privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஷியா மசூதிகளை இடிக்கும் சன்னி வகாபியிசம் !

ஷியா மசூதிகளை இடிக்கும் சன்னி வகாபியிசம் !

-

டக்கு இராக் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், ஷியா பிரிவு மசூதிகளையும், வழிபாட்டுத் தர்காக்களையும் இடித்து வருகின்றனர். புல்டோசர் மற்றும் வெடிமருந்துகளை வைத்து இவற்றை தகர்த்தெறிந்து அப்படையினர் முன்னேறி வருகின்றனர். வடக்கு மாகாணமான நினேவெஹ்-ல் உள்ள மொசூல், டல் அஃபர் ஆகிய நகரங்களில் இத்தகைய வழிபாட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

மசூதி இடிப்புசிரியாவிலும், இராக்கிலும் சன்னி பிரிவினர் வாழும் பகுதிகளை இணைத்து சன்னி இசுலாமிய நாடு ஒன்றை பிரகடனப்படுத்த முயன்று வருகிறார்கள் இந்த அடிப்படைவாதிகள். இவர்கள் ஷியா பிரிவினரை உருவ வழிபாட்டாளர்கள் என்றும், மத நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும் வகாபிச கடுங்கோட்பாட்டு அடிப்படையில் குற்றம் சாட்டுகின்றனர். அந்த காஃபிர்களின் வழிபாட்டு ஸ்தலங்களை இடிப்பது தமது கடமை என்றும் கூறிக்கொள்கின்றனர்.

அபுபக்கர் அல் பக்தாதி என்பவர் தலைமையில் இயங்கி வரும் இந்த வகாபிச பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களால் மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதும், ஆயிரக்கணக்கில் அகதிகளாக வெளியேறுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. தாங்கள் அறிவித்துள்ள தனிநாட்டில் ஷாரியத் சட்டப்படி நடைபெறும் இசுலாமிய அரசை (கிலாஃபத்) நிறுவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் ஆசாத் அரசை கவிழ்க்கும் நோக்கத்துடன் அமெரிக்காவின் கூலிப்படையாக இவர்கள் செயல்பட்டு வந்தனர். ஜோர்டானில் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்ட இவர்களுக்கு சவுதி, கத்தார், அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து நிதியுதவியும், ஆயுதங்களும் வழங்கப்பட்டன. சிரியாவில் அப்போது இயங்கி வந்த இன்னொரு அமெரிக்க கூலிப்படை இசுலாமிய அடிப்படைவாத அமைப்பான அல் நுஸ்ரா வுடன் இணைந்து தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு துவங்கப்பட்டது.

மசூதி இடிப்பு

மேற்கத்திய உலகைப் பொறுத்தவரை, சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக போராடியபோது விடுதலைப் போராளிகளாக காட்சியளித்த இவர்கள் இப்போது இராக்கில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். எண்ணெய் வளம்மிக்க மேற்காசிய பிராந்தியம் முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காகவே மத, இன மோதல்களை உருவாக்குவதும், பதற்ற நிலையை நீடித்திருக்கச் செய்வதும் அமெரிக்காவின் உத்தியாகவே இருக்கிறது.

சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போரில் தன் சார்பில் போரிடுவதற்கு வகாபிய குழுக்களை உருவாக்கியது அமெரிக்காதான். சதாம், பின்லாடன் என அமெரிக்கா உருவாக்கி ஆதரித்த நபர்கள் பிறகு அமெரிக்காவிற்கு எதிராக மாறியதும் நடைபெற்றது. கச்சா எண்ணெய் சந்தையை அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக பயன்படுத்துவதற்கு சாதகமாக இருந்தவர்கள் பின்னர் பிரச்சினைக்குரியவர்களாக மாறியதுதான் பிரச்சனைக்கு காரணம். இப்போதும் இராக்கில் ஆட்சியில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட ஷியா அரசை காப்பாற்றி ஜனநாயகத்தை நிலைநிறுத்த தான் பாடுபடுவதாக அமெரிக்கா சொல்வது ஏமாற்றுதானே தவிர வேறல்ல. முன்னர் சதாமின் ஆட்சியில் அமெரிக்காவின் சார்பில் இரானுடன் ஒரு பதிலிப் போரை நடத்துமாறு விடப்பட்டு இராக் பத்தாண்டு காலம் சின்னாபின்னமாக்கப்பட்டது; சதாம் ஆட்சியில் ஷியாக்களுடன், குர்துக்களும், கம்யூனிஸ்டுகளும் பத்து லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர்.

மறுபுறம் இசுலாமிய சர்வதேசியம் என்ற கற்பனையான தீர்வை முன்வைக்கும் சன்னி மார்க்க தீவிரவாதிகள் ஷியா பிரிவினரையும், சிறுபான்மை குர்துக்களையும் கொன்றொழிப்பதில்தான் தமது சர்வதேசியத்தை சாதிக்க விரும்புகிறார்கள். மையவாத இசுலாமிய மதப் பிரிவான சன்னி மார்க்கத்தினர் ஷியா பிரிவினரையோ, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் சூபி பிரிவினரையோ ஏற்றுக்கொள்வதில்லை.

