Thursday, May 13, 2021
முகப்பு புதிய ஜனநாயகம் பார்ப்பன - பனியாக்களின் கோரப்பிடியில் இந்தியா

பார்ப்பன – பனியாக்களின் கோரப்பிடியில் இந்தியா

-

றக்குறைய திவாலாகி விட்டிருந்த இந்த நாடு புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாகத் “தேசபக்த வேடதாரிகள்” பிரமையூட்டுகிறார்கள். தம்மைத் தாமே அறிவாளிகளாகக் கருதும் நடுத்தர வர்க்க அப்பாவிகளும் அதை நம்பி அந்தக் கூட்டு ஒப்பாரியில் கலந்து கொள்கிறார்கள்.

அசீம் பிரேம்ஜி
அசீம் பிரேம்ஜி

இந்தியா 2020-இல் வல்லரசாகி விடும் என்று அரசவைக் கோமாளி அப்துல் கலாம், தான் பதவியில் இருந்தபோது ஒரு ஆரூடம் சொன்னார். ஆமாம், ஆமாம் வல்லரசாகிவிடும் என்று எல்லாரும் கூட்டுப் பாடல் இசைத்தார்கள். அதுவே தேசியப் பாடலாகியது. “வல்லரசு” என்ற சொல்லுக்கு வேறுவேறு பொருள் விளக்கம் சொன்னார்கள். அமெரிக்கா பொருளாதார வல்லரசு என்றால், இந்தியா ஆன்மீக வல்லரசு! இப்படிச் சொல்லியே நாட்டை ஏய்த்து வந்தவர்கள் இல்லையா? நாமும் அணுகுண்டு வெடிச்சுட்டோம்ல, இனி இந்தியா ஒரு இராணுவ வல்லரசுதான் என்றார்கள். அப்புறம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாதான் இப்போதைக்கு உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசு; விரைவிலேயே முதலிடத்தைப் பிடித்து விடுவோம் என்று கூவினார்கள்.

இப்படித் “தேசபக்த வேடதாரிகள்” பெருமை பாராட்டிக் கொண்டிருந்தபோதே “தேசியப் பொருளாதாரம்” தலைகுப்புற விழத் தொடங்கி விட்டது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது. உற்பத்திப் பொருட்களின் தொழில் வளர்ச்சி விகிதமும் ஏற்றுமதியும் சரிந்து கொண்டே போகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மன்மோகன்-சிதம்பரம்-மாண்டேக்சிங் கும்பலையே “கதிகலங்கடித்து” வருகிறது. இந்த உண்மையை, ஆட்சியை விட்டு நிச்சயம் துரத்தப்படுவோம் என்ற நிலையில் ஒப்புக்கொண்டு கையைத் தூக்கி விட்டார்கள்.

லட்சுமி மிட்டல்
லட்சுமி மிட்டல்

ஆனாலும், “இந்திய தேசத்தின் பெருமை”யைத் தூக்கி நிறுத்தக் கூடிய சில விவரங்கள் தேசபக்தர்களின் கைவசம் உள்ளன. அவை : பிரேசில், ருசியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா (பிரிக்ஸ் BRICS நாடுகள்)ஆகிய உலகின் “வேகமாக வளரும்” பொருளாதாரங்களின் சங்கத்திலேயே சூப்பர் பணக்காரர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார ரீதியில் இருள் சூழ்ந்துள்ள போதிலும், இந்தியா தனது அதீத உச்ச நிகர செல்வமிகு தனி மனிதர்களின் (UHNW) எண்ணிக்கையில் பிரிக்ஸ் நாடுகளிலேயே கடந்த ஓராண்டில் சாதனை படைக்கும் அளவுக்கு அதிகரித்து விட்டது. அதாவது, மொத்தம் 7,850 சூப்பர் பணக்காரர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். (அதீத உச்ச நிகர செல்வமிகு தனி மனிதர் என்பவர் 3 கோடி டாலருக்கு மேல் சொத்துள்ளவர்கள் என கணக்கில் கொள்ளப்பட்டவர்கள்) இவர்களின் மொத்த நிகர செல்வ மதிப்பு 93,500 கோடி டாலர்கள்.

