Thursday, December 1, 2022
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்உமா மகேஸ்வரியை பாதுகாக்கத் தவறிய டாடா !

உமா மகேஸ்வரியை பாதுகாக்கத் தவறிய டாடா !

-

சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் டி.சி.எஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி (24) என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அலுவலகத்திலிருந்து திரும்பாததால், அவருடன் தங்கியிருந்த தோழிகள் டி.சி.எஸ்சுக்கும்,  சேலம் ஆத்தூரில் உள்ள அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து சென்னை வந்த உமா மகேஸ்வரியின் தந்தை போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

டி.சி.எஸ் அலுவலகக் கட்டிடம்
டி.சி.எஸ் கட்டிடம்

13-ம் தேதி இரவு 10.30 மணிக்கு டி.சி.எஸ் அலுவலகத்திலிருந்து வெளியேறிய காட்சி பதிவாகி இருந்தது. இந்நிலையில் கடந்த சனியன்று டி.சி.எஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் உள்ள புதர்களில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக (22-2-2014) பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இந்த சம்பவம் குறித்து சிறுசேரி டி.சி.எஸ் ஊழியர்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைக்கின்றன. “சனிக்கிழமையன்று உடலை கண்டெடுத்ததாக டி.சி.எஸ் நிர்வாகமும் போலீசும் கூறுவது முழுப் பொய். வெள்ளிக்கிழமையே சிப்காட் வளாகத்தில் அந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் மத்தியில் செய்தி பரவியது. ஏன் தேதியை மாற்றிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார் சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர். சிலர் தங்களுக்கு வியாழக்கிழமையே இந்த தகவல் தெரியும் என்று அதிர்ச்சியளித்தார்கள். இவர்களது கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக,  தினகரன் மற்றும் மாலைமுரசு நாளிதழ்கள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஊழியர்கள் மத்தியிலும், செய்தியாளர்கள் மத்தியிலும் இந்தத் தகவல் பரவியதாகவும்,  போலீசாரை தொடர்பு கொண்ட போது அவர்கள் மறுத்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் மூலம் நிர்வாகமும், போலீசாரும் இந்த விசயத்தை மூடி மறைக்க முயன்று செய்தி வெளியே கசிந்ததும் வேறு வழியின்றி சனிக்கிழமையன்று உடலை கைப்பற்றியது போல நாடகமாடியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இந்த சம்பவத்திற்கான தனது பொறுப்பை கைகழுவி விடவும், டாடா நிறுவனம் குறித்து ஏற்றி போற்றி கூறப்படும் மதிப்பீடுகள் பாதிக்கப்பட்டு தங்கள் பிராண்ட் இமேஜ் சரியும் என்பதாலும் டி.சி.எஸ் நிர்வாகம் இதை மூடி மறைக்க முயற்சி செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இது அவர்களின் வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான். சில மாதங்களுக்கு முன்னர் துரைப்பாக்கம் சென்னை ஒன் அலுவலக வாசலில் நடந்த விபத்தில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், புதிய ஊழியர்களுக்கான பயிற்சி முகாம் நடக்கும் காரப்பாக்கம் அலுவலகத்தில் ஒரு ஊழியர் நெஞ்சு வலியால் மருத்துவ உதவியின்றி அங்கேயே இறந்ததாகவும் கூறும் ஊழியர்கள், அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகாமலும்,  பக்கத்து அறையில் வேலை செய்பவருக்கோ கூட தெரியாமலும் பார்த்து கொண்டதை கூறி இதுதான் நிறுவனத்தின் வழக்கம் என்று கூறுகிறார்கள்.

சிறுசேரி சிப்காட்
சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா

அமெரிக்காவில் 2008-க்குப் பிறகு ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து, இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக குறைக்கப்பட்டு சுரண்டலும், கொத்தடிமை முறையும் அதிகமாகி வருகிறது. லாப வளர்ச்சியை பராமரித்துக் கொள்ளும் விதமாக நிறுவனத்தின் செலவில் போக்குவரத்து வசதி, இலவச காஃபி, இளைப்பாறும் அறைகள், உடற்பயிற்சி அறைகள் போன்று ஏற்கனவே அளிக்கப்பட்ட வசதிகள் அனைத்தும் கேள்விக்கிடமின்றி வெட்டப்பட்டன. ஊதிய உயர்வுகளும், ஊக்கத் தொகைகளும் மறுக்கப்பட்டு வந்தன.

இந்த வசதிகளெல்லாம் நிறுவனம் தந்தே ஆக வேண்டிய உரிமைகள் என்று தொழிலாளி வர்க்கம் ஓரளவு சாதித்திருப்பதைப் போன்ற சூழல் ஐ.டி துறையில் இல்லை. அங்கே பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இதை சலுகையாக பார்க்கின்றனரே அன்றி உரிமையாக இல்லை. மேலும் அனைத்து ஐ.டி நிறுவனங்களும் ஊழியர்களை கவரவும், அவர்களை நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வைக்கவுமே இந்த உரிமைகளை ஏதோ தானம் தர்மம் செய்வது போல ஆரம்பத்தில் கொடுத்தன. பின்னர் ஐ.டி துறையில் வேலை வாய்ப்பு குறைந்த பின்னர் ஈவிரக்கமின்றி அந்த உரிமைகளை வெட்டின.

தமது செலவுக் குறைப்பு நடவடிக்கையால் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இருட்டடிப்பு செய்து தமது இமேஜை பராமரிப்பதில் டி.சி.எஸ் போன்ற தரகு முதலாளி நிறுவனங்கள் மிகவும் கவனமாக இருக்கின்றன.

மேலும் உமாமகேஸ்வரி விசயத்தில் மூடி மறைக்க கூடுதலான சில காரணங்களும் இருக்கலாம் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் புதிதாக வேலைக்கு வருபவர்கள் தகுந்த வாடிக்கையாளர் ஒப்பந்த பணியில் (புராஜெக்ட்) சேர்க்கப்படும் வரை அவர்களை காத்திருப்போர் பட்டியலில்( பெஞ்ச்) வைத்திருப்பது வழக்கம்.  அந்த காலகட்டத்தில் அவர்கள் பகல் ஷிப்டில் மட்டும் வேலை செய்வதால் வழக்கமான நிறுவன பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

புராஜக்டில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டால் பணிக்கான அடையாள எண்  வழங்கப்பட்டு, அவர்களுக்குரிய செலவுகள் அந்த குறிப்பிட்ட எண்ணின் கீழ் வரவு வைக்கப்படும். அதாவது, பணி எண் வழங்கப்பட்டு இருந்தால்தான் குறிப்பிட்ட ஊழியருக்கு இரவு நேர சிறப்பு போக்குவரத்து முதலான வசதிகளும் செலவுகளும் செய்யப்படும். எனவே, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை இரவுப் பணிகளில் பயன்படுத்த முடியாது. இது நிரந்தர தொழிலாளிகளுக்கு கொடுத்தே ஆக வேண்டிய உரிமைகளை மறுப்பதற்கு ஒப்பந்த தொழிலாளிகள் என்றால் கிடையாது என்று பல நிறுவனங்கள் வைத்திருக்கும் சதித்திட்டத்திற்கு ஒப்பானதாகும்.

