை மருந்து கடத்தல் மன்னன் ஜோகுயின் எல் ஷாபோ கஸ்மேனை கைது செய்திருப்பது மெக்ஸிகோவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும் என்று அமெரிக்கா பாராட்டியுள்ளது.

நீதி: இதே போல உலகின் மிக முக்கிய ஆக்கிரமிப்பு குற்றவாளியான அமெரிக்க அரசை, தண்டிக்கப் போகும் வரலாற்று சிறப்பு மிக்க சாதனைக்கு முழு உலகுமே காத்திருக்கிறது.
_________

செய்தி: சவூதி அரேபியாவில் தாயின் பல்லை உடைத்த மகனுக்கு 5 ஆண்டு சிறையும், 2,400 கசையடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

நீதி: ஈராக்-ஆப்கான் தாய்மார்களை கொல்லும் அமெரிக்காவிற்காக, தாய்நாட்டை ஏவிவிடும் சவுதி அரசருக்கு யார் தண்டனை கொடுப்பது?
_________

செய்தி:  அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் நிதிக் கொள்கைகளை வகுக்கும்போது, வளரும் நாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

நீதி: வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளை கொள்ளையடிப்பதற்கு எப்போதும் கருத்தில் கொண்டிருக்கிறார்கள், கவர்னர் சார்!
_________

செய்தி: கூலி உயர்வை வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் துவக்கியுள்ளதால், 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கியுள்ளன.

நீதி: நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களின் கையில் ஒப்படைத்திருக்கும் அரசை முடக்கினால்தான் தறிகள் மட்டுமல்ல மக்களும் வாழ முடியும்.
________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க