தமிழக அரசியல் அரங்கில் அநாதையாக தனித்துவிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, நடந்து முடிந்த தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்தார் சமூக சமத்துவப் படை கட்சியின் சிவகாமி, எனும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. தேர்தலில் போட்டியிட ஆள் கிடைக்காமல் அவதிப்பட்ட காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்க மறுத்து விட்டாலும், அதை பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரம் செய்தார் இந்த அம்மையார். இப்படி காங்கிரசின் கடைசிக் காலத்தில் அதனுடன் சேர்ந்தால், ஊர் உலகம் கேலி செய்யும் என்பது தெரிந்தாலும் சிவகாமி விரும்பி காங்கிரசுடன் சேர்ந்தது ஏன்? அதற்கான விடை தலித்தியத்தின் சரணாகதிக்கு ஒரு எடுப்பான சான்றாக இருக்கிறது.
ஐஏஎஸ் அதிகாரியான இவர் எண்பதுகளின் மத்தியில் இலக்கிய உலகில் தலித் மற்றும் பெண்ணிய எழுத்தாளராக அறிமுகமானார். பின்னர் 90-களில் தலித் நிலவுரிமை இயக்கம், பெண்கள் ஐக்கிய பேரவை என்று நேரடியாக அடையாள அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். புதிய கோடங்கி என்ற பத்திரிகையையும் நடத்தினார். அன்றைய காலகட்டத்திலேயே அந்த பத்திரிகைக்கான விளம்பர கட்டணம் ரூ 50,000 என்று நிர்ணயிக்கப்பட்டு அரசின் கோ-ஆப்டெக்ஸ் விளம்பரங்களும் பெறப்பட்டன. பின்னர் விருப்ப ஓய்வு பெற்று 2008-ல் முழு நேர அரசியலுக்கு வந்தார் சிவகாமி. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராகி 2009 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். அந்தக் கட்சியில் போணியாகாததால் தனியாக கடைவிரித்து தற்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இது தான் இவரது முன் கதை சுருக்கம்.
காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னர் தினமலருக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் முதலில் தேமுதிக உடன் கூட்டணிக்கு முயன்றதாகவும் ஆனால் அவர்கள் பதில் ஏதும் சொல்லாததால் தற்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். முதலில் விழுப்புரம் தொகுதியை தருவதாக கூறிய காங்கிரஸ் பின்னர் ஏனோ அந்த தொகுதிக்கு வேறு நபரை நியமித்துவிட்டாலும், எந்த வருத்தமுமின்றி காங்கிரசின் வெற்றிக்கு உழைக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
“நிலமற்றவர்களுக்கு நிலம் அளிக்கும் வரைவு திட்டத்தை, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து உள்ளது. நிலமற்றவர்களுக்கு நிலம், வீடு அல்லாதவர்களுக்கு வீடு என்பது, ‘சமூக சமத்துவ படை’யின் முக்கிய கோரிக்கைகள். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி, பிற கட்சிகள் பேசாத நிலையில், காங்கிரஸ் அவர்கள் பற்றிய சிந்தனையை முன்னெடுத்து உள்ளது. காங்கிரசின் துணை தலைவர் ராகுல் இதில் முன் மாதிரியாகவும் உள்ளார். எனவே, எங்களது கொள்கையுடன் ஒத்துப்போகும் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து உள்ளோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“கம்யூனிஸ்டுகளுக்கு சாதி பற்றிய புரிதல் இல்லை”, “கம்யூனிஸ்டுகள் தலித்களுக்கு எதுவும் செய்யவில்லை” என்று அவதூறு கூறும் எல்லா தலித்தியவாதிகளுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகள் சாதியை புரிந்துகொண்ட கட்சிகளாக தெரிவது தான் இதில் உள்ள முக்கிய அம்சம். சிவகாமி போன்றே, திருமாவளவனும் தேர்தல் அரசியலில் பங்கேற்ற முதல் தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரசுடன் தான் கூட்டணி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தேர்தல் பாதைக்கு அழைத்து வந்த மூப்பனார் குறித்து பல இடங்களில் சிலாகித்தும் கூறியிருக்கிறார்.
தஞ்சை நிலஉடைமையாளரான மூப்பானாரும் காங்கிரசும் சாதியை புரிந்து கொண்டிருக்கும் அளவில் செங்கொடி இயக்கமும், கம்யூனிஸ்டுகளும் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்ற தலித்தியவாதிகளின் நிலைப்பாட்டிற்கு சிவகாமி மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன? அதனால் திருமாவும், ரவிக்குமாரும் மூப்பனார், ராமதாஸ், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற சாதி ஒழிப்பு போராளிகள் பின்னால் அணி திரண்டார்கள் என்றால் சிவகாமி முதலில் கேப்டன் பின்னாலும், கேப்டன் கேட்டை சாத்தியதால் பிறகு ராகுல் பின்னாலும் சாதி ஒழிப்புக்கான பாதையில் நடைபோடுகிறார்.
பாஜக-வை ஏன் ஆதரிக்கவில்லை என்ற கேள்விக்கு பாஜக கூட்டணியில் ராமதாஸ் இருப்பதாகவும் அதனால் தன்னால் ஆதரிக்க முடியாது என்று தேவர் சாதிவெறி கார்த்திக் உடன் கூட்டணி சேர்ந்து கொண்டு கூறுகிறார் சிவகாமி. அவரது கூற்றுப்படி பாஜக உடன் கூட்டணி சேராததற்கு ராமதாஸ் அந்த கூட்டணியில் இருப்பதுதான் காரணமே தவிர மற்றபடி மோடி செய்த இனப்படுகொலையோ, அவர்களின் இந்துத்துவ சித்தாந்தமோ இவருக்கு பிரச்சனையில்லை என்பது தெரிகிறது. அவரின் பின்வரும் கூற்று மூலம் இதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். “தேர்தல் கூட்டணி என்பது, கொள்கைகள் அடிப்படையில் அமைவதில்லை. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அமைகின்றன” ‘கொள்கை எல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா’ என்ற பச்சையான பிழைப்புவாதம்தான் இது.
ராமதாசுடன் கூட்டணி அமைக்க முடியாத இவர் கார்த்திக்குடன் கூட்டணி வைக்கிறாரே எப்படி? அதில் தான் தலித் உட்பிரிவு அரசியல் இருக்கிறது. அதாவது இவர் கட்சி தலித்களின் உட்பிரிவான பறையர் சாதியை அடிப்படையாக கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் அந்த சாதிமக்கள் ராமதாசின் சாதி வெறியால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் ராமதாசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது. ஆனால் தென்மாவட்டங்களில் பள்ளர் சாதியினரை ஒடுக்கும் தேவர் சாதி வெறி கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது இவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தாது. இதுதான் இவர்கள் கார்த்திக்கை சகித்துக் கொண்ட இரகசியம். இது தான் இவரது ராமதாஸ் எதிர்ப்பு என்பதற்கு அடிப்படை, மற்றபடி தலித்துகள் மீதான் பாசம் கிடையாது.
சிவகாமி உள்ளிட்ட சாதிய பிழைப்புவாதிகளின் நோக்கம், சாதியாக மக்களை அணிதிரட்டி அதைக் காட்டி பெரிய கட்சிகளிடம் பேரம் பேசி பல்வேறு ஆதாயங்களை, இல்லை கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி, காண்டிராக்ட், கட்ட பஞ்சாயத்து, காவல் நிலையம், அரசு அலுவலகங்களில் காரியம் சாதிப்பது என்று ஏனைய ஓட்டுப் பொறுக்கிகளோடு போட்டி போட்டு வளருவதுதான். அதனால் தான் தாழ்த்தப்ப்பட்ட மக்கள் புரட்சிகர கட்சிகளிலோ இல்லை பிற ஜனநாயக அமைப்புகளிலோ அணிதிரள்வதை இவர்கள் தங்கள் பிழைப்பில் மண்ணைப்போடும் செயலாக பார்க்கிறார்கள். அதற்காக கோபப்படுகிறார்கள்; ஆத்திரமடைகிறார்கள். இதையெல்லாம் கேட்டால் இதுநாள் வரை மற்ற ஆதிக்க சாதிக் கட்சிகள் பிழைத்து வந்தது போல தலித் கட்சிகள் இன்று புதிதாக இப்படி பிழைப்பதில் என்ன தவறு என்று கோட்பாட்டு விளக்கம் கூறுகிறார்கள்.
இளவரசன் மரணம் தொடர்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு “தலித் அல்லாத எந்த இயக்கமும், கட்சியும் இந்த பிரச்சனையை கையில் எடுப்பத்ற்கு தகுதி இல்லை” என்று தன்னை பேச அழைத்த “சேவ் தமிழ்ஸ்” ‘அப்பாவி’களை இதே சிவகாமி குதறி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகாமியின் இந்த அறச்சீற்றம் ராகுல் காந்தியிடமோ இல்லை கேட்டை திறந்து கூட்டணியில் சேர்த்திருந்தால் கேப்டனிடமும் காட்டமுடியுமா? இல்லை திருமா, ரவிக்குமார் போன்றோர்தான் தான் கருணாநிதியிடம் காட்ட முடியுமா?
இது ஏதோ பிற இயக்கங்கள் மீதான ஒரு பிழைப்புவாதியின் தனிப்பட்ட கோபம் மட்டுமல்ல. தலித்தியம் என்ற சித்தாந்தமே இத்தகையதுதான். சமீபத்தில் “சாதியை ஒழிப்பது எப்படி” என்ற புத்தகத்திற்கு அருந்ததிராய் எழுதிய முன்னுரைக்கு சில தலித்தியவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதில் முக்கியமானது ‘தலித் அல்லாதவர் அம்பேத்கரை குறித்து எழுத தகுதியில்லை’ என்பது. இது தலித்திய அரசியல், தலித் தலைமை, சாதியை தலித்துகளால் மட்டும்தான் புரிந்து கொள்ள முடியும், தலித்தாக பிறந்தவர் தான் தலித் இலக்கியம் படைக்கமுடியும் என்பதன் நீட்சியே.
குறிப்பிட்ட இந்த சம்பவம் குறித்து ஆனந்த் தெல்டும்டே எழுதிய கட்டுரையில் “தலித்தியவாதிகளுக்கு கம்யூனிசத்துடன் ஏதோ ஒரு மூலையில் தொடர்புடைய எதுவாகிலும் அது வெறுப்பதற்கும் நிராகரிப்பதற்கும் போதுமானதாக இருக்கிறது. அருந்ததிராய் தொடர்பான பிரச்சனையும் அப்படிப்பட்டதுதான்” என்கிறார்.
ஆனந்த் தெல்டும்டே கூறுவது போல தலித்தியவாதிகளுக்கு கம்யூனிசம் என்றாலே ஏன் கசக்கிறது? தலித்தியவாதிகளின் இன்றைய சீரழிவுக்கு காரணம் என்ன? அதை தெரிந்து கொள்ளவும் பொதுவில் முற்போக்கு சிந்தனை உடையவர்களும், தாழ்த்தப்பட்ட இளைஞர்களும் தலித்தியம் என்பது ஏதோ சாதி ஒழிப்புக்கானது என்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்கான்து என்றும் புரிந்து கொண்டுள்ளது சரிதானா என்பதை பரிசீலித்து பார்க்க தலித்தியத்தின் வேரை தேடி அறிவது அவசியம்.
தமிழகத்தை பொறுத்தவரை தலித்தியம் என்பதை முதலில் முன்வைத்தது மதுரை அரசரடி இறையியல் கல்லூரி. இது தென்னிந்திய திருச்சபை, ஆற்காடு லூதரன் சர்ச், தமிழ் எவாஞ்சலிக்கல் லூதரன் சர்ச் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் அமைப்பாக 1969-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த காலகட்டம் முக்கியமானது. உழுபவனுக்கே நிலம என்ற முழக்கத்துடன் நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியை தொடர்ந்து புரட்சிகர சக்திகள் உத்வேகமடைந்து நாடு முழுவதும் நக்சல்பாரி இயக்கம் பரவிக்கொண்டிருந்த காலம். நக்சல்பாரி எழுச்சிக்கு முன்னரே கூட தாழ்த்தப்பட்ட மக்களிடையே செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தமாக கம்யூனிசம் இருந்து வந்தது. கம்யூனிஸ்டுகளின் ஆயுதந்தாங்கிய தெலுங்கானா உழவர் புரட்சி, நக்சல்பாரி புரட்சி என உழைக்கும் மக்களின் (அதில் கணிசமானோர், தாழ்த்தப்பட்ட மக்கள் ) நில உரிமைக்காக இரத்தம் சிந்தி போராடிவந்த தலைமையாக கம்யூனிஸ்டு கட்சிகள் விளங்கியதால் மக்கள் இயல்பாக கம்யூனிஸ்டுகளின் பின்னால் அணி திரண்டிருந்தார்கள்.
இதில் போலிக் கம்யூனிஸ்டுகள் தலைமை பார்ப்பனிய சமூக அமைப்பை கோட்பாட்டு ரீதியில் புரிந்து கொண்டு அதை மாற்றும் திட்டத்தை கொண்டிருக்கவில்லை என்றாலும், கீழ் மட்டத்தில் இருந்த வர்க்க அமைப்புகள் சாதி ஏற்றத் தாழ்வை எதிர்த்து போராடின. கீழத்தஞ்சை, கேரளா, ஆந்திரா, பீகார், வங்கம் என்று அது நாடு முழுவதும் நடந்திருக்கிறது. பிறகு போலிக் கம்யூனிஸ்டுகளிடமிருந்து முறித்துக் கொண்டு வந்த நக்சல்பாரி இயக்கம் நிலமற்ற விவசாயிகளுக்கு அல்லது உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம் என்ற முழக்கத்தோடு கிராமப்புறங்களில் வேலை செய்தது. இதில் பிற சாதி உழைக்கும் மக்களுக்கு தீர்வு இருப்பதோடு தலித் மக்களுக்கும் இருக்கிறது என்பதே இங்கே நாம் பார்க்க வேண்டியது.
உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கத்தை கொண்ட புதிய ஜனநாயக புரட்சியும், அதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களையும் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் நிலம் மற்றும் அரசியல் அதிகாரம் பெறுவதும் ஏகாதிபத்தியத்தின் சமூக அடிப்படைகளில் ஒன்றான நிலப்பிரபுவத்துவத்தையும் குறிப்பாக பார்ப்பனியத்தின் சாதி முறையையும் தகர்க்கும் என்பதால் அதை தடுக்க புரட்சிகர அமைப்பிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்து, அவர்களைக் கொண்ட சாதியை கெட்டிப்படுத்தி பார்பனியத்திற்கு சேவை செய்ய வைப்பது ஏகாதிபத்தியங்களுக்கு தேவையாக இருந்தது.
சர்வதேச ரீதியில், ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான சக்திகளை ஒன்று குவித்து தாக்கும் கம்யூனிச சித்தாந்தத்திற்கு மாற்றாக, போராடும் மக்களை பிளவுபடுத்தும் ஒரு சித்தாந்தம் தேவை என்பதை உணர்ந்து கொண்டு, 80 -90 களில் பின்நவீனத்துவம் என்ற சித்தாந்தம் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைகழகங்களிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
‘வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி மக்கள் அவரவர் பிரச்சனைக்கு தனித்தனியே சிறு சிறு அமைப்புகள் கட்டி போராட வேண்டும். அவை அவர்களது சாதி,மத, பால், இன்னபிற அடையாளங்களோடு கூடிய கட்சிகளாக இருக்கலாம். இதை மறுத்து உழைப்பவர், தொழிலாளியைத் திரட்டுவது, வர்க்கம் என்று பேசுவது பெருங்கதையாடல்’ என்று கூறி நிராகரித்து பெண்ணியம், சூழலியம், தலித்தியம், கருப்பின அதிகாரம் என்று இனம், பாலினம் என்று பலவகைகளில் மக்களை பிரிக்கும் வேலையை ஏகாதிபத்தியத்தின் அறிவு ஜீவி அடியாட்கள் செய்து வந்தனர்.
இந்த அடியாள் வேலைக்கென்றே 89-ல் தலித் ஆதார மையம் என்ற அமைப்பை பிரத்யேகமாக ஆரம்பித்தது மதுரை இறையியல் கல்லூரி. அவர்களுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி இவர்கள் தான் தலித்தியம், தலித் அரசியல், தலித் இறையியல, தலித் வழிபாடு, தலித் ஓவியம், தலித் நாடகம், தலித் கலைவிழா, அம்பேத்கர் ஆய்வு, தலித் பெண்ணியம் என்று தமிழகத்தில் புகுத்தினார்கள். 90-களின் மத்தியில் மக்கள் கலை இலக்கிய கழகம் பார்ப்பன பண்பாட்டிற்கு எதிராக “தமிழ் மக்கள் இசை விழா” என்று மக்களை ஒருங்கிணைத்தால் அதற்கு எதிராக அடுத்த ஆண்டே “தலித் கலை விழா” என்று மக்களை பிளவுபடுத்த முயன்றார்கள்.
மதுரை இறையியல் மையம் மற்றும் அதன் சித்தாந்த பின்னணியில் தான் பல்வேறு தலித்திய இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றின. அல்லது தோன்றிய இயக்கங்கள் தலித்திய அரசியலை கற்றுக் கொண்டன. புரட்சியின் மூலம் சமூக அமைப்பை மாற்றுவதற்கு பதிலாக நிகழும் சமூக அமைப்பை ஏற்றுக்கொண்டு தேர்தலில் பங்கேற்பதன் மூலம் அரசியல் அதிகாரம் பெறலாம் என்றும், உழுபனுக்கே நிலம் என்ற கோரிக்கைக்கு மாற்றாக பஞ்சமி நிலத்தை மீட்போம் என்றும் கூறி புரட்சிகர கட்சிகளின் முழக்கங்களை நிராகரித்து ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்தார்கள் இந்த தலித் அமைப்புகள். அதற்கு பிரதிபலனாகத்தான் இன்று ஆளும் வர்க்கம் இவர்களுக்கு பொறுக்கி தின்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
ஃபோர்டு ஃபவுண்டேசன் போன்ற ஏகாதிபத்திய அமைப்புகள் தலித்தியம் என்ற கோட்பாட்டை முன்னிறுத்துவதன் மூலம் தலித் மக்களை பிளவுபடுத்தியதாக கூறும் அருந்ததி ராய் கூட, வெளிநாடுகளில் படிப்பதற்காக ஃபோர்டு ஃபவுண்டேசனிடமிருந்து நிதி உதவி பெறும் தலித் மாணவர்களை கடுமையாக விமர்சிக்க முடியாது என்று குறிப்பிடுகிறார். ஆனால், அப்படி ஏகாதிபத்திய நிதி உதவி பெற்று படிக்கும் மாணவர்கள்தான் எதிர்காலத்தில் தலித்திய அறிவுஜீவிகளாகவும், தலைவர்களாகவும் உருவெடுக்கிறார்கள் என்பதையும் புறக்கணித்து விட முடியாது.
அடையாள அரசியல் பேசும் கட்சிகளுக்கு முற்போக்கு சித்தாந்த மூலாம் பூசவும், கம்யூனிஸ்டுகளை அவதூறு செய்து அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை புரட்சிகர கட்சிகளிலிருந்து பிரித்து , இந்த பிற்போக்கு தலித் அமைப்புகளில் சேர்த்து ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யவும் பின்நவீனத்துவ அறிவுஜூவிகள் கடுமையாக உழைத்தார்கள்.“கம்யூனிஸ்டு கட்சிகளும், நக்சல்பாரிக் கட்சியும் தலித்துகளை காலாட்படையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அக்கட்சிகளிலிருந்தெல்லாம் தலித்துகள் வெளியேறித் தமக்கென தனிக்கட்சி தொடங்கவேண்டும். தலித்துகளின் உணர்வுகளைத் தலித் அல்லாதவர்கள் ஒருக்காலும் உணர முடியாது. தீண்டாமைக்கு எதிராகத் தலித்துகளைத் தவிர, வேறு யாரும் போராடுவார்கள் என்று நம்ப முடியாது. தீண்டாமைக்குரிய தீர்வை ஒரு தலித்தைத் தவிர வேறு யாரும் கூறமுடியாது. தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலித்தைத் தவிர வேறு யாரும் தலைமை தாங்க முடியாது, கூடாது. வர்க்கம் என்ற பேரடையாளத்துக்குள் சாதியை அடக்குவதால் கம்யூனிசம் சாதியை ஒழிக்காது. கம்யூனிஸ்டுகள் அதற்காகப் போராடியதுமில்லை. எனவே, தலித்துகள் சிதறிக் கிடக்காமல் தனியொரு வாக்கு வங்கியாகத் திரள வேண்டும். போலி ஜனநாயகம் என்று கூறி இந்தத் தேர்தலை புறக்கணிப்பது தவறு. தேர்தல் அரசியல் மூலம் கைப்பற்றும் அதிகாரத்தின் மூலமும், கல்வி – இட ஒதுக்கீடு, ஆங்கிலக் கல்வி முதலான வழிகளில் பொருளாதார முன்னேற்றம் அடைவதன் மூலமாகவும்தான் தலித்துகள் விடுதலை பெற முடியும்,’ என்று அ.மார்க்ஸ், இரவிக்குமார் உள்ளிட்ட பின்நவீனத்துவவாதிகளும், தலித்தியவாதிகளும் பிரச்சாரம் செய்தனர்.
தலித் அமைப்புகளை மட்டுமல்லாது ஆதிக்க சாதி வெறியையும் அடையாளத்தையும் முன்னிலைப்படுத்திய பா.ம.க வையும் ஆதரித்தனர். இவர்கள் சாதியை மட்டுமின்றி, உட்சாதி அடையாளங்களையும் போற்றிக் கொண்டாடினர். சாதி அடையாளங்களைப் பேணிக் கொண்டே, சாதி சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதுதான் ஜனநாயகம் என்று தங்கள் நவீன பார்ப்பனியத்திற்கு புது வியாக்கியானம் அளித்தனர்.
சாதிமுறையை கெட்டிப்படுத்தும் இத்தகைய அடையாள அரசியல் மூலம் தலித் ஒற்றுமை என்பதை கூட அவர்களால் நிலைநாட்ட முடியவில்லை, இனியும் முடியாது என்பதே உண்மை. அருந்ததியர்க்ளுக்கான உள் இடஒதுக்கீட்டை சக தலித் அமைப்புகளே தடை செய்ய கோருவதை இப்படி தான் புரிந்துகொள்ள வேண்டும்.
சரி இவர்கள் கூறிய இந்த பாதையினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏதேனும் நன்மை விளைந்திருக்கிறதா என்றால் எதுவும் இல்லை. பெரும்பான்மை மக்கள் இன்னும் விவசாய கூலிகளாகவும், கிராமப்புறங்களிலிருந்து விரட்டப்பட்டு நகர்புறங்களில் கூலிகளாகவும், புலம்பெயர் தொழிலாளர்களாகவும், கொத்தடிமைகளாகவும் தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். சாதிவெறியாட்டங்களும், கௌரவ கொலைகளும் முன்பைவிட அதிகரித்திருக்கின்றன. அதற்கு எதிர்வினையாற்றும் திராணி கூட இல்லாமல் தலித் இயக்கங்கள் சீரழிந்துள்ளன. ஆனால் தலித் தலைமையோ மறுகாலனியாக்க கொள்கைகள் திறந்து விட்டிருக்கும் ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை, லேபர் காண்டிராக்ட், உரிமங்கள் பெற்றுத் தருதல், தண்ணீர் வியாபாரம், செக்யூரிட்டி ஏஜென்சி, மெட்ரிக் பள்ளி, சுயநிதிக் கல்லூரி, வாடகைக்கார் தொழில், நிலம் சார்ந்த கட்டப் பஞ்சாயத்துகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கான துணைத் தொழில்கள், கருங்காலி தொழிற்சங்கங்கள் போன்று பொறுக்கித் தின்னவும், கொள்ளையடிக்கவுமான பல வாயப்புகளை பய்ன்படுத்தி ‘முன்னேறியிருக்கிறார்கள்’.
இப்படி பொறுக்கித் தின்பதில் ஆதிக்க சாதியினரும், தலித் தலைமைகளும் கொண்டுள்ள தொழிற்கூட்டு காரணமாக, தங்கள் வர்க்க நலன் கருதி தலித் மக்களுக்கு துரோகம் இழைக்கவும் இவர்கள் தயங்குவதில்லை. இளவரசன் மரணத்தில் பாமக வின் சாதிவெறியை நேரடியாக விடுதலை சிறுத்தைகள் கண்டிக்கவில்லை என்பது இதற்கு நல்ல உதாரணம்.
ஆக ஏகாதிபத்தியங்களின் சமூக அடிப்படையான நிலப்பிரபுத்துவத்தையும் அதன் பார்ப்பன சாதிமுறையையும் பாதுகாக்க உருவாக்கி வளர்க்கப்பட்ட தலித்தியம் அதை செவ்வனே செய்து வருகிறது. சாதி ஒழிப்பு சமூக மாற்றம் என்பதை உண்மையிலேயே விரும்பும் எவராகிலும் தலித்தியத்தை புறந்தள்ளி புரட்சிகர அமைப்புகளில் அணி திரளவதே இன்றைய தேவையாக இருக்கிறது. அடையாள அரசியல் சாதியை ஒழிக்காது, உழைக்கும் மக்களுக்கு நிலத்தை சொந்தமாக்கும் புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்தை வென்றெடுக்க முடியும்.
ஆரம்பத்தில் சிவகாமியும இப்படித்தான் மதுரை அரசரடி இறையியல் மையத்தின் மூலம் ஞானம் பெற்று தீவிர தலித்தியம் பேசிவந்தார். பிறகு அ.மார்க்ஸ் கும்பல் பின்நவீனத்துவம் பேசிய போது அம்பேத்கரையும், பின் நவீனத்துவத்தையும் ஒட்டுப் போட்டு இணைத்து பேசினார்.
இந்த பிழைப்புவாதியை அறிவுஜீவியாகவும், தலித்துகளின் நில உரிமைகள் மீட்பு போராளியாகவும் தலித்தியவாதிகள் சித்தரிக்கிறார்கள். தலித்துகளின் உரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.
சமீபத்தில் இவரிடம் RoundTableIndia என்ற தலித் இணையதளம் பேட்டி கண்டு வெளியிட்டிருந்தது. அதில் இவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி
“நீங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்கிறீர்கள் அல்லது நிலப்பகிர்வு தொடர்பான கொள்கைகளை மறுஆய்வு செய்யவேண்டும் என்கிறீர்கள் அல்லவா?”
“தலித்களின் நில உரிமைக்கு நாங்கள் ஒரு மாநாட்டை கூட்டினோம். அதில் குறைவான நபர்களே பங்கு கொண்டனர். அனைவரும் வர முடியாதல்லவா?
இதனால் ஒரு நாளை குறிப்பிட்டு அந்த நாளில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனுகொடுக்க கோரினோம். (அதற்கும் ஆள்வரவில்லை – வினவு) .
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிராமங்களிலிருந்து அதிக தொலைவில் இருக்கிறது என்பதை உணர்ந்து தாலுகா அலுவலகத்தில் மனுகொடுக்கும் போராட்டம் நடத்தினோம். (அதற்கும் ஆள்வரவில்லை – வினவு).
பின்னர் தந்தி அடிக்கும் போராட்டம் நடத்தினோம்.”
தலைநகரில் ஆரம்பித்த போராட்டம் தபால் நிலையம் வரை பற்றி ‘படர்ந்த’ இந்த போராட்ட வழிமுறையை வெட்கமே இல்லாமல் நக்சலைட்டுகளைவிட முற்போக்கானதாக சித்தரிக்கிறார்கள்.
இவரை அறிவுஜீவி என்று நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்காக சில முத்துக்களை உதிர்த்திருக்கிறார் சிவகாமி.
“விவசாயம் இன்று லாபகரமானதாக இல்லை என்பது ஆதிக்க சாதிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்தி. தலித்துகளை நிலத்தில் இருந்து விரட்டியடிக்க அப்படி பரப்புகிறார்கள்.”
“மிகச் சிலரே நிலம் வைத்திருப்பதால் விவசாயிகளின் லாபி பலவீனமாக இருக்கிறது. அதனால அரசுடன் பேரம் பேச முடியவில்லை.”
விவசாயத்தை பற்றி இந்த அறிஞர் அம்மா எவ்வளவு மோசடியாக புரிந்து வைத்திருக்கிறார் என்பதற்கு இந்த இரண்டே போதும்.
இவ்வாறு ஆளும் வர்க்கங்களுடன் சமரச அரசியல் நடத்திய இந்த தலித் மற்றும் பின் நவீனத்துவ கும்பல் எதிரும் புதிருமான முகாம்களின் தஞ்சமடைந்தது. ரவிக்குமார் எனும் தலித்தியப் போராளி காலச்சுவடு எனும் அக்மார்க் பார்ப்பனியப் பத்திரிகையில் சேர்ந்து பிறகு விடுதலை சிறுத்தை கட்சியில் சேர்ந்து எம்எல்ஏ, கருணாநிதியின் உள் வட்ட நண்பர் என்று ஒரு அதிகார மையமாக மாறிப்போனார்.
அ.மார்க்ஸும் பிறகு காந்தி, நபி, மனித உரிமை என்று பல பேசி தற்போது முன்பு தான் வெறுத்து எழுதிய கம்யூனிசத்திற்கு மாறாக போலிக் கம்யூனிஸ்டுகளின் கூட்டங்களில் பங்கேற்கிறார். இதனால் அவர் கம்யூனிச எதிர்ப்பை மாற்றிக் கொண்டார் என்பதல்ல. சமீபத்தில் நடந்த வால் ஸ்டீரீட் போராட்டத்தின் போது கூட இனி கட்சி, புரட்சியெல்லாம் சாத்தியமில்லை என்று உதிர்த்தவர் இந்த அறிஞர். இருப்பினும், கம்யூனிசத்தை திட்டினாலும், நமது கட்சியை ஆதரிக்கிறாரே என்று போலிக் கம்யூனிஸ்டுகள் இவரை மேடை ஏற்றி ஆதரிக்கின்றனர். இப்படி இருதரப்பிலும் பரஸ்பர சந்தர்ப்பவாதம். சிவகாமியோ தமிழக அரசியலில் சேர்ந்து ஆளாகி பெரும் தலைவராக ஆகலாம் என்று மாயாவதி கட்சி, பிறகு தனிக் கட்சி பிறகு அதுவும் போதாமல் கேப்டன், காங்கிரசு என்று சீரழிந்து நிற்கிறார்.
இதுதான் தலித்தியம் இருபது ஆண்டுகளில் நிகழ்த்தியிருக்கும் சாதனை!
ஆதிக்க சாதிவெறியை ஒழித்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை வேண்டும் என நேர்மையாக போராடும் தலித் இளைஞர்களே, நீங்கள் இருக்க வேண்டியது தலித் அமைப்புகளா இல்லை புரட்சிகர அமைப்புகளா என்பதை இப்போதாவது முடிவு செய்யுங்கள்!
– ரவி
இந்த அம்மோவோட அப்பா பேரு எம். பழனிமுத்து. 1952ல் மெட்ராஸ் சட்டசபையில் பெரம்பலூர் இரட்டையர் தொகுதியில் வெற்றி பெற்ற ஒரு சுயேச்சை உறுப்பினர். பிறகு இவர் காமராசரால் காங்கிரசுக்கு இழுத்து வரப்பட்டவர். கக்கனின் நட்பு வட்டத்தில் இருந்தவர். உண்மையில் பெரம்பலூர் பகுதியில் தலித் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவராகத்தான் பழனிமுத்து இருந்தார். அதனால் தான் அப்போது காங்கிரசு அவரை உடகவர்ந்து கொண்டது. அவரே சிவகாமியிடம் ஊட்டி வளர்த்த லட்சியம் ஐஏஎஸ் தான். இப்போது இந்த அம்மா மீண்டும் காங்கிரசுக்கு போகப் பார்க்கிறார் போலும்.
