Saturday, August 20, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா மைக்ரோசாஃப்டை சுதந்திர மென்பொருள் இயக்கம் வீழ்த்துமா ?

மைக்ரோசாஃப்டை சுதந்திர மென்பொருள் இயக்கம் வீழ்த்துமா ?

-

‘மைக்ரோசாப்ட் விண்டோஸ் XP-கார்ப்பரேட் கொள்ளையின் சின்னம்’ என்ற பதிவில் ‘சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம்’ பிரச்சனையை தீர்க்கும் வழியல்ல என்றும் முதலாளித்துவ இலாப வெறியை அம்பலப்படுத்தி அரசியல் ரீதியில் எதிர்ப்பதுதான் தீர்வு என்பதோடு, இந்த வகையில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் திளைக்கும் சில இடதுசாரி குழுக்களின் செயல்பாடுகளை பிழைப்புவாதம் என்ற விமர்சனத்தையும் வைத்திருந்தோம். மறுமொழியாக நமது வாசகர்கள் லினக்ஸ் போன்ற சுதந்திர இயங்குதளங்கள், மைக்ரோசாப்ட் நெட்டித்தள்ளுகிற நெருக்கடிக்கு தீர்வாக இருக்குமென்றும் சில வாதங்களை வைத்திருக்கின்றனர்.

லினக்ஸ் - சுதந்திர மென்பொருள்இது தொடர்பாக, அதாவது சுதந்திர மென்பொருள்கள், அதைச் சார்ந்த சமூக இயக்கங்களின் கூறுகள், பாராளுமன்ற ஜனநாயகத்தை நம்பும் இடதுசாரி அறிவுஜீவித் துறையினர் மற்றும் மாணவர்களின் மீதான பார்வையை பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது.

பாராளுமன்ற ஜனநாயகத்தில் சீரழிந்த பிழைப்புவாத கம்யூனிஸ்டு கட்சிகளில் பல்வேறு பிரிவினர்கள் இருந்தாலும் இரண்டு பிரிவினரை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று, பிழைப்புவாத தொழிற்சங்கங்களை நம்பி மோசம் போகிற தொழிலாளர்கள். இரண்டு, தனியார்மய தரகு முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக கருத்தரங்குகள், விவாதங்கள் என்ற அளவில் மட்டுமே அறிவுவாதத்தை கொண்டு செல்லமுடிகிற அறிவுத்துறையினரும் மாணவர்களும். இந்த இருவகை பிரிவினரை விட அதிகமாக ஜெயலலிதா போன்றவர்களின் காலை நக்கிப் பிழைக்கிற வகையறாக்கள் மக்கள் முன் தானாகவே அம்பலப்பட்டு போனார்கள்.

சுரண்டலை உணர்ந்து கொள்வதிலும் அதற்கெதிராக போராடுவதிலும் எல்லா நாடுகளிலும் தொழிலாளர்களே முன்னணியில் இருக்கிறார்கள். எனவே தொழிலாளர் வர்க்கத்தைத் தவிர நம்பிக்கையூட்டும் ஜனநாயக சக்திகளில் இந்த அறிவுஜீவித்துறையினரும் மாணவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த வகையில் மென்பொருள் பிரச்சனையில் இவர்கள் வைக்கிற கோரிக்கைகளின் தன்மைகளை கறாராக நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம் அறிவுத்துறையினராலும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு சமூக இயக்கமாக எடுத்துச் செல்லப்படுகிறது. கிண்டி அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள், சென்னை ஐஐடி மற்றும் எம் ஐ டி மாணவர்களும் பேராசிரியர்களும் இதில் அடக்கம்.

சென்னை ஐஐடி, ஆர் எஸ் எஸ் காலிகளுக்கு ஒரு கேந்திரமான கண்ணி என்ற நிலையிலும் விவேகானந்தா ஸ்டடி சர்க்கிள் என்ற பெயரில் மூலை முடுக்கெங்கும் இந்துத்துவவெறியை கிளப்புவதே பிரதானமாக இருக்கிற நிலையிலும் சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம் போன்ற சமூக ஜனநாயக கோரிக்கைகள் முன்னெடுத்து செல்லப்படுவதை நாம் புறந்தள்ளிவிடமுடியாது. ஏனெனில் இன்றைய சூழலில் இந்திய சமூகம் பாசிசத்தை நோக்கி தள்ளப்படும் முன்முயற்சிகள் தடையின்றி அரங்கேற்றம் செய்யப்படும் அபாயத்தில் இருக்கும் பொழுது அறிவுத்துறையினரின் இது போன்ற செயல்பாடுகள் பாசிஸ்டுகளுக்கு மத்தியில் அவசியமே.

லினக்ஸ் எதிர் விண்டோஸ்
லினக்ஸ் எதிர் விண்டோஸ்

அதே சமயம், மிகவும் கேடான அழுகிநாறும் முதலாளித்துவத்தின் கோரமுகத்தை வெறும் அறிவுஜீவித்தனமான கருத்தரங்குகளினாலோ அல்லது மயிர்பிளக்கும் தொழில்நுட்பம் சார்ந்த விவாதங்களினாலோ மட்டும் முறியடித்துவிட முடியாது. இந்த வகையில் தங்களை இடதுசாரிகள் என்று அறிவித்துக் கொள்கிற மாணவர்களும் அறிவுத்துறையினரும் தமது கோரிக்கைகளில் புரட்சிகர கூறுகளை உள்ளடக்குவதும் அதைச் சார்ந்து பாட்டாளிவர்க்க நலன்களை முன்னிலைப்படுத்துவதுமே முதன்மையானதாக இருக்கமுடியும்.

முதலாவதாக சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம் என்று சொல்வதின் பின்னணியில் இருக்கிற நிலைப்பாடுகள் என்ன என்று தமிழக நிலைமைகளில் இருந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். வளர்ந்துவரும் நாடுகளில் பள்ளி, கல்லூரி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் சுதந்திர மென்பொருட்களை பயன்படுத்துகிற நிலையை உருவாக்க வேண்டும் என்று நிலைப்பாடும் இதில் ஒன்று. ஆனால் தமிழக அரசு கொண்டு வந்த இலவச மடிக் கணினித் திட்டம் இந்த நிலைப்பாட்டை சுக்குநூறாக்கியது. மைக்ரோசாப்ட் தமிழகத்துடன் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் படி தமிழ்நாட்டை அகலத் திறந்துவிடுவதன் குரூரத்தை முதலில் அனுபவித்தவர்கள் நமது பள்ளி மாணவர்களே என்பதைச் சொல்லிவிட வேண்டும்.

