Sunday, November 28, 2021
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் ஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும் பார்ப்பனியம்

ஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும் பார்ப்பனியம்

-

டந்த ஜூன் 17-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய இறைச்சி பறிமுதல் என்ற செய்தியை சிலர் பார்த்திருக்கலாம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து வந்த ரயிலில் சுகாதாரமற்ற முறையில் பேக்கிங் செய்யப்பட்டிருந்த ஆட்டிறைச்சி 3,300 கிலோ வந்திறங்கியதை, மாநகராட்சியின் சுகாதாரத்துறை அலுவலர்கள் கைப்பற்றி, அது கெட்டுபோய்விட்டது என்று அறிவித்து, பிளீச்சிங் பவுடர் தெளித்து கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் புதைத்திருப்பதாக அந்த செய்தி தெரிவித்தது.

இறைச்சிஅவ்வப்போது இப்படி கெட்டுப்போன இறைச்சி பிடிபட்டாலும் தொடர்ந்து இப்படி ஏன் ஆட்டிறைச்சி சென்னை போன்ற நகரங்களுக்கு வந்து கொண்டேயிருக்கிறது? ஏன் இதனை அரசால் தடுக்க முடியவில்லை?

இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 63 லட்சம் டன் இறைச்சி அளவுக்கு கால்நடைகள் வெட்டப்படுகின்றன. இதில் 40-50% மட்டுமே உள்நாட்டுக்கான உணவாக பயன்படுகிறது. ஆண்டுக்கு 5 லட்சம் டன் வரை  எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதியாகிறது. இது தவிர மொத்தமாக மாட்டு இறைச்சி என்று பார்த்தால் 18.9 லட்சம் டன் வரை 2012-13 நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதனால் தான் அப்போது பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நரேந்திர மோடி, ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரே புரட்சி பிங்க் புரட்சி (pink revolution, இறைச்சியின் வண்ணம்) என்று கிண்டலாக அதனை குறிப்பிட்டிருந்தார். அதாவது மன்மோகன் சிங் அரசு புனிதமான பசுவை உள்ளிட்டு கால்நடைகளை கொன்று ஏற்றுமதி செய்து வருகிறது என்பதே மோடியின் காவிக் கவலை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இந்த ஏற்றுமதியின் அளவு 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மோடியாலும் காவிக் ‘கருணையுடன்’ கால்நடைகளை காப்பாற்றி இந்த பிங்க் புரட்சியைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் இதனால் நாட்டுக்கு கிடைக்கும் ஏற்றுமதி வருவாய் ஆண்டுக்கு ரூ 21,000 கோடி ஆகும். ஒருக்கால் இந்த கால்நடைகளை தாயுள்ளத்துடன் காப்பற்ற வேண்டுமென்றாலும் அதற்கு எந்த ஸ்வயம் சேவகனும் தயாராக இருக்க மாட்டார்கள். இறைச்சி விற்பனை இல்லாமல் கால்நடை பொருளாதாரம் இல்லை.

2007 கால்நடைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 15.4 கோடி ஆடுகள் உள்ளன. ஏறக்குறைய ஒரு கோடி கிராம மக்களுக்கு ஆடு வளர்ப்புதான் ஜீவாதாரமான தொழில். நாட்டிலேயே அதிகமான ஆடுகள் (2.15 கோடிகள்) ராஜஸ்தானில் உள்ளன. அதாவது மொத்த ஆடுகளின் தொகையில் இது மாத்திரம் 14%. தமிழகத்தில் 1.07 சதவீதம் மட்டும் தான் ஆடுகள் உள்ளன. உண்மையில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் நாட்டின் பத்து சதவீத ஆடுகள் உள்ளன. இந்தியாவில் பத்து ஆண்டுகளில் ஆடுகளின் எண்ணிக்கை இரட்டிப்படைந்திருக்க, எதிர் விகிதங்களில் மேய்ச்சல் நிலம் தொடர்ச்சியாக குறைந்தும் வருகிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையின் ஊதிப்பெருக்கப்பட்ட ‘வளர்ச்சி’யால் இது அதிகரித்துள்ளது.

மாட்டிறைச்சிமற்ற மாநிலங்களில் ஆடுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 15% மட்டுமே அதிகரிக்க, ராஜஸ்தானில் மாத்திரம் 27% அதிகரிக்கிறது. விவசாயத்திற்கோ இல்லை நகரமயமாதலுக்கோ வழியில்லாத தரிசு நிலப்பரப்பு அதிகரிப்பால் இது சாத்தியமாகிறது. விவசாயத்தை விட ஆடு வளர்ப்பு கட்டுபடியாகும் நிலையில் இருப்பதால் எல்லா விவசாயிகளுமே இங்கு ஆடு வளர்ப்புக்கு மாறி வருகின்றனர். தரிசு நிலமே ராஜஸ்தானில் மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுகிறது. இங்கு 60 சதவீத விளைச்சல் நிலமே தரிசாக மாறி விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் 40 முறை வறட்சியை சந்தித்துள்ள மாநிலம் இது. மொத்தமுள்ள 2.16 கோடி ஹெக்டேர் விளைச்சல் நிலத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான நிலப்பரப்பில்தான் விவசாயம் நடக்கிறது. செயற்கை உரங்களால் நிலம் மலடு தட்டிப் போவதும், நிச்சயமற்ற பருவநிலைகளும் சேர்ந்து ஆல்வார் போன்ற வளமையான பகுதிகளில் கூட ஆட்டு பண்ணைகளையும், கால்நடை விவசாயிகளையும் தோற்றுவித்துள்ளது. ஆல்வாருக்கருகில் உள்ள பலாடி தினசரி ஆட்டுச் சந்தையில் நடக்கும் ஒருநாள் வியாபாரம் ரூ 1.5 கோடி என்கிறார்கள்.

ராஜஸ்தானின் மேற்கு பகுதியில் சிறு விவசாயிகளின் 60 சதவீத வருமானம் கால்நடை வளர்ப்பில் இருந்துதான் பெறப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை கருத்தரிக்கும் கால்நடைகளை பயிர்களில் போகம் எடுப்பது போல எடுத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு முறை கிடைக்கும் கன்றுகளின் எண்ணிக்கையை பொறுத்து இவர்கள் வளர்சியடைவது இருக்கிறது. ஆடுகளை இவ்வளவு உற்பத்தி செய்தாலும் இங்கு கணிசமான மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்தான்.

இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் மிகவும் தீவிரமான பார்ப்பனியக் கோட்டையாக இருப்பதால் இங்கே பிற்போக்குத்தனங்களுக்கு பஞ்சமே இல்லை. இதனால் இங்கிருக்கும் இடைநிலை சாதிகளும் இதற்கு பலியாகியிருக்கின்றனர். இதுதான் பாஜக போன்ற கட்சிகள் இங்கு தங்குதடையின்றி வளர்வதையும், மன்னர் பரம்பரையை சேர்ந்த சிந்தியா குடும்பம் முதல்வர் பதவியை அலங்கரிப்பதையும், சதி, குழந்தை திருமணம் போன்ற சமூக அவலங்களும் ‘சாதனைகளாக’ இருக்கும் மாநிலத்தில் இறைச்சி உணவுக்கு ஆதரவில்லை என்பது ஒரு யதார்த்தம்.  அதனால், அசைவ உணவு பழக்கம் கொண்ட ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கோ அது எளிதில் கிடைத்து சாப்பிடும் சூழல் இல்லை.

ஆடு வளர்ப்புமாடு வளர்ப்பில் குஜராத்தும், ஆடு வளர்ப்பில் ராஜஸ்தானும் நாட்டின் முன்னணி மாநிலங்களாக இருந்த போதிலும், அங்கு பார்ப்பனிய அடிமைத்தனமும், இடைநிலைச் சாதிகளிடையே பார்ப்பனியமயாக்கும் முயற்சியும் அவர்களை இறைச்சி மற்றும் பால் பொருட்களில் இருந்து தூர விலக்கி வைத்துள்ளன. அங்கு உள்ள ஜைன மதங்களை சேர்ந்தவர்களது புலால் உண்ணாமையும் சேர்ந்து அங்கு வெட்டப்படும் ஆடுகளின் இறைச்சியை கட்டாய ஏற்றுமதியை நோக்கித் தள்ளுகின்றன.

ஆனால் இத்தகைய வியாபாரங்களில் ஆதிக்க, இடைநிலை சாதிகளும்,பார்ப்பனர்களும்,ஜைன மதத்தினரும் கணிசமாக இருக்கின்றனர். கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பது இவர்களுக்கு பொருந்தாது போலும்.

மூன்றாவதாக அதிகபட்ச ஆடுகள் பீகார், தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் சம அளவில் இருக்கின்றன. தமிழகத்தில் நகர்மயமாதலின் தாக்கமும், பார்ப்பனிய எதிர்ப்பு மரபும் இருப்பதால் இங்கு கணிசமாக மக்கள் இறைச்சியை அதிக அளவில் உணவாக எடுத்துக் கொள்கின்றனர். எனினும் கிராமப்புற விவசாயிகளைப் பொறுத்த வரையில் இறைச்சி சாப்பிடுவது ஆடம்பரம் என்ற பொருளாதார காரணத்தால் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. மற்றபடி பெரும்பாலான சிறு நகரங்கள், பேரூராட்சிகள் வரை தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், வடகிழக்கு போன்ற மாநிலங்களில் கணிசமானோர் ஆட்டிறைச்சியையும், ஓரளவு மாட்டிறைச்சியையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். கேரள, வங்கத்தில் இடதுசாரி செல்வாக்கு, வடகிழக்கில் இந்தியாவிலிருந்து வேறுபடும் பண்பாட்டு வரலாறு காரணமாக இறைச்சி நுகர்வு அதிகம் இருக்கிறது.

நாட்டிலேயே மொத்த இறைச்சி உற்பத்தியில் குறிப்பாக மாட்டு இறைச்சி உற்பத்தியில் உத்திர பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது. அதுவும் இன்னொரு இந்துத்துவா கோட்டையாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் மாட்டிறைச்சியை அதிகமாக உணவில் பயன்படுத்துபவர்களில் கேரள மக்கள்தான் இந்திய அளவில் முன்னணியில் இருக்கின்றனர். பசுவைக் கொல்வதை சில மாநிங்கள் தடை செய்துள்ளன. இதனை பாஜக மட்டுமே செய்யவில்லை. காங்கிரசும் இதில் அவர்களது பங்காளிதான். குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் டெல்லி ராஜஸ்தான் போன்ற பிற்போக்கு மிகுந்த மாநிலங்களில் பசுவைக் கொல்ல தடை இருக்கிறது. கேரளா, மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் வடகிழக்கில் மாத்திரம் தான் பசுவை சில நிபந்தனைகளுக்குட்பட்டு இறைச்சிக்காக கொல்வதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி இருக்கிறது என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். மாறாக எமனது வாகனமான எருமைக் கிடாக்களையும், மலடு தட்டிப் போன எருமை கிடாரிகளையும் பொதுவாக இறைச்சிக்காக பயன்படுத்துவது நடைமுறையில் இருக்கிறது. கருப்பாக பிறந்த காரணத்தினால் எருமைகளுக்கு பார்ப்பனிய புனித பீடத்தில் இடமில்லை.

எருமை மாடுஎன்னதான் புனிதக் கதை பேசினாலும், உலக அளவில் பசு, எருமை இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பசு, எருமைக் கறிகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நல்ல மவுசு இருக்கிறது. இங்கு வளர்க்கப்படும் மாடுகள் இயற்கையோடியைந்த முறையில் வளர்க்கப்படுவதும், அமெரிக்க மாடுகளை விட குறைவான வயதில் (ஏறக்குறைய 15 வயது) வெட்டப்படுவதும் இதற்கு காரணம் என்கிறார்கள். இந்திய வியாபாரிகள் சிலர் இதனை விட குறைந்த வயதிலும் மாடுகளை வெட்டி அவற்றின் இறைச்சியை ஏற்றுமதி செய்யும்போது கணிசமாக விலையை அதிகமாக பெற முடிகிறதாம்.

பொதுவாக இந்திய இறைச்சி சவுதி, ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஸ்பெயின், வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. கால்நடைகளின் குடல்களால் செய்யப்பட்ட பண்டங்கள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட இறைச்சி வகைகள், இறைச்சி குழம்பு, அடர் மாமிச தூள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி என பலவிதமாக பாடம் செய்யப்பட்டு வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதியாகிறது. இத்தகைய பாடம் செய்யும் வேலைகளில் சிறிய அளவில் கால்நடை வளர்ப்பவர்களால் நேரடியாக ஈடுபட முடியாத நிலைமையில் பெரிய அளவிலான மாடு வளர்ப்பு பண்ணைகள்தான் இதனை செய்கின்றன. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சிறு விவசாயிகள் சட்டப்பூர்வமற்ற முறையில் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளிடம் போகிறார்கள். மிகவும் அடிமாட்டு விலைதான் அவர்களுக்கு கிடைக்கிறது.

இந்தியாவில் இருந்து 80 சதவீத ஆட்டிறைச்சி இசுலாமிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்றுமதியாகிறது. வெள்ளாட்டு இறைச்சி ரூ 300 க்கும், செம்மறியாட்டு இறைச்சி ரூ 200 க்கும் என்ற விலையில் தான் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. ஆனால் இந்த ஏற்றுமதியில் பெரிய அளவில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கார விவசாயிகளாலேயே ஈடுபட முடிகிறது. பத்து ஆடுகள், இருபது ஆடுகள் எல்லாம் வைத்திருப்பவர்களால் இத்தகைய ஏற்றுமதி சாத்தியமில்லை.

விவசாய மற்றும் உணவு உற்பத்திக்கான ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் ஏற்றுமதியாகும் உணவுப்பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. வெறும் தரம், கொள்கை வகுப்புடன் மட்டும் நில்லாது பெரிய ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 170 ஒருங்கிணைந்த உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தலுக்கான குளிரூட்டும் நிலையங்களையும் அமைத்துள்ளது. இதுபோக தனியார் வசமுள்ள இத்தகைய நிலையங்களுக்கு தலா ரூ 15 கோடி வரை மானிய உதவியும் அளித்திருக்கிறது. 11-வது (2007-12) மற்றும் 12-வது (2012-17) ஐந்தாண்டு திட்டங்களில் எருமை கிடாக்களை காப்பாற்றுவது, மற்றும் இறந்து போகும் வீட்டு விலங்குகளை கையாள்வது குறித்தெல்லாம் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவையெல்லாம் இருந்தாலும் பார்ப்பனிய செல்வாக்கினால் இறைச்சி தொழில் என்பது ஏதோ ஒரு சட்டவிரோத தொழில் போலவே இங்கு பார்க்கப்படுகிறது.

இறைச்சிஇந்த நிலையில் சிறுவிவசாயிகள் ஆட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ய குளிர்சாதன வசதிகளை வட இந்திய மாநில அரசுகளும் ஏற்படுத்தித் தரவில்லை. ஒருபுறம் கோசாலைகளை அமைத்து ஜீவகாருண்யம் பேசும் இந்துத்துவா ஆட்சியாளர்களால் இம்மாநிலத்தில் இந்த இறைச்சி ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அப்படிப்பட்ட முயற்சிகள் மக்களின் வாழ்வாதார அடிப்படையான பிரச்சினையில் கைவைத்திடும் என்பதால் இம்மாநிலங்களில் பாஜக ஆட்சியாளர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். அதே நேரத்தில் இறைச்சி, பால் போன்றவற்றை பயன்படுத்தாமால் தொடர்ந்து இருந்து வருவதன் மூலம் தமது சாதியை பார்ப்பனர்களுக்கு இணையாக வளர்த்து விட இடைநிலை மற்றும் ஆதிக்க சாதியினர் முயன்றும் வருவதால் ஆடுகளை இறைச்சியாக்கி ஏற்றுமதி செய்வது மாத்திரம்தான் இங்கு சாத்தியமாகிறது. உள்ளூர் நுகர்வு அதிகரிக்க வழியில்லாமல் இருக்கிறது.

அதே நேரத்தில் இம்மாநிலங்களில் இருந்து அடிமாடுகளும், கூடவே அங்கிருந்து வெட்டி இறைச்சியாக மாற்றப்பட்டு கெட்டுப் போன நிலைமையில் இங்கு வருவதும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம்தான் உள்ளது.

சென்னை வரும் இத்தகைய ஆட்டு இறைச்சி ஏறக்குறைய கிலோ ரூ 150க்கே சில்லறை விற்பனையில் கிடைக்கிறது. சென்னையில் உள்ளூரில் வெட்டப்படும் ஆட்டிறைச்சி ரூ 480 வரை விற்கப்படுகிறது. ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் இருந்து தினந்தோறும் 4,000 கிலோ பழைய ஆட்டு இறைச்சி இங்கு வருகின்றது. ஜெய்ப்பூரில் இருந்து ரயில் மூலமாக சென்னை சென்டிரலை அடைய இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது. குளிர்சாதன வசதியிருப்பினும் வரும் இந்த ஆட்டிறைச்சி சென்னை சென்டிரல் வருவதற்குள்ளாகவே கெட்டுப்போவதும், திறந்து பார்க்கும்போது அதில் புழுக்கள் நெளிவதும் தினசரி காணக் கிடைப்பதுதான்.

இப்படி ரயிலில் வரும் உணவுப் பொருட்களுக்கு முறையாக ரயில்வே சுகாதார அலுவலர் சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும் என்பது தான் நிபந்தனை. ஆனால் இதெல்லாம் முறையாக பின்பற்றப்படுவது இல்லை. ரயில்வே பார்சல் மூலமாக அனுப்பப்படும் இந்த ஆட்டிறைச்சிக்கான பெறுநர் முகவரி ஏதாவது ஒரு பெயருடன், சென்னை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். இங்குள்ள மொத்த வியாபாரியுடன் ரயில்வே துறை சார்ந்த அதிகாரிகளும் இணைந்துதான் இந்த வலைப்பின்னல் செயல்பட்டு வருகிறது.

இப்படி வரும் இறைச்சியை பெரும்பாலும் சென்னையில் வீட்டு உபயோகத்திற்காக வாடிக்கையாளர்கள் வாங்குவது குறைவுதான். அதே நேரத்தில் சிறு உணவங்கள்தான் இவற்றை வாங்குகிறார்கள் என்பதும் முழு உண்மையில்லை. வரும் இறைச்சியில் பெரும்பாலானவற்றை வாங்குவது சென்னையில் உள்ள உயர்தர உணவகங்கள்தான். காரணம் இதனை கொஞ்சம் சுத்தப்படுத்திய பிறகு நீண்ட நாட்களுக்கு பதப்படுத்தும் குளிரூட்டப்பட்ட உயர் தொழில்நுட்பம் அவர்களிடம் இருக்கிறது. அடுத்து அங்கு வரும் வாடிக்கையாளர்கள், கூடுதலாக காசு கொடுத்தால் பொருள் தரமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதால் ராஜஸ்தான் கறியையை உள்ளூர் கறியோடு சேர்த்து விற்றால் யாரும் கண்டு பிடிக்க முடியாது.

இதற்கு அடுத்து இந்த கறி வாங்கப்படும் முக்கியமான இடம் டாஸ்மாக் பார்கள் என்கிறார்கள். அதாவது ஒரு இடத்தில் நம்பிக்கை என்கிற நடுத்தர வர்க்க போதையையும், இன்னொரு இடத்தில் உண்மையிலேயே போதையையும் இந்த கெட்டுப்போன இறைச்சியை விற்கும் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சாலையோர உணவகங்களிலோ பெரும்பாலும் சென்னையிலேயே வெட்டப்பட்டு மாநகராட்சி முத்திரை இட்டு வரும் செம்மறியாட்டு இறைச்சியில் கழித்துக்கட்டப்படும் எலும்புகள் மிக்க கறியை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களால் மறுநாளைக்கு கூட இறைச்சியை பத்திரப்படுத்த வசதிகள் இல்லாத காரணத்தால் உண்மையில் இங்குதான் அன்றன்று அறுக்கப்படும் ஆடுகளின் புத்தம் புதிய கறி கிடைக்கிறது. சிறு உணவங்களிலும் இதுதான் நிலைமை.

இப்படி இந்தியாவில் வளமான கால்நடை வளமும், மக்களுக்கு மலிவான விலையில் புரதச் சத்து கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆட்டிறைச்சியோ இல்லை மாட்டிறைச்சியோ மொத்த நாட்டிற்கும் கிடைத்து விடுவதில்லை. வட இந்திய மாநிலங்களில் பெரும் கால்நடை இருந்தும், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் நுகவர்வு இல்லாமல் வீணாக கெட்டுப்போக விடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் நுகர்வு அதிகம் இருந்தாலும் இங்கே போதிய அளவு இறைச்சி கிடைப்பதில்லை. அதனால்தான் இங்கு விலைகள் அதிகம் இருக்கின்றன.