மசூதி இடிப்பு

சோவியத் யூனியனின் ஆப்கான் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்காக இசுலாத்தின் மேன்மையை பிரச்சாரம் செய்த அமெரிக்கா இன்று அதை கட்டோடு வெறுக்க வைக்கும் பிரச்சாரத்தையும் செய்து வருகிறது. இதற்கு பலியான அடிமைகளும், இசுலாமியர்களை தமது சொந்த ஆதிக்கத்தின் பொருட்டு வெறுக்கும் இந்துமதவெறியர், சிங்கள இனவெறியர் போன்றோரும் கூட இத்தகைய அரசியல் பிரச்சினைகள் வரும்போது இசுலாம் எனும் மதமே அடிப்படையில் ஒரு வன்முறையைக் கொண்ட மதம் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.  உலகில் இருக்கும் எல்லா மதங்களும் நிலவுகின்ற சமூக பொருளாதார அரசியல் அமைப்பிற்கு கட்டுப்பட்டுத்தான் நடக்கும் என்பதை இவர்கள் தமது சொந்த நலன் காரணமாக மறுக்கின்றனர்.

இதனாலேயே இந்தப் பிரச்சினையில் முதல் எதிரியான அமெரிக்காவை எதிர்க்காமல் இசுலாத்தை எதிர்க்கிறோம் என்று கூறி தமது ஏகாதிபத்திய அடிமைத்தனத்தைக் காட்டிக் கொள்கின்றனர். மறுபுறம் இத்தகைய வகாபியச தீவிரவாதிகளை மதப் போராளிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரர்கள் என்று இசுலாமிய மதவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் பிடித்திருக்கும் துப்பாக்கியும் இதர ஆயுதங்களும், போராடுவதற்கு உதவும் நிதியும் முன்பு அமெரிக்கா போட்ட பிச்சை என்பதை இவர்கள் மறைக்கின்றனர். இவ்விரண்டு வாதங்களும் தவறு என்பதோடு சாராம்சத்தில் இரண்டுமே அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலனுக்கு சேவை செய்கின்றன.

தங்களை கடத்திச் சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர் தனிமனித ஒழுக்கத்தை பேணுபவர்கள், பெண்களை கண்ணியமாக நடத்துபவர்கள் என தற்போது அவர்கள் பிடியிலிருந்து விடுதலையாகி நாடு திரும்பியிருக்கும் இந்திய செவிலியர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் உண்ணாநோன்பு ஏற்கும் புனித ரமலான் மாத்தில் கூட தங்களுக்கு முறையாக உணவளித்தார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மசூதி இடிப்பு

‘இசுலாம் என்பது உயர்ந்த லட்சியத்துடன் கூடிய மார்க்கம் என்பதற்கு இது நல்ல உதாரணம்’ என்று சில இசுலாமிய மதவாதிகள் பேசி வருகின்றனர். அப்படி பார்த்தால் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு ஆர்.எஸ்.எஸ் சுவயம்சேவக்கோ, பிரச்சாரக்கோ கூட ஒழுக்கமானவனாக இருக்கும் பட்சத்தில் அவர்களையோ இல்லை இந்துமதத்தையோ ஏற்பதற்கு இசுலாமிய மதவாதிகள் தயாரா? இல்லை “அண்ணன் என்னதான் கொலை, கொள்ளை செய்தாலும் பொம்பள விசயத்தில் யோக்கியமானவர்” என்று சில ரவுடிகள் இருக்கிறார்களே, அவர்களையும் இவர்கள் ஏற்பார்களா?

தனிமனித ஒழுக்கத்தோடு சமூக நடவடிக்கை ஒழுக்கத்தையும் வைத்துதான் ஒரு தனிமனிதனை மதிப்பிட வேண்டும். லஞ்சம், ஊழல் வாங்காமல் பாலியல் வன்புணர்ச்சி செய்யும் ஒருவனையும், பாலியல் முறைகேடுகள் எதுவும் செய்யாமல் லஞ்சம் ஊழல் மட்டும் செய்பவனையும் ஏதோ ஒரு நல்லதுக்காக மட்டும் ஆதரிக்க முடியுமா?

ஒருபுறம் சக இசுலாமிய சகோதரனை கொன்று குவித்துக் கொண்டே தம்மிடம் சிறைப்பட்ட பிற மத, நாட்டு செவிலியர்களுக்கு முறையாக உணவு தருவது மட்டும் எப்படி மனிதத் தன்மையுடைய செயலாக இருக்க முடியும்? தமது பெண்களை கட்டாயம் புர்கா அணிந்தாக வேண்டும், வேலைக்கு போகக் கூடாது, படிக்க கூடாது, வீட்டு வேலை மட்டும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மீறுபவர்களை தண்டிக்கலாம், ஷரியத் சட்டப்படி அப்படித்தான் செய்ய வேண்டும் என்பவர்களை எப்படி வரவேற்க முடியும்? ஒரு சிலர் இவையெல்லாம் இசுலாத்தைப் பற்றி தவறான புரிதல்கள், உண்மையான இசுலாம் இது அல்ல என்று வாதிடுகிறார்கள். உண்மையான இசுலாம் எது, குர் ஆனுக்கு அத்தாரிட்டி யார் என்பதிலேயே ஒற்றுமையோ உலக அங்கீகாரமோ இல்லாத போது இதை பேசி என்ன பயன்?

mosque-3

தாம் பேசுவதுதான் இசுலாம் என்று அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட சன்னி வகாபியிசம்தான் இன்று சக இசுலாமிய சகோதர்களை அவர்கள் ஷியா பிரிவினர் என்ற காரணத்திற்காக கொன்று வருகிறது. அவர்கள் வழிபடும் தலங்களை இடித்தும் வருகிறது. பாகிஸ்தானில் இம்மக்கள் படும் துயர் என்பது பாரிய அவலத்தை கொண்டது. ஷியா பிரிவு மக்கள் கோழைகள், முழுமையாக இசுலாத்தை கடைபிடிக்காதவர்கள் என்றெல்லாம் சன்னி மதவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.