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்னணு கழகம் (ELCOT) சுமார் 9.12 இலட்சம் மடிக்கணிகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியது. ஒரு மடிக்கணினியின் விலை 15,000 ரூபாய் என்று நிர்ணயித்து ஐந்து ஆண்டுகளில் வினியோகிக்கப்பட வேண்டிய 68 இலட்சம் மடிக்கணினிகளுக்கு சுமார் 10,200 கோடி ரூபாய்களை திட்டமதிப்பீடாக அறிவித்தது எல்காட் (ஒரு மடிக்கணினியின் விலை பின்னர் 18,000 ரூபாயாக தொழில்நுட்ப ஏலத்தில் உயர்த்தப்பட்டது தனிக்கதை.)

மடிக்கணினியின் இயங்குதளத்தை பொறுத்தவரை விண்டோஸ் ஸ்டார்ட்டரும் லினக்ஸ் இயங்குதளமும் சேர்த்தே நிறுவப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. உண்மையில் லினக்ஸ் இயங்குதளத்தில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அனேக சுதந்திர மென்பொருள்கள் உண்டு. அவற்றுள் தமிழ் தட்டச்சு, அறிவியல் பயன்பாடுகள் இருக்கிறது என்பது போக வருடா வருடம் மென்பொருள்களையும் இயங்குதளத்தையும் காசு கொடுத்து புதுப்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதில் பாரத் ஆபரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ் (Bharat Operating System Solutions – BOSS)  தமிழ் வழியான லினக்ஸ் தளத்தை மாணவர்களுக்கு எளிமைப்படுத்தி வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டது.

இது அரசுத் திட்டம் என்கிற பொழுது எதற்கு தேவையேயில்லாமல் மைக்ரோசாப்ட் இயங்குதளம் நிறுவப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு சுதந்திர மென்பொருள் இயக்கத்திற்கான கூட்டமைப்பு தனது ஆட்சேபனையை பதிவு செய்தது. எத்தனையோ வகையான சுதந்திர மென்பொருட்கள் இருக்கும் பொழுது விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது முழுக்க முழுக்க மைக்ரோசாப்டிற்கு சேவை செய்கிற வேலையேயன்றி இது எந்த வகையிலும் இலவச மடிக்கணினித் திட்டமாக இருக்க முடியாது என்பதைத் தெரிவித்திருந்தது.

எல்காட் ஐ.டி. பூங்கா
கார்ப்பரேட் நலன்களுக்கு சேவை செய்ய வைக்கப்பட்ட எல்காட்.

இருந்த போதிலும் செப்டம்பர் 2011-ல் லினக்ஸ் இயங்குதளமும் நிறுவப்படாது என்று அறிவித்தது எல்காட் நிறுவனம். அதற்கு எல்காட் முன்வைத்த காரணம் உலகப் பிரசித்தி பெற்றது. காசு கொடுத்து (சுமார் ரூ 2000 விலை) வாங்கிய விண்டோஸ் இயங்குதளத்துடன் இணையாக லினக்ஸையும் சேர்த்து நிறுவுவதற்கு கணினி ஒன்றிற்கு 100 ரூபாய் செலவழிக்க வேண்டிவரும் என்று ரூ 10,200 கோடிக்கான திட்டத்தில் தனது சிக்கன நடவடிக்கையை கூச்சமின்றி அறிவித்தது. வேண்டுமானால் தேவைப்படும் மாணவர்களுக்கு பாரத் ஆபரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ் (Bharat Operating System Solutions – BOSS) மூலம் லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவ எல்காட் உதவி செய்யும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில் அமெரிக்க சுதந்திர மென்பொருள் இயக்கத்திற்கான ஜாம்பவான் மற்றும் போராளி ரிச்சர்டு எம் ஸ்டால்மேன், சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கெடுத்ததோடு மட்டுமில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை லினக்சுடன் இணையாக நிறுவும் அரசின் செயல் “மதிய உணவிற்கு தண்ணீருடன் விஸ்கியையும் சேர்த்துத் தருவதைப் போன்றது” என்று மைக்ரோசாப்டுடான தரகுத்தனத்தை அம்பலப்படுத்தியிருந்தார்.

தமிழக சுதந்திர மென்பொருட்களுக்கான கூட்டமைப்பு, முதலாளித்துவத்தின் கொடூரத்தை நன்கு அறிந்திருந்தும் தமிழக அரசுக்கும் மைக்ரோசாப்டிற்கும் இடையே நடந்த லாபியிங் வேலைகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தாமால் ஜெயலலிதாவிற்கு ஒன்றுமே தெரியாததைப் போல மார்ச்-9, 2012 தேதியிட்ட கடிதம் ஒன்றை அனுப்பியது. அக்கடிதத்தின் முதல் பத்தியே இப்படியாக தொடர்கிறது:

“டியர் மேடம்,

6-3-2012 அன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு ஜீன் பிலிப்ஸ் கோர்டியஸ் அவர்கள் தங்களைச் சந்தித்தது எங்களுக்கு தெரியவந்தது. அவர் இச்சந்திப்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ‘தகவல் தொடர்பு அறிவு இயக்கத் திட்டத்தை’ அமல்படுத்துவது தொடர்பாக 2005இல் தமிழக அரசிற்கும் மைக்ரோசாப்டிற்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மீதான அம்சங்களை விளக்கியிருந்தார். திரு ஜீன் தமிழகத்தில், தனது கம்பெனி மேலும் முதலீடுகளை செய்ய விரும்புவதாகக்  கூறியிருந்தார் (ஆக ELCOT, மடிக்கணினிகள் தொடர்பாக அனைத்து நிறுவனங்களுடன் ஒப்பந்தப் புள்ளிகள் கோரியது வெறும் கண்துடைப்பு மட்டுமே! அரசு எப்படி யாருக்காக இயங்குகிறது என்பதற்கான பார்வையை இங்கு நாம் தவறவிட்டுவிடக் கூடாது). தமிழக அரசுடனான இதுபோன்ற முதலீட்டுத் திட்டங்களை மைக்ரோசாப்ட் ஏற்படுத்துவது இது முதல் முறையல்ல. 2002இல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது இந்தியப்பயணத்தின் போது, இதே போன்ற முதலீட்டுத் திட்டங்களை கூறியிருந்தார். இந்த வகையில், இது தொடர்பான சில உண்மைகளை தங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறோம். மைக்ரோசாப்டால் முன்மொழியப்படும் இது போன்ற முதலீடுகளுக்கு லாபம் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது என்பதை முதலிலேயே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்…………………………………………………………………………………….” என்பதாக அக்கடிதம் நீள்கிறது.