சமீப ஆண்டுகளில் லாப வீதத்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து புதிதாக வேலைக்கு சேரும் ஊழியர்களை பணி எண் கொடுக்காமல்,  வாடிக்கையாளர் புராஜக்டில் ஈடுபடுத்தும் பழக்கம் ஆரம்பமானது. அதாவது அந்த ஊழியர் அதிகாரபூர்வமாக வாடிக்கையாளர் பணியில் இருக்க மாட்டார், ஆனால் அதற்கான வேலைகளை செய்வார். ஒரு அனுபவம் வாய்ந்தவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் இரண்டு மூன்று புதியவர்களை பணியில் ஈடுபடுத்துகிறார்கள். இவர்களை நிழல் ஊழியர்கள் (Shadow resourse) என்று அழைக்கிறார்கள்.

உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி

ஏற்கனவே பார்த்தபடி, புராஜக்ட் எண் இல்லாத இந்த நிழல் ஊழியர்கள், அந்தப் பணிக்குத் தேவைப்படும் இரவு நேர வேலைகளை முடித்து விட்டு நிறுவனம் ஏற்பாடு செய்யும் கார் வசதி  உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாது. 10 மணி வரை வேலை செய்தாலும், பொதுப் போக்குவரத்தைத்தான் நாட வேண்டும். மிகவும் தாமதமானால் மட்டுமே மற்ற முறையான ஊழியர்கள் எடுக்கும் வாடகைக் கார் வசதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட ஆரம்ப ஊழியர்களில் (fresher ) ஒருவர் தான் உமா மகேஸ்வரி.

இவர் நார்தன் டிரஸ்ட்( Northern Trust) என்ற வாடிக்கையாளருக்கான பணியில் நிழல் ஊழியராக வேலை வாங்கப்பட்டிருக்கிறார்.  மேலும் சமீபத்தில்,  வாடகைக் கார் வசதி கோருவதற்கான நடைமுறை சிக்கல் நிறைந்ததாக மாற்றப்பட்டிருக்கிறது.  இதனால் வீட்டுக்குப் போக வாகன வசதி கிடைக்கப் பெறாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில்தான் 13-ம் தேதி இரவு அலுவலகத்திலிருந்து இரவு 10.30 க்கு கிளம்பியவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணின் உடல் என்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பது முதல் நிர்வாகம், போலீஸ், பத்திரிகைகளால் கூறப்படும் அனைத்து தகவல்களும் முரண்பாடு நிறைந்ததாக உள்ளன.

இரவு 11 மணிக்கு வீட்டுக்குச் செல்ல நிறுவனத்தின் சார்பில் அந்த பெண்ணிற்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்திருந்ததாகவும், ஆனால் கொலையுண்டதற்கு முந்தைய இரண்டு வாரங்களாக அந்த வசதி வேண்டாம் என்று கூறிவிட்டு இரவு 10 மணிக்கே ஆளில்லாத சாலையில் நடந்து பழைய மகாபலிபுரம் சாலைக்கு வந்து பேருந்தில் வீட்டுக்குச் சென்றதாகவும் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிற்பகலில் அப்படி வேலைக்கு வரும் போது வழியில் வேலை செய்யும் வட இந்திய கட்டிட ஊழியர்கள் தொடர்ந்து இவரை கிண்டல் செய்ததாகவும்,  அதனால் அவர்களுடன் வாக்குவாதம் செய்து அவர்களை இந்த பெண் அடித்ததாகவும்,  அதனால் அவர்கள் சம்பவத்தன்று தனியாக நடந்து செல்லும் போது பழிவாங்கியதாகவும் அந்த செய்தி சொல்கிறது.

அதாவது, 2 மணி ஷிப்டுக்கு வரும் போதும் போக்குவரத்து வசதி இல்லை, அதனால் வழியில் தொந்தரவில் மாட்டியிருக்கிறார். அப்படியிருந்தும் இரவில் நிறுவனம் ஏற்பாடு செய்த போக்குவரத்தை மறுத்து தனியாக நடந்து சென்றிருக்கிறார். அவருக்காக காத்திருந்த வட மாநில ஊழியர்கள் அவரை தாக்கியிருக்கின்றனர்.

தினமலரில் வெளியான செய்தியில்

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

“குற்றவாளிகள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:கடந்த, 13ம் தேதி இரவு 10:00 மணிக்கு, ‘சிப்காட்’ வளாகத்தில், உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து பணத்தை  கொள்ளையடிப்பதற்காக, நாங்கள் அவரை வழிமறித்தோம்.

அவர் எங்கள் நோக்கத்தை தெரிந்து கொண்டு, காலில் இருந்த செருப்பை கழற்றி, எங்களை அடித்தார். அதனால் நாங்கள் ஆத்திரம் அடைந்தோம்.அவரை குண்டுக்கட்டாக தூக்கி முட்புதருக்குள் சென்றோம். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்தோம். அவரது கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தி கொன்று விட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க எரித்து கொன்றோம். அவரிடம் இருந்து அலைபேசி, கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை பறித்து தப்பினோம்.” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் உடல் எரிந்த நிலையில் காணப்பட்டது, அழுகிய நிலையில் காணப்பட்டது  என்றும் முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு 25-ம் தேதி அன்றிரவு அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற  நபர்களை விசாரித்து வருவதாக தினகரன் செய்தி வெளியிட்டிருக்கிறது.  மேலும், பிணம் கிடந்ததாகக் கூறப்படும் இடம் தினமும் நூற்றுக்கணக்கான நபர்கள் நடந்து செல்லும் பாதையில் உள்ளது. ஒன்பது நாட்களாக உயிரற்ற உடல் அங்கு கிடந்தால் அழுகி நாற்றமெடுத்திருக்கும். அதை யாரும் கவனிக்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை.