இதனாலேயே இராக்கில் ஷியா மசூதிகள், தர்காக்கள் இடிக்கப்படுவதை இவர்கள் ஆதரிக்கவும் செய்கின்றனர். இவர்கள் நினைக்கும் இசுலாம்தான் சரி என்று மற்ற இசுலாமிய முறைகளை அழிப்பது சரி என்றால், பார்ப்பனிய ஆதிக்க சாதி வெறியர்கள்  தாம் பின்பற்றும் இந்துமதம்தான் சரி என்று மாட்டுத் தோல் உரிக்கும் தலித்துக்களை கொல்வதும் சரிதானே?

இப்படித்தான் அமெரிக்க ஆசிபெற்ற சன்னி வாகாபியிசம், இசுலாமிய சர்வதேசியம் பேசி இராக்கின் ஷியா பிரிவினரை நாட்டுக்குள்ளேயே கொன்று குவிப்பதுடன் பலரையும் அகதிகளாக்கி வெளியேற்றி வருகிறது. இராக்கை ஷியா, சன்னி, குர்திஸ்தான் என பிரித்து ஆளப்படுவதை விரும்பிய அமெரிக்காதான் இதை ஆரம்பத்தில் இருந்து இயக்கி வருகிறது. அமெரிக்காவின் உத்தி மற்றும் நோக்கம் காரணமாக நடக்கும் இந்த உள்நாட்டு சண்டையில் நாம் இருதரப்பினரையும் எதிர்ப்பதே சரியாக இருக்கும்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்ற அடித்தளங்களில் இருந்துதான் உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பை இராக்கில் கட்ட முடியும். அதன்றி இராக் மக்களுக்கு மட்டுமல்ல, வளைகுடா மக்களுக்கும் நிம்மதி இல்லை.

–    கௌதமன்

படங்கள் : நன்றி rt.com

  1. To Vinavu,

    Yes…, அதே சமயம், இந்த உள்நாட்டு சண்டை காரணமாக பலவீனம் அடையும் ஈராக் அரசின் பிடியில் இருந்து ஈழ தமிழர் போன்றே வதைபடும் குர்திஸ் தேசிய இன மக்கள் முழு விடுதலையும் அடைந்து [தற்போது குர்திஸ் சுயாச்சி கவுன்சில் என்ற ஈராக் அரசு கீழ் இயங்கும் அதிகார அமைப்பு] தனி நாடு பெறுவார்கள் எனில் நமக்கு அது மகிழ்வு தானே ?

    //இப்படித்தான் அமெரிக்க ஆசிபெற்ற சன்னி வாகாபியிசம், இசுலாமிய சர்வதேசியம் பேசி இராக்கின் ஷியா பிரிவினரை நாட்டுக்குள்ளேயே கொன்று குவிப்பதுடன் பலரையும் அகதிகளாக்கி வெளியேற்றி வருகிறது. இராக்கை ஷியா, சன்னி, குர்திஸ்தான் என பிரித்து ஆளப்படுவதை விரும்பிய அமெரிக்காதான் இதை ஆரம்பத்தில் இருந்து இயக்கி வருகிறது. அமெரிக்காவின் உத்தி மற்றும் நோக்கம் காரணமாக நடக்கும் இந்த உள்நாட்டு சண்டையில் நாம் இருதரப்பினரையும் எதிர்ப்பதே சரியாக இருக்கும்.//

    • இங்கே இருதரப்பு என்று குறிப்பிடப்படுவது அமெரிக்கா மற்றும், ஐஎஸ்எஸ்-ஐ மட்டுமே. குர்திஸ்தானை பொறுத்த வரை அமெரிக்க ஆசியுடன்தான் அவர்கள் மீது சதாம் உசேன் ஒடுக்குதலை ஏவினார். இன்று அதே அமெரிக்காவின் ஆசியுடன் ஏற்பாட்டில் குர்திஸ்தான் தனி கவுன்சிலாக இயங்குகிறது. குர்திஸ்தான் விடுதலை பெறுவது சரியானது எனும் நேரத்தில் அது அமெரிக்க ஆதரவுடன் நிறைவேறும் பட்சத்தில் சுதந்திரத்தின் நிரந்தம் கேள்விக்குறியாகவே இருக்கும். மதவாதம் இல்லாத, ஜனநாயக – மதச்சார்பற்ற கட்சிகள், ஏகாதிபத்திய எதிர்ப்போடு, அந்த ஏகாதிபத்திய கட்டமைப்பை ஆதரிக்கும் ஷேக் அரசாங்களையும் எதிர்த்து போராட வேண்டும். அந்த போராட்டம் இது போன்ற சக்திகள் கொண்ட பிற தேசிய இனமக்களின் ஆதரவோடும் நடைபெற வேண்டும். ஒருக்கால் அமெரிக்கா ஏற்பாட்டில் குர்திஸ்தான் கிடைக்கும் என்றாலும் அது எரிமலையில் இருக்கும் வளைகுடா பிரச்சினைகளை ஒட்டி மற்றுமொரு பிரச்சினையாகவே இருக்கும். அந்த எரிமைலையை உருவாக்கி பராமரிப்பதே அமெரிக்காதான் எனும் போது நமது பார்வை எப்படியாவது விடுதலை கிடைத்தால் போதுமானது என்று இருப்பது சரியல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சொந்த நலனில் இருந்தே ஒரு நாடு குறித்த கொள்கையை உருவாக்குகிறது, மாறாக ஜனநாயகம் அளிக்கப்படவேண்டும் என்பதல்ல. ஏனெனில் ஜனநாயகம் என்பதே தான தருமத்தில் கிடைக்கும் ஒன்றல்ல.