மைக்ரோசாப்ட்
இலவச மடிக்கணினி திட்டத்தில் கொள்ளை லாபம் பெற்றது மைக்ரோசாப்ட் மட்டுமே.

இறுதியில் இலவச மடிக்கணினி திட்டத்தில் கொள்ளை லாபம் பெற்றது மைக்ரோசாப்ட் மட்டுமே. தற்பொழுது இந்த மடிக்கணினிகள் சுடுதண்ணீர் வைக்கும் அளவிற்கு சூடாக இருப்பதாக அறிகிறோம். இது தனிக்கதை என்பதால் நமது பார்வையை இயங்குதளம் ஒட்டியே கொண்டு செல்வோம்.

செயல்பாடு என்பதன் அடிப்படையில் சுதந்திர மென்பொருளுக்கான கூட்டமைப்பு, உச்சபட்சமாக கருத்தரங்களை நடத்தியும் குறைந்த பட்சமாக ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியதுமாக மட்டுமே இருந்தது. இதைத் தாண்டி நடத்திய போராட்டம் என்றளவிலான கூட்டங்கள் அரசுக்கு எந்தவித தார்மீக அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. மேலும் இவையனைத்தும் மக்களுக்கான இயக்கமாக அல்லாமல் வெறும் கருத்தரங்குகளாக மட்டுமே கொண்டு செல்லும் அளவிற்கு அடிப்படையாக அமைந்தது இவர்களின் அரசு குறித்த தவறான பார்வைகளே. அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் நலனுக்கான ஒடுக்குமுறைக் கருவி. இவர்களோ அதை அனைவருக்கும் பொதுவானது என்றும், அதை சில பல சட்ட வழி முயற்சிகளில் திருத்தி விடலாம் என அப்பாவித்தனமாக நம்புகின்றனர்.

மைக்ரோ சாஃப்டின் இலாபவெறியும், அத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களது நலனுக்காக கட்சி நடத்தும் ஜெயலலிதாவின் அரசியலும் வேறு வேறு அல்ல. இதில் ஜெயலலிதாவுக்கு ஏதும் தெரியாது போல இவர்கள் வகுப்பு எடுக்கிறார்கள். மிடாஸ் நிறுவனம் மூலம் தரகு முதலாளிகளாகவும் கொள்ளையடிக்கும் அதிமுக தலைமைக்கு, மைக்ரோ சாஃப்டின் இலாபவெறியும், சதித்தனங்களும் எப்படி தவறாக தெரியும்?

சென்ற பதிவில் இதைச் சுட்டிக்காட்டும் பொருட்டு, மென்பொருள் விசயத்தில் முதலாளித்துவத்தின் இலாப வெறி குறித்து பருண்மையாக அறியமுடிகிற அறிவுத்துறையினர் மெக்டோனால்ட் உணவுவிடுதிகள் என்ற வகையில் சுதந்திர உணவுவிடுதிகள் நடத்துவதைத்தான் பிரதானப்படுத்துவார்களா? என்ற ஒரு கேள்வியை முன்வைத்திருந்தோம். ஆக தீர்வு என்ற வகையில் சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம் இந்த புளுத்து நாறும் அரசமைப்பில் ‘இரங்கத்தக்க சீர்திருத்தங்களைக்’ கூட பெறமுடியவில்லை என்பது தான் நிதர்சனம்.

இது ஒருபுறம் இருக்க லினக்ஸ் போன்ற சுதந்திர இயங்குதளங்களை பயன்படுத்தினால் மைக்ரோசாப்ட் நெட்டித்தள்ளுகிற நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும் என்று சில வாசகர்கள் கூறியிருந்தனர். அவர்களுக்கு நாம் வைக்கும் கேள்விகள் இதுதான்.

 • தமிழகத்தில் இதுபோன்ற சுதந்திர மென்பொருட்கள் பயன்படுத்துகிற வாய்ப்பை முறியடித்தது யார்?
 • இங்கும் மைக்ரோசாப்ட் போன்ற பெரு முதலைகள் ஏன் லாபியிங் வேலைகளில் ஈடுபடுகின்றன?
 • இதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிற தரகர்களான ஆளும் வர்க்கத்தையும் அரசமைப்பையும் புரிந்து கொள்ளாமல், மாற்றாமல் லினக்ஸ் போன்ற தளங்களை எப்படி மக்களுக்குச் சாதகமானதாக மாற்ற இயலும்?
 • சுதந்திர மென்பொருட்களை முழுமையாக பயன்படுத்துகிற வாய்ப்பு ஒரு சோசலிச அரசுக்குத்தான் உண்டு என்பதை இச்சம்பவங்கள் நிருபிக்கிறதா? இல்லையா?

லினக்ஸ் மேசைக்கணினி
மேலை நாடுகளில் சுதந்திர மென்பொருளுக்கான இயக்கம் தொடர்பான சமூக நடவடிக்கைகளில் நிலவுகிற கூறுகள் என்ன

இரண்டாவதாக மேலை நாடுகளில் சுதந்திர மென்பொருளுக்கான இயக்கம் தொடர்பான சமூக நடவடிக்கைகளில் நிலவுகிற கூறுகள் என்ன என்பதையும் நாம் பரிசிலீக்க வேண்டும். அமெரிக்கா போன்ற முதாலாளித்துவ நாடுகளிலேயே கூட முதலாளிகளைக் காறித்துப்பும் அளவிற்கு இணையத்தில் வீச்சான பிரச்சாரங்களைக் கொண்டு செல்கின்றனர். சென்ற பதிவில் ‘முதலாளிகள், வாழ்வையே விற்பதாகவும் வாங்குவதாகவும் பார்ப்பதற்கு நம்மை பழக்கப்படுத்துகின்றனர்’ என்ற ஒரு வாதத்தை வைத்தோம்.

