Wednesday, September 30, 2020
முகப்பு அரசியல் ஊடகம் வாரணாசியில் மோடி – தினமலரின் இந்து ராஷ்ட்ர பாசிச பரவசம் !

வாரணாசியில் மோடி – தினமலரின் இந்து ராஷ்ட்ர பாசிச பரவசம் !

-

விகடன் பத்திரிகை தன்னை நட்டநடு சென்டராக காட்டிக் கொண்டு பாஜகவிற்கு பல்லக்கு தூக்குவது போன்ற ‘சிரமம்’ தினமலருக்கு இல்லை. பாஜக-வின் சின்னமான தாமரை மலரையே, ராமசுப்பையர் ஆரம்பித்த தினமலரும் கொண்டிருப்பது தற்செயலான ஒற்றுமை மட்டுமல்ல, அவசியமான உள்ளச் சேர்க்கையும் கூட.

மோடிக்கும், பாஜகவிற்கும் ஆதரவாக செய்தி போன்ற கருத்துக்கள், கருத்து போன்ற பொய்கள், கட்டுரை போன்ற அபாண்டங்கள், கேலிச் சித்திரத்தின் பெயரில் விளம்பரங்கள், நேர்காணல் வழியாக நியாயப்படுத்தல்கள், அனைத்தையும் வாசகர் வாயில், கடப்பாறை கொண்டு திணிக்கிறது தினமலர். பாபர் மசூதியை இடித்த கடப்பாறையும், பத்திரிகை வாசகர்களை வாட்டும் இந்த கடப்பாறையும் ஒரே குருகுலத்தில் வார்க்கப்பட்டவையே!

வாரணாசியில் காவி மயம் என்று பரவசப்படும் தினமலர்
வாரணாசியில் காவி மயம் என்று பரவசப்படும் தினமலர்

இந்த புனைவு புருடாக்களை தினமலரின் வாசகர் வட்டமே பின்னூட்டத்தில் காறித் துப்பினாலும் கூட அவாளுக்கு வெட்கமோ மானமோ இருப்பதில்லை. ராஷ்ட்ர தர்மத்தை நிலை நாட்டும் போது ராஜ குருக்கள் சூடு சொரணையை பிடிவாதமாக தூக்கி ஏறிந்து விடுவார்கள். தற்போது தினமலரின் காவி வெறி பாசிச ஊளையாக பரிணமித்திருக்கிறது. இது ஏதோ தினமலர் மட்டும் விசேடமாக மாறிவிட்டது என்றல்ல, ஆர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டு சோ ராமசாமி வரை அநேக ஊடகங்களும் அப்படித்தான் முழு அம்மணமாக குத்தாட்டம் போட்டு வருகின்றன. இந்த பாசிச ஊளையின் சவுண்ட் மற்றும் அமவுண்ட் சர்வீஸ் சப்ளை சாட்சாத் மோடி&கோ தான்.

ஒரு கட்சியை ஒரு பத்திரிகை ஆதரிக்கிறது என்று இதை குறுக்கி புரிந்து கொள்வது தவறு. முதலாளிகளுக்கும், பார்ப்பனியத்திற்கும் ஒரு சேர பணியாற்றத் துடிக்கும் ஒரு கயவனையும், கட்சியையும் இவர்கள் எந்த நிலை சென்றும் ஆளாக்கத் துடிக்கிறார்கள் என்பதே முக்கியமான விசயம்.

வாரணாசியில் மோடி மனுத் தாக்கல் செய்திருக்கும் நிகழ்வை இன்றைய தினமலர் 25-04-2014 வருணித்திருக்கும் ‘அழகை’ பாருங்கள்! நூற்றாண்டு கடந்தும் பார்ப்பனியத்தின் கொலைவெறி நாக்குகளை தரிசியுங்கள்!

தினமலரின் காவி கவரேஜிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கே வெளியிடுகிறோம்.

பிரதமர் வேட்பாளராக, கடந்த ஆண்டு ஜூலை மாதம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். அந்த நாளில் இருந்து இன்று வரை, ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தேர்தல் பிரசாரம் செய்து வரும் மோடி, நேற்று, வாரணாசியில் உணர்ச்சி பெருக்காக காட்சியளித்தார்.

குஜராத்திலிருந்து விமானத்தில், வாரணாசி வந்த மோடி, இந்துக்களின் புனித நகரமான வாரணாசியின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

 ‘வாழ்நாளில் ஒரு நாளாவது காசி சென்று, அங்கிருக்கும் காசி விஸ்வநாதரை வழிபட வேண்டும்; கங்கையில் மூழ்கி பாவங்களை களைய வேண்டும்’ என்பது, இந்துக்களின் எதிர்பார்ப்பு. அத்தகைய புனித காசி நகருக்கு, நாட்டின் பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த பா.ஜ.,வினருடன், உள்ளூர் மக்களும் உற்சாகமாக கலந்து கொண்டதால், குறுகிய வாரணாசி நகர வீதிகள் காவி நிறத்தில் காட்சியளித்தன. ஆன்மிக மாநாடு நடைபெறும் இடத்தில் காணப்படும், இறை வணக்கம், கோஷ்டி கானம், வேத மந்திரங்கள் ஓதுதல் போன்றவற்றுடன், அணி அணியாக, கலைஞர்களும் வந்து, தங்கள் திறனை காண்பித்தவாறு மோடியின் ஊர்வலத்தில் வந்தனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், 2 கி.மீ., தூரம் திறந்த வேனில், பா.ஜ., மூத்த தலைவர்களுடன் மோடி, வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றார். செல்லும் வழியில் இருந்த, தேசத் தலைவர்கள் (இவர்கள் அனைவரும் ஜனசங்கம் எனும் பாஜகவின் முந்தைய அவதாரத் தலைவர்கள் மற்றும் சாமியார்கள் – வினவு) பலரின் சிலைகளுக்கு மாலையணிவித்து, உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சியளித்தார்.

வேட்பு மனு தாக்கலுக்கு முன், கூடியிருந்தவர்கள் மத்தியில் மோடி பேசியதாவது: வாரணாசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என, பா.ஜ., மேலிடம் தான் என்னை பணித்தது என, இது நாள் வரை நான் நினைத்திருந்தேன். ஆனால், என்னை இந்த தொகுதிக்கு, இந்த புனித நகருக்கு அழைத்து வந்தது, இங்கே பாயும் கங்கா மாதா தான். அவள் தான் என்னை இந்த புண்ணிய நகருக்கு அழைத்து வந்துள்ளாள். ஆண்டவன் புண்ணியத்தில், நான் இந்த நாட்டின் பிரதமர் ஆனால், இதற்கு நன்றிக் கடனாக, புனித கங்கை நதியையும், பாரம்பரிய வாரணாசி நகரையும் போற்றி பாதுகாப்பேன்; முன்னேற்ற என்னென்ன வேண்டுமோ அவற்றை மேற்கொள்வேன். எனக்கு இன்று ஒரு புது உணர்வு ஏற்படுகிறது. என் தாயின் மடியில் மீண்டும் வந்து சேர்ந்தது போல், ஓர் உணர்வு என்னை ஆழ்த்துகிறது. அதற்கு காரணம், கங்கை மாதாவும், இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானும் தான். குஜராத்தில் நான் பிறந்த வாத்நகருக்கும், வாரணாசிக்கும் நெருக்கிய தொடர்பு உள்ளது. அங்கும் சிவபெருமான் தான் வீற்றிருக்கிறார்; இங்கும் சிவபெருமான் தான் வீற்றிருக்கிறார். இரண்டுமே புகழ்வாய்ந்த சிவஸ்தலங்கள். ‘காசி’ என்ற இந்த பாரம்பரிய நகரை, இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக ஆக்குவேன். அதற்கான பலத்தை ஆண்டவன் எனக்கு அளிக்க வேண்டும்.”

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இங்கே யாராவது பைத்தியகாரத்தனமாக நினைத்துக் கொண்டிருந்தீர்களென்றால் அந்த நினைப்பை மண் மூடி சமாதியாக்கிவிடுங்கள். காங்கிரசு ஆண்டாலும், உச்சநீதிமன்றம் தில்லை கோவில் தீர்ப்பு வழங்கினாலும் கூட இது இந்து நாடாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் பாஜக மட்டும் அதை ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக பறைசாற்றுகிறது.

சுடுகாட்டை மறைக்கும் வளர்ச்சி காமராக்கள்
சுடுகாட்டை மறைக்கும் வளர்ச்சி காமராக்கள்

காசிக்கு சென்று, கங்கையில் குளித்து, பாவம் தொலைத்து, புண்ணியம் தேடும் இந்துக்களின் புண்ணிய பூமியில் மோடியின் உணர்ச்சி பெருக்கை அப்படியே உள்ளது உள்ளபடி எழுதியிருக்கிறது தினமலர். பாம்பின் கால் பாம்பறியும், பார்ப்பனியத்தின் பரவசத்தை தினமலர்தான் உணரும். இதிலிருந்தாவது மோடி காசியை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதையம் அவர் இந்திய மக்களில் மற்றவர்களை ஒதுக்கிவிட்டு ‘இந்து’க்களை மட்டும் ரத்த பந்தமாக கருதுகிறார் என்பதும் வெளிப்படையானது. ஆனால் காசிக்கு, சூத்திர மற்றும் பஞ்சம இந்துக்களும், பழங்குடி மக்களும் போவதில்லை, கங்கை புனிதத்தை அறிந்ததில்லை என்பதால் காசி வாழ் புண்ணிய பூமியின் இந்துக்கள் யார் என்றால் பார்ப்பன-ஷத்திரிய-வைசிய வருண பிரிவுகள் மட்டும்தான். அந்த வகையில் மோடியும் அவரது கட்சியும் பார்ப்பன ‘மேல்’சாதிகளைத்தான் தமது கலாச்சாரம் மற்றும் வர்க்க அடிப்படைகளாக கொண்டிருக்கிறார்கள். அதனால் மோடி வெற்றி பெற்றால் அவர் சிறுபான்மை ‘இந்துக்களின்’ பிரதமர்தான். பெரும்பான்மை இந்திய மக்களுக்கு அல்ல.

அவர் பிறந்த ஊரிலும் சிவபெருமான், போட்டியிடும் ஊரிலும் சிவபெருமான் என்ற இந்து ஞான மரபின் ஆன்மீக உணர்ச்சி பரவசத்தில் திளைக்கும் மோடியின் மனது அல்லாவையும், கர்த்தரையும், புத்தரையும், குரு நானக்கையும் தொழும் இதர சிறுபான்மை மக்களை எப்படி கருதும்? ஆதாரம் வேண்டுவோர் குஜராத் 2002 முசுலீம் மக்கள் இனப்படுகொலை கதைகளை உற்று நோக்கலாம். அல்லது அசீமானந்தாவின் தொண்டு பணிகளில் மூலம் சிறுபான்மை மக்களை குண்டுகள் வைத்து அழிக்க முயன்ற காவி-ய கதைகளையும் வாசிக்கலாம்.

பாஜகவின் தெருப் பேச்சாளர்கள் போல மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று மோடி பேசவில்லை. மாறாக ‘நேர்மறையில்’ காசி, புனித பூமி, சிவபெருமான், ஆன்மீகத் தலைநகர் என்று அடுக்குகிறார். இந்த நேர்மறைகளை ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மோடி அரசு கொண்டு வர இருக்கும் புதிய தடா,பொடா சட்டங்கள் கவனித்துக் கொள்ளும்.

இத்தகைய பார்ப்பனிய படிமங்களில் பரம்பொருளை தரிசித்த பரவசம் கொள்ளும் மோடி, மற்றொரு புறம் சிறுபான்மை மக்களின் அடையாளங்களையோ இல்லை கம்யூனிஸ்டுகளின் திட்டங்களையோ எவ்வளவு அறுவெறுப்புடனும், ஆத்திரத்துடனும் நோக்குவார் என்பது இயல்பான ஒன்று.

இந்த காவி மயம் மக்களுக்கு பய பயம்
இந்த காவி மயம் மக்களுக்கு பய பயம்

வாரணாசி முழுக்க காவி மயம் என்று புல்லரிக்கிறது தினமலர். இந்த காவி மயம் எத்தனை மக்களை கொன்று அழித்திருக்கிறது என்பதை அறிந்த மக்களும் கூட இந்த காவி மயத்தை பயங்கரவாத மயம் என்று அச்சத்தோடு பார்க்கிறார்கள். மோடியின் மனுத்தாக்கல் ஆன்மீக மயமாகவும் இருந்தது என்று தினமலர் ‘புனிதத்தை’ தோண்டிக் கொண்டு வருகிறது. இந்த பார்ப்பனிய ஆன்மீக மயம் எத்தனை சூத்திர-பஞ்சம மக்களின் தலையெழுத்தை அடிமைகளின் இலக்கணமாக மிரட்டுகிறது என்பதையும் வரலாறு பதிந்தே வந்திருக்கிறது.

மோடியின் அரசியல் வெற்றியை அமெரிக்க தலைமையிலான பன்னாட்டு முதலாளிகளும், அம்பானி-அதானி முதலான தரகு முதலாளிகளும், அதிகார வர்க்கமும், ஊடகங்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதோடு தங்களது அஜெண்டாவை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ்-ஸும் காத்திருக்கிறது.

இப்படி இரு எதிரிகளும் ஒன்றாக சேர்ந்து இந்திய மக்களை ஆட்டிப் படைக்க திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

வாரணாசி தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின் போது மோடியிடமும், தினமலரிடமும் வெளிப்பட்டிருக்கும் இந்த ‘ஆன்மீக’ உணர்ச்சியை கட்டுடைத்துப் பார்த்தால் பார்ப்பனிய பயங்கரவாதத்தை பார்க்கலாம்.

பார்த்தவர்கள் பழிவாங்குவோம். பார்க்காதவர்களுக்கு புரிய வைப்போம்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. Dear வினவு,

  //பார்ப்பன ‘**’சாதிகளைத்தான்//

  இங்கே சாதிக்கு ‘மேல்’ என்ற அடைமொழி தவறானது. தேவையற்றது. ‘ஆதிக்க’ என்ற அடைமொழியை பயன்படுத்தலாம்.

  பலமுறை எடுத்துக் காட்டிவிட்டேன். எப்பொழுது புரிந்து கொள்வீர்கள்?

  நீங்களே இப்படியிருந்தால் நாம் எப்பொழுது தேறுவது? சமத்துவம் பெறுவது.

  • Dear Vinavu,

   நாமே ஒரு கூட்டத்தை ‘மேலா’க்கி விட்டு அதன் மூலம் மற்றொரு கூட்டத்தை ‘கீழா’க்கி விட்டு எதை சாதிக்கப் போகிறோம்.

   //பார்ப்பனிய ஆன்மீக மயம் எத்தனை சூத்திர-பஞ்சம மக்களின் தலையெழுத்தை அடிமைகளின் இலக்கணமாக மிரட்டுகிறது என்பதையும் வரலாறு பதிந்தே வந்திருக்கிறது.// என்று எழுதிக் கொணடிருக்க வேண்டியதுதான்.

   I hope you understand and this would be the last time and you would be cured of this nonsense.

 2. எது எப்படியோ…
  தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் காவி அம்போ!
  எத்தனை தொகுதிகளில்( காங்கிரசு பங்காளியோடு)
  தேர்தல் காப்பு பணம் இழக்கும்?

 3. இந்த கருமம் தினமலத்தை அதிகமாக வாங்கி படிப்பது.
  ….யார்?
  எல்லாம் பள்ளிவாசல் “பாய்” தான்!

 4. தினம் உங்க பி.பி எகிற செய்யும் தினமலரின் ரசிகானகவே மாறிவிட்டேன்

  • எப்படா பிரதமராகி மொத்த நாட்டையும் விற்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய கைக்கூலி மோடிக்கு மாமா வேலை பார்க்கும் மோடியின் காவிக்கோவணமான தினமலத்தை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா ராஜ்? எனில் நீங்கள் இந்தியக்குடிமகன் தானா?

 5. அதான?மஞ்ச பத்திரிகை நக்கீரனை நீங்க புகழும் அளவுக்கு வேறு எந்த பத்திரிக்கைக்கும் தகுதியே இல்லை

 6. Even before becoming PM,what is in store for all Indians have been shown by the rally at Varanasi for filing Modi”s nomination.Not only such huge rally but also the telecast of the rally in many channels on the day of election in parts of UP is against the rules of Election Commission.But who cares?If only the same violation is committed by any non-BJP party,Dinamalar along with Dinamani will preach ethics.

 7. நீங்கள் ஒற்றை சார்புடனே எல்லாவற்றையும் பாரெக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன் ஒட்டு மொத்த இசுலாமியர்களையும் கொல்ல வேண்டும் என்று எந்த இந்து மனிதனும் நினைப்பதில்லை

  • ஹிந்துத்வா வேறு.அது உயர்ஜாதி ஹிந்துக்களின் கூடாரம் .சராசரி மற்ற ஹிந்து மக்கள் என்னும் பசுக்கள் வேறு .பன்றிகள் பசுக்கள் போல் நடிப்பதை நிறுத்துங்க .

 8. //பார்ப்பன-ஷத்திரிய-வைசிய வருண பிரிவுகள் மட்டும்தான்//

  பலம் வாய்ந்த கூட்டணி

  இதை தோலுரித்து எழுதியதற்கு நன்றி . பொதுவாக ஒடுக்கப்பட்டவர்கள் நிலைக்கு பார்ப்னர்கள் மட்டும்தான் காரணம் , மற்றவர்கள் அப்பாவிகள் என்னும் மாயத்தோற்றம் முன்வைக்க்கபபடுகிறது.

  வாடா கற்பழிக்கலாம் என்று ஒருவன் சொன்னானாம் , உடன் இருந்த் நண்பர்களும் சரி என்றார்களாம் . இப்படி கற்பழித்தவர்களில் , முதலில் அழைத்தவன் மட்டும் கெட்டவாணாம் . மற்றவர்கள் நல்லவர்களாம் .

