Thursday, October 10, 2024
முகப்புஉலகம்ஈழம்ராஜபக்சே - மோடியைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் - படங்கள்

ராஜபக்சே – மோடியைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் – படங்கள்

-

1. கோவை

கோவையில்

  • முதல் நாளே கழன்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி!
  • ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல ! வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்! பார்ப்பன பாசிசக் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !
  • தமிழின விரோத பா.ஜ.க-வை தமிழர்களின் காவலனாக சித்தரித்த வைகோ, நெடுமாறன் கும்பல் ஆர்.எஸ்.எஸ்-ன் அய்ந்தாம் படையே!
  • விஜயகாந்த், ராமதாசு, பாரிவேந்தர், உள்ளிட்ட பிழைப்புவாதிகள் தமிழ் மக்களின் விரோதிகளே!

என்ற முழக்கங்களுடன்

ராஜபக்சே இந்தியா வரவை கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம் , புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்!
சிங்கள இனவெறி பாசிஸ்டு
ராஜபக்சேவை விரட்டியடிப்போம்!

கழண்டு போச்சு, கழண்டு போச்சு
முதல் நாளே கழண்டு போச்சு
இந்துத்துவ மோடியின் முகமூடி!
கழண்டு போச்சு, கழண்டு போச்சு!

கூட்டா..ளிதான் கூட்டா..ளிதான்
மத வெறியன் நரேந்திர மோடியும்
இனவெறியன் ராஜபக்சேவும்
கூட்டாளிதான் கூட்டாளிதான்!

வேறல்ல வேறல்ல
ஈழத் தமிழரை கொன்றொழித்து
இரத்தம் குடித்த இராஜபக்சேவும்
சிறு..பான்மை முசுலிம் மக்களை
கொலை செய்த மோடியும்
வேறல்ல வேறல்ல

வை.கோ, இராமதாசு, நெடுமாறன்
ஆர்.எஸ்.எஸ்-ன் அய்ந்தாம் படையே!
இந்த கும்பலின் எதிர்ப்பெல்லாம்
நாடகமே, நாடகமே!

பா.ஜ.க-வின் இராதாகிருஷ்ணனை
பார்ப்பன-பாசிஸ்டு இராதாகிருஷ்ணனை
முள்ளி வாய்க்கால் முற்றத்துக்கு
வரவைத்து…. நம்ப வைத்து
ஈழத்தமிழரின் நண்ப..னென்று
தமிழக மக்களை நம்ப வைத்தது
வை.கோ, நெடுமா கும்பலே!

தமிழக மக்களை மட்டுமல்ல
புலிகளை..யும் நம்ப வைத்து
கழுத்தறுத்தது அய்ந்தாம் படையே
வை.கோ நெடுமா அய்ந்தாம் படையே!

காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில்
ஆர்.எஸ்.எஸ்-க்கு வேலை செய்ய
தி.மு.க எதிர்ப்பு என்ற பெயரில்
பார்ப்பன கும்பலுக்கு சொம்பு தூக்கும்
வை.கோ, நெடுமா– வோடு
தமிழருவி என்ற பெயரில்
கூவம் ஒன்று அலையுது!

விஜயகாந்து, இராமதாசு
பாரி வேந்தர் உட்பட
பிழைப்புவாதிகளை இனம் காண்போம்!
தமிழின விரோதிகளை விரட்டியடிப்போம்!

வேறல்ல வேறல்ல
கய..வாளி காங்கிரசும்
மதவெறி கும்பல் பா.ஜ.க-வும்
வேறல்ல வேறல்ல!
காங்கிரசும் பா.ஜ.க-வும் வேறல்ல

இந்திய முதலாளிகள் கொள்ளைக்காக
தெற்… காசிய பிராந்தி…யத்தில்
மேலா…திக்கம் பெறுவதற்..காக
ஈழத் தமிழரை அழிக்கிறான்
தமிழக மீனவரக் கொல்லுறான்

கூட்டாளிதான் கூட்டாளிதான்
காங்கிரசும் பா.ஜ.க-வும்
டாடா அம்பானி நலனுக்காக
தமிழனக் கொல்வதில் கூட்டாளிதான்

நம்பாதீங்க, நம்பாதீங்க
காங்கிரசுக்கு மாற்றுன்னு
பா.ஜ.க-வை நம்பாதீங்க!
விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்
கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளை
காங்கிரசை, பா.ஜ.க-வை
விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்!