பேராரசிரியர் லாரல் டேக் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார்:  நம்மை அறியாமலேயே நாம் நம் “விருப்பத்திற்கு மாறாக விற்பனைப் பண்டமாக” மாற்றப்படுகிறோம் என்பதை ஒரு உண்மையான ஆய்வாளருக்கே உரிய திறமையுடன் நிருபிக்கிறார். வருடத்திற்கு 140 பில்லியன் டாலர்கள் அள்ளுகிற பேஸ்புக், லைக்குகள் (Likes) மற்றும் பிரெண்ட்சிப் சேரிங்குகளைத் (Friendship Sharings) தான் பெரிதும் சார்ந்திருக்கிறது என்பதன் அடிப்படையில் அவர் வைக்கும் “பேஸ்புக் நமக்கு கூலிதரவேண்டும் (Wages For Facebook)” என்பதன் அடிப்படையிலான அறிக்கை (“Our fingerstips have become distorted from so much liking. Our feelings have gotten lost from so many friendships”) சில அறிஞர்களுக்கு சுய உணர்ச்சி செத்துவிடவில்லை என்பதைக் காட்டுகிறது.

இது தவிர Riseup.net போன்ற சிறு குழுக்கள் அமெரிக்க அரசு நம்மைக் கண்காணிப்பதை அனுமதிக்க இயலாது என்றும் அரசியல் சமூக பொருளாதார தளத்தில் அதிகாரங்கள் மக்கள் கையில் இருக்க வேண்டும் என்று சியாட்டலில் இருந்து கொண்டே அரசை எதிர்த்துப் போராடுகிற போராளிகளுக்கு யாரும் ஊடுருவிப் பார்க்க இயலாத மின்னஞ்சல் சேவைகளை வழங்குகிறது. இதுதவிர எட்வர்ட் ஸ்னோடன், ஜீலியன் அசாஞ்சேயின் விக்கி லீக்ஸ் போன்றவர்களின் பங்களிப்புகள் முதலாளித்துவத்துவ ஆளும் வர்க்க அடக்குமுறைகளை அம்பலப்படுத்த உதவுகிறது.

அமேசான் போன்ற நிறுவனங்கள் கிண்டில் சேவைகள் என்ற பெயரில் இணையதளப் புத்தகங்களை வைத்து வர்த்தகம் செய்கிற பொழுது காசு கொடுத்து வாங்க முடியாத பல்வேறு புத்தகங்களை Libgen போன்ற இணையதளங்கள் “அறிவு விற்பனைக்கு அல்ல” என்ற மானிட பண்புகளின் அடிப்படையில் சுதந்திரமாக தறவிறக்க வழிவகை செய்கிறது.

இவையெல்லாம் ஏகாதிபத்தியங்களை அம்பலப்படுத்தும் நல்ல முயற்சிகள் என்றாலும் இவையே அமெரிக்காவை வீழ்த்தி புரட்சியை கொண்டு வந்து விடாது. அப்படி புரட்சி வராமல் அறிவுத் துறையினரும் கட்டற்ற மென்பொருள் மூலம் விண்டோசை வீழ்த்தி விட முடியாது.

இவைகளை தொகுப்பாக பார்க்கிற பொழுது இவ்வியக்கங்களின் புறவயக் கூறுகள் “முதலாளித்துவம் தனக்கு சவக்குழிதோண்டுவோரையே மேலாக உற்பத்தி செய்கிறது” என்பதை நிரூப்பித்துக் காட்டுகிறது. இந்த வகையில் இணையங்களையும் மென்பொருட்களையும் மற்றும் முதலாளித்துவத்தின் பிற ஸ்தாபனங்களையும் பிரச்சார வடிவங்கள் மற்றும் போராட்ட முறைகள் என்ற அளவிலே மட்டுமே ஏகாதிபத்தியங்களை ஒழிக்க விரும்பும் புரட்சிகர அமைப்புகள் பயன்படுத்தும். ஏனெனில் நமக்கு பிரதான கடமையாக இருப்பது இந்த அநீதியான அரசமைப்பை கைப்பற்றி உழைக்கும் மக்களின் கூட்டிணைவில் பாட்டாளி வர்க்கத் தலைமையில் மாற்று மக்கள் அரசை அமைப்பதே.

இதைப் புறந்தள்ளி ‘வெறும் இணையம் தான் புரட்சி; தொழில்நுட்பம் தான் வளர்ச்சி’ என்று பார்க்கிறவர்கள் இறுதியில் முதலாளிகளின் நலனுக்காகத்தான் வேலை செய்ய முடியும். அவர்கள் தான் பன்சால் தலைமையில் இரவும் பகலுமாக குஜராத்தை குவாஞ்சோவாக காட்டுவார்கள்! தன்னையே படமெடுத்து டிவிட்டருக்கு அனுப்புவார்கள்! “பாசிசம், அழுகிநாறும்  முதலாளித்துவத்திற்கு முட்டு கொடுக்கும் வன்முறையான முயற்சி” என்று சொல்வதை நிரூபிக்க வேண்டுமானால் மோடியின் செல்பீ புகைப்படத்தை பார்க்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, இந்தப் பதிவை நாம் சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கத்தை நடத்தும் இடதுசாரி மாணவர்களையும் அறிவுத்துறையினரை  முன்வைத்தே வினவியிருக்கிறோம். ஒரு கம்யுனிஸ்ட் போராளி, இயக்கம் என்பதை கீழிருந்து மேல்நோக்கிய பாய்ச்சலாக பார்க்கிறார். சான்றாக ‘பாட்டாளி வர்க்க அரசு’ எதைப் பெற்றால் அதை எடுக்க முடியும் என்பதை நாம் தெலுங்கானாவின் நிலமீட்புப்போராட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ள இயலும். நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் நிஜாம் அரசிற்கு எதிராகவும் விவசாயிகள் வர்க்கம் நிலத்தை மீட்டெடுப்பதிலே ஆளும் வர்க்கம் மரண அடி வாங்கியது; நிலப்பிரபுக்கள் ஓடி ஒளிந்தனர். இருந்த போதிலும் தொட்டி கொமரய்யாவை முதல் ஆளாக விவசாயி வர்க்கம் இழந்தது. இந்திய ராணுவம் நிஜாம் அரசுக்கு சார்பாக விவாயிகள் வர்க்கத்தை வெறி கொண்டு அடக்கியது. நிலத்தை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆண்டைக்கு எதிரான போராட்டத்தில் தொட்டி கொமரய்யா என்ன ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம் சி ஏவா பயின்றார்?