பார்ப்பனியம் எனும் அமைப்பு முறை எப்படியெல்லாம் நமது நாட்டையும், மக்களையும் அலைக்கழிக்கிறது என்பதற்கு இந்த ஆட்டிறைச்சி உதாரணமே போதுமானதல்லவா?

–    கௌதமன்.

 1. Today people are used to take non veg food on a daily basis.Some decades ago, they took non veg once in a month. Too much non veg and lesser work nowaday

 2. அருமையான கட்டுரை தோழர்.கௌதமன்.

  இக்கட்டுரை எழுதுவதற்கு உங்களுக்கு உதவிய செய்திகள், கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றை கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டால், இவ்விசயம் குறித்து மேலும் படித்துத் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

  இது இக்கட்டுரைக்கும் மட்டும் அல்ல. இதுமாதிரி வருகிற அனைத்து ஆய்வுக்கட்டுரைகளுக்கும் தான்.

  சில கட்டுரைகளில் ”மேலும் படிக்க” என்ற தலைப்பின் கீழ் அக்கட்டுரையின் தொடர்புடைய, அக்கட்டுரை எழுதுவதற்குத் தேவையான கட்டுரைகளின், செய்திகளின் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. அது போல, இந்த மாதிரியான ஆய்வுக்கட்டுரைகளுக்கும் செய்தால், நன்றாக இருக்கும்.

  பரிசீலியுங்கள் தோழர்.

  நன்றி!

 3. Bala, Stefan and Parthiban.. hats off… I wish lot of people like you must teach courtesy to vinavu. Why till now vinavu did not write anything about Iraq issue?

 4. உலகம் முழுவதும் சைவத்திற்க்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்க தொடங்கிய பின்னர், எல்லா விதமான “கறி” வகைகளும் புறந்தல்ல படுகின்றன… ஏண்டா கெட்டுப்போன கறியை கடத்துரன்னு கேட்டா, கெளதம புத்தர் சொல்றான் காரணம், “வீட்டில வாங்கலையாம், ரோட்டு கடைல வாங்கலையாம், சின்ன சின்ன உணவகங்களில் வாங்கலையாம்””…. இதுக்கு ரயில் அதிகாரிகளும் உடந்தையாம் (அப்புறம் என்னா மயித்துக்கு அவனுங்க மாசம் பத்து வாட்டி கடத்தலை தடுக்கனும் )… எங்கே அரிச்சாலும் பிச்சைக்காரன் பின்னாடித்தான் சொரிவானாம், அது மாதிரி, வினவும்,அதுல கதை எழுதுற பயகளுக்கும், எல்லாம் பார்பனிய மயமாகத்தான் தெரியும்….. சில்லறைக்கு கால் அமுக்கப் போகும் வேலையைவிட, கெளதமனின் கட்டுரை மட்டமாக உள்ளது….

 5. அடேய் ​​​​ ——— மண்ணடையா, அவங்க மாநிலத்தில் மக்களை அசைவம் உண்ண தடை செய்வதால் வணிகத்துக்காக வேறு மாநிலங்களுக்கு விற்கிறார்கள். “பாப்ஸ்” என்ன ம—கு தடை செய்கிறார்கள்.

 6. இந்த லடச்சணத்தில் மாட்டுக்கறி உண்பதை குறித்து வேதத்தில் கூற பட்டு இருக்கிறதாம் அதற்க்கு இவர்கள் கூறும் எடுத்துக்காட்டும் வேடிக்கையாக இருக்கும் டி.என்,ஜா அவர்களின் புத்தகம் தான் இவர்களுக்கு கிடைத்த ஒரே ஆதாரம்.. அதில் தெரியாத்தனமாக தைத்ரிய பிரமாணத்தின் பாடல் ஒன்று கிடைத்து விட்டது..

  தைத்ரிய பிராமணம் சொல்லும் அதோ “atho annam via gauh”. சூபரு.
  அது ஆகாசாத் வாயு: (ஆகாசத்தில் இருந்து வாயு) என்று தொடங்கி ப்ருதிவ்யாஹ் ஒஷதீப்ய: (பூமியில் இருந்து செடிகள்), ஒஷதீப்யோ அன்னம் (செடிகளில் இருந்து அன்னம்) என்று சொல்கிறது, தஸ்மாத் அன்னம் பஹு குரிவீத (அன்னத்தை பெருக்குங்கள்). ஹிந்துவின் கூற்றுப்படி, பசு மாட்டை பெருக்குங்கள் 🙂

  முடிந்தால் மாட்டுக்கறி உண்டார்கள் என்று எந்த வேதத்தில் சொல்ல பட்டு இருக்கிறது என்று ஒரு பத்து ஸ்லோகங்களை காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம். அதுவும் அபத்தமாகவே இருக்கும்..

  • அப்படி ஒரு வேலை கூறினால்.. இந்துத்துவத்தை அம்பலபடுத்த நான் தயார்

  • ///முடிந்தால் மாட்டுக்கறி உண்டார்கள் என்று எந்த வேதத்தில் சொல்ல பட்டு இருக்கிறது என்று ஒரு பத்து ஸ்லோகங்களை காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம். அதுவும் அபத்தமாகவே இருக்கும்..///

   புள்ள.. இச்சுகூலுகு புச்சு போல… 🙂

  • தாயுமானவன் அவர்களுக்கு,

   தங்கள் பின்னூட்டம் படித்து பெரு உவகையுற்றேன். இந்துத்துவத்தை அம்பலப்படுத்துவதற்கு வாலண்டியராக வருவதற்கு சில சவால் விட்டிருக்கிறீர்கள். முதலில் ஒன்றை தாங்கள் பரிசிலீக்க கோருகிறேன். இந்துத்துவமே அம்பலப்பட்டுத்தான் போயிருக்கிறது. புதிதாக அம்பலப்படுத்த வேண்டுமானால் அதை உங்களிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

   தைத்ரிய பிராமணாவின் பாடலுக்கு தாங்கள் வழங்கிய மொழிபெயர்ப்பு மிகவும் மோசம். எந்த நாதாரி சொல்லிக்கொடுத்தது என்று தெரியவில்லை. போனால் போகட்டும். ஈசன் எழுதிய பாட்டுக்கு தருமி பரிசு வாங்கவில்லையா?

   இதே பாடலுக்கு பால்-எமில் டியுமண்ட்ன் மொழிபெயர்ப்பு, Proceedings of the American Philosophical Society 92.6, 485, 1948 சஞ்சிகையில் இவ்வாறாக வெளிவந்திருக்கிறது, “(At the horse-scarifice) he (the adhvaryu) seizes (binds) the cow (i.e. cows). The cow is the sacrifice. (Consequently) it is the sacrifice he (the sacrificer) thus obtains. And the cow certainly is food. (Consequently) it is the food he thus obtains” என்பதாகும். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் நாம் ஒரு Rebuttal letter எழுதி இக்கட்டுரையை திரும்பப் பெறலாம். இதற்குதாங்கள் முன்வர வேண்டும்.

   ஒரு வேளை நீங்களே மொழிபெயர்த்து இருந்தால் தமிழர்களுக்கு சமஸ்கிருதம் வராது என்பதற்கு இது மிகச் சிறந்தசான்றாகும். நம்முடைய பண்பாடு பார்ப்பன எதிர்ப்பு பண்பாடு என்பதற்கு தங்களது தத்து-பித்து மொழிபெயர்ப்பு சிறந்த உதாரணம்.

   “முடிந்தால் மாட்டுக்கறி உண்டார்கள் என்று எந்த வேதத்தில் சொல்ல பட்டு இருக்கிறது என்று ஒரு பத்து ஸ்லோகங்களை காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்.” என்று கேட்டிருக்கிறீர்கள்.

   டி என் ஜா புத்தகத்தின் இரண்டாவது பகுதி இதைப்பற்றியதுதான். ஸ்லோகங்களின் லொகேசனை அடுக்குகிறேன். தாங்கள் மற்றுமொரு மொழிபெயர்ப்பு எழுதினால் தேவலை. கேட்ச் பிடித்துக்கொள்ளுங்கள்; Rigveda (RV), RV, II, 41.7; RV, VI.45.21, RV, VII.27.5; RV, VII.77.5; RV, VII, 94.9; RV, IX.41.4, RV, IX, 61.3; RV, VIII.53.8, RV, IX.97.15; RV, VII.23.3, VIII.17.15; AV, V. 20.11, RV, VIII, 53.8, IX, 97.15, RV, VII.23.3, RV, VIII.17.15, இதற்கு மேல் கை வலிக்கிறது. ரிக்வேதம் மாட்டுக்கறி சமையல் புத்தகமோ என்னவோ? யார் கண்டது?

 7. மாட்டிறைச்சில அதிகமான புரத சத்து உள்ளது சாப்பிடுங்கள் இந்திய நாய்கள் குலைப்பதை பொருப்படுத்தாதீர்கள் மற்ற நாடுகளில் இறைச்சிதான் பிரதான உணவு காந்தி ,சைவ உணவு, ஜீவகாருன்யம்னு பேசுரவன் எவனும் உழைச்சு சாப்பிடுரது இல்லை எனக்கு தெரிந்து ,மாட்டிறைச்சி உழைக்கும் மக்களின் உணவு அதை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை அப்பிடி எவானுது சொன்னா அவன் போலி சமத்துவவாதி காந்தியைப்போல

  • மாட்டிறைச்சி தின்னாதேன்னு சொல்றவன் சமத்துவவாதி இல்லை. சூப்பர்.

   சைவம் தின்றவன் உழைக்கரவனே இல்லை அப்படின்னு ஒரு போடு போட்டீங்க பாருங்க. நீங்கதான் சமத்துவவாதி.

   மாட்டிறைச்சி தின்பவனை அவன் வெறுக்கிறான். தின்னாதவனை நீங்கள் வெறுக்கிறீர்கள். இரண்டு பேருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. இருவரையும் பார்ப்பனர்கள் என்ற வகைக்குள் அடைக்கலாம் என தோன்றுகிறது.

   • மாட்டுக்கறி தின்னாதவன் தின்பவனை வெறுக்கும்போதுதான் தின்பவன் தின்னாதவனை வெறுக்கவேண்டி வருகிறது

    • மாட்டுக்கறி தின்பவனை வெறுக்கும் மாட்டுக்கறி தின்னாதவனை, மாட்டுக்கறி தின்பவன் வெறுப்பது நியாயமே தவிர, மாட்டுக்கறி தின்பவனை வெறுக்காத மாட்டுக்கறி தின்னாதவனை, மாட்டுக்கறி தின்பவன் வெறுப்பது என்ன நியாயம்?

     • வெங்கடேசன், மாட்டுக்கறி தின்பது, தின்னாதது என்பதை தனிநபர்கள், அவர்களது கருத்து, மற்றவரது உணவுப் பழக்கம் குறித்த ஜனநாயக உரிமையை அங்கீகரிக்கும் நாகரீகம் என்பதாக பார்க்கிறீர்கள். மாட்டுக்கறி தின்னாதவனை வெறுப்பது என்பது இங்கே உங்களது பார்வைப்படி பார்த்தாலும் வெறுமனே தனிநபர்களது ‘பலவீனமான’கருத்தாக மட்டும் இருக்கிறது. ஆனால் மாட்டுக்கறி தின்னுபவர்களை வெறுப்பது என்பது சட்டபூர்வமாகவும், மறுத்தால் தண்டனையாகவும், கொலையாகவும், இந்துமதவெறியாகவும், புனிதமாகவும்,அதாவது சட்டபூர்வமாக நிலைநிறுத்தப்பட்ட பார்ப்பனியமாகவும் இருக்கிறது. இதை பரஸ்பரம் இருதரப்பிலுள்ள உணவு பழக்கம் குறித்த பிரச்சினையாக பார்ப்பது சரியா? ஏன்?

      • வினவு,
       நீங்கள் சொல்வது சரிதான். மாட்டுக்கறி தின்பது-தின்னாதது என்பதை தனி நபர் உணவுப் பழக்கம், விருப்பு, உரிமை என்பதாகவோ, இந்தப் பிரச்னையை அஜித்-விஜய் விசிறிகள் இடையே நடக்கும் விடலைத்தனமான பூசல் போலவோ சுருக்கி விட முடியாது. இந்துமத வெறியர்கள் மற்றவர் மீது தமது கருத்துக்களை திணித்து வன்முறை செய்கின்றனர். வழிபாட்டு வழக்கங்கள் போன்ற இந்துமதம் தொடர்பான மற்ற சில விஷயங்களிலும் இதே கருத்தை கூற முடியும். இந்தக் கருத்தோடு உடன்படுகிறேன்.

       இந்த கெட்ட சமூக சூழ்நிலையை மாற்றிவிட்டு அமைய வேண்டிய நல்ல சூழ்நிலை (ideal scenario) என நீங்கள் எதை முன்வைக்கிறீர்கள்? இரண்டு சூழ்நிலைகள் எனக்குத் தோன்றுகின்றன. ஒன்று, இப்போது எந்தத் தரப்பின் கை மேலோங்கி இருக்கிறதோ அதை அமுக்கிவிட்டு, எந்தக் கை தாழ்ந்துள்ளதோ அதை மேலுழுப்பி நிலை நிறுத்துவது. உதாரணமாக, இந்துமத வழிபாட்டு உரிமைகளை தடை செய்வது, மாட்டுக்கறி உண்பதை கட்டாயமாக்குவது என்பதுபோல. இரண்டு, இவை எல்லாம் தனிபர் விருப்பு சார்ந்த உரிமைகளாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பது. உதாரணமாக, புளியோதரை x பர்கர் என யாரும் உணவுப் பிரச்சனை கிளப்பாமல், இது தனிநபர் விருப்பு என்ற வகையில் சுருங்கி உள்ளது போல. இந்த இரண்டில் நீங்கள் முன்வைக்கும் மாற்று சூழல் எது? இரண்டாவது வகை என நம்புகிறேன்.

       எனில், இந்துமத வழக்கங்கள், மாட்டுக்கறி உண்ணாமை போன்றவற்றை மேற்கொள்வோரில் இரண்டு வகை உண்டு என்பது என் கருத்து. முதலாமவர், இவற்றை முன்வைத்து, மற்றவர் மீது திணித்து வன்முறை செய்வோர். இரண்டாம் வகையினர் இவற்றை தனிநபர் உரிமை என்ற அளவில் சுருக்கி தன்னளவில் மேற்கொள்வோர். இந்த வகைப்பாட்டை ஏற்கிறீரா? (இதிலும் ஒரு ஸ்பெக்ட்ரம் வருமென நினைக்கிறேன், அதை தற்போதைக்கு ஒத்திவைப்போம் 🙂

       எனில், இவர்களில் உங்கள் எதிரி யார்? முதலாவது வகையினர் என எண்ணுகிறேன். ஆனால், உங்கள் கட்டுரைகளில் ஆங்காங்கேயும், மறுமொழிகளில் பரவலாகவும் இரண்டு பிரிவினரையும் ஒரு குழுவாக கருதுவதாக எனக்குத் தோன்றுகிறது. அவ்வகையில் உங்கள் எதிர்ப்பு-வெறுப்பு இரண்டாம் வகையினர் மீதும் விழுகிறது. உதாரணமாக, மறுமொழி 9, அதன் பின்னூட்டங்களை படித்துப் பாருங்கள்.

       இவ்வாறு செய்வது சரியன்று என எண்ணுகிறேன். மேலும், இப்பாகுபாட்டை நிராகரிப்பது, உங்கள் நிஜ எதிரிகள் மீதான தாக்குதலை நீர்த்து, உங்கள் எதிரியல்லாத இரண்டாம் வகையினரை, தேவையின்றி அந்நியப்படுத்தி, முதல் வகையினர் நோக்கி செலுத்துகிறது. அவ்வகையில், இது உங்களுக்கும் பயனுள்ளதன்று.

       சில சமயங்களில், இந்த கருத்தை மனதில் வைத்து நான் எழுதும் மறுமொழிகள், எனது எழுத்துக் குறைபாடு காரணமாகவோ என்னவோ, தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன.

      • பாப்பாண்டவரும், ஆயத்தொல்லாக்களும் எந்தவிதக் கட்டுப்பாடும், சட்டங்களும் இல்லாத சுதந்திரமான மதம் அல்லது வழிபாட்டு முறை தான் இந்துமதம் என்பது தான் உண்மை. இந்து என்பதற்கு தெளிவான வரைவிலக்கணம் கிடையாது. எமக்கு விரும்பியவாறு எதையும், எப்படியும் வணங்கிக் கொண்டு எம்மை இந்து என்று அழைத்துக் கொள்ளலாம். அந்தச் சுதந்திரம் எந்த மதத்திலும் கிடையாது. அப்படியிருக்க “ஆனால் மாட்டுக்கறி தின்னுபவர்களை வெறுப்பது என்பது சட்டபூர்வமாகவும், மறுத்தால் தண்டனையாகவும், கொலையாகவும்……” என்கிறது வினவு. அதைப் பற்றி மேலும் விளக்கினால் நல்லது.

       பார்ப்பனர்களும், இந்தியாவில் நீங்கள் எதிர்க்கும் ஆர். எஸ். எஸ் காரர்கள் மட்டும் இந்துக்கள் அல்ல. இந்துக்கள் உலகம் முழுவதும் வாழ்கிறார்கள். அதில் பல லட்சம் பேர் மாடு தின்னுபவர்கள். அவர்களும் தம்மை இந்துக்கள் என்று தான் அடையாளப்படுத்துகிறார்கள். எந்தச் சட்டத்தில் மாட்டுக்கறி தின்னுபவர்களை வெறுப்பதும், மறுத்தால் தண்டனை கொலை எனக் கூறப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தின்படி உலகிலுள்ள இந்துக்கள் எல்லோரும் ஒழுகுகிறார்களா, அந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? இந்துக்களில் பலருக்கு அப்படி ஒரு சட்டம் இருப்பதே தெரியாது என்பது தான் உண்மை. நான் கூட, வினவின் பதிலிலிருந்து, இனிமேல் தான் அந்தச் சட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளப் போகிறேன். 🙂

       • வியாசன்,

        இந்து என்பதற்கு வரைவிலக்கணம் என்ன? யார் இந்து யார் இந்து இல்லை என்பதை தீர்மானிப்பது எப்படி? யார் வரையறுத்து சொல்வது? யாருக்கு அதிகாரம் இருக்கிறது?
        இது இப்போது எப்படி / எந்நிலையில் இருக்கிறது? வரலாற்றில் எப்படி இருந்தது?

        • நான் கேட்ட கேள்வியையே என்னிடம் திருப்பிக் கேட்டால் எப்பூடி? அது தான் என்னுடைய கேள்வியும். ‘இந்து என்பதற்கு தெளிவான வரைவிலக்கணம் கிடையாது’ என்பதை நான் முன்பே கூறியுள்ளேன். யார் இந்து, யார் இல்லை என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்து மதத்தில் யாருக்கும் கிடையாது. இந்துக்கள் எல்லோரும், எந்தவொரு பாப்பண்டவருக்கோ, முல்லாவுக்கோ, சங்கராச்சரிகளுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்ல. அந்த தனிமனித சுதந்திரம் தான் இந்துமதம் இத்தனை படைஎடுப்புகளுக்கும், கட்டாய மதமாற்றங்களுக்குப் பின்னரும் அழியாமலிருப்பதற்குக் காரணம். எந்தச் ‘சட்டம்’ இந்துக்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை வினவு தான் விளக்க வேண்டும்.

        • வியாசன்,

         //எந்தச் ‘சட்டம்’ இந்துக்களைக் கட்டுப்படுத்துகிறது//

         சூத்திரர்களும், பஞ்சமர்களும் அடங்கிய பெரும்பான்மை உழைக்கும் மக்கள் எப்போதும் இந்துமதத்திற்குள் இருந்தார்களா? எப்படி எப்போது இந்து மதத்திற்குள் கொண்டு வரப்பட்டார்கள்? என்பதை நீங்கள் விளக்குங்கள் முதலில்..

         இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ‘இந்துக்கள்’ என்பதற்கான வரையறை என்ன என்று தெரியுமா?