தாழ்த்தபட்ட மக்களை பல கூறுகளாக பிரத்ததே தலித்திய அரசியில் வாதிகள் செய்த சாதனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல கம்மூனிஸ்டுகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எந்த ஆணியையும் புடுங்கவில்லை எடுத்துக்காட்டாக பரமக்குடி துப்பாக்கிசூடு குறித்து சி பி ஐ விசாரனை வேண்டும் என்ற கோரிக்கையுன் டாக்டர் கிருஸ்னசாமி சட்டசபையையில் வெளிநடப்பு செய்த போது சிரித்து கொண்டு அமர்ந்து இருந்தார்கள் கமுனிச உறுப்பினர்கள் தர்மபுரி சம்பவத்தில் ராமதாஸ் ,அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு போன்றவர்களை குண்டர் சட்ட்த்தில் சிறையில் அடைக்க வேணும் என்று கோரிய போது அதை வெளியிட கூட பத்திரிக்கைகள் பயந்தன கமூனிச பத்திரிக்கைகள் உள்பட கம்மூனிச இயக்கங்கள் இந்திய,மார்க்ஸிசிய ,மார்க்ஸிசிய லெனிசிய,நக்சல் பாரிகளாக பிரிந்து போனதே உண்மை ஆதிதிராவிடன் அடிபட்டால் ஆதித்ராவிடந்தான் போராட வேண்டும் பள்ளன் அடி பட்டால் பள்ளந்தான் போராட வேண்டும் அருந்ததியன் அடி பட்டால் அருந்ததியந்தான் போராட வேண்டும் மற்றவர்கள் வாய் மூடி மவுன அஞ்சலி செய்வார்கள் கம்மூனிஸ்டுகள் உட்பட இதுதான் எதார்த்தம் மற்றபடி ம க இ க எப்பிடினு தெரியாது அதுவது ஒரே கட்சியா இருக்குமா இல்லை த க இ க பு கா இ கா நு பிரியுமா ம க இ கா வின் தலித்திய சிந்தனை பாராட்டுக்குறியது யாரும் தலித் இயக்கஙளும் எடுத்து சொல்லாத விசயங்களை சொல்லுவது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது
மிகச் செறிவான, அவசியமான கட்டுரை.
பலரையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
வாழ்த்துக்கள் வினவு.
சிவகாமி மற்றும் அ. மார்க்ஸ் ஆகியோர்களின் சிந்தனை ஓட்டங்களும், நோக்கங்களும் ஒன்றாக இருந்ததில்லை. தலித் மக்களுக்கு எதிராக பெரியாரை சிவகாமி முன்நிறுத்திய போது அதனையாக அ. மா கடுமையாக எதிர்த்தார். சிவாகமியுடன் அ. மா இணைந்து செயல்பட்ட போது சிவகாமிக்கு பெரியார் பற்றிய பார்வை வேறாக இருந்தது. ‘பெரியாரிஸ்ட்கள் பெரியாரிஸ்ட்களாக இல்லை; கம்யூனிஸ்ட்கள் கம்யூனிஸ்டாக இல்லை’ என்றிருந்தது. அவர் பெரியார் மீதே விமர்சனங்களை முன் வைக்கத் தொடங்கியதிலிருந்து அவரிடமிருந்து விலகிக் கொண்டார் அ. மா. அதே போல, கம்யூனிஸ்ட்கள் மீது கவிதா சரண் என்பவர் ஒரு கூட்டத்தில் விமர்சனத்தை முன்வைத்த போது அதனை கண்டித்தார்.
வால் வீதி போராட்டத்தை கம்யூனிஸ போராட்ட முறைகள் முடிவுக்கு வந்ததாக அவர் கருதியது உண்மையே. அதே நேரத்தில், நேபாள புரட்சியை அவர் வரவேற்றதும் உண்மை. அவரிடம் கம்யூனிஸ எதிர்ப்பு என்பது நிலைத்த தன்மையில் இருந்ததில்லை. ஆனால், அவரிடம் நிலையாக இருப்பவை இந்துத்துவ எதிர்ப்பு மற்றும் மனித உரிமை செயல்பாடுகள். ம.க.இ.க மாதிரியான அமைப்புகளிடம் தனது மனித உரிமை சார்ந்த நடவடிக்கைகளுக்கு சிறு அங்கீகாரத்துக்கான ஏக்கத்தை அவரது பேச்சுக்களில் உணர்ந்துள்ளேன். ம.க.இ.கவை அவர் விமர்சித்துள்ளது போலவே ஆதரிக்கவும் செய்துள்ளார். பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, ஜெயேந்திரனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்தில் அவர் அழையா விருந்தாளியாக வந்துள்ளார். அவரது கோபம் நிராகரிப்பின் கோபம்.
தலித்தியம் போன்றவற்றை அவர் ஆதரித்தது அவரது பிழை தான். ஆனால், அவரது நோக்கத்தில் இருந்த நேர்மை சிவகாமி மற்றும் ரவிக்குமாருக்கு இல்லை. மனுஷ்ய புத்திரன், ரவிக்குமார், சுபவீ, ஆளூர் ஷாநவாஸ் போன்றோர் செட்டிலானதை போல அவரும் பெரிய கட்சி ஒன்றில் செட்டிலாகி சில ஆதாயங்களை பெற்றிருக்கலாம். தனது வாழ்வின் அந்திமப் பொழுதை கழிக்கும் ஒருவர் குறித்து வினவின் விமர்சனம் இன்னும் சற்று மேம்பட்ட நிலையில் இருப்பதே வினவுக்கு மரியாதை பெற்று தரும். இங்கே மன்னார் தோழர் தெரிவித்திருப்பதை போன்று அ.மார்க்ஸை ஆதரிக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் அவரது மனித உரிமை செயல்பாடுகள் மீது மதிப்பு கொண்டோர்கள் அனைவரிடமும் இந்த கட்டுரை சென்று சேரும் பட்சத்தில் அவர்கள் அனைவரும் அவரிடமிருந்து விலகி வினவிடம் நகர்வார்கள் என்று எதிர்பார்ப்பது சற்று மிகையான எதிர்பார்ப்பு.
ஆனால் அடிப்படையில் அ.மார்க்ஸ் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் இதை மறுக்கிறீர்களா?
உங்கள் கருத்து ஒரு அளவில் உண்மை தான். ஆனால், ஒருவர் தனது பழைய மார்க்சிய எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து மாறியதை ஏற்றுக்கொள்ள இயலாதா? அ. மா ஒரு கட்சியல்ல. ஆனால், மகஇக ஒரு கட்சி. அதன் தலைமை பொறுப்புக்கு யார் வந்தாலும், நிலைப்பாடுகள் மாறாது. ஒரு தனிநபரிடம் சிந்தனைகள் மாற்றமடைந்து கொண்டே இருக்கும். சி.பி.ஐ, சி.பி.எம் மற்றும் பல்வேறு மா.லெ கட்சிகளை அவர் ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு அந்த அடிப்படையில் தான் வந்தார்.
அவர் மா.லெ இயக்கங்கங்களை ஆதரிக்கிறார் என்று கூறுவது உங்களூடைய கருத்தா அவருடைய நிலைப்பாடா? அவருடைய நிலைப்பாடு எனில் எங்கே அவ்வாறு கூறியுள்ளார்? கம்யூனிசத்தை எதிர்த்துவிட்டு மா.லெ இயக்கங்களை ஆதரித்து என்ன பயன்? முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எம் கட்சியை திரிபுவாத கட்சி என்று மதிப்பிட்டு வெளியேறியவர் 2014 இல் சி.பி.எம் க்காக பிரச்சாரம் செய்வது ஏன்?
அரசியல் மாணவன் பெயரில் இருக்கும் நண்பரே,
கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளோர் ஏகாதிபத்திய நோக்கங்களுக்கு இணையாக மார்க்சியத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ததும், தாழ்த்தப்ப்ட்ட மக்களை தலித்தியம் என்று பிரித்ததும்தான் மையமான விமரிசனங்கள். அதை நீங்களும் முற்றிலும் மறுக்கவில்லை. இதில் பெரியாரை எதிர்த்தார், ஆதரித்தார் என்பதை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது. கம்யூனிசத்தை தத்துவம், போராட்டம், சோசலிசம், வரலாறு என அனைத்து துறைகளிலும் பெரும் வெறுப்புடன் எதிர்த்து நிறப்பிரிகையில் எழுதியதோடு, சில பல புத்தகங்களும் போட்டவர்தான் அய்யா அ.மார்க்ஸ். இன்றும் அவர் அந்த நிலைப்பாடு குறித்து உறுதியாகவே இருக்கிறார். அதுதான் வால் ஸ்டீரிட் கட்டுரை. அதில் கம்யூனிச போராட்ட முறைகள் மட்டும் தோற்றதாக அவர் எழுதவில்லை.
உழைக்கும் மக்களின் விடுதலைக்கான மார்க்சியத்தை எதிர்ப்பதற்காக ஏகாதிபத்தியம் தயார் செய்திருக்கும் அறிவு புரவலர்களின் கருத்து உதவியுடன்தான் இங்கே பின் நவீனத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. 90களின் வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில் இந்த எதிர்ப்புரட்சி வேலையை கருத்து தளத்தில் தீவிரமாக செய்தவர் அ.மா என்பதற்கு என்ன பதில்? பாமக ராமதாஸை ஏத்தி விட்டு அழகு பார்த்த கை வண்ணத்திற்கு என்ன பதில்?
அ.மா தனிப்பட்ட முறையில் ஏதாவது கட்சியில் சேராமல் தன்னலமின்றி இருக்கிறார் என சொல்வது, ஒருவரது செயலை காசு பணம் பதவி வைத்து மட்டும் அளவிடுவதாக இருக்கிறது. இதெல்லாம் இல்லாமலேயே அவர் ஏகாதிபத்தியத்தின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் – அதாவது கம்யூனிச எதிர்ப்பிற்காக. அதனால் அவர் அதிமுகவில் சேர்ந்திருந்தாலும் நாங்கள் இந்த திருப்பணிக்காத்தான் எதிர்ப்போமே அன்றி அதற்காக அல்ல.
அ.மாவை ஆதரித்து பெரும் திரளான இசுலாமியர்கள், மனித உரிமை செயல்பாடு மதிப்புள்ளவர்கள் திரண்டுள்ளார்கள் என்பது உண்மையல்ல. அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது எங்களுக்கு பிரச்சினையும் அல்ல. எங்களது சொந்த செயல்பாடு, நேர்மை காரணமாகவே நாங்கள் மக்களை திரட்ட விரும்புகிறோம். அதனால்தான் இந்துமதவெறியர்களை எதிர்த்து ‘இந்துக்களிடமும்’ முசுலீம் மதவெறியர்களை எதிர்த்து ‘முசுலீம்களிடமும்’ பிரச்சாரம் செய்து ஆதரவை திரட்டுகிறோம். அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறோம்.மாறாக கம்யூனிசத்தின் எதிரி என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட அ.மாவை சந்தர்ப்பவாதமாக ஆதரித்து பதிலுக்கு அவரது திரட்டி வைத்த ஆதரவை பெறுவது என்பது பச்சையான சந்தர்ப்பவாதம். புரட்சியாளர்களுக்கு சுட்டுப்போட்டாலும் அது வராது. எனவே எமது சமரசமற்ற செயல்பாடு காரணமாகவே நீங்கள் குறிப்பிடும் அ.மா ஆதரவாளர்கள் எங்கள் இயக்கங்களுக்கு ஆதரவாக வருவார்கள். மக்களை அரசியல் படுத்துவது என்பது இதுதான். நீங்கள் குறிப்பிடுவது ஓட்டுக்கட்சி வழிமுறை. பரிசீலியுங்கள்!
அ.மார்க்ஸை இப்படி தான் ‘புரிந்து’ கொள்கிறீர்களா ? மிக விரிவான, ஆழமாக அவர் புரட்சிக்கு பிந்தைய சமூகங்களில் நிகழ்ந்தவைகளை, சோவியத் வீழ்ச்சிக்கான காரணிகளை ஆராய்கிறார். உண்மைகளை வெளிப்படையாக எழுதுகிறார். (உங்களை போல் ஸ்டாலின் செய்ததாக சொல்லப்படுபவை எல்லாமே அவதூறுகள் என்று குறுட்டுத்தனமாக நம்புவதில்லை). தொடர்ந்து அவர் முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும், மதவாதத்தையும், சாதியத்தையும், ஃபாசிசத்தையும் கடுமையாக எதிர்த்தே செயல்பட்டு வருகிறார். அடையாள அரசியல், பின் நவீனத்துவம் பேசினால் உடனே அது சாதியத்தை தூக்கிபிடிப்பதாக அர்த்தமா என்ன ? அது உங்களின் over simplification. 80களில் அவர் பார்த்த ராமதாஸ் இலட்சியவாதியாக இருந்தார். காலப்போக்கில் அவர் சீரழிந்தற்க்கு அ.மாவை குற்றம் சொல்லி என்ன பயன் ? ராமதாஸை ‘ஏத்திவிடும்’ அளவுக்கு நிறப்பிரிகை பலமான பத்திரிக்கை எல்லாம் இல்லை. சில நூறு பேர் மட்டும் படித்த சிறு பத்திரிக்கை.
பின் நவீனத்துவ சிந்தனைகள் என்பது ஏகாதிப்பதியம் ’ஏற்றுமதி’ செய்த சரக்கு என்று புரிந்து கொள்ளும் உங்களிடம் பேசுவது வீண். கடையில் அ.மாவையும் ஏகாதிப்பத்திய சேவை செய்யும் அறிவுஜீவி என்று முத்திரை குத்தி நிராகரிக்கிறீர்கள் !!! எதாவது நம்பற மாதிரி சொல்லுங்களேன். ஜெமொ எஸ்.வி.ஆர் பற்றி குற்றம் சொல்வதை ஒத்த அபத்தம் இது. Conspiracy theories like this will blunt your senses and blind you to reality !!
அவருடன் நான் பல காலம் விவாதம் செய்து, கடுமையாக முரண்பட்டு, என்னை முகநூலில் பிளாக் செய்யும் அளவுக்க்கு ‘வெறுப்பேற்றியவன்’ என்ற முறையில் சொல்கிறேன் : நவ காலத்தின் மிக முக்கிய சிந்தனையாளர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் அவர். அவரின் நூல்கள் காலத்தால் அழியாதவை. ஆனால் உங்களின் இது போன்ற மேலோட்டமான கட்டுரைகள் மிக விரைவில் கரைந்து விடும்.
வறட்டு மார்க்சியவாதம் வெற்றி பெறாது. இந்திய சூழல், அதில் தலித்தியத்திற்கான தேவை பற்றி இப்படி வறட்டு புரிதல் உங்களுக்கு உதவாது. இப்படி உங்களின் ‘தோழமை’ சக்திகள் அனைத்தையும் நிராகரித்தால் உருப்படியாக எதையும் சாதிக்க முடியாது. மார்க்சியத்துடன் கடுமையாக முரண்பட்டாலும், சாதியம் / மதவாதம் எதிர்ப்பு அரசியல், அடையாள அரசியல் பற்றி
முற்போக்கு சக்திகளுடன் உடன்படுகிறேன்.
சரியாக புரிதல் என்பது மிக மிக கடினமாக விசியம் தான்.
// இது ஏதோ பிற இயக்கங்கள் மீதான ஒரு பிழைப்புவாதியின் தனிப்பட்ட கோபம் மட்டுமல்ல. தலித்தியம் என்ற சித்தாந்தமே இத்தகையதுதான். சமீபத்தில் “சாதியை ஒழிப்பது எப்படி” என்ற புத்தகத்திற்கு அருந்ததிராய் எழுதிய முன்னுரைக்கு சில தலித்தியவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதில் முக்கியமானது ‘தலித் அல்லாதவர் அம்பேத்கரை குறித்து எழுத தகுதியில்லை’ என்பது. இது தலித்திய அரசியல், தலித் தலைமை, சாதியை தலித்துகளால் மட்டும்தான் புரிந்து கொள்ள முடியும், தலித்தாக பிறந்தவர் தான் தலித் இலக்கியம் படைக்கமுடியும் என்பதன் நீட்சியே.//
டாக்டர் அம்பேத்கரின் “சாதியை ஒழிப்பது எப்படி” என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதும் போதாவது “ராய்” என்கிற வங்காளத்து ஆதிக்க சாதிப் பெயரை அருந்ததி ராய் தவிர்த்திருக்கலாம்.. இல்லாவிட்டால் அவர் அப்சல் குருவுக்கு ரோசாப்பூ கொடுத்து உங்கள் உள்ளம் கவர்ந்ததைப் போல், டாக்டர் அம்பேத்கரின் காதிலேயே பூ வைக்கிறாரோ என்ற சந்தேகம் தலித்தியர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் வரும், உங்களைத் தவிர..!
[1]It is the responsibility of vinavu to answer for Ambi’s Question regarding keeping her Cast Identity!
//டாக்டர் அம்பேத்கரின் “சாதியை ஒழிப்பது எப்படி” என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதும் போதாவது “ராய்” என்கிற வங்காளத்து ஆதிக்க சாதிப் பெயரை அருந்ததி ராய் தவிர்த்திருக்கலாம்.. இல்லாவிட்டால் அவர் அப்சல் குருவுக்கு ரோசாப்பூ கொடுத்து உங்கள் உள்ளம் கவர்ந்ததைப் போல், டாக்டர் அம்பேத்கரின் காதிலேயே பூ வைக்கிறாரோ என்ற சந்தேகம் தலித்தியர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் வரும், உங்களைத் தவிர..!//
அம்பி,
[1]ராய் என்பது சாதி பெயர் அல்ல அது அவர்கள் குடுப்ப பெயர் [surname] என்று வினவு சாதிக்கும் பருங்கள்
[2]மேலும் அப்சல் குருவை பொருத்த வரை அவர் முதலில் கஷ்மீர் தனி நாடு பெற போராடியதும் ,பின்பு அவர் இந்திய அரசால் கைது செய்யபட்டு இந்திய உளவு துறையீன் IB [intelligence bureau] உள் வட்ட உளவாளியாக மாற்றபட்டதும் ,இந்திய பாராளுமன்றம் தாக்கபட்ட போது அவர் பட்டும் பலியாடு ஆக்கபட்டதும் உங்களுக்கு தெரியாதது எமக்கு ஆச்சிரியம் அளிகின்றது.
பெயரில் சாதி இருக்க கூடாது, இருந்தால் அசிங்கமானது என்ற கருத்து தமிழகத்தில் மட்டும் ஓரளவு நிலைநாட்டப்பட்டிருக்கிறது. காரணம் திராவிட இயக்கமும், பெரியாரின் பணியும். மற்ற மாநிலிங்களில் இந்த நிலைமை இல்லை. அதற்காக நாம் கருத்து தளத்தில் போராட வேண்டும். அதே நேரம் சாதி ஒழிப்பு மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு சக்திகளை இந்த பெயர் பிரச்சினையை வைத்து மட்டும் அளவிட முடியாது என்பதும் உண்மை. ஆனால் தமிழகத்தில் பிறந்திருந்தாலும் “என்னடா அம்பி, ஆத்துல எல்லாரும் சௌக்கியமா” என்று செல்லமாக அழைக்கப்படும் அம்பி என்ற பெயரை வைத்ததற்காக நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். சுடலை மாடன், இசக்கி, குப்பன், சுப்பன் என்று வைக்காமல் அம்பி என்று வைத்துவிட்டு, ராய் மீது தலித்தியர்களுக்கு சந்தேகம் வருவதாக முதலைக் கண்ணீர் விடுவதில் நிறைய லாஜிக் மீறல். அதுதான் காலந்தோறும் பார்ப்பனியமோ?
To vinavu,
[1]என்ன வினவு லாஜிக் இல்லாம பேசுரிங்க! அம்பி என்று பெயர் வைத்து கொண்டு டாக்டர் அம்பேத்கரின் “சாதியை ஒழிப்பது எப்படி” என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதினாதான் தவறு; ஆனா அம்பி உடைய பீனுட்டங்கள் சாதீயையும் , ஹிந்து மதத்தையும் தானே ஆதரீக்கீன்றன !
[2]ஆனா பாருங்க வினவு, டாக்டர் அம்பேத்கரின் “சாதியை ஒழிப்பது எப்படி” என்ற புத்தகத்திற்கு முற்போக்க முன்னுரை எழுதிகொண்டே தன் பெயரில் “ராய் ” என்று சாதி பெயரை வைத்து உள்ள “அருந்ததி” எப்படி முற்போக்கு “வாந்தி “ஆவாங்க ?
//அம்பி என்று வைத்துவிட்டு, ராய் மீது தலித்தியர்களுக்கு சந்தேகம் வருவதாக முதலைக் கண்ணீர் விடுவதில் நிறைய லாஜிக் மீறல். அதுதான் காலந்தோறும் பார்ப்பனியமோ?//
//அதே நேரம் சாதி ஒழிப்பு மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு சக்திகளை இந்த பெயர் பிரச்சினையை வைத்து மட்டும் அளவிட முடியாது என்பதும் உண்மை. //
பெயரிலேயே சாதியை வைத்துக் கொண்டிருக்கும் மேற்படி சக்திகளை எப்படி “சாதி ஒழிப்பு மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு சக்திகள்” என்று கூறமுடியும்..? இந்த லாஜிக் மீறலை சரிப்படுத்த அவர்களை ”பார்ப்பன சாதி ஒழிப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு சக்திகள்” என்றழைப்பது சரியாக இருக்கும்.. மேற்படி சக்திகள் சாதிப் பெயரை வைத்துக் கொள்ள திராவிட இயக்கத்துக்கும், பெரியாருக்கும் எந்த மறுப்பும் இருக்கும் என்று தோன்றவில்லை.. டி.எம்.நாயருக்கு இன்னமும் அந்த சலுகை இருக்கிறதே..
ஆனால், அருந்ததி ராய் முன்னுரை எழுதிய புத்தகம் எப்படிப்பட்டது என்பதை அவர் முறுக்கு கடித்துக் கொண்டே படித்துப் பார்க்காமல் உள்வாங்கும் நோக்கத்தோடு படித்திருந்தால் புரிந்து கொண்டிருப்பார்.. அந்த நூலை எழுதியவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் தன் பெயரிலுள்ள ராயை விட்டிருப்பார் அல்லது ராய் பெயருடன் முன்னுரை எழுதுவதா என்று மறுத்திருப்பார்.. இரண்டையும் செய்யாததன் காரணம் என்ன..? ஒன்று முறுக்கு ருசியில் மெய்மறந்து பக்கங்களை மட்டும் புரட்டியிருக்கவேண்டும் அல்லது கைவசம்தான் பூ இருக்கிறதே யாருக்கு வேண்டுமானாலும் வைக்கலாம் என்ற தன்னம்பிக்கை காரணமாயிருக்க வேண்டும்.. கூடவே வங்கத்தில் பெரியார் பிறக்காததும், முறுக்கு ருசியாக இருந்ததும் அருந்ததி ராயின் தவறு அல்ல என்று கூறி சப்பைக் கட்டு கட்ட நண்பர்கள் வேறு இருக்கிறார்கள்..
//ஆனால் தமிழகத்தில் பிறந்திருந்தாலும் “என்னடா அம்பி, ஆத்துல எல்லாரும் சௌக்கியமா” என்று செல்லமாக அழைக்கப்படும் அம்பி என்ற பெயரை வைத்ததற்காக நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.//
என்ன இருந்தாலும் அம்பிகளுக்கு இங்கே நீங்கள் கொடுக்கும் ‘செல்லம்’ போல் வருமா..?! அதான் அம்பி என்ற பெயரில் இங்கு வந்தேன்..
//சுடலை மாடன், இசக்கி, குப்பன், சுப்பன் என்று வைக்காமல் அம்பி என்று வைத்துவிட்டு, ராய் மீது தலித்தியர்களுக்கு சந்தேகம் வருவதாக முதலைக் கண்ணீர் விடுவதில் நிறைய லாஜிக் மீறல். அதுதான் காலந்தோறும் பார்ப்பனியமோ?//
நான் முதலைக் கண்ணீர் விடாவிட்டால் மட்டும் ”சாதியை ஒழிப்பது எப்படி – முன்னுரை ராய்” என்பது லாஜிக்கில் அடங்கிவிடுமா என்ன..?!
வினவு, சரவணன் கூறியது போல் சுயவிமர்சனத்தோடு உங்களிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்தால் பெரியாரிய பாணியில் பதிலளிக்கிறீர்களே.. உங்களைச் சொல்லி குற்றமில்லை.. அருந்ததி ராயை விட்டுக் கொடுக்க முடியாத இக்கட்டில் உங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்..
அம்பி எதற்காக இந்த முக்காடு?
உங்கள் நோக்கம் தான் என்ன? விழுமியங்கள்தான் எவை? யாரும் சாதி பெயர் வைத்திருக்க கூடாது என்பது உங்களது கொள்கை அல்ல. அதனால்தான் திராவிட இயக்கம் அதை சாதித்தது என்பதை கூட உங்களால் ஏற்கமுடியவில்லை. எனில் சாதிப் பெயர் இருப்பதை விரும்புகிறீர்கள், எனில் ஏன் இப்படி மு.கண்ணீர் பாணியில் நடிக்க வேண்டும்? முதலில் அருந்ததி ராய் குறித்து கேட்பதற்கு உங்களுக்கு உள்ள உரிமையை கருத்துரிமை காரணத்தால் சகித்துக் கொள்கிறோம். ஆனால் உங்களுக்கு என்ன அருகதை உள்ளது?
அருந்ததி ராய் சமரசமில்லாமல் இந்துமதவெறியர்களையும், முதலாளிகளையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்திருக்கிறார். அதனால் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தால் தாக்கப்பட்டிருக்கிறார்.’தேசிய’ ஊடகங்கள் பலவால் எதிர்க்கப்பட்டிருக்கிறார். இவ்வளவிற்கும் அவர் கம்யூனிசத்தை ஏற்றவர் அல்ல. சோசலிச அரசு குறித்து அவர் நிறைய விமரிசனமும் செய்திருக்கிறார். இருப்பினும் பொது நோக்கத்தில் அவரது பங்களிப்பு குறித்து நாங்கள் நேர்மைறையில் பரிசீலிக்கிறோம். இதனால் அவரை விமரிசிக்காமலும் இல்லை. மே 17 – காலவச்சுவடு குறித்த கட்டுரையில் அவரை விமரிசித்தும் இருக்கிறோம்.
எனினும் பார்ப்பனியத்தை நெஞ்சில் ஏந்தி மூளையில் தலித்தியவாதிகளுக்காக நீங்கள் கேட்கும் கேள்விகள், சரியாகச் சொன்னால் நிறைய அருவெறுப்பைத் தருகிறது. நீங்கள் வினவு கம்யூனிசம் திராவிட இயக்கம், முற்போக்கு எவற்றையும் எவ்வளவு வேண்டுமானலும் எதிர்க்கலாம், அது பிரச்சினையில்லை. ஆனால் அதை ஒடுக்கப்படும் பிரிவினர் சார்பாக கேட்பது போல நடிப்பதுதான் எரிச்சலைத் தருகிறது. முதலில் வெளிப்படையாக பேசுவது எழுதுவது (அதாவது கருத்தை – உங்கள் அடையாளத்தை அல்ல) குறித்து பரிசீலியுங்கள். தலித்துக்களுக்கு நண்பர்களைப் போல நடிக்காதீர்கள். இல்லை உண்மையில் நீங்கள் தலித்துகளுக்கு நண்பர் என்றால் இளவரசன் பிரச்சினைக்காக ஏதாவது வன்னியர் ஊரில் பாமகவை எதிர்த்து பேசி அடிதடி இல்லை சிறை இல்லை ஆர்ப்பாட்டம் என்று ஏதாவது செய்திருக்கிறீர்களா?
வாழ்வில் வெளிப்படையாக இருப்பது முக்கியம் அம்பி. வினவில் தலித்துக்களின் பிரச்சினைகளுக்காக வரும் கட்டுரைகளை எதிர்த்து பேசும் சாதி வெறியர்களை நிறையவே திருத்த முடியும். காரணம் அவர்கள் நடிக்கவில்லை. பரிசீலியுங்கள்.
// உங்கள் நோக்கம் தான் என்ன? விழுமியங்கள்தான் எவை? யாரும் சாதி பெயர் வைத்திருக்க கூடாது என்பது உங்களது கொள்கை அல்ல. அதனால்தான் திராவிட இயக்கம் அதை சாதித்தது என்பதை கூட உங்களால் ஏற்கமுடியவில்லை. எனில் சாதிப் பெயர் இருப்பதை விரும்புகிறீர்கள், எனில் ஏன் இப்படி மு.கண்ணீர் பாணியில் நடிக்க வேண்டும்? முதலில் அருந்ததி ராய் குறித்து கேட்பதற்கு உங்களுக்கு உள்ள உரிமையை கருத்துரிமை காரணத்தால் சகித்துக் கொள்கிறோம். ஆனால் உங்களுக்கு என்ன அருகதை உள்ளது? //
நீங்கள் அழைத்து நடத்தும் விவாதங்களில் எதிர்/மாற்று கருத்துகளை கருத்துரிமை காரணமாக நீங்கள் சகித்துக் கொள்வது குறித்து மகிழ்ச்சி, நன்றி.. என் அருகதையை கேள்வி கேட்கும் அருகதையும் களத்திலும், கருத்தியல் தளத்திலும் போராடும் உங்களுக்கு கூடுதலாகவே உண்டு.. ஆனால் என் அருகதையல்ல இப்போது பிரச்சினை..
// அருந்ததி ராய் சமரசமில்லாமல் இந்துமதவெறியர்களையும், முதலாளிகளையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்திருக்கிறார். அதனால் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தால் தாக்கப்பட்டிருக்கிறார்.’தேசிய’ ஊடகங்கள் பலவால் எதிர்க்கப்பட்டிருக்கிறார். இவ்வளவிற்கும் அவர் கம்யூனிசத்தை ஏற்றவர் அல்ல. சோசலிச அரசு குறித்து அவர் நிறைய விமரிசனமும் செய்திருக்கிறார். இருப்பினும் பொது நோக்கத்தில் அவரது பங்களிப்பு குறித்து நாங்கள் நேர்மைறையில் பரிசீலிக்கிறோம். //
அருந்ததி ராயின் இந்த அருகதைகள் எல்லாம் எந்த விதத்திலும் அவர் டாக்டர் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு குறித்த நூலுக்கே சாதிப் பெயருடன் முன்னுரை எழுதுவதை நியாயப்படுத்த இயலாது.. மீண்டும் இதைச் சொல்ல அம்பிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று ஆரம்பித்துவிடாதீர்கள்.. பார்ப்பான் தலித்துகளை அடக்கி ஒடுக்குகிறான் என்று கூச்சலிடுபவர்களே (அருந்ததி ராய் போன்ற பார்ப்பனிய எதிர்ப்பு சக்திகள்!) தலித் மக்களின் பிதாமகரின் காதிலேயே பூ வைக்கும் செயலைப் பார்த்து பதிலுக்கு பார்ப்பானும் கூச்சல் போடுவதை யாரும் தடை செய்ய முடியாது..
// இதனால் அவரை விமரிசிக்காமலும் இல்லை. மே 17 – காலவச்சுவடு குறித்த கட்டுரையில் அவரை விமரிசித்தும் இருக்கிறோம். //
காலச்சுவடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருந்ததி ராயை விமர்சிக்கத் தயங்காத நீங்கள் இப்போது தயங்குவது ஏன்..?!
// தலித்துக்களுக்கு நண்பர்களைப் போல நடிக்காதீர்கள். //
என்னைவிட நூறுமடங்கு நீங்கள் தலித் மக்களின் நண்பர் என்று ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.. ஆனால் அருந்ததி ராயை இவ் விடயத்தில் நீங்களே விமர்சிக்க தயங்குவது தலித்தியத்திற்கான அவசியத்தை, கட்டாயத்தை நியாப்படுத்துவதையும் உணருங்கள்..
அய்யா, இவ்வளவு பெரிய பதிலில் கேட்ட கேள்விக்கு பதில் ஏதுமில்லையே? பார்ப்பனியம், அதன் அடையாளங்கள், கட்டுமானங்கள், சாதி பிரிவினைகள், என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா, ஏன்? ஏற்கும் பட்சத்தில் சாதி பெயரோடு உச்சரிக்கப்படும் பெயரை நீங்கள் ஆதரித்துத்தானே ஆக வேண்டும். எனில் சாதி பெயரை, மனிதப் பெயரில் போடுவதை ஆதரிக்கும் நீங்கள் அருந்ததி ராயை கேட்பது எப்படி என்றே புரியவில்லை. இல்லை பார்ப்பனியத்தின் சாதி ஏற்றத்தாழ்வை எதிர்க்கிறேன் என்றால் தாராளமாக கேட்கலாம். இதன்றி நாங்கள் யார், சாதியை ஏதிர்க்கிறோம், களப்பணி, தயக்கமில்லை என்பதெல்லாம் தேவையில்லையே? சரி விடுங்கள், நீங்கள் சாதியை மனதாரா ஆதரிக்கிறீர்கள், பார்ப்பனியத்தை பின்பற்றுகிறீர்கள், எனினும் வினவு பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு ராய் பெயரை ஆதரிப்பதால் வினவும் பார்ப்பனியத்தை ஆதரிக்கிறது, இந்த உலகில் பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக கூறிக்கொள்பவர்கள் அனைவரும் இப்படித்தான் சுயமுரண்பாடு கொண்டவர்கள், காரணம் பார்ப்பனியத்தின் வலிமை அத்தனை செல்வாக்குடன் நிலவுகிறது, இதை ஏற்காமல் நடிக்கிறார்கள் என்றாவது கூறுங்கள். இதில் எது ஐயா உமது கேள்வி!
அம்பி அவர்களே, நீங்கள் சாதிப்பெயர் குறித்து கேட்ட கேள்விக்கு வினவு தெளிவாகப் பதிலிறுத்துள்ளது.
// பெயரில் சாதி இருக்க கூடாது, இருந்தால் அசிங்கமானது என்ற கருத்து தமிழகத்தில் மட்டும் ஓரளவு நிலைநாட்டப்பட்டிருக்கிறது. காரணம் திராவிட இயக்கமும், பெரியாரின் பணியும். மற்ற மாநிலிங்களில் இந்த நிலைமை இல்லை. அதற்காக நாம் கருத்து தளத்தில் போராட வேண்டும். அதே நேரம் சாதி ஒழிப்பு மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு சக்திகளை இந்த பெயர் பிரச்சினையை வைத்து மட்டும் அளவிட முடியாது என்பதும் உண்மை. //
இந்தப் பதிலில் உங்களுக்கு என்ன பிரச்சினை?.
தலித்தியவாதிகளுக்கு இந்தப்பெயரெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. நமது ரவிக்குமார், திருமா முதற்கொண்டு, மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் தலித்தியம் பேசும் பெரும்பாலோனார் பார்ப்பனிய சாதி அமைப்பை நியாயப்படுத்தும் ஆதிக்கசாதிகளுடனும், பார்ப்பனர்களிடமும் கூட்டுச்சேரத் தயங்காதவர்கள் தான்.
தலித்தியத்தின் தத்துவம் அம்பேத்கரியம் அல்ல, சந்தர்ப்பவாதம் தான். பெரும்பாலான தலித்திய இயக்கங்களின் நோக்கம் சாதி ஒழிப்பல்ல, சாதி பெயரில் சலுகைகளைப் பெறுவது தான். சில இயக்கங்கள் வெளிப்படையாக “நமக்குத் தேவை சாதி ஒழிப்பல்ல; சாதி விழிப்பு” என்றே கூறுகின்றன.
ஆகவே, தலித்தியம் மற்றும் அடையாள அரசியல் என்பது இயல்பாகவே தலித் மக்களுக்கும், தலித் மக்களின் தலைவராகப் போற்றப்படும் அம்பேத்கரின் கொள்கைகளுக்கும் எதிரானது. விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்டப்பஞ்சாயத்து கட்சிகளையும், ரவிகுமார், சிவகாமி போன்ற பிழைப்புவாதிகளையும் தான் தலித்தியம் இதுவரை உருவாக்கியிருக்கிறது.
இது பற்றி ஆன்ந்த் தெல்டும்டே நிறையவே எழுதியிருக்கிறார்.
Ambedkarites against Ambedkar
http://www.epw.in/margin-speak/ambedkarites-against-ambedkar.html?ip_login_no_cache=89cf6a74c99c3c9c381afb7342515b13
Crisis Of Ambedkarites And Future Challenges
http://www.countercurrents.org/teltumbde220411.htm
The Class and Caste Question: Ambedkar and Marx
http://sanhati.com/articles/9391/
Dalit Capitalism and Pseudo Dalitism
http://www.epw.in/system/files/pdf/2011_46/10/Dalit_Capitalism_and_Pseudo_Dalitism.pdf
வினவுக்கு ,
[1]தலித்தியர் மக்களீன் அரசியல் தலைமையையும்[சரணாகதி,பிழைப்புவாதி] மிக சரியாக விமர்சனம் செய்யும் வினவு மற்றும் ம க இ க , தலித்தியர் மக்களீன் இலக்கியங்கள் பற்றி விமர்சனம் செய்யாதது ஏன் ?
[2]அஜித்தின் தத்துவம் – அண்ணாச்சியின் நாக் அவுட் !,ஓடு “தலைவா” ஓடு – பாகம் 3 வரை விமர்சனம் செய்ய நேரமும் ,மனசும் இருக்கும் வினவுக்கு தலித்தியர் மக்களீன் எழுத்துகளை
உம்:
[திரு பாமா வின் நாவல்களை [கருக்கு,சங்கதி]]
[திரு சிவகாமியின் நாவல்கள் பழையன கழிதலும்,ஆனாந்தாயி ]
பற்றி விமர்சனம் செய்ய நேரமும் மனசும் இல்லாமைக்காக சுய விமர்சனம் [Self-criticism]செய்து கொள்ளுமா ?
[3]தலித்தியர் மக்களை நேசிக்கும் முற்போக்கு எழுத்தாளர்கள் [உம் திரு பொருமாள் முருகன்] எழுதும் எழுத்துகள் எவ்வாறு தலித்தியர் மக்களீன் வலிகளை முழுமையாக காட்ட இயலவீல்லை என்பதை கீழ் உள்ள ஒப்பாய்வில் நிருபணம் செய்து உள்ளேன்
வினவு படிக்கவும் !
பாமாவின் “கருக்கு”களை தீய்க்கும் பெருமாள் முருகனின் “ஆளண்டாப் பட்சி” -விமர்சனம்
[karukku And Aalanta Patsee A Complete Working Class View]
http://vansunsen.blogspot.in/2014/02/karukku-and-aalanta-patsee-complete.html
//ஊர் உலகம் கேலி செய்யும் என்பது தெரிந்தாலும் சிவகாமி விரும்பி காங்கிரசுடன் சேர்ந்தது ஏன்? அதற்கான விடை தலித்தியத்தின் சரணாகதிக்கு ஒரு எடுப்பான சான்றாக இருக்கிறது.//
சரவணன்,
வினவில் வரும் சினிமா விமரினசங்களில் சம்பந்தப்பட்டிருக்கும் சினிமாக்களை தலித் இளைஞர்களும் பெரும் எண்ணிக்கையில் பார்க்கிறார்கள். ஆகவே அனைத்து தமிழ் இளைஞர்களையும் மீட்பதற்கே அவை எழுதப்படுகின்றன. அவை அடிக்கடியும், அனைத்து சினிமாக்களையும் எழுத முடியவில்லை என்பதே எமது வருத்தம். இதில் தலித் இளைஞர்கள் சினிமா மாயையில் சிக்கி சீரழியட்டும் என்ற உங்களது வன்மம் கண்டிக்கப்படவேண்டியது. இது போதையில் இளைஞர்கள் சீரழியட்டும் என்று ஆளும் வர்க்கம் நினைப்பதற்கு ஈடானது.
தலித் மக்களின் சமூக, பொருளியல், அரசியல் விடுதலைக்கு மிகச்சரியான திட்டத்தையும், அதற்கேற்ப உண்மையான நடைமுறையையும், அதனால் தூக்கு, ஆயுள் (இன்றும் எமது தோழர் ஒருவர் ஆயுள் தண்டனையில் சிறையில் இருக்கிறார்) முதல் பல்வேறு அடக்குமுறைகளையும் சந்தித்து வரும் மார்க்சிய லெனினிய இயக்கத்தை பார்த்து விமரிசிப்பதாக இருந்தால் இது குறித்துதான் அதாவது விடுதலைக்கு நாங்கள் முன்வைக்கும் வழியில் என்ன தவறு என்று வைக்க வேண்டும். மாறாக முறுக்கு கடித்துக் கொண்டே நாவல் ஏன் படிக்க வில்லை என்று கேட்பது முட்டாள்தனமானது. கஞ்சிக்கு போராடுபவனைப் பார்த்து ஏன் பாயசத்திற்கு போராடவில்லை என்று கேட்கும் மேட்டிமைத்தனத்தோடும் இதை ஒப்பிடலாம்.
அடுத்து தலித் இலக்கியம் எனும் கோட்பாட்டு விளக்கத்தோடு கூடிய இலக்கிய வகைமையை நாங்கள் ஏற்கவில்லை. பொதுவில் தமிழ் இலக்கியம், வங்க இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்று சொல்வது போல தலித் இலக்கியம் என்று சொன்னால் பிரச்சினையில்லை. மாறாக அதற்கு கோட்பாட்டு விளக்க்த்தை அளித்து வரையறுக்க முன்வந்தால் அதை விட சரியான விளக்கம் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க இலக்கியம் எனும் வகைமைதான் கம்யூனிஸ்டுகளின் இலக்கியக் கொள்கை.
இறுதியாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இலக்கியங்களை விமரிசிக்க கூடாது என்பது எமது கருத்தல்ல. வரம்பிற்குட்பட்டு அவை நடந்தே வருகிறது. புதிய கலாச்சாரத்தில் “கோவேறு கழுதைகள்” உள்ளிட்டு அப்படி சில வந்திருக்கின்றன. இவையும் இன்னும் பல நூல்களும் பாட்டாளி வர்க்க இலக்கியம் எனும் புரிதலோடுதான் வந்தது என்பதையும் மறந்து விடவேண்டாம். ஆனால் அந்த கோவேறு கழுதைகள் தலித் மக்களின் உள்முரண்பாடுகளை பெரிது படுத்துகிறது என்று பல தலித்திய இலக்கியவாதிகள் அதை எதிர்த்ததும் வரலாறு.
மேலும் இலக்கியங்களை விட தலித் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வேறு எந்த தமிழ் ஊடகங்களையும் விட வினவுதான் காத்திரமான கட்டுரைகளை கொடுத்து பெரும் விவாதத்தையும் எழுப்பியிருக்கிறது. இளவரசன் தற்கொலையின் போது கூட வேறு எவரும் வன்னியசாதி வெறி என்றோ பாமக சாதிவெறி என்றோ சொல்வதற்கு அஞ்சிய நேரத்தில் எமது அமைப்புகள் மட்டுமே களத்தில் அதுவும் வன்னியர்கள் வாழும் பகுதிகளின் அப்படி பிரச்சாரம் செய்தன. இதையெல்லாம் விட நாவல்கள் முக்கியமா சரவணன் அவர்களே?
இறுதியாக தலித் உள்ளிட்டு அனைத்து மக்களின் விடுலைக்காக தன்னலமின்றி போராடி வரும் புரட்சிகர அமைப்புகளில் இணைந்து கொண்டு களப்பணியாற்றாமல், புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவதையே பெரும் பணியாக முன் வைத்து, மட்டுமல்லாமல் அதை நீங்கள் ஏன் செய்ய வில்லை என்று எகத்தாளத்துடன் கேட்டதற்கு நீங்கள்தான் சுயவிமரிசனம் ஏற்க வேண்டும்.
வினவுக்கு ,
[1]திரைபடத்துறை பற்றி விமர்சனம் எழுத வினவுக்கு நேரமும் , மனசும் இருக்கும் போது தலித்தியர் மக்களீன் எழுத்துகளை பற்றி விமர்சனம் செய்ய நேரமும் மனசும் இல்லாமைக்காக சுய விமர்சனம் [Self-criticism] செய்து கொள்ளுமா ? என்ற என் கேள்விக்கு நான் தலித் இளைஞர்கள் சினிமா மாயையில் சிக்கி சீரழியட்டும் என்ற வன்மத்துடன் இருப்பதாக கூறுவது தவறு.
[2]திரைபடத்துறை பற்றி விமர்சனம் எழுதுவது போன்று தலித்தியர் மக்களீன் எழுத்துகளை பற்றியும் விமர்சனம் செய்யுங்கள் என்று பொருள் கொள்ளுவது தான் வினவுக்கு நேர்மை.
//வினவில் வரும் சினிமா விமரினசங்களில் சம்பந்தப்பட்டிருக்கும் சினிமாக்களை தலித் இளைஞர்களும் பெரும் எண்ணிக்கையில் பார்க்கிறார்கள். ஆகவே அனைத்து தமிழ் இளைஞர்களையும் மீட்பதற்கே அவை எழுதப்படுகின்றன. அவை அடிக்கடியும், அனைத்து சினிமாக்களையும் எழுத முடியவில்லை என்பதே எமது வருத்தம். இதில் தலித் இளைஞர்கள் சினிமா மாயையில் சிக்கி சீரழியட்டும் என்ற உங்களது வன்மம் கண்டிக்கப்படவேண்டியது. இது போதையில் இளைஞர்கள் சீரழியட்டும் என்று ஆளும் வர்க்கம் நினைப்பதற்கு ஈடானது.//
[1]இந்திய பாட்டாளி வர்க்க புரட்சிக்காக கருத்தீயல் தளத்தில் பணிக்கும் வினவு ,அதன் தோழர்கள் செய்யும் தியாகத்துக்காக பெருமை பட்டுகொள்வதில் எமக்கு மகீழ்ச்சியே!
[2]தலித்தியர் மக்களீன் எழுத்துகளை விமர்சனம் செய்யுங்கள் என நான் கோருவது உங்களுக்கு நான் முறுக்கு கடித்துக் கொண்டே நாவல் ஏன் படிக்க வில்லை என்று கேட்பது போல் உள்ளது என்று ஒப்புமை செய்யும் உங்கள் தர்க்க அழகு மிக்க அருமை !
//தலித் மக்களின் சமூக, பொருளியல், அரசியல் விடுதலைக்கு மிகச்சரியான திட்டத்தையும், அதற்கேற்ப உண்மையான நடைமுறையையும், அதனால் தூக்கு, ஆயுள் (இன்றும் எமது தோழர் ஒருவர் ஆயுள் தண்டனையில் சிறையில் இருக்கிறார்) முதல் பல்வேறு அடக்குமுறைகளையும் சந்தித்து வரும் மார்க்சிய லெனினிய இயக்கத்தை பார்த்து விமரிசிப்பதாக இருந்தால் இது குறித்துதான் அதாவது விடுதலைக்கு நாங்கள் முன்வைக்கும் வழியில் என்ன தவறு என்று வைக்க வேண்டும். மாறாக முறுக்கு கடித்துக் கொண்டே நாவல் ஏன் படிக்க வில்லை என்று கேட்பது முட்டாள்தனமானது. கஞ்சிக்கு போராடுபவனைப் பார்த்து ஏன் பாயசத்திற்கு போராடவில்லை என்று கேட்கும் மேட்டிமைத்தனத்தோடும் இதை ஒப்பிடலாம்.//
[1]தலித்தியர் இலக்கியம் பற்றிய [மார்க்ஸ்யிய-தலித்திய] விமர்சகர்களால் கூறப்படும் வரையறைகள் மார்சிய அழகீயல் கோட்பாட்டுக்குள்[பாட்டாளி வர்க்க இலக்கிய கோட்பாட்டுக்குள்] உள் அடங்கி தான் உள்ளது என்பதை வினாவுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
[2]தலித்தியர் இலக்கியம் பற்றிய [மார்க்ஸ்யிய-தலித்திய] விமர்சகர்களால் கூறப்படும் வரையறைகள்:
[i]புழக்கத்தில் இருந்த பழைய மரபுகளை அனைத்துத் தளங்களிலும் மறுத்தல், மறுதலித்தல், தலை கீழாக்குதல்.
[ii]பார்ப்பனியத்தின் அழகியல் கட்டுமானத்தையும் உன்னதத்தையும் மாயைகளையும் உடைத்தல்.
[iii]கறை படிந்துள்ள இலக்கிய வரலாற்றையும் பாரம் பரியத்தையும் இனம் கண்டு ஒதுக்கிப் புதிய எதிர் வரலாற்றைக் கட்டமைத்தல்.
[iv]குற்ற உணர்ச்சிகளுக்குப் பலியாகிக்கொண்டிருந்த ஆகக்கீழான மனநிலையிலிருந்து தலித்துகளை மீட்டுக் கொண்டு வந்து அத்தகைய நடைமுறை களை உதறித் தள்ளுதல்.
[v]தங்களுக்கான காயங்களை ரத்தக் கவிச்சியோடும் வலியோடும் தங்களாலேயே வெளிப்படுத்த முடியும் என்பதை ஆழ உணர்ந்து வலியுறுத்தல்.
[vi]ஒடுக்கப்படுவதற்கான பொது அம்சங்களை தலித்துகளும் பெண்களும் உணர்ந்து கிளர்ந்தெழச் செய்தல்.
[vii]புனிதக்கட்டுக்குள் சிக்கிக் கொள்ளாத இலக்கியச் செயற்பாடுகளால் தவிர்க்க இயலாத எதார்த்தத்தை மீறிய புதிய வடிவத்தை உருவாக்குதல்.
தலித்தியர் இலக்கியம் பற்றிய இந்த வரையறைகள் மார்சிய அழகீயல் [பாட்டாளி வர்க்க இலக்கிய] வரையறைகளை மீறாமல் உள்ளதை வினவு உணருமா ?
//அடுத்து தலித் இலக்கியம் எனும் கோட்பாட்டு விளக்கத்தோடு கூடிய இலக்கிய வகைமையை நாங்கள் ஏற்கவில்லை. பொதுவில் தமிழ் இலக்கியம், வங்க இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்று சொல்வது போல தலித் இலக்கியம் என்று சொன்னால் பிரச்சினையில்லை. மாறாக அதற்கு கோட்பாட்டு விளக்க்த்தை அளித்து வரையறுக்க முன்வந்தால் அதை விட சரியான விளக்கம் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க இலக்கியம் எனும் வகைமைதான் கம்யூனிஸ்டுகளின் இலக்கியக் கொள்கை.//
[1]என்ன வினவு , நீங்களும் கஞ்சியை விட்டுட்டு பாயசம் குடிக்கும் மேட்டிமைத்தனத்த்துக்கு வந்து விட்டீர்களா ?
//இறுதியாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இலக்கியங்களை விமரிசிக்க கூடாது என்பது எமது கருத்தல்ல. வரம்பிற்குட்பட்டு அவை நடந்தே வருகிறது. புதிய கலாச்சாரத்தில் “கோவேறு கழுதைகள்” உள்ளிட்டு அப்படி சில வந்திருக்கின்றன. இவையும் இன்னும் பல நூல்களும் பாட்டாளி வர்க்க இலக்கியம் எனும் புரிதலோடுதான் வந்தது என்பதையும் மறந்து விடவேண்டாம். ஆனால் அந்த கோவேறு கழுதைகள் தலித் மக்களின் உள்முரண்பாடுகளை பெரிது படுத்துகிறது என்று பல தலித்திய இலக்கியவாதிகள் அதை எதிர்த்ததும் வரலாறு.//
[1]என்னது என்னிடம் உள்ள மாக்சீம் கோர்கியீன் தாய் நாவலை தூக்கி எறிய சொல்கிண்றீர்களா ? முடியாது தோழர் !
//மேலும் இலக்கியங்களை விட தலித் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வேறு எந்த தமிழ் ஊடகங்களையும் விட வினவுதான் காத்திரமான கட்டுரைகளை கொடுத்து பெரும் விவாதத்தையும் எழுப்பியிருக்கிறது. இளவரசன் தற்கொலையின் போது கூட வேறு எவரும் வன்னியசாதி வெறி என்றோ பாமக சாதிவெறி என்றோ சொல்வதற்கு அஞ்சிய நேரத்தில் எமது அமைப்புகள் மட்டுமே களத்தில் அதுவும் வன்னியர்கள் வாழும் பகுதிகளின் அப்படி பிரச்சாரம் செய்தன. இதையெல்லாம் விட நாவல்கள் முக்கியமா சரவணன் அவர்களே?//
[1]Dear ComradeS,
I follow my life according to my Beloved Teacher Lenin words…,
“Practice without theory is blind.
Theory without practice is sterile.
Theory becomes a material force as soon as it is absorbed by the masses.”
WHAT ABOUT YOU ?
இறுதியாக தலித் உள்ளிட்டு அனைத்து மக்களின் விடுலைக்காக தன்னலமின்றி போராடி வரும் புரட்சிகர அமைப்புகளில் இணைந்து கொண்டு களப்பணியாற்றாமல், புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவதையே பெரும் பணியாக முன் வைத்து, மட்டுமல்லாமல் அதை நீங்கள் ஏன் செய்ய வில்லை என்று எகத்தாளத்துடன் கேட்டதற்கு நீங்கள்தான் சுயவிமரிசனம் ஏற்க வேண்டும்.
//ஆனந்த் தெல்டும்டே கூறுவது போல தலித்தியவாதிகளுக்கு கம்யூனிசம் என்றாலே ஏன் கசக்கிறது? தலித்தியவாதிகளின் இன்றைய சீரழிவுக்கு காரணம் என்ன? //
டெல்டும்டே கம்யூனிஸ்டுகள் மேல் விமர்சனமே வைக்கவில்லையா? கம்யூனிஸ்டுகளுக்கு இன்றுவரை சாதி குறித்து புரிந்து கொள்வதில் குழப்பத்தில் இருக்கின்றனர் என்று கூறுகின்றாரே?
சாதி குறித்து புரிந்துகொள்வதில் தலித்தியவாதிகள் தான் குழப்பத்தில் இருக்கின்றனர் கம்யூனிஸ்டுகள் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை புரிந்துகொள்ளாவிட்டால் பரவாயில்லை இனிமேலாவது கம்யூனிஸ்டுகளை சந்தித்து இது குறித்து ஆழமாக விவாதித்து இவ்விஷயத்தில் அவர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை என்பதை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மார்க்சிய மாணவன்,
[1]இலக்கிய தளத்தில் தலித்தியர் மக்களீன் எழுத்துகளை கம்யூனிஸ்ட்டுகள் விமர்சிக்காமல் இருப்பது தான் தலித்தியர் மக்களை பற்றிய புரிதலா ?
[2]இதை பற்றி கம்யூனிஸ்ட்டுகளுக்கு [வினவு ,ம க இ க ] ஏதேனும் சுய விமர்சனம் உண்டா ? இங்கு அதை கூற முடியுமா ?
மூதேவி,
கட்டுரையிலேயே போலிக் கம்யூனிஸ்டுகள், புரட்சிகர கம்யூனிஸ்டுகள் என்று விளக்கங்களோடு வருகின்றன. போலிக் கம்யூனிஸ்கள் சாதி குறித்து மட்டுமல்ல, பல்வேறு பிரச்சினைகளிலும் சந்தர்ப்பவாதமாகவே இருக்கின்றனர். புரட்சிகர கம்யூனிஸ்டுகள் அல்லது நாங்கள் சாதி குறித்து என்ன குழப்பத்தில் இருப்பதாக ஆனந்த் கூறுகிறார்?ஆதாரத்துடன் காட்டுங்கள், பதிலளிக்கிறோம். ஒருக்கால் அவர் சொல்லவில்லை என்றாலும் மனம் தளரவேண்டாம், நீங்கள் கூட அதை குறிப்பிட்டு எழுதுங்கள், பதிலளிக்கிறோம்.
//“கம்யூனிஸ்டுகளுக்கு சாதி பற்றிய புரிதல் இல்லை”, “கம்யூனிஸ்டுகள் தலித்களுக்கு எதுவும் செய்யவில்லை” என்று அவதூறு கூறும் எல்லா தலித்தியவாதிகளுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகள் சாதியை புரிந்துகொண்ட கட்சிகளாக தெரிவது தான் இதில் உள்ள முக்கிய அம்சம். சிவகாமி போன்றே, திருமாவளவனும் தேர்தல் அரசியலில் பங்கேற்ற முதல் தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரசுடன் தான் கூட்டணி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தேர்தல் பாதைக்கு அழைத்து வந்த மூப்பனார் குறித்து பல இடங்களில் சிலாகித்தும் கூறியிருக்கிறார்.//
இவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதை பலமுறை கூறியிருக்கின்றீர்கள்..அவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதிலும், தலித் மக்களின் விடுதலை இந்த கட்சிகளால் சாத்தியமில்லை என்பதிலும் மாற்று கருத்தில்லை. ஆனால், இதையே கூறிக் கொண்டிருக்காமல், கம்யூனிஸ்டுகள் தங்களை பற்றிய சுயவிமர்சனம் ஒன்றை முன்வைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
கம்யூனிஸ்டுகளின் சாதி பற்றிய புரிதல் குறித்த சுயவிமர்சன கட்டுரை ஒருமுறை கூட வந்ததாக தெரியவில்லையே?
விரைவில் எதிர்ப்பார்க்கலாமா?
நீங்கள் இதுவரை கம்யூனிஸ்டுகள் யாரையும் சந்தித்து பேசியதெ இல்லை போலிருக்கிறது ஆதனால் தான் தவறாக புரிந்துகொண்டு ஏதேதோ பேசுகிறீற்கள், பரவாயில்லை இனிமேலாவது ஒரு கம்யூனிஸ்டு தோழரை சந்தித்து சாதியை பற்றி ஆழமாக விவாதித்துவிட்டு வாருங்கள் அதன் பிறகு சுய விமர்சனத்தைப் பற்றி பேசுவோம். அல்லது நாமே கூட சந்திக்கலாம்.
மூதேவி, சாதி குறித்த புரிதல் எங்களை விட உங்களுக்கு அதிகம் என்பதை காரண காரியங்களோடு விளக்கினால் விவாதிக்கலாம். அப்படி ஒன்றைக் கூட கூற முடியாமல் இப்படி பார்ப்பன புராணங்களில் வரும் முனிவர்கள் அசுரர்களைப் பார்த்து கொடுக்கும் சாபம் போல பொறுமுவதால் என்ன பயன்?
வினவுக்கு ,
[1]தலித்தியர் மக்களை நேசிக்கும் முற்போக்கு எழுத்தாளர்கள் [உம் திரு பொருமாள் முருகன்] எழுதும் எழுத்துகளே அவர்களீன் வாழ்வியல் ,சாதிய அடக்கு முறையீன் வலிகளை சரியாக பிரதிபளிக்காத போது , ஒரு வேலை வினவு வாசகர்கள் திரு அப்பி ,திரு வியாசன் ,திரு கல்நெஞ்சம் ,திரு வெங்கட் போன்றவர்கள் தலித்தியர் மக்களை பற்றி கவிதை,கட்டுரை, பெருங்கதை எழுதுவார்கள் எனில் அவை [கவிதை,கட்டுரை, பெருங்கதை] எவ் வகையான கருத்துக்களை வெளியீடும் என்பதை வினவால் உணர முடிய வில்லையா ?
[2]அம்பி அவர்கள் தம் கதையில் தலித்தியர் மக்களை பார்பனர்களாக மாற்ற அவர்களுக்கு பூநூல் போட்டும் [அவர் தம் பூநூலை கழற்றி ஏறியமாட்டார் ], வியாசன் அவர்கள் தலித்தியர் மக்களை திருவாசகத்துக்கு உருகச்சொல்லியும், கல்நெஞ்சம் அவர்கள் தலித்தியர் மக்கள் தமிழரே அல்ல என்று பொய்யாக நீருபிக்க முயன்றும், வெங்கட் அவர்கள் சாதீய அழீப்பீல் முதல்படிநிலையில் இருப்பதாய் தான் நினைத்துக் கொண்டும் அல்லவா தலித்தியர் மக்கள் பற்றி இலக்கியம் புனைவார்கள்
தலித் இயக்கங்களால் ஏதேனும் நன்மை விளைந்திருக்கின்றதா என்ற கேள்வியை நீங்கள் கேட்கின்றீர்கள். கம்யூனிஸ்டுகளால் ஏதேனும் நன்மை விளைந்திருக்கின்றதா என்று அவர்கள் கேட்பார்கள். நக்சல்பாரி அமைப்புகளால் தலித் மக்கள் பெற்றது என்ன? அல்லது மொத்த உழைக்கும் மக்களும் பெற்றது என்ன?
உங்கள் தொடக்க காலத்திலிருந்து பேசி வருகின்றீர்கள்… 89 வாக்கில் புதிய ஜனநாயகத்தில் கலைஞர் சாகும் முன் பதவிக்கு வர விரும்புகிறார். ம்க்களுக்கு ஓட்டுப் போடும் எண்ணமில்லைனு எழுதுகின்றீர்கள். ஆனால், இன்றுவரை அந்த ஓட்டுப்போட விரும்பாத மக்களை ஓரணியில் திரட்ட முடியவில்லை. அப்படியென்றால், உங்கள் செயல்திட்டத்தில் ஏதோ பிழை இருக்கினறது என்பதுதானே பொருள். அந்த பொருள்தான் என்ன?
தலித் இயக்கங்கள் என்று கூறிக்கொள்பவற்றுக்கும் தலித் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறலாம். தலித் மக்களின் வாழ்க்கை வேறு தலித் தலைவர்கள் என்று பட்டம் சூட்டிக்கொண்டவர்களின் வாழ்க்கை வேறு. தலித் தலைவர்கள் அனைவரும் ஏசி அறைகளில் கிடந்து புரள்கிறார்கள், ஏசி கார்களில் சுற்றித்திரிகிறார்கள், வகை வகையாக வெட்டி விழுங்குகிறார்கள். தங்களை தலித் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு தி.மு.க, அ.தி.மு.க வின் காலடியில் தலித் ஓட்டுக்களை கொட்டுக்கிறார்கள். எனவே தலித் இயக்கங்கள் தலித் மக்களுக்கு எதையும் செய்யவில்லை எதிர்மறையான பங்கையே ஆற்றியுள்ளது. தர்மபுரி பிரச்சினையில் திருமா கடைசிவரை ராமதாசை கெஞ்சிக்கொண்டு தான் நின்றார்.
அதே தர்மபுரி பகுதியில் நக்சல்பாரி அமைப்பு இருந்ததால் தான் வன்னியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் சாதி வேறுபாடுகளை களைந்துகொண்டு வர்க்கமாக ஒன்றிணைந்து போராடினர்.
ஒரு கொள்கையின் கீழ் மக்கள் வந்துவிட்டால் அது நல்ல கொள்கை, சரியான கொள்கை வராவிட்டால் தவறான கொள்கை என்றால் பெரும்பாண்மை மக்கள் இன்று முதலாளித்துவத்தையும் பார்ப்பனீயத்தையும் தான் ஆதரிக்கின்றனர். எனில் அவை சரியானவைகளாகிவிடுமா?
மூதேவி, தற்போது தமிழகத்தில் 37 சீட்டுகளை பிடித்து ஜெயலலிதாவும், மத்தியில் மோடியும் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். இவர்கள் இப்படி மக்களை திரட்டி வெற்றி பெற்றுள்ளதால் நீங்கள் பாஜகவிலோ இல்லை அதிமுகவிலோ ஏதோ ஒரு பதவியில் இருக்க கூடும். இதில் உங்களைப் போன்ற தலித்தியவாதிகள், கட்சிகள் இப்படி தலித் மக்களை ஓட்டுக் கட்சிகளுக்கு விற்பனை செய்வதை மகஇக ஏன் முறியடிக்கவில்லை என்றும் உங்கள் கேள்வியை புரிந்து கொள்கிறோம். சரிதானே? என்றாலும் மல்லாக்க துப்புவதையும் ஒரு தைரியத்தோடு செய்யும் வீரத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
உங்களுக்கும்(கம்மூனிஸ்டுகளும்) தலித் மக்கள் கல்வி பொருளாதரத்தில் முன்னுக்கு வர ஒருபோதும் நினைத்தது இல்லை! துபோல ஒரு பொருளாதார கொள்கைக்கும் இல்லை நீங்கள் கிழே குருப்பிடுள்ள ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை, லேபர் காண்டிராக்ட், உரிமங்கள் பெற்றுத் தருதல், தண்ணீர் வியாபாரம், செக்யூரிட்டி ஏஜென்சி, மெட்ரிக் பள்ளி, சுயநிதிக் கல்லூரி, வாடகைக்கார்
தொழில்களை செய்யாமல் தொடர்ந்து கூலிக்கு மாரடிக்க வைக்க விரும்புகேறேர்கள் ” அது சரி உணவு கலப்பிடம், கள்ள நோட்டு புழக்கத்தில் விடும் இடமாக உள்ள தி நகர் , உணவு பதுக்கல், குட்டி முதலாளிதுவம் விலைவாசி உயர்த்திவிடும் வணிகர்களை கொண்டு உள்ள நாடார் வணிகர்களை விமர்சனம் செய்ய மறுக்கும் உங்களை போன்றோரை என்ன சொல்லி அழைப்பது நாடார்களும் தலித் மக்களை போன்று அடக்குமுறைக்கு வந்தவர்கள் தானே ஏன் தலித் மக்களை மட்டும் குறி வைத்து எழுதுகேர்கள் ?
@ P.Joseph,
நீங்கள் கொலைவெறிக் கோபத்திலும், பதட்டத்திலும் தட்டச்சி இருக்கிறீக்கள். முதல்ல தண்ணிய குடிங்க பாஸ்.
தமிழக சட்டசபையில் இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். நாங்களும் சொல்வதில்லை, சமீப காலமாக அவர்களே கூட அப்படி பிரமாதமாக சொல்லிக் கொள்வதில்லை.
கூசுகிறது போல 🙂
கம்யூனிஸ்டுகள் எதுவுமே செய்யவில்லை என்று நீங்கள் பிலாக்கணம் வைக்கத் தேவையில்லை. கம்யூனிஸ்டுகள் செய்தது என்னவென்பது பற்றிய ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் கட்டுரையிலேயே இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் ஆணி புடுங்க வேண்டாம் என்று சொன்னது தலித்தியவாதிகள் – அப்படிச் சொன்னவர்கள் சொந்த முறையில் புடுங்கிக் கத்தை கட்டியது என்னவென்பதை தான் கட்டுரை பேசுகிறது. கீழத்தஞ்சையிலோ புன்னப்புரா, வயலாரிலோ, தெலுங்கானாவிலோ, வங்கத்தின் தெராய் பிராந்தியத்திலோ இன்னும் எங்கெல்லாம் புரட்சிகர கம்யூனிச அணிகள் களத்தில் வலுவோடு நின்றார்களோ அங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ரத்தம் சிந்திய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள்.