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தேவை கூரிய அரசியல் பார்வையும், குறையாத வர்க்க உணர்வும்தான். இதன்றி இந்த சமூக அமைப்பில் நாமே நேரடியாக எந்த சேவைகளை துவங்கினாலும் அவை வெற்றி பெறாது. சான்றாக தமிழ் வழிக் கல்வி பள்ளிகளை நாம் ஆரம்பிப்பதால் கல்வியில் தனியார் மயம் ஒழியாது, ஆதரவற்றோருக்கான பள்ளிகளை நாம் துவங்கினாலும் தொடர்ந்து நடத்த முடியாது, தொழிலாளிகளே முதலாளிகளாக நடத்தும் தொழிற்சாலைகள் முதலாளித்துவ அமைப்பில் சாத்தியமல்ல. அது போல ஏகாதிபத்தியங்களை வீழ்த்தாமல் அவர்களின் தொழில் நுட்ப ஆக்கிரமிப்பை நாம் வீழ்த்துவது குறித்து நினைக்கக் கூட முடியாது.

இதை ஒரு கம்யுனிஸ்ட் நெஞ்சிலே ஏந்தியிருப்பாரேயானால் சிங்கூரில் தொழிலாளர்கள் சுடப்பட்டிருப்பார்களா? ஜெயலலிதாவின் காலை நக்கிப் பிழைப்பார்களா? பாசிஸ்டுகளுக்கு பாதை வகுத்து கொடுத்தது எது? என்பதை பாராளுமன்ற ஜனநாயகப் பாதையில் பீடை நடை போடும் இடதுசாரிகளில் சிலராவது பரிசீலிப்பார்களா, தெரியவில்லை.

‘முதலாளித்துவ எதிர்ப்பு’ என்பது அறிவுவாதமாக மட்டுமே இருப்பதும் கைதட்டி கலைந்து செல்கிற கருத்தரங்கமாக இருப்பதும் களையப்பட வேண்டும். அறுதியிட்டுச் சொல்வதென்றால் பாட்டாளி வர்க்க அரசை ஆணையிலே வைப்பதற்கான செயல்திட்டத்தை நோக்கி நகருவதும் புரட்சிகர அமைப்புகளில் திரள்வதும் தன்னை ஒர் அணியாக மீட்டெடுத்துக் கொள்வதிலும் தராளமய தனியார்மய மறுகாலனியாதிக்க நாடுகளின் சமூக ஜனநாயகவாதிகள், அறிவுத்துறையினர் மற்றும் மாணவர்கள் செய்யவேண்டிய ஆகப் பெரும் முதற் கடமை. சமூகத்தின் புறவயமான நிலைமைகளும் தொட்டி கொமரய்யாவும் இவர்களிடம் இதைத்தான் கோருகிறார்கள்.

(குறிப்பு: சென்ற பதிவில் முதலாளித்துவம் மோசம் என்றால் எப்படித்தான் சம்பாதிப்பது என்று முக்கியமான கேள்வி ஒன்றை வைத்திருந்தார் வாசகர் ஒருவர். இது போக இந்திய மென்பொருள் துறையினரின் மறுமொழிகளையும் சேர்த்து அடுத்த பதிவில் பார்ப்போம். வினையாற்றுங்கள்)

–    மெக்கானிக் நாசர்

குறிப்புகள் எடுக்கப் பயன்பட்டவை

 1. ELCOT determines technical requirements for free laptops-The Hindu (26-06-2011)
 2. Free laptops not to have open source software-The Hindu (03-09-2011)
 3. It’s no ‘free laptop’ as long as it has proprietary software-The Hindu (06-02-2012)
 4. Proposal to adopt Microsoft’s proprietary software in schools: FSF India sends Letter to Chief Minister of Tamil Nadu;
 5. Political Principles of Riseup team
 6. Should Facebook pay its users?
 7. வீரஞ்செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டம் (1946-1951)
 8. எமது உழைப்பைத் திருடி விற்கும் பேஸ்புக்கிடம் கூலி கேட்போம்;
 1. அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தேவை கூரிய அரசியல் பார்வையும், குறையாத வர்க்க உணர்வும்தான். இதன்றி இந்த சமூக அமைப்பில் நாமே நேரடியாக எந்த சேவைகளை துவங்கினாலும் அவை வெற்றி பெறாது. சான்றாக தமிழ் வழிக் கல்வி பள்ளிகளை நாம் ஆரம்பிப்பதால் கல்வியில் தனியார் மயம் ஒழியாது, ஆதரவற்றோருக்கான பள்ளிகளை நாம் துவங்கினாலும் தொடர்ந்து நடத்த முடியாது, தொழிலாளிகளே முதலாளிகளாக நடத்தும் தொழிற்சாலைகள் முதலாளித்துவ அமைப்பில் சாத்தியமல்ல. அது போல ஏகாதிபத்தியங்களை வீழ்த்தாமல் அவர்களின் தொழில் நுட்ப ஆக்கிரமிப்பை நாம் வீழ்த்துவது குறித்து நினைக்கக் கூட முடியாது….வினையாற்றுவொம்.

 2. //‘சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கம்’ பிரச்சனையை தீர்க்கும் வழியல்ல//

  You are plain stupid. It is possible to destroy entire corporates just by abolishing patents. I more and more ideas and code are written with non-patentable licenses, surely corporates will fall. You people can do politics. But to give freedom to end user, it takes developers to write code. We are also a political movement. SO don’t think only you people are correct and everyone else is wrong.