         • ///சூத்திரர்களும், பஞ்சமர்களும் அடங்கிய பெரும்பான்மை உழைக்கும் மக்கள் எப்போதும் இந்துமதத்திற்குள் இருந்தார்களா? எப்படி எப்போது இந்து மதத்திற்குள் கொண்டு வரப்பட்டார்கள்? ///

          இப்படியான கேள்விகள் எல்லாம் வெறும் விவாதத்துக்கு உதவுமே தவிர நிஜ வாழ்க்கைக்கு அல்ல. மாடு தின்னும் சூத்திரர்களினதும், பஞ்சமர்களினதும் சேரிகளில் கூட இந்துக்கடவுளர்கள் தான் பல்லிளித்துக் கொண்டு நிற்கிறார்கள். அவர்களை வணங்கும் சூத்திரர்களும், பஞ்சமர்களும் தம்மை இந்துக்கள் என்று தான் அடையாளப் படுத்துகிறார்கள். எங்கேயோ ஒரு பார்ப்பனப் பரதேசி, அவர்கள் மாடு தின்னுவதால் இந்துக்கள் அல்ல என்று கூறுவதைப் பற்றி, உங்களைப் போன்ற கம்யூனிஸ்டுகள் இப்படியான இணையத் தளங்களில் கவலைப்படலாம், விவாதிக்கலாமே தவிர, அவர்கள் தம்மை இந்துக்களாகத் தான் எண்ணுகிறார்கள். எப்பொழுது தமிழர்களின் கொற்றவையும், வேங்கடத்து நெடியோனும், சேயோனும், மாயோனும், மாரியம்மனும் இந்துக் கடவுள்களாக்கப்பட்டடனர். எப்பொழுது பார்ப்பனர்கள் வந்து தமிழர்களின் முன்னோர்களின் கோயில்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. இந்துக் கடவுளர்களாக இப்பொழுது கருதப்படும் தெய்வங்களை வழிபடும் அனைவரும், அவர்கள் மாட்டைத் தின்றாலென்ன, மனிதரைத் தின்றாலென்ன இந்துக்கள் தான். அவர்களை இந்துக்கள் அல்ல என்று யாரும் கூற முடியாது. இந்து மதத்தில் அப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. மாடு தின்றாலும் தவறாமல் ஐயப்பனுக்காக மாலை போட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டுத் தலித்துகளும், யாழ்ப்பாணத்தில் சாதி வேறுபாடில்லாமல் ஆயிரக்கணக்கில் ஆடுகளை வைரவருக்கு வெட்டி வேள்வி செய்யும் வெள்ளாளரும்,. பஞ்சமரும், மரக்கறி உணவை மட்டும் உண்ணும் பார்பனர்கள் மட்டுமல்ல, கங்கைக் கரையில் மனித மாமிசத்தை உண்ணும் அகோரிகளும் கூட இந்துக்கள் தான்.

          //இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ‘இந்துக்கள்’ என்பதற்கான வரையறை என்ன என்று தெரியுமா?//

          இந்துக்கள் என்போர் இந்தியாவில் மட்டும் வாழவில்லை. அதனால் இந்திய அரசியலமைப்பின்படி இந்துக்கள் என்பதற்கான வரையறை இந்தியாவிலுள்ள இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும். அதனால் இனிமேல் ‘இந்தியாவிலுள்ள இந்துக்கள்’ என்று சரியாகக் குறிப்பிடப்பட வேண்டும். மாடு தின்பவர்களை தீண்டத்தகாதவர்கள் எனக் கருதாத இந்துமதமும், இந்துக்களும் இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவுக்கு வெளியிலும் உள்ளார்கள். பார்ப்பனர்களைச் சுற்றியே சிலரின் உலகம் சுழல்வது தான் இப்படியான வாதங்களுக்கெல்லாம் காரணம். 🙂

          • வாதத்தை விடுங்கள் வியாசன் கருப்பசாமியையும் மாரியம்மனையும் வணங்குகிறவர்களும் இந்துக்கள்தான் என்று ஆ ர் எஸ் எஸ் காரனை போல நீங்களும் கடந்து போகிறிர்களே ஏன் மாடு துன்னும் இந்து தாழ்த்தப்பட்ட இந்துக்களின் வீடுகளில் இருக்கும் சாமி அவர்களின் வீதிக்கு வராதது பற்றி கவலை கொண்டீர்களா இல்லை அவர்களின் வீடுகளுக்கு எல்லா கடவுளின் தரிசனம் கிடைப்பதற்க்கு எதாவது போராட்டம் நட்த்தினீர்களா அவனவன் வீட்டுல அவனவன் இசுட்டத்துக்கு சாமி கும்புடுரான் அதனால் அவர்களும் இந்துக்கள் தான் என்று சொல்லி ஏற்ற தாழ்வுகளை களையாமல் அதை களைய எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கும் உங்களுக்கு ஆர் எஸ் எஸ் காரனுக்கும் என்ன வித்தியாசம் உங்களுக்கு கணக்கு காட்ட மட்டும்தான் தலித்துகள் வேண்டுமா வியாசன் இல்லை அவர்களின் ஆண்மீக விடுதலை வேண்டுமா முடிவு உங்கள் கையிள் நீங்கள் சாதி ரீதியான் ஒடுக்குதலை சந்திக்காத இந்து என்று நான் நம்புகிறேன்

       • மாட்டிறைச்சி உண்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று எந்த சட்டம் சொல்கிறதோ அந்த சட்டம் மாட்டிறைச்சி உண்பவர்கள் தலித்கள் கோவிலுக்குள் சொல்ல முடியாதவர்கள் என்று எந்த சட்டம் சொல்லுகிறதோ அந்த சட்டம் எனவே கனம் கோட்டார் அவர்களே உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை இதில் எது சிறந்த சட்டமோ அதை கொண்டு குற்றவாளிக்கு தண்டனை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன், என்ன இன்னிக்கு ரெம்ம உளருது ………

        • //மாட்டிறைச்சி உண்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று எந்த சட்டம் சொல்கிறதோ//

         எந்தச் சட்டம் அப்படிச் சொல்கிறது. அதை இந்துக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு, அதன்படி நடந்து கொள்கிறார்களா? இந்துக்கள் என்பது ஒரு சில பார்ப்பனர்கள் மட்டுமல்ல. உதாரணமாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களில் கணிசமானோர் மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள் (பெரும்பாலானோர் என்று கூடக் கூறக் கூறலாம்).அவர்கள் தான் உலகின் மூலை முடுக்கெல்லாம் கோயில் கட்டுகிறார்கள். வெள்ளிகிழமை கோயிலில் சாமி தூக்கி விட்டு, ஞாயிற்றுக்கிழமை மாட்டிறைச்சியை ஒரு பிடி பிடிப்பவர்களுமுண்டு. அவர்கள் எல்லாம் தீண்டதகாதவர்களா? அவர்கள் இந்துக்கள் இல்லையா? எந்தக் கோயிலிலும் நீ என்ன இன்றைக்குச் சாப்பிட்டாய் என்று கேட்டுப் பார்த்து விட்டு, கோயிலுக்குள் போக விடாமல் தடுப்பதில்லை.

       • //இந்துக்கள் உலகம் முழுவதும் வாழ்கிறார்கள். அதில் பல லட்சம் பேர் மாடு தின்னுபவர்கள்//

        தமிழகத்தில் ஜனத்தொகையே கிட்டத்தட்ட 7 கோடிகள். அதில் கொஞ்சம் தவிர்த்து பிற கோடிமக்கள் இந்துக்கள். அதில் அசைவம் கொள்வோரே அதிகம். இப்படியிருக்க வெறும் லடசம் பேர் அசைவம் கொள்வோர் என வரும்?

   • மாட்டுக்கறி உண்பவர்கள் மாட்டுக்கறி உண்ணாதவர்கள் என்ற காரணத்திற்காக யாரையும் கொல்வதில்லை.ஆனால் மாட்டுக்கறி உண்ணாதவர்கள் அதனை உண்பவர்களை மாட்டுக்கறி உண்பவர்கள் என்ற காரணத்திற்காக கொலை செய்கிறார்கள்.எ,கா.லச்சார்.

    \\மாட்டிறைச்சி தின்பவனை அவன் வெறுக்கிறான். தின்னாதவனை நீங்கள் வெறுக்கிறீர்கள். இரண்டு பேருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை//

    இந்த வேறுபாடு போதுமா,இன்னும் கொஞ்சம் வேண்டுமா.

    • பன்றிக்கறி உண்ணாதவர்கள் பன்றிக்கறி உண்பவர்களை வெறுக்கிறார்கள், அருவருப்பாக பார்க்கிறார்கள், அவர்களை அசுத்தமானவர்கள் என்று ஒதுக்குகிறார்கள், அவர்களின் வீடுகளின் உணவுண்பதை, தண்ணீர் அருந்துவதைக் கூட தவிர்க்கிறார்கள். அப்படித் தானே மாட்டுக்கறி உண்ணாதவர்கள், மாட்டுக்கறி உண்பவர்களிடமும் நடந்து கொள்கிறார்கள். இந்த விடயத்தில் மாட்டுக்கறி உண்ணாதவர்களுக்கும், பன்றிக்கறி உண்ணாதவர்களுக்கும் பெரிய வேறுபாடிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 🙂

     • பன்றிக்கறி உண்ணாதவர்கள் பன்றிக்கறி உண்பவர்களை பன்றிக்கறி உண்பவர்கள் என்ற காரணத்திற்காக கொலை செய்கிறார்கள்லா?

      • //பன்றிக்கறி உண்ணாதவர்கள் பன்றிக்கறி உண்பவர்களை பன்றிக்கறி உண்பவர்கள் என்ற காரணத்திற்காக கொலை செய்கிறார்கள்லா?///

       கொன்றால் மட்டும் தான் தவறா? பன்றிக்கறி தின்பவர்களை வெறுத்தால், அசுத்தமானவர்கள் என்று ஒதுக்கினால், அவர்களைத் தாழ்த்தினால், அவர்களின் வீடுகளில் உணவுண்பதைத் தவிர்த்தால், அல்லது தவிர்க்க முடியாத காரணத்தால், வேறுவழியேயில்லாமல் அவர்களின் வீடுகளில் உணவுண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவர்களின் வீட்டுப் பாத்திரங்களை நன்றாக கழுவி விட்டுத் தான் உபயோகிக்க வேண்டும் என்பதெல்லாம் தவறில்லையா?

       அதை விட இந்துக்கள் எல்லோருமே மாட்டுக்கறியுண்பவர்களைக் கொல்கிறார்களா? 🙂

       • 07-அக்டோபர்-2013 அன்று தினமலர் “ராமேஸ்வரம் கோயிலுக்குள் புகுந்த பன்றி: பரிகார பூஜை!” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டது,

        அதன் ஒரு பகுதி இவ்வாறாக போகிறது; “பன்றி புகுந்த தீட்டு கழிக்க, அம்மன் சன்னதியில் பஞ்ச கவ்ய, சபன கும்ப அபிஷேகம், வாஸ்து சாந்தி பரிகார பூஜை செய்து, கோயிலுக்குள் புனித நீரை குருக்கள் தெளித்தனர். பூஜையின் போது, பக்தர்கள் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை.”

        அது குறித்து ராமேஸ்வரம் பிராமணர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஆன்மீக முறைப்படி, கோமாதாவின் எச்சில் கூட மனிதர் மேல் படக்கூடாது. ஆனால், கோயிலுக்குள் பன்றி புகுந்தது, வாஸ்து தோஷம் ஏற்பட்டு உள்ளதுடன், மக்களுக்கும், ராஜாங்கத்தை (தமிழகம்) ஆளும் தலைவருக்கும், ஊருக்கும்(ராமேஸ்வரம்) தீங்கு ஏற்படும். தற்போது கோயிலில் சம்பிரோக்சனம், வாஸ்து சாந்தி பூஜை செய்து, பரிகாரம் செய்திருப்பர். ஆனால் மக்கள், ஆட்சியாளருக்கு தீங்கு ஏற்படுவதை தடுக்க, ஆன்மீக பெரியோர் மூலம் ஜோசியம், பிரஸ்ணம்(சோளி உருட்டுதல்) பார்த்து, அதில் கூறும் பரிகாரத்தை நிறைவேற்றிட, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தார்.” என்று தினமலர் தெரிவித்திருக்கிறது.

        இந்து மதம் பன்றியை தீட்டாக மதிப்பிடுகிற பொழுது (இத்துணைக்கும் பன்றி திருமாலின் அவதாரம் வேறு) வியாசன் நெருப்பில் குளிர் காய்கிறாரா? இல்லை இசுலாமிய வெறுப்பில் குளிர் காய்கிறாரா?

        திப்புவிடம் வியாசன் கேட்ட கேள்விக்கு வியாசரே பதில் சொன்னால் தேவலை.

        • நேற்றுத் தான் “Koheda Yanne, Malle Pol” என்ற சிங்களப் பழமொழியை ஒரு சிங்கள நண்பர் கூறக் கேள்விப்பட்டேன். “எங்கே போகிறாய் – Koheda Yanne? “ என்ற கேள்வியைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒரு Village idiot, அந்தக் கேள்விக்குப் பதிலாக “Malle Pol – என்னுடைய பையில் தேங்காய் இருக்கிறது” என்றானாம். இன்றைக்கு, தென்றல் அவர்களின் பதிலைப் பார்த்ததும், அந்தப் பழமொழி தான் எனக்கு நினைவுக்கு வந்தது. 🙂

         ராமேஸ்வரம் கோயிலிலாவது பன்றியின் தீட்டுப்பட்டு விட்டது என்று பூசை செய்தார்கள், ஆனால் குருவாயூரில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், இலங்கையில் முதல் பெண்மணியுமாகிய சிராந்தி ராஜபக்ச, ஒரு கிறிஸ்தவர், அவர் குருவாயூர்க் கோயிலுக்குள் நுழைந்து விட்டார் என்று நாற்பது நாள் திருஷ்டி பூசை நடத்தினார்கள் கோயில் நிர்வாகிகள் என்பதை தோழர் தென்றல் கேள்விப்படவில்லைப் போலிருக்கிறது. ஒரு ‘நட்பு நாட்டின்’ முதல் பெண்மணியையே அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட இந்துக் கோயில்களில், பன்றிக்கு தீட்டு கழித்தது பெரிய அதிசயம் அல்ல. அது கூடத் தெரியாமல், கேள்விக்குச் சம்பந்தமேயில்லாமல் எல்லாம் தெரிந்த தோழர் தென்றல் பதிலெழுதியது தான் அதிசயமாக இருக்கிறது.

         பெரும்பாலான இந்துக்களின் வீட்டில் மட்டுமல்ல, அந்தப் பன்றியைக் கொன்று, அதன் இறைச்சியை உண்ணும் இந்துக்கள் கூட, அவர்கள் சேரியில் வாழ்ந்தாலும், பன்றியை, அவர்கள் வாழும், அவர்களின் குடிசைக்குள் விட்டு வளர்ப்பதில்லை. ஏனென்றால் பன்றி அசுத்தமானது, அது அசுத்தங்களை உண்கிறது என்பதை, அதை உண்பவர்கள் கூட ஒப்புக் கொள்கிறார்கள் என்பது தான் உண்மை. அதனால் பன்றி கோயிலுக்குள் புகுந்ததால் ஏற்பட்ட அசுத்தத்தைக் கழிக்க பூசை செய்ததை, ஏதொ பெரிய கண்டுபிடிப்பு போல, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார் தோழர் தென்றல்.

         என்னுடைய கேள்வி என்னவென்றால் மாட்டிறைச்சி உண்ணுகிறவர்களை மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் வெறுக்கிறார்கள், “கொல்லுகிறார்கள்”, பாரபட்சமாக நடத்துகிறார்கள் என்ற முறைப்பாட்டை, பன்றி உண்ணுகிறவர்களை வெறுக்கும், பாரபட்சமாக நடத்தும் பன்றி உண்ணாதவர்கள் செய்ய முடியுமா என்பது தான். இங்கு இறைச்சி தான் வேறு வகையே தவிர, இரண்டு மதத்தினரும் அதாவது, மாடு, பன்றி உண்ணாதவர்கள், மாட்டையும், பன்றியையும் உணவாகக் கொள்ளுகிறவர்களை மத அடிப்படையில் வெறுக்கிறார்கள், அவர்களின் வீடுகளில் உணவு உண்பதை தவிர்க்கிறார்கள். அவர்களை அசுத்தமானவர்களாக நினைக்கிறார்கள் என்பது தான்.

         • அடிக்கடி மஞ்சப் பந்தைப் போட்டு அற்பவாதியாக இளிக்காதீர்கள் வியாசன். அதையும் தாண்டி எச்சிலாக ஒழுகுகிறது உங்கள் மதவெறி,

          “பன்றி புகுந்த தீட்டு” என்று தெளிவாக இருக்கிறது முந்தைய பின்னூட்டத்தில். இந்து மதமே சாதியின் அடிப்படையில் உணவுகளைப் பிரித்து மனிதர்களை தீட்டு என்கிறது. இந்து மதத்தின் தீட்டைச் சரிகட்ட அசுத்தம் என்று பூசி மழுப்பினாலும் தாங்கள் அம்பலப்படு இரண்டு மணிநேரம் ஆகிறது.

          திருஷ்டி பூசை செய்வதற்கும் புனித நீரை தெளிப்பதற்கும் வித்தியாசம் தெரியாத உமக்கு பழமொழி ஒரு கேடா?

          உமக்கு அசுத்தம் பிரச்சனை என்றால் இசுலாமியனும் அதை அப்படித்தான் பார்க்கிறான். அசுத்தம் பார்க்கிறவனுக்கு மாமிசம் தான் பிரச்சனை. உங்களைப் போன்ற சாதிமத வெறியர்களுக்கோ மனிதர்களே பிரச்சனை.

          உமக்கு அடிப்படை மனித நேயமே கிடையாது. இரத்த கவுச்சியுடன் அலைகிற நீர் இந்த முறைப்பாட்டை கையில் எடுக்க முடியுமா?

          மத அடிப்படைவாதம் என்கிற பொழுது பேய்பிடித்தவனை (இசுலாமியனை) புளிய விளாரால் அடித்துக் கொன்றுவிடலாம். அது எளிது. அது தான் நீர் எதிர்பார்ப்பது. ஆனால் பார்ப்பனீய பேய்களை எப்படி விரட்ட முடியும்?

          • //திருஷ்டி பூசை செய்வதற்கும் புனித நீரை தெளிப்பதற்கும் வித்தியாசம் தெரியாத உமக்கு பழமொழி ஒரு கேடா?//

           தென்றல் உண்மையிலேயே சுவனத்திலிருந்து வீசும் தென்றல் என்பதை இடைக்கிடையே தன்னை அறியாமலே அவர் வெளிப்படுத்தி விடுகிறார். 🙂

           திருஷ்டி பூசையின் முடிவிலும், புனித நீரைத் தான் தெளிப்பார்கள். அதாவது திருஸ்டி என்பதும் குற்றம் பட்டு விட்டது, களங்கப்பட்டு விட்டது அல்லது நடக்கக் கூடாதது நடந்து விட்டது என்பது தான். அதிலும் ராஜபக்சவின் மனைவி குருவாயூரைக் களங்கப்படுத்தி விட்டதாகவும், அதை நீக்குவதற்காகவும் தான் நாற்பது நாட்கள் பூசை நடைபெற்றது. ஆத்திரம் கண்ணை மறைப்பதால் இஸ்லாமியன் அது, இதென்று உளறுகிறார்.

         • Rajapakshe and all his family members will pollute any holy place, not only Guruvayoor, only because they have killed lakhs of Tamil Srilankans, and their hands are sullied with blood. In Hindu temples, blood and its stains pollute – as you know well. It is right the Guruvayoor priests conducted purification ceremony 🙂

      • திப்பு பாய்,

       தப்பு பாய்.

       இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே. வெளிநாட்டு பாய்ங்க பத்திக் கூட நீங்க கொஞ்சம் தெரிஞ்சுக்கனும்.

       பன்னிக் கறிய உடுங்க இந்த மாசத்துல தாகத்துக்கு தண்ணி குடிச்சாகூட கொல்ல வருவாங்க சில பாய்மாருங்க.

       ஐரோப்பால பஸ்ல ட்ரைன்ல அவ்ளோ ஈசியா ஹாம் சான்விச் (Ham sandwich) சாப்ட்ற முடியாது.

       பாய்மாருங்க நாடுகள பத்தி ஒங்களுக்கே தெரியும்னு நெனக்கறேன்.

       • Here discussions are on Indians: Muslims, Christians, Hindus and other denominations only. If you want to discuss Muslims, take only Indian Muslims. Do Indian Muslims kill pork eaters ? This is the correctly worded question. Can you reply ?

        • BS,

         ‘Hindus’ live mainly in India (except for few other places). Muslims live in 56 countries. As my name suggests, I speak globally, as for as possible. Why should I limit only to Indian people. When it is Hindus it would mean mainly Indians But when it is Muhamadans, they are everywhere. Particularly , their true nature is revealed when and where they are in majority.