  • பார்ப்பனர்கள் தான் மூலகாரணம், இந்த உண்மையை கூறுவதாலேயே பிற ஆதிக்கசாதிகள் ஒடுக்குமுறையின் பங்காளிகள் இல்லை என்றாகிவிடாது. எனினும் பார்ப்பனர்கள் என்றுமே அவர்களை சமமாக நடத்தமாட்டார்கள், எவ்வளவு இழிந்த பார்ப்பன பாதந்தாங்கியாக இருந்தாலும் அவர்கள் சூத்திர அடிமைகள் தான்.

   • ஒரு சமூக கட்டமைப்பு தொடர்வது யார் கையில் இருந்தது, இருக்கிறது..?!

    1) நிலவுடமை, உற்பத்தி சக்திகள் மற்றும் வாணிபத்தின் மீதான மேலாதிக்கம், சமூக கலாசார தளங்களில் செல்வாக்கு இவையனைத்தையும் பெற்ற, வலிமை வாய்ந்த சமூகக் குழுக்களின் கைகளிலா அல்லது

    2) ஆலயங்கள், அக்கிரகாரங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டு, மேற்படி சமூகக் குழுக்களின் ஆன்மிக லவுகீக அறிவுசார் தேவைகளுக்கு ஊழியம் செய்து ஊதியம் பெற்று வந்த புரோகித வர்க்கத்தின் கைகளிலா..?!

    சிவப்புச் சட்டை போட்டால் முதல் வகை சக்திகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. அது அவ்வளவு உவப்பான, எளிதான வேலையல்ல, ஆகவே கருப்புச் சட்டை போட்டோ போடாமலோ இரண்டாவது பிரிவை முதன்மைப்படுத்தி எதிர்த்து இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு புரட்சியாளாராக உலவலாம்..

    • Ambi,

     உமது வகைப்படுத்தல் மோசடியானது. பூசாரி வர்க்கம்தான் மனிதனில் தோன்றிய முதல் ஆதிக்க வர்க்கம். உலக மக்களின் தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக இந்த வர்க்கத்தின் விசப்பற்கள் பலவும் பிடுங்கப்பட்டுவிட்டாலும் அது இன்னும் இரண்டு விசப்பற்களை வைத்துத்தான் இருக்கிறது.

     கருப்புச்சட்டை தோன்றிய காலத்தில் கூட நம்மிடையே இருந்த பூசாரி வர்க்கம் எல்லா விதத்திலும் அதிக அதிகாரம் படைத்ததாகவே இருந்தது. (எ.கா. ‘பூசாரியாள்’ கபேக்கள் மற்றும் பொது உணவகங்களில் இருந்த ‘பூசாரியாள்’ மட்டும் என்ற போர்டுகள்.). இன்றும் பெருமளவுக்கு இதே நிலையே. நமது நாட்டில் சிவப்புச் சட்டை போட்டவர்களும் முதலில் கருப்பு சட்டை போட்டிருந்தால் விளைவுகள் மேலும் விரும்பத்தக்க வகையில் இருந்திருக்கும். ஆனால் பூநூலை மறைப்பதற்கே சிவப்புச் சட்டைப் போட்டவர்கள் பலர். (பூநூலை மறைக்க கருப்பு சட்டை போடமுடியுமா என்ன?)

     // மேற்படி சமூகக் குழுக்களின் ஆன்மிக லவுகீக அறிவுசார் தேவைகளுக்கு ஊழியம் செய்து ஊதியம் பெற்று வந்த புரோகித வர்க்க[ம்]//

     நமது சமூகத்தின் இழி நிலைக்கான பூசாரி வர்க்கத்தின் கடந்த கால மற்றும் தற்கால பங்கை மறைப்பதற்கு இவ்வாறெல்லாம் எழுதுவதற்கு நீர் வெட்கப்படமாட்டீர் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. This is THE priestly class.

     • //கருப்புச்சட்டை தோன்றிய காலத்தில் கூட நம்மிடையே இருந்த பூசாரி வர்க்கம் எல்லா விதத்திலும் அதிக அதிகாரம் படைத்ததாகவே இருந்தது. (எ.கா. ‘பூசாரியாள்’ கபேக்கள் மற்றும் பொது உணவகங்களில் இருந்த ‘பூசாரியாள்’ மட்டும் என்ற போர்டுகள்.).//

      ஆங்கிலேய ஆட்சியில் அதிகார மையங்களிலும், ஆட்சிக்கு எதிரான காங்கிரசிலும் பார்ப்பனர்கள் அதிகம் இல்லாதிருந்திருந்தால் கருப்புச்சட்டை தோன்றியிருக்காது.. எப்போது புரோகித வர்க்கம் ஆட்சியதிகாரத்தில், அரசியலதிகாரத்தில் தங்களுக்கு போட்டியாக வந்ததோ அப்போதிருந்துதான் கனவான்களுக்கு பார்ப்பனர்களை பிடிக்காமல் போனது..

      //நமது நாட்டில் சிவப்புச் சட்டை போட்டவர்களும் முதலில் கருப்பு சட்டை போட்டிருந்தால் விளைவுகள் மேலும் விரும்பத்தக்க வகையில் இருந்திருக்கும். //

      அன்றைய ஆளும் வர்க்க – புரோகித வர்க்க அதிகாரச் சண்டையில், உழைக்கும் வர்க்கத்துக்கென போராடிக்கொண்டிருந்த ஒரே கட்சி கம்யூனிஸ்ட்டுகள்தான்.. அவர்களும் திராவிட இனவாத ஜோதியில் கலந்திருக்கவேண்டும் என்று கூறுகிறீர்கள்..

      //நமது சமூகத்தின் இழி நிலைக்கான பூசாரி வர்க்கத்தின் கடந்த கால மற்றும் தற்கால பங்கை மறைப்பதற்கு இவ்வாறெல்லாம் எழுதுவதற்கு நீர் வெட்கப்படமாட்டீர் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.//

      யாருடைய பங்கை யார் மறைக்கிறார்கள்.. நீரே உம்மையெல்லாம் இப்போது கம்யூனிஸ்ட்டு என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படாத போது நான் மட்டும் ஏன் வெட்கப்படப் போகிறேன்..

      • //ஆங்கிலேய ஆட்சியில் *** பார்ப்பனர்கள் அதிகம் இல்லாதிருந்திருந்தால் கருப்புச்சட்டை தோன்றியிருக்காது//

       காசியின் ஒரு மடத்தில் பெரியார் அவர்கள் இனவாத பார்ப்பனர்களால் அவமதிக்கப்பட்டிராமல் இருந்திருந்தால் கருப்புச்சட்டை தோன்றியிருக்காமல் கூட போயிருக்கலாம்.

       // எப்போது புரோகித வர்க்கம் *** தங்களுக்கு போட்டியாக வந்ததோ அப்போதிருந்துதான் கனவான்களுக்கு பார்ப்பனர்களை பிடிக்காமல் போனது.//

       Let me repeat. பூசாரி வர்க்கம்தான் மனிதனில் தோன்றிய முதல் ஆதிக்க வர்க்கம். தமிழகத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக முதலில் குரல் எழப்பியது கருப்புச்சட்டையர்கள் அல்ல. சித்தர்கள் சிறந்த எ.கா.

       //திராவிட இனவாத ஜோதி//

       கருப்புச்சட்டையர்களின் வாதம் இனவாதமல்ல. ‘பூசாரியாள்’ கபேக்கள், பொது உணவகங்களில் இருந்த ‘பூசாரியாள்’ மட்டும் என்ற போர்டு போட்ட தனிப்பகுதிகள் கல்விச்சாலைகள் மற்றும் பிற இடங்களில் ஆரியபூசாரியாள்களுக்கென்று தனிப்பந்திகள் போன்றவைகள்தான் இனவாதத்தின் கோரமான அடையாளங்கள். கருப்புச்சட்டையர்கள் போராடியிருக்கவிட்டால் பூநூலர்கள் தங்களாகவே அந்த போர்டுகளையும் தனிப்பந்திகளையும் அகற்றியிருப்பார்களா?

       //நீரே உம்மையெல்லாம் இப்போது கம்யூனிஸ்ட்டு என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படாத போது நான் மட்டும் ஏன் வெட்கப்படப் போகிறேன்..//

       பதில் கூறவேண்டும் என்பதற்காக இங்கே ஏதோ உளறியிருக்கிறீர். கம்யூனிஸ்ட்டு என்று சொல்லிக்கொள்ள நான் ஏன் வெட்கப்படவேண்டும்?

 9. இவனுங்க வரதுக்கு முன்னாடியே இவ்வளவு ஆட்டம் போட்ரானுகளே..தப்பி தவறி வந்தானுங்க..இந்தியாவோட கதி அதோ கதிதான்.

 10. //ஆனால் காசிக்கு, சூத்திர மற்றும் பஞ்சம இந்துக்களும், பழங்குடி மக்களும் போவதில்லை,//

  ஆதி சங்கரர் தன் அத்வைத ஸ்தாபனத்தை இங்கிருந்தே ஆரம்பிக்கிறார் என்று சொல்லலாம். அன்றைய சமூக அடுக்கில் தாழ்ந்திருந்த சண்டாளனிலும் பிரம்மத்தைக் காண வேண்டும் என்ற நடைமுறை அத்வைதம் சங்கரரின் மெய்யுணர்வில் உருவானது காசி தலத்தில் தான்! அந்த உபதேசத்தைத் தனக்கு நல்கிய சண்டாளனையே குருவாகப் போற்றி அவர் “மனிஷா பஞ்சகம்” என்ற துதியை அருளியதும் காசியில் தான்!

  பார்க்க: மனிஷா பஞ்சகத்தின் தமிழ் வடிவம் : சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது

  “காசியில் இறப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர் பிராம்மணனாயினும் சரி, வேசியாயினும் சரி பரமசிவனாக ஆகிறார்கள்.” என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ”காசி தெய்விக உணர்வுமயமான இடம். இங்கு உயிர் விடுபவர் யாரானாலும் பக்தன், பக்தன் அல்லாதவன், வேற்று மதத்தினன், புழு, பூச்சி யாராக இருந்தாலும் அவர்களுக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும்.” என்று கூறியிருக்கிறார் அன்னை ஸ்ரீ சாரதாதேவி.

  ’தீட்டு’ என்று கருதி விலக்கப்பட்டவற்றிற்கு பொருள் இல்லாமல் போவதும் காசியில்தான்.

 11. மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. மோடி பிரதமரானால் இந்திய தேசம் முழுவதும் மதுவிலக்கை நடைமுறை படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம். ஆகவே,மோடி பிரதமரானால் நாடு முழுவதும் மது ஒழிகப்பட்டு தேசத்தின் ஒழுக்கம் காக்கபடும். மற்றபடி காவிமயம் என்பதெல்லாம் வெறும் அரசியல் காழ்புணர்ச்சியால் கூறப்படும் அவதூறுகளே..

  • மோடி பிரதமரானால் மது ஒழிக்கப்படும் ஆனால் நாடு விற்கப்படும்.

   • மோ”டீ” பிரதமர் ஆனால் மதுவை அல்ல பான்பராக்கையே கூட ஒழிக்க முடியாது.புகையிலை முதலாளிகளின் பணப்பெட்டிக்குள் அவரும் அடக்கம்.வாரணாசி இந்து சாமியார்களுக்கு விலையில்லா கஞ்ஜா வழங்கப்படும்.

   • என்னங்க நீங்களும் புரியாம பேசறீங்க. 2 நாட்களுக்கு முன்னர் குஜராத்தில் 12.47 கோடிக்கு மதுபானங்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்திருக்கிறது. இந்த செய்தி தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்தது.

  • In Indian constitution, Whether this matter “மதுவிலக்கை” is coming under state list or center list?

   Who have the responsibility to implement this matter? State or center?. 🙂

   //இந்திய தேசம் முழுவதும் மதுவிலக்கை நடைமுறை படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்

 12. What you wrote is correct. There is only one solution.
  Tamilnadu should become an independent country.
  Shariyat law only should be followed. That is the real equality.

  • தமிழ் நாடு தனி நாடா?
   அட நீங்க வேற….
   குவார்ட்டர் கொடுத்தால் இலங்கையுடன் என்ன
   சீனாவுடன் சேர்ந்துவிடும் சோர்ந்துபோன தமிழினம்

 13. ஒரு திருத்தம் ரெபேக்கா அவர்களே,

  மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது என்றால் மதுவிலக்கை மோடி கொண்டுவந்ததை போல ஒரு தோற்றம் வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தற்போதைய மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் இணைந்திருந்த ஒன்றிணைந்த பம்பாய் மாகாணத்தில் 1948, 1950 வருடங்களில் மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்பட்டு பின் விளக்கப்பட்டது. பின் 1958 இல் மீண்டும் அமல்படுத்தப்பட்டு 1960 இல் குஜராத் மாநிலம் உருவானபோது மீண்டும் மதுவிலக்கு குஜராத்தில் அமலுக்கு வந்தது. ஆகவே குஜராத்தில் மதுவிலக்கு இருப்பதில் மோடியே காரணம் என்பது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம்.

  • ஒருவர் ஆட்சிக்கு வரும்போது மதுவிலக்கு இருந்தது அதை அவர் மெயின்டெயின் செய்தார் இதில் என்ன சாதனை என்கிறீர்கள்.அப்போ தமிழகத்தில் கூடத்தான் கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது மதுவிலக்கு இருந்தது.அதை அப்படியே தொடர்ந்திருக்க வேண்டியதுதானே?ஏன் மதுவிலக்கை விலக்கி கொண்டார்?ஏற்கெனவே இருப்பது பெரிதல்ல.அதை தொடர்ந்து கட்டி காப்பதுதான் முக்கியம்.அதை செய்ததால்தான் மோடி புகழபடுகிறார்

   • அப்போது காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை இது வரை மெயின்டெயின் செய்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிலதா, கருணாநிதி இவர்களின் புகழை நீங்கள் பாடுங்களேன். 🙂

    மதுவிலக்கை அமல் செய்ய வேண்டும் என்று கூறிய காந்தி பிறந்த மண் என்பதால் குஜராத்தில் மதுவிலக்கை எல்லா அரசுகளும் தொடர்ந்தே செய்தன. இதில் காங்கிரஸ் அரசுகளும் அடங்கும்.
    புதிதாக மோடி என்ன செய்தார் என்று பாருங்கள்.
    குஜராத்தின் வளர்ச்சி மோடியினால் அல்ல, அங்குள்ள குஜராத்திகளின் வியாபார வெற்றி தான். கடந்த கால வரலாற்றை பார்த்தீர்களானால் குஜராத் ஏற்கனவே செழிப்பான மாநிலமாக தான் இருந்தது என்பது உங்களுக்கு தெரிய வரும்.

 14. ரெபெக்க மேரி…..பேரு ரொம்ப புதுசா இருக்கே…இப்படி யாரும் பெயர் வைக்க மாட்டார்கள்…இது பூணுல் மேரி யாக இருக்கும்….அதுதான் மோடியை பற்றி அதுவும் மது விலக்கு என்ற தினமலம் வாந்தியை தின்று இங்கே வந்து வாந்தி பண்ணுகின்றது….மோடிக்கு ஜால்ரா அடித்தது போதும்…பூணுல் மேரி!

 15. அன்புள்ள ரெபேக்கா அவர்களே

  Fair and Lovely விளம்பரங்களை பார்த்து அதுதான் நம்முடையே தன்னம்பிக்கை என்று இந்த விளம்பரங்கள் நம்மை எப்படி ஏமாற்றுகின்றனவோ அதுபோல் மோடியை வளர்ச்சியின் நாயகன் என்று எல்லா ஊடகங்களிலும் விளம்பரம் படுத்துகிறார்களே.

  ஏண்டா தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கேள்வி கேட்க முடியுமா இல்லை மதுவை ஒழிக்க இந்த திட்டத்தை வைத்திருக்கிறேன். இதை நான் நிறைவேற்றவில்லை என்றால் பதவியிலிருந்து தூக்குங்கள் என்றுதான் கூறுவாரா. குஜராத்தில் மதுவை கூட அவர் ஓழிக்கவில்லை என்பதை மேலே குறிப்பிட்டு காட்டியுள்ளனர். இதை நீங்களே யோசித்து பாருங்கள்.

  இதற்கு மேலும் அவர் கூறுவதை நீங்கள் நம்பினால் நமக்குத்தான் கேடு வரும். அதற்கு உதாரணம் தான் வாரணாசியில் மோடியின் பேச்சு.

 16. ஐயா அதிமேதாவி kingsly …

  இங்கு யாருக்கும் பயந்து என்னுடைய அடையாளத்தை மறைக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை. என்னுடைய பெயர் ரெபேக்கா தான். என்னுடைய சிறு வயதில் என் பெற்றோர்கள் protestant பிரிவில் இருந்து கத்தோலிக்க பிரிவுக்கு மாறியதால் மேரி என்கிற பின்னொட்டை சேர்த்தார்கள். என் தந்தைக்கே தவறாக தெரியவில்லை. உங்களுக்கு ஏன்.

  அப்புறம் இன்னொன்று மோடியை ஆதரிக்க ஒருவர் பிராமண பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அது தனி நபர் சார்ந்த விருப்பம். விட்டால் ஜோ.டி.க்ருஸ் அவர்களுக்கு கூட பூணூல் போட்டு விடுவீர்கள் போல.

  • // விட்டால் ஜோ.டி.க்ருஸ் அவர்களுக்கு கூட பூணூல் போட்டு விடுவீர்கள் போல. //

   போட்டு விட்டார்கள்.. இப்படியே எல்லோருக்கும் போட்டுவிட்டால் சாதி, மத வேறுபாடுகள் மறைந்து நாடு நலம் பெறும்..

   • சா தீய படிமானங்களை உருவாக்கி அதனை கட்டி காத்துவரும் மாஜ்ஜா தடவிய பூணூல்கள் எப்படி சாதிமத வேறுபாடுகள் மறைய காரணமாக இருக்கமுடியும்? சாதி மத வேறுபாடுகள் நிலைத்து நின்றால் தான் பூணூல் பாக்கியம்நிலைத்து நிற்கும்.

