privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதேடப்படும் குற்றவாளி துணைவேந்தர் கல்யாணியைக் கைது செய்!

தேடப்படும் குற்றவாளி துணைவேந்தர் கல்யாணியைக் கைது செய்!

-

தேடப்படும் குற்றவாளி துணைவேந்தர் கல்யாணியைக் கைது செய்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நாள் : 26.05.2014
நேரம் : காலை 10.30 மணி

  • துணைவேந்தரின் ஊழலுக்கு எதிராகப் போராடிய மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக் குழு அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் மீது கொலை வெறித் தாக்குதல்!
  • இரண்டு கைகளும் உடைக்கப்பட்டு படுத்த படுக்கையாய் மருத்துவமனையில் சிகிச்சை!
  • பேராசிரியர் சீனிவாசனை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய குற்ற எண்.216/2014, பிரிவுகள்: 294(b),324,307,109 I.P.C. வழக்கில் தேடப்படும் முதல் குற்றவாளி-மதுரை காமராசர் பல்கலைக் கழக  துணைவேந்தர்  தலைமறைவு
    துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே கைது செய்!
  • கூலிப்படை கும்பல் தி.மு.க. தொண்டரணிச் செயலர் சரவணன், ஜெயராமன் பதுங்கியுள்ள பல்கலைக் கழக ‘விருந்தினர் இல்லத்தை’ உடனே ரெய்டு செய்!
  • குற்ற எண்.216/2014 வழக்கின் இதர குற்றவாளிகள் பதிவாளர் முத்து மாணிக்கம், பி.ஆர்.ஓ.அறிவழகன், செல்லத்துரை, எஸ்.வி.கே.செல்வராஜைக் கைது செய்!
  • அ.தி.மு.க. துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு தி.மு.க.வின் எஸ்.வி.கே.செல்வராஜ்- தொண்டரணி சரவணன் அடியாட்கள்!
  • தி.மு.க. அடியாட்களை காவல்துறை கைது செய்ய விடாமல் தடுக்கும் மதுரை அ.தி.மு.க. நிர்வாகிகள்!
  • உரிய கல்வித் தகுதி இல்லாத வெறும் அரசியல் செல்வாக்கால் துணைவேந்தர் பதவிக்கு வந்த துணை வேந்தர் கல்யாணி மதிவாணனால் ஊழல் தலைவிரித்தாடும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம்!
  • பேராசிரியர்-அலுவலகப் பணியாளர் என அனைத்துப் பணிகளும் ஏலம் விடப்படும் அவலம்!
  • தட்டிக் கேட்டால் தாக்கி-பழிவாங்கப் படும் அவலம்!
  • உயர்கல்வி நிலையம் ஊழல் கூடாரமாய், ரவுடிகளின் ராஜ்யமாய் மாறிய கொடுமை!
  • தகுதியற்ற துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே பதவி நீக்கம் செய்!
  • உயர் கல்வி நிலையங்களில் தகுதியுள்ள கல்வியாளர்களைப் பணியில் அமர்த்து!
  • மதுரையின் அடையாளமான மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தைக் காப்போம்!
  • ஊழல் துணைவேந்தருக்கெதிராய் மக்களே வீதியில் இறங்கிப் போராடுவோம்!

மதுரை மாவட்ட காவல் துறைக்கு சில கேள்விகள்!

  • நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய குற்ற எண்.216/2014, கொலை முயற்சி வழக்கின் தேடப்படும் குற்றவாளிகள் முன் ஜாமின் வாங்காமல் பல்கலைக் கழகத்தில் பணியில் உள்ளபோது கைது செய்யாத மர்மம் என்ன?
  • கைதைத் தடுக்கும் அரசியல்வாதி யார்?
  • சாதாரண மக்கள் மீதான வழக்கில் பாய்ந்து கைது செய்யும் காவல்துறை அதிகாரம், அரசியல் செல்வாக்கு உள்ள துணைவேந்தரிடம் பம்மிப் பதுங்குவது ஏன்?
  • தாக்கிய பெயர் தெரியாத கூலிப்படையை உடனே கைது செய்த காவல்துறை, ஒப்புதல் வாக்கு மூலத்தில் மிகத்தெளிவாக ஜெயராமன் – சரவணனை முகவரியோடு சொன்ன பின்பும் 10 நாட்களாய் கைது செய்யாத காரணம் என்ன? முன் ஜாமின் வாங்கிக் கொள்ள கால அவகாசம் அளிப்பதன் பின்னணி என்ன?
  • ஜெயராமன் – சரவணன் கைதானால் தி.மு.க.வின் எஸ்.வி.கே.செல்வராஜ் -துணைவேந்தர் பெயர்கள் ஒப்புதல் வாக்குமூலத்தில் வரும் என்ற அச்சமா?
  • குற்றவாளிகளை கெஸ்ட் கவுசில் தங்க வைத்து பல்கலை வாயிலை அடைத்து காவல் துறை உள்ளே வரக்கூடாதென துணைவேந்தர் தடுப்பது எஸ்.பி.க்குத் தெரியாதா?
  • நாகமலை காவல் துறை – I.S. – S.P.C.I.D – இன்ன பிற உளவுத் துறையெல்லாம் தலைமறைவு கூலிப்படை குற்றவாளிகளைத் தேடாமல் வாயில் விரல் வைத்து சூப்பிக் கொண்டுள்ளதா?

தகவல் :மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை