திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்
உழைக்கும் மக்களை அறைகூவி அழைக்கிறது.
- ஊரை அடிச்சு உலையில் போடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள் எல்லாம் ராஜ வாழ்க்கை வாழுறானுங்க!
- ஒரு ஆட்டோ வைச்சு நாம பிழைக்கப்படுற பாட்டை என்னான்னு சொல்றது! எப்படி தீர்ப்பது?
அன்பார்ந்த தோழர்களே,
ஆட்டோ என்றாலே அடாவடி பேர்வழிகள், அதிகப் படியான கட்டணம் வசூலிப்பவர்கள், சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் என்று அதிகார வர்க்கத்தினரும், நுகர்வோர் அமைப்பினரும் தொடர்ந்து அவதூறு செய்கின்றனர்.
1 குவளை தேநீர் 7 ரூபாய்க்கு விற்கும் நாட்டில், 1 லிட்டர் பெட்ரோலில் 50 ரூபாய் வரை வரி பிடுங்கும் அரசு, 15 நாளைக்கு ஒரு முறை பெட்ரோல் விலையை தீர்மானிக்க முதலாளிக்கு அனுமதி அளித்தவர்கள் தான் ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறுகின்றனர்.
ஆண்டு முழுவதும் நட்டம் என கூறும் எண்ணெய் நிறுவனங்களின் சொத்து பல்லாயிரம் கோடியாக பெருகி வழிகிறது. ஆனால், ஆட்டோக்களுக்கு எண்ணெய் ஊற்ற முடியாமல் அளவு ஸ்கேலை விட்டுவிட்டு பார்த்து வண்டி ஓட்டும் ஆட்டோ டிரைவர்களுக்கு சாலையோரம்தான் சொத்து. கொள்ளைகளுக்கெல்லாம் கொள்கை என பெயர் வைத்த அரசு குடிமக்களையெல்லாம் குற்றவாளியாக பார்க்கிறது. நாள்முழுவதும் காத்திருந்து 4 சவாரி எடுப்பதற்கு நாம் படுகிற பாட்டை எப்படி புரிய வைப்பது, இந்த உலகத்திற்கு எப்படி சொல்வது?
இந்த மலை முழுங்கி மகாதேவன்கள் சித்தரிப்பது போல ஆட்டோ டிரைவர்கள் மக்களை ஏமாற்றி, கார் பங்களா என சொத்து சேர்த்துள்ளனரா? அல்லது எம்.பி, எம்.எல்.ஏ ஆவதற்காக அரசியலில் குதித்துள்ளனரா? ஒரு புண்ணாக்கும் கிடையாது. வேகாத வெயிலிலும், மழையிலும், தெருவில் காத்துக் கிடந்து 4 சவாரி எடுத்தால் தான், தன் வயித்துக்கும், குடும்பத்துக்கும் கஞ்சி ஊத்த முடியும். இதுக்கு தான் இம்புட்டு பாடுபடுகிறோம்.
அழுக்கை தின்று தடாகத்தை சுத்தப்படுத்தும் மீன்களை போல, ஆயிரம் துயரங்களை சுமந்து மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக செயல்பட்டு வருகின்றனர் ஆட்டோ டிரைவர்கள். பொருத்தமான துணையின்றி அரசு அலுவலகங்களுக்கோ, காவல் நிலையங்களுக்கோ பொதுமக்கள் செல்வதில்லை. ஆனால் தனது செல்ல பிள்ளைகளையும், வயது வந்த பெண்களையும் ஆட்டோ ஓட்டுனர்களை நம்பி அனுப்புகின்றனர் என்பதே உண்மை.
பெற்ற பிள்ளைகளை பராமரிக்க கூட நேரமில்லாமல் மக்கள் அவதிப்படும் இந்த உலகமயமாக்கல் காலத்தில் மக்களின் குடும்ப உறுப்பினராகவே ஆட்டோ கலந்துள்ளது.
ஆனால் நாட்டில் அன்றாடம் நடப்பதோ வேறு. பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை பார்த்தாலே தெரியும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள், பதவியை பிடிக்க அரசியல்வாதிகள் செய்யும் சதித்தனம். இந்த அத்தனை குற்றத்திற்கும் காரணமாக இருப்பது இந்த அதிகார வர்க்கத்தினரும், அரசியரல்வாதிகளும்தான்.
இன்னொரு புறம் அலைக்கற்றை ஊழல், தாதுமணல் கொள்ளை, நிலக்கரி, கிரானைட் என பல லட்சம் கோடி கொள்ளையடித்த மேற்படியாளர்கள் வெளிப்படையாகவே உல்லாச வாழ்க்கை அனுபவிக்கின்றனர். இந்த குற்றவாளிகள் தடுக்கப் படவோ, தண்டிக்கப்படுவதோ இல்லை. இவர்களின் கொள்ளை சட்ட பூர்வமாக அங்கீகாரம் பெற்று நடக்கின்றது.
ஆனால் உழைக்கும் மக்களின் தொழிலான ஆட்டோ மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அமைப்பு சாரா தொழில், சிறு தொழிற்சாலை, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் நசுக்கப்படுகின்றன. நகரத்தை விட்டு பிடுங்கியெறியப்படுகின்றன. இதற்கு அற்பத்தனமான காரணங்களை கூறி நியாயப்படுத்துகின்றனர். நகரத்தை பணக்கார ஊதாரிகளுக்கு தாரைவார்க்கவே இத்தனை சதித்தனம் செய்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும்.
நமது வாழ்க்கையை பாதுகாக்க ஆட்டோவை மட்டுமல்ல, இந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகள், அரசமைப்பு அனைத்தையும் சேர்த்து ஓட்ட வேண்டும்.
ஆட்டோ தொழிலை ஒழிக்க துடிக்கும் அதிகார வர்க்க சதிவலையை முறியடித்து தொடர்ந்து போராடிவரும் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கத்தின் 14-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி S.R.C கல்லூரி அருகில் உள்ள சுருதி மஹாலில், 15.6.2014 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் தொடர்பான விவரங்களை பின்னர் தருகிறோம்.
______________________________
இவண்
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம்
இணைப்பு : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
திருச்சி மாநகர் – மாவட்டம், தொடர்புக்கு : 9788183999
அன்று ஒரு நாள் காலையில் (7.00)குடும்பத்துடன் பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தத்தில் முடிச்சூர் செல்ல ஆட்டோ கேட்டேன். ஒருவர் கூட மீட்டர் போட சம்மதிக்கவில்லை. 5KM தூரத்திற்கு அவர்கள் கேட்ட தொகை, ரூபா 250/-… மீட்டர் போட்டால் எவ்வளவு வரும் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதற்கு பெயர் கொள்ளை இல்லையா?
நான் கடைசியில் பேருந்தில்தான் சென்றேன்….
NTL Call Taxi A/C Car rate for first 6 km 150Rs.
For additional km 18Rs.
“எவன் எவனோ திருடறான், நான் திருடினால் என்ன?”-ங்கறீங்க. பலே…
ஒழுங்கா மீட்டரை போட்டு ஓட்டுன்னா இவங்களுக்கு வலிக்குது….இந்த __________ ஒரு போராட்டம், அதுல கொடி பிடிக்க ஆள் சேர்க்க வினவு மெனக்கெடுவது எச்சைத்தனமாக உள்ளது… அரசாங்கம் செய்வது சரி தான்….
ஆட்டோ ஓட்டுரவங்க உழைக்கும் மக்கள்தான் அதுல பயணம் பண்றவங்களும் உழைக்கும் மக்கள் தான் அது சேர் ஆட்டோ இல்ல கையர் ஆட்டோவோ பெட்ரோல் விலை ஏற்றம் அட்டோ ஓட்டுனர்கலை மட்டும் அல்ல மக்களையும் பாதிக்கிறது மீட்டர் பொருத்துவதில் என்ன சிக்கல் மீட்டர் பொருத்துவதால் ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிக்கப்படுவதாக நினைத்தால் மக்கள் அதற்க்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள் மீட்டர் பொருத்துவதில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு என்ன சிக்கல் என்பதை வினவு தளம் வெளியிட வேண்டும்
very valid point
Government increasing the petrol price you idiots are not opposing.
Toll gate entry fees increases every April you idiots are not opposing.
Grocery prices are increases every day by day you idiots are not opposing.
Stack index increases hour by hour you idiots are not opposing
All the other cases you support demand & supply but for auto fixed price!.
If you have enough money prefer auto otherwise walk milka walk. At lease your sugar will reduce. If not you have to admit in to private hospital, where noway to bargain and noway to impose fixed price for operation.
if we don’t have money then we have to walk means, then if they can’t afford to run the auto with the government regulations and police atrocities then ask them to choose a different job. why should the people support them on their unjustifiable demands?
அதாவது இந்த பதிவு அதிகார வர்க்கத்தினர் மட்டும் இந்த மக்களைச் சுரண்டுகிறார்களே நாங்கள் மட்டும் சுரண்டக்கூடாதா! இது அநியாயமில்லையா! கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க என்பது போல்.
நண்பர்களே,
சுரண்டல், சுண்டல் என்று கூப்பாடு போடுகிறீர்களே, அதிகாரவர்க்கத்தினர் பகட்டு வாழ்க்கைக்காக மக்களை சுரண்டுவதையும், ஆடோக்காரன் அவனது சொந்த பொருளாதார வாழ்க்கைக்காக காசு கேட்பதையும் முடிச்சுப் போடுறீங்களே. இது எவ்வளவு அக்கிரமம்.
தனியார் முதலாளியின் இலாப வெறிக்காக பள்ளிகட்டணம், பெட்ரோல்,டீசல் விலை ஏற்றப்படும் போதும்,அரசு, பேருந்துக் கட்டணம் மின்சாரம்,பால் விலை ஏற்றப்படும் போதும் அடித்தட்டு மக்கள் அதை எதிர்த்து போராடினார்கள். அப்பவெல்லாம் வாளாவிருந்து விட்டு , ஆட்டோகாரன் கேட்டா மட்டும் தைய தைய ன்னு குதிக்கிறீங்களே மக்களே இது என்ன நியாயம்.
ஆட்டோவில் போவது என்பது ஒரு அடிப்படைத் தேவையல்ல. அதனால் நாம் கேட்கும் கட்டணம் கட்டுபடியாகவில்லை என்றால் , ஆட்டோவில் போகாமல் தவிர்த்து விடலாம். நண்பர் ஒருவர் சொன்னது போல, வாடகைக் காரில் கூட அதை விட குறைந்த கட்டணத்திற்கு போகலாம். உங்களை யாரும் கட்டுபடுத்த முடியாது.
தனிமனித தவறுகள் என்ற அடிப்படையில் , ஆட்டோக்காரனை பிச்சு உதறும் இந்த சூரப்புலிகள் , ஒரு சமுதாயப் பிரச்சினை என்று வரும் போது புறமுதிகிட்டு ஓடும் மர்மம் என்ன?
//ஆனால் தனது செல்ல பிள்ளைகளையும், வயது வந்த பெண்களையும் ஆட்டோ ஓட்டுனர்களை நம்பி அனுப்புகின்றனர் என்பதே உண்மை.//
சுத்தப் பொய்.. அப்படி எல்லாம் ஏதுமில்லை. தனியாக ஆட்டோ கேட்க வரும் பெண்களிடம் அவர்கள் அணுகும் விதமே தவறாக இருக்கும். ஒரு முறை கல்லூரியில் இருந்து என் வீட்டிற்க்கு திரும்ப வருவதற்கு ஆட்டோ கேட்டேன் 300 ரூபாய் கேட்டார்கள், மீட்டர் போட்டால் வெறும் 150 ரூபாய்க்கு கீழ் தான் வரும். 300 ரூபாய் அதிகம், மீட்டர் போடுங்கள் என்று கேட்டதற்கு மறுத்து விட்டார்கள். அந்த Auto Stand இல் இருந்த 5,6 ஆட்டோக்களும் பேசிவைதார் போல் 300 ரூபாய்க்கு குறையவில்லை. சரி,வேண்டாம் என்று கூறிவிட்டு பேருந்திற்காக திரும்ப நடந்தேன். உடனே ஒரு ஆட்டோகாரன், தன்னுடைய நண்பனை நோக்கி “Madam இவன் ஆட்டோல போங்க காசெல்லாம் வாங்க மாட்டான் Free யா உங்கள எங்க வேணாலும் கூட்டிட்டு போவான் என்று கூறினான். அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு ஆட்டோ ஓட்டுநரோ “நம்ம வண்டில வாங்க உங்கள வச்சு சூப்பரா ஓட்டுவன்” என்று இரட்டை அர்த்தத்தில் பேசினான். சில அடி தூரம் சென்ற பிறகு அந்த கூட்டத்தில் இருந்த வந்த குரல், இந்த முறை “வாங்க போங்க” எல்லாம் Missing ,அந்த குரல் “ஏய் வாடி அதான் நல்லா ஒட்றோம்னு சொல்றோம்ல வந்து ஏறுடி” என்று அச்சில் ஏற்ற முடியாத படிக்கு அருவெறுப்பாகவும், ஆபாசமாகவும் பேசியது அந்த ஆட்டோ ஓட்டும் அப்பாவி பாட்டாளி வர்க்கம்.
மேற்சொன்னது என் வாழ்வில் எனக்கு நடந்த உண்மையான கசப்பான அனுபவம். இத்தனைக்கும் நான் செய்த தவறு “நீங்கள் கேட்க்கும் பணத்தை கொடுக்க முடியாது மீட்டர் போடுங்கள்” என்று சொன்னது மட்டும் தான். இது எனக்கு மட்டும் அல்ல. பெண்கள் ஆட்டோ கேட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக ஏற மறுத்து விட்டால் இப்படி தான் தங்களின் பலத்தை நிருபித்து விடுகிறார்கள். அதிலும், தனியாக வரும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். என் தோழிகளும் இது போன்று பல முறை தங்களுக்கும் நடந்திருப்பதாக கூறி இருக்கிறார்கள்.ஒரு வேளை, இதற்க்கு பெயர் தான் “பாட்டாளி வர்க்க பொறுக்கி தனமோ”. வினவு தான் விளக்க வேண்டும்.
ரெபேக்கா மேரிக்கு சென்னையில் பல குடும்ப பெண்கள் ஆட்டோ டிரைவராக இருப்பதெல்லாம் தெரியாது. காலை ஆறுமணியிலிருந்து இரவு பதினோரு மணிவரை காக்கி மேல்சட்டை அணிந்து பாங்காக பத்திரமாக ஆட்டோ ஒட்டும் பல பெண்கள் இருப்பதை எல்லாம் இவர் பார்க்கமாட்டார். ஏனெனில் இவரிடம் இருப்பதெல்லாம் மேல்தட்டு வர்க்க பொறுக்கித்தனம்.
பெண்களும் ஆட்டோ ஓட்டி பிழைக்கின்றனர் என்பதை ரெபேக்கா மேரி ஏற்றுக்கொள்வார்கள் எனில் அவர்கள் குறிப்பிட்ட சம்பவம் ஆட்டோக்காரன் பிரச்சனையா? ஆணாதிக்கவாதியின் பிரச்சனையா?
ஆணாதிக்கவாதியின் பிரச்சனை எனில் அதற்கான அறுவை சிகிச்சையை மேரி அவர்களிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். பொட்டு வைத்து பூ வைத்து பெண்ணை பாலியல் பண்டமாக பார்க்கும் ஆணாதிக்க சமூகத்தை தலைமை தாங்கி நடத்துபவர் மேரி அவர்கள் தான். இவரிடமும் ஆணாதிக்க சிந்தனை விறைத்து தான் கிடக்கிறது.
Your argument against Rebecca Mary’s problem is not valid.
பிரச்சனையின் மையத்தைத் தெளிவாகவே சொல்கிறேன் மறுபடி,
இங்கு ஒரு சில ஆட்டோக்காரர்களின் ஆணாதிக்க வெறியை நியாயப்படுத்தவில்லை. பெண்கள் பூவும் பொட்டும் வைத்திருப்பதால் தான் ஆண்கள் சீண்டுகின்றனர் என்பதாக புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இது அகிலேஷ் யாதவும் முலாயம் சிங்கும் சொல்கிற வாதம்.
இதுவல்ல என் நிலைப்பாடு. இங்கு பெண்களுக்கு எதிரான வன்முறை வீட்டிலிருந்தே தொடங்கிவிடுகிறது. ஒட்டு மொத்த சமூகமே பெண்களுக்கு எதிரானது என்கிற பொழுது ஆட்டோக்காரனின் ஆணாதிக்கம் மட்டும் என்ன விதிவிலக்கா? ஒட்டுமொத்த ஆட்டோக்காரனையும் பாலியல் வெறியராக சித்தரிப்பதில் என்ன நியாயம் உண்டு?
பூவையும் பொட்டையும் குறிப்பிட்டது மேரி அவர்களுடனான பழையபாக்கி. அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதில் கத்தோலிக்க வெறி தான் உண்டு. பெண்ணே பெண்ணுக்கு எதிரியாக இருக்கிற தன்மையைத்தான் சாடுகிறேன். ஆட்டோக்காரர்களை குறிப்பிடுகிற பொழுது கத்தோலிக்க பாதிரியார்களின் கற்பழிப்பு குற்றங்களை கண்டிக்க முன்வருவாரா? எப்படி வன்னியசாதிவெறியின் சுயசாதி பாசம் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கண்மூடி இருந்ததோ அதைப் போன்றதுதான் மேரி அவர்களின் மதப்பாசமும் வர்க்க நிலைப்பாடும்.
பாட்டாளி வர்க்கப் பொறுக்கித்தனம் என்று குறிப்பிடுகிற திமிர்தனத்திற்கு இவருடைய ஆணாதிக்கமும் ஒரு காரணம். பொறுத்திருந்து அனைத்து வாதங்களையும் கவனியுங்கள்.
தோழர் தென்றல் ரெம்ப உணர்ச்சி வசப்படாதீர்கள் உழைக்கும் பெண்கள் கட்டிட வேலை செய்வோர் ,விவசாயக்கூலிகள் ,கூலிக்கார பெண்களில் எல்லாரும் பொட்டு பூ வைத்து கொண்டா வேலைக்கு போகிறார்களா இல்லையே பொட்டு பூ வைப்பது எனக்கு தெரிந்து நடுத்தர வர்க்க திருமணம் ஆன பெண்களே அவர்கள்தான் நடு வகிடு எடுத்து வகிடின் ஆரம்பத்தில் குங்குமம் வைத்து பூ வைத்து காட்சி அளிப்பார்கள் பிராமண பெண்களைப் போல அதுதான் தமிழர் அடையாளம் என்று மேரி சிஸ்டர் நினைக்குறார்கள் உண்மையில் அவர்கள் உழைக்கும் தமிழின மக்களையோ அவர்களின் கலாச்சாரத்தையோ நேரில் கண்டவர்கள் கிடையாது என்றே நினைக்கிறேன் அவர்களின் பார்வைக்கோனம் தவறானது பிலைட் ல போறவவன் பார்த்தா கீழ இருக்குறவங்க எல்லாம் எறும்பாதாம் தெரிவாங்க அது போல எனவே அவர்களின் பார்வையை தவறு என்று அவர்களுக்கு புரிய வைக்க முனையுங்கள் அதை விடுத்து அவர்களின் மீது ஆத்திரம் கொள்வதால் என்ன பயன்
மேரி,
உங்களுக்கு நடந்த அந்த மோசமான நிகழ்ச்சிக்கு என்னுடைய வருத்தங்கள்.
ஆனால், அந்த மோசமான நிகழ்வின் மூலம் நீங்கள் வந்தடையும் முடிவு தான் தவறானது. ஆணாதிக்கம் என்பது வெறும் வர்க்கம் சம்மந்தப்பட்ட பிரச்சினையல்ல அதன் மூல வேர் எங்கும் வியாபித்துள்ளது என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.
//இதற்க்கு பெயர் தான் “பாட்டாளி வர்க்க பொறுக்கி தனமோ”.
இது போன்ற உங்களின் பண்பற்ற பொறுக்கித்தனமான பின்னூட்டங்கள் நல்ல விவாதத்திற்கு வழிவகுக்காது .
நன்றி
//சுத்தப் பொய்.. அப்படி எல்லாம் ஏதுமில்லை.
என்ன தான் கூப்பாடு போட்டாலும் உண்மை அதுதான். உங்களை போல பெரும்பான்மையான மக்கள் நினைத்திருந்தால், ஆட்டோவில் ஒருத்தரும் செல்ல மாட்டார்கள். மாறாக கட்டுரை விளித்துள்ளது தான் உண்மை. பள்ளிக் குழந்தைகளில் இருந்து பெண்கள் பெரியவர்கள் வரை இன்னும் ஆடோக்களை பயன்படுத்ததான் செய்கின்றனர்.
சரி, ஆடோகரர்கள் மோசமானவர்கள் என்று உங்கள் அனுபவத்தின் மூலமாக கூறுகிறீர்கள். ஆனால் உண்மைஎன்னவேனில், 90 விழுக்காடுக்கு மேல் பெண்கள் நெருங்கிய உறவினர்கள், தெரிந்தவர்கள்,நண்பர்கள் மூலமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அப்படின்னா பேசாம பெண்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து விடுவோம். அப்பன்காரனே பொண்ண கெடுக்குறான் . அடைத்து வைத்தாலும் பிரச்சினை ஒயபொவது இல்லை.
முதலில் நீங்கள் பெண்ணும் அல்ல நீங்கள் கூறிய சம்பவம் உண்மையும் அல்ல. உழைக்கும் மக்களுக்கு எதிராக பேச வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் அடித்துவிடுவதா.
ஆணா ,பெண்ணா என்பது இருக்கட்டும் ! ஆனால் பாருங்க பெண்களுக்கு எதீரா நடக்கும் இது போன்ற பாலியல் குற்ற நிகழ்வுகளை எதீர் கொள்ளாமல் , பொருத்துகொண்டு வினவில்,Hindu வில் மட்டும் comments ,letter to the editorல் எழுதும் பெண்களீன் மனேநிலையை என்ன வென்று கூறுவது ?
மேலும் ,
[1]இந்திய வீடுதலைக்காக போராடிய ஜான்சிராணி , வேலுநாச்சியார் முதல் சுபாஷ் சந்திரபோஸ் படையில் கேப்டன் லட்சுமி அம்மா வரை உள்ள பெண்களிடம் இருந்து இன்றைய இளைய தலைமுறை என்னத்த கத்துகொண்டது என்று தெரியவில்லை !
[2] பேராண்மை படத்தில் காட்டபடும் இளம் பெண்களின் வீரத்தையோ ,விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடிய இளம் பெண்களின் வீரத்தையோ மதிக்காமல் , entertainmentக்கு ஒரு டிவி சேனல் போதாது பல சேனல் வேண்டும் என்று கூறும் இளைய தலைமுறையை சேர்ந்த பெண்கள், தம் மீது செலுத்தப்படும் பாலியல் சார் குற்ற நிகழ்வுகளை எதீர் கொள்ள தெரியாமைக்காக நாம் வருந்த தான் வேண்டி உள்ளது
ஃபேஸ்புக்கில் கார்ட்டூனிஸ்ட் பாலா
வினவில் வரும் பெரும்பாலான கட்டுரைகளில் உடன்பாடுடையவன் தான் நான்.. ஆனால் ஆட்டோ ஓட்டுனர்களை நியாயப்படுத்தி எழுதிய பதிவு படு அபத்தமானது.. எல்லா மாநிலத்திலும் இருப்பதுபோல் அரசு நிர்ணயம் செய்தபடி மீட்டர் போட்டு ஓட்டுங்கன்னு சொன்னா..
அம்பானி கொள்ளை அடிக்கலையா.. டாடா கொள்ளை அடிக்கலையா.. எங்களை மட்டும் ஏன் அடிக்க விட மாட்டேங்கிறீங்க என்று கேட்பது போலிருக்கிறது.. இவர்கள் பேசும் வாதம்.
வினவு தோழர்கள் வேணா மீட்டர் போடாத ஆட்டோ ஓட்டுனர்கள் கேட்கும் தொகை குறித்து அதிர்ச்சி அடையாதளவுக்கு இரும்பு இதயம் கொண்டவர்களாக இருக்கலாம்….
சாதாரண மக்கள் அப்படி இருக்க முடியாது….. 🙁
https://www.facebook.com/cartoonistbala?fref=ts
சிவப்பாளன்,
[1]white Bord பேருந்தில் Rs 5 க்கு பயணிக்க முடியும் போது Rs 10 கேட்கும் share ஆட்டோகாரர் ஒழிக ஒழிக !
[2]மாதம் ஒரு முறை விலை ஏற்றத்தை முடிவு செய்யும் ஆயில் அரசு/தனியார் கம்பெனிகள் வாழ்க ! அதை[விலை ஏற்றத்தை] அனுசரித்து செல்லும் மக்கள் கூட நீடுடி வாழ்க வாழ்க !
[3] Rs 10 தயீர் விலையை ஏற்றாமல் அதன் எடையை மட்டும் குறைத்து கொண்டு வரும் ஹட்சன் பால் கம்பெனி கூட வாழ்க வாழ்க வாழ்க வாழ்க!
[4]அரிசி விலையை தேவை மற்றும் அளிப்பு [demand and supply] விதிக்கு ஏற்ப ஏற்றியும் இறக்கீயும் விற்கும் அரிசி கடை அண்ணாசி கூட வாழ்க !
[5] திரைபடத்தீன் டிக்கெட்டை தான் வீறுப்பூம் விலைக்கு விற்கும் உதயம் மு த லா ளி வாழ்க !
[6]ஆனால் தின தின அத்தியாவசீய பொருட்கள் விலை ஏற்றத்தால் பாதிக்க படாத! ஆனால் ஆட்டோவுக்கு மீட்டர் மட்டும் போடாத கல்நெஞசர்கள் ஆட்டோ ஓட்டும் வர்க்கம் மட்டும் ஒழிக
[7] என்ன இப்போது மகீழ்ச்சியா சிவப்பாளன்? . 🙁
மேரி சிஸ்டர ஆட்டோக்காரங்க வெறுப்பேதுனத விட தோழர் தென்றல் துரத்தி துரத்தி வெறுப்பேறுவது போல தெரிகிறது ஆணாதிக்க சிந்தனை ஆட்டோக்காரர்களிடம் இருந்தால் மட்டும் அது ஏற்ப்புடையதா, அவர்களின் மன உளைச்சல் எல்லாருக்கும் ஏற்ப்படக்கூடியதே அதற்க்கு மருந்து தடவாவிட்டாலும் பர்வாயில்லை பாட்டாளி வர்க்கத்தின் பெயரை பயன்படுத்தி ஆசிட் ஊற்றாதீர்கள் நீங்கள் இன்னும் பக்குவபட வேண்டும்
தமிழ்நாட்டு ஆட்டோ உரிமையலர்களெல்லாம் கேரளா சென்று ஆட்டோவில் சவாரி சென்று பாருங்கள் பாஸ்.
மீட்டெர்க்குமெல் ஒரு பைசா கேட்கமாட்டார்கள். நீங்கள் போகும் இடம் சொன்னால் போதும் பேரம் பேச வேண்டாம். கட்டாயம் மீட்டர் போடுவார்கள். மீட்டர்க்கு சூடு எனபது கிடையாது. அவர்களுக்கும் பெட்ரோல் இதே விலைதான் பாஸ்.
கம்யூனிஸ்டுகள் கோலோச்சும் கேரளாவின் திருவனந்தபுரம் தம்பானூர் பேரூந்து நிலையத்திலிருந்து பன்னாட்டு விமான நிலையம் வரை செல்ல 77 ரூபாய் கேட்டார்கள் மலையாள ஆட்டோ ஓட்டுனர். நான் தமிழன் அவர் மலையாளி என்னை அவர் ஏமாற்றவில்லை. அதே நாள் மாலை 4 மணி நேர இடைவெளியில் சென்னையில் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து விமானநிலையம் வரை செல்வதற்கு 80 ரூபாய் கேட்டார்கள். நானும் தமிழன் ஆட்டோ ஓட்டுனரும் தமிழன். 5 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு 77 ரூபாய் கட்டுபடியஅகும் கேரளாவில் 2 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்கும் 77 ரூபாயைவிட அதிகமாக வாங்கும் சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் ஏமாற்றவில்லையா என்ன? அடுத்த நாள் காலை, தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ எடுக்கும் போது மீட்டர் போட முடியாது எனச் சொன்னார்கள். எந்த ஒரு ஆட்டோ டிரைவரும் மீட்டர் போட சம்பதிக்கவில்லை. என்ன வெட்டி நியாயம் பேசுகிறீர்கள் எனத் தெரியவில்லை. ஆட்டோ ஓட்டுனர்கள் வெயிலிலும் மழையிலும் கஷ்ட்டப்படுகிறார்கள் என்பதற்காக அவர்கள் செய்வதெல்லாம் நியாயம் ஆகுமா என்ன? மிகவும் அநாகரிகமான உடல் மொழி, அபாயகரமான ஓட்டுதல், கனிவின்மை, ஏமாற்றுதல் என்பதே பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்களிடம் காணப்படுகிறது. சில விதிவிலக்குகளும் உண்டு. ஆட்டோ ஓட்டுனர்கள் நியாயமானவர்கள் என்பது மக்கள் சொல்ல வேண்டும். தனக்குத் தானே சொல்லுவதால் எந்தப் பலனும் இல்லை.
உண்மை தான் FRANCIS,BALA.R.
கேரள அரசுகள்[கம்யூனிஸ்ட் or காங்கிரஸ் ] ஆட்டோ ஓட்டும் தோழர்களுக்கு அளித்து உள்ள சலுகைகள் , இன்சுரன்ஸ் திடங்கள் பற்றியும் நம் தமிழக அரசும் சிந்தித்தால் ,நீங்கள் கூறும் சூழ்நிலை இங்கும் கண்டிப்பாக உருவாகும்
//தமிழ்நாட்டு ஆட்டோ உரிமையலர்களெல்லாம் கேரளா சென்று ஆட்டோவில் சவாரி சென்று பாருங்கள் பாஸ்.மீட்டெர்க்குமெல் ஒரு பைசா கேட்கமாட்டார்கள்//
//கம்யூனிஸ்டுகள் கோலோச்சும் கேரளாவின் திருவனந்தபுரம் தம்பானூர் பேரூந்து நிலையத்திலிருந்து பன்னாட்டு விமான நிலையம் வரை செல்ல 77 ரூபாய் கேட்டார்கள் மலையாள ஆட்டோ ஓட்டுனர்.//
ஹலோ ஜோசப்/மேரி,
மேரி சொன்னது அவரது தனிப்பட்ட பிரச்சினை மட்டுமே . கண்டிப்பாக அது கண்டனத்திற்குரியது மற்றும் வருத்தத்திற்குரியது. ஆனால் அது உண்மை அது மட்டுமா? அது கண்டிப்பாக அவருடையப் பிரச்சினை மட்டுமல்ல, சமுதாய முழுமைக்கும் வியாபித்துள்ள ஆணாதிக்க கருத்தியல் முதல்வாதத்தால், அனைத்து தரப்பான பெண்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதற்காக வெறுமனே ஆடோகாரர்களை நிந்தனை செய்தால் என் செய்வது. ஆணாதிக்கவியாதிகள், இந்த சமுதாயம் முழுமைக்கும் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் இருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல், கட்டுரையின் பேசுபொருள் ஆணாதிக்கமல்ல. ஆட்டோ ஓட்டுனர்களின் வர்க்க பிரச்சினையும் அதன் தீர்வையும். அதனால், இது போல கலந்துரையாடல்கள் கட்டுரையின் பேசுபொருளில் இருந்து நம்மை விலகாமல் பார்த்து கொள்வது நமக்கு நல்லது.
நன்றி
ஜோசப் அவர்களுக்கு,
பக்குவப்படுவதில் எனக்குப் பிரச்சனையில்லை. அதற்காகத்தான் விவாதம். வைத்த கருத்துக்கள் தவறு என்னும் பட்சத்தில் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பும் கோருவேன். ஆனால் இங்கு நடப்பது வளமையான அருவெறுப்பான மோசடி.
1. என் தாய் 13வருடங்கள் சித்தாள் வேலை பார்த்தவர். அங்கு அவருக்கு மேரி சொல்வதைப் போன்ற பாலியல் தொல்லைகள் இல்லை என்று கருதுகீறீர்களா? மேரி அவர்களின் பார்வையின் படி, பாட்டாளி வர்க்கமெல்லாம் பொறுக்கிகள் என்றாகிறதல்லவா? ஆனால் என் அண்ணன் கட்டிட பெயிண்டர்; நான் பள்ளி பருவத்தில் பூகட்டியும் வீட்டுக்கு வீடு தண்ணீர் ஊற்றியும் தான் இன்றைக்கு இயற்பியல் துறையில் ஒரு நிலையில் இருக்கிறேன். பாட்டாளி வர்க்கத்தை ஆணையில் வைக்கிறோம் என்றால் அதற்குப்பின்னால் இது போன்ற வலிகளும் பாலியல் தொல்லைகளும் எல்லாமும் உண்டு. ஆனால் இங்கு நடப்பது என்ன?
2. இங்கு குற்றம்புரிகிறவனை படிப்பறிவற்றவனாகவும் பெரும்பாலும் தொழிலாளியாகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளாகவும் இந்த சமூகம் கண்டு கொள்கிறது. ஆனால் மேல்நிலை வர்க்கங்கள் அரசியல்வாதிகள் பிம்பாகவும் மதநிறுவனங்கள் அப்பட்டமான பொறுக்கிகளாகவும் நைச்சியமான தெள்ளவாரிகளாகவும் வலம்வருகின்றனர். நிர்பயாவின் கொடுமையை எதிர்த்த சமூகம் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பொழுது மெளனியாக இருந்தது. என்ன காரணம்?
3. ஆட்டோக்காரன் தான் பாலியல் பொறுக்கி என்ற இன்றைக்கு மேரி அவர்கள் சொல்லவில்லை. பிரியமானவளே படத்தில் ஒன் இயர் அக்ரிமென்டிற்கு வருகிறாயா என்று என்றோ சொல்லிவிட்டார்கள். இருவருமே குற்றவாளிகள் என்கிற பொழுது ஆட்டோக்காரன் அகப்பட்டுக் கொள்கிறான்.இதில் விஜய் கணவனாக தலைவனாக சமூகத்தின் பார்வையில் அங்கீகரிக்கப்படுகிறான். இதன் ஒருபக்க அரசியல் சமூகத்தில் இப்படித்தான் நீள்கிறது.
4. ஆணை விட்டுத்தள்ளுங்கள்; சினிமாவுக்கு போகும் சித்தாளு என்று எழுத்தாளர்கள் எழுதி காசு சம்பாரிக்கவில்லையா? பெண் எந்த வர்க்கமாக இருந்தாலும் பாதிப்படைகிறாள். இதே பெண் ஆட்டோ டிரைவருக்கு பிறரால் ஒரு தொல்லை ஏற்படக்கூடிய வாய்ப்பை சக ஆட்டோ தொழிலாளர்கள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள். எந்த வாசகர்களாவது நீங்கள் உட்பட பரீசிலீத்தீர்களா?
5. வார்த்தைக்கு வார்த்தை கன்னிமேரி கன்னிமேரி என்று கத்தோலிக்கம் தன் பிழைப்பை பெண்ணின் பாலியல்நிலையை வைத்துதான் அண்டிப்பிழைக்கிறது; ஆனால் மதம் என்று வருகிற பொழுது பாதிக்கபட்ட பெண்களுக்காக வாயைத் திறக்காமல் இதே பாதிக்கபட்ட மேரி முட்டுக்கொடுக்கிறார். சாதி என்று வருகிற பொழுது ஒரு கிராமமே பேசாமடந்தையாக இருக்கிறது. இதன் உள் அரசியல் என்ன விலைகொடுத்தேனும் முறியடிக்கப்பட வேண்டும்.
6. தொழிலாளர்களின் நிலை குறித்து இங்கு மதமோ அரசோ சட்டமோ மேல்நிலை வர்க்கங்களோ பேசாது. நாம் தான் பேச வேண்டும். அது ஆட்டோக்காரனாக இருந்தாலும் கூட. மற்றபடி ஆணாதிக்கவாதிகள் யாராக இருந்தாலும் இனங்கண்டு களையப்பட வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்கள் பற்றி பதிவிடுகிற நண்பர்கள் பல்வேறு மாநிலத்தின் ஆட்டோ தொழிலாளர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். அது தொடர்பான சில கேள்விகள் மற்றும் பார்வை;
1. பிற மாநிலங்களில் ஆட்டோ தொழிலாளர்கள் மட்டுமல்ல பல்வேறு கூலித்தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட ஒட்டச் சுரண்டப்படுகின்றனர். சான்றாக கட்டிடத் தொழிலில் பீகார் மற்றும் ஒடிசாத் தொழிலாளர்களின் கூலி தமிழ்நாட்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு குறைவு. சொந்தமாக வீடு கட்டுகிறவரும் ஆட்டோவில் போகிறவர்களும் இதைத்தான் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசுகின்றனர். அவ்வளவு பெருந்தன்மை!
2. மீட்டர் போட்டு ஓட்டினால் என்ன? என்று ஒரு நியாயமான கேள்வியை முன்வைக்கின்றனர். ஆனால் இது எப்பொழுது நியாயம் என்றால் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுகிற பிற மாநிலத் தொழிலாளி சராசரியான வாழ்க்கையையாவது மேற்கொள்கிறாரா என்பது. ஒரு சராசரி வாழ்க்கையை உறுதிப்படுத்தாமால் மீட்டர் போட்டு ஓட்டுவது அம்மக்களை அதிகாரப்பூர்வமாய் சுரண்டுவதற்கே வழிவகுக்கும். இதன் பொருள் மீட்டர் போட்டு ஓட்டுவதன் மூலமாக மாதத்திற்கு வாசகர்கள் தங்களின் பார்வையில் என்ன சம்பளத்தை நிர்ணயிக்க விரும்புகிறார்கள் என அறிய விரும்புகிறேன். தனக்காகவே போராட வராத நடுத்தர வர்க்கம் இவர்களுக்காக எப்படி வரும்?
3. அதே சமயம், 200 300 கொடுப்பது சரியா? என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள். இந்நிலைமைக்கு யார் காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டும். முதலாளிக்கு தொழிலாளிகள் தேவை என்றால் பல மாய்மாலங்களைச் செய்து தக்கவைத்து சுரண்டுகிறான். பலகிடுக்கிப்பிடி ஒப்பந்தங்களும் சட்டங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனால் ஆட்டோக்காரனால் யாருக்கு லாபம்? இங்குள்ள அரசு ஆட்டோக்காரனையும் வாடிக்கையாளனையும் அனாதையாக விடுவதை நாம் கண்டுகொள்ள மறுக்கிறோம். அனாதையாக மட்டுமில்ல ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டும் சாகச்சொல்கிறது. திகஞ்சவன் கரையேறு என்பதில் பாதிக்கப்படுவது ஆட்டோ தொழிலாளர்களும் வாடிக்கையாளர்களும் தான்.
4. பெண்களும் ஆட்டோ ஓட்டுகிறார்கள் என்பதை ஒருவர் கூட பரிசிலீக்கவில்லை. பின்னூட்டம் போடுகிறவர்கள் அவ்வளவு வசதியானவர்களா என்ன? இங்கேயே நமது வர்க்கப்பார்வை அடிபட்டு போய்விடுகிறது அல்லவா?
5. வாடகைக்கு வண்டி ஓட்டுகிறவர்கள் கதி என்ன? வண்டி ஓடினாலும் ஓடாவிட்டாலும் இரவானால் பணம் கட்ட வேண்டும். மீட்டர் போட்டு ஓட்டுகிற வாழ்க்கையில் வாடகை கட்ட முடியுமென்றால் அலுவாலியா சொல்கிற வறுமைக்கோடு வரையறை சரிதானே!
6. மெட்ரிக் பள்ளிகள் தனக்கென கட்டணக்குழுவை நியமித்து அதையும் தாண்டி கூடுதல் கட்டணம் செலுத்துவதை கை கட்டி வாய் மூடி வெறுமனே கவனிக்கிறோம். இதை சுட்டிக்காட்டுகிற பொழுது சில நண்பர்கள் “அவனும் கொள்ளையடிக்கிறான்; இவர்களும் கொள்ளையடித்தால் என்ன?” என்பதாகச் சிந்திக்கிறார்கள். ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது கட்டணத்தை முறைப்படுத்திக்கொள்வதற்கு எந்த வாய்ப்பாவது அரசு வழங்கியதா? அல்லது நாம் தான் அப்படி ஒரு உரிமையை இதுவரை வலியுறுத்தினோமா?
7. CITU போன்ற தொழிற்சங்கங்கள் இவர்களை கழுத்தறுத்து நடுவீதியில் அல்லவா நிறுத்தியிருக்கிறது. போராடுகிற குணத்தையே சிந்தையிலிருந்து அகற்றிவிட்டு அரசை நண்பனாகவும் ஆட்டோ ஓட்டுகிறவனை எதிரியாகவும் காட்டியதில் இவர்களுக்கும் பங்கு இருக்கத்தானே செய்கிறது.
ஆட்டோ ஒட்டுனர்களை உதிரிபாட்டாளிகள் என்று வரையறுக்கிற பொழுது அவர்களின் உழைப்பை ஒழுங்குபடுத்துவதும் உழைப்பின் பலனை உறுதிப்படுத்துவதும் புரட்சிகர அமைப்புகளின் கடமை. அப்பொழுது கூட இதனால் பலன் பெறப்போவது நடுத்தரவர்க்கமேயன்றி பாட்டாளி வர்க்கப் பொறுக்கிகள் அல்லர்.
திரு. சிவப்பு …
//அப்படின்னா பேசாம பெண்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து விடுவோம். .//
அந்த அர்த்தத்தில நான் சொன்னேனா.. ஆட்டோ ஓட்டுனர்களால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை நான் கூறினேன். இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல 3,4 முறை இதே போன்று ஆட்டோ ஓட்டுனர்களால் நான் பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். அதை எல்லம் ஒவொன்றாக கூறிக்கொண்டிருக்க முடியுமா..
// உங்களை போல பெரும்பான்மையான மக்கள் நினைத்திருந்தால், ஆட்டோவில் ஒருத்தரும் செல்ல மாட்டார்கள்//
நீங்கள் சொல்வது உண்மை தான். பேருந்துகளிலும் பாலியல் சீண்டல்கள் இருக்கின்றன அதற்காக பேருந்தில் பெரும்பான்மை மக்கள் பயணம் செய்யாமல் இருக்க முடியுமா. அலுவலகத்திலும் இது போன்ற அசிங்கங்கள் நடக்கின்றன அதற்காக பெரும்பான்மையான பெண்கள் வேலைக்கு செல்லாமலா இருக்க முடியும். அந்த சம்பவம் நடந்த பிறகும் நான் ஆட்டோவில் பயணம் செய்து இருக்கிறேன் இல்லை என்று சொல்லவில்லை. ஆயிரம் தவறுகள் நடந்தாலும் ஆட்டோ, பேருந்து,அலுவலகம் எல்லாம் வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சங்கள் ஆகி விட்டன. அதற்காக நான் சந்தித்த அவலம், நேரடியாக நான் பாதிக்க பட்டது இல்லை என்றாகி விடுமா.