   • மத வேறுபாடுகள் மாறலாம்.சாதி வேறுபாடுகள் மாறாது.அதன் அடிப்படையில்தானே கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப் படுகிறார்கள்.

   • அம்பி அப்படியே ஆகட்டும்…
    உங்களோட சோனியா மகனுக்கும் ஒரு பூணூல்…
    பிரியங்கா புருசன் கிருத்து(ரு)வ ராபர்ட் வடோராவுக்கு ஒரு பூணூல்…
    சிதம்பரம் நடராசர் கோவிலில் ஆசி வாங்கிய அண்ணன் திருமாவுக்கு ஒரு பூணூல்…
    மிச்சம் மீதி இருந்தால் பத்திரப் படுத்தி… ஒப்பாரும் மிக்காரும் அற்ற..உலக தமிழர்களின் ஒரே அட்ரசான மு.க வுக்கும் போடலாம்

  • ஈன்டெரெச்டிங்…… ஆமா நீங்க ப்ரொடெச்டன்ட் பிரிவுல இருந்து கத்தோலிக்க பிரிவுக்கு மாறுனப்பொ திரும்ப ஒங்களுக்கு பாப்டிஸம் கொடுத்தஙளா? சும்மா தெரிங்ஷுகிறத்துக்குத்தான் கேட்டேன்.

   • பரலோக சாம்ராஜ்ஜியத்தில் ஆவியானவரை நேசிப்பவர்களுக்கு
    “ஜீவ அப்பம்”(வேறும் ரொட்டி) மட்டும்…
    ஒயினை,நமது பாவத்தைப் போக்க பாதிரியே அருந்திவிடுவார்!

 17. பன்னாட்டு பகவான்களை பூசித்துக் கொண்டிருந்த மோடி கடைசி கடைசியாக காசியில் போய் சிவன் தான் தன்னை நியமித்திருக்கிறார் என்று சொல்லிவிட்டர். இனிமேல் புண்ணிய பாரதத்தில் சிவராமனின் ஆட்சிதான்.இந்தியா ஒரு இந்து நாடு.மதசார்பின்மை,ஜனநாயகம் ஒரு புண்ணாக்கும் கிடையாது என்று கஞ்சா,அபின்,ஹெராயின், நரமாமிசப் பட்சிணிகள் சாட்சியாக அறிவித்துவிட்டார் நமோ.இனி நடப்பது நாராயணன் செயல்.சிவனும் ராமனும் தொண்டை கிழிய பக்தன் கத்தினாலும் வரமாட்டர்கள் என்பது அவர்களால் நியமனம் பெற்ற மோடிக்கும் தெரியும் மோடியை நிர்ணயித்த பன்னாட்டு பகவான்களுக்கும் தெரியும். பாவம் ஓட்டுப் போட்ட பக்த்தர்களுக்குத்தான் தெரியாது.பிட்டுக்கு மண் சுமந்து சிவன் பிரம்படி பட்டபோது அது மன்னனுடைய முதுகிலும் விழுந்தது போல் மக்கள் முதுகிலும் பலமாக விழும்போது தெரியாமல் போகாதுஅடித்தது யார் என்று.

 18. கற்றது கையளவு ..

  ஒருவர் கொண்டு வந்தார் என்பதை விட ஏற்கனவே கொண்டுவந்த திட்டத்தை எவ்வளவு செம்மையாக வழி நடத்துகிறார் என்பது தான் முக்கியம். இதே தமிழ்நாட்டில் ராஜாஜி நடைமுறை படுத்திய மதுவிலக்கை,காமராஜர்,அண்ணா போன்றவர்கள் சிரமேற் கொண்டு நடைமுறை படுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு பின்னால் வந்த கருணாநிதி அதை தொடரவில்லை. அதன் விளைவு தான் இப்போது பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் இன்றைய டாஸ்மாக். இன்று குடிக்காதவர்கள் யாருமே கிடையாது என்கிற நிலை தான் தமிழகத்தில் உள்ளது.

  • ஒரு சிறிய திருத்தம்.கருணாநிதி1972 இல் மதுவிலக்கை இரத்து செய்தது உண்மை.அப்பொழுது எல்லா ஊடகங்களும்,எதிர்க் கட்சிகளும் அவரைக் கடுமையாக விமரிசித்தன என்பதும் உண்மை.1974 இல் எம்ஜியார் தி.மு.க.வில் இருந்து பிரிந்தவுடன், கருணாநிதியின் மதுக் கொள்கையைக் கடுமையாக விமரிசித்து, தமிழகப் பெண்களின் காவலராகக் காட்டிக் கொண்டதும் உண்மை.இந்த அழுத்தங்களின் காரணமாக 1975 இல் மறுபடியும் கருணாநிதி முழுமையான மதுவிலக்கு அமுல் நடத்தினார்.1977 இல் அவர் தோற்கடிக்கப் பட்டு, எம்ஜியார் தமிழக முதல்வர் ஆனார்.திரையில் கூட மதுக் குடிப்பது போல் நடிக்காத உத்தமர் எம்ஜியார் ஆட்சியில்தான் கருணாநிதியால் 1975 இல் மறுபடியும் கொண்டுவந்த பூரண மதுவிலக்கு அடியோடு நீக்கப் பட்டு, இன்றய தாஸ்மாக் கொள்கை கண்டுபிடிக்கப் பட்டது.1975 இல் கருணாநிதியால் மறுபடியும் அமல் நடத்திய மதுவிலக்கை உலக உத்தமர் எம்ஜியார் தொடராததால்,இன்றுவரை மக்கள் டாஸ்மாக்கில் மயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் கூறியிருந்தால், அது சாலச் சிறப்பாகும்.

  • //ஒருவர் கொண்டு வந்தார் என்பதை விட ஏற்கனவே கொண்டுவந்த திட்டத்தை எவ்வளவு செம்மையாக வழி நடத்துகிறார் என்பது தான் முக்கியம்//
   மதுவிலக்கை செம்மையாக வழி நடத்துகிறார் என்பதற்காக மோடியை புகழும் ரெப் சிறுபான்மை மக்களை நசுக்குவதற்கும் பெருமைப்படுங்கள்…
   இந்து ஆதிக்க சாதியினரைத்தவிர மற்றவர்களை மனிதர்களாக மதிக்காமைக்கும் பெருமைப்படுங்கள்…

   உங்களை நினைத்து நான் பெருமைப்படுவேன்…

 19. ரெபேக்கா அவர்களே,

  //ஒருவர் கொண்டு வந்தார் என்பதை விட ஏற்கனவே கொண்டுவந்த திட்டத்தை எவ்வளவு செம்மையாக வழி நடத்துகிறார் என்பது தான் முக்கியம். //

  அதையே தான் நானும் கேட்கிறேன். காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர். அதை மெருகேற்றி சத்துணவு திட்டம் என்று கொண்டு வந்தார். கருணாநிதி அந்த சத்துணவோடு வாரம் இருமுறை முட்டை என கொண்டு வந்தார். ஏன் நீங்கள் கருணாநிதியை பாராட்ட மாட்டேன் என்கிறீர்கள் 🙂 உங்கள் வாதப்படி பார்த்தால் நீங்கள் குஜராத்தை ஆண்ட அனைத்து முதல்வர்களையும் (காங்கிரஸ் முதல்வர்கள் உட்பட)பாராட்டி இருக்க வேண்டும்? ஏன் குறிப்பிட்டு மோடியை மட்டும் பாராட்டுகிறீர்கள். குஜராத்தில் மதுவிலக்கு தொடர்வதற்கு அனைத்து குஜராத் முதல்வர்களும் தானே காரணம். மோடியை மட்டும் ஏன் பாராட்டி வருகிறீர்கள்?

  பார்க்கலாம், இந்தியாவை உங்கள் மோடி எப்படி செம்மையாக வழி நடத்த போகிறார் என்று.
  இதே பெயரில் அப்போதும் பதிவிடுவீர்கள் என்றே நம்புகிறேன். 🙂

  • மோடியின் பாஜக விற்கு உண்மையில் மதுவிலக்கில் நாட்டம் இருக்குமானால் தான் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கை கொண்டுவரலாமே.

 20. The fans of Modi are praising him for continuing the prohibition policy.But they do not know that there is Rs30000 crore turnover per annum in illicit liquor trade in Gujarat.And Kabil Sibal rightly said that this “turnover” and “sweet-heart”allocation of thousands of acres to selected industrialists take care of Modi”s extravagance in nation-wide rallys.

  • Kapil Sibal will point out any random stuff,

   Illicit liquor is not legal liquour,the state actively discourages drinking from an early age,only people who dont respect it will go and drink illicit arrack.

    • You want to talk of black market in every single thing,u want to talk of black money that kapil sibal and maybe his friends have outside the country?

     u want to give relevance to the empty words of this guy?

     how many people are ready to spend money and consume something which is illegal in the state?

     You think everyone goes and taps the black market?

     you claim you are past 60,but you talk like a college kid?