மேலும், அதீத உச்ச நிகர செல்வமிகு தனி மனிதர்களின் (UHNW) வரிசையில் மிக உயர்ந்த எண்ணிக்கையாக, 1,250 பெண்களைக்கொண்ட ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. இவர்களின் மொத்தச் செல்வ மதிப்பு 9,500 கோடி டாலராகும்.

நூறு கோடிடாலருக்கும் மேலான சொத்து கொண்ட 2,170 உலகக் கோடீசுவரர்களின் எண்ணிக்கையில் 103 பேரைப் பெற்று, ஆறாவது இடத்தில் இந்தியா உள்ளது. பிரான்ஸ், சௌதி அரேபியா, சுவிட்சர்லாந்து, ஹாங்காங் ஆகியவற்றை விட அதிக எண்ணிக்கையிலான கோடீசுவரர்களைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கோடீசுவரர்களைக் கொண்ட நியூயார்க், ஹாங்காங், மாஸ்கோ, இலண்டன் ஆகிய மாநகரங்களை அடுத்து ஐந்தாவது இடத்தில் மும்பை உள்ளது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

நூறு கோடி டாலருக்கும் மேலான சொத்து கொண்ட 2,170 உலகக் கோடீசுவரர்களின் வரிசையில் மேலிருந்து ஆறாவது இடத்தில் லட்சுமி மிட்டல், ஒன்பதாவது இடத்தில் முகேஷ் அம்பானி, 36-வது இடத்தில் அசிம் பிரேம்ஜி, 42-வது இடத்தில் ரூயா சகோதரர்கள், 56-வது இடத்தில் சாவித்திரி ஜிண்டால், 81-வது இடத்தில் அதானி, 97-வது இடத்தில் ஆதித்தியா பிர்லா ஆகியோர் உள்ளனர்.

இந்தியாவின் தேர்தல்களில் அடுத்தடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்த விவரங்களை வைத்து “இந்திய தேச பக்தர்களின்” காதில் பூச்சுற்றலாம். மன்மோகன் – சிதம்பரம் – மாண்டேக்சிங் கும்பல் இந்த வகை வளர்ச்சியைத்தான் தமது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பத்தாண்டு கால சாதனையெனப் பீற்றிக்கொள்கிறது.

மோடிக்கு வாக்களிக்கக் கோரும் “குஜராத் மாடல் வளர்ச்சி” எத்தகையதாக இருக்கும் என்பதை மேற்கண்ட விவரங்களை பின்வரும் வேறொரு கோணத்தில் பகுத்துப் பார்த்தாலே விளங்கிவிடும்.

நூறு கோடி டாலருக்கும் மேலான சொத்து கொண்ட 2,170 உலகக் கோடீசுவரர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ள 103 இந்தியர்களில் மிகமிகப் பெரும்பாலானவர்கள் குஜராத் மற்றும் இராஜஸ்தானைச் சேர்ந்த பனியா சாதியைச் சேர்ந்தவர்கள். நாட்டிலேயே முதலிரண்டு பெரும் சூப்பர் பணக்காரர்களான லட்சுமி மிட்டல், முகேஷ் அம்பானி ஆகியோர் பனியா. மூன்றாம் இடத்திலுள்ள அசீம் பிரேம்ஜி முசுலீமாக மாறிய பனியா. நான்காவதிலிருந்து ஒன்பதாவது வரையுள்ள பெரும் சூப்பர் பணக்காரர்கள் பனியாக்கள். பத்தாவது இடத்தில் உள்ளவர் பார்சி.

சாவித்திரி ஜிண்டால்
சாவித்திரி ஜிண்டால்

இந்தியாவின் உயர்ந்த 55 சூப்பர் பணக்காரர்களில் 29 பேர், குஜராத் (13) மற்றும் இராஜஸ்தானை(16)ச் சேர்ந்தவர்கள். இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதமானவர்களேயான இந்தப் பனியாக்கள்தாம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியாள்கிறார்கள்.

இந்திய மக்கள் தொகையில் ஆறு சதவீதமான இந்த பனியா, பார்ப்பன, பார்சி முதலிய சாதி-சமூகப் பிரிவினர்கள்தாம் நாட்டின் இன்றைய பெரும் தொழிற்கழகங்களின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்தியாவின் மிகப் பெரிய தனியார், அரசு- பொதுத்துறை மட்டுமல்ல; தேசங்கடந்த பல தொழில்,சேவை, வங்கி நிறுவனங்கள் கூட பார்ப்பன, பனியா கும்பலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. மும்பய் பங்குச் சந்தையான சென்செக்ஸின் முதல் முப்பது இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்கள் பார்ப்பன, பனியா கும்பலால் கட்டுப்படுத்தப் படுபவை.