//உங்களுக்கு நடந்த அந்த மோசமான நிகழ்ச்சிக்கு என்னுடைய வருத்தங்கள்.//
உங்கள் அனுதாபங்களுக்கு மிக்க நன்றி.. இந்த பின்னூட்ட பெட்டியின் மூலமாக உங்களால் முடிந்தது அவ்வளவு தான். உங்கள் வாதம் ஒரு சில ஆட்டோ ஓட்டுனர்கள் தான் அப்படி. அதற்காக அனைவரையும் அப்படி கூற முடியாது என்பது தான். ஆனால், எனக்கே 3 ,4 முறை இதே போன்று நடந்து இருக்கிறதே. நான் ஒரு சம்பவத்தை கூறினேன். இதற்க்கு நீங்கள் கூறும் அனைவருமே அப்படி இல்லை என்பது சரி. எனக்கு ஏற்ப்பட்ட மற்ற 2 நிகழ்வுகளை கூறினால் அப்போதும் இதே ஆறுதல் தானா. சரி,என் தோழிகளும் இந்த குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என்று கூறி இருந்தேன். அவர்களுக்கும் “அனைவரும் அப்படி இல்லை” என்கிற இதே ஆறுதல் தானா? இதுவே உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் யாருக்காவது இந்த நிலை ஏற்பட்டு இருந்தால்? மிகவும் வருத்ததுடன் தான் இதை கேட்கிறேன். நம் வீட்டு பெண் என்றால் எல்லோருக்கும் ஏற்படும் சராசரி உணர்வு. யாரோ ஒரு பெண் என்றால் வர்க்க உணர்வா? நீங்களாவது பரவாஇல்லை. உங்க பின்னூட்டத்தின் கீழே பாருங்கள் எஸ்தர் என்கிற ஒருவர் நான் பெண்ணும் அல்ல, நான் கூறிய சம்பவம் உண்மையும் அல்லவாம். என் வாழ்வில் நடந்த ஒன்றை மறுக்க இவருக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் பெண் என்பதை நிருபிக்க என் புகைபடத்தையா போட முடியும். உழைக்கும் மக்களுக்கு எதிராக நான் ஏதும் பேசவில்லை. ஆட்டோ ஓட்டுனர்களை தவிர வேறு யாரையும் நான் தவறாக பேசவில்லை. இப்போதும் சொல்கிறேன் ஆட்டோ ஓட்டுனர்களில் 80% அனைவரும் பொறுக்கிகள் தான்.
//பாட்டாளி வர்க்கப் பொறுக்கித்தனம்..//
பொத்தம் பொதுவாக இந்த வார்த்தையை கூறியமைக்கு நான் மன்னிப்பு கூறுகிறேன். அதை மாற்றி ஆட்டோ ஓட்டும் வர்கத்தின் பொறுக்கி தனம் என்று கூறுகிறேன் இனி.
நண்பர் மேரி,
உங்கள் புரிதல் தவறாக இருக்கிறது.
உங்கள் கருத்து படி, 80 விழுக்காடு ஆட்டோ ஓட்டுனர்கள் பொறுக்கிகள் என்றால், 80 விழுக்காடு பேருந்து ஓட்டுனர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றுமெல்லா உழைக்கும் வர்க்கம், உழைக்காத வர்க்கம் எல்லாருக்கும் அது பொருந்தும். பொதுவாக பார்ப்பதானால் , 80 விழுக்காடு ஆண் வர்க்கம் அப்படிதான் இருக்கிறது என்று கூறுவது தான் அறிவுடையவர்களுக்கு அழகு.
உங்களுக்கு நடந்த அந்த கொடிய நிகழ்வு அங்கிங்கெனாதபடி எங்கும் யாராலும் நிகழ்தபடுகிறது என்பதை நினைவில் கொள்க. பெரும்பான்மையான பெண்கள் அவர்களுக்கு தெரிந்த நபர்களாலே(நண்பர்கள்,உறவினர்கள்,…) பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உலகம் முழுதும் பெண்களுக்கு எதிராக ஆணாதிக்கம் இருக்க, அதற்க்கு பலிகடாவாக ஒருக் குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குற்றம் சுமத்துவது சரியாக இல்லை. இது ஒரு பிற்போக்குத்தனமான சிந்தனையும் கூட.
நன்றி.
தென்றல்
ஐயா.. பின்னூட்ட உபதேசியாரே. உங்களின் வருகை நான் எதிர் பார்த்த ஒன்று தான்.. என்னை நீங்கள் வசைப்பாடுவதற்க்கு முக்கிய காரணம் நான் பாட்டாளிகளை பற்றித் தவறாக கூறினேன் என்பதை விட என் மீது உங்களுக்கு இருக்கும் “Collective Vengeance” தான் என்பது உங்களின் மறுமொழிகளில் நன்றாக உணர முடிகின்றது. நான் உணர்ந்து கொண்டேனோ இல்லையோ எனது சகோதரர் ஜோசப் நன்றாக அதை புரிந்து கொண்டார்.நீங்கள் ஒரு பண்படாத ஜென்மம் என்பதை நன்றாக அவர் உணர்ந்து கொண்டார்.இல்லையென்றால் இந்த கட்டுரைக்கு சம்மதம் இல்லாத பெண்கள் பொட்டு வைக்கும் விஷயத்தை இங்கு இழுக்க வேண்டிய அவசியம் என்ன?
சரி, என் மீதான குற்றச்சாட்டுகளை பரிசீலிப்போம்..
//ஆணாதிக்கவாதியின் பிரச்சனை எனில் அதற்கான அறுவை சிகிச்சையை மேரி அவர்களிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். பொட்டு வைத்து பூ வைத்து பெண்ணை பாலியல் பண்டமாக பார்க்கும் ஆணாதிக்க சமூகத்தை தலைமை தாங்கி நடத்துபவர் மேரி அவர்கள் தான்//
பூ வைப்பது தொடர்பாக நான் இது வரை எந்த கருத்தையுமே எங்குமே கூறவில்லை. அப்படி கூறி இருந்தால் ஆதாரம் காட்டவும். கால்டுவெல் அவர்களின் கட்டுரையில் கூட்டு விவாதத்தில் பொட்டு வைப்பது தொடர்பாக தான் சில கருத்துகளை கூறி இருந்தேன். அதிலும் கூட ஆண் ஆதிக்க கருத்து ஏதும் கிடையாது. பெண்கள் பொட்டு வைப்பது தொடர்ப்பாக நான் கூறியது இது..
//பொட்டு வைப்பது தமிழ் பெண்களின் மிக அழகிய பண்பாடுகளில் ஒன்று. இதை இந்து மதத்துடன் இணைத்து, இந்து கலாச்சராமாக மாற்றியது காலத்தின் கொடுமை. பொட்டு வைத்தலுக்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த பிரிவினைகள் எல்லாம் இங்கிருக்கும் பாதிரிகளின், மத போதகர்களின், மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அடிப்படை வாத இயக்கங்களின் தவறான பிரச்சாரத்தின் விளைவே இது…//
நான் கூறிய என் கருத்தில் எங்கே ஆண் அதிகம் தெரிகிறது என்று கூற முடியுமா. பொட்டு வைத்து கொள்வது என்பதற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தான் நான் கூறியது .. ஒரு வேலை அழகியல் பண்பாடு என்று நான் கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். பொட்டு வைப்பது என்பது ஒரு பெண்ணின் தனி பட்ட உரிமை.
ஒரு பெண் பொட்டு வைத்து தனக்கு அழகு சேர்த்து கொள்வது தன்னுடைய சுயதிற்க்காகவும், தன்னுடைய திருப்திக்காகவும் தானே தவிர, அதற்க்கு பின்னால் ஆண் என்கிற எதிர் பாலின கவர்ச்சி இருக்க வேண்டும் என்று நினைப்பது தங்களுடைய மலினமான மார்க்சிய கண்ணோட்டம் தானே தவிர, என்னுடைய எண்ணமல்ல . இந்த விஷயத்தில் மதம் தேவை இல்லாமல் தலையிட கூடாது என்று தான் கூறி இருக்கிறேன். பெண்கள் பொட்டு வைத்து கொள்வது பெண்ணை ஆணுக்கு பாலியல் பண்டம் ஆகுவதற்காக தான் என்கிற தங்களின் தரம் தாழ்ந்த சிந்தனையை எதற்க்காக என் மீது தேவை இல்லாமல் திணித்தீர்கள். நான் எங்காவது பொட்டு வைக்காத பெண்ணை தவறாகவோ, வன்மையாகவோ கூறி இருக்கிறேனா. அப்படி இருந்தால் சுட்டி காட்டவும். …
//பெண்களும் ஆட்டோ ஓட்டி பிழைக்கின்றனர் என்பதை ரெபேக்கா மேரி ஏற்றுக்கொள்வார்கள் எனில் அவர்கள் குறிப்பிட்ட சம்பவம் ஆட்டோக்காரன் பிரச்சனையா? ஆணாதிக்கவாதியின் பிரச்சனையா?//
கொஞ்சமாவது உங்களுக்கு அறிவு இருந்தால் இப்படி ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றி இருக்காது.. இது எப்படி ஆண் ஆதிக்க பிரச்சனை ஆகும். ஒரு கால் டாக்ஸி ஓட்டுனரிடம் குறிப்பிட்ட தூரம் வரை போய் வருவதற்கு தோராயமாக எவ்வளவு ஆகும் என்று கேட்டால்? அதற்க்கான விலையை அவர் கூறுகிறார். எனக்கு கட்டுபடியாகது என்று நினைத்தால் நான் அதை மறுத்து விடுகிறேன். அவரும் புன்முறுவலோடு அங்கிருந்து சென்று விடுகிறார். Call Taxi ஓட்டுபவரும் ஒரு ஆண் தான். ஆனால், ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருக்கும் அடாவடி பேச்சு இவர்களிடம் இருப்பதில்லையே ஏன்? இத்தனைக்கும் நீங்கள் கூறும் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான் அவர்களும். அவர்களிடம் நீங்கள் குறிப்பிடும் ஆட்டோ காரர்களுக்கே உரிய ஆண் ஆதிக்க பொறுக்கி தனம் இருப்பதில்லையே ஏன்? விஷயம் இது தான், இதற்க்கு பெயர் ஆண் ஆதிக்க பொறுக்கி தனம் இல்லை.. ஆட்டோ கார பொறுக்கி தனம். நீங்கள் கூறும் ஒரு சிலரை தவிர மற்றபடி அனைவரும் நல்லவர்களே என்கிற வாதம் Call Taxi ஓட்டுனர்களுக்கு பொருந்துமே ஒழிய நிச்சயமாக ஆட்டோ காரர்களுக்கு அல்லவே அல்ல..
//ஆட்டோக்காரர்களை குறிப்பிடுகிற பொழுது கத்தோலிக்க பாதிரியார்களின் கற்பழிப்பு குற்றங்களை கண்டிக்க முன்வருவாரா?//
தவறை யார் செய்தாலும் தவறு தான். அதை ஆட்டோ காரன் செய்தால் என்ன, பாதிரியார் செய்தால் என்ன. பாதிரியார் செய்தால் அது புனிதமாகி விடுமா. ஆட்டோ காரன் செய்வதும் பொறுக்கி தனம் தான், பாதிரி செய்வதற்கு பெயரும் பொறுக்கி தனம் தான், இப்போது நீங்கள் என்னை தனி மனித தாக்குதல் செய்வதும் பச்சை பொறுக்கி தனம் தான்.
//ஏனெனில் இவரிடம் இருப்பதெல்லாம் மேல்தட்டு வர்க்க பொறுக்கித்தனம்.//
என்னமோ என் வீட்டிற்க்கே வந்து என் வாழ்நிலையை நேரில் பார்த்தவரை போன்று பேசுகிறீர்கள். நான் மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவளாக இருந்திருந்தால் இந்நேரம் நான் காரில் வலம் வந்திருப்பேன், குறைந்த பட்சம் இரு சக்கர வாகனதிளாவது பயனிதிருப்பேனே. அதற்க்கும் வழி இல்லாததால் தான் பேருந்து,ஆட்டோ என்று பொது போக்குவரத்தை நாடி அலைகளிந்து கொண்டிருக்கிறேன். இந்த எளிய உண்மை கூடவா உங்களுக்கு புல படவில்லை. கொஞ்சமாவது மனிதனை போல் சிந்திக்க பாருங்கள். விசயம் என்னவென்றால் என்னை தாக்கி பேச உங்களுக்கு காரணம் வேண்டும். அதை சரியாக பாட்டாளி வர்க்க பொறுக்கி தனம் என்கிற வார்த்தையில் பிடித்து கொண்டீர்கள்.
//3. அதே சமயம், 200 300 கொடுப்பது சரியா? என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள். இந்நிலைமைக்கு யார் காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.//
அறிவு என்பது கொஞ்சமாவது உங்களுக்கு இருக்கிறதா? நான் கூறியது பணத்தை பிரச்சனையாக அல்ல. 100,150 ரூபாய்க்கு போக வேண்டிய இடத்திற்கு 300,400 என்று கொள்ளை அடிப்பது என்று ஆகி விட்டது. நீ கேட்கும் பணத்திற்கு ஒப்பு கொள்ளாமல் உன் ஆட்டோவில் ஏறவில்லை என்பதற்காக ஏன் அடாவடியாக பேசுகிறாய். ஏன் ஏற மறுப்பவர்களை குறிப்பாக பெண்களை, வயதானவர்களை சகட்டு மேனிக்கு பேசுவது, ஆபாசமாக திட்டுவது போன்ற இழி செயல்களில் ஈடுபடுகிறாய் என்பதை பற்றி தான் இங்கு பேச்சு.
இறுதியாக, நீங்கள் சொன்னதை ஒரு முறை நீங்களே படித்து பரிசீலிக்கவும்.
//பக்குவப்படுவதில் எனக்குப் பிரச்சனையில்லை. அதற்காகத்தான் விவாதம்.//
இதை நான் எப்போதோ புரிந்து கொண்டேன். அதனால் தான் ஆரம்பம் முதல் இப்போது வரை என் கருத்துக்களை மட்டும் எப்போதும் முன்வைக்கிறேன். தனி மனித தாக்குதல்களை அல்ல. உங்களுடன் இது வரை நான் செய்து வந்த விவாதங்களில் தென்றல் என்கிற தனி மனிதரை நான் தாக்கியோ, தரம் தாழ்த்தியோ இது வரை பேசியதில்லை. இனியும் நான் அப்படி தான் இருப்பேன். ஒன்றை மாட்டும் சொல்லி கொள்கிறேன் தோழரே.
வியாசனுக்கு நீங்கள் அளித்த பதில்களிலேயே உங்கள் அறிவின் லட்சணம் தெரிந்து விட்டது. உங்களிடம் புத்தக அறிவும், ப்ளொக்குகளில் மேய்ந்து சேகரித்த தகவலையும் கக்குவதை தவிர உருப்படியாக எதார்த்தமாக, தர்கப்பூர்வமாக பேசுவதற்கு எதுவுமே உங்களிடம் இல்லை. மீறி போனால், உடனே உங்கள் கம்யுனிச பொது புத்தியான தனி மனித தாக்குதலை கையில் எடுத்து விடுகிறீர்கள். என்னுடைய இந்த மறுமொழியை படித்து விட்டு என்னை மேலும் வசைபாடலாம், தாக்கலாம். என்ன இருந்தாலும் கம்யுனிஸ்டுகள் நீங்கள் தனி வார்ப்புகள், தனி தாதுக்களால் உருவானவர்கள். உங்களை அதில் மிஞ்ச முடியாது
மேரி,
//ஒரு பெண் பொட்டு வைத்து தனக்கு அழகு சேர்த்து கொள்வது தன்னுடைய சுயதிற்க்காகவும், தன்னுடைய தானே//
அப்போ, கணவனை இழந்த கைம்பெண், வெள்ளைப் புடவையுடன், வெறும் நெற்றியுடன், வெறுங் கழுத்துடன், பூவிழந்து நிற்கும் கோலம் கூட அழகு தமிழினத்தின் கலாச்சாரமோ!!.