         Is this reply enough?
         For my blogs, click on my name.

         • I went to your blog; but it is in English. As one who hasn’t fully picked up the language yet, I find difficulty in reading long passages in English. Why don’t you start a blog in Tamil to reach people like me? – a sort of condescension or concession to us. May your English blog enlighten global readers; may your Tamil blog, guide Tamil knowing readers.

          Ok. Speak globally: no problem. A Tamil knowing blogger speaking globally in English – awesome !

          But here, why not speak specific to Tamilians in order to know what they say or think? I mean Tamil Muslims. Tamil Muslims share their religion, no doubt, globally, but their ethos are their own. (Hopefully, you know the meaning of the word Ethos). That is, the Tamil Muslims don’t share the ethos of ISIS or Talibans or Pakis.

          Like Tamil Muslims, there are Indonesian Muslims, Malaysian Muslims, British Muslims, US Muslims. Each one has their own independent ethos which get reflected in their lives. The religion is one and the same globally – one Prophet and one Koran – there’s no controversy about all these, but the ethos do differ, sometimes, widely – like Tamil brahmins and Bengali Brahmins for e.g.

          • BS,

           It seems you haven’t ‘fully picked up’ the internet surfing yet. I have 5 active blogs, of which 2 are in Tamil.

           My meagre spare time does not allow me do many things. I prioritize. If you find my text interesting, you can contribute by translating. Actually I have made a post requesting this help.

           As for ‘ethos’, I discuss about Muhamadan ‘ethos’. It seems you are new to my vocabulary. Take some time and read my blogs.
           As for your remark on my ‘language’, it is a compliment. For, I have my own style too. If you don’t understand, be persistent.

      • திப்பு,

       உங்களின் https://www.vinavu.com/2015/01/22/perumal-murugan-vs-kongu-vellala-gounders-part-two/#comment-382712 இந்த முறைப்பாட்டுக்கு பதில் கீழே.

       இந்த பதிவில் உங்கள் பின்னூட்டம் 9.1.2.1.1 ல் கீழ்க்கண்ட கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.

       //பன்றிக்கறி உண்ணாதவர்கள் பன்றிக்கறி உண்பவர்களை பன்றிக்கறி உண்பவர்கள் என்ற காரணத்திற்காக கொலை செய்கிறார்கள்லா?//

       இந்த கேள்விக்குத்தான் நான் பதிலளித்தேன். எனது பதில் உங்களுக்கு திருப்பதியளிக்க வாய்ப்பில்லை தான். ஆனாலும் கேட்ட கேள்விக்குத்தான் நான் பதில் கொடுத்திருக்கிறேன். இது எப்படி விவாதத்தை விட்டு விலகியதாகும் என்று நீங்கள் விலக்குவீர்களா.

       மாட்டுக்கறி பற்றிய விவாதத்திற்கு நீங்கள் வரலாம் ஆனால் பன்றிக்கறி இத்தியாதிகளைப்பற்றி மற்றவர்கள் கேள்வி கேட்கக்கூடாதா?

       (இங்கே விவாதம் மேலும் வளர வினவு விரும்பவில்லையாதலால் எனது ப்ளாகில் மட்டுமே கடைசி பின்னூட்டமிடமுடிந்தது. எனது ப்ளாகில் விவாதத்தைத் தொடர நீங்கள் துணிவதில்லை.)

       • விவாதத்தை சற்றே கவனித்து பார்த்தால் உங்கள் தகிடுதத்தம் விளங்கும்.

        பின்னூட்டம் எண் 9.1வெங்கடேசன் சொல்கிறார்.

        மாட்டிறைச்சி தின்பவனை அவன் வெறுக்கிறான். தின்னாதவனை நீங்கள் வெறுக்கிறீர்கள். இரண்டு பேருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. இருவரையும் பார்ப்பனர்கள் என்ற வகைக்குள் அடைக்கலாம் என தோன்றுகிறது.

        அதற்கு நான் பின்னூட்டம் எண் 9.1.2-ல்

        மாட்டுக்கறி உண்பவர்கள் மாட்டுக்கறி உண்ணாதவர்கள் என்ற காரணத்திற்காக யாரையும் கொல்வதில்லை.ஆனால் மாட்டுக்கறி உண்ணாதவர்கள் அதனை உண்பவர்களை மாட்டுக்கறி உண்பவர்கள் என்ற காரணத்திற்காக கொலை செய்கிறார்கள்.எ,கா.லச்சார்.

        என்று லச்சாரில் பார்ப்பனியம் ஆடிய வெறியாட்டத்தை எடுத்துக்காட்டாக சொல்லி ஒரு வாதத்தை முன் வைக்கிறேன்.இதுவரை பார்ப்பனியம் மீதான இந்த விவாதத்தை இசுலாம் முசுலிம்கள் என்று பெயர் குறிப்பிடாமல் பூடகமாக பன்றியிறைச்சி மூலமாக வியாசன் முசுலிம்களை இசுலாமிய மதத்தை பின்னூட்டம் எண் 9.1.2.1-ல் உள்ளே கோர்த்து விடுகிறார்.இது போதாதா உங்களுக்கு வியாசன் போட்ட கோட்டில் சாலை போட ஓடோடி வந்து விட்டீர்கள்.வியாசன் வேறொரு பின்னூட்டத்தில் ஒரு முசுலிம் இந்த கேள்வியை கேட்டால் இப்படித்தான் மறுமொழி சொல்வேன் என்று ”பணிவாக”விளக்கமும் சொல்கிறார்.

        வியாசனாவது \\பன்றிக்கறி உண்ணாதவர்கள் பன்றிக்கறி உண்பவர்களை பன்றிக்கறி உண்பவர்கள் என்ற காரணத்திற்காக கொலை செய்கிறார்கள்லா?//என்ற எனது கேள்விக்கு கொஞ்சம் மனசாட்சியுடன்

        \\கொன்றால் மட்டும் தான் தவறா? பன்றிக்கறி தின்பவர்களை வெறுத்தால், அசுத்தமானவர்கள் என்று ஒதுக்கினால், அவர்களைத் தாழ்த்தினால், அவர்களின் வீடுகளில் உணவுண்பதைத் தவிர்த்தால்,……அதெல்லாம் தவறில்லையா //என்று கேட்கிறார்.

        நீரோ அப்பட்டமான பித்தலாட்டப் பேர்வழி என காட்டும் முகமாக ரமலான் மாதத்தில் யாரும் தண்ணீர் குடித்தாலே முசுலிம்கள் கொலை செய்து விடுவார்கள் என புளுகி அதை கேள்வி கேட்டவுடன் கொல்ல வருவார்கள் என்பதை அடிக்க வருவார்கள் என மாற்றிக்கொள்ள சொன்னீர்.இது விவாதத்தை திசை திருப்புவது இல்லையா.விவாதத்திற்கு சற்றும் தொடர்பின்றி ஒரு அவதூறை பதிவு செய்து விட்டு அது அம்பலப்பட்டு போன பின்னும் வெட்கமில்லாமல் விவாதப் பொருளை விட்டு விலகவில்லை என ”விளக்குறீர் ”.

        அப்புறம் உமது வலைப்பூவுக்கு வர எனக்கு துணிவில்லை என்று கொக்கரிக்கிறீர்.ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு முறை அந்த வலைப்பூவுக்கு வந்தேன்.வலைப்பூவா அது.வலைப் பீ அது.இசுலாமிய மதத்தை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் பெண்ணினத்தையே இழிவு படுத்தி நரகலை கொட்டி வைத்திருந்தீர்.எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் மத நம்பிக்கையே இல்லாதவராக இருந்தாலும் ஒரு நாகரீக மனிதன் அந்த நாற்றம் புடிச்ச எழுத்துக்களை ஏறெடுத்தும் பார்க்க விரும்ப மாட்டான்.நரகலை காலால் மிதிக்கக்கூட மனிதர்கள் விரும்ப மாட்டார்கள்.

        உமது மூளையே நரகல் நிரம்பி வழியும் குப்பைக்கூடை என்பதற்கு வினவில் நீர் எழுதியதிலிருந்தே எடுத்துக்காட்டு தருகிறேன்.

        Did I say this? [My heart flutters at the sight of beauty, brown/black/pink/white/yellow and all-shades-in-between.]
        People are especially smitten by exotic types. It applies to all people, including Dravidians and Aryans, both Men and Women. For Dravidian men, Aryan women have been and still are visual magnets. I, being for full and equal women rights, let me add. For Dravidian&Aryan women, Aryan&Dravidian men could have been and still are visual magnets.
        [Above, I have written ‘could have been’, because, as a man, I should not speak for women. I can just guess. This is also part of equal rights. Women should speak for themselves. Any Dravidian/Aryan women are reading this? I request you to record your say here]

        வினவை படித்த ஒரே குற்றத்துக்காக இங்கு வரும் பெண் தோழர்களையும் சகோதரிகளையும் பார்த்துக் மானங்கெட்ட நீர் கேட்கின்ற உமது கேள்வியை முதலில் உமது குடும்ப பெண் உறுப்பினர்களை பார்த்து கேளும்.விடை தெரிவது எளிது என்பதால் உமது குடும்ப பெண் உறுப்பினர்களை பரிந்துரைக்கிறேன்.வேறு எந்த இழிவு படுத்தும் நோக்கமுமில்லை.நிச்சயம் அந்த சகோதரிகள் உம்மை செருப்பால் அடிப்பார்கள்.

        இது போன்ற நரகல்களை கொட்டி வைத்திருக்கும் உமது தளத்திற்கு விவாதம் ஒரு கேடா

        • திப்பு,

         // தகிடுதத்தம் //

         வினவில் பல விவாதங்கள் பலவாறு கிளைத்து வளர்ந்திருக்கின்றன. இது தான் இயற்கை. ஆனால் முகமதியத்தைப்பற்றி முகமதியர்களைப்பற்றி என்று வரும் போது மட்டும் அந்த கிளை வளரவிடாமல் தடுப்பது நடக்கிறது. இதில் நான் வினவைக் குறை காணவில்லை. இது நமது சமூகத்தின் இழிநிலை. ஒரு கறியைப்பற்றி பேசும் போது மற்றொரு கறியையும் பேசுவது கோர்த்து விடுவதல்ல. ஒரு விவாதத்தில் சம்மந்தப்பட்ட எல்லாவற்றையும் தான் பேசவேண்டும். மெய்நிகர் உலகம் இப்படிப்பட்ட விவாதங்களை ஒரளவுக்கேனும் ஏதுவாக்கியிருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

         //பித்தலாட்டப் பேர்வழி//

         சாவடி அடித்தல், சாகடித்தல், அடிகளைத்தாங்காமல் இறத்தல் போன்றவற்றை நீங்கள் கேள்விபட்டிருக்க வாய்ப்புகள் அதிகமே.

         லச்சாரில் நடந்த ஒரு கொடுமையை நீங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தீர்கள். அருமை. அப்படியே முகமதிய சமூகங்களில் நடக்கும் கொடுமைகளை கவனத்தில் கொண்டு வந்தால் விவாதத்தை திசை திருப்புவதா. இரண்டு திசையிலும் விவாதத்தை வளர்ப்பதற்கு ஏன் தடை.

         எப்படியோ, கோடு போடும் போதே வினவு அழித்து விடுகிறதே. அப்புறம் எப்படி ரோடு போடுவது.

         நான் கூறியவை அவதூறு என்பதை நிறுவ வேண்டாம் என்று யார் கூறியது. நரகல் அது இது என்பதெல்லாம் பதிலில்லாதவர்களின் பேச்சு.

         கடைசியாக,

         வினவை படிப்பதில் எந்த குற்றமுமில்லை திப்பு பாய். பெண்ணுரிமை பற்றிய எனது கருத்துக்களுக்கு யாருக்கும் அடிமையில்லாத பெண்களே பதிலளிப்பதைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். இந்த விசயத்தில் உங்கள் கருத்து எனக்கு ஒரு உதிர்ந்த முடிதான்.

         • இந்த வாய்தான் இரண்டு நாட்களுக்கு முன்னால் விவாதத்தை விட்டு விலகியதில்லை என்று சவடால் அடித்தது.\\நானும் இங்கே பதிவின் விவாதப்பொருளை விட்டு விலக விரும்பவில்லை. சொல்லப்போனால் எந்த பதிவிலும் அது போன்று செய்ததில்லை//.விவாதத்தை விட்டு விலகி அவதூறு சொல்லி இருக்கிறாய் என ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியவுடன் இப்போது விவாதங்கள் ”கிளைத்து” வளர வேண்டும் என்கிறது.இதில் நல்ல வாய் எது நார வாய் எது என பிரித்தறிய முடியாது,இருப்பது ஒரே வாய்தான் அது எந்த வாய் என சொல்லவும் வேண்டுமா.

          இசுலாம் பற்றி விமரிசிக்கவே கூடாது என்று யாரும் சொல்லவில்லை.தொடர்புடைய பதிவுகளில் தாரளமாக விமரிசிக்கலாம்.வினவும் தடை செய்வதில்லை.

          இப்போது கூட சார்லி பதிவில் தூதர்கள் என்று சொல்லிகொண்டவர்கள் பொய்யர்கள் என்று சொல்கிறீர்.அதிலும் தூதன் என்று ”ன்”விகுதியை கழிந்து வைத்துள்ளீர்.அதை வினவு மட்டுறுத்தி விடவில்லை. [அதுவும் அம்மணக்குண்டியா படம் போட்டுத்தான் பொய்யன் என்று விளக்க முடியுமாம்.இதுலாம் ஒரு வாதம்.இநத கழிசடைத்தனதுக்கு முசுலிம்கள் பதில் சொல்லனும்னு எகத்தாளம் வேற].

          ஆனால் எந்த பொருளில் விவாதம் நடந்தாலும் இசுலாமிய மதத்தை இழுத்து விவாதத்தை திசை திருப்புவதைத்தான் கண்டிக்கிறோம்.இந்த பதிவில் கூட பார்ப்பனியம் ஆட்டிறைச்சி தொழிலை நசுக்குவது பற்றிய விவாதத்தில் தொடர்புடைய வகையில் மாட்டிறைச்சி பற்றி விவாதிக்கும் தோழர்களோடு,வெங்கடேசன் போன்ற அன்பர்களோடு விவாதத்தில் ஒரு முசுலிம் கலந்து கொள்வது உங்களுக்கு பொறுக்கவில்லை.கிடைத்தடா சாக்கு என்று விவாதத்தை திசை திருப்பி மறைமுகமாக பார்ப்பனியத்திற்கு சேவை செய்கிறீர்.அதை சொன்னால் வினவு முசுலிம்கள் பக்க சார்பாக நடந்து கொள்கிறது என ஒப்பாரி வைக்கிறீர்கள்.

          \\சாவடி அடித்தல்//

          நோன்பு வைக்காதவர்களை இசுலாம் தாக்க சொல்லவில்லை.அப்படி தாக்குவதாக சொல்வது அவதூறு.இதை விளக்க ஒரு எடுத்துக்காட்டு.ம.க.இ.க தோழர் செங்கொடி பிறப்பால் ஒரு முசுலிம்.பின்னாளில் கடவுள் மறுப்பாளர் .அவர் அரபு நாடு ஒன்றில் பணியாற்றியவர். ரமலான் மாதத்தில் நோன்பு நோற்காமல் இருக்கும் அவர் கொண்ட கொள்கைக்கு ஏற்ப நோன்பாளிகளுக்கு வழங்கப்பபடும் பணி தளர்வு சலுகைகளை பெற மறுத்து விட்டவர்.இதை அவரது தளத்தில் எழுதியிருக்கிறார்.நோன்பு வைக்காத அவரை யாரும் தாக்கி விடவில்லை.

          \\நரகல் அது இது என்பதெல்லாம் பதிலில்லாதவர்களின் பேச்சு.//

          இவ்வளவு நாள் என்னோடு விவாதம் செய்திருந்தாலும் இப்படி சொல்ல துணிகிறீர் என்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை ”தன்னை மெச்சுமாம் தென்னை மர குரங்கு” என்பதை தவிர.
          வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.ரெம்பவும் ஆட வேண்டாம்.

          \\பெண்ணுரிமை பற்றிய எனது கருத்துக்களுக்கு யாருக்கும் அடிமையில்லாத பெண்களே பதிலளிப்பதைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன்//

          ஆக இந்த கேள்வியை உமது குடும்ப பெண்களை பார்த்து கேட்க உமக்கு மனமில்லை.அப்படின்னா இது ஒரு இழிவான செயல் என்று உமக்கே தெரிகிறது.யாருக்கும் அடிமையில்லாத பெண்கள் பதிலளிக்கட்டும் என்றால் உமது குடும்ப பெண்களை நீர் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறீர் அதனால் அவர்கள் பதிலை நீர் எதிர்பார்க்கவில்லை என்றாகிறது.இதுதான் நீர் பெண்ணுரிமை காக்கும் லட்சணமா.

          \\இந்த விசயத்தில் உங்கள் கருத்து எனக்கு ஒரு உதிர்ந்த முடிதான்.//

          கடைசியாக ஒரு முடியை உதிர்க்கிறேன்.என்ன சொல்கிறீர் என பார்க்கலாம்.
          ஆணோ பெண்ணோ ஒருவரின் பாலியல் விருப்பு வெறுப்புகளை பலரும் அறிய பதிவிட சொல்கிறீரே இது ஒரு அநாகரீக செயல் என உமக்கு புத்தியில் உரைக்கவில்லையா .அதற்கு என்ன காரணம் தெரியுமா.உமது மூளையே இத்தகைய கசடுகளால் நிரம்பி வழிகிறது.அதனால்தான் இது இழிசெயல் என்பது அதில் உரைக்கவில்லை.

          பி.கு.
          வாசகர்கள் கவனத்திற்கு.மீண்டும் மீண்டும் யுனிவர்பட்டியிடம் உமது குடும்ப பெண்களிடம் கேள் என்று சொல்வது வருத்தமாகத்தான் உள்ளது.நிச்சயமாக அவர்களை இழிவு படுத்தும் எண்ணம் கடுகளவும் இல்லை.முதல் பின்னூட்டத்திலேயே அவர்களை சகோதரிகள் என்று அழைத்திருக்கிறேன்.அந்த கருத்தில் எப்போதும் மாற்றமில்லை.யுனிவர்பட்டியின் லூசுத்தனமான பாலியல் கருத்துகளுக்கு அந்த சகோதரிகள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்கள் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்.

          • திப்பு,

           // விவாதத்தை விட்டு விலகியதில்லை என்று சவடால்//

           நீர் எழுப்பிய கேள்விக்குத் தகுந்த பதில் தானே கொடுத்திருக்கிறேன். எங்கே விலகியிருக்கிறேன்?

           கடைசி பதிலில் விவாதம் கிளைப்பதற்கு, குறிப்பாக முகமதியர்களைப்பற்றி மட்டும், ஏன் தடை போட வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்.

           //அதிலும் தூதன் என்று ”ன்” விகுதியை கழிந்து வைத்துள்ளீர்//

           தூதனுக்குக்கு கூட ன் போடக்கூடாதா. நன்றாக இருக்கிறதே. சில வாரங்களுக்கு முன்னர் மன்னாரு என்பவர் ஏசுவுக்கு ன் போட்டார். வினவு மட்டுறுக்கவில்லை. பதிலுக்கு நான் ன் போட்டேன். வினவு விடவில்லை. இப்போது தூதன் என்ற வார்த்தைக்குக் கூட ன் போடக்கூடாதா. நடத்துங்கள்.

           // விவாதத்தில் ஒரு முசுலிம் கலந்து கொள்வது உங்களுக்கு பொறுக்கவில்லை//

           தவறான இடத்தில் வாய் கொடுத்து மாட்டிக்கொள்ளக்கூடாது அல்லது கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேர்மையாவது இருக்கவேண்டும்.

           // மறைமுகமாக பார்ப்பனியத்திற்கு சேவை//

           முகமதியமும் ஒருவகை பார்ப்பனியம் தான். அதே சமயம் முகமதியம் பார்ப்பனியத்தை விட கொடூரமானது என்ற எனது நிலையை மீண்டும் பதிவு செய்து விடுகிறேன். இரண்டையும் அவற்றின் வரிசைப்படி அணுகுகிறேன்.

           // ஒருவரின் பாலியல் விருப்பு வெறுப்புகளை பலரும் அறிய பதிவிட சொல்கிறீரே//

           இந்த கேள்வியை சம்பந்த பட்ட பதிவில் கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்.

          • \\தகுந்த பதில்//

           மாட்டுக்கறி பன்றிக்கறி பற்றி பேசும்போது இடையில் புகுந்து தண்ணீர் குடித்தால் கொன்று விடுவார்கள் என அவதூறு பேசுவது தகுந்த பதிலாம்.