அன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உயிர்தியாகங்கள் புரிந்த புரட்சிகர அணிகளையும் அவர்களது புரட்டல்வாத தலைமையையும் கட்டுரை தெளிவாக பிரித்தே காட்டுகிறது. தண்ணிய குடித்து உங்களை நீங்களே ஆற்றுப்படுத்திக் கொண்ட பின் மீண்டும் ஒரு முறை கட்டுரையைப் படியுங்கள்.
மற்றபடி இன்றைக்கு இன்னோவா கார்களில் புழுதி கிளப்பிக் கொண்டு வீரமாக மீசை முறுக்கிக் கொண்டே போய் கருணாநிதியின் காலை நக்கும் அண்ணன் திரு(வோட்டு)மாக்களின் தம்பிகள் முதலில் கட்டுரையை எதிர்கொண்டு பதிலிருக்கட்டும் பார்க்கலாம்.
யோக்கியராக இருந்தால் கட்டுரையின் பேசு பொருளை எதிர்கொண்டு மறுக்க வேண்டும் – அல்லது தரவுகளின் அடிப்படை தவறு என்பதை நிறுவ வேண்டும். “நீ மட்டும் பத்தினியா?” என்ற கருணாநிதி பாணி கேள்வி எதற்கு பாஸ்?
அடுத்து சில நண்பர்கள் கம்யூனிஸ்டுகளின் சுயவிமரிசனம் எங்கே என்று கேட்கிறார்கள். கம்யூனிஸ்டுகளின் கோட்பாட்டு ரீதியிலான சுயவிமரிசனங்கள் is well documented. இந்த கட்டுரையின் பேசு பொருள் அதுவல்ல – எல்லா இடத்திலும் வலிந்து மாப்பிள்ளை நாந்தான் ஆனா சட்டை என்னுதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மேலும், அன்றைய ஒன்றுபட்ட பொதுவுடைமை இயக்கத் தலைமையின் தவறுகள் கோட்பாட்டு ரீதியிலானது தானே தவிற (அதுவும் மா.லெ இயக்கத்தின் தோற்றத்திலேயெ களையப்பட்டுவிட்டது) அதன் அணிகளின் நடைமுறையில் அது அப்படியே பிரதிபலிக்கவில்லை – அதற்கு ஆதாரம் தான் மேலே நான் குறிப்பிட்டுள்ள இடங்களில் புரட்சிகர அணிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கங்களை கட்டியெழுப்பிய ஒப்பற்ற ஆதிக்க நிலபிரபுத்துவ / சாதிய எதிர்ப்பு இயக்கங்கள்.
நீங்கள் சுயவிமரிசனம் கேட்க வேண்டியது உங்கள் அண்ணன்களின் இன்னோவா கார்கள் கிளப்பிச் சென்றுள்ள புழுதிப் பட்டாளங்களிடம் தான். கம்யூனிஸ்டுகளிடம் அல்ல.
தோழர் மன்னாரு,
[1]தண்ணீர் குடித்து கோபத்தை ஆற்றுபடுத்தி கொள்ள வேண்டியது மன்னாரும் தான் என்பதை அவரும் உணர வேண்டும்.
[2]தலித்தியர் மக்களீன் தலைமை சந்தர்ப்பவாதிகள்,சரணாகதிவாதிகள் ,பிழைப்புவாதிகள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுகொண்ட பின்பும் அவர்களிடம் சென்று சுயவிமரிசனம் கேட்க வேண்டியது ஏன் ????[பு ஜா தொ மு தோழர் முகிலன் வி.சிறுத்தைகளீடம் வாங்கீய அடியை நானும் வாங்க வேண்டுமா ?] தோழர் மன்னாருக்கு தான் எவ்வளவு நல்ல எண்ணம் !
[3]என் கேள்வி என்ன என்றால் தலித்தியர் மக்களீன் எழுத்துகளை [நிறை ,குறைகளை ] விமர்சனம் செய்ய நேரமும் மனசும் இல்லாமைக்காக வினவு மற்றும் ம க இ க சுய விமர்சனம் [Self-criticism]செய்து கொள்ளுமா? Pls refer my comment 6, 7.1.1, 9 more detail.
[4]தலித்தியர் மக்களீன் எழுத்துகள் உம்:
[திரு பாமா வின் நாவல்களை [கருக்கு,சங்கதி]]
[திரு சிவகாமியின் நாவல்கள் பழையன கழிதலும்,ஆனாந்தாயி ]
விமர்சனத்துக்கு தகுதி அற்றது என்று வினவு நினைக்கீன்றதா என்ன ?
Saravanan://தலித்தியர் மக்களீன் அரசியல் தலைமையையும்[சரணாகதி,பிழைப்புவாதி] மிக சரியாக விமர்சனம் செய்யும் வினவு மற்றும் ம க இ க//
மன்னாரு//நீங்கள் சுயவிமரிசனம் கேட்க வேண்டியது உங்கள் அண்ணன்களின் இன்னோவா கார்கள் கிளப்பிச் சென்றுள்ள புழுதிப் பட்டாளங்களிடம் தான். கம்யூனிஸ்டுகளிடம் அல்ல.//
தோழர் சரவணன்,
தலித்திய இலக்கியங்கள் மீது ஏன் விமர்சனமோ அல்லது சுயவிமர்சனமோ வைக்கவில்லை என்று கேட்கிறீர்கள். இதில் இருதரப்புகள் உண்டு. ஒன்று ஆதிக்கசாதியின் தரப்பு; இன்றும் இந்த வகையறாக்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைத் சேர்ந்தவர்களையும் அவர்களின் படைப்புகளையும் தீண்டாமைக் கண்ணோடே நோக்குவது.
இரண்டாவது இக்கட்டுரை விவரிக்கிற பார்வைக்குத் தப்பாத இலக்கியங்கள். தலித் மக்களின் துன்பங்களை மிகவிரிவாக எழுதிவிட்டு தீர்வாக முட்டுச் சந்தில் கொண்டுபோய் நிப்பாட்டுவது. ஓம் பிரகாஷ் வால்மீகியின் ஜூதான் (எச்சில்) என் பார்வையில் இக்கட்டுரை விமர்சிக்கிற அரசியலுக்கு அப்பாற்பட்டவையல்ல. இது சுயசரிதை நூல். வால்மீகி சாதியினரின் சொல்லவொண்ணா இன்னல்களை இதில் காண முடியும். இது வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. பிரகாஷ் அவர்கள் அரசியலில் நின்று தன்னை யாரும் கைதூக்கிவிடவில்லை என்பதை சரியாகவே உள்ளது உள்ளபடி பதிவு செய்திருப்பார். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் திக்கற்று மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவே முடிக்கப்பட்டிருக்கும். மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் தியாகங்களும் சமரசமற்ற போராட்டங்களும் போராட்டத்தைக் கோருகிற எழுத்துக்களையும் காண்பிக்க மறுக்கின்றனர்.
இதையும் தாண்டி அரவிந் மாளகத்தியின் கவர்மெண்ட் பிரமாணாவை புரட்சிகர இயக்கங்கள் கொண்டு சென்றிருக்கின்றன.
https://www.vinavu.com/2014/01/20/government-brahmanan-book-review/
சித்தலிங்க ராமையாவின் ஊரும் சேரியும் என்ற நூலை தமிழக சமூகம் நகைச்சுவைக்காக மட்டும் ரசிக்கிறது. சமீபத்திய தமிழ் ஹிந்துவில் இந்நூலை இவ்விதமாக அணுகியிருந்ததுடன் நூல் பெயரைக்கூட குறிப்பிடவில்லை.
எழுத்தாளர் இமயத்தின் “ஆறுமுகம்” நாவல் ஓம் பிரகாஷ் வால்மீகியின் எச்சிலைப் போன்றது. இமயம் எனக்குப் பிடித்த எழுத்தாளரும் கூட. பாண்டிச்சேரியின் முழு சூழ்நிலையையும் கண்முன்னே கொண்டுவந்திருப்பார். பெத்தவன் சிறுகதையில் வன்னியசாதிவெறி எப்படி திவ்யாவின் அப்பாவை கொன்றது என்பதை கண்டுகொள்ளலாம். ஆனால் பெத்தவனைப் போன்று ஆறுமுகம் என் பார்வையில் அழுத்தமாக விழவில்லை. அதாவது கட்டுரை விளிப்பதைத் தாண்டி செல்லவில்லை. ஆறுமுகம் கையறு நிலையில் கடைசிவரை இருப்பதாகவே முடிக்கப்பட்டிருக்கும். இதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருபகுதியைத் தான் சொன்னது.
செடல் மற்றுமொரு முக்கியமான படைப்பு. இதுவும் வாசிக்கப்பட வேண்டியது தான். கோவேறு கழுதைகளும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.
எழுதப்படவேண்டியது இருக்கிறது. விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் வைக்கப்பட வேண்டும் என்பதற்கு நாம் விவாதக்களத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு என்ன வழி?
தோழர் தென்றல்,
####[1]என் கேள்வி….. தலித்தியர் மக்களீன் எழுத்துகளை பற்றி விமர்சனம் செய்ய நேரமும் மனசும் இல்லாமைக்காக வினவு சுய விமர்சனம் [Self-criticism]செய்து கொள்ளுமா ? ஆனால் நீங்கள் பேசுவது வேறு விடயம்!
///தலித்திய இலக்கியங்கள் மீது ஏன் விமர்சனமோ அல்லது சுயவிமர்சனமோ வைக்கவில்லை என்று கேட்கிறீர்கள். இதில் இருதரப்புகள் உண்டு. ஒன்று ஆதிக்கசாதியின் தரப்பு; இன்றும் இந்த வகையறாக்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைத் சேர்ந்தவர்களையும் அவர்களின் படைப்புகளையும் தீண்டாமைக் கண்ணோடே நோக்குவது.///
####[2]தமிழக சூழலில் எழுதபட்ட இக் கட்டுரைக்கு தமிழகத்து தலித்திய இலக்கியங்கள் பற்றி விமர்சனம் செய்யாதது ஏன் ? என்று மீண்டும் கேள்வி கேட்டு உங்களுக்கு நான் வீளக்கம் அளிக்க வேண்டுமா ?
//இரண்டாவது இக்கட்டுரை விவரிக்கிற பார்வைக்குத் தப்பாத இலக்கியங்கள். தலித் மக்களின் துன்பங்களை மிகவிரிவாக எழுதிவிட்டு தீர்வாக முட்டுச் சந்தில் கொண்டுபோய் நிப்பாட்டுவது. ஓம் பிரகாஷ் வால்மீகியின் ஜூதான் (எச்சில்) என் பார்வையில் இக்கட்டுரை விமர்சிக்கிற அரசியலுக்கு அப்பாற்பட்டவையல்ல. இது சுயசரிதை நூல்//
//ரவிந் மாளகத்தியின் கவர்மெண்ட் பிரமாணாவை புரட்சிகர இயக்கங்கள் கொண்டு சென்றிருக்கின்றன.
https://www.vinavu.com/2014/01/20/government-brahmanan-book-review/
சித்தலிங்க ராமையாவின் ஊரும் சேரியும் என்ற நூலை தமிழக சமூகம் நகைச்சுவைக்காக மட்டும் ரசிக்கிறது//
####[3]மேலும் ஒரு நாளுக்கு ஒன்பது கட்டுரைகள் வரை எழுதும் வினவால் ,தலித்தியர் மக்களீன் எழுத்துகள் உம்:
[திரு பாமா வின் நாவல்களை [கருக்கு,சங்கதி]]
[திரு சிவகாமியின் நாவல்கள் பழையன கழிதலும்,ஆனாந்தாயி ]
பற்றி வினவு பிறந்தது முதல் ஒரு கட்டுரை கூட எழுத முடியாமைக்கு காரணம் என்ன ?
####[4]தலித்தியர் மக்களீன் எழுத்துகள் விமர்சனத்துக்கு தகுதி அற்றது என்று வினவு/மகஇக நினைக்கீன்றதா என்ன ?
//எழுதப்படவேண்டியது இருக்கிறது. விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் வைக்கப்பட வேண்டும் என்பதற்கு நாம் விவாதக்களத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு என்ன வழி?//
Note:
####### இதற்கு மேலும் நான் திரும்ப இதே கேள்விகளை கேட்டால் repeatகாக U-buddy என்னை அடிக்க வருவார்! எனவே தோழர் தென்றல் , என் அனைத்து feedbackஅய்யும் மீண்டும் படித்து பார்க்கவும்
தென்றல்,
தவறு.
என் கேள்வி :
தலித்திய இலக்கியங்கள் மீது வினவு மற்றும் ம க இ க ஏன் விமர்சனமோ அல்லது சுயவிமர்சனமோ வைக்கவில்லை?
என்பது தான்.
தென்றல் //தலித்திய இலக்கியங்கள் மீது ஏன் விமர்சனமோ அல்லது சுயவிமர்சனமோ வைக்கவில்லை என்று கேட்கிறீர்கள். //
மன்னாரின் கவனத்திற்கு
சாதி பிரச்சினையில் கம்யூனிஸ்டுகள் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறியவர் ஜோசப் அல்ல மூதேவி. கவனத்தில் கொள்ளவும் மூதேவிக்கு பதிலளிக்கவும்.
தோழர் மன்னாறு என்னுடைய பின்னூட்டத்த மீண்டும் படியுங்கள் தாழ்த்தபட்ட மக்களை கூறு போட்டவர்கள் தலித் அரசியல் வாதிகள் என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன் அப்புறம்தான் கம்மூனிஸ்டுகள் தலித் மக்களுக்காக எந்த ஆணியும் புடுங்கவில்லை என்று சொன்னேன் கட்டுரையிலும் அப்பிடி எதுவும் குறிப்பிட்டு காட்டியதாக தெரியவில்லை வினவு படிச்ச பிறகுதான் மக இகான்ற இயக்கம் இருப்பதே தெரியும் கம்மூனிச இயக்கங்கள் ஏன் பல் கூறுகளாக பிரிந்ததுனு கொஞ்சம் விளக்கி சொல்லுங்க சட்டமன்றதுல இருக்குற போலி கம்மூனிஸ்ட இருந்துதான் மத்த கம்மூனிச இயக்கங்கள் பிரிந்தது உண்மையா அப்புறம் ஒரு கேள்வி மார்க்ஸிஸ்ட் கம்மூனிஸ்ட்னா அது பிராமணர்கள் அதிகமாக இருப்பார்கள் என்றும் இந்திய கம்மூனிஸ்ட் என்றால் பிற்படுத்தபட்ட சாதியினர் அதிகமாக இருப்பார்கள் என்றும் புரச்சிகர கமூனிஸ்ட் என்றால் தலித்துகள் அதிகமாகவும் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் இது ஏன் கம்மூனிச சித்தாந்தத்தின் குறைபாடா அல்லது கம்மூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டவர்களும் பார்ப்பனியத்தை உள்வாங்கி கொண்டார்களா அவர்கள் போலிக்கம்மூனிஸ்டுகள் இவர்கள் போலிக்கமூனிஸ்டுகள் என்று கடந்து போகாதீர்கள் படிக்காத பாட்டளி வர்க்க மக்களுக்கு கம்மூனிஸ்ட் கட்சினா அது மார்க்ஸ்ஸ்ட், இந்திய கம்மூனிஸ்டுதான் தெரியும் அவர்களின் அளவுக்கு நக்சல் பாரிகள் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆக வில்லை என்பதே உண்மை முன்பு மார்க்ஸிய லெலினீசிய இயக்கத்தினர் எங்கள் ஊரில் வீதி நாடகம் தெருக்கூத்து நடத்தி கம்மூனிச கொள்கைகளை அறிமுகம் செய்தார்கள் அது போலக்கூட நக்சல்பாரிகளின் பிரச்சாரத்தை எங்கும் பார்த்தது இல்லை புரச்சீகர கம்மூனிஸ்டுல அர்சியல் கத்துக்கிட்டு வரவங்க எல்லாம் எனக்கு தெரிந்து ஒன்னாம் நம்பர் பிழைப்புவாதியா மாறிட்டாங்களே அதுவும் ஏன்
Dear Joseph,
Apologies for being bit rude while responding to your previous comment.
It seems you are totally ignorant about Indian Communist movement and few basics about indian political setup.
If you wish to enlighten yourself about the same, better to contact some Comrades who can speak to you in person. There are contact numbers provided in Vinavu website contact list – you can try them. It is not possible to explain your queries in an online debate – which gives more space for personal ego and less space for brain 🙂
Do not feel offended for I said you are ignorant. All are ignorant at one point or other.. The effort put in by an individual to understand unknown things only makes difference
Wishes,
Mannar
ஜோசப்
நக்சல்பாரிகள் இயங்கிய பகுதிகளில் எல்லாம் தலித் மக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அந்த பகுதி மக்களை சந்தித்து கேட்டீர்கள் என்றால் பதில் கிடைக்கும். ஆனால் தலித் மக்களின் விடுதலைக்காக உழைக்கிறோம் என்று கூறிக்கொண்டு தலித்திய பிழைப்புவாதிகள் செய்த வேலையை மட்டும் நக்சல்பாரிகள் செய்யவில்லை என்று கூறிக்கொள்கிறேன்.
வினவுக்கு ,ம க இ க தோழர்களுக்கு ,
[1]June 19, 2014 at 10:35 am க்கு நான் கேட்ட எளீமையான கேள்வீயாகீய…..
“தலித்தியர் மக்களீன் எழுத்துகளை [நிறை ,குறைகளை ] விமர்சனம் செய்ய நேரமும் மனசும் இல்லாமைக்காக வினவு மற்றும் ம க இ க சுய விமர்சனம் [Self-criticism]செய்து கொள்ளுமா? ”
என்பதற்கு இது வரை ம க இ க தோழர்களீடம் இருந்தோ ,வினவு தோழர்களீடம் இருந்தோ முறையான பதில் வரவில்லை.
[2] தலித்தியர் மக்களீன் தலைமை சந்தர்ப்பவாதிகள்,சரணாகதிவாதிகள் ,பிழைப்புவாதிகள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுகொண்ட பின்பும் தோழர் மன்னாரு அவர்கள்……
” நீங்கள் சுயவிமரிசனம் கேட்க வேண்டியது உங்கள் அண்ணன்களின் இன்னோவா கார்கள் கிளப்பிச் சென்றுள்ள புழுதிப் பட்டாளங்களிடம் தான் ”
என்று என்னை அவதூறு செய்கின்றார்.
[3]நான் பிறப்பால் தலித்தியர் மக்களீன் சமுகத்தை சேர்ந்தவன் என்று எப்போதாவது கூறி உள்ளேனா ? மேலும் தலித்தியர் மக்களீன் சமுகத்தில் பிறந்தால் மட்டுமே தலித்தியர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று ஏதோனும் சட்டம் உள்ளதா ?
இதனை படித்து தெளியவும்.
https://www.vinavu.com/2013/04/09/sadayankulam-novel-review/
Sukdev,
[1] 25% தலித்தியர் மக்கள்[Hindu + Cristian](நம் பாட்டாளி வர்க மக்கள்) வாழும் தமிழ் நாட்டில் தமிழ் தலித்தியர் பற்றிய மார்சிய அழகியளுடன் எழுதப்பட்ட இன் நாவலை ” மட்டுமே ” உதாரணம் காட்டி பீத்திகொள்ளும் சுக்தேவ் அவர்கள் ,இது[சடையன்குளம் ] தலித்தியர் மக்கள் பற்றிய எழுத பட்ட மார்சிய நாவலா ,அல்லது தமிழ் தலித்தியர் மக்கள் பற்றிய எழுத பட்ட ” தலித் இலக்கியமா “என்று கூற வேண்டும்
[2] மேலும் ஒரு மார்சிய அழகியளுடன் எழுதப்பட்ட சடையன்குளம் நாவல் அறிமுகத்துக்குள் எழுதபட்டு உள்ள பாமாவின் கருக்கு விமர்சனத்துக்கு கொடுக்க பட்டு உள்ள இடம் என்னை மெய் சீலீர்க்க வைகின்றது ! தலித்தியர் மக்கள் எழுத்துகளுக்கு வினவு மற்றும் ம க இ க கொடுத்து உள்ள இடம் போதுமானது தானா ?
அற்ப மனங்கள் மட்டுமே தமக்கு அளிக்கப்படும் பதில்களை பெரும் தாக்குதலாக கருதி வினையாற்றும். பொதுவாகவே இலக்கிய ஆக்கங்கள் குறித்த மதிப்பீடுகளும், விமர்சனங்களும் வினவில் குறைவு. அது அரசியல் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஏற்படுகின்றன பிரச்சினை.
கலை இலக்கிய தூய்மைவாதிகளிடமே இந்த புலம்பல் அடிக்கடி கேட்க முடிகிறது. கவிதையோ, நாவலோ வெளிவந்தால் அதனை வாசித்து யாரும் விமர்சிக்க முன்வருவதில்லை என்று. இதில், தலித் இலக்கியங்களை கண்டுகொள்ளாததற்கு வினவு சுயவிமர்சனம் ஏற்க வேண்டுமாம்? இது போன்ற காமெடிகள் தான் அக்மார்க் சிவகாமி வகை தலித்திய பார்வை.
Sukdev,
[1]பதில்.. இல்லாத போது இது போன்ற feedback சுகதேவ் அவர்களீடம் இருந்து வருவது இயல்பு தான்
[2]ஒரு மார்சிய அழகியளுடன் எழுதப்பட்ட சடையன்குளம் நாவல் அறிமுகத்துக்குள் எழுதபட்டு உள்ள பாமாவின் கருக்கு விமர்சனத்துக்கு கொடுக்க பட்டு உள்ள இடம்[space] என்னை மெய் சீலீர்க்க வைகின்றது ! தலித்தியர் மக்கள் எழுத்துகளுக்கு வினவு மற்றும் ம க இ க கொடுத்து உள்ள இடம்[space] போதுமானது தானா ?
I need answer from you sukdev!
//அற்ப மனங்கள் மட்டுமே தமக்கு அளிக்கப்படும் பதில்களை பெரும் தாக்குதலாக கருதி வினையாற்றும்//
அற்ப மனங்கள் என்ற சொற்தொடருக்கு/சுகதேவ்க்கு வினவில் இடம் அளிக்க படும் போது துப்பு/அறிவு இன்றி என்ற சரவணனுக்கு ஏன் இடம் இல்லை வினவு ?
Mr. Saravanan,
//என்று என்னை அவதூறு செய்கின்றார்//
I cannot own responsibility for your own conclusions 🙂
My comment was not intended for you. In broader sense, there are few pseudo Dalit intellectuals who ask Communists to come out with self criticism. I wrote that part of my comment keeping them in mind and was expecting such template comments.
MR MANNAR,
Be specific about your comment!
Other wise those who are requesting for self critic from vinavu IN THIS essay can understand your following comment wrongly!
mannaru//அடுத்து சில நண்பர்கள் கம்யூனிஸ்டுகளின் சுயவிமரிசனம் எங்கே என்று கேட்கிறார்கள்.//
ஈழ தமிழருக்கு வக்காலத்து வாங்கும் சாதி வெறியர்கள் அதாங்க தமிழ் தேசிய வாதிகள் , தலித் மக்களுக்கு ஏற்படும் கொடுமைகளை பற்றி வாய் திறக்க மறுப்பதேன் . இளவரசன் கொலை செய்ய பட்ட போது முன் நின்ற தலைவர்களுள் சிவகாமியும் ஒருவர் . இவர் காங்கிரஸ் கட்சியில் சேந்தது தமிழ் தேசிய வியாதிகளுக்கு எரிச்சல் உண்டாக்கினாலும் வேறு எங்கு போக முடியும் ? தலித் தலைவர்களை பிரித்தாளும் தி மு க மற்றும் அதி மு க வை தான் விமர்சிக்க வேண்டுமே தவிர இவரை அல்ல .
Dear friends Tippu ,Thendral ,
இவ்வளவு நாட்கள் வினவில் எதீர் கருத்து உடையவருடன் நான் விவாதத்தில் ஈடுபடும் போது எல்லாம் நம் அணியில்[ஒத்த கருத்து உடைய] திப்பி மற்றும் தென்றல் இருக்கின்றனர் என்ற மன வலிமையுடன் தான் நான் ஈடுபட்டேன். நீங்கள் கொடுத்த கருத்தியல் சார்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி
நன்றி வினவுக்கும்.Bye Bye
தோழர் சரவணன்,
உங்களுடன் முரண்பட்டு கொள்வதற்காக யாரும் இங்கு விவாதம் நடத்தவில்லை. என் பார்வையில் வினவு உங்களுக்கு அரசியல் விமர்சனத்தை உரிமையுடன் முன்வைத்தது.
உண்மையில் சொல்லப்போனால் கட்டுரை பதிவுகள் எழுதவற்கு ஆட்கள் தேவை. நீங்கள் இதை எடுத்துச் செய்ய வேண்டும். அப்படி எழுதுகிற பொழுது இதன் எல்லா விமர்சனங்களையும் பரிசிலீயுங்கள்.
என் அனுபவத்தில் எனக்குச் சரியாக தோன்றுகிற பலபதிவுகள் தோழர்களின் பார்வையில் சரியாக இனங்கண்டு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. அதையும் மீறி பதிவுகள் வரலாம். ஆனால் இதுவரை அவர்கள் பெற்ற உழைப்பை நம்மைப் போன்றவர்கள் காவுகொடுப்பதற்கான வாய்ப்பு உண்டு.
பதிவுகளை பெற்றி பேசுகிறீர்கள் சரவணன். தலித்தியம் பேசுகிற தன் சொந்த உறவுகளை பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் பற்றி பேசுகிற தோழர் உதறியிருக்கிறார். நாம் வரையறுக்கிற சொந்த வாழ்க்கை என்பது அவருக்கு உண்டா? சொந்த வாழ்க்கை என்பதை அவர்கள் எப்படி வரையறுக்கின்றனர் என்பதை வினவு போன்றவர்களிடம் சட்டையை பிடித்து உரிமையுடன் கேளுங்கள்.
தனிமனித அவதூறுகளை எல்லாம் ஒரு பொருட்டாக கருதாத சரவணன் அரசியல் ரீதியிலான விமர்சனங்களை ஏன் ஏற்க தயங்க வேண்டும்? உண்மையில் இது நம்முடைய அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வாய்ப்பு. சேர்ந்து வினையாற்றுவோம் வாருங்கள்.
வெங்கட் மாங்குமாங்கு என்று லாஜிக் எல்லாம் பேசுகிற பொழுது ஒரே வரியில் நீங்கள் அதை உடைக்கவில்லையா இப்படி “வெங்கட் அவர்கள் சாதீய அழீப்பீல் முதல்படிநிலையில் இருப்பதாய் தான் நினைத்துக் கொண்டும் அல்லவா தலித்தியர் மக்கள் பற்றி இலக்கியம் புனைவார்கள்”
இதை வளர்தெடுப்போம் வாருங்கள். நீங்கப் பாய் பாய் சொன்னால் என்ன அர்த்தம்?
தென்றல்,
[1]வினவு எமக்கு அளித்த பதில்களையும் 6.1 அதற்கு என் எதீர் வீனையையும்6.1.1 படிக்கவும்
[2]திரைபடத்துறை பற்றி விமர்சனம் எழுத வினவுக்கு நேரமும் , மனசும் இருக்கும் போது தலித்தியர் மக்களீன் எழுத்துகளை பற்றி விமர்சனம் செய்ய நேரமும் மனசும் இல்லாமைக்காக சுய விமர்சனம் [Self-criticism] செய்து கொள்ளுமா ? என்ற என் கேள்விக்கு நான் தலித் இளைஞர்கள் சினிமா மாயையில் சிக்கி சீரழியட்டும் என்ற வன்மத்துடன் இருப்பதாக கூறுவதில் இருப்பது அரசியல் ரீதியீலான விமர்சனமா ? அல்லது அரசியல் ரீதியீலான விமர்சன அவதூரா ?
[3]தலித்தியர் மக்களீன் எழுத்துகளை விமர்சனம் செய்யுங்கள் என நான் கோருவது, வினவுக்கு நான் முறுக்கு கடித்துக் கொண்டே நாவல் ஏன் படிக்க வில்லை என்று கேட்பது போல் உள்ளது என்று ஒப்புமை செய்யும் போது அவர்களீன்[வினவுக்கு ,ம க இ க தோழர்களுக்கு] அரசியல் அறிவை பற்றி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
[4]தலித் இலக்கியம் எனும் கோட்பாட்டு, மார்சிய அழகீயல் கோட்பாட்டுக்குள்[பாட்டாளி வர்க்க இலக்கிய கோட்பாட்டுக்குள்] உள் அடங்கி தான் உள்ளது என்பதை நான் ஆதாரத்துடன் கூறி உள்ளதை நீங்கள் மறுக்க முடியுமா? தலித் வாழ்வியல் வலிகளை ,அவர்கள் மீதான சாதீய அடக்கு முறைகளை தன் அனுபவம் மூலம் நேரலை [running commentary] பேன்றே நமக்கு அளித்த தோழர் பாமா அவர்கள் எமக்கு கலககாரராக தெரிகின்றார். உங்களுக்கு எப்படி ?
[5]தலித்தியர் மக்களீன் எழுத்துகளை விமர்சனம் செய்யுங்கள் என நான் கோருவது, அதற்கு இதையெல்லாம் விட[திரு இளவரசனுக்காக போராடுவது விட] நாவல்கள் முக்கியமா சரவணன் அவர்களே? என்று கேட்கும் வினவு/ம க இ க , மார்க்சிய இலக்கியயங்களையும் தீயீட்டு கொளுத்துமா ?
[6]தோழர் தென்றல் , வெறும் தென்றல் ஆக எமக்கு தெரிவதற்க்கான அத்துனை அரசியல் சார்ந்த முரண்பாடுகளும் நமக்குள் முற்றிகொண்டு உள்ளன என்பது மட்டுமே இங்கு இப்போது எதார்த்தம்
தோழர் சரவணன்,
தாங்கள் வைத்த ஆறுபாயிண்டுகளும் ஈகோ crash வகையிலானவை. இதை என்னால் ஓரளவு எடுத்துக்காட்ட முடியும்,
இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா அரசியலா? என்ற கட்டுரையை வரவேற்றவர் யார்? இப்பொழுது அதற்கு மாறாக ஏன் பேச வேண்டும்?
அந்தக்கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். நீங்கள் சொல்கிற சிக்கலுக்கு தீர்வுகள் கிடைக்கும். அதில் சுட்டிக்காட்டியிருக்கிற அரசியலில் தவறுகள் இருப்பின் வினவை வெளுத்தெறியலாம். என்ன சொல்கீறிர்?
அக்கட்டுரையை உள்வாங்கியிருந்தால் படைப்புகளின் அரசியலையும் அரசியலின் படைப்புகளையும் நாம் இனம் கண்டு விமர்சனம் செய்ய முடியும். இதில் இந்த தளம் எந்தவிதத்தில் தங்களது பார்வையில் வேறுபடுகிறது?
தலித் இலக்கியம், மார்க்சிய அழகியல் போன்ற சொல்லாடல்கள் எதைக் குறிக்கின்றன?
ஆன்ந்த் டெல்டும்டேவை சமூகம் தலித் சிந்தனையாளர் என்கிறது. இதன் உள் அரசியல் என்ன?
Priority என்கிற வார்த்தை உங்களுக்கு வலுவாகத் தெரிகிறது. இதை வைத்து மட்டும் வாதத்தை நகர்த்தினால் நோக்கங்கள் நிறைவேறா.
நிதர்சனம் என்னவென்றால் அம்பேத்கர்-பெரியார் ஸ்ட்டி சர்க்கிள் என்ற விவாதமேடையை பள்ளி கல்லூரிகளில் உருவாக்குவதற்கு கூட இங்கு ஆள் இல்லை. பார்ப்பனீயத்திற்கு (செயற்கையாக இந்த வார்த்தையை பயன்படுத்தினேன் என்று பலர் நினைக்கக்கூடும். ஆனால் ஆர் எஸ் எஸ் இதில் கவனமாக இருக்கிறது) எதிராக கடுமையான போராட்டத்தை நிகழ்த்திதான் இதுபோன்ற அமைப்புகளை கட்டமுடிகிறது. மாணவர்கள் இதை எடுத்துச் செய்கிற பொழுது புரட்சிகர அமைப்புகள் தன்னை இணைத்திருக்கிறார்கள். தாங்களும் இதில் பங்குபெறலாம். தாங்கள் குறிப்பிட்ட பகுதிகளை விமர்சனமாக எழுதி அனுப்பினால் என்ன? இவ்வளவு நேரம் எதற்கு?
தோழர், வெறும் என்பதெல்லம் வெறும் கோபம் குறித்த சொல்லாடல்கள். அரசியல் முரண்பாடெல்லாம் ஒன்றும் கிடையாது. பாட்டாளிகளுக்கு நம்மைப் போன்ற குட்டிமுதலாளிகள் எல்லாம் பிரதானமா? சொல்லப்போனால் நாம் களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டிய நேரம் இது. பின்னூட்ட பெட்டியில் உட்கார்ந்து பார்வையை வேண்டுமானால் பெறலாம். அதிலேயே இவ்வளவு சிக்கல்கள். நாம் பேசுவதை நடைமுறை எதார்த்த்தில் எப்படி நிகழ்த்திக் காட்டுவது? யார் அதைச் செய்வது? சுயவிமர்சனம் நாம் தானே வைக்க வேண்டும்?
தென்றல்,
[1]வினவின் என் மீது வைக்கும் அவதூரு விமர்சனத்துக்கு, நான் வைக்கும் எதீர் விமர்சனத்தை ego clash என்று அழகாக ஒதுக்கி தள்ளும் உங்கள் பார்வை கொள்கை அற்ற சமரசவாதம் சார்ந்ததா அல்லது கறாரான கொள்கை பிடிப்புடன் கூடிய மத்தியஸ்தமா ?
[2]இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா அரசியலா? என்ற கட்டுரையை தான் இவ் விவாதத்தீன் போது தலைப்பை மறந்து தேடிகொண்டு இருந்தேன். இப்போது கண்டு கொண்டேன்.சுடியமைக்கு நன்றி. அதில் என் feedback அய் படியுங்கள்!
My feed back://ஆழ் மனதுள் ஊடுருவி சென்று தனி மனிதர்களீன் மனசாட்சியுடன் உறவாடும் ஈரமான இது போன்ற கட்டுரைகள் வினவில் இப்போது எல்லாம் ஏன் வருவது இல்லை ?//
களத்தில் போராட வேண்டாம் ; இலக்கியங்களே போதும் வர்க புரட்சிக்கு என்று என்ன நான் கூறி ஒற்றை காலில் நீன்று தவம் இருந்தேனா ?
[3]தலித் இலக்கியம், மார்க்சிய அழகியல் ஆகிய சொல்லாடல்கள் பாட்டாளி வர்க்க இலக்கியத்தை குறிக்காமல் வேறு எதை குறிப்பதாக நினைகின்றீர்கள்
[4]பாட்டாளி வர்க்கம் சார்ந்த அரசியல் கொள்கைகளில் முரண்படும் போது அங்கு கொள்கை அற்ற தோழன்மையை பேணும் படி எமக்கு மார்சிய கல்வி அளித்த எம் தோழர்கள் கற்றுதரவில்லை
[5]முன்பு நான் செய்த ஆசிரியர் வேலையை விட்டு விட்டு ,பாட்டாளி வர்க்கம் சார்ந்த ஹோட்டல் சர்வர் மற்றும் குக் வேலைகளை நான் இப்போது செய்வதால் , என்னை நான் முதலில் பாட்டாளி வர்க்கத்தீன் வலிகள் /அவலங்கலுடன் முழுமையாக இணைத்துகொண்டேன் என்பதை உணருங்கள்.
I follow my life according to my Beloved Teacher Lenin words…,
“Practice without theory is blind.
Theory without practice is sterile.
Theory becomes a material force as soon as it is absorbed by the masses.”
WHAT ABOUT YOU ?
பதில் கூற முடியுமாதென்றல்?,
[1]சந்தர்ப்பவாத ,சரணாகதிவாத ,பிழைப்புவாத தலித்தியர் தலைமையை பார்த்தும்,தலித்தியர் குட்டி முதலாளீத்துவவாதிகளை பார்த்தும் …………
“ஆம் தலித்தியர் இலக்கியங்கள் எமது பாட்டாளி வர்க்க இலக்கியங்கலே ; ஆம் தலித்தியர் எம் பாட்டாளி வர்க்க மக்கள் தான் என்று கூற வக்கு/துப்பு/ பாட்டாளி வர்க்க உணர்வு இல்லாத ம க இ க வும் அதன் தலைமையும் வரட்டு சித்தாந்தத்தை முன்னெடுக்கும் வரட்டு மார்சியவாதிகள் என்பது மட்டும் உண்மை ஆகிறது “
[2]தலித் இலக்கியம் எனும் கோட்பாட்டு, மார்சிய அழகீயல் கோட்பாட்டுக்குள்[பாட்டாளி வர்க்க இலக்கிய கோட்பாட்டுக்குள்] உள் அடங்கி தான் உள்ளது என்பதை நான் ஆதாரத்துடன் கூறியபோதும் அதை மறுத்து பேச வினவுக்கு முடியாததுக்கு காரணம் என்ன ?
vinavu://அடுத்து தலித் இலக்கியம் எனும் கோட்பாட்டு விளக்கத்தோடு கூடிய இலக்கிய வகைமையை நாங்கள் ஏற்கவில்லை. பொதுவில் தமிழ் இலக்கியம், வங்க இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்று சொல்வது போல தலித் இலக்கியம் என்று சொன்னால் பிரச்சினையில்லை. மாறாக அதற்கு கோட்பாட்டு விளக்க்த்தை அளித்து வரையறுக்க முன்வந்தால் அதை விட சரியான விளக்கம் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க இலக்கியம் எனும் வகைமைதான் கம்யூனிஸ்டுகளின் இலக்கியக் கொள்கை.//
நண்பர் சரவணன்
உங்களது கருத்துக்களில் சிலவற்றை பல பேர் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. அதற்கு காரணம் அவற்றிற்கு ஒரு Wrong or Right Motive இருக்காது. ஆனால் தற்பொழுது செங்கல்லை வைத்துவிட்டு சோற்றிலே கல் என்று அழிச்சாட்டியம் செய்கிறீர்கள்.
உங்களுக்கு சந்தர்ப்பவாத ,சரணாகதிவாத ,பிழைப்புவாத தலித்தியர் தலைமையை,தலித்தியர் குட்டி முதலாளீத்துவவாதிகளை இனங்கண்டு புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இவர்கள் எழுதுவதை பாட்டாளிவர்க்க இலக்கியம் என்று சொல்லச் சொல்கீறிர்களா?
தலித் இலக்கியம் என்ற சொல்லாடலே மோசடியானது. எனக்கு மட்டும் தனித்து பின்னூட்டமிடாத வினவு, உங்களுக்கு மட்டும் இதை தெளிவாக விளக்கியது இப்படி
“அடுத்து தலித் இலக்கியம் எனும் கோட்பாட்டு விளக்கத்தோடு கூடிய இலக்கிய வகைமையை நாங்கள் ஏற்கவில்லை. பொதுவில் தமிழ் இலக்கியம், வங்க இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்று சொல்வது போல தலித் இலக்கியம் என்று சொன்னால் பிரச்சினையில்லை. மாறாக அதற்கு கோட்பாட்டு விளக்க்த்தை அளித்து வரையறுக்க முன்வந்தால் அதை விட சரியான விளக்கம் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க இலக்கியம் எனும் வகைமைதான் கம்யூனிஸ்டுகளின் இலக்கியக் கொள்கை”
இது சரியானது. ஆன்ந்த் டெல்டும்டேயை தலித்திய சிந்தனையாளர் என்று சமூகம் தனக்குத் தேவையான தீட்டான கண்களோடு பார்க்கிற பொழுது நாம் அரசியலை சரியாக வரையறுத்து எதிரிகளை சரியாக அடையாளம் கண்டு கொள்கிறோம்.
முதலில் இந்த சொல்லாடல்களின் அரசியலை புரிந்துகொள்ள முன்வாருங்கள்; தலித் இலக்கியம், மார்க்சிய அழகியல் என்று ஒன்று கிடையவே கிடையாது என்பது என் துணிபு.
பாட்டாளி வர்க்க இலக்கியம் எனும் வகைமைதான் கம்யூனிஸ்டுகளின் இலக்கியக் கொள்கை என்று சொல்கிற வினவுதான் தமிழ் சூழ்நிலையில் கவர்மெண்ட் பிராமணாவில் இருந்து கோவேறு கழுதைகள் வரை கொண்டு சென்றிருக்கிறது. அதன் அடிப்படை இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா அரசியலா என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
சோ போன்ற எதிரிகள் அ.மா போன்ற பிழைப்புவாதிகள் கருத்துக்களை நைச்சியமாக தந்திரமாக வைக்கிற பொழுது அவர்களிடம் நாம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் சரவணன். சோ, அ.மா போன்று குழந்தை பால்குடிக்கும் பொழுது குறுக்கே புகுந்து முலை அறுக்கிற வகையறாக்கள் அல்லர் தாங்கள். அதனால் தான் அவர்களை எதிரி, பிழைப்புவாதி என்று அடையாளங்கண்டு உங்களை அற்பவாதி என்கிறார் சுகதேவ். என் பார்வையிலும் இது அற்பத்தனம் தான் சரவணன். நேர்மறையில் பரிசீலியுங்கள்.
தென்றல்,
[1]மதவாத ,சாதீய ,போலி தமிழ் தேசியவாத சக்திகள் யார் பீன்னூட்டத்தை கண்டு, எதீர் கொள்ள இயலாமல் வினவில் மாயமாக மறைந்தன என்று வினவு வாசகர்களுக்கு தெரியும்!
[2]தமிழ் சூழலில் ஒட்டு மொத்தமாக அனைத்து தலித்தியர் எழுத்தாளர்களையும் தலித்தியர் குட்டி முதலாளீத்துவவாதிகள் என்று அவதூரு செய்யும் உங்கள் கயமை தனம் மிகவும் வெறுக்க தக்கது.
[i]தமிழில் தலித்திய எழுத்துகளின் முன்னோடி கே.டானியல் ஈழத்துத் தீண்டாமைக் கொடுமைகளைத் தமது எதார்த்த எழுத்துகள் முலம் எதீர் கொண்டது முதல், இன்று ஆசிரியப் பணியாற்றும் பாமா எழுதீய கருக்கு, சங்கதி வரை அனைத்துமே தலித்தியர் குட்டி முதலாளீத்துவவாதிகள் எழுதீய எழுத்துகள் தானா ?
[ii]ம க இ க வினர் கொண்டு உள்ள தலித்தீயர் மக்கள் பற்றிய “கலை இலக்கிய” அறிவு எம்மை மெய் சீலிர்க்க வைக்கின்றது
[3]தலித் இலக்கியம் என்ற சொல் மோசடியானது என்று கூற வரட்டு சித்தாந்தத்தை முன்னெடுக்கும் வரட்டு மார்சியவாதிகளால் மட்டுமே முடியும்
//உங்களது கருத்துக்களில் சிலவற்றை பல பேர் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. அதற்கு காரணம் அவற்றிற்கு ஒரு Wrong or Right Motive இருக்காது. ஆனால் தற்பொழுது செங்கல்லை வைத்துவிட்டு சோற்றிலே கல் என்று அழிச்சாட்டியம் செய்கிறீர்கள்.
உங்களுக்கு சந்தர்ப்பவாத ,சரணாகதிவாத ,பிழைப்புவாத தலித்தியர் தலைமையை,தலித்தியர் குட்டி முதலாளீத்துவவாதிகளை இனங்கண்டு புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இவர்கள் எழுதுவதை பாட்டாளிவர்க்க இலக்கியம் என்று சொல்லச் சொல்கீறிர்களா?
தலித் இலக்கியம் என்ற சொல்லாடலே மோசடியானது//
தென்றல்,
[1]மார்க்சிய அழகியல் கோட்பாட்டுக்குள் தலித் இலக்கிய கோட்பாட்டுகள் உள்ளடங்கி இருப்பதையும் இவை இரண்டுமே பாட்டாளி வர்க்க இலக்கிய கோட்பாட்டுக்குள் தான் உள்ளன என்பதை ம க இ க வுக்கு/தென்றலுக்கு விளக்கி கூற தோழர் மார்க்ஸ் தான் மீண்டும் உயிர் பெற்று தான் வரவேண்டும்
//முதலில் இந்த சொல்லாடல்களின் அரசியலை புரிந்துகொள்ள முன்வாருங்கள்; தலித் இலக்கியம், மார்க்சிய அழகியல் என்று ஒன்று கிடையவே கிடையாது என்பது என் துணிபு.//
நண்பர் சரவணன்,
எதற்காக நிதானம் இழக்க வேண்டும்?
1. உங்களது பதிவின் சில கருத்துக்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். மதவாத தேசியவாத சாதியவாத சக்திகளிடம் உங்களை எக்காரணம் கொண்டும் அடகுவைக்கவில்லை. இழுத்துப் பொறுத்தி அர்த்தம் பார்த்தால் எங்கிருந்து விளக்குவது?
2. உழைப்பின் தன்மையை பரிசிலீத்தால் நானும் குட்டிமுதலாளி வகைக்குள்தான் வருகிறேன். இது கயமைத்தனமா? இல்லை அவதூறா?
3. பாமாவின் கருக்கை மட்டும் தான் நேற்றிலிருந்து பேசிக்கொண்டிருக்கீறிர்கள். கண்டிப்பாக தலித் இலக்கியம் என்ற சொல் மோசடியானது. பாமாவின் கருக்கை பாட்டாளிவர்க்க இலக்கியத்திற்குள் கொண்டுவருகிற பொழுது அவர் படைப்பை தலித் இலக்கியம் என்று சொல்வதும் அவரை தலித் எழுத்தாளர் என்று சொல்வது வளமையான அறுவெறுப்பான மோசடி. தீண்டாமைக்கண்ணாடியின் ஒரு பகுதி இது. அம்பேத்கரில் இருந்து ஆன்ந்தடெல்டும்டே வரை இதுதான் நடந்துகொண்டிருக்கிற நிகழ்வு இது தான். வினவு எது இலக்கியம் என்பதை உங்களிடம் விளக்கியிருக்கிறது.
4. இதைத் தாண்டி ஆளும் வர்க்கத்தை முட்டுக் கொடுத்து மக்களை முட்டுச் சந்தில் நிறுத்தி போராட்டத்தைக் காயடிக்கிற வகையிலான எழுத்துக்களை இலக்கியம் என்று கொண்டாடுவது சரியல்ல.
5. என் பார்வையில் மார்க்சிய அழகியல், தலித் இலக்கியம் என்று கிடையாது. இது ஒடுக்கப்பட்ட மக்களை பிரித்தாள்கிற வரையறைகள். இனி நீங்கள் விளக்குங்கள். சரி எனில் ஏற்றுகொள்வதில் தயக்கம் இல்லை.
தென்றல்
தலித்தியர் மக்கள் இலக்கியம் பற்றி உங்கள் அவதூரு பதிவுகளை பதிவு செய்து கொண்டே இருங்கள் தென்றல். பிற்காலத்தில் அறிவு/பொருளாதார துறைகளில் வீறு கொண்டு எழும் தலித்தியர் சமுகத்தை சேர்ந்த எம் தம்பி, தங்கைகள் உங்களையும்/ம க இ க வையும் சரியாகவே அடையாளம் கண்பர்
தென்றல்,
[1]எதார்தத்தில் 25 % தலித்தியர் சமுக மக்கள் சாதிய அடக்கு முறைக்கு ஆள்பட்டு வாழும் போது அவர்ளில் ஒரு சிலர் படித்து ,வேலை பெற்று வாழ்வாதரத்தை உறுதி செய்து கொண்டே தம் தலித்தியர் சமுகம் எப்படி எல்லாம் சாதீய கொடுமைகளுக்கு ஆட்பட்டு உள்ளது என்பதை இலக்கியம் மூலம் கூறும் போது அதை அவர்கள் தலித்தியர் மக்கள் இலக்கியம் என்று வகைமை படுத்தும் போது, தென்றல்/ம க இ க தலித் இலக்கியம் என்ற சொல் மோசடியானது என்று கூறும்போது கேட்பவன் கேட்பவன் கேன பயலாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடியுமாம் என்ற முதீர் மொழி தான் நினைவுக்கு வருகிறது
தென்றல்,
மார்க்ஸ், லெனின், மாசேதுங் இவர்கள் இலக்கியத்தை எப்படி அவதனித்தார்கள் , அழகியலை பற்றீய பாட்டாளி வர்க்க பார்வை என்ன என்று மக்கள் கலை இலக்கிய கழகத்துக்கு [ம க இ க]/தென்றல்ளுக்கு எந்த அறிவும்/பார்வையும் இல்லை எனில் நான் விளக்க தயார்
தென்றல்//என் பார்வையில் மார்க்சிய அழகியல், தலித் இலக்கியம் என்று கிடையாது. இது ஒடுக்கப்பட்ட மக்களை பிரித்தாள்கிற வரையறைகள். இனி நீங்கள் விளக்குங்கள். சரி எனில் ஏற்றுகொள்வதில் தயக்கம் இல்லை.//
சரவணன்,
தலித் இலக்கியங்களை அறிமுகம் செய்யலாமே என்று பொதுவாக நீங்கள் கேட்டிருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக சினிமா எழுதவெல்லாம் நேரம் இருந்து இதை ஏன் எழுதவில்லை, உடனே சுய விமரிசனம் செய்யுங்க்ள என்று வாதம், வழக்காடல், விசாரணை, கருத்துரிமை எதுவிமின்றி தீர்ப்பு கொடுத்தது நீங்கள்தான். இது என்ன அணுகுமுறை?
உங்கள் அணுகுமுறையை வைத்துதான் அந்த பதில் உங்களுக்கு எழுதப்பட்டது. தலித் மக்களுக்காகவும்தான் சினிமா விமரிசனம் எழுதப்படுகிறது. சொல்லப்போனால் இலக்கியத்தை விட சினிமாதான் அதிக செல்வாக்கோடு இருக்கிறது என்பதை உணர்த்தவும் அப்படி எழுதப்பட்டது.
தலித் இலக்கியம் மட்டுமல்ல, படிக்க வேண்டிய பிற முற்போக்கு இலக்கியங்களையெல்லாம் வினவு படிக்க கூடாது என்று ஒதுக்குவதாக அவதூறு பிரச்சாரத்தை வலிந்து செய்கிறீர்கள்! அரசியல் வேலைத்திட்டத்தில் கலை இலக்கியங்களுக்கு முதல் இடம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்பது கூட உங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் நாலு நாவல்கள் படித்து விட்டால் உங்களுக்கு முக்கியம் என்று தோன்றிவிட்டால் உலகமே அதை அங்கீகரிக்க வேண்டும் என்பது நிச்சயம் மேட்டிமைத்தனமாக அணுகுமுறை. நீங்கள் படித்ததை மற்றவரும் படிக்கலாம் என்று ஆலோசனை கூறலாமே தவிர, இதையெல்லாம் ஏன் நீ படிக்கவில்லை என்று குதிப்பது சரியா? தலித் மக்கள் கூட இத்தகைய இலக்கியங்களை படிக்கும் வாய்ப்பற்றவர்கள். அதனால் அவர்களும் அதற்கு எதிரானவர்கள் என்று கத்துவீர்களா?
பிறகு தலித் இலக்கியம், பாட்டாளி வர்க்க இலக்கியம், மார்க்சிய அழகியல் எது குறித்தும் உங்களுக்கு எதுவும் தெரியாது. தெரியாது என்பதை புரியுமளவு உங்களுக்கு பணிவோ, கற்கும் ஆர்வமோ கிடையாது. மாறாக அதை யாராவது சுட்டிக் காட்டினால் உடனே கம்பையெடுத்து தீர்ப்பு கொடுக்க துடிக்கிறீர்கள்!
தலித் இலக்கியம் குறித்த விவாதமெல்லாம் 90களில் நடந்து இப்போது யாரும் அதை தூக்கி பேசுவதில்லை. காரணம் தலித் அரசியலின் தோல்விதான். பாட்டாளி வர்க்க இலக்கியம் தனது அரசியல் ஆசானாக மார்க்சியத்தை வைத்துக் கொண்டு கலை முயற்சிகளை செய்து பார்க்கிறது. தலித் இலக்கியத்தின் அந்த அரசியல் ஆசான் யார்? தலித் அரசியல் என்றால் அதைப் பற்றித்தான் இந்த கட்டுரை விளக்குகிறது. அது முடிவுக்கும் வந்து விட்டது. இந்த பின்னணியில்தான் தலித் இலக்கியம் என்ற வரையறையை பொதுவாக ஏற்கலாமே அன்றி கோட்பாடாக ஏற்க முடியாது என்று சொன்னோம்.
உடனே இதை வைத்து தலித் இலக்கியத்திற்கு வினவும், ம.க.இ.கவும் எதிரி, படிக்க கூடாது என்று சொல்வதாக அவதூறு செய்யத் துடிக்கும் அளவுக்கு அதை புரிந்து கொள்ளும் பொறுமை உங்களிடத்தில் இல்லை. எதிரியாக இருந்தாலும் நமது கருத்து அவர்களை சிந்திக்கத் தூண்ட வேண்டுமே அன்றி, ஒத்த கருத்துள்ளவர்களே உங்களது கருத்தை பார்த்து எதிரியாகிவிடக் கூடாது. உங்களது விவாத முறை இதைத்தான் சாதிக்கிறது.
இதை புரிந்து கொள்வதும், புரியாததும் உங்கள் இஷ்டம்.
வினவு,
//தலித் இலக்கியங்களை அறிமுகம் செய்யலாமே என்று பொதுவாக நீங்கள் கேட்டிருந்தால் பிரச்சினை இல்லை. மாறாக சினிமா எழுதவெல்லாம் நேரம் இருந்து இதை ஏன் எழுதவில்லை, உடனே சுய விமரிசனம் செய்யுங்க்ள என்று வாதம், வழக்காடல், விசாரணை, கருத்துரிமை எதுவிமின்றி தீர்ப்பு கொடுத்தது நீங்கள்தான். இது என்ன அணுகுமுறை?
உங்கள் அணுகுமுறையை வைத்துதான் அந்த பதில் உங்களுக்கு எழுதப்பட்டது. தலித் மக்களுக்காகவும்தான் சினிமா விமரிசனம் எழுதப்படுகிறது. சொல்லப்போனால் இலக்கியத்தை விட சினிமாதான் அதிக செல்வாக்கோடு இருக்கிறது என்பதை உணர்த்தவும் அப்படி எழுதப்பட்டது. //
[1]நேற்று இரவு வினவு எனக்கு கொடுத்த பதில்களையும் , அதில் உள்ள அரசியல் விமர்சன அவதூருகளையும் இன்று நான் வினவுக்கு எழுதீய பதில்களில் குறிப்பிட்டு இருக்கிறேன். படிக்கவும். இங்கு வாதம், வழக்காடல், விசாரணை நடை பெறும் போதே அவதூராக பேசியது வினவு,சுகதேவ் இருதீயில் தென்றல் என்பதை வினவு நேர்மையுடன் உணர வேண்டும்.
வினவு,
[1]எனக்கு தலித் இலக்கியம், பாட்டாளி வர்க்க இலக்கியம், மார்க்சிய அழகியல் பற்றி முழுமையாக எல்லாம் ஒன்றும் தெரியாது என்றே ஒரு வாதத்துக்கு வைத்து கொள்வோம்; ஆனால் மக்கள் கலை இலக்கிய கழகத்துக்கு [ம க இ க] அவற்றை பற்றிய அறிவு சிறு துளி கூட இல்லையே !
[2]நான் கோரியது தலித் இலக்கியம் பற்றி விமர்சனம் செய்யுங்கள் என்று !
//நீங்கள் நாலு நாவல்கள் படித்து விட்டால் உங்களுக்கு முக்கியம் என்று தோன்றிவிட்டால் உலகமே அதை அங்கீகரிக்க வேண்டும் என்பது நிச்சயம் மேட்டிமைத்தனமாக அணுகுமுறை. நீங்கள் படித்ததை மற்றவரும் படிக்கலாம் என்று ஆலோசனை கூறலாமே தவிர, இதையெல்லாம் ஏன் நீ படிக்கவில்லை என்று குதிப்பது சரியா? தலித் மக்கள் கூட இத்தகைய இலக்கியங்களை படிக்கும் வாய்ப்பற்றவர்கள். அதனால் அவர்களும் அதற்கு எதிரானவர்கள் என்று கத்துவீர்களா?
பிறகு தலித் இலக்கியம், பாட்டாளி வர்க்க இலக்கியம், மார்க்சிய அழகியல் எது குறித்தும் உங்களுக்கு எதுவும் தெரியாது. தெரியாது என்பதை புரியுமளவு உங்களுக்கு பணிவோ, கற்கும் ஆர்வமோ கிடையாது. மாறாக அதை யாராவது சுட்டிக் காட்டினால் உடனே கம்பையெடுத்து தீர்ப்பு கொடுக்க துடிக்கிறீர்கள்!//
வினவு,
தலித்தியர் மக்கள் எவ் வர்க்கமோ அவ் வர்கத்து ஆசான் யாரோ அவரே தான் தலித்தியர் மக்களீன் அரசியல் ,பொருளாதார , சமுக விடுதலைகும் வழிகாட்டும் ஆசான் . புரியவில்லை வினவு ? ஒடுக்க படும் தலித்தியர் மக்கள் பாட்டாளி வர்க்கம். அவர்கள் அரசியல் ,பொருளாதார , சமுக விடுதலைக்கு வழிகாட்டுபவர்கள் தோழர் மார்க்ஸ்
//தலித் இலக்கியம் குறித்த விவாதமெல்லாம் 90களில் நடந்து இப்போது யாரும் அதை தூக்கி பேசுவதில்லை. காரணம் தலித் அரசியலின் தோல்விதான். பாட்டாளி வர்க்க இலக்கியம் தனது அரசியல் ஆசானாக மார்க்சியத்தை வைத்துக் கொண்டு கலை முயற்சிகளை செய்து பார்க்கிறது. தலித் இலக்கியத்தின் அந்த அரசியல் ஆசான் யார்? தலித் அரசியல் என்றால் அதைப் பற்றித்தான் இந்த கட்டுரை விளக்குகிறது. அது முடிவுக்கும் வந்து விட்டது. இந்த பின்னணியில்தான் தலித் இலக்கியம் என்ற வரையறையை பொதுவாக ஏற்கலாமே அன்றி கோட்பாடாக ஏற்க முடியாது என்று சொன்னோ//
நான் வினவுக்கு தரும் advice அதே தான்
//எதிரியாக இருந்தாலும் நமது கருத்து அவர்களை சிந்திக்கத் தூண்ட வேண்டுமே அன்றி, ஒத்த கருத்துள்ளவர்களே உங்களது கருத்தை பார்த்து எதிரியாகிவிடக் கூடாது. உங்களது விவாத முறை இதைத்தான் சாதிக்கிறது.//
தென்றல், தலித் இலக்கியத்தை பொதுவாக ஏற்கலாம், கோட்பாட்டு அடிப்படையில் பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கு மாற்றாக முன் வைக்க முடியாது என்பதால் தலித் இலக்கியத்தை மோசடி என்று கூறுவது சரியாக இருக்காது. தலித் அரசியலின் பிரச்சினைகள், போதாமைகள் தலித் இலக்கியத்திற்கும் உண்டு என்றாலும் கலை என்ற வடிவில் அவை ஒடுக்கப்ப்ட்ட மக்களின் வாழ்வை வாசகரிடம் உரிய முறையில் கொண்டு சேர்க்கும் போது அதற்குரிய பங்களிப்பை செய்கிறது. இங்கே சரவணன் எதிர் மறையாக விவாதிப்பதால் அவருக்கு புரியும் விதத்தில் அப்படி அழுத்தம்கொடுத்து எழுத வேண்டியதாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது தலித் இலக்கியம் குறித்த பிரச்சினைகளை தனி பதிவாக வெளியிடுகிறோம்.
வினவு,
நான் படித்த நூல்களையும் அது முன்வைத்த அரசியலையும் ஏன் வாசிக்கப்பட வேண்டும் என்பதையும் சரவணுக்கு என் பார்வையில் முதல் பின்னூட்டத்திலேயே வைத்திருக்கிறேன். ஆனால் எதுவும் எடுபடாமல் இந்த வார்த்தையில் வந்து நிற்கிறது. கருத்துக்களை வாசித்திருந்தாலே என் கருத்து விவாதத்தில் மேம்படுத்தப்பட்டு நானும் திருத்தி கொள்ள வாய்ப்பாக இருந்திருக்கும்.
தலித் இலக்கியம் என்பதை யார் வரையறை செய்கிறார்களோ அவர்களின் பார்வையில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த விசயத்தில் நான் ஜீதானையும் ஊரும் சேரியையும் செடலையும் கோவறு கழுதைகளையும் வாசிக்கிற பொழுது போராட்டங்களின் கீற்றுகளை அறிந்து கொள்கிறேன். ஆனால் அறிவுப்புலம் இதை தலித் இலக்கியமாக பார்க்கிற பொழுது சாதிய கண்ணோட்டம் என்ற பார்வை மட்டுமே மிஞ்சுவதாக கருதுகிறேன். அதவாது Genere என்ற வகைகளுக்குள் வைத்துப் பார்க்கப்படுவதை மோசடி என்கிறேன்.
சொல்லாடலில் முத்திரை குத்துவதில் தான் எனக்கு பிரச்சனையே தவிர ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளைப் புறக்கணிப்பதை நான் அவதூறு செய்யவில்லை.
தென்றல்,
[1]தாய் மடியில் இருந்து தாயிடம் முலை பால் அருந்திய நினைவுகள் எமக்கு உள்ளன ;என் மகன் அவன் தாய் மடியில் இருந்து அவன் தாயிடம் முலை பால் குடிப்பது கண்டு மகிவதும் உண்டு.
[2] ஆனால் தாய் முலை அறுக்கும் அற்ப தனம் தங்களுக்கு ஒரு வேலை இருப்பின் இலங்கையில் ராஜா பட்சே இருக்கின்றான் அவனுடன் நீங்களும் சுகதேவ்வும் போய் சேர்ந்து கொள்ளலாம்
//சோ போன்ற எதிரிகள் அ.மா போன்ற பிழைப்புவாதிகள் கருத்துக்களை நைச்சியமாக தந்திரமாக வைக்கிற பொழுது அவர்களிடம் நாம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் சரவணன். சோ, அ.மா போன்று குழந்தை பால்குடிக்கும் பொழுது குறுக்கே புகுந்து முலை அறுக்கிற வகையறாக்கள் அல்லர் தாங்கள். அதனால் தான் அவர்களை எதிரி, பிழைப்புவாதி என்று அடையாளங்கண்டு உங்களை அற்பவாதி என்கிறார் சுகதேவ். என் பார்வையிலும் இது அற்பத்தனம் தான் சரவணன். நேர்மறையில் பரிசீலியுங்கள்.//
இந்தக் கருத்தை மீண்டும் பரிசிலீயுங்கள்; இது உங்களைப் பற்றி கூறியதா என்று; நிதானமிழந்து உரையாற்றினால் உங்களுடன் விவாதிப்பது எங்கனம் இயலும்?
\\சோ போன்ற எதிரிகள் அ.மா போன்ற பிழைப்புவாதிகள் கருத்துக்களை நைச்சியமாக தந்திரமாக வைக்கிற பொழுது அவர்களிடம் நாம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் சரவணன். சோ, அ.மா போன்று குழந்தை பால்குடிக்கும் பொழுது குறுக்கே புகுந்து முலை அறுக்கிற வகையறாக்கள் அல்லர் தாங்கள். அதனால் தான் அவர்களை எதிரி, பிழைப்புவாதி என்று அடையாளங்கண்டு உங்களை அற்பவாதி என்கிறார் சுகதேவ். என் பார்வையிலும் இது அற்பத்தனம் தான் சரவணன். நேர்மறையில் பரிசீலியுங்கள்.\\
தென்றல்,
நிதானம் இழந்தவர் யார் என்பதை நிங்களும் சுகதேவ் அவர்களும் அவர் அவர் கருத்துகளை மீண்டும் படிக்கவும்
[1]வினவில் பீன்னூட்டம் இடும் மதவாத ,சாதீய ,போலி தமிழ் தேசியவாத சக்திகள் எமக்கும் ,வினவுக்கும் நடக்கும் இந்த விவாதத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைய தேவை இல்லை
[2]ம க இ க தோழர்கள் தம்முள் கலந்து பேசி
“ஆம் தலித்தியர் இலக்கியங்கள் எமது பாட்டாளி வர்க்க இலக்கியங்கலே ; ஆம் தலித்தியர் எம் பாட்டாளி வர்க்க மக்கள் தான்”
என்று முடிவு செய்வார்கள் எனில் அத்துடன் இவ் விவாதம் முற்று பெற்று விடும்.