கணவனை மகிழ்விக்கவோ அல்லது எதோ ஒரு ஆணை மகிழ்விக்கவோ அவ்வாறு தன்னை அலங்கரிக்கவில்லைஎனில், கைம்பெண்ணின் கையறு நிலைக்கான காரணம் யாதோ?
//Call Taxi ஓட்டுபவரும்…..அடாவடி பேச்சு இவர்களிடம் இருப்பதில்லையே ஏன்///
தாங்கள் சொல்வது நவீனப் பார்ப்பனியமோ? கால் டாக்ஸி ஒட்டுகிரவரும், ஆட்டோ ஒட்டுகிரவரும், மாநகர்ப் பேருந்து ஒட்டுகிரவரும், கனரக வண்டிகளை ஒட்டுகிரவரும், மென்பொருள் நிறுவனப் பணியாளரும் ஆண்கள் என்ற பாலினப் பார்வையில் ஒன்று தான்.
ஆட்டோ ஓட்டுறவன் தப்பாப் பார்கிறான் என்றால் , மற்ற யாவரும் அப்படி தான். ஆட்டோ ஓட்டுனர் ஆனவுடனே தான் ஆணாதிக்கம் வருமென்றால் உங்கள் புரிதலை என்னவென்று சொல்வது.
தோழர் தென்றலை, //நீங்கள் ஒரு பண்படாத ஜென்மம் ,அறிவு என்பது கொஞ்சமாவது,உங்கள் அறிவின் லட்சணம்,உருப்படியாக எதார்த்தமாக, தர்கப்பூர்வமாக பேசுவதற்கு எதுவுமே உங்களிடம் /// கேவலமாக விளித்துளீர். இது மிகவும் கண்டனத்திற்குரியது.
உங்களை தனிப்பட்ட முறையில் மரியாதைக்குறைவாக எங்கு பேசியுள்ளார்?
//புத்தக அறிவும், ப்ளொக்ககளில் மேய்ந்து சேகரித்த தகவலையும் கக்குவதை தவிர //
நீங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் முழுதும் உங்கள் சொந்த சரக்கா? நீங்களும் அப்படிதானே?
//கம்யுனிஸ்டுகள் நீங்கள் தனி வார்ப்புகள், தனி தாதுக்களால் உருவானவர்கள்//இது என்ன சிஸ்டர் புதுவிதமான தாக்குதலா இருக்கு கம்மூனிஸ்டுகள் தனி வார்பெல்லாம் கிடையாது உழைக்கும் மக்களின் கஸ்டத்த புரிஞ்சுகிட்டு அதற்க்கா போராடுகிற தோழர்களை தனி ஜாதியாக்கி தனிமை படுத்துறீங்களே பொட்டு வைக்கிறது தமிழர் அடையாளம் என்று எதை வைத்து சொல்லுகிறீர்கள் அது அழகியல் சார்ந்தது என்பதை வேண்டுமானால் ஒப்புகொள்ளலாம் உங்களுக்கு ஆட்டோ ஓட்டுனர்களால் ஏற்ப்பட்ட கசப்பான அனுபவத்தை வைத்து ஆட்டோ ஓட்டுனர்களிம் மீது நீங்கள் வைத்து இருக்கும் வெறுப்பின் சதவிகிதம் கொஞ்சம் அதிகம் அதை குறைத்து கொள்ளுங்கள் நாளைக்கு திடீர்னு ஒரு அவசரம் உங்களுக்கே உடல் நிலை சரி இல்லைனு வச்சுக்கங்க அப்ப ஆட்டோ காரன் தான் ஓடி வருவான் அம்மா வாடகைய பத்தி அப்புறம் பேசிக்கலாம் முதல்ல ஆஸ்பிடல் போவோம்னு வருவாங்க பாந்துக்கங்க அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்
அன்பு சகோதரர் ஜோவிற்கு…
//இது என்ன சிஸ்டர் புதுவிதமான தாக்குதலா இருக்கு கம்மூனிஸ்டுகள் தனி வார்பெல்லாம் கிடையாது உழைக்கும் மக்களின் கஸ்டத்த புரிஞ்சுகிட்டு அதற்க்கா போராடுகிற தோழர்களை தனி ஜாதியாக்கி தனிமை படுத்துறீங்களே//
ஜோ.. இது தாக்குதல் எல்லாம் கிடையாது. கம்யுனிச தோழர் ஒருவர் கம்யுனிஸ்டுகள் குறித்து பெருமையாக கூறியது..
மேலும், பொட்டு வைக்கும் வரலாறு தமிழர்கள் உடையதா இல்லையா என்பதை வேறு ஒரு தருணத்தில் நான் உங்களுக்கு தக்க ஆதரங்களுடன் முன் வைக்கிறேன்..
//உங்களுக்கு ஆட்டோ ஓட்டுனர்களால் ஏற்ப்பட்ட கசப்பான அனுபவத்தை வைத்து ஆட்டோ ஓட்டுனர்களிம் மீது நீங்கள் வைத்து இருக்கும் வெறுப்பின் சதவிகிதம் கொஞ்சம் அதிகம் அதை குறைத்து கொள்ளுங்கள்//
வேதனை – இந்த வார்த்தையின் பொருள் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இருந்தாலும் நீங்கள் கூறியது போல் ஆட்டோ ஓட்டுனர்களை பற்றி பேசுவதை குறைத்து கொள்கிறேன்
ரெபேக்கா மேரி அவர்களுக்கு,
உங்களுக்கு பின்னூட்டம் எழுதுவதில் உண்மையில் எனக்கு விருப்பமில்லை. மாற்றுச் சித்தாந்தங்களை மேரி ஏற்றிருப்பவர் என்ற காரணத்திற்காகவோ நான் ஒரு கம்யுனிஸ்ட் என்பதற்காகவோ இதைச் சொல்லவில்லை.
பின்னூட்டத்தில் ஈடுபடுவதால் ஒருவர் கம்யுனிஸ்டு ஆகிவிடமுடியாது என்று நினைக்கிறேன். யோசித்துப் பாருங்கள் பின்னூட்டம் இடுகிற அளவிற்கு இன்றைக்கு நேரத்தையும் பணவசதியையும் சொகுசான வாழ்க்கையையும் பெற்றிருக்கிறேன். ஆனால் பாட்டாளிகள் என்பவர்கள் தங்களது உழைப்பை விற்றுப் பிழைப்பவர்கள். அவர்களுக்கு நேரமோ கணினியோ கிடையாது. அவர்களின் விடுதலைக்காக போராடுகிற ஒரு அமைப்பை இழிவுபடுத்துவதற்கு உங்களுக்கு கிடைத்த அஸ்திரம் எந்தவகைப்பட்டது?
மக்களை சந்திக்கிற பொழுது தோழர்களுக்கு சிறுநீர் கழிக்க கூட இடம் கிடைக்காது. என்னைப் போன்ற ஆண்கள் ஏதாவது ஒரு சுவற்றைத் தேடிச் செல்வோம். ஆனால் பெண்கள் பிரச்சாரம் முடியும்வரை அடக்கிக் கொண்டு வருவார்கள். அந்த பெண்கள் ஏற்றிருக்கிற பாட்டாளிவர்க்க இலட்சியத்தை தாங்கள் எந்த விதத்தில் எதிர் கொண்டீர்கள்?
உங்களை பெண் என்றும் பெண் இடத்திலே தனியான கவனத்துடன் அணுக வேண்டும் என்றும் இங்கிருக்கிற பல நண்பர்கள் நடந்துகொண்டார்கள். ஒரு வகையில் இதுவும் ஒரு ஆணாதிக்கப் பார்வைதான். ஏனெனில் தோழர் என்று சொல்கிற பொழுது பெண் தோழர் என்ன ஆண் தோழர் என்ன என்று என் சகதோழர் கடுமையான விமர்சனத்தை எங்களிடையே முன்வைத்தார் ஒரு காலத்தில். அந்த அனுபவம்தான் சிறிதும் சமரசமின்றி உங்களுடன் உரையாடுவதற்கு நான் கொண்ட அடிப்படை.
நீங்கள் யோசிக்க வேண்டும். மாட்டுக்கறி தின்ன மாமி என்று இங்குள்ள பத்திரிக்கைகள் எல்லாம் ஜெயலலிதாவை விமர்சித்து (கிளுகிளுப்பாக) எழுதிய பொழுது புரட்சிகர அமைப்புகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தார்கள். இத்துணைக்கும் ஜெயலலிதா ஒரு துரோகி. மாட்டுக்கறி தின்னது உண்மையோ பொய்யோ ஜெயலலிதாவை இவர்கள் இந்தக் கோணத்தில் விமர்சிக்கவில்லை. பாசிஸ்டாக இருந்தாலும் ஜெயலலிதாவை விமர்சிக்க கண்ணியம் இருந்தது.
அப்பேற்பட்ட இயக்கத்தின் அடிநாதமான பாட்டாளி வர்க்கத்தை விமர்சனம் செய்வதற்கு தங்களுக்கு கிடைத்த கடைசி அஸ்திரம் பாலியல்! இதை எப்படி எதிர் கொள்வது? மேரிக்கு நிகழ்ந்தது உண்மையோ பொய்யோ, என் கவனம் எல்லாம் உங்களது கருத்தில்தான் இருந்ததே தவிர உங்களை அவதூறாக காட்ட வேண்டுமென்பது என் நோக்கமல்ல. உங்களை கடுப்பேத்துவதற்கு நான் பின்னூட்டம் இட வேண்டிய அவசியமில்லை. ஒதுங்கிப்போகவே விரும்புகிறேன்.
இண்டியனுக்கு எல்லாம் இங்கு யாராவது பின்னூட்டம் எழுதுகிறார்களா என்ன? ஒரு மனிதரை உச்சபட்சமாக இப்படித்தான் புறக்கணிக்க முடியும் என்பது எமது துணிபு. விலகிப் போவதன் மூலமாகத்தான் ஒருவரை அவமானப்படுத்த முடியும். சான்றாக பொது மக்கள் காவல்துறையை மதிப்பிட்டுவைத்திருப்பதைப் போல.
ஆனால் ஏன் பதிவிடுகிறேன் என்றால் யாரை விடவும் தங்களின் அனைத்து விவாதங்களிலும் கலந்திருக்கிறேன். பாட்டாளிகளுக்கான எதிரான நிலைப்பாடு இது முதல் முறையல்ல. ஒரு சமயம் மாடர்ன் பிரட்டைப் போன்று பொதுத்துறை நிறுவனங்களை காலியாக்க வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். முதலாளித்துவப் பார்வையில் கருத்துக்களை முன்வைத்தால் கூட பரிசீலிக்கலாம். இதற்கு நீங்கள் சார்ந்திருக்கிற தத்துவம் எல்லாம் காரணமல்ல; வெறும் திமிர்தனம் மட்டுமே. பொதுத்துறை நிறுவனங்களை மூடிவிட்டால் அதைச் சார்ந்திருக்கிற உழைப்பாளிகள் சோற்றுக்கு என்ன செய்வார்கள்? அவர்கள் வாழ்வை யார் உத்திரவாதப்படுத்துவது? இதன் நீட்சிதானே பாட்டாளி வர்க்க பொறுக்கித் தனத்தில் வந்து நிற்கிறது.
தமிழ்நாடு அரசு மின்பொறியாளர் காந்தி, தனியார்களின் சுரண்டலை பட்டியலிட்ட போது இங்கே காதுகொடுத்து கேட்பதற்கு யார் இருந்தார்கள்? இத்துணைக்கும் அவர் என்ன கம்யுனிஸ்டா? உங்களது சிந்தனையெல்லாம் உழைப்பாளர்களுக்கு எதிராக இருந்தது. இதுதானே மேல்தட்டு வர்க்க பொறுக்கித்தனம். இதற்கு 100கோடி சொத்து வைத்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.
ரிங் மாஸ்டரின் கையில் இருக்கும் பழத்தை வாங்கித் தின்பதற்காக கிளி, பாட்டே பாடுகிற பொழுது தான் கொண்டிருக்கிற நிலைப்பாட்டை பற்றுக்கொள்ள பாட்டாளிகளுக்கு எதிராக இருப்பதற்கு மேரி அவர்கள் பேருந்தில் போனால் என்ன? நடந்து போனால் என்ன?
————————–
தற்பொழுதைய விசயத்திற்கு வருவோம். வளமையாகவே அனைத்து ஆண்களும் நீதிபதிகள், சங்கராச்சாரி, நித்யானந்தா, பாதிரிகள் உட்பட உன்னால் நிரூபிக்க முடியுமா என்று எதிர் கேள்வி கேட்டு பாலியல் வக்கிரங்களில் இருந்து எளிதில் தப்பிக்க முடிகிற பொழுது உங்களைப் போன்றவர்களை புரட்சிகர இயக்கங்கள் காவுகொடுத்தார்களா அல்லது நீங்கள் புரட்சிகர இயக்கங்களை நீங்கள் காவுகொடுத்தீர்களா? எது உண்மை?
தற்பொழுது வரை காலிகளை தண்டிப்பதற்கு தாங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதே புரட்சிகர அமைப்புகள் பல்வேறு பெண் பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராடுகிற பொழுது வாய் திறப்பேனா என்கிறீர்கள். கம்யுனிசம் பிரச்சனை என்றாலும் தாங்கள் விரும்புகிற இந்த முதலாளித்துவ சமூகம், சட்டம், நீதி என்று எதன் கதவுகளையும் தட்டவில்லை. பெண்களுக்கு என்று இங்கு இருப்பது புரட்சிகர அமைப்புகள் தான் என்பதை உங்களால் சீரணிக்க முடியாத விடயம். ஆனால் என்ன விலை கொடுத்தேனும் கம்யுனிசம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் தங்களையே ஒரு பலியாக நிறுத்துகிற தியாகம் யாருக்காக? What is your intention and motivation?
தொடர்ச்சி அடுத்த திரியில்
தோழர் தென்றல் அவர்களுக்கு…
தனி நபர் தாக்குதல் இல்லாமல் மறுமொழியிட்டதர்க்கு என் நன்றிகள். இந்த தென்றலைத் தான் நான் உங்களிடம் இருந்து எதிர் பார்த்தது..
//அவர்களின் விடுதலைக்காக போராடுகிற ஒரு அமைப்பை இழிவுபடுத்துவதற்கு உங்களுக்கு கிடைத்த அஸ்திரம் எந்தவகைப்பட்டது?//
ஆட்டோ ஓட்டுனர்கள் மீது குற்றம் சாட்டினால் உடனே உங்கள் அமைப்பை அவமதித்து விட்டதாக அர்த்தமா. எதை அஸ்திரம் என்று கூறுகிறீர்கள்.. எனக்கு ஏற்பட்ட சம்பவதையா. பொய் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் எனக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லை தென்றல். நான் சொன்னது உண்மை என்னும் பட்சத்தில் நீங்கள் கூறிய அஸ்திரம் என்னும் வார்த்தை தங்களுக்கே அசிங்கமாக தெரியவில்லையா.