      • To vinavu,

        ஆம் வினவு அமெரிக்க ஆதரவுடன் தான் குர்திஸ்தான் தனி கவுன்சிலாக உருவாக்கபட்டது/இப்போதும் இயங்குகிறது. இதில் எந்த அய்யமும் இல்லை. அதே நேரத்தில் ஈராக் உள் நாட்டு போர் நெருகடியால் பலவீனம்அடையும் /வீழும் நிலையில் ஈராக் அரசு இருக்கும் போது , அவ்வரசியல் சூழலை பயன்படுத்தி குர்திஸ் தேசிய இன மக்கள் தன் எழுச்சியாக குர்திஸ்தான் தனி நாடு அறிவிப்பதற்கு சாதகமான நிலை அல்லவா ஏற்பட்டு உள்ளது ?இது போன்ற சாதகமான அரசியல் சூழலை அடிமை படுத்த பட்டு உள்ள எந்த தேசிய இனமும் பயன் படுத்திக்கொண்டு விடுதலை அடைய வேண்டும் அல்லவா ?

  2. Dear Vinavu & Gowtham,

    சிரியாவில் ஆசாத் அரசை கவிழ்ப்பதால் அமெரிக்காவிற்கு என்ன பயன் என்று விளக்கமுடியுமா?

    • அமெரிக்கா எனும் வல்லரசு எப்படி உருவானது, செவ்விந்தியர்களை ஏன் அழித்தது, தென் அமெரிக்கா, வியட்நாம், கொரியா, சீனா, கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, வளைகுடா என்று உலகெங்கும் ஏன் ஆக்கிரமிப்பு போர்கள் நடத்தியது – நடத்துகிறது இந்த கேள்விக்கு விடை தேடுங்கள், நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை புரியும். சில நேரத்தில் விடைகள் இல்லை – தெரியாது என்பதால் மட்டும் கேள்விகள் உருவாவதில்லை. விடைகளே ஏற்க மனமில்லாமல் போனால் கூட கேள்விகளுக்கான இருப்பு தேவைப்படுகிறது.

      • Dear Vinavu,

        இதுதான் முதன்முறையாக என் கேள்விக்கு பதிலளிக்கிறீர்கள். நன்றி.

        // இந்த கேள்விக்கு விடை தேடுங்கள்//

        அந்த கேள்விகளுக்கு என்னிடம் நம்பகத்தன்மையுள்ள விடைகளை ஊகிக்க முடிகின்றன. சிரியா விசயத்தில் அப்படி ஏதும் என்னால் ஊகிக்க முடியவில்லை என்பதால் தான் கேள்வியையே கேட்டேன். இது போன்று பூடகமாக பதிலேயில்லாமல் பதில் சொல்வதால் என்ன பயன்? கட்டுரை எழுதும் போது அதிலிருந்து தோன்றக்கூடிய கேள்விகளுக்கும் பதில் வைத்துக்கொள்ளாமல் எழுதுவதால் நமது நோக்கம் நிறைவேற வாய்ப்புகள் குறையத்தான் செய்யுமே ஒழிய அதிகரிக்காது.

  3. வினவு கருத்தாக்கத்தில் தவறு இருப்பதா நான் கருதுகின்றேன்.

    [1] இராக்கை ஷியா, சன்னி, குர்திஸ்தான் என பிரித்து ஆளப்படுவதை அமெரிக்கா உண்மையில் விரும்புகீன்றதா?.உண்மையில் வீருப்பவீல்லை.

    [2]அமெரிக்கா மட்டும் அல்ல, வேறு எந்த நாடும் தன் இறையாமையை/பாதுகாப்பை காக்க தன் எல்லை ஓரம் உள்ள எதீரீ நாடுகளை பலவினபடுத்த[உம் :பாக்,பங்கதேசம் பீரிவினைக்கு இந்தியா முயன்றது ] அதை பல நாடுகளால பீரீக்க முயலும். ஆனால் ஈராக் மீதான அமெரிக்காவின் பார்வை அமெரிக்காவின் இறையாமையை/பாதுகாப்பை காக்கும் நோக்கம் கொண்டது அல்ல. ஈராக்கின் பொருளாதாரத்தை அடிமை படுத்தும் நோக்கம் கொண்டது. எனவே ஈராக் ஒரே நாடாக இருப்பது தானே ஈராக்கின் பொருளாதாரத்தை அமெரிக்கா அதன் கட்டுபாட்டுக்குள் வைத்து கொளவதை எளிமை படுத்தும் ?

    இதற்கு ஆதாரம் யாது எனில் , ஈராக் அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட குர்திஸ் சுயாச்சி கவுன்சில் சுயச்சையாக பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்ய முயன்ற போது அமெரிக்கா அச் செயலை எதிர்க்கும் போக்கு தான்.

    [3]மேலும் அமெரிக்கா தன் மேலாதிக்க நலனுக்கா செயல் படுத்தும் எந்த திட்டமும் முழுமையாக வெற்றி அடைய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.அமெரிக்கா வல்லான் போடும் திட்டங்களில் ஏற்படும் குறைபாடு காரணமாக பின்லேடன் அல்கோய்த உருவானது போல ISIS அமைப்பும் இப்போது அமெரிக்க ஆதரவுடன் ,சன்னி ஆதரவு போரை நடத்துவதும் , பின்பு அமெரிக்காவுக்கே எதிராக மாறுவதற்கும் சாத்தீயம் அதிகம் உள்ளது. ஏன் என்றால் சன்னி ஆதரவு மத அடிப்படைவாத ISIS அமைப்பு இன்று ஷியா முஸ்லிம்களை எதீர்ப்பது போலவே நாளை கிறித்துவ அமெரிக்காவை நாளை எதிர்க்கலாம் அல்லவா ?