தோழர் சரவணன்,
தலித்தியரில் உள்ள உழைக்கும் மக்கள் அனைவரும் பாட்டாளி வர்க்கத்தினரே, இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லையென்றே எண்ணுகிறேன். மேலும் வார்த்தையளவில் தலித் இலக்கியம் என்று ஒன்று இருந்தால் அது தலித்களின் வாழ்விற்கு எந்த விடியலை முன் நிறுத்துகிறது என்பது மிக முக்கியமானது. அந்த வகையில் தலித் இலக்கியங்கள் பாட்டாளி வர்க்க இலக்கியமா என்பது கேள்விக்குறியே, ஒரு இலக்கியம் எந்த வகை தீர்வை முன் வைக்கிறது என்பதைப் பொருத்தே அதன் வகையினை தீர்மானிக்க முடியும்,
தோழர் வினவு,
தோழர்களிடம் வன்மம், எகத்தாளம் என்ற வார்த்தைகளை முடிந்தவரை பயன்படுத்த வேண்டாம் என்று உரிமையுடன் தெரிவிக்கிறேன்.
kalashnicov,
வன்மம், எகத்தாளம் என்ற வார்த்தைகளை பயன் படுத்தியதே வினவு தானே !
நானும் வினவு தோழர்களைத் தான் கூறினேன், நன்றி.
kalashnicov,
[1]தென்றல் கூறுவதை கவனியுங்கள். தலித்தியர் சமுகத்தை சேராத நான் கல்லூரிவரை சென்று படிப்பதும் , அதன் பின் வேலையில் சேருவதிலும் ஏதேனும் சமுக தடைகள் உள்ளனவா ? ஆனால் தலித்தியர் சமுகத்தை சேர்ந்த எம் தம்பி, தங்கைகளுக்கு அத்தகைய அனுகூலங்கள் சமுக ,பொருளாதார அளவில் இன்றும் அமைந்து உள்ளனவா ?
[2] அத் தமிழக சூழலீல் படித்து பட்டம் பெற்று வரும் தலித்தியர் சமுகத்தை சேர்ந்த எம் தம்பி, தங்கைகள் தம் வாழ்வாதரத்தை உறுதி செய்து கொண்டே தம் தலித்தியர் சமுகம் எப்படி எல்லாம் சாதீய கொடுமைகளுக்கு ஆட்பட்டு உள்ளது என்பதை இலக்கியம் மூலம் கூறும் போது அவர்களை தென்றல் தூற்ருவது ஏன் ?
[3]கே.டானியல் முதல் பாமா வரை[விதிவீலக்காக வி.சி ரவி குமார் ] அனைத்து தலித்தியர் இலக்கிய எழுத்தாளர்களுமே தம் வாழ்வீயல் துன்பங்களை பதிவு செய்வதும் அதனை தலித்தியர் இலக்கியமாக வகைமை படுத்துவதும் அவர்கள் உரிமை. அதனை ம க இ க போன்ற மா லெ அமைப்புகள் ஊக்குவிக்க வேண்டும் அல்லவா ?
தென்றல்//உங்களுக்கு சந்தர்ப்பவாத ,சரணாகதிவாத ,பிழைப்புவாத தலித்தியர் தலைமையை,தலித்தியர் குட்டி முதலாளீத்துவவாதிகளை இனங்கண்டு புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இவர்கள் எழுதுவதை பாட்டாளிவர்க்க இலக்கியம் என்று சொல்லச் சொல்கீறிர்களா? //
தோழர் சரவணன்,
பாட்டாளி வர்க்க இலக்கியம் என்பது அனைத்து சமூகத்தின் உழைக்கும் மக்களின் விடியலுக்குமானதுதான், மேலும் இதிலிருந்து தலித் இலக்கியம் எவ்வாறு வேறுபட்டது என்றும், அது தலித் சமூகத்தின் விடியலுக்காக எந்த வகையில் பங்காற்றுகிறது என்பதையும் தெரிவியுங்கள். தலித்களின் துயரம் மற்ற சாதி உழைக்கும் மக்களின் துயரங்களை விட மிகுதியானதுதான். ஆனால் தலித் இலக்கியம் இத்துயரங்களிலிருந்து எப்படி வெளிக்கொணரும், இயங்கியல் பார்வையில் அதற்கான சாத்தியக் கூறுகளாக எதை கொண்டுள்ளன? பாட்டாளி வர்க்க இலக்கியங்கள் சாதியை மறப்பீர், வர்க்கமாய் ஒன்று திரள்வீர் என்பதை அடிப்படையாகக் கொண்டது. தலித் இலக்கியம் தலித் மக்களின் விடியலை, தனியொரு சக்தியாய், தலித்களை மட்டுமே கொண்டுவரும் எனில் அது உங்களுக்கு சாத்தியம் என்று தோன்றுகிறதா? இதில் மற்ற சமூக மக்களையும் கொண்டிருந்தால், தலித் இலக்கியங்கள் மற்ற சமூகங்களிலுமுள்ள உழைக்கும் மக்களின் உயர்வுக்கான கோட்பாடுகளையும் கொண்டிருந்தால் அதுவே பாட்டாளி வர்க்க இலக்கியம் எனப்படும்.
kalashnicov,
[1]முதலில் இங்கு பீன்னூட்டம் ம க இ க தோழர்கள் தமிழக சூழலீல் தலித்தியர் இலக்கியம் பற்றி விவாதித்து பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். வினவு ,தென்றல்,நீங்கள் மற்றும் பலர் இடும் பீன்னூட்டங்கள் தலித்தியர் இலக்கியம் பற்றிய புரிதலில் எவ்வாறு வேறுபடுகின்றீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை படியுங்கள்
[2]தொடர் வேலை ,மற்றும் தொடர் வினவுதள விவாதம் காரணமாக மிக்க உடல் சோர்வாக உள்ளேன்.எனவே நாளை அதிகாலை உங்கள் கேள்விகளுக்கு பதில் அளீக்கின்றேன்
ம க இ க தோழர்ளீன் முரண்பாடுகளும் ,அவதூருகளும்
வினவுக்கும் தென்றலுக்கும் தலித்தியர் இலக்கியம் பற்றிய தன் கருத்தாக்கத்தில் உள்ள முரண்பாடு
தலித் இலக்கியத்தை மோசடி என்று கூறும் தென்றலுக்கு வினவு கூறும் பதிலை:
“தென்றல், தலித் இலக்கியத்தை பொதுவாக ஏற்கலாம், கோட்பாட்டு அடிப்படையில் பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கு மாற்றாக முன் வைக்க முடியாது என்பதால் தலித் இலக்கியத்தை மோசடி என்று கூறுவது சரியாக இருக்காது. தலித் அரசியலின் பிரச்சினைகள், போதாமைகள் தலித் இலக்கியத்திற்கும் உண்டு என்றாலும் கலை என்ற வடிவில் அவை ஒடுக்கப்ப்ட்ட மக்களின் வாழ்வை வாசகரிடம் உரிய முறையில் கொண்டு சேர்க்கும் போது அதற்குரிய பங்களிப்பை செய்கிறது. இங்கே சரவணன் எதிர் மறையாக விவாதிப்பதால் அவருக்கு புரியும் விதத்தில் அப்படி அழுத்தம்கொடுத்து எழுத வேண்டியதாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது தலித் இலக்கியம் குறித்த பிரச்சினைகளை தனி பதிவாக வெளியிடுகிறோம்.”
அதற்கு தென்றல் கூறும் எதீர் வினை :
நான் படித்த நூல்களையும் அது முன்வைத்த அரசியலையும் ஏன் வாசிக்கப்பட வேண்டும் என்பதையும் சரவணுக்கு என் பார்வையில் முதல் பின்னூட்டத்திலேயே வைத்திருக்கிறேன். ஆனால் எதுவும் எடுபடாமல் இந்த வார்த்தையில் வந்து நிற்கிறது. கருத்துக்களை வாசித்திருந்தாலே என் கருத்து விவாதத்தில் மேம்படுத்தப்பட்டு நானும் திருத்தி கொள்ள வாய்ப்பாக இருந்திருக்கும். தலித் இலக்கியம் என்பதை யார் வரையறை செய்கிறார்களோ அவர்களின் பார்வையில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த விசயத்தில் நான் ஜீதானையும் ஊரும் சேரியையும் செடலையும் கோவறு கழுதைகளையும் வாசிக்கிற பொழுது போராட்டங்களின் கீற்றுகளை அறிந்து கொள்கிறேன். ஆனால் அறிவுப்புலம் இதை தலித் இலக்கியமாக பார்க்கிற பொழுது சாதிய கண்ணோட்டம் என்ற பார்வை மட்டுமே மிஞ்சுவதாக கருதுகிறேன். அதவாது Genere என்ற வகைகளுக்குள் வைத்துப் பார்க்கப்படுவதை மோசடி என்கிறேன்.சொல்லாடலில் முத்திரை குத்துவதில் தான் எனக்கு பிரச்சனையே தவிர ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளைப் புறக்கணிப்பதை நான் அவதூறு செய்யவில்லை.
[1]வினவும்,தென்றலும் தலித் இலக்கியத்தீன் மீது கொண்டு உள்ள கருத்தாக்கத்தில் முரண்படுவது ஒரு பக்கம் இந்தாலும் அதற்கு காரணம் சரவணன் தான் என்று கூறுவது கொள்கை நேர்மை அற்ற பித்தலாட்டம் அல்லவா ?
சரவணன், பின்னூட்டங்களில் உரையாடலை விரிவு படுத்தும் வண்ணம் பங்கேறுங்கள். ஒரே கருத்தை வெட்டியோ, ஒட்டியோ, திரும்ப திரும்ப போட்டோ, படி,படி என்று வற்பறுத்துவதோ உரையாடலை ஆர்வத்துடன் படிக்கும் வாசகருக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து பலரும் உங்களுக்கு சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்துகிறோம். இனி அத்தகைய மறுபதிப்பு வேலைகளை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். புதிதாக கருத்து கூறுவதற்கு, படியுங்கள், யோசியுங்கள், அப்படி இருந்தால் தாராளமாக பதிவு செய்யுங்கள். இதற்கு பதிலாக போட்டதையே போடுவது சரியாக இருக்காது. புரிந்து கொள்வீர்கள். நன்றி
//தலித்களின் துயரம் மற்ற சாதி உழைக்கும் மக்களின் துயரங்களை விட மிகுதியானதுதான். ஆனால் தலித் இலக்கியம் இத்துயரங்களிலிருந்து எப்படி வெளிக்கொணரும், இயங்கியல் பார்வையில் அதற்கான சாத்தியக் கூறுகளாக எதை கொண்டுள்ளன? //
தலித் இலக்கியர்கள் என்பவர்கள் தலித் மக்கள் துயரை மகிழ்ச்சியாக பகிரும் கதைசொல்லிகள் என்கிறார் இர்ஃபான் ஹபிப். (Dalit writers are the happy narrators of Dalit sufferings – Irfan Habib.)
Sukdev,
[1]இந்திய மார்க்சிஸ்ட் வரலாற்றாசிரியர் என்று புத்திஜீவிகளால் அறியப்படுகின்ற இர்பான் ஹபீப் [Irfan Habib], ஒரு வேலை
“தலித் இலக்கியர்கள் என்பவர்கள் தலித் மக்கள் துயரை மகிழ்ச்சியாக பகிரும் கதைசொல்லிகள்[Dalit writers are the happy narrators of Dalit sufferings] ”
என்று கூறி இருப்பார் எனில் அதே கருத்து
“மார்சீய[பாட்டாளி வர்க்க] இலக்கியர்கள் என்பவர்கள் பாட்டாளி மக்கள் துயரை மகிழ்ச்சியாக பகிரும் கதைசொல்லிகள்” என்ற
பொருளையும் தரும் என்பதை எவ்வித விமர்சனமும் இல்லாமல் அவருடைய கருத்தை இங்கு பதித்த திரு சுகதேவ் அவர்கள் உணர வேண்டும
அம்பேத்தாரின் சிந்தனைகளின் இருந்து ஒரு பகுதி :
மார்க்சியத்தின் மூலவேரான உபரி மதிப்பு கோட்பாடு சரியானதாக இருந்திருந்தால், பாட்டாளிவர்கம் தொடர்ந்து பரம் எழ்மையில் அமுக்கப்பட்டு, இறுதியல் முதலாளித்துவம் உள்முரண்பாடுகளால அழிந்து, சோசியலிசம் தானே உருவாகும் என்ற டாஸ் கேபிடலின் கருத்தை மறுத்து எழுதுகிறார் :
http://www.ambedkar.org/ambcd/20.Buddha%20or%20Karl%20Marx.htm#a3
…it is necessary to note how much of this original corpus of the Marxian creed has survived; how much has been disproved by history and how much has been demolished by his opponents.
The Marxian Creed was propounded sometime in the middle of the nineteenth century. Since then it has been subjected to much criticism. As a result of this criticism much of the ideological structure raised by Karl Marx has broken to pieces. There is hardly any doubt that Marxist claim that his socialism was inevitable has been completely disproved. The dictatorship of the Proletariat was first established in 1917 in one country after a period of something like seventy years after the publication of his Das Capital the gospel of socialism. Even when the Communism—which is another name for the dictatorship of the Proletariat—came to Russia, it did not come as something inevitable without any kind of human effort. There was a revolution and much deliberate planning had to be done with a lot of violence and blood shed, before it could step into Russia. The rest of the world is still waiting for coming of the Proletarian Dictatorship. Apart from this general falsification of the Marxian thesis that Socialism is inevitable, many of the other propositions stated in the lists have also been demolished both by logic as well as by experience. Nobody now I accepts the economic interpretation of history as the only explanation of history. Nobody accepts that the proletariat has been progressively pauperised. And the same is true about his other premises.
What remains of the Karl Marx is a residue of fire, small but still very important…
K.R.Athiyaman,
No one can predict the future exactly. Neither Marx nor Ambedkar made such a claim. The thoughts of Marx are a stage in the evolution of humanity. His thoughts have sown the seeds of further evolution. Wait and see.
தலித் இலக்கியத்தின் வீழ்ச்சி பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னரே தலித் அறிவுஜீவிகள் கூடி விவாதித்தார்கள். புதிதாக நாவல்கள், கவிதைகள் எழுதப்படாதது குறித்த கவலையில் கூட்டப்பட்ட கூட்டம் அது. இந்த செய்தி அப்போது ‘இந்தியா டுடேயில்’ வெளிவந்தது. அந்த நிகழ்ச்சி குறித்த செய்திப்பதிவின் முழு விபரமும் இப்போது நினைவில் இல்லை. எனினும் மையமாக ஒரு விஷயம் என்ன விவாதிக்கப்பட்டது என்றால், தலித் இலக்கியங்கள் protest literature — ஆக மட்டும் இருப்பதாலே அதனை எழுதுபவர்களால் தொடர்ந்து படைப்புகளை கொண்டு வரமுடியவில்லை என்றும் எனவே தலித் படைப்பாளிகள் தலித் அழகியலைப் பழக கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த தீர்வு இவர்களுக்கு தமது நடைமுறை பிரச்சினைகள் சார்ந்து இயல்பாக எழுந்த ஒன்றல்ல. எலைன் ஷோஆல்டர் என்ற பிரபல பெண்ணியவாதி இதனை குறித்து பேசியுள்ளார். பெண்ணியம் எதிர்ப்பு இலக்கிய நிலையிலிருந்து பெண்ணீய அழகியலுக்கு மாறியது பற்றிய கட்டுரை அது. இங்கே, புரிந்து கொள்ள வேண்டிய அம்சம் என்னவென்றால், மேலை நாடுகளில் பெண்ணிய இலக்கியங்கள் பெண்ணீய அழகியலுக்கு சமூகமாற்றத்துடன் கைகோர்த்து நடந்தது. இங்கே தலித் மக்கள் மீது வன்கொடுமைகள் இப்போதும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதன் முற்போக்கு பாத்திரமான protest தன்மையை இழக்க நமது தலித்திய அறிவாளிகள் கோரினார்கள்.
தலித்திய இலக்கியங்களுக்கு அழகியல் அம்சம் தேவையில்லை என்று வாதிடவில்லை. தலித் இலக்கியங்கள் கண்ட தேக்க நிலைக்கு காரணம் என்ன? ஒன்று, தமது மாறிய வர்க்க நிலைமை. எனவே தமது இளமைக்கால அனுபவங்கள் தீர்ந்து போகும் போது படைப்புத் திறன் நீர்த்துப் போகிறது. மேலும் தரமான படைப்புகள் வருவதற்கு உகந்த சமூக நிலைமைகள் வேண்டும். இது போன்ற சிக்கல் ஐரோப்பாவில் உருவான போது மேத்யூ அர்னால்ட் என்ற விமர்சகன் சொன்னான். ‘கவலைப்படாதீர்கள்! உங்கள் முன்னே இருக்கும் பேரிலக்கியங்களை படியுங்கள். உங்கள் நெஞ்சில் பேரிலக்கியங்களை அடைகாத்து கொண்டிருங்கள்; அது ஒரு நாள் சிறகை விரிக்கும்’ என்றான்.
தலித் இலக்கியர்கள் படிக்க வேண்டிய பேரிலக்கியங்கள் என்ன? மார்க்சிய மூல நூல்களும், அம்பேத்கரிய நூல்களும் அன்றி வேறென்ன? யார் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டியவர்கள் என்ற கேள்விக்கான விடையும் கிடைக்கும்.
வாழ்நாள் முழுவதும் பட்டினிகிடந்து சாவதைவிட கொடுரமானது சாதிப்பிரிவினை.இதில் நல்லசாதி கெட்டசாதியென்று ஒன்றில்லை.
இது ஆயிரம்மாண்டு காலம் தொடர்ந்து வருகிற ஆண்டான் அடிமை முறை என்பதே அப்பட்டமான உண்மை.
இன்றும் தலித்நீதிபதி தலித்வக்கீல் தலித்போலீஸ்காரர் தலித்குமாஸ்தா என்பவர்கள் இன்னும் அவமானப் பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். கல்வியறிவுள்ளவர்களிடையே இந்த நிலை என்றால் பாமரமக்களின் கதியை விபரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
பலிகொடுக்கிற ஆடுகளுக்கு கூடா மாலைபோட்டு பொட்டுவைத்து கெளரப்படுத்தப்படும். அவர்களுக்கு அந்த மரியாதை கூடக்கிடைப்பதில்லை.
“நோய் எதுவென்பதை அறிந்தால் மட்டும் போதும் அதை சுகப்படுத்தவதில் பாதிதீர்ந்துவிட்டது என கருதலாம்” என்றான் ஒரு புரட்சியாளன்.
முதலாவது தலித்தலைவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.இவர்கள் போராடுவது சாதியமைப்பு முறையை ஒழிப்பதற்காக அல்ல இந்த அமைப்புமுறையை நிரந்தரமாக்குவதற்காக…இவர்களே தொழிலாளர் அமைப்புகளில் இருந்து வேறுபடுத்தி தனிமைப் படுத்து வைத்திருக்கிறார்கள். இவர்களே முதல்துரோகிகள்.நாளை இந்திய தொழிலாளவர்கத்தின் முன்ணணி படையாக இவர்கள் மாறுவர்கள் என்பதை கடுகளவும் எண்ணிப் பார்க்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
சாதியமைப்பு முறையை ஒழிப்பதற்கு மூண்று அம்சங்கள் பிரதானமாக தேவைப் படுகிறது. (1)கட்டாய கல்வி பாடசாலை செல்வது மறுக்கப்படும் பட்சத்தில் இது தண்டணைக் குரிய குற்றமாக கருதப்பட வேண்டும்.(2) சாதிக்குரிய தொழில் செய்வது தடைசெய்யப் படவேண்டும்.அதாவது தொழில் கல்வியை உருவாக்க வேண்டும்..இல்லை கட்டாயமாக்கப்படல் வேண்டும்.சட்டமாக்கப்படல் வேண்டும்.(3) சாதியின் பெயரில் எந்த அமைப்பும் அரசியல்கட்சிகளும் இருக்ககூடாது தடை செய்யல்படல் வேண்டும்.
இதுவே நோய்கான முக்கிய அறிகுறிகள். இதை பத்தாம் போக்கு பகுத்தறிவாளிகளோ காங்கரஸ்கட்சிகார்களோ மோடியோ ஒரு போதும் நிறைவேற்ற போவதில்லை.
இதை-இந்த கனவை இந்திய தொழிலாளிவர்கமே நிறைவேற்றி வைக்க முடியும். அதற்கான காலங்கள் எம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன.எதிர்பாராத சம்பவங்கள் கூடா சிலவேளைகளில் ஏற்படுகிறது என கருதுவீர்களானால் அதுவும் திருப்தியானதே!.
சரவணன் அவர்களுக்கு,
ஒரு வாசகன் என்ற முறையில் சகவாசகரின் கருத்தை பரிசீலியுங்கள். பின்னூட்டம் இடுகிறவரின் கருத்தை வினவின் கருத்தாக புரிந்துகொள்கிற பொழுது ஒரு தளம் நமக்கு வழங்குகிற உரிமையை நாம் தவறாக பயன்படுத்துகிறோம்.
என்னுடைய சில பின்னூட்டங்களின் போதாமைகளை பார்வைகளை நீங்களே சுட்டிக்காட்டியிருக்கீறிர்கள். அப்பொழுதெல்லாம் இப்படித்தான் அறிவித்தீர்களா? இப்பொழுது உங்களுடன் முரண்பட்டால் என்ன வேண்டுமானலும் எழுதுவதா?
மறுமொழிகளின் விதிகளை பின்பற்றி விவாதத்தை பலப்படுத்தலாம். தாங்கள் படித்த பாமாவின் கருக்கை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்ற ஒற்றைக் காரணத்திற்காக வம்படியாக பல விசயங்களைத் திரிக்கிறீர்கள். நிற்க.
எதை முரண்பாடு என்று கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. தலித் இலக்கியம் தொடர்பான சொல்லாடலில் நான் வைத்த கருத்துக்கள் ஆதிக்க சாதிகள் ஒருவரது படைப்பை எங்ஙனம் புரிந்துகொள்கின்றன?; அதே சமயம் போராட்டத்தைக் கோராமல் ஆளும் வர்க்கத்தை ஏற்றுக்கொண்டு படைக்கப்படுகிற ஆக்கங்களின் அரசியல் என்ன என்பதாகும்.
இதில் வினவு சொல்கிற விளக்கத்தை ஏற்றிருக்கிறேன்.
ஆனால் நான் கூறிய தலித் இலக்கியம் மோசடியானது என்ற சொல்லாடலை தனியாக வெட்டிக்காண்பீக்கிறீர்கள் சரவணன். அது எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை கவனித்து என்பார்வை மீது விமர்சனம் வையுங்கள்.
பின்னூட்டம் 17.1.2.1இல் இது தொடர்பாக நான்வைத்த கருத்து இதுதான்
“பாமாவின் கருக்கை மட்டும் தான் நேற்றிலிருந்து பேசிக்கொண்டிருக்கீறிர்கள். கண்டிப்பாக தலித் இலக்கியம் என்ற சொல் மோசடியானது. பாமாவின் கருக்கை பாட்டாளிவர்க்க இலக்கியத்திற்குள் கொண்டுவருகிற பொழுது அவர் படைப்பை தலித் இலக்கியம் என்று சொல்வதும் அவரை தலித் எழுத்தாளர் என்று சொல்வது வளமையான அறுவெறுப்பான மோசடி. தீண்டாமைக்கண்ணாடியின் ஒரு பகுதி இது. அம்பேத்கரில் இருந்து ஆன்ந்தடெல்டும்டே வரை இதுதான் நடந்துகொண்டிருக்கிற நிகழ்வு இது தான். வினவு எது இலக்கியம் என்பதை உங்களிடம் விளக்கியிருக்கிறது.”
இதன் பார்வையை விமர்சனம் செய்யுங்கள் சரவணன். அதைவிடுத்து ஏன் இந்த வேலை?
தென்றல்
வினவு உங்களுக்கு தோழமையுடன் அளித்த எதீர்வினையில்,
“தலித் இலக்கியத்தை பொதுவாக ஏற்கலாம், கோட்பாட்டு அடிப்படையில் பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கு மாற்றாக முன் வைக்க முடியாது என்பதால் தலித் இலக்கியத்தை மோசடி என்று கூறுவது சரியாக இருக்காது”
என்று கூறியுள்ளது.
அதனை மறுக்காத போது அதே கருத்தீன் மீது நான் வைக்கும் விமர்சனத்தையும் மறுக்க எந்த தார்மீக உரிமையும் உங்களுக்கு இல்லை !
சரவணன் அவர்களுக்கு,
வினவின் பதிலில் நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிற அம்சங்கள் உண்டு. இருந்தாலும் நீங்கள் அதை பரிசிலீக்க மறுக்கிறீர்கள். நான் வைத்த வாதத்திற்கு வினவின் கருத்தை சாதகமாக பொருத்திக் கொண்டேன் என்பது நடந்தது. ஆனால் என் நோக்கம் என்ன? உங்களுடனான என்னுடைய வாதம் விவாதத்தின் ஒரு பகுதியைப் பற்றியது. தலித் இலக்கியம் என்பதை ஆதிக்கசாதிகள் எவ்வாறு அணுகுகின்றன என்பது. அதனால் அந்தச் சொல்லாடலை மோசடி என்று குறிப்பிட்டேன். வினவின் பதிலை வைத்துக்கொண்டு சுயமுரண்பாடு என்கீறிர்கள். அப்படி சுயமுரண்பாடு என்றால் அதை ஏற்பதில் எனக்குப் பிரச்சனையில்லை.
இது ஒருபுறமிருக்க எதை அவதூறு என்கீறிர்கள்?
ஒட்டுமொத்த விவாதங்களையும் பார்க்கிற பொழுது எனக்கு இரண்டு விசயங்கள் தான் பிடிபடுகின்றன. ஒன்று பாமாவின் கருக்கை விமர்சிக்கவில்லை என்பதால் தங்களது கருத்தை பரிசிலீக்கவில்லை என்று ஆதங்கம் கொள்கீறிர்கள். இதற்கு வைத்த எந்தக் கருத்தையும் தற்பொழுது வரை பரிசீலிக்கவில்லை. இரண்டு, அற்பத்தனம் என்ற சொல்லாடலில் காரணமாக மட்டுமே உங்களுக்குத் தேவையான திசையில் கருத்துக்களை நகர்த்திக் கொள்கீறிர்கள். இதில் அனைவரையும் எதிரியாக காட்டி உங்களை மட்டும் ஒடுக்கப்பட்டவர்களின் காவலனாக காட்டிக்கொள்கிறீர்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
உங்களைப் போன்று, இது தொடர்பான விவாதங்களில் கணிசமான அளவில் நானும் பங்குபெற்றிருக்கிறன்; முடிந்த அளவு நூல்களையும் பிற நண்பர்களோடு வாசித்திருக்கிறேன். சேர்ந்து இயங்க அம்பேத்கர்-பெரியார் ஸ்டடி சர்க்கிளையும் கட்டியிருக்கிறோம். ஆக்கப்பூர்வமாக வேறு என்ன செய்யலாம்? விவாதியுங்கள்.
தென்றல்,
[1]உங்கள் பிரத்யோக மொழி நடையில் உள்ள கருத்தாக்கம் எனக்கு சத்தியமாக புரியவில்லை தென்றல்.
[2]தோழர் கலாஷ்நிகோவ் கையாளும் எளீய ஆனால் அழுத்தமான,விரியமான மொழி நடையில் உங்கள் கருத்துகளையும் பதியுங்கள் தென்றல். இது விமர்சனம் அல்ல ,வேண்டுகோள்.
//வினவின் பதிலில் நீங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிற அம்சங்கள் உண்டு. இருந்தாலும் நீங்கள் அதை பரிசிலீக்க மறுக்கிறீர்கள். நான் வைத்த வாதத்திற்கு வினவின் கருத்தை சாதகமாக பொருத்திக் கொண்டேன் என்பது நடந்தது. ஆனால் என் நோக்கம் என்ன? உங்களுடனான என்னுடைய வாதம் விவாதத்தின் ஒரு பகுதியைப் பற்றியது.//
[3]சுய முரண்பாடு என்று நான் குறிப்பிடுவது வினவு எமக்கு அளித்த தலித்தியர் இலக்கியங்கள் பற்றீய முதல் இரு பீன்னுட்டங்கள் மீது நான் வைக்கும் விமர்சனம்.
[4]வினவு உங்களுக்கு அளித்த பதிலை வைத்து வினவும் ,தென்றலும் முரண்படுகின்றீர்கள் என்று கூறிஉள்ளேன்
//தலித் இலக்கியம் என்பதை ஆதிக்கசாதிகள் எவ்வாறு அணுகுகின்றன என்பது. அதனால் அந்தச் சொல்லாடலை மோசடி என்று குறிப்பிட்டேன். வினவின் பதிலை வைத்துக்கொண்டு சுயமுரண்பாடு என்கீறிர்கள். அப்படி சுயமுரண்பாடு என்றால் அதை ஏற்பதில் எனக்குப் பிரச்சனையில்லை.//
[5] நான், என் மீது கூறப்பட்ட அவதூறுகளை பற்றி விளக்ககிய பீன்னுடங்களை வினவு வெட்டி ஏறிந்தமைக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது.
http://vansunsen.blogspot.in/2014/06/vinavu-conflicts-and-wrong-replays.html
//இது ஒருபுறமிருக்க எதை அவதூறு என்கீறிர்கள்?//
[6]எம் தோழன் கலாஷ்நிகோவ் அவர்களுடன் நான் நடத்தும் இவ் விவாதம் , உங்கள் குற்ற சாட்டை தவறு என்று நிருபித்துகொண்டது உள்ளது. எங்கள் விவாதம் தீர்வுகளை நோக்கி செல்வதை உங்களால் உணர முடியவில்லையா ?
//இதில் அனைவரையும் எதிரியாக காட்டி உங்களை மட்டும் ஒடுக்கப்பட்டவர்களின் காவலனாக காட்டிக்கொள்கிறீர்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.//
தென்றல்,
நான் திரு கலாஷ்நிகோவ் அவர்களுக்கு அளிக்கும் உறுதியான பதிலைகளை பாருங்கள் :
[0]அரசியல் களத்தில் தலித்தியர் மக்களுக்காக,அவர்கள் சமுக பொருளாதார விடுதலைக்கு போராட தயங்காத, அவர்களுக்கு தலைமை ஏற்க தயங்காத ம க இ க …,
[1]எம் தலித்தியர் மக்களுக்கு மட்டும் அல்ல , இந்த உலகில் வாழும் எல்லா உழைக்கும் மக்களுக்குமே திரிபு இன்றி மார்சியத்தை நடைமுறை படுத்துவதில் தான் முழு தீர்வு உள்ளது என்பதை நான் உளபூர்வமாகவும் /அறிவுபூர்வமாகவும் நம்புகின்றேன்.
[2]அதனால் தான் மார்சியத்தை நடைமுறை படுத்தும் போது பாட்டாளி வர்கத்துக்குள் சாதியத்தால் ஒடுக்கபட்டு உள்ள எம் தலித்தியர் மக்களீன் இலக்கியத்தையும் நம்முடையதாக்கி இலக்கிய/அறிவு தளத்திலும் கருத்தியல் போரை வர்க்க எதிரிகளுக்கும் , சாதியவாதிகளுக்கும் எதிராக தொடுக்க வேண்டும் என்று கூறினேன்.
இக் கருத்துக்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை ஏற்க மார்சீய அரசியல்,தலித்தியர் இலக்கியங்கள் மூலம் வர்க்க எதிரிகளுக்கு எதிராக போராட யாரை [ம க இ க வை ] அழைக்கீன்றது என்பதை தெளிவாக தானே கூறி உள்ளேன்
//இதில் அனைவரையும் எதிரியாக காட்டி உங்களை மட்டும் ஒடுக்கப்பட்டவர்களின் காவலனாக காட்டிக்கொள்கிறீர்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.//
கலாஷ்நிகோவ்[kalashnicov]க்கு எம் பதில்கள்[1],
உங்கள் பெயரில் உள்ள Avtomat Kalashnikova [AK-47] துப்பாகியை நினைத்துகொண்டு இவ்விவாதத்தை நான் தொடங்கவில்லை.ஆனால் இரண்டாம் உலக போருக்கு பின் தம்மை சுயவீமர்சனம் செய்து கொண்டு தன் தந்தையர் நாட்டுக்கு, அதன் பாதுகாப்புக்கு வலிமையான ஆயுதம் தேவை என்று முடிவு செய்து முயன்று,ஆய்ந்து கண்டு பிடித்தானே என் ரஷ்ய தோழன்,ரஷ்ய இராணுவ விரன் அவனின் ஆற்றலை நினைவுகூர்ந்தும் , அவன் பெயரை உங்கள் புனைபெயராக வைத்து உள்ளதை நினைத்து மகீழ்ந்து எம் பதிலை தொடங்குகிறேன்.