இந்த செய்திகள் இவ்வளவு முரண்பாடுகளோடு வெளிவருவதற்கு காரணம் என்ன? ஊடகங்கள் பொதுவில் கிசுகிசு ஆர்வத்தையும், பரபரப்பு மனநிலைக்கு தீனி போடவும் இப்படி செய்திகளை ஊதிப்பெருக்கி எழுதும்தான். ஆனால் இங்கே அதை விட இந்தக் கொலையை மறைப்பதற்கு அல்லது பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வராமல் இருப்பது என்று பெரும் முயற்சிகள் நடந்திருப்பதுதான் காரணம். உமா மகேஸ்வரி கொலையுண்டதை விட நிறுவனத்தின் பெயரைக் காப்பாற்றுவதே பிரதானமாக உள்ளது. இது குறித்து ஆரம்பத்தில் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட போது அப்படி ஒன்றுமே இல்லையே, உங்களுக்கு எப்படி தெரியும் என்பதே அவர்களின் எதிர்வினையாக இருந்தது.

ஊடகங்கள், ஆளில்லா விமான சோதனை, சிபிசிஐடி விசாரிப்பு என பரபரப்பு தகவல்களைத் தாண்டி இந்த கொலைக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது குறித்து பேச மறுக்கின்றன. இதை வெறும் சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை என்ற பிரச்சனையாக மட்டுமே குறுக்குகின்றன.  ஊழியர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான டி.சி.எஸ் நிர்வாகத்தின் மீது யாரும் கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள்.

வட இந்திய தொழிலாளர்கள்
கைது செய்யப்பட்ட மேற்கு வங்கத் தொழிலாளர்கள்

கொலை யாரால், எப்போது, எதனால் செய்யப்பட்டது என்பது மட்டுமல்ல இங்கு பிரச்சினை? தங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வரும் ஊழியர்களின் பாதுகாப்புக்கான பொறுப்பு நிர்வாகத்திற்கு இருக்கிறதா இல்லையா? டி.சி.எஸ் நிர்வாகம் தான் இந்த கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் மையமான பிரச்சனை. பல்வேறு ஊர்களிலிருந்தும் தமது பணிக்கு எடுத்து, பெருநகரங்களில் தங்க வைக்கும் நிறுவனங்கள், சிறுசேரி போன்ற ஒதுங்கிய இடங்களுக்கு வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய முறையான தங்குமிடம் (quarters),  உணவு, போக்குவரத்து வசதி, பாதுகாப்பு போன்ற பொறுப்புகளை படிப்படியாக கைகழுவியிருக்கின்றன.

இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், சமூகத்தில் பெண்கள் சந்தித்து வரும் பாதுகாப்பு குறைபாடுகளை நினைவூட்டுவதாகவும், ஊழியர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக வேலை செய்வதாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டு தன் பொறுப்பை அயோக்கியத்தனமாக கைகழுவியிருக்கிறது டிசிஎஸ்.

இதை கண்டிக்கவோ,  இதுகுறித்து முணுமுணுக்கவோ உரிமையில்லாமல், இன்னும் சொல்லப் போனால் இப்படி கண்டிப்பது தவறு என்று கருதும் மனநிலையில் தான் பெரும்பாலான ஐ.டி துறை ஊழியர்கள் இருக்கிறார்கள். பக்கத்து கேபினில் கொலை நடந்தால் கூட யாருக்கும் தெரிவதில்லை அல்லது தெரிந்தது போல காட்டிக் கொள்வதில்லை.  அடுத்தவரின் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள விடாமல் தனித்தனி இயந்திரங்களாக திட்டமிட்டு பிரித்து வைக்கப்பட்டுள்ளார்கள் ஐ.டி துறை ஊழியர்கள். அப்ரைசல், ரேட்டிங் என்ற பெயரில் தன் அருகில் இருபவரையே போட்டியாளராக காட்டி அனைவரையும் ஒன்று சேரவிடாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் டி.சி.எஸ், சி.டி.எஸ் உள்ளிட்ட எல்லா ஐ.டி முதலாளிகளும்,  நாஸ்காம் என்ற பெயரில் சங்கமாக ஒன்றிணைந்து ஊழியர்களை சுரண்டுவதில் பரஸ்பரம் ஒத்துழைக்கிறார்கள்.  தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் தொழிலாளர் நலச்சட்டங்களை செயல்படுத்துவதை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். கூகிள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள்,  ஊழியர்களுக்கு விரோதமாக எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று வினவில் ஏற்கனவே செய்தி வந்திருக்கிறது.

ஆனால் முதலாளிகளும், அவர்களின் ஊடகங்களும் தான் தொழிற்சங்கம் வைப்பதையோ, உரிமைகளுக்காக போராடுவதையோ ஏதோ தீண்டத்தகாத செயல் போல பார்க்க ஊழியர்களை பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

ஐ.டி துறை ஊழியர்களே, உமா மகேஸ்வரியின் கொலை குறித்து நிச்சயம் நீங்கள் வருந்தியிருப்பீர்கள். இப்படி கொலை செய்யப்பட்டுவிட்டாரே என்று உங்கள் சக ஊழியர்களும் வருந்தியிருப்பார்கள்.  ஆனால் முதலாளிகளின் வருத்தம் வேறுமாதிரி இருந்திருக்கும், ஊடகங்களில் செய்தி வந்து விட்டதே என்பதே அவர்களது கருணையின் பின்னணி. இந்நேரத்திற்கு அனைத்து நிறுவன எச்.ஆர் களும் மீடியாவை கையாண்டதில் என்ன தவறு என தங்களுக்குள் பேசி இருப்பார்கள். நாஸ்காமில் விவாதித்திருப்பார்கள். அதாவது உமா மகேஸ்வரிகளை காப்பாற்றவதை விட தமது நிறுவனத்தின் மதிப்பை காப்பாற்றுவதுதான் அவர்களது தலையாய பிரச்சினை.

உமா மகேஸ்வரி கொலைக்கு பின்னர் டாடா நிறுவனம் அனுப்பியிருக்கும் ஊழியர்களுக்கான கடிதம் குறித்து டிசிஎஸ் ஊழியர்கள் தெரிவித்தார்கள். அந்த கடிதத்தில், “சென்னையிலும், மும்பையிலும் இரண்டு ஊழியர்களை இழந்து விட்டோம். சமூகம் இப்படித்தான் இருக்கும், நாம்தான் பாதுகாப்பாக, கவனமாக இருக்க வேண்டும், நிறுவனத்தின் போக்குவரத்து ஏற்பாடுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள், இறந்து போன ஊழியர்களது குடும்பத்தின் வேதனையில் டாடா பங்கு கொள்கிறது” என்று டாடா நிறுவனம் தந்திரமாக பேசி தப்பித்துக் கொள்கிறது.