 21. ஏற்கனவே நடைமுறை படுத்தியதை தொடர்ந்து கொண்டிருப்பதை பாராட்டினால் அதற்காக அந்த திட்டத்தை கொண்டு வந்தவரை கைகழுவி விட்டோம் என்றர்த்தமல்ல. அவர்களையும் பாராட்டுகிறோம். அவர்கள் செய்த பணியை யாரும் மறக்கவில்லை.

  தமிழ்நாட்டை குடிகார நாடாக்கிய பெருமை கருணா,எம்.ஜி.யார்,ஜெயா ஆகிய மூவருக்கும் சமப்பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அனால் இந்த மதுவால் வந்த கேட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கருணா தான்.

  //பார்க்கலாம், இந்தியாவை உங்கள் மோடி எப்படி செம்மையாக வழி நடத்த போகிறார் என்று.
  இதே பெயரில் அப்போதும் பதிவிடுவீர்கள் என்றே நம்புகிறேன்.//

  உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்.இதே பெயரில் தான் பதிவிடுவேன்.

  • நீங்கள் கேரளா, பாண்டிச்சேரி, பெங்களூர் பக்கம் போனதில்லையோ !!
   தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்க குடிக்க தான் செய்கிறார்கள்.
   அதனால் அந்தந்த நாடுகள் குட்டிச்சுவராக மாறிவிட்டனவா?

   • தவறு நண்பா !

    ஒருவேளை நாம் ஒரு நாளுக்கு ரூ 200 அய் குடிக்க செலவு செய்தால் அது நம் குடும்பத்தை நேரடியாகவே பாதிக்கும்.

    குடிப்பதை தவிர்த்தால் நம் குழந்தைகளுக்கு சத்தான உணவு dates,chicken ,Honey,carrot,egg,milk போன்ற நல்ல உணவுகளை வாங்க முடியம் அல்லவா?

    அதனால் Healthy Diet Consumption Index[HDCI] உயரும் அல்லவா ?

    அதனால் நம் இந்திய குழந்தைகளின் உடல் நலமும் ,அறிவாற்றலும் உயரும் அல்லவா ?

    //அந்தந்த நாடுகள் குட்டிச்சுவராக மாறிவிட்டனவா?

    • சரவணன் சார்,

     எனக்கு குடிப்பழக்கமோ, புகை பழக்கமோ இல்லை. அதே சமயம் குடிப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நண்பர்கள் உள்ளனர். ரெபேக்கா அவர்கள் குஜராத்தில் மதுவிலக்கு இருப்பதால் தான் அது செழிப்பாக இருப்பதாக கூறினார். அதனை மறுப்பதற்காக தான் மதுவிலக்கு இல்லாமலேயே முன்னேறிய மாநிலங்கள், நாடுகள் உள்ளன என்று சுட்டிக்காட்டினேன்.

     குடிப்பழக்கம் கெடுதி தான். ஏழை தொழிலாளிகள் தங்களின் வருமானத்தில் பெரும் பகுதியை குடிப்பதற்கே செலவு செய்வது பெரும் தவறு தான். அதே சமயம் அளவோடு குடித்துகொண்டே குடும்பத்தை கவனமாக பார்த்துகொள்ளும் நண்பர்களும் எனக்கு உண்டு.

     என்னை பொறுத்தவரை குடி, புகை, KFC, பீட்சா, பர்கர், பெப்சி, கோகோகோலா அனைத்தும் கெடுதி தான்.

     • நண்பா !

      என்னுடைய தலையை கூட பணையம் வைத்து சவால் விடுகின்றேன்.

      மோடி ,ராகுல் யார் prime minister ஆ வந்தாலும் இந்திய முழுவதும் குடியை நிறுத்த மாட்டாங்க!

      ஏன் தெரியுமா ?

      இந்த முதலாளீகள் நடத்தும் இந்திய அரசில் குடிப்பது என்பது தனிமனித சுதந்திரம் என்று கூறிகொண்டு குடி மூலம் லாபம் பெறவே முதலாளீகள் விறுப்புவர்.

      மேலும்…..
      In Indian constitution, Whether this matter “மதுவிலக்கை” is coming under state list or center list?

      Who have the responsibility to implement this matter? State or center?. 🙂

     • கற்றது கையளவு,

      [1]எழையும் ,நடுத்தர வர்கமும் TASMAC ல் சில rs100 களுக்கு குடிக்கின்றனர்.

      [2]உயர் நடுத்தர வர்கம் A/C bar ல் சில rs 1000 களுக்கு குடிக்கின்றனர்.

      [3]முதலாளி வர்கத்து சீமான்கள் 5 star hotel களில் சில லச்சங்களுக்கு ஒரே நாளில் party என்ற பெயரில் குடிக்கின்றனர்.

      [4]ஏன் குடியை தடை செய்ய உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய மாநில அரசுகளுக்கு முடீயவீல்லை ?
      [a] காரணம் முதலாளித்துவ மாடல் இந்திய மாநில அரசுகளுக்கு குடி மூலம் வரும் tax மூலம் வரும் வருமானம்
      [b]முதலாளிகளுக்கு குடி மூலம் வரும் லாபம்

      இத்தகைய கேடு கெட்ட முதலாளித்துவ மாடல் இந்திய அரசை நீங்கள் ஆதரிப்பது மட்டும் அல்லாமல் எங்களையும் அவர்களுடன் இணைந்து ஓட்டு அரசியலில் ஈடுபட செல்வது நியாயமா?

      //குடிப்பழக்கம் கெடுதி தான். ஏழை தொழிலாளிகள் தங்களின் வருமானத்தில் பெரும் பகுதியை குடிப்பதற்கே செலவு செய்வது பெரும் தவறு தான். அதே சமயம் அளவோடு குடித்துகொண்டே குடும்பத்தை கவனமாக பார்த்துகொள்ளும் நண்பர்களும் எனக்கு உண்டு.//

      • புரட்சி ஆட்சி அமைந்த சீனா ரசியாவில் மதுவிலக்கு இருந்திருந்ததா?
       மதுவிலக்கு இருந்தால் மட்டும் தான் நாடு முன்னேறுமா?
       மதுவிலக்கு இல்லாத நாடுகள் சீரழிந்துவிட்டதா?
       மோடியின் குஜராத்தின் வளர்ச்சிக்கு மதுவிலக்கு மட்டும் தான் காரணம் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
       குஜராத் மக்களின் வியாபார சிந்தனை காரணம் இல்லை என்று நினைக்கிறீர்களா?

       (கண்டிப்பாக குஜராத் வளர்ச்சிக்கு மோடி தான் காரணம் என்று மட்டும் சொல்லாதீர்கள்).

       • கற்றது கையளவு மீண்டும் முதலீல் இருந்தா ?
        குஜராத்தில் மது விலக்கு வந்ததுக்கும் மோடிக்கும் என்ன சம்மந்தம்?
        நீங்கள் கூறும் கீழ் கண்ட பதிலையே மீண்டும் நீங்களே ப்டியுங்கள்…

        “மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது என்றால் மதுவிலக்கை மோடி கொண்டுவந்ததை போல ஒரு தோற்றம் வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தற்போதைய மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் இணைந்திருந்த ஒன்றிணைந்த பம்பாய் மாகாணத்தில் 1948, 1950 வருடங்களில் மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்பட்டு பின் விளக்கப்பட்டது. பின் 1958 இல் மீண்டும் அமல்படுத்தப்பட்டு 1960 இல் குஜராத் மாநிலம் உருவானபோது மீண்டும் மதுவிலக்கு குஜராத்தில் அமலுக்கு வந்தது. ஆகவே குஜராத்தில் மதுவிலக்கு இருப்பதில் மோடியே காரணம் என்பது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம்.”

        நான் கூறுவது….

        ஏன் குடியை தடை செய்ய உங்கள் முதலாளித்துவ மாடல் இந்திய மாநில அரசுகளுக்கு முடீயவீல்லை ?
        [a] காரணம் முதலாளித்துவ மாடல் இந்திய மாநில அரசுகளுக்கு குடி மூலம் வரும் tax மூலம் வரும் வருமானம்
        [b]முதலாளிகளுக்கு குடி மூலம் வரும் லாபம்

        இத்தகைய கேடு கெட்ட முதலாளித்துவ மாடல் இந்திய அரசை நீங்கள் ஆதரிப்பது மட்டும் அல்லாமல் எங்களையும் அவர்களுடன் இணைந்து ஓட்டு அரசியலில் ஈடுபட செல்வது நியாயமா?

        [குஜராத் காந்தி பிறந்த மாநிலம் என்பதால் மது விலக்கு உள்ளது ]

       • [1]உழைப்பவனுக்கு முறையான ஓய்வும் ,மனதுக்கும்,உடலுக்கும் புத்துயீர் [refreshment ] அளிக்க பிற நல்ல அம்சங்களுக்கு [நூலகங்கள்,modern cinema,dance,drama,LOVE etc ] இடம் அளிக்கும் கம்யூனிஸ்ட் சமுகங்களில் குடிக்கு என்ன வேலை ?

        //புரட்சி ஆட்சி அமைந்த சீனா ரசியாவில் மதுவிலக்கு இருந்திருந்ததா?