           \\தூதனுக்குக்கு கூட ன் போடக்கூடாதா//

           என்ன எழவை வேண்டுமானாலும் போட்டுக்கலாம்.அது அவரவர் தகுதியை காட்டும்.வினவு முசுலிம்களுக்கு பக்க சார்பாக மட்டுறுத்தல் செய்கிறது என்ற உமது குற்றச்சாட்டு உண்மையல்ல என்பதற்கான எடுத்துக்காட்டுதான் அது.இது கூட புரியலையா.

           \\பதில் சொல்லும் நேர்மை//

           இந்த பதிவில் எனது பின்னூட்டங்களை மீண்டும் படித்துப்பாரும்.பதில் இருக்கிறது.

           \\முகமதியம் பார்ப்பனியத்தை விட கொடூரமானது //

           தாராளமாக கருதிக்கொள்ளலாம்.கோழி தான் கூவுவதால்தான் பொழுது விடிகிறது என கருதிக்கொள்ளுமாம் .

           \\சம்பந்த பட்ட பதிவில் கேளுங்கள்//

           இந்த கருமாந்திரத்தை இன்னொருக்கா கேக்கணுமா.பாக்,கிரிக்கெட் அணி பதிவில்தான் அந்த கர்மம் உள்ளது.https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/போய் பதிலை பதிவு செய்யலாம்.

          • திப்பு,

           // அவதூறு பேசுவது தகுந்த பதிலாம்//

           அவதூறு என்று சொல்லிவிட்டால் போதாது. நிறுவ வேண்டும். அதற்கு தேவைப்பட்டால் எனது ப்ளாகுக்கும் வரவேண்டும். நரகல் என்று சொல்லி தப்பிக்கமுடியாது. உங்கள் தாத்தா நரகல் தொட்டியில் விழுந்து விட்டார். அப்படியே விட்டு விடுவீர்களா.

           // பதில் இருக்கிறது.//

           உமது பதிலுக்கு பதில் கொடுத்து கேள்வியும் கேட்டிருக்கிறேன். இங்கே வெளியிடப்படாததால் அது எனது பளாகில் இருக்கிறது. பதிலளிக்கப்படாமல் தான் இருக்கிறது.

           //இந்த கருமாந்திரத்தை இன்னொருக்கா கேக்கணுமா //

           ஆம். பதில் தேவையென்றால் செய்யவும்.

          • புதிய வாதங்கள் எதுவும் தேவைப்படாத நிலை இது.அதனால் அரைத்த மாவையே அரைப்பதில் எனக்கு விருப்பமில்லை.கடைசி பின்னூட்ட வெறியும் என்னிடம் இல்லை. எடுத்துக் கொண்ட விவாதப்பொருளான ரமலான் மாதத்தில் தண்ணீர் குடித்தால் முசுலிம்கள் கொன்று விடுவார்கள் அல்லது அடிக்க வருவார்கள் என்பது அவதூறு என்று நிறுவி இருக்கிறேனா இல்லையா என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

           உமது வலைப்பூ குறித்த எனது கருத்துக்களில் எந்த மாற்றமுமில்லை.வரத்துணிவில்லை என கடைசி பின்னூட்டம் போட்டு நீர் கொக்கரித்துக் கொள்ளலாம்.

           உமது ஆபாச பாலியல் கேள்வி குறித்த எனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறேன்.சுட்டியும் கொடுத்து விட்டேன்.இதிலும் புதிய வாதம் எதுவும் தேவைப்படவில்லை.பழைய விவாதங்களையே சுட்டிக்காட்டுகிறேன்.

           \\கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேர்மையாவது இருக்கவேண்டும்.//

           \\இந்த கேள்வியை சம்பந்த பட்ட பதிவில் கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்.//

           \\இந்த கருமாந்திரத்தை இன்னொருக்கா கேக்கணுமா.பாக்,கிரிக்கெட் அணி பதிவில்தான் அந்த கர்மம் உள்ளது.https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/ போய் பதிலை பதிவு செய்யலாம்.//

           \\போய் பதிலை பதிவு செய்யலாம்.//

           \\போய் பதிலை பதிவு செய்யலாம்.//

    • திப்பூ ப்பாய் பன்றி இறைச்சி உண்னும் மக்களை இசுலாம் வெறுக்கிறதா இல்லையா மாட்டிறைச்சி உண்பவனை பார்ப்பணியம் எப்படி பார்க்கிறதோ அதே பார்வைதான் பன்றி இறைச்சி உண்பவனிடம் இசுலாம் வைக்கும் பார்வை மாட்டிறைச்சி இந்திய லெவல்னா பன்றி இறைச்சி உலக லெவல் பார்ப்பனியம் அதுவும் இசுலாமிய பார்ப்பனியம்

 8. திரு. தென்றல் அவர்களுக்கு….

  //இந்துத்துவமே அம்பலப்பட்டுத்தான் போயிருக்கிறது.//

  அப்படியா.. அப்போது ஏன் இந்துத்துவத்தை தலைமை ஏற்று நடத்தும் பா.ஜ.க மகத்தான வெற்றி பெற்று இருக்கிறது. வெறும் மோடியை மிகைப் படுத்தி காட்டிய ஊடக மாயை தான் காரணம் என்று சால்ஜால்பு சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  எது எப்படியோ, வேதத்தில் மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக. தாங்கள் அளித்த ஆதாரங்களுக்கு மிக்க நன்றி.. தாங்கள் கொடுத்த ஆதாரத்தை ஜம்புநாதனின் மொழி பெயர்ப்போடு ஒப்பிட்டு பார்த்து பரிசீலிக்கிறேன். நான் கோ மாமிசம் தொடர்ப்பாக இந்துத்துவத்தின் முக மூடியை முடிந்த மட்டில் அவிழ்க்க முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு இந்து மதத்தின் மீது மிகுந்த பற்று இருக்கிறது, நிச்சயமாக இந்துத்துவத்தின் மீதல்ல.

  http://www.tamilhindu.com/2014/06/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/#CommentsSection

  என்னால் முடிந்த அளவு மாட்டிறைச்சி பிரச்னையை உரிமை பிரச்சினையாக தான் நான் விவாதம் செய்து கொண்டு இருக்கிறேன். மேற்படி தளத்தில் என் மறுமொழிகளை பார்க்கவும். முடிந்தால், முடிந்தால் மட்டும் எனக்கு உதவி செய்யவும்.

 9. கடந்த சில வருடங்களுக்கு முன் நூலகத்தில் ” ஆரியப்பாதையில் பசு வதை” என்ற நூலை வாசித்தேன், அதில் சமக்கிருத பாடலுடன் கூடிய மொழிபெயர்ப்பு சிறப்பாக இருந்தது. தோழர்கள் அந்த நூல் குறித்து தகவல் கிடைத்தால் தெரிவியுங்கள்.

 10. இந்த மாட்டுக்கறி விவாதம் ஏற்கனவே வினவில் நடந்த ஒன்று தான். வினவு எனக்கு அறிமுகமாகி இரண்டு வருடங்கள் கூட ஆகவில்லை, ஆனால் இங்கு நடக்கும் அநேகமான விவாதங்கள் எல்லாம் அரைத்த மாவை அரைக்கும் வேலை தான். எதற்காக இந்துக்கள் சிலரின் மாட்டுக்கறி உண்ணாமையைப் பற்றி மட்டுமே விவாதங்கள் இங்கு நடக்கின்றன, ஆனால் உலகில் பெரும்பான்மை மக்களால் உண்ணப்படும் பன்றிக்கறியின் மகிமை பற்றியோ அல்லது சீனா, கொரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற பல நாடுகளில் உன்னப்பட்டும் நாய்க்கறியின் மகிமையை, அதன் புரதச் செழிப்பை, பன்றி, நாய் போன்றவற்றை உண்ணாமல் வீணாக்கும் இந்தியர்களின் அறியாமையை, மூடநம்பிக்கையைப் பற்றி வினவில் யாரும் கட்டுரைகள் ஏன் எழுதுவதில்லை என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 🙂

 11. //ராமேஸ்வரம் கோயிலிலாவது பன்றியின் தீட்டுப்பட்டு விட்டது என்று பூசை செய்தார்கள், ஆனால் குருவாயூரில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், இலங்கையில் முதல் பெண்மணியுமாகிய சிராந்தி ராஜபக்ச, ஒரு கிறிஸ்தவர்…//

  குருவாயூர் என்று தான் இல்லை.. தமிழகத்தில் கூட பிற மதத்தவர்கள் கோவில் கர்ப்பக்கிரகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. கர்ப்பக்ருஹம் வரை மட்டும் தான். ஆனால், கோவில் பிரஹாரத்தில் எங்கு வேண்டுமானாலும் போகலாம். காரணம், இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டோர் மட்டுமே அதன் புனிதத்தை உணர இயலும். மேலும், கருவறை வரை வந்து செல்வதற்கு என்று சில அக,புற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உடனே, காஞ்சி தேவநாதனை இங்கு வம்புக்கு இழுத்துவிட வேண்டாம். சில நேரத்தில் பன்றிகள் அர்ச்சகர் ரூபத்தில் உள்ளே புகுந்து விடுகின்றன. அவைகளை கண்டு பிடித்து நாம் தான் அம்பல படுத்தி அழிக்க வேண்டும்..

 12. இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் மதவெறியர்களா.,விவாதப்பொருள் எதுவாக இருந்தாலும் முசுலிம்கள் மீது வெறுப்பு பரப்புரையை அவிழ்த்து விட்டு விவாதத்தை மடைமாற்றி இசுலாம்,முசுலிம்கள் குறித்த விவாதமாக கேடு கெட்ட முறையில் ஆக்கி விடுகிறீர்கள்.

  ஆட்டிறைச்சி தொழிலை நசுக்கும் பார்ப்பனிய நம்பிக்கைகள் குறித்து கட்டுரை முன்வைக்கும் விமரிசனங்களுக்கு முகம் கொடுக்க வக்கற்ற வியாசன்கள் பன்றிக்கறி எனும் அரைத்த மாவை வலிந்து இழுத்து விவாதத்தை மடைமாற்றுகிறார்கள்.ஆணிவேர்முட்டிகளோ ரமழான் மாதத்தில் தண்ணீர் குடித்தாலே முசுலிம்கள் கொலை செய்து விடுவார்கள் என நஞ்சு கக்குகிறார்கள்.வியாசன் நான் இசுலாமியர்களை இழுக்கவில்லை என சாதிக்க கூடும்.அவரது குற்றச்சாட்டுகள் யாரை நோக்கி வீசப்படுகின்றன என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொள்ள முடியும்.போதாதற்கு ”இரண்டு மதத்தினரும்” என்றே ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.

  \\பன்றிக்கறி தின்பவர்களை வெறுத்தால், அசுத்தமானவர்கள் என்று ஒதுக்கினால், அவர்களைத் தாழ்த்தினால், அவர்களின் வீடுகளில் உணவுண்பதைத் தவிர்த்தால், அல்லது தவிர்க்க முடியாத காரணத்தால், வேறுவழியேயில்லாமல் அவர்களின் வீடுகளில் உணவுண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவர்களின் வீட்டுப் பாத்திரங்களை நன்றாக கழுவி விட்டுத் தான் உபயோகிக்க வேண்டும் என்பதெல்லாம் தவறில்லையா?//

  ஏற்கனவே இது குறித்து வினவு விவாதம் ஒன்றில் அளித்த விளக்கம்.

  https://www.vinavu.com/2013/12/31/vanakkarayya-short-story/#comment-122322

  பன்றிக்கறி உண்ணாதவர்கள் அதனை உண்பவர்கள் வீடுகளில் பாத்திரங்களை கழுவிய பின் உணவு உண்பதாக வியாசனே சொல்லி விட்ட பின் இதில் விவாதிக்க என்ன இருக்கிறது.தனது அணி மீதே கோல் போட்டு விட்டு அதனை பெரிய புத்திசாலித்தனம் என கேள்வி வேறு கேக்குறாரு இந்த அறிவாளி.

  \\வெளிநாட்டு பாய்ங்க பத்திக் கூட நீங்க கொஞ்சம் தெரிஞ்சுக்கனும்.
  பன்னிக் கறிய உடுங்க இந்த மாசத்துல தாகத்துக்கு தண்ணி குடிச்சாகூட கொல்ல வருவாங்க சில பாய்மாருங்க.//

  இன்றும் வளைகுடா நாடுகளில் இலட்சக்கணக்கான இந்திய இந்துக்கள் வேலை செய்கிறார்கள்.அவர்கள் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதில்லை.ஆகவே அவர்கள் தண்ணீர் குடிப்பார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.ஆனாலும் அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள்.அது எப்படி என ஆணிவேர்முட்டி விளக்கவேண்டும்.

  \\.ஐரோப்பால பஸ்ல ட்ரைன்ல அவ்ளோ ஈசியா ஹாம் சான்விச் (Ham sandwich) சாப்ட்ற முடியாது//

  இதனால் தாங்கள் சொல்ல வரும் நீதி யாது.

  \\பன்றி இறைச்சி உண்னும் மக்களை இசுலாம் வெறுக்கிறதா இல்லையா மாட்டிறைச்சி உண்பவனை பார்ப்பணியம் எப்படி பார்க்கிறதோ அதே பார்வைதான் பன்றி இறைச்சி உண்பவனிடம் இசுலாம் வைக்கும் பார்வை//

  தவறான புரிதல்.உண்ணும் உணவை வைத்து யாரையும் இசுலாம் வெறுப்பதில்லை.அப்படி வெறுப்பதாக இருந்தால் ஆதாரங்களை காட்டி வாதிடுங்கள்.மாறாக எந்த உணவை உண்டாலும் எந்த இனம்,மொழி,மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே என்பதுதான் இசுலாமிய கொள்கை.

  • இந்த விவாதத்தில் பன்றியுண்ணாதவர்கள் அதாவது முஸ்லீம்கள், பன்றியுண்பவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டிய தேவையேற்பட்டதே ஜனாப். திப்பு சுல்தான் அவர்களின் கருத்தினால் (9.1.2) தான். அதை அவர் மறந்து விட்டார் போல் தெரிகிறது.

   திப்பு அவர்கள் “மாட்டுக்கறி உண்பவர்கள் மாட்டுக்கறி உண்ணாதவர்கள் என்ற காரணத்திற்காக யாரையும் கொல்வதில்லை.ஆனால் மாட்டுக்கறி உண்ணாதவர்கள் அதனை உண்பவர்களை மாட்டுக்கறி உண்பவர்கள் என்ற காரணத்திற்காக கொலை செய்கிறார்கள்” என்று, ஏதோ உணவுப் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் மற்றவவர்களை ஒதுக்கி வைப்பதையும், பாரபட்சமாக, இழிவாக நடத்துவதையும், அவர் வாழ்நாளில் கேள்விப்பட்டிராதவர் போலவும், இந்துக்கள் மட்டும் தான் மாட்டிறைச்சி உண்ணாதவர்களை ஒதுக்கிறார்கள் அல்லது அசுத்தம் என நினைக்கிறார்கள், அல்லது அவரது கருத்தின் படி “கொல்லுகிறார்கள்”, ஆனால் வேறு எவருமே அப்படியெல்லாம் செய்வதில்லை என்ற மாதிரி பதிலெழுதாமல் இருந்திருந்தால், முஸ்லீம்கள் (திப்பு சிலதான் ஒரு முஸ்லீம் என்பதால்) எப்படி பன்றியிறைச்சி உணபவர்களை நடத்துகிறார்கள் என்பதைப் பற்றி நான் குறிப்பிட்டிருக்கவே மாட்டேன்.

   இதே கருத்தை ஒரு கிறித்தவர் தெரிவித்திருந்தால், நாயிறைச்சியையுண்ணும் சீனர்களை மேலைநாட்டுக் கிறித்தவர்கள், குறிப்பாக வெள்ளையர்கள் எவ்வளவு அருவருப்பாக பார்க்கிறார்கள், எண்ணுகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டிருப்பேன்.

   அவர் எழுதிய பதிலுக்கு, நான் பதிலெழுதியதற்காக, இப்பொழுது குய்யோ முறையோ என்று குளறுவதற்குப் பதிலாக, நாம்- முஸ்லீம்கள் கூட, பன்றியிறைச்சி உண்பவர்களை, இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பவர்களை நடத்துவது போல் தான் நடத்துகிறோம், அதனால் நான் இந்த விவாதத்தில் இப்படிக் கருத்து தெரிவிப்பது முறையல்ல, என்பதையுணர்ந்து திப்பு சுல்தான் அவர்கள் தனது கருத்தைத் (9.1.2) தவிர்த்திருந்தால், பன்றி இறைச்சி உண்பவர்களை முஸ்லீம்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை நான் எனது பதிலில் குறிப்பிட்டிருக்க வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது.

   ஒரு விவாதத்தில் இறங்கி விட்டு இப்படி, முறைப்பாடு செய்வது முறையான செயலல்ல. அதிலும் ஜனாப். திப்பு அவர்கள் விவாதங்களுக்குப் புதியவரும் அல்ல. எடுத்தற்கெல்லாம் ஆதாரமும், ஊர்பெயர், வீதியின் பெயர், முகவரி எல்லாம் கேட்பதில் வல்லவராகிய அவரா, அவர் சும்மா இருக்க நான் ஏதோ அவரைத் தாக்கி விட்டேன் என்பது போல் இப்படி உணர்ச்சிவசப்பட்டு நீதி கேட்கிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. 🙂

   //வியாசன் நான் இசுலாமியர்களை இழுக்கவில்லை என சாதிக்க கூடும்///

   நானறிந்த வரையில் பன்றியிறைச்சியை மத அடிப்படையில் உண்ணாதவர்கள் Orthodox யூதர்களும் முஸ்லீம்களும் மட்டும் தான். நீங்கள் முஸ்லீமாகையால், உங்களின் கருத்தின் விளைவை உங்களுக்குப் புரிய வைக்கும் வகையில் தான், நான் அந்த உதாரணத்தை உங்ககளின் கருத்துக்குப் பதிலாகத் தெரிவித்தேன் என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

   //ஏற்கனவே இது குறித்து வினவு விவாதம் ஒன்றில் அளித்த விளக்கம்.///

   நீங்கள் ஒருவேளை பன்றிக்கறி உண்ணுகிறவர்களை வெறுக்காதவர், அதைவிட அவர்களின் வீட்டில் அவர்கள் பன்றிக்கறி சாப்பிட, நீங்கள் அவர்கள் சமைத்த உணவை (பன்றிக்கறி தவிர, வேறு உணவு வகைகளை) அன்புடன், அருவருப்பில்லாமல் உண்ணும், அன்பும் சகோதரத்துவமேயுருவான, பாரபட்சம் காட்டாத முஸ்லீமாக இருக்கலாம். உங்களை எனக்குத் தெரியாது. அதனால் அந்த விடயத்தில் என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. அதற்கெல்லாம் ஆதாரம் கேட்பது முட்டாள் தனம். ஆனால் எனக்கும் பல முஸ்லீம் நண்பர்கள் உள்ளனர். எனக்கும் பன்றியிறைச்சி விடயத்திலும், பன்றியிறைச்சி உண்பவர்களின் இல்லங்களில், கடைகளில் உணவருந்தும் விடயத்திலும் எனக்குத் தெரிந்த முஸ்லீம்களின் நிலைப்பாடு என்ன என்பது தெரியும், அதை நான் நேரிலும் பார்த்திருக்கிறேன். அதனால் உங்களின் விளக்கத்தை, பன்றியிறைச்சி உன்னுபவர்களின் விடயத்தில் ஒட்டு மொத்த முஸ்லீம்களின் நிலைப்பாடாக ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை எனக்குக் கிடையாது என்பது உங்களுக்கும் தெரியும்.

   //பன்றிக்கறி உண்ணாதவர்கள் அதனை உண்பவர்கள் வீடுகளில் பாத்திரங்களை கழுவிய பின் உணவு உண்பதாக வியாசனே சொல்லி விட்ட பின் இதில் விவாதிக்க என்ன இருக்கிறது///

   பாத்திரங்களை நன்றாகக் கழுவ வேண்டியதன் காரணம் பன்றியிறைச்சி முஸ்லீம்களுக்கு ‘naajis’ என்பதால் தான். 🙂

   Al-Khattaabi said:
   The basic principle in this matter is that if it is known that the mushrikeen cook pork in their pots and drink wine from their vessels, then it is not permissible to use them until after they have been washed and cleaned.”

   End quote from ‘Awn al-Ma’bood.

   The phrase “If you can find anything else, eat from them and drink from them” means eat and drink from those other vessels. This command means that it is mustahabb, according to the majority of fuqaha’, i.e., it is mustahabb to avoid these vessels, and it is makrooh to use them even if they are washed, unless there are no others available in which case it is no longer makrooh.