//ஏனெனில் தோழர் என்று சொல்கிற பொழுது பெண் தோழர் என்ன ஆண் தோழர் என்ன என்று என் சகதோழர் கடுமையான விமர்சனத்தை எங்களிடையே முன்வைத்தார் ஒரு காலத்தில். அந்த அனுபவம்தான் சிறிதும் சமரசமின்றி உங்களுடன் உரையாடுவதற்கு நான் கொண்ட அடிப்படை.//
ஒரு வேளை, தங்களின் புரட்சிகர அமைப்பில் சேர்ந்து நானும் தோழராக பணியாற்றினால் அப்போது நீங்கள் கூறும் வாதம் செல்லும். அது வரை முகம் தெரியாதவர்களிடம் பேசும் போது கொஞ்சம் நாகரிகத்தை கடை பிடிக்க வேண்டும். யாராக இருந்தாலும் சரி, இதில் ஆண், பெண் என்கிற பேதம் எல்லாம் இல்லை. மேலும் இங்கு மறுமொழி இடுபவர்கள் கடைபிடிப்பது பொது நாகரீகம், அதற்க்கு ஆணாதிக்க சாயம் எல்லாம் பூச வேண்டாம்.
//நீங்கள் யோசிக்க வேண்டும். மாட்டுக்கறி தின்ன மாமி என்று இங்குள்ள பத்திரிக்கைகள் எல்லாம் ஜெயலலிதாவை விமர்சித்து (கிளுகிளுப்பாக) எழுதிய பொழுது புரட்சிகர அமைப்புகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தார்கள். இத்துணைக்கும் ஜெயலலிதா ஒரு துரோகி. மாட்டுக்கறி தின்னது உண்மையோ பொய்யோ ஜெயலலிதாவை இவர்கள் இந்தக் கோணத்தில் விமர்சிக்கவில்லை. பாசிஸ்டாக இருந்தாலும் ஜெயலலிதாவை விமர்சிக்க கண்ணியம் இருந்தது.//
மிக பாராட்டிற்குரிய விசயம் தான்.. ஆனால், அந்த நாகரிகம்,கண்ணியம் ஏன் உங்கள் பேச்சில் ஆரம்பத்தில் இல்லாமல் போனது. கேட்டால் என்னை தனி நபர் தாக்குதல் செய்தது ஆணாதிக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று பிலாக்கணம் வேறு கொடுகின்றீர்கள்.
//அப்பேற்பட்ட இயக்கத்தின் அடிநாதமான பாட்டாளி வர்க்கத்தை விமர்சனம் செய்வதற்கு தங்களுக்கு கிடைத்த கடைசி அஸ்திரம் பாலியல்! இதை எப்படி எதிர் கொள்வது? மேரிக்கு நிகழ்ந்தது உண்மையோ பொய்யோ, என் கவனம் எல்லாம் உங்களது கருத்தில்தான் இருந்ததே தவிர உங்களை அவதூறாக காட்ட வேண்டுமென்பது என் நோக்கமல்ல.//
இப்போது நீங்கள் அஸ்திரம் என்று சொல்வதே ஒரு அவதூறு தானே தோழரே. நீங்கள் நம்பவில்லை என்பதற்காக இப்படி பேசுவது முறையா. அந்த நிகழ்வு நடந்து முடிந்து ஒரு வருடம் ஆக போகிறது, இதை நான் எப்படி உங்களிடம் நிருபிக்க முடியும். நீங்கள் இருக்கும் இடம் தேடி நேரில் வந்து உங்கள் அழைத்து கொண்டு சம்மந்தபட்ட ஆட்டோ ஸ்டாண்டிற்கு போய் “தென்றல் அண்ணா என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது இந்த 4 பொறுக்கிகளும் தான்” என்று உங்களை அழைத்து சென்று காட்டவா முடியும். கம்யுனிச கோட்பாடுகளில் எனக்கு மாற்று கருத்து இருக்கலாம். அதற்காக, பொய்சொல்லி எதையும் சாதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் எனக்கில்லை.
//ஒரு சமயம் மாடர்ன் பிரட்டைப் போன்று பொதுத்துறை நிறுவனங்களை காலியாக்க வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள்?……………………………………………………………………………………………………………………………………….. அவர்கள் வாழ்வை யார் உத்திரவாதப்படுத்துவது? இதன் நீட்சிதானே பாட்டாளி வர்க்க பொறுக்கித் தனத்தில் வந்து நிற்கிறது.//
நான் சொன்னதை இப்படி அநியாயமாக திரித்து கூறுகிறீர்களே. நான் என்ன கூறினேன். அரசிற்கு தேவை இல்லாத சுமையாக நஷ்டத்தில் இயங்கும் பொது துறை நிறுவனத்தை மூடி விட வேண்டும் என்று தான் கூறினேன். அனைத்து பொது துறை நிறுவனங்களையும் காலி செய்ய வேண்டும் என்று எப்போது கூறினேன். சென்ற ஆண்டு நஷ்டத்தில் இயங்கிய தந்தி சேவையை இந்திய அரசு மூடவில்லையா. இதனால் நாடு முழுவதும் தந்தி துறையில் வேலை செய்த ஆயிரக்கணக்கானோர் அனைவரும் நடு ரோடிர்க்கா வந்து விட்டார்கள். சென்னையில் உள்ள தந்தி அலுவலகத்தில் வேலை பார்த்தவர்களை, போஸ்ட் ஆபீசிர்க்கும், telefone departmentடிற்கும் மாற்ற வில்லையா. இதை மனதில் வைத்து தான் சொன்னேன்.
//உங்களது சிந்தனையெல்லாம் உழைப்பாளர்களுக்கு எதிராக இருந்தது. இதுதானே மேல்தட்டு வர்க்க பொறுக்கித்தனம். இதற்கு 100கோடி சொத்து வைத்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.//
அப்படி எத்தனை உழைப்பளர்களுக்கு எதிராக பேசினேன். ஆட்டோ ஓட்டுனருக்கு எதிராக பேசினால் அனைத்து உழைபாளர்களுக்கும் எதிராக பேசியதாக பொருளா. நான் ஒரு தவறு செய்து விட்டேன் ஒத்து கொள்கிறேன் ” பாட்டாளி வர்க்க பொருக்கி தனம்” என்று கூறியது தவறு தான். ஏதோ உணர்ச்சி மேலீட்டால் கூறிவிட்டேன். அதற்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன்.
//பெண்களுக்கு என்று இங்கு இருப்பது புரட்சிகர அமைப்புகள் தான் என்பதை உங்களால் சீரணிக்க முடியாத விடயம்//
உங்களுடைய இந்த முட்டாள் தனமான எண்ணத்திற்கு நான் பொறுப்பல்ல. பெண்களுக்காக யார் இருந்தாலும் நாமும் அதில் பங்கெடுத்து கொண்டு ஆதரவளிக்க தான் வேண்டும். போராட்டத்தை யார் முன்னின்று நடத்தினால் என்ன.
//ஆனால் என்ன விலை கொடுத்தேனும் கம்யுனிசம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் தங்களையே ஒரு பலியாக நிறுத்துகிற தியாகம் யாருக்காக? What is your intention and motivation?//
முதலாளிகளை தக்காட்டும் மோடியிடம் நீங்கள் இதை கேட்பது நியாயம். மாற்று கருத்தை வைத்ததற்காக என்னை இப்படி கொச்சை படுத்துவதில் உங்களுக்கு அப்படி ஒரு ஆனந்தமா.
ரெபேக்கா மேரி அவர்களுக்கு
\\ பொட்டு வைப்பது தொடர்பாக
இந்தக் கட்டுரையில் எதற்காக இதைக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டிருந்தீர்கள். இது எப்படி ஆணாதிக்கமாக இருக்க முடியும் என்று மற்றொரு கேள்வியையும் முன்வைத்திருக்கிறீர்கள்.
எனது முதல் மறுப்பில் பெண் ஆட்டோ டிரைவர்களைக்குறிப்பிட்டு தங்களது நேர்ந்த சம்பவத்திற்கு காரணம் ஆணாதிக்கம் பிரச்சனையா? ஆட்டோ டிரைவர்கள் பிரச்சனையா என்று கேட்டிருந்தேன்.
வியாசனும் தாங்களும் பொட்டுவைப்பதை தமிழ் பண்பாடு என்று காட்டுகிறீர்கள். இங்கேயே பெண்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்துவிடுகிறது. முதலில் தமிழ்தேசியவாதிகள் கேட்கிற வக்கிரத்தை கண்டிக்க முடியுமா உங்களால்; “டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு?” என்று தமிழ் தேசியம் பாட்டே பாடுகிறது! பொட்டு என்று வருகிற பொழுது ஸ்டிக்கர் பொட்டு வேசைத்தனமாகிவிடுகிறது. ஆனால் குங்குமம் குலப்பெண்களின் அங்க அடையாளம்! என்ன கூத்து! ஆனால் உங்கள் கூட்டணி தமிழ்தேசியத்துடன்!
நீங்கள் சொல்வதைப் போல பாதிரிகள் மதங்களின் கருத்து தான் தமிழ்தேசியவாதிகள் கருத்தா? கலாச்சாரம் என்ற பெயரில் கருத்துவிபச்சாரம் செய்தது எந்த தேசியவாதம்? இது ஆணாதிக்கமில்லையா? ஆணாதிக்கத்தை வரவேற்கிற மேரி அவர்கள் ஆணாதிக்கவாதியில்லையா?
பொட்டு விசயத்தில் வியாசனை ஆதரித்து என்னை எதிர்ப்பதற்கு காரணம் கத்தோலிக்க பார்ப்பனீயம் என்றும் வெள்ளாளியம் என்றும் நான் விமர்சனம் செய்ததுதானே காரணம்? இதை வாசகர்களிடத்தில் மறைத்துவிட்டு ஆண் என்கிற எதிர்பாலின கவர்ச்சிக்குத்தான் பொட்டு என்று நான் சொல்வதாக மதிப்பீடுகிறீர்களே! இது துரோகம் இல்லையா?
தான் சார்ந்த கிறித்துவம் பெரிது என்று கிறித்துவத்தின் பிறபகுதியினரை தமிழ்கலாச்சாரம் என்ற பெயரில் எதிர்ப்பதாக காட்டீனிர்கள் என்பது பொய்யா?
வியாசன் ஒருபடி மேலே போய் இலங்கைபாதிரிகள் சந்தனப் பொட்டுவைக்கிறார்கள்; ஆனால் இவாஞ்சலிக்கள் குரூப், வஹாபிகள் என்று கருத்துவைத்த பொழுது அதை ஆதரித்தவர் யார்?
இப்பொழுது பொட்டை சுயம் சார்ந்த விசயமாக காட்டுகிறீர்கள். உரிமை என்று வியந்தோதுகீறிர்கள். கண்ணகியின் கால் சிலம்பில் ஆரம்பித்து திரபவுதியின் சேலை வரை இங்கு வளமையான அத்துணை கலாச்சாரமும் பெண்ணை மையப்படுத்தியே இருக்கிறது! பெண் விடுதலை என்கிற நாங்கள் பெண்ணை பாலியல் பண்டமாகவே பார்க்கிற கலாச்சாரத்தை எதிர்க்கிறோம்.
ஒரு பெண் திருமணமானவள் என்று குறிப்பிடுவதற்கு உங்களுக்கு பல்வேறு குறியீடுகள் தேவைப்படுகிறது. மணம் இல்லாமேலேயே இசுலாத்தில் முக்காடு போட்டு கொண்டுவருகிறார்கள். எல்லாமே ஒன்றுதான். ஒருத்தன் ஏண்டா கொலை செஞ்ச என்று கேட்டால் உசிரோடு இருந்தான் அதான் கொலை செய்தேன் என்கிறான். முக்காடுபோடவில்லை என்றால் கற்பழிப்பார்கள் என்று பழியை பெண்மீது போடுகிறார்கள். இங்கிருக்கறவன் காலில் மெட்டியோ கழுத்தில் தாலியோ வகிட்டில் பொட்டோ இல்லை என்றால் வேறு ஒருத்தன் அப்ரோச் செய்வான். ஆகையால் இது Safe Barrier என்று அங்கேயும் பெண்ணைத்தான் கைகாட்டுகீறீர்கள்.
இதற்கு எதிர்ப்பதமாக பொட்டுவைக்காதவர்களை முண்டச்சி என்று திட்டுகிறது பார்ப்பனீயம். தமிழ் தேசியத்தின் யோக்கியதையையும் உங்களது கூட்டணியையும் பார்த்தோம். இது தமிழர்களின் கலாச்சாரம் என்று சொல்வதற்கு பிண்ணனியில் முகமூடியாக இருக்கிற மதநிறுவனங்களின் அயோக்கியத்தனத்தையும் கண்டிக்கிறோம்.
ஆனால் எந்தக்கலாச்சாரம் ஆணாதிக்கத்தை தூக்கிப்பிடிக்கிறதோ எந்தக்கலாச்சாரம் பெண்ணை பாலியல் பண்டமாக பார்க்கிறதோ அதே கலாச்சாரத்தின் தளகர்த்தாவாக தன்னைக்காட்டிக்கொண்டீர்கள். அங்கே தாங்கள் வாக்குமூலங்களாக கலாச்சாரத்தையே நிறுவினீர்கள்.
ஆனால் ஆட்டோக்காரர்கள் பல்வேறுமுறை கொடூரமாக பாலியல் ரீதியாகத் தங்களை தாக்கியும் உண்மையில் உங்களுக்கு ஆட்டோக்காரர்கள் மீது பிரச்சனையில்லை. ஏனெனில் அவர்களை தண்டிப்பதற்கு தார்மீக ரீதியாக இந்த சமூகம் இயங்குகிற எந்தக் கருத்தியல்களையும் ஆட்டோக்காரர்கள் மீது சுமத்தவில்லை. அதற்கு நீங்கள் தயாராக இல்லை என்பது திட்டவட்டமான ஒன்று. இந்த சமூகம், மதம், கலாச்சாரம் எல்லாம் பெண்ணை பாலியல் பண்டமாக பார்க்கிறது என்பதற்கு பல அடிப்படைகளை இந்த தளம் ஆதாரப்பூர்வமாக நிருபீக்கிற பொழுது உங்களது வாக்குமூலமெல்லாம் கோருவது லிட்மஸ் டெஸ்ட்.
சும்மா எடுத்ததுக்கெல்லாம் பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கங்கிற. நீ சொல்ற அப்பாவி பாட்டாளி வர்க்கத்தைப் பார்த்தாயா என்கிற கேள்வியில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் சொல்கிற அவலங்கள் நொடிக்கு ஒரு தரம் நடைபெறுகிறது எல்லா வர்க்கங்களிலும்.
முதலாளித்துவமும் நுகர்வு வெறியும் அனைத்து வர்க்கங்களிலும் லும்பன்களையும் உடோபியர்களையும் பொறுக்கிகளையும் நீக்கமற நிறைத்திருக்கும் பொழுது ஆட்டோக்காரன் மட்டும் உங்கள் பார்வையில் தனித்து தெரிகிறான்.