டி.சி.எஸ் சிறுசேரி கட்டிடம்
டி.சி.எஸ் சிறுசேரி கட்டிடம்

இனிமேல் அனைத்து பிரிவு ஊழியர்கள் குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் நிழல் ஊழியர்களாக இருந்தாலும் சரி, நிரந்தர ஊழியர்களாக இருந்தாலும் சரி இரவில் பாதுகாப்புடன் கூடிய வாகன வசதி உண்டு என்று டாடா உறுதி அளிக்கவில்லை. மாறாக அவரவர் பாதுகாப்பை அவரவர் ஏற்க வேண்டும் என்று பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்கிறது. இலாபமா, ஊழியர் நலனா என்று கேட்டால் டாடா மட்டுமல்ல அனைத்து முதலாளிகளும் இலாபமே துணை என்றே முழங்குவார்கள்.

இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள்தான் குற்றவாளிகள் என்று போலீஸ் கூறுகிறது. அது உண்மையெனில் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு காவல் நிலையம் தீவிரமாக சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுகிறது என்று காட்டுவதற்கு ஒரு மாதத்தில் இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனும் தமிழக காவல் துறையின் கடமை வேட்கை குறித்த சந்தேகமும் எழாமல் இல்லை. கூடுதலாக டாடா நிறுவனத்தின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை டாடாவுக்கு மட்டுமல்ல, தமிழக அரசுக்கும் இருக்கிறது என்பதே உண்மை.

எது எப்படியோ சில கிரிமனல்கள் வசம் உமா மகேஸ்வரி சிக்கி இளம் வயதிலையே தனது கனவுகளையும், வாழ்வையும் பறிகொடுத்த பரிதாபத்திற்கு டாடா நிறுவனமே முக்கியமாக பொறுப்பேற்க வேண்டும். உதவித் தொகை கொடுக்கும் தமிழக அரசு, ஐ.டி நிறுவனங்கள் தமது பெண் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் செய்யத் தவறியிருக்கும் கடமைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிமினல்களை கண்டுபிடிக்க சிபிசிஐடி போட்டு வேலை செய்யும் தமிழக அரசு, ஐடி நிறுவனங்களை அப்படி விசாரிப்பதற்கு நாம்தான் போராட வேண்டும். மேலும் இனி அனைத்து ஐ.டி நிறுவனங்களும் தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்படவேண்டுமென்றும் நாம் போராட வேண்டும்.

உமா மகேஸ்வரியின் இழப்பிலிருந்தாவது ஐடி துறை ஊழியர்கள் தமது பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் சுயமரியாதையை பெறுவதற்கு தொழிற்சங்கம் வேண்டும், அதுவும் முதலாளிகளின் தயவில் இருக்கும் அடிமை தொழிற்சங்கமாக இல்லாமல் புரட்சிகர அமைப்புகளின் துணையோடு இருக்கும் போர்க்குணமிக்க தொழிற்சங்கமாக இருக்க வேண்டும் என்ற உறுதியைப் பெற வேண்டும்.

–    வினவு செய்தியாளர்கள்.

 1. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

  ஆனால் வெறும் மாநிலத்த்தவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். இதுபோன்ற செயல்கள் தமிழகத்தில் வாசிக்கும் வேறு மாநில மக்களுக்கு அச்சத்தை கொடுக்கும். தமிழனை சுரண்டும் மார்வாடிகளை இது பாதிக்காது. ஆனால் குறைந்த கூலிக்காக தமிழகம் வரும் உழைக்கும் மக்களை மிகவும் பாதிக்கும்.

  தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் இருக்கணும்.
  வந்தாரை வாழவைக்கும் செந்தமிழ் நாடு என்கிற பெயர் நிலைத்து இருக்க வேண்டும்.

 2. ஐடி துறை நண்பா ரோசம் வேணும் டா என்று எழுதினாலும் சரி,
  போர் குணம் மிக்க தொழிற் சங்கம் வேண்டும் என்று எழுதினாலும் சரி..

  விளைவு 00 புஜ்ஜியம் தான்.

  மாத்தேன் போ.. என்பது தான் ஐடி துறையினரின் எதிர் விளைவு.

 3. ஊரு விட்டு ஊரு வந்தா வேலைய மட்டும் தான் பாக்கனும்… வினவு எழுதியதை போல அந்த பெண் இல்லை… கொலை ஆவதற்க்கு முதல் நாள் ( காதலர் தினத்திற்க்கு முதல் நாள்) மற்றும் கொலை ஆன நாளில் ஒரு மணி நேரம் முன்பாகவே வேலையை விட்டு கிளம்பியது ஏன்… ஆயிரக்கணக்காணோர் வேலை செய்யும் இடத்தில் எல்லோருக்கும் கம்பெனிக்கு வெளியே பாதுகாப்பு கொடுப்பது இயலாத காரியம்… இதுவே அவளோட சொந்த ஊரான சேலத்தில் நடந்தால் வினவு டாடா குழுமத்தை தான் காரணாம் சொல்லுமா? அவ அவ சொந்த பாதுகாப்பை அவளுங்கத்தான் பாத்துக்கணும்… இனிமே சிப்காட்டில் எல்லோரும் விழிப்போடு இருப்பாளுங்க…. இதுக்காக வினவு முக்கி முக்கி அமெரிக்கா வரைக்கும் கூத்தாட தேவையில்லை….

  • It seems some pervert is hiding in the name of Indian. Instead of feeling pity for the girl, whose dreams were dashed and destroyed by some animals, this fellow seems to drive some pervert pleasure in the incidence. The cyber police should track this guy and enquire whether he has any part in the above incident. This animal doesn’t even have the courtesy to refer to the girl in plural. It is male chauvinists like this Indian (see the name…surely he is from the saffron brigade) who graduate to become rapists and killers. Will he write like if his wife, daughter or sister is raped and killed like this?