ஏ.சி.சி.- (சுமித்பானர்ஜி), பி.எச்.இ.எல். (ரவிகுமார் கிருஷ்ணசாமி), ஐ.சி.ஐ.சி.ஐ. (கே.வி. காமத்), இந்துஸ்தான் யுனிலீவர் (நிதின் பரஞ்பே), ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (யோகேஸ் கவுர்), எல்.அண்டு டி. (ஏ.எம். நாயக்), ஓ.என்.ஜி.சி. (ஆர்.எஸ்.சர்மா), எஸ்.பி.ஐ. (அருந்ததி பட்டாச்சார்யா), பஞ்சாப் நேஷனல் வங்கி (கே.சி. சக்ரவர்த்தி), பரோடா வங்கி (எம்.டி.மல்லையா) ஆகியவற்றைப் பார்ப்பனர்கள் நிர்வகிக்கின்றனர்.

பாரதி ஏர்டெல் (சுனில் மிட்டல்), கிராஸிம் மற்றும் ஹின்டால்கோ (குமாரமங்கலம் பிர்லா), எச்.டி.எப்.சி. (தீபக் பரேக்), ரிலையன்ஸ் (முகேஷ் மற்றும் அனில் அம்பானி), ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ் (அனில் அகர்வால்), சன் பார்மா (திலீப் சாங்வி) ஆகியவை பனியாக்களுக்குச் சொந்தமானவை.

அதானி
அதானி

இன்ஃபோசிஸ் (நாராயண மூர்த்தி), டி.சி.எஸ். (சுப்ரமணியன் ராமதுரை) ஆகியவற்றைப் பார்ப்பனர்கள் நிர்வகிக்கின்றனர்.

விப்ரோவை லூகானா என்ற பனியா சாதியிலிருந்து ஷியா பரிவு இஸ்லாமியராக மதம் மாறிய அசிம் பிரேம்ஜி நிர்வகிக்கிறார்.

இந்தியாவின் பெரிய வானூர்தி நிறுவனங்களில்…

கிங்பிஷர் (விஜ மல்லையா) ஒரு பார்ப்பனருக்கும், ஜெட் ஏர்வேஸ் (நரேஷ் கோயல்) ஒரு பனியாவுக்கும் சொந்தமானது .

இந்திய செல்பேசி சேவை நிறுவனங்களில்…

ரிலையன்ஸ் (அம்பானி), ஏர்டெல் (மிட்டல்), வோடாபோன் (எஸ்ஸார் -ரூயா), ஐடியா (பிர்லா), ஸ்பைஸ் (மோடி) ஆகியவை பனியாக்களுக்குச் சொந்தமானவை.

பி.எஸ்.என்.எல்.-ஐ (குல்தீப் கோயல்) ஒரு பனியாவும் டாடாவின் டி.டி.எம்.எல். -ஐ (கே.ஏ.சவுக்கர்) ஒரு பார்ப்பனரும் நடத்துகிறார்கள்.

பல ஆயிரம் கோடிகள் புழங்கும் கிரிக்கெட்டையும் பார்ப்பன-பனியா கும்பல் கட்டுப்படுத்துகிறது.

சசி ரூயா
சசி ரூயா

தி இந்து (கஸ்தூரி ஐயங்கார் குடும்பம்), இந்துஸ்தான் டைம்ஸ் (பிர்லா), இந்தியன் எக்ஸ்பிரஸ் (கோயங்கா) ஆகியன பார்ப்பன-பனியாக்களுக்குச் சொந்தமானவை.

இந்தி நாளிதழ்களில்…

தைனிக் ஜாக்ரான் (குப்தா), தைனிக் பாஸ்கர் பனியாக்களுக்கும், திவ்ய பாஸ்கர், குஜராத் சமாச்சார் (ஷா) ஆகி யன அகர்வால்களுக்கும், (சமணருக்கு)சொந்தமானவை.