வைகோ, நெடுமாறன்ஆகியோர் தாங்கள் என்னதான் பெரியாரின் பேரன் என்றும் தமிழினத்தின் காவலன் என்றும் சவடால் அடித்தாலும் இவர்கள் ஆர்.எஸ், எஸ்-ன் அய்ந்தாம் படையினரே என்பது அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. இவர்களை அம்பலப்படுத்தியும் தமிழ் மக்கள் இந்த விபீடணர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையிலும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளர் மணிவண்ணன் சிறப்புரை ஆற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

2. ஒசூர்

மோடியின் முகமூடியை திரைக்கிழைத்த ஓசூர் பு.ஜ. தொ.மு வின் ஆர்ப்பாட்டம்.

ரலாறு காணாத தனிப்பெரும்பான்மை பெற்ற ராஜாதிராஜ, ராஜ கம்பீர, ராஜகுலோத்துங்க ராஜசக்கரவர்த்தி, நரவேட்டைபுகழ் நரேந்திரமோடியின் பட்டாபிஷேகத்தில் எல்லா நாட்டு ராஜாக்களும் பங்கேற்க வேண்டும் என்பதன் ஒருபகுதியாக மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கொலைகாரன் ராஜபக்சேவை அழைத்திருக்கிறது பார்ப்பன பாஜக அரசு. இது குஜராத்தின் இனப்படுகொலைக் குற்றவாளி, ஈழத் தமிழினக் கொலைகாரனுக்கு அளிக்கும் விருந்துபச்சாரம்!. மன்மோகன் அரசு ராஜபக்சேவுக்கு கள்ளத்தனமாக ஆதரவு கொடுத்தது என்றால்…, சிங்கள் இனவெறி அரசுக்குத் தனது ஆதரவைப் பகிரங்கமாகவே பிரகடனம் செய்திருக்கிறார் மோடி

இந்த விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற கொள்கை முடிவின் அடிப்படையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதையேற்று அவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் எனவும் ஒரு விளக்கம் தரப்படுகிறது, வேலிக்கு ஓணான் சாட்சியாம்! ‘இந்த விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் புனிதமான பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சேவை அழைக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று வை.கோ, ராமதாஸ், நெடுமாறன், தமிழருவி மணியன், பாரிவேந்தன் உள்ளிட்ட ஐந்தாம் படையினரின் கெஞ்சல் கூத்துகள் ஒருபுறம். இந்நிலையில் இவர்களனைவரையும் அம்பலப்படுத்தி தமிழ் மக்கள் முன்னிலையில் இந்த கபடவேடதாரர்களை தோலுரித்து,

மைய முழக்கங்களை முன்வைத்து மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி, ஆகிய புரட்சிகர அமைப்புகளால் தமிழகம் முழுவதும் 26.05.2014 அன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் இணைந்து 26.05.2014 மாலை 5.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இவ்வமைப்பின் மாவட்டச் செயலாளர் தோழர் இரா.சங்கர் சிறப்புரையாற்றினார். இறுதியாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் விஜயபிரகாஷ் நன்றியுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தோழர்பரசுராமன், சின்னசாமி, சாந்தக்குமார், வெங்கடேஷ்  மற்றும் உறுப்பினர்கள் தொழிலாளர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

முழக்கங்கள்:

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
போர்க்குற்றவாளி இராஜபக்சேவுக்கு
அழைப்பு விடுத்த பாஜக கும்பலை
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!

ஈழத்தமிழர்களை கொன்று குவித்த
இனப்படுகொலை குற்றவாளிக்கு
சிவப்பு கம்பள வரவேற்பா?

தமிழர்களுக்கு பகையாளி!
மோடிக்கு பங்காளியா?

வெட்கக்கேடு! வெட்கக்கேடு!
தமிழினத்துக்கே வெட்கக்கேடு!

வெளியேற்று! வெளியேற்று!
ரத்த வெறியன் ராஜபக்சேவை
வெளியேற்று! வெளியேற்று!

திரும்பிப்போ! திரும்பிப்போ!
வேட்டை மிருகம் இராஜபக்சேவே
மனித குல எதிரியே
திரும்பிப்போ! திரும்பிப்போ!

கழன்டு விட்டது! கழன்டு விட்டது!
மோடியின் முகமூடி
கழன்டு விட்டது! கழன்டு விட்டது!

பாஜகவை தமிழர்களின்
காவலனாக சித்தரித்து
ஓட்டுப் பொறுக்கிய விஜயகாந்தே
ராமதாஸ், வைகோவே
பதில் சொல்! பதில் சொல்!
தமிழர்களுக்கு பதில் சொல்!

பொங்கிவரும் கண்ணீரோடும்
கும்பிட்ட கரங்களோடும்
மன்றாடும் வைகோவே!
நீலிக்கண்ணீர் வடிக்காதே!

கபட நாடகம்! கபட நாடகம்!
கோமாளி வைகோவின்
எதிர்ப்பு என்பது கபட நாடகம்!

கரசேவை செய்வதற்கு
கருப்புத்துண்டு உனக்கெதற்கு!

பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு
இராஜபக்சே அழைப்பு என்பது
மோடியின் இராஜதந்திரமாம்!
சார்க் நாடுகளின் உறுப்பினராம்!
பச்சைப்புரட்டு! பச்சைப்புரட்டு!
பார்ப்பன ஊடகங்களின்
பச்சைப்புரட்டு! பச்சைப்புரட்டு!

விஜயகாந்தும், ராமதாசும்
ஈஸ்வரனும், பாரிவேந்தனும்
மோடி- இராஜபக்சேவின்
கூட்டாளிகளே! கூட்டாளிகளே!

பதவிக்காகவும், பணத்துக்காகவும்
தமிழ் மக்களை ஏமாற்றி
வயிறு வளர்க்கும் தலைவர்களை
பிழைப்புவாதக் கூட்டங்களை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!

வரலாறு முழுக்க உழைக்கும் மக்களை
ஒடுக்கி வந்த பார்ப்பனர்களுக்கு
வேரூன்ற வழிவகுக்கும்
வைகோ, நெடுமாறன், ராமதாஸ் கும்பல்
பாஜகவின் ஐந்தாம் படையே!

புரிந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!
ஓட்டுக் கட்சிகளின் துரோகத்தை
புரிந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!

இந்திய தரகு முதலாளிக்காக
பன்னாட்டுக் கம்பெனிக்காக
ஜனநாயக சக்திகள் மீதும்
உழைக்கும் மக்கள் பிணங்கள் மீதும்
கட்டியமைப்பதே! கட்டியமைப்பதே!
குஜராத் மாடல் வளர்ச்சி என்பது!

குஜராத்திலே கொள்ளையடித்து
ருசிகண்ட அம்பானிகளும்
டாடா, பிர்லா, அதானிகளும்
இந்தியா முழுக்க கொள்ளையடிக்க
தொடங்கி வைக்கும் வைபவமே!
இன்று பிரதமர் பதவியேற்பு விழா!

கொண்டாட்டமென்ன, கொண்டாட்டமென்ன,
உழைக்கும் மக்களே! உழைக்கும் மக்களே!
இதில் உங்களுக்கென்ன கொண்டாட்டம்
நீ இந்துவானாலும், முசுலீமானாலும்
ஆலையில் பணி நிரந்திரமில்லை
கல்வியில்லை, வேலையில்லை
விலைவாசி உயர்வுகளோ
நிற்கவே போவதில்லை
உன் போராட்டம் ஓயப்போவதில்லை
புரட்சியின்றி தீர்வு இல்லை!

ஒன்றே தீர்வு! ஒன்றே தீர்வு!
ராஜபக்சேவின் பாசிசத்திற்கும்
மோடியின் பாசிசத்திற்கும்
முடிவுகட்ட முடிவுகட்ட
உலகின் முற்போக்கு, புரட்சிகர
ஜனநாயக சக்திகளின்
வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்பது
ஒன்றே தீர்வு! ஒன்றே தீர்வு!

இன, மதவெறி பாசிசத்திற்கு
தமிழகத்தில் பாடைக் கட்டுவோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
ஓசூர்.
தொடர்புக்கு: செல்-9788011784.

—————————————————————-

3. மதுரை

ந்துமத வெறியன் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு  சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி பாசிச  ராஜபக்சே வருகையை எதிர்த்து மதுரையில் 26/05/2014 திங்கள் காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே , மகஇக, புமாஇமு, புஜதொமு, விவிமு, பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மகஇக அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் தலைமை தாங்கினார் . மோடிக்கு காவடி தூக்கிய வைகோ, ராமதாஸ் போன்றோரை அம்பலப்படுத்தி தலைமையுரை ஆற்றினார் .

உசிலை வட்டார விவிமு தோழர் ஆசை தனது உரையில், ராஜபக்சேவை அழைத்துள்ள மோடியின் அழைப்பின் பின் உள்ள இந்திய மேலாதிக்க நோக்கத்தை அம்பலப்படுத்தினார்.

ஒத்தக்கடை புஜதொமு தோழர் போஸ்  ஓட்டுக்கட்சிகளை அம்பலப்படுத்தியும் தெற்காசிய நாட்டு தலைவர்களை தன் பதவியேற்பு விழாவிற்கு அழைத்ததன் நோக்கத்தை அம்பலப்படுத்தி பேசினார்.

மஉபாமை, மதுரை மாவட்ட இணைச் செயலர் தோழர் வாஞ்சிநாதன், தமிழின விரோத பாஜக வை வைகோ, ராமதாஸ் , நெடுமாறன் போன்றோர் தமிழினக் காவலனாக சித்தரித்ததையும், தற்போது மோடியின் முகமூடி கிழிந்து தொங்குவதையும் அம்பலமாக்கினார்.

இறுதியாக மஉபாமை மதுரை மாவட்டச் செயலர் தோழர் லயனல் அந்தோனி ராஜ்,  மோடியின் அய்ந்தாம் படையான தமிழினப் பிழைப்புவாதிகளை திரை கிழித்தும் ,  பன்னாட்டு நிறுவனங்களின் ஏவலாள் மோடியின் நோக்கத்தையும்,  புரட்சிகர அமைப்புகளே மாற்று எனவும் எழுச்சிகரமாக பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை

4. தருமபுரி

ருமபுரி தந்தி அலுவலகம் அருகில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் தோழர் அருண் தலைமை தாங்கினார். தோழர் ஜானகிராமன், வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தோழர் கோபிநாத் விவசாயிகள் விடுதலை முன்னணி, வட்டார செயலர் சிறப்புரை ஆற்றினர்.

ஒலிபெருக்கி அனுமதி மறுக்கப்பட்ட போதும், கடைவீதியில் மக்கள்  கவனத்தை ஈர்க்கும்படி முழக்கங்கள் போடப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி

 5. கோத்தகிரி

நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக கோத்தகிரி ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலமலை அனைத்து தொழிலாளர் சங்க தலைவர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார், பொருளாளார் விஜயன் உரையாற்றினார். துணை செயலாளர் ராஜா நன்றியுரை நிகழ்த்தினார். சுப்பிரமணி, புவனேஷ், அசோக், பாலா, பரத், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

kothagiri-demo

தகவல்:
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம்

6. தஞ்சை

ஞ்சை சாந்தி-கமலா திரையரங்கம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ம.க.இ.க தஞ்சை கிளை செயலர் இராவணன் தலைமையில், விவசாயிகள் விடுதலை முன்னணி பட்டுக்கோட்டை வட்டார அமைப்பாளர் மாரிமுத்து, மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.

7. கடலூர்

rsyf-cuddalore-modi-poster

டலூரில் உழவர் சந்தை அருகில் 26-05-2014 அன்று மாலை 5.௦௦ மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி கடலூர் இணை செயலாளர நந்தா  தனது தலைமை உரையில் இனவாதிகளை அம்பலபடுத்தியும் பாசிச ஜெயா என்றுமே ஈழத்துக்கு ஆதரவு இல்லை என்றும் பிழைப்புவாதிகளின் கபட நாடகத்தை தோலுரித்து பேசினார்.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, நெய்வேலி அமைப்பாளர் குழந்தைவேலு தனது கண்டன உரையில் சுயமரியாதை கற்றுக் கொடுத்த பெரியார் பிறந்த மண்ணில் பா.ஜ.க. இந்த அளவுக்கு வளர்ந்தது என்றால் பெரியாரியம், திராவிடம், தமிழினம் என்று பேசுகின்ற பிழைப்புவாத தலைமைகளை பொறுப்பாக்க வேண்டும் என அறைகூவினார்.