 3. Also stop saying just Linux. Linux is only the kernel. Call it GNU/Linux. By this you should give credit to the people who really worked hard for software freedom.

 4. //செயல்பாடு என்பதன் அடிப்படையில் சுதந்திர மென்பொருளுக்கான கூட்டமைப்பு, உச்சபட்சமாக கருத்தரங்களை நடத்தியும் குறைந்த பட்சமாக ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியதுமாக மட்டுமே இருந்தது. //

  That is not the only thing we do. Our main job is writing free software. You people are not even able to write a HTML page and using wordpress. But Free Software movement wrote compilers, operating systems, editors and alternates for almost everything. Most servers run free software. That is because we did the coding. You people can’t run this website without us. Don’t undermine great efforts by others in order to boast yourself. Really you have proved that you people are so cheap. Not everyone can do politics like you. For example, hospitals are not run by nurses alone. It needs doctors, cleaners, chemists, lab technicians and so on. Likewise, we are a movement. We need coders, speakers, contributors, donors, translators etc. Have you at least donated few dollars to free software movement for all these contribution they have given to humanity? First do that. If you had run everything with proprietary software, your monthly bill will be minimum $15. Talk is cheap. Do coding or give donation or at least don’t undermine their effort for cheap publicity.

  Vist http://www.fsf.org/donate/
  http://www.gnu.org/

  • @ @HisFeet

   I use GNU/Linux only. I agree that FSF has made a great efforts to stop corporate hijack of knowledge through IPR. But remember that it is only in the area of software. (Many software groups not even agree to upgrade their version to GPL V3.0 from V2.0)

   The main points thrust in this article is through

   1.these questions:
   * தமிழகத்தில் இதுபோன்ற சுதந்திர மென்பொருட்கள் பயன்படுத்துகிற வாய்ப்பை முறியடித்தது யார்?
   * இங்கும் மைக்ரோசாப்ட் போன்ற பெரு முதலைகள் ஏன் லாபியிங் வேலைகளில் ஈடுபடுகின்றன?
   * இதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிற தரகர்களான ஆளும் வர்க்கத்தையும் அரசமைப்பையும் புரிந்து கொள்ளாமல், மாற்றாமல் லினக்ஸ் போன்ற தளங்களை எப்படி மக்களுக்குச் சாதகமானதாக மாற்ற இயலும்?
   * சுதந்திர மென்பொருட்களை முழுமையாக பயன்படுத்துகிற வாய்ப்பு ஒரு சோசலிச அரசுக்குத்தான் உண்டு என்பதை இச்சம்பவங்கள் நிருபிக்கிறதா? இல்லையா?

   2. this fact:
   இந்நிலையில் அமெரிக்க சுதந்திர மென்பொருள் இயக்கத்திற்கான ஜாம்பவான் மற்றும் போராளி ரிச்சர்டு எம் ஸ்டால்மேன், சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கெடுத்ததோடு மட்டுமில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை லினக்சுடன் இணையாக நிறுவும் அரசின் செயல் “மதிய உணவிற்கு தண்ணீருடன் விஸ்கியையும் சேர்த்துத் தருவதைப் போன்றது” என்று மைக்ரோசாப்டுடான தரகுத்தனத்தை அம்பலப்படுத்தியிருந்தார்.

   Also IPR regime is not limited to software field; it is extended and existing in every area of social life of humans. Without dismounting corporatocracy in the entire spectrum of human societies, how to achieve the freedom in totality.

   ps. Please don’t threaten for donations to FSF, it must be done voluntarily!

   • We, as a political movement not only fight for software. Our main interest is software. But we also fight for overall freedom of knowledge. That includes medicines, crops, chemicals, genetics etc.

    I am not threatening anyone to donate to FSF. I am saying that people should be thankful and support FSF instead of finding fault with them.

    //Do coding or give donation or at least don’t undermine their effort for cheap publicity. //

    Am I threatening to code too? I am just saying that you people are using their code without paying a penny yet undermine their effort.

  • அவரடி,

   கட்டுரை சுதந்திர மென்பொருளுக்கான கூட்டமைப்பின் உழைப்பை மறுக்கவில்லையே . ஆனால் அது முதலாளித்துவ இலாப வெறியை தீர்க்குமா என்பது தான் மையமானது .

   முதலில் கட்டுரை முன் வைக்கும் கேள்விகளுக்கு தாங்கள் பதில் தாருங்கள் .

   தமிழகத்தில் இதுபோன்ற சுதந்திர மென்பொருட்கள் பயன்படுத்துகிற வாய்ப்பை முறியடித்தது யார்?
   இங்கும் மைக்ரோசாப்ட் போன்ற பெரு முதலைகள் ஏன் லாபியிங் வேலைகளில் ஈடுபடுகின்றன?
   இதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிற தரகர்களான ஆளும் வர்க்கத்தையும் அரசமைப்பையும் புரிந்து கொள்ளாமல், மாற்றாமல் லினக்ஸ் போன்ற தளங்களை எப்படி மக்களுக்குச் சாதகமானதாக மாற்ற இயலும்?
   சுதந்திர மென்பொருட்களை முழுமையாக பயன்படுத்துகிற வாய்ப்பு ஒரு சோசலிச அரசுக்குத்தான் உண்டு என்பதை இச்சம்பவங்கள் நிருபிக்கிறதா? இல்லையா?

   நன்றி

   • //ஆனால் அது முதலாளித்துவ இலாப வெறியை தீர்க்குமா என்பது தான் மையமானது .//

    You first learn to compare things properly. Why you compare apples with oranges? What is the motto of Free Software movement? They just want give freedom to end users of software. What you talk about is like “how can you wear the gloves on your head?” Each movement and group has its purpose and motto. Not everyone is like you or vinavu without any concrete ideology but to accuse others.