லோக்மத் (தார்தா) என்ற மிகப் பெரிய மராத்திய நாளிதழும், ராஜஸ்தான் பத்திரிக்கா (கோத்தாரி), நவபாரத் டைம்ஸ் பத்திரிகையும் சமணர்களுக்குச் சொந்தமானவை.

இந்திய இரும்பு உற்பத்தி நிறுவனங்களில்…

எஸ்ஸார் (ரூயா), ஆர்செலார் மிட்டல் (லட்சுமி மிட்டல்),இஸ்பட் (மிட்டல்), ஜின்டால், சன் ஸ்டீல் (சிங்கால்) ஆகியன பனியாக்களுக்குச் சொந்தமானவை .

விசா ஸ்டீல் (அகர்வால்), லாடு ஸ்டீல் (குப்தா) ஆகியவை பனியாக்களுக்குச் சொந்தமானவை.

அரசுத் துறை நிறுவனமான செயிலை (எஸ்.கே.ரூங்டா) நடத்துபவர் ஒரு பனியா.

பணக்காரர்கள்இந்திய சிமெண்ட் நிறுவனங்களில்…

ஜே.கே. சிமெண்ட்ஸ் (சிங்கானியா), அம்புஜா சிமெண்ட்ஸ் (நியோடியா மற்றும் சேக்சாரியா), டால்மியா சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் மற்றும் விக்ரம் சிமெண்ட்ஸ் (பிர்லா) ஆகிய நிறுவனங்கள் பனியாக்களுக்குச் சொந்தமானவை.

மோட்டார் தொழிலில்…

இந்துஸ்தான் மோட்டார்ஸ் (பிர்லா), பஜாஜ் ஆட்டோ (பஜாஜ்) ஆகியவை பனியாக்களுக்குச் சொந்தமானவை.

இந்த நாட்டில் சமூக நீதி, மண்டல் கமிசன் கொள்கைகள் – இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து பலஆண்டுகளாகியும் பனியா, பார்ப்பன சாதிகளைச் சேர்ந்த வெகு சிலரே மேற்கண்ட நிலையை எட்ட முடிகிறது. முதன்மையாகத் தமது சாதி-சமூகத் தொடர்புகளை வைத்து அரசு மற்றும் அரசியலில் இலஞ்ச-ஊழல்களையும் அதிகார முறைகேடுளையும் கிரிமினல் குற்றங்களையும் செய்துதான் இந்த நிலையை எட்டியிருக்கிறார்கள். ஆனால், இவர்களில் யாரும் இதற்காகத் தண்டிக்கப்படவில்லை. முதலில், அரசுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றினார்கள். தொழில்களை ஊக்குவிப்பது என்ற பெயரில் முதலீடு உதவி, வரிவிலக்கு, அரசு ஒப்பந்தங்கள் என்று அரசு நிதியையும், இலவச நீர், நிலம், மின்சாரம் எனவும் பல இலட்சம் கோடிகளையும் பறித்தார்கள். இப்போது ஏராளமான இயற்கை வளங்களைச் சூறையாடுகிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் திவாலாகும் நிலையிலும், கோடிகோடியான மக்கள் ஓட்டாண்டிகளாகும் நிலையிலும் குறிப்பிட்ட சிறு சாதியினர் உலகின் அதி சூப்பர் பணக்காரர்களாகும் இரகசியம் இதுதான்.

– கதிர்
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________

 1. இது போல தமிழ்நாட்டில் தலித் சமுதாயத்தை சேர்ந்த 100 பெரும் பணக்காரர்களின் சொத்து கணக்கை வினவு வெளியிட்டால் நல்லா இருக்கும்….. அப்படி ஒரு பட்டியல் வினவு குழுமத்திடம் இல்லையென்றால், தகவல் தர பல பேர் காத்திருக்கிரார்கள்….. வெளியிட தயாரா?????????

  • நீங்கள் உண்மையான மனிதராக இருந்தால் , தயவு செய்து அந்த பட்டியலை கொடுங்கள் ,நான் சிறு தொழில் செய்துவருகேன்றேனன் ,ஒரு தலித் என்ற முறையல் அந்த கோடி இஸ்வரர்களை பற்றி தெரிந்துகொள்ள விருப்படுகேறேன். ஒட்டு பொரிக்கி அறிசியல்வாதிகளை சேர்த்து அல்லது தவிர்த்து பட்டியலை கொடுங்கள் நீங்கள் கொடுக்கும் ஆதாரத்தின் படி விமர்சனங்களை எதிர்கொள்ளலாம் !