    //இப்படித்தான் அமெரிக்க ஆசிபெற்ற சன்னி வாகாபியிசம், இசுலாமிய சர்வதேசியம் பேசி இராக்கின் ஷியா பிரிவினரை நாட்டுக்குள்ளேயே கொன்று குவிப்பதுடன் பலரையும் அகதிகளாக்கி வெளியேற்றி வருகிறது. இராக்கை ஷியா, சன்னி, குர்திஸ்தான் என பிரித்து ஆளப்படுவதை விரும்பிய அமெரிக்காதான்/விரும்பாத அமெரிக்காதான் ? [எது சரி] இதை ஆரம்பத்தில் இருந்து இயக்கி வருகிறது. அமெரிக்காவின் உத்தி மற்றும் நோக்கம் காரணமாக நடக்கும் இந்த உள்நாட்டு சண்டையில் நாம் இருதரப்பினரையும் எதிர்ப்பதே சரியாக இருக்கும்.//

  4. அய்யய்யோ.. முசுலீமை எதுக்கிறிங்களே.. அடுக்குமா… சரியான பிற்போக்குன்னு பட்டம் வாங்கப் போறிய… அது முற்போக்கு குண்டு அய்யா.. அப்படி வய்யாதீய.. பேசாதீய….முற்போக்கு சாமி கண்ணை கிண்ணை குத்திடப்போவுது

  5. இந்த பதிவு ஏன் இவ்வளவு காலங்கடந்து செய்யப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. பல நாட்களாக சண்டை நடந்து வருகிறது. ஏராளமான மக்களும் ஷியா பிரிவு முஸ்லீம்களும் கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்திய முஸ்லீம்களுக்கு கோபம் வராமல் இருக்க இவ்வளவு காலம் யோசித்து இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் முஸ்லீம்களிடையே உள்ள சண்டையில் அமெரிக்காவையும் இந்துக்களையும் பாரபனர்களையும் தூற்றவேண்டி என்ன இருக்கிறது. முஸ்லீம்கள் எங்கு இருந்தாலும் சண்டைபோட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். இது ஒன்றும் புதிதல்லவே!
    மியான்மீரில் புத்தமத்தவர்களை கொல்லுகிறார்கள். இலங்கையிலும் இதே நிலைதான். அதுபோல் நைஜீரியாவில் முன்னுருக்கும் மேற்பட்ட சிறுமிகளை கடத்தி சென்று உள்ளார்கள். அவர்கள் இப்போது எங்கு உள்ளார்கள் என்றே தெரியவில்லை. இந்திய செவிலியர்களை கடத்திச்சென்று பின்னர் விடுவித்தார்கள்!!! ஆனால் நைஜீரியாவில் கடத்தப்பட்ட குழந்தைகளை இன்னும் விடுவிக்கபடவில்லை. என்னவெல்லாம் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்களோ தெரியவில்லை. சன்னி முஸ்லீம்கள் ஈராக்கில் நடத்திவரும் கொடுமைகளை போராளிகளின் செயல் என்றும் வெற்றிபெற வாழ்த்தும் இங்குள்ள முஸ்லீம்கள் நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள குழந்தைகளைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே ஏன்?
    அதுமட்டுமல்லாது சீனாவில் முஸ்லீம்களின் கொடுமையை கண்ட சீன அரசு பலரை கைதுசெய்து தனடனையும் கொடுத்துள்ளது. இப்படிபட்ட கொடிமைகளை “அல்லாவின்” பெயராலும் “குர்ரானின்” பெயராலும் செய்யும் இந்த முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்குவது எதற்கு! அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் இதற்கு பொறுப்பு என்று கூறும் இஸ்லாமியர்கள் ஏன் அமெரிக்காவை தங்களின் பாதுகாப்புக்கு தேடுகிறார்கள்.
    சதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருந்தபோது துபாய் என்ற சிரிய நாட்டை தனது நாட்டுடன் இணைக்க போர் தொடுத்தார். அப்போது துபாயின் அரசர்தான் அமெரிக்காவை தனது நாட்டை காப்பாற்றி கொடுக்கும்படி கேட்டார். அப்போது இந்த முஸ்லீம்கள் துபாயை கண்டித்திருக்கலாமே! உலக முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று உள்ளது. அந்த கூட்டமைப்பின் சார்பில் யாரும் அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யக்கூடாது என்றும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றலாமே! ஏன் இதுவரை செய்யவில்லை.
    இந்திய செவிலியர்களை விடுவித்தது ஏதோவொரு பெரிய வீரர்களின் செயல்போல சித்தரிக்கிறார்கள். ஏன் அந்த செவியர்களை கடத்தினார்கள் என்றும் யாரும் சொல்லவில்லை. அவர்கள் தங்களது கடமையைத்தான் செய்துகொண்டு இருந்தார்கள். அவர்களை கடத்தும் நோக்கம் என்ன? அவர்களை சுமார் 230 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடத்திற்கு உடனே கொண்டு சென்றார்களே ஏன்? நல்லவர்களாக இருந்தால் பேசாமல் கடத்தாமலும் அல்லது அதே இடத்திலும் வைத்திருக்கலாம். உடனடியாக நான்கு நாட்களுக்குள் விடுவித்தார்களே ஏன்? அதற்கு இடையில் என்ன “பரிமாற்றம்” நடந்தது? இப்படி பல கேள்விகளுக்கு விடை காண வேண்டும்.
    ஆனால் நமது இந்திய அரசு சாதுரியமாக நடந்து கொண்டுள்ளது என்று மட்டும் நன்றாக தெரிகிறது. அந்த பயங்கரவாதிகள் தங்களை நன்றாக நடத்தியதாக கூறும் செவிலியர்கள் இனி ஈராக்கிற்கு செல்ல மாட்டோம் என்றும் சொல்லியுள்ளார்களே ஏன்? இதை அனைவரும் ஒருமித்த குரலில் பயத்துடன் கூறியுள்ளார்கள எனபதையும் நினைவில் கொள்ளுங்கள். ஏதோ நடந்துள்ளது! நாமும் இதனை தோண்ட விரும்பவில்லை!!