 5. //சுதந்திர மென்பொருட்களை முழுமையாக பயன்படுத்துகிற வாய்ப்பு ஒரு சோசலிச அரசுக்குத்தான் உண்டு என்பதை இச்சம்பவங்கள் நிருபிக்கிறதா? இல்லையா?//

  Free Software movement was started and is growing in secular democracies. You can’t imagine such groups to exist in China or USSR or North Korea. There government wants to control all aspects of life. Heard about great firewall of China? They are afraid of even small computer kits like Raspberry Pi as it runs GNU/Linux, it can easily bypass their censorship.

  http://www.theregister.co.uk/2013/05/29/raspberry_pi_helps_hassle_free_circumvention_great_firewall/

  I am in no way against Socialism. I support Socialist Democracy. Not an authoritarian, communist regime!

 6. There is nothing is produced without labor. But corporations came up with idea that they can use programmers time for free.

  The losers will spend their time coding and testing. Corps then will use these software for free. These losers get a satisfaction that they are actually helping society.

  All big corps use mostly free softwares and save money.
  Common man on street will play with linux get frustrated and go back to win/apple products.

  When open source code had heart bleed bug, so many big corporate companies had to declare their usage. They are all building on these FREE softwares. For a programmer in labor point of view, it is a huge loss.

  May be blog softwares help Vinavu like people but most of the benefit goes to capitalist

  • //The losers will spend their time coding and testing. Corps then will use these software for free. These losers get a satisfaction that they are actually helping society. //

   You have proved that you are having 0% knowledge in this aspect. GNU GPL license is written to protect corporates to exploit the code. If they use GNU GPL code, they should release the modfied source too (if they are releasing the code to public.) You can say that how one will find who is using what. There can be small companies that do that. But if bigger products do that, just using a disassembler will reveal the truth. There are also thirdparty reviews in corporates to check the violations.

   Next, as the code is already release to public any similar idea can’t be patented. It will come unde prior art. So the corporates can’t get patent and increase price for that feature. So it is helping in some way to public.

   Even projects BSD and other permissive licenses are getting their share of income. For example, most of them are getting money for support and other services but not for the code itself.

   Lastly, you can’t say anyone loser, particularly if what they did changed the world. If a person is giving away something free for which others charge lot, that means the person is great and generous. Not the otherway. For a corporate slave like you, licking what they vomit is the norm. So I forgive you!

   • //If they use GNU GPL code, they should release the modfied source too//

    If they modify they have to release the code. what if they use the code as is?
    And finally corps need not pay the money for usage, all they have to do is release their modification.

    They will use the bug reporting system and hint what to be fixed and there are always losers like you will compete for fixing it.

    • If the source is not modified, then there is no need to release it as it is already available for everyone. You mean lifting a part of GPL code and bundling that with a larger piece of software? Even if the GPL code is not modified, the resulting work *NEEDS* to be released to the public under GPL… Do you understand now?

     • // Even if the GPL code is not modified, the resulting work *NEEDS* to be released to the public under GPL… Do you understand now?//

      You are under an illusion. If they use opensource for themselves , they dont need to publish it.but if they want to sell the resulting software , they will not bundle it and let the end user download it.

      Eg. Yahoo is affected by Heartbleed bug. Do you have yahoo services source code with you, because they used openSSL ?

      • Raman,

       Yahoo used openSSL as a software. Anybody will be able to use free software, that includes corporates.

       Second, openSSL is under BSD license. It is an inclusive license which allows corporates to (ab)use the code. That is why we need to use GPLv3, the copyleft license.

       Third, my core point is that once the idea is out and open, no once can claim patent, exclusivity etc. So this will prevent corporate monopoly.

       It is not possible with current law to prevent corporates using free software.

       Here is a scenario to ponder. One day you invent a vaccine for AIDS. It is from a common plant. So it can be made cheaply. If you give it to corporate, they will give billions of dollors, patent the drug and sell it for very high price. But if you release it to public for free, the vaccine will be made for lesser or no cost, hence everyone can afford it! still you get donations from good heart and you can make a decent living but not as a super rich. Problem you are saying is, still the drug companies’ owners will get vaccinated. If they sometimes get contract to manufacture it, they may get little profit but not anything near what they will get if they had patented.

       Which one will you choose? I will go with second.

       Do you think the second option is not serving people?

       Another fact is, most who work on free software developments are paid or students doing project or hobby programmers. So nobody is losing anything here.

 7. வணக்கம் ,
  நான் கடந்த நான்கு ஆண்டுகளாக லினக்ஸ் operating system மட்டும் தான் உபயோகிக்கிறேன் .எந்த பிரச்சினையும் இல்லை.பணம் கொடுத்து வாங்க வேண்டியது ஏதும் இல்லை.குறிப்பாக antivirus ஏதும் நிறுவ தேவை இல்லை.மத்திய ,மற்றும் மாநில அரசுகள் முழுமையாக இதை பயன்படுத்தினால் எளிமையாக ,உபயோகமாகவும் இருக்கும்.
  நல்ல பதிவுக்கு நன்றி .
  அன்புடன்
  முரளி

  • Dear Murali,

   It is a great news. Keep using GNU/Linux… Few points to ponder

   1. Say that you are usning GNU/Linux
   2. As you have saved lot of money, you can consider helping Free Software Movement by coding, documentation, translating or by donating. I am not forcing you. But just consider giving back to the society by work or by money. At least spread the word. Give GNU/Linux DVDs to your friends. Encourage them to use and help them installing and troubleshooting.
   3. It is a wrong assumption that GNU/Linux has no viruses. It is true that they are more secure and robust compared to other systems. But you can’t get that false sense of security that GNU/Linux = No Virus!

   I welcome your suggestion for moving all government office PCs to GNU/Linux

 8. டெபியன் பெடோரா உபுண்டு போன்ற பல லினகஸ் டிஸ்ரோக்கள் உண்டு. வின்டோஸ் மேக் போன்றவை சிறந்த வசதிகள் தந்தாலும் அவற்றின் சோர்ஸ்கோடு நமக்கு தரப்படாது. லினக்ஸில் GNU GPL உரிமம் என்பது மென்பொருளின் சோர்ஸ்கோடு பயனாளர்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கு நீங்கள் எவ்வளவு விலை வேண்டுமானலும் வைத்துக்கொள்ளலாம்..