  • நீர் _____________என்று நினைக்கிறேன். நிச்சயமாக நீர் ஒரு டி சி எஸ் கூலி தான். நான் அங்கே வேலை பார்த்தேன் என்று சொல்ல வெட்க படுகிறேன். இது உன் தங்கையாக இருந்தால் சொல்வாயே இப்படி? நானும் எத்தனை நாள் நடந்து போய் இருக்கேன் என்று எனக்கு தெரியும். இரண்டு வருடம் அங்கே இருந்தவன் நான். கொஞ்சம் அடக்கி வாசி இந்தியனே.
   நான் தமிழன் அது தான் கொஞ்சம் ரோசம் வருகிறது.

   • இந்தியன் எப்போதுமே அடஙக மாட்டான்…அதுவும் குறிப்பாக தமிழ் இனத்துக்கு
    துரோகம் செய்வதில் போட்டி போடுவான்,,,பேரைப் பாரு இந்தியன்.
    .. இத்தாலிக்கு இஸ்திரி போடும் ஜென்மங்கள்- திருந்த வாய்ப்பில்லை

    • இதில் என்ன சந்தேகம்?
     மாமாவேதான்…இத்தாலிக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா
     மாமாவாக இருப்பதில் இந்தியனுக்கு வரும் கிளுகிளுப்பு ஆகா

   • ரத்தம் கொதிக்கச்செய்யும் இவர்களின் கருத்துகளை நீக்குங்கள்,இது கோபம் அல்ல அதையும் தாண்டியது…

  • உன்னுடைய மனைவிக்கொ (அ) உன் மகலுக்கொ இப்படி எர்ப்பட்டால்தான் அதன் வலி உன்னைமாரி ஜென்மங்களுக்கு புரயும்.

  • திருவாளர் இந்தியன் என்ற மூளை மழுங்கிய ஜென்மமே…

   ஒரு பெண் ஒரு மணி நேரம் முன்னால் வேலையை விட்டு வெளியே போனால்…அவளை வன்புணர்வு செய்யலாம் என்பதுதான் உனது கருத்தா? கம்பனிக்கு வெளியே 500 அடிக்குள் அந்தப் பெண் கொல்லப் பட்டுள்ளாள்! உனது சகோதரிக்கு இந்த நிலைமை என்றாலும் இப்படி நரகலைத் தின்ன வாயால தான் பேசுவாயா? போய் கக்கூஸ் தண்ணியில் வாயைக் கழுவு!

  • நாஙக அமெரிக்கா வரைக்கும் கூத்தாடுவது இருக்கட்டும்
   உனது டவுசர் இத்தாலி வரை கிழிங்சி தொஙுகுதே

 4. “”””இனி அனைத்து ஐ.டி நிறுவனங்களும் தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்படவேண்டுமென்றும் நாம் போராட வேண்டும்.”””” ——- ஒரு மண்ணும் நடக்காது…. ஒரு கற்பழிப்பை வைத்து போராட்டம் நடத்த துணியும் வினவு தோழர்களின் ஆண்மையே ஆண்மை….

  • போராட்டம் என்பதே நன் மக்களின் வெறுப்புதான் ,நல்லவர்களால் மட்டுமே அதனை யோசிக்கவும்,செயல்படுத்தவும் முடியும்.

  • யோ இந்தியா, வினவு வாசகர்களிடம் சிக்கி விடாதே. டவுசர் கிழிய கிழிய அடிப்பாங்க….

  • இந்தியனின் புத்தி எப்போதுமே கோணல் புத்திதான்…எல்லோருமே
   உங்க சோனியா ஆத்தா மாதிரி இருப்பாங்களா?

 5. பணத்துக்காகத்தானே எல்லோரும் வேலை செய்கிறார்கள்… அவ்வளவு சிரம மசுராயிருந்தா வேலைய விட்டு போக வேண்டியது தானே??? எதுக்கு எழவு கூட்டனும்?? டிசிஎஸ்’ல் வேலை செய்யும் பொண்ணுக்கு மகாபலிபுரம் ரோட்டில் நைட் 11 மணிக்கு தனியாக போகும் முன் யோசிக்க தெரியாது???? வினவு மாதிரி ஆளுங்க ஆசைப்படும் பெண் விடுதலை கடைசியில் போஸ்மாடத்தில் தான் முடியும்…………

  • அந்த பணம் ஒருவனிடமே குவியாமல் இருந்தால்?…உன் போன்றவர்களால் இக் கேள்வியே எழுப்பமுடியாது.ஏமாற்று வழியில் சிந்திக்கும் மனிதர்களால்தான் நாடே குட்டிச்சுவராகிறது,இதற்கு மேலும் எழுதமுடியும்…..

   • நன்றாய் சொன்னீர்கள் பாபுபகத்… இந்த நாறவாயன்களுக்கு பணம் ஒன்றுதான் குறி..ஆனால் அதை மறைக்க பணத்தைப் பற்றி எகத்தாளமான கேள்வி கேட்டு மடக்குவதாக ஒரு திமிர் வேறு!

  • நீ என்ன மயித்துக்கு வேலை செய்கிறாய் இந்தியன் என்னும் நாரவாயனே? உனக்கு சிரம மசிறு என்று வந்தால் வேலையை விட்டு விடுவாயா? அடங் கொய்யாலே! போய் TCS க்காரனுகளுக்கு மாமா வேலை பண்ணு!

 6. It is ironic that this gentleman who shows his cruelty in his three comments calls himself as “Indian”.Will he talk in the same fashion if the victim is from his own family?Let him read this article once more with some patience and respond responsibly.Here is a person who wants to carry “PAAL KAVADI” to Tata.He seems to be a perverted individual.Because,I have read many of his responses in the same manner and in spite of brickbats received already by him,he is not changing his attitude.Only Vinavu should edit and remove this type of comments with no sense.

 7. எதையுமே மறந்து வாழும் மானிடமே சற்று முன்னால்…… டெல்லியில்நடந்த பெண்ணின் மரணத்தையும் அதனால் எழுந்த போரட்டங்களையும் அதற்குள்ளாகவாகவா மறந்து விட்டீர்கள்?.இப் பெண் மட்டுமல்ல பெண்மைக்கு கழங்கம் விளைவிக்கும் ஒவ்வொரு மூடனுக்கும் அதிகபட்ச தண்டனையை கொடுத்தே ஆக வேண்டும் பெண்மையை பெற்றவர்களே உஙளுக்கே அக்கறை இல்லையெனில் மற்றவர்க்கு எங்கு அக்கறை வரப் போகிறது?சுயநலங்களைப் பாதுகாக்கும் மானுடமே நீ எப்பொழுது விழித்தெழுவாய்? அப் பெண்ணின் மரணத்தை மறைக்க நினைத்த ஒவ்வொருவனும் தண்டிக்கப் படவேண்டும்.போராட நான் தயார்,நான்… நாங்களாக வேண்டும்.பெண்மையே நீங்கள்,உஙளுக்குப் பாதுகாப்பை நீங்களேதான் உருவாக்கவேண்டும் அத்தகைய சூழ்நிலையிலேதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.என் போன்றவர்கள் எங்கள் இயலாமை கண்டு வருந்துகிறோம்,வெட்கப்படுகிறோம்.