வாங்கரி மாத்தாய் போன்றவர்கள் இப்படித்தான் உருவாக்கப்பட்டார்கள். வாங்காரி மாத்தாய் சுற்றுச் சூழலின் தாய்! ஆப்ரிக்காவில் மரங்கள் தன் முன்னே வெட்டப்பட்டன. எதற்கு? யார் வெட்டினார்கள் யாருக்காக வெட்டினார்கள் என்று யாரும் கேட்க தயாரில்லை. அங்கே தேசியம், மதம், முதலாளித்துவம், என்ற சொல்லாடல்களும் உள்ளேவரவில்லை. ஒற்றை நோக்கத்தோடு முன்னேறியது அமெரிக்கா. மாத்தாய் தன் நோக்கத்தில் தெளிவாக இருந்தார். தான் எதிர்க்கிறவர்களால் கூட உங்களைப் போன்று கடுமையாக பாதிக்கப்பட்டார். ரத்தம் சிந்தினார்.
இன்றைக்கு ஒட்டு மொத்த அப்பாவி பாட்டாளி வர்க்கமும் மாத்தாய் சுற்றுச் சூழலின் தாய் என்பதை முணுமுணுக்கின்றனர் ஈன சுரத்தில். சைவமும் மாலியமும் மொழியின் பேரில் காக்கப்படுவதற்கு அங்கு நடைமுறை எதார்தத்தில் நிகழ்த்திகாட்டியிருக்கீறிர்கள்.
உங்களுக்கும் அது போன்ற நிறைய ஸ்கோப் இருக்கிறது. ஏனெனில் உங்களை மோசமானவராக நான் காட்ட முயற்சித்து சறுக்கியிருக்கிறேன்! உங்களால் இது போன்ற தடைகளை எதிர்கொள்ள முடியும். உங்கள் தரப்பு நியாயம் கண்டிப்பாக பரிசீலிக்கப்படும். ஆனால் நான் தான் அதில் கல்நெஞ்சமாக இருக்கிறேன். இது எனக்கு அவசியம்.
ஏனெனில் கம்யுனிஸ்டுகள் சமத்துவம் என்பதை சட்டியை எடுத்துக்கொண்டு பிச்சையாக சலுகையாக எடுக்க வேண்டும் என்று பலபேர் எதிர்பார்க்கிறார்கள். இது முறியடிக்கப்பட வேண்டியது. ஆதிக்கத்தை மோதி வீழ்த்துவதில் தான் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது எனில் உங்களைவிட நான் ஒருபடி மேலே இருக்க வேண்டும்.
//“டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு?” என்று தமிழ் தேசியம் பாட்டே பாடுகிறது! பொட்டு என்று வருகிற பொழுது ஸ்டிக்கர் பொட்டு வேசைத்தனமாகிவிடுகிறது. ஆனால் குங்குமம் குலப்பெண்களின் அங்க அடையாளம்! என்ன கூத்து! ஆனால் உங்கள் கூட்டணி தமிழ்தேசியத்துடன்!//
நீங்கக் கூறும் பாடல் வரிகளை நான் கேள்வி பட்டதே இல்லை. நீங்கள் கூறும் பாடல் வரிகள் எந்த தமிழ் அமைப்பிற்கு சொந்தமானது என்று எனக்கு தெரியாது. ஆனால் நாம் தமிழர் போன்ற தமிழ் இன அடிப்படை வாத அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வரும் பெண்கள் மற்றும் கலை குழுவை சேர்ந்தவர்கள் அனைவருமே பொட்டு இல்லாமல் தான் காட்சி அளிக்கிறார்கள். தமிழ் தேசிய கட்சிகளில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் யாரும் தாலி கூட அணிவதில்லை. கேட்டால் தாலி அணிவது தமிழ் பண்பாட்டில் இல்லை என்கிறார்கள். அது ஆரிய பண்பாடு என்று கூறுகிறார்கள்.
//நீங்கள் சொல்வதைப் போல பாதிரிகள் மதங்களின் கருத்து தான் தமிழ்தேசியவாதிகள் கருத்தா? கலாச்சாரம் என்ற பெயரில் கருத்துவிபச்சாரம் செய்தது எந்த தேசியவாதம்? இது ஆணாதிக்கமில்லையா? ஆணாதிக்கத்தை வரவேற்கிற மேரி அவர்கள் ஆணாதிக்கவாதியில்லையா?//
புரியவில்லை நான் எந்த பாதிரியாரின் கருத்தை தமிழ் தேசியவாத கருத்தாக ஆதரித்தேன். பொட்டு வைப்பதில் கூடவா ஆணாதிக்கம் கலந்து இயங்குகிறது. உங்கள் கருத்து படி பார்த்தால், பெண்கள் ஆடை அணிவது கூட ஆண் ஆதிக்கம் தான் போல் இருக்கிறது.
//பொட்டு விசயத்தில் வியாசனை ஆதரித்து என்னை எதிர்ப்பதற்கு காரணம் கத்தோலிக்க பார்ப்பனீயம் என்றும் வெள்ளாளியம் என்றும் நான் விமர்சனம் செய்ததுதானே காரணம்? //
கண்டிப்பாக இல்லை.. பொட்டு வைக்கும் விசயத்தில், என் கருத்தை ஒட்டி வியாசனின் கருத்து இருந்ததால் அதை ஏற்று கொண்டேன் அவ்வளவு தான். மற்றபடி நீங்கள் விமர்சனம் செய்ததால் அல்லவே அல்ல. முதலில் என்னை சாதி, மதம் என்கிற வட்டத்திற்குள் அடைப்பதை நிறுத்துங்கள். நான் ஏற்று கொண்ட தமிழ் தேசியம் என்பது, கால்டுவெல் முன்மொழிந்த தமிழ் தேசியத்தை தான். என்னை பற்றி நீங்கள் பல தவறன முன் முடிவுகள் கொண்டு இருக்கிறீர்கள்.
//இதை வாசகர்களிடத்தில் மறைத்துவிட்டு ஆண் என்கிற எதிர்பாலின கவர்ச்சிக்குத்தான் பொட்டு என்று நான் சொல்வதாக மதிப்பீடுகிறீர்களே! இது துரோகம் இல்லையா?//
“பொட்டு வைத்து பூ வைத்து பெண்ணை பாலியல் பண்டமாக பார்க்கும் ஆணாதிக்க சமூகத்தை தலைமை தாங்கி நடத்துபவர் மேரி அவர்கள் தான்.”
இது நீங்கள் கூறியது தானே. இதன் அர்த்தம் என்ன? பொட்டு வைப்பதிலும் ஆணாதிக்கம் நிரம்பி வழிக்கிறது என்பது நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும்.
என்னை பொறுத்த வரை பொட்டு வைத்து என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது எனக்கே ஆனந்தமாக இருக்கும். பொட்டு வைத்து கொண்டு இருப்பது என்னை கொஞ்சம் அழகாக்கி காட்டுவதால் அது என் தன்னம்பிக்கையை மேலும் அதிகமாக்கி காட்டுகிறது.எனக்கு அது பிடித்து இருக்கிறது. மற்ற படி பொட்டு வைத்தல் மங்களமானது, புனிதமானது என்கிற கருத்திற்காக எல்லாம் இல்லை. ஒரு வேளை நான் இசுலாமிய பெண்ணாக பிறந்திருந்தாலும் பொட்டு அணிந்திருப்பேன். மற்றபடி பொட்டு விசயத்தில் நீங்கள் கூறியதையும் பரிசீலிக்கிறேன்.
//தான் சார்ந்த கிறித்துவம் பெரிது என்று கிறித்துவத்தின் பிறபகுதியினரை தமிழ்கலாச்சாரம் என்ற பெயரில் எதிர்ப்பதாக காட்டீனிர்கள் என்பது பொய்யா?//
நான் எதிர்த்து அவர்களின் வழிப்பாட்டு முறையை அல்ல.. தமிழர்களாக தங்களை அறிவித்து கொண்டு தமிழ் உணர்வு சிறிதும் இல்லாமல் தமிழின் மற்ற இலக்கியங்களை புறகனிப்பதை தான் நான் எதிர்ப்பது. தாங்கள் வணங்கும் கடவுளை பற்றி அதில் இல்லை என்பதற்காக தேவாரம்,திருவாசகம், சங்க இலக்கியம் போன்ற ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை மதத்தின் பெயரால் புனிதமல்லாதவை என்று கூறி கொச்சை படுத்த படுவதை தான் நான் எதிர்ப்பது. ஒரு தமிழ் பெண் என்கிற முறையில் இந்த உரிமை கூட எனக்கில்லையா.
தமிழ் இலக்கியம் தான் என்றில்லை. கடவுள் மறுப்பை மையமாக கொண்ட மார்க்சிய இலக்கியங்களை அவர்களிடம் கொடுத்தாலும் இவை எல்லாம் சாத்தானிடம் இருந்து வந்தவை என்று கூறி வாங்க மறுத்து விடுவார்கள். வேண்டுமானால், முயற்சி செய்து தான் பாருங்களேன்.
//இதற்கு எதிர்ப்பதமாக பொட்டுவைக்காதவர்களை முண்டச்சி என்று திட்டுகிறது பார்ப்பனீயம்.//
இது கண்டிப்பாக எதிர்க்க படவேண்டிய ஒன்று தான். ஒரு சாதாரண அழகு பொருளை மங்களகரமானது என்று முடிவு செய்தது மதம் தான்.
//முதலாளித்துவமும் நுகர்வு வெறியும் அனைத்து வர்க்கங்களிலும் லும்பன்களையும் உடோபியர்களையும் பொறுக்கிகளையும் நீக்கமற நிறைத்திருக்கும் பொழுது ஆட்டோக்காரன் மட்டும் உங்கள் பார்வையில் தனித்து தெரிகிறான்.//
அப்படி இல்லை… நான் யாரால் பதிப்புக்கு உள்ளாக்க பட்டேனோ அவர்கள் மீது இருந்த கோபத்தை வெளி படுத்தினேன். ஒரு வேளை பணிக்கு செல்லும் இடத்தில் இவ்வாறு நேர்திருந்தால், என் கோபம் என் மேல் அதிகாரியின் மீதோ அல்லது நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியின் மீதோ சென்றிருக்கும். மற்றப்படி உழைக்கும் மக்கள் மீதான வேறு எந்த வெறுப்பும் அல்ல.
இறுதியாக, என் தவறுகளை சுட்டி காட்டியமைக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். பாட்டாளி வர்க்கத்தை பற்றி தவறாக பேசி இருந்தால் என்னை மன்னிக்கவும்.
ரெபேக்கா மேரி அவர்களுக்கு,
தாங்களுக்கு நடந்தது உண்மை என்பதன் அடிப்படையிலோ பொய் என்பதன் அடிப்படையிலோ நான் கவனம் செலுத்தவில்லை. சொல்லப்போனால் எனக்கு இதில் இரட்டை நிலைப்பாடு இருந்தது உண்மை.
உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது கொண்டு நிறுத்துகிற அரசியல் என்ன என்பது தான் என் சொல்லாடல்கள். ஆனால் மனதிற்குள் தனிநபர் வசைபாடுகிற எண்ணம் தான் தற்பொழுது வரை. வியாசரையும் உங்களையும் அவர்கள் அவர்கள் என்று விளிப்பதில் விருப்பம் இல்லை. இதுவும் உண்மை. தனிநபர் தாக்குதலில் இறங்கினால் வினவு கண்டிப்பாக கரிசனம் எல்லாம் காட்டமாட்டார்கள். கருத்தை நோக்கியும் பயணிக்க முடியாது.
கம்யுனிசத்திற்கு எதிராக முழுப்பொய்களைக் காட்டிலும் அரைபக்க உண்மைகளே வீரியம் மிகுந்ததாக இருக்கிறது. இதற்காகத்தான் முறைகள் என்பதன் அடிப்படையில் அஸ்திரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.
அஸ்திரம் என்பதும் ஆணாதிக்கவகைப்பட்ட வார்த்தைதான். மன்னிக்கவும். இதைப் புரிந்துகொண்டால் பெண்ணுக்கு மறுமொழிபோடுகிற நீங்கள் சுட்டிகாட்டிகிற “பொதுநாகரிகத்திற்கு” எதிராக ஒரு விமர்சனத்தைத் தொடுக்க தயங்கமாட்டேன் என்பதையும் நினைவில் வையுங்கள். முடிந்தால் பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர்களை சந்தித்து உரையாடுங்கள்.
பெரும்பாலான அப்பாக்களே பொம்பளப்பிள்ளைகளிடம் சாசுவதமாக நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் சொல்வார்கள். இதுவும் ஆணாதிக்க வகைப்பட்டதுதான். இன்றைக்கும் நிறைய வீட்டில் பெண் அதிகம் படித்திருந்தாலும் சும்மா ஊர் சுற்றுகிற சில அண்ணன்களின் எச்சில் தட்டிலை எடுக்கிறார்கள். ஆண் வட்டு சட்டி கழுவினால் சமூகம் பொண்டுகன் என்கிறது. நீங்கள் இதையெல்லாம் கண்டிக்கமாட்டீர்கள். பொட்டு வைத்து தான் அழகாக தெரிகிற மேரிக்கு இதெல்லாம் அற்பமான விசயங்கள்.
நிற்க. என் தரப்பில் உங்களை அணுகிய விதம் தவறு. பெரும்பாலனவர்களுக்கு Previous History தெரியாது. இது ஒருபுறம் இருக்க உங்கள் பின்னூட்டத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அணுகினார்கள். பொட்டு, பூ, ஆணாதிக்கம் என்பதை வேறொரு பதிவிலும் கூட நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் தலைக்கு மேல் வெள்ளம் போவதாக எனக்கு ஒரு புரிதல். கறாரான பதிலை எப்படிச் சொல்லவேண்டும் என்பதுதான் தெரியவில்லை. However, I stand by what I said. அணுகிய விதம் என்பதில் மன்னிக்கவும்.
பதில் தேடுவது இருதரப்பு முயற்சி. ஆனால் உங்களுடன் அது சாத்தியம் இல்லை. விளக்கங்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தேடிக்கொள்ளலாம். ஆனால் போராட்டத்தை இங்கிருந்துதான் கற்றுக்கொள்ள முடியும். முயற்சி செய்யுங்கள். நன்றி.
தொழர் தென்றல் அவர்களும் சிஸ்டர் மேரி அவர்களும் ஒருவரின் கருத்தை ஒருவர் புரிந்து கொள்ள முயற்ச்சிப்பது பாராட்டுக்குறியது
ரெபேக்கா மேரி அவர்களுக்கு,
தற்பொழுதைய (விதாண்டா) விவாதத்திற்கு பிறகு பாட்டாளிகள் அல்லர்; ஆட்டோக்காரர்கள் பொறுக்கி வர்க்கம் என்கீறீர்கள். அதைத் தாங்களே நீர்த்துப் போகும்படிக்கு 80% பேர் பொறுக்கிகளாக இருப்பதாகச் சொல்கிறீர்கள். இன்னும் உரையாடினால் 80% 60% ஆகலாம். ஆனால் யாருக்கு என்ன பிரயோசனம்? மேரி ஏற்றுக்கொண்டார் எனில் ஆட்டோக்காரர்களின் வாழ்க்கை விடிந்துவிடுமா? இல்லை ஆணாதிக்கவாதிகள் எல்லா இடங்களிலும் இருக்கிற பொழுது ஒரு சில ஆட்டோக்காரர்கள் மேரி போன்ற ஆட்களிடம் வக்கிரத்தை காட்டாமல் இருக்கப்போகிறார்களா?