கலாஷ்நிகோவ்://பாட்டாளி வர்க்க இலக்கியம் என்பது அனைத்து சமூகத்தின் உழைக்கும் மக்களின் விடியலுக்குமானதுதான், மேலும் இதிலிருந்து தலித் இலக்கியம் எவ்வாறு வேறுபட்டது என்றும், அது தலித் சமூகத்தின் விடியலுக்காக எந்த வகையில் பங்காற்றுகிறது என்பதையும் தெரிவியுங்கள்.//
[1]தோழர்,எம் ஆசான் லெனின் அவர்களுக்கு இருந்த பாட்டாளி வர்க்க எதிரிகள் ,பாட்டாளி வர்க்க தோழர்கள் என்ற நேர்கோட்டு தன்மை[linear] உள்ள வர்க்க பேராட்ட களம் சாதீயம் காரணமாக இந்திய வர்க்க போராளிகளுக்கு நேரற்ற[nonlinear] களமாக உள்ளதை நீங்கள் உணருவீர்கள் என்பதை நான் அறிவேன். உதாரணமாக இளவரசன் திருமணத்துக்கு பின் அடித்து நொறுக்கப்பட்ட தலித்தியர் வீடுகள் யாரால் நடத்த பட்டது ? வன்னிய சாதீக்குள் இருக்கும் மார்சீய அறிவு அளிக்கபடாத பாட்டாளி வர்க்க மக்கள் தானே தலைமை ஏற்று நடத்தீனர்.இங்கு பாட்டாளி வர்க்க மக்களே தம்முடன் வேலை செய்யும் தலித்தியர் பாட்டாளி வர்க்க மக்கள் மீது அடக்கு முறையை செலுத்தும் போது, அதனால் பாட்டாளி வர்க்க மக்களுக்குள் சாதியம் சார்ந்த உள் முரண்பாடுகள் முற்றுகின்றது அல்லவா ?? இத்தகைய சூழலில்…..
[i]இத்தகைய சூழலில் நம் தலித்தியர் மக்கள் தம் வாழ்வியல் வலிகளையும்,அவர்கள் மீதான சாதீய அடக்கு முறைகளையும் இலக்கியத்தில் பதிவு செய்வது அவர்களுடைய கடமையும், உரிமையும் ஆகும்
[ii]அதனை ம க இ க போன்ற மா லெ அமைப்புகள் ஊக்குவிக்க வேண்டும் அல்லவா ?
கலாஷ்நிகோவ்[kalashnicov]க்கு எம் பதில்கள்[2],
கலாஷ்நிகோவ்://தலித்களின் துயரம் மற்ற சாதி உழைக்கும் மக்களின் துயரங்களை விட மிகுதியானதுதான். ஆனால் தலித் இலக்கியம் இத்துயரங்களிலிருந்து எப்படி வெளிக்கொணரும், இயங்கியல் பார்வையில் அதற்கான சாத்தியக் கூறுகளாக எதை கொண்டுள்ளன?//
[1]அரசியல் களத்தில் தலித்தியர் மக்களுக்காக,அவர்கள் சமுக பொருளாதார விடுதலைக்கு போராட தயங்காத, அவர்களுக்கு தலைமை ஏற்க தயங்காத ம க இ க …,
[i]தலித்தியர் மக்கள் வலிகளை பிரதிபலிகும் தலித்தியர் இலக்கியங்களும் எம் பாட்டாளி வர்க்க இலக்கியமே என்று உரக்க உரிமை கூரல் கொடுத்து முற்போக்கான தலித்தியர் எழுத்தாளர்களை ஒருங்கினைத்து இலக்கிய/அறிவு தளத்திலும் கருத்தியல் போரை வர்க்க எதிரிகளுக்கு எதிராக தொடுக்க வேண்டும் அல்லவா ? இதை நான் முன்பே கூறிஉள்ளேனே இப்படி…..
“ஆம் தலித்தியர் இலக்கியங்கள் எமது பாட்டாளி வர்க்க இலக்கியங்கலே ; ஆம் தலித்தியர் எம் பாட்டாளி வர்க்க மக்கள் தான் என்று கூற வக்கு/துப்பு/ பாட்டாளி வர்க்க உணர்வு இல்லாத ம க இ க வும் அதன் தலைமையும் வரட்டு சித்தாந்தத்தை முன்னெடுக்கும் வரட்டு மார்சியவாதிகள் என்பது மட்டும் உண்மை ஆகிறது “
என் நோக்கம் நிறைவேறும் எனில் எம் கடுமையான விமர்சனத்துக்காக நிபந்தனை அற்ற மன்னிப்பு [ ம க இ க விடம் ] கோரவும் தயங்க மாட்டேன் என்பதை உண்மையுடன் கூறுகின்றேன்.
Comrade Saravanan,
I have few very simple points to share with you.
literature has lesser priority than education, organization and agitation/action.
Vinavu is doing what it can.
We need to help Vinavu with our own contributions.
You can make worthwhile contributions, first by changing your commenting style, (I have already told you at least 3 times about the repetitions in your comments.), then by writing articles for Vinavu, etc
கலாஷ்நிகோவ்[kalashnicov]க்கு எம் பதில்கள்[3],
கலாஷ்நிகோவ்//பாட்டாளி வர்க்க இலக்கியங்கள் சாதியை மறப்பீர், வர்க்கமாய் ஒன்று திரள்வீர் என்பதை அடிப்படையாகக் கொண்டது. தலித் இலக்கியம் தலித் மக்களின் விடியலை, தனியொரு சக்தியாய், தலித்களை மட்டுமே கொண்டுவரும் எனில் அது உங்களுக்கு சாத்தியம் என்று தோன்றுகிறதா? இதில் மற்ற சமூக மக்களையும் கொண்டிருந்தால், தலித் இலக்கியங்கள் மற்ற சமூகங்களிலுமுள்ள உழைக்கும் மக்களின் உயர்வுக்கான கோட்பாடுகளையும் கொண்டிருந்தால் அதுவே பாட்டாளி வர்க்க இலக்கியம் எனப்படும்.//
[1]எம் தலித்தியர் மக்களுக்கு மட்டும் அல்ல , இந்த உலகில் வாழும் எல்லா உழைக்கும் மக்களுக்குமே திரிபு இன்றி மார்சியத்தை நடைமுறை படுத்துவதில் தான் முழு தீர்வு உள்ளது என்பதை நான் உளபூர்வமாகவும் /அறிவுபூர்வமாகவும் நம்புகின்றேன்
[2] அதனால் தான் மார்சியத்தை நடைமுறை படுத்தும் போது பாட்டாளி வர்கத்துக்குள் சாதியத்தால் ஒடுக்கபட்டு உள்ள எம் தலித்தியர் மக்களீன் இலக்கியத்தையும் நம்முடையதாக்கி இலக்கிய/அறிவு தளத்திலும் கருத்தியல் போரை வர்க்க எதிரிகளுக்கு எதிராக தொடுக்க வேண்டும் என்று முன்பே கூறினேன்.
கலாஷ்நிகோவ்,
Kalashnikov said he would have been better off designing a lawnmower, given that he didn’t actually make a ton of money off his invention, and in retrospect, he said he would rather “help farmers with their work” than have helped kill people. He didn’t regret building a weapon to defend Mother Russia, but he did regret its later spread into the hands of terrorists.
I love you Avtomat Kalashnikova [AK]
கலாஷ்நிகோவ்,
உங்களுடன் விவாதிபது எம் ருஷ்ய தோழன் Avtomat Kalashnikova [AK] உடன் விவாதிபது போல் உணர்கின்ரேன். துப்பாக்கி உள் உள்ள உங்கள் தோழமை கண்டு எம் கண்கள் இரமாகின்றன.
தோழர் சரவணன்,
//[1]எம் தலித்தியர் மக்களுக்கு மட்டும் அல்ல , இந்த உலகில் வாழும் எல்லா உழைக்கும் மக்களுக்குமே திரிபு இன்றி மார்சியத்தை நடைமுறை படுத்துவதில் தான் முழு தீர்வு உள்ளது என்பதை நான் உளபூர்வமாகவும் /அறிவுபூர்வமாகவும் நம்புகின்றேன்
[2] அதனால் தான் மார்சியத்தை நடைமுறை படுத்தும் போது பாட்டாளி வர்கத்துக்குள் சாதியத்தால் ஒடுக்கபட்டு உள்ள எம் தலித்தியர் மக்களீன் இலக்கியத்தையும் நம்முடையதாக்கி இலக்கிய/அறிவு தளத்திலும் கருத்தியல் போரை வர்க்க எதிரிகளுக்கு எதிராக தொடுக்க வேண்டும் என்று முன்பே கூறினேன்.
கலாஷ்நிகோவ்,//
இதை தெரிந்துள்ளோம் சரவணன், நான் தொடர்ச்சியாக விவாதங்களில் பங்குபெறுபவன் அல்ல. உங்களின் விவாதங்களை தொடர்ச்சியாக வாசித்துள்ளேன். உங்களுடன் சிறிய விவாததில் பங்கு பெற்றதில் மகிழ்வடைகிறேன், நீங்கள் தொடர்ந்து விவாதங்களில் பங்காற்றவேண்டும் என்று விழைகிறேன். தோழர் தென்றலுக்கும் வாழ்த்துக்கள். ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு நன்றி.
கலாஷ்நிகோவ்,
இவ் விவாதம் இத்துடன் முற்றுபெறும் எனில் நாம் கம்யூனிஸ்ட்களுக்கு தலித்தியர் மக்கள்/தலித்தியர் மக்களீன் இலக்கியங்கள் மீது உள்ள புரிதல் மீதான விவாதத்தை தீர்வுகளை நோக்கி செல்லாமல் நடு ஆற்றில் விட்டு விட்டு செலவதாக அமையும் என்பதை கலாஷ்நிகோவ் உணருவீர்கள் என்று நம்புகின்றேன்.
கலாஷ்நிகோவ்// நான் தொடர்ச்சியாக விவாதங்களில் பங்குபெறுபவன் அல்ல. உங்களின் விவாதங்களை தொடர்ச்சியாக வாசித்துள்ளேன். உங்களுடன் சிறிய விவாததில் பங்கு பெற்றதில் மகிழ்வடைகிறேன், நீங்கள் தொடர்ந்து விவாதங்களில் பங்காற்றவேண்டும் என்று விழைகிறேன்.//
தோழர் சரவணன்,
என்னால் முடிந்தவரை விவாதங்களில் பங்குபெற முயற்சிக்கிறேன். உடலுழைப்புத் தொழிலாளியானதால் நேரம் கிடைப்பதில்லை. நட்புடன் விவாதித்து தெளிவுபெறுவோம், நன்றி.
ஆம் தோழா கலாஷ்நிகோவ் , இவ் விவாதத்தை மெதுவான மற்றும் நிதானமான கொண்டு செல்லும் போது தான் மிக்க பயன் உள்ளதாக இருக்கும் என்று நானும் கருதுகின்றேன். அப்போது தான் ஒருவர் கருத்தை மற்றவர் முழுமையாக புரிந்து கொள்வதும் , இவ் விவாதத்துக்கு தேவையான தரவுகளை நாம் இருவருமே சேகரிக்கவும் இயலும். மேலும் நாம் ஆழ்ந்த [Profound] விவாதங்களை நடத்தும் போது தான் அவை வினவு வாசகர்களுக்கும்,நம் சமுகத்துக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
நான் தினம் ,மாலை 7 மணிக்கு உங்களுடன் விவாதிப்பேன். நீங்கள் உங்கள் வேலை மற்றும் இயக்க பணிகளை முடித்து விட்டு உங்களுக்கு நேரம் வாய்க்கும் போது விவாதிக்கவும்.
நன்றி தோழா.
தோழன்மையுடன் சரவணன்.
திரு சரவணன்,
நீங்கள் தொடர்ச்சியாக புரிந்து வரும் வாதங்களை இணையத்தில் பலரும் அறிவோம். நட்புறவு சக்திகள் அருகி வரும் சூழலில் விவாதங்களினூடே நமது கருத்தாக்கங்களை புதிப்பித்துகொள்ளவும், மறு ஆக்கம் செய்து கொள்ளவும், மீளாய்வுக்கு உட்படுத்தவும் இவ்விவாதங்கள் துணைபுரிகின்றன என்பதை நாம் மறுக்கவியலாது. தோழமை சக்திகளின் பங்களிப்பு இதில் ஏராளம். எனவேதான் நட்பு முரண்பாடுகளை மிகையாக்கி தன்முனைப்பு தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது. எனவே தொடர்ச்சியான பங்களிப்பை நல்கவும்.
திரு சுகதேவ்,
உங்களது பல பின்னூட்டங்களிள் வழி செம்மையான கருத்துக்களை வாதங்களை முன்வைத்து செல்பவர்.ஆனாலும் தேர்ந்த சொல்லாடல்களின் ஊடே சில நெருடல்களை அவதானிக்கவும் முடிந்தது. எடுத்துக்காட்டாக
“எங்க ஊரு வாணக்கரையா” பதிவில் சிறுபான்மையினரின் பொதுவெளி வழிபாடு நிகழ்வை விமர்சனம் செய்யப்போய் ஒரு நீண்ட மத வெறி விவாதத்துக்கு தொடக்க புள்ளி வைத்து அதைப்பற்றிய எந்த சங்கடங்களும் கொள்ளாது அமைதி காத்தீர்கள்.
மற்றொரு பதிவின் பின்னூட்டத்தில் “இஸ்லாமிய பயங்கரவாதிகள்” என்ற சொற்றொடரின் வழியே தினமலம், தினத்தந்தி,திணமணி தி இந்து போன்ற கருத்து வன்முறையாளர்களோடு சேர்ந்துகொண்டீர்கள். இதை சரியாகவே இனங்கண்டு எதிர்வினையாற்றினார் திரு.சரவணன்.
அதை ஏற்றோ அன்றி மறுத்தோ உங்களுக்கு சொல்ல கருத்தேதும் இல்லாமல் போனது.
இவை போன்ற விதிவிலக்குகளையும் மீறி தங்களின் பின்னூட்டங்களின் வழி கருத்துக்களை கூறி ஒரு தேர்ச்சியான விவாதத்துக்கு தளம் அமைக்கிறீர்கள் என்பதை அறிவோம்.
திரு தென்றல்,மற்றும் திப்பு
இந்தப்பதிவின் பின்னூட்டங்களில் பலவித அவதூறான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுமை காத்து எதிர்வினையாற்றி மற்றும் விவாதங்களை நெறிப்படுத்தி முன்னெடுத்து செல்கிறீர்கள் என்பதை காண்கிறோம்.
முக்கியமாக “குட்டி முதலாளித்துவ “தன்மைகொண்ட இத்தகைய நடவடிக்கைகளின் பலனற்ற போக்கை சுயவிமர்சனம் செய்கிறீர்கள்.எனினும் அறிவுத்தள வன்முறையை எதிர்கொள்ள வேறு வழி?.
பின்குறிப்பு
சமீப காலமாக தொடர்ந்து வினையாற்றும் நண்பர்களின் வருகை குறைந்துள்ளது போல் தெரிகிறது.ஏன்? ஒரு நெகிழ்வுத்தன்மையற்ற வறட்டு வாதங்களுக்கான தளமாக வினவு சுருங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி
தோழர் சரவணன்,
//[இ]இத்தகைய சூழலில் நம் தலித்தியர் மக்கள் தம் வாழ்வியல் வலிகளையும்,அவர்கள் மீதான சாதீய அடக்கு முறைகளையும் இலக்கியத்தில் பதிவு செய்வது அவர்களுடைய கடமையும், உரிமையும் ஆகும்//
இதில் நமக்கு எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இதே உரிமையை, தலித்தியரின் சமூக அவலங்களை பதிவிடும் உரிமையை, மற்ற சாதியில் பிறந்த ஒருவர் பெற்றிருந்தால் அதுதான் வர்க்க ஒற்றுமை.
தலித் இலக்கியங்கள் இயற்றும் நண்பர்கள், தலித்களின் நல்வாழ்விற்காக நடைமுறையில் என்ன களப்பணியாற்றியுள்ளனர், வெறும் இலக்கியம் இயற்றல் மட்டுமே போதுமானதா?
பாட்டாளி வர்க்க இலக்கியங்கள் தலித், தலித் அல்லாதவர் என்ற நிலையை அடைவதற்கான வழிகளை முன் வைக்கிறது. தலித் இலக்கியங்களும் இத்தகையவற்றை செய்யும்போது பாட்டாளி வர்க்க இலக்கியம் என்றே அழைக்கப்படும். இங்கே தலித் என்ற அடைமொழி மட்டுமே விவாதப் பொருளாக உள்ளது.
//[ஈ]அதனை ம க இ க போன்ற மா லெ அமைப்புகள் ஊக்குவிக்க வேண்டும் அல்லவா ?//
ம க இ க போன்ற அமைப்புகள் இதற்கு எதிரானவர்கள் அல்ல. இந்த சிந்தனை முறை உண்மையான பிரச்சினையைவிட்டு திசை மாற்றி மென்மேலும் சிக்கலானதாக மாற்றிவிடும் என்பதையே வலியுருத்துகின்றனர்.
தலித் இலக்கியங்கள் பிரச்சினைகளை சொன்னால் மட்டும் போதாது. அதற்கான தீர்வாக என்ன சொல்கிறது என்பதே கம்யூனிஸ்டுகள் ஊக்குவிப்பதற்கான அடிப்படையாக அமையும்.
//[1]தோழர்,எம் ஆசான் லெனின் அவர்களுக்கு இருந்த பாட்டாளி வர்க்க எதிரிகள் ,பாட்டாளி வர்க்க தோழர்கள் என்ற நேர்கோட்டு தன்மை[ உள்ள வர்க்க பேராட்ட களம் சாதீயம் காரணமாக இந்திய வர்க்க போராளிகளுக்கு நேரற்ற களமாக உள்ளதை நீங்கள் உணருவீர்கள் என்பதை நான் அறிவேன்//
தோழர்,அதே வர்க்கக் களம் தான், வர்க்க உணர்வுதான் சாதீயம் இல்லாமல் போவதற்கான களமாகவும் அமைகிறது. வேறு ஏதேனும் களம் இருந்தால் விவரிப்பீர்.நன்றி
கலாஷ்நிகோவ்,
கலாஷ்நிகோவ்://இதில் நமக்கு எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இதே உரிமையை, தலித்தியரின் சமூக அவலங்களை பதிவிடும் உரிமையை, மற்ற சாதியில் பிறந்த ஒருவர் பெற்றிருந்தால் அதுதான் வர்க்க ஒற்றுமை. தலித் இலக்கியங்கள் இயற்றும் நண்பர்கள், தலித்களின் நல்வாழ்விற்காக நடைமுறையில் என்ன களப்பணியாற்றியுள்ளனர், வெறும் இலக்கியம் இயற்றல் மட்டுமே போதுமானதா? பாட்டாளி வர்க்க இலக்கியங்கள் தலித், தலித் அல்லாதவர் என்ற நிலையை அடைவதற்கான வழிகளை முன் வைக்கிறது. தலித் இலக்கியங்களும் இத்தகையவற்றை செய்யும்போது பாட்டாளி வர்க்க இலக்கியம் என்றே அழைக்கப்படும். இங்கே தலித் என்ற அடைமொழி மட்டுமே விவாதப் பொருளாக உள்ளது. //
[1]கலாஷ்நிகோவ் நீங்கள் அழகாக இயக்கவியல் பார்வையுடன் விவாதத்தை முன் நகர்த்தி செல்கின்றீர்கள்.ஆம் பாட்டாளி வர்க்க உணர்வு உள்ள எழுத்தீயல்/இலக்கிய துறையில் பயணிக்கும் ஒரு தோழர் நம் தலித்தியர் மக்களீன் வலிகளையும் அதை தீர்க்க தீர்வுகளையும் இலக்கியம் மூலம் வலியுறுத்துவதும் சாதியாத்தின் வேர்கள் ஆழமாக ஊடுருவும் இன்றைய சமுக சூழலீல் தவிர்க்க முடியாத தேவை.
[2] அதே நேரத்தில் தலித்தியர் மக்களீன் மீது நேசம் உள்ள ஆனால் பாட்டாளி வர்க்க உணர்வு அற்ற திரு பெருமாள் முருகன் போன்ற ஓரு படைப்பாளி தம் பெரும் கதைகள்[ஆளாண்டபட்சி] மூலம் கவுண்டர் மக்களை தலித்தியர் மக்களுடன் சமரசம் செய்து கொள்ள வலியுறுத்தும் மார்சீய திரிபையும் நாம் எச்சரிக்கையுடன் அவதானித்து அவர் போன்றவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்
கலாஷ்நிகோவ்//ம க இ க போன்ற அமைப்புகள் இதற்கு எதிரானவர்கள் அல்ல. இந்த சிந்தனை முறை உண்மையான பிரச்சினையைவிட்டு திசை மாற்றி மென்மேலும் சிக்கலானதாக மாற்றிவிடும் என்பதையே வலியுருத்துகின்றனர். தலித் இலக்கியங்கள் பிரச்சினைகளை சொன்னால் மட்டும் போதாது. அதற்கான தீர்வாக என்ன சொல்கிறது என்பதே கம்யூனிஸ்டுகள் ஊக்குவிப்பதற்கான அடிப்படையாக அமையும்.//
[3]இதற்கான பதிலை கீழ் கண்டவாறு முந்தைய பின்னுட்டத்தில் கூறி உள்ளேன்.தலித்தியர் மக்கள் வலிகளை பிரதிபலிகும் தலித்தியர் இலக்கியங்களும் எம் பாட்டாளி வர்க்க இலக்கியமே என்று உரக்க உரிமை கூரல் கொடுத்து முற்போக்கான தலித்தியர் எழுத்தாளர்களை ஒருங்கினைத்து இலக்கிய/அறிவு தளத்திலும் கருத்தியல் போரை வர்க்க எதிரிகளுக்கும் ,சாதியவாதிகளுக்கும் எதிராக தொடுக்க வேண்டும் அல்லவா ?
[4]மேலும் அரசியல் களத்தில் தலித்தியர் மக்களுக்காக,அவர்கள் அரசியல், சமுக, பொருளாதார விடுதலைக்கு போராட தயங்காத, அவர்களுக்கு தலைமை ஏற்க தயங்காத ம க இ க; இலக்கியம் சார்ந்த கருத்தீயல் தளத்திலும் அவர்களுக்கு வழிகாட்டி பிரச்சனை மட்டும் அல்ல இலக்கியம் அதற்கு தீர்வுகளும் தலித்தியர் இலக்கியத்தில் இருக்க வேண்டும் என்று மார்சிய அரசியல் கல்வி அளிக்கலாம் அல்லவா ? இதுவும் ம க இ க வின் கடமை தானே ?
//தோழர்,அதே வர்க்கக் களம் தான், வர்க்க உணர்வுதான் சாதீயம் இல்லாமல் போவதற்கான களமாகவும் அமைகிறது. வேறு ஏதேனும் களம் இருந்தால் விவரிப்பீர்.நன்றி//
[5]பாட்டாளி வர்க்கம் X சுரண்டும் தரகு முத்லாளிகள் என்று இருக்கும் வர்க்க முரண்பாட்டில் எமக்கு எந்த முரண்படும் உங்களுடன் இல்லை. அதே சமயம் பாட்டாளி வர்க்கத்துக்குள் உள்ள சாதிய அடுக்கு நிலைகள் காரணமாக அமைந்து உள்ள அக முரண்பாடுகள் [வன்னியர் தொழிலாளி X தலித்தீயர் தொழிலாளி] தோழர்,எம் ஆசான் லெனின் அவர்களுக்கு வர்க்க போராட்ட களத்தில் ஏற்பட வில்லை என்று தான் கூறினேன்.
திரு சரவணன்,
நீங்கள் தொடர்ச்சியாக புரிந்து வரும் வாதங்களை இணையத்தில் பலரும் அறிவோம். நட்புறவு சக்திகள் அருகி வரும் சூழலில் விவாதங்களினூடே நமது கருத்தாக்கங்களை புதிப்பித்துகொள்ளவும், மறு ஆக்கம் செய்து கொள்ளவும், மீளாய்வுக்கு உட்படுத்தவும் இவ்விவாதங்கள் துணைபுரிகின்றன என்பதை நாம் மறுக்கவியலாது. தோழமை சக்திகளின் பங்களிப்பு இதில் ஏராளம். எனவேதான் நட்பு முரண்பாடுகளை மிகையாக்கி தன்முனைப்பு தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது. எனவே தொடர்ச்சியான பங்களிப்பை நல்கவும்.
திரு சுகதேவ்,
உங்களது பல பின்னூட்டங்களிள் வழி செம்மையான கருத்துக்களை வாதங்களை முன்வைத்து செல்பவர்.ஆனாலும் தேர்ந்த சொல்லாடல்களின் ஊடே சில நெருடல்களை அவதானிக்கவும் முடிந்தது. எடுத்துக்காட்டாக
“எங்க ஊரு வாணக்கரையா” பதிவில் சிறுபான்மையினரின் பொதுவெளி வழிபாடு நிகழ்வை விமர்சனம் செய்யப்போய் ஒரு நீண்ட மத வெறி விவாதத்துக்கு தொடக்க புள்ளி வைத்து அதைப்பற்றிய எந்த சங்கடங்களும் கொள்ளாது அமைதி காத்தீர்கள்.
மற்றொரு பதிவின் பின்னூட்டத்தில் “இஸ்லாமிய பயங்கரவாதிகள்” என்ற சொற்றொடரின் வழியே தினமலம், தினத்தந்தி,திணமணி தி இந்து போன்ற கருத்து வன்முறையாளர்களோடு சேர்ந்துகொண்டீர்கள். இதை சரியாகவே இனங்கண்டு எதிர்வினையாற்றினார் திரு.சரவணன்.
அதை ஏற்றோ அன்றி மறுத்தோ உங்களுக்கு சொல்ல கருத்தேதும் இல்லாமல் போனது.
இவை போன்ற விதிவிலக்குகளையும் மீறி தங்களின் பின்னூட்டங்களின் வழி கருத்துக்களை கூறி ஒரு தேர்ச்சியான விவாதத்துக்கு தளம் அமைக்கிறீர்கள் என்பதை அறிவோம்.
திரு தென்றல்,மற்றும் திப்பு
இந்தப்பதிவின் பின்னூட்டங்களில் பலவித அவதூறான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுமை காத்து எதிர்வினையாற்றி மற்றும் விவாதங்களை நெறிப்படுத்தி முன்னெடுத்து செல்கிறீர்கள் என்பதை காண்கிறோம்.
முக்கியமாக “குட்டி முதலாளித்துவ “தன்மைகொண்ட இத்தகைய நடவடிக்கைகளின் பலனற்ற போக்கை சுயவிமர்சனம் செய்கிறீர்கள்.எனினும் அறிவுத்தள வன்முறையை எதிர்கொள்ள வேறு வழி?.
பின்குறிப்பு
சமீப காலமாக தொடர்ந்து வினையாற்றும் நண்பர்களின் வருகை குறைந்துள்ளது போல் தெரிகிறது.ஏன்? ஒரு நெகிழ்வுத்தன்மையற்ற வறட்டு வாதங்களுக்கான தளமாக வினவு சுருங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி
கிராமத்தான்,
[1]உங்கள் அவதானிப்புகளுக்கு மிக்க நன்றி.
[2]அவதூறுகளுடனும் , சுய முரண்பாடுகளுடனும் என் கருத்துகள் மீது வைக்கபடும் விமர்சனங்களுக்கு எதீர் வினை ஆற்றும் போது அங்கு தோழமை என்ற கருத்தாக்கம் அறுந்து போகும் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.
[3]அதே வேலையில் கலாஷ்நிகோவ் அவர்களுடன் நடத்தபடும் எம் வீவாதங்களில் எங்களுக்குள் தலித்தியர் இலக்கியத்தை பற்றிய கருத்து முரண்பாடுகள் இருப்பினும் அம் முரண்பாடுகளை தீர்க்க தோழமை உணர்வுடன் நடைபெறும் விவாதங்களையும் அவதானியுங்கள். அவதூறுகளுடனும் , சுய முரண்பாடுகளும் அற்ற விவாதங்கள் மட்டுமே தோழமையை நெறிபடுத்தியும்,கருத்து ஒற்றுமையையும் ஏற்படுத்தும் என்பது எனது எண்ணம்.
நன்றி. ஆமாம் என் நண்பர் திப்பு இவ் விவாத மேடைக்கு வரவில்லையே !
தோழர் கிராமத்தான்,
சில தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கவே நான் அந்த விவாதத்திலிருந்து வெளியேறினேன். வாணக்காரய்யா பதிவில் என்னுடைய பின்னூட்டத்தை முழுவதுமாக படித்தீர்களா என்று தெரியவில்லை. என்னுடையது ஒரு ஆதங்கம் மட்டுமே. உங்களுக்கு விளக்க நண்பர் ஒருவர் பெற்ற அனுபவத்திலிருந்து முயற்சி செய்கிறேன். எனது நண்பர் பணிபுரியும் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் சிலரை நிரந்தர ஊழியராக சமீபத்தில் நியமித்தார்கள். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள். முன்பெல்லாம் அந்த நிறுவனத்தில் ஊழியர்களாக நியமிக்கப்படுபவர்களில் கணிசமானவர்கள் இந்துக்களாகவும் இருப்பார்கள். இது ஒரு சமூக நல்லிணக்கத்துக்கு — பரஸ்பர புரிதலுக்கு உதவியாக இருந்தது. இன்று இது போன்ற நேர்மறையான அணுகுமுறைகள் மதவாதிகளிடம் குறைந்து வருகிறது.
அதே நிறுவனத்தில் ஒரு துறைக்கு தலைவராக இருந்த இந்துவை நீக்கி விட்டு, ஒரு இஸ்லாமியரை நியமித்துள்ளார்கள். இது சாதாரண நடவடிக்கை போல தெரியலாம். ஆனால், இந்த விளைவை நேரடியாக எதிர்கொள்பவர்களிடம் பேசினால் மட்டுமே இதன் பாதிப்பு தெரிய வரும். எனினும் இந்த தனிப்பட்ட பாதிப்பை விடவும் இது போன்ற அணுகுமுறைகள் உளவியல் ரீதியாக ஒரு சமூகத்தை பற்றி ஏற்படுத்தும் கருத்துருவாக்கம் முக்கியமானது.
இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொன்னாலே அது இந்துத்துவக் குரல் என்பதாகி விடாது. ம.க.இ.கவின் பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டின் முழக்கத்திலே அது இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்து பயங்கரவாதத்தை கண்டிப்பதற்கே கூட இஸ்லாமிய மதவாதத்தை கண்டிப்பது நிபந்தனையாக உள்ளது என்று கருதுகிறேன். மட்டுமின்றி, தனிச்சிறப்பாக இஸ்லாமிய மதவாதத்தை/ பயங்கரவாதத்தை கண்டிப்பதும் வேண்டும் என்றும் கருதுகிறேன். இஸ்லாமிய மதவாதத்தை கண்டிக்கும் போதெல்லாம், அதில் இந்து பயங்கரவாத எதிர்ப்பும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பார்க்கும் கண்களுக்கு எல்லாம் மார்புச் சேலையை இழுத்து விட எதிர்பார்க்கும் போலி ஒழுக்கத்தை போன்றது.
கொஞ்சம் மாறியிருக்கும் சமூக நிலைமைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த தேர்தல் முடிவுகள் பற்றிய ஆய்வு ஒரு உண்மையை சொல்கிறது. முஸ்லிம் மக்கள் 20 சதவீதம் வரை இருக்கும் 80 தொகுதிகளில் பாதிக்கும் மேல் இந்த முறை பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. வழக்கமாக, இந்த தொகுதிகளில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றி வாய்ப்புள்ள ஒரு மதச்சார்பற்ற கட்சிக்கு குவியும். அதனால், அந்த கட்சி வெற்றி பெறும். ஆனால், இந்த முறை சிறுபான்மை மக்களின் வாக்குகளை மதச்சார்பற்ற கட்சிகள் சிந்தாமல், சிதறாமல் பெற்றிருந்தாலும், இந்து பெரும்பான்மையிடமும் ஒரு எதிர் ஒருங்கிணைவை உருவாக்கியுள்ளது. மதச்சார்பற்ற தேர்தல் கட்சிகள் சிறுபான்மை மதங்களிடம் கடைபிடிக்கும் சந்தர்ப்பவாத அணுகுமுறையும் இதற்கு ஒரு காரணம். இவர்கள் ஒரு நாள் ரம்ஜான் கஞ்சி குடிப்பதையும், கிறிஸ்மஸ் கேக் வெட்டுவதையும் காட்டி ஆர்.எஸ்.எஸ். இந்துக்களின் உணர்வை நிரந்தரமாக குத்தகை கேட்பதில் வெற்றி பெற்று வருகிறது.