  • தலித் மக்கள் ஐம்பது லச்சம் அல்லது ஒருகோடி என்பது வைதிருந்தால் அது உங்களுக்கு மில்லியனர் அல்லது பில்லியனர் நீங்கள் எல்லாம் 1000 கோடி அல்லது 10000 கோடி வைதிருந்தால் அல்லது பல கல்லுரி ,மருத்துவ கல்லுரி ,பொறியல் கல்லூரிகள் அது வைதிருந்தால் சாதாரணம் , சில பேருக்கு மிகவும் பிற்படுத்த பட்டியலில் 102,110,112 வது இடத்தில் இருந்தாலும் சுருக்கு என்று வலிக்க மாட்டேங்குது ! அனால் ஒரு தலித் படித்து கல்வி பொருளாதரத்தில் முன்னுக்கு வந்துவிட்டால் கொட கல்லை எடுத்து வயற்றில் குத்திகொல்லுகென்ரனர் !! என்ன ஒரு மனநிலை பாருங்க ! வாழ்க ! வாழ்க !!

  • உங்க ஆத்தா சோனியா சாப்பாட்டுக்கு கஸ்டப் படுகிறாராம்…
   தினமும் ரேசன் கடையில் அரிசி வாங்கி வந்து…உலை வைத்து…
   ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் கஞ்சி ஊத்துறாராம்….
   சுவிஸ் அக்கவுண்டில் அனேகமாக ரூபாய் 100 அல்லது 150 ரூபாய் இருக்கும்…
   கவலைப் படாதே இந்தியனே….உழைக்கும் வர்க்கம் ஒன்று திரண்டு உங்களை
   நாட்டைவிட்டே துரத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை

  • இந்தியனுக்கு எப்போதுமே …..ல் நமைச்சல் இருக்கும்…
   உஙக ஆத்தா சோனியா ஸ்விஸ் வங்கியில் வச்சிருக்கிற பணத்தை
   எடுத்து “இந்தியன்” எல்லோரும் பங்கு போடலாம்

 2. கோடீஸ்வர தலித் பட்டியல், உதாரணம்… ஸ்பெக்டரம் ராசா, காந்தி அழகிரி….

 3. ஒரு அம்பி இருந்தாலே ஊர் உருப்படாது…
  இத்தனை அம்பிகள் இருந்தால்?……
  “புடுங்கி திங்கிற” இனம் இந்தியாவை தின்று
  ஏப்பம் விடும் நாள் வெகு தொலைவில் இல்லை….

   • அரிகுமார் தமிழில் எழுதலாம்….
    ஒருவேளை சர்ச் பர்க் கான்வென்டில் படித்திருந்தால் ஆங்கிலத்தில் எழுதலாம்…
    நல்லது..
    .எந்த கோவிலில் நாயுடு “மணி” ஆட்டி எத்தி பிழைக்கிறான்?

    நாயுடு எவன் வீட்டில் புகுந்து திவசம்/கருமாதியில் “சுருட்டுகிறான்”?
    அம்பிகள் என்றாலே “எத்தி” ப் பிழைக்கும் கும்பல்…என்ன செய்வது….
    உங்களுக்கு காவடி தூக்க கருனாநிதி,புரட்சி தலைவி,பொன்னார்,பத்தும் பத்தாதுக்கு வீரமணி சாமிகள் வேறு……அம்பிகளுக்கு எப்போதுமே கொழுப்பு சாஸ்தி…..

    • கோயில்ல மணியடிக்கிற அய்யம்மாருங்க அஞ்சு பத்துன்னு சம்பாதிக்கறது உம்ம கண்ண உறுத்துது.

     // எந்த கோவிலில் நாயுடு “மணி” ஆட்டி எத்தி பிழைக்கிறான்? //
     ஆமா நாயுடு அஞ்சுக்கும் பத்துக்குமா வருவீக? கோயமுத்தூர்ல பாதி உம்ம ஆளுவதானவே.
     அம்பிகள் தமிழ் தான் பேசுதாவ. நீறு தகிரியமா தெலுங்க பேசிட்டே கோவைய மொட்ட அடிக்கிறீயலே – அதுக்கு என்ன பண்ண?