        [2]மது ஒரு நாட்டின்,குடுப்பத்தீன் முன்னேறத்தையே பாதிக்கும் போது கம்யூனிஸ்ட்கள் மதுவுக்கு எதிராக தான் போராடுவர்கள்.
        //மதுவிலக்கு இருந்தால் மட்டும் தான் நாடு முன்னேறுமா?

        [3]ஆம் மதுவால் உடல் நலம் மட்டும் அல்ல மன நலமும் கெடும்.தினமும் 35 லச்சம் மக்கள் மது குடிக்கும் தமிழகத்தின் Health Index and Performance Index குறையுமா குறையாதா ?
        //மதுவிலக்கு இல்லாத நாடுகள் சீரழிந்துவிட்டதா?

        [4]மோடியீன் குஜராத் முன்னேறீய மாநிலம் என்ற மாயை எப்போதோ நம் தோழர்கள் பிரச்சாரம் மூலம் உடைத்து ஏறியபட்டு விட்டது.

        [a]குஜராத் பின் தங்கிய மாநிலம் – ரகுராம் ராஜன் குழு அறிவிப்பு !
        https://www.vinavu.com/2013/09/27/raghuram-rajan-panel-says-gujarat-backward/

        [b]குஜராத் மாயைகளை மாணவர்களிடம் கலைக்கும் பு.மா.இ.மு
        https://www.vinavu.com/2013/09/26/rsyf-call-upon-students-to-expose-modi/

        [c]மோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்
        https://www.vinavu.com/2013/09/23/fascist-modi-get-out/

        //மோடியின் குஜராத்தின் வளர்ச்சிக்கு மதுவிலக்கு மட்டும் தான் காரணம் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
        குஜராத் மக்களின் வியாபார சிந்தனை காரணம் இல்லை என்று நினைக்கிறீர்களா?//

        • அய்யா சரவணா, உண்மையை சொல்லுமையா. நீர் தானே செந்தில்குமரன் எனப்பட்டவர்?

         • [1] [2] [3] என்று வரிசைப்படுத்தி கேள்வி கேட்பதால் அவர் தான் என்றே எனக்கு தோன்றுகிறது 🙂

       • கற்றது கையளவு,
        மோடியீன் குஜராத் முன்னேறீய மாநிலம் என்ற மாயை எப்போதோ நம் தோழர்கள் பிரச்சாரம் மூலம் உடைத்து ஏறியபட்டு விட்டது.
        எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?
        —————————————————————–

        #வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகள் குஜராத்தில் 23% தமிழகத்தில் 17% கேரளாவில் 12%.

        #கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் குஜராத்திற்கு 18வது இடம்.

        #வீடுகளுக்கு மின் இணைப்பு இந்தியாவில் குஜராத்திற்கு 16வது இடம்.

        #மாநிலத்தின் நிகர உற்பத்தி மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் மூன்றாமிடம், குஜராத் ஐந்தாமிடம்.

        #கடந்த 12 ஆண்டுகளில் தொழில் முதலீடுகளின் வரவில் மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் 4வது இடம், குஜராத் 5வது இடம்!

        #இந்தியா முழுவதும் விலைவாசி ஒன்றுதான். எனினும் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் குஜராத் நகர்ப்புறத்தில் 106 ரூபாய். கிராமப்புறத்தில் 86ரூபாய் ! இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் குஜராத்தில்தான் !

        எதில் குஜராத் முதலிடம்?
        ——————————-

        #69% ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படும் இந்தியாவில் முதல் மாநிலம் குஜராத் !

        #சுகாதாரத்துக்காக பட்ஜெட்டில் வெறும் 0.77 % ஒதுக்கும் ஒரே மாநிலம் குஜராத் !

        #69.7% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரே மாநிலம் குஜராத் !

        #சுற்றுச்சூழல் கேட்டில் முதலிடம் – குஜராத் வாபி நகரம் !

        #5 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்த்த ஒரே மாநிலம் குஜராத் !

        #இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் மே.வங்கம், உ.பிக்கு அடுத்து 3 வது இடம் குஜராத்!

        #ஏழைப்பெண்களின் கருப்பைகளை வெள்ளைக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவதில் உலகிலேயே முதல் மாநிலம் குஜராத் !

        #தலித் அதிகாரிகள் ஊழியர்களுக்கு தனியாக 300 சேரி அப்பார்ட்மன்ட்டுகளை உருவாக்கி இருக்கும் ஒரே நகரம் அகமதாபாத்!

        //மோடியின் குஜராத்தின் வளர்ச்சிக்கு மதுவிலக்கு மட்டும் தான் காரணம் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
        குஜராத் மக்களின் வியாபார சிந்தனை காரணம் இல்லை என்று நினைக்கிறீர்களா?

        (கண்டிப்பாக குஜராத் வளர்ச்சிக்கு மோடி தான் காரணம் என்று மட்டும் சொல்லாதீர்கள்).//

   • அளவுக்கு அதிகமாக சீரழிந்தது,காரைக்கால்(புதுச்சேரி)…
    காலை 3 மணிக்கே கடையை திறக்கச் சொல்லி,
    குடித்து,குடல் வெந்து,குடை சாய்ந்த குடும்பத் தலைவர்கள்
    நாம் எங்கே போகிறோம்?
    என்ன செய்யப் போகிறோம்?
    வேண்டுமானால் “விலை இல்லா” ஊறுகாய் வழங்கக் கோரி
    சாலை மறியல் செய்யலாம்!
    நாத்தம் பிடித்த நாடு-இதைச் செப்பனிட யாரால் முடியும்?

   • @KK

    Yeah Alcohol is a huge problem,it is a great addiction and for a poor country like India,it brings a huge healthcare cost,which apart from being poor India also has irresponsible public administration.

    so we dont want alcohol.

  • //தமிழ்நாட்டை குடிகார நாடாக்கிய பெருமை கருணா,எம்.ஜி.யார்,ஜெயா ஆகிய மூவருக்கும் சமப்பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அனால் இந்த மதுவால் வந்த கேட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கருணா தான்.//
   அடடா பிள்ளையார் சுழி மது குடிப்பதுக்கும் உதவும் போலும்.பிள்ளையார் சுழி நல்ல ஆரம்பத்திற்குத்தானே போடுவதாகக் கேள்வி?
   மது குடிப்பது வழக்கம் கருணாநிதியால் கண்டு பிடிக்கப் பட்ட கண்டு பிடுப்பு போல் கருதறிவிப்பது, உங்களின் எம்ஜியார் மீது உள்ள பற்றைத்தான் பறை சாற்றுகிறது.அந்த உலக உத்தமர் ஏன் மறுபடியும் மதுவிலக்கை இரத்து செய்தார் என்பதற்குப் பதில் கூறுங்களேன்.பார்ப்பனர்களால் கடவுள் என்று முரசொலிக்கப் பட்ட,”இராமபிரானே” மதுக் குடித்ததாக வால்மீகி இராமாயாணம் கூறுகிறது.இராஜாஜியின் ஆட்சியில் ,பெர்மிட் வாங்கி மது குடிக்கலாம்.பெர்மிட் வாங்காதவர்கள் கள்ளச் சாராயம் குடித்தார்கள். மது தீண்டத்தகாதது என்றால் அதைக் குடிக்க சத்திய புத்திரரான இராஜாஜி அதற்கு பெர்மிட் ஏன் கொடுத்தார்? அதில் கூட வர்க்கபேதம்.
   இசை,நாட்டியம் போன்ற கலைகள் எல்லாமே மனிதனைத் தன்வயப் படுத்தி,ஒரு மயக்கத்தைத் தறவல்லது.ஆறாவது அறிவை மளுங்கச் செய்யும்.மதமும் மனிதனின் ஆறாவது அறிவைக் குருடாக்கி,ஒருவகையான வெறியை ஏற்படுத்தக் கூடியதுதான்.அதனால்தான் அதற்கு மதம் என்று நம் முன்னோர்கள் பெயரிட்டார்கள்.பக்தி முற்றியவர்கள் தன்னை மறந்து விடுகின்றனர்.இவைகளை ஒத்ததுதான் மதுவும்.அது மதம் இது மது.அதனால்தான் ஆதிகாலத்திருந்து மனிதர்கள், தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, இசை, நாட்டியம்,மதம்,மது ஆகியவற்றில் இருந்து ஏதாவதைத் தேர்வு செய்து,அனுபவித்து வருகின்றனர். மேற்கூறியவையெல்லாமே ஆறாவது அறிவை மழுங்கடிப்பவை.எல்லாவற்றையுமே தடை செய்யலாமே? ஏன் மதுவை மட்டும் தடை செய்யவேண்டும்.மதுக் குடிப்பவனால் அவனது உடல் நலம் மட்டும் பாதிக்கப் படலாம்.ஆனால் மதவெறியினால் எத்தனை மனித உயிர்கள் பலிவாங்கப் பட்டிருக்கின்றன? ஆகவே எது முதலில் தடை செய்யப் படவேண்டும்?