    • Still I am waiting for your answer regarding Hindu religion in the old post? You are so genuine person and getting angry about Muslims problems. Then what is your opinion about untouchability in hindu religion?, this is happening every day in your country for few tens crores people. Don’t say this is irrelevant question and escape.

      • முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். இந்துமதம் என்ற ஒன்று இருப்பதாக நாம் கருதவில்லை. இதனை யார் நிறுவினார்கள் என்று கூற முடியுமா? யாராலும் முடியாது. இந்து எனபது இந்த நாட்டின் பண்பாடு காலாச்சாரத்தை குறிப்பது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டு ரிஷிகளும் முனிவர்களும் மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற வாழ்க்கை முறையை வகுத்து கொடுத்தார்கள். அவர்கள் எல்லோரும் ஜாதி என்பதை வலியுறுத்த வில்லை. அதில் முக்கியமானது “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற பண்பாடு. அதன் பிறகு உறவு முறைகள். இதனை அனைவரும் கடைப்பிடித்து வந்தார்கள். இப்போதும் இந்தியாவில்தான் இந்த உயர்ந்த நெறி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் உள்ள நாடுகளில் எல்லாம் இந்த நெறி கடைபிடிக்கப்படுவது இல்லை. அவர்கள் விருப்பத்திற்கு வாழ்கையை நடத்துகிறார்கள்.
        தீண்டாமை எனபது உலகில் அனைத்து நாடுகளிலும் இருக்கின்ற ஒரு அருவருக்கத்ததுதான். வெள்ளையர்கள் கருப்பர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தினார்கள். காலப்போக்கில் அதில் மாற்றம் வந்தது. அதேபோல் இஸ்லாமியத்திலும் ஷியா சன்னி குர்தீஸ் அகமதியர் லப்பை போன்ற இன்னும் பல பிரிவுகளில் இந்த தீண்டாமை அதிக அளவில் உலகம் முழுவதும் இருந்தது. காலமாற்றம் இருந்தாலும் இஸ்லாமியத்தில் மட்டும் இது இன்னும் இருக்கிறது. ஆனால் இந்துக்களில் காலமாற்றங்களால் இது தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இது இன்னும் சில காலங்களில் மாற்றம்வரும்.
        இந்தியாவில் கிருத்துவத்தில் இந்த கொடுமை அதிக அளவில் உள்ளது. தீண்டாமை அங்கு தற்போதுகூட தலைவிரித்தாடுகிறது. இந்துமதத்தில் மட்டும்தான் என்பது தவறு. மனிதர்கள் வாழ்ந்த அனைத்து இடங்களிலும் இது பன்நெடுங்காலமாக இருக்கிறது. மனிதர்கள் ஒரு இடத்திலிருந்து பிற இடத்திற்கு மாறும்போது அங்குள்ளவர்கள் புதிதாக வந்தவர்களை தனியாக பார்த்தார்கள். திருமணம் போன்றவற்றை தங்களுகுல்லேயே நடத்திக்கொன்றார்கள். புதியவற்களுடன் உறவு கொள்வது இல்லை. இதனால் ஜாதி அமைப்புக்கள் காலப்போக்கில் உருவாகின.
        தற்போது கூட இந்துக்களுக்கு என்று தலைமை இல்லை. கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமில் உலக அளவில் தலைமையை உள்ளது. அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த மதங்கள் செயல்படுகின்றன. இந்துக்களுக்கு அப்படி இல்லை. அந்தந்த ஊரில் உள்ளவர்களே கோவிலை உருவாக்கி நடத்துகிறார்கள். அடுத்த ஊரில் உள்ள அதே கோவிலில் உள்ளவர்கள் கூட தனியாகத்தான் செயல்படுகிறார்கள்.
        மேலும் முஸ்லீம்களும் கிருத்துவர்களும் இந்தியாவை பல நூற்றாண்டுகள் ஆண்டார்கள். அவர்கள் ஜாதி வேறுபாட்டை முடக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஏனெனில் அவர்களது மதத்திலும் அது இருந்து வந்தது. ஜமீன்தார் ஆட்சி முறை இந்தியாவில் நெடுங்காலம் இருந்தது. அதுவும் இந்த ஜாதி வேறுபாட்டுக்கு காரணம். இந்தியா சுதந்திரம் அடையும்போது 30 கோடிதான் ஜனத்தொகை. அதாவது 60 ஆண்டுகளுக்கு முன். இதனையே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்ன ஜனத்தொகை இருக்கும் என்று ஊகித்துப் பாருங்கள். இந்தியா முழுவது ஒரு கோடிக்கும் குறைவுதான். ஆகையால் மக்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியாக வாழ்ந்து உறவு முறைகளுடன் இருந்தார்கள். அதனால்தால் இந்த வேறுபாடு. உலக அளவில் இந்துக்களுக்கு என்று ஒரு தலைமை இருந்து வழிகாட்டுதல் செய்திருந்தால் இது போன்ற ஜாதி வேறுபாடுகள் இருந்திருக்காது.