   Al-Nawawi (may Allaah have mercy on him) said in Sharh Muslim (13/80):
   The reason why it is better not to eat from them even after washing is because they are regularly used for NAAJIS THINGS.” End quote.

   IS IT ESSENTIAL TO WASH PLATES AFTER THEY HAVE BEEN USED AND WASHED BY NON-MUSLIMS?

   http://islamqa.info/en/65617

  • திப்பு பாய்,

   //வளைகுடா நாடுகளில் இலட்சக்கணக்கான இந்திய இந்துக்கள் வேலை செய்கிறார்கள்.*** அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள்.அது எப்படி என ஆணிவேர்முட்டி விளக்கவேண்டும்.//

   தண்ணீர் குடிப்பதில் உள்ள பிரச்சனையை காபிர்களுக்கு மட்டுமானது என்று நான் கூறவில்லை. முகமதிய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் இது பிரச்சனைதான். குறிப்பாக, பெட்ரோல் இல்லாத அலஜீரியா துனிசியா போன்ற நாடுகளுக்கு காபிர்கள் வேலைக்குப் போவதில்லை. அங்கே ரம்ஜானின் போதும் முகமதிய தொழிலாளர்கள் தான் கடும் வெயிலிலும் தண்ணீர் குடிக்காமல் வேலை செய்ய வேண்டும். இதை மீறுபவர்களுக்கு சுளுக்குதான். கொல்ல வருவாங்க என்பதை அடிக்க வருவாங்க என்று வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அவர்களின் அடிதாங்காமல் சிலர் இறந்தும் போகலாம்.
   ///
   \\.ஐரோப்பால பஸ்ல ட்ரைன்ல அவ்ளோ ஈசியா ஹாம் சான்விச் (Ham sandwich) சாப்ட்ற முடியாது// இதனால் தாங்கள் சொல்ல வரும் நீதி யாது.
   ///
   இதில் உள்ள அநீதி புரியவில்லையா? சரிதான்.

  • திப்பு,

   [1] 63 லட்சம் டன் இறைச்சி அளவுக்கு கால்நடைகள் வெட்டப்படுகின்றன. இதில் 40-50% மட்டுமே உள்நாட்டுக்கான உணவாக பயன்படுகிறது.

   [2]மீதம் உள்ள கால்நடை இறைச்சியை 18.9 லட்சம் டன் வரை 2012-13 நிதியாண்டில் இந்தியா ஏற்றுமதி செய்தது மூலம் நாட்டுக்கு கிடைக்கும் ஏற்றுமதி வருவாய் ஆண்டுக்கு ரூ 21,000 கோடி ஆகும்.

   [3] 125.9 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியம் சார் பொருட்கள் ரூ 4,41,743 கோடி அளவுக்கு இறக்குமதி செய்யபடுகின்றது.

   [4] மோடி இல்லை, வேறு எந்த பிஸ்தா பிரதமர் ஆனாலும் இரண்டையுமே தடுக்க முடியாது.

   [5] எனக்கு எந்த மத உணர்வும் கிடையாது எனவே நான் மாட்டையும் , பன்றியையும் ஏற்றுமதி செய்தும் , ஹிந்து மத உணர்வாளர்கள் பன்றியை மட்டும் ஏற்றுமதி செய்தும் , இஸ்லாமிய மத உணர்வாளர்கள் மாட்டை மட்டும் ஏற்றுமதி செய்தும் , நம் இந்தியாவின் ஏற்றுமதிக்கும்,இறக்குமதிக்கும் உள்ள பற்றாக்குறையை [Trade deficitஅய்] USD 11.23 billion இல் இருந்து குறைக்க முயற்சி செய்யலாமே ?

   #### மே மாதம் 2014 ஏற்றுமதி டாலர் 28 பில்லியன் 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது
   #### மே மாதம் 2014 இறக்குமதி டாலர் 39.23 பில்லியன் 11.4 சதவீதமாக குறைந்தது.
   #### மே மாதம் 2014 வர்த்தக பற்றாக்குறை[இறக்குமதி செலவு ,ஏற்றுமதி வருவாய்க்கும் இடையே உள்ள வேறுபாடு] USD 11.23 billion

   [6]இவ்வாறு நாம் வர்த்தக பற்றாக்குறையை நேர் செய்வதன் மூலம் நாம் நம் பணத்தின் மதிப்பை[value of Indian currency] உயர்த்தி அதன் மூலம் நம் நாட்டில் விலைவாசியை குறைக்க முடியும் அல்லவா ?

   [7]இதை எல்லாம் விட்டு விட்டு நீங்களே சுட்டும் மத மதவெறியர்[ கோமாளிகளுடன்] வெட்டி வாதம் செய்வது தேவையா ?

   [8] இந்த மதவெறியர்[ கோமாளிகள்] எல்லாம், என் மத ஹிந்துக்கள் 80% இருக்கோம் எனவே நாங்கள் 80% வர்த்தக பற்றாக்குறையை நாங்க சரி செய்யறோம் ,இந்தியாவில் 17% இஸ்லாமியர் இருக்கோம் எனவே 17% வர்த்தக பற்றாக்குறையை நாங்க சரி செய்யறோம் என்று எல்லாம் வாக்கு உறுதி கொடுக்க மாடாங்க.ஆனா நம்ம தான் இதுக்கு முயற்சிகனும் திப்பு.

   [9]என் 40 வருட வாழ்நாளில் கடந்த 20 ஆண்டுளாக நான் பைக் வாங்கி பயன் படுத்தியது இல்லை. ஒன்லி government பஸ் அண்ட் ஷேர் ஆட்டோ மட்டும் தான். எனவே ஒரு மாதம் 10 litter பெட்ரோல் என்று வைத்தலும் 12mo * 20ye * 10 li =2400 லிட்டர் பெட்ரோலை வாங்காம அதன் மூலம் 2400 li * 40[avg petrol cost] = Rs 96,000 க்கு [96,000/ 45[dollar avg val]] =USD 2133 அய் என் வாழ் நாளில் இது வரை வர்த்தக பற்றாக்குறையை குறைக்க நான் முயன்று உள்ளேன்.

   ஒருவேளை 1 கோடி பேர் என்னை போலவே கடந்த 20 ஆண்டுகள் இந்தியாவில் முயன்று இருந்தால் 1,00,00,000 * 2133 = USD 2133,00,00,000 அளவுக்கு பற்றாக்குறையை குறைத்து இருக்க முடியும் அல்லவா ?

   1 billion = 100 crs எனவே USD 2133,00,00,000 /100 = USD 2,13,30,000 பில்லியன் அளவுக்கு நாம் கடந்த 20 ஆண்டுகளில் பற்றாக்குறையை குறைத்து இருக்க முடியும் அல்லவா ????

   • [10]மேலும் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பது மட்டும் இன்றி வர்த்தக உபரியையும் [trade surplus] இந்தியா கடந்த இருபது ஆண்டுகளில் அடைந்து இருக்கும் அல்லவா ?

    ### வர்த்தக உபரி என்பது இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம் ஆவது.

    [11]அதனால் US Dollar க்கு எதிராக இந்திய currency மதிப்பு உயர்வது;பண வீக்கம் கட்டுகுள் வைக்கபடுவது; வீளைவாசி குறைவது; இவ்வளவு பயனும் இந்தியர்களுக்கு கிடைத்து இருக்கும் அல்லவா ?

 13. திப்பு பாய் //மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே என்பதுதான் இசுலாமிய கொள்கை// புதுசா இருக்கே இது எந்த இசுலாம் சியாவா சன்னியா அகமதியாவ ——–

 14. வழக்கம்போல் மதவெறி மொக்கைகள் உருப்படியான வாதம் எதையும் வைக்க முடியாமல் முசுலிம் எதிர்ப்பு கள்ளப் பரப்புரையைத்தான் தொடர்கிறார்கள்.

  மதவெறி மொக்கை எண் 1.வியாசன்.

  இவருக்கு தன் அறிவும் கிடையாது சொல் அறிவும் கிடையாது என மெய்ப்பிக்கிறார்.எனக்கு தெரியும்,நான் பார்த்திருக்கிறேன் என்று உறுதிப்படுத்த வாய்ப்பில்லாத தகவல்களை தந்து வாதிடுவது வாதமாகாது என எத்தனை முறை சொன்னாலும் இவருக்கு மண்டையில் ஏறவில்லை.

  https://www.vinavu.com/2014/01/21/pasuvin-punidham-book-review/#comment-128192

  இவர் சொன்னால் எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்.அதுவும் இவர் எப்படிப்பட்ட பொய்யர் என்பது ”மாடி வைத்து வீடு கட்டினாலும் கடற்கரையோர சிற்றூர்களில் முசுலிம்கள் கழிப்பறை வைத்து வீடு கட்டுவதில்லை” என்ற புரட்டலிலேயே தெரிந்த பின்னும் நான் சொன்னால் எல்லோரும் நம்பித்தான் ஆக வேண்டும் என மொக்கை போடுகிறார்.

  மதவெறி மொக்கை எண்.2.யுனி .

  இந்த மொக்கை முதலில்\\ பன்னிக் கறிய உடுங்க இந்த மாசத்துல தாகத்துக்கு தண்ணி குடிச்சாகூட கொல்ல வருவாங்க சில பாய்மாருங்க.//என்றது.

  எதிர் கேள்வி கேட்டவுடன் \\கொல்ல வருவாங்க என்பதை அடிக்க வருவாங்க// என்று மாற்றிக் கொள்ள சொல்லுது.இப்படி மாத்தி மாத்தி பெசுறோமேன்னு கொஞ்சம் கூட வெட்கப்படாத இவர ”மொக்கைகளின் தலைவர்” என அழைப்பதே பொருத்தம்.
  கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம அல்ஜீரியா துனிசியான்னு உளறிக்கொட்டுது.

  மொக்கைகளின் தலைவரே,

  இந்த ரமலான் மாதத்தில்தான் அல்ஜீரிய கால்பந்து அணி ஜெர்மனி அணியை எதிர்த்து இரண்டாவது சுற்று ஆட்டத்தில் விளையாடியது.அப்போது அல்ஜீரிய வீரர்கள் தாராளமாக தண்ணீர் குடித்தார்கள் இல்லையா.ஆட்டம் முடிந்த பின் யாராவது அவர்களை அடிக்க வந்தார்களா ?

  மதவெறி மொக்கை எண்.3.ஜோசப்.

  நீங்கள் மாட்டுக்கறியை புறக்கணிக்க முன்னர் ஒரு காரணம் சொல்லியிருந்தீர்கள்.அதையும் அதற்கு நான் அளித்த மறுமொழியையும் மீண்டும் ஒரு முறை படித்து விட்டு வாருங்கள்.அது மாட்டுக்கறி ஆதரவாளராக இப்போது போடும் வேடத்துக்கு பொருந்துகிறதா என்று சொல்லுங்கள்.பிறகு விவாதத்தை தொடர்வோம்.

  \\புதுசா இருக்கே இது எந்த இசுலாம் சியாவா சன்னியா அகமதியாவ//

  எந்த பிரிவாக இருந்தாலும் மனிதர்கள் ஒரே தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் என்பதுதான் இசுலாமிய கொள்கை.அதனால்தான் மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்கிறோம்.

  • திப்பு,

   நீங்கள் பகல் முழுதும் ரம்ஜான் நோம்பு இருக்கும் இன் நேரத்தில் ஏன் உங்கள் ஆற்றலை இந்த மத கோமாளிகளீடம் பேசி வீண் செய்கீண்றீர்கள் திப்பு ?

  • திப்பு சுல்தானுக்கு என்னுடைய பதிலை வினவு ஒரேயடியாக இருட்டடிப்பு செய்து விட்டது. அவரது ஆழமான, அருமையான கருத்துக்களுக்குப் பதிலளிக்காது விட்டால் அவரை நான் மதிக்கவில்லை என அவர் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதாலும், அவரது கருத்தை நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன் என அவர் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதாலும் விரைவில் எனது வலைப்பதிவில் என்னுடைய பதில் வெளியிடப்படும். நான் எதுவுமே தவறாகவோ அல்லது மொக்கை, சொக்கை என அவமதிக்கும் வார்த்தை எதையும் எழுதவில்லை, அப்படியிருந்தும் ஒரு தலைப்பட்சமாக எனது பதிலைத் தணிக்கை செய்தாலும் பரவாயில்லை, அப்படியே இருட்டடிப்பு செய்த வினவு குழுவினர் கருத்துச் சுதந்திரம் பற்றி பம்மாத்து விடுவதைப் போன்ற வேடிக்கை எதுவும் கிடையாது. 🙂

   • \\கருத்துக்களுக்குப் பதிலளிக்காது விட்டால் அவரை நான் மதிக்கவில்லை என அவர் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதாலும், அவரது கருத்தை நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன் என அவர் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதாலும்//

    அப்படியானால் இந்த பின்னூட்டத்திற்கு எந்த ஒரு மறுமொழியும் சொல்லாமல் ஓடிப்போனதற்கு என்ன பொருள்.

    https://www.vinavu.com/2014/06/10/remembering-robert-caldwell/#comment-142249

 15. இப்பவும் சொல்லுறேன் நான் மாட்டிறைச்சி உண்பது இல்லை உணவு பழக்கத்தை வைத்து ஏற்ற தாழ்வுகளை கண்டிப்பதில் என்ன தவறு நீங்க சும்மா கதை விடாம மொக்கைகளுக்கு இசுலாமிய சகோதரத்துவா வாசகங்களை குரானிலிருந்து விளக்குங்கள்

 16. https://www.vinavu.com/2014/06/10/remembering-robert-caldwell/#comment-142254

  அந்த தமிழ் தேசியவாதியை சிங்களவன் ”கள்ளத்தோணி” என்கிறான்.புலம் பெயர் நாடுகளில் புதிய நாஜிக்கள் ”வந்தேறி நாய்” என்கிறான். தமிழகத்தில் சோ தலைமையில் பார்ப்பன கூட்டம் ஈழத்தமிழர்களை ”தீவிரவாதிகள்” ” ”துப்பாக்கி கலாசாரம் ” என தூற்றுகிறது.

  இவற்றையும் ”வழக்கத்தில் உள்ள பெயர்கள் தான்” என ஏற்றுக் கொள்கிறாரா தமிழ் தேசியவாதி.

  இந்த பின்னூட்டத்திற்கு எந்த ஒரு மறுமொழியும் சொல்லாமல் ஓடிப்போனவர்தான் வியாசன்.

 17. உங்களின் இந்தப் பின்னூட்டத்தை நான் காணவேயில்லை. அது ஒருபுறமிருக்க, உங்களின் ‘எல்லா’ உளறல்களுக்கும் நான் நிச்சயம் பதிலளிப்பேனென்று எப்போதாவது கூறினேனா? உங்களுக்கும் வினவுக்குமிடையில் என்ன ஒப்பந்தமோ எனக்குத் தெரியாது. உங்களைப் போல் ‘மொக்கை’, ‘சொக்கை’ என்று எந்தவகையான வார்த்தைகளையும் நான் பாவிக்காத போதும், எனது பதிலை அப்படியே இருட்டடிப்பு செய்து விட்டார்கள். இந்த லட்சணத்தில் நேரத்தைச் செலவிட்டு, உங்களைப் போன்றவர்களுக்குப் பதிலளிக்க யாருக்குத் தான் மனம் வரும்.

  உங்களின் வசனம் நன்றாக இருந்தாலும் கூட, இலங்கையைப் பற்றிய அறிவு உங்களுக்குக் குறைவு அதனால் மீண்டும் முயற்சிக்கவும். சிங்களவர்கள் கள்ளத்தோணி என்பது மலையகத்தமிழர்களையும், அவர்கள் மரக்கலயா என்றழைக்கும் முஸ்லீம்களையும் தானே தவிர ஈழத்தமிழர்களை அல்ல. நாங்கள் தான் சிங்களவர்களை கள்ளத்தோணியில் வந்த விஜயனின் பரம்பரை என்கிறோம்.
  Neo Naziகள் ‘வந்தேறி நாய்கள்’ என்பது ஈழத்தமிழர்களை மட்டுமல்ல, எல்லா நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்களையும் தான் (முஸ்லீமகள் உட்பட). அதிலும் அவர்கள் உங்களின் அபிமானத்துக்குரிய அரபுக்களையும், முஸ்லீம்களையும் தான் கூடுதலாக வெறுக்கிறார்கள். சோ தலைமையில் பார்ப்பனர் கூட்டம் மட்டுமல்ல, தமிழ்நாட்டு முஸ்லீம்களும் கூடத் தான், இலங்கை முஸ்லீம்களுடன் இணைந்து கொண்டு, ஈழத்தமிழர்களை தீவிரவாதிகளாகவும் தமது எதிரிகளாகவும் எண்ணி சிங்கள அரசுக்கு வால் பிடித்தார்கள். சோ ராமசாமியும் அவரது கூட்டமும் உங்களையும் அதாவது தமிழ்நாட்டு முஸ்லீம்களையும் தான் தீவிரவாதிகள் என்கிறார்கள்.

  //இந்த பின்னூட்டத்திற்கு எந்த ஒரு மறுமொழியும் சொல்லாமல் ஓடிப்போனவர்தான் வியாசன்//

  • அவன் யாரை எல்லாம் வந்தேறி நாய் என்கிறான் என்பதல்ல கேள்வி. வியாசன் என்கிற தமிழ் தேசியவாதியை அவன் வந்தேறி நாய் என திட்டுவதை ”வழக்கத்தில் உள்ள பெயர்தான்” என ஏற்றுக் கொள்கிறாரா தமிழ் தேசியவாதி. என்பதுதான் கேள்வி.

   \\சிங்களவர்கள் கள்ளத்தோணி என்பது மலையகத்தமிழர்களையும், அவர்கள் மரக்கலயா என்றழைக்கும் முஸ்லீம்களையும் தானே தவிர ஈழத்தமிழர்களை அல்ல//

   இந்த ஈழதமிழர் என்ன சொல்கிறார் என படித்து விட்டு வெட்டி உதார் செல்லுபடியாகுமா என சொல்லவும்.

   http://kilatupoosari.blogspot.in/2009_08_01_archive.html

   • //”வழக்கத்தில் உள்ள பெயர்தான்” என ஏற்றுக் கொள்கிறாரா தமிழ் தேசியவாதி. என்பதுதான் கேள்வி.///

    ஈழத்தமிழர்கள் ஈழத்தை விட்டு வெளியே எந்த நாட்டிலும் வாழ்ந்தாலும். குடியேறினாலும் அங்கு அவர்கள் வந்தேறிகள் தான். அந்த உண்மையை ஒப்புக் கொள்ள நாங்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. நியோ நாசிகள் ஈழத்தமிழர்களை வந்தேறி நாய்கள் என்று அழைத்ததாகவோ தாக்கிதாகவோ நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் உங்களைப் போன்ற முஸ்லீம்களை அவர்கள் பல நாடுகளில் தாக்கியுள்ளார்கள். 🙂

    //இந்த ஈழதமிழர் என்ன சொல்கிறார் என படித்து விட்டு வெட்டி உதார் செல்லுபடியாகுமா என சொல்லவும்///

    அந்த ஈழத்தமிழர் இந்தியா வம்சாவழிக் கலப்புள்ளவராக இருக்காலாம், அல்லது அவரும் இந்த விடயத்தில் உங்களைப் போல் கேள்விஞானம் மட்டும் உடையவராக இருக்கலாம். யார் கண்டது. அவரை ஏன் சிங்களவன் கள்ளத்தோணி என்று கூப்பிட்டான் என்று நீங்கள் அவருக்கும் ஒரு பின்னூட்டத்தைப் போட்டுக் கேட்க வேண்டியது தானே. 🙂

    சிங்களவர்கள் ஈழத்தமிழர்களை கள்ளத்தோணிகள் என்று அழைப்பதில்லை. இலங்கையில் கள்ளத்தோணிகள் என்றால் அது மலையக(இந்திய)வம்சாவழித் தமிழர்களையும், முஸ்லீம்களையும் (அதாவது மரக்கலத்தில் வந்த மரக்கலயாக்களையும்) தான் குறிக்கும். சிங்களவர்கள் ஈழத் தமிழர்களையும், மலையகத் தமிழர்களையும் ஒன்றாகக் கள்ளத்தோணிகள் என்று அழைத்திருந்தால், மலையகத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் எப்பொழுதோ ஒன்றுபட்டிருப்பார்கள். அது அவர்களை இணைத்திருக்கும் அதனால் ஒன்றுபட்டுப் போராடியிருப்பார்கள்.

    • பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டாகத்தான் இருக்கிறது என சாதிக்கிறது.சிங்கள இனவெறியர்கள் இணைய வெளியெங்கும்
     ஈழத்தமிழர்களை கள்ளத்தோணி என இழிவு படுத்துகிறார்கள்.மாதிரிக்கு சில ஆதாரங்கள்.

     http://www.lankaweb.com/news/items/2013/10/31/open-letter-to-c-v-vigneswaran-do-you-deserve-any-respect/

     http://www.topix.com/forum/world/sri-lanka/THURRVI60O28807OO/p2

     ஆனாலும் எங்களை சொல்லவில்லை,மலையக தமிழர்களை சொல்றான்,முசுலிம்களை சொல்றான் என எதிரிக்கு வக்காலத்து வாங்குறாரு ”தமிழ் தேசியவாதி”.

     அடுத்து புதிய நாஜிக்கள் ஈழதமிழர்களை தாக்குவதில்லை என அந்த இன வெறியர்களுக்கு வக்காலத்து வாங்க கிளம்புறாரு.

     மைய தரைக்கடல் பகுதி மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர்களை wog என இழிவு பட அழைப்பதும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் புதிய நாஜிக்களுக்கு வாடிக்கையாக உள்ளது.இந்த சுட்டியில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டது பதிவாகி இருக்கு.

     http://www.loonwatch.com/2011/09/two-charged-in-attack-on-south-asian-men-were-inspired-by-breivik/

     இதற்கு என்ன சொல்ல போறாரு ”தமிழ் தேசியவாதி”.

     ஒருவேளை தன்னை அடிமைபடுத்துபவனையே நேசிக்கும் மனநோய் [stockholm syndrome ] ”தமிழ் தேசியவாதி”யை பீடித்திருக்கிறதோ எதிரிகளுக்கும் வக்காலத்து வாங்கி கொண்டு அலையுறாரே.

     பி.கு.
     ஈழத்தமிழர்கள் எந்த நாட்டிலும் வந்தேறிகள் அல்ல.சொந்த நாட்டில் அவர்களை வாழ விடாமல் அந்த நாட்டின் அரசாங்கமே ஒடுக்குமுறையை ஏவி இனப்படுகொலை செய்கிறது.அந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வக்கற்ற பன்னாட்டு சமூகத்திற்கு அந்த இனப்படுகொலையிலிருந்து உயிர் தப்பி ஓடிவரும் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரிக்கும் பொறுப்பு இருக்கிறது.புலம் பெயர் நாடுகளிலும் ஈழ மக்கள் பிச்சை எடுத்து உண்ணவில்லை.உழைத்துத்தான் உண்ணுகிறார்கள்.அதன் மூலம் அந்தந்த நாடுகளின் பொருளாதார இயக்கத்திற்கு அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள்.ஆகவே வந்தேறிகள் என்று குற்ற உணர்வு கொள்ள வேண்டியதில்லை.

     • திப்பு,

      உஙக்ளுக்கு என் கடுமையான கண்டனங்கள் :

      “…….. என எதிரிக்கு வக்காலத்து வாங்குறாருபோலி தமிழ் தேசியவாதி”

      என்று நிங்கள் எழுதி இருக்க வேண்டும் 🙂

      //ஆனாலும் எங்களை சொல்லவில்லை,மலையக தமிழர்களை சொல்றான்,முசுலிம்களை சொல்றான் என எதிரிக்கு வக்காலத்து வாங்குறாரு ”தமிழ் தேசியவாதி”.//

      • அண்ணன் சரவணன் என்ன சொன்னாலும் எனக்குக் கோபமே வராது. அவர் லூசுத்தனமாக இப்படித் தான் உளறுவார் என்றெல்லாம் மரியாதையில்லாமல், அவரைப் பற்றிப் பேச எனக்கு மனம் வருகுதில்லை. ஆனால் அவருக்குக் கூட்டுச் சேர்ந்து ஜால்ரா போடுவதில் அலாதிப்பிரியம் என்பதை அவர் செந்தில்குமரனாக இருந்த காலத்திலேயே அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். 🙂

       • வியாசன் ,

        [1]ஒரு போலி தமிழ் தேசியவாதியை திப்பு தமிழ் தேசியவாதி என்று கூறும் போது அவர் தவறுக்கு கண்டனம் தெரிவிக்காமல் இருக்க நான் ஒன்றும் உம்மை போன்ற fake [ போலி] இல்லையே 🙂

        [2]வியாசனையே “தமிழ் தேசியவாதி” என்று மிக உயர்வாக திப்பு அழைத்ததுக்கு நீர் தான் வெட்க பட வேண்டும்.

     • திப்பு,

      [1]இதை உரக்க சொல்லும் உரிமையும், கடமையும் அந்த போலி தமிழ் தேசியவாதிக்கு இருப்பினும் இதை அவர் சொல்லாமல் மாற்று மதத்தவர் மீது அவர் வன்மம் காட்டுவது ஏன் திப்பு ?

      [2]ஒருவேளை தன்னை அடிமைபடுத்துபவனையே நேசிக்கும் மனநோய் [stockholm syndrome ] இந்த ” போலி தமிழ் தேசியவாதி”க்கு இருப்பதால் , மாற்று மதத்தவர்களையும் அடிமையாக்க வேண்டும் என்ற “நல்ல எண்ணம்” தானோ ?

      //ஈழத்தமிழர்கள் எந்த நாட்டிலும் வந்தேறிகள் அல்ல.சொந்த நாட்டில் அவர்களை வாழ விடாமல் அந்த நாட்டின் அரசாங்கமே ஒடுக்குமுறையை ஏவி இனப்படுகொலை செய்கிறது.அந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வக்கற்ற பன்னாட்டு சமூகத்திற்கு அந்த இனப்படுகொலையிலிருந்து உயிர் தப்பி ஓடிவரும் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரிக்கும் பொறுப்பு இருக்கிறது.புலம் பெயர் நாடுகளிலும் ஈழ மக்கள் பிச்சை எடுத்து உண்ணவில்லை.உழைத்துத்தான் உண்ணுகிறார்கள்.அதன் மூலம் அந்தந்த நாடுகளின் பொருளாதார இயக்கத்திற்கு அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள்.ஆகவே வந்தேறிகள் என்று குற்ற உணர்வு கொள்ள வேண்டியதில்லை.//

     • பூனை கண்னை மூடிக்கொண்டது உலகம் இருன்டு விட்டது நல்ல உதாரனம் அனால் அது திப்பு பாய்க்கு மட்டும் பொறுந்தும் என்றே நினைக்கிறேன் அய்யா திப்பு இசுலாமில் சகோதர தத்துவங்களை எடுத்து இயம்பும் வாசகங்களை எடுத்து சொல்லுங்களேன் நாங்களும் இசுலாமிய சகோதரத்துவத்தை அறிந்து கொள்வோமே துணைக்கு சரவணனை கூப்பிட்டு கொள்ளுங்கள் என்னா எனக்கு இசுலாம் மனிதர்களை காபீர் மூமீன் என்று பிரிப்பதாகவும் காபிர்களை வெருக்கும் படி கட்டளை இடுவதாகவும் சிலர் கூறுகிறார்கள் இதை எப்படி சகோதரத்துவதை கற்பிக்கும் மதம் என்று சொல்லூகிறார்கள் என்று கேட் க்கும் மக்களுக்கு பதில் சொல்லுவது அவசியம் இல்லையா….

 18. //உங்களின் இந்தப் பின்னூட்டத்தை நான் காணவேயில்லை. அது ஒருபுறமிருக்க, உங்களின் ‘எல்லா’ உளறல்களுக்கும் நான் நிச்சயம் பதிலளிப்பேனென்று எப்போதாவது கூறினேனா? உங்களுக்கும் வினவுக்குமிடையில் என்ன ஒப்பந்தமோ எனக்குத் தெரியாது. உங்களைப் போல் ‘மொக்கை’, ‘சொக்கை’ என்று எந்தவகையான வார்த்தைகளையும் நான் பாவிக்காத போதும், எனது பதிலை அப்படியே இருட்டடிப்பு செய்து விட்டார்கள். இந்த லட்சணத்தில் நேரத்தைச் செலவிட்டு, உங்களைப் போன்றவர்களுக்குப் பதிலளிக்க யாருக்குத் தான் மனம் வரும்.// நான் குடுத்த பதிலையும் வெளியிட வில்லை என்ன மர்மமோ தெரியல வினவு தளத்தில் மொக்கைகளின் பதில்களை வெளியிட மாட்டோம் என்பது கொள்கை முடிவாக இருக்கலாம்……….

 19. //திப்புவிற்கான எனது பதில் எனது ப்ளாகில்.//நான் வியாசன் ,யுனிவர்புட்டி எல்லாறும் மத வெறியர்கள் வினவு உங்கள் நடுனிலமை பாராட்டதக்கது ரெம்ம்ப சந்தோசம் உங்களின் கம்மூனிசம் இதுதான கம்மூனிசம்னா ஏற்றதாழ்வு இல்லாம எல்லாறயும் சமமா பாக்குறதுனு நினைச்சேன் அனா அது இல்ல கம்மூனிசம்னா அது இசுலாமிய சார்புனு எனக்கு புரிய வச்சுட்டீங்க நன்றி

 20. திப்பு நானா உண்மையிலேயே, அறளை பெயருகின்ற வயதைச் சேர்ந்தவராக இருப்பார் என்று நான் இன்று வரை நினைத்தில்லை. அல்லது இப்படி Lankaweb ஐ ஆதாரம் காட்டியிருக்க மாட்டார். முஸ்லீம்கள் தீவிரவாதிகள் என்பதற்கு நான் ஆர் எஸ் எஸ் இன் இணையத்தளத்தை அல்லது சங்பரிவார்களின் கட்டுரைகளை ஆதாரம் காட்டினால் என்னைப் பார்த்து மற்றவர்கள் நிச்சயமாக சிரிப்பார்களா, இல்லையா? அப்படியானது தான் சிங்கள இனவாதிகள் ஆளுக்காள் ஆறுதல் கூறி, மாறி மாறி மாறி ஒப்பாரி வைத்துக் கொள்ளும் இணையதத்தளமாகிய Lankaweb இலுள்ள உளறலை ஆதாரம் காட்டும் திப்பு சுல்தானின் வாதமும். அதில் ஒரு சில உளறல்களைப் படித்தவுடனேயே, அந்த இணையத்தளத்தைப் பற்றி அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். உண்மையில் சிங்களவர்கள் கூட, அந்த இணையத்தளத்தை எதற்கும் ஆதாரம் காட்ட மாட்டார்கள். திப்பு நானாவின் ஈழத்தமிழர் எதிர்ப்பு பிரச்சாரத்தின் பின்னணியில் lankaweb தான் இருக்கிறது என்பதை நினைக்க எனக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை. 🙂

  அங்குள்ளவர்கள் சிங்கள இனவாத nutcases என சிங்களவர்களே நக்கலடிப்பதை Groundsviews, Colombo telegraph போன்ற இணையத்தளங்களில் காணலாம். உதாரணமாக Lankaweb இல் அசோகா வீரசிங்கா என்றொரு நட்கேசுக்கு வேலை கனடாவின் பிரதமருக்கும், அரசாங்கத்துக்கும் தமிழர்களைப் பற்றி அவதூறு கடிதம் எழுதுவது தான் வேலை. அது ஒருமுறை, கனடா இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தாது விட்டால், கனடாவிலுள்ள சிங்களவர்களை எல்லாம் Conservative கட்சிக்கு வாக்களிக்காமல் செய்து, கனடாவின் அரசைக் கவிழ்க்கப் போவதாக, கனேடிய பிரதமருக்கு Lankaweb இல் கடிதம் எழுதினார். அதைப் பார்த்து சிங்களவர்களே சிரிக்கத் தொடங்கி விட்டார்கள், அதில் வேடிக்கை என்னவென்றால் கனடாவில் ஒரு சிங்கள கவுன்சிலரை தெரிவு செய்யுமளவுக்குக் கூட சிங்கள வாக்குகள் இல்லை. Lankaweb இல் உள்ளவர்களைச் சிங்களவர்களே கணக்கிலெடுப்பதில்லை. அவர்களின் வரலாறு சம்பந்தமான் எல்லா பதிவுகளும் அப்பட்டமாக தமிழர்களுக்கேதிராக திரிக்கப்பட்ட உளறல்கள். கடைசியில் திப்பு நானா சரியான கூட்டாளிகளுடன் தான் சேர்ந்திருக்கிறார். 🙂

  http://www.topix.com இல் எவனும் உளறலாம். இலங்கை முஸ்லீம்களே தமிழர்களுக்கெதிராக சிங்களவர்கள் போல் நடித்துக் கொண்டு நஞ்சைக் கக்குவதுண்டு. இனிமேலாவது திப்பு காக்கா, ஆதாரங்களைத் தேடும் போது, வெறும் அப்பட்டமான சிங்கள இனவாத இணையத்தளங்களைத் தேடிபிடிக்காமல், நடுநிலையான, மற்றவர்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, இணையத்தளங்களைத் தேடினால் அவருக்கும் நல்லது. எங்களுக்குக் கோபம் வரும் போது ஈழத்தமிழர்களும் தான் சிங்களவர்களை கள்ளத்தோணிகள் என்கிறோம். ஆனால் பொதுவாக இலங்கையில் கள்ளத்தோணிகள் என்றால் ஈழத் தமிழர்களைக் குறிக்காது, அது, இந்திய வம்சாவழித் தமிழர்களையும் முஸ்லீம்களையும் தான் குறிக்கும். சிங்களவர்கள் முஸ்லீம்களை ‘மரக்கலயா’ என்று தான் சாதாரணமாக அழைக்கிறார்கள். பார்க்கப் போனால் திப்பு சுல்தான் தான் ஈழத்தமிழர்களை கள்ளத்தோணி என்று “நிரூபிக்க” ஆசைப்பட்டுத் தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்கிறார் போலத் தெரிகிறது. 🙂

  //http://www.lankaweb.com/news/items/2013/10/31/open-letter-to-c-v-vigneswaran-do-you-deserve-any-respect/
  http://www.topix.com/forum/world/sri-lanka/THURRVI60O28807OO/p2//

 21. //இந்த சுட்டியில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டது பதிவாகி இருக்கு.//

  எப்படியோகூகிளில் தேடோ தேடென்று தேடி ஒரு இலங்கைத் தமிழர் தாக்கப்பட்டதைக் கண்டு பிடித்து விட்டார் திப்புனான. ஆனால் அந்த தாக்குதல் “Breivik ‘tribute’ attack” இல் குறிப்பிடப்படும் Behring Brevik என்ற நியோநாசி விடுதலைப் புலிகளைப் புகழ்ந்தது மட்டுமல்ல, அவர்களை தான் அவனுக்கு inspiration என்றானாம், ஏனென்றால் விடுதலைப் புலிகள் எப்படி முஸ்லீம்களை வடக்கிலிருந்து வெளியேற்றினார்களோ அதே போல முஸ்லீம்களையும் நோர்வேயிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் அவனது கருத்து என்றும் கூடத் தான் சிங்களவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

 22. யாருடைய வாதம் முட்டாள்தனமானது , பார்க்கலாம்.

  சிங்களவன் ஈழ தமிழர்களை கள்ளத்தோணிகள் என்று இழிவு பட சொல்கிறான் ,அதனை வழக்கத்தில் உள்ள சொல்தான் என ஏற்கிறாரா வியாசன் என்பதுதான் எனது கேள்வி.

  சிங்களவன் ஈழ தமிழர்களை கள்ளத்தோணிகள் என சொல்வதில்லை என்று சாதித்தார் வியாசன்.அவன் கள்ளத்தோணி என சொல்வதற்கான ஆதாரங்களை தந்த பின் தனது கூற்று பொய்யாய் போனதை ஏற்க முடியாமல் அவையெல்லாம் சிங்கள இனவெறி தளம் அவற்றை எப்படி ஆதாரமாக \காட்டலாம் என்கிறார்.என்ன ஒரு முட்டாள்தனமான வாதம்.ஒரு இன வெறி கள்ளப்பரப்புரையை இனவெறி தளங்களில்தான் காண முடியும்.அவன் அப்படி திட்டுகிறானா இல்லையா என்பதுதான் கேள்வி.திட்டுகிறான் என மெய்ப்பிக்கிறது அந்த இனவெறி தளம்.இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்ற முட்டாள்தனம் அம்பலமாகி போனதால் ஆத்திரப்பட்டு

  \\ பார்க்கப் போனால் திப்பு சுல்தான் தான் ஈழத்தமிழர்களை கள்ளத்தோணி என்று “நிரூபிக்க” ஆசைப்பட்டுத் தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்கிறார் போலத் தெரிகிறது. :)//

  என்கிறார்.

  சிங்களவன் ஈழ தமிழர்களை கள்ளத்தோணிகள் என சொல்வது சரிதான் என்றோ அதை மெய்ப்பிக்க சிங்களவனின் கள்ளப்பரப்புரை யாதொன்றையுமோ நான் வாதமாக வைக்கவில்லை.ஆனாலும் அப்படி மெய்ப்பிக்க நான் ஆசைப்படுவதாக இட்டுக்கட்டி சொல்கிறார்.கண் முன்னால் இருக்கும் வாதத்தில் அப்பட்டமாக இட்டுக்கட்டுவது எத்தகைய முட்டாள்தனமான வாதம்.இந்த முட்டாள் எதிராளிகளை முட்டாள் என்கிறது.
  .இதில் பெரிய புத்திசாலித்தனம் என்று நினைத்து சிரிப்பு பொம்மை வேறு போட்டுக் கொள்கிறது.குயிலைப் பார்த்து பழித்ததாம் கோட்டான்

  \\எப்படியோகூகிளில் தேடோ தேடென்று தேடி ஒரு இலங்கைத் தமிழர் தாக்கப்பட்டதைக் கண்டு பிடித்து விட்டார் //

  இன்னும் தேடினால் கூடுதலான தகவல்கள் கிடைக்க கூடும்.நிறவெறி தாக்குதல்கள் பல தளங்களில் பல வடிவங்களில் நடக்கின்றன.அவை அத்தனையுமே அம்பலத்துக்கு வருவதில்லை.

  முட்டாள்களுக்கு வெட்க உணர்வு கொஞ்சம் கூட இருக்காது போலும். நாசிகள் ஈழத்தமிழர்களை தாக்கியதாக நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்று இந்த கிணற்றுத்தவளை சொன்னது.தாக்கியிருக்கிறார்கள் என ஆதாரம் காட்டினால் நாம் சொன்னது தவறாக போய் விட்டதே என வெட்கப்படாமல் அதை நையாண்டி செய்யுறாராம்.நியாய உணர்வு உள்ளவர் என்றால் ஆம்.தாக்கியிருக்கிறார்கள்,எனது கருத்தை மாற்றிக்கொள்கிறேன் என சொல்லி இருப்பார்.வியாசனின் மூளையில் முட்டாள்தனமும் அகங்காரமும் நிரம்பி இருப்பதால் அது நையாண்டியாக வெளிப்படுகிறது.

  • திப்பு,

   நீங்கள் கூறிய கீழ் கண்ட இக் கருத்தை வியாசன் புரிந்து கொள்ளாமைக்கு காரணம் வியாசனின் பேரினவாத சிங்களவனுக்கு சாமரம் வீசும் கைகூலி தனம் இல்லாமல் என்னவாக இருக்க முடியும் ?


   ஈழத்தமிழர்கள் எந்த நாட்டிலும் வந்தேறிகள் அல்ல.சொந்த நாட்டில் அவர்களை வாழ விடாமல் அந்த நாட்டின் அரசாங்கமே ஒடுக்குமுறையை ஏவி இனப்படுகொலை செய்கிறது.அந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வக்கற்ற பன்னாட்டு சமூகத்திற்கு அந்த இனப்படுகொலையிலிருந்து உயிர் தப்பி ஓடிவரும் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரிக்கும் பொறுப்பு இருக்கிறது.புலம் பெயர் நாடுகளிலும் ஈழ மக்கள் பிச்சை எடுத்து உண்ணவில்லை.உழைத்துத்தான் உண்ணுகிறார்கள்.அதன் மூலம் அந்தந்த நாடுகளின் பொருளாதார இயக்கத்திற்கு அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள்.ஆகவே வந்தேறிகள் என்று குற்ற உணர்வு கொள்ள வேண்டியதில்லை.

   //சிங்களவன் ஈழ தமிழர்களை கள்ளத்தோணிகள் என சொல்வது சரிதான் என்றோ அதை மெய்ப்பிக்க சிங்களவனின் கள்ளப்பரப்புரை யாதொன்றையுமோ நான் வாதமாக வைக்கவில்லை//

 23. திப்பு,

  [1]இது முட்டாள் தனம், அகங்காரம், நையாண்டி மட்டும் தானா ? இல்லை அதையும் தாண்டி பேரினவாத சிங்களவனுக்கு சாமரம் வீசும் கைகூலி தனமுமா ?