     கொஞ்ச நாள் முன்னாடி கூட பேர்ல நாய்டுனு தெனாவட்டா போட்டு திருஞ்ச சாதி பிசாசுதான நீறு.
     அடுத்தவன் சாதி திட்டும் போது நம்ம கொழுப்பு எதுவரைக்கும் தொங்குதுன்னு பாக்கணுமா இல்லையா?

     • கோவையில் உள்ள நாயுடுகள் உழைப்புக்கு
      உதாரணம்….எந்த நாயுடுவும் எந்த தமிழனையும்
      ஏமாற்றி…கருமாதி/திவசம்…பரிகார பூசை என்று
      கபளிகரம் செய்வதில்லை…
      அஞ்சும் பத்தும் வாங்கினால் தப்பில்லையா?
      எனது கொழுப்பின் அளவு கொஞ்சம் அதிகம்தான்…சிறுதொழில் புரியும்
      எல்லோருக்குமே “சற்று” அதிகமாகவே பூணூல்களின் மீது எரிச்சல் இருக்கும்…உழைப்பது நாங்கள்…உழைக்காமல் ஏமாற்றி உண்பது அம்பிகளுக்கு கைவந்த கலை

      • // கோவையில் உள்ள நாயுடுகள் உழைப்புக்கு உதாரணம் //
       கோவை பாதி கபளீகரம் செஞ்சவங்கனு சொன்னா உழைப்புக்கு உதாரணம்னு சொல்றீக. தொழிலாளர்கள் நிலை அப்படியே இருக்க, அவங்க உழைப்பை உறிஞ்ச நீங்க பொழுதுபோக்குக்கு aeroplane வச்சு விளையாடின வர்கமாச்சே.
       கல்லூரியா இல்ல கொள்ளை கூடமானு தெரியாத அளவு அவ்வளவு பிடுங்கல்.

       // ஏமாற்றி…கருமாதி/திவசம்…பரிகார பூசை என்று கபளிகரம் செய்வதில்லை… //
       அய்யரு தொழில் ப்ரோகிதம். நம்பிக்கை இருக்கறவன் கூப்பிட்டு கேக்கறான். அவனால முடிஞ்சத குடுக்கறான். நம்பிக்கையில்லாத நீறு மூடிட்டு இறும். இதுல ஏமாத்து எங்க வருது?
       சரி நீறு உம்ம வீட்டு கருமாதிக்கு யார கூப்பிடுரீறு? பொணத்த அப்டியே இழுத்து விட்டுருவீரா இல்ல எனக்கு நம்பிக்கையில்ல ஆனா வீட்ல நம்பறாகனு அதனால அய்யன கூப்பிட்டேன்னு மழுப்பத ஆளா?

       // சிறுதொழில் புரியும் எல்லோருக்குமே “சற்று” அதிகமாகவே பூணூல்களின் மீது எரிச்சல் இருக்கும் //
       சிறுதொழில் செய்யிறவக தான் ரொம்ப நம்பிக்கையா இருக்காக. கம்பெனி ஆரம்பிப்பது முதல் வருடாவருடம் ஆயுத பூசை வரை எல்லாவையும் அய்யர் ஆஜரில்லாமல் நடப்பதில்லை. உமக்கு உள்ளது வேறு. அதை சாதி கொழுப்புன்னும் சொல்லலாம். சூ கொழுப்புன்னும் சொல்லலாம்.

       சாதி பிசாசல்லாத பெரும்பான்மையான மற்றவர்க்கு உம்மை போல் ஒருத்தர் சாதி பத்தி பேசும் போது அல்லது ஒரு குறிப்பிட்ட சாதிய திட்டும்போது தான் எரிச்சல் உச்சகட்டத்திற்கு எகிறும்.