 8. //இதை கண்டிக்கவோ, இதுகுறித்து முணுமுணுக்கவோ உரிமையில்லாமல், இன்னும் சொல்லப் போனால் இப்படி கண்டிப்பது தவறு என்று கருதும் மனநிலையில் தான் பெரும்பாலான ஐ.டி துறை ஊழியர்கள் இருக்கிறார்கள்.//
  #மேற்க்காணும் பின்னூட்டங்களே சான்று.

  (அடிமைகளுக்கு தாம் அடிமை என்று புரிய வைப்பதற்கே இவ்வளவு போராடவேண்டி இருக்கிறது)

 9. //“சனிக்கிழமையன்று உடலை கண்டெடுத்ததாக டி.சி.எஸ் நிர்வாகமும் போலீசும் கூறுவது முழுப் பொய். வெள்ளிக்கிழமையே சிப்காட் வளாகத்தில் அந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் மத்தியில் செய்தி பரவியது. ஏன் தேதியை மாற்றிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார் சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர். சிலர் தங்களுக்கு வியாழக்கிழமையே இந்த தகவல் தெரியும் என்று அதிர்ச்சியளித்தார்கள்//

  எதையும் நேரா பர்கம பேச கூடாது வினவு. சனிக்கிழமை அந்த பெண்ணின் உடலை போலீசார் கண்டு எடுத்ததை எனது நண்பர்கள் நேரிலே பார்த்து இருகிறார்கள்,எதையும் தீர விசாரிக்காம பொய் பேச கூடாது

  //இதன் மூலம் நிர்வாகமும், போலீசாரும் இந்த விசயத்தை மூடி மறைக்க முயன்று செய்தி வெளியே கசிந்ததும் வேறு வழியின்றி சனிக்கிழமையன்று உடலை கைப்பற்றியது போல நாடகமாடியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.//

  வருட காலமா வினவு வாசித்து கொண்டு இருக்கிறேன் . வினவும் மற்ற மிடியா போல செய்திகளை திரித்து கூறுவது தான் என்பதை இந்த செய்தியில் புரிந்து கொண்டேன்

  //புராஜக்டில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டால் பணிக்கான அடையாள எண் வழங்கப்பட்டு, அவர்களுக்குரிய செலவுகள் அந்த குறிப்பிட்ட எண்ணின் கீழ் வரவு வைக்கப்படும். அதாவது, பணி எண் வழங்கப்பட்டு இருந்தால்தான் குறிப்பிட்ட ஊழியருக்கு இரவு நேர சிறப்பு போக்குவரத்து முதலான வசதிகளும் செலவுகளும் செய்யப்படும். எனவே, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை இரவுப் பணிகளில் பயன்படுத்த முடியாது. இது நிரந்தர தொழிலாளிகளுக்கு கொடுத்தே ஆக வேண்டிய உரிமைகளை மறுப்பதற்கு ஒப்பந்த தொழிலாளிகள் என்றால் கிடையாது என்று பல நிறுவனங்கள் வைத்திருக்கும் சதித்திட்டத்திற்கு ஒப்பானதாகும்//

  உங்களை போல முதலாளித்துவ பொதுவுடைமைய என்று பேச வரவில்லை. கிடைக்கும் சந்தர்பங்களில் பொதுவுடைமையே சிறந்தது முதலாளித்துவமே என்று கோசம் போடா வரவில்லை நான். பணி எண் வழங்கப்பட்டு இருந்தால்தான் குறிப்பிட்ட ஊழியருக்கு இரவு நேர சிறப்பு போக்குவரத்து முதலான வசதிகளும் செலவுகளும் செய்யப்படும். எனவே, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை இரவுப் பணிகளில் பயன்படுத்த முடியாது. இதை உங்களிடம் யாரு சொன்னது. இது உங்களுக்கு தெரியுமா?

  /ஏற்கனவே பார்த்தபடி, புராஜக்ட் எண் இல்லாத இந்த நிழல் ஊழியர்கள், அந்தப் பணிக்குத் தேவைப்படும் இரவு நேர வேலைகளை முடித்து விட்டு நிறுவனம் ஏற்பாடு செய்யும் கார் வசதி உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாது///

  பொய்யை திரும்ப திரும்ப சொல்ல கூடாது

  //மேலும் உடல் எரிந்த நிலையில் காணப்பட்டது, அழுகிய நிலையில் காணப்பட்டது என்றும் முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.//

  இதை எல்லாம் செய்வது பத்திரிக்கைகள் தானே ,

  இப்படி உங்களது இந்த கட்டுரையில் இருந்து நிறைய எழுதலாம் . ஆனால் இந்த கட்டுரையை அனேக விஷயங்கள் படிக்கவே வெறுப்பை தான் தருகிறது . கண்ணால் கானானதையும் காதால் கேட்காததையும் கூடவே வழக்கம் போல முதலாளித்துவ எதிர்ப்பு எங்கெல்லாம் கிடைக்குதோ அதையும் சேர்த்து எழுதி இருகிறீர்கள் .

  அடிப்படையில் நான் முதலாளித்துவ எதிரி . ஆனால் TCஸ் என்ற கம்பெனி முதலாளித்துவ சொம்பன்ய் என்பதற்காக அதில் வேலை பார்த்த ஒருவர் இறந்த விஷயத்தை இவ்வளவு கேவலமாக விமர்சிக்கும் இந்த கட்டுரைக்கு நான் எதிரியே

  • வினவு கூறுவதில் உள்ள நியாய,அநியாயங்களுக்காக குரல் கொடுக்கும் நண்பரே!அப் பெண்ணின் மரணத்திற்காக,தங்களுக்கு ஒன்றும் தோன்றவிலையோ,இதிலிருந்தே உங்களது நியாய வலிமையை நாங்கள் புரிந்து கொண்டோம். குற்றம் கண்டே நல்லது நடக்க விடாதீர்கள்…போங்கையா போங்க…நீங்களும்….

  • காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை இரவுப் பணிகளில் பயன்படுத்த முடியாது. இதை உங்களிடம் யாரு சொன்னது. இது உங்களுக்கு தெரியுமா? /
   பெஞ்சில் இருப்பவர்களுக்கு கேப் வசதி உண்டா? ஆனால் பெஞ்சில் இருப்பவர்களை வேலை வாங்குகிறார்களே எப்படி? நீர் தான் பொய் சொல்கிறீர்.
   டைம்ஸ் ஆஃப் இந்தியா கூட கேப் கொடுக்கபடவில்லை என்பதை மழுப்பலாக ஒப்புக்கொள்கிறது.1008417 என்ற பென்ஞ்சில் இருப்பவருக்கான எண்னை அந்த பெண் பயன்படுத்தினார் என்று கூறுவதன் மூலம் பெஞ்சில் இருப்பவருக்கான தகுதியில் வைத்க்கொண்டு புரொஜெக்டில் வேலை வாங்கியிருப்பதை தன்னை அறியாமல் ஒத்த்துக்கொள்கிறது.

   /That was reason enough to turn it down,” said a TCS employee who added that the transport administration department has an unofficial target of 30% rejection of cab requests to cut cost. /

   http://timesofindia.indiatimes.com/city/chennai/Techie-was-denied-cab-because-of-technical-error/articleshow/31012604.cms

  • //சனிக்கிழமையன்று உடலை கண்டெடுத்ததாக டி.சி.எஸ் நிர்வாகமும் போலீசும் கூறுவது முழுப் பொய். வெள்ளிக்கிழமையே சிப்காட் வளாகத்தில் அந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் மத்தியில் செய்தி பரவியது. ஏன் தேதியை மாற்றிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார் சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர். சிலர் தங்களுக்கு வியாழக்கிழமையே இந்த தகவல் தெரியும் என்று அதிர்ச்சியளித்தார்கள்//

   “மொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்”னு தினமலர் சொல்ற மாதிரியேத்தான் வினவும் சொல்லுது.

 10. வினவு முதலாளியை சாடுவதில் தான் இந்த கட்டுரையை வடித்துள்ளது தவிர கொலையுண்ட பெண் சார்பாய் எதையும் எழுதவில்லை.மேலும் TCS மற்றும் முதலாளிகளே இதற்க்கு முழு பொறுப்பு என்று எந்த அர்த்தத்தில் சொல்கின்றது எனவும் தெரியவில்லை.சம்பந்தம் இல்லது அப்ரைசல் என்று உளறியது ஏனோ?நிறுவன பணி முறைகள் தெரியாது காதில் விழுந்த ஊக செய்தியை அடிப்படியாக வைத்து,பிரண்டுவதர்க்கு இந்த வாரம் டாட்டா கிடைத்தான் என்பதை செய்தி வடித்த முறை சொல்கின்றது.
  கொலை செய்த கொடூரன்களை அப்பாவி போல் தொழிலாளி என்று மரியாதையாக அழைப்பது ஏன்?
  கேளம்பாக்கம் போய் இது குறித்து விசாரியுங்கள் பெண்களிடம்..நன்றாக சொல்வார்கள் வட மாநில மிருகத்தை எப்படி கொல்ல வேண்டும் என்று புது புது வழிமுறைகளை சொல்லி தருவார்கள்….கொன்றவனை விட்டு விட்டு நிறுவனம் நடத்துபவன் மீது பாய்ந்து பிரண்டாண்டுவது என்பது முட்டாள்தனமான வாதம்.
  தமிழர் மும்பை,குஜராத் டெல்லி போன்ற மாநிலங்களில் கூலிகளாய் பணி புரிந்தாலும் இது போன்ற காலி தனமான கொடூர செயல்களில் ஈடுபடுவது இல்லை…வழிப்பறி,பேங்க் கொள்ளை,கற்பழிப்பு, திருட்டு…இன்று தமிழகத்தில் அதிகரிக்கும் குற்ற செயல்களுக்கு 75% வட மாநிலத்தவரே காரணம்.அரபு,வளைகுடா தேசத்தில் வாழும் நான் கண்டது….இங்கு தமிழ் மலையாளி மீது குற்றம் காண்பது அரிது…ஆனால் பீகார்,வங்க,UP போன்ற வட மாநில தொழிலாளர் துணிந்து திருட்டு,கற்பழிப்பு முயற்சி (பிலிப்பினோ தேசத்து பெண்களை கர்ப்பழிப்பதில் இவர்களே முன்னணி) …இவைகளில் ஈடுபடுகின்றனர்.
  காரணம் அவர்களின் முரட்டாட்ட சுபாவம்,மதிப்பு மரியாதை அற்ற குணம்,படிப்பறிவு இல்லாமை இவைகளே அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட கரணம்.டாட்டா அல்ல.
  வினவு நேர்மையாய் எழுத வேண்டும் என பார்க்கின்றேன்.

 11. It’s good that I’ve got some honest feedback on my blog…. all these sensible person should understand the ground reality behind the scene… whether it’s america or Norway ( considered one of the safest place on earth) or India… Crime exists… This murder is not a cause of immediate action or a murder done for gain, but, there were some prequel to this murder and as per the accused statement, they were punished by this girl some days back and they were waiting for an oppurtunity to take revenge…. this girl, being educated, and coming from a rural background and on top of it, staying alone in chennai, should have taken care of her safety first… as you asked, EVEN IF THE VICTIM HAPPENS TO BE MY SISTER, WIFE OR EVEN MOTHER… I’ll go by the ground reality and not by the crime scenario… She wouldn’t have met the same fate at morning 10AM, isn’t it???

  Women freedom doesn’t mean that ALL women can freely roam as they wish… Women freedom should come from the society… education should be provided and equality should be shown…. Do you guys think this is will be the LAST SUCH INCIDENT in Tamilnadu or India??? I don’t think so… The Company, or Police Department headed by the government CANNOT provide adequate security to ALL Citizens. Banks are getting looted, Men travelling with money were getting killed for gain… This is a time where everybody should think and take care of their own safety… whether it is a female, male or eunuch… My comments may sound sarcastic, but, i confirm once again…. THIS IS THE GROUND REALITY…. jai hind…

 12. if it is done by police or by a politician or some rich person, vinavu will target those persons with their professional. what about now? now vinavu wont target those persons and who knows, even vinavu group will appoint a lawyer to support those guys in court.only two lines about those dogs and remaining things about capitalism.

  if you guys note this article , vinavu didn’t even mention those culprits as suspects. they mentioned as police told like these blah blah…..

  if they want to support their point, they will wrote like anything like everyone in that town or villaage supported our protests. thousands of peoples joined with us. infants also joined in our protests against capitalism.

 13. Agree with some of the comments. It is unfortunate that Uma maheswari died because of this tragic incident. It doesn’t mean that TCS have to hold the entire responsiblity of it. I think the issue remains same. Either the women needs to be careful on the commute and also government need to regulate the Northindian labour stay. It is becoming a regular/repeated occurences of similar incidents. it needs to be stopeed asap.

 14. இன்னமும் இதனை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் அக்கட்டிடத்தினுள் பயந்துகிடக்கிற பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கும் என்றாவது ஒரு நாள் தங்களுக்கும் இந்நிலை வரலாம் என்று அவர்கள் உணர்ந்து போராடத் துணியவேண்டும்…

  இக்கட்டுரையின் கடைசி பத்தியைத்தான் நான் மீண்டும் குறிப்பிடுகிறேன்…

  //உமா மகேஸ்வரியின் இழப்பிலிருந்தாவது ஐடி துறை ஊழியர்கள் தமது பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் சுயமரியாதையை பெறுவதற்கு தொழிற்சங்கம் வேண்டும், அதுவும் முதலாளிகளின் தயவில் இருக்கும் அடிமை தொழிற்சங்கமாக இல்லாமல் புரட்சிகர அமைப்புகளின் துணையோடு இருக்கும் போர்க்குணமிக்க தொழிற்சங்கமாக இருக்க வேண்டும் என்ற உறுதியைப் பெற வேண்டும்.//

 15. இன்னும் இருபது வருடம் கழித்து இந்த மென்பொருள் பொறியாளரான அந்த அப்பாவி பெண்மணியை சீரழித்து கொன்ற “அப்பாவிகளுக்கு” கருணை விடுதலை வழங்க வேண்டும் என்று இங்குள்ள அமைப்புகள் போராடினாலும் ஆச்சரியமில்லை.ஆனால் பாவம் விதி.அந்த குற்றவாளிகள் தமிழர்கள் இல்லை.தமிழர்களா இருந்திருந்தா என்ன குற்றம் செய்தாலும் அப்பாவிகள் என்றே கருதப்பட்டு போராட்டம் நடைபெறும்!

  • பிரகாஷ் நீங்கள் ஏன் வேறு விசயத்துக்கு தாவிகிறீர்கள்?

   அது வேறு.இது வேறு,இரண்டும் வேறு வேறு

 16. திரு கிங்ஸ்லி படிப்பறிவு இல்லாதது,முரட்டான சுபாவம் இதற்கான அடிப்படையான காரணம் என்ன? விளக்க முடியுமா?

 17. பாண்டிச்செரியில் உங்களது அமைப்பு இருக்கிறதா? புதுவையில் தனியார் பள்ளி மற்ரும் கல்லூரிகளின் அராஜகப் போகு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரு தினங்களுக்கு முன் புதுவை மணக்குளவிநாயகர் மருத்துவக் கல்லூரி மாணவி விநோதினி என்ற மாணவி கொல்லப்பட்டிருக்கிறார். இது அந்த கல்லூரியில் நடக்கும் 9 வது கொலையாகும். இதை நிர்வாகம் தற்கொலையாக சித்தரிக்கின்றது அதையே காவல்துறையும் ஊடகங்களும் வாந்தி எடுக்கின்றன. புதுவையில் இரு நாட்களாக மாணவர்கள் கல்லூரி புறக்கணிப்பு செய்துவருகின்றனர். இன்று னணக்குள விநாயகர் கல்லூரி நிர்வாகமானது தங்களது கல்லூரிகளின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு சட்டசபை வளாகம் அருகே விநோதினியின் சாவிற்கு காரணமாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்தப் பிரச்சினையை SFI மட்டுமே கையிலெடுத்து போராடுகிறது. SFI மாணவர்களின் போராட்டத்தை அந்த அமைப்பின் பெருசுகள் நிர்வாகத்துடனான பேரத்திற்கு பயன்படுத்திகொள்ள எத்தனிக்கின்றனர். பாண்டியில் உள்ள உங்கள்து அமைப்புடன் தொடர்பு கொண்டு இதுபற்றி போராட்டம் நடத்தியிருக்கிறார்களா என அறியத் தாருங்கள்.

 18. Adade!… Hope Vinavu has checked the facts and made sure,, that Uma Maheswari doesnt belong to “Thevar” or “Vanniyar” Community. If she belongs to these caste, then vinavu would have put the entire blame on Uma Maheswari Only. God Save us!

 19. கட்டிடத் தொழிலாளர்கள் தானே இந்த கயமையை செய்துள்ளனர்… தொழிலாளர்களுக்கு போராட கற்று கொடுக்கும் நீங்கள் இனிமேல் கொஞ்சம் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்… இது போன்ற பிரச்சனைகள் தோன்றாது…

 20. எனக்கு என்னமோ உண்மை குற்றவாளிகளை தான் கைது செய்து உள்ளார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது?

  ஐடி துறைகாரர்களுக்காவது போராடு குணமாவது? என்ன பேசுகிறீர்கள்… …

 21. இந்த ஹோட்டல் துறையையும் கொஞ்சம் கவனிங்க நண்பர்களே,முறையான நேரம் கிடையது,தூக்கம் கிடையாது ,இஷ்டத்துக்கு சிப்ட் போடறனுங்க..தாஜ் லீலா பாலஸ் அப்றம் எல்லா மூணு ஸ்டார் ஹோட்டல்லயும் இதே கத தான்.அதுலயும் இந்த கிச்சன்ல வேல செய்ரவனுங்களுக்கு மண்டையே லூசகுற அளவுக்கு ப்றேசர் குடுக்ரனுங்க.இத லேபர் டிபர்த்மேண்டும் கேக்றதில்ல..அவனுங்கலூகும் லஞ்சம் குடுத்து ஹோட்டல் பார்ல தண்ணிய கொடுத்து மயக்கிடனுங்க…

 22. The Monster Salary Index India IT Sector Report,2014 says that in both non-supervisory and supervisory categories,women earn 18-20 per cent less than men.Men get promoted to supervisory positions more often than women.Possible explanations for this include women not being preferred for IT jobs that require night shifts and socio-cultural reasons such as men refusing to work under women.”It is surprising to see that the most modern sector of India is not only pre-disposed to a certain gender,but is also paying less to women employees than their male counterparts”-Sanjay Modi,Managing Director,Monster India.

  The above news report is from The Hindu dated 24th July,2014.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க