ஜெயங்கொண்டம் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பாளர் சேகர்  தனது  உரையில் தனியார்மயம், தாராளமயம், உலக மயம் அடிப்படையிலான பொருளாதார கொள்கைகளை தீவிரமாக அமுல்படுத்தியது பா.ஜ.க. ஆட்சியில்தான் என்றும் நம் நாட்டின் ராஜபட்சே இந்த நரேந்திரமோடிதான் என்றும் பேசினார்.

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த மூன்று பேர் இறுதிவரை இருந்து போராட்டத்தில் பங்கெடுத்தனர். அடுத்தமுறை எங்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

தொழிற் பயிற்சி மாணவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போராட்டத்திற்கு வாழ்த்து கூறி கலந்து கொண்டார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

முழக்கம்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி-வாழ்க!
புதிய ஜனநாயக புரட்சி ஓங்குக!

வெளியேற்று, வெளியேற்று
2 லட்சம் ஈழத் தமிழர்களை
கொன்று குவித்த கொலைகாரன்,
சிங்கள இனவெறி போர்வெறியன்
இலங்கையின் ராஜபட்சேவை
நாட்டை விட்டு வெளியேற்று
உடனடியாக வெளியேற்று!

முள்வேலி முகாமில் பல்லாயிரம் தமிழ் மக்கள்
தமிழ்மக்கள் வீடுகளில சிங்களர்களின் குடியேற்றம்
ஈழத்தமிழ் பெண்கள் மீது தொடர்கின்ற பாலியல் தாக்குதல்!
ஈழத்தமிழ் இளைஞர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள ராணுவம்

கொடுரங்களை நிகழ்த்திக் கொண்டு
கொலைகாரன் வருகிறான் விருந்தாளியாய்,
அனுமதியோம்,அனுமதியோம்
கொலைகாரன் ராஜபட்சேவை
இந்திய மண்ணில் அனுமதியோம்!

டாடா,அம்பானிகளின் எடுபிடி!
இந்துமதவெறி பாசிஸ்டு!
இந்தியாவின் ராஜட்சே !
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு
சிங்கள இனவெறி ராஜபட்சேவுக்கு
சிவப்பு கம்பள வரவேற்பாம்!

வெட்ககேடு!வெட்ககேடு!
தமிழகமே வெட்ககேடு!
மோடி பிரதமர் ஆனாலே
இலங்கையில் ஈழம் மலரும் என்று
வீரவசனம் பேசி வந்த வை.கோ.வும்,நெடுமாறனும்
ராஜபட்சேவின் வருகை எதிர்த்து ஒப்பாரி வைப்பது ஏமாற்று!

கபட நாடகம், கபட நாடகம்!
அம்பலப்படுத்துவோம்! அம்பலப்படுத்துவோம்!
வை.கோ., நெடுமாறன், ராமதாசு!
விஜயகாந்த், பாரிவேந்தர்
தமிழின துரோகிகளின்
சந்தர்ப்பவாத, பிழைப்புவாத
நடவடிக்கைகளை அம்பலபடுத்துவோம்!

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி-வாழ்க!
புதிய ஜனநாயக புரட்சி ஓங்குக!

தகவல்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.

8. விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தர மறுத்து இழுத்தடித்தனர் காவல் துறையினர். அனுமதி இல்லாமலேயே ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுத்து ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் உட்பட நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

26-ம் தேதி திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர் தோழர்கள். தோழர்கள் முழக்கம் எழுப்பி, பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் அளித்தனர். போலீஸ் குவிக்கப்பட்டது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விழுப்புரம் மாவட்டச் செயலாளர் தோழர் செல்வகுமார் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். விவசாயிகள் விடுதலை முன்னணி திருவெண்ணெய் நல்லூர் வட்டார செயலாளர் தோழர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

அனுமதி இல்லாமல் நடத்துவதாக கூறி தடுத்து நிறுத்த முயற்சித்த காவல்துறை ஆய்வாளரிடம் அனுமதி கேட்டு தராததால் நடத்துகிறோம் என்று தோழர்கள் பதில் சொல்லவும் நகர்ந்து நின்று வேடிக்கை பார்த்தனர். திட்டமிட்டபடி 45 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அடுத்த நாள் பத்திரிகைகளில் ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி வெளிவந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,

விழுப்புரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க