  [2]ஒரு இன வெறி கள்ளப்பரப்புரையை இனவெறி தளங்களில்தான் காண முடியும் என்ற விடயையம் கூட வியாசனுக்கு தெரியாது, எனவே அவருடைய அறியாமை முட்டாள் தனம் என்று கூறி நீங்கள் வியாசனை மென்மையாக விமர்சனம் செய்வதை நான் வன்மையாக கண்டிகின்றேன்.இந்த என் கண்டனம் நம் நட்பையும் தாண்டி கொள்கை ரீதியீலானது திப்பு. வியாசனின் அறியாமையை தான் வியாசன் பேரினவாத சிங்களவனுக்கு சாமரம் வீசும் கைகூலி தனம் என்று கூறுகின்றேன்.

  [3]இது போன்ற அறியாமையுடன் நீங்களோ , நானோ ,வினவோ பேசி இருந்தால் , வியாசன் நம்மை சும்மா விடுவாரா ?

  //வியாசனின் மூளையில் முட்டாள்தனமும் அகங்காரமும் நிரம்பி இருப்பதால் அது நையாண்டியாக வெளிப்படுகிறது.//

  • //ஒரு இன வெறி கள்ளப்பரப்புரையை இனவெறி தளங்களில்தான் காண முடியும் என்ற விடயையம் கூட வியாசனுக்கு தெரியாது//

   முற்றிலும் உண்மை. ஆனால் அத்தகைய இனவெறி தளங்களில் காணபப்டும் கள்ளப்பரப்புரையை நம்புகிறவன், அதையும் கணக்கிலெடுப்பவன, அல்லது அதை ஆதாரம் காட்டி, ஒரு குறிப்பிட்ட இனத்தை கள்ளத்தோணி என்பவன் தான் அந்த இனவெறி இணையத்தளத்தில் எழுதியவனை விட மோசமான இனவெறியன் என்பதை விளங்கிக் கொள்ள அண்ணன் சரவணனுக்கு கொஞ்சம் அதிகமாக நேரமெடுக்கும் என நம்புகிறேன். பரவாயில்லை, அவருக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளட்டும். 🙂

   • விளங்காத வியாசன்,

    [1]சிங்களவனின் இன வெறி “கள்ளப்பரப்புரையை” என்று சிங்களவனின் கருத்தை பொய் என்று திப்பு கூறிய பின்பும் அது வியாசனுக்கு மட்டும் விளங்காதது தான் இப்போது பெரிய சோகம். 🙂

 24. I have spoken to Sinhalese & Yaazhpanam Tamils in London and from what i found out,Yaazhpanam Tamils are such natives of the land they inhabit or used to that no political propoganda can change anybody’s perception.

  Sinhalese themselves know that they are aliens in Northern Province,things may change after 100 years but history cannot be washed away.

 25. தனது பதில் தான் எந்த விவாதத்திலும் இறுதியான பதிலாக இருக்க வேண்டுமென்பது திப்புவின் ஆசை போலிருக்கிறது, அது வெறும் முட்டாள்தனமானதாக இருந்தாலும் கூட. அப்படியான ஆசை எதுவுமெனக்குக் கிடையாது. 🙂

  சிங்களவன் ஈழத்தமிழர்களை அதாவது இலங்கையின் பூர்வீக குடிகளாகிய, வடக்கு கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களை கள்ளத்தோணிகள் என்று கூறுவதில்லை. அதனால் அது வழக்கத்தில் அவர்களைக் குறிக்கும் சொல் அல்ல, இலங்கையில் கள்ளத்தோணிகள் என்ற சொல் பொதுவாக, இந்திய வம்சாவளியினரகிய மலையகத் தமிழர்களையும், இலங்கைக்கு தோணிகளிலும், சாம்பன் படகுகளிலும் வந்த முஸ்லீம்களை மட்டும் தான் குறிக்கும் என்பதை எத்தனை முறை எடுத்துக் கூறியும், ஒரு சிங்கள இனவெறித் இணையத்தளத்தை ‘ஆதாரம்’ காட்டி, ஈழத்தமிழர்களை கள்ளத்தோணிகள் என்று ‘நிரூபிக்க’ ஆசைப்பட்டு தனது முட்டாள்தனத்தை எல்லோருக்கும் காட்டுகிறார் திப்பு சுல்தான்.

  அவரத்து கருத்தின் படி பார்த்தால், ஆர் எஸ் எஸ் காரர்களும் சங்பரிவார் பிரச்சாரகர்களும் தமிழ்நாட்டு முஸ்லீம்களை தீவிர வாதிகள், இந்து தலைவர்களைப் படுகொலை செய்யும பயங்கரவாதிகள், பாகிஸ்தானின் உளவுப்படையினர் என்றெல்லாம் கூடத் தான் கூறுகின்றனர். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எல்லாம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பவர்கள் எனவும், அவர்கள் கூறுவதெல்லாம் உண்மை என்றும் திப்பு சுல்தான் ஒப்புக் கொண்டால், Lankaweb இல் ஒரு சிங்கள nutcase இன் கருத்துப்படி, ஈழத்தமிழர்களும் கள்ளத்தோணிகள் தான் என்று அவர் கூறுவதை நானும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

  Lankaweb இணையத்தளத்தில் கூட, பெரேரா என்ற குடும்ப பெயரைக் கொண்ட போத்துக்கேயக் கலப்புள்ள, சிங்கள மடையன் (அவரையே உண்மையான சிங்களவர் என்று சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இலங்கையில் சிங்கள பெளத்தர்கள் தான் உண்மையான சிங்களவர்களே தவிர, கிறித்தவர்கள் அல்ல.) கூறுவதென்னவென்றால்:

  “At least two third of the Tamils in the North and East are illegal immigrants from Tamil Nadoo.‚ During the time of terror by the racist Tamil Terrorists, Vaiko, Nedumaran, Seaman, Krunasleeping and that fat mistress exported ship loads of starving Tamils who were imported by the Tamil Terrorist leader to build up their numbers”

  Translation:

  “குறைந்த பட்சம் வடக்கு கிழக்கில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள். இனவாத தமிழர்கள் அவர்களின் பயங்கரவாதத்தைத இலங்கையில் கட்டவிழ்த்து விட்டட காலத்தில், வைகோ, நெடுமாறன், சீமான், ‘தூங்குமூஞ்சி’ கருணாநிதி, குண்டு வைப்பாட்டி ஆகியோர் கப்பல் கப்பலாக பசியால் தவித்த தமிழ்நாட்டுத் தமிழர்களை ஏற்றுமதி செய்தனர், தமிழ்ப் பயங்கரவாத தலைவர் (பிரபாகரன்) தமிழர்களின் என்னிக்கைக்யை அதிகரிப்பதற்காக அவர்களை இறக்குமதி செய்தார்.”

  இதில் பெரேரா கூறுவது – தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக, விடுதலைப்போர் நடைபெற்ற முப்பது வருட காலத்தில் குடியேறியவர்களைத் தான் கள்ளத்தோணிகள் என்கிறாரே தவிர, ஈழத்தமிழர்களை அல்ல. பல இனவாதச் சிங்களவர்களின் கருத்து என்னவென்றால், புலிகள், வடக்கும் கிழக்கும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் பெருந்தொகையான தமிழ்நாட்டுத் தமிழர்களை (2/3 பங்கினர்) வடக்கு, கிழக்கில் குடியேற்றி காணிகளைப் பகிர்ந்து கொடுத்து விட்டனர் என்பது தான். (புலிகள் அதையாவது செய்திருக்கலாம், நிலமற்ற தமிழ்நாட்டுத் தமிழர்களை வன்னியிலும், தீவுகளிலுமாவது குடியேற்றியிருக்கலாம் )

  அதனால், பெரேரா கள்ளத்தோணி என்று அவரது drivel இல் குறிப்பிடுவது பூர்வீக ஈழத்தமிழர்களாகிய எங்களை அல்ல. “வைகோ, நெடுமாறன், சீமான், ‘தூங்குமூஞ்சி’ கருணாநிதி, குண்டு வைப்பாட்டி போன்றோர்” கப்பல் கப்பலாக அண்மையில் அனுப்பி வைத்த தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தான் என்பது இனிமேலாவது திப்பு சுல்தானுக்குப் புரியுமென நம்புகிறேன். 🙂

  எப்படியாவது ஈழத்தமிழர்களைக் கள்ளத்தோணிக்களாக்க திப்பு ஆசைப்படுகிறார். அனால் பெளத்த சிங்கள இனவாதத்தைக் கக்கும் மகாவம்சத்தின் அடிப்படையே, தமிழர்களிடமிருந்து வடக்கை கைப்பற்றுவது தான். அது அவர்களின் 2000 ஆண்டுக் கனவு, ஈழத்தமிழர்கள் இலங்கையில் இரண்டாயிரமாண்டுகளுக்கு மேல் வாழ்வது மட்டுமல்ல, இலங்கையின் ஆட்சியாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே உறுதிப் படுத்தும் போது, இலங்கையின் வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களை கள்ளத்தோணிகள் என்றழைக்க சிங்களவர்கள் ஒன்றும் திப்பு சுல்தான் வகையறாக்கள் போல் முட்டாள்கள் அல்ல.

  திப்பு சுல்தானின் எல்லாக் கருத்துக்களுமே இப்படியானவை தான். அதனால் அவரின் ‘எல்லா’ உளறல்களுக்கும் பதிலளிப்பேன் என நான் ஒருபோதும் கூறவில்லையே.

  • வியாசன் என்கிற பெயரை பொய்யன் என மாற்றி வைக்கலாம்.

   ஈழத்தமிழர்களை சிங்களவன் கள்ளத்தோணி என சொல்வதை இனவெறி கள்ளப்பரப்புரை என்கிறேன்.அப்படி சிங்களவன் சொல்வது சரி என வாதிடவில்லை என்கிறேன்.கண்முன்னால் வாதங்கள் இருக்கின்றன.அப்படி நான் சொல்லியிருந்தால் சுட்டிக்காட்டலாம் என்கிறேன்.

   ஆனாலும் இந்த பொய்யன் மீண்டும் மீண்டும் இந்த அவதூறை சொல்கிறார்.
   \\ஒரு சிங்கள இனவெறித் இணையத்தளத்தை ‘ஆதாரம்’ காட்டி, ஈழத்தமிழர்களை கள்ளத்தோணிகள் என்று ‘நிரூபிக்க’ ஆசைப்பட்டு தனது முட்டாள்தனத்தை எல்லோருக்கும் காட்டுகிறார் திப்பு சுல்தான்.//

   கண் முன்னால் இருக்கும் வாதத்தில் இட்டுக்கட்டி பொய் சொல்லும் முட்டாள்தனத்தை கூசாமல் செய்யும் இந்த முட்டாளுடன் விவாதிப்பதற்கு பாறாங்கல்லில் முட்டிக் கொள்ளலாம்.

  • வியாசன் ,

   [1]ஈழம் விட்டு வேறு நாடு குடி ஏறியதால் உங்களுக்கு தமிழ் மொழி மீதான ஆளுமை அழிந்து விட்டதா ? ஏன் இந்த குழப்பம் ?

   [2]சிங்களவனின் கள்ளப்பரப்புரையீன் பொருள் புரிய வில்லையா ?

   குறைந்த பட்சம் வடக்கு கிழக்கில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று சிங்களவன் பொய்யாக கள்ளப்பரப்புரை செய்யும் போது ,அது ஈழத்தைதையே பூர்விகமாக கொண்ட எம் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதல் தான் என்பதை புரிந்து கொள்ள உங்களை தடுக்கும் காரணிகள் யாவை ?

   [3]சிங்களவனின் நோக்கமே ஈழத்தையே பூர்விகமாக கொண்ட எம் ஈழ தமிழர்களை அவர்கள் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு பிரபாகரன் அவர்களால் ஈழத்தீன் வடக்கு கிழக்கில் குடி ஏற்றபட்டவர்கள் என்று அவன் கூறும் போது, அவன் ஈழத்தமிழர்களை தானே கள்ளத்தோணி என இழிவு படுத்துகின்றான்

   இதை விளங்கிக் கொள்ள விளங்கா வியாசனுக்கு கொஞ்சம் அதிகமாக நேரமெடுக்கும் என நம்புகிறேன். பரவாயில்லை, அவருக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளட்டும். 🙂

   //சிங்களவன் ஈழத்தமிழர்களை அதாவது இலங்கையின் பூர்வீக குடிகளாகிய, வடக்கு கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களை கள்ளத்தோணிகள் என்று கூறுவதில்லை. அதனால் அது வழக்கத்தில் அவர்களைக் குறிக்கும் சொல் அல்ல, இலங்கையில் கள்ளத்தோணிகள் என்ற சொல் பொதுவாக, இந்திய வம்சாவளியினரகிய மலையகத் தமிழர்களையும், இலங்கைக்கு தோணிகளிலும், சாம்பன் படகுகளிலும் வந்த முஸ்லீம்களை மட்டும் தான் குறிக்கும் என்பதை எத்தனை முறை எடுத்துக் கூறியும், ஒரு சிங்கள இனவெறித் இணையத்தளத்தை ‘ஆதாரம்’ காட்டி, ஈழத்தமிழர்களை கள்ளத்தோணிகள் என்று ‘நிரூபிக்க’ ஆசைப்பட்டு தனது முட்டாள்தனத்தை எல்லோருக்கும் காட்டுகிறார் திப்பு சுல்தான். //

   //“குறைந்த பட்சம் வடக்கு கிழக்கில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள். இனவாத தமிழர்கள் அவர்களின் பயங்கரவாதத்தைத இலங்கையில் கட்டவிழ்த்து விட்டட காலத்தில், வைகோ, நெடுமாறன், சீமான், ‘தூங்குமூஞ்சி’ கருணாநிதி, குண்டு வைப்பாட்டி ஆகியோர் கப்பல் கப்பலாக பசியால் தவித்த தமிழ்நாட்டுத் தமிழர்களை ஏற்றுமதி செய்தனர், தமிழ்ப் பயங்கரவாத தலைவர் (பிரபாகரன்) தமிழர்களின் என்னிக்கைக்யை அதிகரிப்பதற்காக அவர்களை இறக்குமதி செய்தார்.”//

 26. அண்ணே அண்ணே சரவணன் அண்ணே, உங்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று எனக்குப் புரியவில்லை அண்ணே. தமிழர்களின் மீது பொறாமையுள்ள, படிப்பறிவில்லாத சிங்களவர்களின் அர்த்தமற்ற உளறல்களை எல்லாம் எமது முன்னோர்கள் சீரியஸாக எடுத்திருந்தால், ஈழத்தில் தமிழினம் இரண்டாயிரமாண்டுகளுக்கு மேலாக தமிழர்களாக நிலைத்திருந்திருக்க முடியாது. Lankaweb இல் எதிர்க்கருத்தை தெரிவிக்க தமிழர்களை அனுமதிப்பதில்லை, அல்லது அந்த பெரேராவைப் பார்த்து, நீ உண்மையான இலங்கையன் அல்ல, Portugalக்கு ஓடிப் போ என்று சொல்லியிருப்பார்கள் ஈழத்தமிழர்கள். 🙂

  //இதை விளங்கிக் கொள்ள விளங்க வியாசனுக்கு கொஞ்சம் அதிகமாக நேரமெடுக்கும் என நம்புகிறேன். பரவாயில்லை, அவருக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளட்டும்.//

  • விளங்காத வியாசனுக்கு கொஞசம் கொஞசமா இப்ப தான் விளங்க தொடங்கி இருக்கு ! 🙂

   முதலில் வியாசன் ,

   ” பெரேரா கூறுவது – தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக, விடுதலைப்போர் நடைபெற்ற முப்பது வருட காலத்தில் குடியேறியவர்களைத் தான் கள்ளத்தோணிகள் என்கிறாரே தவிர, ஈழத்தமிழர்களை அல்ல”

   என்று கூறினார்.

   இப்ப என்ன சொல்லுராறு என்றால்…..

   “தமிழர்களின் மீது பொறாமையுள்ள, படிப்பறிவில்லாத சிங்களவர்களின் அர்த்தமற்ற உளறல்களை எல்லாம் எமது முன்னோர்கள் சீரியஸாக எடுத்திருந்தால், ஈழத்தில் தமிழினம் இரண்டாயிரமாண்டுகளுக்கு மேலாக தமிழர்களாக நிலைத்திருந்திருக்க முடியாது. Lankaweb இல் எதிர்க்கருத்தை தெரிவிக்க தமிழர்களை அனுமதிப்பதில்லை, அல்லது அந்த பெரேராவைப் பார்த்து, நீ உண்மையான இலங்கையன் அல்ல”

   எப்படியோ அந்த சிங்கள _____ பெரேரா, ஈழ தமிழர்களை தான் பொய்யாக ,கள்ளத்தோணி என்று இனவெறி கள்ளப்பரப்புரையுடன் சொல்வதை வியாசன் இப்ப ஒத்து கொண்டது, அவருக்கு கொஞசம் கொஞசம் தமிழ் மொழி மீது ரொம்ப லேட்டா ட்டியுப் லைட் மாதீரீ புரிதல் உள்ளது என்பதை அறிவித்துகொள்கின்றார். . 🙂

   • உங்களுக்கு Kindergarten குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துவது போல் விளக்கமாக எழுத வேண்டுமென்று எனக்கு இவ்வளவு நாளும் தெரியாது. பெரேரா வடக்கு, கிழக்கில் வாழும் பூர்வீக ஈழத்தமழர்களை (அவரின் கணிப்பில் 1/3 இல் ஒரு பங்கினர்) கள்ளத்தோணிகள் என்றழைக்கவில்லை, அவர் கள்ளத்தோணிகள் என்றது தமிழ்நாட்டில்லிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு, பிரபாகரனால் கப்பல் கப்பலாக இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் கூறும் தமிழ்நாட்டுத் தமிழர்களை என்பது இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை. பெரேராவின் உந்த விசர்க்கதையைத் தான் அர்த்தமற்ற உளறல் என்றேன் நான், ஏனென்றால் அப்படி எந்த தமிழ்நாட்டுத் தமிழர்களையும் பிரபாகரன் குடியேற்றியதாக நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் பெரேரா ஈழத்தமிழர்களை கள்ளத்தோணி என அழைக்கவில்லை என்ற எனது கருத்தில் மாற்றமேதுமில்லை, வழக்கம் போல் நீங்களும் குழம்பி, துரதிட்டவசமாக உங்களின் பதிலை வாசிக்க நேரும் மற்றவர்களையும் குழப்ப முயற்சிக்கிறீர்கள். 🙂

    //எப்படியோ அந்த சிங்கள _____ பெரேரா, ஈழ தமிழர்களை தான் பொய்யாக ,கள்ளத்தோணி என்று இனவெறி கள்ளப்பரப்புரையுடன் சொல்வதை வியாசன் இப்ப ஒத்து கொண்டது.//

    • Fuse Bulb viyasa,

     [1]உண்மையில் தமிழ் நாட்டில் இருந்து தமிழர்கள் ஈழத்துக்கு கள்ளத்தோணிகள் மூலம் இடம் பெயறாத போது , அந்த பேரினவாத சிங்கள பெரேரா கூறும் கள்ளபரப்புரை….

     “புலிகள், வடக்கும் கிழக்கும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் பெருந்தொகையான தமிழ்நாட்டுத் தமிழர்களை (2/3 பங்கினர்) வடக்கு, கிழக்கில் குடியேற்றி காணிகளைப் பகிர்ந்து கொடுத்து விட்டனர் ”

     என்பது ஈழத்தைதையே பூர்விகமாக கொண்ட அங்கு வாழும் எம் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதல் மற்றும் இழிவு செய்யும் கள்ளபரப்புரை என்பதை Fuse Bulb வியாசனுக்கு புரியாதது ஒன்றும் வியப்பு இல்லை 🙂

     // உங்களுக்கு Kindergarten குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துவது போல் விளக்கமாக எழுத வேண்டுமென்று எனக்கு இவ்வளவு நாளும் தெரியாது. பெரேரா வடக்கு, கிழக்கில் வாழும் பூர்வீக ஈழத்தமழர்களை (அவரின் கணிப்பில் 1/3 இல் ஒரு பங்கினர்) கள்ளத்தோணிகள் என்றழைக்கவில்லை, அவர் கள்ளத்தோணிகள் என்றது தமிழ்நாட்டில்லிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு, பிரபாகரனால் கப்பல் கப்பலாக இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் கூறும் தமிழ்நாட்டுத் தமிழர்களை என்பத