       • நாங்கள் “மூடிக்கிட்டு” இருந்ததினால்தான் குடுமி கேபரா ஆடுகிறது…
        கருமாதிக்கும்,திவசத்துக்குக் கூப்பிட்டாங்களாம்?
        எப்படா ஏமாறுவான்,எப்படா கோமணத்தை உறுவலாம்னு அலையற வம்சம் உமது!
        எந்த பூணுலையும் எனது நிறுவன “பூசை” வைக்க கூப்பிட்டதில்லை…மீறி வந்தால்….பூசைதான் வைப்பேன்

 4. இதுமட்டுமா?
  மட்டையை வைத்து கிரிக்கட்டில்?
  டெண்டுல்கர்,அகர்கர்,இசான் சர்மா,சேட்டன் சர்மா,ரவி ஸாஸ்ட்ரி(புரோகிதர் அல்ல)
  சிவராம க்ரிஸ்னன்,ஸ்ரிகாந்த்,சுன்னி(ல்)கவாஷகர்….இவாள்ளாம் பூணூல்தான்….

  • // டெண்டுல்கர்,அகர்கர்,இசான் சர்மா,சேட்டன் சர்மா,ரவி ஸாஸ்ட்ரி(புரோகிதர் அல்ல)
   சிவராம க்ரிஸ்னன்,ஸ்ரிகாந்த்,சுன்னி(ல்)கவாஷகர் ….இவாள்ளாம் பூணூல்தான்…. //

   இதிலிருந்தே தெரியுதே உம்ம சாதி வெறி.
   உம்மால முடிஞ்சா திறமைய காமிச்சு மேல வாறும்.
   அத விட்டுட்டு அவன் சாதிய திட்டுனா அது உம்ம இயலாமைய தான்.

   • தெறமய காமிக்குறதுக்கு முதுகுல நூல் இருக்குற ஸ்பெசல் தெறம வேணுமுன்னு கேக்குறானுவளே, அப்ப என்னலே பண்றது? சும்மா கப்பித்தனமா பேசப்படாது..

    • ஆமா நம்ம நாயுடு ஒரே ஓவர்ல 36 runs மற்றும் ஒரே ஓவர்ல 6 wicket எடுத்த கொட்டை எடுத்த புலி. ஆனா cricketக்கு ஆள் selection பண்ணும்போது மார்ல பூணூல் இல்லாததால reject பண்ணிடாங்கலாமா?
     உம்ம statement படி பாத்தா இந்திய teamல் உள்ள எல்லோருமே பூணூலோட தான் சுத்தணும். எனக்கு தெரிஞ்சு இல்ல.
     வாய்க்கு வந்ததெல்லாம் ஒளரப்பிடாது.

     • அது எப்படி?
      பூணூல் திருனெல்வேலி தமிழில்?
      டப்பிங் வாய்ஸ்?
      எங்கேயோ கோணுதே!

      • பேசறவன் விஷயத்த பாக்காம அவன் என்ன சாதி என்ன ஊரு எல்லாத்தையும் நோன்டிகிட்டே இரும்.
       சாதி வெறி பிடித்த உம்மை இனி hitler ramadoss னு தான் சொல்லணும்.

       முதல்ல உம்ம நீரே கேள்வி கேளும் ஒய் அப்பறமா நான் அய்யரா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணலாம்.

       • நிச்சயம் அய்யர்தான்…
        அய்யங்கார் அவ்வளவாக துவேஸம் காட்டுவதில்லை
        அனேகமாக ஜயேந்திரன் கூட்டாளியாக இருக்கலாம்…
        .
        உங்களைப் பொருத்தவரையில் உங்களிடம் நான்
        இட்லர் ஆகத் தோன்றுவது எனது/தமிழர்களின் எதிர்காலத்துக்கு நல்லது

    • அவா “காப்பி” சாப்பிட்டு பேசல…
     டாஸ்மாக் சாப்பிட்டுருக்கா….சாரி…தீர்த்தம் சாப்பிட்டிருக்கா
     2014: இன்னமும் பூணூல் கொட்டம் அடங்கவில்லை…
     அடங்க வைப்போம்

 5. சரியான பதிப்பு. கிரிகெட் விலையாட்டு வீரர் அனைவரின் மானிலம்,மட்ரும் அவர்கலின் சமூக அடயாலங்களையும் வெலியிடுங்கள்.

   • இப்படி கிரிகெட் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் பூணூல் போட்டிருந்ததால் வாய்ப்பு பெற்றுள்ளார்கள். தேவர்களும் வன்னியர்களும் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் ….

   • மிக அருமையான லிங்க். இதை ஒரு முறை படித்தால் பிராமணர்கள் மீதான மரியாதை பல மடங்கு உயரும் . என்னை நார்மல் திட்ட வேண்டாம். நான் பிராமணன் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க