———
\\ கொஞ்சமாவது உங்களுக்கு அறிவு இருந்தால் இப்படி ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றி இருக்காது.. இது எப்படி ஆண் ஆதிக்க பிரச்சனை ஆகும். ஒரு கால் டாக்ஸி ஓட்டுனரிடம் குறிப்பிட்ட தூரம் வரை போய் வருவதற்கு தோராயமாக எவ்வளவு ஆகும் என்று கேட்டால்? அதற்க்கான விலையை அவர் கூறுகிறார். எனக்கு கட்டுபடியாகது என்று நினைத்தால் நான் அதை மறுத்து விடுகிறேன். அவரும் புன்முறுவலோடு அங்கிருந்து சென்று விடுகிறார். Call Taxi ஓட்டுபவரும் ஒரு ஆண் தான். ஆனால், ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருக்கும் அடாவடி பேச்சு இவர்களிடம் இருப்பதில்லையே ஏன்?\\
கால் டாக்சி பற்றிய தங்களது அறிவு பாராட்டப்பட வேண்டியது!!!
டில்லியில் நடைபெற்றது என்ன? மேலும் பீகார் நீதிமன்றம் கற்பழிப்பு சம்பவத்தைக் குறைப்பதற்காக கார்களில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று தானாக முன்வந்து உத்திரவு போட்டது எதற்காக? இதைச் சொல்வதற்கு கார்தொழிலாளிகள் பாலியல் வெறியர்கள் என்று தாங்கள் எடுத்த நிலையை நான் எடுக்கவில்லை. ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறை வீட்டிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. தோழர் சிவப்பு வைத்த கருத்து நடைமுறை எதார்த்தம் எனும் பொழுது ஏன் வலிந்து உங்களது கருத்தை நிறுவ முயற்சிக்கிறீர்கள்?
—-
\\ தவறை யார் செய்தாலும் தவறு தான். அதை ஆட்டோ காரன் செய்தால் என்ன, பாதிரியார் செய்தால் என்ன. பாதிரியார் செய்தால் அது புனிதமாகி விடுமா.\\
உங்களைப் போன்றவர்கள் இதையெல்லாம் கண்டிப்பீர்களேயானால் எந்த மதமும் இங்கு இருக்க முடியாது.
—————
எந்தப் பதிவிலும் பூ தொடர்பாக தாங்கள் நேரடியாக குறிப்பிடவில்லை என்பது எனக்கும் தெரியும். இது வாசகர்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கிறேன். இது நான் உங்களுடன் விவாதிக்க வேண்டியிருந்த விடயம். வியாசரைப் பாராட்ட வருகிறேன் என்ற பேர் வழியில் முதன் முதலாக ஒரு வாக்கியத்தை முன்வைத்தீர்கள் “இன்னும் எத்துணை காலத்திற்குத்தான் கத்தோலிக்க பார்ப்பனீயம் என்றும் வெள்ளாளியம் என்றும் ஜல்லியடிப்பார்களோ என்று!” அது குறித்து உங்களுக்கு ஒரு மறுப்பு எழுதுகிற பொழுதுதான் இந்த சிக்கலை சந்திக்க நேர்ந்தது. ஆகையால் தான் AAR க்கு மறுமொழி எழுதுகிற பொழுது பூவும் பொட்டும் மேரி அவர்களுடனான பழையபாக்கி என்று எழுதியிருந்தேன். பொட்டை இங்கு ஏன் குறிப்பிட்டேன் என்பதை மேலே என்பார்வையில் விளக்கியிருக்கிறேன்.
—————
இறுதியாக
கம்யுனிச பொதுபுத்தி தனிமனித தாக்குதல் என்கிறீர்கள். இது தவறு. மதம், ஆணாதிக்கம், தேசியம் என்பதன் அடிப்படைகளில் இருந்துதான் உங்கள் மீது விமர்சனம் வைத்தேனே தவிர மேரி இப்படி இருப்பதால் கத்தோலிக்கமும் தமிழ் தேசியமும் இருக்கிறது என்று சொல்லவில்லை.
ஆட்டோக்காரன் இப்படி இருப்பதால் தான் பாட்டாளிவர்க்கம் என்று சொல்லவில்லை. எனில் கம்யுனிசத்தை நீங்கள் பாட்டாளிகளிடத்தில் கண்டு கொள்ளலாம். முதலாளித்துவத்தின் வளமையான அவதூறு பிரச்சாரங்களில் ஒன்று கம்யுனிசம் என்றால் காரல்மார்க்ஸை கைகாட்டுவது! ஆனால் காரல்மார்க்ஸ் பாட்டாளிவர்க்கத்தை காட்டினார். இதையாரும் உங்களுக்கு சொல்வதில்லை. சொன்னால் இது அடிமடியில் கைவைக்கிற வேலை. ஏனெனில் கம்யுனிஸ்டுகள் தனிவார்ப்புகள். பாட்டாளிவர்க்கம் அனைத்து வர்க்கங்களையும் விடுவிக்காமல் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது என்று சொல்வதன் பின்னணி இது தான்.
மேரி அவர்களுக்கு,
சில ஆட்டோக்காரர்கள் தங்களை பாலியல் ரீதியாக சீண்டியது மிகுந்த கண்டனத்துக்குரியது.நடுத்தர வர்க்க பெண்கள் இது போன்ற துன்புறுத்தல்களை மவுனமாக சகித்துக் கொண்டு போகிறார்கள்.அங்குதான் ஆணாதிக்க பொறுக்கித்தனம் கேட்பாரின்றி ஆட்டம் போடுகின்றது.இது போன்று ஒரு உழைக்கும் வர்க்க ஏழை பெண்ணிடம் வாலாட்டினால் எதிர்வினை கடுமையாக இருக்கும்.இதில் வருத்தத்திற்கு உரிய செய்தி என்னவென்றால் இணையத்தில் புகுந்து சமூக பிரச்னைகளை அலசி ஆராயும் அளவுக்கு படித்த சமூக விழிப்புணர்வு பெற்ற நீங்களும் அமைதியாக கடந்து சென்றதுதான்.அதற்காக நீங்கள் வைஜெயந்தி IPS ஆக மாறி அவர்களை பந்தாடி இருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை.
”ஒரு முறை கல்லூரியில் இருந்து என் வீட்டிற்க்கு திரும்ப வருவதற்கு” என்று நீங்கள் சொல்லி இருப்பதை வைத்தும் நான்கைந்து ஆட்டோக்காரர்கள் உங்களை கேலி செய்ததாகவும் சொல்லி இருப்பதை வைத்தும் உங்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள ”Auto stand ல்” அந்த நிகழ்வு நடந்திருக்க வேண்டும் என ஊகிக்கிறேன்..நீங்கள் மாணவியாகவோ,ஆசிரியையாகவோ இருக்கலாம்.அப்படியானால் அந்த இடத்தில் இது போன்று வேறு எந்த பெண்ணுக்கும் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.
நீங்கள் ஏதேனும் ஒரு சங்கத்தில் அமைப்பாக திரண்டிருந்தால் அந்த கொடுமையை சகித்துக் கொண்டு போயிருக்க மாட்டீர்கள்.அது சரியான அமைப்பாக இருக்கும் பட்சத்தில் மறுநாள் உங்கள் சக தோழர்கள் 100,200 பேரை திரட்டி துடைப்பமும் செருப்பும் எடுத்துக் கொண்டு நிகழ்விடத்தில் போய் நியாயம் கேட்டிருப்பீர்கள்.அல்லது ஆட்டோ ஸ்டாண்டு தொழிலாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து இதனை சொல்லி நியாயம் கேட்டிருப்பீர்கள்.அந்த நிர்வாகிகள் முன்னிலையில் அந்த பொறுக்கிகளை செருப்பால் அடித்தாற்போல் நான்கு கேள்விகள் கேட்டு இருக்கலாம்.சரி,விடுங்கள்.உங்களை போன்ற மேன்மக்களுக்கு தெருவில் இறங்கி போராடுவது கௌரவ குறைச்சலாக தோன்றும்.உங்கள் வழியிலேயே கேட்கிறேன்.இது குறித்து கல்லூரி முதல்வரிடம் முறையீடு கொடுத்து காவல் துறை மூலமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.உங்கள் மவுனத்தின் மூலமாக அவர்கள் பிற பெண்களிடமும் இவ்வாறு நடந்து கொள்ளும் துணிவை அவர்களுக்கு வழங்கி இருக்கிறீர்களா இல்லையா.
Comrade Thendral,
This is about your interaction with RM.
1. Based on RM’s points (in another post) on the absence of Thevaram, etc in Catholics’ houses and Pottu in Catholic womens’ front, RM is not a catholic but an imposter.
2. I don’t see in your comments any personal attack on this person. This person is just a troll looking for wasting our time by making unwarranted provocation. Beware of such persons.
hi mr univerbuddy,
why youn are not use tamil in your comments?, you can understand the article in tamil so you definitely know tamil then why you are writing in english
Hi Mr Joseph,
Sorry for the late reply. I was very busy.
I write in both Tamil and English depending upon the time I have. Tamil needs more time than English. I use both of them in many of my comments to convey my point in shortest time in best way possible.
Thanks for the question.
I guess, Univerbuddy is the English version Alter Ego of one of our Vinavu friends who write in Tamil. May be he wants to differentiate two different personalities of himself with 2 versions – One who writes only in Tamil and another one who writes only in English.
We already saw another 2 versions of one person – Senthilkumaran and the new 2.0 version – Saravanan. 🙂
May be Univerbuddy has another Alter ego like that of Senthilkumaran/Saravanan. 🙂
Hi KK,
I already replied to this very comment. But it has failed to sink in you.
Let me add one more point to the last reply.
I agree that the communists are rare. But not so rare that same person has to come in two/more pseudos and write comments in different languages and ways.
“பொட்டு வைப்பது தமிழ்ப்பண்பாடு என்றாலே, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்து விடுகிறது” என்கிறார் திப்பு சுல்தான், அப்படியானால், முஸ்லீம்களின் பண்பாடாகிய பெண்கள் முக்காடிடும் வழக்கம் பெண்களுக்கு எதிரான வன்முறை இல்லையா? “தில்லித் துலுக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்” என்று பாடினார் பெண் விடுதலைக்காக அந்தக் காலத்திலேயே குரல் கொடுத்த பாரதியார். அதனால் பொட்டு வைப்பது தமிழ்ப்பண்பாடு என்பது பெண்களுகெதிரான வன்முறை என்றால், பெண்கள் முக்காடிடுவதும் பெண்களுக்கெதிரான வன்முறை என்பதை திப்பு சுல்தான் ஒப்புக் கொள்கிறாரா என்பதை அறிய ஆவலாக உள்ளது. 🙂
//வியாசனும் தாங்களும் பொட்டுவைப்பதை தமிழ் பண்பாடு என்று காட்டுகிறீர்கள். இங்கேயே பெண்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்துவிடுகிறது.//
அதிலென்ன சந்தேகம்? முக்காடு இடுவதும் தான் அப்பட்டமான வன்முறை.
பின்னூட்டம் 19இலேயே இதை குறிப்பிட்டிருக்கிறேன் வியாசன். மேலும் இது ஆட்டோ தொழிலாளர்களைப் பற்றி பதிவு. இது குறித்த மேற்கொண்ட உங்கள் வியாக்கானங்களை கால்டுவெல் பதிவில் இருந்து ஆரம்பியுங்கள். நீங்கள் பதில் சொல்ல வேண்டியது அதிகம் அங்கு இருக்கிறது. இங்கு உட்கார்ந்து நரகலில் அரிசி பொறுக்கிய கதையாக வியந்து ஓதாதீர்கள்.
“மணம் இல்லாமேலேயே இசுலாத்தில் முக்காடு போட்டு கொண்டுவருகிறார்கள். எல்லாமே ஒன்றுதான். ஒருத்தன் ஏண்டா கொலை செஞ்ச என்று கேட்டால் உசிரோடு இருந்தான் அதான் கொலை செய்தேன் என்கிறான். முக்காடுபோடவில்லை என்றால் கற்பழிப்பார்கள் என்று பழியை பெண்மீது போடுகிறார்கள். இங்கிருக்கறவன் காலில் மெட்டியோ கழுத்தில் தாலியோ வகிட்டில் பொட்டோ இல்லை என்றால் வேறு ஒருத்தன் அப்ரோச் செய்வான். ஆகையால் இது Safe Barrier என்று அங்கேயும் பெண்ணைத்தான் கைகாட்டுகீறீர்கள். இதற்கு எதிர்ப்பதமாக பொட்டுவைக்காதவர்களை முண்டச்சி என்று திட்டுகிறது பார்ப்பனீயம். தமிழ் தேசியத்தின் யோக்கியதையையும் உங்களது கூட்டணியையும் பார்த்தோம். இது தமிழர்களின் கலாச்சாரம் என்று சொல்வதற்கு பிண்ணனியில் முகமூடியாக இருக்கிற மதநிறுவனங்களின் அயோக்கியத்தனத்தையும் கண்டிக்கிறோம்.”
இலங்கையில் ‘பொட்டு’ தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம்!
http://viyaasan.blogspot.com/2014/06/blog-post_22.html
//பொட்டு வைப்பது தமிழ்ப்பண்பாடு என்றாலே, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்து விடுகிறது”//
மன்னிக்கவும், மேலேயுள்ள பொன்மொழியை உதிர்த்தவர் தோழர் தென்றல். தவறுதலாக திப்புவைக் குறிப்பிட்டு விட்டேன்.
//வியாசரையும் உங்களையும் அவர்கள் அவர்கள் என்று விளிப்பதில் விருப்பம் இல்லை. இதுவும் உண்மை.//
நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை. தென்றல் என்றதும் எனக்கு அது, இது என்று தான் எழுதத் தோன்றுகிறது, இதுவும் உண்மை. 🙂
//இது குறித்த மேற்கொண்ட உங்கள் வியாக்கானங்களை கால்டுவெல் பதிவில் இருந்து ஆரம்பியுங்கள். நீங்கள் பதில் சொல்ல வேண்டியது அதிகம் அங்கு இருக்கிறது. ///
அங்கும் நீங்கள் ஒன்றும் புதிதாக பதில் வைக்கவில்லை. அரைத்த மாவையே திருப்பி அரைக்கும் உங்களின் உளறல் தான், அதனால், பதில் சொல்ல வேண்டிய எந்த விதக் கட்டாயமும் எனக்குக் கிடையாது.