  நான் கடந்த பத்து ஆண்டுகளாக லினக்ஸை பயன்படுத்தி வருகிறேன். லினகஸ் சர்வர்கள் மற்றும் டெஸ்டாப்புகள் போன்றவற்றை நிறுவுதல் கூலி இல்லாமல் வேலை செய்ய மாட்டோம். இவற்றின் விலை வின்டோஸ் சர்வர்களை விட சற்று அதிகம் தான். இங்கே நான் செல்ல விரும்பது Free என்பதன் அர்த்தம் சுகந்திரம் என்பதே தவிர அதன் விலையை அல்ல.

  நம் எப்போதும் ஓசிக்கு அடிமைகள் என்பதால் இங்கே அந்த அர்த்ததில் பார்க்க வேண்டாம்

 9. @ @HisFeet

  Please do not divert the discussion to other issues like coding, USSR, China, North Korea, Raspberry Pi, censorship…..

  You had understood the subject(by asking a question ‘Why you compare apples with oranges?’) but not delving into deeper thinking to identify the root causes.

  Apples and oranges are fruits consumed by human society irrespective of the barriers existing. Socialism or communism deals with welfare of humans without barriers on any social iterations due to any changes in political setup, social setup, improvement/inventions in science and technology, the adaptation of new technology in various methods, etc., So a socialist or a communist will have a say in everything associated with humans, of coarse after thorough understanding only. Common thinking may not allow to link one aspect of human society to another aspect.

  This is to be understood as’கம்யூனிச உரைகல்லில் சுதந்திர மென்பொருள்’:
  அதாவது சுதந்திர மென்பொருள் உண்மையிலேயே சுதந்திரமானதா? எவ்வளவு சுதந்திரமானது? அந்த சுதந்திரத்தை கார்போரேட்டுகள் களவாட விடாமல் இருக்க முடிகிறதா? ஏன் களவாடியவுடனேயே அந்த மென்பொருள் தன் சுதந்திரத்தை இழக்குமாறு சட்டரீதியாகப் பணிக்கப்படுகிறது? இதை சரிசெய்வதற்கு இப்போது நடைமுறையிலிருக்கும் கார்ப்போரேட் சாம்ராஜ்யத்தில் தீர்வு கிடைக்குமா?

  மென்பொருள் துறையில் உங்களைப்போன்ற ‘கோடர்கள்’ உட்பட, எவ்வளவு நபர்கள் பகலில் ‘மைக்ரோசாஃப்டுக்கும்’ மீதிநேரத்தில் சுதந்திர மென்பொருளுக்காகவும் உழைக்கிறீர்கள்? இந்த இரட்டை வாழ்க்கை ஒழிய வேண்டுமானால் தீர்வு என்ன?

  Good you are not against socialism. But please be cautious that every ism survives only with authoritarian approach including socialism. If you think that we are not under authoritarian regime at present, your understanding must extend to know that the laws are existing in every country to aid corporates and ONLY corporates.

  Communism is the ultimate state of human society which is a revolutionary thought and way outlaid by Karl Marx. That revolution will start only after winning over coporatocracy across the globe in totality, not simply having a parallel software along with proprietary ones.

   • @ @HisFeet

    I am sorry, again you are diverting.

    Another positive view on Free Software Movements:
    இவையெல்லாம் ஏகாதிபத்தியங்களை அம்பலப்படுத்தும் நல்ல முயற்சிகள் என்றாலும் இவையே அமெரிக்காவை வீழ்த்தி புரட்சியை கொண்டு வந்து விடாது. அப்படி புரட்சி வராமல் அறிவுத் துறையினரும் கட்டற்ற மென்பொருள் மூலம் விண்டோசை வீழ்த்தி விட முடியாது.

    Again I request you to answer for these questions first, which are pertinent to the article:

    அதாவது சுதந்திர மென்பொருள் உண்மையிலேயே சுதந்திரமானதா? எவ்வளவு சுதந்திரமானது? அந்த சுதந்திரத்தை கார்போரேட்டுகள் களவாட விடாமல் இருக்க முடிகிறதா? ஏன் களவாடியவுடனேயே அந்த மென்பொருள் தன் சுதந்திரத்தை இழக்குமாறு சட்டரீதியாகப் பணிக்கப்படுகிறது? இதை சரிசெய்வதற்கு இப்போது நடைமுறையிலிருக்கும் கார்ப்போரேட் சாம்ராஜ்யத்தில் தீர்வு கிடைக்குமா?

    மென்பொருள் துறையில் உங்களைப்போன்ற ‘கோடர்கள்’ உட்பட, எவ்வளவு நபர்கள் பகலில் ‘மைக்ரோசாஃப்டுக்கும்’ மீதிநேரத்தில் சுதந்திர மென்பொருளுக்காகவும் உழைக்கிறீர்கள்? இந்த இரட்டை வாழ்க்கை ஒழிய வேண்டுமானால் தீர்வு என்ன?

 10. at his feat, while u want to aparantly identify yourself with the FSF movement, their service, their genorocity, their labour and so on, u personally seem not to be so. there is always a paramount difference between constructive criticism and bashing someone. the article is surely not a bashing attempt, and if it seems to be so, that’s only because of ur (voluntary or involuntary) misreading! presented here are facts only for extending and expanding the FSF like movements. if it appears as an act of undermining, then you please specify your political stand and what made u feel so.
  regarding ur hospital metaphor, of course any hospital cannot run without doctors, nurses and technicians. still, you need a premise to operate, and that’s nothing else but the political ideology of abolishing imperialism and capitalism, and replacing it with the working class socialist authoritarianism.

  the seemingly socialist countries u mention may strictly follow the internet activities, but no socialist country will ever promote the capitalist companies and won’t force to become their slave.

  regarding ur views on socialism and communism, its a broader issue concerning politics, economy and socio-cultural changes, and its better to talk with knowledge and reading. its not a religious faith to say “I believe” or “I don’t”! you can understand the logic of moving ahead to communism practically only while living in a socialist setup, please don’t make a ‘know all’ show off here!
  thought of answering ur views only since they reflect many others’, and I shall NOT reply to ur further comments/replies.

  thank u.

 11. @ @HisFeet

  I request your openness in answering to the questions pointed to you since you took a specific stand.

  Having commented in a public forum, I do not understand the reason for your silence/ diversion/ avoidence to answer direct questions.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க