 22. ஒவ்வொருவருடைய மதமும் அதன் மீது அவர் வைக்கும் நம்பிக்கையும் அவரது தனிப்பட்ட விஷயம். ஒருத்தன் வேலைக்குப் போகும் முன் ஏசுவைக் கும்பிடலாம் மாரியாத்தாவைக் கும்பிடலாம். அதை அவன் வெளிப் படையாக சொல்லவும் சொல்லலாம். ஆனால் வேலையில் இருக்கும் போது எல்லாரையும் சமமாக நடத்த வேண்டும்.அது மதச் சார்பின்மை. நான் எல்லாக் கடவுளையும் கும்பிட்டு விட்டுதான்/அல்லது எதையுமே கும்பிடாமல்தான் போகவேண்டும் என்பது போலி மதச் சார்பின்மை.
  மோடியின் கடந்த 12 ஆண்டு ஆட்சியில் – அக்ஷர்தாம் கோயில் குண்டு வெடிப்பு போன்று – பல சம்பவங்கள் நடந்த போதும் மதக் கலவரம் எதுவும் நடக்கவில்லை. 2002 கலவரத்தின் போதும் ராணுவம், போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான இந்துக்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.சுப்ரீம் கோர்ட் முன்னின்று நடத்திய விசாரணையில் மோடி மீது குற்றம் எதுவும் நிரூபணம் ஆகவில்லை. மோடி எதிர்ப்பாளர்களுக்கு இதைத் தவிர வேறு விஷயமும் பேசுவதற்குக் கிடைப்பதில்லை.குஜராத்தில்தான் தொழிற்சாலைகளுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு நிவாரணத் தொகை சந்தையைவிட அதிகமாகவும் உடனுக்குடன் கொடுக்கப் பட்டுள்ளது. குஜராத்தில் கூறப்படும் மற்ற குறைகள் எல்லா இடங்களிலும் உள்ளன. அவை நிச்சயம் சரி செய்யப் பட வேண்டியவை.செய்யப் படும்.

  அது சரி, மோடி ஒரு பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் பார்ப்பனராகவே உருவகப் படுத்துகிறீர்களே, நல்லது எது நடந்தாலும் பார்ப்பனர்கள்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன?

  • இதில் கொடுமை என்னவென்றால் பாவம் ரெபெக்கா மேரிக்கும் பூணூல் போட்டு விட்டார்கள்.

  • //கோர்ட் முன்னின்று நடத்திய விசாரணையில் மோடி மீது குற்றம் எதுவும் நிரூபணம் ஆகவில்லை. ///

   இந்த லாஜிக் படி பார்த்தல் மு.க. கூட யோகியன் தான். ஆனாலும் பெரும்பான்மையோர் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். சட்டத்தின் பிடியில் சிக்க அரசியல்வாதிகள் ஒன்றும் கேணயர்கள் அல்லர். அதனால் அவர்கள் யோகியசிகாமணிகள் ஆகிவிடமாட்டார்கள்.

  • இந்து தத்துவத்தை ஒத்துக் கொண்டவர்,பார்ப்பனீயத்தை ஒத்துக் கொண்டவர்தானே?பார்ப்பனீயத்தைத் தழுவியவர் பார்ப்பனர்தானே? மோடி பார்ப்பனீயத்தைத் தழுவினாலும் பார்ப்பனர்கள் அவரைப் பார்ப்பனராக ஒத்துக் கொள்வதில்லை.அவரை எப்பொழுதும் சூத்திரராகவே வைத்திருப்பர்.சந்தர்ப்பம் வரும் போது, அவரது கழுத்தையும் அறுத்துவிடுவர்.இன்றய அரசியல் சூழ்நிலையில், மற்ற சாதி இந்துக்களின் வாக்குகளை வாங்கவேண்டுமென்றால் பனியாவான மோடியின் தயவு அவர்களுக்குத் தேவை.பாஜக வெற்றிபெற்றாலும் மோடி பிரதமாராவாரா? அல்லது வீழ்த்தப் படுவாரா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

  • //ஒவ்வொருவருடைய மதமும் அதன் மீது அவர் வைக்கும் நம்பிக்கையும் அவரது தனிப்பட்ட விஷயம்.//
   தனிப்பட்ட விஷயம் என்றால்,வீதிக்கு ஏன் கொண்டு வரவேண்டும்?அரசியலுக்குள் ஏன் புகுத்தவேண்டும்? அலுவலகதிற்குள் மத அடையாளங்களுடன் வரவேண்டும்? ஏன் இத்தனை மானுட உயிர்கள் கொல்லப் படவேண்டும்? சிலுவைப் போர் எதற்கு? இந்திய பாகிஸ்தான் எல்லையில்(1947) பல்லாயிரக் கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் ஏன் பறிக்கப் படவேண்டும்?காந்தியடிகள் ஏன் கொலை செய்யப் பட வேண்டும்? இயேசு ஏன் சிலுவையில் உயிர் விடவேண்டும்? கி.பி.765 இல் 1000 ஜைன மதத்தினர்,இந்து திருஞான சம்பந்தரால் கழுவேற்றப் படவேண்டும்?அவரவர் நம்பிக்கையை அவரவர் வீட்டில் வைத்துக் கொண்டிருந்தால், மானுட குலத்துக்கு இத்தனை தீங்குகள் நடவாதிருந்திருக்கும்.இன்னும் மதம் வீதிக்கு வந்ததால் மானுடப் பலிகள் அரங்கேரிக் கொண்டுள்ளதே.

  • மோடி மட்டும் இல்ல இதுவறைக்கும் எந்த ஒரு பெரிய அரசியல் வாதியும் இந்தியாவுல தண்டிக்க பட்டதா சரித்திரமே இல்ல. அப்படி பார்த்தா உங்க மோடியவிட மன்மோகன் ரொம்ப நல்லவரு. ஏன் நீங்க அவர தலிவரா ஏத்துக்க கூடாது.

   குஜராத் படுகொலையுல மாயா கோதானி என்ற அமைச்சரும் பாபு பஜ்ரங்கியும் பல அப்பாவி முஸ்லீம் மக்களை கொண்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். மோடியுடைய அறிவுரை இல்லாமலா இந்த கொடுஞ்ச் செயலை இவர்கள் செய்தார்கள் (அம்மாவினுடைய அமைச்சர்கள் பற்றி தான் தெரியுமே, மோடி மட்டும் என்ன அம்மாவுக்கு இளைத்தவரா?). இவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது மோடி அரசோ காங்கிரஸ் அரசோ அல்ல. இது பல சமுக ஆர்வலர்கள் மற்றும் சில் நேர்மையான பத்திரிக்கை ஆசிரியர்களின் அயறாத முயர்ச்சியால் முடிந்தது. தண்டனை பெரும் வரை(2009) மாயா கோதானி உங்கள் மோடியினுடைய அமைச்சரவையில் அங்கம் வகித்தார்(என்ன ஒரு முதலமைச்சரின் யோக்கியதை?). ஒரு கொலையாளிக்கு எப்படி உங்கள் மோடி மூன்று முறை MLAவாக வாய்ப்பு கொடுக்க முடியும்.

   மோடிக்கு எதிராக சாட்சி சொல்ல முனைந்த அமைச்சர் ஹெரேன் பாண்டியா ஏன் கொல்லப்பட்டார்?

   குஜராத்தில் போலி எங்கவுண்டரில் பல முஸ்லீம்கள் கொள்ளப்பட்டனர். அதற்கு காரணமான 32 (பல IPS அதிகாரிகள் உட்பட) போலிஸ் அதிகாரிகள் இன்று ஜெயிலில் கம்பி என்னிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களும் மோடியுடைய கட்டளை இல்லாமலா செயல்பட்டார்கள்?

 23. மதம் சார்ந்த நாடு தான் நம் நாடு. ஒவ்வொரு மதத்தினரும் தமக்காக கட்ச்சி ,இயக்கம் வைத்துக்கொண்டு அரசிடம் தங்களது தேவைகளை கேட்டு பெறுவது தவறல்ல.

  விஎச்பி கூட்டம் போட்டு இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் ஹிந்து மதத்தின் படி தான் வாழவேண்டும் என்பது. பிற மத வழிபாட்டுத்தலங்களை இடிப்போம் என்று கூறுவது . பொது சிவில் சட்டம் கொண்டு வந்து பிற மத சட்டங்களை உதாசீனப்படுத்தி அவர்களை நசுக்குவது போன்றவை தான் மத வாதம்.

  தினமலர் ஒரு பாசிச நாளிதழ் என்பதை தெள்ளத்தெளிவாக வெளிப்படையாக அறிவித்துவிட்டது. பொய் புரட்டு பித்தலாட்டத்தின் மொத்த உருவம் தினமலர்.

  மோடியை பார்ப்பனராக ஆக்க முடியுமா ?

 24. “Dependency creates despondency.” கடவுள் கொள்கைகள் மதக் கோட்பாடுகள் யாவும் சார்புத் தன்மையையே உறுவாக்கும்.அந்த சார்புத் தன்மை ஒரு வகையான இயலாமையையும்,தன்னம்பிக்கை அற்ற நிலையை தோற்றுவிக்கும்.அதன் வெளிப்பாடே நேற்றய இன்றய உலகில் நடக்கும் மத அடிப்படையிலான படு கொலைகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க