இந்து மதவெறிக்கு எதிரான நமது போராட்டத்தில் முன்நிற்க வேண்டியவர்கள் இந்துக்களே. இஸ்லாமியர்கள் அல்லர். ஆனால், அவர்களில் இன்று பலர் ஆர்.எஸ்.எஸின் நியாயத்தை பேசுகிறார்கள். தோழர் பாண்டியனுடன் டி.என்.டி.ஜே நடத்திய விவாதத்தை கவனித்த ‘இந்து நண்பர்கள்’ வினவின் நிலைப்பாட்டை பாராட்டியதை, வினவு அந்த நிகழ்ச்சி பற்றிய பதிவில் குறிப்பிட்டுள்ளது. 2002– ஆம் வருடம் நடந்த பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் முஸ்லிம் மக்கள் கணிசமாக பங்கேற்றதை ‘புதிய கலாச்சாரம்’ மகிழ்ச்சியுடன் பகிர்ந்தது. இன்று நிலைமை மாறியிருக்கிறது. இந்துக்கள் வழங்கும் ஆதரவை ஹைலைட் செய்யும் நிலைமையில் உள்ளோம். இந்துத்துவப் பாஸிசம் சில இடங்களில் தலைக்கு மேல் எழும்பி பாய்கிறது.
இன்னொன்று, இந்த மதங்கள் என்ன போதிக்கின்றன என்பதும் முக்கியமானது. வெளியலங்காரமாக அவை அன்பையும், அமைதியையும் போதித்தாலும் அவற்றினிடத்தில் உள்ளடங்கிய தூஷணம் மாற்று கருத்தாளர்கள் மீது உள்ளது. பைபிள் அந்தி கிறிஸ்தவர்கள் குறித்து அதிகமாக பேசுகிறது. குரானில் காஃபிர்கள் பற்றிய எச்சரிக்கை, இந்து மத கடவுள்களிடம் இருக்கும் கொலைக் கருவிகள் இவை எதிர்மறையான தூண்டுதலை ஏற்படுத்தாது என்று சொல்ல முடியுமா? அதை தான் ‘பயங்கரவாதத்துக்கு மதங்கள் வழங்கும் சித்தாந்த வெதுவெதுப்பு’ என்றேன். எனினும் எனது முந்தைய கருத்துக்கள் முக்கியமான சந்தர்ப்பத்தில், ஹரன் பிரசன்னா, மாலன் போன்ற இந்துத்துவ விஷங்களை கண்டிக்கும் இடத்தில் பொருத்தமில்லாமல் இருப்பதை உணர்கிறேன். அது தவறு என்பதையும் உணர்கிறேன். சற்றே காலம் தாழ்ந்தே உணர்ந்தேன். சுட்டியமைக்கு நன்றி.
சுகதேவ் அவர்களுக்கு ,
[1]திரு சுகதேவ் அவர்களீன் சிறுபன்மை மக்களுக்கு எதிரான அவதுறுகளுக்கு வினவு தளத்தில் ஆதாரங்களுடன் எதீர்வினை அற்றி வந்து உள்ளேன் என்பது வினவு வாசகர்களுக்கு தெரியும்.
[2]என் கேள்வி என்ன என்றால் சிறுபன்மை மக்களுக்கு அரசியல் சாசன சட்டம் அளித்து உள்ள பாதுகாப்புகள் தவறா ? More over , Is Article 370 wrong?
சுகதேவ் //எனது நண்பர் பணிபுரியும் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் சிலரை நிரந்தர ஊழியராக சமீபத்தில் நியமித்தார்கள். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள். முன்பெல்லாம் அந்த நிறுவனத்தில் ஊழியர்களாக நியமிக்கப்படுபவர்களில் கணிசமானவர்கள் இந்துக்களாகவும் இருப்பார்கள். இது ஒரு சமூக நல்லிணக்கத்துக்கு — பரஸ்பர புரிதலுக்கு உதவியாக இருந்தது. இன்று இது போன்ற நேர்மறையான அணுகுமுறைகள் மதவாதிகளிடம் குறைந்து வருகிறது. //
[3]வினவு கூறும் கீழ் உள்ள கருத்தாக்கத்தில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடல் எப்படி தவறானது என்று திரு சுகதேவ் உணரவேண்டும்.
“இசுலாமியரை விமரிசிக்க வேண்டுமென்றால் அவர்களை பொதுவாக விமரிசக்காமல், டிஎன்டிஜே போன்று பேர் குறிப்பிட்டு விமரிசிக்கும் போது பார்ப்பனியத்தை மட்டும் நபர்கள் வாரியாக பிரித்து விமரிசிக்காமல் பொதுவாக விமரிசிப்பது சரியா என்று கேட்டிருந்தார் ஒரு நண்பர். மதங்களை விமரிசக்கும் வினவு பாரபட்சமாக இருக்கிறது என்பதாக இந்த விமரிசனத்தில் அவர் சொல்கிறார். முதலில் இந்த நண்பர் கூறியிருப்பது போன்றுதான் வினவு எழுதுகிறது என்பதை ஒத்துக் கொள்கிறோம். ஏன்?பார்ப்பனியம், இஸ்லாம் இரண்டையும் பிரிப்பது எது என்பதிலிருந்து அதை பார்க்கலாம். ஓரிறைக் கொள்கை, உருவ வழிபாடு கிடையாது போன்ற இறைவன் குறித்த மதக் கொள்கை தவிர்த்து வாழ்க்கை குறித்த சட்டங்களில் இசுலாத்திற்கு என்று ஒரே மாதிரியான கொள்கை கிடையாது. புர்கா போடுவது, போடக்கூடாது, இசை கேட்கலாம், கூடாது, திருப்பதி லட்டு சாப்பிடலாம், கூடாது, இனம்-சாதி-பிரிவினைக்கேற்ப மணமுடிக்கலாம், கூடாது என்று நாட்டுக்கு நாடு இது வேறுபடுகிறது. வகாபியிஸ்டுகளும், டிஎன்டிஜேக்களும் இதற்காக கரடியாக கத்தினாலும் அப்படி ஒரு வாழ்வியல் ஒற்றுமையை யாரும் கொண்டுவர முடியாது.”
சுகதேவ்//இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொன்னாலே அது இந்துத்துவக் குரல் என்பதாகி விடாது. ம.க.இ.கவின் பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டின் முழக்கத்திலே அது இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்து பயங்கரவாதத்தை கண்டிப்பதற்கே கூட இஸ்லாமிய மதவாதத்தை கண்டிப்பது நிபந்தனையாக உள்ளது என்று கருதுகிறேன்//
[4]மோடி BJP ,பெற்ற வாக்குகள் பற்றிய புள்ளியல் விவரங்களை முன்பே அளித்து உள்ளேன்.
###இந்திய மக்கள் தொகையில் மோடி பெற்ற ஒட்டு :17.5 * 100 /124 = 14.11 %
###By percentage out of total no of votes, Modi[BJP] got :17.5 * 100 / 81.45 = 21.49 %
மோடியால் மத்திய ,வட மேற்கு இந்தியாவில் மட்டும் தான் கணிசமான ஆதரவை பெற முடிந்து உள்ளது
சுகதேவ்//இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொன்னாலே அது இந்துத்துவக் குரல் என்பதாகி விடாது. ம.க.இ.கவின் பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டின் முழக்கத்திலே அது இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்து பயங்கரவாதத்தை கண்டிப்பதற்கே கூட இஸ்லாமிய மதவாதத்தை கண்டிப்பது நிபந்தனையாக உள்ளது என்று கருதுகிறேன்//
[5]வினவுக்கு திரு சுகதேவ் வைக்கும் கருத்துகளுக்கு உடன்பாடு தானா ? எவ் வித விமர்சனமும் கிடையாதா ?
Correction:
—————–
4]மோடி BJP ,பெற்ற வாக்குகள் பற்றிய புள்ளியல் விவரங்களை முன்பே அளித்து உள்ளேன்.
###இந்திய மக்கள் தொகையில் மோடி பெற்ற ஒட்டு :17.5 * 100 /124 = 14.11 %
###By percentage out of total no of votes, Modi[BJP] got :17.5 * 100 / 81.45 = 21.49 %
மோடியால் மத்திய ,வட மேற்கு இந்தியாவில் மட்டும் தான் கணிசமான ஆதரவை பெற முடிந்து உள்ளது
சுகதேவ்//கொஞ்சம் மாறியிருக்கும் சமூக நிலைமைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த தேர்தல் முடிவுகள் பற்றிய ஆய்வு ஒரு உண்மையை சொல்கிறது. முஸ்லிம் மக்கள் 20 சதவீதம் வரை இருக்கும் 80 தொகுதிகளில் பாதிக்கும் மேல் இந்த முறை பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. வழக்கமாக, இந்த தொகுதிகளில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றி வாய்ப்புள்ள ஒரு மதச்சார்பற்ற கட்சிக்கு குவியும். அதனால், அந்த கட்சி வெற்றி பெறும். ஆனால், இந்த முறை சிறுபான்மை மக்களின் வாக்குகளை மதச்சார்பற்ற கட்சிகள் சிந்தாமல், சிதறாமல் பெற்றிருந்தாலும், இந்து பெரும்பான்மையிடமும் ஒரு எதிர் ஒருங்கிணைவை உருவாக்கியுள்ளது. மதச்சார்பற்ற தேர்தல் கட்சிகள் சிறுபான்மை மதங்களிடம் கடைபிடிக்கும் சந்தர்ப்பவாத அணுகுமுறையும் இதற்கு ஒரு காரணம். இவர்கள் ஒரு நாள் ரம்ஜான் கஞ்சி குடிப்பதையும், கிறிஸ்மஸ் கேக் வெட்டுவதையும் காட்டி ஆர்.எஸ்.எஸ். இந்துக்களின் உணர்வை நிரந்தரமாக குத்தகை கேட்பதில் வெற்றி பெற்று வருகிறது.//
அண்ணே! தூங்குபவனை எழுப்பலாம்; தூங்குவது போல நடிக்கும் உங்களை எழுப்ப முடியாது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த சிறந்த நடைமுறை ஒன்று இன்று ஒழிக்கப்பட்டதன் பிரச்சினையை மட்டுமே தெரிவித்தேன். அந்த நடைமுறை ஒழிக்கப்பட்டது குற்றம் என்று சொல்லவில்லை. அந்த பழைய நடைமுறை வாணக்காரய்யாவின் அணுகுமுறை போன்று சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதாக இருந்தது என்பது தான் நான் கூறிய உதாரணத்தின் மெசேஜ்.
உங்கள் கருத்துக்கள் தலித்தியத்துக்கு காவடி தூக்குகிறது என்ற முன்முடிவுடன் அவற்றை வசதிக்கேற்ப வெட்டி, திரித்து உங்களை மார்க்ஸிய விரோதியாக சித்தரிக்க முடியும். ஆனால், அது சில்லறை விளையாட்டு. விபரீத முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். உண்மையை சொல்லப்போனால், உங்கள் கருத்துக்கள் எதனையும் படிக்க எனக்கு ஆர்வமில்லை.
நீங்கள் ஒரு ஆசிரியர் என்று நண்பர் ஒருவர் சொன்னார். உங்கள் மாணவர்கள் உங்கள் கருத்துக்களை படிக்க நேர்ந்தால் அவர்கள் உங்களை குறித்து என்ன நினைப்பார்கள் என்பதை தயவு செய்து ஒருமுறை கற்பனை செய்து கொள்ளுங்கள். அவர்கள் காலணிகளை ஒருமுறை அணிந்து கொண்டு நீங்கள் பதிக்கும் கருத்துக்களை ஒருமுறை படித்துப் பாருங்கள். என்னுடைய ஆசிரியர்கள் யாரிடமும் மிகக் கீழ்மையான விவாத அணுகுமுறையை நான் கண்டதில்லை. எனவே இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.
சுகதேவ் அவர்களுக்கு ,
[0]மார்சிய சித்தாந்தத்தை பொருத்த வரை பிரசனைகளுக்கு தீர்வு தான் கூறப்பட்டு உள்ளது. ஆதங்கத்துக்கோ , வெற்று பூலம்பல்களுக்கோ மார்சிய-லெனிய கோட்பாட்டில் இடம் இல்லை. என் கேள்விகள் உங்களுடைய வெற்று ஆதங்கத்தால் எழுப்பபட்டவை. முடீந்தால் மார்சிய-லெனிய கோட்பாட்டின் படி பதில் அளீக்க முயலுங்கள்
//அண்ணே! தூங்குபவனை எழுப்பலாம்; தூங்குவது போல நடிக்கும் உங்களை எழுப்ப முடியாது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த சிறந்த நடைமுறை ஒன்று இன்று ஒழிக்கப்பட்டதன் பிரச்சினையை மட்டுமே தெரிவித்தேன். அந்த நடைமுறை ஒழிக்கப்பட்டது குற்றம் என்று சொல்லவில்லை. அந்த பழைய நடைமுறை வாணக்காரய்யாவின் அணுகுமுறை போன்று சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதாக இருந்தது என்பது தான் நான் கூறிய உதாரணத்தின் மெசேஜ்.//
[1]அந்த ஆட்டத்தையும் ஆடித்தான் பருங்கள் சுகதேவ் ! ஆட்டத்தின் இருதியில் மார்க்ஸிய சித்தாந்தத்தையும் இழந்து அம்பல பட்டு போவது யார் என்று வினவு வாசகர்கள் உணர்ந்து கொள்ள உதவும்.
//உங்கள் கருத்துக்கள் தலித்தியத்துக்கு காவடி தூக்குகிறது என்ற முன்முடிவுடன் அவற்றை வசதிக்கேற்ப வெட்டி, திரித்து உங்களை மார்க்ஸிய விரோதியாக சித்தரிக்க முடியும். ஆனால், அது சில்லறை விளையாட்டு. விபரீத முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். உண்மையை சொல்லப்போனால், உங்கள் கருத்துக்கள் எதனையும் படிக்க எனக்கு ஆர்வமில்லை. //
[3]இனி இது போன்ற தனி மனித அவதூறுகளுக்கு [Defamation] உதிர்த ரோமம் அளவுக்கே மதிப்பு கொடுப்பேன் என்பதை சுய விமர்சனமாக கூறிகொள்கின்றேன். முடிந்தால் நீங்களும் விவாதம் சார்ந்த கருப்பொருளுக்கே முக்கியத்துவம் கொடுங்கள்
//நீங்கள் ஒரு ஆசிரியர் என்று நண்பர் ஒருவர் சொன்னார். உங்கள் மாணவர்கள் உங்கள் கருத்துக்களை படிக்க நேர்ந்தால் அவர்கள் உங்களை குறித்து என்ன நினைப்பார்கள் என்பதை தயவு செய்து ஒருமுறை கற்பனை செய்து கொள்ளுங்கள். அவர்கள் காலணிகளை ஒருமுறை அணிந்து கொண்டு நீங்கள் பதிக்கும் கருத்துக்களை ஒருமுறை படித்துப் பாருங்கள். என்னுடைய ஆசிரியர்கள் யாரிடமும் மிகக் கீழ்மையான விவாத அணுகுமுறையை நான் கண்டதில்லை. எனவே இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.//
முதலில் தலித்தியவாதி என்று தாங்களாக முடிவு செய்வதை நிறுத்துங்கள்.
//கட்டுரையிலேயே போலிக் கம்யூனிஸ்டுகள், புரட்சிகர கம்யூனிஸ்டுகள் என்று விளக்கங்களோடு வருகின்றன. போலிக் கம்யூனிஸ்கள் சாதி குறித்து மட்டுமல்ல, பல்வேறு பிரச்சினைகளிலும் சந்தர்ப்பவாதமாகவே இருக்கின்றனர். புரட்சிகர கம்யூனிஸ்டுகள் அல்லது நாங்கள் சாதி குறித்து என்ன குழப்பத்தில் இருப்பதாக ஆனந்த் கூறுகிறார்?//
புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் சாதி குறித்த புரிதல்தான் என்ன? வினவில் அது பற்றி ஏதாவது கட்டுரை வந்திருக்கின்றதா?
மேல்கட்டுமானமா? கீழ்க்கட்டுமானமா?
தமிழகத்தில் சாதியின் இயங்கும் தன்மைதான் என்ன? அதை எப்படி ஒழிப்பது?
அறிந்து கொள்ளும் ஆர்வம்தானேயன்றி வேறில்லை.
திரு மூதேவி,சாதி ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும் பு.ஜ.கட்டுரைகள் என்ற நூலினை படித்துப் பாருங்களேன்.
திரு இளையோன்,
சாதி குறித்து இரண்டு முக்கிய நூல்கள்!</b
நூட்கள் முன்னுரை :
[1]“சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்” புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வெளியீடு, விலை ரூ. 60.00
[2]"சாதி – தீண்டாமை ஒழிப்பு: என்ன செய்யப் போகிறீர்கள்?" மகஇக-புமாஇமு-புஜதொமு-விவிமு-பெவிமு, வெளியீடு விலை ரூ.10
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
தொலைபேசி – 044-2841 2367
புதிய கலாச்சாரம்
16, முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக்நகர்,
சென்னை – 600083
தொலைபேசி – 044 – 2371 8706, 99411 75876
https://www.vinavu.com/2013/01/22/two-new-books-about-caste/
தோழர் கலாஷ்நிகோவ்,
புரட்சிகர இயக்கங்கள் பற்றி, ம க இ க நட்பு பாராட்டும் திரு அருந்ததி அவர்கள் கூறும் கருத்துகளை பார்திர்களா ?
திரு அருந்ததியீன் கருத்து:
————————————————
இங்கே இயல்பான தோழமை என்பது கம்யூனிஸ்டுகளுக்கும் தலித்துகளுக்கும் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். அதுதான் இயற்கை. ஆனால் இங்கே அப்படி ஏற்படவில்லை. அவர்களுக்கிடையேயான பிளவு என்பது 1920களிலேயே சி.பி.அய். உருவான சில காலத்திலேயே தொடங்கிவிட்டது.
இன்றைக்கு இருக்கும் பல கம்யூனிஸ்ட் தலைவர்களைப் போலவே எஸ்.ஏ. டாங்கேவும் ஒரு பார்ப்பனர். இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான, “கிர்னி காம்கார் தொழிற்சங்க’த்தை 70 ஆயிரம் உறுப்பினர்களோடு அவர் உருவாக்கினார். உறுப்பினர்களில் பெரும் பகுதியினர் அம்பேத்கரை உள்ளடக்கிய “மகர்’ என்கிற தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் எல்லோரும் குறைந்த கூலி வழங்கப்படும் “ஸ்பின்னிங்’ பிரிவில் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். ஏனென்றால், நெசவுப் பிரிவில் வேலை செய்கிறவர் நூலை தன்னுடைய வாயில் கவ்விக் கொள்ள வேண்டியிருக்கும். அதில் தீண்டத்தகாதவரைச் சேர்த்தால் அவருடைய எச்சில் பட்டு நூலும், துணியும் தீட்டுப்பட்டு விடும் என்று கருதினார்கள்.
1928 இல் டாங்கே, கர்னி காம்கார் தொழிற்சங்கத்தின் முதல் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்துகிறார். அம்பேத்கர், போராட்டத்தின் ஒரு கோரிக்கையாக சமத்துவமும் வேலைப்பிரிவினையில் பாகுபாடு காட்டாத சமவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். இதற்கு டாங்கே ஒப்புக்கொள்ளவில்லை. அது ஒரு கசப்பான பிளவுக்கு இட்டுச் செல்கிறது.
அப்போதுதான் அம்பேத்கர் சொன்னார்:
சாதி என்பது தொழில்களுக்கு இடையிலான பிரிவினை மட்டும் அல்ல; அது தொழிலாளர்களுக்கு இடையிலான பிரிவினை.
நாம் விவாதீத்தா பாட்டாளி வர்க்கத்துக்குள் உள்ள சாதிய அடுக்கு நிலைகள் காரணமாக அமைந்து உள்ள அக முரண்பாடுகள் [வன்னியர் தொழிலாளி X தலித்தீயர் தொழிலாளி] என்ற விடயம் அம்பேத்கர் அவர்கள் கருத்துடன் ஒத்து போகிறதே!
தோழர். சரவணன்,
//1928 இல் டாங்கே, கர்னி காம்கார் தொழிற்சங்கத்தின் முதல் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்துகிறார். அம்பேத்கர், போராட்டத்தின் ஒரு கோரிக்கையாக சமத்துவமும் வேலைப்பிரிவினையில் பாகுபாடு காட்டாத சமவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். இதற்கு டாங்கே ஒப்புக்கொள்ளவில்லை. அது ஒரு கசப்பான பிளவுக்கு இட்டுச் செல்கிறது.//
இது டாங்கேயின் கம்யூனிசத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருக்கலாம்.அவருடைய சுயசாதி அபிமானமாகவும் இருக்கலாம்.
உண்மையான கம்யூனிசம் என்பது தனது தவறுகளை சுயவிமர்சனத்துடன் திருத்திக்கொள்கிறது. பல உண்மையான தலித் தலைவர்களது போராட்டம் பலனளிக்காமல் போனதற்கு காரணம், சாதியை ஒழிப்பதில் மற்றசாதியில் பிறந்த சாதி ஒழிப்பு போராளிகளுடன் வர்க்க உணர்வுடன் இணையாமலிருந்ததே! இவர்களது முறைகள் சுயசாதி அபிமானத்தை வளர்க்கவே உதவுகிறது. வர்க்க உணர்வில்லாத சாதி ஒழிப்பு போராட்டங்கள் பலனளிக்காது.
ம.க.இ.க தொழிலாளர் நல போராட்டங்களுடன் சாதி ஒழிப்பு போராட்டங்களையும் இணைந்தே நடத்துகிறது. மாட்டுகறி விருந்து, சாதி மறுப்புத் திருமணங்களை முன் நின்று செய்விக்கின்றது.இது தாங்கள் அறிந்தததே,
சாதி என்பதே சுயசாதி உழைக்கும் மக்களை வர்க்க உணர்வு கொள்ளாமலிருக்க அந்தந்த சாதியின் மேல்தட்டு மக்கள் பயன்படுத்தும் ஒரு ஆயுதமே,
இந்தியாவைப் பொருத்தவரை வர்க்க உணர்வுடன் கூடிய சாதியொழிப்பு போராட்டமுறைகளே தேவை. இதில் தாங்கள் வேறுபடவில்லை என எண்ணுகிறேன். நன்றி.
தோழர் கலாஷ்நிகோவ்,
[1]எம் கருத்தை தவறாக மதிபீடு செய்து வீட்டீர்கள். நான் ,அம்பேத்கார்,அருந்ததி ஆகியோர் எஸ்.ஏ. டாங்கே மீது வைக்கும் கூற்றசாட்டுகள் ம க இ க வுக்கு சிறிதும் பொருந்தாது. ஆனால் நான் ஒப்பீடு செய்த விடயத்தை BOLD எழுத்துக்களில் கொடுத்து உள்ளேன் பார்த்து இருப்பீர்கள். [நாம் விவாதீத்தா பாட்டாளி வர்க்கத்துக்குள் உள்ள சாதிய அடுக்கு நிலைகள் காரணமாக அமைந்து உள்ள அக முரண்பாடுகள் என்ற விடயம் அம்பேத்கர் அவர்கள் கருத்துடன் ஒத்து போகிறதே!]
[2]நீங்கள் கூறுவது படி தலித்திய தலைவர்கள் சிரழிந்தது உண்மை தான். அதனால் தான் “தலித் இளைஞர்களே, நீங்கள் இருக்க வேண்டியது தலித் அமைப்புகளா இல்லை புரட்சிகர அமைப்புகளா என்பதை இப்போதாவது முடிவு செய்யுங்கள்!” என்று ம க இ க அரைகூவல் எழுப்புகின்றது.
[3]அதே போல தலித்தியர் மக்களீன் முழுமையான ஆதரவை ம க இ க பெறுவதற்கு , அரசியல் களத்தில் தலித்தியர் மக்களுக்காக,அவர்கள் சமுக பொருளாதார விடுதலைக்கு போராட தயங்காத, அவர்களுக்கு தலைமை ஏற்க தயங்காத ம க இ க, தலித்தியர் மக்களீன் இலக்கியங்களையும் ம க இ க தான் கையில் எடுக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகின்றேன்.
[4]”இந்தியாவைப் பொருத்தவரை வர்க்க உணர்வுடன் கூடிய சாதியொழிப்பு போராட்டமுறைகளே தேவை” என்ற உங்களீன் கருத்தில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை.
//இந்தியாவைப் பொருத்தவரை வர்க்க உணர்வுடன் கூடிய சாதியொழிப்பு போராட்டமுறைகளே தேவை. இதில் தாங்கள் வேறுபடவில்லை என எண்ணுகிறேன். நன்றி.//
தோழர் கலாஷ்நிகோவ்,
நம் விவாதத்தீன் அடிப்படையில் இரு கேள்விகள் எழுகின்றது தோழர் :
[1]இந்தியாவைப் பொருத்தவரை வர்க்க உணர்வுடன் கூடிய சாதியொழிப்பு போராட்டமுறைகளே தேவை என்ற மார்சீயம் சார் கோட்பாடும், தலித்தியர் மக்களீன் இலக்கியங்களையும் ம க இ க கையில் எடுக்க வேண்டும் என்று கூறுவதும் ஒன்றேடு ஒன்று முரண்பட்டதா ?
[2]ஆம் எனில் எப்படி ? இல்லை என்று கூறுவீர்கள் எனில் விவாதம் இத்துடன் முற்று பெறும் தோழர்
தோழர் சரவணன்,
சாதிகள் இல்லாமல் போவது ஒன்றே சாதி இழிவை ஒழிப்பதற்கான ஒரே வழி. அதற்கு புரட்சிகர மார்க்சிய கோட்பாடுகளே சரியானது. தலித் இலக்கியங்களும் சாதி ஒழிப்பதற்கான வழிமுறைகளை கொண்டிருந்தால் அதை கட்டாயம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். தலித்தியர் இலக்கியங்களை விமர்சினத்திற்குட்பட்டு, தேவை கருதி அதை ம க இ க எடுப்பதில் எந்த கருத்து வேறுபாடும் எனக்கு இல்லை. நன்றி…
தோழர் கலாஷ்நிகோவ்,
[1]ஆம் இனறைய நிலையில் முதலில் தலித்தியர் இலக்கியங்களை விமர்சனத்திற்குட்படுத்துவது மிகவும் அவசியமானது. அதில் உள்ள தவறான அரசியலை விமர்சனத்துக்கு உட்படுத்தி விவாதிக்கவேண்டியது முக்கியமானது. தலித்தியர் தலைவர்களையும் அவர்கள் பிழைப்புவாத அரசியலை ம க இ க/வினவு அம்பலம் செய்வது போன்றே தலித்தியர் இலக்கியங்களை விமர்சிக்கும் போது அதில் உள்ள தவறான அரசியலையும் அம்பலம் செய்ய வேண்டும். ஆம் அதில் தான் நாம் [ம க இ க/வினவு ] பின்தங்கி உள்ளோம்.
[2]அடுத்த கட்டமாக ம க இ க/வினவு தோழர்கள் தலித்தியர் இலக்கியங்களை படைக்க வேண்டும்.
[3]100% நாம் இந்த விவாதத்தில் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் உடன்படுவது சரி தோழர் , நம் கருத்துக்களை ம க இ க/வினவு இருவரும் ஒத்துக்கொண்டு நடைமுறை படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் ?
//தலித் இலக்கியங்களும் சாதி ஒழிப்பதற்கான வழிமுறைகளை கொண்டிருந்தால் அதை கட்டாயம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். தலித்தியர் இலக்கியங்களை விமர்சினத்திற்குட்பட்டு, தேவை கருதி அதை ம க இ க எடுப்பதில் எந்த கருத்து வேறுபாடும் எனக்கு இல்லை. நன்றி…//
தோழர் சரவணன்,
அதற்கான செயல்திட்டத்தை வகுப்போம் தோழர்.
தோழர் கலாஷ்நிகோவ்,
[1]உங்கள் வார்த்தைகளை ம க இ க/வினவு ஆகியவர்களீன் அதிகார பூர்வமான குரலாக நாம் நினைக்கலாமா ?
[2]எமக்கு பு ஜ தொ மு/வி வி மு அமைப்பில் இணைந்து பணி செய்ய ஆர்வம் உள்ளது தோழர்.விரைவில் அமைப்பு தோழர்களுடன் தொடர்பு கொள்கிறேன்
சரவணன், கலாஷ்நிகோவ் இருவரின் கவனத்திற்கு
இங்கே நீங்கள் இரு தனிநபராக விவாதிக்கிறீர்கள். இந்த விவாதத்தை கருத்து சார்ந்து மட்டும் நடத்துகிறீர்கள். மாறாக மகஇக சார்பாகவோ இல்லை அதிகாரப்பூர்வமாகவோ, இல்லை மகஇக அமைப்போடு அதிகாரப்பூர்வமாகவோ உங்களுக்குள் பேசிக்கொள்வதாக இருந்தால் அது தவறு என்பதை சுட்டிக் காட்டுகிறோம். மகஇகவின் அதிகாரப்பூர்வமான செய்தியாக இருக்கும் பட்சத்தில் அது அமைப்பின் மாநில பொறுப்பிலிருக்கும் தோழர்கள் மூலம் வெளியிடப்படும். மகஇக வை விமரிசனம் செய்வது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அந்த விமரிசனங்களுக்கு அந்த அமைப்பு சார்பில் அதிகாரப்பூர்வமான பதில் தருவது என்பதை இங்கே பின்னூட்டமிடும் ஒரு நண்பர் செய்ய முடியாது. அல்லது மகஇக அரசியலுக்கு ஆதரவாக வாதிடும் தோழர்கள் கூட அவர்களது சொந்த தனிப்பட்ட கருத்தைதான் வெளியிடுகிறார்களே அன்றி அதிகாரப்பூர்வமான கருத்தை அல்ல. இதனால் தோழர்கள் அமைப்பின் நிலையிலிருந்து மாறுபடுகிறார்கள் என்பதல்ல. உடன்பட்ட கருத்து கூட அவர்களது வரம்பு, புரிதல் காரணமாக குறையுடன் இருக்கலாம். இதை வினவின் மறுமொழிக் கொள்கையிலேயே தெரிவித்திருக்கிறோம். வினவு தவிர மற்றவர் கருத்து வினவு கருத்து அல்ல என்று. சரவணன், கலாஷ்னிகோவ இருவரும் இங்கே மறுமொழியிடும் நண்பர்கள் என்பதைத்தாண்டி அவர்களின் கருத்துக்களுக்கு மகஇகவோ இல்லை வினவோ பொறுப்பல்ல என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறோம். இங்கே பேசப்படும் பொருள் குறித்து வினவின் கருத்தை ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம்.
தோழர் கலாஷ்நிகோவ்,
உங்களிடம் நான் கேட்ட என் கேள்வியையும்
“உங்கள் வார்த்தைகளை ம க இ க/வினவு ஆகியவர்களீன் அதிகார பூர்வமான குரலாக நாம் நினைக்கலாமா ?”
அதற்கு வினவு அளித்த பதிலையும்[35.1.1] படித்து இருபீர்கள்.
உங்கள் கருத்துகளை ம க இ க வின் அதிகார பூர்வமான கருத்தாக்க என்ன செய்ய போகின்றீர்கள் ?
நன்றி தோழர் கலாஷ்நிகோவ் and வினவு
//உங்கள் கருத்துகளை ம க இ க வின் அதிகார பூர்வமான கருத்தாக்க என்ன செய்ய போகின்றீர்கள் ?//
உங்க கண்டுபிடிப்புகளை உளறல்ன்னு மக இக காரங்க சொல்றதுக்கு ஜாஸ்தி வாய்ப்புண்டு. சோ என்ன பண்றது? பேசாம உங்க கண்டுபிடிப்புக்கு நீங்களே ஒரு கட்சி கட்டுனா என்ன? அப்டி கட்டிட்டு அதுல கலாஷ்னிகோவ சேத்துக்கலாம். தலித்தியரின் வாழ்வுக்காக நானும் கூட அதுல சேருரேன். இதுதான் நல்ல டீல், எப்புடி? அல்லாங்காட்டி மக இக காராங்களையல்லாம் இப்புடி பேசி மாத்த முடியாது. யோசிங்கண்ணே!
சூரவர்மன்,
[1]கொஞசம் பொறுமையாக இருப்போமே சூரவர்மன்! வெண்ணை திரலும் போது பானையை ஏன் உடைக்க வேண்டும் ?
[2]விவாதத்தின் இருதியில் நானும் , தோழர் கலாஷ்நிகோவ் அவர்களும் கருத்து வேறுபாடு இல்லாமல் உடன் படும் போது அதை ம க இ க வில் நடைமுறை படுத்த தோழர் கலாஷ்நிகோவ் அவர்களுக்கு நேரமும், அவர் அவருடைய ம க இ க தோழர்களுடனும் விவாதீக்க வேண்டிய அவசியமும் உள்ளது அல்லவா ?
[3]ம க இ கவும், தோழர் கலாஷ்நிகோவ் போன்று நம் முடிவுடன் உடன் படும் எனில் நாம் இருவருமே ம க இ கவுடன் இணைந்து செயல் படுவதில் என்ன தவறு ?
//உங்க கண்டுபிட