        • //இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் உள்ள நாடுகளில் எல்லாம் இந்த நெறி கடைபிடிக்கப்படுவது இல்லை.//
          //காலமாற்றம் இருந்தாலும் இஸ்லாமியத்தில் மட்டும் இது இன்னும் இருக்கிறது.//
          //இந்தியாவில் கிருத்துவத்தில் இந்த கொடுமை அதிக அளவில் உள்ளது. //

          Compare these sentences with the following sentences

          //ஆனால் இந்துக்களில் காலமாற்றங்களால் இது தற்போது வெகுவாக குறைந்துள்ளது. //

          These sentences show your originality and RSS principles. Don’t say anything in general.

          Are you or your family members ready to have a marriage in lower caste family?

          • காலமற்றங்களால் இந்த தீண்டாமை போன்ற கொடுமைகள் ஒழியும்! ஆனால் இதனை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குள்ளேயே பல ஜாதிகள் உள்ளன. அவைகள் ஒன்றுக்கொன்று திருமண உறவு வைத்துக்கொள்கிரார்களா என்றால் இல்லை. ஜாதியை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று கூறும் இவர்கள் முதலில் தங்களுக்குள் நிலவும் ஜாதி வேறுபாட்டை நீக்க முதலில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்குள் பல ஜாதி அமைப்புகளை வைத்துக்கொண்டு அடுத்தவர்களை கூறினால் என்ன பிரயோஜனம். கிருத்துவத்துக்குள் இருக்கும் ஜாதியை கண்டுகொள்ளாமல் இந்துக்களை மட்டும் தூற்றுவது சரியல்ல. முதலாவது ஒழிக்கப்படவேண்டியது தீண்டாமை! அதன் பிறகு ஜாதி. அரசியல் ரீதியாக ஜாதி அமைப்பை வைத்துள்ளவர்களை என்ன செய்யலாம்!! இதில் அனைவரும் உள்ளார்கள்.

            • //கிருத்துவத்துக்குள் இருக்கும் ஜாதியை கண்டுகொள்ளாமல் இந்துக்களை மட்டும் தூற்றுவது சரியல்ல. //

              //முதலாவது ஒழிக்கப்படவேண்டியது தீண்டாமை! //

              what are you saying? in the first sentence you say that caste system is more rigidly followed in Christianity. In the next sentence, you are saying that untouchability has to be removed. It means that Hinduism can exist without caste system. I don’t want these stories at all.

              I repeat my first to you (in the old post) again, do you agree caste system or not ?

    • ஹூம். இதைப்போன்ற பல கேள்விகள் இருக்கு.

      வினவு எங்குமே இஸ்லாமை விமரிசித்ததே இல்லை. இஸ்லாமியர்களை மட்டுமே விமரிசிக்கும். குண்டு வைப்பவன், அல்லாவுக்காக என்னும் போதும் அங்கு இஸ்லாம் விமரிசிக்கப்படவேண்டும். ஆனால், வெறும் மேம்போக்காக ‘இஸ்லாமியர்களை இஸ்லாமை புரிந்துகொள்ளவில்லை’ என்ற தொனியிலேயே அவரோட விமர்சனம் இருக்கும். இதுவும் இஸ்லாமியர்கள் சொல்வது தான், ‘யாரும் இஸ்லாமை ஃபாலோ பன்றதில்லை’னு.

      இதை கேட்டா, நீட்டி முழக்கி வினவு சொன்ன பதில், ‘எந்த கலாச்சாரம்/வாழ்க்கை முறை பின்பற்றினாலும், இறை வழிபாடு என்று வரும் பொழுது இஸ்லாமியர்கள் ஒன்று’ என்று. ஆனால், இன்று சொல்வது, “ஒரு சிலர் இவையெல்லாம் இசுலாத்தைப் பற்றி தவறான புரிதல்கள், உண்மையான இசுலாம் இது அல்ல என்று வாதிடுகிறார்கள். உண்மையான இசுலாம் எது, குர் ஆனுக்கு அத்தாரிட்டி யார் என்பதிலேயே ஒற்றுமையோ உலக அங்கீகாரமோ இல்லாத போது இதை பேசி என்ன பயன்?”

      சரி! இந்தியாவில் ஒரு கும்மட்டம் இடிக்கப்பட்டதுக்கு இத்தனை ஆர்பாட்டங்கள், ஒவ்வொரு டிசம்பர் 6ம் கொலைவெறி காட்டுக்கத்தல்கள் நடத்தும் இஸ்லாமிய அமைப்புகள், இப்பொழுது ஈராக்கில் இடிக்கப்படும் மசூதிகளுக்கு என்ன ஆர்ப்பாட்டம் செய்யப்போகிறது. அட! முதலில் எதிர்த்தாவது கேட்க முடியுமா? காரணம், இடிக்கிறவன்/கொல்றவன் இஸ்லாமியன்னு சொல்லிக்கிட்டா போதும், இஸ்லாமியர்கள் வோட்டு அவனுக்கு தான். கொல்றவன் இஸ்லாமியன்னா இஸ்லாமியர்களின் சப்போர்ட் அவர்களுக்கு தான். பேஸ்புக்ல வெளிப்படையா சொல்றாங்க, நாங்க ஐசிஸை ஆதரிக்கிறோம்னு. இப்பல்லாம் வினவு இஸ்லாமை விமரிசிக்காது. இஸ்லாமியர்களை தான் விமரிசிக்கும். அப்ப கூட இந்து மதத்தையும் சேர்த்து உள்ளே இழுக்கும், திருமா இஸ்லாமிய மக்கள் கூட்டத்துக்கு நடுவே ராமனை திட்டுற மாதிரி, அவர்களும் ஆட்டு மந்தைகளாட்டம் கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள்.

      ஐசிஸ் விடுவிச்சிட்டாங்களாம். கடத்தினது அவங்க தான்னு மறந்துடுச்சு போல. கேட்டா, அவங்கள ‘குண்டுகள் விழும் போர் முனையில் இருந்து ராஜதந்திரங்களை உபயோகித்து சாதுர்யமாக மீட்டனர்’ என்று பெருமைப்பட்டுகிறார்கள். ஐசிஸ் அடியாளுன்னு குறைபட்டுக் கொள்ளும் வினவு, அவர்கள் எந்த காரணத்தை முன்னிட்டு தங்களுக்கு வேண்டியவாரு அடியாளாக்க முடிந்தது என்பதை சாய்ஸில் விட்டுவிட்டார்கள். இஸ்லாமை முன்னிருத்தினால் சுலபமாக அடியாளாக்க முடியும் என்று அமெரிக்க தெரிந்து வைத்திருக்கிறது. குறை எங்கே என்று வினவு தோண்டிப்பார்க்குமா?

      வினவு ஏன் சுடச்சுட போடாமல் இத்தனை நாளாச்சுன்னா, முதலில் அவர்களுக்குள் பேசிப்பர்த்திருப்பார்கள், ஐசிஸை ஆதரிப்பதா இல்லை வேண்டாமா என்று. சாதக பாதங்கள், கொள்கைகள் எல்லாம் ஒரு ரவுன்டு வந்திருக்கும்.

  6. “மேற்கத்திய உலகைப் பொறுத்தவரை, சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக போராடியபோது விடுதலைப் போராளிகளாக காட்சியளித்த இவர்கள் இப்போது இராக்கில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.”

    உண்மை. ஆனால் வாக்கியம் இப்படி இருக்க வேண்டும்.

    இப்போது இராக்கில் பயங்கரவாதிகளாக இருக்கும் இவர்கள், மேற்கத்திய உலகைப் பொறுத்தவரை, சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக போராடியபோது விடுதலைப் போராளிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.

  7. MUSLIMS ARE BASICALLY GOOD PEOPLE. AMERICA ONLY SPOILING THEM. HINDUS ARE BASICALLY BAD PEOPLE. THESE THREE LINES ONLY I UNDERSTOOD FROM YOUR ARTICLE. WHETHER VINAVU ACCEPS BAGDADI AS CALPH OR NOT?

  8. கடத்தியவர்கள் தீவிரவாதிகள் அல்ல, உள்ளீரில் இயங்கி வரும் ஆயுத இயக்கங்களே! இவர்கள் குறிப்பிட்ட தினம் வரை கண்ணியமாக(மென்மாயாக) நடந்து கொள்வார்கள் பணம் வராது எனத்தெரிந்தால் தங்கள் வேலையை காட்டுவார்கள்,எனேன்றால் பணம் வராது என்று ஆன பின் இவர்களை வைத்திருப்பது பெரும் சுமை தானே! ஆண்கள் என்றால் உடனே கொன்று விடுவார்கள் ,பெண்கள் என்றால் பல முறை கற்பழித்து பின் கொல்வார்கள்.

    சரி இது கடத்தல் என்றால் எதாவது டிமாண்ட் வைக்க வேண்டுமே,அது நிறைவேறினால் தானே அவர்கள் கடத்தப்பட்டவர்களை விடுவார்கள்? இவர்கள் சொல்வதை பார்த்தால் தீவிரவாதிகள் 3-4 நாட்கள் செவிலியர்களை ரூமில் தங்க வைத்து , சாப்பாடு போட்டு,பின் அவர்களே வண்டிக்கு காசு கொடுத்து அனுப்பி விட்டார்களா?
    எந்த நோக்கமும் இல்லாமல் நடந்தால் அது கடத்தலா அல்லது கடத்தல் நாடகமா? இல்லை இதை செய்தவர்கள் வேலை வெட்டியில்லாத தீவிரவாதிகளா?

    கொஞ்சம் யோசித்து பாருங்கள் ,கடத்தியவர்கள் தீவிரவாதிகள் என்றால் ஏதாவது டிமான்ட்( சிறையில் இருக்கும் தங்கள் நண்பர்களை விடுதலை செய்வது,பாலஸ்தீனம்…) வைப்பார்கள்,டிமாண்ட் நிறைவேறும் பட்சத்தில் கடத்தியவர்களை விடுதலை செய்வார்கள்,இவர்கள் கடத்தல் 4-5 நாட்கள் தான் நீடித்தது தேவையானது பரிமாற்றம் நடந்தவுடன் இவர்களை விட்டுவிட்டார்கள்.பல முஸ்லீம் நாடுகளில்,மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மற்றவர்களை கடத்தி பெரும் பணம் கேட்பதே ஒர் தொழில் ஆகும்.

    சரி இந்த மூஸ்லீம் சகோதரத்துவ அணியில் இருப்பவர்கள் நல்லவர்களா?
    இவர்கள் சிறு குழந்தைகளையும்,இளம் மற்றும் வயதான தாய்மார்களையும் கற்பழிப்பது உங்கள் கண்களுக்கு படவில்லையா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க